ஈஸ்டர் முத்திரை

65-0410

நசசயமகவ இநதக கலயல இஙக இஙக பனகஸல உளள மழ சவசஷ வரததக பரஷர கழவன இநத பறநத நளல, இநத ஐககயததன ஒர பகமயரககமபட, கரததர எனகக அதன ஒர சற பகதத அரளனர எனபத அறநதகளளமபடயக இரபபத ஒர சலககயம. நன சகதரன கரல வலலயமஸயம, அவரடய மனவ, சகதரன ஸடரமயயம, இஙக மடயலளள மறறவரகளயம, சகதரன ஷரஸ, சகதரன அவடல, ஊழயககரரகள மறறம அரமயன ஜனஙகளகய உஙகள எலலர

ஈஸ்டர் முத்திரை

65-0410பீனிக்ஸ் அரி1401965-04-10

ஈஸ்டர் முத்திரை

65-0410பீனிக்ஸ் அரி1401965-04-10

1 நிச்சயமாகவே இந்தக் காலையில் இங்கே இங்கே பீனிக்ஸில் உள்ள முழு சுவிசேஷ வர்த்தக புருஷர் குழுவின் இந்த பிறந்த நாளில், இந்த ஐக்கியத்தின் ஒரு பாகமாயிருக்கும்படி, கர்த்தர் எனக்கு அதன் ஒரு சிறு பாகத்தை அருளினார் என்பதை அறிந்துகொள்ளும்படியாக இருப்பது ஒரு சிலாக்கியம். நான் சகோதரன் கார்ல் வில்லியம்ஸையும், அவருடைய மனைவி, சகோதரன் ஸ்ட்ரோமியையும், இங்கே மேடையிலுள்ள மற்றவர்களையும், சகோதரன் ஷோர்ஸ், சகோதரன் அவுட்லா, ஊழியக்காரர்கள் மற்றும் அருமையான ஜனங்களாகிய உங்கள் எல்லோரையுமே வாழ்த்த விரும்புகிறேன். 2 உங்களுக்குத் தெரியும், கடந்த வாரமும், கூட எனக்கு—எனக்கு ஒரு பிறந்த நாள் இருந்தது. நான் இந்த ஒரு குழுவைக் காட்டிலும் சற்று அதிக வயதுடையவன். அவர், “அந்த குழுவிற்கு ஐந்து…வயது” என்று கூறினார் என்று நான் நினைக்கிறேன். 3 அன்றொரு நாள், யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம், உங்களுக்கு எவ்வளவு வயதாகிறது?” என்று கேட்டார். 4 நான், “இருபத்தியாறு” என்றேன். மேலும் நான், “முதல் இருபத்தைந்து ஆண்டுகளை நான் கழித்துவிட்டேன். அவைகளில் நான் அவரை நன்றாக சேவிக்கவில்லை” என்று கூறினேன். நான், “அவரும் கூட, அவ்வாறு அழித்துவிடுவார் என்று நான் நம்புகிறேன்” என்றேன். அவரை அதைச் செய்ய வைப்பது வித்தியாசமாயிருக்கும்.

25 ஆனால் இங்கே இருப்பது நல்லது. இப்பொழுது நாங்கள் உங்களுடைய அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள்…நான் இந்த அருமையான சாட்சிகளில் சிலவற்றையும், சம்பவித்துக் கொண்டிருக்கிற காரியங்களையும் கேட்ட பிறகு, அதாவது நான்…பாடல்கள், அதை நிலைகுலையச் செய்யும் ஏதோ ஒரு காரியத்தை நான் செய்வேன் என்று நான்—நான் எப்பொழுதுமே பயப்படுகிறேன். மேலும் நான் அதனுடன் சேர்க்க விரும்பினேன், அதில் ஏதாவது என்னால் சேர்க்க முடிந்தால். இந்த சகோதரிகள்… 6 இன்று காலை அடைக்கலான் குருவியின் மேல் கண் என்ற பாடலைப் பாடின அந்த சகோதரனை, அந்த கருப்புநிற சகோதரனை நான் பாராட்டினேன். 7 இந்த பாடலைப் பாடின இந்த சகோதரிகள், நான் முதன்முறையாக இங்கு வந்ததிலிருந்து இது எனக்கு உதவியாக இருந்து வந்துள்ளது. நான் அதை வைத்திருக்கிறேன். நான் அதை ஒரு ஒலிப்பதிவில் பதிவு செய்துள்ளேன், நான் அதை அவரோடு பேச விரும்புகிறேன் என்னும் பாடலை நான் இயக்கி கேட்டிருக்கிறேன். நான் அங்கே சகோதரர் டாசன் ரிலேயிடம், என் நண்பர், அவர் விரும்புகிறாரா என்று கேட்டேன், அவர்களில் சிலர், அவர்களது அந்த பெண்மணிகளை அழைக்க முடியுமா என்று பார்த்தால், இந்தக் காலையில் அதை மீண்டும் பாட, அவர்கள் இன்னும் இங்கே பூமியின் மேல் இருந்திருந்தால் நலமாயிருக்கும். டெர்ரி அதை புரிந்து கொண்டார் என்று நான் நம்புகிறேன். அவர் அவ்வாறு புரிந்து கொண்டார் என்று நான் நினைக்கிறேன். நான் அதை அங்கே எடுத்து, ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்ய வேண்டும் அல்லது வேறெதையாவது செய்ய விரும்புகிறேன், ஏனென்றால் எனக்கு அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். அது என்னுடைய…அவரோடு அதைக் குறித்து பேசுவதே என்னுடைய விருப்பம். நாம் யாவரும் அதைச் செய்ய விரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன். அந்தக் காரணத்தினால்தான் நாம் இந்தக் காலையில் இங்கிருக்கிறோம்.

38 இப்பொழுது, அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டங்கள். அதை குறிப்பிட்டுக் கூறுவது சரியா? [ஒரு சகோதரன், “நிச்சயமாக” என்கிறார்.—ஆசி.] நான்—நான் ஈஸ்டர் ஆராதனைக்காக, இந்த வருகிற வாரம், கூடாரத்தில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் இருப்பேன்; சனி இரவு, ஞாயிறு, ஞாயிறு இரவு. அதன்பின்னர் நான் கலிபோர்னியாவுக்கு திரும்பிச் செல்கிறேன். கலிபோர்னியாவைச் சுற்றிலுமுள்ள ஜனங்களாகிய நீங்கள் யாவரும், நீங்கள் அங்கே கூட்டத்தில் இருப்பதற்காக நிச்சயமாகவே மகிழ்ச்சியாயிருப்போம். பில்லி தவறான விளம்பரத்தை அனுப்பியிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். அவன், “பில்ட்மோர் உணவக விடுதியில்,” என்றான், “அது இருக்க வேண்டும்” என்று நான் நினைக்கிறேன். அது… [யாரோ ஒருவர், “அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறார்.] அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஈஸ்ட்மாண்டில் உள்ளதா? [“தூதரகம்.”] தூதரகம், தூதரக விடுதி. எனவே அங்குள்ள முழு சுவிசேஷ ஜனங்கள் எவரேனும், நீங்கள் அந்த வழியில் சென்றால், உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள். 9 அதன்பின்னர் நாங்கள் அங்கிருந்து திரும்பி வருகிறோம், அதன்பின்னர் நான் தென்னாப்பிரிக்கா செல்கிறேன். இன்றிலிருந்து ஒரு மாதத்தில், நாங்கள் தென்னாப்பிரிக்காவிற்கு கப்பலேறுகிறோம், ஏறக்குறைய அங்கே மூன்று தேசங்கள், கர்த்தருக்குள் ஒரு மகத்தான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. எனவே நாங்கள்—நாங்கள் நிச்சயமாகவே உங்களுடைய ஜெபங்களை வேண்டுகிறோம். நான் திரும்பி வரும் வரை, கர்த்தர் நம்மைப் போக அனுமதித்தால், அநேகமாக என்னால் உங்களை இனி காணவே முடியாது. நாம் திரும்பி வரும்போது உங்களுக்காக ஒரு மகத்தான அறிக்கையை நான் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன்.

410 கடந்த முறை அங்கே, நான் எப்போதும் கண்டதிலேயே மிகப் பெரிய கூட்டத்தை கர்த்தர் எனக்கு அளித்தார் என்று நான் நினைக்கிறேன். ஒரு சமயம், ஒரு பீட அழைப்பிற்காக…இப்பொழுது, இது முற்றிலும் பூர்வீக பூர்வகுடியினருக்கானது. எனக்குத் தெரிந்தவரையில், ஒரே நேரத்தில் முப்பதாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். அவைகள் சரீரப்பிரகாரமான சுகமளித்தலைக் குறிக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம், ஏனென்றால் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட இருபத்தையாயிரம் பேர் சுகமடைந்திருந்தனர். அடுத்த நாள், சிட்னி ஸ்மித், டர்பனின் நகராண்மைத் தலைவர், “உங்களுடைய ஜன்னலருகே சென்று தெருவில் வருவதைப் பாருங்கள்” என்றார். சரக்கு வண்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்றிச் செல்லப்பட்டன, பழைய ஊன்றுகோல்கள் மற்றும் பொருட்களால் நிரம்பி, குவிந்து கிடந்தன; ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த பழங்குடியினருக்குப் பின்னால் அவர்கள் வந்து கொண்டிருந்தனர், நகரத்தின் தெருக்களில் வந்து, தங்களுடைய தாய்மொழியில் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள் என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தனர்.

511 என் இருதயம் சிலிர்ப்படைந்தது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அதைப் போன்று…சகோதரன் ஷோர்ஸ், நீங்கள் அதைப் போன்ற ஒரு காரியத்தைக் காணும்போது, அப்பொழுது உங்களுடைய பணி வீணாகவில்லை என்பதை நீங்கள் உணருகிறீர்கள். நீங்கள் பாருங்கள், நீங்கள் முயற்சித்தீர்கள். தேவன் அதை மீண்டும் செய்வார் என்று நான் நம்புகிறேன், நாம் அங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற காரணத்தினால்—காரணத்தினால் அல்ல, ஆனால் நாம் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருப்பதால். 12 அந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளபடி, நாம் காணாமற்போன அந்தச் சிறிய ஆட்டைத் தேடிக் கொண்டிருக்கிறோம், அது, அந்த… அந்த ஆடு உள்ளே வரும் வரை அவர்—அவர் வரமாட்டார். அவை ஒவ்வொன்றும் மந்தையில் இருக்க வேண்டும். அந்த கடைசி ஒன்று உள்ளே வரும் வரை அவர் கதவை மூடமாட்டார். ஆகையால், ஊழியக்கார சகோதரர்களே, இந்தக் காலையில், அந்த கடைசி ஆட்டையும் தேட முயற்சிக்க நான் நிச்சயமாக உங்களோடு இருக்கிறேன். அது இந்தக் காலையில், பீனிக்ஸில் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் கடைசி ஒன்று உள்ளே வரும்போது, அப்பொழுது மேய்ப்பர் கதவை அடைத்துவிடுவார். 13 [ஒரு சகோதரன், “சகோதரன் பிரான்ஹாம்?” என்று கூறுகிறார்.—ஆசி.] என்ன? [“நான் ஒரு வார்த்தை கூற முடியுமா?”] உங்களால் நிச்சயமாக முடியும். [“நான் ஒன்றை மறந்துவிட்டேன். நாங்கள் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…” ஒலிநாடாவில் காலி இடம்.] அது முற்றிலும் சரிதான். [“நான் அறிவேன், ஒவ்வொருவரும் எப்பொழுதாவது ஒருமுறை, ஏதோ ஒரு காரியத்தை மறந்து விடுகிறார்கள்.”] எனக்குத் தெரியாது. [“ஓ!”]

614 ஏறக்குறைய, நான் என்ன கூறப்போகிறேன் என்பதை நான்தான் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். நான்…எனக்கு வயதாகிக் கொண்டே செல்கின்ற காரணத்தால், நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருப்பதை நான் கண்டறிந்துள்ள படியால், என்னுடைய வேத வாக்கியங்கள் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்கிறேன். வழக்கமாக, நான் என் சிந்தையில் சுமார் ஐம்பது வேதவாக்கியங்களை வரிசையாக வைத்துக்கொள்ள முடியும், ஒருபோதும்…சரியாக சொல்ல முடியும், ஆனால் நான் அந்த நாட்களில் பல கஷ்டங்களினூடாக கடந்து வந்துள்ளேன். 15 எனவே, நாம் கர்த்தருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக! 16 அதன்பின்னர் நீங்கள் இங்கே எழும்பி, நீங்கள் நினைக்கிறீர்கள்…நீங்கள் இங்கே அமர்ந்து, இந்த ஜனங்கள் சாட்சியிடுவதைக் கேட்கிறீர்கள். நீங்கள், “சரி, நான் எழுந்திருக்கும்போது, நான் அதைக் குறித்து ஏதோ ஒன்றைக் கூறப்போகிறேன்” என்று நினைக்கலாம். அப்படியானால், கூறுவதற்கு அநேக காரியங்கள் உள்ளன, நீங்கள் அதை நாள் முழுவதும் கூறிக்கொண்டேயிருப்பீர்கள். ஆனால் நான் உங்கள் எல்லோரையும் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். இந்த சிறு குழு தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்வதாக. இயேசு வரும் வரையில் பீனிக்ஸில் உள்ள ஒவ்வொரு சபையும் தொடர்ந்து வளரட்டும் என்பதே, என்னுடைய உத்தமமான ஜெபமாயுள்ளது. 17 இப்பொழுது, நம்மை சற்று இளைப்பாறச் செய்வதற்காக, நாம் ஜெபம் செய்யும்போது, நாம் எழுந்து நிற்போம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் நிற்பீர்களா?

718 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே, அவர் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரை எங்களுக்கு பலியாகவும் கர்த்தராகவும் இரட்சகராகவும் அளித்துள்ள, உமக்கு இந்தக் காலையில் உம்முடைய பிரசன்னத்தில் நிற்க எங்களுக்குக் கிடைத்துள்ள இந்த சிலாக்கியத்திற்காக, மீட்கப்பட்ட உம்முடைய ஜனங்களோடு, அவருடைய மகிமையான இரண்டாம் வருகைக்காக, எங்களை அவரண்டை ஏற்றுக் கொள்ளும்படி எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறபடியால் உமக்கு நாங்கள் நன்றியுள்ளவராய் இருக்கிறோம். கர்த்தாவே, எங்கள் மத்தியில் பாவம் இருக்குமானால், உமது ஈசோப்பினால் எங்களை சுத்திகரியும். பரலோகப் பிதாவே, நீர் எங்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு சுகவீனமான நபரையும் சுகப்படுத்த வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம். 19 தற்செயலாக, உம்மை அறியாதவர்கள், இருப்பார்களானால், இந்த மகத்தான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நாங்கள் மிகவும் ஊக்கமாய் போராடிக் கொண்டு, இந்த கடைசி நாளுக்கான வேதவாக்கியத்தின்படி, அது அவசியம் என்று கூறி, இன்றைக்கு, அவர் எங்கள் எல்லோர் மேலும் விழுந்து, எங்களை புதியதாக சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணவும், பிதாவே, வெளியே உள்ளவர்களையும் கூட உள்ளே கொண்டு வர வேண்டும் என்று தேவனே, நாங்கள் ஜெபிக்கிறோம். 20 நாங்கள் உம்முடைய வார்த்தையை வாசித்து, உம்முடைய வார்த்தையின் சத்தியத்தை பேச முயற்சிக்கும்போது எங்களை ஆசீர்வதியும். எங்களுடைய வாய்களை பொய்யானதற்கு அடைத்து, சத்தியமாயிருக்கிறதற்கு எங்களுடைய வாயையும், இருதயங்களையும் திறந்தருளும், நாங்கள் எங்களை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறோம். பேச எங்களுடைய வாய்களையும், கேட்க எங்களுடைய காதுகளையும், பெற்றுக் கொள்ள எங்களுடைய இருதயங்களையும் உபயோகியும். அது அவ்வண்ணமாக இருக்கும்படி நியமித்திருக்கிற இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

821 நான் வேதாகமத்தில் மூன்று இடங்களில் உள்ள பரிசுத்த வார்த்தையிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் இவைகளை குறித்துக் கொண்டால், நீங்கள் அவைகளை தொடர்ந்து படித்து, கூடுதலான தகவலுக்காக, நீங்கள் அவைகளைக் குறித்துக் கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நான் மத்தேயு 28:1-10 வரையிலும், வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18 வரையிலும், ரோமர் 8:11 ஆகிய வசனங்களிலும் வாசிக்கப் போகிறேன். நான் அவைகளை மீண்டும் கூறுவேனாக. இப்பொழுது மத்தேயு 28:1-10, வெளிப்படுத்தின விசேஷம் 1:17-18, ரோமர் 8:11. 22 இப்பொழுது நாம் ஈஸ்டரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்களுடைய இடங்களை குறித்துக் கொண்டு, அதை குறித்துக் கொண்டிருக்கையில், வரப்போகும் வாரம் இந்த வருடத்தில் உள்ள எல்லா வாரங்களிலும் மிகவும் மகத்தான சரித்திரப்பிரகாரமான வாரம் என்று நான் நினைக்கிறேன். இந்த வாரத்தில், வருகிற இந்த வாரத்தில் நாம் கொண்டாடப் போகும் மகத்தான காரியம் என்று நான் நினைக்கிறேன், அது பூமியில் எப்போதும் நிகழ்ந்ததிலேயே மிகப் பெரிய சம்பவமாயிருந்தது. அதை எதுவும் மிஞ்ச முடியாது என்று நான் நினைக்கிறேன். நீங்களோ, “நல்லது, அந்த—அந்த சிலுவையேற்றம் மகத்தானதாயிருந்தது” என்று கூறலாம். ஆனால் நம்முடைய கர்த்தரின் அதே நாட்களில் கூட அநேக மனிதர் மரித்துள்ளனர், அநேக மனிதர் சிலுவையில் அறையப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர் மாத்திரமே மரித்தோரிலிருந்து எழுந்தார். அது அதை முத்திரையிட்டது.

923 இப்பொழுது நான் படிக்க விரும்புகிறேன். இது கர்த்தருக்குச் சித்தமானால், ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் ஈஸ்டருக்கு முன்னதான ஒரு சிறு செய்தியாகும். இப்பொழுது நாம் பரிசுத்த மத்தேயுவின் சுவிசேஷம் 28-ம் அதிகாரத்திலிருந்து துவங்கி வாசிப்போம். ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. நிலநடுக்க…(என்னை மன்னிக்கவும்) காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள் தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

1024 வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரம், 17-ம் மற்றும் 18-ம் வசனங்கள். நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். 25 ரோமர் புத்தகம், 8-ம் அதிகாரம், 11-ம் வசனத்திலிருந்து துவங்குகிறது. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

1126 இப்பொழுது கர்த்தராகிய இயேசு இந்த வார்த்தைகளின் வாசிப்போடு தம்முடைய ஆசீர்வாதங்களை கூட்டுவார் என்று நான் நம்புகிறேன். அதைக் காணும்போது, ஈஸ்டர், நான் அதை என்னுடைய சொந்த இருதயத்தில் மிகப்பெரிய கூட்டமாக அல்லது இந்த வருடத்தின் மிகப்பெரிய நிகழ்வாக முத்திரையிட்டிருக்கிறேன். 27 நீங்கள் என்னை ஒரு நிமிடம் மன்னிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அது உங்களுக்கு அங்கே ஒரு விதமான இரைச்சல், ஒரு விதமான ஒரு உறுமல் சத்தம் அல்லவா? அது சரிதானே? உங்களால் அதை அந்தவிதமாக சரியாக கேட்க முடிகிறதா? ஓ! உங்களால் அதைக் கேட்க முடியாது. அது சிறந்ததா, அந்தவிதமாக இருக்கிறதா? நான் மிக அருகில் செல்ல விரும்பவில்லை.

1228 இப்பொழுது, நான் இதை ஏன் கூறுகிறேன் என்றால், வேதம் கூறியிருந்ததை அவர் ஈஸ்டரில் நிரூபித்தார். அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்த வேதவாக்கியங்கள் யாவும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் தம்முடைய மேசியாத்துவத்தை, ஈஸ்டர் முத்திரையினால் முத்திரையிட்டார். இன்றைக்கு நாம் ஈஸ்டர் முத்திரைகளை வாங்குவதைக் குறித்து அதிகம் பேசவிருக்கிறோம். நல்லது, நான் இந்தக் காலையில் ஈஸ்டர் முத்திரையின் பேரில் பேச விரும்புகிறேன். அது நம்முடைய பணத்தினால் நாம் வாங்குகிறதைக் காட்டிலும், காசநோய் சங்கம் அல்லது அவர்கள் அதை என்னவென்று அழைத்தாலும், கடிதங்களில் பொறிக்கும்படியான ஒரு முத்திரையை காட்டிலும் வித்தியாசமான முத்திரையாக உள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த முத்திரை சற்று வித்தியாசமான முத்திரை என்று நான்—நான் நினைக்கிறேன். தேவனுடைய பிள்ளைகள் என்று உரிமை கோரும் கிறிஸ்தவர்களாகிய நமக்கு வருடத்தின் மகத்தான நாளாக அந்த ஈஸ்டர் உள்ளது, கிறிஸ்து நமக்காகச் செய்த இந்த மகத்தான காரியத்தோடு நாம் எப்படி ஐக்கியங்கொள்ள வேண்டும் என்பதை நான் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன்.

1329 தேவனுடைய வார்த்தை அவருடைய வருகைக்கு அநேக, அநேக நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, அவருடைய சிலுவையில் அறையப்படுவதைக் குறித்தும், அவருடைய மரணத்தைக் குறித்தும், அவருடைய பாடுகளைக் குறித்தும், அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்தும் கூட உரைக்கப்பட்டது. நாம் இந்த ஆராதனைகளினூடாக, ஒருவேளை, அடுத்த வாரம், நம்முடைய—நமது வானொலி நிகழ்ச்சிகளை; வரப்போகும் வாரத்தில், நம்முடைய சபைகளிலும், நம்முடைய போதகர்களோடும் கேட்போம். 30 ஆனால் எல்லா நாட்களிலும் இயேசு செய்த எல்லாக் காரியங்களிலும், தேவனுடைய வார்த்தையின் அவருடைய எல்லா ரூபகாரப்படுத்துதலையும், அதை நிறைவேற்ற அவர் செய்ததையும் நிச்சயமாகவே பாராட்டுகிறோம்: வியாதியஸ்தரை சுகப்படுத்துதல், மரித்தோரை உயிரோடெழுப்புதல், பிசாசுகளைத் துரத்துதல், ஏழைகளுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல், தேவன் வரும்போது, அவர் செய்வதாகக் கூறியிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றி; நமக்குப் பதிலாக நம்முடைய பாவங்களுக்காக பாடுபடவும், சிலுவையில் பாவத்திற்கான கிருபாதார பலியாக இருக்கவும், அவரைத் தவிர வேறு எவரும் அதைச் செய்திருக்க முடியாது. ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஈஸ்டர் முழு காரியத்தையும் முத்தரித்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.

1431 காரணம், அவருக்கு முன்பாக தீர்க்கதரிசனம் உரைத்திருந்த தீர்க்கதரிசிகள் பூமியில் இருந்திருக்கின்றனர். பூமியில் தீர்க்கதரிசிகள் இருந்தனர், அவர்கள் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மரித்தோரையும் கூட எழுப்பினர், இயேசு செய்த அதே அடையாளங்களைச் செய்தனர். 32 ஆனால் ஈஸ்டர் அதை நிரூபித்தது. அது உண்மையான விசுவாசிக்கான தேவனுடைய வார்த்தையை என்றென்றைக்குமாய் முத்திரையிட்டது. அந்த பேரின்பமான காலையில் எல்லா இருளும், சந்தேகமும் தகர்த்தெறியப்பட்டன. இந்த நாளுக்கு முன்னரே மனிதன் ஒரு சிறை வீட்டில், பக்தியுள்ளவர்களும் கூட, அடைக்கப்பட்டிருந்தனர், ஏனென்றால் அவர்கள்…மகத்தான மத சம்பந்தமான அசைவுகளையும், பரிசுத்த ஆவியின் அசைவுகள் போன்றவற்றையும் கண்டிருந்தனர். ஆனால் ஒரு மனிதன் மரித்தபோது, அது அதற்கு தீர்வாகத் தென்பட்டது. ஆனால் இந்த ஒருவர் வந்து, “என் ஜீவனைக் கொடுக்க எனக்கு அதிகாரம் உண்டு; அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு வல்லமை உண்டு” என்றார், அதன்பின்னர் போய் அவர் என்ன கூறினார் என்பதை நிரூபித்து, எனக்கு, ஒரு காரியம் கூறப்பட்டு, அதன்பின்னர் திரும்பவும் நிரூபிக்கப்படும்போது, அது—அதுவே அதனுடைய முத்திரையாயிருக்கிறது.

1533 கொலம்பஸைப் போல, ஒரு மனிதன் உலகம் உருண்டை என்று நம்பி, அவர் கப்பல்களைக் கவனித்து, எப்படி வந்தது என்று நமக்கு கூறப்பட்டபடியே, அவர் கப்பலைக் காண்பதற்கு வெகு நேரத்திற்கு முன்னரே அவர் அதன் கம்பத்தை காண முடிந்தது. உலகம் உருண்டையாயிருந்தது என்பதை அது நிரூபித்தது. அந்த நாளில் ஜனங்கள் அதை விசுவாசிக்கவில்லை, ஆனால் அவர் ஒரு தரிசன மனிதனாயிருந்தார். அவர் ஒரு தரிசனத்தைக் குறித்து சரியாக நிரூபிக்க புறப்பட்டார், அது உண்மையாயிருந்தது. 34 தேவன் தம்முடைய வார்த்தையை, சத்தியத்தை நிரூபிக்க நோக்கங்கொண்டார். எனவே அவர்…ஒரு மனிதன் மாத்திரமே அதைச் செய்யக்கூடியவராயிருந்தார், அது இயேசுவாயிருந்தது. அவர் வந்து அது சத்தியம் என்பதை நிரூபித்தார். அது அதை முத்திரையிட்டது. அது இருளின் முத்திரைகள் யாவற்றையும் முறியடித்து, மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகள் போன்றவற்றை சிதறடித்து, அங்கே மகத்தான மனிதர் எழும்பி, மகத்தான, ஆச்சரியமான காரியங்களைச் சொல்லியிருக்கிறார்கள்; ஆனால் அவர்கள், ஒவ்வொருவரும், கல்லறையில் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய கிறிஸ்தவ மார்க்கம் மாத்திரமே காலியான கல்லறையைக் கொண்டுள்ளது. அவர் மரித்தோரின் தேவனும், ஜீவனுள்ளோரின் தேவனாயுமிருக்கிறார் என்பதை அது எனக்கு நிரூபிக்கிறது, அவர் மரித்தோரை உயிரோடு எழுப்பவும், மீண்டும் உயிரடையச் செய்யவும் முடிந்தது. நான்…இந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, அவருடைய உயிர்ப்பிக்கும் ஆவி, அவர் ஒருவரே மரித்தோரை உயிர்ப்பிக்கவும், மீண்டும் உயிரோடெழுப்பவும் வல்லவராயிருக்கிறார் என்பதை அநேக வருடங்களாக நிரூபித்துள்ளது.

1635 அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தின் மூலம் நிரூபித்தபோது, அவருக்கு இருந்த இந்த மகத்தான ஜெயங்கொள்ளும் வல்லமை, அவரால் மரணத்தையும், நரகத்தையும், கல்லறையையும் ஜெயங்கொள்ள முடியும் என்பதை ஈஸ்டரில் அவர் நிரூபித்தார். “மரித்த நான், மீண்டும் உயிரோடிருக்கிறேன், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்; மரணத்திற்கும், பாதாளத்திற்கும், கல்லறைக்கும் திறவுகோல்களை உடையவனாயிருக்கிறேன்” என்று கூறினார். எவருமே கூறக்கூடிய என்ன ஒரு—ஒரு அறிக்கை! அவர் அதைச் செய்தார் என்பது மாத்திரமல்ல, ஆனால் அவர்—அவர் உடையவராயிருப்பதாக உரிமை கோருவதை அவர் உடையவராயிருந்தார் என்பதை அவர் ஏற்கனவே நிரூபித்திருந்தார். 36 இந்த வேதாகமத்தை விசுவாசிக்கிற கிறிஸ்தவர்களாகிய நாம், அந்த நாளை தேவன் விரைவுபடுத்துகிறார் என்று, நான் நினைக்கிறேன், நாம் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்க முடியும். பார்த்தீர்களா? சற்று முன்னர், “பூமியின் உப்பாக” கூறப்பட்டது போல, அதுதான் அதை உண்டாக்குகிறது என்று அந்த சகோதரி கூறினாள். அது உண்மை. உலகம் இந்த உப்பைத் தேடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஜீவிக்கும்படியாக அந்த வார்த்தையை நம்முடைய ஜீவியங்கள் ரூபகாரப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் நம்முடைய ஜீவியத்தின் மூலமும், வேதாகமத்தின் மூலமும் நிரூபிக்க முடியும்போது, அந்த நாளுக்காகவே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

1737 வார்த்தை…“இந்த ஆவி,” ரோமர் 8:11 அங்கே, “இயேசு கிறிஸ்துவை எழுப்பின இந்த ஆவி உங்களுக்குள் இருந்தால், சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிக்கும்” என்று கூறியுள்ளது. அவர் யேகோவா மீட்பர் என்றும், அவர் மரணம், நரகம், கல்லறையின் மேலும் வல்லமையுள்ளவர் என்றும், அவருக்கு மட்டுமல்லாமல், நமக்கும் நிரூபித்தார், ஆனால் அதே ஆவியைப் பெறும் அணுகளையும் அவர் நமக்கு அளித்திருக்கிறார், நாமும் கூட அந்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உறுதியை நாமே பெற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் உங்கள் சரீரத்தில் வாசம் செய்கிறார், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தையும் உயிர்ப்பிக்கும். இப்பொழுது உயிர்ப்பித்தல் என்ற வார்த்தை, “மரணத்திற்குப் பிறகு உயிர்ப்பிக்கப்படுதல்” என்று பொருள்படுகிறது. அது மரித்த பிறகு, அது உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.

1838 அதுவரைக்கும் அநேக காலங்களாக உலகம் சந்தேகத்தினுள் மூடி வைக்கப்பட்டிருக்கிறது. இது நிரூபிக்கப்பட்டு, பேசப்பட்டது மட்டுமல்ல, நிரூபிக்கப்பட்டது. பயனுள்ளது என்று நான் நினைக்கிறேன்… 39 இயேசு, “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி; தேவனுடைய வல்லமையை அவர்களுக்கு வெளிப்படுத்தி நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” வாக்குத்தத்தம் செய்து, தாங்கள் விசுவாசிக்கிறோம் என்று கூறுகிறவர்கள், அவர் அதைக் குறித்த ஒரு திட்டவட்டமான புரிந்துகொள்ளுதலை நமக்கு அளித்திருக்கிறார், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறப்பட்டுள்ளது. அது அவர்களுடைய சாட்சியின் நிரூபணமாக இருக்கும். இப்பொழுது, நாம் விசுவாசிக்கிறோம் என்று நாம் கூறலாம். ஆனால் அது நம்மேல் இருக்கும் என்று அவர் கூறியுள்ள நிரூபிக்கப்பட்ட அடையாளத்தை நாம் உடையவர்களாயிருக்கும் வரை, அப்படியானால் நாம் விசுவாசிகளாயிருக்கும்படி அறிக்கையிட்டுக்கொண்டிருக்கிறோம், விசுவாசிகளின் உடைமையாக அல்ல.

1940 ஏனென்றால், நினைவிருக்கட்டும்…ஒரு சில நாட்களுக்கு முன்பு, நான் டூசானில் உள்ள கேயார் என்ற வானொலியில் ஒரு நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த ஊழியக்காரன் எங்களுக்கு விரோதமான பட்சத்தில் நின்று, “பெந்தெகொஸ்தே மார்க்கம் என்பது வெறும் போலியானதேயல்லாமல் வேறொன்றுமில்லை. அங்கே…அதற்கு செவிகொடுக்க முடியவில்லை. அது நிலையற்றதாயிருந்தது” என்றார். மேலும், “அந்நிய பாஷைகளில் பேசி, இந்த காரியங்களை செய்து, ஜெபத்தினால், வியாதியஸ்தரை சுகப்படுத்துதல் போன்றவற்றை உரிமை கோரும் எந்த மனிதனும், அது அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். அந்த ஏழ்மையான தளர்வுற்ற ஜனங்களுக்காக ஜெபிக்க, ஏனென்றால் அவர்களிடம் ஏதோ ஒரு—ஒரு கோளாறு இருக்கின்றது என்பது போன்ற மாயையில் இருந்தனர்” என்று கூறினான். ஓ, நான் அந்த சகோதரனிடம் சிறிது நேரம் பேசியிருந்தால் எப்படியாய் இருந்திருக்கும்! அவர் கூறினார்…“அது, பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலருக்காக மாத்திரம் கொடுக்கப்பட்டது, அவ்வளவுதான்.” 41 முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் சபையில் இந்த வரங்களை நியமித்துக் கொண்டிருந்தான் என்பதை நான் கண்டறிகிறேன். முதலாம் கொரிந்தியர் 15-ல், “அவர் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை, அற்புதங்களை சபையில் வைத்தான். இந்த மற்ற எல்லா வரங்களும் சபையில் அமைந்திருந்தன.”

2042 இயேசு அதைக் கூறினார். “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.” எவ்வளவு தூரம்? “உலகம் முழுவதிலும்.” யாருக்கு? “சர்வ சிருஷ்டிக்கும்.” அவர்கள் இன்னும் அதைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன.” எவ்வளவு காலம்? “உலகம் முழுவதிலும்.” யாருக்கு? “ஒவ்வொரு சிருஷ்டிக்கும். இந்த அடையாளங்கள் உலகம் முழுவதிலும், ஒவ்வொரு சிருஷ்டிக்கும், அவர்களைத் தொடரும். இந்த அடையாளங்கள் அவர்களைப் பின்தொடரும்: என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; அவர்கள் ஒரு சாவுக்கேதுவான பொருளையோ, அல்லது சர்ப்பத்தையோ எடுத்தாலும், அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும், அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” அதுவே சபைக்கு அவருடைய கடைசி கட்டளையாயிருந்தது, மாற்கு 16-ம் அதிகாரம்.

2143 முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் இந்த வரங்களை சபைக்குள் நியமித்துக் கொண்டிருக்கிறான். கலாத்தியர் 1:8-ல், கூறப்பட்டுள்ளதோ, “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது ஏற்கனவே பெற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால்,” பாருங்கள், “அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று ஏற்கனவே பிரசங்கிக்கப்பட்டுள்ளது. பெந்தெகொஸ்தே முடிவு இல்லாமல் துவங்கியது என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு சிருஷ்டிக்கும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், பெந்தெகொஸ்தே எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பெந்தேகோஸ்தே ஆசீர்வாதங்கள் ஜனங்கள் மேல் இருக்க வேண்டும்.

2244 இப்பொழுது, இந்த பெந்தேகோஸ்தே ஆசீர்வாதம் என்பது என்ன? அது உயிர்த்தெழுதலின் உறுதிப்படுத்துதலாய் உள்ளது. சுவிசேஷமே “நற்செய்தி” என்று பொருள்படும் என்பதில் வியப்பொன்றுமில்லை. எதைக் குறித்த நற்செய்தி? அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார். “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.” நீங்கள் ஒரு காலத்தில் பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்தவர்களாயிருந்தீர்கள், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின அந்த ஆவியினாலே, தேவன் நம்மை ஒன்று சேர்த்து உயிர்ப்பித்திருக்கிறார். நாம் இப்பொழுது அவரோடு உன்னதங்களில் அமர்ந்து, அவரோடு உரையாடி, அவரோடு பேசிக்கொண்டிருக்கிறோம். அது சத்தியம் என்று விசுவாசிக்கிற ஜனங்களுக்கு அந்தக் கதையைக் கூறுவது என்னே ஒரு மகிழ்ச்சி!

2345 நான் இன்றைக்கு யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது தான் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. நாம் உண்மையாகவே ஜனங்களை தேவனிடத்திற்கு கொண்டு வருகிறோமா அல்லது நாம் அவர்களை வெறும் சபைக்கு கொண்டு வருகிறோமா? நாம் அவர்களை கிறிஸ்துவண்டை, இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்டு செல்ல வேண்டும். சபைக்குச் செல்வது நல்லது. நிச்சயமாக. நம்மால் அவ்வளவு தூரம்தான் செல்ல முடியுமென்றால், அது போதுமான தூரம் அல்ல. நீங்கள் சபைக்கு வரும்போது, அது நல்லது; ஆனால் சபையிலிருந்து கிறிஸ்துவண்டை செல்லுங்கள், ஏனென்றால் நாம் இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுக்கொள்ள வேண்டும், நாம் எப்போதாவது அந்த பொதுவான உயிர்த்தெழுதலில் இருக்க எதிர்பார்த்தால், ஏனென்றால் அது மாத்திரமே நம்மை மரித்தோரிலிருந்து கொண்டு வரக்கூடிய ஒரே காரியம். “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின இந்த ஆவி உங்களில் வாசமாயிருந்தால், அது உங்களுடைய அழிவுள்ள சரீரங்களையும் ஜீவனுக்கு கொண்டுவந்து, உயிர்ப்பிக்கும்.” நமக்கு என்ன ஒரு வாக்குத்தத்தம்!

2446 இப்பொழுது கவனியுங்கள். இந்த உயிர்த்தெழுதலின் சாராம்சம் என்னவென்றால், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை நிரூபிக்கும்படி, சொல்வதும் காண்பிப்பதும் ஆகும். அவர் மரிக்கவில்லை. அவர் ஜீவிக்கிறவர். அவர் இங்கே ஜீவிக்கிறார். அவர் நமக்குள் இருக்கிறார். “நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்.” 47 இப்பொழுது கிறிஸ்தவர்களாகிய நாம் யாவரும் அவர் உயிரோடிருக்கிறார் என்று உரிமை கோருகிறோம், அல்லது நாம் அவருடைய ஆவியினாலே, மரணத்திலிருந்து ஜீவனுக்கு…உயிர்பிக்கப்பட்டிருக்கிறோம். நாம் உயிர்ப்பிக்கப்படவில்லையென்றால், அப்பொழுது நாம் உயிரோடெழுப்பப்பட்ருக்கவில்லை.

2548 இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், நாம் இந்தப் பொருளைப் பார்க்கப் போகிறோம், நாம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோமா, இதுதான் உண்மை என்று நாம் உறுதியாக நம்ப முடியுமா? என்று சில நிமிடங்கள் அதை ஒரு விதமாக கற்பிக்கப் போகிறோம். 49 இப்பொழுது, இது உங்களுடைய சொந்த வாழ்க்கை, இது என்னுடைய வாழ்க்கை. அங்கே தான் அந்த…இது சத்தியமாயிருக்கவில்லையென்றால், நான் கூற இருப்பது உண்மையாயிருக்கவில்லையென்றால், அப்பொழுது நான் உலகத்திலேயே மிகவும் முட்டாள்தனமான ஜனங்களில் ஒருவன். நான் ஒன்றுமே செய்ய முடியாத ஏதோ ஒரு காரியத்திற்காக என்னுடைய ஜீவனையே கொடுத்திருக்கிறேன். ஆனால் அது சத்தியமாயிருந்தால், அப்பொழுது நான் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நாம் எந்த காரணத்திற்காக நின்று கொண்டிருக்கிறோமோ, அதற்காக என்னால் முடிந்த ஒவ்வொரு காரியத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். நாம் நம்முடைய உற்சாகத்தை இழந்து போகக் கூடாது என்று நான் நினைக்கிறேன். 50 ஈஸ்டர் நெருங்கி வருவதை நாம் காண்கையில், அது எனக்குள்ளாக ஏதோ ஒரு காரியத்தை செய்கிறது, அது தேவனுடைய பார்வையில், அந்த நாளில் என்றென்றைக்குமாய் முத்திரையிடப்பட்டது என்பதை நான்—நான் அறிவேன்.

2651 இப்பொழுது, நாம் கவனிப்போம், அவரை கல்லறையிலிருந்து எழுப்பின அதே ஆவிதான் நமக்குள் வாசம் செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது, அது எப்படி இருக்க முடியும்? உயிர்த்தெழுந்த ஆவியானவர், தேவன், மரித்தோரிலிருந்து எழுந்த இயேசு நமக்குள் வாசம் செய்திருக்கிறார். 52 இப்பொழுது, இப்பொழுது, ஆவியானவர் உயிர்ப்பிக்கிறவர். வார்த்தை உயிர்ப்பிக்கிறதல்ல. ஆவியானவரே வார்த்தையை உயிர்ப்பிக்கிறவர் அல்லது வார்த்தைக்கு ஜீவனை அளிக்கிறவர், அது பறக்க செட்டைகளை அளிக்கிறார், அதை அணுகுவதற்கு அளிக்கிறார். ஆவியானவரே அதைச் செய்கிறார்.

2753 இப்பொழுது, கோதுமையானது, கோதுமையாக மாத்திரமே இருக்கிறது; ஆனால் உயிர்ப்பிக்கும் ஜீவன் கோதுமைக்குள் நுழையும்போது, அப்பொழுது அது அதற்கு ஜீவனை அளிக்கிறது. நாம் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருந்து, ஒரு காலத்தில் மரித்திருந்து, அதே சமயத்தில் பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்தவர்களாயிருந்தோம், தேவன் ஏதோ ஒரு வழியில் இந்த உயிர்ப்பிக்கும் ஜீவனை உங்களுடைய அழிவுள்ள சரீரங்களுக்குள்ளாக கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. நான் உங்களுடைய சரீரத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். 54 இப்பொழுது, இயேசு வார்த்தையாயிருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “ஆதியிலே…” பரிசுத்த யோவான் 1, “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.”

2855 இப்பொழுது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவாக, அவர் செய்வார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையையும் அவர் உயிர்ப்பித்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, எப்படி அவர் ஒரு கன்னிப் பெண்ணிலிருந்து பிறப்பார் என்று கூறப்பட்டபடியே, அந்த எல்லாவற்றையும், அதைச் செய்தார். அது உண்மைதான். அவர் இங்கே பூமியில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாயிருந்தார், ஆனால் அவரால் ஒரு மனிதனாக இதை செய்ய முடியவில்லை. இந்த வாக்குத்தத்தங்களை அவருக்கு உயிர்ப்பிக்க, தேவனுடைய ஆவி அவருக்குள் வாசமாயிருந்தது. நாம் இப்பொழுது இதை உண்மையாகவே தெளிவாக புரிந்துகொள்கிறோம் என்று நான் நம்புகிறேன். இயேசு, தாமே, சரீரத்தில், ஒரு மனிதனாயிருந்தார், ஆனால் அவருக்குள் இருந்த ஆவியே, ஆவியே கிரியை நடப்பித்தது. “கிரியைகளைச் செய்கிறது நானல்ல. அது எனக்குள் வாசமாயிருக்கிற என் பிதாவாயிருக்கிறது. அவரே கிரியைகளைச் செய்கிறார்.” பார்த்தீர்களா? இயேசுதாமே வார்த்தையாயிருந்தார், ஏனென்றால் அவர்…தேவனுக்கு முன்பாக… 56 இது ஒரு சரியில்லாத வார்த்தையாய் உபயோகிக்க வேண்டியதாயுள்ளது, நீங்கள் இதை ஒரு கூட்டத்திற்கு முன்பாக, சரியாக எடுத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர் தேவனுடைய முன்னறிவினால் முன்குறிக்கப்பட்டிருந்தார், அவர் ஒரு மீட்பரை அனுப்புவார் என்பதும், இந்த மீட்பர் அவருடைய சொந்த குமாரனாக மாத்திரமே இருக்க முடியும் என்பதும், எப்படி தேவனுடைய திட்டமாய் இருக்க வேண்டியதாய் இருந்தது. ஆகையால், அப்பொழுது, ஏதேன் தோட்டம் முதற்கொண்டு, இயேசு இங்கிருப்பார் என்பது தேவனுடைய வாக்குத்தத்தமாயிருந்தது. இங்கே அவர் ஒரு கன்னிகையினிடத்தில் பிறந்த, ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் அந்த வார்த்தையை அவரிடத்தில் உயிர்ப்பிக்க தேவனுடைய ஆவி தேவைப்பட்டது. அவர் உயிர்ப்பிக்கப்பட்ட வார்த்தையாயிருந்தார், அந்த மணி நேரத்துக்காக வார்த்தை உயிர்ப்பிக்கப்பட்டது. நீங்கள் ஒரு மீட்பரைப் பெற்றிருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நியாயப்பிரமாணம் தவறிவிட்டது. மற்ற காரியங்கள் தோல்வியடைந்திருந்தன. இப்பொழுது, அதற்கு ஒரு மீட்பர் தேவை, அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மீட்பர். அவர் தேவனுடைய வார்த்தையினால் உயிர்ப்பிக்கப்பட்டார்.

2957 இப்பொழுது அந்தக் காலத்தில் மீட்பராய் இருக்க அவர் மீது இருந்த அதே ஆவியானவர், இந்தக் கடைசி நாட்களில், என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் குறித்த வாக்குத்தத்தத்தை நாம் இப்பொழுது ஏற்றுக்கொண்டுள்ளோம்; நீங்கள் அந்த வார்த்தையின் பாகமாகிவிட்டால், நீங்கள் அவரோடு மீட்கப்படுகிறீர்கள், ஏனெனில் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்த அதே ஆவி உங்களிலும் வாசம் செய்து, இந்தக் காலத்திற்குரிய உங்கள் ஜீவியத்தை உயிர்ப்பிக்கிறது. அது கடைசி காலத்தில், உங்கள் அழிவுள்ள சரீரங்களையும் கூட உயிர்ப்பித்து, அவர்களை உயிர்த்தெழுப்பி, அவர்களை மீண்டும் மேலே கொண்டு வரும். நாம் அதை நோக்கிப் பார்க்கும்போது, அது இருளைப் போக்குகிறது. அது—அதுவே சத்தியமாயுள்ளது. பார்த்தீர்களா?

3058 இங்கே ரோமர்கள், பவுல் அதை நமக்கு நிரூபித்திருக்கிறான். பார்த்தீர்களா? “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானது உங்களில் வாசமாயிருந்தால், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் கூட உயிர்ப்பிக்கும்.” அவரை எழுப்பின அதே ஆவிதான், உண்மையான விசுவாசியை நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பித்தது. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் விசுவாசிக்குள்ளாக வாசம் செய்து, விசுவாசியை நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பிக்கிறார்.

3159 ஒரே ஒரு ஜீவன், ஒரே நித்திய ஆவி, ஒரே நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தேவன். தேவன் மாத்திரமே நித்தியமானவராயிருக்கிறார். ஆகையால் நாம், அவருடைய பிள்ளைகளாயிருக்கிறபடியால், அவருடைய ஒரு பாகமாக, அதாவது, அவருடைய சிந்தையின் தன்மைகளாக இருக்கிறோம். சிந்தனை வெளிப்படுத்தப்பட்டு, ஒரு வார்த்தையாகிறது. அப்படியானால், இங்குள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபரும், இந்த நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொண்டு, தேவனுடைய சிந்தையில் உலகத்தோற்றத்திற்கு முன்பே இருந்தனர். அது ஒரே வழியாய் இருக்கக் கூடியதாயுள்ளது, ஏனென்றால் நீங்கள் ஒரு தன்மையாயிருக்கிறீர்கள். அது ஒரு சிந்தனையின் வெளிப்பாடாய், வார்த்தையாக மாறியுள்ளது; ஒரு வார்த்தை ஜீவனை எடுத்துள்ளது, அது நித்தியமாயிருக்கிறது. அந்தக் காரணத்தினால்தான் நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறோம். அதே கொள்கையில் அந்த மகத்தான தேவ குமாரன், மீட்பர், நாம் அதே ஆவியினூடாக, அதே தேவனுடைய முன்னறிவினால் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகிறோம்.

3260 இயேசுவானவர் இங்கிருந்தபோது, பூமியிலுள்ள இலட்சக்கணக்கானோர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கவனித்து பாருங்கள். ஆனால் நமக்கு நேரடியான அத்தாட்சியும், வேதாகம நிரூபணங்களும் உள்ளன என்பதை அறிந்து, நாம் இந்தக் காலையில், எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், நாம் அந்த மகத்தான உயிர்த்தெழுந்த காலையில், அந்த மகத்தான ஈஸ்டரில் சேர்க்கப்படுகிறோம்! அதைக் குறித்த அச்சாரத்தை, நாம் இப்பொழுது நம்முடைய அழிவுள்ள சரீரங்களில் பெற்றுள்ளோம். பரிசுத்த ஆவியானவர் தமக்குச் சொந்தமானவர்களை உரிமை கோரும்போது, உண்மையாகவே முன்குறிக்கப்பட்டவர்கள் முதலில் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 61 இப்பொழுது, ஒரு மகத்தான அறிக்கை உள்ளது, இதை என்னுடைய ஊழியக்கார சகோதரர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க நான் விரும்புகிறேன். பார்த்தீர்களா? ஆதியில், தேவன், மகத்தான ஆவி, அப்பொழுது அவர் “தேவனாய்” கூட இருக்கவில்லை. அவர் நித்தியமானவராயிருந்தார். தேவன் ஒரு “ஆராதனைக்குரிய பொருளாய்” இருக்கிறார். அவரை ஆராதிக்க அவரிடம் ஒன்றுமே இருக்கவில்லை. அங்கே—அங்கே தூதர்கள் இல்லை, ஒன்றுமே இல்லை. தேவன் மாத்திரமே, அவர் மாத்திரமே நித்தியமானவராயிருக்கிறார். ஆனால், தேவனாக இருப்பதற்கு, அவரை ஆராதிக்க ஏதோ ஒன்று இருக்க வேண்டியதாயிருந்தது, எனவே அவர் அவரைத் தொழுதுகொள்ள தூதர்களையும், ஜீவன்களையும், கேருபீன்கள் முதலியவற்றை சிருஷ்டித்தார். அவருடைய மகத்தான திட்டம் வெளிவரத் துவங்கியது.

3362 ஆனால் நினைவிருக்கட்டும், நீங்கள், இந்தக் காலையில், நீங்கள் இருக்கும் நிலை, அப்பொழுது நீங்கள் அவருடைய சிந்தையில் இல்லாமலிருந்தால், இப்பொழுது நீங்கள் இல்லை. ஏனென்றால் உங்களுக்குள்ளாக ஏதோ ஒரு பாகம் உண்டு, அது நித்தியமானது, நித்தியமானது தேவனுக்கு மாத்திரமே சொந்தமானது. இப்பொழுது நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்களோ, அதைக் குறித்த அவருடைய சிந்தனை தேவனுக்குள் இருந்தது. அவருடைய சிந்தையில், நான் இந்தக் காலையில் பிரசங்க பீடத்தில் நின்றேன், ஏனென்றால் அவர் எல்லையற்றவர், எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார். ஆகையால் அவரால் துவக்கத்திலிருந்து முடிவைக் கூற முடிந்தது, ஏனென்றால் அவர் நித்தியமானவராயிருக்கிறார். நீங்கள் ஒரு தேவனுடைய குமாரனாயிருந்தாலும் அல்லது ஒரு தேவனுடைய குமாரத்தியாயிருந்தாலும், அப்பொழுது நீங்கள் ஆதியிலே அவருடைய சிந்தையில் இருந்தீர்கள்.

3463 அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, நீங்கள் பூமியில், ஒரு பாவியாக இங்கே சுற்றி நடந்து கொண்டிருக்கையில், உங்களுடைய ஜீவியத்தில் ஏதோ ஒரு காரியம் உள்ளது. என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் பசியாயிருக்கிறீர்கள். நான் பிரஸ்பிடேரியன் சகோதரன் பேசுவதைக் கேட்டேன்; அங்கே பின்னால் உள்ள பாப்டிஸ்டைக் குறித்து நான் கேட்டேன், அவர் ஒரு சுயாதீன பாப்டிஸ்டாக இருந்து, அவரால் எங்கு முடியுமோ அங்கு பிரசங்கிக்கிறார். என் சக சகோதரனே, அதாவது நீங்கள், உங்களுக்குள்ளாக ஏதோ ஒரு காரியம் உள்ளது, நீங்கள் அங்கே ஒருபோதும் வைக்காத ஏதோ ஒன்று உள்ளது. அது அங்கே இருக்க நீங்கள் வாஞ்சிக்க முடியாத ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. அது உங்களுடைய சொந்த சுபாவத்திற்கு முரணான ஒரு காரியமாய் உள்ளது. அது தேவனுடைய முன்னறிதலினால் சம்பவிக்கிற, தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது.

3564 இயேசுவானவர் இம்மானுவேலாக இருக்க தேவனுடைய குமாரனாகப் பிறந்தார், அது ஒரு மனிதனுக்குள் தேவனுடைய முழு வெளிப்படுத்துதலாகும். அவர் யோர்தான் நதியண்டை, அந்த தீர்க்கதரிசியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது, அவரை பரிபூரண கீழ்ப்படிதலோடு கண்டார். அவர் அவருக்குக் கீழ்ப்படிந்து, ஜலத்தைவிட்டு வெளியே வந்தவுடனே, பரலோகம் யோவானுக்குத் திறக்கப்பட்டது. அப்பொழுது அவன் பரிசுத்த ஆவியானவர் வானத்திலிருந்து இறங்கி வந்து, “இவர் என்னுடைய நேச குமாரன்” என்று கூறுவதைக் கண்டான். பார்த்தீர்களா? பரிபூரண கீழ்ப்படிதல், ஆவியானவர் கீழ்ப்படிதலில், அவரைத் தேடினார். 65 ஓ, வழித்தவறிய மனிதனோ அல்லது ஸ்திரீயோ இந்தக் காலையில், நீங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையில், உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று இது சரியென்று கூறுகிறது, அது பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தேடி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த மணி நேரத்தைக் குறித்த சத்தியத்தைப் பற்றிய அறிவை உங்களுக்குக் கொண்டு வருவதற்காகவே, கடந்து சென்ற ஏதோ ஒரு மணி நேரத்திற்கு அல்ல, இப்பொழுதுள்ள நேரத்தைக் குறித்த அறிவை உங்களுக்குக் கொண்டு வருவதற்காகவே.

3666 ஒரு மணி நேரம் கடந்த செய்திக்கு ஆயிரக்கணக்கானோர் கீழ்படிந்திருந்தனர். ஆனால் ஒரு நிகழ்காலமான வேளையாயிருந்தது, அதுவே இயேசு பிரசன்னமாக வேண்டிய வேளையாயிருந்தது, அங்கே வார்த்தை நின்றது. அங்கே ஜனங்கள் நின்றனர். அது சத்தியமாயிருந்தது என்பதை ரூபகாரப்படுத்தும்படியாக, இங்கே தேவனுடைய வெளிப்படுத்துதல் சம்பவித்துக் கொண்டிருந்தது. 67 பெந்தேகோஸ்தே ஜனங்கள் என்ற முறையில், இன்றைக்கு, நான் இதைக் கூறட்டும், மாம்சமான யாவர் மேலும் தம்முடைய ஆவியை ஊற்றுவதாக தேவன் வாக்குப்பண்ணின இந்த கடைசி நாட்களில் நாம் நின்று கொண்டிருக்கிறோம், அவருடைய குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். ஏனென்றால் அவர், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றார். இது அந்த நேரம். அதுவே உங்களுக்குள்ளே அந்த சிருஷ்டிப்பை உண்டாக்குகிறது.

3768 அண்மையில் நான் இங்கே பேசினபோது, அது ஒரு சிறு அவதூறாகத் தென்பட்டது; ஆனால் இந்தக் காலையில் அது உங்களுக்கு அவ்வாறு இருக்காதுஎன்று நான் நம்புகிறேன். கழுகு முட்டையிட்டிருந்ததில், கழுகை, இல்லை கோழியை அடைகாக்க வைத்த விவசாயி. உங்களில் பலருக்கு வயதான கழுகு ஒரு குஞ்சைப் பிறப்பித்த கதை நினைவிருக்கும் இதற்கு… அல்லது, இங்கே இந்த கோழிக்குஞ்சு பிறந்துள்ளது, இல்லை—இல்லை—இல்லை அதனுடைய கோழி இறகுகளின் கீழ் ஒரு கழுகின் முட்டை இருந்தது. பார்த்தீர்களா? அதுதான் சூழல். 69 பிரஸ்பிடேரியன் சபை, மெத்தோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை, இவைகளில் எவராலும் இந்த கழுகுகளைப் பிறப்பிக்க முடியும். நிச்சயமாக. சூழ்நிலைதான் அதைச் செய்கிறது. டாக்டர். பாஸ்வர்த் வழக்கமாக கூறுவது போல, “நீங்கள் ஒரு கோழி முட்டையை எடுத்து, அதை ஒரு…ஒரு நாய்க்குட்டியின் கீழ் கட்டினால், அது ஒரு குஞ்சு பொரித்து ஒரு கோழியை வெளியே கொண்டுவரும்” என்றார். ஏன்? அது சூழலாகும். எந்த சபையும் அல்லது எந்தக் குழுவும் ஒன்று கூடும்பொழுது, அவர்கள் தங்களுடைய கோட்பாடுகளையும் மற்ற காரியங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, தேவனுடைய முகத்தை நேராக நோக்கிப் பார்க்கும் வரை ஜெபிக்க, அதுவோ நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அது கழுகுகளைப் பிறப்பிக்கும்.

3870 அதைத்தான் இந்த வர்த்தக புருஷர்களின் குழு, சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சித்துள்ளது என்று நான் நினைக்கிறேன். நாமும் மிகவும் பல பிரிவுகளாகிக் கொண்டிருக்கிறோம். ஒன்று இதற்கும் அதற்கும் சொந்தமானது. நாம் சூழ்நிலையை தகர்த்து, ஒரு பரலோக ஆராதனைக்குரிய சூழ்நிலையைப் பெற்றுக் கொள்வோமாக. சூழலை சரிப்படுத்திக் கொள்ளுங்கள், கழுகுகள் பிறக்கும், மற்றும்—மற்றும் எந்த சபையிலிருந்தும், எங்கிருந்துமே. 71 இந்த சிறிய கழுகு நீண்ட நேரம் கோழியோடு நடந்து சென்றது, ஆனால் கொக்கரிப்பது விநோதமாக இருந்தது. கோழியானது முற்றத்தில் குவிந்து கிடக்கும் சாணத்தின் கழிவுகளை கிளறினபோது, அது என்னவென்று அதற்குப் புரியவில்லை. அது அதற்கு ஆகாரமாயிருக்கவில்லை. ஒரு கழுகு புசிக்காத பூச்சிகள் போன்றவற்றை அது புசிக்கிறது. எனவே அது அதற்கு விநோதமாகத் தென்பட்டது. அது ஒரு வினோதமாயிருந்தது; இதை பரிசுத்த குலச்சலாக கூறவில்லை, அவர் ஒரு சுயாதீன பாப்டிஸ்டாக இருக்கலாம், ஆனால் அந்த ஒழுங்கின் பேரிலான ஏதோ ஒருவராக அல்லது ஒரு பிரஸ்பிடேரியனாக இருக்கலாம்.

3972 ஆனால், உங்களுக்குத் தெரியும், ஒரு நாள் அதனுடைய தாயார் அது ஒரு முட்டையிட்டதை அறிந்திருந்தது. எங்கோ ஒரு குஞ்சு இருக்க வேண்டியதாயிருந்தது. எனவே அது தன்னுடைய பெரிய சிறகுகளை காற்றில் விரித்து, அது ஆராய்ந்து, அது தன்னுடைய குரலில் உச்சக்கட்ட சத்தமிட்டுத் தேடினது. ஒரு நாள் அது கொட்டகையைக் கடந்து சென்றது. இந்த சிறிய கழுகு இந்த பழக்கமான சத்தத்தைக் கேட்டபோது, அது அதற்கு முன்பு அதைக் கேட்டதேயில்லை, ஆனால் அது அதனைப் புரிந்து கொண்டதை நன்கு உணர்ந்தது. அது அதனுடைய தாய் என்பதை அது அறிந்திருந்தது. அது அதனுடைய மகன் என்பதை அது அறிந்திருந்தது. அது அதனைத் தேடிக்கொண்டிருந்தது. 73 அவ்வாறே ஒவ்வொரு காலத்திலும், தேவன் தம்முடைய சபையை, அந்தந்த காலத்துக்கான ஒரு செய்தியை நியமித்திருக்கிறார். அவர்கள் சட்டங்களையும், அவர்கள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் உடையவர்களாயிருக்கலாம். ஆனால் அந்த வேளை வரும்போது, தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே அந்த சிந்தையில் இருந்து உரைக்கப்பட்ட அந்த காலத்திற்கான, அந்த முட்டையை ஆவியானவர் தேடுகிறார். அவன் அந்த செய்தியைக் கேட்கும்போது, எந்த சபை ஸ்தாபனமும் அவனைத் தடுத்து நிறுத்துப் போவதில்லை. அது மிக உயரத்திற்கு உயரும். அது உயர வேண்டும். அது ஒரு வித்தியாசமான பறவை. அது ஒரு வித்தியாசமான சிருஷ்டியாகும். அது ஒரு கழுகாயுள்ளது, அது சத்தத்தைக் கேட்கும். “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கும்.” யாரோ ஒருவர், சகோதரர் வில்லியம்ஸ், “ஆட்டு ஆகாரம்” என்று கூறினார். 74 “என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும். அவர்கள் அந்நியனைப் பின்பற்றமாட்டார்கள்.” சபையானது எவ்வளவுதான் உண்மையுள்ளதாய் இருந்து வந்தாலும், அது எவ்வளவு பெரிய பெயரைப் பெற்றிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. “என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும்போது,” அது வார்த்தையாயுள்ளது, “அவைகள் அந்நியனைப் பின்பற்றாது.” அவர்கள் நேராக அந்த வார்த்தைக்கு சென்று, அதைச் செய்ய முடியும். அது ஒரு—ஒரு—ஒரு காந்தம் போன்றது.

4075 ஒரு நாள், இந்தியானாவில், நான் அந்த இரும்பு ஆலைகளுக்கு விஜயம் செய்து கொண்டிருந்தபோது, ஊதல் ஊதப்பட்டது. அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய கச்சைகளை கழற்றிவிட்டு, அவர்களுடைய கடைசலிலிருந்து, தரையின் நடுவில், கொட்டியதை துடைக்கத் தொடங்கினர்… அந்த நாள் முழுவதும் அவர்கள் செய்திருந்த சீவல்களைத் துடைத்தனர். என்னை அழைத்துச் சென்ற மனிதருடன் நான் நடந்து கொண்டிருந்தேன், அப்பொழுது அவர், “இதைக் கவனியுங்கள்” என்றார். எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய—தன்னுடைய பணி நேர ஆடையை மேசையின் மேல்—மேலே வைத்துவிட்டு நடந்து சென்று விட்டனர். 76 பின்னால் உள்ள, ஒரு சிறிய பொத்தானை அவர் தொட்டார். இங்கே ஒரு பெரிய காந்தம் உள்ளே வந்து, அந்தத் துண்டுகளிலிருந்து வெட்டப்பட்ட அந்த இரும்பின் ஒவ்வொரு துண்டையும் அது இப்போது எடுத்துக்கொண்டு வெளியே சென்றது. அது அந்த காந்த சக்தியை இழந்த போது; அது ஒரு ஏரிகலனுக்குள் விழுந்தது. மற்றொரு துண்டுக்காக—பொருட்கள், அதே பொருள், அச்சுகள் அல்லது அவர்கள் கட்டிய எதுவாக இருந்தாலும் உருக்கப்பட்டது. 77 நான் அங்கே நின்று அதை நோக்கிப் பார்த்தேன், நான்—நான் என்னையே மறந்துவிட்டேன். நான், “நான் ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றேன். அவர், “ஐயா, அது என்ன?” என்று கேட்டார். மேலும் நான், “அதில் சில மேலே செல்லவில்லை என்பதை நான் கவனிக்கிறேன்” என்றேன். 78 மேலும் அவர், “அது அலுமினியம், அலுமினியத்தை காந்த சக்தி இழுக்கும்படி காந்தமாக்கப்படவில்லை” என்றார். 79 நான், “நான் காண்கிறேன்” என்றேன். அவர் கூறினார்…அப்பொழுது நான், “பாருங்கள், நீங்கள் கவனியுங்கள், அங்கே ஒரு இரும்புத் துண்டு குறுக்கே கிடக்கிறது” என்றேன். “ஆனால், நீங்கள் பாருங்கள், ஐயா, அது திருகுமறைப்போடப்பட்டிருந்தது.” 80 நான், “நான் காண்கிறேன்” என்றேன். அவர் அதை வெளியே எடுத்தபோது, நான், “அது அங்கே இப்பொழுது என்ன நடக்கிறது?” என்று கேட்டேன். 81 அது, “அது நேராக மீண்டும் அரைக்கும் இயந்திரத்திற்குள்ளாகச் சென்று, எரிகலன் வழியாக ஊற்றப்பட்டு, திரும்பி வந்து மற்றொரு சக்கரத்தை செய்கிறது” என்று கூறுகின்றனர். நான், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்றேன், அதுதான். பார்த்தீர்களா?

4182 தேவன் ஒரு நாள் அவருடைய விரல்களைத் தொடும்படியாக வானத்தில் ஒரு பெரிய காந்தம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் வரும் நேரம் எந்த மனிதனுக்கும் தெரியாது, பரலோகத்தின் தூதர்களுக்கும் கூட தெரியாது. தேவன் மாத்திரமே அறிந்திருக்கிறார். ஆனால் வேதாகமத்திலிருந்து சில துணுக்குகள் வந்துள்ளன, வேதாகம கிறிஸ்தவர்களே, இந்த வேளைக்கான விசுவாசிகளே. அவைகளில் ஒன்று வேறொரு நாளில் இருந்த ஒரு அச்சாக இருந்திருக்கலாம். இது வேறு பாகமாக இருக்கலாம். அது தேவனுடைய பெரிய ஆட்சியை உண்டாக்கப் போகிறது. ஆனால் அது தேவனுடைய மகத்தான எரிகலன் என்னும் பானையில் வார்ப்பிக்கப்பட்டு, மீண்டும் தேவனுடைய சாயல்களுக்குள்ளாக ஊற்றப்படும். அந்த காந்த சக்தி வாய்ந்தவர்கள் மேலே எடுத்துக் கொள்ளப்படுவார்கள். ஓ, எப்படி…உயிர்த்தெழுதலில் நம்மைப் பொறுத்தமட்டில் ஏதோ ஒன்று உள்ளது என்பதை அறிந்துகொள்வது என்ன ஒரு சிலாக்கியமாய் உள்ளது!

4283 இப்பொழுது, கவனியுங்கள், தேவனுடைய வார்த்தையின் அழைப்பை அடையாளம் கண்டுகொள்ளுங்கள், அவன் ஒரு பாகமாக இருக்கிறான். அது ஒரு கழுகிற்கு ஒரு கழுகாய் உள்ளது. இப்பொழுது, அந்த தாய் ஒரு பருந்தைப் போல் சத்தமிட்டிருந்தால், அது அதை ஒருபோதும் அறிந்திருந்திருக்கமாட்டாது. அது அந்த களஞ்சியத்தில் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் அது ஒரு கழுகின் சத்தமாய் இருந்தது. அந்த குட்டி நபரின் உட்புறத்தில் ஏதோ ஒன்று இருந்தது, அது ஒரு கழுகு என்பதை அது அறிந்திருந்தது. 84 அதேக் காரியம் ஒவ்வொரு உண்மையான விசுவாசியோடும் உள்ளது. தேவனுடைய வார்த்தையின் பிரசங்கம் புறப்பட்டு வந்து, அது இந்த மணி நேரத்திற்கான தேவனுடைய வார்த்தை என்று நிரூபிக்கப்பட்டு, ரூபகாரப்படுத்தப்படுகிறது, அப்பொழுது விசுவாசிக்குள்ளாக ஏதோ ஒன்று உள்ளது. அவருடைய தகப்பனார் ஒரு சபைக்கு எவ்வளவு உண்மையுள்ளவராயிருந்தார், அல்லது அவருடைய தாயார் அல்லது அவருடைய பாட்டனார் பாட்டி எவ்வளவு உண்மையுள்ளவராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அந்த சபையானது பரிசுத்த ஆவியின் செய்தியின் இந்த வேளையில் முரண்பாடாக போதித்துக் கொண்டிருந்தால். அதற்குள் ஏதோ ஒன்று சத்தமிடுகிறது. அது களஞ்சியத்தை விட்டுச் சென்றுவிடும். அது அதைச் செய்ய வேண்டும். கோழி ஒரு நாள் சரியாக இருந்திருக்கலாம், ஆனால் இது கழுகின் நேரம். பார்த்தீர்களா? அது—அது ஒரு வித்தியாசமானது. ஏதோ ஒன்று உண்டு, அதாவது, அவன் அந்த பழைய கூண்டை விட்டு, நீல நிற ஆகாயத்திற்குத்திற்குள்ளாக பறந்து செல்ல வேண்டும். அதன்பின்னர் இந்த பூமிக்குரிய சரீரம் உயிர்ப்பிக்கும் ஆவியினால் தேவனுடைய வார்த்தையின் கீழ்ப்படிதலினால் உயிர்ப்பிக்கப்பட்டு, கொண்டுவரப்படுகிறது.

4385 இப்பொழுது, இந்த பரிசுத்த ஆவியானவர் கழுகைப் போன்று சுட்டிக்காட்டப்பட்டு, தேசத்தின் மேல் பறந்து, விசுவாசியைக் கண்டறியும்போது, “அவர் விரும்பினால் ஒழிய எந்த மனிதனும் என்னிடத்தில் வர முடியாது, எந்த மனிதனும் என்னிடத்தில் வர முடியாது, பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், ஆனாலும் ஒருவனும் சுயமாய் வரமாட்டான்,” அது உங்களுடைய சொந்த சிந்தனையல்ல, உங்களுடைய சொந்த சேர்த்துக் கொள்ளுதல் அல்ல, அது தேவன், சேர்த்துக் கொள்ளுதல். பார்த்தீர்களா? “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.”

4486 இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இங்கே பூமியின் மேல் இருந்து, இந்தக் காலத்தின் ஜீவனுக்கென்று தேவன் நியமித்திருக்கிற அந்த தனிப்பட்ட நபர்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அது அதைக் கண்டறிந்தவுடனே, அது நம் எல்லோரையும் மீட்டுக்கொண்ட மகத்தான உன்னத தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் செய்தது போலவே செய்கிறது. அது இறங்கி வந்து, மானிட ஜீவியத்திற்குள் அதனுடைய வாசஸ்தலத்தை எடுத்துக் கொள்கிறது, இப்பொழுது, உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்டு வருகிறது என்பதை, கவனியுங்கள். இப்பொழுது, இயேசுவின் மேல் வந்த அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அந்த நாளின் வார்த்தையின் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் வெளிப்படுத்த அவரை உயிர்ப்பித்தது. இந்த நாளில் நம்மேல் வந்துள்ள பரிசுத்த ஆவியானவரும் அவ்வாறே செய்கிறார், அது ஒரு பரியாசம் செய்யும் பரிசுத்த ஆவியாக இல்லாமலிருந்தால், அது பரிசுத்த ஆவியை பரியாசம் செய்கிற பிசாசாய் இல்லாவிட்டால், அது உண்மையான, உண்மையான பரிசுத்த ஆவியாக இருக்கிறது. அது இந்த வேளையின் வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்தும். 87 அது லூத்தரின் மேல் விழுந்தபோது, அது அந்த நேரத்தின் வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்தினது. அது வெஸ்லியின் மேல் விழுந்தபோது, அது அந்த நேரத்தின் வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்தினது. அது இந்நாளில் விழும்போது, அது இந்த மணி நேரத்தின் வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்துகிறது. அது மோசேயின் மேல் விழுந்தபோது, அது அந்த நேரத்தின் வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்தினது. நோவாவின் மேல் விழுந்தது, அது அந்த நேரத்தின் வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்தினது. அது இயேசுவின் மேல் விழுந்தபோது, அது அந்த நேரத்தின் வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்தினது. பார்த்தீர்களா?

4588 அது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்து, உயிர்ப்பித்து, எடுத்துக்கொள்ளப்படுதலில் இருக்கும்படி தேவனால் முன்குறிக்கப்பட்ட அந்த ஜனங்களை உயிரடையச் செய்யும். கவனியுங்கள். அதாவது, அது ஒரு உண்மையான கழுகாயிருந்தால், அது ஒரு உண்மையான கழுகாயிருக்குமானால், அது அந்த மணி நேரத்தின் செய்தியைப் புரிந்து கொள்ளும். இப்பொழுது, அந்த சிறிய கழுகு அநேகமாக, அந்த கொட்டகையின் முற்றத்தில் சரியாக புசித்துக் கொண்டிருந்தது, ஆனால் அது முற்றிலும் சரியானதல்ல என்பதை அது—அது அறிந்திருந்தது. ஆனால் அதன்பின்னர் அவன் சத்தியத்தைக் கேட்டபோது, அப்பொழுது அவன் இந்த சத்தியத்தைப் பெற்றுக்கொண்டான். இப்பொழுது, யோவான் 14-ல்… 89 யோவான் 5:24, சரியாகக் கூறினால், இயேசு இந்தவிதமாகப் பேசி, “என் வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான், அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்” என்றார். “விசுவாசிக்கிறவன்” என்பது எவ்வளவு எளிமையானது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது, அதைக் கூறுவதற்கான சரியான வழி, “புரிந்து கொள்கிறவன்” என்பதாகும்.

4690 இப்பொழுது, நீங்கள் இங்கே வீதியில் சென்று, இந்த விபச்சாரியிடம், “நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேளுங்கள். “நிச்சயமாக” என்பாள். “அவர் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேளுங்கள். “நிச்சயமாக.” என்பாள். “ஞானஸ்நானம் பெற்றீர்களா?” என்று கேளுங்கள். “நிச்சயமாக.” என்பாள். 91 குடிகாரனிடம் சென்று, “நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? அந்த போதகர் பிரசங்கிப்பதைக் கேட்டீர்களா?” என்று கேளுங்கள். “ஆம்” என்பான். “நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேளுங்கள். “நிச்சயமாக” என்பான். பார்த்தீர்களா?

4792 ஆனால், “புரிந்து கொள்கிறவன், இந்த வேளையில், தன்னுடைய ஸ்தானத்தை அறிந்திருக்கிறவன், என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு” (நிகழ்காலம்) “நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” அப்படியானால் இந்த புதிய நித்திய ஜீவன் உங்களுக்குள் வாசம் பண்ணும்போது, அது நீங்கள் அழிவிலிருந்து அழியாமைக்கு உயிர்ப்பிக்கப்படுவதன் மறைவான வல்லமையாய் அல்லது அச்சாரமாயுள்ளது. 93 நான் அதை மீண்டும் கூறட்டும். இந்த ஆவியானவர் உங்களை, தனிப்பட்ட நபராக, கண்டறிந்து, உங்கள் மேல் வந்து, அது தேவன் உங்களைக் குறித்து சிந்தித்த உங்களுடைய நித்திய சுதந்தரத்தின் சாத்தியமாயுள்ளது உலகத்தோற்றத்திற்கு முன்னே உங்களுக்காக உண்டாக்கினார். அதுதான் உங்களுடைய மறைவான வல்லமை. 94 நீங்கள் என்னிடம் ஒரு கருவேல மரத்தைக் கேட்டால், நான் உங்களுக்கு ஒரு கருவாலிக் கொட்டையை கொடுப்பது போன்றதாகும். இப்பொழுது, கருவேல மரத்திற்கான ஜீவன் கருவாலிக் கொட்டையில் உள்ளது, ஆனால் அது வளரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

4895 நாமும் அவ்வாறே செய்கிறோம். நீங்கள் தேவனுடைய பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது, அது உங்கள் மீது காத்திருக்கும் தேவனுடைய வல்லமையாயுள்ளது, அது உங்களை ஏற்கனவே அடையாளங் கண்டுகொண்டுள்ளது. நீங்கள் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் ஆவியினால் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் கல்வாரியை நோக்கிப் பார்த்து, இயேசு மரித்துக் கொண்டிருப்பதைக் கண்டபோது, அவர் மாத்திரமல்ல… அவர் சரீரமாகிய தம்முடைய மணவாட்டிக்காக மரித்தார், அது வார்த்தை சபையாயுள்ளது, அந்த காலத்திற்கான தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிற சபை, அது பாதம், சரீரம், தலை அல்லது அது எங்கிருந்தாலும் சரி. பார்த்தீர்களா? அது…கிறிஸ்து இரத்தம் வடிந்து மரித்துக் கொண்டிருந்தார். தேவன் அவரை நோக்கிப் பார்த்து, அவருடைய உயிர்த்தெழுதலைக் கண்டார், சபையானது அவரோடு ஈஸ்டரில் எழுப்பப்பட்டதைக் கண்டார். 96 இப்பொழுது, இவை யாவற்றையும் நீங்கள் ஒன்று சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் கர்த்தருக்கு சித்தமானால், நான் இங்கே ஒரு காரியத்தைக் கூற விரும்புகிறேன்.

4997 இப்பொழுது கவனியுங்கள். அது அச்சாரம் அல்லது மறைவான வல்லமையாயுள்ளது. உங்களுடைய உயிர்த்தெழுதலின் உயிர்ப்பிக்கும் வல்லமை, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது, அப்பொழுது அதனுடைய மறைவான வல்லமை, உங்களுக்குள் வாசம் செய்கிறது. 98 கவனியுங்கள், நீங்கள்—நீங்கள் இப்பொழுது உங்களுடைய வழியில், முழு உயிர்த்தெழுதலுக்கு வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள். எந்த மரமும் ஒரே இரவில் வளராது. நாம் தேவனுடைய கிருபையிலும், அறிவிலும் வளர்வது போல, அது வளர வேண்டும். நீங்கள் பரிசுத்த ஆவிக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது, பெந்தேகோஸ்தே சபையானது பரிசுத்த ஆவிக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டபோது, அது வளரத் துவங்குகிறது. கிளைகள் மரித்துவிட்டன. அவர்கள் அவைகளை வெட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் மரம் இன்னமும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது, இன்னமும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது, ஏனென்றால் அது உயிர்த்தெழுதலுக்கு வரவேண்டும். 99 விசுவாசிகளாகிய உங்களுக்கு வார்த்தையை உயிர்ப்பிக்க அவர்கள் ஆவியினால் வழிநடத்தப்படுகின்றனர். நீங்கள் முதலாம் கிளைக்கு, இரண்டாம் கிளைக்கு, மூன்றாம் கிளைக்கு, வரும்போது, வார்த்தை தொடர்ந்து உயிர்ப்பிக்கிறது. அது தொடர்ந்து உயிர்ப்பிக்கிறது. தேவனுடைய ஆவியானவர் தொடர்ந்து உங்களுக்கு உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

50100 கவனியுங்கள், பெந்தேகோஸ்தே, அவர்களுடைய சரீரங்கள் அவர்கள் பெற்றுக்கொண்ட புதிய ஜீவனால் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தன. அது என்னை பக்தி பரவசப்படுத்துகிறது. சிந்தியுங்கள். இப்பொழுது, இங்கே மனிதர்கள், மீனவர்கள், வரி வசூலிப்பவர்கள், அடக்கமான சிறிய பெண்கள்…மற்றும் சாதாரண இல்லத்தரசிகள், சிறிய கன்னிப் பெண்கள். அவர்கள் விசுவாசிகளாயிருந்தனர். இது சத்தியம் என்று அவர்கள் விசுவாசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அதை விசுவாசித்தனர் இயேசு மரித்தபோது (அவர்கள் அவரை விசுவாசித்தனர்.) மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அது தேவனுடைய முற்றிலுமான சாட்சியாக இருக்க வேண்டும் என்றும், அவர் அவரை ஜீவனண்டை உயிர்ப்பித்திருந்தார் என்றும் அவர்கள் விசுவாசித்தனர். 101 இப்பொழுது, அவர்கள் தங்களுடைய உரிமைப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள, பெந்தெகொஸ்தே நாளுக்குச் செல்கிறார்கள். உரிமைப் பத்திரம் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு பத்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது. அவர்கள் தங்கள் உரிமைப் பத்திரத்தைப் பெற அங்கு மேலே சென்றனர். அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டனர், அல்லது என்ன ஒரு சிலிர்ப்பு! அவர்கள் அந்த நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தனர்; அவர்களுக்காக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். 102 அது உண்மையா அல்லது இல்லையா? “அவர் எழும்பினதை நாம் கண்டோம், ஆனால் இப்பொழுது நம்மைக் குறித்து என்ன? நாம் சாட்சிகளாயிருக்கிறோம். நாங்கள் நின்று சிலுவையில் அறையப்பட்ட மனிதனைக் கண்டோம். மேகங்கள் பூமியின் மேல் வந்து வானத்தை இருட்டாக்கிவிட்டதை நாம் கண்டோம். அப்பொழுது பூமியானது நடுங்கி அசைந்தது; அது நரம்பு தளர்ச்சியைக் கொண்டிருந்தது. அப்பொழுது…அவர்கள் அவரை கல்லறையில் வைத்தனர். அவர்கள் அவருடைய இருதயத்தில் ஈட்டியால் குத்தி, அவர்கள் அவருடைய சரீரத்தை எடுத்து, அதை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் கல்லறையில் வைத்தார்கள்.” 103 அதன்பின்னர் மூன்றாம் நாள் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்பதை அவர்கள் கண்டறிகின்றனர். சீஷன் கூறியது போல, “நாங்கள் இதற்கு சாட்சிகளாயிருக்கிறோம். அவர் எழும்பினதை நாங்கள் கண்டோம். அவர் உயிரோடிருக்கிறார் என்று நாங்கள் அறிவோம்.”

51104 இப்பொழுது அது என்ன செய்தது? அது எல்லா பயத்தையும் எடுத்துப் போட்டது. இயேசு, “பயப்படாதே. நான் மரித்தேன், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்றார். பார்த்தீர்களா? அவர்கள் அதைச் செய்தபோது, அது எல்லா பயத்தையும் எடுத்துப்போட்டது. 105 இப்பொழுது, ஆனால் அவர்கள் பெந்தெகொஸ்தே வரை சென்றபோது, அங்கே அவர்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையை, அவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுக் கொண்டனர். 106 இப்பொழுது அங்குதான் நான் நினைக்கிறேன், நீங்கள் பிரஸ்பிடேரியன் மற்றும் மெத்தோடிஸ்டு சகோதரர்களே, நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் விசுவாசிப்பதனால் மறைவான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் உரிமை பத்திரமானது இன்னும் வரவில்லை. அதுவே பத்திரத்தின் உறுதிப்படுத்துதலாயுள்ளது.

52107 தேவன் ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆனால் அவர் விருத்தசேதனத்தின் முத்திரையினால் உடன்படிக்கையை முத்தரித்தார். 108 தேவன் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளிக்கிறார், மறைவான வல்லமையாக, நீங்கள் அதை பெற்றுக்கொள்வீர்கள், நீங்கள் உயிரோடெழுப்பப்படப் போகிறீர்கள், இந்த சரீரம் முடிவு காலத்தில் அவரோடு மகிமைப்படுத்தப்படப்போகிறது. ஆனால், நீங்கள் பாருங்கள், நீங்கள் அந்தப் பத்திரத்தின் பேரில் அனுமதி பெற வேண்டும். அதற்கெதிரான ஒவ்வொரு காரியமும் அகற்றப்பட்டு, நீங்கள் அதனோடு உள்ள உரிமைப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதே தெளிவுபடுத்துதலாகும். நீங்கள் அந்த முத்திரையைப் பெற்றுள்ளீர்கள். அது உங்களுடையது. அதில் உள்ள ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு சொந்தமானது. ஆமென். 109 நாம் நம்முடைய இரட்சகரான இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, அவரை விசுவாசிக்க வரும்போது; தேவன் நம்முடைய மனந்திரும்புதலையும், அவரை நோக்கிய நம்முடைய விசுவாசத்தையும் அடையாளம் கண்டுகொண்டு, உரிமைப் பத்திரத்தை அனுப்புகிறார். உரிமைப் பத்திரமானது உறுதியாய் உள்ளது. அது உங்களுக்கு எதிராக இருந்த யாவும், நீங்கள் முற்றிலுமாக மனந்திரும்பினீர்கள் என்பதற்கு அது உத்தரவாதமாயுள்ளது. அல்லேலூயா! சொத்துக்கள் கிரயத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன, நீங்கள் உறுதியை ஆதாரமாக வைத்திருங்கள்.

53110 நீங்கள் உங்களுடைய கரத்தில் உள்ள உரிமை பத்திரம் இருக்கும் போது, யாராகிலும் ஒருவன், உங்களை நிலத்திலிருந்து விலக்க, அது அவனுக்கு சொந்தமானது என்று கூறி முயற்சிக்கட்டும். அவன் அதைச் செய்ய முயற்சிக்கட்டும். தேசத்தில் ஒரு பிரமாணமும் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் நீங்கள் உரிமை பத்திரத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். 111 எந்த பிசாசும், எந்த சபையும், அல்லது எந்த வேத சாஸ்திரமும் தேவனுடைய அத்தாட்சி மற்றும் உரிமைப் பத்திரத்தின் எல்லைகளை மீற முடியாது, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நம்மை இயேசு கிறிஸ்துவில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளதை. அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் உயிர்த்தெழுவது உறுதி, ஏனென்றால் நாம் ஏற்கனவே அவருக்குள் எழும்பியிருக்கிறோம். ஆமென். 112 பழைய காரியங்கள்…அது அழிவுள்ள நம்முடைய சரீரங்களுக்கு என்ன செய்கிறது? அது நம்முடைய கருத்தை மாற்றி, நம்முடைய கருத்துக்களை மாற்றுகிறது. அது மேலான காரியங்களின் மேல் நம்முடைய பாசங்களை வைக்கிறது. புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல், நீங்கள் வழக்கமாக செய்து கொண்டிருந்த காரியங்கள் மரித்துவிட்டன. அது உங்களுக்கு கீழே உள்ளது.

54113 நீங்கள் உயிர்ப்பிக்கப்படுகிறீர்கள். இந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களுடைய சரீரத்தை ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு நிலைக்கு கொண்டு வருகிறது. அங்கே பெந்தேகோஸ்தே ஜனங்கள் பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டபோது, அவர்களைக் கவனியுங்கள். எனக்கு செவிகொடுங்கள். பெந்தேகோஸ்தே நாளன்று, அந்த பெந்தேகோஸ்தே குழுவினர் தங்களுடைய உரிமைப் பத்திரத்தை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டபோது, நிச்சயமாக, அது அவர்களுடைய ஆத்துமாக்களை மகிமைப்படுத்தியது. அவர்கள் கூச்சலிட்டனர். அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அக்கினிமயமான நாவுகள் பிரிந்து அமர்வதை அவர்கள் கண்டனர். அவர்களால் இனி ஒரு பூமிக்குரிய பாஷையில் கூட பேச முடியாதபடிக்கு, அது அவர்களுடைய சரீரத்தை அவ்வளவாய் உயிர்ப்பித்தது. அது அவர்களுடைய சரீரத்தை ஒரு பரலோக பாஷைக்கு, அவர்கள் போகப் போகும் இடத்திற்கு உயிர்ப்பித்தது. அவர்களுடைய அழிவுள்ள பாஷை முழுவதும் மறுரூபமாக்கப்பட்டு, அழியாமையுள்ள பாஷையாக மறுரூபமாக்கப்படுமளவிற்கு உயிர்ப்பிக்கும் தேவனுடைய வல்லமை அழிவுள்ள அவர்களுடைய சரீரங்களை அசைத்தது. என்னே ஒரு உயிர்ப்பிக்கும் வல்லமை! என்ன? சொந்தமான ஒன்று. 114 “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானது சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களில் வாசமாயிருந்தால், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிக்கும்.” அப்பொழுது நாம் ஜீவனுள்ள தேவனுடைய வல்லமையினால் உயிர்ப்பிக்கப்படுகிறோம். 115 அந்நிய பாஷைகள், அவர்களிடத்தில் பேசும்படி, ஒரு நவமான பரலோக பாஷைக்கு உயிர்ப்பிக்கப்பட்டன; ஒரு எடுத்துக் கொள்ளப்படுதலில், அவர்கள் எப்பொழுதும் ஜீவித்திருந்ததைக் காட்டிலும் ஒரு வித்தியாசமான சூழ்நிலைக்குள்ளாக எழும்பினர். மேலும், அவர்களுக்குள்ளாக வந்த, புதிய உயிர்ப்பிக்கும் ஜீவனோடு, அது அவர்களுடைய பாஷையை உயிர்ப்பித்தது. அவர்கள் நவமான பாஷைகளில் பேசினர். ஓ, ஆம்!

55116 இப்பொழுது அவைகளைக் கவனியுங்கள். இந்த உரிமைப் பத்திரத்திற்கு பிறகு, அது அவர்களுக்கு அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, அந்த அடிப்படையில் இருந்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அவர்களுக்கு அளிக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாக்குத்தத்தமும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில், வேதாகமத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்தது, அந்த வாக்குத்தத்தத்தை உயிர்ப்பிக்கும்படியான, உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. ஆகையால் அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் சுகமடைந்தனர். அவர்கள் நவமான பாஷைகளில் பேசினர். அவர்கள் மகத்தான அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தனர், ஏனென்றால் அது தேவனுடைய வாக்குத்தத்தத்தில் இருந்தது. இயேசுவானவர் மரித்தபோது, தேவனுடைய புத்திரருக்கு சொந்தமான அந்த நிலத்தை, அவர்களுக்கு திரும்ப மீட்கும்படியாக, தேவன் என்னவாயிருந்தார் என்பதை அவர் நிரூபித்துக் காண்பித்தார். 117 அதை சமூகமயமாக்கி, அதை ஒரு ஸ்தாபனமாக வைக்க நமக்கு எவ்வளவு தைரியம்? அதைச் செய்ய நமக்கு எந்த உரிமையும் கிடையாது.

56118 பரிசுத்த ஆவியானவர், இன்றைக்கு, அந்த செய்தியை விசுவாசிக்கும் உத்தம இருதயங்களை தேடிக் கொண்டிருக்கிறார். வேதத்தில் உள்ள ஒவ்வொரு காரியமும், அந்த விசுவாசிக்கு, வாக்களிக்கப்பட்டிருந்தது. நீங்கள் அதை அதனுடைய பரிபூரணத்தில் ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் அதைச் செய்வீர்கள் என்று தேவன் அறிந்திருக்கிறார், அவர் உங்களுக்கு அதற்கான உரிமைப் பத்திரத்தை அளிக்கிறார். அப்படியானால் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் உங்களுடைய உடைமையில் உள்ளது, பரிசுத்த ஆவியானவர் அதை உங்களுக்கு உயிர்ப்பிக்க இருக்கிறார். ஓ, என்னே! நாம் என்ன—எப்படிப்பட்ட ஜனங்களாக இருக்க வேண்டும்? தேவனுடைய மகத்தான பரிசுத்த ஆவியானவர் இங்கே அந்த வல்லமையை செய்யக் காண்பது எவ்வளவு அற்புதமானது! அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர்தாமே இங்கே இந்த மணி நேரத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதை அங்கிருந்து துடைத்தழிக்க ஒரு மனிதனுக்கு எவ்வளவு தைரியம்?

57119 “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்,” யோவான் 14:12. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” அதுதான் உறுதி. ஒரு கூட்ட ஜனங்கள் ஒன்று சேர்ந்து அமர்ந்து, அந்த அடையாளங்கள் தங்களை வெளிப்படுத்துவதை நாம் காணும்போது, அது தேவனுடைய உடைமையாயிருக்கிறது என்பதை ரூபகாரப்படுத்தவே அந்த உரிமைப் பத்திரம் அங்குள்ளது என்ற உறுதியாயுள்ளது. ஆமென். 120 எனவே நாமும் கூட, ஈஸ்டராக இருக்கிறோம். ஆமென். நாம் இப்பொழுது நம்முடைய ஈஸ்டரில் இருக்கிறோம். நாம் ஏற்கனவே, அல்லேலூயா, உலகத்தின் காரியங்களிலிருந்து, தேவனுடைய வாக்குத்தத்தத்தின் காரியங்களுக்கு எழும்பியிருக்கிறோம். நாம் எழும்புவோம் என்றல்ல; நாம் எழும்பியிருக்கிறோம். அது மறைவான வல்லமைகள்.

58121 அது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. கடைசி நாட்களில் அவர் தம்முடைய ஆவியை ஊற்றுவார், அதைத்தான் அவர்கள் செய்வார்கள். கவனியுங்கள், வியாதியஸ்தர் மேல் தங்களுடைய கரங்களை வைத்தனர்; தேவனுடைய வாக்குத்தத்தத்திலிருந்த ஒவ்வொரு காரியமும். “கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன். உங்கள் வயோதிகர் சொப்பனங்களைக் காண்பார்கள். உங்களுடைய வாலிபர் தரிசனங்களைக் காண்பார்கள்” என்றார். அவர் அளித்துள்ள இந்த வித்தியாசமான வாக்குத்தத்தங்கள் யாவும், ஒவ்வொரு காரியமும் சரியாக அங்கே தேவனுடைய வாக்குத்தத்தத்தில் அடங்கியுள்ளது. இயேசு அதை நமக்கு மீட்டுக் கொடுத்தார். நாம் மாறும்போது… 122 அல்லது, நாம், நாம் அந்தத் தளத்தில் நியமிக்கப்பட்டிருந்தால், நாம் அந்தத் தளத்தில் இருக்க நியமிக்கப்பட்டிருந்தால்; கோழிக் கூட்டில் நடக்கும் கழுகைப் போல. நீங்கள் அந்த இடத்தில் நியமிக்கப்பட்டிருந்தால், உங்களைக் கண்டறிய பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். அது உங்களை கண்டறியும்போது, நீங்கள் அதனுடைய அழைப்பை அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தை நீங்கள் அறிவீர்கள். இந்தக் காரியங்கள் சம்பவிக்க வேண்டியவை என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதை சந்திக்கும்படி துரிதமாக எடுத்துக்கொள்ளப்படுகிறீர்கள், இப்பொழுது நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஓ, என்னே ஒரு வாக்குத்தத்தம்! என்னே ஒரு பரலோகப் பிதா, அவர் இந்த காரியங்களை நமக்கு அருளுவார்!

59123 அவர்கள் அந்நாளில் மரித்தோரை உயிரோடெழுப்பும்படியாக ஆவியானவர் தேவனோடுள்ள அவர்களுடைய ஐக்கியத்தை உயிர்ப்பிக்கிறார். அவர்கள் தங்களுடைய சரீரங்களை மரித்தோர் மீது கிடத்தினார்கள்; அவர்கள் உயிரடைந்தனர். கூர்ந்து கவனியுங்கள். இயேசு செய்த அதேக் காரியங்களை அவர்களும் செய்தனர், ஏனென்றால் அவர் மேல் தங்கியிருந்த அதே ஆவியானவர், அவர்கள் மேல் இருந்தார். ஒரு ஆவி ஒரு மனிதனை இந்தவிதமாக செயல்படச் செய்தால், அது மற்றொன்றையும் அந்தவிதமாக செயல்படச் செய்கிறது. ஒன்று… 124 அவன் தேவனுடைய ஆவியைப் பெற்றிருப்பதாகக் கூறி, தேவனுடைய கிரியைகளை மறுதலிக்கிறபோது, இது எப்படி நிகழ முடியும்? அதைச் செய்ய முடியாது.

60125 கவனியுங்கள். தேவனுடைய ஜீவன், அது கிரேக்க மொழியில் ஸோயீ என்று அழைக்கப்பட்டு, அவைகளினூடாகவும், அவர்களுக்குள்ளும் அசைவாடுகிறது, அவர்களுடைய சிந்தைகளை அவருடைய வார்த்தைக்கு உயிர்ப்பித்தனர். இப்பொழுது, நான் அதை இப்பொழுது உண்மையாகவே அமைதியாகக் கூறட்டும். ஜனங்களின் மத்தியில் அசைவாடும் தேவனுடைய ஆவியானது, தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு அந்த நபரின் சிந்தையை உயிர்ப்பிக்கிறது. பார்த்தீர்களா? அது அதைச் செய்கிறது. பாருங்கள். நான் உங்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்…மேலும் நான் இப்பொழுது சபையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் உணர வேண்டும், அவருக்குள், ஜீவனுக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. 126 இருப்பினும், அவைகள் துவக்கத்தில், அவருடைய தன்மைகளாக மாத்திரமே இருந்தன. ஆனால் தேவன், “ இந்த நாளிலே,” துவக்கத்தில், “ஜான் டோ என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான்” என்று கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். இப்பொழுது, ஜான் டோ பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய்களைப் பேசுகிறவனாக உலகத்திற்கு வந்தான், ஏனென்றால் அவன் ஒரு சாவுக்கேதுவானவனாயிருக்கிறான். ஆனால், ஒருக்கால், அவன் ஒரு சிறு பக்தியான உணர்வைப் பெறலாம். அவன் ஒரு சபைக்குச் சென்று சேர்ந்து கொள்வான். அவன் ஒருக்கால் பெந்தேகோஸ்தே சபையில் சேர்ந்துகொள்ளலாம். தெரியாது. அவன் எந்தக் காரியத்திலும் சேரலாம். ஆனால் அவன் ஒருமுறை தேவனுடைய சூழ்நிலையின் கீழ் வரட்டும். பார்த்தீர்களா? கழுகு தாய் யாரென்பதை அடையாளம் கண்டது போல, ஜான் டோ தன்னுடைய பிதா யார் என்பதை அடையாளங்கண்டு கொள்ள வேண்டியவனாயிருக்கிறான். அது அதை உணர வேண்டும். பார்த்தீர்களா? அந்த ஜான் டோ மாத்திரமே, தேவனுடைய தன்மையாயிருக்கிறான், அது ஒரு வார்த்தையாகி, உரைக்கப்பட்டிருக்க, அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையைத் தேடுகிறார். இதோ அது உள்ளது. அவர் அவனை அழைத்து, அவனுக்கு நித்திய ஜீவனை அளித்து, தேவனுடைய வார்த்தையாகிய தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக அவனைக் கொண்டு வருகிறார்.

61127 பாருங்கள். தேவன் இயேசுவைக் கண்டபோதும் அதையேக் கொண்டிருந்தார். அது—அது இயேசுவோடு தேவன் செய்து முடித்த கிரியையாய் இருந்தது, அவர், “அது முடிவுற்றுவிட்டது” என்று கூறினார். எல்லா திட்டமும் முடிவுற்றது. 128 தேவனுடைய ஆவி உங்கள் மேல் வரும்போது, நீங்கள் உண்மையாகவே அவர் உரைத்த தேவனுடைய தன்மைகளில் ஒன்றாக இருக்கிறீர்கள்… இப்பொழுது, நீங்கள் அவ்வாறில்லையென்றால், நீங்கள் புரிந்து கொள்ளாமல், குழப்பமடைந்து, இங்கும் அங்கும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்வீர்கள், ஆனால் சத்தியத்தை அறியும் அறிவிற்கு ஒருபோதும் வரமாட்டார்கள். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவராயிருந்தால், அந்த பழைய காரியங்கள் சீக்கிரத்தில் கடந்து போகின்றன, பாருங்கள், நீங்கள் புதியவர்களாகி, இரட்சிப்பின் திட்டம் நிறைவேறிற்று. தேவன் உங்களைக் குறித்து எப்பொழுதும் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்கள் கீழ்ப்படிய ஆயத்தமாயிருக்கிறீர்கள், பாருங்கள், நீங்கள் கீழ்படிய வேண்டும். நீங்கள் அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்திருக்கிறீர்கள். ஒப்பந்தம், சரியாக, ஒப்பந்தத்தின் சாரம்சம், உரிமைப் பத்திரம் உங்களுக்கு சொந்தமானது. கடன்கள் யாவும் செலுத்தப்பட்டுவிட்டன. பெந்தெகொஸ்தே நாளில் இருந்தவிதமாகவே அது அழிக்கப்பட்டுவிட்டது.

62129 இப்பொழுது நாம் மற்ற ஜனங்களின் மேல் இந்த உயிர்ப்பித்தலை, இந்த உயிர்ப்பிக்கும் ஆவியைக் கவனிப்போம். 130 இப்பொழுது, நான் நீண்ட நேரம் பேசமாட்டேன் என்று உங்களிடம் கூறிவிட்டேன், நான் என்னுடைய வார்த்தையைக் காப்பாற்ற இருபது நிமிடங்கள் மாத்திரமே உள்ளது, நான் அதைச் செய்தால், கவனியுங்கள், நான் கூறின இந்த நேரத்தில், கிட்டத்தட்ட—சுமார் ஒரு மணி நேரமாயுள்ளது. இப்பொழுது இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கவனியுங்கள். அது மாத்திரமே வருகிறது…

63131 இப்பொழுது, அதைக் குறித்து ஏராளமான பரியாசம் உள்ளது. அநேக ஜனங்கள் அதைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கும்போது, தாங்கள் அதைப் பெற்றுக் கொண்டதாக உண்மையாகவே நினைக்கின்றனர். அநேக ஜனங்கள் அதைச் செய்கின்றனர், ஏனென்றால் மற்ற கிறிஸ்தவர்கள் செய்வதை தாங்கள் கண்டிருப்பதைக் குறித்த தவறான எண்ணத்தை அவர்கள் பெற்றிருக்கின்றனர். சாத்தானால் பாவனை செய்ய முடியும். நாம் அதை அறிவோம். மிஷனரிமார்களாய், நீங்கள் அது ஆள்மாறாட்டம் செய்யப்படுவதை காண முடியும்: சத்தமிடுதல், நடனமாடுதல், அந்நிய பாஷையில் பேசுதல், இந்த எல்லாக் காரியங்களும். அது ஆள்மாறாட்டம் செய்யப்படுவதை நீங்கள் எங்கும் காணலாம். முற்றிலுமாக. இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியத்தை மறுதலிக்கும் அஞ்ஞானிகளுக்கும், ஜனங்களுக்கும் மத்தியிலே. பார்த்தீர்களா? அவர்கள் தாங்களாகவே அந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள். 132 ஆனால் விசுவாசிக்கு வருகிற உண்மையான, உண்மையான உயிர்ப்பிக்கும் ஆவி, அவனை தேவனுடைய வார்த்தைக்கு உயிர்ப்பிக்கிறது, அது மீண்டும் கழுகின் ஆகாரத்திற்கு திரும்பியுள்ளது, சரியாக அது வசிக்கும் இடத்திற்கு திரும்பியுள்ளது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”

64133 இந்த உயிர்ப்பிக்கும் ஆவியானது பெந்தேகோஸ்தே நாளில் வந்ததுபோல, மற்ற ஜனங்களின் மேல் வந்தபோது, இப்பொழுது நாம் கவனிப்போமாக. 134 பெந்தெகொஸ்தேயினர் எவ்வாறு செயல்பட்டனர் என்பதை நாம் கவனிப்போம், நாம் பேசிக்கொண்டிருக்கிற இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டார்களா என்று பார்க்கிறோம். பெந்தெகொஸ்தே நாளன்று, அவர்கள் எல்லோரும் அங்கே மேலே காத்திருந்தனர். அவர்கள் தங்களுக்குள்ளே பயமடைந்தனர். யூதர்கள், அவர்கள் என்ன செய்யப் போவதாய் இருந்தார்கள், எனவே அவர்கள் பயமடைந்தனர். ஆனால் என்ன நடந்தது? இந்த உயிர்ப்பிக்கும் வல்லமை பரலோகத்திலிருந்து விழுந்தபோது, அவர்கள் மேல் ஒரு தைரியம் வந்தது. ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர்கள் அதைக் குறித்து அதிகம் நிச்சயமில்லாத ஒரு காரியமாய் அங்கே இருக்க, ஒரு புரிந்து கொள்ளுதல் உண்டாயிருந்தது. அவர்—அவர் மரித்திருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 135 அவர் உயிர்த்தெழுந்திருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் வழியில் அவரிடத்தில் பேசியிருந்தனர். “ஆனால் அது அவர்களுக்கானதா அல்லது இயேசுவுக்காக அவர்களுக்கானதாய் இருந்ததா?” 136 ஆனால் இங்கே பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியின் சாராம்சமானது விசுவாசிகள் மேல் விழுந்தது. அதுவே அவர்களை அவருடைய உயிர்த்தெழுதலின் பாகமாக்கியது, அவரை அவருடைய ஐக்கியத்தின் ஒரு பாகமாக்கியது. பரிசுத்த ஆவியானவர் வந்து, அவர்கள் உயிரோடெழுந்திருப்பார்கள் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார், ஏனென்றால் மறைவான வல்லமையினால் அவர்கள் கோழைகளிலிருந்து தைரியமுள்ள மனிதர்களாக அக்காலத்தில் எழுப்பப்பட்டிருந்தனர்.

65137 அவர்கள்—அவர்கள் தாங்கள் நினைத்திருந்த வார்த்தைக்கே பயந்திருந்தனர். இது உங்களை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம். அவர்கள் பயமடைந்தனர். அவரே அந்த வார்த்தை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 138 யூதர்களும் கூட அதை ஒப்புக்கொள்ள வேண்டியதாயிருந்தது. நிக்கொதேமு, “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். தேவன் அவனோடிருந்தாலொழிய ஒருவனும் நீர் செய்கிற காரியங்களைச் செய்ய முடியாது. இப்பொழுது, நாங்கள் அதை அறிவோம். நாங்கள் அதை அங்கீகரிக்கிறோம்” என்றான். 139 எனவே சீஷர்கள்…பேதுருவும்கூட அவருடைய பிரசன்னத்தில் சத்தியம் பண்ணியிருந்தான். அவர்கள் யாவரும் சிலுவையில் அறையப்படுதலில் அவரைக் கைவிட்டனர். 140 ஆனால் இதோ அவர்கள் இப்பொழுது இந்த மேலறையில், தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறார்கள். அப்பொழுது, திடீரென்று இங்கே இந்த பரிசுத்த ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தது, அது அவர்களை உயிர்ப்பித்தது. உயிர்த்தெழுதல் சம்பவித்தது, அவர்கள் பயப்படவில்லை அவர்கள் விசுவாசித்து, சத்தியம் என்று அறிந்து கொண்ட அந்த செய்திக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் அதைக் குறித்து பயமடைந்தனர்.

66141 இன்றைக்கு உலகத்தில் எத்தனை பிரெஸ்பிடேரியன்கள், எத்தனை மெத்தோடிஸ்டுகள், எத்தனை பாப்டிஸ்டுகள், எத்தனை பெந்தேகோஸ்தேக்கள் சத்தியத்தை அறிந்து, அதன் பேரில் நிலைநிற்க பயப்படுகின்றனர்? உங்கள் மேல் விழுந்தது என்னவாயிருந்தது என்று நான் யோசிக்க தூண்டப்படுகிறேன்? நீங்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் ஒரு பாகமா? நீங்கள் ஒரு மனிதனுடைய கோட்பாடு மற்றும் கருத்துக்காக கூச்சலிடத் துணிவீர்களா? அல்லது, நீங்கள் சரியானதை “சரி” என்றும், தவறானதை “தவறு” என்றும் அழைத்து நிற்கும்படிக்கு உண்மையான தைரியத்தையும், அதற்குத் தேவையான உண்மையான ஆண்மையையும் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய உயிர்த்தெழுதலின் ஒரு பாகமா அல்லது நீங்கள் ஒரு கூட்ட கோட்பாடுகளை தொழுதுகொள்பவராயிருக்கிறீர்களா? நீங்கள் சபைக்குச் சென்று, பாவத்திலும், அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயிருக்கிற உங்களுடைய பெயரை அங்கே பதிவு செய்திருக்கிறீர்களா? தேவனுடைய வார்த்தையை முழுவதுமாக விசுவாசிக்காதவன் ஒரு பாவியாயிருக்கிறான்.

67142 அந்த பரிசேயர்கள் அநேக காரியங்களை சத்தியம் என்று விசுவாசித்தனர். அவர்கள், “நாங்கள் தேவனுடைய பிள்ளைகள்” என்றனர். அந்த வார்த்தை பிரசங்கிக்கப்படும் வரையில், அவர்கள் அவ்வாறே இருந்தனர். ஆனால் அந்த வார்த்தை பிரசங்கிக்கப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட்டபோது, அப்பொழுது அவர்கள் பாவிகளானார்கள், அவர்கள் உண்மையென்று அறிந்திருந்த காரியத்தை புறக்கணித்த காரணத்தால், அதற்கு சாட்சியாய் இருந்தனர். “நீர் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு போதகர் என்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் தேவன் உம்மோடு இல்லாமல் ஒருவனும் நீர் செய்கிற காரியங்களைச் செய்ய முடியாது.”

68143 இன்றைக்கு நான் தெரிந்து கொள்ள விரும்புவது, நாம் எங்கே இருக்கிறோம்? நான் உங்களைக் கேட்கிறேன். இந்த உயிர்த்தெழுதல் நம்மை எங்கே கண்டறிந்து கொண்டிருக்கிறது? நீங்கள் வெளியேற வரத் துணிகிறீர்களா? நீங்கள் தேவனுடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ள தைரியமுள்ளவராயிருக்கிறீர்களா? நீங்கள் ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டிருந்தால், நீங்கள் நிச்சயமாகவே அதைச் செய்வீர்கள். நீங்கள் ஒரு கழுகாயிருந்தால், உங்களால் அதைச் செய்யாமல் இருக்க முடியாது, உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று உள்ளது. அல்லது, நீங்கள் எங்காவது ஒரு கோட்பாட்டை சேவித்து, “நான் சபைக்குச் செல்கிறேன். நான் உங்களைப் போன்றே நல்லவன்” என்று கூறுவீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் பிறப்புரிமையை பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் அதை ஒருபோதும் காணமாட்டீர்கள், உங்களால் அதைக் காண முடியாது. ஆனால் நீங்கள் இந்தப் பிறப்புரிமையை உடையவர்களாயிருந்தால், நீங்கள் அதைக் காணாமலிருக்க முடியாது, ஏனென்றால் அது உங்களுடைய ஒரு பாகமாயிருக்கிறது, நீங்கள் அதனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள். 144 என்னைப் பெற்றெடுத்த தாயை நான் எப்படி மறுக்க முடியும்? தகப்பனின் சொந்த இரத்தம் எனக்குள்ளாக இருக்கிறபடியால் நான் எப்படி அவரை மறுதலிக்க முடியும்? சார்லஸ் பிரான்ஹாம் என்னுடைய தகப்பன் என்பதை நான் எப்படி மறுக்க முடியும்? என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் அவருடைய குமாரனாயிருக்கிறபடியால், நான் அவருடைய நிந்தையையோ அல்லது வேறெதையோ பொறுத்துக்கொள்ள சித்தமாயிருக்கிறேன். அல்லேலூயா! 145 அப்பொழுது அவர் தேவனுடைய குமாரனாயிருந்தார், அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற அந்த வேதம் சத்தியமாயிருக்கிறது என்பதை நான் எப்படி மறுக்க முடியும்? நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வேளையைக் காணும்போது, சபையில் நமக்கு ஒரு ஈஸ்டர் தேவையாயிருக்கிறது. உயிர்த்தெழுதல்! தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தைக்காக புருஷரும் ஸ்திரீயும் தனித்து நிற்க நமக்கு ஒரு உயிர்த்தெழுதல் தேவை.

69146 “நல்லது, நாம் நம்முடைய வாலிபத்தை கிறிஸ்துவுக்காக வைத்திருக்கிறோம்” என்று கூறலாம். அதெல்லாம் சரிதான். “எங்கள் சபையில் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு இவ்வளவு அநேக உறுப்பினர்கள் தேவை.” அதற்கு எதிராக ஒன்றுமில்லை. அதெல்லாம் சரிதான். ஆனால் அது சூழ்நிலையாய் மாத்திரமே உள்ளது. அது ஒரு பழைய கோழியின் சிறகுகளாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அங்கே சரியான சூழ்நிலையை அடைந்தால், நீங்கள் ஒரு கழுகு முட்டையாக இருந்தால், அது கழுகு குஞ்சு பொறிக்கும். நீங்கள் அதைக் காண தேவனால் முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதைக் காணாமல் இருக்க முடியாது, நீங்கள் ஒரு உயிர்த்தெழுதலுக்குள் வந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தவிதமாகத்தான் பாப்டிஸ்டு பிறந்தான், அந்தவிதமாகத்தான் மெத்தோடிஸ்டு பிறந்தது, அந்த நாளின் உயிர்த்தெழுதலில், ஆனால் அவர்கள் கழுகுக்குப் பதிலாக கோழியைப் போல மாறிவிட்டனர்.

70147 அண்மையில் நான் கூறினது போல, நான் டூசானிலிருந்து கீழே செல்லும்போது, ஒரு விநோதமான காரியத்தைக் கண்டேன். அங்கே கம்பியில் ஒரு பருந்து அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அந்தப் பருந்து நீண்ட காலமாக அதனுடைய அடையாளத்தை இழந்து விட்டது. அது கழுகுக்கு அடுத்தபடியான ஒரு பறவையாக முன்பு இருந்தது. அதனால் கழுகைப் பின் தொடர முடியாது; இல்லை, எந்த வகையிலும் இல்லை. எந்தக் பறவையும் ஒரு கழுகைப் பின்தொடர முடியாது. ஆனால் அது ஒரு பருந்தாய் இருந்தது. 148 கிறிஸ்து கழுகாய் இருக்கிறார், சபையானது குறைந்தபட்சம் ஒரு பருந்தாக இருக்க வேண்டும். மற்ற பறவைகளைக் காட்டிலும் அவைகளால் உயரமாக பறக்க முடியும். ஆனால் அந்தப் பருந்து மிருதுவாகிவிட்டது. அது அதனுடைய அடையாளத்தை இழந்து விட்டது. அது தொலைபேசிக் கம்பிகளில் அமர்ந்து ஏதோ ஒரு செத்த முயலுக்காக காத்திருக்கிறது. அது ஒரு பருந்தைப் போல பறப்பதற்குப் பதிலாக, ஒரு வல்லூறைப் போல குதிக்கிறது.

71149 ஓ, என் சகோதரனே, சகோதரியே, பெந்தேகோஸ்தே ஜனங்களே, அது என்னுடைய சொந்த அருமையான ஜனங்களே! சபையானது அதனுடைய அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறது. புதிய மன்னாவுக்காக, அப்பால் உள்ள, பரலோகத்தில் பறப்பதற்குப் பதிலாக, அது இறங்கி வந்து, ஏதோ ஒரு மரித்த சம்பிரதாயமான கோட்பாட்டை சார்ந்துள்ளது. 150 ஒரு பருந்து முன்பு தன்னுடைய சொந்த மன்னாவை வேட்டையாடும், ஆனால் இன்றைக்கு அது மோட்டார் வாகனங்களால் விபத்துக்குள்ளானதையும், வல்லூறைப் புசிப்பதையும் எடுத்துக் கொள்கிறது. அது அந்த ஒன்றைப் போல துள்ளுகிறது. அது அந்த ஒன்றைப் போல காணப்படுகிறது. 151 நாம் நவநாகரீக உலகில் நம்மை மிகவும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறோம், நம்முடைய ஸ்திரீகள் தங்களுடைய தலைமுடியை வெட்டிக்கொண்டும், குட்டை கால்சட்டைகளை அணிந்துகொண்டும், நம்முடைய ஆட்கள் பிரசங்க பீடத்தில் நின்று உண்மையைக் கூற போதிய முதுகெலும்பில்லாதவர்கள். நாம் நீண்ட காலமாக வார்த்தையின் பேரில் மென்மையாய் இருந்து வருகிறோம். 152 ஓ தேவனே, எங்காவது அந்த கழுகுகளை கண்டறிந்து பரிசுத்த ஆவியை அனுப்பும், அப்பால் நிற்க ஆயத்தமாயிருந்தால், என்ன சம்பவித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது அறியப்படாத இடத்திற்குள் உயர உயரச் செல்லும், தொலைபேசிக் கம்பிகளில் அமர்ந்து சில ஞாயிறு பள்ளி பிரசுரங்கள் உள்ளே வரும்படி பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பரிசுத்த ஆவியின் வல்லமை மற்றும் கிரியையின் புத்துணர்ச்சியில் நான் வார்த்தையை உடையவனாக இருக்கட்டும். நமக்கு ஒரு ஈஸ்டர் தேவை, மறைவான வல்லமையுள்ள ஒரு உயிர்த்தெழுதல். என் நண்பனே, நீ இப்படிப்பட்ட உலகப்பிரகாரமான அழுகிப்போன நிலையில் திருப்தியடைந்திருந்தால், ஏதோ காரியம் தவறாய் உள்ளது.

72153 என் சகோதரியே, என் சகோதரனே, நான் தேவபக்தியோடு இதை உங்களுக்குச் சொல்லட்டும், நான் மீண்டும் ஒரு ஈஸ்டரைக் காணும்படி உயிரோடிருக்கக் கூடாமல் இருக்கலாம் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் ஒரு காரியம் நிச்சயம் உண்டு, தேவனுடைய வார்த்தையினால், ஒரு அசலான முன்குறிக்கப்பட்ட தேவனுடைய குமாரன், அந்த தேவனுடைய சத்தத்தைக் கேட்கும்போது, அவன் எழும்பி, அதைச் சந்திக்கச் செல்வான். அவன் உண்மையான ஜீவனுள்ள வார்த்தையை சந்திக்கப் போகிறான் என்ற மறைவான வல்லமைகள் உள்ளன. அவர் இருந்தது போலவே, மணவாட்டியும் மணவாளனை சந்திப்பாள். அவள் அவருடைய சரீரத்தின் ஒரு பாகமாயிருக்கிறாள்.

73154 கவனியுங்கள், நீண்ட காலமாக நாம் நம்முடைய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் புதன்கிழமை இரவு வருகிறோம், நம்மில் சிலர். மற்றவர்கள் சூசியை யார் நேசிக்கிறார் பார்க்க வீட்டிலேயே இருந்து, தொலைக்காட்சிகளையும், எல்லாவிதமான உலகப்பிரகாரமான காரியங்களையும், சபையிலிருந்து உங்களை விலக்கி வைக்கவே, எல்லாவிதமான கேளிக்கைகளிலும் இருந்து வருகிறோம். நீண்ட காலமாக நாம் அதை இழந்துவிட்டோம். 155 நம்முடைய வேதாகம கருத்தரங்குகள், நம்முடைய பள்ளிகள், ஏராளமான வேத சாஸ்திரங்களைக் கொண்ட ஒரு கூட்ட ரிக்கிகளை, மற்றும்—மற்றும் பொழுதுபோக்கு மற்றும் சபையில் உள்ள ஒவ்வொரு காரியமும், ஜெபக் கூட்டத்தின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும்படி செய்துவிட்டோம். நாம் ஆடைகளை எடுத்து, நவீனத்துவவாதிகள் செய்ய முயற்சிப்பதை நிறைவேற்ற, அவர்களை உள்ளே கொண்டு வர முயற்சிக்கிறீர்கள். அதன் மூலம் நீங்கள் அவர்களை ஒருபோதும் ஆதாயப்படுத்தவே முடியாது. நீங்கள் பெற்றுள்ளதைக் காட்டிலும் அவர்கள் அதிகம் பெற்றுள்ளனர். உங்களுடைய தளத்தில்…அவர்களுடைய தளத்தில் உங்களுக்கு எந்த வேலையும் இல்லை. மெய்யான ஞானஸ்நானம் பிரகாசித்துக் கொண்டிருக்கிற, உயிர்த்தெழுதலின் உண்மையான வல்லமையைக் கொண்ட உங்களிடம் அவர்கள் வரட்டும். அவர்களுடைய சபையைப் போன்ற ஒரு சபையைக் கட்ட முயற்சிக்காதீர்கள். அப்படிப்பட்ட ஒரு போதகரை வைத்துக் கொள்ள முயற்சிக்காதீர்கள். இதை, அதை, மற்றதைச் செய்ய முயற்சிக்காதீர்கள் அல்லது உலகத்தோடு ஒத்துழைக்காதீர்கள். அவர்கள் ஹாலிவுட்டோடு பளபளக்கிறார்கள்.

74156 உண்மையான சுவிசேஷம் வல்லமையினால் பிரகாசிக்கிறது. கழுகுகள் அதைக் கேட்கின்றன. அவர்கள் ஒரு பளபளப்பை எதிர்பார்க்கிறதில்லை. அவர்கள் ஒரு பிரகாசத்தை எதிர்பார்க்கின்றனர். தாழ்மையால் பிரகாசிக்கிறது, அன்பினால் பிரகாசிக்கிறது, வல்லமையால் பிரகாசிக்கிறது, அதைத்தான் உண்மையான கழுகு தேடுகிறது. நீங்கள் ஒரு முற்றத்தில் கிளற வைத்து அவனை பிரியப்படுத்த முடியாது. அவனால் அதை ஒருபோதும் செய்யவே முடியாது. நீங்கள் அதை அவனிடம் ஒருபோதும் கூறமாட்டீர்கள், ஏனென்றால் அவன் அதை விசுவாசிப்பதில்லை. 157 அந்த சத்தம் வானத்திலிருந்து, “நான் மரித்து, மீண்டும் உயிரோடிருக்கிறேன்” என்று கூச்சலிடட்டும், ஏதோ ஒன்று சம்பவிக்கிறது. “நான் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறேன். கடைசி நாட்களில் அது சம்பவிக்கும், நான் மாம்சமான யாவர்மேலும் ஊற்றுவேன்” என்றார். தேவனுக்கு மகிமை! “நான் உன்னுடைய சாவுக்கேதுவான பாஷையை உயிர்ப்பிப்பேன். நான் உன்னுடைய சாவுக்கேதுவான நாவை உயிர்ப்பிப்பேன். உயிர்த்தெழுதலில் என்னோடு கூட நான் உன்னைக் கொண்டுவரப் போகிறேன் என்பதற்கு நான் அத்தாட்சியை உனக்குத் தருவேன்.” பசியுள்ள இருதயமுள்ள கழுகுகள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து அதை அடைகின்றன. அது மகத்தான விலை உயர்ந்த முத்து, அவர்கள் போய் வாங்குவதற்காக மற்ற எல்லாவற்றையும் விற்றுவிடுகிறார்கள். ஆமென். 158 நண்பனே, தேவன் நமக்கு உதவி செய்வாராக. நம்முடைய சபைகள் தங்களுடைய அடையாளத்தை இழந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது சிலவற்றிற்கு துரிதமாக செல்வோம்.

75159 அந்த சீஷர்களின் செயலைக் கவனியுங்கள், பயமடைந்திருந்தனர். இயேசுவே சத்தியமாயிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், ஆனால், நீங்கள் பாருங்கள், அது பிரபலமான கருத்துக்கு, அந்த நேரத்தில் பிரபலமான மார்க்கத்திற்கு எதிராக இருந்தது, மிகவும் கண்டிப்பான மார்க்கத்தையும், சார்-…பரிசேயர்கள், சதுசேயர்கள், போன்றவர்கள் அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும், கோத்திரங்களையும், ஸ்தாபனங்களையும் பின்பற்றினர். அவர்கள்—அவர்கள் அந்த “மதபேதத்திற்கு” எதிராக இருந்தனர். ஆனால் இயேசு அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட வார்த்தையாயிருந்தார். 160 இயேசு ஆவியில் பரிசுத்த ஆவியாக இருக்கிறார். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்கள் என்னைக் காண்பீர்கள்,” சரீரத்தையல்ல; அவருக்குள் இருந்த அந்த ஜீவன். தேவன் அப்பொழுது அவர் செய்தது போன்ற குமாரர்களை, கீழ்ப்படிதலுள்ளவர்களாக அழைக்க, சபையின் மேல் இருக்கிறார். 161 “நான் எப்பொழுதும் என் பிதாவுக்குப் பிரியமானதைச் செய்கிறேன். உங்களில் யார் என் மேல் பாவத்தைக் குறித்து குற்றஞ்சாட்ட முடியும்?” வேறு வார்த்தைகளில் கூறினால், பாவம் என்பது “அவிசுவாசம்” ஆகும். “வார்த்தை என்னைக் குறித்து என்ன சொல்லியிருக்கிறதோ, அதை நான் செய்யாதிருக்கிறேனா?” இதோ அது உள்ளது. “நான் என்ன செய்வேன் என்று வார்த்தை கூறினதை, அதை நான் செய்யவில்லை என்பதை எனக்குக் காண்பியுங்கள். எந்த ஒருவர் என்னைக் குற்றப்படுத்த முடியும்? உங்களுடைய விரல்களை என்மேல் வைத்து, நான் என் பிதாவின் வார்த்தையை நிறைவேற்றவில்லையென்று எவர் சொல்லக் கூடும்?” ஓ, பெந்தேகோஸ்தே சபை அந்த இடத்திற்கு வரும்போது! “என்னிடத்தில் அவிசுவாசத்தைக் குற்றப்படுத்தக் கூடியவன் யார்?”

76162 ஓ, கிறிஸ்தவர்களே, ஒரு பருந்தாக அல்ல, ஆனால் ஒரு கழுகாக அடையாளங்காட்டப்படுங்கள். அந்தப் பருந்து மிருதுவானது, அது கீழே வரும். ஒரு கழுகு அதைச் செய்வதை நீங்கள் ஒருபோதும் காணமாட்டீர்கள். அது அதை ஒருபோதும் செய்யாது. அது தன்னுடைய சொந்த ஆகாரத்தையே வேட்டையாடுகிறது. அது காணும்படி தேவன் அதனை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அது புதிய மன்னாவைப் பெறுகிறது, மரித்த ஏதோ ஒன்றை அல்ல. 163 எபிரெயரில், அவர்கள் வனாந்திரத்தினூடாக கடந்து சென்றபோது, அவர்கள் புசித்தனர், மரித்த மன்னாவைப் புசிக்க முயன்றனர். அது தேக்க நிலையை அடைந்திருந்தது. அது—அதில் வால்புழுக்கள் இருந்தன. நாங்கள் என்ன பொருட்படுத்திக் கூறுகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது மாசுபட்ட, அழுகிப்போன நிலையில் உள்ளது. புழுக்கள் அதில் உள்ளன. 164 அநேக ஆண்டுகளுக்கு முன்பே மரித்திருந்த ஒரு ஆகாரத்தை நான் ஏன் புசிக்க வேண்டும்? அது உருவத்திலும், வடிவத்திலும் இருக்கலாம், ஆனால் அது புதியதாய் இருப்பதில்லை. நாம் ஒவ்வொரு தலைமுறையும் புதியதாக ஆகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் நம்முடைய பிரயாணத்தில் இருக்கையில், ஒவ்வொரு தலைமுறையும், கழுகும் அந்த ஆகாரத்தைத் தேடுகிறது. கவனியுங்கள்.

77165 இப்பொழுது நாம் மீண்டும் சில ஜனங்களை எடுத்துக் கொள்வோம். நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் சிலரை எடுத்துக் கொண்டு, அவர்கள் என்ன செய்தனர் என்று பார்ப்போம். 166 நாம் முதலில் ஸ்தேவானைப் பற்றி பார்ப்போம், எப்படி ஸ்தேவான் அந்த ஆலோசனை சங்கத்தின் மத்தியில் இருந்தான். அந்த ஆலோசனை சங்கம் அவனை அங்கே கொண்டு வந்தபோது, அங்கே அந்த பெரிய சபை விசுவாசிகள், இல்லை விசுவாசிகளாக கருதப்பட்டவர்கள், அவனைக் கொண்டுவந்து, அவனை ஆக்கினைக்குள்ளாக்க முயன்றனர். “ஏன்,” அவன், “நீங்கள் வணங்கா கழுத்துள்ளவர்கள், இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனமில்லாதவர்களே, நீங்கள் எப்பொழுதும் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கிறீர்கள்” என்றான். அதுதான் அந்த நித்திய ஜீவன். “உங்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளினூடாக முன்காலத்தில் அதைச் செய்ததுபோல, நீங்களும் இன்றைக்கு அதைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்.” அப்பொழுது அவர்கள் அவனைப் பார்த்து பல்லைக் கடித்தனர். அவர்கள் அதைக் கேட்க விரும்பவில்லை. அவன் அவர்களுடைய கோட்பாட்டிற்கு எதிராக இருந்தான். அவன் அவர்களுடைய ஸ்தாபனத்திற்கு எதிராக இருந்தான். அவர்கள் அந்த மனிதனை கல்லெறிந்து கொன்றனர். அவன் தன்னுடைய கரங்களை மேலே உயர்த்தி, வானத்தை நோக்கிப் பார்த்து, “நான் வானங்கள் திறந்திருப்பதையும், இயேசு வலது பக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்று கூறினான். ஏன்? அவன் உயிர்த்தெழுதலை, உயிர்ப்பிக்கும் வல்லமையை தனக்குள் கொண்டிருந்தான், அது அவனை இயேசுவின் மடிகளுக்குள் கொண்டு சென்றது.

78167 இப்பொழுது துரிதமாக, கவனியுங்கள். பிலிப்புவைப் பாருங்கள், அங்கே ஒரு பெரிய எழுப்புதல். எந்த மனிதனுக்கும் துணிவில்லாதிருந்த அங்கே ஒரு எழுப்புதல் உண்டாயிருந்தது, ஏன், அவன் சபைகளுக்கு மத்தியிலும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும் ஒரு பெரிய ஒத்துழைப்பை பெற்றிருந்தால் நலமாயிருக்கும். ஒரு மகத்தான எழுப்புதல் உண்டாயிருந்தது. தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை அவனிடத்தில் பேசி, “ஸ்தேவான்…” என்றது. அது, “நீ ஒரு மகத்தான எழுப்புதலை உடையவனாய் இருக்கிறாய், ஆனால் நீ பேச வேண்டுமென்று நான் விரும்பும் ஒரு மனிதன் எனக்கு உண்டு” என்று கூறியிருக்கலாம். 168 ஸ்தேவான் கீழ்ப்படிதலுள்ளவனாயிருக்கிறான், அது என்னவாயிருந்தாலும், எவ்வளவு குறைகூறப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. “ஓ, ஸ்தேவான், உன்னால் புறப்பட்டுச் செல்ல முடியாது” என்றனர். “ஆனால் என்னால் முடியும். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார்” என்றான். 169 அவன் வனாந்திரத்திற்குள்ளாகச் சென்று, அங்கே இந்த மந்திரியைக் கண்டான். என்ன நடந்தது? அவன், “இயேசுவானவர் தேவனுடைய குமாரனாயிருக்கிறார் என்று நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நான் உனக்கு ஞானஸ்நானம் கொடுப்பேன்” என்று கூறினான். அவன் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது… 170 பாருங்கள். அவன் இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டான், ஆயிரக்கணக்கான ஜனங்களின் எழுப்புதலை வனாந்திரத்திற்குள்ளாகச் செல்லும்படி ஒரே மனிதனுக்காக விட்டுச் சென்றான். ஓ, அது எல்லாக் காரணங்களுக்கும் விரோதமாயிருக்கும். பார்த்தீர்களா? “ஏன், இங்கே பத்தாயிரம் பேர் உம்மை விரும்புகின்றனர்.” ஆனால் அங்கே வெளியே தேவையுள்ள ஒருவன் இருக்கிறான். பார்த்தீர்களா? உயிர்ப்பிக்கும் வல்லமை தேவன் அருளியிருந்த இடத்திற்கு அவனை அனுப்பியது. அல்லேலூயா!

79171 புருஷர்களே, ஸ்திரீகளே, அது உங்களை எழும்பி நிற்கச் செய்யும். தேவன் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்புகிற காரியங்களை அது உங்களைச் செய்ய வைக்கும். அதைக் குறித்து வேறு யாராவது என்ன கூறினாலும் நான் கவலைப்படுகிறதில்லை. பக்கத்து வீட்டுக்காரர், “ஓ, அந்த நபர் தங்களுடைய சிந்தையை இழந்துவிட்டார். இரவு முழுவதும் ஜெபிக்கிறார்கள்; அவர்கள் வேதாகமத்தை வசிக்கிறார்கள்” என்கின்றனர். அவர்கள் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. அதைச் செய்ய தேவன் உங்களை அழைத்திருக்கிறார் அதுதான் காரியம். அது உண்மை. “ஓ, இந்த பண்டைய நாகரீகமான, பெந்தேகோஸ்தே எழுப்புதல்களை நாம் கொண்டிருக்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்றனர். ஓ, ஆம், நம்மாலும் கூட முடியும். நீங்கள் அதை உங்களுக்குள்ளே பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் தேவனில், பெரும்பான்மையினராயிருக்கிறீர்கள், மற்றவர்கள் என்ன நினைத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

80172 கவனியுங்கள், அதன்பின்னர் கீழ்ப்படிதலில். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தேவனுக்குக் கீழ்ப்படிந்த பிறகு, அவருடைய வார்த்தைக்கு, அவன் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றினபோது, பெந்தேகோஸ்தேவில் அவன் பெற்றுக்கொண்ட அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவனை வெளியே இழுத்து, அவனுடைய சரீரத்தை உயிர்ப்பித்தது. அநேக மைல்களுக்கு அப்பால், அவன் ஆவிக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்பட்டு எங்கோ வேறொரு தேசத்தில் காணப்பட்டான். உயிர்ப்பிக்கும் தேவனுடைய வல்லமை! நாம் பெந்தேகோஸ்தேக்காரர்களாயிருந்தால், “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின அதே வல்லமை, சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களில் வாசமாயிருந்தால்.” பார்த்தீர்களா? சரி. கவனியுங்கள்.

81173 இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்ட மற்றொரு மனிதனை நாம் எடுத்துக் கொள்வோம். நீண்ட காலத்திற்கு முன்னர் ஏனோக்கு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் இருந்தான். ஒரு புதிய காரியம் தோன்றும்போது, ஏதோ ஒன்று வந்து, “நல்லது, இப்பொழுது நாம் பழைய பள்ளிக்கு திரும்பிச் செல்ல வேண்டும், அல்லது இதற்கு, அதற்கு அல்லது மற்றது ” என்று கூறினது, ஏனோக்கு தேவனோடு நடந்தான். தேவன் என்ன செய்யும்படி கூறினாரோ, ஏனோக்கு ஒரு வார்த்தையையும் தவறவிடவில்லை. அவன் தேவனோடு சஞ்சரித்தான். அவன் என்னவாயிருந்தான்? அவன் ஒரு தேவனுடைய குமாரனாயிருந்தான். அவன் அந்த நாளுக்கென்று அழைக்கப்பட்டிருந்த ஒரு கழுகாயிருந்தான். 174 நேரம் வந்தபோது, அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான்! அவன் தேவனுக்கு முன்பாக ஐநூறு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக சஞ்சரித்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஒரு முறை கூட அவன் அவருடைய வார்த்தையை தவறவிட்டிருந்ததில்லை. ஒரு முறை கூட அவன் தவறாக நடந்து கொண்டதில்லை. ஒரு முறை கூட அவன் அவ்வாறு செய்யவில்லை, ஆனால் அவன் சாட்சியைக் காத்துக்கொண்டான். தேவன் அவனிடம் செய்யும்படி கூறின ஒவ்வொரு காரியத்தையும், அவன் சென்று அதைச் செய்தான். அதைக் குறித்து எந்த வாதமும் இல்லை, அவன் சென்று அதைச் செய்தான். வேறு எவரும் என்ன நினைத்தாலும் கவலைப்படாமல், அவன் சென்று அதைச் செய்தான். ஏன்? அவன் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அந்த வயோதிக மனிதன் மரிக்க வேண்டிய நேரம் வந்தபோது, தேவன் ஏணியை கீழே இறக்க, அவன் பரலோக வீட்டிற்கு நடந்து சென்றான். அவர் அவனை உயிர்ப்பித்து, ஒரு எடுத்துக்கொள்ளப்படுதலில் அவனுடைய சாவுக்கேதுவான சரீரத்தை எடுத்துக் கொண்டார். ஆமென். அதுவே அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையாயுள்ளது.

82175 எலியாவைப் பாருங்கள், பூமியில் அவனுடைய ஊழியம் முடிவுற்ற பிறகு. அவன் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் அவ்வளவாய் நிறைந்திருந்தான், அவன் தன்னுடைய நாளில் ஜேக்கி கென்னடி சிகையலங்காரத்தை வெட்டிக் கொண்டவர்களை கண்டனம் செய்தான். அவளைக் குறித்து அவன் என்ன நினைத்திருந்தான் என்பதை அவன் வயோதிக யேசபேலிடம் கூறியிருந்தான். அவன் அவர்களிடம் பிரசங்கிமார்களிடமும், ஆசாரியர்களிடமும் எது சரி, எது தவறு என்று கூறினான், அவர்களோ அவனை நம்பவில்லை. ஆனால் அவன் முகத்தில் வர்ணம் பூசிய பெண்களையும் மற்ற காரியங்களையும், மிக மோசமாக கண்டனம் செய்தான். அவன் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிரம்பியிருந்தபடியால், ஒன்றுமே அவனைப் பாதிக்க முடியவில்லை. தேவன் வானத்திலிருந்து அவனைப் போஷித்து, அவனை வெளியே கொண்டு சென்று, அவனை ஒதுக்கி வைத்திருந்தார். அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்தவனாயிருந்ததால், மரிக்க வேண்டிய வேளை வந்தபோது, யோர்தான் திறக்கப்பட்டது, அவன் அப்படியே நடந்து சென்றபோது, ஒரு இரதத்தை அனுப்பி, அவனை வீட்டிற்கு மேலே கொண்டு சென்றார், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அவன் ஒரு உண்மையான, அசலான தேவனுடைய குமாரனானான். ஆம்.

83176 கவனியுங்கள், அவனுக்கு பின்வருபவன் ஒருவன் இருந்தான், அவனுடைய பெயர் எலிசா என்பதாகும். இந்த உயிர்ப்பிக்கும் வல்லமை எலிசாவுக்கு இரட்டிப்பாக இருந்தது. பார்த்தீர்களா? அவனுக்கு இரட்டிப்பான பாகம் இருந்தது. இப்பொழுது, அவன் ஏறக்குறைய எண்பது ஆண்டுகள் பிரசங்கம் செய்தான், இல்லை அவனுக்கு கிட்டத்தட்ட எண்பது வயது. அவன் வியாதிப்பட்டு மரித்தான். இப்பொழுது, எலியா சென்றதுபோல அவன் அந்த விதமாகவே வீட்டிற்கு செல்லவில்லை. பார்த்தீர்களா? அவர்கள் இருவருமே சபையில் அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர்; சில பரிசுத்தவான்கள் செல்கிறார்கள், சிலர் இளைப்பாறுகிறார்கள். ஆனால் எலியா எடுத்துக்கொள்ளப்படுதலில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கவனியுங்கள்; அதன்பின்னர் எலிசா தேவனுக்குள் முழு உயிர்ப்பிக்கும் வல்லமையினால் உறங்கச் சென்றான். அவன் மரிப்பதற்கு சற்று முன்பு அவன் உரைத்திருந்த தீர்க்கதரிசனத்தைப் பாருங்கள். பார்த்தீர்களா?

84177 இப்பொழுது, நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். நீங்கள் மரித்திருந்தாலும் அல்லது நீங்கள் எங்கேயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை ஒருபோதும் விட்டுப் போவதில்லை. அவன் மரித்து அநேக வருடங்கள் கழித்து, அவனுடைய சதை அழுகிப்போய், தோல் புழுக்கள் அதை தின்றுவிட்டன. ஆனால் அவர்கள் ஒரு நாள் மரித்துப்போன ஒரு மனிதனை சுமந்து சென்று கொண்டிருந்தபோது, அவனை அந்த எலும்புகளின் மேல் போட்டனர், அந்த மனிதன் உயிரடையும்படிக்கு அங்கே அதிக உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது. அல்லேலூயா! அவனை மரித்தோரிலிருந்து எழுப்பினது, ஏனென்றால் அந்த தேவனுடைய பரிசுத்தவான் மேல் இருந்த அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, அவனை ஒருபோதும் விட்டு நீங்கவில்லை, அந்த எலும்புகளின் மேல் அப்படியே தரித்திருந்தது.

85178 ஓ, நாம் அவருடைய மணவாட்டியாயிருப்போமானால், நாம் அவருடைய மாம்சத்திலிருந்து மாம்சமாயும், அவருடைய எலும்புகளில் எலும்பாயும் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மரணம் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை ஒரு போதும் தொல்லைப்படுத்தாது. “புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும், நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைக் காண்பேன்.” தேவனுக்கு மகிமை! என்ன ஒரு…நான் என்ன கூறுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் போன்ற ஒரு வயோதிக மனிதனுக்கு என்னே ஒரு நம்பிக்கை, நான் ஐம்பத்தாறு வயதுடையவனாயிருக்கிறபடியால், என்னுடைய கடைசிக் காலத்தை காண்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். 179 ஒரு சிறு பையனாய் இருந்தது முதற்கொண்டே நான் இங்கே நின்று, இதை அறிவிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால் எனக்குள், எனக்கு எந்த நன்மையும் இல்லை, நான் எதுவும் செய்திருக்கவில்லை என்பதை நான் அறிவேன், ஆனால் எனக்குள் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உள்ளது; அது ஒரு வாலிபனாக இருந்த என்னை உலகத்தின் காரியங்களிலிருந்து ஒரு நாள் நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பித்தது. ஓ, சம்பவித்துள்ள காரியங்கள்! நான் தரிசனங்களைக் கண்டிருக்கிறேன், காரியங்களை முன்னறிவித்திருக்கிறேன். அவர் இன்னமும் எந்தக் காரியத்தையும் தவற விட்டுவிடவில்லை. நான் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிறேன். நான் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறேன். எனக்குள்ளே வாசம் செய்த தேவனுடைய ஆவியைக் கொண்டு நான் அந்தக் காரியங்களைச் செய்திருக்கிறேன். அது உயிர்ப்பிக்கும் வல்லமை. நான் அதை அறிவேன் என்றோ ஒரு நாள்…

86180 என் மீட்பர் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிறார். என்றோ ஒரு நாள் அவர் வரும்போது, இந்த எலும்புகள் மீண்டும் எழும்பி, அவரை ஆகாயத்தில் சந்திக்கச் செல்லும். நீங்கள் என்னை எங்கே வேண்டுமானாலும் சமுத்திரத்தில் புதைத்து, அதை எரித்துவிடலாம். அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை நித்தியமானது. வ்யூ! நான் இப்பொழுது ஈஸ்டரை உணருகிறேன். ஆம், ஐயா. நான் அதை அநேக வருடங்களாக உடையவனாயிருக்கிறேன். அது எனக்குள் இருக்கிறது. 181 அது உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களில் வாசமாயிருந்தால், அது உலகத்தின் காரியங்களிலிருந்து, தேவனுடைய வார்த்தைக்கு மாத்திரமே உங்களை உயிர்ப்பித்துள்ளது. அது உங்களை இந்த ஜீவியத்திலிருந்து நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பித்துள்ளது. ஒரு காலத்தில் பாவத்திலும் அக்கிரமங்களிலும் மரித்த நீங்கள் இப்பொழுது ஏகமாய் உயிர்ப்பிக்கப்பட்டு, கிறிஸ்து இயேசுவோடு உன்னதங்களில் உட்காரும்படியாக, மேலிருந்து மன்னாவைப் புசித்து, தேவனுடைய கரம் வெளிப்பட்டதைக் கண்டு, இந்நாளின் வாக்குத்தத்தத்தை நிரூபிக்கிறது.

87182 “நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும். அவர்கள் புசித்து, குடித்து, பெண்கொண்டும் பெண் கொடுத்தும் வந்தனர். லோத்தின் நாட்களில் இருந்தது போல, மனுஷகுமாரன் பூமியில் வெளிப்படும் நேரங்களிலும் அப்படியே நடக்கும்,” இனிமேல், தேவ குமாரன் அல்ல. “மனுஷகுமாரன்” கழுகு பறக்கும் கடைசி நாளுக்கான தீர்க்கதரிசன செய்திக்கு மீண்டும் வரவேண்டும்; சிங்கம் அல்ல; பலியின் காலத்தில் காளையை அல்ல. பார்த்தீர்களா? 183 ஒவ்வொரு முறையும், உலக அரசியல் வல்லமையின் சவாலை சந்திக்க ஒரு மதசம்பந்தமான வல்லமை புறப்பட்டுச் சென்றது. சிங்கம் எழும்பினபோது, மதசம்பந்தமான வல்லமை, அது ரோம வல்லமையைச் சந்திக்கச் சென்றது. 184 பலியிடும் நேரம் வந்தபோது, காளை புறப்பட்டுச் சென்றது, ஏனென்றால் அது கர்த்தருடைய பலியாகிய மிருகமாயிருக்கிறது. 185 அதன்பின்னர் சீர்திருத்தக்காரர்கள் வருகிறார்கள், சபையின் காலங்களினூடாக ஒரு மனிதனின் முகம் தோன்றினது. லூத்தர், வெஸ்லி, ஓ, கால்வின், தொடர்ந்து கீழே, கீழே பெந்தேகோஸ்தே காலம் வரை சீர்திருத்தக்காரர்கள் இருந்தனர். 186 ஆனால் புறப்பட்டுச் சென்ற கடைசி செய்தியில், ஒரு பறக்கும் கழுகு வந்தது. இது கழுகின் நேரம், வெளிப்படுத்தும் நேரம், தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டது, தேவனுடைய வார்த்தை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஓ, பிள்ளைகளே, இந்த பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் நடந்து செல்லுங்கள். உள்ளே வந்து, அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள், தேவன் உங்களை நிரப்புவார்.

88187 இப்பொழுது இங்கே பாருங்கள். நாம் இப்பொழுது கண்டறிகிறோம், நினைவிருக்கட்டும், “நாம் அவருடைய மாம்சத்தில் மாம்சமும், அவருடைய எலும்பில் எலும்புமாயிருக்கிறோம்.” தேவன் தம்முடைய எலும்புகளையும் மாம்சத்தையும் கல்லறையிலிருந்து எழுப்பினதுபோல, அவர்களால் மறைவான வல்லமை கொண்ட மனிதனை மறைக்க முடியாது. மரணம் அவனை எடுத்துக்கொள்ள முடியாது. இயேசு, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். நான் அவர்களைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். ஓ, என்னே! ஈஸ்டர்! ஏன், நாம் ஈஸ்டரில் இருக்கிறோம். அவர் உயிர்த்தெழுந்தபோது, நாமும் அவரோடு உயிர்த்தெழுந்தோம். அவர் உரிமைப் பத்திரத்தை திருப்பி அனுப்பினார். நாம் அதை பரிசுத்த ஆவியின் அபிஷேகமாகவே, பற்றிக் கொள்கிறோம். “அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார்; நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” எபிரெயர் 13:8 அதை நிரூபிக்கிறது. அவர் அதே விதமாக இருக்கிறார்.

89188 அவருடைய மேசியானிக்கள், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். மேசியா என்றால் என்ன? மேசியா என்றால் என்ன? மேசியா “அபிஷேகம் பண்ணப்பட்டவர்.” இப்பொழுது அவர் மேசியாவாயிருந்தால், தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற, அந்த நாளுக்கான அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவராக இருப்பதனால், மீட்பராகவும், அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவராகவும் இருக்க, தேவன் அந்த சரீரத்தை எழுப்பினார், அவருடைய மணவாட்டி இந்த நாளுக்கான அபிஷேகம் பண்ணப்பட்டவளாய் இருக்கிறாள். அது ஏற்கனவே உயிர்த்தெழுதலில் அவரோடு எழுப்பப்பட்டுள்ளது, ஏனென்றால், “இந்த இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.” ஆமென். 189 நான்—நான் அதைப் புரிந்து கொள்ளும் விதமாகவே அதைக் கூற விரும்புகிறேன். என்னால் அதை விளக்கிக் கூற முடிந்த அளவிற்கு கல்வியைப் பெற்றிருந்தால் நலமாயிருக்கும். பார்த்தீர்களா? நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நான்—நான் நம்புகிறேன். தேவனே, பரிசுத்த ஆவியானவர் அங்கு வந்து, நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை அறிய, அதை உங்கள் இருதயத்தில் பதியச் செய்வார் என்று நான் நம்புகிறேன்.

90190 உயிர்த்தெழுதல், நாம் இப்பொழுது உயிர்த்தெழுதலில் இருக்கிறோம். நாம் அவரோடு உயிர்த்தெழுதலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், ஆனால் ஜீவனை உடையவர்கள் மாத்திரமே. 191 ஜீவனைப் பெறாதவர்கள் அல்ல. அவர்கள் அதை அறியமாட்டார்கள். அவர்கள் அதை ஒருபோதும் அறியமாட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறோம் என்றும், இரட்சிக்கப்படுகிறோம் என்றும் நினைத்துக்கொண்டே இருப்பார்கள், எடுத்துக் கொள்ளப்படுதலோடு முடிந்து போய்விடும். மேலும், “எலியா ஏற்கனவே வந்துவிட்டான், அவர்கள் அந்தவிதமாகவே செய்தனர், ஆனால் நீங்கள் அதை அறியவில்லை” என்றார். பார்த்தீர்களா?

91192 கவனியுங்கள். மரணம் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை நிறுத்துகிறதில்லை. கவனியுங்கள். மரணம் அதை தடுத்து நிறுத்த முடியாது. 193 நீங்களோ, “பாருங்கள், என்னுடைய தாயார் ஒரு ஆவியினால் நிரப்பப்பட்ட ஸ்திரீ. என் தகப்பனாரை, என்னுடைய தகப்பனாரை போல வல்லமை நிறைந்த ஒரு மனிதனை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் சகோதரன் பிரான்ஹாமே, அவர் மரித்துப் போய்விட்டார்” என்கிறீர்கள். நிச்சயமாக. அது உயிர்ப்பிக்கும் வல்லமையை நிறுத்தவில்லை. 194 மோசே அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவனாயிருந்தான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசுவானவர் வரைக்கும் அவனைப் போன்ற ஒரு மனிதன் பூமியில் இருந்ததேயில்லை. ஏனென்றால் அவன் தரிசனங்களை மாத்திரம் காணவில்லை, அவன் தேவனோடு முகமுகமாய்ப் பேசினான். 195 ஒரு தீர்க்கதரிசினி மிரியாம் கூட ஒரு நாள் அவனுடைய வார்த்தையை எதிர்த்துப் பேசினாள். அவர், “நீங்கள் தேவனுக்கு பயப்படவில்லையா? என் தாசனாகிய மோசேயைக் கவனியுங்கள். இந்த வேளையில், அவனைப் போல் உலகத்தில் எவருமே இல்லை. மோசேயைப் போல எவரும் ஒருபோதும் இருந்ததில்லை. நான் மோசேயினிடத்தில் பேசுகிறேன். அவன் எப்பொழுதாவது உண்மையல்லாததை கூறினானா? பார்த்தீர்களா? நான் மோசேயினிடத்தில் பேசுகிறேன். நீங்கள் தேவனுக்கு பயப்படவில்லையா? அவனுக்கு விரோதமாக ஒரு வார்த்தையும் நீ பேசாதே” என்றார். அப்பொழுது அவள் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டு மரித்துக் கொண்டிருந்தாள். அதன்பின்னர் அவள் நீண்ட காலம் வாழவில்லை. மோசே அவளுக்காக ஜெபித்தான்.

92196 மோசே நூற்று இருபது வருட ஊழியத்தில் இல்லை எண்பது வருட ஊழியத்தில் மலையின் மேல் ஏறி; நூற்று இருபது ஆண்டுகள் ஜீவித்து, மலைகளின் மேல் ஏறி, மரித்து, பள்ளத்தாக்கில் அடக்கம் பண்ணப்பட்டான். ஆனால் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவன் மேல் இருந்தது. ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் கழித்து, இதோ அவன் மறுரூப மலையின் மேல் நின்று கொண்டிருக்கிறான். ஆமென். அவன் என்னவாயிருந்தான்? அவன் அந்த உயிர்த்தெழுதலில் சேர்க்கப்பட்டான். நிச்சயமாக, அவன் அப்படித்தான் இருந்தான். அவன் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவனாயிருந்தான். இதோ அவன் நின்று கொண்டிருந்தான்.

93197 யோபு, ஆபிரகாம், ஈசாக்கு, உயிர்த்தெழுதலின் நாளில் இருந்த பரிசுத்தவான்களைப் பாருங்கள், அந்த மகத்தான காலை வேளை வரப்போகிறது என்பதை யோபுவும் அவர்கள் எல்லோருமே அறிந்திருந்தனர். அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்று கிறிஸ்துவுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கூறினான். அது, உண்மையாகவே, ஆதியாகமத்திற்கு முன்பே எழுதப்பட்ட யோபுவின் புத்தகம், வேதாகமத்தில் உள்ள மிகப் பழமையான புத்தகம் என்று அவர்கள் கூறுகின்றனர். 198 நாம் இப்பொழுது சோதனைகளை கடந்து செல்வது போல, அவனுடைய சோதனைகளை அவன் கடந்து சென்றான். அவனுடைய மனைவியும் கூட, பூமியில் அவனுக்கு மிக நெருக்கமாய் இருந்தவள், “நீர் ஏன் தேவனை தூஷித்து, மரிக்கக்கூடாது?” என்று கேட்டாள். 199 அவன், “நீ பைத்தியக்கார ஸ்திரீயைப் பேசுகிறது போல பேசுகிறாய். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக” என்றான். 200 அதன்பின்னர் தேவனுடைய ஆவி அவன் மேல் வந்தபோது, அவன் தீர்க்கதரிசனம் உரைக்கத் துவங்கினான், அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாட்களில் இந்தப் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும், நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைக் காண்பேன்” என்றான். அவன் தன்னை அடக்கம்பண்ண ஒரு இடத்தை உண்டாக்கிக் கொண்டான். அவன், “நாங்கள் இந்த நிலத்தை வாங்குவோம்” என்றான். அவன் தன்னை அடக்கம்பண்ண அங்கே அதை வாங்கினான்.

94201 பிற்பாடு ஆபிரகாம் என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் தோன்றினான். சபை வளர்ந்துகொண்டே, மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆபிரகாம், சரி, இப்பொழுது, அவன் தேவனுடைய வல்லமைகளையும், கூட உடையவனாயிருந்தான், நித்திய ஜீவன், நித்தியம், ஏனென்றால் தேவன் அவனை அழைத்தார். இப்பொழுது கவனியுங்கள். அவன் மரித்தபோது, அல்லது சாராள் மரித்தபோது, அவன் பாலஸ்தீனாவில் யோபுவின் கல்லறைக்கு அருகில் ஒரு துண்டு நிலத்தை வாங்கி, சாராளை அடக்கம் பண்ணினான். ஆபிரகாம் மரித்து, சாராளோடு அடக்கம் பண்ணப்பட்டான். ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்—பெற்றான். 202 ஈசாக்கு, அவன் மரித்தபோது, அவன் ஆபிரகாமோடு, அதே நிலத்தில் நித்திரையடைந்தான். இப்பொழுது, ஈசாக்கு யாக்கோபைப் பெற்றெடுத்தபோது… 203 203 யாக்கோபு வெகு தொலைவில் எகிப்தில் மரித்துப் போனான். ஆனால் ஒரு தீர்க்கதரிசியாய், இப்பொழுது, இந்த வல்லமையோடு, இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையோடு, அவன், “யோசேப்பு, நீ என்னை இங்கே அடக்கம் பண்ண வேண்டாம். என் தீர்க்கதரிசி மகனே, இங்கே வா. தேவன் முடமாக்கின இந்த இடுப்பின் மேல் உன்னுடைய கரத்தை வை. நீ என்னை இங்கே அடக்கம்பண்ணமாட்டாய் என்று பரலோகத்தின் தேவன் பேரில் ஆணையிட்டுக் கூறு” என்றான். அந்த மனிதனுக்குள் என்ன இருந்தது? எகிப்து ஏன் வேறு எந்த இடத்தையும் போல சிறப்பாக இல்லை? அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அந்த உயிர்த்தெழுதல் எங்கே இருக்கப்போகிறது என்பதை அவன் அறிந்திருந்தான். எகிப்தில் இருக்கப்போவதில்லை; பாலஸ்தீனாவில் இருக்கும். “உன்னுடைய கரங்களை என்னுடைய ஊனமான இடுப்பில் மேல் வைத்து, நான் சேவித்திருக்கிற தேவனின் பேரில் சத்தியம் செய். நீ என்னுடைய தீர்க்கதரிசி குமாரன், அதாவது, நீ என்னுடைய எலும்புகளை இங்கே புதைக்க வேண்டாம். என்னை அக்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் பண்ணு” என்றான்.

95204 யோசேப்பு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், தன்னுடைய முடமான தகப்பனின் மேல் தன் கைகளை வைத்தான். “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன் பேரில் நான் ஆணையிட்டுக் கூறுகிறேன், நான் உன்னை இங்கே அடக்கம் பண்ணமாட்டேன்” என்றான். அவர்கள் அவனை எடுத்து அந்த தேசத்தில் அடக்கம் செய்தனர். ஏன்? ஏன்? 205 யோசேப்பு மரித்தபோது, அவன், “நீங்கள் என்னை இங்கே அடக்கம் பண்ண வேண்டாம். என்னை இங்கே புதைத்து விடாதீர்கள்” என்றான். ஏன்? தேவன் எல்லா இடங்களிலும் தேவனாய் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். யோசேப்பு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன், “என்றோ ஒரு நாள்” என்று கூறினான், கவனியுங்கள், “தேவனாகிய கர்த்தர் மீண்டும் உங்களைச் சந்தித்து, உங்களை இந்த தேசத்திலிருந்து வெளியே கொண்டு செல்வார். நீ போகும்போது, நீ என்னுடைய எலும்புகளை எடுத்துக்கொள்” என்றான். 206 அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களுடைய எலும்புகளில் இருந்தது. ஓ! “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் வாசமாயிருந்தால், அவர் சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” 207 “என்னுடைய எலும்புகளை இங்கே கீழே வைக்காதே. வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர்களோடு அவைகளை அங்கேயே அடக்கம் பண்ணு” என்றான்.

96208 இயேசு இங்கே, வந்தபோது, நான் இங்கே ஒரு வேதவாக்கியத்தை வைத்திருக்கிறேன், மத்தேயு 27:51. இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தபோது, அந்த வருகையை யோபு கண்டு, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களில் அவர் இந்த பூமியின் மேல் நிற்பார். தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தபோதிலும், நான் என் மாம்சத்தில் தேவனைக் காண்பேன். நான் அவரைக் காண்பேன்” என்றான். அவர்கள் அறிந்திருந்தனர். அது ஒரு தீர்க்கதரிசியாயிருந்தது. ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஈசாக்கு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். யாக்கோபு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். யோசேப்பு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவர்கள் தேவனுடைய வார்த்தையின்படி அவருடைய வெளிப்பாட்டை உடையவர்களாயிருந்தனர். அந்த ஈஸ்டர் காலையிலே, அந்த ஒருவர் வந்து, அவரை விசுவாசித்திருந்த யாவரையும் மீட்டபோது, அவர்களும் கூட, வேதாகமத்தின்படியே எழும்பினர்.

97209 அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை யோபின் கல்லறைக்குள் வந்து, அங்கே அவனுடைய எலும்புகளில் ஒரு கரண்டி அளவு தூசி கூட மீதியாக இருக்கவில்லை. அந்த நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அவனுடைய எலும்புகள் அழுகிப் போயிருந்தன. அது—அது திரும்பிச் சென்று, பூமியின் வாயுக்களாக மாறி, ஒரு சாம்பலான தூசியாக அங்கே கிடந்தது. ஆனால், அதே சமயத்தில், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தையின்படி, வாக்குத்தத்தத்தின்படி, நூற்றுக்கணக்கான, நூற்றுக்கணக்கான, ஆம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, கல்லறையிலிருந்து உயிர்ப்பிக்கும் வல்லமை புறப்பட்டு வந்தபோது; யோபு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, எல்லோருமே கல்லறையிலிருந்து அவரோடு வெளியே வந்தனர். 210 வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. பரிசுத்த மத்தேயு 27-ம் அதிகாரம் 51-ம் வசனம், “பூமியின் தூளில் நித்திரையடைந்த அநேக பரிசுத்தவான்கள், அவர் உயிர்த்தெழுந்தபோது, அவர் ஈஸ்டர் காலையன்று எழுந்தபோது, அவரோடு கல்லறைகளை விட்டு வெளியே வந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. ஏன்? அவர்கள் அந்த மறைவான வல்லமையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவர்களாயிருந்தனர், பாருங்கள், மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, உயிர்த்தெழுதலில் அவரோடு சென்றனர். அவரோடு உயிர்த்தெழுதலை அனுபவித்து மகிழ்ந்தனர், ஏனென்றால் அவர்கள் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தனர். அவர்கள் அந்த அசலான ஈஸ்டர் முத்திரையை உடையவர்களாயிருந்தனர். “பாருங்கள்,” நீங்கள், “நான் பழைய ஏற்பாட்டில் வாழ்ந்திருந்தால் நலமாயிருக்கும்” என்று கூறலாம். 211 ஒரு நிமிடம் பொறுங்கள். முதலாம் தெசலோனிக்கேயர்…தெசலோனிக்கேயர் 4-ம் அதிகாரம் 16-ம் வசனத்தை நீங்கள் வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. ஏனென்றால் நாம் இயேசு மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிப்போமேயானால்,” பாவனை விசுவாசம் அல்ல, ஆனால் நாம் அதை விசுவாசித்தால், “அப்படியே அவருக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார்.” 212 அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்ட புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அவருடைய இரண்டாம் வருகையிலும் கூட உயிரத்தெழுவார்கள்; பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் தங்களுடைய எலும்புகளின் மேல் எல்லா உயிர்ப்பிக்கும் வல்லமையோடும், எடுத்துக்கொள்ளப்படுதல், வல்லமைகள் போன்றவை, தேவனைக் குறித்து காண்பித்தன. அந்த தீர்க்கதரிசிகளிடத்தில் தேவனுடைய வார்த்தை வந்தது, அவர்கள் அந்த உயிர்த்தெழுந்த காலையில் அவரோடு; கிறிஸ்து இயேசுவுக்குள் உள்ள ஒவ்வொருவரும் அவருடைய உயிர்த்தெழுதலில் அவரோடு கூட வருவார்கள் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தோடும், எலும்புகளின் மேல் உள்ள தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையோடும் உயிர்த்தெழுந்தனர்.

98213 நாம் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பதில் வியப்பொன்றுமில்லை. நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்பதில் வியப்பொன்றுமில்லை. நாம் சகோதர சகோதரிகளாயிருக்கிறோம். நாம் தேவனுடைய வார்த்தையினால் திருத்தப்பட்டிருக்கிறபடியால், நாம் ஒருவரையொருவர் வெறுக்கக் கூடாது. நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, ஒருவரிலொருவர் மரியாதை செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியும், நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், அது உங்களுக்கு பயனில்லாமல் இருக்கும்.

99214 இப்பொழுது இந்த சபையில் ஒரு சிறிய நபர் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ஒரு சில நாட்களுக்கு முன்பு…அந்த மனிதன் விசுவாசிக்கிறான். அந்த சிறுவனுக்கு காதில் புற்று நோய் இருந்தது, அவன் அதைக் குறித்து ஒன்றுமே கூறமாட்டான். அவன் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தான். நான் மோஸ்லி சகோதரர்களோடும், இங்கே சகோதரன் டாசனோடும், நான் அவனோடு ஒரு வேட்டை பயணத்தில் இருந்தேன். சகோதரன் வில்லியமின் மகன், நாங்கள் இங்கே வேட்டையாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது நான் அவனுடைய காதை நோக்கிப் பார்க்க நேர்ந்தது, அவனுடைய காது முழுவதும் வீங்கியிருப்பதை நான் கண்டேன் நான், “டோனாவன், என்ன விஷயம்? அந்தக் காதிலே!” என்று கேட்டேன். 215 அவன், “சகோதரன் பிரான்ஹாம், இது நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனக்குத் தெரியாது” என்றான். 216 நான் அங்கே அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்தேன். அது அவனுடைய காதில் ஒரு பெரிய புற்று நோயிருந்தது. ஒரு வார்த்தையும் கூறவில்லை; அதைப் பிடித்துக் கொண்டு, “என் சகோதரனே!” என்று நினைத்தேன். அதற்குப் பிறகு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில், அதில் ஒரு வடு கூட இல்லை. அது பரலோகத்தின் தேவனிடத்தில் அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமையினால் அவனுக்கு உண்டான மரியாதை, அந்தப் புற்று நோயைக் கொன்று, அங்கே பின்னால் இருந்த டோனோவான் வீர்ட்ஸின் உயிரைக் காத்தார். அது உண்மை.

100217 இந்த காரியங்கள் என்ன? இங்கே பீனிக்ஸில் உள்ள ஜனங்களே, இங்கே பாருங்கள். இதை விசுவாசித்திருக்கிற ஜனங்களாகிய உங்களைப் பாருங்கள். இதை உடையவர்களாய், உங்கள் மீது தங்களுடைய கரங்களை வைக்கிற ஜனங்களைப் பாருங்கள். என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். அது உயிர்ப்பிக்கும் வல்லமை. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மீது வைப்பார்களேயானால், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, கழுகுக்கு கழுகு, ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது. இப்பொழுது, ஒரு கழுகு ஒரு பருந்துக்கு ஒன்றும் கிரியை செய்யாது. கழுகுக்கு கழுகு, களஞ்சியத்திலிருந்து பரலோகத்திற்கு எழும்புகிறது. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்,” அவர்கள் இருவருமே விசுவாசத்தில் இருக்கும்போது.

101218 அதே தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை இந்த இரண்டு தீர்க்கதரிசிகளிடத்திலும், எலியா மற்றும் எலிசாவில் சுட்டிக்காட்டப்பட்டதைக் காண்க. கவனியுங்கள், அதே வார்த்தை; அவர்களில் ஒருவன் பற்றிக்கொள்ள, மற்றொருவன் எடுத்துக் கொள்ளப்பட்டான். பற்றிக் கொண்டு, எடுத்துக் கொள்ளப்படுங்கள். பார்த்தீர்களா? அவன் எடுத்துக் கொள்ளப்பட்டான். நாம் எடுத்துக்கொள்ளப்படுவோம்; அவர்களோடு எழுந்து, ஆகாயத்தில் சந்திக்கலாம். “அவர்களைச் சந்திக்கும்படி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்.” 219 கவனியுங்கள், ஒரு பறவை தன்னை சமன்படுத்த இரண்டு செட்டைகளை உடையதாயிருக்க வேண்டும். அது சரியா? எலியா எடுத்துக்கொள்ளப்படுதலுக்கான செட்டையோடு இருந்தான், எலியா. எலிசா ஒரு உயிர்த்தெழுதலின் செட்டையோடு இருந்தான். பார்த்தீர்களா? அவைகள் இரண்டும், ஒன்றாக சேர்ந்து, ஜீவித்துக் கொண்டிருக்கிற பரிசுத்தவான்களுக்கும், கடந்துபோன பரிசுத்தவான்களுக்கும் பிரதிநிதித்துவமாயிருக்கின்றன. 220 நினைவிருக்கட்டும், திரைக்குப் பின்னால் உள்ளதை காண உயிர்ப்பிக்கப்பட்டனர். எப்படியாய் இந்த ஜனங்கள் அங்கே முற்காலத்திலே திரைக்குப் பின்னால் நோக்கிப் பார்க்க, இந்த நேரத்தை காண உயிர்ப்பிக்கப்பட்டிருந்தனர்; அந்த தீர்க்கதரிசிகள்!

102221 கடைசி நாட்களில் இந்த ஜனங்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றும், தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள் என்றும் பவுல் கூறினான். அவன் ஒரு தீர்க்கதரிசியாய், உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்தவனாய், அது நிறைவேறுவதை முன் கூட்டியேக் கண்டான். நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் விசுவாசிக்கவில்லையா? அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுக் கொண்டான். 222 இன்றைக்கு உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பாருங்கள், காரியங்களை முன்னறிவிக்கிறது, எந்த ஒரு சம்பவமும் தவறாமல் உள்ளது. ஒரு முறை கூட அது தவறிப் போவதில்லை. உயிர்ப்பிக்கும் வல்லமை; ஒரு மனிதனின் வல்லமையல்ல; தேவனுடைய வல்லமை. வல்லமை, ஈஸ்டரின் உரிமைப் பத்திரம், நாம் ஏற்கனவே அவரோடு உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்று நமக்கு உத்தரவாதம் அளிக்கும்படிக்கு, உரிமைப் பத்திரத்தை திருப்பி அனுப்பிய உயிர்த்தெழுந்த இயேசு.

103223 கவனியுங்கள், இங்குள்ள வர்த்தக புருஷர்களின், காலத்தின் திரைக்குப் பின்னால் நோக்கிப் பார்த்தல் என்ற சிறு புத்தகம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 224 எனக்கு வயதாகத் துவங்கி, என்னுடைய நாட்கள் குறைந்துகொண்டே வருகிறதை அறிந்து, நான் உண்மையாகவே… சற்று முன்னர் அந்தப் பெண்மணிகள் பாடின அந்த சிறு பாடலை நான் இசைக்கிறேன். நான் அதை ஏறக்குறைய பதினெட்டு, இருபது வருடங்களாக வைத்திருக்கிறேன். கர்த்தாவே, நான் அதைப் பேச விரும்புகிறேன், அதன்பின்னர் அங்கிருந்து வெளியே சென்று ஜெபிக்கச் செல்லும்போது, அப்பொழுது அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை வருகிறது, நான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன், நான் அங்கே மேலே நோக்கிப் பார்த்தேன், நான், “அங்கே பாருங்கள்!” என்று கூறுகிறேன். 225 நான் அந்த காலையில், எடுத்துக்கொள்ளப்பட்டதை நினைவு கூருகிறேன். அங்கே பின்னால் அமர்ந்திருக்கிற என்னுடைய மனைவி, அன்று காலையில் என்னோடு அதே படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தாள். நான் எழுப்பப்பட்டு, மேலே நோக்கிப் பார்த்தேன். இதோ அவள், உறங்கிக் கொண்டிருக்கிறாள். நான், “நான் கர்த்தருக்காக ஏதாவது காரியத்தை செய்யப் போவதாயிருந்தால், நீ சீக்கிரமாகச் செய். நீ ஐம்பதைக் கடந்துவிட்டாய்” என்றேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னை எடுத்துக்கொண்டார், நான் அங்கே நோக்கிப் பார்த்தேன். ஒரு சுவிசேஷ ஊழியக்காரனாக, நான் இங்கே இந்த மேசையின் அருகே நின்று கொண்டிருப்பது போன்றே, இந்த பரிசுத்த புத்தகம் இங்கே வைக்கப்பட்டிருக்க, நான் அந்த பரிசுத்தவான்களைக் கண்டேன்.

104226 கர்த்தருடைய நாமத்தில் நான் உங்களிடத்தில் உரைத்தது அவ்வாறு நடக்காமல் இருந்திருக்கிறதா? நான் அப்படி உரைத்திருந்தால், நீங்கள் அதைக் குறித்து என்னிடம் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும், அது மேடையில், பரிபூரணமாக இருந்திருக்கிறதா? ஒவ்வொரு முறையும், அவர் கூறினது போலவே அது நடந்துள்ளதா? இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருந்தது. 227 நான் அங்கே நின்று, அந்த நேரத்தில் பார்த்தேன். பல்லாயிரக்கணக்கானோர் வந்து, வாலிப புருஷரும், ஸ்திரீகளும் ஓடி வந்து, தங்களுடைய கரங்களை என்னைச் சுற்றி போட்டுக்கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டு வருவதை நான் கண்டிருக்கிறேன். நான் திரும்பிப் பார்த்து, நான் படுக்கையில் கிடப்பதைக் காண்கிறேன். “ஓ, கர்த்தாவே, நான் காலத்தின் திரைக்கு அப்பால் நோக்கிப் பார்க்கட்டும்.” 228 அது என்ன? அது நம்மை மேலே எடுத்துக் கொள்ளும் உயிர்பிக்கும் வல்லமையாய் உள்ளது. அந்த மகத்தான உயிர்ப்பிக்கும் வல்லமை. இந்த கடைசி நாட்களில் உயிர்ப்பிக்கும் வல்லமை வருகிறது.

105229 அதற்காகத்தான் நான் இப்பொழுது, அரிசோனாவில் இருக்கிறேன். அநேக ஜனங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், இங்கே பீனிக்ஸில் நின்று, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று இந்த மேடையிலிருந்து நான் உங்களிடம் கூறக் கேட்டீர்கள். எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? “இப்பொழுது போ. ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.” 230 ஏழு தூதர்கள் வருவதை நான் கண்டேன். இருபத்தேழு மைல் உயரமும், முப்பது மைல் தூரமுமுள்ள மூடுபனி மிதந்து வந்தபோது, லைஃப் என்ற பத்திரிக்கை அதை வெளியிடவில்லையா? ஃபிரட் சாத்மன், இந்த மற்ற, ஜீன் நார்மன், அவர்கள், அங்கே பின்னால் அமர்ந்திருக்கவில்லையா? அந்த ஏழு தூதர்கள் அங்கே மலையின் மேல் தோன்றினபோது, அங்கே நின்றார்கள். அது அந்தவிதமாக, மைல்களுக்கு மலைகளை அசைத்தது. அங்கே ஏழு தூதர்கள் நின்றனர். என்னுடைய கரத்தில் ஒரு பட்டயம் விழுந்தபோது “வீட்டிற்குச் சென்று, கொடுக்கப்பட்டிருக்கிற இந்த ஏழு முத்திரைகளைத் திற” என்று கூறப்பட்டது. இங்கே அவைகள், விவாகமும் விவாகரத்தும் என்னும் உண்மையான இரகசியம், சர்ப்பத்தின் வித்து, இந்த எல்லாக் காரியங்களைக் குறித்தும் குழப்பப்பட்டிருக்கிறார்கள். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். 231 அது என்ன? உயிர்ப்பிக்கும் வல்லமை சபைக்கு வருகிறது, நாம் நெருங்கிக்கொண்டிருக்கிற இந்த வேளையில், அவளை ஆயத்தப்படுத்துகிறது. உயிர்ப்பிக்கும் வல்லமை! ஓ தேவனே, அதைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். அதை விசுவாசிக்க எங்களுக்கு உதவி செய்யும். 232 பாருங்கள், அது உங்களுக்கு ஏதாவது நன்மை செய்யப் போகின்றதா அல்லது இல்லையா என்பது நீங்கள் அதற்கு என்ன மனப்பான்மையை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. பார்த்தீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை என்றால், அது உங்களுக்கு ஒரு துளி நன்மையையும் செய்யாது.

106233 எப்படி வயதான சாமுவேல் அங்கே அந்த ஜனங்களுக்கு முன்பாக நின்று, “நான் எப்போதாவது கர்த்தருடைய நாமத்தில் உங்களிடம் ஏதாவது சொல்லியிருக்கிறது நடக்காமல் போனதுண்டோ? நான் எப்பொழுதாவது உங்களுடைய பணத்திற்காக, ஜீவிக்கும்படி கெஞ்சினதுண்டா?” என்று கேட்டேன். “இல்லை, ஆனால் எங்களுக்கு எப்படியும் ராஜா வேண்டும்” என்றனர். 234 அந்த விதமாகத்தான் சபையும் இன்றைக்கு உள்ளது. அவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களை விரும்புகின்றனர். அவர்கள் உங்களுக்கு ஒரு சிறிதளவும் கவனம் செலுத்தமாட்டார்கள். அவர்கள் சரியாக சுற்றி நடக்கிறார்கள். நல்லது, உயிர்ப்பிக்கும் வல்லமை அங்கே இல்லை என்பதையே அது காண்பிக்கிறது. 235 “ஓ,” நீங்களோ, “பாருங்கள், நான் அந்நிய பாஷைகளில் பேசினேன். நான் குதித்து சத்தமிட்டேன்” என்று கூறுகிறீர்கள். அதெல்லாம் அருமையாயிருக்கிறது. 236 ஆனால் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அங்கே இருக்குமானால், நீங்கள் அடையாளம் கண்டு கொள்வீர்கள். அந்த சிறிய கழுகைப் போல; அது அவனுடைய தாய். அதுதான் வார்த்தை. அது கர்த்தர் உரைக்கிறதாவது. அதைத்தான் தேவன் வாக்குப்பண்ணினார். அதுதான் முன்னுரைக்கப்பட்டது. சரியாக அதுதான் சம்பவித்தது. நாம் எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி அப்பாற்பட்டவர்களாயிருக்கிறோம், இப்பொழுது மறைவான உயிர்த்தெழுதலில் இருக்கிறோம், பரிசுத்தவான்கள் ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட ஆயத்தமாயிருக்கின்றனர்.

107237 எனவே, இயேசு இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் மிகவும் நிறைந்தவராய், “நீங்கள் நாற்பது வருடங்களாக கட்டின இந்த ஆலயத்தை உங்களால் இடித்துப் போட முடிந்தால், நான் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவேன்” என்றார். 238 ஏன்? ஏன் இயேசுவால் அதைக் கூற முடிந்தது? உங்களைக் கேட்க விரும்புகிறேன். இயேசு ஏன் அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூற முடிந்தது? அவர் அவ்வாறு இருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆமென். நான் அதை உங்களுடைய மனதில் பதிய வைக்க விரும்புகிறேன். தான் யாரென்பதை அவர் அறிந்திருந்தார். தேவன் அவரைக் குறித்து அங்கே எழுதியிருந்த ஒவ்வொரு வார்த்தையையும், அவர் அதை நிறைவேற்றியிருந்தார் என்பதையும் அவர் அறிந்திருந்தார். தாவீது அவரைக் குறித்து பேசியிருந்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். 239 வேதம் கூறுகிறவர்கள் நீங்கள்தான் என்பதை நீங்கள் அறிவீர்களா? கிறிஸ்துவுக்குள் உங்களுடைய ஸ்தானம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள். இந்த வார்த்தை உங்களுக்கு அன்றாட ஜீவியத்தைப் போன்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஏன், நிச்சயமாக. அது உங்களுடையது. நீ ஒரு கழுகு. அதுவே உங்களுடைய ஆகாரமாயுள்ளது.

108240 தேவனுடைய வல்லமையினால் அவர் அதைச் செய்வார் என்பதை அவர் அறிந்திருந்தார், ஏனென்றால் அவர் அதைச் செய்வார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தினால்தான் அவர், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். நான் இன்னும் மூன்று நாட்களுக்குள் அதை எழுப்புவேன் என்று கூற பயப்படவில்லை, ஏனென்றால் தாவீது, ‘அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டேன் என்றும், என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டேன்’” என்றும் கூறினான். அவருடைய சரீரத்தின் ஒரு உயிரணுவும் அழியாது என்பதை அவர் அறிந்திருந்தார். அது எழுபத்திரண்டு மணி நேரத்தில் அழியத் துவங்குகிறது. அவர், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள். நான் இன்னும் மூன்று நாட்களுக்குள் அதை எழுப்புவேன்” என்றார். ஏன்? அவர் ஒவ்வொரு வார்த்தையையும் உயிர்ப்பிக்கும் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் அவ்வளவாய் நிறைந்திருந்தார். அவர் திரும்பிப் பார்த்து, தேவன் அவரைக் குறித்து எழுதிய ஒவ்வொரு வார்த்தையையும் கண்டார், அவர் அதை நிறைவேற்றினார் என்று தீர்க்கதரிசி கூறினார். அதுவும் கூட நிறைவேறும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

109241 இப்பொழுது, தேவன் கூறின ஒவ்வொரு வார்த்தைக்கும், உங்களுடைய ஆவி அதற்கு “ஆமென்” என்று கூறியுள்ளது, ஒரு விசுவாசி என்ற முறையில், அது உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? 242 நீங்கள், “நல்லது, என்னுடைய சபை வித்தியாசமாகப் போதிக்கிறது” என்று கூறுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் பருந்தே, ஜாக்கிரதையாயிரு. 243 கவனியுங்கள். கழுகுகள் விசுவாசிக்கின்றன. அவர்களுக்கு எந்த கேள்வியும் இல்லை. அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். கவனியுங்கள்.

110244 இப்பொழுது, அது சம்பவிக்கும் என்று வார்த்தை கூறியிருந்தபடியால், அது சம்பவிக்கும் என்று அவர் அறிந்திருந்தார். அவரைக் குறித்து எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற வேண்டியதாயிருந்தது. அவர் தீர்க்கதரிசனம் உரைத்திருந்த பரிசுத்த தீர்க்கதரிசிகளின் மூலம், தேவனுடைய வல்லமையினால் அது எழுதப்பட்டது என்பதை அவர் அறிந்திருந்தார். 245 தீர்க்கதரிசனம் ஒருபோதும் தவறிப்போவதில்லை. அது முடியாது. தேவனுடைய வார்த்தை தவறிப்போக முடியாது. அது…ஆவியில் எழுதப்பட்டிருக்கிறதே… இப்பொழுதும் கூட, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி, அது உங்களுடைய சரீரத்தில், உங்களுடைய சரீரத்தில் வாசம் பண்ணினால், அது உங்களுடைய அழிவுள்ள சரீரத்தையும் உயிர்ப்பிக்கும். அதன்பின்னர், அதை சுட்டு, அதை எரித்து, நீங்கள் விரும்புகிற எந்த காரியத்தையும் செய்து, அதை பரிகசித்து, அதை கிழித்துப் போட்டு, அதை புறக்கணித்து, நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். தேவன் அதை எழுப்புவார், ஏனென்றால் அவர் எழுப்புவதாகக் கூறினார். தேவனுடைய பரிசுத்தவான்கள் ஒவ்வொருவரும் அந்த வாக்குத்தத்தத்தை தனக்குள்ளாக உடையவர்களாயிருந்து, அது சத்தியம் என்பதை அறிந்திருக்கின்றனர். எனவே, சகோதரனே, பயப்படாதே, நாம் ஏற்கனவே ஈஸ்டரில் இருக்கிறோம்.

111246 நாம் முடிப்பதற்கு முன்பு, இப்பொழுது மறுரூபமாகுதலைப் பாருங்கள். மறுரூபம், மறுரூபமாகுதல், நாம் யாவரும் அங்கே மறுரூபமாகுதலில் சுட்டிக்காட்டப்படுகிறோம். இன்றைக்கு நாம் என்ன காண்கிறோம் என்பதைப் பாருங்கள். தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை இன்றைக்கு நாம் காண்கிறோம் என்பதைக் கவனியுங்கள். நாங்கள் எல்லோரும் அங்கிருந்தோம். அங்கே மரித்த பரிசுத்தவான்கள் மோசேக்குள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்; உயிர்த்தெழுதல் உண்டானது; இயேசு கிறிஸ்து மகிமைப்படுத்தப்பட்டார். எலிசா…மோசே, எலியா, இயேசு, மூவரும் மலையின் மேல் நின்று கொண்டிருந்தனர்; மரித்த பரிசுத்தவான்கள், எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள்; இயேசுவானவர் மகிமைப்படுத்தப்பட்டார். ஓ, என்னே!

112247 பாருங்கள், நீங்கள் கூறுங்கள்…நான் ஒரு நபர் கூறக் கேட்டேன். அவர்கள், “ஜனங்களாகிய நீங்கள், ஏன், உங்களுக்கு இந்தவிதமான வல்லமை இருந்தால், நீங்கள் வெளியே போய், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை ஜனங்களுக்கு சொல்ல வேண்டும்” என்று கூறுவார்கள். ஒரு உண்மையான கிறிஸ்தவன் அதைப் போன்ற ஒரு காரியத்தைக் கூறுவதிலிருந்து அது வெகு தொலைவில் இருப்பதாக. பார்த்தீர்களா? நிச்சயமாகவே, நாம் எந்த வல்லமையையும் உரிமை கோருகிறதில்லை.… 248 ஆனால் நாம் ஒரு காரியத்தைச் செய்கிறோம். இந்த எல்லா வல்லமையும் தங்கள் மேலிருக்க, அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தபோது, “அவர்கள் இயேசுவை மாத்திரமே கண்டார்கள்.” உண்மையான, உண்மையான விசுவாசி, தான் ஒரு ஸ்தாபனத்தை ஆதரிக்கிறானா, அல்லது அதைப் பற்றி எதுவும் இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. நீங்கள் மகிமையடைந்த கிறிஸ்துவைக் காண வேண்டும், ஒரு காரியத்தை மாத்திரமே அவர் விரும்புகிறார், அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒரு உண்மையான, உண்மையான மறுரூப மலை அனுபவம் இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறது. அது மோசேயை மகிமைப்படுத்தவில்லை, எலியாவை மகிமைப்படுத்தவில்லை, அவர்களை மகிமைப்படுத்தவில்லை, வேறெதையும் மகிமைப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் மகிமையடைந்த கிறிஸ்துவைக் கண்டனர். எந்த ஒரு உண்மையான விசுவாசியும், இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்த, அந்த விதமாகவே அவனுடைய இருதயத்தில் இருக்கிறது. அதைத்தான் அவன் ஜனங்கள் காணும்படி முயற்சிக்கிறான். 249 “நல்லது, நீங்கள் வந்து நமது குழுக்களில் சேர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் வந்தால் இதைச் செய்யுங்கள் அல்லது அதைச் செய்யுங்கள்” என்று கூற முடியாது. ஓ, அதைச் செய்யாதீர்கள். அதைச் செய்யாதீர்கள். 250 பெரிதுபடுத்தப்பட்ட, கிறிஸ்துவாகிய, தேவனுடைய வார்த்தையைப் பாருங்கள்; இந்த உயிர்த்தெழுதலின் மகத்தான வேளையில், இந்த நாளின் வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வேண்டும். கவனியுங்கள். நாம் அவருடைய மாம்சத்தில் ஒரு மாம்சமாகவும், அவருடைய எலும்புகளில் எலும்புமாகவும், அவரோடு இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வது அவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. என்னே ஒரு சந்தோஷம்! ஒரு உண்மையான விசுவாசி அதைக் குறித்து மாத்திரமே கவலை கொள்கிறான்.

113251 அவர்கள் ஒரு ஸ்தாபனத்தைக் குறித்து கவலைப்படுகிறதில்லை. அவர்கள் ஒரு ஸ்தாபன அமைப்பைக் குறித்து கவலை கொள்வதில்லை. மற்ற பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் குறித்து அவர்கள் கவலைப்படுகிறதில்லை. அவர்கள் கவலைப்படுகிறதில்லை. நிச்சயமாக இல்லை. மற்ற ஸ்திரீகள் செய்கிற காரியங்களை அவர்கள் செய்யமாட்டார்கள். அவர்கள்…இந்த மனிதர்கள் தங்களுடைய காரியங்களைச் செய்யமாட்டார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஸ்தாபனத்தோடு சுற்றித் திரிந்து குழந்தையைப் போல் இருக்கமாட்டார்கள், வெளியே தள்ளப்படுவதை குறித்தும், அவர்களுக்கு உணவு சீட்டு கிடைக்காது என்றும் பயப்படுகின்றனர். அவர்கள் தங்களுடைய காரியங்களைக் குறித்து கவலை கொள்வதில்லை. அது அவர்களுக்கு அர்த்தமற்றது. 252 இயேசு கிறிஸ்து மகிமைப்படுவதைக் காண வேண்டும் என்ற ஒரே ஒரு இருதயத்தின் வாஞ்சை மாத்திரமே உண்டு. அவர்களுடைய நடத்தை தேவனோடு இருக்க வேண்டும். அது முற்றிலும் அவ்வாறு இருக்க வேண்டுமேயன்றி வேறொன்றுமில்லை, ஆனால் இயேசு கிறிஸ்துவின் மகிமையாக இருக்க வேண்டும். இயேசு என்றால் என்ன? வார்த்தை. அது சரியா? இப்பொழுது, கவனியுங்கள், அவருடைய அதே ரூபகாரப்படுத்தப்பட்ட முறையைக் கண்டு, அவருடைய உயிர்த்தெழுதலை நிரூபிக்கிறார். இப்பொழுது அது என்ன? உங்களுடைய ஜீவியத்தைக் காணும்போது, அவர் கூறியுள்ள அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையினால், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்,” அவர் இன்னமும் உயிரோடிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது.

114253 தேசத்தில் உள்ள ஒவ்வொரு கதவும் எனக்காக அடைக்கப்பட்டிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அதாவது, நான்…நான் கூறினது போல, அன்றொரு நாள், எனக்கு ஐம்பத்தாறு வயதானது. நான் மேலே செல்லக் கூடும். எனக்கு மாரடைப்பு ஏற்படும் வயதில் இருக்கிறேன். நான் இந்த மற்ற எல்லா காலங்களிலும், மற்ற ஒவ்வொரு காரியத்திலும் இருக்கிறேன். நல்லது, என்ன வித்தியாசம்? நான் ஒரு சிறுவனாக இருந்தபோது அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. என்னுடைய எண் எந்த மணி நேரத்தில் அழைக்கப்பட்டு, என்னுடைய அட்டை அடுக்கு சட்டத்திலிருந்து வெளியே எடுக்கப்படுகிறது என்பதும் இப்பொழுது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. நான் பூமியில் எப்போதாவது வாழ்ந்தேன் என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது எனக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. நான் இங்கே பூமியின் மேல் இருந்தேன் என்று கூற அவர்களுக்கு பெரிய நினைவுச் சின்னங்களும், பெரிய கட்டிடங்களும் இருக்க வேண்டியதில்லை.

115254 “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்ற ஒரே ஒரு காரியத்தையே அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். என் இருதயத்தில் நான் அவருடைய உரிமைப் பத்திரத்தை வைத்திருக்கிறேன். நான் அதை அறிவேன், என்றோ ஒரு நாள்…நான் சமுத்திரத்தில் மூழ்கடிக்கப்படலாம். நான் ஆப்பிரிக்காவில் கொல்லப்படலாம். எனக்கு என்ன நேரிடும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு காரியத்தை நான் அறிவேன், நான் உரிமைப் பத்திரத்தை வைத்திருக்கிறேன். அல்லேலூயா! ஒவ்வொரு கதவும் மூடப்படலாம். அது எனக்கு ஒரு சிறு வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. நான் ஏதோ ஒரு மனிதனையோ அல்லது ஏதோ ஒரு ஸ்தாபனத்தையோ, அல்லது என்னையோ அல்லது எந்தக் குழுக்களையோ அல்லது வேறெதையுமே மகிமைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கவில்லை. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்திருப்பதையும், அவருடைய ஆவி ஜீவிக்கிறது என்பதையும் ஜனங்கள் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.”

116255 இயேசு, “பயப்படாதே. நான் மரித்தேன், ஆனால் நான் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறேன்” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லையே. 256 “நாம் இப்பொழுது அவரால் மீட்கப்பட்டு, அவரோடு உயிரோடெழுந்திருக்கிறோம், இப்பொழுது அவருக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் (இனி இருப்போம் என்று அல்ல)” என்று கூறினார். இப்பொழுது, நாம் இந்த ஆவியை நமக்குள்ளாக உடையவர்களாயிருக்கும்போது, உரிமைப் பத்திரமானது, எல்லா சந்தேகங்களும் நிவிர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்பதைக் காண்பிக்கிறது. என்ன? கிறிஸ்து ஜீவிக்கிறார். நான் ஜீவிக்கவில்லை; நான் அல்ல. “கிறிஸ்து எனக்குள் ஜீவிக்கிறார்.” நீங்கள் ஜீவிப்பதில்லை, ஆனால் கிறிஸ்து உங்களுக்குள் ஜீவிக்கிறார்; ஏனென்றால் அவருடைய ஜீவிக்கிற வார்த்தை உங்களுக்குள் ஜீவித்து, உங்களுடைய எல்லா மெதோடிஸ்டுகளின் கணக்குகளையும் காட்டுகிறது, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே கருத்துக்கள், மற்ற யாவும் அடிக்கப்பட்டிருந்தன. இயேசு கிறிஸ்து…

117257 மறுரூப மலையில் நடந்தது போல, எல்லா தீர்க்கதரிசிகளும் மற்றும் மற்ற ஒவ்வொரு காரியமும் முடிவுற்றுவிட்டன. லூத்தரன், மெத்தோடிஸ்டு, பிரஸ்பிடேரியன் ஆகியோரின் நாட்களெல்லாம், அவர்கள் எல்லாம் சரிதான், ஆனால், “இவர் என்னுடைய நேசகுமாரன். அவருக்கு செவிகொடுங்கள்,” இது இந்த மணி நேரத்தின் வார்த்தை, முத்திரைகளின் வேளையாகும். அநேக ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் யாவும்… காலத்தின் அந்த மகத்தான கூர்நுனிக் கோபுரம், தலைக்கல்லானது, தாவீதின் நட்சத்திரம் அதனுடைய ஸ்தானத்தில் தங்கும்படியாக அது செதுக்கப்பட வேண்டும். ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான சபையானது கழுகின் செட்டைகளைப் போல எழும்பி, அப்பால் மகிமைக்குள் நிரம்பியிருக்கும். ஆம். 258 இப்பொழுது, இப்பொழுது, நம்முடைய சரீரங்களில்: நவமான பாஷைகளைப் பேசுதல்; தீர்க்கதரிசனம் உரைத்து, முன் கூட்டியே தரிசனம் காண்கிறோம்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும்போது, அவர்கள் சுகமடைகிறார்கள்; உலகமும், உலகத்தின் எல்லாக் காரியங்களையும், மரித்துப்போய்விட்டன. நாம் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம், நாம் இப்பொழுது அதிகாரத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். அல்லேலூயா! அந்த உயிர்த்தெழுந்த காலையில், மரணத்தின் முத்திரைகள் உடைக்கப்படும்போது, நாம் எழும்புவோம், (அல்லேலூயா!) நாம் எழும்புவோம். (ஆமென்!)

118259 அதைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்க நரகத்தில் போதுமான பிசாசுகள் இல்லை. இந்த வேளைக்காக நாம் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள். தேவனுடைய வார்த்தை சரியாக நம் மூலமாக தம்மை வெளிப்படுத்துகிறது. நாம் தேவனுடைய வார்த்தை வாக்குத்தத்தத்தினால் தேவனுடைய பிரசன்னத்தில் ஜீவிக்கிறோம். நரகத்தில் ஒரு பிசாசும் நான் எழுப்புவதைத் தடுக்க முடியாது. அந்த காலையில், என் முகத்தில் அடைக்க ஒரு கதவையும் அவனால் மூட முடியாது. முத்திரைகள் உடைக்கப்பட்டுவிட்டன. அல்லேலூயா! 260 நான் விடுதலையாகிவிட்டேன். நான் ஒரு கழுகு. நான் இனி ஒரு கூண்டில் இல்லை, ஆனால் நான் விடுதலையாயிருக்கிறேன். நான் மரித்தோரிலிருந்து, இயேசு கிறிஸ்துவின் புதிய ஜீவனுக்குள்ளாக எழுந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, இங்கே அமர்ந்துள்ள ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீகளும், பையனும் அல்லது பெண்ணும், அந்த தேவனுடைய ஆவிக்குள்ளாக நிரப்பப்பட்டு, கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கழுகாயிருக்கிறீர்கள்.

119261 நாம் இன்றைக்கு உயிரோடிருந்து, என்றென்றைக்குமாய் உயிர்த்தெழுதலை அனுபவித்து மகிழ்கிறோம். அவர் ஜீவிக்கிறபடியினால், நாமும் கூட உயிரோடிருக்கிறோம். அவர் நமக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறார், நம்மை உயிரடையச் செய்கிறார். அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர், நம்முடைய சரீரங்களில் வாசம் செய்து, சாவுக்கேதுவான நம்முடைய சரீரங்களை, அந்த மகத்தான நித்திய ஈஸ்டரில் உயிர்பிக்கிறார். தேவனுக்கு மகிமை! 262 ஓ, உலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்புகிற எதையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் இயேசுவை எனக்குக் கொடுங்கள். ஆமென். நான் அவரை நேசிக்கிறேன். அவர் எனக்கு, முழு உலகமுமாயிருக்கிறார். 263 நீங்கள் அவருடைய ஒரு பாகமாயிருக்கிறபடியால், நான் உங்களுடைய ஒரு பாகமாயிருக்கிறேன், நீங்கள் என்னுடைய ஒரு பாகமாயிருக்கிறீர்கள். மேலும், ஒன்று சேர்ந்து, நாம் அவருடைய ஒரு பாகமாக இருக்கிறோம்.

120264 ஓ, கிறிஸ்தவனே, நமக்கு என்னே ஒரு வாய்ப்பு உள்ளது! பரிசுத்த பவுல் கனவு காணாத வாய்ப்புகள் நமக்குக் கிடைத்துள்ளன. ஏனோக்கும், எலியாவும், அவர்கள் எல்லோருமே ஒருபோதும் பெற்றிராத வாய்ப்புகள் நமக்கு உண்டு. இப்பொழுது நமக்குள்ள வாய்ப்புகள்! 265 அங்கே அப்பால் எங்கோ ஒரு சிறு ஆடு உள்ளது, அந்த ஒன்று மந்தைக்குள்ளாக வரும்வரை அவர் திருப்தியடையமாட்டார். தேவனுடைய ஒத்தாசையினாலும், ஒரு தரிசனத்தினாலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதினாலும், நான் சமுத்திரத்தைக் கடந்து திரும்பிக் கொண்டிருக்கிறேன். அந்த கடைசி குட்டி ஆடு அங்கே கீழே உள்ள ஒரு கறுப்பு ஆடாக இருக்கலாம், எனக்குத் தெரிந்தவரை, அவர்களுக்கு ஒரு ஆத்துமா இருப்பதாகக் கூட அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் தேவன் வேறு விதமாக அறிந்திருக்கிறார். என் ஜீவியத்தின் கடைசி நாள் வரைக்கும், அது எங்கிருந்தாலும் அதைக் கண்டறியும்படி நான் தேடப் போகிறேன்.

121266 இந்த கண்டிப்பான காரியங்களைக் கூறி நான் என்னுடைய சகோதரர்கள் எவரையும் ஒருபோதும் புண்படுத்தியதில்லை என்று நான் நம்புகிறேன். நான்…நீங்கள் சபைக்குச் செல்லக்கூடாது என்று நான் விரும்பவில்லை. நிச்சயமாகவே, நீங்கள் சபைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் செல்லும் சபைக்கு தொடர்ந்து செல்லுங்கள். ஆனால் அது உங்களுடைய நம்பிக்கையாயிருக்கும்படி விட்டுவிடாதீர்கள், “நல்லது, நான் இதைச் சேர்ந்தவன் அல்லது நான் அதைச் சேர்ந்தவன்” என்று கூற வேண்டாம். ஓ, சகோதரனே, சகோதரியே, கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள். சபைக்குச் செல்லுங்கள், ஆனால் கிறிஸ்துவுக்கு சொந்தமாயிருங்கள். ஆமென். 267 அது—அந்த மறைவான வல்லமை உங்களுக்குள் இல்லையென்றால், இப்பொழுதே உங்களை ஜீவனுக்கு உயிர்ப்பிக்கட்டும். இப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்களா? 268 இந்த அறை முழுமையாய் அதைக் கொண்டுள்ளது. நான் அதை என் மீது முழுவதுமாக உணருகிறேன். அது இங்கே உள்ளது என்பதை நான் அறிவேன், தேவனுடைய வல்லமை, தரிசனங்களின் மகத்தான ஞானதிருஷ்டிக்காரன், அந்த மகத்தான முன்னறிவிப்பாளர் காரியங்களை கூற முடிந்தாலும், அது ஒருபோதும் தவறிப்போகாது, பேசக் கூடிய மகத்தான ஒன்று, எந்த மனிதனும் அதை “இல்லை” என்று கூற முடியாது, ஒரு மனிதனால் திறக்க முடியாது, எந்த மனிதனால் மூட முடியாது. மரித்தவர் இப்பொழுது உயிரோடிருக்கிறார், இன்றைக்கு, இங்கே பீனிக்ஸில், புதிதாகப் பிறந்த மலர்களின் மத்தியில் உலாவிக்கொண்டிருக்கிறார்.

122269 அந்த ஈஸ்டர் காலையில் ஒவ்வொரு லீலிப் புஷ்பத்தின் கன்னத்திலும், ஒவ்வொரு ரோஜாவின் கன்னத்திலும் சிறு பனித் துளிகள் படிந்திருந்ததில் வியப்பொன்றுமில்லை. ஏன்? அது பூமியினூடாக கொண்டு வரப்பட்டதையும், எங்கோ ஒரு நித்திய மலர் மலர்ந்து கொண்டிருப்பதையும் அது அறிந்திருந்தது. அது என்றோ ஒரு நாள் அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும். அது உண்மை. 270 நம்முடைய கன்னங்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தால், வியப்பொன்றுமில்லை. அதே மறுரூபப்படுத்தும் வல்லமையை நாம் உணரும்போது, நம்முடைய இருதயங்கள் நடுங்கி குலுங்குவதில் வியப்பொன்றுமில்லை வானத்திலிருந்து வருகிற ஒரு பாஷையில் நாங்கள் பேச அனுமதித்ததற்காகவும் கூட, எங்களுடைய ஜீவியத்திற்குள் வந்து எங்களை நிரப்புகிறது. 271 நாம் அங்கே அவருடைய பிரசன்னத்திற்குள்ளாக உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறோம், தீர்க்கதரிசனம் உரைத்தல், முன்னறிதல், முன்னுரைத்தல், மற்றும் ஒவ்வொரு காரியமும் வார்த்தையோடு பரிபூரணமாக பொருந்துகிறது. அது அதற்கு முரணாக தீர்க்கதரிசனம் உரைப்பதாக இருந்தால், அதை விசுவாசிக்காதீர்கள். ஆனால் அது வார்த்தையோடு இருக்குமானால், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. 272 “பயப்படாதே. மரித்தேன், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்றார். அதுவே இந்த வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் உங்களுடைய இருதயத்தில் முத்திரையிடுகிற தேவனுடைய ஈஸ்டர் முத்திரையாயிருக்கிறது. முத்திரை என்றால் என்ன? “நீங்கள் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் வாசிக்கப்படும் நிருபங்களாயிருக்கிறீர்களே.” நீங்கள் அதை அறிவீர்கள். ஆனால் தேவன் உங்களை உரிமை கோரும்போது, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்திருக்கிறீர்கள் என்றும், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறீர்கள் என்றும், அவர் உங்களை ஈஸ்டர் முத்திரையால் முத்தரித்தார். 273 இந்தக் காலையில் நீங்கள் முத்திரையிடப்படவில்லையென்றால், நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில் அதைச் செய்யுங்கள். 274 [ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசத் துவங்குகிறார். ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] …கர்த்தாவே. நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? 275 இப்பொழுது உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு சிந்தித்துப் பாருங்கள். ரோமர் 8:11-ல், “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின அந்த ஆவி உங்களுக்குள்ளிருந்தால், அது உங்களுடைய அழிவுள்ள சரீரங்களையும் உயிர்ப்பிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

123276 ஜனங்களே, நாம் எதை எதிர்நோக்கியிருக்கிறோம்? மீதியாயிருப்பது என்ன? ஃபார்மோசாவையும், உலகம் முழுவதையும் பாருங்கள். அணுகுண்டு வீச்சு ஏவுகணைகள் மற்றும் மற்ற யாவும் உலகத்தைத் தாக்க ஆயத்தமாகி, மிகவும் பதட்டமாகவும், பயமாகவும், கூச்சலிடுகின்றன. இந்த போலியான திரைப்படங்கள், அங்கே வெளியே, எல்லாவிதமான நகைச்சுவைகளையும், ஒரு சிறு பையன் கல்லறையினூடாக சென்று, இரவில் விசில் அடித்து, எல்லாமே சரியாயுள்ளது என்று ஜனங்களை நம்ப வைக்க முயற்சிக்கிறது போலே உள்ளது. நீங்கள் வஞ்சிக்கப்படாதிருங்கள். கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது.

124277 நீங்கள் கவனியுங்கள், அன்றொரு நாள், ஒரு மீனவன் வந்து, அங்கே வளைகுடாவில் உட்கார்ந்துகொண்டு, அதாவது, ஒருவிதமான கரடுமுரடான இடம் அல்லது வேறு ஏதோ காரியம் இங்கே கீழே உள்ளது என்று என்னிடத்தில் சொன்னான். எப்படி, அதாவது, கிரேக்கத்தில் பூமியதிர்ச்சி உண்டாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, வழக்கமாக கிட்டத்தட்ட காலை வேளையில் உணவை எடுத்துக் கொள்ளும் எல்லா மீன்களும், அவைகள் புசிக்கவில்லை. அது என்னவாயிருந்தது? அவைகள் மேலே வரவில்லை. இரண்டாம் முறை அது சம்பவித்தபோது, அதேக் காரியம் சம்பவித்தது. அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது என்பதை அவன் அறிந்திருந்தான். அந்த நேரத்தில் அந்த மீன்கள் புசிக்கவில்லை. 278 மீன்களைப் புசிக்கும் எல்லாப் பறவைகளும், மற்றவைகளும் உணவை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டன. அந்த அதிகாலையில், அப்பொழுதுதான் அவைகள் உட்கொள்ளும். அவைகள் பாறைகளிலிருந்து விலகி, கரையின் மேல் உட்கார்ந்து கொண்டன. ஏனென்றால், இன்னும் ஒரு சில நிமிடங்களில், கடல் பாசியானது பூமியிலிருந்து, கடலின் படுகையிலிருந்து கொப்பளிக்கத் துவங்குவதாயிருந்தது. பார்த்தீர்களா? அந்த மீன்கள் அது சம்பவிப்பதற்கு முன்பே அதை அறிந்திருந்தன.

125279 நான் இந்தியாவுக்குள் சென்றபோது, “பூமியதிர்ச்சி ஓய்ந்திருக்க வேண்டும்” என்று கூறப்பட்ட செய்தித்தாளைப் படித்தேன். அநேக நாட்களாக அந்த சிறு பறவைகள் பாறைகளில் தங்களுடைய கூடுகளுக்கு திரும்பி வரவில்லை. கால்நடைகள் பகலின் உஷ்ணமாயிருக்கும்போது…நிழலில், தங்குமிடங்களைச் சுற்றி நிற்காது. செம்மறியாடுகள் நடு வயல்வெளியில், ஒன்றுடன் ஒன்று சாய்ந்து நின்று கொண்டிருந்தன. பூமியதிர்ச்சி ஏற்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் அவைகள் பாறைகளைச் சுற்றிலும் செல்லாது. 280 ஏன்? அந்த ஆடுகள் அதை அறிந்திருந்தன. ஏதோ ஒன்று நடக்கப்போவதை அவைகள் அறிந்திருந்தன. ஏதோ ஒன்று சம்பவிக்கப் போவதை அந்தப் பறவைகள் அறிந்திருந்தன. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை அந்த கடற் பறவைகள் அறிந்திருந்தன. ஏதோ ஒன்று சம்பவிக்கப் போவதை அந்த மீன்கள் அறிந்திருந்தன. அந்த மிருகங்களை பேழைக்குள் வழிநடத்தின அதே தேவன் தான். 281 ஆவியால் நிரப்பப்பட்ட ஜனங்களே, ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதை உங்களால் காண முடியவில்லையா? ஏதோ பெரிய, மகத்தான, உலகளாவிய, பரந்த ஒன்றைத் தேடாதீர்கள்; கர்த்தராகிய இயேசுவின் வருகையைத் தவிர வேறொன்றுமில்லை. நினைவு கூருங்கள், கர்த்தருடைய வார்த்தைகளையும், வாக்குத்தத்தத்தையும் நினைவு கூருங்கள்.

126282 நீங்கள் உடனடியாக உள்ளே வரமாட்டீர்களா? அந்தப் பெரிய சுவர்களிலிருந்து விலகிச் செல்லுங்கள். உயிர்த்தெழுதல் இப்பொழுது சமீபமாயுள்ளது. அவர்கள் அந்த உயிர்த்தெழுதலில் செல்வார்கள் என்பதை அறியாத எவரேனும் இங்கிருந்தால், அவர்களுக்குள் தங்கியிருக்கும் உயிர்த்தெழுதலின் வல்லமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று நிச்சயமில்லாமல் இருந்தால்! 283 தோல் புழுக்கள் அதை அழித்தாலும், உங்கள் மத்தியில் அணுகுண்டு வெடித்தாலும், அது ஒருபோதும் அந்த உயிர்ப்பிக்கும், உயிர்த்தெழுதலின் வல்லமையை அழிக்காது. இல்லை, இல்லை. சகோதரியே, சகோதரனே, உன்னுடைய விலையேறப்பெற்ற பெயர் அப்பால் உள்ள ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. எந்த மனிதனும் அதைத் அழிக்க முடியாது. அவருடைய இரத்தம் அதை விலைக்கு வாங்கின புத்தகத்தில் உள்ள உங்கள் பெயரைத் அழிக்க போதுமான அழிக்கும் கலவைகள் உலகில் இல்லை. 284 நீங்கள் அதைக் குறித்து நிச்சயமில்லாதவர்களாயிருந்தால், இப்பொழுது அதைக் குறித்து ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்—வேண்டாம். பார்த்தீர்களா? நீங்கள் எங்காவது ஒரு தடுப்பு வேலியினூடாக ஓட்டிச் செல்லும் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டாலும் கொல்லப்படாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த தடுப்பு வேலியைத் தாண்டிப் போக முடியாது. இல்லை, இல்லை. நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதில்லை. இப்பொழுது ஒரு சிவப்பு விளக்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. கடந்து செல்லுங்கள், உங்களுடைய சொந்த கருத்துக்களை புறக்கணித்துவிட்டு, உலகத்தின் காரியங்களை கடந்து செல்லுங்கள்.

127285 வாருங்கள். நாம் இந்த மகத்தான ஈஸ்டர் நேரத்தில், மகத்தான ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஒன்று சேர்ந்து உயிர்த்தெழுவோம். அதை இந்த வாரம் உங்களுடைய இருதயத்தில் உங்களால் கொண்டாட முடியுமா? உங்களால் முடியவில்லையென்றால், நீங்கள் உங்களுடைய கரத்தை தேவனண்டை உயர்த்துவீர்களா? 286 “தேவனே, எனக்கு அதைக் குறித்து நிச்சயமாகத் தெரியவில்லை. என்னால் அதையெல்லாம் செய்ய முடியுமா அல்லது முடியாதா என்று எனக்குத் தெரியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீரா? கர்த்தாவே, நான் உம்மண்டை என் கரத்தை உயர்த்தப் போகிறேன். எனக்கு உதவி செய்யும்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லதுதான். “கர்த்தாவே, எனக்கு—எனக்கு—எனக்கு நீர் வேண்டும். எனக்கு உதவி செய்யும். நான்—நான்—நான் எழுப்பப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நான்—நான் அவ்வாறு இருக்க விரும்புகிறேன். நான் இப்பொழுதே மறைவான வல்லமைகளை உடையவனாய் இருக்க விரும்புகிறேன். அது சரியா என்று நான் அறிய விரும்புகிறேன். கர்த்தாவே, அது சரியென்று நான் அறிய விரும்புகிறேன். எனக்குத் தெரியும், எந்தத் தவறும் செய்ய முடியாது-…” அப்பொழுது நீங்கள் எந்தத் தவறும் செய்ய விரும்பமாட்டீர்கள். அது போகப்போவதில்லை…இது மிகவும் காலதாமதமாகப் போகிறது. இப்பொழுது அந்த நாள். என்னே! இப்பொழுது அந்த நாள். காத்திருக்க வேண்டாம்.

128287 அண்மையில், நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அங்கே கட்டிடத்தின் பின்பக்கத்தில் ஒரு வயதான கறுப்பு நிற மனிதன் என்னை சந்தித்தார். அவர், “சங்கை அவர்களே, நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் சரியாயிருக்கிறீர்கள் என்று நான் கூறுகிறேன்” என்றார். அவர், “நீண்ட காலத்திற்கு முன்பே, நான் கர்த்தரிடத்தில் அன்று காலை என்னுடைய பயணச் சீட்டு என் கையில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். அது சரியாக குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை நான் அறிய விரும்புகிறேன்” என்றார். மேலும், “அங்கே ஆற்றண்டையில் அதிக தொல்லையாக இருக்கப் போகிறது” என்றார். அவர், “நான்—நான்—நான் அந்த ஆற்றண்டை வந்து கொண்டிருக்கிறேன்” என்றார். அவர், “எனக்கு—எனக்கு அங்கு எந்த தொல்லையும் வேண்டாம். நான் இங்கே எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்றார். அது உண்மை. 288 உங்களுடைய அயல்நாட்டு நுழைவுச் சான்று கிடைத்துவிட்டதா? நீங்கள் உங்களுடைய அயல்நாட்டு நுழைவுச் சான்றை பெற்றிருக்கவில்லையென்றால்… நீங்கள் ஒரு பயண இசைவுச்சீட்டை வைத்திருக்கலாம், ஆனால் நீங்கள் உங்களுடைய அயல்நாட்டு நுழைவுச் சான்றை பெற்றிருக்கவில்லையென்றால், நீங்கள் தேசத்திற்குள் பிரவேசிக்க முடியாது. நீங்கள் அதை அறிவீர்கள். நீங்கள் உங்களுடைய எல்லாவற்றையும் ஆயத்தமாக வைத்துள்ளீர்களா? அது இல்லையென்றால், இப்பொழுதே அதைச் செய்ய வேண்டிய நேரம் இதுவே. 289 நீங்கள் சற்று பயமடைந்தாலும் பயப்படாதேயுங்கள். இப்பொழுது, ஏறக்குறைய நூறு கரங்கள் இங்கே மேலே உயர்த்தப்பட்டிருக்கலாம். எனவே நீங்கள் சற்று பயமடைந்திருந்தால், இப்பொழுது நாம் அதைத் தீர்த்துக்கொள்வோம்.

129290 இப்பொழுது, நமக்கு வித்தியாசமான வழிகள் உள்ளன என்பதை நான் அறிவேன். சில மனிதர்கள், “மேலே வாருங்கள், நான் உங்களுடைய கரத்தைக் குலுக்கட்டும்” என்கிறார்கள். மற்றவர்கள், “வந்து பீடத்தண்டை முழங்காற்படியிடுங்கள்” என்று கூறுகின்றனர். இப்பொழுது, அவைகள் அருமையாயிருக்கின்றன. நான் அதற்கு எதிராக கூறும்படி ஒரு வார்த்தையும் பெற்றிருக்கவில்லை, ஒரு காரியமும் இல்லை, அவர்கள் கூறுவதற்கான எந்தக் காரியமும், இல்லவே இல்லை. 291 ஆனால் என்னுடைய வழியை நான் உங்களுக்கு கூறட்டும். “விசுவாசித்த அத்தனை பேர்கள்…” பீடத்தண்டை வருவது உங்களை விசுவாசிக்கச் செய்யாது. ஊழியக்காரனுடன் கைகுலுக்குவது உங்களை விசுவாசிக்கச் செய்யாது. ஆனால் நீங்கள் தேவனால் அழைக்கப்பட்டிருந்தால், நீங்கள் துவக்கத்திலேயே ஒரு கழுகாயிருந்தால், ஒரு சத்தம் உங்களுக்குச் சொல்லுகிறது. நீங்கள் விசுவாசிப்பீர்கள். நீங்கள் அதை உண்மையாகவே விசுவாசித்தால், நான் உங்களோடு ஜெபிக்கப் போகிறேன். 292 அந்த சிறிய கழுகு அந்த களஞ்சியத்தில் நீண்ட நேரம் இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இல்லை, இல்லை. ஹூ-ஹூ. வேண்டாம். நண்பனே, இனிமேல் இங்கே தங்கியிருக்காதே. நாம்—நாம் இப்பொழுது எடுத்துக் கொள்ளப்படுவோம். அதைச் செய்ய தேவனுடைய கிருபை இங்கே உள்ளது.

130293 பரலோகப் பிதாவே, நாங்கள் முடிவு வேளையை நோக்கியவாறு இறங்கி வந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் உணருகிறோம். இப்பொழுது நாங்கள் இங்கு நீண்ட காலம் இருக்க நேரமில்லை. எங்களுடைய காலத்தைப் போல அல்ல, ஆனால் அந்த நேரத்தில். இது சம்பவிக்கும்போது, இங்கு அநேக வாலிபர்கள், வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அது இன்றைக்கும் நடக்கலாம். எங்களுக்கு அந்த நிமிடம் அல்லது மணி நேரம் தெரியாது. ஆனால், கர்த்தாவே, நீர் எங்களிடம், “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது” என்று கூறினீர், அவைகள் நீண்ட காலமாகவே சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. 294 விஞ்ஞானிகளின் கூற்றுப்படி நாங்கள் கடந்துவிட்டதை நாங்கள் அறிவோம். ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள் இருந்தன. அதற்கு எவ்வளவு நேரம் உள்ளது என்பதை நாங்கள் அறியோம், ஆனால் நாங்கள் அங்கே இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். 295 ஓ, தேவனே, அந்த உறுதியைப் பெற்றிருக்க வேண்டும்: தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், “ஆமென்” என்று எங்களுடைய இருதயம் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவதைக் காணும்படியாக, அந்த ஆவி தாமே எங்களுக்குள்ளாக வந்து, எங்களுடைய சரீரத்தை உயிர்ப்பிக்கிறது என்பதைக் காணும்படியாகவே இது உள்ளது. 296 தேவனே, இந்தக் காலையில் என் சகோதரர் அதைக் காணட்டும். ஆவியானவர் உள்ளே வந்து வார்த்தையை உயிர்ப்பிக்கிறார் என்பதை என் சகோதரர்கள் காணட்டும். கர்த்தாவே, என் சகோதரிகளும் அதே காரியத்தைக் காணட்டும். அதன்பின்னர், அந்த வார்த்தைக்கு அவர்களை உயிர்ப்பிக்க அனுமதிக்காத ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் காண்பார்களேயானால், ஓ, தேவனே, அவர்கள் அதை சீக்கிரமாக அகற்றுவார்களாக. பிதாவே, இதை அருளும். அது இப்பொழுது உம்முடைய கரங்களில் உள்ளது. நான் அநேக காரியங்களில் தவறியிருக்கிறேன் என்பதையும், தொடர்ந்து தவறிக்கொண்டிருக்கிறேன் என்பதையும் நான் அறிவேன், ஆனால், கர்த்தாவே, எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். இப்பொழுது அது உம்முடைய கரங்களில் உள்ளது. அவர்கள் உம்முடையவர்கள். பிதாவே, இயேசுவின் நாமத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ளும்.

131297 இப்பொழுது இங்குள்ள உங்களுக்கு, உங்களுடைய சரீரத்திற்கான சுகமளித்தல் தேவையாயிருக்கிற உங்களுக்கு. எத்தனை விசுவாசிகள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். “என்னுடைய இருதயத்தை நான் அறிந்தமட்டில் நான் ஒரு விசுவாசியாயிருக்கிறேன்.” எத்தனை பேர் சுதந்தரித்துக் கொள்ளுகிறீர்கள்? இப்பொழுது உங்களுடைய இருதயத்தில் நீங்கள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால் நீங்கள் அறிவீர்களா? உங்களுக்குத் தெரியுமா? ஓ, என்னே! அப்படியானால் இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் என்ன சம்பவிக்கக்கூடும்? நான் தாமதமாக வந்திருக்கிறேன் என்பதை நான் அறிவேன், ஆனால் இப்பொழுது என்ன சம்பவிக்கக்கூடும்? என்ன சம்பவிக்கக்கூடும் என்பதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். மறைவான வல்லமைகள் உங்களுக்குள் சரியாக புதைந்துள்ளன. பார்த்தீர்களா? நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தி, நீங்கள் தேவனிடத்தில் ஆணையிட்டு, “எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்பதை நான் அறிவேன். நான் இருக்க வேண்டிய இடத்தில் நான் சரியாக இல்லாமலிருக்கலாம்” என்று கூறுங்கள்.

132298 நானும் அவ்வாறில்லை. இல்லை ஐயா. நான் இருக்க வேண்டிய இடத்திலிருந்து நான் வெகு தூரத்தில் இருக்கிறேன். ஆனால் இந்த ஒரு காரியத்தை நான் அறிவேன், நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குட்பட்டிருக்கிறேன். எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது என்பதை நான் அறிவேன். அநேக…இப்பொழுதுள்ள ஒரு வயோதிக மனிதனைப் போல அல்ல, ஆனால் அநேக, அநேக ஆண்டுகளுக்கு முன்பு, அது நடந்தது. 299 அந்த நாளை நான் அறிவேன, நான் அந்த மருத்துவமனைக்குள் நடந்து சென்றபோது, நான் என்னுடைய பெரிய சவாலை உடையவனாயிருந்தபோது, நான் என்னுடைய மனைவி மரித்ததைக் கண்டிருந்தேன், நான் அவளுடைய ஜீவனைக் கூப்பிட்டேன், “தெரு மூலையில் நின்று கொண்டு வியாதியஸ்தருக்காக பிரசங்கிப்பதையும், ஜெபிப்பதையும் தவிர நான் என்ன செய்திருக்கிறேன்?” என்று கேட்டேன். அப்பொழுது சாத்தான், “சரி, அவர் உன் ஜெபத்திற்கு பதிலளிக்கமாட்டார்” என்றான். 300 அவள் மரித்ததை நான் கண்டேன், ஆனால் அவளுக்குள் அந்த உயிர்த்தெழுந்த வல்லமை இருந்தது என்பதை நான் அறிவேன். அந்த எலும்புகள் மீண்டும் எழும்பும். 301 என்னுடைய சிறு குழந்தை அங்கே கிடப்பதை நான் கண்டேன். நான் என்னுடைய கரத்தை மேல் வைத்து, “தேவனே, அவளை எடுத்துக் கொள்ளாதேயும்” என்றேன். 302 அவர் திரைச்சீலையை இழுத்துவிட்டு, “இனிமேல் நான் உன்னுடைய ஜெபத்தை கேட்கமாட்டேன்” என்று கூறினது போன்று காணப்பட்டது. 303 சாத்தான், “அதுதான் காரியம். ஒரே ஒரு வார்த்தை…” தேவன் இல்லை என்று என்னிடம் கூற முடியவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான், ஏனென்றால் நான் அதை அறிந்திருந்தேன். ஆனால் அவர் என்னை நேசிப்பதில்லை என்றும், அவர் எனக்காக கவலைப்படுகிறதில்லை என்றும் அவன் கூறினான். பார்த்தீர்களா? ஒவ்வொரு காரண காரியமும், “நீ ஒரு வாலிப மனிதன், அதே சமயத்தில் இருபது வயதுடையவன். இங்கே ஒரு பிணவறையில் உன்னுடைய மனைவி கிடத்தப்பட்டிருக்கிறாள். இதோ உன்னுடைய குழந்தை அங்கே மரித்துக்கொண்டிருக்கிறது. மேலும்—மேலும் அப்படியே…அவர் ஒரு மகத்தான சுகமளிப்பவர் என்று நீ கூறினாய், அவர் இவை யாவுமே. மேலும், பார், அவர் என்ன செய்கிறார்? ஒரு வார்த்தை, அவர் அதைப் பேசக்கூட வேண்டியதில்லை, அங்கே கீழே நோக்கிப் பார்த்துக் கூறட்டும். அவருடைய தலையை அசைத்தால், அது முழுவதும் சம்பவிக்கும், அது சுகமடையும். ஆனால், நீ பார், அவர் உன்னை நேசிக்கவில்லை. அவர் உனக்காக கவலைப்படுகிறதில்லை. இப்பொழுது உன்னுடைய குழந்தை அங்கே மரிக்க அனுமதிக்கிறாரே, இந்த இருண்ட நேரத்தில் உன்னுடைய ஜெபத்தைக் கூட கேட்க மறுக்கிறாரே” என்றான்.

133304 அவன் கூறின யாவும் முற்றிலும் உண்மையாயிருந்தன. “அப்படியானால் நீ என்ன செய்துள்ளாய்? உன்னால் எழும்பி நிற்க முடியாத அளவிற்கு நாள் முழுவதும் வேலை செய்கிறாய். அதன்பின்னர் இரவு பன்னிரெண்டு மற்றும் ஒரு மணி வரைக்கும் விழித்திருந்திருக்கிறாய். தெரு முனைகளில் நின்று பிரசங்கம் செய்கிறாய். மருத்துவமனையிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு ஜெபிக்கிறாய். உள்ளே வந்து உட்கார்ந்து, ஒரு நாற்காலியில், அங்கே உட்கார்ந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் உறங்கி, மீண்டும் வேலைக்குச் செல்கிறாய். அடுத்த இரவும் அதே காரியம். இதோ உனக்கு ஏறக்குறைய இருபத்தியொரு அல்லது இருபத்திரண்டு வயது இருக்கும். ஒவ்வொரு நண்பரும், ஒவ்வொரு வாலிபப் பெண்மணியும், நீ தொடர்பு கொண்ட ஒவ்வொரு வாலிபனும், உன்னை ஒரு பைத்தியக்காரன் என்று அழைத்தனர். நீ என்ன செய்திருக்கிறாய்? நீ உன்னையே ஒரு முட்டாளாக்கிக் கொண்டாய். உனக்கு இது புரியவில்லையா?” என்று கேட்டான். நான் கிட்டத்தட்ட அவனுடன் இணங்க ஆயத்தமாயிருந்தேன். 305 எனக்குள்ளாக இருந்த ஏதோ ஒன்று, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையாயிருந்தது. நான், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக” என்றேன். என்னுடைய எல்லா நம்பிக்கையும் கைவிட்டுவிடும்போது, அப்படியானால் அவரே என்னுடைய முழு நம்பிக்கையும், தங்குதலுமாயிருக்கிறார். ஏனென்றால் கிறிஸ்துவின் பேரில்… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …மூழ்கிக் கொண்டிருக்கும் மணல். ஓ, அவர் எக்காள சத்தத்தோடு வருவார், அப்பொழுது நான் அவருக்குள் காணப்படுவேன், அவருடைய நீதியின் அங்கியினால் சுற்றப்பட்டிருப்பேன். 306 என்னுடைய சொந்தத்தில் அல்ல; என்னிடம் ஒன்றும் இல்லை. என்னுடையது அசுத்தமான, அழுக்கான கந்தைகளாக இருக்கிறது. என்னுடைய பிரசங்கத்தின் பேரில் பரலோகத்திற்கு செல்ல முயற்சிப்பதை நான் வெறுக்கிறேன். என்னுடைய தரிசனங்களின் பேரில் பரலோகத்திற்கு செல்ல முயற்சிப்பதை வெறுக்கிறேன். நான் அவருடைய கிருபையை என் இருதயத்தில் வைத்திருக்கிறபடியால் நான் பரலோகத்திற்கு செல்லப் போகிறேன். அவருடைய கிருபையினால் தான் நான் போகிறேன். அந்தவிதமாகவே நாம் செல்கிறோம்.

134307 ஓ, நண்பனே, நீ இந்த சரீரத்தின் ஒரு பாகமாய் இருக்கிறாய். நீங்கள் தேவனுடைய சிறு பிள்ளைகளாயிருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களுடைய நம்பிக்கையை பலப்படுத்தவே நான் இதைக் கூறுகிறேன். நீங்கள் கண்டறிந்தால்… 308 உங்களிடத்தில் எனக்கு தயவு கிடைத்து, நான் உங்களுக்கு சத்தியத்தை சொல்லியிருந்தால்… நான் உங்களிடம் கூறியுள்ளது என்னவென்றால், கடந்த வருடங்களில் தீர்க்கதரிசி கூறினான். என்னை அவருடைய தீர்க்கதரிசியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இல்லை ஐயா. ஆனால் நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறிக்கொண்டிருக்கிறேன். சரியானதைத் தவிர வேறெதையாவது அவர் எப்போதாவது கூறியிருக்கிறாரா? நான் அவரோடு அதைப் பேச விரும்புகிறேன், என்ற அந்தப் பாடல் பாடினது முதற்கொண்டு, நான் உங்களை இங்கே, பீனிக்ஸில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இப்பொழுது அறிந்திருக்கிறேன், சகோதரன் அவுட்லாவினுடைய சபையில், அது சகோதரன் கார்சியா என்று நான் நினைக்கிறேன். கர்த்தருடைய நாமத்தில் நடந்ததைத் தவிர வேறெதையாவது நான் எப்போதாவது உங்களிடம் கூறியதுண்டா?

135309 ஒரே ஒரு நம்பிக்கை மாத்திரமே உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை பிடித்து வைத்திருக்கும். மற்ற ஒவ்வொரு காரியமும் கைவிடும்போது, அது உங்களை பிடித்து வைத்திருக்கும். 310 அவர்களில் சிலர், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் உங்களுடைய மார்க்கத்தைக் கடைபிடித்தீர்களா?” என்று கேட்டனர். நான், “இல்லை. அது என்னை காத்துக்கொண்டது” என்றேன். 311 அது என்னை காத்துக் கொண்டிருக்கிறது. நான் அதை காத்துக் கொள்வதில்லை. அது நான் பற்றிக் கொண்டிருக்கிறேனா அல்லது இல்லையா என்பது அல்ல. அவர் நிலைத்திருந்தாரா அல்லது இல்லையா என்பதே அது. அவரே எனக்காக காத்துக்கொண்டிருக்கிறார். 312 அவர் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு மரத்திலும் தூதர்கள் அமர்ந்திருந்தனர், “சற்று விரலை அசைத்திருந்தால் போதும். சுட்டிக் காட்டுங்கள்; நீங்கள் அதை சிலுவையிலிருந்து எடுக்க வேண்டியதில்லை. உங்களுடைய விரலை சுட்டிக்காட்டி, என்னவென்று கவனித்துப் பாருங்கள்” என்றார். பாருங்கள், அந்த பரியாசம் செய்யும் கூட்டம். ஆனால் அவர் அதைச் செய்திருந்தால், நான் இன்றைக்கு இந்த சாட்சியைப் பெற்றிருந்திருக்க முடியாது; நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவர் சிலுவையண்டை தரித்திருந்த காரணத்தால், அவர் அங்கே பற்றிக்கொண்டார், ஆகையால் தான் நான் அவரோடு பற்றிக் கொண்டிருக்கிறேன். திடமான கன்மலையாகிய, கிறிஸ்துவின் மேல், நான் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் அமிழ்ந்துகொண்டிருக்கும் மணலாயிருக்கின்றன.

136313 இப்பொழுது, நீங்கள் சுகவீனமாயிருந்தால், நீங்கள் உங்களுடைய கரங்களை ஒருவர் மேலும் ஒருவர் மேல் வையுங்கள். நாம் ஜெபிப்போமாக. உங்களுடைய கரங்களை உங்களுக்கு அருகில் உள்ள ஒருவர் மீது வையுங்கள். உங்களுக்கு என்ன கோளாறு இருந்தாலும் பொருட்படுத்தாமல், இப்பொழுது விசுவாசமாயிருங்கள். நான் எப்போதாவது உங்களிடம் சத்தியத்தை கூறியிருந்தால், நான் இப்பொழுதே உங்களுக்கு கூறுகிறேன். பார்த்தீர்களா? இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றார். நீங்கள் விசுவாசிகளாயிருக்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தினீர்கள். சந்தேகப்படாதீர்கள். ஏதோ ஒரு பரிதாபமான அவதியுறும் நபரின் மீது நீங்கள் உங்களுடைய கரங்களை வைத்திருக்கிறீர்கள். யாரோ ஒருவர் தங்கள் கரங்களை உங்கள் மீது வைத்துள்ளார். 314 அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, கல்லறையிலிருந்து இயேசுவை எழுப்பின அந்த வல்லமையை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுடைய—உங்களுடைய சொந்த சரீரத்தில் நீங்கள் பெற்றுள்ளதின் பேரில் உங்களுக்கு விசுவாசம் உண்டு. நீங்கள் உங்களுடைய கரங்களை வைத்திருக்கும் அந்த நபருக்கு அது உதவியாக இருக்கப் போகிறது. “அது உங்களுக்குள்ளே வாசமாயிருந்தால், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் கூட உயிர்ப்பிக்கும்.”

137315 அன்புள்ள தேவனே, நான் இந்தக் காலையில் இங்கே நிற்கையில், மத்தியான வேளையை நெருங்கிக்கொண்டிருக்கையில், ஏறக்குறைய இந்த வேளையில் இயேசு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? நான் தாகமாயிருக்கிறேன்” என்றார். தீர்க்கதரிசி அதை முன்னரே கண்டு, “என்னுடைய எலும்புகள் யாவும், அவர்கள் என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் கைகளையும், என் கால்களையும் உருவக் குத்தினார்கள்” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லையே. “ஆனால் அவர் அக்கிரமக்காரர்களோடு எண்ணப்பட்டார். ஆனால் எங்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். எங்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். எங்களுக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” நாங்கள் அதை இந்தக் காலையில் தேவனுக்கு உரிமை கோருகிறோம். நாங்கள் அதை உரிமை கோருகிறோம்.

138316 இந்த உயிர்த்தெழுதலின் காலையில், கவனியுங்கள், இந்த ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தியத்தை, கர்த்தாவே, நான் தேவனுடைய பிரசன்னத்தில் உம்முடைய வார்த்தையிலிருந்து கூறியிருக்கிறேன். அவர் நியாதிபதியாயிருக்கிறார், அவர் எங்களை மீட்டுக்கொண்டார் என்பதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். தேவனுடைய கிருபையினால், அந்த உயிர்த்தெழும் வல்லமை எங்களுக்குள்ளே இருக்கிறது. எங்களுடைய நண்பர்களும் சுகவீனமாயிருக்கின்றனர், அவர்கள் மேல் கரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 317 ஓ தேவனே, ஜனங்களின் மேல் கைகளை வைக்கப்பட்டிருக்க, நான் என்னுடைய கரங்களை ஜனங்களின் மேல் நீட்டியிருக்க, இந்தக் காலையில் எங்களுடைய விசுவாசத்தின் மத்தியில் நாங்கள் பிசாசுக்கு சவாலிடுகிறோம். இந்த ரூபகாரப்படுத்தப்பட்ட சத்தியத்தின் பிரசன்னத்தில் ஜனங்களை பிடித்து வைக்க முயற்சிக்கும் ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு துன்பமும் வெளியே வருவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த ஜனங்கள் இன்றைக்கு விடுதலையாக்கப்படுவார்களாக. அதாவது, வேதம், எங்களுடைய தேவனுடைய வார்த்தைகள், “அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களானால், அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறியுள்ளது. எங்களுடைய கரங்கள் மேலே உம்மை நோக்கியவாறு தேவனே, ஆகாயத்தில் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

139318 பூமியின் செடிகள் யாவும் உம்முடைய ஊற்றண்டைப் பருகும்போது, உமது ஊற்றிலிருந்து முளைப்பிக்கப்பட்ட அந்தச் செடியானது குடித்துவிட்டால், அது நிச்சயமாக வளரத் துவங்குகிறது. அது வளரத் துவங்குகிறது. சோளத்தின் தண்டு, மலரானது, உம்முடைய ஊற்றில் குடிக்கிற யாவும் உம்மை நோக்கியே வளருகின்றன. 319 இந்தக் காலையில், கர்த்தாவே, நாங்கள் அங்குலங்கள் அளவு வளர்ந்துள்ளோம். எங்களால் உயரத்தை அடைய முடியும். நாங்கள் உம்முடைய ஊற்றண்டையிலே பருகிக்கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, எங்களுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமையைக் கொண்ட நாங்கள் உம்முடைய சிருஷ்டிகளாயிருக்கிறோம். நீர் எங்களுடைய சகோதர சகோதரிகளுக்கான எங்களுடைய ஜெபத்தைக் கேட்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இங்கே இந்த வல்லமையை உடையவர்களாயிருக்கிற இந்த அருமையான ஜனங்களுக்கு இடையூறாக உள்ள ஒவ்வொரு துன்பத்தையும், அவர்கள் தேவனை சேவிக்கும்படியாக அவர்களை கட்டவிழ்த்து விடுவீராக. கர்த்தாவே, அது நலமாயிருக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

140320 நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்களா? இதைப் போன்ற ஒரு காரியத்தை விட்டுவிடலாமா? உங்களால் எப்படி அதைச் செய்ய முடியும்? நீங்கள் உங்களை விட்டு விலகுவது போன்று காணப்பட வேண்டும். நீங்கள் அந்தவிதமாக உணருகிறீர்களா? நான்—நான்—நான்…அது நானாக இருக்கலாம், அதாவது நான்… ஆனால் எனக்கு ஒரு உணர்வு உண்டானது, நான் ஜனங்களின் மத்தியில் வரும்போது, நீங்கள் இந்தவிதமாக ஒன்று சேர்ந்து அமர்ந்தபோது, ஒரு விசித்திரமான உணர்வு உண்டானது. இங்கே கண்ணுக்குத் தெரியாமல், எங்கோ உள்ளதை, நான் அறிவேன்; வானொலி, தொலைக்காட்சி போன்றவை இந்த அறையினூடாக கடந்து செல்கின்றன; கிறிஸ்து இந்த அறையில் இருக்கிறார். டோனி, சற்று சிந்தித்துப் பாருங்கள், நம்முடைய மீட்பர்! அவர் இங்கே இருக்கிறார். ஆமென். 321 சுதந்தரித்துக் கொண்டிருக்கிற ஜனங்களைக் காட்டிலும் சந்தோஷமாய் யார் இருக்க முடியும், தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் வெளிப்படுத்தப்பட்டதற்கான வேதாகம அத்தாட்சியோடு, தேவ தூதர்களும், அவருடைய சரீரத்தையும், காலங்களினூடாக! அவர்கள் கண்டது போல, இங்கே, ஞானதிருஷ்டிக்காரர்களின் வார்த்தைகள் முன்னுரைக்கப்பட்டு, அது அப்படியே சம்பவித்தது. இங்கே நாம் அவருடைய வருகைக்கு முந்தின நேரத்தில் இருக்கிறோம். ஓ, என்னே ஒரு அற்புதமான நேரம்!

141322 நாம் அவரைக் காண்போம். இந்நாட்களில் ஒன்றில் அவர் இங்கே இருப்பார். அவர் வரும் வரையில், நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] எனக்கு முன்னால் ஆபத்தான அபாயங்கள் உள்ளன. நான் அதை அறிவேன். பார்த்தீர்களா? நீங்கள் கூலி கொடுத்து, தண்ணீர் குடிப்பது போல உங்களைச் சுடும் அஞ்ஞானிகளை நான் சந்திக்கிறேன். நீங்கள் அவர்களுடைய இடத்தில் வருகிறீர்கள், உங்களுக்கு வேதத்தின் பேரில் சவாலிடும் பிசாசுகள் அவ்வளவு சுலபமாக இருக்கும். ஆனால் நம்முடைய தேவன் ஜெயங்கொண்டதைத் தவிர வேறு எந்த நேரத்தையும் நான் ஒருபோதும் கண்டதேயில்லை. நான் அவருடைய நாமத்தில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நித்திய ஜீவன், உயிர்த்தெழுதல் மற்றும் ஜீவனின் நம்பிக்கையில் செல்கிறேன். “உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” அது தேவனுடைய நித்திய வார்த்தையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்களும் அதே விதமாக விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்.”] நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா? [“ஆமென்.”] நான் உங்களுக்காக ஜெபிப்பேன். நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் நம்மை காத்துக் கொள்வாராக.

142323 இப்பொழுது நாம் சற்று நேரம் எழும்பி நிற்போம். (நீங்கள் கூற விரும்பும் ஏதாவது உண்டா?) நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 324 இந்த சிறு பாடலை நாம் பாடாமல் இருப்பது சரியானதல்ல, அப்படித்தானே? நான் அவரை நேசிக்கிறேன் என்ற நம்முடைய பாடல் நினைவிருக்கிறதா, அது ஒவ்வொரு இருதயத்திலும் உள்ளதா? நாம் அதை அப்படியே பாடுவோமாக. சகோதரியே, அன்பே, நீங்கள்…நான் கூற விரும்புகிறேன், சகோதரியே, நீங்கள் இசைப்பதையும் கூட நான் பாராட்டுகிறேன். சரி. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தின் மேல். இப்பொழுது நாம் பாடலை மாற்றப் போகிறோம். என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே; இப்பொழுது நான் ஜெபிக்கையில், ஓ, என்னுடைய எல்லா குற்றங்களையும் போக்கிவிடும், ஓ, இந்நாள் முதற்கொண்டு நான் வரட்டும் முழுவதுமாக உம்முடையவனாய் இருப்பேனாக!

143325 அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்கிறதல்லவா? அந்த உண்மையான இருதயத்தில் எத்தனைபேர் விரும்புகிறீர்கள்…நான்—நான்—எனக்கு யூபிலி பாடல்கள் பிடிக்கும். நிச்சயமாக, நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் ஒரு ஆராதிக்கும் ஆவியில் இருக்கும்போது, நீங்கள் அந்த பழைய இனிமையான பாடல்களை நேசிக்கவில்லையா? பரிசுத்த ஆவியானவர் எடி பெரோனெட் மற்றும் அந்த மகத்தான பண்டைய பாடல்களை எழுதிய மற்றவர்களின் மேலும் அசைவாடினார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? ஃபேனி கிராஸ்பி, அவர் எழுதும்போது: ஓ, கனிவான இரட்சகரே, என்னை கடந்து செல்லாதேயும், என்னுடைய தாழ்மையான கூக்குரலுக்கு செவிகொடும்; நீர் மற்றவர்களை அழைத்துக் கொண்டிருக்கையில், என்னைக் கடந்து செல்லாதேயும். நீரே என்னுடைய ஆறுதலின் எல்லா ஓடையும், எனக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானவர், பூலோகத்தில் உம்மைத் தவிர வேறு யார் எனக்கு உண்டு? அல்லது பரலோகத்தில் உம்மையல்லாமல் யார் எனக்கு உண்டு? 326 அது அற்புதமாயிருக்கவில்லையா? அதுவே நான் அவரை நேசிக்கிறேன் என்று பாட நம்மை ஆவலைத் தூண்டுகிறது, இல்லையா? இப்பொழுது, நாம் இந்த நேரத்தில், நான் அவரை நேசிக்கிறேன் என்று பாடும்போது, நாம்…நாம் ஒருவரிலொருவர் அன்பு கூருகிறோம். நாம் ஒருவரிலொருவர் அன்பு கூரவில்லையென்றால், அப்பொழுது நம்மால் அவரை நேசிக்க முடியாது. இப்பொழுது நாம் ஒருவருக்கொருவர் கரத்தைக் குலுக்குவோமாக. அப்படியே நின்று, எங்கோ மேஜையின் குறுக்கே கரங்களை நீட்டி, ஒருவருக்கொருவர் கரங்களைக் குலுக்குங்கள். நான்…( …?… ) என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தின் மேல். நாம் இப்பொழுது நம்முடைய தலையை வணங்குவோமாக.

144327 சகோதரன் வில்லியம்ஸ், இளம் சகோதரன் வில்லியம்ஸ், ஒரு நிமிடம் இங்கே வரும்படி கேட்கப் போகிறேன். அவர் இந்தக் கூட்டத்தாரை ஜெபத்தில் கலைந்து செல்ல வைப்பாரா என்று நான் அவரிடம் கேட்கப் போகிறேன். 328 நான் சகோதரன் வில்லியம்ஸை நேசிக்கிறேன், ஒரு வாலிப கிறிஸ்தவன், அவருடைய சிறு குடும்பம், உண்மையாகவே கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரன் என்று நான் நினைக்கிறேன். இவர்களோடு எனக்கு அதிக ஐக்கியம் உண்டு. அந்த விலையேறப்பெற்ற மோஸ்லி பையன்கள், அவர்கள் எல்லோரும், நாங்கள் ஒன்றாக இருந்தோம், இங்கே பீனிக்ஸில் உள்ள என்னுடைய அருமையான நண்பர்கள் அநேகர், நான் என்னுடைய முழு இருதயத்தோடு நேசிக்கிறேன். அந்தக் காலையில் அந்த தரிசனத்தில், அவர், “நீங்கள் எப்பொழுதும் நேசித்தவர்களையும், உங்களை நேசிக்கிற யாவரையும் தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிறார்” என்று கூறினார் என்று, நான் நினைக்கிறேன்.

145329 இங்கே யாரோ ஒருவர் தங்களுடைய பாவங்களுக்காக மனந்திரும்பி, தரையில் அமர்ந்து, ஒரு வாலிபப் பெண்மணி அழுதுகொண்டிருக்கிறாள். நாம் அவளுக்காக சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 330 அன்புள்ள தேவனே, பீனிக்ஸில் விடப்பட்டிருந்த அந்த சிறு ஆடு தானே? தேவனே, எனக்குத் தெரியாது. உமக்குத் தெரியும். ஆனால், என்றோ ஒரு நாள், அது நிறைவேறும். ஆனால், பிதாவே, இதுவோ, சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்றாயுள்ளது. எனவே இப்பொழுது நீர் அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இனிமையாக வாசலைத் திறந்து, “என் பிள்ளையே, வா. சோர்வுற்ற, களைப்புற்ற சாலையிலிருந்து உள்ளே வா. நீ அங்கே இருளில் தடுமாறிக் கொண்டிருந்தாய். நான் இன்றைக்கு உன்னை அழைத்துச் செல்ல வெளியே வந்துள்ளேன். உன்னிடத்தில் பேசி, இப்பொழுது உன்னை மந்தைக்குள்ளாகக் கொண்டு வருகிறது என்னுடைய ஆவியாயுள்ளது” என்று கூறும். தேவனே, அதை அருளும். இந்த வாலிப ஸ்திரீ…இங்கே ஜீவியத்தின் குறுக்கு வழியிலே இருக்கிறவள். “என் வார்த்தைகளைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” அன்புள்ள தேவனே, இந்த வாலிப கிறிஸ்தவளுக்கு இதை அருளும். “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.” பரிசுத்தவான்கள் அந்த வாலிப ஸ்திரீயை சுற்றி நின்று ஜெபித்துக் கொண்டிருக்கையில். 331 நினைவிருக்கட்டும், பவுலும் கூட, கல்லெறிந்து மிகவும் மோசமாக மரித்துக் கொண்டிருந்தான். பரிசுத்தவான்கள் நின்று ஜெபித்தபோது, ஜீவன் திரும்ப வந்தது. ஏனென்றால் அந்த பரிசுத்தவான்களின் சரீரங்களில் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது, அது ஜீவனின் ஆவியை பரிசுத்த பவுலுக்கு திரும்பக் கொண்டு வந்தது. தேவனே, அந்த நிச்சயமான ஜெபத்தை ஜெபிக்க முடியும், அதாவது மரணத்திலிருந்து…அல்லது அந்த நபரின் மரணம், விசுவாசமுள்ள ஜெபத்தினால், ஜீவனுக்கென்று. அன்புள்ள தேவனே, அதை அருளும். 332 நாங்கள் உமக்காக காத்திருக்கையில் இப்பொழுது எங்களை ஆசீர்வதியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். 333 இப்பொழுது உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நான் சகோதரன் வில்லியம்ஸிடம் கேட்கப் போகிறேன். 