1 நீங்கள் விரும்பினால், நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், ஜெபத்திற்காக அப்படியே நின்றுகொண்டிருங்கள். 2 அன்புள்ள பரலோகப் பிதாவே, இதற்காக நாங்கள் இன்றிரவு, இயேசு கிறிஸ்துவின் இந்த மகிமையான, அற்புதமான சுவிசேஷத்தை வந்து அளிக்கும்படியான மற்றொரு தருணத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த குளிர்ந்த காலநிலையின் நேரத்தில் இங்கே கூடி வந்துள்ள இந்த ஜனங்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், இன்னமும் அவர்களுடைய மகத்தான எதிர்பார்ப்புகளோடு, தேவனிடத்திலிருந்து எங்களுக்கு அளிக்கப்படப் போகிறது அசாதாரணமான ஏதோ ஒரு காரியத்தையே விசுவாசித்து எதிர்நோக்கியிருக்கிறோம். கர்த்தாவே, ஒவ்வொரு கூட்டத்திற்கும், நாங்கள் அந்த நம்பிக்கையோடு வருகிறோம். நேற்று முந்தின இரவு, கூடாரத்தில் நடந்த ஆராதனைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்; நேற்று மாலை இங்கு நடைபெற்ற ஆராதனைக்காகவும், இன்று, கூடாரத்தில் நடைபெறும் ஆராதனைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு நீர் எங்களுக்காக எதை வைத்திருப்பீர் என்று இப்பொழுது நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். 3 பிதாவே, தங்களுடைய கரங்களை அசைக்க முடிந்த எவரும் வேதாகமத்தின் பக்கங்களைத் திருப்ப முடியும் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் ஒரே ஒருவர் மாத்திரமே அதை ஜீவிக்கச் செய்து மெய்யானதாக்கச் செய்ய முடியும், அது நீரே. மேலும், பிதாவே, இன்றிரவு நீர் அதைச் செய்ய நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வழியிலும் எங்களை ஆசீர்வதியும். இத்தனை வருடங்களாக நாங்கள் நேசித்து ஜீவித்து வந்த ஒருவரை, நாங்கள் அவரை முகமுகமாய் சந்திக்கப்போகிற நேரம் நெருங்கி வருவதை நாங்கள் காணும்போது, எங்களுடைய இருதயங்கள் மிகுந்த மகிழ்ச்சியினால் நிறைந்துள்ளன. 4 கர்த்தாவே, அநேகர் புதிதாக மனமாற்றமடைந்துள்ளனர். ஒரு பெரிய குழுவாக, நாற்பது அல்லது ஐம்பது பேர், நேற்றிரவு ஆராதனையிலிருந்து, காலையில், உம்முடைய நாமத்தில் ஞானஸ்நானம் பெறவுள்ளனர் என்பதை அறிந்துகொள்கிறோம். ஓ தேவனே, ஒவ்வொரு முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்தும் சுவிசேஷ வெளிச்சத்தைக் கண்டு, மந்தைக்குள்ளாக வந்து சேரும் வரையில், தொடர்ந்து தயவுகூரும்படிக்கு, நாங்கள் ஜெபிக்கிறோம். 5 வார்த்தைக்குப் பின்னால் இன்றிரவு எங்களை மறைத்துக்கொள்ளும்படி நாங்கள் உம்மை வேண்டிக்கொள்கிறோம்; உலகத்தின் காரியங்களுக்கு எங்களை குருடாக்கி, நாங்கள் இயேசுவைக் காண்போமாக. இன்றிரவு, இயேசுவைத் தவிர வேறு எந்த மனிதனையும் நாங்கள் காணாதபடிக்கு, ஒரு மறுரூப மலையின் அனுபவம் எங்கள் மத்தியில் உண்டாயிருப்பதாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் அவருடைய மகிமைக்காகவும், அவருடைய சுவிசேஷத்தின் ஒரு ரூபகாரப்படுத்துதலுக்காகவும் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.
26 நான் இந்த ஒலிபெருக்கியை, அல்லது இந்த மேஜையை, சற்று பக்கவாட்டில் திருப்பப் போகிறேன், அது சரியாக இருக்குமானால், கூட்டத்தாரின் இருபக்கத்தையும் என்னால் காணமுடியும். நான் இந்த ஒலிபெருக்கிகளை இங்கே சரியாக கொண்டு வர முடியும் என்று நான் யூகிக்கிறேன். சரி, ஒரு நிமிடம். 7 இன்றிரவு இங்குள்ள பிரதான அரங்கத்திலிருந்து, அரிசோனா, கலிபோர்னியா, டெக்ஸாஸ் மற்றும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள நம்முடைய நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் நாம் வாழ்த்துகிறோம்,. இந்த—இது தொலைபேசியின் மூலமாக, இன்றிரவு இந்த ஆராதனை, நாடு முழுவதும் நடைபெறவுள்ளது, எனவே தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நாம் நம்புகிறோம். 8 அரங்கத்தில் பின்னால் இடப்பக்கமாக உட்கார்ந்திருப்பவர்களே, நான் பேசுவது உங்களுக்கு கேட்கிறதா? சரி, அவர்கள் இப்பொழுது தொலைபேசி அமைப்பு, சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்கப் போகிறார்கள்.
39 இன்றிரவு எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவ்வாறு கூறுவது, அது அருமையாயிருக்கிறதே! இந்தப் பக்கத்திலா? [“ஆமென்.”] ஆமென். நீங்கள் அனைவரும் வசதியாக அமர்ந்திருப்பதைக் காண்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 10 இப்பொழுது நாளை இரவு, ஜனக்கூட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருந்தால், அவர்களும் கூட நேரடியாக தொலைபேசியில் கேட்கலாம். இன்றிரவும் தொலைபேசி இணைப்பு உண்டு. அவர்களில் சிலர் அங்கே கூடாரத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 11 மேலும், நாளை காலை, கூடாரத்தில் ஆராதனைகளை நடத்த முடியாது, ஏனென்றால்…நாளை பிற்பகல் ஒரு கலியாணத்திற்காக மலரினால் அலங்கரிக்கும் ஒருவர் அங்கே சபையை அலங்கரிப்பார். அவர்கள் காலை, ஆராதனைகளை, எங்களுடைய கூட்டாளிகளில் ஒருவர், இங்கே நெடுஞ்சாலையில், 62-ல் இருக்கிற சகோதரன் ரடலின் சபைக்கு மாற்றியுள்ளனர். அது அறிவிக்கப்பட்டுள்ளதா? [சகோதரன் நெவில், “ஆம்” என்கிறார்.—ஆசி.] அது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அது அங்கே நிரம்பி வழிந்தால், நாங்கள் மீதியானவர்களை கொண்டு செல்ல, மற்றொரு ஊழியக்காரரை கிளார்க்ஸ்வில்லில் உள்ள சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் அவர்களுக்கு அனுப்புவோம். நாம் அதை சகோதரன் ரடலினுடைய இடத்தில் நடத்துவதற்குக் காரணம், அது இங்கே அருகாமையில் உள்ளது, நாங்கள்…நீங்கள் அதை எளிதாகக் கண்டறியலாம் என்று நாங்கள் நினைத்தோம். அதன்பின்னர் நாம் அதை ஏதோ ஒரு வழியில் பார்த்துக் கொள்வோம். அந்த ஞானஸ்நானம் அனைத்தையும் நாளை பெறுவதை உறுதிசெய்யவும், நாளை ஞானஸ்நானத்திற்காக இன்னும் நூறு அல்லது இருநூறு பேர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நாளை இரவு…
412 ஆனால் நீங்கள் பேசும் எதையும் முன் கூட்டியே அறிவிப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் ஆராதனையில் ஒரு இரவு, அல்லது ஒரு நாள், யார் இந்த மெல்கிசேதேக்கு? என்ற பொருளின் பேரில் நான் பேச விரும்புகிறேன். ஏனெனில், இந்த வெளிப்பாடுகள் வெளிப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிற ஒரு—ஒரு பாடப்பொருள், “யார் இந்த நபர்?” என்ற கேள்வி காலங்கள் தோறும் இருந்து வந்துள்ளது. அவர் யாராயிருந்தார் என்பதற்கு தேவன் பதிலை உடையவராயிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். சிலர், “ஒரு ஆசாரியத்துவம்” என்றனர். சிலர், “ஒரு ராஜா” என்றனர். சிலர்…ஆனால் அங்கே… 13 ஒரு கேள்வி இருக்கும் வரையில், அந்த கேள்விக்கு ஒரு பதில் இருக்க வேண்டும், அது சரியானது. முதலில் ஒரு பதில் இல்லாமல் ஒரு கேள்வி இருக்க முடியாது.
514 இப்பொழுது, நாம் அதை வாசிக்கையில், தேவன் அவருடைய வார்த்தையிலிருந்து இன்றிரவு நமக்கு ஒரு ஆசீர்வாதத்தை அளிப்பார் என்று நாம் நம்புகிறோம். 15 நீங்கள்…இங்குள்ள ஜனங்களோடு நீங்கள் நிச்சயமாகவே அருமையான ஒத்துழைப்பைக் கொண்டிருந்தீர்கள் என்று உங்களிடம் கூறும்படி பில்லி என்னிடம் கூறினான், வாகனம் நிறுத்தும் இடம், காவல் துறை மற்றும் ஒவ்வொரு காரியத்திலும் அது இருந்து வருகிறது. அதை அப்படியே நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்; அது மிக மிக நல்லது. 16 நாம் ஒருகால் விரைவில், இந்த நகரத்திற்கு இங்கே கூடாரத்தை கொண்டு வரக்கூடிய தருணம் வரும் என்று நம்புகிறோம், நாம் நீண்ட நேரம் தங்கும்படியாக, இங்கே தயூளக்கட்டுப் பந்தாட்ட மைதானத்தில் அதை வைத்து, ஒருக்கால் மூன்று அல்லது நான்கு வாரங்கள், தொடர்ந்து எழுப்புதல் கூடடங்கைள நடத்த உள்ளோம். இங்கே நாம் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவே முடியவில்லை, அதன்பின்னர் நாம் விடைபெற்று, நாம் மீண்டும் புறப்பட்டுச் செல்கிறோம். ஆனால் நான் வந்து நீண்ட காலம் தங்கியிருக்க விரும்புகிறேன், நீங்கள் தங்கியிருக்கும் ஒரு இரவு அல்லது இரண்டு இரவுகளில் நாம் முடித்துவிட வேண்டியதில்லை, ஆனால் அப்படியே தங்கி, இரவும் பகலும், இரவும் பகலும், தொடர்ந்து கற்பிக்க வேண்டும். யாராவது ஒருவர் வீட்டிற்குச் சென்று கோழிகளுக்கு உணவளித்து, பசுக்களுக்கு பால் கறந்துவிட்டு, அடுத்த வாரம் திரும்பி வந்து ஆராதனையைத் தொடரலாம். நான்—நான் அதை விரும்புகிறேன். ஆகையால் கர்த்தர் உங்களோடிருப்பாராக.
617 இப்பொழுது, நான் புறப்படுவதற்கு முன்பு, ஒரு வேளை ஞாயிறு காலை அல்லது ஞாயிறு இரவு, அல்லது எப்பொழுதாவது, இந்த ஆராதனைகளில் ஒன்றில், நீங்கள் யாவரும் விவாகமும் விவாகரத்தும் பற்றிய உண்மையின் பேரில் செய்தியைக் கேட்க நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், அது இந்நாளின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக சரியான பதில் தேவனுடைய வார்த்தையில் உள்ளது என்று நான் நம்புகிறேன், அதற்காகவே நான் திரும்பி வருவேன் என்று வாக்களித்துள்ளேன் என்று நான் நம்புகிறேன். 18 நான் நினைக்கிறேன், என்னால் அறிந்தவரை, எனக்குத் தெரிந்தமட்டில், ஈஸ்டர் ஞாயிறு அன்று, ஜெபர்ஸன்வில்லில் இங்கே மற்றொரு ஆராதனையையும், நாம்…சூரியோத ஆராதனையையும், அதன்பின்னர் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையையும் நான் நடத்த விரும்புகிறேன். எனவே நாங்கள் அதை முன்கூட்டியே அறிவித்து, கூடுமானால், அரங்கத்திற்கு அல்லது எங்காவது, ஒருக்கால் சனி மற்றும் ஞாயிறு வரலாம். விமானத்தில் பறந்து உள்ளேயும், வெளியேயும் செல்ல வேண்டியதாயுள்ளது, ஏனென்றால் அது நேரமாகிவிட்டது… நான் முதலில், கலிபோர்னியாவில் உள்ள என்னுடைய—என்னுடைய—என்னுடைய பயணத் திட்ட அட்டவணையைக் கொண்டு, அதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர், அதற்குப் பிறகு உடனடியாக, நான் ஆப்பிரிக்காவிற்கு செல்ல வேண்டும். எனவே எங்களுக்காக தொடர்ந்து தொடர்பு கொண்டு ஜெபியுங்கள்.
719 இப்பொழுது, இன்றிரவு பரிசுத்த லூக்கா 4-ம் அதிகாரத்தில் காணப்படும் தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதிக்கு உங்கள் கவனத்தை நான் திருப்ப விரும்புகிறேன். 4-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில், அது தொடங்கும், இயேசு பேசுகிறார். …உங்கள் காதுகள் கேட்க இந்த வார்த்தை இன்றையதினம் நிறைவேறிற்று. 20 இப்பொழுது நாம் அதிலிருந்து, தேவனுடைய வார்த்தை எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்ற ஒரு முடிவுக்கு, வர விரும்புகிறோம். இப்பொழுது, நாம் யாவரும் இயக்கவியலைக் கண்டறிய முடியும், ஆனால் அது கிரியை செய்ய இயங்கு சக்தி தேவைப்படுகிறது. 21 ஒரு இயந்திரத்தின் இயக்கவியல், மோட்டார் வாகனம் என்ன என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதன்பின்னர் சக்கரங்கள் இயங்குவதற்கும் இயங்கும் சக்தி தேவைப்படுகிறது. 22 இப்பொழுது, இயேசு வளர்க்கப்பட்ட நாசரேத்துக்கு, திரும்பியிருந்தார். இங்கே வேதவாக்கியங்களில், அவர்கள், “நீர் கப்பர்நகூமில் இன்ன-இன்ன காரியங்களைச் செய்ததாக அவர்கள் கூறினர் என்பதை நாங்கள் கண்டறிகிறோம். இப்பொழுது நீர் அதை இங்கே உம்முடைய சொந்த தேசத்தில் செய்ய நாங்கள் காணட்டும்” என்றனர். 23 இயேசு, “ஒரு—ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த தேசத்தைத் தவிர வேறெங்கும் கனவீனமடையான்” என்றார். மேலும், நிச்சயமாகவே, அங்கேதான் நீங்கள் வளர்க்கப்பட்டீர்கள், ஜனங்கள் உங்களை அறிந்திருக்கிறார்கள். பூமிக்குரிய ஒரு தகப்பன் இல்லாமல் பிறந்ததன் மூலம், துவக்கத்திலேயே அவருக்கு ஒரு—ஒரு—ஒரு கெட்ட பெயர் உண்டாயிருந்தது. அவர்கள் அவரை “ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை” என்று அழைத்தனர், அதாவது மரியாளும், யோசேப்பை விவாகம் செய்வதற்கு முன்பு, அவள் உண்மையாகவே கர்ப்பமாக இருந்தாள். ஆனால், அது அவ்வாறில்லை, அது அவ்வாறில்லை என்பதை நாம் அறிவோம்.
824 இந்த வேதவாக்கியத்தின் மேல், என் கண்கள் இதன்மேல் பட்டது, அரிசோனாவிலுள்ள, பீனிக்ஸில் அண்மையில் நடந்த ஒரு காரியம். அது முழு சுவிசேஷ வர்த்தக புருஷர்களின் சர்வதேச மாநாட்டில், நான் பேச வேண்டிய ஆராதனையின், கடைசி நாளாயிருந்தது. 25 இந்த மாநாட்டில் எங்களுடன் ஒரு வருகையாளர் இருந்தார், அவர் ஒரு கத்தோலிக்க பேராயர். அது—அது, “அப்போஸ்தல கத்தோலிக்க சபையின் கல்தேயர் சடங்குகள், மேன்மைதக்க சங்கை. ஜான் எஸ். ஸ்டான்லி, ஓ.எஸ்.டி” அவர் கத்தோலிக்க சபையில் “அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைமைப் பேராயராக” இருக்கிறார். இது அவருடைய அட்டை மற்றும் அவருடைய—மற்றும் அவருடைய முகவரியாகும். 26 அவர் கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களோடு ஒரு வருகையாளராய் இருந்தார், அதற்கு முந்தின நாள், நான் அவரை அங்கே கண்டிருந்தேன். சனிக்கிழமை இரவு நான் பேசிக்கொண்டிருந்தபோது, அது, அல்லது சனிக்கிழமை காலை சிற்றுண்டி வேளையில், என்று நான் நினைக்கிறேன், மேலும் நான்…நான் பேசிக்கொண்டிருக்கையில், அவர் என்னை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். நான், “அந்த மனிதன் நிச்சயமாகவே நான் கூறுகிற ஒவ்வொரு காரியத்தோடும் இணங்கவில்லை” என்று எண்ணினேன். மேலும், உங்களுக்குத் தெரியும், உங்களால்—உங்களால் அவரைப் பார்க்க முடிந்தது; அவர் தன்னுடைய தலையை மேலும் கீழும் தொடரந்து அசைத்தார், ஆனால் அவர் மேல் சரியாக என்ன கிரியை செய்து கொண்டிருந்தது என்பதை நான் அறியாதிருந்தேன்.
927 எனவே ஞாயிறு பிற்பகல், நான் பேச எழுந்தபோது, பிரசவ வேதனைகள் என்பதன் பேரிலான என்னுடைய பாடப் பொருளை நான் எடுக்கப் போவதாயிருந்தேன், இயேசு, “ஒரு குழந்தையுடன் பிரசவ வேதனையில் இருக்கும் ஒரு ஸ்தீரியாக,” என்று கூறினார், அவள் பிரசவத்தில் வேதனையுற்றுக்கொண்டிருக்கிறாள். எனவே நான், பிரசவ வேதனைகள், என்ற பாடப்பொருளிலிருந்து, உலகமானது இப்பொழுது பிரசவ வேதனையில் உள்ளது என்று, கூறப்போவதாயிருந்தேன். புதியது பிறக்கும்படியாக, பழையது ஒழிந்துபோக வேண்டும்; ஒரு—ஒரு விதை புதிய ஜீவனை அளிப்பதற்காக அழுகிப் போக வேண்டும். 28 எப்படியாய் வேதனைகள், பிரசவ வேதனைகள் உலகத்தை தாக்கினது! முதலாம் உலகப் போரில், அவளுக்கு ஒரு பயங்கரமான வலி உண்டானது, ஏனென்றால் அவர்கள் உலகத்தையே அழிக்கக் கூடிய விஷ வாயு போன்றவற்றை உடையவர்களாயிருந்தனர். இரண்டாம் உலகப் போரில், அவள் மற்றொன்றைத் தாக்கி, அதைவிடக் கடினமான வேதனையை உண்டாக்கினாள்; அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும், ஒரு அணுகுண்டையும் உடையவர்களாயிருந்தனர். அவளால் மற்றொரு பிரசவ வேதனையைத் தாங்க முடியாது. இன்றைக்கு இந்த ஏவுகணைகளினாலும் மற்ற காரியங்களினாலும், இன்னும் ஒரு யுத்தம் அவளை விண்வெளிக்கு தள்ளிவிடும், ஏனென்றால் அவள் இப்பொழுது விடுவிக்கப்படுவாள். ஒரு புதிய பூமி உண்டாயிருக்கும். அவ்வாறு இருக்கும் என்று வேதம் கூறியுள்ளது. 29 ஒவ்வொரு தீர்க்கதரிசியின் செய்தியின் கீழும், இஸ்ரவேலருக்கு ஒரு பிரசவ வேதனை ஏற்பட்டது, ஏனென்றால் வேத சாஸ்திரிகளும், குருமார்களும் சபையை ஸ்தாபன வடிவில் கொண்டு வந்த பிறகு இந்த தீர்க்கதரிசிகள் காட்சியில் வருவார்கள். அந்த தீர்க்கதரிசிகள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு காட்சியில் வந்தபோது, அவர்கள் அந்த சபைகளை அசைத்தனர், அவளுக்கு ஒரு பிரசவ வேதனை உண்டானது. கடைசியாக, அவள் ஒரு சுவிசேஷ குமாரனை பிரசவிக்குமளவிற்கு அவளுக்கு பிரசவ வேதனைகள் அதிகமாக இருந்தன, அது மாம்சமான வார்த்தையாயிருந்தது.
1030 எனவே தேவ குமாரனாகிய குமாரனின் விடுதலை, மீண்டும் வருவதற்காக, சபையானது இன்றிரவு உண்மையாகவே பிரசவ வேதனையில் உள்ளது. நம்முடைய எல்லா வேத சாஸ்திரிகளும், நம்முடைய முறைமைகள் யாவும், நம்முடைய ஸ்தாபனங்கள் யாவும் நமக்குக் கீழிருந்து அழுகிப் போய்விட்டன. எனவே நாம் பிரசவ வேதனையில் இருக்கிறோம், தேவனிடத்திலிருந்து வரும் ஒரு செய்தி எப்பொழுதுமே சபையை அதிக வேதனைக்குள்ளாக்குகிறது, ஆனால் கொஞ்சங் கழித்து அவள் ஒரு மணவாட்டியாக பிரசவிக்கப்படப்போகிறாள். அது இயேசு கிறிஸ்துவுக்கு அவருடைய மணவாட்டியைப் பிறப்பிக்கும். 31 மேலும், அதன்பின்னர், நான் இந்த செய்தியைப் பேச எழுந்தபோது. இந்த மனிதன் என்னுடன் அதிகமாக உடன்படவில்லையென்று எண்ணிக்கொண்டேன், நான் பக்கத்தைக் கண்டுபிடிக்க, என்னுடைய வேதாகமத்தை எடுத்துப் பார்த்தேன். 32 என்னுடைய மனைவி கிறிஸ்துமஸிற்காக எனக்கு ஒரு புதிய வேதாகமத்தை கொடுத்திருந்தாள். என்னுடைய பழைய வேதாகமம் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் பழமையானது, அது கிட்டத்தட்ட துண்டு துண்டாக கிழிந்துபோயிருந்தது. ஒவ்வொரு முறையும் அதை திறக்கும்போது, பக்கங்கள், அதிலிருந்து வெளியே பறந்துவிடும். மேலும், ஆனால் ஒவ்வொரு வேத வாக்கியத்தையும் எங்கே கண்டறிவது என்பதை நான் அறிந்திருந்தேன், எனவே நான் அந்த வேதாகமத்தை கூர்ந்து படிப்பேன். நான் புதிய ஒன்றை எடுத்தேன், ஏனென்றால் அந்த மற்றொன்று சபைக்கு கொண்டுசெல்ல, மிகவும் கந்தலாக காணப்பட்டது.
1133 நான் பரிசுத்த யோவானில் திருப்பத் தொடங்கியபோது, அங்கே கண்டறிந்த வேதவாக்கியத்தை, நான் 16-ம் அதிகாரத்தை வாசிக்கத் துவங்கினேன், நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வசனம் அங்கே இருக்கவில்லை. எனவே நான், “விசித்திரமாயுள்ளதே!” என்று எண்ணினேன். நான் மீண்டும் திருப்பினேன்; அப்பொழுதும் அது அங்கே இருக்கவில்லை. 34 லூசியானாவில் உள்ள, ஷ்ரீவ்போர்ட்டிலிருந்து வந்திருந்த, சகோதரன் ஜேக் மூர், என்னுடைய நெருங்கிய ஒரு நண்பர், அவர் அங்கே அமர்ந்திருந்தார். நான், “சகோதரன் ஜேக், அது பரிசுத்த யோவான் 16-ம் அதிகாரத்தில் காணப்படவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம்” என்றார். 35 இந்த கத்தோலிக்க குருவானவர் மேடையின் மேல் அமர்ந்திருந்த சுமார் நூறு குருமார்கள் மத்தியில், தன்னுடைய இருக்கையை விட்டு எழும்பி; அவருடைய நீண்ட முழு அங்கிகயோடும், சிலுவைகள், போன்றவற்றோடும், எழுந்து என்னருகில் நடந்து வந்தார். மேலும் அவர், “என் மகனே, உறுதியாக இரு. தேவன் அசைவாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்” என்றார். நான், “ஒரு கத்தோலிக்க பேராயர் அதை என்னிடம் கூறுகிறாரா?” என்று எண்ணினேன். அவர், “அதை என்னுடைய வேதத்திலிருந்து வாசியுங்கள்” என்றார். 36 நான் அவருடைய வேதபுத்தகத்திலிருந்து வேதவாக்கியத்தை வாசித்துவிட்டு, என்னுடைய பாடப்பொருளை எடுத்துக்கொண்டு, என்னுடைய பிரசங்கத்தை பிரசங்கித்தேன். 37 அதன்பின்னர், நான் பிரசங்கித்து முடித்துவிட்டு, சென்றபோது அவர் எழுந்து, “ஒரு காரியம் நடக்க வேண்டும். அதற்குப் பிறகு, சபையானது தான் உள்ள குழப்பத்திலிருந்து வெளியே வர வேண்டும், இல்லையென்றால் நாம் சபையிலுள்ள குழப்பத்திலிருந்து வெளியேற வேண்டும்” என்று கூறினார். எனவே, ஒன்று அப்படி அல்லது மற்றொன்று இப்படி.
1238 நான் அன்று மாலை, டூசானுக்கு திரும்பிச் செல்லும், என்னுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். பிள்ளைகள் திண்பண்டத்திற்காக அழுது கொண்டிருந்தனர், நான் ஒரு சிறிய நிறுத்துமிடத்தில் திண்பண்டத்தை வாங்க நின்றேன். மேலும் என் மனைவி, “பில், நீர் அங்கே நின்று கொண்டு அந்த வேதாகமத்தினூடாக தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டபோது, நான் என் வாழ்நாளில் இவ்வளவு பதட்டமாக இருந்ததில்லை.” என்று கூறினாள். “அது உங்களை பதட்டமடையச் செய்யவில்லையா?” என்று கேட்டாள். 39 அதற்கு நான், “இல்லை” என்றேன். நான், “அது அங்கே எங்கோ இருந்தது என்பதை நான் அறிவேன். அவர்கள் அந்த பக்கத்தை அச்சிடவில்லை. அது ஒரு தவறான அச்சடிப்பு” என்று கூறினேன். 40 மேலும் அவள், “நினைத்துப் பாருங்கள், அதாவது நான் அந்த வேதாகமத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! அங்குள்ள ஒவ்வொரு கண்ணும் என்னைப் பார்ப்பது போன்று காணப்பட்டது” என்றாள். 41 மேலும் நான், “சரி, உன்னால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அது வேதாகமத்தில் தவறாக அச்சிடப்பட்டது” என்றேன். அதற்கு நான், “அவர்கள் ஒருபோதும் அந்த பக்கத்தை சேர்க்கவில்லை” என்றேன். 42 பாருங்கள், நான் கீழே இறங்கி அதை மீண்டும் பார்த்தேன், அது எவ்வளவு சரியாக இருக்க முடியுமோ அவ்வளவு சரியாக இருந்தது; ஆனால் 16-ம் அதிகாரத்தின், பாகம் முடிவடைகிறது, அதன் பாகம் கீழே மூன்று அங்குலங்கள் மட்டுமே உள்ளது, மறுபக்கத்தில் 17-ம் அதிகாரத்தில், அதேக் காரியமாகவே இருக்கிறது. மேலும், ஒரு புதிய வேதாகமமாயிருந்தபடியால், அந்த இரண்டு பக்கங்களும் ஒன்றோடொன்று சரியாக ஒட்டிக்கொண்டிருந்தன, நான் 16-ம் அதிகாரத்திற்குப் பதிலாக 17-ம் அதிகாரத்திலிருந்து வாசித்துக் கொண்டிருந்தேன். “பாருங்கள்,” நான், “அதெல்லாம் சரியாயிருக்கிறது. அது ஏதோ ஒரு காரணத்திற்காக” என்றேன்.
1343 நீங்கள் எந்த ஒரு சத்தத்தையும் கேட்க முடிந்ததுபோல, ஒரு சத்தம் என்னிடத்தில் வந்து, “அவர் வளர்க்கப்பட்ட நாசரேத்திலே பிரவேசித்தார்; அவருடைய வழக்கத்தின்படியே, ஜெப ஆலயத்திற்குள் சென்றார். ஆசாரியன் அவரிடத்தில் வாசிக்கும்படி வேதவாக்கியங்களைக் கொடுத்தார், அவர் ஏசாயா 61-ம் அதிகாரத்தை வாசித்தார். அவர் வேதவாக்கியங்களை வாசித்த பிறகு, அவர் அமர்ந்தார்; வேதத்தை, புத்தகத்தை ஆசாரியனிடம் கொடுத்துவிட்டு, உட்கார்ந்து கொண்டார். ஜெப ஆலயத்தில் உள்ள கண்கள் யாவும் அவர் மேல் நோக்கமாயிருந்தன. அவருடைய வாயிலிருந்து விலையேறப்பெற்ற வார்த்தைகள் புறப்பட்டன. அவர், ‘இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று’” என்றார். “இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் நிறைவேறிற்று.” 44 வேதவாக்கியம் எவ்வளவு சரியானதாயிருக்கிறது! நீங்கள் இதை ஏசாயா 61:1 முதல் 2 வரை கவனிப்பீர்களேயானால், நம்முடைய கர்த்தர் ஏசாயா 61:1 முதல் 2 வரை வாசிக்கிறார். ஆனால் ஏசாயா 61-ம் அதிகாரம் 2-ம் வசனத்தின் பாதியில் அவர் நிறுத்திவிட்டார். அங்கே அது, “கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசங்கிக்கவும்” என்று கூறிய இடத்தில் வாசித்துவிட்டு, பின்னர் அவர் நிறுத்தினார். ஏன்? மற்றொரு பாகம், நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவது, அவருடைய முதல் வருகைக்குப் பொருந்தவில்லை, ஆனால் அவருடைய இரண்டாம் வருகைக்குப் பொருந்தும். பாருங்கள், அது அங்கே பொருந்தவில்லை. வேதவாக்கியங்கள் எப்படியாய் ஒரு பிழையையும் உண்டுபணணுகிறதில்லை! அவைகள் எப்பொழுதுமே பரிபூரணமானவைகள். வேதவாக்கியம் நிறுத்தப்பட்ட இடத்தில் இயேசுவும் நிறுத்தினார், ஏனெனில் அது அவருடைய நாளில் சரியாக ரூபகாரப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தது, இப்பொழுது, அந்த முதலாம் வருகையில். இரண்டாம் வருகையில் அவர் பூமியின் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவார்; ஆனால் அப்பொழுது அல்ல. அவர் “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை பிரசங்கிக்கவும்” வேண்டியதாயிருந்தது.
1445 அந்த காலத்திற்கான வாக்குத்தத்த வார்த்தையோடு தம்மை அடையாளங்காட்ட, மேசியா மேடையில் நிற்பதைக் கவனியுங்கள். மேசியா சபைக்கு முன்பாக நிற்பது, எவ்வளவு விசித்திரமானது! இந்த விலையேறப்பெற்ற வார்த்தைகளைப் பாருங்கள், அவர் இங்கே, “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தை பிரசங்கிக்கவும்” என்று கூறுகிறார். 46 “அநுக்கிரக வருஷம்” என்பது வேதாகம வாசிப்பாளர்களாகிய நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி, “யூபிலி வருடமாக” இருந்தது. அதாவது, எல்லா அடிமைகளும் மற்றும் சிறைவாசிகளும், அவர்கள், சிறைபிடிக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டபோது; ஒரு கடனை அடைப்பதற்கு, ஒரு குமாரனை; அல்லது ஒரு குமாரத்தியை, கடனை அடைப்பதற்கு பிறப்பிக்க வேண்டியதாயிருந்தது, [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் எவ்வளவு காலம் அடிமைத்தனத்தில் இருந்து வந்தாலும், அல்லது அவர்கள் எவ்வளவு காலம் அங்கே தரித்திருக்க வேண்டியவர்களாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல; யூபிலி ஆண்டு வரும்போது, எக்காளம் முழங்கினபோது, ஒவ்வொரு மனிதனும் விடுதலையாக விரும்பினால் அவன் விடுதலையாகலாம். [ஒலிநாடாவில் காலி இடம்.] நீங்கள் விடுதலையாகிவிட்டீர்கள். நீங்கள் இனிமேல் அடிமையாயிருக்கவில்லை. 47 ஆனால் நீங்கள் ஒரு அடிமையாக நிலைத்திருக்க விரும்புவீர்களேயானால், அப்பொழுது நீங்கள் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தேவாலய கதவுநிலையருகே நிறுத்தப்பட வேண்டும், அவர்கள் ஒரு கம்பியை எடுத்து, உங்களுடைய காதில் ஒரு துளையை உண்டாக்கினர், அதன்பின்னர் நீங்கள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் அந்த அடிமை எஜமானுக்கு சேவை செய்ய வேண்டியதாயிருந்தது.
1548 இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு அது என்னே ஒரு பரிபூரண உதாரணமாக உள்ளது! அது பிரசங்கிக்கப்படும்போது, அநுக்கிரக காலம், யூபிலியின் நேரம்; நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் எந்த நிறமாயிருந்தாலும், நீங்கள் எந்த ஸ்தாபனத்தைச் சார்ந்திருந்தாலும், நீங்கள் எவ்வளவு தூரம் பாவத்தில் கூனிப்போயிருந்தாலும் அல்லது உங்களோடு என்ன கோளாறு இருந்தாலும்; சுவிசேஷ எக்காளம் தொனிப்பதை நீங்கள் கேட்கும்போது நீங்கள் விடுதலையாகலாம். நீங்கள் விடுதலையாயிருக்கிறீர்கள்! 49 ஆனால் நீங்கள் செய்திக்கு உங்கள் புறமுதுகைக் காட்டி அதற்கு செவி கொடுக்க மறுத்தால், கவனியுங்கள், நீங்கள் ஒரு கம்பியினால், காதில் துளையிடப்படுவீர்கள். நீங்கள் கிருபைக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் இடையேயுள்ள கோட்டை கடந்துவிட்டீர்கள் என்றும், நீங்கள் மீண்டும் ஒருபோதும் சுவிசேஷத்தைக் கேட்கமாட்டீர்கள் என்றும், கூறுவதே, அதன் பொருள். நீங்கள் இதற்கு மேல் ஒருபோதும் செல்லமாட்டீர்கள். நீங்கள் அநுக்கிரக வருஷத்தைக் கேட்க மறுத்தால், உங்களுடைய எஞ்சியுள்ள நாட்களில், நீங்கள் இருக்கின்ற முறைமைக்கு நீங்கள் ஒரு அடிமையாயிருக்க வேண்டும். 50 இப்பொழுது, அதனுடைய மற்ற பாகத்திற்கு, நான் கூறினது போல, பதிலளிக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்த வரவிருக்கும் மேசியா, இப்போது ஒரு காலம், அதன்பிறகு அவர் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்.
1651 இப்பொழுது, அவர் யாராயிருந்தார் என்பதை அந்த ஜனங்கள் எப்படிக் காணத் தவறியிருக்க முடியும்? அவர்கள் அதை எப்படி தவறவிட்டார்கள்? அது மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டு, காண்பிக்கப்படும்போது, அது எப்படி தவறவிட முடியும்? அவர்கள் எப்படி பார்வையை தவறவிட்டிருக்க முடியும்? அவர்… 52 என்னே ஒரு வார்த்தை! அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், “இந்த வேதவாக்கியம் இன்றைய தினம் உங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேறியிருக்கிறது.” யார் அதைக் கூறினார்? தேவன் தாமே, அவர் தம்முடைய சொந்த வார்த்தைக்கு அர்த்தம் உரைப்பவராயிருக்கிறார். “இந்த வேதவாக்கியம் இந்நாளில் நிறைவேறிற்று.” மேசியா, தாமே, சபையோரின் முன்னிலையில் நின்றுகொண்டு வேதாகமத்திலிருந்து தம்மைப் பற்றிய ஒரு வார்த்தையை வாசித்து, அதன்பின்னர், “இந்த வேதவாக்கியம் இன்றைக்கு நிறைவேறிவிட்டது” என்று கூறினர், அவர்கள் அப்பொழுதும் அதைக் காணத் தவறினர். 53 அது என்ன ஒரு சோகமாக இருக்கும், ஆனால் அது நடந்தேவிட்டது. அது அநேக முறை சம்பவித்துள்ளது. அது எப்படி சம்பவிக்க முடியும்? உண்மையாகவே, மனிதனின் வார்த்தையின் வியாக்கியானத்தை விசுவாசிப்பதன் மூலம் மற்ற காலங்களில் செய்தது போலவே. அதுதான் அதற்கு காரணம். அந்த நாட்களில் இருந்த அந்த விசுவாசிகள், விசுவாசிகள் என்று அழைக்கப்பட்டவர்கள், வேதவாக்கியத்தைக் குறித்து ஆசாரியன் கூறியிருந்ததற்கு அர்த்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆகையால் இயேசு, அவர்களுடைய ஸ்தாபனங்களை அல்லது அவர்களுடைய சங்கங்களைச் சார்ந்தவராயில்லாமல், அவர் அவர்களுடைய கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 54 மேலும், ஆகையால், அவர்களால் அவரை அவர்களோடு அடையாளங்காட்ட முடியவில்லை, ஏனென்றால் அவர் அவர்களிடத்திலிருந்து வித்தியாசமானவராக இருந்தார். இயேசு கிறிஸ்து என்னும் நபர் தேவனுடைய குமாரன் என்பதை ஒருவரும் காணத் தவறாதபடிக்கு அவர் மிகவும் ஒப்பற்றவராயிருந்தார், ஏனென்றால் அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்த வேதவாக்கியத்தின் பரிபூரண அடையாளமாக அவர் இருந்தார். 55 அந்தவிதமாகவே எந்த கிறிஸ்தவனும் அறியப்படுகிறான், அவனுடைய ஜீவியம் ஒரு கிறிஸ்தவன் செய்ய வேண்டிய காரியங்களை அடையாளங்காட்டுகிறது.
1756 எப்படி அவரால் அங்கு நின்று, “இந்த வேதவாக்கியம் உங்கள் கண்களுக்கு முன்பாக இந்நாளில் நிறைவேறிற்று!” என்று கூற முடிந்தது. எவ்வளவு விசேஷித்தவர்களாயிருந்தனர், எவ்வளவு தெளிவாக, அதே சமயத்தில் அந்த ஜனங்கள் தவறாகப் புரிந்துகொண்டனர். ஏன்? ஏனென்றால் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்த சில ஆசாரியர்களின் முறைமையின் வியாக்கியானத்தை ஏற்றுக்கொண்டனர். 57 வரலாறு எப்பொழுதுமே திரும்பத் திரும்ப நிகழ்கிறது. வேதம் அதற்கு ஒரு கூட்டுப் பொருளையும், ஒரு கூட்டு வெளிப்பாட்டையும் கொண்டுள்ளது. 58 உதாரணமாக, வேதத்தில், இயேசுவைக் குறிப்பிடுகிற, “எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன்” என்று கூறுவது போல. அதன் பேரில் உள்ள ஓரக்குறிப்பைப் பாருங்கள், அதே வேதவாக்கியம், யாக்கோபைக் குறித்தும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை, நீங்கள் கண்டறியலாம். இயேசு அவருடைய மகத்தான குமாரனாயிருந்தார். அவர் எகிப்திலிருந்து வரவழைத்த அவருடைய குமாரன் யாக்கோபு, ஸ்கோபீல்டு குறிப்பும் மற்ற எல்லா குறிப்புகளும் அதைக் கொடுக்கின்றன, ஏனென்றால் அது வேதவாக்கியத்தையே குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறது. எனவே அது ஒரு—ஒரு இரட்டை பதிலை உடையதாயிருந்தது; அது அழைக்கப்பட்ட யாக்கோபுக்கும், வெளியே அழைக்கப்பட்ட இயேசுவிற்கும் ஒரு பதிலை உடையதாயிருந்தது. 59 அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது! ஏனென்றால் நாம் அப்படிப்பட்ட ஒரு கொந்தளிப்பில் இருக்கிறோம், தேவனுடைய வார்த்தையின் மனிதனால் உண்டாக்கப்பட்ட வியாக்கியானங்கள் அநேகம் உள்ள காரணத்தால், ஜனங்கள் தேவனுடைய சத்தியத்தைக் காணத் தவறுகின்றனர். அவருடைய வார்த்தையை வியாக்கியானிக்க தேவனுக்கு யாருமே தேவையில்லை. அவரே அவருடைய சொந்த வியாக்கியானியாயிருக்கிறார்.
1860 தேவன் ஆதியிலே, “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று கூறினார், வெளிச்சம் உண்டானது. அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. 61 அவர், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றார், அவள் கர்ப்பவதியானாள். அதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. 62 எந்த சமயம்…அது அவ்வண்ணமாயிருக்கும்படி ரூபகாரப்படுத்தி நிரூபிக்கிறதே, தேவனுடைய வார்த்தையின் அவருடைய வியாக்கியானமாயுள்ளது, அதை நிறைவேற்றினதின் மூலம், அதுவே அவருடைய வியாக்கியானமாயிருக்கிறது. அங்குதான் தேவனுடைய வியாக்கியானம் உள்ளது, அப்பொழுது அவர் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார். அவர் அதை உங்களுக்கு வியாக்கியானித்துக் கொண்டிருக்கிறார். 63 வெளிச்சமே இல்லாதிருந்து, அவர், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று கூறி, வெளிச்சம் உண்டானது போலவே, அதற்கு யாரும் அர்த்தம் உரைக்க வேண்டியதில்லை. 64 ஆனால் நாம் மனிதனால் உண்டாக்கப்பட்ட முறைமைகளை அதற்குள் கலந்து, மேலும், நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள்—நீங்கள் அதை ஒழுங்கிலிருந்து விலக்கிவிடுகிறீர்கள். அது எப்பொழுதுமே அந்தவிதமாகவே இருந்து வருகிறது.
1965 ஆனால் அது எவ்வளவு விசேஷமாக இருந்திருக்க வேண்டும் என்பதை நான் இன்னமும் நினைத்துப் பார்க்கிறேன். மேசியா, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! அவர்கள் ஏன் அவரைக் காணத் தவறினர்? காரணம், அவர்களுடையத் தலைவர்கள் அவரை அறிந்திருக்க வேண்டியவர்களாய், வேத வாக்கியங்களை நன்கு அறிந்திருக்க வேண்டியவர்களாயிருந்து, வேத வாக்கியங்களைப் புரிந்துகொண்டிருந்திருக்க வேண்டும், அவர்கள் இந்த மனிதனை இழிவாகக் கருதி, “அவன் துவக்கத்தில் முறைதவறிப் பிறந்த பிள்ளை. நாங்கள் அதை விசுவாசிக்கமாட்டோம்” என்றனர். 66 அநேக ஆண்டுகளுக்குப் பிறகும், நாம் அதை விசுவாசிப்பதில்லை. அவர் ஒரு கன்னி-பிறப்பின் குமாரன் என்று கூறும்படியான நோக்கத்திற்காக நாம் மரிப்போம். 67 இன்றைக்கு நாம் பார்க்கிற யெகோவா செய்கிற காரியங்கள், ஒருநாள் நிறைவேறும், நாம் இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கிற காரியத்திற்காக, வரப்போகும் காலங்களிலுள்ள மனிதர்கள் மரிப்பார்கள். மிருகத்தின் முத்திரை வரும்போது நீங்கள் அதைச் செய்ய வேண்டும், இந்தவிதமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க நீங்கள் அனுமதிக்கப்படமாட்டீர்கள். சபைகளின் மகத்தான சங்கம் ஒன்று சேர்ந்து வரும்போது, அது இப்பொழுது உலக சபைக்கான ஒழுங்கில் உள்ளது, இதற்கு, நீங்கள் உங்களுடைய சாட்சியை உங்களுடைய சொந்த ஜீவியத்தினால் முத்திரையிட வேண்டும்.
2068 நீங்கள் அதை இப்பொழுது விசுவாசிக்க வேண்டும். அவரை ஆக்கினைக்குட்படுத்திய அந்த ஆசாரியர்கள் உயிரோடு எழும்பினால், அவரைக் குற்றப்படுத்த முடியாது. “ஆனால்,” “நான் அங்கிருந்திருந்தால், நான் இன்ன-இன்ன காரியத்தை செய்திருப்பேன்” என்று நீங்கள் கூறலாம். பாருங்கள், அது உங்களுடைய காலமாயிருக்கவில்லை. ஆனால், இது உங்களுடைய காலம், இதுவே அந்த நேரம். நீங்களோ, “சரி, அவர் இங்கே இருந்திருந்தால்!” என்று கூறலாம். 69 வேதம், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. எனவே அவர் இங்கே இருக்கிறார். ஆனால் அவர் இங்கிருக்கிறார். உலகம் நாகரீகமடைந்து, மகத்தானதாய், கல்வியறிவு பெற்றுள்ள நிலையில், அவர் இங்கே ஆவியின் ரூபத்தில் இருக்கிறார், அதை அவர்கள் கொல்லவோ அல்லது மரணத்திற்குட்படுத்தவோ முடியாது. அவர் ஒருமுறை மரித்தார்; அவர் மீண்டும் மரிக்க முடியாது. தேவன் பாவத்திற்காக மாம்சத்தில் மரணத்திற்குட்படும்படிக்கு அவன் மாம்சமாக வேண்டியதாயிருந்தது. ஆனால் இந்த முறை அவரால் மரிக்கவே முடியாது; அது பரிசுத்த ஆவியாகும்.
2170 இப்பொழுது, அவருக்கு விரோதமான காரியங்களை அவர்கள் கொண்டிருந்தனர் என்று எப்படியாய் நினைத்துப் பார்க்க முடிகிறது! மற்றொரு காரியம், அதாவது அவர் அவர்களுடைய அணிகள் எதனோடும் சேரமாட்டார். அதன்பின்னர், நீங்கள் பாருங்கள், அது இன்னமும் அவரை ஒரு மோசமான நபராக்கியது. அவர் அவர்களுடைய—அவர்களுடைய ஸ்தாபனங்களில் சேரமாட்டார், அவர்களுடைய ஆசாரியத்துவத்தில் சேரமாட்டார், அவர் அதனோடு எந்த சம்மந்தமும் வைத்துக் கொள்ளமாட்டார். அதன்பின்னர் இவையெல்லாவற்றையும் தவிர, அவர்கள் கட்டியெழுப்பியிருந்ததை அவர் தகர்தெரிய முயன்றார். 71 அவர் ஆலயத்திற்குள் சென்றார். நாம் அவரை ஒரு சாந்த குணமுள்ள மனிதன் என்கிறோம்; அவர் அவ்வாறு இருந்தார், ஆனால் அநேக சமயங்களில் நாம் சாந்தம் என்றால் என்ன என்பதை தவறாக புரிந்து கொள்கிறோம். 72 அவர் இரக்கமுள்ள ஒரு மனிதனாயிருந்தார், ஆனால் அதே சமயத்தில் இரக்கம் என்றால் என்ன என்பதை நாம் சில சமயங்களில் புரிந்துகொள்ளத் தவறுகிறோம். மானிட இரக்கம் அல்ல, அது இரக்கம் அல்ல. ஆனால் இரக்கம் என்பது “தேவனுடைய சித்தத்தை செய்வதாகும்.” 73 அவர் வாசலாகிய, பெதஸ்தா குளத்தினூடாக கடந்து சென்றார். அங்கே திரளான ஜனங்கள், படுத்திருந்தனர். திரள் கூட்டங்கள் என்பது குறிப்பிட்ட எண்ணிக்கை அல்ல. ஆனால் அங்கே திரளான ஜனங்கள்; சப்பாணிகள், குருடர்கள், சப்பாணிகள், சூம்பினவர்கள். அவர் எப்பொழுதுமே ஜனங்களின் மேல் பரிவு கொண்டிருந்தார். அவர் முடமான, குருடான, சப்பாணியான, சூம்பாத ஒரு நபரிடத்திற்குச் சென்றார்; ஒரு சுரப்பித் தொல்லையாயிருக்கலாம், ஒரு வேளை அவருக்கு மந்தமான ஏதோ ஒரு சிறு பலவீனம் இருந்திருக்கலாம். அவன் அதை முப்பத்தெட்டு வருடங்களாக உடையவனாயிருந்தான். அது அவனைத் தொல்லைப்படுத்தப் போவதில்லை, அவனைக் கொல்லப் போவதில்லை. அவன் ஒரு மரப்பலகையின் மேல் படுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவர், “நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டார். 74 அப்பொழுது அந்த மனிதன், “என்னை தண்ணீரில் கொண்டு போய்விட யாரும் இல்லை, ஆனால் நான் வரும்போது, யாரோ ஒருவர் எனக்கு முன்னால் வந்து இறங்கிவிடுவார்” என்றான். பாருங்கள், அவனால் நடக்க முடிந்தது, அவனால் பார்க்க முடிந்தது, அவனால் சுற்றிலும் செல்ல முடிந்தது, ஆனால் அவன் பலவீனமாக இருந்தான். 75 இயேசு அவனை நோக்கி, “எழுந்திரு. உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உன்னுடைய வீட்டிற்குப் போ” என்றார். அதன் பேரில் இயேசுவிடம் கேள்வி கேட்கப்பட்டது, வேதவாக்கியம் இதைக் கூறினது உங்களுக்கு நினைவிருக்கும்.
2276 வியப்பொன்றுமில்லையே! அவர் இன்றிரவு ஜெபர்ஸன்வில்லுக்கு வந்து, அதைப் போன்ற ஒரு செயலைச் செய்வாரேயானால், அவர்கள் அப்பொழுதும் அவரைக் குறித்து பேசுவார்கள். 77 ஆனால், நினைவிருக்கட்டும், அவர் ஒரு காரியத்தைச் செய்ய வந்தார், அது தேவனுடைய சித்தமாயிருந்தது. இப்பொழுது, அது பரிசுத்த யோவான் 5:19-ல் காணப்படுகிறது, நீங்கள் அதில் பதிலைப் பெறுவீர்கள். அவர், “மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், குமாரன் தாமாய்ச் செய்யமாட்டார்; பிதாவானவர் செய்ய அவர் காண்கிறதையே, குமாரனும் செய்கிறார்” என்றார். 78 இப்பொழுது, அது மோசேயின் தீர்க்கதரிசனத்தின் அதே ரூபகாரப்படுத்துதலாய் இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும், “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்.” 79 நீங்கள் கவனித்தீர்களா, அவர் அந்த மனிதனைக் கண்டபோது, அவர் கூறினார்…அவன் அநேக ஆண்டுகளாக இந்த நிலையில் இருந்து வந்தான் என்பதை இயேசு அறிந்திருந்தார். பாருங்கள், ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவர் அந்த மனிதனை அந்த நிலையில் கண்டார்; அங்கு சென்று அந்த ஜனங்களினூடாக விலக்கிக்கொண்டே—விலக்கிக்கொண்டே, அவர் அந்த குறிப்பிட்ட மனிதனைக் கண்டறியும் வரை, கூட்டத்தினூடாக தேடிப் பார்த்துக்கொண்டிருந்தார். 80 முடவரையும், சப்பாணியையும், குருடரையும், சூம்பிப்போனவரையும் கடந்து சென்றார், அதே சமயத்தில் இரக்கத்தினால் நிறைந்த ஒரு மனிதனாயிருந்தார். ஆனால் இரக்கம் என்பது “தேவனுடைய சித்தத்தை செய்வதாகும்.”
2381 இப்பொழுது, நாம் அவரைக் கண்டறிகிறோம், அவர் அவர்களோடு சேர விரும்பாதபடியால், அவர்களுடைய பிரிவுகளில் அவருக்கு எந்த சம்மந்தமும் கிடையாது, அப்பொழுது அவர் புறம்பே தள்ளப்பட்டவராயிருந்தார். அவர் எந்த… 82 அதுமட்டுமின்றி, அவர் ஒரு நாள் ஆலயத்திற்குள் சென்றார். ஒரு மனிதன் அங்கே உள்ளே பிரவேசித்து, தேவனுடைய வீடு கிட்டத்தட்ட இன்றைக்கு உள்ளதைப்போல மாசுபட்டிருப்பதைக் கண்டார். அவர்கள் வாங்கி, விற்று, பணத்தை மாற்றிக் கொண்டிருந்தனர். அவர் பண மேசைகளைப் கவிழ்த்துப்போட்டார்; கயிறுகளை எடுத்து, அவைகளை பின்னி, தேவாலயத்திலிருந்து பணம் மாற்றுகிறவர்களை அடித்தார். கோபத்தோடு அவர்களை நோக்கிப் பார்த்து, “இது இவ்வாறு எழுதப்பட்டுள்ளது,” என்றும், அல்லேலூயா, “என் பிதாவினுடைய வீடு ஒரு ஜெப வீடு; நீங்கள் அதை கள்ளர்களின் ஒரு குகையாக்கிவிட்டீர்கள். நீங்கள் உங்களுடைய பாரம்பரியங்களினால் தேவனுடைய கற்பனைகளை அவமாக்கினீர்கள்” என்றார். 83 ஓ, அதைப் போன்ற ஒரு கூட்டத்தார் எப்போதாவது அவரில் விசுவாசங்கொண்டிருக்க முடியுமா? இல்லை, ஐயா. அவர்கள் சங்கங்களின் சேற்றிலும் மற்றும் அந்த நாளின் அசுத்தத்திலும் புரண்ட பன்றியாயிருந்தனர், சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமையின் அதிர்வுகளை அவர்களால் உணர முடியாத அளவிற்கு அவர்கள் மிகவும் மதசம்பந்தமானவர்களாயிருந்து உறைந்துபோகுமளவிற்கு இருந்தனர். அந்த சிறிய ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு, அதனால் சுகமாக்கப்பட்டதில் வியப்பொன்றுமில்லை; ஒரு குடிகார போர்வீரன் அவருடைய முகத்தில் துப்பினாலும், எந்த நற்பண்பையும் உணர முடியவில்லையே! நீங்கள் அதை எப்படி அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் எதைத் நோக்கிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் சபைக்குச் செல்லும்போது, அது நீங்கள் எதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
2484 இப்பொழுது அவர் அங்கே நின்று கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். ஜனங்கள் அவரைக் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தபடியால், எச்சரித்து… “அடுத்த ஓய்வு நாளில் அவர் வருவார். நீங்கள் அவருக்கு செவிகொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்ததில் வியப்பொன்றுமில்லை. இப்பொழுது, நீங்கள் போய் இங்கே அமரலாம், ஆனால் அவர் என்ன கூறுகிறார் என்பதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டாம், ஏனென்றால் அவர் நம்முடைய குழுவைச் சார்ந்தவரல்ல. அவர் புறம்பாக்கப்பட்டவர். அவரிடம் ஐக்கிய அட்டை ஏதும் இல்லை. அவரிடத்தில் ஒரு ஸ்தாபன சான்றிதழ் கூட இல்லை. அவர் அப்படிப்பட்ட ஒன்றையும் பெற்றிருக்கவில்லை” என்று கூறினர். “அவர் யார்?” 85 “ஒரு தச்சனுடைய வீட்டில், இங்கே முறை தவறிப் பிறந்த, ஒரு துரோகியான பையன், அவர்கள் விவாகமாவதற்கு முன்னரே ஒரு தாய் அவரை கர்ப்பந்தரித்ததை, அவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டு அந்த காரியத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 86 “மேசியா வரும்போது, அவர் பரலோகத்தின் தாழ்வாரங்களில் இறங்கி, நம்முடைய பிரதான ஆசாரியனிடத்தில் போய், ‘காய்பா, இதோ நான் இருக்கிறேன்,’” என்று கூறுவார் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர் அதை அந்தவிதமாக செய்யவில்லை என்பதை நாம் கண்டறிகிறோம், ஏனென்றால் அது வார்த்தையில் அந்தவிதமாக எழுதப்படவில்லை. அது அவர்கள் அதை விசுவாசிக்க காரணமாயிருந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு பாரம்பரியமாயிருந்தது. 87 அவர் வந்தவிதமாகவே அவர் வருவார் என்று வார்த்தை கூறியிருந்தது. அவர் அங்கே நின்று, வார்த்தையை வாசித்து, “இன்றைக்கு இந்த வேதவாக்கியம் உங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது” என்று அவர்களிடம் கூறினார். மற்ற எல்லாக் காலங்களிலும் அவர்கள் செய்தது போலவே, இன்னமும் அவர்கள் அவரைக் காணவோ அல்லது அவரை அடையாளங்கண்டு கொள்ளவோ தவறிவிடுகின்றனர்.
2588 நோவா பேழைக்குள் பிரவேசித்து கதவு அடைக்கப்பட்ட நாளிலே, நோவாவும் அதையே கூறியிருக்க முடியும். மோசே பேழையின் உச்சியில் உள்ள ஜன்னலை உயர்த்தி, சபையோரை நோக்கி… தேவன் கதவை மூடிவிட்டார் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அவன், “இன்றைக்கு இந்த வேதவாக்கியம் உங்கள் பார்வையில் நிறைவேறிற்று” என்று கூறியிருக்க முடியும். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு மிகவும் காலதாமதமாகிவிட்டது. அவன் கட்டியிருந்த அந்தப் பேழையில் அவர்களை ஏற்றிச் செல்ல முயற்சிக்கவும், “கர்த்தர் உரைக்கிறதாவது, மழை பெய்யப்போகிறது” என்று வேதம் உரைத்துள்ளது என்று அவர்களிடத்தில் கூறி, அவன் நூற்று இருபது வருடங்களாக பிரசங்கித்திருந்தான், ஆனால் அவர்கள் நீண்ட காலம் காத்திருந்தனர். ஆனால் நோவாவினால், “இன்றைக்கு, இந்நாளில், வேதவாக்கியம் நிறைவேறிற்று” என்று எளிதில் கூற முடிந்தது. 89 மோசே, சீனாய் மலையின் மேல் அக்கினி ஸ்தம்பம் இறங்கி வந்து, அவனுடைய சாட்சியைக் குறித்து சாட்சி கொடுத்த அதே நாளில், மோசே, “இந்த வேதவாக்கியம் இந்நாளில் நிறைவேறிவிட்டது” என்று கூறியிருக்க முடியும். 90 மோசே, ஒரு தீர்க்கதரிசி என்று, அழைக்கப்பட்ட தேவனுடைய ஒரு மனிதன் என்பதை, நீங்கள் அறிவீர்கள். அவன் அழைக்கப்பட்டபோது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அனுபவத்தை உடையவனாயிருக்க வேண்டியதாயிருந்தது. ஒரு தீர்க்கதரிசியாக இருப்பதற்கு, அவன் தேவனை முகமுகமாய் சந்தித்து அவரோடு பேச வேண்டியதாயிருந்தது. மற்றொரு காரியம், அவன் கூறினது நிறைவேற வேண்டியதாயிருந்தது, இல்லையென்றால் எவருமே அவனை விசுவாசித்திருக்கமாட்டார்கள். 91 எனவே அவன் எங்கோ ஒரு பாலைவனத்தின் பின்பக்கத்தில் தேவனோடு முகமுகமாய்ப் பேசும் வரை, எந்த மனிதனும் தன்னை இவ்வாறு அழைத்துக் கொள்ள உரிமையில்லை, அவன் தானே, தேவனை சந்தித்தான். உலகத்தில் உள்ள எல்லா நாத்திகர்களும் அவனிடமிருந்து அதை விளக்கிக் கூற முடியவில்லை; அவன் அங்கிருந்தான், அது சம்பவித்ததை அவன் அறிந்திருந்தான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதைக் குறித்து அவர்கள் எந்தக் காரியத்தையும் கூறுவதற்கு முன்பு அந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். உங்களுடைய சொந்த அனுபவம்!
2692 நான் சற்று முன்னர், என்னுடைய மருமகனிடம், ஒரு சிறிய கத்தோலிக்க பையனிடம் பேசினேன், “பில் மாமா, நான் இங்கும் அங்கும் ஓடி, ஏதோ ஒன்றைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினான். இந்தக் கூட்டம் துவங்குவதற்கு, முன்னர் ஒவ்வொரு இரவும், அவன் அழுது கொண்டேயிருக்கிறான். இரவு நேரத்தில், அவன் பலிபீடத்திற்கு ஓடுவது போல், கனவு கண்டு, பிரசங்கிக்கிற இடத்திலே, தான் தவறாயிருந்ததாக அறிக்கையிடுகிறான். 93 நான், “மெல்வின், நீ எங்கு செல்ல முயற்சித்தாலும், எத்தனை சபைகளை நீ சேர்ந்திருந்தாலும், எத்தனை முறை ‘மரியாளே வாழ்க’ என்று நீ கூறினாலும், அல்லது எத்தனையோ ஆசீர்வாதங்களை நீ மனிதனிடமிருந்து பெற்றாலும், நீ தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறக்க வேண்டும். அது மாத்திரமே மானிட இருதயத்தை திருப்திபடுத்தும்” என்றேன். 94 அதாவது, இன்றைக்கு, மறுபடியும் பிறப்பதற்கு பதிலாக, அவர்கள் ஒரு பதிலீயைப் பெற்றுள்ளனர் என்பது எனக்குத் தெரியும், பிரசங்கியாரோடு கரங்குலுக்கி உங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்யுங்கள். ஆனால், நண்பர்களே, அது ஒரு கோட்பாடாக உள்ளது. அது ஒரு வேதாகம சத்தியம் அல்ல. அப்போஸ்தலருடைய நடபடிகள், 2-ம் அதிகாரத்தில் இந்தவிதமாக வாசிக்கப்பட வேண்டுமானால், “பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, போதகர் வெளியே நடந்து வந்து ஜனங்களோடு கைகுலுக்கினார்.” 95 ஆனால், “பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது,” சபையின் துவக்க விழாவில், “பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல வானத்திலிருந்து ஒரு முழக்கம் உண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பினது.” அந்தவிதமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் முதன்முறையாக வந்தார். அந்தக் காலம் முதற்கொண்டு ஒவ்வொரு முறையும் அவ்விதமாகத்தான் அது இருந்து வருகிறது. அவர் தேவனாயிருக்கிறார், மாறுகிறதில்லை. இப்பொழுது, அது ஜனங்களை இடறச் செய்கிறது. அவர்கள், “அது மற்றொரு நாளுக்கானதாயிருந்தது” என்கின்றனர்.
2796 பாருங்கள், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஒவ்வொரு முறையும் சபையானது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டபோது, அவர் முதல் முறை செய்தது போலவே அது எப்பொழுதும் வந்துள்ளது, அதே மருந்து சீட்டின் கீழ், அப்போஸ்தலர் 2:38; ஒருபோதும் மாறவேயில்லை, ஒருபோதும் மாறப்போவதில்லை. 97 ஒரு நோய்க்கு ஒரு மருத்துவர் கொடுக்கும் மருந்து சீட்டு போல. அவர் ஒரு நோய்க்கான மருந்துச் சீட்டை எழுதிக் கொடுப்பார், மருத்துவர் அதையே செய்கிறார். அதை ஏதோ போலி மருந்து கடைக்காரரிடம் கொண்டு சென்று, அவர் அதில் அதிகப்படியான மாற்று மருந்துகளை அதில் போடுகிறார், அது மிகவும் பலவீனமாக உள்ளது, அது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது; அவர் அதில் அதிகப்படியான விஷத்தைப் போட்டால், அது உங்களை கொன்றுவிடும். அது மருத்துவரின் கூற்றுப்படி எழுதப்பட வேண்டும். 98 பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மருத்துவரின் மருந்து சீட்டு பெந்தெகொஸ்தே நாளில், வேதபண்டிதர் சீமோன் பேதுருவினால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. “நான் உங்களுக்கு ஒரு மருந்துச் சீட்டைத் தருவேன். நீங்கள் ஒவ்வொருவரும், மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். அந்த மருந்துச் சீட்டு நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் அநேகருக்குரியதாயிருக்கிறது.” நித்திய மருந்து சீட்டு!
2899 மோசே இந்த அனுபவத்தை உடையவனாயிருந்தான். அவன் தேசத்திற்குச் சென்று, ஜனங்களிடம், “நான் ஒரு அக்கினி ஸ்தம்பத்தை சந்தித்தேன். அது எரிகிற முட்செடியில் இருந்தது. நான் ‘ இருக்கிறவராக இருக்கிறேன் என்று உங்களிடம் கூறும்படி அவர் என்னிடம் கூறினார் என்று கூறத் தொடங்கினான். இறங்கிப் போ; நான் உன்னோடு கூட இருப்பேன். உன்னுடைய கையிலுள்ள கோலை எடுத்து, அதை எகிப்தின் மேல் நீட்டு; நீ கேட்டுக்கொள்வதெதுவோ, அது நிச்சயம் செய்யப்படும்’” என்றார். சரி, ஏதோ ஒரு ஆசாரியர், “அர்த்தமற்றது” என்று கூறியிருக்கலாம். 100 ஆனால் அவர்கள் இதைக் குறித்த உண்மையான உண்மைகளைக் கண்டபோது, அது நிறைவேறி, அவர்களால் அதை இனிமேல் வைத்திருக்க முடியாது. அவன் தேவனால் அனுப்பப்பட்டவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 101 அதன்பின்னர், மோசே அதைக் கண்டு, அது சத்தியம் என்று சாட்சி பகர்ந்தால், அது உண்மையாயிருந்தால், அப்பொழுது தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார், அந்த மனிதனுடைய வார்த்தையை, சத்தியத்தை அடையாளங்காட்டி, அதை ரூபகாரப்படுத்த வேண்டும். அது உண்மை. 102 இயேசு கிறிஸ்து அங்கு நின்று, அந்நாளில், “இந்த வார்த்தை உங்களுக்கு முன்பாக நிறைவேறி வருகிறது” என்று வாசித்தால், தேவன் அந்த வார்த்தையை நிறைவேற்ற கடமைப்பட்டவராயிருக்கிறார். 103 நாம் இன்றிரவு இங்கே நின்று, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறுகிறோம். அது அவ்வண்ணமாய் இருக்க வேண்டும் என்று தேவன் நிரூபிக்க கடமைப்பட்டிருக்கிறார், ஏனென்றால் அது அவருடைய வார்த்தையாயுள்ளது. இப்பொழுது, அது என்ன செய்கிறது? அதை விசுவாசிப்பதில், அதற்கு விசுவாசம் தேவை. அது சத்தியமாயிருக்கிறது, அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதில், விசுவாசம் தேவைப்படுகிறது.
29104 மோசே பிள்ளைகளையும், அவனைப் பின்பற்றின யாவரையும், வெளியே கொண்டு வந்தபோது என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். பின்பற்றாதவர்கள் எகிப்திலேயே தங்கியிருந்தனர். ஆனால் மோசேயைப் பின்பற்றினவர்கள், அவர்கள் சிவந்த சமுத்திரத்தை விட்டு வெளியேறி வனாந்திரத்திற்குள்ளாகச் சென்றபோது, தேவன் சீனாய் மலையின் மேல் இறங்கி வந்தார். அந்த அக்கினி ஸ்தம்பம் முழு மலையையும் கொழுந்துவிட்டு எரியச் செய்து, அங்கேயிருந்து ஒரு சத்தம் உண்டானது, தேவன் பத்து கற்பனைகளைக் கொடுத்தார். 105 மோசே ஜனங்களுக்கு முன்பாக அங்கு நடந்து சென்று, “அவருடைய தீர்க்கதரிசியாக நான் உங்களுக்குக் கூறின வேதவாக்கியம் இந்நாளில் நிறைவேறுகிறது. தேவன் என்னை அங்கே ஒரு எரிகிற முட்செடியில், ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் சந்தித்தார் என்றும், அவர், ‘நான்…இது ஒரு அடையாளமாயிருக்கும். நீ அந்த ஜனங்களை மீண்டும் இங்கே இந்த இடத்துக்கு கொண்டு வருவாய்.’ தேவன் அங்கே இருக்கிறார் என்று நான் உங்களிடம் கூறின அதே அக்கினி ஸ்தம்பத்தில், அவர் அங்கே அப்பாலுள்ள மலையின் மேல் தொங்கிக் கொண்டிருந்தார். இந்நாளில் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. நான் கூறியுள்ள காரியங்கள் சத்தியம் என்பதை அவர் இங்கே ரூபகாரப்படுத்த வேண்டும்” என்றான். 106 தேவன் நமக்கு இதைப் போன்ற அதிகமான மனிதர்களைத் தந்தருளுவார், அது நேர்மையும், உத்தமமுமான, சத்தியத்தை, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தை இன்னமும் சத்தியமாயிருக்கிறது என்பதை ரூபகாரப்படுத்த முடியும்! அவர் நேற்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் ஏன் அதைச் செய்யமாட்டார்? அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார்.
30107 யோசுவா காதேஸ்பர்னியாவுக்கு திரும்பி வந்த நாளிலே, அதையே சொல்லியிருக்கலாம், அவர்கள் வனாந்திரத்தில் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்திருந்தனர். அது தேவன் கூறின ஒருவிதமான நிலமாயிருக்கும் என்று அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தனர். ஆனால் தேவன் அவர்களிடம் அது ஒரு நல்ல தேசம் என்றும், அதில் பாலும் தேனும் ஓடிக்கொண்டிருந்தது என்றும் கூறினார். யோசுவா மற்றும் காலேப் ஆகிய இருவர் மாத்திரமே அதை விசுவாசித்தனர், புறப்பட்டுச் சென்ற மற்ற பத்து பேரில். அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்கள் அத்தாட்சியை உடையவர்களாயிருந்தனர்; அவர்கள் இரண்டு பலமுள்ள மனிதர்கள் மாத்திரமே சுமந்து செல்ல முடிந்த ஒரு கொத்து திராட்சை பழங்களை வைத்திருந்தனர். 108 யோசுவாவும் காலேபும் அங்கே நின்று கொண்டு, “இந்த வேதவாக்கியம் இந்நாளில் நிறைவேறிற்று. அது ஒரு நல்ல தேசம் என்பதற்கு இதோ அத்தாட்சி” என்றனர். நிச்சயமாக. ஏன்? “அது ஒரு நல்ல தேசம் என்பதற்கு அத்தாட்சி உண்டு. எகிப்தில், இவ்விதமான காரியங்களை நீங்கள் எங்கிருந்து பெற்றிருக்கிறீர்கள்? அப்படிப்பட்ட ஸ்தலங்கள் இல்லை. ஆனால் இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று” என்றான். 109 அவன் தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அவன் அதே காரியத்தைக், கூறியிருக்க முடியும் எரிகோவின் மதில்கள் ஒரு நாளில் ஏழு முறைகள், ஏழு நாட்கள், ஏழு முறைகள் சுற்றி அணிவகுத்து வந்த பிறகு இடிந்து விழும் என்று கூறினான். கடந்த முறை அவர்கள் அதைச் சுற்றி அணிவகுத்துச் சென்றபோது, சுவர்கள் இடிந்து விழுந்தன. யோசுவா எழுந்து நின்று, “இந்த நாளில், கர்த்தருடைய சேனையின் தலைமை தளபதி பல வாரங்களுக்கு முன்பு என்னிடம் கூறினார் இது இப்படி நடக்கும் என்றும், இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று” என்றும் கூறினான். அங்கே சுவர்கள், தரையில் தரைமட்டமாக விழுந்து கிடந்தன. “வாருங்கள், நாம் போய் அதை எடுத்துக் கொள்வோம். அது நமக்கு சொந்தமானது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேறியுள்ளது.” 110 எவ்வளவு அற்புதமானது, தேவனுடைய மனிதர் சரியான காரியங்களுக்காக நின்றிருக்கிறார்கள்!
31111 இஸ்ரவேலர் நதியண்டையில், அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டபோது, கடந்து சென்றனர். அவர்கள் அதை எப்படி செய்யப் போகிறார்கள்? அது ஏப்ரல் மாதம். யூதேயாவில், பனி உருகிக் கொண்டிருக்கிற காரணத்தால் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. யோர்தான் நதி முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகமாய் பெருக்கெடுத்தபோது, ஏப்ரல் மாதத்தில், தம்முடைய ஜனங்களை அங்கே கொண்டு வரும்படியாக, ஓ, தேவன் என்ன ஒரு பரிதாபமான தளபதியாகத் தென்பட்டார். சில நேரங்களில்… 112 எனக்கு நேரமிருந்தால், நான் இங்கே நிறுத்தி, உங்களுக்கு ஒரு சிறு உதவிக் குறிப்பை அளிக்கலாம். சில சமயங்களில் நீங்கள் அங்கே புற்று நோயோடு உட்கார்ந்து கொண்டிருக்கலாம், அல்லது நீங்கள் ஒரு வியாதியோடு உட்கார்ந்து கொண்டிருக்கலாம்; நீங்கள், “ஒரு கிறிஸ்தவனாயிருக்கிற நான் ஏன் இந்த விதமாக இருக்க வேண்டும்? நான் ஒரு கிறிஸ்தவனாயிருந்தால், நான் ஏன் இப்படி உட்கார்ந்திருக்க வேண்டும்?” என்று நினைக்கலாம். நீங்கள் சுற்றிலும், அல்லது வேறு எங்கும் காணமுடியாதபடி, சில நேரங்களில் தேவன் காரியங்களை மிகவும் இருட்டாயிருக்க அனுமதித்து, அதன்பின்னர் அவர் வந்து உங்களுக்காக ஒரு வழியை உண்டுபண்ணுகிறார், நீங்கள், “அவர் செய்வதாக வாக்குத்தத்தம் செய்திருந்த இந்த வேதவாக்கியம் இந்நாளில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது” என்று கூறலாம்.
32113 அவர் எபிரெய பிள்ளைகளை அக்கினிச் சூளைக்குள் நடக்க அனுமதித்தார். அவர்கள், “எங்கள் தேவன் இந்த அக்கினிச் சூளையிலிருந்து எங்களை விடுவிக்க வல்லவராயிருக்கிறார். ஆனால், இருப்பினும், நாங்கள் உம்முடைய சொரூபத்திற்கு தலைவணங்கமாட்டோம்” என்றனர். அவர்கள் அங்கிருந்து வெளியே நடந்து சென்றபோது, சூளையின் வாசனை அவர்கள் மேல் வியாபித்திருந்தது…சரியாகக் கூறினால், அவர்கள் மேல், சூளையின் வாசனையேயில்லை; அவர்கள், “இன்றைக்கு இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று” என்று கூறியிருக்க முடியும். 114 தானியேல் சிங்கங்களின் கெபியிலிருந்து வந்தபோது, அவனும் அதேக் காரியத்தைக் கூறியிருக்க முடியும். 115 யோவான் ஸ்நானன். நானூறு வருடகால மதசம்பந்தமான போதனைக்குப் பிறகு, அந்த நேரத்தில் சபை ஒரு குழப்பத்தில் இருந்ததில் வியப்பொன்றுமில்லையே! அவன் வனாந்திரத்தில், யோர்தானில் தோன்றியபோது, அவன் செய்ததுபோல, அவன் அங்கேயே கரையில் நின்று, “இந்த வேதவாக்கியம், ஏசாயா 40-ம் அதிகாரம், இந்நாளில் நிறைவேறிற்று” என்று கூறியிருக்க முடியும்.
33116 நான் எப்படி இங்கே நிறுத்திக்கொண்டு அந்த வயோதிக பாதிரியார் என்னிடம் கூறினதை உங்களிடம் கூற விரும்புகிறேனே! “மகனே, நீ அந்த செய்தியை முடிக்கவேயில்லை” என்றார். நான், “அமைதியாய் இருங்கள்” என்றேன். அவர், “பெந்தேகோஸ்தேயினர் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை” என்றேன். 117 அவர், “நான் அதைக் காண்கிறேன்” என்றார். ஒரு கத்தோலிக்க பாதிரியாரும் கூட! ஹூ-ஹூ. அதற்கு அவர், “நீங்கள் ஏன் தொடர்ந்து செல்லவில்லை?” என்று கேட்டார். நான், “அமைதியாய் இருங்கள்” என்றேன். அவர், “தேவனுக்கு மகிமை! நான் அதைக் காண்கிறேன்” என்றார். 118 ஏறக்குறைய அந்த நேரத்தில் அங்கே கூட்டத்தில் அமர்ந்திருந்த, அவருடைய சகோதரியின் மேல் பரிசுத்த ஆவி விழுந்தது. அவள் எழுந்து அந்நிய பாஷைகளில் பேசி, பாதிரியாரும் நானும் மேடையின் மேல் பேசிக்கொண்டிருந்த அதே காரியத்தின் வியாக்கியானத்தை அளித்தார். முழு சபையும், முழு இடமும், ஒரு இரைச்சலுக்குள்ளாக சென்றது. ஓரல் ராபர்ட் அவர்களின் கடந்த வாரம் அல்லது அதற்கு முந்தின வாரம் நடைபெற்ற மாநாட்டில் தொடர்ந்து பேசப்பட்டது. எப்படியாய் அந்த பாதிரியார்…பரிசுத்த ஆவியின் கீழ் அமர்ந்து, ஒரு ஸ்திரீயினூடாக அங்கே வெளிப்படுத்தப்பட்டது, அது அவருடைய சகோதரி என்று நான் நம்புகிறேன், அங்கே மேடையின் மேல் என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது என்பதைக் குறித்தும், நாம் மறைத்துக்கொண்டிருந்த அந்த காரியத்தையும் வெளிப்படுத்தினார். 119 நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையில், இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேறியுள்ளது. இந்த நாளில் சாயங்கால வெளிச்சங்கள் வந்துள்ளன, நாம் அதைக் காணத் தவறுகிறோம். கவனியுங்கள்.
34120 யோவான், “ஏசாயா தீர்க்கதரிசி கூறினதுபோல, இன்றைக்கு நான் ‘வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்,’ ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்’” என்றான். 121 அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. “ஓ, நீங்கள் இயேசு…நீங்கள்—நீங்கள் கிறிஸ்து” என்று கூறலாம். 122 அவன், “நான் கிறிஸ்து அல்ல” என்றான். அவன், “அவருடைய பாதரட்சைகளை அவிழ்க்க நான் பாத்திரன் அல்ல. ஆனால்,” அவன், “அவர் உங்களுக்கு மத்தியில் எங்கோ, நின்று கொண்டிருக்கிறார்” என்றான். ஏனென்றால் அவர் அங்கிருப்பார் என்று அவன் நிச்சயமுடையவராயிருந்தான். அவன் தன்னுடைய நாளில் இருப்பான், ஏனெனில் அவன் மேசியாவை அறிமுகப்படுத்த வேண்டுமென்று தேவன் அவனிடத்தில் கூறினார். 123 ஒரு நாள் ஒரு வாலிபன் அந்த வழியாக நடந்து வந்து, அது அவருக்கு மேல் ஒரு ஒளியைப் போலவும், ஒரு அடையாளமாகவும் காணப்பட்டதை அவன் கண்டான். அவன், “இதோ தேவ ஆட்டுக்குட்டி! இந்நாளில் இந்த வேதவாக்கியம் உங்களுக்கு முன்பாக நிறைவேறியுள்ளது” என்றான். நிச்சயமாக.
35124 பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு எப்படியாய் எழுந்து நின்று, யோவேல் 2:38-லிருந்து அவர்களுடைய வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டினான். அந்த ஜனங்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களால் தங்களுடைய சொந்த பாஷையில் பேச முடியவில்லை. அவர்கள் ஏதோ ஒரு காரியத்தை உளறிக் கொண்டிருந்தனர். வேதம், “பிரிந்திருக்கும் நாவுகள்” என்று கூறியுள்ளது. பிரிந்த ஒரு “பிளவுபட்ட” நாவு, ஒன்றுமே கூறாமல், வெறுமென ஒரு வார்த்தையை உளறுதல். குடித்து வெறித்த ஒரு கூட்ட ஜனங்களைப் போல அங்குமிங்கும் ஓடுகிறதே! 125 அவர்கள் எல்லோரும், “பாருங்கள், இந்த ஜனங்கள் குடித்திருக்கிறார்கள். அவர்களை நோக்கிப் பாருங்கள், அவர்கள் எப்படி, அவர்கள் பெண்களும் ஆண்களும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் ஒழுங்கற்றவர்கள்” என்று அந்த நாளின் அந்த மதசம்பந்தமான குழுவினர் கூறினர். 126 பேதுரு அவர்கள் மத்தியில் எழும்பி நின்று, “சகோதரரே, எருசலேமில் வாசமாயிருக்கிறவர்களே, யூதேயாவில் வாசமாயிருக்கிறவர்களே, நீங்கள் நினைக்கிறபடி, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறபடியால், இவர்கள் வெறிகொண்டவர்களல்ல என்று நீங்கள் அறியக்கடவீர்கள். ஆனால் இதுவோ தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டது, கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று” என்றார். நிச்சயமாக.
36127 லூத்தர் சரியான நேரத்தில் வந்தார். வெஸ்லி சரியான நேரத்தில் வந்தார். பெந்தேகோஸ்தே சரியான நேரத்தில் இருந்தது. ஒழுங்கு முறைக்கு புறம்பாக ஒன்றுமில்லை. 128 இப்பொழுது நாம் வாழும் காலத்தையும், நேரத்தையும், இன்றைக்கான வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையோடு பரிசீலிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். முந்தின காலங்களில், மனிதர், “இந்த நாளிலே இந்த வேதவாக்கியம்,” “இந்த நாளிலே இந்த வேதவாக்கியம்,” என்று கூற முடிந்திருந்தால் நலமாயிருக்கும். அப்பொழுது இந்நாளுக்கான வேதவாக்கியத்தைக் குறித்து என்ன? இந்நாளுக்கென என்ன வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது? நாம் எந்நிலையில் நின்று கொண்டிருக்கிறோம்? விஞ்ஞான ரீதியில், நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் கடிகாரம் அடிக்கும்போது, நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? உலகம் நடுக்கங்களைப் பெற்றுள்ளது. சபையானது ஒரு அழிவின் படுக்கையில் உள்ளது. அவர்கள் எந்நிலையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. இது நாளின் எந்த நேரத்தில் உள்ளது? இந்நாளுக்கான வேதவாக்கியத்தைக் குறித்து என்ன? சபையின் நிலைமைகள், அல்லது, இன்றைய சபையின் நிலைமைகள்!
37129 உலகத்தில், அரசியல், நம்முடைய உலக முறைமை, அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுகியிருக்கிறது. நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால், அரசியலைக் குறித்து பேச எனக்கு எந்த வேலையும் கிடையாது, ஆனால் அவர்கள் இருபுறமும் அழுகிப் போயுள்ளனர் என்று நான் கூற விரும்புகிறேன். 130 நான் ஒருமுறை வாக்களித்தேன், அது கிறிஸ்துவுக்காக இருந்தது; நான் ஜெயித்தாக வேண்டும். பிசாசு எனக்கு எதிராக வாக்களித்தான், கிறிஸ்து எனக்காக வாக்களித்தார்; நான் என்னுடைய வாக்கை எந்த வழியில் செலுத்துகிறேன் என்பதைப் பொறுத்ததாகும். நான் அதை அவர் மேல் வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்; அவர்கள் விரும்புவதை உலகம் கூறட்டும். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நான் இன்னமும் விசுவாசிக்கிறேன். அவர் அதை நிரூபிப்பார். அவர் நிச்சயமாகவே செய்வார். நிச்சயமாக. குற்றச்செயல்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன, வாலிபப் பிள்ளைகளின் குற்றங்கள்! 131 நம்முடைய தேசத்தைப் பாருங்கள், ஒரு காலத்தில் பூமியின் மலராகிய, நம்முடைய மகத்தான ஜனநாயகம் அங்கே சுதந்திரப் பிரகடனத்தில்…உருவாக்கப்பட்டது. சுதந்திரப் பிரகடனம் கையொப்பமிடப்பட்டு, நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்றிருந்தோம், நம்முடைய மகத்தான முற்பிதாக்கள், அவர்கள் செய்த காரியங்கள், நாம் ஒரு பெரிய தேசத்தை உடையவர்களாயிருந்தோம். 132 ஆனால் அவள் இப்பொழுது அழுகிப்போய், நொறுங்கி, அசைந்து, விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஜனங்களுக்கு வரிவிதிக்க முயற்சித்து, அப்பால் அனுப்புவதற்காக பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுடைய சத்துருக்களோடு நட்பு கொள்வதற்கு; அவர்கள் அதை நம்முடைய முகத்தில் திருப்பி எறிந்து கொண்டிருக்கிறார்கள். முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், இன்னும் மூன்றாம் ஒன்றிற்கு சென்று கொண்டிருக்கிறது. நிச்சயமாக. அரசியல் அழுகிப்போய், சீர்கெட்டு, அடிமட்டத்திற்கு அழுகிப்போய்விட்டது. அது சரியாக மத்தேயு 24-ல் கூறினபடியே “தேசத்திற்கு விரோதமாக தேசமும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் இருக்கும்.” இந்தக் காரியங்கள் யாவும் சம்பவிக்கும். நாம் இப்பொழுது இதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போமாக. சரி.
38133 மற்றொன்றைக் கவனியுங்கள், விஞ்ஞான ஆராய்ச்சியின் பெருக்கம். இப்பொழுது, ஒரு முறை, ஒரு…என்னுடைய பாட்டனார் ஒரு மாட்டு வண்டியில், என்னுடைய பாட்டியைக் காணச் சென்றார். இப்பொழுது ஒரு ஜெட் விமானம் அல்லது ஆகாயத்தை, அண்டவெளியில் சுற்றுவதாக உள்ளது. அது மகத்தானது…எப்படி, யார் இதைக் கூறினார்? தானியேல் 12:4, “கடைசி நாட்களில் அறிவு பெருகும்” என்று கூறியுள்ளது. நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தை நாம் காண்கிறோம். இப்பொழுது உலகத்தின் நிலைமைகளையும், விஞ்ஞானத்தின் நிலைமையையும் கவனியுங்கள். 134 இன்றைக்கு, நம்முடைய கல்வி முறையில், மீண்டும் கவனியுங்கள். இப்பொழுது இதை மறுக்க முயற்சிக்காதீர்கள். நான் செய்தித்தாள் துணுக்குகளை வைத்திருக்கிறேன், நம்முடைய சபை-…பள்ளிகளில் பாலியல் கற்பித்தல், வாலிப மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் உடலுறவு கொள்ள, அவர்கள் உலகில் இணைய முடியுமா என்று பார்க்க. ஆமாம் ஐயா. 135 நம்முடைய ஆசாரியத்துவத்தைக் குறித்து என்ன? இன்றிரவு நான் செய்தித்தாளில் இருந்து ஒரு துண்டை எடுத்துள்ளேன். கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில், அங்கே ஒரு கூட்ட குருமார்கள், பாப்டிஸ்டுகள் மற்றும் பிரஸ்பிடேரியன்கள், ஊழியக்காரர்கள், ஒரு கூட்ட ஓரினச்சேர்க்கையாளர்களை உள்ளே கொண்டு வந்து, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகின்றனர், அவர்கள் தேவனிடம் அவர்களை ஆதாயப்படுத்த முயற்சிப்பதாகக் கூறினர். எப்போது, அது இந்த வேளையின் சாபங்களில் ஒன்றாகும், ஒரு ஆண்புணர்ச்சிக்காரன்! சட்டமும் கூட அவர்களைக் கைது செய்தது.
39136 இப்பொழுது நாம் எந்நிலையில் இருக்கிறோம்? நம்முடைய முழு முறைமையும் நமக்கு கீழிருந்து அழுகிப்போய்விட்டது. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இருபது அல்லது முப்பது சதவிகிதம் அதிகரித்துள்ளதை நான் கண்டேன். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் சோதோமில் செய்தது போலவே, ஆணோடே ஆண் அவலட்சணமாக நடக்கிறார்கள். 137 குற்றச்செயல்கள் அதிகரிப்பு, வாலிபப் பிள்ளைகளின் குற்றங்கள்! நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இந்நாளில் இந்த தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேற்றப்படுகிறது. 138 மதசம்பந்தமான உலகம், சபைதானே, சபை, வெளியே அழைக்கப்பட்ட சபை, நாம் வெளியே அழைக்கப்பட்ட சபை என்று அழைக்கிறோம், கடைசி சபையின் காலம், பெந்தேகோஸ்தே சபைக்காலம், அது எங்கே உள்ளது? வேதம் கூறியுள்ளபடி, அது லவோதிக்கேயாவில் உள்ளது. 139 இன்றைக்கு அவர்கள் தடைகளை அகற்றிவிட்டனர். அவர்களுடைய ஸ்திரீகள் அரைகுறை ஆடை அணிந்துள்ளனர். அவர்களுடைய மனிதர்…அது ஒரு பயங்கரமான காரியம். அவர்களில் சிலர் மூன்று அல்லது நான்கு முறைகள், உதவிக்காரர் குழுவில் உள்ளவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வீழ்ச்சியடைந்து, ஊழலைக் கொண்டு வந்துள்ளனர், ஏனென்றால் அவர்கள் ஆலோசனை சங்கங்களில் அமர்ந்து, உலகத்தோடு அந்த இடத்தைப் பிடித்துள்ளனர். 140 இன்றைக்கு அவர்கள் எப்போதும் இருந்ததைக் காட்டிலும் மேலான கட்டிடங்களைப் பெற்றுள்ளனர். ஏதோ ஒரு இடத்தில், அவர்களில் ஒருவர் ஐம்பது மில்லியன் டாலர் செலவில் அரங்கத்தை கட்டிக் கொண்டிருக்கிறார், ஐம்பது மில்லியன் டாலர். பெந்தேகோஸ்தேக்களே! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மூலையில் முரசு கொட்டுவது வழக்கமாக இருந்தது. “நாங்கள்…” என்றனர். 141 ஏனெனில், வேதம், வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில், நீ “‘ஐசுவரியமுள்ளவள்,’ என்றும், ‘நான் ஐசுவரியமுள்ளவள். ஒரு இராணியைப் போல் அமர்ந்திருக்கிறேன். எனக்கு ஒரு குறைவுமில்லையென்று சொல்லுகிறாய்.’ நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், நிர்வாணியும், குருடனுமாயிருக்கிறதை அறியாமலிருக்கிறாய்!” என்று கூறியுள்ளது. 142 இந்நாளில் இந்த வேதவாக்கியம் உங்கள் பார்வையில் நிறைவேற்றப்படுகிறது. ஆமென்! ஆமென் என்றால் “அப்படியே ஆகக்கடவது” என்று பொருள். நான் எனக்கே ஆமென் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது.
40143 பெந்தேகோஸ்தே சபையானது ஒரு லவோதிக்கேயா நிலையில் உள்ளது. ஓ, இசை முழங்கும்போது, அவர்கள் இன்னமும் குதித்து சத்தமிட்டு சத்தமிடுகின்றனர். இசை அடிப்பதை நிறுத்தும்போது அல்லது பீட்னிக் இசையை அவர்களில் சிலர் இசைத்து அதை கிறிஸ்தவம் என்று அழைக்கும்போது, அது நிற்கும்போதெல்லாம், எல்லா மகிமையும் போய்விடும். ஆம். 144 அது உண்மையாகவே தேவனுக்குத் துதியாக இருக்குமானால், அதை தடுத்து நிறுத்த போதிய ஊதல்களும், போதிய—போதுமான வல்லமையும் உலகில் இல்லை. அது உண்மையாகவே தேவனிடத்திலிருந்து வருகிறபோது, அதற்கு இசை அடிக்க வேண்டியதில்லை. அதன் மேல் இறங்கி வர தேவனுடைய ஆவி தேவைப்படுகிறது. அதைத்தான் அது செய்கிறது. 145 அவர்கள் அதை நீண்ட காலமாக மறந்துவிட்டனர், ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை, “அந்நிய பாஷைகளில் பேசுவதற்கான ஆரம்ப அத்தாட்சி” என்று வகைப்படுத்தியுள்ளனர். பிசாசுகளும், மந்திரவாதிகளும் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டேன். 146 பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கும் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார், அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்வதன் மூலம் அது தம்மை அடையாளங்காட்டுகிறது. அதற்கு புறம்பாக, அது பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது. அது பரிசுத்த ஆவி என்று கூறி, அந்த வேதாகமத்தின் ஒரு வார்த்தையை மறுதலித்தால், அது பரிசுத்த ஆவியாக இருக்க முடியாது. நீங்கள் விசுவாசித்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் அதுவே அத்தாட்சி.
41147 மற்றொரு மகத்தான அடையாளத்தைக் கவனியுங்கள். யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டில் இருக்கிறார்கள்; தங்களுடைய சொந்த தேசம், தங்களுடைய சொந்த பணம், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தினர். அவர்கள் தங்களுடைய சொந்த இராணுவத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களுடைய தாய்நாட்டில் இருக்கிறார்கள்; அதற்கு இயேசு, “அத்திமரத்தைக் குறித்து ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்” என்றார். இதோ அவர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்துள்ளனர். யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டிலிருக்க, இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது. 148 இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது, லவோதிக்கேயா சபைக்காலம். 149 இந்நாளில் இந்த வேதவாக்கியம், மத்தேயு 24-ம் அதிகாரம் நிறைவேற்றப்படுகிறது. உலகம் முழுவதுமே, அழிவில் உள்ளது; தேசங்களுக்கு எதிராக தேசங்கள், பல இடங்களில் பூமியதிர்ச்சிகள், பெரிய சுழற்காற்றுகள் வந்து தேசங்களை அசைத்து, எங்கும் பெரும் பேரழிவுகளை உண்டாக்குகின்றன. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது.
42150 இப்பொழுது நாம் உலகத்தின் நிலைமையைக் கண்டோம். சாதாரண சபை—இயல்புநிலை, ஸ்தாபனம், ஸ்தாபனம் எந்நிலையி்ல் உள்ளது என்பதை நாம் காண்கிறோம், அவர்கள் எந்நிலையி்ல் இருக்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். தேசங்கள் எந்நிலையி்ல் இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம். இந்நாளில் இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்பட்டதை நாம் காண்கிறோம். 151 இப்பொழுது, ஆனால் இந்நாளில் ஒரு மேலான, ஆபிரகாமின் ராஜரீக வித்து வரவேண்டும். ராஜரீக வம்சத்தில், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனுக்கு, ஒரு ராஜரீக மணவாட்டி இருப்பாள், அது சரியாக இருக்கும். நான் நேற்றிரவு பேசினதுபோல, அது ஒரு இயற்கையான வித்தாய் இருக்காது, அது ஒரு ஆவிக்குரிய வித்தாய் இருக்கும். ஆபிரகாமின் ராஜரீக குமாரனின் ராஜரீக விசுவாசத்தின் ராஜரீக வித்தாயிருக்கிற, ஒரு ஆவிக்குரிய மணவாட்டி எழும்ப வேண்டும். கடைசி நாட்களில் அவள் காட்சியில் வரவிருக்கிறாள், அந்த நேரமும் ஸ்தானமும் அவளுக்கு அளிக்கப்பட்ட ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது. 152 மல்கியா 4-ன் படி, ஒரு வேத வாக்கியம், ஜனங்களின் இருதயங்களை அசைத்து அப்போஸ்தல பிதாக்களுக்குச் செல்லும்படியான ஒரு செய்தி எழும்பப் போகிறது. எலியாவின் வல்லமையில், ஒருவன் காட்சியில் எழும்ப வேண்டும், அவன் காட்சியில் எழும்புவான்; ஒரு வனாந்திர மனிதன் வெளியே வந்து, வார்த்தைக்கு நேராக திரும்பிச் செல்லும் ஒரு செய்தியை உடையவனாய் இருப்பான். அந்த நேரத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
43153 ஆகையால், இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள், இங்குள்ள ஜெபர்ஸன்வில் ஜனங்களே, இந்த நேரத்தில் நான் உங்களைக் கேட்கிறேன். 1933-ல் ஆற்றின் மேல் இயற்கைக்கு மேம்பட்ட ஒளி விழுந்தது, ஏறக்குறைய நான் ஒரு இருபது வயது பயனாய், ஐநூறு பேர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோதே. ஜெபர்ஸன்வில்லில், அது என்ன கூறினது? கூரியர் ஜர்னல் , இல்லை லூயிவில் ஹெரால்ட் , அந்த செய்தி வெளியானது என்று நான் நினைக்கிறேன், அது அங்கே ஸ்பிரிங் தெருவின் அடிவாரத்தில் என்னவாக இருந்தது? அது அசோசியேட்டட் அச்சகத்தின் மூலமாக, கனடாவிற்குள் சென்றது. வேதபண்டிதர் லீ வேயில் 1933-ல், கனடாவில் ஒரு செய்தித்தாளில் இருந்து அதை வெட்டி எடுத்தார். 154 நான் இந்த சாட்சியின் கீழ், என்னுடைய பதினேழாவது நபருக்கு ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தபோது; மற்ற சம்பவத்தை நீங்கள் அறிவீர்கள். நான் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, பதினேழாவது நபருக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது, வானத்திலிருந்து ஒரு ஒளி இறங்கி, வானத்திலிருந்து விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் போல, மேலே கீழே பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒரு சத்தம், “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்துபோல, உன்னுடைய செய்தியானது அவருடைய இரண்டாம் வருகைக்கு உலகம் முழுவதும், முன்னோடியாக இருக்கும்” என்றது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது.
44155 இந்த நாளிலே! தேவன் அதை வாக்குப்பண்ணினார். என்ன நடந்தது? இந்நாளில் அது உலகம் முழுவதும் சென்றுவிட்டது. 156 தேவன் அங்கே இறங்கி வந்து, நான் ஒரு சிறு பையனாக இருந்தபோது, எரிகிற முட்செடியில், அல்லது அங்கே உள்ள ஒரு முட்செடியில், இங்கே உடிகா பைக்கில் உள்ள வாத்தன் என்ற இடத்தில், ஒரு அக்கினி ஸ்தம்பத்தோடு அக்கினியாய்; அங்கே பின்னால் அந்த களஞ்சியத்திலிருந்து சாராயம் காய்ச்சும் இடத்திற்கு, தண்ணீர் சுமந்து கொண்டிருக்கையில், சம்பவித்த அதனுடைய உண்மையை நீங்கள் அறிவீர்கள். அவர், “நீ ஒருபோதும் புகைக்காதே, அல்லது மது அருந்தாதே, உன் சரீரத்தை கறைப்படுத்தாதே, ஏனென்றால் நீ பெரியவனாகும்போது நீ செய்ய வேண்டிய ஒரு வேலை இருக்கிறது” என்றார். அது சத்தியம் என்று நான் சாட்சி பகருகிறேன், நான் அதைக் கண்டேன். தேவன் மோசேயோடு செய்ததுபோல, அப்பாலுள்ள சபையோர் முன்னிலையில் பேசி, “இது சத்தியம்” என்றார். இந்நாளில் இந்த வேதவாக்கியம் நமக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது. 157 பகுத்தறிதலைக் குறித்து அவர் என்ன கூறினார் என்பதையும், அது எப்படி இருக்கும் என்பதையும் கவனியுங்கள்; அவர்கள் மேல் கரங்களை வைத்து, இருதயத்தின் இரகசியத்தை அறிந்துகொள்ளும்படியாக. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறியுள்ளது.
45158 கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களைக், கவனியுங்கள், இந்த வாக்குத்தத்தங்கள் யாவும் வாக்குத்தத்தத்தின் தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தன. பாருங்கள், இன்றிரவு வாஷிங்டன் டி.சி.-யில் தொங்கிக் கொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனின் புகைப்படம்! 159 அமெரிக்க அரசாங்கத்திற்கான எஃப்.பி.ஐ கைரேகை மற்றும் ஆவணத்தின் தலைவரான ஜார்ஜ் ஜே. லேசி, டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டனிலிருந்து வந்திருந்த அதை ஆராய்ந்து, “உலகம் முழுவதிலும் இதுவரை புகைப்படம் எடுக்கப்பட்ட ஒரே இயற்கைக்கு மேம்பட்ட உருவம் இதுதான்” என்றார். அவர் அறிந்திருக்க வேண்டும்; அவர் தான் உலகத்திலேயே மிகச் சிறந்தவர். 160 கவனியுங்கள், அங்கே அது, சத்தியமாக தொங்கிக் கொண்டிருக்கிறது, முன்னர் இஸ்ரவேலரை வனாந்திரத்தில் வழிநடத்தின அதே அக்கினி ஸ்தம்பம். அது இன்றைக்கும், அதேவிதமான ஒரு செய்தியை வழிநடத்திக் கொண்டிருக்கிறது, அதாவது, “எகிப்திலிருந்து வெளியே வா!” …?… இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது. அவர் கூறின செய்தியை நீங்கள் அறிவீர்கள்.
46161 இங்கே பாதையில் நிற்கும்போது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டூசானில் ஏற்பட்ட தரிசனத்தைப் பாருங்கள். அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், அவர், “நகரம் அந்த வாசலுக்கு முன்பாக ஒரு முளையை அடிக்கும் நாளிலே மேற்கு திசையை நோக்கித் திரும்பு” என்றார். இங்கிருக்கிற என்னுடைய கூடாரத்திலுள்ள ஜனங்கள், அந்த—அந்த நேரத்தை நோக்க-…அறிந்திருக்கிறார்கள். அது உண்மை. 162 அன்று திரு. கோயின்ஸ் அவர்களும், மற்றவர்களும் அந்த மரக் கம்பத்தை கீழே தள்ளிவிடுகையில், நான் மனைவியினிடத்தில், “இதைக் குறித்து ஏதோ ஒன்றுண்டு” என்றேன். அவள், “அது என்ன?” என்று கேட்டாள். நான் உள்ளே சென்று என்னுடைய சிறு புத்தகத்தைப் பார்த்தேன். அங்குதான் அது இருந்தது. 163 அதற்கு அடுத்த நாள் காலை பத்து மணிக்கு, அங்கே என்னுடைய அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, சுமார் பத்து மணியளவில் கர்த்தருடைய தூதன் வந்தார். அவர், “டூசானுக்குச் செல். நீ டூசானுக்கு வடகிழக்கில் இருப்பாய், உன்னைச் சுற்றிலும் உள்ள முழு பூமியையும் அசைக்கும்படியாக ஏழு தூதர்கள் ஒரு கூட்டமாக வருவார்கள்,” என்றார். மேலும், “அங்கிருந்து அது உனக்கு அறிவிக்கப்படும்” என்றார். 164 அது சம்பவிப்பதற்கு முன்பே, இங்கே, எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இன்றிரவு இங்கே இந்தக் கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற மனிதர்கள், அது சம்பவித்தபோது அங்கே சரியாக நின்றுகொண்டிருந்தனர். 165 மேலும், “வேதாகமத்தில் உள்ள மறைவான இரகசியங்களான ஏழு முத்திரைகள் திறக்கப்படும் என்றும், வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தை நிறைவேற்றி, ஏழாம் தூதனுடைய செய்தியில் இவைகள் நிறைவேறும்” என்றும் கூறினார். இந்நாளில் இந்த வேதவாக்கியம் நம்முடைய கண்களுக்கு முன்பாக நிறைவேறியுள்ளது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது.
47166 கடந்த ஆண்டு, அதே இடத்தில், திரு. உட் அவர்களும் நானும், தன்னுடைய மனைவி சுகவீனமாயிருக்கிறதைக் குறித்து ஒரு விதமான துக்கத்தில், மலையின் மேல் செல்கையில், பரிசுத்த ஆவியானவர், “அங்கே கிடக்கிற ஒரு பாறையை எடுத்துக்கொள். அதை ஆகாயத்தில் எறி. அது கீழே வரும்போது, ‘கர்த்தர் உரைக்கிறதாவது, நியாயத்தீர்ப்பு பூமியின் மேல் தாக்கும்’ என்று கூறு. அடுத்த சில மணி நேரங்களில், அவர் தேவனுடைய கரத்தைக் காண்பார் என்று அவரிடம் சொல்” என்றார். 167 இன்றிரவு இங்குள்ள திரு. உட் அவர்களிடம்; நான் சொன்னேன். மேலும், புருஷர்களில் எட்டு அல்லது பத்து அல்லது பதினைந்து பேர் என்று, நான் யூகிக்கிறேன், அது சம்பவித்த அந்த நேரத்தில் அங்கிருந்தனர்; அடுத்த நாள் காலை, அங்கே கர்த்தர் ஒரு சுழற்காற்றில் இறங்கி வந்து, எங்களைச் சுற்றியிருந்த மலையைக் கிழித்து, மரங்களின் உச்சியை வெட்டித் தகர்த்து, மூன்று வெடிசத்தம் உண்டாக்கி, “நியாயத்தீர்ப்பு மேற்குக் கடற்கரையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” என்றார். 168 அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, அலாஸ்கா கிட்டத்தட்ட பூமிக்கு அடியில் மூழ்கிவிட்டது. அது முதற்கொண்டு, கடற்கரையில் மேலும் கீழுமாக, அந்த ஆவிக்குரிய திரைக்கு எதிராக தேவனுடைய நியாயத்தீர்ப்பின் குமுறல்கள் இருந்து வருகின்றன. ஒரு இரும்புத் திரை உண்டு, ஒரு மூங்கில் திரை உண்டு, ஒரு பாவத்திரை உண்டு.
48169 நாகரீகம் சூரியனோடு பயணித்துள்ளது; சுவிசேஷமும் அவ்வாறே உள்ளது. அவர்கள் கிழக்கிலிருந்து வந்து, சூரியன் செல்வதைப் போல மேற்கு நோக்கிச் சென்றுவிட்டனர். இப்பொழுது அது மேற்கு கடற்கரையில் உள்ளது. அது மேற்கொண்டு செல்ல முடியாது; அது இன்னும் மேலே சென்றால், அது மீண்டும் கிழக்கே திரும்பிச் செல்லும். 170 தீர்க்கதரிசி, “இரவு அல்லது பகல் என்று சொல்ல முடியாத ஒரு நாள் வரும்” என்று கூறினான், ஒரு மப்பும் மந்தாரமுமான நாள், நிறைய மழையும் மூடுபனியும், எப்படி ஒரு சபையில் சேர்ந்துகொள்வது அல்லது உங்களுடைய பெயரை ஒரு புத்தகத்தில் பதிவு செய்வது எப்படி என்று அறிந்து கொள்வது போதுமானது என்பதே. “ஆனால் ஏறக்குறைய சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது. 171 கிழக்கில் உதிக்கும் அதே—அதே சூ-ரி-ய-னே மேற்கில் அதே சூ-ரி-ய-னா-க அஸ்தமிக்கிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டபோது கிழக்கில் வந்து தம்மை ரூபகாரப்படுத்தின அதே தேவனுடைய கு-மா-ர-ன், இங்கே மேற்கு அரைக்கோளத்திலும் அதே தேவ கு-மா-ர-னாய் இருக்கிறார், இன்றிரவும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற தம்மை, சபையின் மத்தியில் அடையாளங்காட்டிக் கொண்டிருக்கிறார். சாயங்கால குமாரனின் வெளிச்சம் வந்துவிட்டது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நமக்கு முன்பாக நிறைவேறியுள்ளது.
49172 இந்த ஆபிரகாமின் காலத்தில் நாம் எங்கே இருக்கிறோம்? நாம் இருக்கிற இந்த மகத்தான நேரத்தில் நாம் எங்கே இருக்கிறோம், நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்? அந்த மகத்தான நேரத்தில் எல்லா தரிசனங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 173 இங்குள்ள நம்முடைய ஒரு சிறு ஊழியக்கார நண்பர், உடனுள்ள தோழமை சபையில் உள்ள, ஜூனியர் ஜாக்ஸன், ஒரு இரவு எங்களிடம் ஓடி வந்து, நான் அங்கே கீழே, “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு—ஒரு சொப்பனம் கண்டேன், அது என்னை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லா சகோதரர்களும் ஒரு மலையின் மேல் கூடியிருப்பதை நான் கண்டேன்” என்றார். மேலும், “இந்த மலையின்மேல், நீர் எழுதப்பட்ட நிரூபங்களிலிருந்து எங்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தபோது, அந்த நேரம் பாறையில் செதுக்கப்பட்டிருந்த, சில எழுத்துக்களைப் போன்று காணப்பட்டது. நீர் அதை முடித்தபோது, எல்லாமே முடிந்துவிட்டது, நீர் எங்களிடம், ‘அருகில் வாருங்கள்’ என்று கூறினீர், நாங்கள் எல்லோரும் கூடிவிட்டோம்” என்றார். 174 மேலும், “நீர் எங்கிருந்தோ ஒரு கடப்பாறையைப் போன்று, காணப்பட்டதைப், பெற்றுக்கொண்டு இந்த சிறிய கூர்நுனிக்கோபுரத்தின் உச்சியை அடித்துத் திறந்தீர். மேலும், அது திறந்தபோது, கற்பாறையில் எந்த எழுத்தும் இல்லை. நீர் எங்களிடத்தில் ‘இதைக் குறித்துப் பார்க்கும்படி’ சொன்னீர்” என்றார். நீங்கள் எல்லோரும்…“நாங்கள் யாவரும், பார்க்கத் துவங்கினோம்.” மேலும், “நான் என் தலையைத் திருப்பி, நீர் மேற்கு நோக்கி சூரிய அஸ்தமனத்தை நோக்கியவாறு, உங்களால் முடிந்தளவு வேகமாகச் செல்வதை நான் கவனித்தேன்” என்றார். எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.
50175 பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தும் வரையில் நான் அங்கேயே சிறிது நேரம் நின்றேன். நான், “முழு வேதாகமமும், நீதிமானாகுதல், பரிசுத்தமாக்கப்படுதல் மூலமாக மனிதனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறபடியால், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம், இந்த எல்லாக் காரியங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன; ஆனால் வேதாகமம் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருக்கிறபடியால், உட்புறத்தில் மறைந்திருக்கும் இரகசியங்கள் உள்ளன. அதைக் கண்டறிய நான் அங்கு செல்ல வேண்டும்” என்றேன். 176 அந்தக் காலையில் அந்த ஏழு தூதர்கள் இறங்கி வந்து பூமியை வெடிக்கச் செய்ய, கற்பாறைகள் எல்லா பக்கங்களிலும் பறந்தன, ஏழு தூதர்கள் அங்கே நின்று, “நீர் எங்கிருந்து வந்தீரோ, அங்கிருந்து ஜெபர்ஸன்வில்லுக்கு திரும்பி வாரும், ஏனென்றால் ஏழு இரகசியங்களின் ஏழு முத்திரைகள் திறக்கப்படும்” என்றார். 177 இன்றைக்கு, இங்கே நாம், சர்ப்பத்தின் வித்தை புரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு சில நாட்களில், தேவனுக்குச் சித்தமானால், விவாகமும் விவாகரத்தும் என்பதன் சரியான தன்மையை நாம் புரிந்துகொள்வோம். உலகத்தோற்ற முதற்கொண்டே தேவன் திறந்திருக்கிற இந்த எல்லாக் காரியங்களையும், ஒவ்வொரு முத்திரையையும், இரகசியங்களையும். அவருடைய ஆசீர்வாதங்களின் பிரசன்னத்தில், நாம் மகிழ்ச்சியில் இருந்து வருகிறோம்! அது உண்மை. இந்நாளில், இந்த வேதவாக்கியமே!
51178 லைஃப் என்ற பத்திரிக்கை, “டூசான் மற்றும் பீனிக்ஸூக்கு மேலே ஆகாயத்தில் மறைவான ஒளியின் வட்டம் செல்கிறது,” என்று அதைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டது, அது எப்படி இருக்கும் என்றும், ஒரு முக்கோணம் போன்று இருக்கும் என்றும், அது சம்பவிப்பதற்கு ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னர் நான் உங்களிடம் கூறியிருந்த அதேவிதமாக இருந்தது. அந்தப் புகைப்படம் அங்குள்ள சபையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் கொண்டு வந்த பத்திரிக்கையில் அது உள்ளது. அது சரியாக, அந்தவிதமாகவே இருந்தது. அவர்கள், “அது இருபத்தேழு மைல் உயரமும் மற்றும் முப்பது மைல் அகலமுமாக உள்ளது” என்றனர். என்ன சம்பவித்தது என்பதை அவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. அது இரகசியமான முறையில் தோன்றி இரகசியமான முறையில் போய்விட்டது. 179 சகோதரன் ஃபிரட் சாத்மன், சகோதரன் ஜீன் நார்மன் மற்றும் நானும், அங்கே நின்று கொண்டிருந்தோம், மூன்று பேர் ஒரு சாட்சி, மலையின் உச்சியில்; சாட்சி கொடுக்க, பேதுரு, யாக்கோபு, யோவானைப் போல, அங்கே நின்று அது சம்பவித்தபோது, அது நடந்ததைக் கண்டனர். 180 இதோ அது ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது; அங்கே ஈரப்பசையே இல்லை, ஈரமோ அல்லது ஒரு—ஒரு மூடுபனியை உண்டாக்குவதற்கு ஒன்றுமே இல்லை. அவர்கள் எப்படி அங்கு வர முடியும்? தேவனுடைய தூதர்கள் தங்களுடைய செய்திக்குப் பிறகு, திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்நாளில் அந்தத் தீர்க்கதரிசனம் நம் மத்தியில் நிறைவேறியிருக்கிறது. இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேறியுள்ளது. 181 கவனியுங்கள், ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. சுழற்காற்று மேற்கு கரையை நோக்கி வருகிறது. இப்பொழுது, அன்றைக்கு அவர்கள் செய்ததுபோல, அதைத் தவறவிடாதீர்கள்.
52182 இப்பொழுது, நம்முடைய கவனத்தை, நம்முடைய நாளுக்கு நோக்குவோம். இன்றைய காலத்தைக் குறித்தும், நாம் வாழும் காலத்தைக் குறித்தும் வேதம் என்ன கூறுகிறது? இயேசு பேசுகிறார்…எனக்கு அவைகள் யாவற்றையும் எடுத்துரைக்க நேரம் இருக்காது, ஆனால் நாம் முடிப்பதற்கு முன்பு நான் இதை எடுத்துரைக்க விரும்புகிறேன். 183 இயேசு பரிசுத்த லூக்கா 17-ம் அதிகாரம் 30-ம் வசனத்தில் கூறினார். இயேசு கிறிஸ்து, வார்த்தை தாமே! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து தாமே மாம்சமானார், கடைசி காலத்தில் வார்த்தை என்னவாயிருக்கும் என்றும், உலகத்தின் முடிவின் அடையாளம் என்னவாயிருக்கும் என்றும் கூறினார். தேசத்திற்கு எதிராக தேசம் எழும்பும் என்று அவர் அவர்களிடம் கூறினார், ஆனால் அவரோ, “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வெளிப்படும் காலத்திலும் நடக்கும்” என்றார். 184 இப்பொழுது, இயேசு பூமிக்கு வந்தபோது, அவர் மூன்று குமாரர்களின் நாமத்தில் வந்தார்: மனுஷகுமாரன் ஒரு தீர்க்கதரிசி; தேவனுடைய குமாரன்; தாவீதின் குமாரன். 185 இப்பொழுது, அவர் இங்கே பூமியில் வாழ்ந்தார். அவர் தேவனுடைய குமாரன் என்று ஒருபோதும் கூறவில்லை, அவர், “நான் மனுஷகுமாரன்” என்றார். யெகோவா, தாமே, எசேக்கியேலையும் தீர்க்கதரிசிகளையும் “மனுஷகுமாரன்” என்று அழைத்தார். ஏனென்றால் அவர் ஒரு தீர்க்கதரிசியாக வேதவாக்கியத்தை நிறைவேற்ற வர வேண்டியதாயிருந்தது. மோசே, “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்” என்றான். அந்தக் காரணத்தினால்தான் அவர் அங்கே தேவனுடைய குமாரனாக இருக்க முடியவில்லை, ஏனென்றால் அவர் மனுஷகுமாரனாயிருந்தார். அவர்…“தீர்க்கதரிசிகளிடத்திற்கு வார்த்தை வந்தது.” மற்றும் அவர் வார்த்தையின் பரிபூரணத்தில், மனுஷகுமாரனாய், அந்த—அந்த பெரிய தீர்க்கதரிசியாய் இருந்தார், மகத்தான தீர்க்கதரிசியாக அல்ல, ஆனால் தேவனும்-தீர்க்கதரிசியுமாக, “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் இருந்தது,” ஆகையால், அவர் மனுஷகுமாரனாயிருந்தார். 186 இப்பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர் தேவனுடைய குமாரனாக, ஆவியாகவே நமக்கு அறியப்பட்டு வருகிறார். 187 ஆயிர வருட அரசாட்சியில், அவர் தாவீதின் குமாரனாக, சிங்காசனத்தில் வீற்றிருப்பார். வேதவாக்கியங்களை விசுவாசிக்கிற, நாம் யாவரும் அதை அறிவோம்.
53188 இப்பொழுது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த சபையின் காலத்தின் முடிவில் இயேசு, “சோதோமில் உண்டானதுபோல, மனுஷகுமாரன் மீண்டும் அதேவிதமாக வெளிப்படுத்தப்படுவார்” என்று கூறினார். 189 சரித்திரப்பிரகாரமாக, அவர் அதை எப்படி அளித்தார் என்பதைக், கவனியுங்கள். அவர், “அந்த நாட்களில் அது இருந்ததுபோல,” முதலாவதாக, “நோவாவைப் பற்றி, அவர்கள் எப்படிப் புசித்து, குடித்து, பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வந்தனர்” என்றார். அதன்பின்னர் அவர் கடைசியாக, சோதோமில், மனுஷகுமாரனிடம் கொண்டு வந்தார். காரணம், அவர் அங்கே யூதர்களோடு இடைபடுகிறார்; இங்கே, சோதோமில், அவர் புறஜாதிகளோடு இடைபடுகிறார். அங்கே, அவர் நியாயத்தீர்ப்பில் அவர்கள் எல்லோரையும் தண்ணீரில் மூழ்கடித்தார்; இங்கே, புறஜாதியாரிடத்தில், அவர் சோதோமின் நாளில் அவர்கள் எல்லோரையும் சுட்டெரித்தார். அது உண்மை. புறஜாதி உலகம் அங்கே எரிந்தது, “மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படும்போது அவ்வண்ணமே இருக்கும்.” அது இனி ஒருபோதும் தண்ணீரல்ல, ஆனால் அது இந்த முறை அக்கினியாக இருக்கும். இயேசு சோதோமைக் குறித்து வாசித்தபோது, நாம் வாசித்த அதே ஆதியாகமம் 23-லிருந்து வாசித்தார்.
54190 இப்பொழுது, சோதோமின் உலக நிலைமையைக் குறித்தும், ஆண்புணர்ச்சிக்காரர்களின் நிலைமையைக் குறித்தும், சோதோமின் நிலைமையைக் குறித்தும் கூறப்பட்டுள்ள நிலைமைகளை நாம் ஒப்புக்கொள்கிறோம். நாம், ஒவ்வொருவரும், அதற்கு “ஆமென்” என்று கூறுவோம். நாம் அதை விசுவாசிக்கிறோம். சரி. 191 லவோதிக்கேயாவின் ஆவிக்குரிய நிலைமை, மாம்சபிரகாரமான சபை, நாம் அதற்கு “ஆமென்” என்று கூறி, அவர்களுடைய அடையாளங்களை ஏற்றுக்கொள்வோம். ஒவ்வொரு அடையாளமும் அங்குள்ளது என்பதை நாம் அறிவோம். சபையானது லவோதிக்கேயாவில் உள்ளது. நாம் அதை அறிவோம். 192 உலகம் ஒரு சோதோமின் நிலையில் உள்ளது என்பதை நாம் அறிவோம். அது சரியா? நாம் அதை ஏற்றுக்கொள்வோம். 193 ஆனால் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனுக்காகக் காத்திருக்கும் ஆபிரகாமின் அடையாளத்தைக் குறித்தென்ன? அது மற்றொன்றாயிருந்தது. 194 அவர்கள் அங்கே சோதோமைக் கொண்டிருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்; அவர்கள் தங்களுடைய செய்தியாளனைக் கொண்டிருந்தனர். ஆபிரகாம் தனக்கு ஒரு செய்தியாளனைக் கொண்டிருந்தான். 195 ஆபிரகாம் நாளுக்கு நாள், கிட்டத்தட்ட சம்பவிக்க முடியாத காரியத்துக்காக காத்துக் கொண்டிருந்தான். “சாராளுக்கு, தொண்ணூறு, அவனுக்கு நூறு.” தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி, அவன் இன்னமும் காத்துக் கொண்டிருந்தான். எல்லா விமர்சனங்களுக்கு மத்தியிலும், அவன் அந்த குமாரனுக்காக காத்திருந்தான். 196 அவ்வாறே உண்மையான விசுவாசியும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் திரும்பி வருவதற்காக இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறானே! கவனியுங்கள், குமாரன் வருவதற்கு சற்று முன்பு, அவனுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. ராஜரீக குமாரனுக்காக காத்துக் கொண்டிருக்கிற ஆபிரகாமின் ராஜரீக சந்ததிக்கு வெளிப்படுத்தப்பட வேண்டிய வரப்போகும் குமாரனின் அடையாளம் அல்லவா, மாம்சபிரகாரமான குமாரனுக்காக தகப்பனாகிய ஆபிரகாமுக்கு அது இருந்த அதேவிதமாகவா? அது சரியா? இயேசு இங்கே பரிசுத்த லூக்கா 17:30-ல், “இந்த நேரம் வரும் முன்னே” என்று கூறினார். “மனுஷகுமாரன் சோதோமின் நாட்களில் வெளிப்படுத்தினதுபோல, சோதோமின் அழிவிற்கு முன்னர் வெளிப்படுத்தப்படுவார்” என்று கூறினார். இப்பொழுது நாம் ஒரு அடையாளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
55197 இப்பொழுது நாம் சோதோமில் இருந்தது போன்ற காலத்தின் நிலைமைகளை எடுத்துக் கொள்வோம். கவனியுங்கள், அவர்கள் யாவரும் சோதோமிய, உலகத்திற்கு சென்றனர். 198 அண்மையில் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் ஒரு படத்தை எடுத்தார் என்று நான் நினைக்கிறேன், நான் அதைக் காண நேர்ந்தது, அது சோதோம் என்னும் பெயரைக் கொண்டிருந்தது. நீங்கள் எப்போதாவது அதைக் காணும்போது, அதைத் தவிர வேறொன்றும் அதில் இல்லையென்றால், அதை ஒருமுறை நோக்கிப் பாருங்கள். அது நிச்சயமாகவே இன்றைக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் குறித்த ஒரு நல்ல காட்சியாயுள்ளது, ஹாலிவுட், சரியாக; அதேவிதமான உடையை அணிந்து, அப்பொழுது அவர்கள் செய்திருந்த ஒவ்வொரு காரியத்தையும்; பெரிய மது அருந்துதல் மற்றும் மற்ற ஒவ்வொரு காரியமும், ஒரு மத ஜனங்களின் வழிபாட்டு முறை, மதசம்பந்தமானவர்கள் என்று அழைக்கப்படுதல். 199 கவனியுங்கள், சோதோம் ஒரு சாட்சியை உடையதாயிருந்தது, அதில் லோத்து என்னும் பெயர் கொண்ட ஒரு நபர் இருந்தான், அது ஆபிரகாமுக்கு ஒரு சகோதரனின் மகனாயிருந்தது. 200 இப்பொழுது, ஆபிரகாமும் அவனும் அவனுடைய குழுவினரும் சோதோமிற்கு செல்லவில்லை. அவனோடு ஒரு பெரிய குழு இருந்தது, ஏறக்குறைய ஒரு டஜன் ராஜாக்களையும் அவர்களுடைய இராணுவத்தையும் எதிர்த்துப் போரிட போதுமானதாயிருந்தது. எனவே, அவனோடு ஒரு பெரிய குழு இருந்தது. அவன் அங்கே வெளியே ஒரு கருவேல மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டிருந்தான், ஒரு நாள், அவனுக்கு எல்லாமே தவறாக போய்க் கொண்டிருந்தபோது; யாருமே அவனோடு எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ளவில்லை, ஆனால் அவன் அந்த வாக்குத்தத்தத்தை இன்னமும் பற்றிக் கொண்டிருந்தான். நாம் முடிப்பதற்கு முன்பு, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். 201 அவன் அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில், மூன்று பேர் அவனண்டை நடந்து வந்தனர். அவர்களில் இருவர் சோதோமுக்குள் சென்றனர் லோத்து, வெளியே வரும்படியாக, அவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். அது சரியா? ஆனால் ஒருவர் ஆபிரகாமோடு தரித்திருந்தார். கவனியுங்கள், ஆபிரகாமோடு தங்கியிருந்த ஒருவர் தாமே தேவனாயிருந்தார். மற்ற இருவரும் தூதனின் செய்தியாளர்களாயிருந்தனர்.
56202 இப்பொழுது, சோதோமில், அவர்கள் எந்த அற்புதங்களையும் செய்யவில்லை, அவர்களை குருடாக்க மட்டுமே செய்தனர். சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல் எப்பொழுதுமே அவர்களை குருடாக்குகிறது. 203 இப்பொழுது அந்த நாளின் அமைப்பைப் பாருங்கள். மாம்சபிரகாரமான ஒரு சபை உண்டு. நான் நேற்றிரவு கூறினதுபோல, எப்பொழுதுமே மூன்றில், தேவன் சுட்டிக்காட்டப்படுகிறார். ஆண்புணர்ச்சிக்காரர்கள், லோத்தியர்கள், ஆபிரகாமியர்கள் இருந்தனர். இன்றிரவு அது அதே நிலையில் உள்ளது, உலகம் அந்த விதமாக அமைந்துள்ளது. 204 நான் உங்களை ஒன்று கேட்கட்டும். இப்பொழுது இந்த அமைப்பைப் பாருங்கள். ஆபிரகாம் தன்னோடு பேசின இந்த மனிதனை “ஏலோகிம்” என்று அழைத்தான். ஏலோஹீம் என்ற எபிரெய வார்த்தைக்கு “எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர், அந்த ஒருவர் நித்தியமானவர்” என்று பொருள்படுகிறார், ஏலோஹீம், தேவன் தாமே! 205 ஆதியில், ஆதியாகமம் 1, “ஆதியிலே தேவன்…” என்று கூறியுள்ளது. எபிரேய வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லை கிரேக்க வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள், சரியாகக் கூறினால், “ஆதியிலே ஏலோகிம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”
57206 இங்கே, அவர், இங்கே ஆதியாகமம், 22-ம் அதிகாரத்தில், அவர் மீண்டும் கூறுகிறார், இல்லை—இல்லை 20-ம் அதிகாரத்தில், அவர், அவன் இந்த மனிதனுடைய பெயரை “ஏலோகிம்” என்று அழைத்தான். அவன் ஏன் அதைச் செய்தான்? தேவன், ஒரு மானிட சரீரத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர்கள் ஆபிரகாமுடன் அமர்ந்து ஒரு கன்று குட்டியை புசித்து, கொஞ்சம் பாலையும், கொஞ்சம் அப்பத்தையும் புசித்தனர். தேவன் தாமே, ஆபிரகாமுக்கு முன்பாக மறைந்திருந்தார். 207 ஆனால் அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். கவனியுங்கள். அவர் தம்முடைய முதுகை கூடாரப்பக்கமாக திருப்பியிருந்தார் என்பதே அந்த அடையாளம். 208 நினைவிருக்கட்டும், ஆபிரகாம், அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவனுடைய பெயர் ஆபிராம் என்றும், அதற்கு முன்பு சாராய் என்றும் இருந்தது; சா-ரா-ய் அதன்பின்னர் சா-ரா-ள், ஆ-பி-ரா-ம் என்பது ஆ-பி-ர-கா-ம். ஆபிரகாம் என்றால் “ஜாதிகளுக்குத் தகப்பன்” என்று பொருள். 209 இப்பொழுது இங்கே உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், இயேசுவானவர் நம்மிடம் இந்த அமைப்பை நோக்கிப் பார்க்கும்படி கூறினபடியால், நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த வேளையின் அமைப்பைக் காண்போம். நாம் மற்ற எல்லாவற்றையும் சரியாக பார்த்திருக்கிறோம்; இப்பொழுது நாம் ராஜரீக சந்ததியார் என்ன நிலைமையைக் காண வேண்டும் என்று கருதுகின்றனர் என்று, அவர்களைப் பற்றி பார்ப்போம். 210 இப்பொழுது இந்த மனிதன், “ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார். ஆபிரகாம், “அவள் உமக்குப் பின்னால் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 211 இப்பொழுது, அவர் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. அவனுடைய பெயர் ஆபிரகாம் என்பதை அவர் எப்படி அறிந்துகொண்டார்? அவளுடைய பெயர் சா-ரா-ள் என்பதாயிருந்தது என்பதை அவர் எப்படி அறிந்து கொண்டார்? “ஆபிரகாமே, உன் மனைவி சாராள், எங்கே?” “அவள் உமக்குப் பின்னால் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 212 அவர், “நான்…” என்றார். “நான்,” ஒரு தனிப்பட்ட பிரதிபெயர். “நான் வாக்குத்தத்தத்தின்படியே உங்களை சந்திக்கப் போகிறேன். உன்னுடைய மனைவிக்கு அந்தக் குழந்தை பிறக்கப்போகிறது. நீ என்னை நம்பியுள்ளாய், இப்பொழுது நான் அதை நிறைவேற்றப் போகிறேன்” என்றார்.
58213 சாராள், கூடாரத்தில், பின்னால், நீங்கள் அதை என்னவென்று அழைத்தாலும் சரி, ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள், அவள் கூடாரத்தினூடாக அதைக் கேட்டு, தன் மனதுக்குள்ளே நகைத்தாள், அவள், “இப்பொழுது, என்னைப் போன்ற ஒரு வயோதிக ஸ்திரீக்கு, நூறு வயதான என் ஆண்டவனோடு, எனக்கு, கூட, இன்பமுண்டாயிருக்குமோ? அநேக, அநேக வருடங்களாக இது சம்பவிக்கிறதில்லை” என்றாள். 214 அந்த மனிதன், ம-னி-த-ன் அங்கே அமர்ந்து புசித்துக்கொண்டும், மாம்ச சரீரத்தில் குடிகொண்டும், ஒரு சாதாரண மனிதனைப் போல புசித்துக்கொண்டும்; அவருடைய ஆடைகளில் தூசியோடும், அவருடைய கால்களில் தூசியோடுமிருக்க, ஆபிரகாம் அதைக் கழுவினான். தேவன், தாமே, சுற்றும் முற்றும் பார்த்தார், அவர், “பின்னால் கூடாரத்தில் இருந்த, சாராள் ஏன் இப்படிக் கூறி, நகைத்தாள்?” என்று கேட்டார். அவருக்குப் பின்னே கூடாரத்தில் இருந்த சாராளின் நினைவுகளை அவர் அறிந்திருந்தார். அது சரியா? 215 இப்பொழுது, ஆபிரகாமின் ராஜரீக வித்து பூமியின் மேல் வந்தபோது, அவர் என்ன அடையாளத்தைக் காண்பித்தார்? மனுஷகுமாரன். சீமோன் ஒரு நாள் அவரிடத்தில் வந்தான்; அந்திரேயா அவனைக் கொண்டு வந்தான். அவர், “உன் பெயர் சீமோன். நீர் யோனாவின் குமாரன்” என்றார். அவர் கூறினார். பாருங்கள், அது அவனை ஒரு விசுவாசியாக்கினது.
59216 பிலிப்பு அங்கு சென்று நாத்தான்வேலை அழைத்து வந்தான். “நாங்கள் கண்டிருக்கிற—நாங்கள் கண்டிருக்கிற ஒரு மனிதனை, நாசரேயனாகிய இயேசுவை, யோசேப்பின் குமாரனை வந்து பாரும்” என்றான். 217 அவன், “இப்பொழுது ஒரு நிமிடம் பொறும். அந்த மதவெறியிலிருந்து ஏதாவது நன்மை வரமுடியுமா?” என்று கேட்டான். அவன், “வந்து, பார்” என்றான். 218 எனவே பிலிப்பு இயேசுவின் பிரசன்னத்தில், நாத்தான்வேலுடன் வந்தபோது, இயேசு அவனை நோக்கிப் பார்த்து, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். அவன், “ரபீ, நீர் என்னை எப்பொழுது அறிந்தீர்?” என்று கேட்டான். 219 “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழே இருந்தபோது, நான் உன்னைக் கண்டேன்” என்றார். 220 அவன், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன். நீரே இஸ்ரவேலின் ராஜா!” என்றான்.
60221 அந்த ஸ்திரீ கிணற்றண்டையில், அவளுடைய ஒழுக்கக்கேடான நிலையில், ஒரு காட்சியைப் பார்ப்போம், அந்த ஸ்திரீ, தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு தம்முடைய சீஷர்களை, போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அனுப்பியிருந்தார். அவள் தண்ணீர் மொள்ள வந்தபோது, அவர், “ஸ்திரீயே, எனக்கு தண்ணீர் கொண்டு வா” என்றார். 222 அதற்கு அவள், “நீர் அதைக் கூறுவது வழக்கம் அல்ல. நமக்கு இங்கே பாகுபாடு உண்டு. இப்பொழுது, யூதர்களாகிய உங்களுக்கும் சமாரியர்களாகிய எங்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; எங்களுக்கு உம்மோடு எந்த சம்மந்தமும் இல்லை” என்று கூறினாள். 223 அவர், “ஆனால், ஸ்திரீயே, நீ யாரிடத்தில் பேசிக்கொண்டிருந்தாய் என்பதை நீ அறிந்திருந்தாயானால், அப்பொழுது நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய். நீ இங்கே வந்து மொண்டுகொள்ள வேண்டியிராத தண்ணீரை நான் உனக்குத் தருவேன்” என்றார். 224 அவளுடைய நிலைமை என்னவாயிருந்தது என்றும், அது என்னவாயிருந்தது என்றும் அவர் கண்டார். அவர், “போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அவள், “எனக்கு புருஷன் இல்லை” என்றாள். 225 அவர், “நீ உண்மையைக் கூறியுள்ளாய். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்பொழுது நீ வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவன் உன்னுடையவனல்ல” என்றார். 226 அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும்போது இந்தக் காரியங்களை எங்களுக்குக் காண்பிப்பார் என்பதை நாங்கள் அறிவோம்” என்றாள். இயேசு, “நானே அவர்” என்றார். 227 அதன் பேரில், அவள் ஊருக்குள்ளே ஓடி, “நான் செய்த காரியங்களை எனக்குச் சொன்ன ஒரு மனிதனை வந்து பாருங்கள். இது மேசியா அல்லவா?” என்றாள்.
61228 கவனியுங்கள், அவர் யூதர்களுக்கும், சமாரியர்களுக்கும் முன்பாக அதைச் செய்தார், ஆனால் புறஜாதிகளுக்கு ஒருபோதும் செய்யவில்லை. புறஜாதி, ஜனங்களாகிய நாம், அந்த நாட்களில் அஞ்ஞானிகளாயிருந்தோம், மற்ற தேசங்களிலோ, நம்முடைய முதுகில் ஒரு தடியைக் கட்டிக்கொண்டு, விக்கிரகங்களை தொழுதுகொண்டிருந்தோம். நாம் மேசியாவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை. 229 அவரை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறவர்களுக்கு மாத்திரமே அவர் பிரசன்னமாகிறார், நாம் அவரை எதிர்நோக்கிக் கொண்டிருக்க வேண்டும். 230 ஆனால் அவருக்காக எதிர்நோக்கிக் கொண்டிருப்பதாக உரிமை கோரினவர்கள், சபையே, அவர்கள் அதைக் கண்டபோது, அவர்கள், “அவன் ஒரு பிசாசு. அவன் ஒரு குறிசொல்பவன், ஒரு பெயல்செபூல்!” என்றனர். 231 இயேசு, “அந்தப் பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படும்” என்றார், ஏனெனில் அவர் இன்னும் மரிக்காமலிருந்தார். “ஆனால், என்றோ ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் வந்து அதே காரியத்தை செய்வார், அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசினாலும் மன்னிக்கப்படமாட்டாது” என்றார். அது இந்த நாளிலே, ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். “அதற்கு விரோதமாய் ஒரு வார்த்தைப் பேசினாலும்; அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது” என்று கூறினார்.
62232 அது ஆபிரகாமின் ராஜரீக வித்தாயிருந்தது. இங்கே ஆபிரகாமின் ராஜரீக வித்து, அந்த மனிதன் ஆபிரகாமுடன் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த அந்த அடையாளத்தின் நிமித்தமாக அது உண்டானது, அது அதே தேவனாயிருந்தது என்பதை நிரூபிக்க வந்துள்ளது, இந்த நாளில், “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும், அவர் தம்மை மனுஷகுமாரனாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில்” என்று வாக்களித்தார். ஆமென். இதுவே இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுவதற்கான நாளாயுள்ளது. 233 இன்றைக்கு நாம் இருக்கின்ற சூழ்நிலையைப் பாருங்கள். தேவனுடைய குமாரன் இருந்த சபையை நோக்கிப் பாருங்கள்…மப்பும் மந்தாரமுமான நாளை நோக்கிப் பாருங்கள். எல்லா தீர்க்கதரிசனங்களையும் பாருங்கள். இப்பொழுது, ஒரு விநோதமான காரியம், சோதோமைப் போன்றே காட்சியமைப்பு இருக்க வேண்டுமானால், அப்பொழுது நம்முடைய வருகையாளர்கள் வரவேண்டியதாயிருக்கிறது. 234 அவர்களில் மூன்று பேர் வந்தனர், மூன்று சிறந்த மனிதர்கள் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டனர். நாம் அதை ஒப்புக்கொள்வோம். அவர்களில் மூன்று பேர்; ஒருவர் ஆபிரகாமோடு தங்கியிருந்தார். அவர்கள் யாவரும் அங்கே துவங்கினர், ஆனால் ஒருவர் ஆபிரகாமோடு தங்கியிருந்தார். மற்றவர்களும் சோதோமிற்குச் சென்றனர். அது சரியா? ஆபிரகாம் ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம் என்று பெயர் மாற்றப்பட்டிருந்தான். உண்மையா? 235 உலகத்தின் சபை, சரித்திரத்தில் ஒரு முறை கூட, ஒரு சுவிசேஷகர் அதற்கு, இந்த நாள் வரை, ஹா-ம் என்ற ஒரு பெயரோடு முடிவடைகிறவர் சென்றதேயில்லை, பில்லி கி-ர-ஹா-ம். அது சரியா? கி-ர-ஹா-ம், ஆறு எழுத்துக்கள். ஆ-பி-ர-காம் ஏழு எழுத்துக்கள். ஆனால் கி-ர-ஹா-ம், ஆறு எழுத்துக்களைக் கொண்டவர், அதுதான் உலகத்தில் உள்ள மனிதன். பார்த்தீர்களா?
63236 இன்றைக்கு, அங்கே வெளியே சென்றவர்கள் யாரென்று பாருங்கள், அவர்கள் பரலோகத்திலிருந்து வந்த செய்தியாளர்கள். 237 பில்லி கிரஹாமைப் போல மனந்திரும்புதலை இவ்வளவு தெளிவாக பிரசங்கிக்கிற ஒரு மனிதன் பூமியில் உண்டா? பில்லி கிரஹாமைப் போன்று ஜனங்களின் மேல் ஒரு பாதிப்பை உண்டுபண்ணியிருக்கிற மனிதன் உண்டா? சர்வதேச அளவில் ஒரு மனிதனும் இருந்ததில்லை. ஓ, பில்லி சண்டே, போன்றவர், இங்கே அமெரிக்காவில் இருந்தனர், ஆனால் பில்லி கிரஹாம் உலகம் முழுவதும் அறியப்படுகிறார். அவர் எங்கே அழைக்கிறார் என்று பார்த்தீர்களா? சோதோமிலிருந்தே. 238 ஓரல் ராபர்ட்ஸ், அவர் பெற்றுக்கொண்ட தன்னுடையக் குழுவை பெந்தேகோஸ்தே சபையினரோடு அங்கே இணைத்துக்கொண்டார். 239 ஆனால் தெரிந்துகொள்ளப்பட்ட குழுவைக் குறித்து என்ன? அவர்கள் எந்தவிதமான ஒரு அடையாளத்தைக் காண வேண்டும்? அவர்கள் என்ன பெற்றிருக்க வேண்டும்? அல்லேலூயா! “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” இந்நாளில் இந்த வேதவாக்கியம் நிறைவேற்றப்படுகிறது. இந்நாளில் தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படுகிறது. அது சத்தியம் என்பதை நாம் அறிவோம். அவர் அப்பொழுது இருந்தது போலவே இன்றிரவும் அவர் இங்கே இருக்கிறார்.
64240 இப்பொழுது, அதைப் பிரசங்கிக்க, சற்று முன்பு நான் கூறினேன், நீங்கள் எதையாகிலும் பிரசங்கித்தால், அது சுவிசேஷ சத்தியமாயிருந்தால், அப்பொழுது தேவன் அதை ரூபகாரப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார். அது உண்மையா? இப்பொழுது, அது அவ்வாறே இருக்குமானால், வார்த்தையை எழுதின தேவனாய் இருக்கட்டும், தீர்க்கதரிசனத்தை உரைத்த தேவனாய் இருக்கட்டும், வார்த்தையின் தேவனாகிய தேவன் புறப்பட்டு வந்து, அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்பதை நிரூபிக்கட்டும். 241 எலியா மலையின் மேல் ஏறினபோது, எலிசா எலியாவை கவனித்துப் பார்க்கச் சென்றான். அவன், “எனக்கு இரட்டிப்பாக ஒரு பங்கு வேண்டும்” என்றான். எலியா உடுத்தியிருந்த சால்வை எலிசாவின் மேல் விழுந்தது. அவன் நடந்து சென்று, அந்த போர்வையை இரட்டிப்பாக மடித்து, ஆற்றில் அடித்து, “எலியாவின் தேவன் எங்கே?” என்று கேட்டான். எலியாவுக்கு சம்பவித்த அதே காரியம் எலிசாவுக்கும் சம்பவித்தது. 242 அதே சுவிசேஷம், அதே வல்லமை, நேற்றைய அதே மனுஷகுமாரன் இன்றும், என்றென்றுமாய் இருப்பார். எபிரெயர் 13:8. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அப்படியானால், நான் உங்களைக் கேட்கிறேன். நான் அவராக இருக்க முடியாது, ஆனால் அவர் இங்கே இருக்கிறார். நாம் ஒரு பாத்திரமாக மட்டுமே இருக்கிறோம்.
65243 அங்கே வெளியே உள்ள ஜனங்களாகிய உங்களில் சிலர், சுகவீனமாயும் அவதியுற்றும் இருக்கிறீர்கள், எனக்கு உங்களைத் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள், தேவன் இப்பொழுது…நான் போதுமான அளவு என்னைத் தாழ்த்த முடிந்தால் நலமாயிருக்கும். நீங்கள் ஜெபித்து தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள். 244 நான் யூகிக்கவில்லை…அந்த கட்டிடத்தில் ஒரு ஜெப அட்டை இல்லை, இருக்கிறதா? இல்லை, நான்…நாங்கள் ஒருபோதும் ஜெப அட்டைகளை கொடுப்பதில்லை. நாம் சபையில்…இல்லை வியாதியஸ்தரின் சுகமளித்தல் ஜெபக்கூட்டத்தை நடத்தப் போகிறோம். ஆனால், நீங்கள் ஜெபியுங்கள். 245 நான் உங்களுக்கு முற்றிலும் அந்நியனாயிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், நீங்கள் என்னை அறிவீர்கள், ஜெபர்ஸன்வில்லே! ஜெபர்ஸன்வில்லில் உள்ளவர்கள் அதைச் செய்வதை நான் விரும்பவில்லை. ஜனங்கள் இங்கிருந்து எங்காவது தூரமாயிருந்து வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் இன்னமும் வெளிப்படுத்துகிறாரா என்று பாருங்கள்! அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரா என்று பாருங்கள்! 246 அந்த சிறிய ஸ்திரீ செய்தது போலவே செய்யுங்கள். அவர் கடந்து சென்றபோது, அவள், “நான் இந்த மனிதனை விசுவாசிக்கிறேன்” என்றாள். அவளுக்கு ஒரு இரத்தக் கோளாறு இருந்தது, அவள், “அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை என்னால் தொட முடிந்தால், நான் சுகமடைவேன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றாள். அது சரியா? 247 அவளுடைய விசுவாசத்தினிமித்தம், அந்த நாளிலே, வேதவாக்கியம் நிறைவேற்றப்பட்டது. “அவர் நொருங்குண்ட இருதயத்தை கட்டி, நோயுற்றவர்களையும் முடவர்களையும் குணப்படுத்தினார்.” 248 அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது, வெளியே நடந்து வந்து உட்கார்ந்தாள், அவர் திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அந்த திரளான ஜனக்கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர், அநேகமாக இங்கே இன்றிரவில் உள்ளதைக் காட்டிலும் முப்பது மடங்காயிருக்க, அவருக்கு எப்படி தெரியும்? அவர் எப்படி அதை அறிந்திருந்தார்? அவர், “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அவர் அதைக் கூற வேண்டும் என்று கூறவில்லை; அது உண்மையாயிருந்தபடியால் அவர் அதைக் கூறினார். அப்பொழுது அவர், “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அந்த ஸ்திரீ எங்கே அமர்ந்திருந்தாள் அல்லது நின்று கொண்டிருந்தாள் என்று, அவர் நேராக சுற்றும் முற்றும் பார்த்து, அவள் எந்த நிலையில் இருந்தபோதிலும், அவளுடைய பெரும்பாடு தீர்ந்துவிட்டதாக அவளிடம் சொன்னார். 249 அது நேற்றைய இயேசுவாயிருந்தது. அதுவே இன்றைக்கு அவராயுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
66250 நான் உங்களை அறியேன்; தேவன் அறிவார். ஆனால் உங்களுடைய பக்கவாட்டில் உங்களுக்கு வலிகள் உள்ளன, அது உங்களை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது உண்மை. நீங்கள் அதைக் குறித்து அங்கே அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்கு அந்நியனாயிருக்க, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோமா? அப்படியானால், எழும்பி நில்லுங்கள். எனக்கு உங்களைத் தெரியாது. அது இங்கே மூலையில் உள்ள இந்த மனிதன், இந்த வாலிப நபர். உங்களுக்கும் கூட தொண்டைக் கோளாறு உள்ளது. அது உண்மை. நீங்கள் அதைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் யாவரும் ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து பதட்டமடைந்திருக்கிறீர்கள். நீங்கள் கூட்டத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும், ஏனென்றால் நீங்கள் ஒரு ஊழியக்காரர், நீங்கள் கவனிக்க வேண்டிய சில அலுவல்கள் உள்ளன. அது சரிதான். ஹூ-ஹூ. நீங்கள் யாரென்று தேவன் அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சங்கை. திரு. ஸ்மித் அவர்களே, நீங்கள் இப்பொழுது போய் சுகமடையலாம். இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்தினார். உங்களுடைய கூட்டத்திற்கு செல்லுங்கள்; உங்களுடைய தொண்டை உங்களை தொல்லைப்படுத்தாது. அவர் யாரைத் தொட்டார்?
67251 இங்கே பின்னால் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்; அவர் அவதியுற்றுக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய இடது நுரையீரலில் ஒரு கட்டியை உடையவராயிருக்கிறார். அவர்…அவர் இங்கிருந்து வரவில்லை. நீர் ஒரு சுரங்கத் தொழிலாளியாக இருந்து வருகிறீர். அது சரிதான். நான் உங்களுக்கு முற்றிலும் ஒரு அந்நியன். அது உண்மையானால், உங்களுடைய கரத்தைக் ஆட்டுங்கள். உங்களுடைய இடது நுரையீரலில் கட்டி உள்ளது, நீங்கள் உடனே ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அது சரியா? நீங்கள் இங்கிருந்து வரவில்லை. நீங்கள் நகரத்திற்கு வெளியிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் வெர்ஜினியாவிலிருந்து வருகிறீர்கள். அது உண்மை. நீங்கள் யாரென்று தேவன் அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? திரு.மிட்செல், அது உண்மை, வீட்டிற்குச் சென்று சுகமாயிருங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அந்த மனிதனைக் கேட்டுப் பாருங்கள்! என் வாழ்க்கையில், அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. அவர் அங்கே உட்கார்ந்து, ஜெபித்துக் கொண்டிருந்தார். இந்நாளில் இந்த வேதவாக்கியமே! 252 சாராள் கூடாரத்தில் இருந்தபோல, இதோ ஒரு பெண்மணி இங்கே எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் ஒரு மகளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். எழுந்து நில்லுங்கள். அந்த மகள் இங்கில்லை; அந்த குமாரத்தியாகிய, அவள் தூரத்தில் இருக்கிறாள். இயேசுவினிடத்தில் ஒரு ஸ்திரீ வந்தபோது இருந்தவிதமாகவே நீங்களும் இருக்கிறீர்கள், அவள் ஒரு பிசாசினால் பலவிதமாகத் துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணை உடையவளாயிருந்தாள். ஸ்திரீ…அந்தப் பெண் பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கிறாள். அவள் இங்கே இல்லை. அவள்…நீங்கள் வட கரோலினாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதுதான் உண்மை, இல்லையா? திருமதி ஆர்டர்ஸ், நீங்கள் வீட்டிற்கு செல்லலாம். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், சென்ற நாட்களில் இயேசு கிறிஸ்து சுகமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது போன்றே உங்களுடைய குமாரத்தியை, நீங்கள் கண்டறிவீர்கள்.
68253 இந்நாளில் இந்த வேதவாக்கியம்; சோதோமின் அடையாளம், மேம்பட்ட வித்தின் அடையாளம், மாம்சபிரகாரமான சபையின் அடையாளம்! இந்நாளில் இந்த வேதவாக்கியம் உங்கள் மத்தியில் நிறைவேற்றப்படுகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 254 நீங்கள் அவரை இப்பொழுதே உங்களுடைய இரட்சகராகவும், சுகமளிப்பவராகவும் ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் எழும்பி நில்லுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும், “நான் என்னுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்கிறேன். நான் அவரை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். நான் அவரை என்னுடைய இராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள். இந்த நாளிலே! நண்பர்களே, கவனியுங்கள். 255 “அவர் வேதவாக்கியத்தை வாசித்து, வேதத்தை ஆசாரியனிடம் திருப்பிக் கொடுத்து,” “ஜனங்களுடைய கண்கள் யாவும் அவர் மேல் நோக்கமாயிருந்தன. அவர் அவர்களை நோக்கிப் பார்த்து, ‘இன்றைக்கு இந்த வேதவாக்கியம் நிறைவேறிற்று’” என்றார். 256 நாம் கடைசி நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட அத்தாட்சிகளோடு நான் வேத வாக்கியங்களை வாசித்திருக்கிறேன், இயேசு கிறிஸ்து பூமிக்கு திரும்பி வருவதை இந்த சந்ததி காணும். இன்றிரவு மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்நாளில் இந்த வேதவாக்கியம் உங்கள் பார்வையில் நிறைவேறியுள்ளது. 257 டூசானில் உள்ளவர்களே, கலிபோர்னியாவில் உள்ளவர்களே, நியூயார்க்கில் உள்ளவர்களே, இந்த தொலைபேசி இணைப்புகளில் உள்ளவர்களே, இந்நாளில் இந்த வேதவாக்கியம் உங்களுடைய பார்வையில் நிறைவேறியுள்ளது. 258 ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் சமீபமாயிருக்கிறபடியால், நாம் சந்தோஷப்பட்டு களிகூருவோமாக, அவளுடைய மணவாட்டி…அவருடைய மணவாட்டி தன்னை ஆயத்தம்பண்ணினாள். 259 ஜனங்களே நீங்கள் எல்லோரும், நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி, அவருக்கு மகிமையை செலுத்துவோமாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.