தேவன் தமது வார்த்தையைப் பற்றின் சிந்தையை எப்பொழுதாவது மாற்றுவாரா

65-0418E

நம நமமடய தலகள வணஙகவமக. அனபளள கரததரகய இயசவ, தவனடய உயரபபககம வலலமயன பழவறகக மகநத எதரபரபபட எஙகளடய ஸதனததன அஙககரததயம, நலமயயம மறறம எஙகளடய பறபபகளயம எஙகளகக கணட வரமபடகக, அழககபபடட ஜனஙகளக, உலகததலரநத பரககபபடட, தவனககனற பரதஷட சயயபபட, நஙகள மணடம உமமடய நமததல கடயரககறம. கரததவ, இனறரவ, தவனடய ஆசரவதஙகள எஙகள வழநடதத, நஙகள சயக

தேவன் தமது வார்த்தையைப் பற்றின் சிந்தையை எப்பொழுதாவது மாற்றுவாரா

65-0418Eமாலைஜெபர்ஸன்வில் இந்தி1261965-04-18

தேவன் தமது வார்த்தையைப் பற்றின் சிந்தையை எப்பொழுதாவது மாற்றுவாரா

65-0418Eமாலைஜெபர்ஸன்வில் இந்தி1261965-04-18

1 நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையின் பொழிவிற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு எங்களுடைய ஸ்தானத்தின் அங்கீகாரத்தையும், நிலைமையையும் மற்றும் எங்களுடைய பொறுப்புகளையும் எங்களுக்கு கொண்டு வரும்படிக்கு, அழைக்கப்பட்ட ஜனங்களாக, உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட, நாங்கள் மீண்டும் உம்முடைய நாமத்தில் கூடியிருக்கிறோம். கர்த்தாவே, இன்றிரவு, தேவனுடைய ஆசீர்வாதங்கள் எங்களை வழிநடத்தி, நாங்கள் செய்கிற அல்லது கூறுகிற காரியங்களில் எங்களை வழிநடத்த, அது உம்முடைய நாமத்திற்கு கனத்தையும், மகிமையையும் கொண்டு வருவதாக. ஆமென்.

22 இன்றிரவு மீண்டும் சபையில் இருப்பதற்கும் மற்றும் அருமையான ஜனங்களாகிய உங்களோடு இருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அது உஷ்ணமாக இருப்பதை நான் அறிவேன், ஆனால் நான் என் மனைவியை தொலைபேசியில் அழைத்தேன், அங்கே தொண்ணூற்றைந்து அல்லது தொண்ணூற்றாறு அல்லது அதற்கு மேலே வெப்பம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், இங்குள்ளதைக் காட்டிலும் சற்று உஷ்ணமாயுள்ளது. எனவே நான் இப்பொழுது உஷ்ணமான காலநிலைக்கு பழகிக்கொண்டிருக்கிறேன். எனவே, ஆனால் இந்த அற்புதமான ஈஸ்டர் நேரத்தில் இங்கே கூடாரத்தில் இருப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 3 இந்தக் காலையில் அந்த நீண்ட, நீண்ட செய்திக்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று என்னால் கூற முடியாது, ஆனால் நான்…அது, உங்களுடைய பொறுமையைக் இழக்க வைத்து, அதன்பின்னர் இன்றிரவு மீண்டும் வரவழைக்க நான் விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இந்த உயிர்த்தெழுதலின் ஒரு பாகமாயிருக்கிறீர்கள் என்ற, அந்த செய்தியை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். பார்த்தீர்களா? இனி அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம், பாருங்கள். அதன் பேரில் களிகூருங்கள்! அதிலிருந்து உங்களை ஒன்றுமே, எங்குமே பிரிக்க முடியாது. எதுவுமேயில்லை; தேவனுடைய இராஜ்ஜியத்தில் நித்தியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவன் தம்முடைய முத்திரையை உங்கள் மேல் பதித்திருக்கும்போது, நீங்கள் சேருமிடத்தின் முடிவை அடைந்துவிடுவீர்கள்.

34 அரசாங்கம் ஒரு மூட்டையின் மேல் ஒரு முத்திரையைப் போடும்போது, இரயில்வே நிர்வாகம் ஒரு கதவுக்கு ஒரு முத்திரையைப் போடும்போது, அந்த வண்டி அதனுடைய சேருமிடத்தை அடையும் வரையில் அதை சேதப்படுத்த முடியாது. தேவன் தம்முடைய முத்திரையை ஒரு மனிதனின் மேல் போடும்போது, அந்த முத்திரை பரிசுத்த ஆவியாய் உள்ளது, அவர் அந்த விதமாக ஒரு மனிதனை முத்திரையிடும்போது, அவன் தன்னுடைய நித்திய இலக்கை அடைகிறான். அவன் இனி ஒருபோதும், திரும்பிப் போகவே முடியாது. ஏனெனில் எபேசியர் 4:30, “நீங்கள் என்றென்றைக்குமாய் முத்திரையாகப் பெற்ற, தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது என்பதை, நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள், நீங்கள் என்றென்றைக்குமாய் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் நித்தியமாக முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்!

45 அப்பொழுது, பிசாசானவன் உங்களைத் நெருக்குவான், அவன் உங்களிடம் எல்லாவற்றையும் கூறி, உங்களைக் குற்றப்படுத்துவான், மேலும்—மேலும் நீங்கள் அவ்வாறில்லை என்ற எண்ணத்தை உண்டாக்க முயற்சிப்பான். ஆனால் நீங்கள் அவனுக்கு செவிகொடுக்க வேண்டாம். 6 இப்பொழுது, நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒரு காலத்தில் நேசித்தவைகளை, நீங்கள் இனிமேல் நேசிப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் நம் மத்தியில் சரியாக கிரியை செய்வதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்…அவர் மகத்தான “நான் இருக்கிறேன்” என்பதற்கு பிழையற்ற நிரூபணங்கள். அவருடைய நாமத்தில் கூறப்பட்டவைகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள், அவருடைய நாமத்தில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட எந்த ஒரு காரியமும் அதே விதமாகவே சரியாக ஒருபோதும் சம்பவிக்காமல் இருந்ததில்லை. விஞ்ஞானம், செய்தித்தாள், புகைப்படம், புகைப்படக் கருவிகள், எழுத்தாளர்கள், மற்ற ஒவ்வொரு காரியமும் கூட அதை அடையாளங்கண்டு கொள்ள வேண்டும். பாருங்கள், அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பொருட்படுத்தாமல், தேவன் அதை எப்படியும், பாருங்கள், அதை தெரியப்படுத்தும்படி அவர்களை செய்ய வைக்கிறார்.

57 இப்பொழுது, ஒரு சிறு குழுவாயிருப்பது. அவர் ஒரு பெரிய குழுவிற்காக வரவில்லை என்பதை, நினைவில் கொள்ளுங்கள். “பயப்படாதே, சிறு மந்தையே, அது உங்கள் பிதாவினுடைய பிரியமாயிருக்கிறது…” புரிகிறதா? 8 நாம் ஒரு ஊழியக்காரருக்கான நியமனம் செய்வதற்கு சற்று முன்பு, நான் உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு வார்த்தையை கூறிவிட்டுச் செல்ல விரும்புகிறேன். இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் நீங்கள் அறிந்திருக்கலாம். இப்பொழுது, இது சரியான எண்ணிக்கையில் உள்ளது என்று நான் கூறவில்லை, ஆனால் நான் இதை உங்களோடு விட்டுவிட விரும்புகிறேன். 9 இங்குள்ள எந்த ஜனங்களாவது கால்நடைகளின் கலப்பினத்தை எப்போதாவது கண்டிருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. அது, நான் அதில் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது செய்யப்படுவதை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் ஆணின் விந்தணுவை எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன், போதுமான அளவு, ஒரு சிறு பல் குச்சியைப் போன்றதில், அதை ஒரு சிறிய உலோகத்தினால் தொட்டு, ஒரு பளிங்குத் துண்டின் மேல் வைப்பார்கள். அதை பெரிதாக்கும் அந்த பூத கண்ணாடிகள் மூலமாக நோக்கிப் பார்த்தால், அந்த விந்தணு…எத்தனை மடங்கு என்று எனக்குத் தெரியாது. அங்கே நீங்கள் இயற்கையான கண்களினால், எந்த சாதாரண கண்ணாடியினாலும் எதையும் காண முடியாது. ஆனால் அது நூற்று அல்லது நூற்றைம்பது மடங்கு பெரிதாக்கப்படும்போது, அந்த ஒரு சிறு துளி விந்தணுவில் ஐம்பது முதல் நூறு சிறு உயிரணுக்கள் துள்ளிக் குதிப்பதைக் காணலாம். மேலும், விந்தணுவில், பெண்ணுக்குள் அநேக முட்டைகள் வருகின்றன. இப்பொழுது, அவைகள் ஒன்றாகக் கொண்டு வரப்படும்போது, இப்பொழுது, முதல் இரண்டும் சந்தித்து இணைக்கின்றன…

610 அந்த பத்து இலட்சத்தில் ஒன்று மாத்திரமே ஜீவிக்கப் போகிறது. அதைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? அவைகள் ஒரே மாதிரியான உயிரணுவாகவும், ஒரே மாதிரியான முட்டையாகவும், அவைகள் இரண்டுமே ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன, ஆனால் ஒன்று மாத்திரமே ஜீவிக்கப்போகிறது. அதில் எந்த ஒன்று முதலில் சென்று இணைகிறது என்பது தீர்மானிக்கப்படுகிறதில்லை. ஏனென்றால், சில சமயங்களில் முட்டையானது, மிகவும் பின்னால் இருக்க, உயிரணுவானது விந்தின் நடுவில் இருக்கலாம், அவைகள் ஒன்றன் மேல் ஒன்று ஊர்ந்து செல்லும். அது பையனா அல்லது பெண்ணா, சிவப்பான தலையுடையதா, கறுப்புத் தலைமுடியுடையதா அல்லது இன்னும் என்னவாயிருக்கப் போகிறது என்பதை அறிய ஒரு அறிவுத்திறன் தேவைப்படுகிறது. அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலாயிருக்கிறது. அது வேறெதுவுமாக இருக்க முடியாது. தெரிந்து கொள்ளுதல்! 11 இயற்கையான பிறப்பில் கூட, தெரிந்து கொள்ளுதல் உள்ளது, அது பையனாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும், அல்லது அது என்னவாயிருந்தாலும் அது இருக்கப்போகிறது. அந்த சிறு உயிரணு இந்த சிறு முட்டைக்குள்ளாக ஊர்ந்து செல்லும்போது, சிறு வால்கள் உதிரும்போது, அதற்குப் பிறகு குழந்தையின் முதுகுத் தண்டுவடம் வளருகிறது; மிருகமாகவோ, குழந்தையாகவோ அல்லது அது என்னவாயிருந்தாலும் சரி. மீதியுள்ள அந்த இலட்சக்கணக்கான உயிரணுக்கள்…பத்து இலட்சம் முட்டைகள், பத்து இலட்சம் உயிரணுக்களில், ஒன்று மாத்திரமே உயிர் வாழ்கிறது. எல்லாமே ஒன்றாயிருந்தாலும், மற்றவைகள் அழிந்துபோகும்போது, எது ஜீவிக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ளுதலின் மூலம் தேவன் தெரிந்துகொள்கிறார். பத்து இலட்சத்தில் ஒன்று!

712 இஸ்ரவேலர் எகிப்தை விட்டுச் சென்றபோது, அவர்கள் எல்லோரும் ஒரே தீர்க்கதரிசியின் செய்தியை விசுவாசித்தனர். அவர்கள் மோசேயின் மூலம் தேவனுடைய அடையாளங்களைக் கண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவைகளைக் கண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்து, சிவந்த சமுத்திரத்தினூடாக கடந்து வந்து, மோசேக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். அவன் ஆவியில் பாடினபோது, தேவனுடைய வல்லமை அவனைத் தாக்கினதை ஒவ்வொருவரும் கண்டனர். மிரியாம் தம்புருவை அடித்து, கடற்கரையோரம் மேலும் கீழும் ஓடினாள். அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு இரவும், வானத்திலிருந்து வந்த புதிய, பரலோக மன்னாவைப் புசித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அடிக்கப்பட்ட அந்த ஆவிக்குரிய கன்மலையிலிருந்து குடித்தனர். இருபது இலட்சம் ஜனங்கள் எகிப்தை விட்டுச் சென்றனர். எத்தனை பேர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர்? இருவர். பத்து இலட்சத்தில் ஒருவரே! அவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் அழிந்து போனார்கள் என்று இயேசு கூறினார். “உங்கள் பிதாக்கள் வனாந்திரத்தில், முப்பது வருடங்களாக மன்னாவைப் புசித்து, அவர்கள் யாவரும் மரித்தார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்.

813 இன்றிரவு உலகத்தில் கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டுகள் மற்றும் எல்லோரையும் கணக்கிட்டால் ஏறக்குறைய ஐநூறு கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். நான் முன்பு கூறியுள்ளபடி, இயேசுவானவர் எடுத்துக் கொள்ளப்படுதலில் வர வேண்டுமானால், இன்றிரவில் உலகத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலில் ஐந்நூறு பேர் காணாமற்போவார்கள். அவர்கள் அநேகமாக ஒவ்வொரு நாளும், எல்லா தேசங்களிலுமிருந்து கணக்கிடப்படலாம், அது ஒருபோதும் கணக்கிடப்படாமலிருக்கும். எனவே அது எந்த நேரத்திலும் இருக்கலாம், பாருங்கள். 14 ஓ, கிறிஸ்தவர்களே, நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்வோமாக. அவரைச் சேவித்து, அவரை நேசித்து, அந்த மகத்தான நேரத்திற்காக காத்திருப்பதற்கு, நாம் அறிந்திருக்கிற எல்லாவற்றையும் செய்வோம்.

915 இப்பொழுது, ஒரு தலைமுறையிலிருந்து கோடிக்கணக்கான திரளான ஜனங்கள் அணிவகுத்து வரப்போவதில்லை. அங்கே—அங்கே அவ்வாறு இருக்க முடியாது. இப்பொழுது, நினைவிருக்கட்டும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைமுறைக்கு முடிவு உண்டாக்குகிறது. “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். அதில் எட்டு பேர்கள் ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவருக்கு, சிலருக்கு நாற்பது வருட காலத்தை முடிக்கிறது. பார்த்தீர்களா? ஒவ்வொரு நாளும், அநேகர் இராஜ்ஜியத்தில் முத்திரையிடப்படுகின்றனர். ஒரு நாள், கடைசி நாள் வரும். நாம் நம்முடைய சரியான சிந்தையில் இருக்கும்போது, இப்பொழுது நாம் நிச்சயமுள்ளவர்களாயிருப்போமாக. சபையிலும், ஜனங்களுக்கு மத்தியிலும், பரிசுத்த ஆவியானவர் தம்மை நம்மோடு அடையாளங்காட்டினபோது, அவருக்கு முன்பாக நாம் ஒவ்வொரு காரியமும் சரியாயுள்ளது என்றும், சரியாக நிலைத்திருக்கிறது என்றும் நிச்சயமுடையவர்களாய் இருப்போமாக. 16 நீங்கள் நிறுத்த வேண்டாம். அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களை உலகத்தின் காரியங்களிலிருந்து தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாகக் கொண்டு வரும் வரையிலும், இரவும் பகலும், இளைப்பாறாதீர்கள். தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக உண்மையாகவே கொண்டுவரப்பட்டு, தேவனுடைய ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிற நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்! ஆனந்தக் கண்ணீரோடு நாம் நம்முடைய முழங்காலில் இரவும் பகலும் இருக்க வேண்டும், அவர் செய்திருக்கிறதற்காக தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

1017 இன்றிரவு நாம் ஆராதனையில் ஒரு சிறு மாற்றத்தை உடையவர்களாயிருக்கிறோம். இங்கே நமக்கு ஒரு அருமையான சகோதரன் இருக்கிறார், சகோதரன் கேப்ஸ். அவர் நசரேய சபையிலிருந்து நம்மிடம் வந்தார். சகோதரன் கேப்ஸ், அது சரிதானா என்று நான் நினைக்கிறேன்? அவர் இன்றிரவு நம் மூலம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், கைகளை வைக்கும்படிக்கும் வாஞ்சித்துக் கொண்டிருக்கிறார். 18 நாங்கள் எவருக்கும் காண்பிக்கும்படியான கடிதத் தாள்களை கொடுப்பதில்லை, அதே சமயத்தில் நாங்கள்… நம்மிடம் பத்திரங்கள் இருக்கலாம், ஆனால் ஒரு உண்மையான, நியமிக்கப்பட்ட ஊழியக்காரன், அவனுடைய தாள்கள் பரலோகத்தில் உள்ளன என்று நாம் விசுவாசிக்கிறோம். பார்த்தீர்களா? தேவன் அவருடைய ஜீவியத்தை வேதாகமத்தோடு அடையாளங்காட்டும் வரையில், அவர்—அவர் வேதாகமத்தைப் பிரசங்கிக்க உரிமையுண்டு. அது அவருடைய நற்சான்றிதழ்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 19 இப்பொழுது, சகோதரன் கேப்ஸ் நாசரேய சபையில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் இன்றிரவோ, அவர் இந்த செய்தியை கொண்டு செல்ல, மூப்பர்கள், முதலானவர்கள், நியமனத்திற்காக தன் மீது கைகளை வைக்கும்படியாக விரும்புகிறார், என்னே ஒரு தீரமான காரியம்!

1120 நான்—நான் டூசானில் இருந்து வந்த செய்திகளையும், அப்பேர்ப்பட்ட அருமையான அறிக்கைகளையும், இங்கே சகோதரன் கேப்ஸ் அவருடைய உதவிக்காக நம்முடைய கருணையுள்ள சகோதரன் நெவில், இந்த இரண்டு மனிதர்களும் ஒளியின் மெழுகுவர்த்தியை எவ்வளவு தீரத்துடன் பற்றிக் கொண்டிருக்க முடியுமோ, அவ்வளவு தீரமாகப் பிடித்திருக்கிறார்கள். நாம் சகோதரன் நெவில் மீது கைகளை வைத்தோம், ஆனால் சகோதரன் கேப்ஸ் மீது அல்ல. நான் அந்த ஊழியக்காரர்களும், சகோதரன் ஜாக்ஸன் மற்றும் அவர்களும், அவர்கள் இங்கே இருந்தால், சகோதரன் ரடலும் மற்றும் சபையின் மூப்பர்களும், அவர்கள் இப்போது சில நிமிடங்களுக்கு இங்கு வந்து, சகோதரர் கேப்ஸ் மீது கை வைக்க விரும்புகிறேன். மேலும் இந்த… 21 இப்பொழுது அந்தவிதமாகவே அவர்கள் அதைச் செய்தனர் என்று, நாம் வேதத்தில் கண்டறிகிறோம், அவர்கள் மேல் அவர்கள் கைகளை வைத்து, அப்பொழுதே அவர்களை வேறுபிரித்தனர். அந்தவிதமாகவே அவர்கள் தீமோத்தேயுவுக்குச் செய்தனர். “உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள் இருந்த, இந்த வரம்…” என்றனர். அந்த மனிதனுக்குள் ஒரு வரம் இருந்தது என்பதை, அவர்கள் கவனித்திருந்தனர், கைகளை வைக்குதலின் மூலம், போதகர்களால் அது அவனிடத்திற்கு வந்திருந்தது.

1222 இப்பொழுது பின்மாரி ஸ்தாபன பிரிவு சகோதரர்கள், பின்மாரி ஸ்தாபன பிரிவு சகோதரர்கள், அதுவும் கலந்திருந்தாலும். அதன் மூலம், அவர்கள் அவனுக்கு ஒரு வரத்தை அளித்ததாக எண்ணினர். இல்லை, அந்த வரம் ஏற்கனவே அவனுக்குள் இருந்தது, அவர்கள் ஒரு அனுமதியாக அவர் மீது கைகளை வைத்தார்கள், தேவன் ஏற்கனவே அந்த வரத்தை அவனுக்குள் வைத்துவிட்டார் என்று அவர்கள் விசுவாசித்தனர். அவர்கள் கைகளை வைப்பதன் மூலம், அதை அங்கீகரித்தனர். 23 இங்கே இந்த சபையில் உள்ள இந்த மனிதர், அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமையினால் தங்களுடைய ஆத்துமாவில் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்; சகோதரர்களாகிய நீங்கள், சகோதரன் ரடல் மற்றும் இங்குள்ள சபையில் உள்ள மற்ற அனைவரும், சுற்றிலுமுள்ள மூப்பர்களும், கிளை சபைகளும் சகோதரன் கேப்ஸ் மீது கரங்களை வைக்க, இந்த கூட்டத்தாருக்கு முன்பாக, கர்த்தராகிய இயேசுவின் நற்செய்தியைப் பிரசங்கிக்க அனுப்பப்பட்டார், தேவன் அவரை எங்கு அழைத்தாலும். அவர்… அவர் ஏற்கனவே பிறப்பின்படி நம்மில் ஒருவராயிருக்கிறார். அவர் நம்மில் ஒருவராயிருக்கிறார், ஏனென்றால் அவர் செய்தியை விசுவாசித்திருக்கிறார். அவர் நம்மில் ஒருவராயிருக்கிறார், ஏனென்றால் அவர் வார்த்தையின் சத்தியத்திற்காக நிற்கிறார். சகோதரன் கேப்ஸ் நம்மில் ஒருவர் என்று கைகளை வைப்பதன் மூலம் உங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சரி, சகோதரன் ரடல், சகோதரன் காப்ஸ், சகோதரன் நெவில். சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் அவர்களே, இங்குள்ள மற்ற ஊழியக்காரர்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. நான்…இன்றிரவு அவர்கள் தங்களுடைய சொந்த ஆராதனைகளை வைத்துள்ளனர் என்று நான் யூகிக்கிறேன். எனவே சகோதரன் கேப்ஸ், இங்கே வாருங்கள். இப்பொழுது நியூயார்க்கிலிருந்து சகோதரன் ஹண்டரும் மற்றவர்களும் எங்கே இருக்கிறார்கள், நான்…சகோதரன் அந்தோணி? அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர் என்று நான் யூகிக்கிறேன். [சகோதரன் நெவில், “அங்கே சகோதரன் அந்தோணி இருக்கிறார்” என்கிறார்.—ஆசி.] எங்களோடு, இங்குள்ள உங்களில் எவரேனும், ஏன், நீங்கள் இங்கு வந்து, இப்பொழுது எங்களோடு நிற்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைவோம், சகோதரர் கேப்ஸ் என்று நாங்கள் நம்பும் அங்கீகாரமாக… இங்குள்ள உங்களில் எத்தனை பேருக்கு சகோதரர் கேப்ஸைத் தெரியும்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி, உங்களுடைய கரத்தை கீழே வையுங்கள். அவர் தேவனுடைய ஊழியக்காரன் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நம்முடைய சகோதரன் என்ற முறையில் நாம் அவரை நேசிக்கிறோம்.

1324 இப்பொழுது நாம் நியமனம் என்று அழைக்கிறதற்கு இது சரியாக ஒரு சரியான வழியல்ல, ஆனால் எனக்கு இந்தக் கூட்டத்தினர் தேவை, என்னால் இந்தப் பாடலைப் பாட முடியவில்லை, ஆனால் இதை முயற்சிக்க நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 25 ஒரு நாள் ஒரு தீர்க்கதரிசி தேவாலயத்தில் உள்ள, பீடத்தண்டைக்குச் சென்றான். அவன் அங்கே ஆலயத்தில் இருந்தபோது…அவன் ஒரு நல்ல மனிதனாயிருந்தான், ஆனால் அவன் உசியா ராஜாவின் ஆதரவில்தான் இருந்தான், அவன் ஒரு—அவன் ஒரு நல்ல மனிதன். ஆனால் அதே சமயத்தில் ஒரு நாள், அவன் ஒரு தரிசனம் கண்டபோது, அவன் இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத ஒன்றைக் கண்டான். தூதர்கள், சிறகுகளோடு, கட்டிடத்தினூடாக, முன்னும் பின்னுமாக பறந்து, “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்” என்று கூப்பிட்டனர். (வாருங்கள், சகோதரனே. ஆம். பார்த்தீர்களா?) “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்!” (பென்.)

1426 அவன் அதைக் கண்டபோது, தேவாலயத்தின் வாசல்களின் நிலைகள் அசைந்தன. அவன், “ஐயோ! நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்றான். தேவனுடைய பிரசன்னத்தில் அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபோதிலும், அவன் தவறாயிருந்தான் என்பதை அடையாளம் கண்டுகொண்டான். அவன், “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், நான் அசுத்த உதடுகளுள்ள ஜனங்களுக்கு மத்தியில் வாசம் பண்ணுகிறேன்” என்றான். 27 அப்பொழுது தூதர்களில் ஒருவன் பறந்து வந்து, ஒரு அக்கினித் தழலை எடுத்து, அவனுடைய உதடுகளைத் தொட்டு, “மனுஷபுத்திரனே, தீர்க்கதரிசனஞ் சொல்லு!” என்றான். சகோதரியே, நீங்கள் விரும்பினால், எத்தனை பேருக்கு இந்தப் பாடல் தெரியும்? நாம் ஒரு சரணத்தைப் பாடுவோமாக. சரி. அக்கினித் தழல் தீர்க்கதரிசியைத் தொட்டபோது, அவனை பரிசுத்தமாக்கி, தேவனுடைய சத்தம், “யார் நமக்காக போவான்?” என்று கூறினபோது, அப்பொழுது அவன், “இதோ நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்றான். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …என் ஆண்டவரே, பேசும், பேசும், அப்பொழுது நான் துரிதமாக உமக்கு உத்தரவு கொடுப்பேன்; என் ஆண்டவரே, பேசும், என் ஆண்டவரே, பேசும், பேசும், அப்பொழுது நான், “ஆண்டவரே, என்னை அனுப்பும்” என்று பதிலளிப்பேன். இப்பொழுது கோடிக்கணக்கானோர் பாவத்திலும், அவமானத்திலும் மரித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய துயரமும், கசப்புமான கூக்குரலுக்கு செவிகொடுங்கள்; சகோதரனே, சீக்கிரம் அவர்களை மீட்க; “போதகரே, இதோ நான் இருக்கிறேன்” என்று துரிதமாக பதிலுரையுங்கள். என் ஆண்டவரே, பேசும், என் ஆண்டவரே, பேசும், பேசும், அப்பொழுது நான் துரிதமாக உமக்கு உத்தரவு கொடுப்பேன்; என் ஆண்டவரே, பேசும், என் ஆண்டவரே, பேசும், பேசும், அப்பொழுது நான், “ஆண்டவரே, என்னை அனுப்பும்” என்று பதிலளிப்பேன். மூப்பர்கள் இப்பொழுது சுற்றி நடந்து சகோதரன் கேப்ஸ் மீது கரங்களை வைக்கட்டும். நாம் யாவரும் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக.

1528 அன்புள்ள தேவனே, உயிர்ப்பிக்கும் ஜீவனின் ஆவியானவர் எங்களுடையசகோதரனுக்குள் கிரியை செய்வதைக் காண்கையில், ஆலய வாசல்களின் நிலைகள் மீண்டும் அசைந்துள்ளன. இது உன்னதத்திலிருந்து வந்துள்ளது என்றும், அவர் செல்ல வேண்டும் என்று கூறுகிறதை அவர் உணர்கிறபடியால், தேவனே, நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய மூப்பர்களாகிய, நாங்கள் அவர் மீது கரங்களை வைத்து, ஐக்கியத்தின் வலது கரத்தை அவருக்கு அளிக்கிறோம்; அவர் மேல் எங்களுடைய கரங்களை வைத்து, தேவனுடைய ஆசீர்வாதங்களை அவர் மீது அனுப்புகிறோம், நீர் அவருடைய உதடுகளையும், அவருடைய சிந்தனையையும், அவனுடைய முழு ஜீவியத்தையும் அபிஷேக்க வேண்டும். அவர் இந்த சுவிசேஷ செய்தியை நீர் அவரை அழைக்கும் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் கொண்டு செல்வாராக. கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், எங்கள் சகோதரனை உமக்கு அளிக்கிறோம். ஆமென். 29 என் இளைய சகோதரனே, “வார்த்தையை பிரசங்கி.” “சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடியை சாந்தத்ததோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி கடிந்துக் கொண்டு புத்தி சொல்லு.” சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

1630 [சகோதரன் பென் பிரையன்ட், “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் என் மீது கைகளை வைப்பீர்களா? அவர்கள் என் மீது கைகளை வைப்பார்களா? நான் நியமிக்கப்பட விரும்புகிறேன்.”—ஆசி.] நீங்கள்…? நீங்கள் அதை அறிந்திருக்கவில்லை என்பதை நான் அறியேன். இங்கே சகோதரன் பென் எங்களிடம் வந்திருக்கிறார். அவர் சிறிது காலமாக பிரசங்கித்து வருகிறார் என்று நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக (அவர் இருந்தார் என்று நான் நினைத்தேன்; அதன் காரணமாகவே நான் அவரை அழைத்தேன்.) நியமிக்கப்படவில்லை அல்லது இங்கே அவர் மேல் கைகள் வைக்கப்படவில்லை. 31 இப்பொழுது, சகோதரன் பென்னுடைய மனைவி இங்கே எங்கோ இருக்கிறாள், அவள் ஒரு அருமையான நபர். அவள் ஒரு பெண் பிரசங்கியாக இருந்தாள். அவளுக்கும் நம்முடைய சகோதரனுக்கும் விவாகமானபோது, அவர் அவளை கூடாரத்திற்கு அழைத்து வந்தபோது, அவள் வார்த்தையைக் கண்டு, கேட்டபோது, அதே சமயத்தில் ஒரு அருமையான சிறு பெண்மணி ஒரு அருமையான குணாதிசயத்தோடு, ஸ்திரீகள் அதை செய்வது தவறு என்று அவள் கண்டபோது, அவள் ஒருபுறம் ஒதுங்கினாள்; அது அவளுடைய கணவன் மேல் விழுந்தது போலிருந்தது. அது சரிதான். அதுதான் அப்போஸ்தல மார்க்கம். அந்தவிதமாகத்தான் அது இருக்க வேண்டும். 32 நான் புரிந்துகொண்டபடி, சகோதரன் பென் அவருடைய மனைவியோடு, ஒலிநாடாக்களைக் கொண்டு செல்கிறார். அவர்கள் மறு…வழியில்லாத இடங்களுக்குச் சென்று, மலைகளுக்குள்ளாக, காடுகளுக்குள் சென்று, அவர்கள் இந்த ஒலிநாடாக்களை இயக்கி, அந்த ஒலிநாடாக்களில் கருத்துரைக்கின்றனர். அநேக சமயங்களில் அவர்கள் துரத்தப்பட்டு, தூக்கியெறியப்படுகின்றனர். நாம் அதை எதிர்பார்க்கிறோம். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.”

1733 இங்குள்ள எத்தனை பேருக்கு சகோதரன் பென் அவர்களைத் தெரியும்? எத்தனை பேர் அவரை தேவனுடைய ஊழியக்காரன் என்றும், நாம் அவருக்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிற இந்த ஆசீர்வாதத்திற்கு பாத்திரவானாக இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறீர்கள்? பாருங்கள், அவர் ஒரு அந்நியன் அல்ல. அவர் அநேக வருடங்களாக நம்மோடு இருந்து வருகிறார். நான் அவரை தாழ்மையுள்ள ஒரு மனிதனாகவே அறிவேன். அவர் என்னைப் போன்றவர்; அவர் அநேக தவறுகளைச் செய்கிறார். நாம் யாவரும் அதைச் செய்கிறோம். சகோதரன் பென்னைக் குறித்து எனக்குப் பிரியம் என்னவெனில், அவர் அதை சரிபடுத்த முழங்காலில் ஊர்ந்து செல்ல மனப்பூர்வமாய் இருக்கிறார். அன்றொரு நாள் விவாகமும் விவாகரத்தும் என்ற செய்தியைக் குறித்து அவர் கேள்விப்பட்டபோது, அவரும் அவருடைய மனைவியும் பிரிந்து செல்ல ஆயத்தமாயிருந்தனர், ஏனென்றால் அவர் அவளை நேசிக்கிறார், அவள் அவரை நேசிக்கிறாள், ஆனால் அவர்கள் தேவனுடைய வார்த்தையோடு இசைந்து செல்ல விரும்புகிறார்கள். வார்த்தை என்ன கூறினாலும், அதைத்தான் அவர்கள் விரும்பினர். தேவன் பென்னையும் அவருடைய மனைவியையும் அவருடைய ஊழியத்திற்கென்று ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாம் நம்முடைய கரங்களை நம்முடைய சகோதரன் மேல் வைப்போம்.

1834 அன்புள்ள தேவனே, நாங்கள் சகோதரன் பென்னை நேசிக்கிறோம் என்பதற்கு ஒரு அடையாளமாக, நாங்கள் எங்களுடைய கரங்களை அவர் மீது வைக்கிறோம், கர்த்தாவே, அவர் உமக்காக ஒரு பணியைச் செய்வதற்கும், இந்த ஒலிநாடாக்களுடன் வெளியே அனுப்பப்படுவதற்கும், நம்மில் அநேகர் ஒருபோதும் செல்லாத தூரமான இடங்களிலுள்ள சில மலைவாசிகளின் மத்தியில் அவைகளை இயக்கவும் விருப்பமுள்ளவராய் இருக்கிறார் என்றும் நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதே சமயத்தில் செய்தி உலகம் முழுவதிலும் செல்ல வேண்டும். நீர் எங்களுடைய சகோதரனை ஆசீர்வதித்து, உமது ஆவியை அவருக்கு அளிக்க, அது அவர் மேல் வருவதாக என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அங்கு தூரத்தில் அந்த ஒரு ஆத்துமா உள்ள அந்த இடங்களுக்கு அவரை வழிநடத்தி, அவரையும் அவரது மனைவியையும் வழிநடத்தும், அந்த ஒரு செம்மறியாடு உள்ளே கொண்டுவரப்படும் வரையிலும் கதவுகள் மூடப்பட முடியாது. நீர் தொண்ணூற்றொன்பதில் திருப்தியடையவில்லை. அந்த…புஸ்தகத்தில் உள்ள ஒவ்வொரு பெயரும் உள்ளே கொண்டுவரப்பட வேண்டும். கர்த்தாவே, நாங்கள் அவர் மீது கரங்களை வைக்கையில், அவரை எங்களுடைய சகோதரனாக எங்களுக்கு இணைத்து, அவர்களுக்கு உதவி செய்யும். அவருக்காக எங்களுடைய உதவியும் ஜெபமும் அவரோடு செல்லும். கர்த்தாவே, அவர் எங்கு சென்றாலும், நீர் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில். ஆமென். சகோதரன் பென், உம்மை ஆசீர்வதிப்பாராக! ஊழியக்கார சகோதரர்கள் என்ற முறையில் நாங்கள் உங்களுக்கு ஐக்கியத்தின் வலது கரத்தை அளிக்கிறோம். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

1935 [சகோதரன் ஏர்ல் மார்டின், “சகோதரன் பிரான்ஹாம், நீர் என் மீது கரங்களை வைத்து, ஒரு போதகராக பணிபுரிய என்னை நியமிக்கிறீரா?” என்று கேட்கிறார்—ஆசி.] ஜான் மார்டின்… [“ஏர்ல்.”] ஏர்ல். எத்தனை பேருக்கு ஏர்ல் மார்டினைத் தெரியும்? எத்தனை பேர் அவரை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்கள்? அவர் நம்மிடம் வருகிறார்…முதலில், ஒரு பெந்தேகோஸ்தே குழுவிலிருந்து வந்தவர் என்று, நான் நினைக்கிறேன், இப்பொழுது அவர் மேய்ப்பராகவும், சுயாதீனமான ஒரு ஊழியத்தையும் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். 36 ஏர்ல் ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நடந்துள்ள அநேக செயல்களில், நான் ஒரு செயலை ஒருபோதும் மறக்கவே மாட்டேன், ஆனால் ஏர்லுடன் ஒரே ஒரு செயல். நான் டெக்ஸாஸில் உள்ள, டல்லாஸில் இருந்தபோது, ஒரு இரவு அவர்கள் அவரை அழைத்தது எனக்கு நினைவிருக்கிறது. அல்லது நான்—நான் நினைக்கிறேன், இல்லை, அது… [ஒரு சகோதரி, “பியூமாண்ட்” என்று கூறுகிறார்.—ஆசி.] டெக்ஸாஸில் உள்ள பியூமாண்ட், சகோதரியே, அது உண்மை. அவர்கள்—அவர்கள்…அவருடைய குழந்தை மரித்துக் கொண்டிருந்தது. அது ஏற்கனவே மரித்துவிட்டதாக அவர்கள் நினைத்தனர். அது சுவாசிக்கவில்லை. நான் படுக்கையில் இருந்தபோது, ஏர்ல் ஒரு தந்தையாக, தோள்களை வளைத்து, எனக்கு முன்பாக கீழே குனிந்து, என் அறைக்கு வந்தார். சட்டை கையை சுருட்டிவிட்டுக்கொண்டு; அவர் தன்னுடைய கரங்களை என் மீது போட்டுக் கொண்டு, “சகோதரனே, நீர் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை எப்பொழுதுமே விசுவாசித்திருக்கிறேன். நீ ஒரு வார்த்தையைக் கூறினால், என் குழந்தை மரித்துப் போனாலும், அது பிழைக்கும்” என்றார். அவருடைய குழந்தை உயிர்த்தெழுந்து, ஜீவித்துக் கொண்டிருக்கிறது.

2037 இந்த விசுவாசிகளின் ஐக்கியத்தின் வலது கரத்திற்கு அவர் தகுதியுள்ளவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சகோதரர்களே, நாங்கள் அவர் மீது கரங்களை வைக்கையில், நாம் ஜெபிப்போமாக. 38 கிருபையுள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் மீண்டும் எங்கள் சகோதரன் மார்டின் மீது, கரங்களை வைக்கிறோம். கர்த்தாவே, அவர் போகவேண்டுமென்று நீர் நியமித்திருக்கிற எல்லைகளுக்கு, நாங்கள் அவரை அனுப்புகிறோம்; அது எங்கிருந்தாலும், அநேகமாகவோ அல்லது சிலதாகவோ, வழிப்பாதைகளாகவோ, நெடுஞ்சாலைகளாகவோ, வேலிகளாகவோ, அது அவ்வாறு இருந்தாலும். அது எங்கிருந்தாலும், கர்த்தாவே, உம்முடைய ஆசீர்வாதங்கள் அவரோடு இருப்பதாக. நாங்கள் எங்களுடைய கரங்களை அவர் மீது வைத்து, உம்முடைய வாழ்த்துக்களை நாங்கள் அவருக்குக் கூறி, எங்களுடைய ஆசீர்வாதங்களை அவருக்கு அளிக்கிறோம், கர்த்தாவே, எங்கள் மேல் இருக்கிற, ஆவியானவர் அவரோடு செல்ல, அவரை வழிநடத்தி, வேலிகளிலும், பெரும்பாதையிலும் இழக்கப்பட்ட ஆத்துமாக்களண்டை அவரை வழிநடத்துவாராக. நாங்கள் அவரை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். சகோதரர் மார்டின், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது புறப்பட்டுச் செல்லுங்கள், கர்த்தர் உங்களோடு இருப்பாராக.

2139 அதே நோக்கத்திற்காகவா? [சகோதரன் ரிச்சர்ட் பிளேயர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்—ஆசி.] ரிச்சர்ட் என்பது உங்களுடைய பெயர்? [“சரி. ரிச்சர்ட் பிளேயர்.”] எத்தனை பேர் ரிச்சர்ட் பிளேயரை அறிவீர்கள்? அவரை தேவனுடைய ஊழியக்காரன் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அவர் ஐக்கிய பெந்தேகோஸ்தே சபையின் குழுவிலிருந்து வருகிறார். சகோதரன், சகோதரன் பிளேயர், அவருடைய ஒரு மகத்தான அழைப்பை நான் நினைவு கூருகிறேன். சகோதரன் பிளேயர், நம்ப மனமில்லாத அந்த நேரத்தை நான் நினைவு கூறுகிறேன், என்னை நம்ப விரும்பவில்லை, ஏனென்றால் ஒரு ஆவி அவரோடு கிரியை செய்து கொண்டிருந்தது, நான் பொய்யானவன் என்று அவரிடம் கூறினது. அவர் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்திக் காட்டினார். அவர் கிட்டத்தட்ட ஒரு—ஒரு செயலிழப்பிற்கு ஆயத்தமாயிருந்தார், அதுவே அவரை அந்த நிலைமைக்கு கொண்டு வந்தது. அவருடைய அருமையான மனைவி ஒரு நாள் என்னை அழைத்தது எனக்கு நினைவிருக்கிறது. அவள், “சகோதரன் பிரான்ஹாம், ரிச்சர்ட் மரிக்கப் போகிறார் என்று நான் நினைக்கிறேன்” என்றாள். அவள் ஒரு கழுத்துக் குட்டையை வைத்திருந்தாள் என்று நான் நினைக்கிறேன். நான் அவளிடம் கேட்டுக்கொண்டபடியே, அவள் சென்று அதை அவர் மேல் வைத்து, ஜெபித்தாள். இதோ அவர் இருக்கிறார். 40 ஒரு சிறு குழந்தை விபத்தில் சிக்கியிருந்தது, இல்லை, [சகோதரன் பிளேயர், “என் பையன்” என்று கூறுகிறார்.—ஆசி.] அவருடைய பையன், ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டான், ஒரு மூளையதிர்ச்சி ஏற்பட்டு, அதற்கான நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. தொலைபேசியின் மூலமாக, ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தினால், குழந்தை சுகமடைந்தது. சகோதரன் பிளேயர் கிறிஸ்துவின் ஒரு உண்மையான சாட்சி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] உங்களுடைய ஆசீர்வாதங்கள் அவரோடு செல்ல வேண்டுமென்று நீங்கள் ஜெபியுங்கள். சகோதரர்களே, அவர் மீது உங்கள் கரங்களை வையுங்கள்.

2241 அன்புள்ள தேவனே, எங்களுடைய கருணையுள்ள, உயரிய சகோதரனை அடையாளங்காட்டும்படியாக, உம்முடைய ஊழியக்காரன், தன்னுடைய சொந்த குழுவிலிருந்தும் கூட, ஒளியில் நடக்க வந்திருக்கிறார். பிதாவே, நீர் எங்கள் சகோதரன் பிளேயரை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், நாங்கள் எங்களுடைய ஆசீர்வாதங்களோடும், எங்களுடைய அனுமதியோடும், எங்களுடைய கரங்களை அவர் மேல் வைத்து, நீர் அவரை எங்கே அழைத்தாலும், கர்த்தாவே, அது எந்த வேலையாயிருந்தாலும் சரி. உம்முடைய ஆவி சகோதரன் பிளேயரோடு செல்லட்டும். அவரை வழி நடத்தி, காணாமற்போன ஆட்டைக் கண்டறியும்படிக்கு, இந்த உலகத்தில் காணாமற்போன, மரிக்கும் தருவாயில் அவரை வழிநடத்தி, அவர் அதை மீண்டும் தொழுவத்திற்கு கொண்டு வரும்படியாக. அது எங்கிருந்தாலும், கர்த்தாவே, அவருக்காக நீர் என்ன வைத்திருந்தாலும், உம்முடைய ஆவியானவர் அவரை வழிநடத்தி, அவருடைய வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவரை வழிநடத்தும்படி நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் அவருடைய சகோதரர்கள். ஐக்கியத்தின் வலது கரத்தை அவருக்கு அளித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரோடு செல்லும்படி நாங்கள் உம்மை வேண்டிக்கொள்கிறோம். ஆமென். ஐக்கியத்தின் வலது கரம்! சகோதரர் பிளேயர், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் நூறு சதவிகிதம் உங்களோடு இருக்கிறோம், உங்களுக்காக ஜெபித்து, உங்களுக்கு உதவி செய்ய எங்களால் முடிந்த எதையும் செய்வோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

2342 [சகோதரன் மெர்லின் ஆண்டன், “சகோதரன் பிரான்ஹாம், எனக்கும் அதே நியமனமஞ்செய்தலைச் செய்யுங்கள்” என்கிறார்.—ஆசி.] என்ன கூறுவது? [“நியமனமஞ்செய்தல்.”] நீங்கள் யார்? [“மெர்லின் ஆண்டன்.”] மெர்லின் ஆண்டன். [“நான் சபையில் இருக்கிறேன்.”] எங்கே? [“இங்கே சபையில்.”] சபையில். சகோதரர் மெர்லின் ஆண்டனை யாருக்காவது தெரியுமா? அவர் எனக்கு புதியவர். [“இரட்சிப்பின் சேனை என்ற குழுவினர். என்னை ஞாபகமிருக்கிறதா?”] ஓ, ஆம். சகோதரனே, என்னை மன்னியுங்கள். இரட்சிப்பின் சேனையிலிருந்து வந்தவர், அது உண்மை, நான் அவரை நினைவுகூருகிறேன். நிச்சயமாகவே, இப்பொழுது எனக்கு அவரைத் தெரியும். நான்…இந்த நேரத்தில், அவருடைய முகம் அப்பொழுது எனக்கு நன்கு தெரிந்தது போன்று தென்படவில்லை. அவரை தேவனுடைய மனிதனென்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] தேவன் அவரோடு கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்று—என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். [“ஆமென்.”] நீங்கள் அவருக்காக ஜெபிப்பீர்களா? [“ஆமென்.”] 43 இப்பொழுது, சகோதரனே, நீர் இரட்சிப்பின் சேனை என்ற ஒரு மகத்தான கூட்ட ஜனங்களிலிருந்து வந்திருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம், அவர்கள் ஒரு மகத்தான ஜனங்கள். ஆனால், மேலும், இரட்சிப்பின் சேனை வீதியில் ஒரு மகத்தான பணியைச் செய்கிறது. நாம் நசரேய சபைக்கோ, பெந்தேகோஸ்தே சபைக்கோ அல்லது இரட்சிப்பின் சேனைக்கோ அல்லது அவைகளில் எதற்கும் எதிராக ஒன்றும் கூற முடியாது. அவர்கள் நம்முடைய சகோதரர்களாயிருக்கிறார்கள். ஆனால், நீங்கள் பாருங்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நேரத்திற்கென ஒரு மகத்தான செய்தியை கொண்டு செல்பவர்களாய் நாம் இருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம். எங்களோடு நீங்கள் அதைச் செய்ய விரும்புகிறீர்களா? [சகோதரன் ஆண்டன், “ஆமென்” என்கிறார்.—ஆசி.] நாம் நம்முடைய கரங்களை நம்முடைய சகோதரன் மேல் வைக்கும்போது, நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.

2444 அன்புள்ள பரலோகப் பிதாவே, நீரே அழைக்கிற ஒருவராய் இருக்கிறீர். அவர்கள் விசுவாசிக்கும்படியாக, நீர்தான் வார்த்தையை உயிர்ப்பிக்கிறவர். நீர் அவரோடு இருக்கிறீர் என்றும், அவருக்கு உதவி செய்வீர் என்றும் நாங்கள் விசுவாசிக்கும் ஒரு அங்கீகாரமாக, எங்கள் விலையேறப்பெற்ற சகோதரன் மீது நாங்கள் எங்களுடைய கரங்களை வைக்கிறோம். நாங்கள் மரணத்தை விட்டு ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிற நாங்கள் எங்களுடைய ஆசீர்வாதங்களை அவரோடு அனுப்புகிறோம் இப்பொழுது தேவனுடைய கிருபையினால், எங்கள் இருதயங்களில் உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவர்களாயிருக்கிறோம், நாங்கள் எங்கள் சகோதரன் மீது கரங்களை வைத்து, எங்களுடைய ஆசீர்வாதங்களுடன் அவரை அனுப்புகிறோம், நீர் அவரை வழி நடத்தி, அவருக்கு வழிகாட்டி, பூமியின் ஒவ்வொரு சந்திற்கும் அவரை வழிநடத்தும், கர்த்தாவே, அவர் போகும்படி நீர் நியமித்திருக்கிறீர். உம்முடைய ஆவியானவர் அவரோடு சென்று, அவருக்கு ஆரோக்கியத்தையும், பெலனையும், அவருடைய ஊழியத்தில் வெற்றியையும் அளிப்பாராக, நாங்கள் அவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். 45 சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது ஐக்கியத்தின் வலது கரம் என்பதை நீங்கள் அறிவீர்கள், சகோதரர்களே அந்தவிதமாக, சகோதரர்களே அவரோடு கரங்குலுக்குங்கள், எனவே அது நீங்கள் தான்…சரி, கர்த்தர் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.

2546 [சகோதரன் கேரல், “எனக்கு—எனக்கு அதிகாரப்பூர்வமாக, ஒருபோதும் அவ்வாறு செய்யப்படவில்லை. இயேசுவின் நாமத்தில், நீங்கள் உங்களுடைய கரங்களை என் மீது வைக்க விரும்புகிறேன்.”—ஆசி.] நீங்கள், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்களுடைய… [“அவர்களைப் போன்றே, இருக்க வேண்டிய நேரம் இது.”] இப்பொழுது உங்களுடைய பெயர் என்ன? [“சகோதரன் கேரல், சின்சினாட்டியிலிருந்து வந்திருக்கிறார்.”] சகோதரன் கேரல். [சகோதரன் கேரல், “நான் நியமிக்கப்பட்ட ஊழியக்காரனாய் இருந்தேன், ஆனால் ஸ்திரீகளை ஊழியக்காரர்களாக நியமித்துக் கொண்டிருந்த சகோதரனுடன் என்னால் இணங்க முடியவில்லை, எனவே நான் அதிலிருந்து விலக வேண்டியதாயிருந்தது” என்று கூறுகிறார்.—ஆசி.] இவர்தான் சின்சினாட்டியிலிருந்து வந்துள்ள சகோதரன் கேரல். சகோதரன் கேரல் அவர்களை எவருமே அறிவீர்கள், உங்களுடைய…உயர்த்துங்கள், சின்சினாட்டியிலிருந்து வந்திருப்பதால், எவருமே அதை அறிவீர்கள் என்று, நான் சந்தேகிக்கிறேன். அவர் ஒரு குழுவில் இருந்ததாகவும், அந்த குழு பெண்களை ஊழியக்காரர்களாக நியமிக்க விரும்பியதாகவும் கூறுகிறார். அவரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை, அவர் அவர்களிடத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டியதாயிருந்தது. அந்தவிதமாகத்தான் நான் மிஷனரி பாப்டிஸ்டுகளிடத்திலிருந்து பிரிந்துவிட்டேன். வேத பண்டிதர் ராய் இ.டேவிஸ், எத்தனை பேர் அவரைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக, நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள், பாருங்கள். அவர் சில பெண் பிரசங்கிமார்களை நியமிக்க விரும்பினார், அப்பொழுது நான், “இல்லை ஐயா. ஒரு மூப்பன் என்ற முறையில்,” கூறினேன், நான், “என்னால் உணர்வு பூர்வமாக, அதைச் செய்ய முடியாது. அது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ளது” என்றேன். 47 சகோதரன் கேரல், எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால் உங்களுடைய சாட்சியின் அடிப்படையின் பேரில், அந்த சத்தியத்திற்காக நீங்கள் நிற்கிறீர்களே… அந்தப் பெண்களுக்கு எதிராக எங்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் சகோதரிகள். நாங்கள் அவர்களை நேசிக்கிறோம். ஆனால் அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தைப் பெற்றுவிட்டனர் என்றும், அவர்கள் தரித்திருக்க வேண்டும் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். பார்த்தீர்களா? அவர்கள் ஒரு மனிதனுக்கு மிகவும் அருமையான, ஒரு துணையாக இருக்கிறார்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். எந்த வகையிலும்…இரட்சிப்பிற்கு அடுத்தபடியாக தேவன் ஒரு மனிதனுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய வரம் அவர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் தேவனுடைய வார்த்தையின்படி, அவளுக்கு பிரசங்க பீடத்தில் இடமில்லை. அந்த அடிப்படையின் பேரில், தேவனில் உள்ள உங்களுடைய விசுவாசத்தின் பேரில், நீங்கள் எங்களோடு வரும்படி, ஐக்கியமாக, நாங்கள் உங்கள் மேல் கரங்களை வைக்கிறோம். நம்முடைய கரங்களை அவர் மேல் வைப்போமாக.

2648 எங்களுடைய அருமையான பரலோகப் பிதாவே! இந்த வாலிபன், அவர் எப்படி உணருகிறார் என்பதை என்னால் கிட்டத்தட்ட அறிந்து கொள்ள முடிகிறது. அவர் ஒரு உண்மையான சத்தியத்தின் காரணமாக வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். அதாவது, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” எனவே நாம் அவர் மீது கரங்களை வைத்து, நம்முடைய ஆசீர்வாதங்களை அவர் மீது அளிக்கிறோம். கர்த்தாவே, நீர் அவரை எங்கே அனுப்பினாலும், ஜீவியத்தின் பயணம் முழுவதும் அவரை வழி நடத்தும், உம்முடைய ஆவியானது அவரை வழி நடத்துவதாக. நாங்கள் அவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அறிந்துகொள்ளட்டும், அது அவருக்கு ஒரு உதவியாயிருக்கும், அவர் சத்தியத்திற்காக நிற்கும் வரைக்கும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் அவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். சகோதரன் கேரல், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பல்வேறுபட்ட, நீங்களும் கைகளை வைக்கலாம். நீங்கள் அனைவரும் அதற்கான சரியான ஐக்கியத்தின் கரங்களை ஒருவிதமாக அளியுங்கள்.

2749 இங்குள்ள சகோதரன் ரடல், இங்கே சபையில் அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் நியமனம் செய்யப்படவில்லை. முடியுமா…சகோதரன் ரட்டலை எத்தனை பேருக்குத் தெரியும்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நாம் யாவரும் அவரை அறிவோம். அவர் ஒரு தேவனுடைய மனிதன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? [“ஆமென்.”] அன்புள்ள பரலோகப் பிதாவே, ஆழமான, சேற்றான தண்ணீர்களினூடாகச் சென்றிருக்கிற இந்த சகோதரன் மீது உம்முடைய மூப்பர்கள் என்ற முறையில் கரங்களை வைத்துள்ளனர். அவர் தன்னுடைய சபையோர் விழுந்து போவதைக் கண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு காரியமும் சம்பவிக்கிறதைக் கண்டாலும், விசுவாசிக்கிறார். என்றாலும் …?… நாங்கள் அவர் மீது கைகளை வைத்து, அவருக்கு எங்கள் ஆசீர்வாதங்களை அனுப்புகிறோம். கர்த்தாவே, வார்த்தையினால் வல்லமையாய் அவரை அபிஷேகியும், கர்த்தாவே, அவரை பூமியின் எல்லா முடுக்குகளுக்கும் அனுப்பும்! …?… அவர் மீது இருந்து அவருக்கு செய்யும். அவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். 50 சகோதரன் ரடல், நீர் ஐக்கியத்தின் வலது கரத்தை எப்பொழுதுமே உடையவராயிருக்கிறீர். எனக்கு சகோதரன் ரடலைத் தெரியும். அவர் என்னுடைய சொந்த பையனைப் போன்று—போன்று காணப்படுகிறார். அவருடைய தந்தையும் நானும், தாயும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம். நான் சகோதரன் ரடல் ஒரு தேவனுடைய ஊழியக்காரன் என்று அறிவேன். நான் அவரோடு ஊழியம் செய்திருக்கிறேன். சகோதரர் ரடல், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

2851 அவருடைய பெயர் என்ன? சகோதரனே, நீங்கள் யார்? [யாரோ ஒருவர், “சகோதரன் மார்டினுக்கு மைத்துனர்” என்கிறார்.—ஆசி.] சகோதரன் மார்ட்டின், உங்களுக்கு அவரைத் தெரியுமா, சகோதரன் மார்டின்? உங்களுடைய பெயர் என்ன? [அந்த சகோதரன், “சங்கை. மக்கோமாஸ்” என்கிறார்.—ஆசி.] சகோதரன் மக்கோமாஸ். இவரை இங்கு யாருமே அறிந்திருக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன், ஆனால் அவர் ஒரு…ஆம், சகோதரன் டைலர், இங்குள்ள இந்த மனிதனுக்கு அவரைத் தெரியும். அவர் சுவிசேஷத்தை சுமந்து செல்லும்படியாக, தம் மீது கரங்கள் வைக்கும்படியாக…அவர் வந்திருக்கிறார். சகோதரன் மெக்கோமாஸ், சகோதரன் மெக்கோமாஸ், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? [“ராக்ஃபோர்ட், இல்லினாய்ஸ்.”] ராக்ஃபோர்ட், இல்லினாய்ஸ். [“நீங்கள் கடந்த வாரம் இல்லை கடந்த திங்கட்கிழமை இரவு, என்னுடைய வீட்டிற்கு தொலைபேசி செய்து, என் மனைவிக்காக ஜெபித்தீர்கள்.”] ஓ, அது சரியா? டூசானிலிருந்து. [“டூசான், அரிசோனா.”] ஓ, அந்த அழைப்பை இப்பொழுது நான் நினைவு கூருகிறேன். [“அவள் அடுத்த நாள் காலையில் எழுந்தாள்.”] கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! [சகோதரன் மார்டின் சகோதரன் பிரான்ஹாமிடம் ஒரு காரியத்தைக் கூறுகிறார்—ஆசி.] என்ன கூறுவது? [“என்னுடைய இளைய சகோதரி.”] உங்களுடைய சகோதரி. [“அவள் இப்பொழுது இங்கே இருக்கிறாள். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாள்.”] எனவே, அவள் இப்பொழுது இங்கிருக்கிறாள், அன்றொரு இரவு, டூசானிலிருந்து, தொலைபேசியின் மூலம் ஜெபித்துக்கொள்ளப்பட்டாள். [“பக்கவாதத்திற்காக.”] பக்கவாத-… [“அவள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாள், அவள் இப்பொழுது இங்கே இருக்கிறாள்.”] அவள் ஒரு சில இரவுகளுக்கு முன்னர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாள், அவள் இப்பொழுது இங்கே இருக்கிறாள். நண்பனே, சகோதரன் மார்ட்டின் அதை அறிவார். அவர் செய்தியை ஏற்றுக்கொள்ள விரும்பினதில் வியப்பொன்றுமில்லையே! நம்முடைய சகோதரன் மேல் கரங்களை வைப்போமாக.

2952 அன்புள்ள தேவனே, நான் இந்த மற்றவர்களோடு, உம்முடைய ஊழியக்காரன் மீது கரங்களை வைத்து, ஐக்கியத்தின் வலது கரத்தை அவருக்கு அளிக்கிறேன், நீர் அவரை நியமித்திருக்கிறீர் என்பதற்கான தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக …?… ஜெபிக்கிறேன். உம்முடைய ஆசீர்வாதங்கள் அவர் மீது இருப்பதாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவரை வழிநடத்தி, அவருக்கு வழிகாட்டும். ஆமென். ஐக்கியத்தின் வலது கரமாக, என் சகோதரனே, அவர்கள் உங்களோடு இருப்பார்கள். தேவன் உங்களோடிருப்பாராக.

3053 [யாரோ ஒருவர், “சகோதரன் பிரான்ஹாம்?” என்று கூறுகிறார்.—ஆசி.] ஆம், சகோதரனே? [“இதையும் விரும்புகிற மற்றொருவர் எனக்குண்டு.”] சரி, ஐயா. இது… [“சகோதரன் டாரிஸ்.”] சகோதரன் டாரிஸ். எனக்குத் தெரியாது… [“நான் சகோதரன் ஏர்லையும், சகோதரன் ப்ரூவரையும் அறிவேன்.”] இந்த மனிதர் சகோதரன் டாரிஸ். சகோதரனே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? [“பிளாக் ராக், ஆர்கன்சாஸ்.”] பிளாக் ராக், ஆர்கன்சாஸ். சகோதரன்… [“எனக்கு அவரைத் தெரியும், சகோதரனே.”] …அவரை அறிந்திருக்கிறேன். இங்கே, வேறு யாரோ ஒருவர் கூறினார் என்று, நான் நினைக்கிறேன்…சகோதரன் ப்ரூவர். இன்று காலை நான் அவர்களை சந்தித்தேன் என்று நான் நினைக்கிறேன். மேலும்—மேலும் சகோதரி வேயிலும், சகோதரன் வேயிலும் மற்றும் அவரை அறிந்தவர்கள், அவர் ஒரு தேவனுடைய மனிதனாய், ஒரு தேவனுடைய ஊழியக்காரனாயிருக்கிறார் என்பதை அறிந்திருக்கின்றனர். அற்புதம்! 54 பாருங்கள், இப்பொழுது, என்னுடைய அருமை சகோதரனே, ஒரு செய்தியை கொண்டு செல்பவராக இருக்கவே, நாங்கள் உங்களுக்குப் பின்னால் நின்று, எங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்வோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படி நாங்கள் விரும்புகிறோம். எங்கு செல்ல வேண்டும் என்று தேவன் உங்களை நியமித்திருக்கிறாரோ, நீங்களும் கூட இந்த செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்று நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம். நாம் நம்முடைய கரங்களை நம்முடைய சகோதரன் டாரிஸ் மீது வைப்போமாக. அன்புள்ள தேவனே, நாங்கள் எங்களுடைய கரங்களை எங்களுடைய சகோதரன் மீது வைத்து, அவருக்கு ஐக்கியத்தின் வலது கரத்தை அளித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை அனுப்ப, நீர் அவரை அபிஷேகியும். மேலும் …?… அவருக்கு ஐக்கியத்தின் வலது கரத்தைக் கொடுக்கிறோம்! …?… உம்முடைய ஆவியானவர் அவரோடு சென்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவரை வழிநடத்தி, அவருக்கு வழிகாட்டுவாராக. ஆமென். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

3155 இப்பொழுது, நான் நினைக்கிறேன், சகோதரன் அந்தோணி. உங்களில் அநேகருக்கு சகோதரன் அந்தோணி அவர்களைத் தெரியும். அவர் நம்மோடு நீண்ட காலமாக இங்கே இருந்து வருகிறார். அவரை நானே, கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அறிவேன். அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள வாலிபன் என்று நான் நினைக்கிறேன். அவர் மீது ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக கைகளை வைக்கவில்லை. நண்பர்களே, இது வரப்போவதை அவர் அறிந்திருக்கவில்லை. பார்த்தீர்களா? ஆனால் எதையும் போல இப்பொழுது அது நல்லதாக உள்ளது. எனவே நாம் சகோதரன் அந்தோணியின் மீது கரங்களை வைத்து, ஐக்கியத்தின் வலது கரத்தை அவருக்கு அளிக்கப் போகிறோம். தேவன் நியமித்தலைச் செய்ய வேண்டும். இது அவருக்கு தெரியப்படுத்துவதற்காகவே என்பதை, நீங்கள் அறிவீர்கள், நாங்கள் இந்த சகோதரனை விசுவாசிக்கிறோம், நாங்கள் அவரை நேசிக்கிறோம், அவர் செய்தியில், நம்மில் ஒருவராக இருக்கிறார். அவர் தேவனுடைய ஆசீர்வாதங்களை உடையவராயிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதைத்தான் நாங்கள் அவரிடத்தில் வேண்டிக் கொள்கிறோம். சகோதரனே, நாம் நம்முடைய கரங்களை மேலே வைக்கையில், நாம் ஜெபிப்போமாக.

3256 அன்புள்ள தேவனே, இந்த தாழ்மையான சிறிய, உம்முடைய இத்தாலிய ஊழியக்காரன், கர்த்தாவே, இன்றிரவு அவர் மேல் கைகளை வைத்து, ஐக்கியத்தின் வலது கரம் அதிகாரபூர்வமாக சபையிலிருந்து, அவருக்காக நீட்டப்படுகிறது. கர்த்தாவே உம்முடைய மகத்தான வல்லமை இந்த வாலிபப் பையனை பூமியின் பாகத்திற்கும், நீர் அவனை அழைத்திருக்கிற மூலை முடுக்கிற்கும் அனுப்பும். அவர் சென்று அந்த ஜனங்களை பாவத்திலிருந்தும், சுகவீனத்திலிருந்தும் விடுவித்து, தம்முடைய ஜீவிய காலம் முழுவதும் உம்மை சேவிக்கும்படி செய்வாராக. நீர் அவரை வழி நடத்தி, அவருக்கு வழிகாட்டுவீராக. எங்களுடைய ஆசீர்வாதங்கள் அவரோடு இருப்பதாக, நாங்கள் அவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறோம். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

3357 [யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்—ஆசி.] ஹூ? ஓ, எனக்குத் தெரியாது. நாம் ஒரு தொலைபேசி இணைப்பில் இருக்கிறோம்; ஒரு நிமிடத்திற்கு ஐம்பது செண்டுகள். இங்கே வேறு யாராவது தேவையாயிருந்திருந்தால்… இங்கே மேலே சென்று, சகோதரர்களே, நீங்கள் யாரென்பதை உங்களுடைய பெயர்களை இங்கே ஒலிப்பெருக்கியில் கூப்பிடுங்கள். அவர்களிடம் சொல்லுங்கள். [ஒவ்வொரு சகோதரனும் தன்னுடைய சொந்த பெயரை, “பேட் டைலர்,” “கிளாட் போகஸ்,” “டேல் பாட்டர்,” “ …?… ஹேனாஸி,” “ஜேம்ஸ் ஹியூம்ஸ்,” “ஏர்ல் ஹார்னர்.” என்று கூறுகின்றனர்.—ஆசி.] அது அவர்களா? [யாரோ ஒருவர், “ஆம்” என்கிறார்.] என் சகோதரர்கள். இந்த மனிதர்களே, இந்த செய்தி தேவனுடைய வார்த்தையிலிருந்து வந்த சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சகோதரர்கள், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்.”] சரி. நீங்கள் ஆசைப்பட்டு, சிந்தித்து, நாங்கள் உங்கள் மீது கை வைத்தால்…நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறோம், உங்களுக்கு உதவி செய்ய எங்களால் முடிந்த எதையும் நாங்கள் செய்வோம். இப்பொழுது சகோதரர்களாகிய நீங்கள், நான் அவர்கள் மேல் கைகளை வைக்கும்படியாக, இப்பொழுது இங்கே அடியெடுத்து வைக்கும்படியாக நான் விரும்புகிறேன். நாம் அவர்கள் மேல் கரங்களை வைக்கையில், நாம் யாவரும் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அன்புள்ள தேவனே, இங்கே ஒரு குழு மனிதர் இருக்கின்றனர். நான் என்னுடைய கரங்களை அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வைக்கிறேன். அவர்களை ஊழியக்காரர்களாயிருக்கும்படி அழைத்திருக்கிற, நீர், கர்த்தாவே, அவர்கள் ஜீவிய காலம் முழுவதும், மேலும் …?… ஒவ்வொரு சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார்களாக. நாங்கள் அவர்களுக்கு ஐக்கியத்தின் வலது கரத்தை அளிக்கிறோம், உம்முடைய ஆசீர்வாதங்கள் அவர்களோடு இருக்க ஜெபிக்கிறோம், கர்த்தாவே, நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, எங்களுடைய ஆசீர்வாதங்களை அனுப்புகிறோம். நீர் அவர்கள் செல்லும்படி அழைத்திருக்கிற பூமியின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் அது செல்வதாக. நீர் அவர்களை அழைத்த அந்தத் திறனின்படி அவர்கள் கிரியை செய்து உமக்கு சேவை செய்வார்களாக. அவர்கள் தீரமுள்ளவர்களாக, உண்மையான தேவனுடைய ஊழியக்காரர்களாக இருப்பார்களாக. கர்த்தாவே, அதை அருளும். நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம்.

3458 சகோதரர்களே, தேவன் உங்கள், ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரர் ஹியூம்ஸ், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்கள், ஒவ்வொருவரோடும் இருப்பாராக. நம்முடைய இருதயங்கள் கிறிஸ்தவ அன்பில் கட்டுகிற இணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக; ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் அது மேலே பரத்தில் உள்ளதைப் போன்றது. 59 அவர் அற்புதமானவரல்லவா? இன்றிரவு இங்கு எத்தனை ஊழியக்காரர்கள் தங்களுடைய கரங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை இப்பொழுது சற்று சிந்தித்துப் பாருங்கள்! 60 நாங்கள் இந்த தொலைபேசி இணைப்பில் இருந்ததை நான் அறிந்திருக்கவில்லை. அங்குள்ள ஜனங்கள் அதற்காக என்னை மன்னிப்பார்களானால் நலமாயிருக்கும்; நான் அதை அறியேன். பார்த்தீர்களா? இன்றிரவு அவர்கள் இந்த சிறிய செய்தியை இணைக்கப் போகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் நாம்…

3561 இப்பொழுது நாம் வார்த்தையை வாசித்து ஜெபித்து, இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் நான் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறதை நான் உணருகிற இந்த செய்திக்கு நேராக வருவோம். 62 இப்பொழுது நாம் உரைக்காக…திருப்பிக்கொண்டிருக்கையில், நான் அதை இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பேன். நாம் எண்ணாகமம் 22-ம் அதிகாரம் 31-ம் வசனத்திற்கு திருப்புவோமாக. எண்ணாகமம் 22:31, நீங்கள் திருப்பிக் கொண்டிருக்கையில், நீங்கள் வாசிக்க விரும்பினால், அதை வாசியுங்கள் அல்லது குறியிடுங்கள். 63 கர்த்தருக்குச் சித்தமானால், இந்தக் கோடையில் நான் உங்களை மீண்டும் காணும் வரையில், நீங்கள் எல்லோரும் என்னை இப்பொழுது நினைவு கூர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் ஏதாவது சம்பவித்தால், நான் வெளிநாடு செல்ல வேண்டியதில்லை, நான் திரும்பி வருவேன். ஆனால் இவையனைத்தும் எவ்வாறு சுற்றிலும் கிரியை செய்துள்ளன என்பதை நாம் இப்பொழுது விசுவாசிக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நம்மை அனுப்பும்படி அவர்தாமே தெரிந்து கொண்டிருக்கிற ஒரு வழியில் இப்பொழுது நம்மை அனுப்பப் போகிறார் என்பதை நாம் அறிவோம். அந்தவிதமாகவே நாம் அதைச் செய்ய விரும்புகிறோம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

3664 பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையை வாசிக்கப் போகிறோம். நீர் அதை ஆசீர்வதித்து, எங்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கு இதை அபிஷேகியும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 65 எண்ணாகமப் புத்தகம், 22-ம் அதிகாரம் 31-ம் வசனம். அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான் . 66 இப்பொழுது, இதைப் படிக்கையில், அதைச் சுற்றி ஒரு சூழலை உருவாக்க, நான் இந்த பொருளை எடுக்க விரும்புகிறேன்: தேவன் தமது வார்த்தையைக் குறித்து தமது சிந்தையை எப்போதாவது மாற்றுகிறாரா? 67 அது முற்றிலும் ஒரு பாடப் பொருளாய் உள்ளது, அது நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு மகத்தான சத்தியமாயுள்ளது. தேவன் எந்தக் காரியத்தையாவது கூறிவிட்டு, “நான் அதைக் கூறியதற்காக வருந்துகிறேன்” என்று கூற முடியுமா? அவர் அதைக் கூறின பிறகு, தேவனால் தம்முடைய வார்த்தையிலிருந்து பின் வாங்க முடியுமா?

3768 இப்பொழுது, இங்கே இந்த அறிக்கையில், நான் இந்த அறிக்கையை தெரிந்து கொண்டதற்கு காரணம், ஏனென்றால் அது வேதாகமத்தின் கூற்றுகளில் ஒன்றான ஒரு வாசிப்பாளன், காண முயல்வது, அல்லது தேவன் தம்முடைய மனதை மாற்றுகிறார் என்று கூற முயற்சித்தல் என்பதாயிருந்தது; எனக்குத் தெரிந்த வரை, வேதாகமத்தில் அவர் தம்முடைய சிந்தையை மாற்றிக்கொண்டதாக இந்த இடத்தைத் தவிர வேறெந்த இடத்திலும் இல்லை, ஏனென்றால் அவர் பிலேயாமுக்கு ஒரு காரியத்தைக் கூறி அதன்பின்னர் அவனுக்கு மற்றொன்றைக் கூறினார். இப்பொழுது, அநேக ஜனங்கள் பிலேயாமை ஒரு, ஓ, ஒரு குறிசொல்லுபவராக அல்லது ஏதோவொன்றாக ஆக்க முயற்சித்துள்ளனர். ஆனால் பிலேயாமோ ஒரு குறிசொல்லுபவனாய் இருக்கவில்லை. அவன் கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். 69 இப்பொழுது, நாம் முதலில், செய்தியின் சுருக்கமான விளக்கக்காட்சியைப் பார்ப்போம். இஸ்ரவேல் பாலஸ்தீனாவிலிருந்து எகிப்திலிருந்து வந்து கொண்டிருந்த தங்களுடைய பயணத்தில்…பாலஸ்தீனாவிற்கு சென்று கொண்டிருந்தனர். கர்த்தர் அவர்களோடிருந்தார், அவர்கள்…இஸ்ரவேலர் தங்கள் வழியை விட்டு விலக்கப்படுவதற்கு முன்பாக எழும்பின சத்துருக்கள் யாவரையும், அவர்கள் அவருடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடந்த வரையிலும், தேவன் அவர்களுக்கு முன்பாக குளவிகளை அனுப்பி சத்துருவை துரத்துவதாக கூறியிருந்தார். அந்த வேலை ஒருபோதும் மிகப்பெரியதாயிருக்கவில்லை. அமலேக்கியர்கள், அன்றைய இராட்சதர்கள், இஸ்ரவேலருக்கு ஒன்றுமற்றவர்களாய் கருதப்பட்டனர். அவர்கள் உருவத்தில் சிறியவர்களாயிருந்தாலும், அவர்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதின்படி நடந்து கொண்டிருந்தனர். எனவே எதிர்ப்பு என்னவாயிருந்தாலும் பொருட்படுத்தாமல், தம்முடைய வாக்குத்தத்த வார்த்தைகள் இஸ்ரவேலரை விட்டு விலகவில்லை என்பதை தேவன் எப்பொழுதும் கண்டார்.

3870 பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர் புதிய ஏற்பாட்டின் மணவாட்டிக்கு ஒரு மாதிரியாயிருக்கிறாள். உலகத்திலிருந்து வெளிவந்து, கானானுக்கு, இல்லை நாம் செல்ல வேண்டிய கானானுக்கு, ஆயிர வருட அரசாட்சிக்கு செல்லும் பாதையில் அணிவகுத்து செல்கிறோம். 71 இப்பொழுது, இப்பொழுது, இங்கே மோவாப் சபைக்கு ஒரு மாதிரியாயிருக்கிறதை நாம் கவனிக்கிறோம். மோவாப்…அவர்கள் சில ராஜாக்களைக் கொன்று, சத்துருக்களை முறியடித்து, எல்லாவற்றையும் கொன்றுபோட்டு, தேசத்தை சுதந்தரித்துக்கொண்டு, மோவாபியரண்டை குடிபெயர்ந்தனர். இப்பொழுது, மோவாப் எந்த வகையிலும் ஒரு அஞ்ஞான தேசமாயிருக்கவில்லை. மோவாப் இஸ்ரவேல் சேவித்த அதே தேவனை சேவித்த ஒரு தேசமாயிருந்தது. மோவாப் தேசமானது ஆதியில் லோத்தின் குமாரனாய், அவனுடைய சொந்த குமாரத்தியினாலே துவங்கப்பட்டது. அவன் இந்த தேசத்தை ஸ்தாபித்து, தன்னுடைய புகழ் வாய்ந்தவர்களை ஸ்தாபித்திருந்தபடியால், அதிலிருந்து ஒரு பெரிய தேசத்தை உண்டாக்கி, அவர்கள் பெருகி முன்னேறிச் சென்றனர். 72 இப்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் ஆபிரகாமின் வித்திலிருந்து வந்தவர்கள், லோத்திலிருந்து அல்ல. ஈசாக்கிலிருந்து, யாக்கோபிலிருந்து இஸ்ரவேலர் வெளிவந்தனர். யாக்கோபிலிருந்து வந்த அந்த பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்தும் இஸ்ரவேலர் தோன்றினர். அது பின்னாளில் “இஸ்ரவேல்” என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால் அவன் கர்த்தரோடு போராடினான். மோவாப் இங்கே…

3973 இப்பொழுது, இதில், வெளியே தொலைபேசியில் இணைந்திருக்கிற ஜனங்களாகிய நீங்கள், நான்—நான் குறை கூற விரும்பவில்லை என்பதை நான் முதலில் கூற விரும்புகிறேன், நான் இவ்வாறு இல்லை என்று நம்புகிறேன். ஆனால், எனக்கு அளிக்கப்பட்டுள்ள செய்தி, நான் அந்த செய்திக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நான் ஒரு மாய்மாலக்காரனாய் இருப்பேன். பார்த்தீர்களா? நான் அனுப்பப்பட்டதைக் காட்டிலும் என்னால்—என்னால் அதிகமாகக் கூறமுடியாது. இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயத்தின் பெரிய சத்துரு ஸ்தாபன சபைகளே என்று நான்—நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது முடிவில் மிருகத்தின் முத்திரையாக உருவாகும் என்று நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். தேவனுடைய ஒத்தாசையோடு என்னால் அதை வேதாகமத்தின் மூலம் நிரூபிக்க முடியும் என்று நினைக்கிறேன். நான் அதை ஏற்கனவே செய்திருக்கிறேன். அதாவது, அது சபைகளின் கூட்டமைப்பில் மிருகத்தின் முத்திரையாக உருவாகும். ஏனென்றால் தேவன் ஒருபோதும், எந்த நேரத்திலும், ஒரு நியமிக்கப்பட்ட சபையை, ஸ்தாபன சபையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அவர் அதை ஒருபோதும் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் அந்த மனிதன் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டபோது, தேவனுடைய ஆவியானவர் அதை விட்டுச் சென்று, மீண்டும் திரும்ப வரவேயில்லை. எந்த சரித்திர ஆசிரியரிடமும் கேளுங்கள், இல்லையென்றால் நீங்களே வாசித்துப் பார்க்கலாம். ஒருபோதும் இல்லை! அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, தேவன் அதை அப்படியே விட்டுவிட்டார். அது அப்படியே இருந்தது; அது முதற்கொண்டு, அது அப்படியே இருந்தது. அவர்கள் அங்கத்தினர்களாக வளர்ந்தனர், ஆனால் ஒருபோதும் ஆவியின் விழித்தெழுதல் அல்ல; ஒருபோதும், இனி ஒருபோதும் இல்லை.

4074 இங்கே மோவாப், அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் ஒரு ஸ்தாபன தேசமாயிருந்தனர்; தங்களுடைய சொந்த தேசத்தில், தங்களுடைய ஸ்தாபனங்களில் உள்ளதைப் போலவே. அவர்கள் தங்களுடைய சொந்த மார்க்கத்தை உடையவர்களாயிருந்தனர். இஸ்ரவேலர் கொண்டிருந்த அதே மார்க்கம் அவர்களுடைய மார்க்கமாகவே இருந்தது. அவர்கள் மோவாபியர்களாயிருந்து, யேகோவா தேவனில் விசுவாசங்கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஒரு ஸ்தாபனமான ஜனங்களாக இருந்தனர். 75 இப்பொழுது, அவர்கள் மாம்சப்பிரகாரமான சபையை பிரதிநிதித்துவப்படுத்துகையில், இஸ்ரவேல் அதனுடைய பயணத்தில் ஆவிக்குரிய சபையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இப்பொழுது, இஸ்ரவேல் ஒரு ஸ்தாபன தேசமாக இருக்கவில்லை. அவர்கள் தேவனைப் பின்பற்றின வரையிலும், அவர்கள் சுயாதீனமாயிருந்தனர். அவர்கள் பரதேசிகளாய், செல்வதற்கு இடமில்லாமல் வருகிறார்கள். அக்கினி ஸ்தம்பம் சென்ற இடமெல்லாம், அவர்கள் அதனோடு சென்றனர். அவர்கள் ஒரு ஸ்தாபன தேசமாக இருக்கவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு கூட்டிணைவமைப்பு உண்டாயிருந்தது, ஏனென்றால் விருத்தசேதனம் தேவனால் உண்டாக்கப்பட்ட கட்டளையின் கீழ் அவர்களுக்கு அளிக்கப்பட்டது, ஆனால் இந்த நேரத்தில் ஒருபோதும் ஒரு ஸ்தாபன தேசமாக இல்லை. அவர்கள் முடிவிலே ஒரு ஸ்தாபன தேசமாக ஆனபோது, அங்கேதான் அவர்கள் விழுந்துபோய் தங்களுடைய மேசியாவைப் புறக்கணித்தனர்.

4176 இப்பொழுது நாம் எப்பொழுதும், கண்டறிகிறோம், இந்த மாம்சப்பிரகாரமான, ஆவிக்குரிய, சபைகளின் ஆவிகளும், ஸ்தாபனங்களின் ஆவிகளும் சந்திக்கும்போது, எப்பொழுதுமே ஒரு மோதல் இருந்து கொண்டேயிருக்கிறது. அது அவ்வண்ணமாய் இருக்க ஒருபோதும் தவறியதேயில்லை. அது எப்பொழுதும் முரண்படுகிறது. ஏனென்றால், அதில் ஒரு பொறாமை இருப்பதை நாம் கண்டறிகிறோம். அங்கே, இந்த பொறாமையில், அது மாம்சபிரகாரமான ஒப்பீடுகளையும், ஆள்மாறாட்டங்களையும் ஏற்படுத்துகிறது. அன்று இருந்தது போலவே, இன்றைக்கும் நாம் அதைக் கண்டறிகிறோம். தேவன் ஒரு தனிப்பட்ட நபருக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்யும்போது, அந்த நபருக்கு தேவன் செய்தது போன்று ஒவ்வொருவரும் பின்பற்ற முயற்சிக்கின்றனர். பாருங்கள், அது ஒரு போட்டியை உண்டுபண்ணுகிறது, அது மாம்சபிரகாரமானதை உண்டுபண்ணுகிறது. அதன்பின்னர் அவர்களால், மறுபுறம், ஆவிக்குரிய பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் அதை ஒரு அரசியல் வல்லமையினால் எடுத்துக் கொண்டு, அல்லது ஜனங்களுடைய சிந்தைகளை நிலைகுலையச் செய்து, சீஷர்களை தங்களுக்குப் பின் இழுத்துக் கொள்ளும்படிக்கு அவர்கள் ஏதோ ஒரு பதிலியை உபயோகிக்கின்றனர். 77 அதுதான் துவக்கத்தில் சம்பவித்தது; காயீன், ஆபேல் போன்ற இரு பையன்களும், இங்கே பூமியில் இருந்தனர். ஆபேல் காயீனைக் காட்டிலும் ஒரு மேன்மையான பலியை தேவனுக்கு செலுத்தினபோது, தேவன் ஆபேலை ரூபகாரப்படுத்தினபோது, கீழே வந்து அவனுடைய பலியைப் பெற்றுக்கொண்டதன் மூலம், அது காயீனோடு பொறாமையை ஏற்படுத்தியது, ஏனென்றால் அவன் தன் சகோதரனைக் குறித்து பொறாமையாயிருந்து, தன் சகோதரனைக் கொன்றான்.

4278 அது ஆதியில் துவங்கினது, அதாவது மாம்சப் பிரகாரமான, ஆவிக்குரிய…இருந்தாலும் காயீனும் ஆபேலும் ஒரே தேவனையே தொழுது கொண்டனர், அவர்கள் இருவருமே ஒரே விதமான பலிபீடங்களைக் கட்டினர், அவர்கள் இருவரும் ஒரே தேவனை, ஒரே சபையில், ஒரே பலிபீடத்தில் தொழுது கொண்டனர். ஆனால் காயீனோ, மாம்ச சிந்தையின் மூலம், தேசத்தின் கனிகளைக் கொண்டுவந்து அவைகளை ஒரு பலியாக பலிபீடத்தின் மேல் வைத்து, ஒரு பாவநிவிர்த்திக்காக தேவனிடத்தில் நிச்சயமாக இது பதிலளிக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். எனவே இன்றைக்கு ஜனங்கள் நினைக்கிறபடி, “பாவத்திற்கு காரணமான ஆதாமும் ஏவாளும் சாப்பிட்ட ஆப்பிள்களை” அவன் கொண்டு வந்திருக்க வேண்டும். மேலும், என்னவாயிருந்தாலும், இப்பொழுது அவர்கள் அதை ஒரு “மாதுளம்பழம்” அல்லது ஏதோ ஒரு காரியத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் சிலர், அண்மையில் அது வேறு ஏதோ காரியம் என்று கூறினர். 79 மேலும், ஆனால் ஆபேல் சரியான பலியை உடையவனாயிருந்தான். அதைச் செய்தது இரத்தம் என்று அவன் அறிந்திருந்தான், எனவே அவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்தான். தேவன் இப்பொழுது அவனுடையதை, ஆபேலுடையதை, விசுவாசத்தினாலே வேறு வழியின்றி, வெளிப்பாட்டினால், பெற்றுக்கொண்டார். அப்பொழுது வேதாகமமே எழுதப்படவில்லை. ஆகையால், நீங்கள் பாருங்கள், நீதியின் ஆரம்பம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சத்தியமே, ஜீவனுள்ள தேவனுடைய முழு சபையும் அதன் பேரில் கட்டப்பட்டுள்ளது.

4380 இயேசு, ஒருநாள் மலையிலிருந்து இறங்கி வந்து, தம்முடைய சீஷர்களிடத்தில், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். “ஒருவர் உம்மை மோசே என்றும், மற்றொருவர் உம்மை எலியா என்றும், நீர் எரேமியா என்றும் அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் கூறினர்.” அவர், “ஆனால் நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார். 81 அப்பொழுதுதான் அப்போஸ்தலனாகிய பேதுரு, தேவனால் ஏவப்பட்டு, ஆவியினாலே உயிர்ப்பிக்கப்பட்டு, அந்த மகத்தான கூற்றான, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்பதைக் கூறினான். 82 அறிக்கையைக் கவனியுங்கள். “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. என் பரலோகப் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நீ சீமோன். இந்தக் கல்லின் மேல்…” என்ன கல்? இப்பொழுது, கத்தோலிக்கர், “பேதுருவின் மேல், கல், சிறிய கல்” என்று கூறுகின்றனர். பிராடெஸ்டெண்டுகளும், “கன்மலையாகிய, கிறிஸ்துவின் மேல்” என்கின்றனர். வித்தியாசமாயிருக்க அல்ல; ஆனால் அவர் யாராயிருந்தார் என்று, பேதுரு பெற்றிருந்த வெளிப்பாட்டின் பேரில் அது இருந்தது. இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்றார். “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” 83 “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” ஆவிக்குரிய வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை!

4484 கவனியுங்கள், ஆபேல், தேவனில் உள்ள விசுவாசத்தினாலே அதைவிட மேன்மையான பலியை செலுத்தினான். மாம்சபிரகாரமான விசுவாசி தன்னுடைய சொந்த கரங்களின் கிரியைகள் என்றும், அவனுடைய கனிகளையும், அவன் கொண்டு வந்த அவனுடைய அழகான காணிக்கையையும், தேவன் அடையாளம் கண்டு கொள்வார் என்று எண்ணிக் கொண்டான், அது ஒரு மோதலை உண்டாக்கியது. ஆபிரகாமும் லோத்தும் மோத வேண்டியதாயிருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம். 85 மோசேக்கும் தாத்தானுக்கும், கோராவுக்கும் ஒரேவிதமான முரண்பாடு இருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம். மோசே, கர்த்தருடைய வார்த்தையைக் கொண்ட ஒரு தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டிருந்தான், இந்த நேரத்துக்கான அவர்களுடைய தலைவனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்றும், ஆபிரகாம் இந்த எல்லாக் காரியங்களையும் வாக்குத்தத்தம் செய்திருந்தான் என்றும், அது சம்பவிக்கும் என்று, தேவன் கூறினதை மோசே சரியாகச் செய்தான். கோராகு மாம்சபிரகாரமானவனாயிருந்தபடியால், அவர்களுக்கு மத்தியில் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்க விரும்பினான். அவன் ஒரு குழுவை உருவாக்க விரும்பினான். தேவன் அப்படிப்பட்ட ஜனங்களோடு ஈடுபடுகிறதில்லை. அது சரியாக அந்த வேதத்தில், இன்றைக்கு பயணத்திற்கு ஒரு மாதிரியைக் காண்பிக்கிறது, அதாவது ஸ்தாபனம் தேவன் நியமித்துள்ளதல்ல. ஏனென்றால், கோராகு அதைச் செய்தவுடனே, அவன் மோசேயினிடத்தில், “நீங்கள் மிஞ்சிப் போகிறீர்கள்” என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், “முழு சபையும் பரிசுத்தமானதே! ஏன், நீ மாத்திரமே பரிசுத்த மனிதன் என்று கூறிக் கொள்கிறாய். அப்படிப்பட்ட ஒன்றைச் செய்ய உங்களுக்கு உரிமையில்லை. நீ உன்னை யாரோ ஒரு பெரியவனாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்கிறாய். நாம் யாவரும் பரிசுத்தமாயிருக்கிறோம். நாம் யாவரும் தேவனுடைய பிள்ளைகள்” என்பதேயாகும். 86 மோசே தன்னுடைய தலையைத் திருப்பிக் கொண்டு நடந்து சென்றுவிட்டான். அவன், “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 87 தேவன், “உன்னை அவனிடத்திலிருந்து பிரித்துக்கொள். எனக்கு அது போதுமென்றாகிவிட்டது” என்றார். அவர் அவனை பூமியில் விழுங்கினார்.

4588 பாருங்கள், ஒரு மோதல் உண்டானது. மாம்சப்பிரகாரமானதும், ஆவிக்குரிய பிரகாரமானதும் சந்திக்கும்போது, அங்கே எப்பொழுதுமே ஒரு முரண்பாடு உண்டாகிறது. யூதாசும் இயேசுவும் சந்தித்தபோது, அங்கே ஒரு மோதல் உண்டானது: ஒருவர், தேவ குமாரன்; மற்றொருவன் சாத்தானின் குமாரன். காயீனும் ஆபேலும் சந்தித்தது போலவே, அவர்கள் சந்தித்தபோது ஒரு மோதல் உண்டாயிருந்தது. அவர்களில் ஒருவர் சபையின் பொருளாளராகவும், மற்றவர் ஒரு போதகராகவும் இருந்தார். இப்பொழுதும், நாம் இந்த நாளில் அதேக் காரியத்திற்கு, மீண்டும் வருகிறோம். கிறிஸ்துவின் ஆவிக்குரிய மணவாட்டிக்கு மாம்சபிரகாரமான ஸ்தாபனம். கிறிஸ்துவின் ஆவிக்குரிய மணவாட்டி மாம்சபிரகாரமான ஸ்தாபனங்களிலிருந்து அவர்களுக்குள் எந்த ஒப்பீடும் இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமானவளாயிருக்கிறாள்.

4689 இப்பொழுது கவனியுங்கள், மாம்சப்பிரகாரமானது எப்பொழுதுமே ஆவிக்குரியதற்கு முன்னடையாளமாக முயற்சிக்கிறது. ஆனால் யாக்கோபிலும் ஏசாவிலும் செய்ததுபோல, அது கிரியை செய்யாது. அது முடியாது. இப்பொழுது, அது நற்கிரியைகளைச் செய்ய வரும்பொழுது, மனிதனின் பார்வையில் யாக்கோபைக் காட்டிலும் ஏசா உண்மையாகவே ஒரு சிறந்த மனிதனாயிருந்தான் என்று நான்—நான் நம்புகிறேன். அவன் தன்னுடைய தகப்பனை கவனித்துக் கொள்ள முயன்றான்; அவன் குருடாயிருந்தான், ஒரு தீர்க்கதரிசி. அவன் செய்ய முயற்சித்த இந்த எல்லாக் காரியங்களையுமே பாருங்கள், ஆனால் அதே சமயத்தில் அது மாம்சபிரகாரமான கிரியையாயிருந்ததைக் குறித்து ஏசா நினைக்கவில்லை. தான் செய்த காரியத்தின் மூலம் உள்ளே பிரவேசித்து, யாருக்காவது ஏதாவது நன்மையை செய்ய வேண்டும் என்று அவன் எண்ணினான், அது சரிதான். ஆனால் யாக்கோபோ, அவனுடைய முழு ஆத்துமாவுக்காக அந்தப் பிறப்புரிமையைப் பெற வேண்டியதாயிருந்தது, அதைத்தான் தேவன் அவனுக்குள் ஆவிக்குரிய பிரகாரமாக அங்கீகரித்தார்.

4790 கவனியுங்கள், அது எப்பொழுதுமே மாம்சப்பிரகாரமானது ஆவிக்குரியதை வெறுக்கக் காரணமாயுள்ளது. அது காயீன் ஆபேலை வெறுக்கச் செய்தது. அது கோராகு மோசேயை வெறுக்கச் செய்தது. அது யூதாஸ் இயேசுவை வெறுக்க காரணமாயிருந்தது. அது தொடர்ந்து செல்கிறது. ஆதியில் காயீன் ஆபேலை வெறுத்தது போல, மாம்சப்பிரகாரமானது ஆவிக்குரியதை வெறுக்க காரணமாகிறது, அந்த ஒருவரிடத்திலிருந்து தேவன் பலியைப் பெற்று, அவர்களை அழிக்க முயற்சிக்கிறார். அவர்கள் செல்வாக்கை அழிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு காரியத்தையும் அழிக்க முயற்சிக்கிறார்கள், ஏனென்றால் அது பொறாமையேயல்லாமல் வேறொன்றுமில்லை. அது காயீனில் துவங்கி, அது பொறாமை என்பதை நிரூபித்தது, இயற்கையானதும் (மாம்சபிரகாரமான) ஆவிக்குரிய காரியங்களும் ஒன்றாக சந்திக்கும்போது அது இன்றைக்கும் அதேக் காரியமாகவே உள்ளது. அது சாத்தான் என்பதை நிரூபிக்கிறது. வேறு வழியில்லாமல், பொறாமை சாத்தானிடத்திலிருந்து வருகிறது. அதன்பின்னர் சத்தியத்தின் ஆள்மாறாட்டத்தை உண்டாக்குகிறது, யாரோ ஒருவர் இல்லாத ஒன்றை ஆள்மாறாட்டம் செய்ய முயற்சிக்க, அவர்கள் அவ்வாறு செய்ய நியமிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தக் கடைசி நாட்களில் அதைக் குறித்து நாம் எவ்வளவு அதிகமாகக் கண்டிருக்கிறோம்! ஓ, என்னே, அதைக் குறித்து எவ்வளவோ உள்ளது! 91 எனவே தேவன்…அவருடைய மூல வார்த்தையைக் குறித்த தம்முடைய சிந்தையை என்றென்றைக்குமாய் மாற்றுவதில்லை என்பதை நாம் காண்கிறோம். ஆனால், யாரை அவர் அழைக்கிறாரோ, அவர்களைத்தான் அவர் நியமிக்கிறார். அந்த இடத்தை வேறு எவரும் கைப்பற்ற முடியாது. மோசேயின் ஸ்தானத்தை எவருமே எடுக்க முடியவில்லை. எத்தனை கோராகுகள் எழும்பினாலும், எத்தனை தாத்தான்கள் எழும்பினாலும் அது ஒரு பொருட்டல்ல; அதை பொருட்படுத்தாமல், தேவன் மோசேயை, அழைத்திருந்தார்.

4892 ஆனால், ஜனங்கள் அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நடக்கவில்லையென்றால், அவர் உங்களை நடக்க அனுமதிக்கும் அனுமதிக்கிற சித்தத்தை உடையவராயிருக்கிறார். கவனியுங்கள், அவர் அதை அனுமதிக்கிறார், சரி, ஆனால் அவர் அதை அவருடைய மகிமைக்காக கிரியை செய்வார், அவருடைய பரிபூரண சித்தத்தில். இப்பொழுது நீங்கள் நடக்க விரும்பினால்… 93 ஆதியிலே, பாலுறவின் மூலம் பூமியில் பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்பது, தேவனுடைய பரிபூரண சித்தமாயிருக்கவில்லை. இல்லை ஐயா. தேவன் மனிதனை பூமியின் மண்ணிலிருந்து சிருஷ்டித்தார், ஜீவ சுவாசத்தை அவனுக்குள் ஊத, அவன் ஜீவிக்கிற ஆத்துமாவானான். அவர் அந்த மனிதனிலிருந்து ஒரு துணையைத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஒரு மனைவியை உண்டாக்கினார். அதுவே தேவனுடைய முதல் மூல சித்தமாயிருந்தது. ஆனால் பாவம் உள்ளே வந்து, அது செய்த காரியத்தை செய்தபோது, அதன்பின்னர் ஒரு மனிதன் சட்டப்பூர்வமாக ஒரு மனைவியை விவாகம் செய்துகொள்ளவும், அவள் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் அவர் அனுமதித்தார். “அப்பொழுது, நீங்கள் அந்த விதமாகவே அதைச் செய்யப் போவதாயிருந்தால், அப்பொழுது பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்.” ஆனால், நீங்கள் பாருங்கள், அது ஒருபோதும் அவருடைய பரிபூரண சித்தமாயிருக்கவில்லை.

4994 ஆகையால், ஒரு துவக்கத்தைக் கொண்டிருந்த இந்த எல்லாக் காரியங்களுக்கும் ஒரு முடிவு இருக்க வேண்டியதாயிருக்கிறது. எல்லா பாவமும் நிர்மூலமாக வேண்டியதாயுள்ளது. எல்லா பாவமும் ஒழிந்து போக வேண்டும். ஆகையால், மகத்தான ஆயிர வருட அரசாட்சியில் உயிர்த்தெழுதல் வரும்போது, நாம் நம்முடைய தகப்பன்மார்களாலும், தாய்மார்களாலும் மறுபடியும் பிறக்க வேண்டியதில்லை, ஆனால் தேவன் ஆதியில் செய்ததுபோல, பூமியின் மண்ணிலிருந்து மனிதனையும் அவனோடு அவனுடைய துணையையும் அழைப்பார். அது உண்மை. அந்தவிதமாகவே அவர் அதை துவக்கத்தில் செய்தார். 95 ஆகையால், தேவன் எந்தக் காரியத்தைக் குறித்தும் தம்முடைய சிந்தையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளுகிறதில்லை, ஆனால் நீங்கள் தொடர்ந்து செல்ல அவர் அனுமதிப்பார். இப்பொழுது, இதைக் குறித்து நான் இங்கே என்ன கூற விரும்புகிறேன் என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சுற்று வழியாயுள்ளது. ஆனால், மற்றும், ஆனால், அது, நீங்கள்…நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பார்த்தீர்களா? தேவன் நீங்கள் ஒரு காரியத்தைச் செய்யும்படி அனுமதிப்பார், அதைச் செய்வதில் உங்களை ஆசீர்வதிப்பதும் கூட இருக்கும், ஆனால் இன்னமும் அது அவருடைய பரிபூரண சித்தமாயிருக்காது.

5096 யாத்திராகமம் 19-ம் அதிகாரத்தில், இஸ்ரவேலர் ஒரு நியாயப்பிரமாணத்தை தெரிந்துகொள்ள தேவன் அனுமதித்தார். கிருபை அவர்களுக்கு ஏற்கனவே ஒரு தீர்க்கதரிசியை, அக்கினி ஸ்தம்பத்தை, ஒரு பலியாக ஒரு ஆட்டுக்குட்டியை, ஒரு விடுவிக்கும் வல்லமையை அளித்திருந்தபோது, அவர்களோ ஒரு நியாயப்பிரமாணத்திற்காக கூக்குரலிட்டனர். அது தேவனுடைய சித்தமாயிருக்கவில்லை, ஆனால் மனிதன் அதை விரும்பியபடியால் அது உட்செலுத்தப்பட்டது. அவன் விரும்பின அதே நியாயப்பிரமாணத்தினால் அவன் சபிக்கப்பட்டான். 97 தேவனுடைய சித்தத்தைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது. அதைத்தான் அவர் நமக்கு கற்பித்தார். “உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் செய்யப்படும்” என்றார். நாம் நம்மை அவருடைய சித்தத்திற்கும், அவருடைய வார்த்தைக்கும் சமர்ப்பிக்க வேண்டும். அதைக் குறித்து கேள்வி கேட்காதீர்கள். அதை விசுவாசியுங்கள். அதைச் சுற்றிலும் ஒரு வழியைக் கண்டறிய முயற்சிக்காதீர்கள். அது உள்ளவிதமாகவே அதை எடுத்துக் கொள்ளுங்கள். எனவே அநேகர் சுற்றித் திரிந்து, வேறு ஏதோ ஒரு வழியில் செல்ல விரும்புகிறார்கள். நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதைக் கண்டறியும்போது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள், ஆனால் நீங்கள் அவருடைய பரிபூரண, தெய்வீக சித்தத்தில் அல்ல, அவருடைய அனுமதிக்கப்பட்ட சித்தத்தில் கிரியை செய்து கொண்டிருக்கிறீர்கள். 98 நான் கூறினதுபோல, அவர் அதை அனுமதிக்கிறார், ஆனால் அவர் அதை தம்முடைய பரிபூரணமான சித்தமாயிருக்க அனுமதிக்கமாட்டார்—அனுமதிக்கமாட்டார்; ஆனால் அவர் தம்முடைய பரிபூரண சித்தத்தை கனப்படுத்தும்படியாகவும் ஆசீர்வதிக்கும்படியாகவும் அதை கிரியை செய்யச் செய்வார். பாலுறவினால், குழந்தைப்பேறுதலும், அவ்விதங்களில் ஒன்றாகும்.

5199 இப்பொழுது கவனியுங்கள், துவக்கத்தில், மோவாப், ஒரு முறைகேடான தேசமாயிருந்தது. அது முறைதவறித், துவங்கினது, அதே சமயத்தில் விசுவாசியான ஒரு—ஒரு தகப்பனாலும், விசுவாசியான ஒரு குமாரத்தியினாலும் துவங்கினது. சரியாக, நீங்கள் அதை மாதிரியாகக் கொண்டு ஒரு ஆவிக்குரிய சிந்தையை உபயோகித்தால், அந்த ஸ்தாபனம் எதனையும் போலவே அங்கே நிற்பதை நீங்கள் காணமுடிகிறது. நிச்சயமாக. பாருங்கள், முழு காரியமும் முற்றிலும் தவறாக உள்ளது. மேலும், பாருங்கள், அது அந்தவிதமாக, கொண்டுவரப்படும்போது, அது ஒருபோதும்…அது ஒரு பனிப்பந்து போல, சுழல்கிறது, அது இன்னும் அதிகமாக தொடர்ந்து உருண்டு பெரிதாகிக்கொண்டேயிருக்கிறது. நீங்கள் ஒரு பிழையைச் செய்து, அந்த ஒரு பிழையின் பேரிலேயே துவங்குகிறீர்கள், நீங்கள் ஒரு காரியத்தை ஒன்றன்பின் ஒன்றாக, ஒரு காரியத்தை போன்றே மற்றொன்றை, ஒன்றன்பின் ஒன்றாக செய்து கொண்டேயிருப்பீர்கள் 100 அந்தவிதமாகவே சபையானது துவங்கினது. அந்தவிதமாகத்தான் அது ரோமாபுரியிலுள்ள, நிசாயாவில் துவங்கியது, ரோமன் கத்தோலிக்க சபை… ஆதியிலே, அது பெந்தெகொஸ்தேயிலிருந்து, வந்தது. ஆனால் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, சபைக்குள்ளாக பிரசித்தி பெற்றவர்களை உள்ளே கொண்டு வந்தபோது, அவர்கள் ஜெபங்களை ஏறெடுத்தல், ஜெப மாலைகளை உருட்டுதல், மற்றும்—மற்றும் மரித்தோருக்காக ஜெபங்களை ஏறெடுத்தல், இந்த மற்ற எல்லா காரியங்களையும் செய்யத் தொடங்கினர். அதன்பின்னர் அது ஒரு பிழையிலிருந்து மற்றொரு பிழைக்கு, ஒரு பிழையிலிருந்து மற்றொன்றிற்கு தொடரத் துவங்கி, அது எங்கே போய்விட்டது என்று பாருங்கள். அதில் பெந்தெகொஸ்தேயின் பிரதிநிதித்துவம், ஒன்றுமே இல்லை. பார்த்தீர்களா? அது ஒரு பிழை மற்றொன்றை எடுத்துக்கொண்டு, மீண்டும் மற்றொன்றை எடுக்கிறதாயுள்ளது. ஒரே ஒரு காரியம் மாத்திரமே செய்ய வேண்டியதாயுள்ளது, அதுவே துடைத்தழித்துவிட்டு, ஆரம்ப நிலைக்கு திரும்பிச் செல்வதேயாகும். 101 மார்டின் லூத்தர் நீதிமானாக்கப்படுதலோடு துவங்கினபோது… இது இன்னும் முன்னேறிய, லூத்தரன் சபையாகத்தான் இருக்க வேண்டும். பார்த்தீர்களா? லூத்தர்…லூத்தர் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதலை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவர் ஸ்தாபனமாக்கப்பட்டிருந்தார். மனிதர் அதற்காக நிற்கவில்லை, எனவே ஆவியானவர் அதை விட்டு வெளியேறினார்.

52102 இப்பொழுது, இங்கே லோத்தின் குழு; இல்லை, மோவாப் துவக்கத்திலேயே முறைகேடாகப் பிறந்த, லோத்தின் குமாரத்தியின் பிள்ளையாயிருந்தான். இப்பொழுது கவனியுங்கள், மாம்சப்பிரகாரமான சபையாகிய, மோவாப் மாம்சப்பிரகாரமான ஸ்தாபனத்தை சுட்டிக்காட்டுகிறது. இஸ்ரவேல் ஆவிக்குரிய சபையைக் குறிக்கிறது. இஸ்ரவேல், ஒரு உண்மையான சபையாக இருந்து, எகிப்திலிருந்து அழைக்கப்பட்டு, சத்தியமாயிருக்க ரூபகாரப்படுத்தப்பட்ட அந்நாளின் மணவாட்டியாயிருந்தது. 103 அவை இரண்டும் ஒன்றாக வரும்போது, அவைகளைக் கவனியுங்கள். அவர்கள் இருவருமே ஒரே பலியைச் செலுத்தினர், இருவருமே ஏழு, பலிபீடங்களைக் கட்டினர். இருவருமே சுத்தமான பலியாக, காளையைப் பலியிட்டனர். மேசியா வரப்போகிறார் என்று சாட்சி பகர அவர்கள் ஆட்டுக்கடாக்களையும் கூட பலியிட்டனர். அடிப்படையில், அவர்கள் இருவரும் சரியாக ஒரே மாதிரியாக இருந்தனர். இஸ்ரவேல், இங்கே பள்ளத்தாக்கிலும்; மோவாப் மலையின் மேலும் இருந்தனர். மோவாப் ஏழு பலிபீடங்களையும்; இஸ்ரவேலர் ஏழு பலிபீடங்களை உடையவர்களாயிருந்தனர். மோவாப் ஏழு காளைகளோடும்; இஸ்ரவேல் ஏழு காளைகளோடும். மோவாப் ஏழு ஆட்டுக்கடாக்களோடு வந்து, மேசியா வரப்போவதைக் குறித்து காட்டிக்கொண்டிருந்தனர். ஏழு ஆட்டுக்கடாக்களோடு இஸ்ரவேலரும் இருந்தனர். அவர்களுக்குள் இருந்த வித்தியாசம் என்ன? அடிப்படையில், இரண்டுமே சரிதான். ஆனால், நீங்கள் பாருங்கள், மோவாப் அவர்களோடு தேவனுடைய ரூபகாரப்படுத்துதலை உடையவர்களாயிருக்கவில்லை; அவர்கள் ஒரு தேசமாக, ஒரு பிரபலமான குழுவாக மாத்திரமே இருந்தனர். ஆனால் இஸ்ரவேலர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களோடு வைத்திருந்தனர். அவர்கள் தங்களோடு ஒரு அடிக்கப்பட்ட கன்மலையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் ஒரு அக்கினி ஸ்தம்பத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் சுகமளித்தலுக்காக, ஒரு வெண்கல சர்ப்பத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்களோடு அசைவாடிக் கொண்டிருந்த தேவனுடைய ஆசிர்வாதங்களை அவர்கள் உடையவர்களாயிருந்தனர், அவர்கள் வெளியே அழைக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாயிருந்தனர்.

53104 இப்பொழுது அது இன்றைய சபைகளில் இங்கே மிகவும் பரிபூரணமாக மாதிரியாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் கண்டறிகிறோம். மோவாப் அவ்வண்ணமாய் இருக்கவில்லை. இஸ்ரவேலர் ஒரு இடம் விட்டு இடம் செல்லுகிற பரதேசிகளாயிருந்தனர்; அந்த அக்கினி ஸ்தம்பம் எங்கு சென்றதோ, அங்கெல்லாம் அவர்கள் அதனோடு சென்றனர். மோவாப், அப்படியல்ல; அவர்கள் தங்களுடைய சொந்த ஸ்தாபனத்தில், தங்களுடைய சொந்த தேசத்தில் குடியேறினர். அவர்கள் இடம்பெயரவில்லை, அவர்கள் அங்கேயே தரித்திருந்தனர். அவர்கள் தங்களுடைய பிரபலங்களை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை அவர்கள் நியமித்தனர், அவர்கள் தங்களுடைய போர்வீரர்களை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் தங்களுடைய சண்டைக்காரர்களை உடையவர்களாயிருந்தனர், அவர்கள் தங்களுடைய ராஜாவை உடையவர்களாயிருந்தனர், அதாவது அவர்கள் தங்களுடைய கட்டளைகளை பெற்றிருந்தனர். 105 ஆனால் மோவாபியர் இஸ்ரவேலரிடம் இல்லாத ஏதோ ஒன்றைக் கண்டனர். அவர்கள் இஸ்ரவேலருக்கு மத்தியில் ஒரு வல்லமையான வல்லமையைக் கண்டனர், அது ஒரு தீர்க்கதரிசியாயிருந்தது. அந்த தீர்க்கதரிசி மோசேயாயிருந்தார். யுத்தம் தோல்வியுறுவதை அவர்கள் அறிந்து, அவர்கள் அவனுடைய கரங்களை உயர்த்தி, அவைகளை அங்கே மேலே உயர்த்த, யுத்தம் மாறியது. எனவே அவர்கள் அதைப் போன்றதைப் பெற்றிருக்கவில்லை, எனவே அவர்கள் அதை அரசியலோடு, ஒரு அரசியல் இழுப்புடன் பொருத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை வைத்து, இஸ்ரவேலர் தங்களுக்கு மத்தியில் வல்லமையைப் பெற்றிருந்தது போல, அவர்கள் மத்தியிலும் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்படி, அவர்கள் வேறொரு தேசத்திற்கு அனுப்பி ஒரு தீர்க்கதரிசியை கூலிக்கு அமர்த்தினர். 106 மாம்சபிரகாரமான ஒப்பீட்டை நீங்கள் காண்கிறீர்களா? இன்றைக்கு மாம்சபிரகாரமான சபையை உங்களால் காண முடிகிறதா? அது அதே காரியத்தையே செய்துள்ளது.

54107 கவனியுங்கள், இப்பொழுது, அவர்கள் இருவருமே தீர்க்கதரிசிகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறார்கள். தேவனுடைய தீர்க்கதரிசியாகிய மோசே, தேவனே அவனுடைய இராஜாவாக இருந்தார் என்பது, மாத்திரமே வித்தியாசமாய் இருந்தது. அங்கேதான் அவன் தன்னுடைய கட்டளைகளை, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றான். பிலேயாம், அவனுக்கும் கூட, அவனுக்கு ஒரு ராஜா இருந்தான், அந்த ராஜா பாலாக், மோவாபின் ராஜா, அங்கேதான் அவன் தன்னுடைய கட்டளைகளையும், அவனுடைய ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டான். எனவே மோவாப் பாலாக்கிடம், “வா” என்றான். இல்லை பிலேயாமோ, “நீ வந்து இந்த ஜனங்களை எனக்காக சபியும், ஏனென்றால் அவர்கள் பூமியின் விசாலத்தை மூடியிருக்கிறார்கள். ஒரு காளை புல்லை மேய்கிறது போல அவர்கள் வந்து எல்லாவற்றையும் மேய்கிறார்கள்” என்றான். “இப்பொழுது கீழே வா. உன்னால் சபிக்க முடியும், நீ ஆசீர்வதிக்க முடியும், நீ என்ன செய்தாலும் அது அங்கீகரிக்கப்படுகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்றான். 108 இப்பொழுது, இந்த மனிதன் தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் என்பதை நாம் கவனிக்க விரும்புகிறோம், ஆனால் அவன் அரசியல் காரணங்களுக்காக தன்னுடைய பிறப்புரிமையை விற்றுப்போட்டான். இன்றைக்கு சபை செய்தது போலவே, லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தே, இன்னும் அவர்களுடைய முழு குழுவினரும், அதை தங்களுடைய ஸ்தாபனத்தில் இழுப்புகளுக்காக விற்றுவிட்டனர். மோசே தேவனின் கீழ் இருந்தான். பிலேயாம், பாலாக்கின் கீழ் இருந்தான். அதே சமயத்தில் இரண்டு தீர்க்கதரிசிகளுமே தேவனுடைய மனிதன் என்று அழைக்கப்பட்டவர்கள், இருவரும் ஆவிக்குரியவர்களாயிருந்தனர். வித்தியாசத்தைக் கவனியுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தலைமை இருந்தது: மோசேக்கு தேவனும், பிலேயாமுக்கு பாலாக்கும் இருந்தது.

55109 மாம்சப்பிரகாரமானது தவறானது என்பதை நிரூபிக்க, எப்படி ஆவிக்குரிய பிரகாரம் உபயோகிக்கப்படுகிறது என்பதை இங்கே கவனியுங்கள். தேவனால் அனுப்பப்பட்ட, மோசே, கடமையின் பாதையில், மற்றொரு தேவனுடைய தீர்க்கதரிசியால் சந்திக்கப்பட்டு சவாலிடப்படுகிறான். உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா! மோசே, தேவனால் அழைக்கப்பட்டு, தேவனால் நியமிக்கப்பட்டவன், தேவனுடைய கடமையில் நிற்கிறான்; இந்த குளிர்ந்த, சம்பிரதாயமான குழுவிற்குள் சென்று, தேவன் ஆசீர்வதித்து, நியமித்திருந்த மற்றொரு தேவனுடைய தீர்க்கதரிசியால் சவாலிடப்பட்டான். நீங்கள் எப்படி வித்தியாசத்தைக் கூறுவீர்கள்? அவர்கள் இருவருக்கும் தீர்க்கதரிசிகள் இருந்தனர். தேவன் இரண்டு தீர்க்கதரிசிகளிடமும் பேசினார். 110 அவர்களில் சிலர், “தேவன், ‘இதைச் செய்’ என்றார். தேவன், ‘அதைச் செய்’ என்றார்” என்று கூறினர். இப்பொழுது, நான் அதைக் குறித்து கேள்வி கேட்கவில்லை, ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கு புறம்பாக உள்ளது. தீர்க்கதரிசி, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவன் ஒழுங்கிற்கு புறம்பாக இருக்கிறான். அநேக ஜனங்கள் அந்தவிதமாக வஞ்சிக்கப்படுகின்றனர். “ஓ, இந்த சகோதரன் இதைச் செய்ய முடியும், இந்த சகோதரன் அதைச் செய்ய முடியும்” என்று கூறி வார்த்தையை மறுதலிக்கிறீர்களா?

56111 “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், நான் மலைகளைப் பெயர்க்கக்கூடிய வரங்களை உடையவனாயிருந்தாலும், நான் என்னுடைய ஆஸ்திகளையெல்லாம் ஏழைகளைப் போஷிக்கக் கொடுத்தாலும், நான் இன்னும் ஒன்றுமில்லை.” “அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே, உம்முடைய நாமத்தில் நான் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா? உம்முடைய நாமத்தினாலே, நான் பிசாசுகளைத் துரத்தினேன், வல்லமையான கிரியைகளைச் செய்யவில்லையா?’ என்பார்கள். நான், ‘அக்கிரமச் செய்கைக்காரரே, நீங்கள் அகன்று போங்கள்…என்னை விட்டு அகன்று போங்கள் என்று சொல்வேன். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை’” என்று அவர்களுக்குச் சொல்லுவேன். அதேசமயத்தில், அவர்கள் தாங்கள் அதை செய்துள்ளதாக ஒரு அறிக்கையோடு வருகிறார்கள், ஆனால் இயேசுவோ அவர்கள் அக்கிரமத்தின் கிரியைக்காரர்கள் என்று கூறினார். அக்கிரமம் என்றால் என்ன? செய்வதற்கு சரியானதை, நீங்கள் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்த ஒரு காரியத்தை, அதே சமயத்தில் நீங்கள் அதைச் செய்யாமலிருப்பதாகும். கடைசி நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்று பார்த்தீர்களா? 112 முழு காரியத்தையும் கேளுங்கள்! அதுவே இன்றிரவு என்னுடைய நோக்கமாயிருந்தது. நான் ஒன்பது மணிக்கு வெளியே வந்துவிடுவேன் என்று கூறினேன், ஆனால் நான் சிறிது நேரம் கழித்து வரலாம். பாருங்கள், இந்த வாக்கியத்தை உங்களுக்கு காண்பிக்கவே, அதுவே என்னுடைய முழு நோக்கமாயிருந்தது. தேவனுடைய வார்த்தையைக் கொண்டு, பாருங்கள், அதாவது—அதாவது தேவனாயிருக்கும்படியாக தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும்.

57113 இப்பொழுது, இந்த இருவருமே ஆவிக்குரிய மனிதர்கள், இருவருமே தீர்க்கதரிசிகளாயிருந்தனர், இருவருமே அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை நாம் கவனிக்கிறோம். மோசே, கடமையின் பாதையில், ஒவ்வொரு நாளும் அவனுக்கு முன்பாக ஒரு புதிதாக அக்கினி ஸ்தம்பத்தோடு, கடமையின் பாதையிலிருக்க, தேவனுடைய ஆவியானவர் அவன் மேல் தங்கியிருந்தார். இதோ தேவனால் நியமிக்கப்பட்ட, தேவனால் அழைக்கப்பட்ட, மற்றொரு தேவனுடைய ஊழியக்காரன் வருகிறான், ஒரு தீர்க்கதரிசியாகிய அவனிடத்திற்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. இங்கே அபாயக் கோடு உள்ளது. அந்த மனிதன் தேவனுடையவனாய்—தேவனுடையவனாய் இருக்கவில்லையென்று எவரும் மறுக்க முடியாது, ஏனென்றால் தேவனுடைய ஆவி அவனிடத்தில் பேசியதாக வேதம் கூறியுள்ளது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், அவன் தேவனிடத்திலிருந்து உண்மையான பதிலைப் பெற்றபோது, அவன் அதைக் காத்துக்கொள்ள மனதில்லாதிருந்தான். அவன் அதை கவனிக்கவில்லை, அதன்பின்னர் அவன் மோசேக்கு சவாலிட சென்றான்.

58114 இப்பொழுது, பிலேயாம் தன்னுடைய முழு இருதயத்தோடு, தேவனுடைய சித்தத்தைத் தேடினான். இப்பொழுது, இந்த பெரிய மனிதர் அங்கு வந்து, “பிலேயாமே! பாலாக் ராஜா அனுப்பியிருக்கிறான், நீ உடனடியாக அவனிடத்தில் வந்து, இந்த இஸ்ரவேல் ஜனங்களை சபியும், ஏனென்றால் அவர்கள் பூமி முழுவதிலும் சிதறடிக்கப்பட்டு, இப்பொழுது எனக்கு எதிராக முகாமிட்டுள்ளனர். அவர்களுக்குக் கீழிருந்த எல்லா இராஜ்ஜியங்களையும் அவர்கள் மேய்ந்துள்ளனர். இப்பொழுது நீ வந்து இந்த ஜனங்களை சபிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால், நீ ஒருவனை சபித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கிறான் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்றனர். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவன் ஒரு தேவனுடைய மனிதனாயிருந்தான். “நீ எதை ஆசீர்வதிக்கிறாயோ, அது ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கிறது.” அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருந்தான். 115 பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறபடியால், “ஒரே ஒரு காரியம் மாத்திரமே நான் செய்ய வேண்டியதாயுள்ளது, அது தேவனுடைய சித்தம் என்னவென்பதைத் தேடுவதுதான்” என்றான்.

59116 அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருந்தால், அதுவே ஒரு தீர்க்கதரிசியின் கடமை. முதலாவதாக, ஒரு தீர்க்கதரிசி என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய வார்த்தையை, சித்தத்தை தேடுவதேயாகும். அவன் அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறபடியால், தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் வருகிறது. அந்த…அவர்கள், “சரி, நீர் ஒரு வேதபண்டிதர் அல்ல” என்று கூறுகிறார்கள். தேவனுடைய வார்த்தை ஒரு வேதபண்டிதனுக்கு வருகிறது என்று வேதம் ஒருபோதும் கூறவில்லை. அவர்கள்தான் அதை குழப்புகிறார்கள். வார்த்தை தேவனுடைய தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. 117 இங்கே ஒரு மனிதன் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் தேவனுடைய மற்ற ஜனங்களை சபிக்க, கூலிக்கு உட்படுத்தப்பட்டு, கூலிக்கு அமர்த்தப்பட்டபோது, கவனியுங்கள், அவன் தேவனுடைய சித்தத்தைத் தேடச் சென்றான். அவன் தம்முடைய பரிபூரண சித்தத்தை அறிந்துகொள்ள விரும்பினான், தேவன் அந்த காரியத்தில் தம்முடைய பரிபூரண சித்தத்தை அவனுக்கு அளித்தார். அவருடைய பரிபூரண சித்தம் அவனுக்கு அளிக்கப்பட்டது. அவருடைய சித்தம் என்னவாயிருந்தது? “நீ போகாதே!” அதுவே தேவனுடைய முதல் வார்த்தையாயிருக்கிறது. “அவர்களோடு போகாதே. என்னுடைய பரிபூரண வழிகளில் நடக்கிற, என் ஜனங்களைத் தாக்க முயற்சிக்காதே.” 118 அது எப்படியாய் இன்றைக்கு உள்ளது, தேவனுடைய ஆவி உங்கள் மத்தியில் கிரியை செய்வதைக் காணும்போது, வம்பு, விவாதம் மற்றும் மற்ற ஒவ்வொரு காரியமும் இருக்க வேண்டும். அவர்கள் அநேக வருடங்களாக, அதை அடக்க, முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அதை எவ்வளவுக்கெவ்வளவு அடக்க முயற்சிக்கிறார்களோ, அவ்வளவு பெரிதாக அது வளருகிறது. தேவன் ஆசீர்வதித்திருக்கிறதை நீங்கள் சபிக்க முடியாது. உங்களால் முடியாது. உங்களால் அதைச் செய்ய முடியாது.

60119 எனவே, நீங்கள் பாருங்கள், அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருந்தனர். இப்பொழுது, அந்த தீர்க்கதரிசி, அவன் அங்கே ராஜாவால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்தபோதிலும், புகழ் வாய்ந்தவர்கள், போன்றவர் மத்தியில் பணியாற்றினான். தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் வந்தது. அவன் தேவனுடைய சித்தத்தைத் தேடினான், தேவனுடைய சித்தம் அவனிடத்தில் பேசி, “இந்த ஜனங்களை சபிக்காதே. நான் அவர்களை ஆசீர்வதித்தேன்” என்றார். 120 இப்பொழுது நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிற இந்த செய்தியை மறுதலிக்க வானத்தின் கீழுள்ள ஒரு வேத பண்டிதனும் இல்லை, ஆனால் அது சரியான நேரத்தில் தேவனுடைய வார்த்தையாயுள்ளது. தேவன் கூறப்பட்ட அல்லது செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு காரியத்திலும் ரூபகாரப்படுத்தப்பட்டிருக்கிறார், அவர் அது சரியென்று நிரூபித்திருக்கிறார். இப்பொழுது, எந்த வேத சாஸ்திரியும், வேதாகமத்தை வாசிக்கும் எவனும், எந்த தீர்க்கதரிசியும், அந்த வார்த்தையை நோக்கிப் பார்க்க முடியாது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தால், அவன் அதே காரியத்தைக் காண்பான். ஆனால் அவன் அதேக் காரியத்தைக் காணவில்லையென்றால், அங்கே ஏதோக் காரியம் தவறாயுள்ளது என்பதைக் காண்பிக்கும். ஏனெனில்… 121 நீங்களோ, “சரி, ஓ, நான் அதை எதிர்மாறாக எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறலாம். பாலாக்கும், பிலேயாமும் அவ்வாறே இருக்க முடியும். பார்த்தீர்களா? ஆனால் தேவன் மோசேயை அடையாளங்காட்டினார். அதன்பின்னர் அத்தாட்சி என்னவாயிருந்தது? தேவனுடைய வார்த்தை. அவன் தேவனுடைய தெளிவான, சுத்தமான தீர்மானத்தைக் கேட்டான், “நீ போகாதே. நான் ஆசீர்வதித்திருக்கிறதை சபிக்க முயற்சிக்காதே. அவர்களே என்னுடைய ஜனங்கள்” என்றார். ஆனால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? பிலேயாம் துவக்கத்தில், அந்த ஜனங்களை விரும்பவில்லை. ஓ, என்ன ஒரு…இன்றைக்கு உலகத்தில் எத்தனை பிலேயாம்கள் இருக்கின்றனர்! அவன் அந்த குழுவை, துவக்கத்திலேயே விரும்பவில்லை.

61122 இப்பொழுது, “நீ போக வேண்டாம்,” என்ற தேவனுடைய தெளிவான தீர்மானத்தைப் அவன் பெற்ற பிறகு, ஆனால், நீங்கள் பாருங்கள், அதைச் செய்வதற்குப் பதிலாக, அது காயீனைப் போலவும், கோராகைப் போலவும் இருந்தது, அவன் பொறாமை கொண்டவனாயிருந்தான், அவன்—அவன் போக வேண்டும் என்று விரும்பினான், எப்படியும், ஒரு காரணம் இருந்தது. 123 கவனியுங்கள், அவனுடைய ஸ்தாபன தலைமை அலுவலகம், அவன் திருப்பி அனுப்பப்பட்ட பிறகு, “இல்லை, நான் அங்கு செல்வேன் என்று நினைக்கவில்லை. நான் அவர்களோடு எந்தக் காரியத்தையும் செய்ய முடியும் என்று நம்பவில்லை. நான் அந்த ஜனங்களோடு வாக்குவாதம் செய்யமாட்டேன், ஏனென்றால் தேவன் அவர்களை அவருடைய ஜனங்கள் என்று என்னிடம் கூறிவிட்டார், நான் போக முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினான். அவன் அதனோடு தரித்திருந்தால் நலமாயிருக்குமே! ஆனால், அவனுடைய இருதயத்தின் ஆழத்தில், அவன் அவர்களை விரும்பவில்லை. பார்த்தீர்களா? அவர்கள் அவனுடைய குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவனுடைய குழுவில் சேராத எந்த ஒரு காரியமும், “தொடக்கத்தில், சரியாயிருக்கவில்லை.” பார்த்தீர்களா? அவன் அவர்களை நோக்கிப் பார்த்து, “அந்த ஜனங்கள் செய்த சில மோசமான காரியங்கள் இருந்து வந்துள்ளன. நிச்சயமாகவே ஒரு பரிசுத்தமான தேவன் அப்படிப்பட்ட ஜனங்களை சபிப்பார். அவர்கள்—அவர்கள் படிப்பறியாதவர்கள். அவர்கள் நம்மைப் போன்று படித்தவர்கள் அல்ல. நாம் புத்திசாலியான ஜனங்கள். ஓ, அவர்கள் தேவனை சேவிப்பதாக உரிமை கோருகின்றனர், ஆனால், அவர்களை நோக்கிப் பாருங்கள், அவர்கள் என்னவாயிருக்கிறார்கள்? ஒரு கூட்ட, ஏன், ஒரு கூட்ட அடிமைகள், சேறு பிசைபவர்கள், எகிப்தியர்கள் அங்கு விரட்டிவிட்டனர். ஏன், அதைப் போன்ற ஒரு அசுத்தமான கூட்டத்தோடு தேவன் எந்த ஒரு காரியத்தையும் ஒருபோதும் செய்யமாட்டார்!” என்றான்.

62124 அவன் அடிக்கப்பட்ட கன்மலையையும், அந்த வெண்கல சர்ப்பத்தையும், அந்த அக்கினி ஸ்தம்பத்தையும் காணத் தவறினான். அவன் அவர்களை ஒரு ஒழுக்க ரீதியில் நியாயந்தீர்க்க முயன்றான். அவன் தேவனுடைய உயர்ந்த அழைப்பைக் காணத் தவறினான். கிருபையினால், தெரிந்து கொள்ளுதலினால், அவர்கள் அந்த ஒழுங்கில் தேவனுடைய வார்த்தையோடு இருந்தனர். அவன் அவர்களை சபிக்க விரும்பியபோது, தேவன், “நீ அதைச் செய்ய வேண்டாம். அவர்கள் என்னுடையவர்கள். அவர்களை விட்டுவிடு. நீ அவர்களைத் தொடாதே” என்றார். 125 இப்பொழுது, அந்த மனிதன், திரும்பிச் சென்றுவிட்டான். இப்பொழுது அவனுடைய ஸ்தாபன தலைமை அலுவலகதிற்கு, அவன் திரும்பி வரும்போது, கவனியுங்கள். அவர்கள் அதிக செல்வாக்குள்ள குழுவை அனுப்பினர். இம்முறை அவர்கள் சிலராக இருந்திருக்கலாம், வழக்கமான சாதாரண மனிதர்களுக்கு பதிலாக, அவர்கள் இந்த முறை வந்துள்ளது தெய்வீக வேத பண்டிதர்களாக இருந்திருக்கலாம். அவர்கள் பேராயர்களாக அல்லது ஒரு வேளை மாநில போதகர்களாக இருந்திருக்கலாம், ஏனென்றால் எல்லாமே… அவர் ஒரு—ஒரு—ஒரு மேலான குழுவையும், இன்னும் சற்று செல்வாக்குள்ள ஒரு—ஒரு குழுவையும் அனுப்பினார், யாரோ ஒருவர் சற்று மேம்பட்ட கல்வியறிவு பெற்றிருந்து, அவருக்கு சிறந்த திட்டத்தை வகுத்து, அதை நியாயமானதாக்க முடிந்தது.

63126 பாருங்கள், காயீன் அதைத்தான் செய்தான்; அவன் யோசனை செய்தான். கோராகும் அதைத்தான் செய்தான்; அவன் யோசனை செய்தான். யோசனை செய்கிறது அவன் அல்ல. “நாங்கள் யோசனைகளை புறக்கணிக்கிறோம்.” நாம் தேவனை விசுவாசிக்கிறோம், மற்ற எந்தக் காரியம் என்ன கூறினாலும் பொருட்படுத்துகிறதில்லை. நாம் தேவனை விசுவாசிக்கிறோம். தேவன் என்னக் கூறுகிறார் என்பதை நாம் சிந்தித்து யோசிப்பதில்லை. உங்களால் அதைக் குறித்து யோசிக்க முடியாது. நீங்கள் விசுவாசத்தினால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் அறிந்துள்ள எந்தக் காரியத்தையும், நீங்கள் இனிமேல் யோசிக்க வேண்டியதில்லை. அவர் அதை எப்படி செய்கிறார் என்று எனக்குத் தெரியாது; அவர் அதைச் செய்கிறார் என்று மாத்திரமே நான் விசுவாசிக்கிறேன். அவர் எப்படி அந்த வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளப் போகிறார் என்று எனக்குத் தெரியாது; ஆனால் அவர் அதைச் செய்வதாகக் கூறினார். நான் அதை விசுவாசிக்கிறேன். அது தேவனுடைய வார்த்தை என்று நான் விசுவாசிக்கிறேன் என்ற அடிப்படையில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்களோ, “சரி, நீங்கள் அதைக் கொண்டு சமாளிக்க முடியாது” என்று கூறலாம். நான் அதை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர், “அதைக் கூறு” என்றார். என்னுடைய பாப்டிஸ்டு போதகர் என்னிடம் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது, “ஏன், பில்லி, நீ சபையில் உள்ள தூண்களுக்கு பிரசங்கிப்பாய். ஏன், அதைப் போன்ற ஒரு காரியத்தை யாராவது கேட்பார்கள் என்று நீ நினைக்கிறாயா?” என்று கேட்டார். நான், “தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார்” என்றேன். “ஏழாம் வகுப்பு வரையிலான கல்வியறிவு பெற்றுள்ள நீ எப்படி இராஜாக்களுக்காக ஜெபித்து, உலகம் முழுவதும் பிரசங்கிக்கப் போகிறாய்?”

64127 நான், “நான் அதை எப்படி செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால், அவர் அவ்வண்ணமாய்க் கூறினார், அதுவே எனக்கு போதுமானதாயிருக்கிறது” என்றேன். பார்த்தீர்களா? “அவர் அவ்வாறு கூறினார். அது எப்படி செய்யப்படப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.” அவர், “இந்த மகத்தான, படித்த உலகத்தில் உள்ள ஜனங்களை, நீ எதிர்த்து நிற்கப் போகிறாய் என்று நீ நினைக்கிறாயா, இந்த தெய்வீக சுகமளித்தல் மற்றும் இன்ன பிற பொருளின் பேரில், அவர்கள் அதை விசுவாசிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறாயா?” என்று கேட்டார். 128 நான், “அவர்கள் அதை விசுவாசிக்கிறார்களா அல்லது இல்லையா என்பதை நான் அறிய வேண்டியதில்லை” என்றேன். நான், “அதைப் பிரசங்கிப்பதே என்னுடைய கடமையாகும். அதைத்தான் அவர் என்னிடம் கூறினார். அவர் என்னோடு இருப்பார் என்று அவர் கூறினார், அது என்ன செய்யும் என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார்” என்றேன். அது என்ன செய்யும் என்று அவர் கூறினாரோ அதை அப்படியே சரியாக செய்திருக்கிறார். “முதலில், அவர்களுடைய கரங்களைப் பற்றிப் பிடி; அதன்பின்னர் அவர்களுடைய இருதயத்தின் இரகசியத்தையும் கூட நீ அறிந்து கொள்வாய்.” என்று கூறினார். நான் அதைக் குறித்து உங்களிடம் கூறினேன், அது அந்தவிதமாகவே சம்பவித்தது. அது எப்படி அதைச் செய்கிறது? அது எப்படி அதைச் செய்கிறது என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை. அது எப்படி செய்யப்படுகிறது என்பது என்னுடைய வேலையல்ல; அது அப்படியே செய்யப்பட்டுள்ளது.

65129 தேவன் எலியாவிடம், “நீ அங்கே போய் மலையின் மேல் இரு, நான் உன்னை போஷிப்பேன். உன்னைப் போஷிக்கும்படி நான் காகங்களை நியமித்திருக்கிறேன்” என்று கூறுவதை யார் விவரித்துக் கூற முடியும்? ஒரு காகம் எப்படி ஒரு துண்டு அப்பத்தையும், ஒரு துண்டு—ஒரு துண்டு மீனையும் சுடச் செய்து, அதை ஒரு தீர்க்கதரிசியிடம் கொண்டு வர முடியும்? என்னால் விளக்கிக் கூற முடிந்த எந்த காரியத்திற்கும் அது அப்பாற்பட்டதாக உள்ளது. உங்களாலும் அல்லது யாராலும் முடியாது என்றும் நான் நினைக்கிறேன். ஆனால் அவர் அதைச் செய்தார். அவ்வளவுதான் அவசியமாயிருந்தது. அவர் அதைச் செய்தார், அதுதான் அதைக் குறித்த உண்மையாய் உள்ளது. அவர் அதை எப்படி செய்தார் என்று, எனக்குத் தெரியாது; அது என்னுடைய வேலையல்ல. ஆனால் அவர் அதைச் செய்தார். அவர் பூமியை எப்படி உண்டாக்கினார் என்று எனக்குத் தெரியாது; ஆனால் அவர் அதைச் செய்தார். அவர் தம்முடைய குமாரனை எப்படி அனுப்பினார் என்று, எனக்குத் தெரியாது; ஆனால் அவர் அதைச் செய்தார். அவர் எப்படி மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று, எனக்குத் தெரியாது; ஆனால் அவர் அதைச் செய்தார். அவர் எப்படி என்னை இரட்சித்தார்? எனக்குத் தெரியாது; ஆனால் அவர் அதைச் செய்தார். அது உண்மை. அவர் எப்படி உங்களை இரட்சித்தார்? நான் உங்களுக்கு சொல்ல முடியாது; ஆனால் அவர் அதைச் செய்தார். அவர் எப்படி என்னை சுகப்படுத்தினார்? எனக்குத் தெரியாது; ஆனால் அவர் அதைச் செய்தார். அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார், அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்கிறார். இப்பொழுது, பிலேயாம் அதை அறிந்திருக்க வேண்டும், அவன் நன்றாக அறிந்திருந்தான்.

66130 கவனியுங்கள், இந்த மேலான, செல்வாக்குள்ள குழு, வருகிறது, இதைவிட மேலானது எது? அவர்கள் மேலான வரங்களை உடையவர்களாயிருந்தனர். அது மாத்திரமல்ல, அவர்களால் அவருக்கு அதிக பணம் கொடுக்க முடியும், மேலும் அவர்களால் அவருக்கு ஒரு மேலான ஸ்தானத்தையும் அளிக்க முடியும். “இப்பொழுது, ஸ்தாபனத்தில் ஒரு வழக்கமான ஊழியக்காரனாய் இருப்பதைவிட, நாங்கள் உன்னை மாவட்ட கண்காணிப்பாளராக ஆக்குவோம். பார்த்தீர்களா? அதாவது, நீ அந்த கூட்ட ஜனங்களை அங்கிருந்து வெளியேற்றி, பாருங்கள், அதை நிறுத்தினால், நாங்கள்—நாங்கள் உனக்காக ஏதாவதொன்றைச் செய்வோம்.” ஓ, அவர்கள் அவனுக்கு ஒரு மகத்தான ஸ்தானத்தை அளித்தனர். மேலும், “நீ எவ்வளவு அதிகமாக ஆசீர்வதிக்கிறாயோ…” என்று கூறி, “உங்களுக்குத் தெரியும், என்னால் உன்னை உயர்த்த முடியும்” என்றனர். தேசத்தின் தலைவரான, அவர் தன்னுடைய வார்த்தைகளை எங்கிருந்து பெறுகிறார் என்று பாருங்கள்.

67131 மோசே தன்னுடைய வார்த்தைகளை எங்கிருந்து பெற்றுக்கொண்டான்? பரலோகத்தின் ராஜாவிடத்திலிருந்தே. ஒன்று தேவனுடைய வாக்குத்தத்த வார்த்தையாயிருந்தது, “நான் உன்னை வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டு செல்வேன், ஒருவனும் உனக்கு முன்பாக நிற்பதில்லை. நான் உங்களுக்கு முன்பாக குளவிகளை அனுப்பி, அவர்களை வலமிருந்து இடமாக விரட்டுவேன். நீங்கள் அந்த நிலத்தை கைப்பற்றப் போகிறீர்கள். நான் வாக்குப்பண்ணி-…நான் அதை உங்களுக்கு ஏற்கனவே அளித்திருக்கிறேன். போய், அதைக் கைப்பற்றி, அதை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்; அது உங்களுடையது.” இப்பொழுது, பாருங்கள், மோசே அதைத்தான் கேட்டுக்கொண்டிருந்தான். இந்த மனிதன் தன்னுடைய சொந்த இருதயத்தில் பொறாமைகொள்ளுமளவிற்கு அவன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான், எனவே அதன்பின்னர் அவன் தன்னுடைய மதசம்பந்தமான தலைமைக்குச் சென்றான். பார்த்தீர்களா? 132 கவனியுங்கள், ஒரு மேலான ஸ்தானம். அவன், “என்னால் உன்னை உயர்த்த முடியும் என்பதை நீ அறிவாயா? நான் உன்னை ஒரு மேலான இடத்திற்கு உயர்த்துவேன். நான் உனக்காக இன்னும் அதிகமாகச் செய்வேன். நான் உன்னுடைய சம்பளத்தை உயர்த்துவேன். நான் உனக்கு ஒரு மேலான சம்பளத்தை தருவேன்” என்றான். அவன் இவை எல்லாவற்றையும் அவனுக்கு அளித்தபோது, அது அவனைக் குருடாக்கினது. 133 இன்றைக்கு உலகில் எத்தனை பிலேயாம்கள் உள்ளனர், அதாவது, ஒரு மேலான ஸ்தானத்தின் மூலமாக, ஒரு மேலான சபையின் மூலமாக, ஏதோ ஒரு காரியத்தின் ஒரு வாக்குத்தத்தத்தின் மூலமாகவே! ஒரு மனிதன் வார்த்தைக்கும், தேவனுடைய கிரியைகளுக்கும் தன்னுடைய கண்களைத் திறக்கும்போது… செல்வாக்கைப் பெற்றுள்ள, அந்த நல்ல மனிதன், ஒரு தேவனுடைய ஊழியக்காரனாக துவங்கி, அவன் ஒரு நல்ல சபையை உடையவனாயிருக்கிறான். சிறிது நேரம் கழித்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவனுக்கு அளிக்கப்படுகிறது; இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் அவனுக்கு அளிக்கப்படுகிறது, அதுவே ஒரு வேதவாக்கியமாயும், ஞானஸ்நானம் கொடுப்பதற்கான ஒரே வேதப்பிரகாரமான வழியாயும் உள்ளது. அது அவனுக்கு அளிக்கப்படும்போது, அவன் அதைத் துவங்கும்போது, அவர்கள் அவனை இழந்து போகப் போகிறார்கள் என்பதை ஸ்தாபனம் அறிந்திருக்கிறது, அவர்கள் அவனுக்கு ஒரு மேலான ஸ்தானத்தையும், சபையில் ஒரு மாற்றத்தையும் அளிக்கிறார்கள். பாருங்கள், பழைய பிலேயாமின் கொள்கை, மீண்டும், அது துவக்கத்தில் இருந்ததைப் போலவே.

68134 இப்பொழுது, அந்த வேதாகமத்தை வாசிக்கிற அந்த மனிதன், அது சத்தியம் என்று அவன் கண்டாலொழிய, அவனால் அதை வாசிக்க முடியாது. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” பட்டங்களை உபயோகித்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்கள் யாருமே கிடையாது. அது ஒரு கத்தோலிக்கக் கோட்பாடு, ஒரு வேதாகம உபதேசம் அல்ல. வேதாகமத்தில் எந்த நபரும் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை அல்லது கடைசி அப்போஸ்தலனின் மரணத்திற்கு முந்நூறு ஆண்டுகள் வரையிலுமே, ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். கத்தோலிக்க சபை அதைத் துவங்கினது, மற்றவர்கள் அதற்கு வந்தனர். தன்னுடைய படிப்பாய்வில் அமர்ந்துள்ள எந்த ஊழியக்காரனும், அதைப் பார்த்து, அது சத்தியம் என்பதை அறிந்திருக்கிறான், ஆனால் புகழுக்காகவும், தன்னுடைய ஸ்தானத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், ஜனங்கள் மத்தியில் சிறந்த சிந்தனைக்காகவும் விட்டுக்கொடுக்கிறான். “சரி,” நீங்களோ, “தேவன் அவனை ஆசீர்வதித்தார்” என்று கூறலாம். 135 நிச்சயமாகவே, அவர்களில் சிலர் சுகமளிக்கும் வரங்களைப் பெற்றுள்ளனர், அவர்களில் சிலர் மகத்தான கூட்டங்களைச் நடத்தியுள்ளனர். அவர்களை அவமானப்படுத்தும்படி, உங்களுக்கோ அல்லது வேறெந்த மனிதனுக்கோ கிடைக்கும் அதே பதிலையே அவர்களும் தேவனுடைய வார்த்தையிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்; தேவன் மாறுகிறதில்லை. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா?

69136 பிலேயாம், ஒரு மேலான ஸ்தானத்திற்காக, அவன் நினைத்தான். இப்பொழுது பாருங்கள், அந்த மேலான குழு திரும்பி வந்தபோது, சரியான…பிலேயாம், இங்கே, ஒரு வேறு அர்த்தங்கொண்ட பாடத்தை எடுத்துக்கொண்டான். பார்த்தீர்களா? அவர் கூறினார்…அந்த சிறந்த குழு திரும்பி வந்தபோது, அவன்—அவன், “என்னுடைய சமூகத்தை விட்டு வெளியே போ! நான் தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு கூறியிருக்கிறேன். தொடர்ந்து செல்லுங்கள்! இது கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று கூறியிருக்க வேண்டும். ஆனால், நீங்கள் பாருங்கள், வெகுமதிகள், ஒரு பிரபலமான மனிதனாயிருக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்! 137 ஓ, எப்படியாய் அவர்கள் அதைச் செய்ய விரும்புகிறார்கள்! “உலகம் முழுவதிலும் நாங்கள் உன்னை அனுப்புவோம். நாங்கள் உனக்கு ஒரு விசேஷித்த விமானத்தை தருவோம். நீ மாத்திரம் இருந்தால்…உன்னுடைய கூட்டங்களை எங்கும் நடத்த நாங்கள் நிதியுதவி செய்வோம்” என்றனர். ஓ, இல்லை. ஹூ-ஹூ. பார்த்தீர்களா? வார்த்தை என்ன கூறுகிறது என்பதை நாம் அறிவோம். தேவன் என்ன கூறினார் என்பதை நாம் அறிவோம். தேவனுடைய ஒத்தாசையினால், நாம் அதனோடு நிலைத்திருக்கப் போகிறோம். பார்த்தீர்களா? எந்த விதமான ஒரு வாக்குத்தத்தம், நீங்கள் எவ்வளவு அதிகமாக செலுத்த முடியும் என்பது ஒரு பொருட்டல்ல, இதை, அதை, அல்லது மற்றதை எத்தனை உங்களால்—உங்களால் உற்பத்தி செய்ய முடியும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதையும், அவர் முதலில் இங்கே என்ன கூறினார் என்பதையுமே நாம் விரும்புகிறோம். “சரி, சபையோ, ‘அது இரண்டாந்தரம்’ என்று கூறியுள்ளது” என்றது. தேவன் துவக்கத்தில் என்ன கூறினார் என்பதையே நாம் விரும்புகிறோம். “இதனோடு எதையாகிலும் கூட்டினாலும் அல்லது அதிலிருந்து எடுத்துப் போட்டாலும், ஜீவ புஸ்தகத்திலிருந்து உங்களுடைய பெயரும் கூட எடுத்துப்போடப்படும்; அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டவோ அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போடவோக் கூடாது.” அவர் என்ன கூறினார் என்று நாம் விரும்புகிறோம்; சபை என்ன கூறினது என்றோ, வேத பண்டிதர் ஜோன்ஸ் என்ன கூறினார் என்பதோ, வேறு யாரோ ஒருவர் என்ன கூறினார் என்பதோ அல்ல. கர்த்தர் உரைக்கிறதாவது என்ன கூறினது என்பதை, வார்த்தை என்ன கூறினது என்பதையே நாம் விரும்புகிறோம்.

70138 ஆனால் இப்பொழுது பிலேயாம், தேவனுடைய ஊழியக்காரனாக இருப்பதை நாம் காண்கிறோம். அந்த மனிதர்களில் அநேகர் துவக்கத்தில், தேவனால் நியமிக்கப்பட்டு, அநேக காரியங்களில் தேவனுடைய வார்த்தையைப் பேசுகிறார்கள்; ஆனால் அது முழு சத்தியத்திற்கு வரும்போது, அவர்கள் அதைச் செய்யமாட்டார்கள். 139 இங்கே கவனியுங்கள், ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்ற முறையில், அவன் துவக்கத்திலேயே, அப்படிப்பட்ட ஒரு குழுவில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. அவன் அவர்களோடு சென்றிருக்கக் கூடாது. ஆனால் கவனியுங்கள், புகழுக்காக, பாருங்கள், தன்னுடைய மனசாட்சியின் நிமித்தமாக, அவன், “சரி, இரவு முழுவதும் தங்கியிருங்கள், நான் மீண்டும் முயற்சிப்பேன்” என்றான். பாருங்கள், “நான் மீண்டும் முயற்சிப்பேன்”? நீங்கள் எதற்காக மீண்டும் முயற்சிக்க விரும்புகிறீர்கள்? 140 என்ன கூற வேண்டும் என்று தேவன் ஏற்கனவே அவனிடம் கூறியிருந்தார். தேவன், “நீ போகப் போவதில்லையென்று அவர்களிடம் சொல்லு” என்றார். அதுவே அவருடைய மூல வார்த்தையாகும். “நான் போகமாட்டேன். ‘நீ போக வேண்டாம். நான் ஆசீர்வதித்ததை நீ சபிக்க வேண்டாம்.’” இப்பொழுது சிறிது நேரம் கழித்து, அது எப்படி அவன் மேல் எதிரொலித்தது என்பதைக் கவனியுங்கள். பார்த்தீர்களா? அது, ஒவ்வொரு முறையுமே. தேவன் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, அவர் அதை அர்த்தப்படுத்துகிறார். அவர் அதைக் குறித்த தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளுகிறதில்லை. அவர் தம்முடைய வார்த்தையோடு சரியாக தரித்திருக்கிறார். யார் என்ன கூறினாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை, அவர் சரியாக அந்த வார்த்தையோடு தரித்திருக்கிறார்.

71141 இப்பொழுது, பிலேயாம் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட கூட்டத்திலிருந்து அவன் தன்னை நீக்கியிருக்க வேண்டும். ஆனால் இந்த இராஜாவின் வாக்குறுதி மற்றும் அந்த அருமையான வெகுமதிகள் யாவும், “என்னால் அதைச் செய்ய முடியும் என்பதை நீர் அறிவீர். நான்தான் பேராயர். நான் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறேனோ, அதை என்னால் செய்ய முடியும், நீ எனக்காக அதைச் செய்ய வந்தால், நான் உன்னை உயர்த்துவேன்” என்றான். தேவன் அவனிடத்தில், “அதைச் செய்யாதே” என்று கூறிவிட்டார். 142 ஆனால் அதே சமயத்தில் பிலேயாம், “நீஙகள், நீஙகள் இரவு முழுவதும் தரித்திருங்கள், நான்—நான் மீண்டும் முயற்சிப்பேன்” என்றான். பாருங்கள், அவன் வார்த்தையை உடையவனாயிருந்தான். நீங்கள் அதைக் குறித்து இனிமேல் வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை. தேவன் அவ்வண்ணமாய் கூறியிருக்கிறார். அதைப் போன்ற ஒரு குழுவோடு, நீங்கள் அவர்களை அனுமதித்தால், அவர்கள் எப்பொழுதுமே தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக உங்களிடத்தில் பேசி திருப்பிவிடுவார்கள்.

72143 ஒரு சமயம், யோபு என்று பெயரிடப்பட்ட, ஒரு தீர்க்கதரிசியினிடத்தில் வந்த ஒரு குழு இருந்தது. அவர்களால் அவனிடத்தில் பேசி மேற்கொள்ள முடியவில்லை. அவன் தரிசனத்தைக் கண்டான். எது சரியென்று அவன் அறிந்திருந்தான். பிலேயாம் அந்தத் தரிசனத்தைக் கண்டபோதும், அதனோடு நிலைத்திருக்கவில்லை. 144 அவனுடைய சபைக் குழுக்கள், “ஓ, யோபு, நீ இதைச் செய்ய வேண்டும், நீ அதைச் செய்ய வேண்டும்” என்று எவ்வளவுதான் கூறினபோதிலும் அது ஒரு பொருட்டல்ல. அவருடைய மனைவியும் கூட, அவன், “நீ ஒரு புத்தியில்லாத நபரைப் போல் பேசுகிறாய்” என்றான். பார்த்தீர்களா? “கர்த்தர் என்ன கூறினார் என்பதை நான் அறிவேன். அவர் என்ன கேட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன், அதைத்தான் நான் செய்திருக்கிறேன்” என்றான். பாருங்கள், தேவன் அவனிடம் கூறினவற்றோடு அவன் தரித்திருந்தான். 145 கவனியுங்கள், பிலேயாம் தன்னுடைய மனசாட்சிக்காக இந்த போலியான பொருளை உபயோகிக்கிறான். பார்த்தீர்களா? அதற்கு அவன், “பாருங்கள், நான்—நான் அதைக் கண்டறிவேன். நான் மீண்டும் முயற்சிப்பேன்” என்றான். இப்பொழுது, அங்குதான் நீங்கள் இரண்டாந்தரமாக வருகிறீர்கள். மத்தேயு 28:19-ல் உள்ள வேறு அர்த்தங்கொண்ட வசனத்தை, தங்களுடைய மனசாட்சியின் நிமித்தமாக உபயோகிக்க விரும்புகிறவர்களைப்போல இன்றிரவு நாம் எத்தனை பிலேயாம்களைப் பெற்றுள்ளோம்? எத்தனை பேர் மல்கியா 4-ம் அதிகாரத்தை தங்கள் மனசாட்சியின் நிமித்தமாக உபயோகிக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் லூக்கா 17:30-ஐ மனசாட்சியின் நிமித்தமாக உபயோகிக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் இந்த காரியங்களை, இன்னமும், “சரி, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் யாவரும் அதன் பேரில் குழப்பமடைந்துள்ளனர் என்று கூறி,” உபயோகிக்க விரும்புகிறீர்கள்?

73146 அப்பொழுது இங்கே பிலேயாம் கூற முயன்றதோ, “ஒருவேளை தேவன் குழப்பமடைந்திருக்கலாம். அவர் என்ன கூறினார் என்று பாருங்கள், நான் மீண்டும் முயற்சிப்பேன்” என்பதேயாகும். இப்பொழுது, அவர் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். கவனியுங்கள், பிலேயாம் தன்னுடைய சொந்த மனசாட்சியின் நிமித்தமாக இந்த வேறு அர்த்தங்கொண்ட பாடப்பகுதியை உபயோகித்தான், ஏனென்றால், அவன் உண்மையாகவே அந்த பணத்தை விரும்பினான். அவன் அந்த கௌரவத்தை விரும்பினான். அவன் அதை விரும்பினான். அவன் அந்த வேலையை விரும்பினான். அவன் அந்த ஸ்தானத்தை, வேத பண்டிதர் இன்னார்-இன்னார் போன்ற, உயரத்தில் காணப்பட வேண்டுமென்று விரும்பினான். எனவே அவன்—அவன்—அவன், “நான் மீண்டும் முயற்சிப்பேன்” என்றான். 147 ஓ, இன்றிரவு உலகத்தில் பிலேயாம்கள் சபையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட பதவிகளுக்காக, புகழுக்காக உள்ளனர்! ஓ, என்னே! அவர்கள் அவைகளினால் தங்களுடைய மனசாட்சியை மரத்துப்போகச் செய்கிறார்கள். அவர்களுடைய ஸ்தாபனங்களின் நிமித்தமாக, அவர்கள், “நீ அதைச் செய்தால், நீ போய்விடு. நீ ஒரு நல்ல மனிதன் என்பதையும், நாங்கள் உம்மை நேசிக்கிறோம் என்பதையும் நான் அறிவேன்,” என்றும், அவர் ஒரு நல்ல மனிதனாயிருக்கிறார், “நாங்கள் உம்மை நேசிக்கிறோம். ஆனால் உங்களால் அதைப் பிரசங்கிக்க முடியாது. நீங்கள் அதைச் செய்ய முடியாது என்றே நம்முடைய—நம்முடைய உபதேசம் கூறுகிறது. வேத பண்டிதர் இன்னார்-இன்னார் இந்தவிதமாகவே அது உள்ளது என்று கூறினார். இப்பொழுது நீங்கள் எங்களோடு தரித்திருந்தால், நீங்கள் அதை இந்தவிதமாக விசுவாசிக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஒரு நெருக்கடி இருந்திருக்கும் என்பதை நான் அறிவேன், பாருங்கள், என்னால் உங்களுக்கு பதிவு உயர்வை அளிக்க முடியவில்லை என்றால், ஒருகால் சபைகளை மாற்றலாமா என்றும் நான் பார்ப்பேன்” என்கிறார்கள். ஓ, பிலேயாமே நீ! நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும்போது, நீங்கள் அதைச் செய்யுங்கள்! தேவன் தம்முடைய சிந்தையை மாற்றப்போவதில்லை. இல்லை.

74148 அவனுடைய கட்டளைக்காக, அவன் கடந்து செல்லக்கூடிய ஒன்று, சத்தியமே. அதற்கு அவன், “சரி, நான்—நான் மீண்டும் முயற்சிப்பேன்” என்றான். அங்குள்ள பிலேயாம்களைக் கவனியுங்கள். 149 எனவே இப்பொழுது நினைவிருக்கட்டும், அவன் இரண்டாம் நாள் இரவு வந்தபோது, இந்த மகத்தான புகழ்வாய்ந்த நபரோடு, ஏற்கனவே தன்னுடைய மனசாட்சி மந்தமாகவும், மரத்துப்போனதாகவும் இருந்தது, தேவன் அவனைப் போக அனுமதித்தார். இப்பொழுது, தேவன் அவருடைய சிந்தையை ஒருபோதும் மாற்றவில்லை, ஆனால் அவர் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தை அவனுக்கு அளித்தார். “அப்படியானால் தொடர்ந்து செல்.” ஆனால் அது கிரியை செய்யாது என்பதை அவன் கண்டு கொண்டான். 150 பிலேயாமின் இருதயத்தில் என்ன இருந்தது என்பதை தேவன் அறிந்திருந்தார். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபோதிலும், அவன் அந்த பரிசுத்த உருளைகளை வெறுத்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். அவன்—அவன் அப்படியே…அவன்—அவன் அவர்களை எப்படியும் சபிக்க விரும்பினான். தேவன் அவனிடத்தில் அதைச் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டார், ஆனால் அதே சமயத்தில் அவன் வந்து, அதை மீண்டும் செய்ய விரும்பினான், எனவே தேவன் அவனை தொடர்ந்து செல்ல அனுமதித்தார். தேவன், “போ” என்றார். இப்பொழுது, நினைவிருக்கட்டும், அவர் ஒருபோதும் தம்முடைய சிந்தையை மாற்றவில்லை.

75151 கவனியுங்கள், அவர்களை சபிக்க வேண்டும் என்பதே அவனுடைய வாஞ்சையாயிருந்தது. அவன் மதவெறியர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட ஜனங்களை, அவன் அவர்களை சபிக்க விரும்பினான். அவன் ஒரு பதவியை விரும்பினான். அவன் அவர்களோடு ஏமாற விரும்பவில்லை, எனவே அவன் ராஜாவுக்காக இந்த சிறு செயலை செய்ய முடிந்தால், அப்பொழுது அவனுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று அவன் எண்ணினான். தேவன் அவருடைய சிந்தையை அல்லது அவருடைய வார்த்தையை ஒருபோதும் மாற்றவில்லை. ஆனால் அவர் அவனுடைய இருதயத்தின், உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்குத் தருவார். அவர் அதை வாக்குப்பண்ணினார். அது உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்கு அளிப்பதாக அவர் வாக்குப்பண்ணினார். உங்களுடைய வாஞ்சை தேவனுடைய வார்த்தையாயிருக்கட்டும். உங்களுடைய வாஞ்சை அவருடைய சித்தமாக இருக்கட்டும், உங்களுடைய சொந்த சித்தமாக ஒருபோதும் இருக்க வேண்டாம். அவருடைய சித்தம்! அவர்…நீங்கள் அவரிடத்தில் ஏதாவதொன்றைக் கேட்டால், அவர் அதை உங்களுக்கு அளிக்கவில்லையென்றால், “கர்த்தாவே, உமக்கு நன்றி. எது நல்லது என்பதை நீர் அறிவீர்” என்று கூறுங்கள்.

76152 எசேக்கியா ராஜாவைக் கூட பாருங்கள், அவர் அந்த தீர்க்கதரிசியை அவனிடம் அனுப்பியபோது, தேவன் செய்தது, “உன்னுடைய வீட்டை ஒழுங்குபடுத்து. நீ மரிக்கப் போகிறாய்” என்றார். எசேக்கியா தன்னுடைய முகத்தை சுவற்றின் பக்கம் திருப்பிக் கொண்டு மனங்கசந்து அழுதான். “தேவனாகிய கர்த்தாவே, நீர் என்னைக் குறித்து எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நான்—நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். நான் ஒரு பரிபூரண இருதயத்தோடு உமக்கு முன்பாக நடந்து வந்திருக்கிறேன். நீர் என்னை இன்னும் பதினைந்து ஆண்டுகள் வாழ அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான். 153 “சரி.” தேவன் தீர்க்கதரிசியினிடத்தில் பேசி, “நான் அவன் கூறினதைக் கேட்டேன் என்று நீ திரும்பிப் போய் அவனிடத்தில் சொல்” என்றார். அவன் என்ன செய்தான்? அவன் முழு தேசத்தின் மேலும் அவமானத்தை கொண்டு வந்தான். தேவன் அவனைக் கொன்று போடுமளவிற்கு அவன் தேவனுடைய கோபத்தை மூட்டினான். அது உண்மை. நீங்கள் அதை அறிவீர்கள். தேவன் பேரில் பின்வாங்கிப்போதல். அது தேசம், இராஜா, மற்றும் யாவருக்கும் அவ்வாறாகாதிருப்பது மேலானதாக இருந்திருக்கும், அவன் தேவனுடைய முதல் காரியத்தை எடுத்துக்கொண்டு சென்றிருந்தால் நலமாயிருந்திருக்கும். ஆனால் தீர்க்கதரிசி திரும்பிச் சென்று தேவனுடைய வார்த்தையை அவனிடத்தில் பேச வேண்டியதாயிருந்தபோது, அது தீர்க்கதரிசிக்கு கடினமாகத் தோன்றியது, அவன் கூறின பிறகு மீண்டும் அவனிடத்தில் கூற வேண்டியதாயிற்று. ஆனால் தேவனோ, “போ” என்றார். ஆனால், நீங்கள் பாருங்கள், அது ஒரு அவமானத்தைக் கொண்டு வந்தது. 154 பிலேயாம் என்ன செய்தான்? தேவனுடைய சித்தத்தை அறிந்திருந்தும், அதே சமயத்தில் அவன் விடாமுயற்சியுள்ளவனாயிருந்தான், அவன் எப்படியும், அதைச் செய்யப்போவதாயிருந்தான். அது என்ன செய்தது? கவனியுங்கள். அவர் ஒருபோதும் தம்முடைய சிந்தையை மாற்றவில்லை. அவனுடைய இருதயத்தில் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார்.

77155 உங்களுக்குத் தெரியும், தோமா, ஒரு சமயம் அவனால் அதை நம்ப முடியவில்லை. இல்லை, அவன்—அவன், “சரி, என்னால் அதை நம்ப முடியவில்லை. நான் என்னுடைய கரத்தை எடுத்து, அதை அவருடைய பக்கவாட்டிலும், அதை அவருடைய கரத்தில் ஆணிகள் அறைந்த இடத்திலும் வைக்க முடிந்தால், பாருங்கள், அப்பொழுது, அதன் பின்னரே நான்—நான் அதை விசுவாசிப்பேன்” என்றான். அவர், “தோமா, இங்கே வா. பார்த்தாயா? இப்பொழுது உன்னுடைய கரங்களை இங்கே வை” என்றார். இப்பொழுது, ஓ, இப்பொழுது தோமா, “அது என் ஆண்டவர், என் தேவன்” என்றான். 156 “ஆம், நீ கண்டிருக்கிறாய், நீ இப்பொழுது அதை விசுவாசிக்கிறாய். ஒருபோதும் காணாதிருந்தும் அதே சமயத்தில் விசுவாசிக்கிறவர்களுக்கு, அவர்களுடைய பலன் எவ்வளவு மகத்தானது!” என்றார். ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசினாலொழிய அவர்கள் சில சமயங்களில் பரிசுத்த ஆவியைப் பெறமாட்டார்கள் என்கிறார்கள். நான் நிச்சயமாகவே, அந்நிய பாஷைகளில் பேசுவதை விசுவாசிக்கிறேன். அவர் ஒரு நல்ல தேவன்; அவர் உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்குத் தருவார். ஆனால் நீங்கள் எவ்வளவுதான் அந்நிய பாஷைகளில் பேசி, இந்த வார்த்தையை மறுதலித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் எப்படியும் தவறாயிருக்கிறீர்கள். பார்த்தீர்களா? பாருங்கள், நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதன் மூலம் உள்ளே பிரவேசிப்பதில்லை. நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் காத்துக் கொள்வதன் மூலம் உள்ளே செல்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும்போது, அதுவே பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாகும். பார்த்தீர்களா?

78157 நான் அந்நிய பாஷைகளில் பேசுவதை விசுவாசிக்கிறேன். நான் இன்று காலையில் கூறினது போல, நீங்கள் ஒரு புதிய பாஷையில் பேசுமளவிற்கு, நீங்கள் உயிர்ப்பிக்கப்பட முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். அது சத்தியம் என்பதை, நானே, அறிவேன். அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளை என்பதற்கு, அது அடையாளம் அல்ல. பார்த்தீர்களா? இல்லை, உண்மையாகவே. அவர் கூறவேயில்லை… “அநேகர் என்னிடத்தில் வந்து, ‘கர்த்தாவே, நான் உம்முடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்து இந்த மகத்தான காரியங்களையெல்லாம் செய்யவில்லையா?’ என்று கேட்பார்கள். அவர், ‘அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள், நான் உங்களை ஒருபோதும் அறியேன்’ என்று கூறுவார்.” 158 நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற மறுக்கிறீர்களா? எங்கோ ஏதோ தவறு உள்ளது. ஆம், உண்மையாகவே; அந்தக் காரியங்களில் ஏதாவது ஒன்றை, தேவன் கட்டளையிட்டுள்ள எந்தக் காரியத்தையும் மறுப்பது. ஏதோ தவறு உள்ளது. உங்களுடைய சொந்த மனசாட்சியை ஆராய்ந்து பாருங்கள், வேதம் என்ன கூறியுள்ளது என்று பாருங்கள்—என்ன என்று பாருங்கள். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட யாரையாவது எந்த ஒரு இடத்திலாவது எனக்குக் காண்பியுங்கள். பார்த்தீர்களா? அது அங்கே இல்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், சில சமயங்களில் உங்களுடைய மனசாட்சியின் நிமித்தமாக, நீங்கள், “சரி…” என்று கூறுகிறீர்கள். நீங்கள், “பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும், குட்டைக் கால் சட்டைகளை அணிந்துகொள்ளக்கூடாது என்றும் தேவன் அவர்களிடம் பேசுகிறார், ஆனால், உங்களுக்குத் தெரியும், போதகரே கூறினார்…” என்கிறீர்கள். எனவே அவர்கள் எளிதான வழியையே தெரிந்து கொள்கின்றனர்.

79159 தேவன் அதைக் குறித்து இங்கே என்ன கூறினார் என்பதை அவர்கள் அறிவார்கள். பார்த்தீர்களா? நிச்சயமாகவே, தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார். எனவே அவர்கள்—அவர்கள்—அவர்கள் அதை எப்படியும், செய்ய விரும்புகிறார்கள், பாருங்கள். அவர்கள் ஒரு சாக்குபோக்கைக் கண்டறிய முயற்சிக்கின்றனர். “பாருங்கள், இது மிகவும் மேலானது என்று நான் நினைக்கிறேன். அது—அது அல்ல…காற்று வீசுவதில்லை…” ஆம். ஆனால் ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயிலிருந்து வித்தியாசமாக உடை உடுத்த வேண்டும் என்று தேவன் கூறினார். “ஒரு ஸ்திரீ ஒரு புருஷனின் உடையை அணிந்தால், அது அவருடைய பார்வையில் அருவருப்பாயிருந்தது.” எனவே அது சரியல்ல, ஆம், நீங்கள் அதைச் செய்யக் கூடாது. இல்லை. பார்த்தீர்களா? ஆகையால், அது தவறாகும். 160 ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்கள், “இதைச் செய்யும்படி கர்த்தர் என்னிடம் கூறினார்” என்ற, ஒரு சாக்கு போக்கைக் கண்டறிய முயற்சிக்கின்றனர். அவர் பேசவில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் பாருங்கள், அது அவருடைய பரிபூரண சித்தம் அல்ல. அது அவருடைய அனுமதிக்கும் சித்தமாய் இருக்க வேண்டும். அது என்ன செய்யும் என்று நீங்கள் பார்த்தீர்களா? அது முழு கூட்டத்தையும் மாசுபடுத்தும். அது எல்லா பாளையத்தையும் மாசுபடுத்திவிட்டது.

80161 இங்கே கவனியுங்கள், தேவன் தம்முடைய சிந்தையை, அவருடைய வார்த்தையை ஒருபோதும் மாற்றவில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல தேவன், அது அவருடைய சித்தத்திற்கு விரோதமாயிருந்தாலும், அவர் உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்குத் தருவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், தேவன் மோசேயிடம், “நீ அங்கே போ” என்று இந்த அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியிடம் கூறினார். “அங்கே போய் அந்தக் கன்மலையண்டைப் பேசு” என்றார். அது ஏற்கனவே அடிக்கப்பட்டுவிட்டது. 162 மோசே தன்னுடைய கோபத்தில் அங்கே சென்று, கோலை எடுத்து, “கலகக்காரர்களே, நாங்கள் இந்தக் கன்மலையிலிருந்து தண்ணீரைப் புறப்படப் பண்ணுவோமோ?” என்று கேட்டான். கன்மலையை அடித்தான். தண்ணீர் வரவில்லை. அவன் அதை மறுபடியும் அடித்தான்; அது வந்தது. அது தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாயிருந்தது. அது வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு திட்டத்தையும் முறியடித்தது; கிறிஸ்து இரண்டாம் முறை அடிக்கப்பட வேண்டியதாயிருந்தது. பார்த்தீர்களா? கிறிஸ்து ஒருமுறை அடிக்கப்பட்டார். அது முழு திட்டத்தையும் உடைத்தது. ஆனால் அவர் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தை அவனுக்கு அளித்தார். அதன்பின்னர், அதற்குப் பிறகு, அவன், “பாருங்கள், நாங்கள் உங்களுக்கான தண்ணீரை பெற்றுக் கொண்டோம். ஆம், கலகக்காரராகிய உங்களுக்காகவே, நான் அதை உங்களுக்காக கொண்டு வந்துள்ளேன்!” என்று கூறினான்.

81163 தேவன், “மோசே, இங்கே வா. இங்கே வா. இங்கே மேலே வந்து…நீ ஒரு உண்மையுள்ள ஊழியக்காரனாக இருந்து வருகிறாய்” என்றார். (உயரமான குதிகால் காலணிகளை அணிந்த ஒரு ஸ்திரீயைப் போல, “நீ மேலேறினாய்,” பார்.) “அங்கே நோக்கிப் பார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பார்க்கிறாயா?” “ஓ, கர்த்தாவே!” “ஆனால் நீ அதற்கு மேல் செல்லப் போவதில்லை. இங்கே கன்மலையண்டையிலே, நீ என்னுடைய அனுமதிக்கும் சித்தத்தை ஏற்றுக் கொண்டாய். நீ உன்னையே மகிமைப்படுத்திக் கொண்டாய், பார், என்னை அல்ல. நீ உன்னை பரிசுத்தமாக்கிக் கொண்டாய். நீ என்னைப் பரிசுத்தமாக்கவில்லை. நான் உன்னிடம் செய்யும்படிக் கூறினதை, நீ என்னுடைய மூல வார்த்தையை காத்துக்கொள்ளவில்லை.” ஆனாலும், தண்ணீர் வந்தது. நீங்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்க அவர்கள் சுகமடைவார்கள். உங்களால் தீர்க்கதரிசனம் உரைக்க முடியும், அல்லது அந்நிய பாஷைகளில் பேச முடியும். ஆனால், காரியம் என்னவெனில், அவருடைய மூல வார்த்தையைக் காத்துக்கொள்ளுதல்! நண்பனே, தேவன் தம்முடைய சிந்தையை மாற்றுகிறதில்லை. நீங்கள் அவருடைய கட்டளையை, அவருடைய சித்தத்தை காத்துக் கொள்ள வேண்டும். “ஓ, பாருங்கள், அது சீஷர்களுக்கானதாயிருந்தது.”

82164 அவர் மாறுகிறதில்லை. அவருக்கு இன்னமும் ஒரு சீஷன் இருந்தால், அது அதே கட்டளையாகும். “நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்.” அது ஒருபோதும் மாறாது. அவன் மாற முடியாது. இப்பொழுது, நீங்கள், “பாருங்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது இந்த நாளுக்கானதல்ல” என்று கூறலாம். ஓ, நீங்கள் பிலேயாமியரே! உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள், தேவன் மாறுகிறதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 165 இன்றைக்கு பிலேயாமியர்களைப் பாருங்கள். “ஓ, எனக்குத் தெரியும், வேதத்தில் அவர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தனர், ஆனால், பாருங்கள், எல்லா ஜனங்களும்…” ஜனங்கள் என்ன செய்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை. “நீங்கள் இரட்சிக்கப்படத்தக்கதாக வானத்தின் கீழிருக்கிற மனுஷர்களுக்குள்ளே கொடுக்கப்பட்ட வேறொரு நாமம் இல்லை.” “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மாத்திரமேயன்றி, பாவ மன்னிப்பே இல்லை.” என்ன, நீங்கள் எவ்வளவு நல்லவர், நீங்கள் என்ன செய்கிறீர்கள், அதற்கு இதனோடு எந்த ஒரு காரியமும் கிடையாது. அது தேவனுடைய மூல வார்த்தையாயுள்ளது; நீங்கள் அதனோடு தரித்திருக்க வேண்டும். வ்யூ! சரி. 166 “பலியைப் பார்க்கிலும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதல் உத்தமம்.” சவுல் திரும்பி வந்த அந்த நேரம் உங்களுக்கு நினைவிருக்கும்.

83167 பிலேயாம் விசுவாசத்தின் ஒரு வரத்தை உடையவனாயிருந்து தேவனுடைய மூல வார்த்தையின், பரிபூரணத்திற்கு அதை உபயோகித்திருக்க முடியும். இன்றைக்கு களத்தில் உள்ள அநேக மனிதர்கள், சுகமளிக்கும் வரங்களோடு, அதேக் காரியத்தைச் செய்ய முடிந்தது. இங்கே அநேக மனிதர்கள், ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள், ஜனங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள், ஒரு வரத்தை, அதை தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக உபயோகிக்க முடியும், ஆனால் அவர்கள் அதை செய்வதில்லை. அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்…தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார், எப்படியாயினும், அனுமதிக்கும் சித்தத்தைப் பெறுகிறார்கள். ஆனால் புகழுக்காகவும், இன்பங்களுக்காகவும், தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவும், ஏசா செய்ததுபோல, தங்களுடைய சேஷ்டபுத்திரபாகங்களை ஒரு ஸ்தாபனத்திற்கு விற்றுப்போட்டனர், பாருங்கள். பிலேயாம் செய்தது போல, விற்றுப்போட்டனர். பார்த்தீர்களா? அநேகர் இன்றைக்கு அதேக் காரியத்தையே செய்து கொண்டிருக்கிறார்கள். அது உண்மை என்று நாம் அறிவோம். அவர்கள் தங்களுடைய சேஷ்டபுத்திரபாகத்தை விற்கிறார்கள். ஹூ! ஸ்திரீகள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக உரிமை கொண்டாடி, குட்டை கால்சட்டை அணிகின்றனர்; மனிதன் அவைகளை பிரசங்க பீடங்களில் அனுமதிக்கிறான், தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொண்ட பெண்கள் பிரசங்க பீடங்களில்; தங்கள் முகத்தில் வர்ணம் தீட்டி, மத சம்பந்தமான ஆடைகளை அணிகிறார்கள். சபைக்கு எப்போதும் இருந்ததிலேயே மிகப் பெரிய இடறல்.

84168 அரசியல் அதிகாரங்களில், இராஜ்ஜியத்தின் காலம் என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், யூதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். யூதர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள், ஏனென்றால் அவர்கள் ஒரு தேசமாயிருக்கிறார்கள். தேசங்கள் எங்கே நின்று கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், யூதர்களைக் கவனியுங்கள். சபையானது எங்கே நின்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், ஸ்திரீகளைக் கவனியுங்கள். ஸ்திரீகளின் மத்தியில் உள்ள ஒழுக்கங்களைக் கவனியுங்கள், ஏனென்றால் அவள் சபையின் ஒரு பிரதிநிதித்துவமாயிருக்கிறாள். நீங்கள் பெண்கள் மத்தியில் உள்ள மாசுபாட்டைக் காணும்போது, நீங்கள் சபையில் மாசுபாட்டைக் கண்டறிகிறீர்கள். அவள் ஒரு வர்ணம் பூசப்பட்ட யேசபேலாக மாறினாள், சபையும் சரியாக அதேவிதமாக மாறிவிட்டது. பார்த்தீர்களா? இப்பொழுது, அது உண்மை, அதை நீங்கள் அறிவீர்கள். பார்த்தீர்களா? சபையானது எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், உங்களுடைய ஸ்திரீகளுக்கு மத்தியில் உள்ள ஒழுக்கங்களைக் கவனியுங்கள். காரணம், அவள், சபை ஒரு ஸ்திரீ. நீங்கள் தேசிய அந்தஸ்தை அறிந்துகொள்ள விரும்பினால், யூதர்களைக் கவனியுங்கள்.

85169 கவனியுங்கள், தேவன் பிலேயாமிடம் கூறினது போல, “போகாதே” என்ற வார்த்தையின் முடிவான உண்மையான தீர்மானத்தைக் கேட்ட பிறகு. ஆம், அது என்ன செய்ய வேண்டியதாய் இருந்தது என்பதை, அவனுடைய—அவனுடைய இருதயத்தில் அவர் கண்ட பிறகு, அப்பொழுது அவர் அவனிடத்தில் சொன்னார்; அவர் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தை அவனுக்கு அளித்தார், எனவே அவர், “போ” என்றார். 170 நீங்களும் அதேக் காரியத்தைச் செய்ய முடியும். நீங்கள் சத்தியத்தில் நடக்க விரும்பவில்லையென்றால், நீங்கள் சென்று ஒரு மகத்தான ஊழியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக, நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையின் மேல் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அவர் நிச்சயமாகவே, உங்களை செழிப்படையச் செய்வார். அந்த… அவர் பிலேயாமுக்கு செய்தது போல. அவன் ஒரு வெற்றியுள்ளவனாக இருந்தான், ஆனால் அவனால் அந்த ஜனங்களை சபிக்க முடியவில்லை. அவனால் அதைச் செய்ய முடியவில்லை. காரணம், அவன் ஒவ்வொரு முறையும் சபிக்கத் துவங்கினபோது, அவன் ஆசீர்வதித்தான். பாருங்கள், அவனால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் அவன் தன்னுடைய சாதனையில் செழிப்படைந்தவனாயிருந்தபோது, அவன் அந்த ஜனங்களுக்கு பாலாக்கினூடாக விபச்சாரம் செய்யும்படி கற்பித்தான். அவன் இஸ்ரவேலின் பாளயத்தில் கொண்டு வந்து அவர்களை விவாகம் செய்து, “ஏன், நாம் எல்லோரும் ஒன்றாயிருக்கிறோம். ஏன், நீங்கள் அதே தேவனையே ஆராதித்திருக்கிறீர்கள். நாம் இங்கே ஒரு தீர்க்கதரிசியை பெற்றுள்ளோம், நீங்கள் அங்கே ஒரு தீர்க்கதரிசியை பெற்றுள்ளீர்கள். எங்களுடைய பிதாக்கள் பெற்றிருந்த அதே பலியை, அதே யேகோவாவையே நாங்கள் உடையவர்களாயிருக்கிறோம். இப்பொழுது, நீங்கள் ஏன் வந்து எங்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது?” என்று கேட்டான். வேதம், “அவிசுவாசிகளுக்கு மத்தியில் உங்களை சேர்த்துக் கொள்ளாதீர்கள். அவர்களோடு நுகத்தில் பிணைத்துக்கொள்ளவே, வேண்டாம். அவர்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால், அவர்களிடத்திலிருந்து விலகியிருங்கள்” என்று கூறியுள்ளது. பார்த்தீர்களா? “வெளியே வாருங்கள், பிரித்துக் கொள்ளுங்கள், நான் உங்களை ஏற்றுக் கொள்வேன்” என்று கர்த்தர் உரைக்கிறார். பார்த்தீர்களா? “அவர்களுடைய அசுத்தமான காரியங்களைத் தொடாதேயுங்கள்.” அது உண்மை. வார்த்தைக்கு விரோதமான அவர்களுடைய அசுத்தத்தையும், அதைப் போன்ற காரியங்களையும், அதிலிருந்து விலகியிருங்கள். அதற்கு செவிகொடுக்க வேண்டாம்.

86171 பிலேயாம் அங்கு சென்று ஜனங்களுக்குப் போதிக்கத் துவங்கினான் என்றும், அவன் ஒரு பிழையை உடையவனாயிருந்தான் என்றும் இங்கே நாம் கண்டறிகிறோம். அவன்—அவன் பிலேயாமின் வழியில் ஓடினான், அவன் எப்படி செய்தான், பாலாக்குக்கு கற்பித்தான், இஸ்ரவேல் புத்திரர் விபச்சாரம் செய்தனர். ஒரு வாதை இஸ்ரவேல் தேசத்தையும், ஜனங்களையும் தாக்கினது, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நாளில் மரித்தனர். அவர்கள் எல்லோரும் அங்கே, தேவனுடைய பலிபீடத்திற்கு முன்பாக, ஜெபித்துக் கொண்டிருக்கையில், ஒரு இஸ்ரவேலிய மனிதன் ஒரு மீதியானிய ஸ்திரீயோடு இங்கு வந்து, ஒரு ஸ்தாபன ஸ்திரீயோடு, கூடாரத்திற்குள் சென்றான். அப்பொழுது ஆசாரியனுடைய மகன் அங்கு நடந்து சென்று, ஒரு ஈட்டியை எடுத்து அவர்கள் இருவரையும் கொன்றான். அது தேவனுடைய கோபாக்கினையை நீக்கியது. அது வேதவாக்கியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சரியா? பார்த்தீர்களா?

87172 ஆனால் என்ன நடந்தது? பிலேயாம், அவன் இஸ்ரவேலை பலவீனப்படுத்துவதில் வெற்றி பெற்றான். அவன் என்ன செய்தான்? அவன் அவர்களுடைய பாளையத்தை பலவீனப்படுத்தினான். அவன் சென்று அவர்களுடைய பாளையத்தை பலவீனப்படுத்த தேவன் அனுமதித்தார், அது முழு பாளையத்தையும் மாசுபடுத்தியது. ஏதோ வேத சத்தியம் அல்லாத ஒரு உபதேசம் துவங்கும்போது, அது முழு பாளையத்தையும் மாசுபடுத்துகிறது. கோராகைப் போல ஒரு வித்தியாசமான கருத்துடன் ஒருவர் எழும்பி, “பாருங்கள், இது, அது, மற்றது, நான் ஒரு வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தேன்,” என்கிறார். அது முழு பாளையத்தையும் மாசுபடுத்துகிறது. அதுதான் இன்றைக்கு முழு சபை பாளையத்திற்கும் செய்யப்பட்டுள்ளது. அது உண்மை. 173 அவன் போதித்தது போன்றே, காதேஸ்பர்னேயாவுக்கான முழு பாளையத்தையும் பலவீனப்படுத்தினான், வார்த்தை பலப்பரீட்சை. அவர்கள் காதேஸ்பர்னியாவிற்கு வந்தபோது, அதன்பின்னர், பாளையத்தில் பலவீனம் ஏற்பட்டது. அவர்கள் திரும்பி வருகிறார்கள். அவர்கள் உடனே சென்று விட்டார்கள்… அவர்கள் தேவதூதர்களின் ஆகாரத்தைப் புசித்தனர் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் ஒவ்வொரு இரவும், வெளிப்படுத்தப்பட்ட, தேவனுடைய வார்த்தையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அந்த ஆகாரத்தைப் புசிக்கின்றனர். அவர்கள் கன்மலையிலிருந்து குடிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் செய்து, அற்புதங்களைக் கண்டனர். அவர்கள் மோசேயைக் கவனித்து, அவனுடைய வார்த்தையைக் கண்டனர், அவனுடைய தீர்க்கதரிசனங்கள் யாவற்றையும், கண்டனர். அதன்பின்னர் முடிவிலே அவர்கள் இந்த கள்ள போதகருக்கு செவிகொடுத்து, அவர்கள் மத்தியில் வந்து தவறான போதகத்தைப் போதித்தபோது, அவன் அந்த பாளையத்தை பலவீனப்படுத்தி, அதன் மூலம் செழிப்படைந்தான். அவன் பத்து லட்சம் டாலர் செலவில் கட்டிடங்களைக் கட்டியிருக்கலாம். அவன் பெரிய ஸ்தாபனங்களை உடையவனாய் இருந்திருக்கலாம். அவன் ஆயிரமாயிரம் பேர்களை கூட்டி, மகத்தான கிரியைகளையும், வல்லமையான கிரியைகளையும் செய்து, ஒரு தீர்க்கதரிசியாயிருந்திருக்கலாம். அதெல்லாம் சரிதான், ஆனால், அது தேவனுடைய வார்த்தையோடு இல்லாத வரையில், நீங்கள் அதிலிருந்து விலகி இருப்பது நல்லது. தேவன் தம்முடைய சிந்தையை மாற்றுகிறதில்லை. அவருடைய வார்த்தையோடு சரியாக நிலைத்திருங்கள், ஏனென்றால் அதுதான் முடிவில், வார்த்தைக்கு, வார்த்தைக்கு வார்த்தை வெளிவரப்போகிறது. “ஒருவன் அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால்!” அந்த வார்த்தை நிலைத்திருக்க வேண்டும்.

88174 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். வார்த்தை சோதனை வந்தபோது, அவர்கள் அங்கு சென்று மிகப்பெரிய எதிர்ப்பைக் கண்டபோது, அவர்கள் கண்டிராத மிகப் பெரிய எதிர்ப்பு, அமலேக்கியர்கள் அவர்களுடைய உருவத்தில் பத்து மடங்கு பெரிதாக இருந்தனர்—இருந்தனர். அவர்கள், “நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்படுகிறோம். அவர்களுடைய வேலிகள், அல்லது அவர்களுடைய நகரங்கள் அவைகளைச் சுற்றி ஒரு இரதப் பந்தயத்தை நடத்துமளவிற்கு சுவர்களால் சூழப்பட்டிருக்கின்றன, இரண்டு இரதங்கள், அவைகள் ஓடுமளவிற்கு, சுவர்கள் இருந்தன, பாருங்கள், அவர்களுடைய நகரங்களைச் சுற்றிலும் இருந்தன. ஏன், அவர்களுடைய ஈட்டிகள் நீளமாயிருக்கின்றன, அவைகள் நீளமாக இருக்கின்றன. அவர்கள் ராட்சதர்களாயிருக்கிறார்கள். ஏன், நாம் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்படுகிறோம். நம்மால் அதைச் செய்ய முடியாது” என்றனர். இரண்டு புருஷர்கள் அந்த வார்த்தையின் பேரில் நின்றார்கள், காலேப், யோசுவா, “ஒரு நிமிடம் பொறுங்கள்! இருபது இலட்சம் ஜனங்களாகிய நீங்கள் ஒரு நிமிடம் வாயை மூடுங்கள். நாம் அதைச் செய்யக் கூடியவர்களாய் இருக்கிறோம். பாருங்கள், நாம் அவர்களை விட வல்லமையானவர்களாய் இருக்கிறோம்.” அவர்கள் எதை அடிப்படையாகக் கொண்டிருந்தனர்? தேவன், “நான் உங்களுக்கு தேசத்தைக் கொடுத்திருக்கிறேன். அது உங்களுடையது” என்றார். அவர்கள் அங்கே நின்றனர். ஆனால் ஜனங்களோ மற்ற காரியங்களுக்கு மத்தியில், விவாகம் செய்துகொண்டனர், அவர்களுக்கு மத்தியில் எல்லாவிதமான கோட்பாடுகளும் மற்றும் சடங்குகளும் உடையவர்களாயிருக்க, அவர்கள் பலவீனமானவர்களாகவும், சாரமற்றவர்களாகவும், எந்த வழியாகத் திரும்ப வேண்டும் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் அறியாதவர்களாயிருந்தனர். அது உண்மை. வார்த்தை சோதனை வந்தது.

89175 இருப்பினும், அவர் உங்களுக்கு செய்யும்படியாக அனுமதி வழங்குகிறார், உங்கள் விருப்பத்தை அனுமதிக்கிறார், ஒரு அனுமதிக்கும் சித்தம், உங்கள் இதயத்தில் என்ன இருக்கிறது…அதை அறிந்து, அது அவருக்குத் தெரியும். நீங்கள், “பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம், நான் இன்னின்னதைச் செய்கிறேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறதில்லை. தேவன் ஒவ்வொரு நாளும் என்னை ஆசீர்வதிக்கிறார். நான் ஆவியில் பாடுகிறேன். நான் ஆவியில் நடனமாடுகிறேன். நான்…” அவர் அதை அனுமதிப்பார். தொடர்ந்து செல்லுங்கள். அது உண்மை. ஆனால் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? 176 “நான் குட்டை கால்சட்டை அணிகிறேன், நான் இதைச் செய்கிறேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறதில்லை. என்னுடைய விசுவாசம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது என்பதை நான் அறிவேன், நான் என்ன உடுத்துகிறேன் என்பதில் அல்ல.” ஆனால், அதற்கு ஏதோ ஒன்று உண்டு என்று வேதம் கூறியுள்ளது. பார்த்தீர்களா? நீங்கள் என்ன செய்வீர்கள்? பிலேயாம் செய்ததுபோல, மற்ற ஒவ்வொரு ஸ்திரீகளுக்கும் முன்பாக, நீங்கள் ஒரு இடறலை உண்டாக்குவீர்கள். உங்களுடைய வாலிபப் பெண்களுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஒரு கூட்ட ஒழுங்கீனமான நவநாகரீகக்காரர்களை, அது முற்றிலும் உண்மை, ஒரு கூட்ட வர்ணம் தீட்டப்பட்ட யேசபேல்களையே உடையவர்களாயிருப்பீர்கள். பார்த்தீர்களா?

90177 ஆனால் தேவன் உங்களை செழிக்கச் செய்வார். “ஏன், அவர் என்னை ஆசீர்வதிக்கிறார்.” நான் அதை சந்தேகிக்கவில்லை. அவர் பிலேயாமையும் கூட ஆசீர்வதித்தார். பார்த்தீர்களா? நிச்சயமாகவே அவர் செய்வார். நீங்கள் அவருடைய அனுமதிக்கும் சித்தத்தின்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள், அவருடைய பரிபூரண சித்தத்தின்படி அல்ல. தேவன் தம்முடைய சிந்தையை மாற்றுகிறதில்லை, ஏனென்றால் அவர் உங்களை ஆசீர்வதிக்கிறார். அவர் இஸ்ரவேலரை நாற்பது வருடங்களாக ஆசீர்வதித்தார். அவர்கள் என்ன செய்தனர்? விவாகமான மனைவிகள், குடும்பங்களை வளர்த்து, பிள்ளைகளை முத்தமிட்டு, தங்களுடைய தசமபாகங்களை செலுத்தி, அங்கேயே வாழ்ந்தனர். தேவன் அவர்களை வனாந்திரத்தில் ஆசீர்வதித்து, தொடர்ந்து, மன்னாவினால் போஷித்தார். அவர்கள் ஒவ்வொருவரும் அழிந்துபோயினர், ஏனென்றால் அவர்கள் அவருடைய மூல, அனுமதிக்கும்…அவருடைய மூல சித்தத்தை, அவருடைய வார்த்தையை காத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அவருடைய அனுமதிக்கும் வழியை ஏற்றுக்கொண்டனர். 178 தொடர்ந்து செல்லுங்கள், ஆனால், அவர்கள் காதேசை விட்டுச் சென்றபோது, அவர்கள் அதிக தூரம் பிரயாணம் செய்யவேயில்லை என்பதை, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் வனாந்திரத்தில், சுற்றி சுற்றித் திரிந்தனர். அங்கே, அவர்கள் வெளியே வந்திருக்கக் கூடும், அதற்குப் பிறகு இரண்டு நாட்களில், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இருந்திருக்க முடியும். அவர்கள் நாற்பது ஆண்டுகள் பிரயாணம் செய்தனர், மூல வார்த்தையில் தரித்திருந்த, யோசுவாவும் காலேபும் தவிர, அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தனர்.

91179 ஓ தேவனே, எங்களுக்கு உதவி செய்யும். தேவன் தம்முடைய சித்தத்தை மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய சிந்தையை மாற்றுகிறதில்லை, ஆனால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். நிச்சயமாகவே, அவர் பிலேயாமை ஆசீர்வதித்தார். அவன் அங்கே கீழே என்ன செய்தான்? அவன் முழு பாளையத்தையும் மாசுபடுத்தினான். பாருங்கள், அவர் என்ன கூறினார் என்பதன் பேரில் நீங்கள் நிலைத்திருக்க வேண்டும். அவர் தம்முடைய மூல திட்டத்தை ஒருபோதும் மாற்றவில்லை. 180 இப்பொழுது நீங்கள் இன்றைக்கு களத்தில் உள்ள, பிலேயாம்களைப் பாருங்கள். அப்படியே சுற்றும் முற்றும் பாருங்கள். செழித்தோங்குதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், நிச்சயமாக, தேவனுடைய வரத்தை ஆதாயப்படுத்த உபயோகித்து, ஒவ்வொரு காரியத்தையும் செய்கின்றனர், நிச்சயமாகவே. ஆனால் அது தங்களுடைய கறைபடிந்த போதகத்தினால் முழு தேவனுடைய சபையையும் கறைப்படுத்துகிறது. அது உண்மை. ஒருவர் என்னிடத்தில் கூறினார், அவர், “நீர் எதற்காக இதைச் செய்கிறீர்? நீர் எதற்காக அதைச் செய்கிறீர்?” என்று கேட்டார். நான், “அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா?” என்று கேட்டேன். 181 “ஓ, ஆம். ஆனால்,” அவர், ”என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது உங்களுடைய வேலையல்ல. நீங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். அவர்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறார்கள். ஏன், நீர் பெண்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்றும், ஆண்களுக்கு இதை, அதை, மற்றதை எப்படி செய்ய வேண்டும் என்றும் போதிக்கக் கூடாது” என்றார். “அவர்கள் தங்களுடைய மொழியின் முதல் எழுத்துக்களைக் கூட கற்றுக்கொள்ளாதிருக்கும்போது, நீங்கள் எப்படி அவர்களுக்கு இயற்கணிதத்தைக் கற்பிக்க முடியும்? ஹூ? ஹூ? அவர்கள் தங்களுடைய தொடக்கப் பாடத்தையே ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும்போது, நீர் எப்படி அவர்களுக்குக் அந்தக் காரியங்களைக் கற்பிக்க முடியும்?” பார்த்தீர்களா? நீங்கள் திரும்பி வந்து, நீங்கள் எங்கிருந்து துவங்கினீர்களோ அல்லது நீங்கள் எங்கே விட்டீர்களோ அங்கேயே துவங்கி, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

92182 அதை இன்றைக்கு களங்களில் பாருங்கள். பிலேயாம் தேவனுடைய சபையில், ஒரு வேசியை, விவாகம் செய்து கொண்டது போல, வேசியை தேவனுடைய சபையில் விவாகம் செய்துகொண்டான், இன்றைக்கு இந்த கள்ளப் போதகர்களும் அவ்வாறே உங்களுக்குக் கூற முயற்சிக்கின்றனர். அவர்கள் இந்த ஒவ்வொரு ஸ்தாபனங்களையும் மற்றும் இந்த ஜனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் உள்ள இந்த பழைய வேசியை மணக்கப் போகிறார்கள். இன்றைக்கு அவர்களுடைய பிலேயாம் உபதேசம் சுற்றிப் போய், “நாங்கள் அப்படியே இருக்கிறோம். நாம் யாவரும் கிறிஸ்தவர்கள்” என்கின்றனர். பாதிரிமார்களும், போப்பாண்டவர்களும், இன்னும் யாவரும் ஒப்புரவாகி இதைச் செய்கின்றனர். 183 பிரசங்கியார் கூறினார்…எனக்கும் கூட ஒரு பெந்தெகொஸ்தே பிரசங்கியாரைத் தெரியும், அவர்கள் எல்லோருமே, இப்பொழுது ஒரு வட்டமான கோஷர் அப்பத்தைக் கொடுக்கத் துவங்கினர். அதாவது அஸ்தரோத் , “சந்திரன் போன்ற தெய்வம்” என்று பொருள்படுகிறது, ஒரு கோஷர் அப்பம். “உங்களுடைய மனசாட்சியை புண்படுத்தினால், உங்களுடைய கண்களை மூடிக்கொண்டு அதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகின்றனர். உங்களுடைய கண்களை மூடுவீர்களா? ஒரு வட்ட வடிவ அப்பம், அதன் பொருள் என்ன? நாம் ஒரு நொறுக்கப்பட்ட சரீரத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம், நொறுக்கப்பட்ட, இயேசு கிறிஸ்து; ஒரு வட்டமான சந்திர தேவனல்ல, அஸ்தரோத், அவள் மரியாளின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டாள். ரோம கோஷர் அப்பம் இன்னமும் வட்ட வடிவில்தான் உள்ளது, சந்திர-தெய்வம், தேவதை, தேவன் அல்ல. நமக்கு நிச்சயமாகவே, ஒரு நொறுக்கப்பட்ட கோஷர் அப்பம் உள்ளது. ஓ!

93184 எனவே இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள அந்த மகா வேசியை, இந்த பிலேயாம் போதகர்கள் தங்களுடைய தவறான உபதேசத்தைக் கொண்டு, அந்தவிதமான ஒரு குழப்பத்திற்குள்ளாக சபையை விவாகம் செய்து கொண்டிருக்கின்றனர். கடைசி காலத்தில் பலப்பரீட்சை வரும்போது கவனியுங்கள், இப்பொழுது அதனுடைய பலவீனத்தைப் பாருங்கள். தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட வித்தியாசமான ஸ்தாபனங்கள், ஒன்று ஒரு பக்கமும், ஒன்று மற்ற பக்கமும் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் ஐக்கியத்தைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்; தேவனுடைய மூல திட்டமாகிய, தேவனுடைய வார்த்தையினால் ஆதரிக்கப்படவில்லை. அவர்கள் அதை ஒரு அரசியலாலும், ஒரு ஸ்தாபனத்தாலும் உள்ளே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேவன் தம்முடைய சிந்தையை மாற்றுகிறதில்லை. அவர் தம்முடைய வார்த்தையோடு சரியாக தரித்திருக்கிறார். அவர், “வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் என் வார்த்தை ஒழிந்துபோகாது” என்றார். அது உண்மை. அவர் தம்முடைய மூல வார்த்தையோடு தரித்திருக்கிறார். ஓ, என்னே! 185 அவர்கள் இன்னமும் அதற்கு எதிராக யோசித்துக் கொண்டிருந்தாலும், அப்படியே அதே விதமாகவே செய்தனர், அப்படியே… செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவர் அதை மாற்றமாட்டார். அப்படியே விசுவாசியுங்கள். ஏனென்றால் வானமும் பூமியும் ஒழிந்துபோம்; அவருடைய வார்த்தை ஒருபோதும் தவறிப்போகாது. பார்த்தீர்களா?

94186 நீங்கள் எங்கே விவாகம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று பார்த்தீர்களா? அரசியலையும் மற்றக் காரியங்களையும் பாருங்கள், அவர்கள் எப்படி சபையில் ஒரு அரசியலைக் கொண்டு சபையை ஒன்றாக இணைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்? நாம் அரசியலினால் கிறிஸ்துவோடு இணைக்கப்படவில்லை. நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் சபையோடு, கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து நீங்கள் அறிந்துள்ள விதத்தில், உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவி தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று அடையாளங்காட்ட காரணமாயுள்ளது. அது உண்மை. “ஒருவன் இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால், அல்லது அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப்போடப்படும்.” 187 அதே சமயத்தில், “அவர் செழிப்படைகிறார்” என்று நீங்கள் கூறலாம். செழிப்பு என்பதன் மூலம் நீங்கள் அதை விசுவாசிக்க முடியாது. நீங்கள் செழிப்பினால் தேவனை நியாயந்தீர்க்க முடியாது. உலகம் செழிக்கிறது. பிலேயாம் அதன் மூலம் செழிப்படைந்தான். ஆனால், சகோதரனே, நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்க்கிறீர்கள். அவர் தம்முடைய வார்த்தையை காத்து, அது சத்தியம் என்று அடையாளங்காட்டுகிறார். ஆகையால், நினைவில் கொள்ளுங்கள், நண்பனே, நீ உயிரோடிருக்கும் வரை, நீங்கள் இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்; தேவன் தம்முடைய சிந்தையை மாற்றுகிறதில்லை. அதே சமயத்தில், அவர் ஆசீர்வதிப்பார். அவர் தம்முடைய அனுமதிக்கும் சித்தத்தின்படி உங்களை விட்டுவிடுவார், ஆனால் அவர் தம்முடைய சிந்தையை மாற்றமாட்டார். அவர் தம்முடைய திட்டத்தை மாற்றமாட்டார். அவர் உங்களுக்காக, தம்முடைய வார்த்தையை மாற்றமாட்டார். இல்லை, ஐயா. நீங்கள் மாற வேண்டும். உங்களுடைய அனுபவத்திற்கு இணையான தேவனுடைய வார்த்தையை நீங்கள் கொண்டிருக்க முடியாது; தேவனுடைய வார்த்தையோடு பொருந்தும்படியாக நீங்கள் உங்களுடைய அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். பார்த்தீர்களா? அந்தவிதமாகவே நீங்கள் பெற்றுள்ள… நீங்களோ, “பாருங்கள், நான் ஒரு நல்ல மனிதன். தேவன் இதை, அதை அல்லது மற்றதைச் செய்கிறார்” எனலாம். ஆனால் நீங்கள் அவருடைய வார்த்தையை காத்துக் கொள்கிறீர்களா? “ஓ, பாருங்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அது வெறுமென…இல்லை.” சரி, எங்கோ ஏதோக் காரியம் தவறாய் உள்ளது. தேவன் செய்யப்போகிறார்…ஆம், அவர் உங்களை செழிப்படையச் செய்வார். நிச்சயமாக, அவர் உங்களை…

95188 செழித்துக்கொண்டிருக்கின்ற ஸ்தாபனங்களை கொண்டிருக்க விரும்பாதவர்களே! அவர்கள் தேசம் முழுவதிலும் தங்களுடைய கூடாரங்களை, மகத்தான அருமையான சபைகள், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் பரப்பினர். அவர்கள் பணக்காரர்களாகவும், பணத்தை உள்ளே கொட்டுகிறவர்களாகவும், எல்லாவிடங்களிலிருந்தும் அங்கத்தினர்களாகவும் இருக்கின்றனர். வேதம், “உலகத்தின் ஐஸ்வரியங்களும், மனுஷ ஆத்துமாக்களும் அவளுக்குள் காணப்பட்டன” என்று கூறவில்லையா? ஒவ்வொரு காரியமும், இந்த பழைய வேசியிடம் காணப்பட்ட, அரசியல் மற்றும் ஸ்தாபனம், முழு காரியத்திற்கும் எது தாயாக இருக்கிறது?

96189 ஆனால் தேவனுடைய சிறு குழுவோ அந்த வார்த்தையை மையமாகக் கொண்ட அவருடைய மணவாட்டியாய் உள்ளது. அருமையான பரலோகப் பிதா உங்களை எப்பொழுதுமே அங்கே நிலைப்படுத்திக் காத்துக்கொள்வாராக. அந்த வார்த்தையிலிருந்து நீங்கள் ஒருபோதும் நகர வேண்டாம். நீங்கள் ஆசீர்வதிக்கலாம், நீங்கள்…தேவன் உங்களுடைய வியாதியஸ்தரை சுகப்படுத்தலாம். அவர் உங்களுடைய சுகவீனமான குழந்தையை சுகப்படுத்தக்கூடும். அவர் உங்களுடைய கணவனை, உங்களுடைய மனைவியை சுகப்படுத்தக்கூடும். அவர் உங்களுடைய தாயை, வேறு யாரோ ஒருவரை சுகப்படுத்தக்கூடும். நீங்கள் அவருடைய ஆவியில் குதித்து, மேலும் கீழுமாக நடனமாடலாம். மழையானது நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் ஒரே விதமாகப் பொழிகிறது என்பதை, நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அந்த வித்து அங்கே கிடக்கும்போது, அது ஒன்று நியமிக்கப்பட்டிருக்கும் அல்லது அது நியமிக்கப்படாதிருக்கும். அது நியமிக்கப்பட்டிருந்தால், அது…அது ஒரு கோதுமையாக இருக்குமானால், அது கோதுமையைப் பிறப்பிக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தையாயிருந்தால், அது தேவனுடைய வார்த்தையை உற்பத்தி செய்ய வேண்டும். அது அவ்வாறில்லையென்றால், பாருங்கள், அப்பொழுது அதுவல்ல. பார்த்தீர்களா? இப்பொழுது உங்களுக்கு அது புரிகிறதா?

97190 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதோ நான் ஒன்பது மணிக்கு விட்டுவிடப் போவதாக உங்களிடம் கூறினேன், இதோ பத்து மணிக்கு, இருபது நிமிடங்கள் உள்ளன. ஜனங்களாகிய உங்களில் அநேகர், நீண்ட தூரம் செல்ல வேண்டும். நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை இந்தவிதமாக பற்றிக்கொண்டிருப்பதற்கான காரணம், நான் உங்களிடத்தில் கொடூரமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதனால் அல்ல, ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன். எனக்குத் தெரிந்தவை என்னவெனில், நான் எதையும் மறைத்து வைப்பதில்லை; நான் உங்களுக்கு சத்தியத்தை கூறுகிறேன். 191 நான் வெளியே செல்லும் கூட்டங்களில், நான் இந்த செய்திகளை பிரசங்கிப்பதை நீங்கள் ஒருபோதும் கேட்கவில்லை. இல்லை, இந்த கூடாரத்திற்கு வரும்படி, நான் உங்களுக்கு வாக்குப்பண்ணினேன். இங்கிருந்துதான் நான் என்னுடைய செய்திகளை பிரசங்கிக்கிறேன். நான் இங்கே இன்னும் மூன்று அல்லது நான்கு செய்திகளை வைத்துள்ளேன், அதாவது கர்த்தர் எனக்களித்துள்ளார், நான் அதன் பேரில் வேதவாக்கியங்களை வைத்துள்ளேன், நான் அதை இங்கே பிரசங்கிப்பதைத் தவிர வேறு எங்கும் பிரசங்கிக்கத் துணியமாட்டேன். இங்கிருந்துதான் தேவனுடைய வார்த்தை செல்லத் துவங்கியது. மேலும், தேவன் அதை மாற்றும் வரை, நான் இங்கேயே தரித்திருந்து அதை இங்கேயே கொண்டு வருகிறேன். அது உண்மை. அப்பால் உள்ள கூட்டங்களில், நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறேன், அது போன்ற ஒவ்வொரு காரியமும்; மேலும், பக்கத்திலிருப்பவர்களுக்கு, ஆடுகள் அதைக் கேட்கும்படியாக, காரியங்களை ஒரு சுற்றி வளைப்பில் கூறுகிறேன். அது எதைக் குறித்து பேசுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். மற்றபடி, அது தூண்டிலின் மேல் உள்ள இரையாகும், நீங்கள் பாருங்கள். பகுத்தறிதலில், தேவன் அறிந்திருக்கிறார் என்பதை காண்பிக்க முயற்சிக்கும் அடையாளங்களை நான் காண்பிக்கிறேன், ஜனங்களின் இருதயங்களை அறிந்து, இந்தக் காரியங்களைச் செய்கிறார். அது ஜனங்களை கிளர்ந்தெழச் செய்ய, ஒரு சுவிசேஷ வரமாக இருக்கிறது. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, ஒரு ஒலிநாடா அவர்களுடைய வீட்டிற்குள் செல்கிறது. அப்படியானால், அது அதைப் பெற்றுக் கொள்கிறது. அவன் ஒரு செம்மறியாடாக இருந்தால், அவன் அதனோடு வருகிறான். அவன் ஒரு வெள்ளாடாக இருந்தால், அவன் ஒலிநாடாவை உதைத்து வெளியே தள்ளுகிறான். ஹூ-ஹூ. [சகோதரன் பென் பிரையன்ட், “நீங்களும் கூட” என்கிறார்.—ஆசி.] நீங்கள் பாருங்கள், அது…“நீங்களும், கூட” என்பது உண்மை. பென். அது, அது, முற்றிலும் உண்மை. பென் சில அனுபவங்களைப் பெற்றிருந்தார். சரி. பாருங்கள், அது உண்மை.

98192 நீங்கள் அவருடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதற்கு நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நாம் நீண்ட காலமாக, ஒரு சிறிய பெந்தேகோஸ்தே பாடலைப் பாடுவது வழக்கம்: கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; இயேசுவுக்காக இல்லாதிருந்தால், நான் எங்கேயிருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தார் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஓ, கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தது முதற்கொண்டு நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தது முதற்கொண்டு நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இயேசுவுக்காக இல்லாதிருந்தால், நான் எங்கேயிருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தது முதற்கொண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தது முதற்கொண்டு நான் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தது முதற்கொண்டு நான் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்; இயேசுவுக்காக இல்லாதிருந்திருந்தால், ஓ, நான் எங்கேயிருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தார் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மகிமை! நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா… நாம் அதைப் பாடுவோம். கர்த்தர் உங்களை வெளியே கொண்டு வந்ததற்காக நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? கர்த்தர் உங்களை வெளியே கொண்டு வந்ததற்காக நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? இயேசுவுக்காக இல்லாதிருந்திருந்தால், ஓ, நான் எங்கேயிருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தார் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாருங்கள், கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தது முதற்கொண்டு நான் பாடிக்கொண்டிருக்கிறேன்; கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தது முதற்கொண்டு நான் பாடிக்கொண்டிருக்கிறேன்; இயேசுவுக்காக இல்லாதிருந்திருந்தால், ஓ, நான் எங்கேயிருப்பேன்? கர்த்தர் என்னை வெளியே கொண்டு வந்தார் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அதைக் குறித்து மகிழ்ச்சியடையவில்லையா? அப்பொழுது நாம் ஒளியில் நடப்போம். அந்தப் பாடல் உங்களுக்குத் தெரியுமா? நாம் ஒளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், ஓ, இயேசுவே, உலகத்தின் ஒளி. உங்களுக்கு அது பிடிக்கவில்லையா? நாம் அதை மீண்டும் பாடுவோம். நாம் ஒளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், ஓ, இயேசுவே, உலகத்தின் ஒளி. இது சூரிய உதயமாயிருக்கிறதே! ஒளியின் பரிசுத்தவான்களாகிய நீங்கள் எல்லோரும், இயேசு, உலகத்தின் ஒளி; அவருடைய நாமத்தில் சத்தியத்தையும், இரக்கத்தையும், இயேசு, வெளிச்சம்… இப்பொழுது நாம் அதைப் பாடும்போது நம்முடைய கரங்களை உயர்த்துவோம். ஓ, நாம் இந்த ஒளியில் நடப்போம், இது அப்பேர்ப்பட்ட ஒரு அழகான ஒளியாயுள்ளது, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு அது வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், இயேசு, உலகத்தின் ஒளி. ஒருவருக்கொருவர் கரங்களைக் குலுக்குங்கள். ஓ, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கே அது வருகிறது. நீங்கள் ஒளியின் பிள்ளைகளாயிருக்கிறபடியால் நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? குமாரன் எழுந்திருக்கிறார். இரவும் பகலும் நம்மைச் சுற்றிலும்… “பிள்ளைகளே, ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்.” ஓ, நாம் ஒளியில் நடப்போம், அது மிகவும் அழகானது…(அவருடைய வார்த்தையின் வெளிப்படுத்துதல்.) இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு வருகிறது, இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், அது இயேசு, வார்த்தையின் வெளிச்சம். நீங்கள் எல்லோரும் அதை விசுவாசிக்கிறீர்களா? நாங்கள் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். ஓ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், பாட மறுக்கிறவர்கள் பாடட்டும் நம்முடைய தேவனை ஒருபோதும் அறியாதவர்; ஆனால் பரலோக இராஜாவின் பிள்ளைகள், ஆனால் பரலோக இராஜாவின் பிள்ளைகள், தங்களுடைய சந்தோஷங்களை மேலே கூறலாம், தங்களுடைய சந்தோஷங்களை மேலே பேசலாம். ஏனென்றால் நாம் அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கிறோம்…(மகிமை!) அழகான, அழகான சீயோன்; ஓ, நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். ஓ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், ஓ, அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம்.

99193 உங்களுடைய கைக்குட்டையை வெளியே எடுங்கள். ஒரு நிமிடம், உங்களுடைய கைக்குட்டைகளை எடுங்கள். நாம் கர்த்தருக்கு ஒரு அசைவாட்டும் காணிக்கையைச் செலுத்துவோமாக. அது ஒரு கதிர் அல்ல, ஆனால் அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் மற்ற காரியங்களையும் எடுத்தனர், பாருங்கள். ஓ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், ஓ, அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். ஓ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், ஓ, அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம்.

100194 ஆமென்! ஓ, அது உங்களை நன்றாக உணரச் செய்யவில்லையா? அங்கே பின்னால் இருந்த அந்த பண்டைய பரிசுத்தவான்கள், அங்கே ரோம வேடிக்கை விளையாட்டு வட்டரங்கிற்கு செல்வதற்கு முன்பு, அந்த மலையின் மேல் நடந்து செல்லத் துவங்கி, உங்களுக்குத் தெரியும், அந்த சிறிய சரிவுப் பாதையில், சிங்கங்களின் கெபிக்குள் செல்லும்போது இவ்வாறு பாடுவர்; ஓ, நாம் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், இந்த அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம். சீயோனின் நிலங்கள் விளைவிக்கின்றதோ ஆயிரம் புனிதமான இனிப்புகள் நாம் பரலோக சிங்காசனத்தை அடைவதற்கு முன்பு, நாம் பரலோக சிங்காசனத்தை அடைவதற்கு முன்பு, பொன்னான வீதிகளில் நடந்து, பொன்னான வீதிகளில் நடந்து செல்வோம். நாங்கள் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அது அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம்.

101195 எனக்குப் பிறகு திருப்பிக் கூறுங்கள்: தேவனாகிய கர்த்தாவே, நான் என்னையே உமக்கு புதியதாக பிணையம் வைக்கிறேன். எல்லா அநீதியிலிருந்தும் என்னை சுத்திகரியும். உம்முடைய வார்த்தையில் உள்ள எல்லா சந்தேகத்தினின்றும் என்னை சுத்திகரியும். இந்த ஈஸ்டரிலிருந்து நான் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருப்பேனாக. உம்முடைய வார்த்தையை, நான் என் இருதயத்தில், சுமப்பேனாக. அது என்னுடைய பாதையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிற என் பாதங்களுக்கு ஒரு விளக்காய் இருப்பதாக. இனிமேல் நான் உம்மைப் பின்பற்றுவேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். நாங்கள் சீயோனுக்கு அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், ஓ, அழகான, அழகான சீயோன்; நாம் சீயோனுக்கு மேல் நோக்கி அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம், அந்த அழகான தேவனுடைய நகரம்.

102196 அது உங்களை நன்றாக உணரச் செய்யவில்லையா? நாம் நம்முடைய இருதயங்களில் மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டு, உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறபடியால், நாம் நம்மைப் புதிதாக பிணையம் வைத்துள்ளோம். அது உங்களை நன்றாக உணரச் செய்யவில்லையா? என்னே, ஓ, என்னே! நான் உங்களை, மரிக்காத அன்பினால் நேசிக்கிறேன். கவனியுங்கள். “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். ஏனென்றால் நீங்கள் இதுவரை கண்டிராத, தேவனிடத்தில் அன்பு கூறுவதாக கூறுகிற நீங்கள், நீங்கள் காணும், உங்கள் சகோதரனை நீங்கள் வெறுக்க முடியாது.” பார்த்தீர்களா? எனவே ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள். அப்படியானால் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்யும்போது, நீங்கள் தேவனுக்கு சேவை செய்கிறீர்கள். அது சரியா? “உயிர்ப்பிக்கும் வல்லமையை தங்களுக்குள் பெற்றிருக்கிற இந்த சிறியவர்களுக்கு நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை எனக்கே செய்திருக்கிறீர்கள்.” “உம்மை நாங்கள் எப்பொழுது தேவையுள்ளவராய்க் கண்டோம்? நாங்கள் எப்பொழுது உம்மை சிறைச்சாலையில் சந்தித்தோம்? நாங்கள் எப்பொழுது இந்தக் காரியங்களைச் செய்தோம்?” “நீங்கள் அவர்களுக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்.” 197 அது அற்புதமாயிருக்கவில்லையா? நான் அவரை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா?

103198 ஓ, உங்களுக்கு இன்னும் ஒரு நிமிடம் அவகாசம் இருக்குமானால், நாம் இன்னும் ஒரு பாடலைப் பாட வேண்டும். ஓ, பாருங்கள், நாம் அவைகளை எடுத்துக் கொள்வோம். சரி. சரி, ஐயா. ஓ! இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல். நண்பர்களே, அதை மறந்துவிடாதீர்கள். இப்பொழுது நாம் யாவரும் அதைப் பாடுவோமாக. இப்பொழுது ஒவ்வொருவரும், ஒன்று சேர்ந்து, ஒரே பெரிய இருதயத்தோடு, அதை அவரண்டை கொண்டு செல்வோம். நாம் பெற்றுள்ள நமக்குள்ள எல்லாவற்றோடும், கொண்டு செல்வோமாக. இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துன்பமும் துயரமுமான பிள்ளையே; அது உனக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அளிக்கும், நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்.

104199 இப்பொழுது நினைவிருக்கட்டும், உஷ்ணமான உபத்திரவக் காற்று வீசிக் கொண்டிருக்கிறபோது, ஒவ்வொரு பக்கத்திலும் பிசாசுகள் சவாலிட்டுக் கொண்டிருக்கும்போது, எனக்காக ஜெபியுங்கள், இரவும் பகலும் எனக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் நினைவில் கொள்வேன். நானும் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பேன். உங்களுடைய நல்ல போதகர், சகோதரன் நெவில் மற்றும் அவருடைய கூட்டாளியான சகோதரன் கேப்ஸ் அவர்களோடு நில்லுங்கள். அவர்களுக்கு செவிகொடுங்கள். அவர்கள் உங்களுக்கு ஜீவ வார்த்தையைப் போதிப்பார்கள். நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கவில்லையென்றால், நான் நிச்சயமாகவே அவர்களை இங்கே கொண்டிருக்கமாட்டேன். நான் நிச்சயமாக கொண்டிருக்கமாட்டேன். அவர்கள் செய்தியை விசுவாசிக்கிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் தங்களுடைய அறிவுக்கு எட்டிய வரையில் அதனோடு தரித்திருக்கிறார்கள், நான் இருவர் மேலும் விசுவாசம் வைத்துள்ளேன். அவர்களோடு தரித்திருங்கள். இந்த மற்ற சகோதரர்கள், அவர்கள் தங்களுடைய கூட்டத்தை சுற்றிலும், இன்றிரவு இங்கு நின்றனர், நீங்கள் அவர்களுடைய சுற்றுப்புறத்தில் இருப்பீர்களானால், அவர்களோடு நில்லுங்கள். இன்றிரவு, அவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக, (இதைக் கவனியுங்கள்.) சோதனைகள் உன்னைச் சூழும்போது, ஜெபத்தில் அந்த பரிசுத்த நாமத்தை அப்படியே உச்சரி. விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையானது!) நம்பிக்கை… அன்புள்ள தேவனே, இந்த ஜனங்களை சுகப்படுத்தும். பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அதை அருளும் என்று, நான் ஜெபிக்கிறேன். …ஓ எவ்வளவு இனிமை! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக. நாம் இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. [சகோதரன் பிரான்ஹாம் தேவன் உங்களோடு இருப்பாராக என்பதை மெளனமாகப் பாடுகிறார்—ஆசி.] ஓ, தேவனே, எங்களோடிரும். கர்த்தாவே, எங்களுக்கு உதவி செய்யும். …நாம் இயேசுவின் பாதத்தில் சந்திப்போம்! (நாம் சந்திக்கும் வரை!) நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக.

105200 அது உண்மையாகவே என்னுடைய ஜெபமாயிருக்கிறது. நாம் மீண்டும் சந்திக்கும் வரை, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! இப்பொழுது நான் நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரன் நெவில் இந்த அருமையான சபையை கலைந்து செல்லுமாறு அனுப்பி வைக்க நான் கேட்டுக்கொள்ளப் போகிறேன். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். உங்களைப் போன்ற ஜனங்கள் எல்லோரையும் பெற்றிருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என்னுடைய செய்தியை விசுவாசிக்கும் எவருமே எனக்கு இல்லாமற்போனால், என்னவாயிருக்கும்? நாம் பெற்றுள்ள இந்த செய்திக்காக, மரிக்கக் கூடிய, மக்கள் இங்கிருக்கிறார்கள். தேவன் உங்கள், ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக. என்னுடைய ஜெபங்கள் உங்களோடு உள்ளன. என்னுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் ஒவ்வொருவரோடும் செல்கின்றன. நீங்கள் அந்த உயிர்த்தெழுதலில் ஒரு பாகமாயிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் மறந்து போகாதிருப்பீர்களாக. உயிர்ப்பிக்கும் வல்லமை இப்பொழுது உங்களுக்குள் இருக்கிறது. அது முழுவதுமாக தீர்த்து வைக்கப்பட்டுவிட்டது. நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருக்கிறீர்கள். சகோதரன் நெவில் கலைந்து செல்லச் செய்யும் வரையில், நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 