1 நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. கர்த்தாவே, இந்த அருமையான ஈஸ்டர் காலையில் நாங்கள் இங்கே கூடி வரும்போது, சிறு அரும்புகள் தங்களுடைய வழியில் துளிர்விடுவதை காண்கையில், தேனீக்கள் பறந்து வந்து தங்களுடைய பங்கைப் பெற்றுக்கொள்ள, பறவைகள் தங்களுடைய இருதயங்கள் மகிழ்ச்சியில் வெடிப்பதுபோலப் பாடின, ஏனென்றால் அங்கே ஒரு ஈஸ்டர் உள்ளது. நீர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், இன்றைக்கு, நாங்கள் இந்த நினைவு நாளைக் கொண்டாடுகிறோம். 2 இன்றைக்கு எங்கள் எல்லோருக்கும் மத்தியிலும் ஒரு ஈஸ்டர் உண்டாகட்டும். அப்பொழுது நாங்கள் அவருடைய ஐக்கியத்தில் இருந்தோம் என்றும், இப்பொழுது நாங்கள் அவரோடு உயிரோடெழுந்தோம் என்றும், உன்னதங்களிலே வீற்றிருக்கிறோம் என்றும், அவருடைய ஊழியக்காரர்களாகிய, நாங்கள், அவருடைய வார்த்தையை புரிந்துகொள்வோமாக. 3 இங்கே கூடாரத்தில் நடக்கும் ஆராதனையை ஆசீர்வதியும், அது தேசங்கள் முழுவதும், இந்த தொலைபேசியின் மூலம் செல்கிறது. 4 எல்லா வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் சுகப்படுத்தும். அது அவர்களுக்கான ஒரு ஈஸ்டராயும், சுகவீனத்திலிருந்து பெலனடையும்படியான ஒரு யாத்திரையாயும் இருப்பதாக. பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்தவர்கள், இன்றைக்கு அவர்கள் கிறிஸ்துவினூடாக ஜீவிப்பார்களாக. நாங்கள் உம்மைத் துதிப்போம், ஏனென்றால் நாங்கள் அவருடைய நாமத்தில் இதை வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
25 இந்தக் காலையில் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில் இங்கே திரும்பி வந்துள்ளதையும், இந்த மகத்தான சபையோரோடு, சுற்றிலும் வெளியேயும், ஏராளமான இடங்களிலும் மற்றும் எங்கும் சபை நிறைந்துள்ளதையும், ஒரு அற்புதமான பாக்கியம் என்று நான் நிச்சயமாக கருதுகிறேன். தேசம் முழுவதிலும் தொலைபேசியில் பேசுகிற ஜனங்களாகிய உங்களுக்கு, இது இங்கே ஒரு அழகான காலையாய் உள்ளது. 6 இன்று காலை ஐந்து மணியளவில், சிவப்பு மார்பகத்துடன் இருந்த என்னுடைய சிறிய நண்பன் ஜன்னலன்டை பறந்து வந்து என்னை எழுப்பினான். அதனுடைய சிறு இருதயம் வெடித்து, “அவர் உயிர்த்தெழுந்து விட்டார்” என்று கூறுவது போன்று தென்பட்டது. நான் இந்த சிறு பறவையை எனக்கு ஒரு நண்பனாகவே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் எனக்கு அதைப் பிடிக்கும். 7 அவதைக் குறித்த புராணக்கதை கூறுவது போல, “பழுப்பு நிறமுள்ள ஒரு பறவை பாவம் அவரை வைத்த சிலுவையில் அவர் பாடுபடுவதைக் கண்டது.” உண்மையாகவே, அந்த சிறு பறவைக்கு பாவம் இல்லை. அந்த சிறு பறவைக்காக அவர் மரிக்க வேண்டியதில்லை. “ஆனால் அது சிலுவையில் பறந்து சென்று, தன்னுடைய சிறிய அலகினால் ஆணிகளைப் பிடுங்க முயன்றது. அதனுடைய மார்பகம் முழுவதும் சிவப்பாக இருந்தது.” அந்தவிதமாகத்தான் என்னுடையதும் கூட ஒரு கேடயமாக, அவர் மரித்த இந்த மகிமையான காரியத்தை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
38 விசேஷமாக இந்த தொலைபேசியின் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிற அந்த நண்பர்களுக்கான, நம்முடைய நேரம் இங்கே குறைவாகவே உள்ளது என்பதை உணர்ந்து, சில காலத்திற்கு முன்பு புகைப்படக் கருவி மூலம் எடுக்கப்பட்ட ஒரு—ஒரு புகைப்படத்திற்கு இந்தக் காலையில் நான் உங்களுடைய கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன், இந்தியானாவிலிருந்து அரிசோனாவுக்குச் சென்றபோது, இங்கே கூடாரத்தில் நான் கண்டிருந்த ஒரு தரிசனம்; அங்கே நான் ஒரு கூர்நுனி கோபுர வடிவில் ஏழு தூதர்களை சந்திக்க வேண்டியதாயிருந்தது. நான் அங்கு சென்றபோது, பின்னர் என்ன நடக்கும் என்று அறியாதிருந்தேன், அது என்னுடைய ஜீவியத்தின் முடிவாயிருந்தது என்றும், ஒருவரும் அந்த வெடி சத்தத்தில் நிற்க முடியாது என்றும்; நீங்கள் யாவரும் அந்த சம்பவத்தை அறிந்திருப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அதன்பின்னர் சபினோ கன்யான் என்ற இடத்தில், இந்தவிதமாக ஒரு நாள் காலையில், ஜெபத்தில் இருந்தபோது, என்னுடைய கரத்தில் ஒரு பட்டயம் வைக்கப்பட்டது, “இது வார்த்தை, வார்த்தையாகிய பட்டயம்” என்று கூறப்பட்டது. 9 பின்னர் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே தூதர்கள் தோன்றினர். அதே சமயத்தில் ஒரு பெரிய ஒளிக் கூட்டம் நான் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டு ஆகாயத்தில் முப்பது மைல் உயரத்திற்கு நகர்ந்து சென்று, சுற்றிலும் வட்டமாக, தூதர்களின் செட்டைகளைப் போல, தோன்றின அதே தூதர்களின் கூட்டத்தில் உள்ள ஒரு கூர்நுனி கோபுர வடிவமாக வானத்தில் காணப்பட்டது.
410 வடக்கு அரிசோனாவிலிருந்து, மெக்சிகோ வரை வந்தபோது, விஞ்ஞானம் அந்த புகைப்படத்தை எடுத்தது, “டூசானுக்கு வடகிழக்கே நாற்பது மைல் தூரத்தில்” நான் நின்று கொண்டிருப்பேன் என்று பரிசுத்த ஆவியானவர் கூறினார். அது ஆகாயத்தில் சென்றது, லைஃப் என்ற பத்திரிக்கை புகைப்படங்களை வெளியிட்டு, “வான் கோளங்களில் ஏதோ ஒரு வினோதமானது தோன்றியது, அங்கே ஈரம் இல்லாதிருந்தது, அங்கே எந்த ஆவியாகிவிடுதலும் இருக்க முடியாது; முப்பது மைல் உயரம், இருபத்தேழு மைல்கள் குறுக்கே” என்று கூறியது, அந்த தூதர்கள் இருந்த இடத்திலிருந்து நேராக வந்து கொண்டிருந்தனர். 11 இப்பொழுது, அவர்கள் அறிந்து கொள்ளும்படி கேட்டனர். டூசானிலிருந்த, விஞ்ஞானிகளில் ஒருவர், அதனுடைய முக்கியத்துவத்தையும் அறிய விரும்பினார், ஆனால் நான் அவரிடம் கூறவில்லை. நீங்கள் யாவரும் அதை அறிந்திருக்கிறீர்கள், அது முன்னமே கூறப்பட்டது. ஆனால் அது அவர்களுக்கானதாயிருக்கவில்லை; அது உங்களுக்கானதாயிருந்தது.
512 எனவே அவர் என்னிடத்தில் பேசி, “ஏழு முத்திரைகள் திறக்கப்படும். ஏழு இரகசியங்கள், வேதாகமத்தின் ஏழு விதமான இரகசியங்கள், உலகத்தோற்ற முதற்கொண்டே மறைக்கப்பட்டிருக்கிறவை வெளிப்படும்” என்று கூறினார். நாம், அதே சமயத்தில் ஒரு தாழ்மையான சிறு கூட்டமாயிருந்து, முழு உலகத்தோடு ஒப்பிடும்போது, நாம் இந்த ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்ந்திருக்கிறோம், அந்த இரகசியங்களைக் கேட்டிருக்கிறோம். விவாகம், விவாகரத்து, சர்ப்பத்தின் வித்து, இந்த எல்லா வித்தியாசமான கேள்விகளும் நமக்கு முற்றிலுமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன, மனிதனால் அல்ல, ஆனால் தேவனால், அவர்தாமே, அந்த ஏழு இரகசியங்களை; சபையானது என்னவாயிருந்தது என்றும், அது ஆதியில் கிறிஸ்துவுக்குள் எப்படி இருந்தது என்றும், கடைசி நாளில் அது எப்படி வெளிப்படுத்தப்படும் என்றும் திறந்து கொடுத்தார். 13 இப்பொழுது, இது மேலே செல்லுகையில், நாம் அந்தப் பலகையின் மேல் புகைப்படத்தை வைத்துள்ளோம். ஆனால், லைஃப் என்ற பத்திரிக்கை வெளியிட்டிருந்ததைப் போல, நீங்கள் கவனிப்பீர்களேயானால், அந்த புகைப்படத்தை நான் இங்கே வைத்திருக்கிறேன். ஆனால் இங்கே காணக்கூடிய, என்னுடைய கூட்டத்தார் எப்பொழுதாவது அந்தப் புகைப்படத்தை கூர்ந்து பார்த்தால் நலமாயிருக்கும், பாருங்கள், பாருங்கள், அது இருக்க வேண்டிய விதத்தில் பார்த்திருக்கிறீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன்.
614 வெளிப்படுத்தின விசேஷம் என்னும் பொருளின் பேரில் இந்த தரிசனம் வந்தபோது, நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அங்கே பழைய நியாயாதிபதிகள், வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்தில் நாம் இயேசுவைக் கண்டோம். நாம் ஏழு முத்திரைகளை…இல்லை—இல்லை சபைக் காலங்களைத் திறக்கத் துவங்கினபோது, சரியாகக் கூறினால், ஏழு முத்திரைகள் திறக்கப்படுவதற்கு சற்று முன்பு. கிறிஸ்து “வெண் பஞ்சைப் போன்ற, தலைமுடியோடு” நின்றுகொண்டிருந்தார். நான் அதை உங்களுக்கு விவரித்தேன், அதாவது பண்டைய ஆங்கிலேய நீதிபதிகள், நீண்ட காலத்திற்கு முன்னர் இருந்த நீதிபதிகள், அவர்கள் பதவி பிரமாணம் செய்துகொள்ள, நியாய சங்கத்திற்குச் சென்றபோது, அவர்களுடைய உன்னத அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் தங்களுடைய உன்னத அதிகாரத்தை காண்பிக்கும்படியாக, தங்களுடைய தலைக்கு மேல் ஒரு வெள்ளை போலித் தலைமுடியை அணிந்திருந்தனர்.
715 பாருங்கள், நீங்கள் இந்த விதமாக படத்தை திருப்பி, நோக்கிப் பார்த்தால், கூட்டத்தாரிடத்திலிருந்து அதைக் காணமுடியும், அது கிறிஸ்துவாயிருக்கிறது. அது எவ்வளவு பரிபூரணமாக இருக்க முடியுமோ, அவ்வளவு பரிபூரணமாக இங்கே நோக்கிப் பார்ப்பதைப் பாருங்கள்; உன்னத தெய்வீகத்தன்மை கொண்ட வெண்மையான தலைமுடியை அணிந்து, வானங்களுக்கும் பூமிக்கும் நியாயாதிபதியாக இருக்கிறார். உங்களால் அவருடைய கண்களையும், மூக்கையும், அவருடைய வாயையும் காண முடிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இதிலிருந்து காட்சியை, அவர்கள் அதைக் கொண்டிருந்தவிதமாகத் திருப்புங்கள்; இந்த ஒரு வழியில், அது இருக்க வேண்டிய விதமாகவே உள்ளது. நீங்கள்…உங்களால் அதைக் காண முடிகிறதா? [“ஆமென்.”] அவர் உன்னத நீதிபதி. அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அதுவே மீண்டும் ஒரு பரிபூரண அடையாளங்காட்டலாய், இந்த செய்தி சத்தியமாயிருக்கிறது என்ற ஒரு ரூபகாரப்படுத்துதலாய் உள்ளது. இதுதான் சத்தியம். அது உண்மை. அவரை ஒரு மூன்றாம் நபராக்காமல், ஒரே நபராக ஆக்கினார்! 16 வெள்ளை நிறத்துடன், பாருங்கள், நீங்கள் இருளைக் காண்கிறீர்கள், அவருடைய முகம், அவருடைய தாடி, அவருடைய கண்கள். கவனியுங்கள், அவர் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்…அவரிடத்திலிருந்து இந்த வெளிச்சம் வலது புறத்தில் பிரகாசிக்கிறது, அதை அவர் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார். சிலுவையில், அங்கேதான் அவர் வலது பக்கமாக நோக்கிப் பார்த்தார், அங்கே அவர் பாவியை மன்னித்தார். அவருடைய உயிர்த்தெழுதலின் வெளிச்சத்தில், நாம் இன்னமும் அவருடைய நாமத்தில் புறப்பட்டுச் செல்கிறோம்.
817 இந்தக் காலையில் இந்த நிகழ்வுகளின் பேரில் செலவழிக்க எனக்கு அதிக நேரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அது எந்த சந்தேகத்தின் நிழலுக்கும் அப்பாற்பட்டது, கடந்த முப்பது வருடங்களாக அல்லது முப்பத்தைந்து வருடங்களாக இங்கே இந்த சபையில் நிரூபிக்கப்பட்டு, அதே ஒளியானது ஜெபர்ஸன்வில்லில் 1933-ல் இங்கு இறங்கி வந்து, அந்த வார்த்தைகளை உரைத்தது முதற்கொண்டு, “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன்னுடைய செய்தி இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும்.” நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம், நாம் அதைக் காண்கிறோம். அது ஏன் பூமி முழுவதும் பரவவில்லை என்று நாம் சில சமயங்களில் வியப்புறுகிறோம்; தேவனுக்கு சித்தமானால், எப்பொழுதாவது நாம் அதை விளக்கிக் கூற ஒரு தருணம் உண்டாயிருக்கலாம்.
918 இப்பொழுது நீங்கள் உங்களுடைய வேதாகமங்களைத் திருப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நாம் எப்பொழுதுமே வார்த்தையை வாசிப்பதில் வார்த்தை முதலில் வர வேண்டும் என்று விசுவாசிக்கிறோம். நான் அதை எப்பொழுதும் வாசிக்கிறேன், ஏனென்றால் அது…என் வார்த்தைகள் ஒரு மனுஷனுடைய வார்த்தை, அது தவறிப்போகும்; ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறிப்போக முடியாது. 19 இப்பொழுது நாம் பரிசுத்த வேதாகமத்திலிருந்து ஒரு பாடப்பகுதியை வாசிக்கப் போகிறோம். வேதாகமத்தில் மூன்று இடங்களிலிருந்து நான் வாசிக்கத் தெரிந்து கொண்டதை, நீங்கள் முதலில் திருப்பும்படி நாங்கள் விரும்புகிறோம். அவைகளில் ஒன்று வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரம், 17-ம் மற்றும் 18-ம் வசனங்களில் உள்ளது. இங்குதான் அவர், “அவருடைய தலைமுடி வெண்பஞ்சைப் போன்றும்; அவருடைய பாதங்கள் வெண்கலம் போன்றும்” தோன்றினார். அதன்பின்னர் நீங்கள் உங்களுடைய வேதாகமத்தில் ரோமர் 8:11-யும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இன்று எனது செய்திக்காக, பரிசுத்த வேதாகமத்திலிருந்து, மூன்று இடங்களை வாசிக்க, இன்று காலை நான் தேர்ந்தெடுத்துள்ளேன், உயிர்த்தெழுதலுக்காக கர்த்தர் என் இருதயத்தில் வைத்திருக்கிறார். அதன்பின்னர் நீங்கள் மாற்கு 16:1 மற்றும் 2-யும், கூட, கூற விரும்புகிறேன். நான் என்னுடைய—என்னுடைய பொருளை எடுக்கவுள்ளேன்.
1020 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 1:18-ல், நாம் இந்த வார்த்தைகளை, 17 மற்றும் 18-ல் வாசிக்கிறோம். நான் அவரைக் கண்டபோது, செத்தவனைப் போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என் மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நானே முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன். மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். 21 ரோமர் 8-ம் அதிகாரம் 11-ம் வசனத்தில் நாம் இதை வாசிக்கிறோம். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 22 இப்பொழுது மாற்கு 16-ம் அதிகாரம், உயிர்த்தெழுதலின் அதிகாரம், 16-ம் அதிகாரம், 1-ம் மற்றும் 2-ம் வசனங்கள். ஓய்வு நாளான பின்பு, மகதலேனா மரியாளும், தாயாகிய… யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்த வர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து.
1123 இப்பொழுது, இந்தக் காலையில் என்னுடைய பாடப் பொருளை, நான் ஒரு பாடப் பொருளாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்: இது சூரிய உதயம். ஒரு பாடப் பொருளுக்கு, நான், “உயிர்ப்பிக்கும் வல்லமையை” என்பதை உபயோகிக்க விரும்புகிறேன். 24 இப்பொழுது, உங்களுக்குத் தெரியும், நீங்கள் ஒரு வேளை வானொலியிலும், வெவ்வேறு ஊழியக்காரர்கள் பேசுவதையும் கேட்டிருக்கலாம். நம்முடைய பெருந்தன்மையான சகோதரன் நெவில் இந்தக் காலையில் உயிர்த்தெழுதலின் பேரில் தன்னுடைய ஈஸ்டர் பாடப் பொருளில் பேசினார். நான் அதை ஒரு—ஒரு வித்தியாசமான பாதையில் எடுத்து, வித்தியாசமாயிருப்பதற்கல்ல, ஆனால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக, ஒருக்கால் வேறொரு கோணத்தில் உங்களுக்காக பேசவுள்ளேன். வேத வாக்கியங்களை, ஒவ்வொரு கோணத்திலும் நீங்கள் வேத வாக்கியங்களோடு செல்கையில், அது எப்பொழுதுமே இயேசு கிறிஸ்துவை அறிவிக்கிறது. நீங்கள் அதிலிருந்து எந்த வழியிலும் விலகிச் செல்ல முடியாது. அது எப்பொழுதுமே அவரை அறிவிக்கிறது.
1225 இப்பொழுது, உலகம் இன்றைக்கு ஒரு—ஒரு நினைவு ஆராதனையில், அல்லது, குறைந்த பட்சம், அமெரிக்காவிலும், பூமியின் இந்தப் பக்கத்திலும், இந்தக் காலையில், சபைகளிலும் மற்றும் எல்லா இடங்களிலும், மனிதன் எப்போதும் பெற்றிருந்ததிலேயே மிகப் பெரிய வெற்றியைக் குறித்த ஒரு நினைவுச் சின்னமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறான். 26 நான் நினைக்கிறேன், அவர் மரித்தபோது இரட்சகராக, இல்லை அவர் பிறந்தபோது ஒரு குழந்தையாக இருந்தபோது, அவர் பூமிக்குள் வராதபடிக்கு இங்கிருந்திருக்க முடியாது. அவர் மரித்தபோது, நிச்சயமாகவே அவர் நம்முடைய பாவத்திற்காக பாவநிவிர்த்தி செய்தார். ஆனால் அதே சமயத்தில் அநேக அருமையான சிறு குழந்தைகள் பிறந்து, அநேக மனிதர்கள் ஒரு உண்மையான நோக்கத்திற்காக பாடுபட்டு மரித்துள்ளனர், ஆனால் இந்த நாள் வரைக்கும் தன்னை மீண்டும் எழுப்பக் கூடிய ஒருவரும் ஒருபோதும் இருந்ததேயில்லை.
1327 இப்பொழுது, இது சரித்திரத்தில் மிகவும் மகத்தான வாரமாயுள்ளது, எல்லா நேரங்களிலும் மிகப் பெரிய கொண்டாட்டமாயுள்ளது, இந்த ஈஸ்டரில்தான் அவர் என்ன கூறியிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். மனிதனால் பல காரியங்களை கூற முடியும், ஆனால் அதே சமயத்தில் அது சத்தியம் என்று முழுமையாக நிரூபிக்கப்படும் வரையில் அதை சரியாக விசுவாசிக்க முடியாது. தேவன், “எல்லாவற்றையும் சோதித்துப் பாருங்கள்; நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள்,” என்றார். அவர் தமக்கு செய்யாத ஒரு காரியத்தை நீங்கள் செய்யும்படி அவர் கூறமாட்டார். ஆகையால் நம்முடைய பாவத்திற்காக மரித்த இவர் யார் என்பதை அவர் நிரூபித்தார். 28 இப்பொழுது, இந்த மகத்தான ஈஸ்டர் மலர்கள், ஈஸ்டர் குல்லாக்களின் நினைவு நாள் மட்டுமல்ல, இளஞ்சிவப்பு நிற முயல்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கிறோம், நாம் புனித கொண்டாட்டத்திற்குள் இருந்து வருகிறோம்; அது சரிதான், ஆனால் அந்த விதத்தில் இது உண்மையான காரியமல்ல.
1429 இன்றைக்கு ஜனங்கள் “நாம் வருடத்திற்கு ஒரு முறை வியாழனன்று பாதங்களைக் கழுவ வேண்டும், வெள்ளிக்கிழமையன்று நாம் இராபோஜனம் எடுக்க வேண்டும்,” என்று கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், எல்லா வெவ்வேறு உபதேசங்களைக் குறித்தும்… இந்த நாளா அல்லது அந்த நாளா என்பதைக் குறித்து அவர்கள் வாதிடுகின்றனர், அல்லது அது ஒரு ஓய்வு நாளா அல்லது வாரத்தின் முதல் நாளா அல்லது அல்லது…இந்தக் காரியங்கள் யாவும் வெறுமனே பாரம்பரியமாயிருக்கின்றன. உங்களுக்குள் ஜீவன் இல்லையென்றால், நீங்கள் தவக்காலத்தை உடையவர்களாயிருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அது உங்களுக்கு என்ன நன்மையைச் செய்யும்? அது ஒரு நினைவுச் சின்னமாக மாத்திரமே உள்ளது. அதற்கு எதிராக ஒன்றுமில்லை, ஆனால் அவர்கள் நிச்சயமாகவே தங்களுடைய பாரம்பரியங்களை நிறைவேற்றியுள்ளனர், ஆனால் முக்கியமான காரியத்தை விட்டுவிட்டனர். 30 நீங்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாயிருந்தாலும் அல்லது உங்களுடைய உபதேசத்தில் நீங்கள் எவ்வளவு சரியாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி சாத்தான் கவலைப்படுகிறதில்லை. நீங்கள் அந்த ஜீவனை தவறவிட்டால், நீங்கள் எப்படியும் மேலே வரமாட்டீர்கள். நீங்கள் எவ்வளவுதான் மதசம்பந்தமானவர்களாயிருந்தாலும், எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும், நீங்கள் எத்தனை சபைகளைச் சார்ந்திருந்தாலும், நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தாலொழிய, அது ஒரு பொருட்டல்ல. 31 ஆகையால், தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றால், அவர் அவரை ஒரு நினைவுச் சின்னமாக எழுப்பினாரா? இந்த உயிர்த்தெழுதல் காலை வருடத்தில் ஒரு—ஒரு நாளா அல்லது நாம் இதைக் கொண்டாடுகிற ஒரு குறிப்பிட்ட நாளா? அல்லது நாம் அவருடைய உயிர்த்தெழுதலின் பயனாளர்களா? அது எனக்கு என்ன பொருட்படுத்துகிறது? அது உங்களுக்கு என்ன பொருட்படுத்துகிறது? இப்பொழுது விசுவாசத்தினால் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோம், ஆனால் அதற்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்பொழுது இந்த பாடப்பொருளைக் கண்டறிவோம்!
1532 நான் களைப்புற்றிருந்த காரணத்தால், மருத்துவச்சி எனக்கு ஊசி போட்ட காரணத்தால், என் கை எனக்கு வலித்தது. நீங்கள் அறிந்துள்ளபடி, இப்பொழுது வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் செல்வதால், இன்னும் ஒரு சில நாட்களில், நானும் மகனும் இந்தக் ஊசிகளைப் போட்டுக்க்கொள்ள வேண்டும். மேலும் வாந்தி பேதி, மஞ்சள் காமாலை, மற்றும் ஒவ்வொரு காரியத்தினாலுமே, நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன், அது என்னை சுகவீனமாக்கியது. நீங்கள் மற்ற தேசத்திற்கு செல்வதற்கு முன்பு, இந்த ஊசிகள் போடப்பட வேண்டும் என்று ராயன் வற்புறுத்துகிறான். மேலும் அவர், “ராயனுக்குரியதை ராயனுக்குக் கொடுங்கள், ஆனால் அதன்பின்னர் தேவனுடையதை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார். 33 நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, இந்தக் காலையில் காத்திருக்கும் கூட்டத்தாரிடம் நான் என்ன பேசுவேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்ன கூறுவீர்கள் என்பதற்காக தங்களுடைய ஜீவியத்தை அளிக்கும் மனிதனுக்காகவும், ஸ்திரீகளுக்காகவும், நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். “நான் அதை எப்படி செய்ய வேண்டும்? ஒரு பாடப் பொருளாக நான் எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?”
1634 அதன்பின்னர் நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, கிட்டத்தட்ட உறக்கத்தில் இருந்தபோது, என்னுடைய கதவு வீட்டின் முன்பக்கத்தில் சத்தமிட்டது. எனக்குத் தெரிந்தவரையில் என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. நான் கவனித்தேன். நான் அதை சரியாக கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து, நான் படிப்பதற்காக வைத்திருக்கும் தனி அறையின் கதவு, அது சத்தமிட்டது, யாரோ ஒருவர் தொடர்ந்து கதவை அசைத்துக்கொண்டிருந்தார். நான்—நான் வாசலுக்குச் சென்று கதவைத் திறந்தேன், எனக்கு வியப்பளிக்கும் விதமாக, ஒரு—ஒரு அழகான, சிறிய, மஞ்சள் நிற முடியையுடைய, நீல நிற கண்களையுடைய ஒரு சிறுமி ஈஸ்டர் மலரைப் போல அங்கே நின்றிருந்தாள்; இப்பொழுது இங்கே அமர்ந்து என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
1735 அவள் ஒரு அட்டையை என்னிடம் கொடுத்தாள். அது… நிச்சயமாகவே, நான் வீட்டிற்கு வரும்போது, அங்கே ஈஸ்டர் அட்டைகள் போன்றவை இருக்கும் என்று நான் யூகிக்கிறேன். ஆனால் ஒன்றை மாத்திரமே, வீட்டை விட்டு வெளியேறி, நான் பெற்றுக்கொண்டேன். மேலும் அவள், “சகோதரன் பிரான்ஹாம், இது என்னுடைய தந்தையிடமிருந்தும் என்னிடமிருந்தும் வந்தது” என்றாள். அவள் அதில் “என்னிடத்தில்” என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள விரும்பினாள். அவளுடைய மூட்டு வலியுள்ள தந்தை ஒரு சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்த அட்டையை அனுப்பியிருந்தார். நான் அதை எடுத்து, அந்த அருமையான சிறுமிக்கு நன்றி தெரிவித்தபோது, அவள் திரும்பி கதவைவிட்டு நடந்து சென்றபோது, நான் அட்டையைத் திறந்தேன். 36 இந்த அட்டையிலிருந்தே நான் என்னுடைய பாடப்பொருளை எடுத்தேன். ஏனென்றால் அந்த அட்டையில் பரிசுத்த மாற்கு 16:1 மற்றும் 2, சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின்னர் நான் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்தேன், அதன்பின்னர் “உயிர்த்தெழுதல்,” இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பப்படுவார் என்பதைக் குறித்து, நான் என்னுடைய பாடப் பொருளை எடுத்தேன்.
1837 இப்பொழுது, சூரியன், சூரிய உதயத்திலே. பாருங்கள், உலகம் முற்றிலுமான இருளில் கிடந்த ஒரு நேரம் இருந்தது. அது உருவமற்றதாயும், வெறுமையாயுமிருந்தது. அது முழுவதும் தண்ணீரினால் மூடப்பட்டு, இருண்ட, இருண்ட, இருண்ட சூழ்நிலையில் அங்கே கிடந்தது. அப்பொழுது தேவனுடைய ஆவி அந்தத் தண்ணீரின் மேல் அசைவாடி, “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார். அதைச் செய்ய தேவன் ஒரு காரணத்தை உடையவராயிருந்தார், ஏனென்றால் அந்தத் தண்ணீருக்கு அடியில் அவர் விதைத்திருந்த விதைகள் இருந்தன, அது உயிர்வாழ சூரிய ஒளியைப் பெற்றிருக்க வேண்டும்.
1938 தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையே பூமியில் கொடுக்கப்பட்ட முதல் வெளிச்சம். தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையே பூமியின் மேல் தோன்றின முதல் வெளிச்சம். அவர், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார். வெளிச்சம் உண்டானது. பூமியின் மேல் சந்தோஷமும் ஜீவனும் கொண்ட ஒரு சிருஷ்டிப்பைக் கொண்டு வரும்படியாக, அது இருளை வெளிச்சமாக மாற்றியது. அப்பொழுது, தேவனுடைய ஆவியானது, அது அன்போடும், இரக்கத்தோடும் அசைவாடியபோது, அந்த மகத்தான நாளில், பூமியின் மேல் சிருஷ்டிப்பின் விடியலின் முதல் நாளில்; சூரியன் உதயமாகி, அதனுடைய கதிர்கள் குறுக்கே பறந்து, பூமியிலிருந்து தண்ணீரை வற்றச் செய்து, மேலே ஒரு வளிமண்டலத்தை உண்டாக்கியது. அது முதன்முறையாக ஒரு விதையின் மூலம் பூமிக்கு சந்தோஷத்தையும் ஜீவனையும் கொண்டு வந்தது. அது ஒரு மகத்தான வேளையாயிருந்தது. 39 ஆனால், ஓ, அது அந்த சூரியோதயம், அந்த ஈஸ்டர் காலை சூரியோதயத்தைப் போன்று வேறொன்றுமில்லை. இந்த முறை சூரியன் வானத்தை நோக்கிப் உதித்தபோது, அது முன்பைக் காட்டிலும் ஒரு பெரிய சூரியோதயத்தைக் கொண்டு வந்தது; ஏனெனில் ஆதியில் சூரியோதயத்தோடு வந்த செய்தியைக் காட்டிலும் இந்த சூரியோதயத்தோடு மகத்தான செய்தி வந்தது. இந்த சூரியோதயமானது, “அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்! அவர் வாக்குத்தத்தம் செய்தபடியே, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார்” என்ற ஒரு செய்தியைக் கொண்டு வந்தது.
2040 ஆதியாகமத்தில் முதன் முறையாக சூரியன் உதித்தபோது, அது பூமியின் மேல் ஜீவன், சாவுக்கேதுவான ஜீவன் இருக்கும் என்ற ஒரு செய்தியைக் கொண்டு வந்தது. 41 ஆனால் இந்த முறை சூரியன் உதித்தபோது, இருமுறை சூரிய உதயம் உண்டாயிருந்தது; மற்றொருவர், குமாரன் உயிர்த்தெழுகிறார். அது…சூ-ரி-ய-ன் உதித்தது மாத்திரமல்ல, கு-மா-ர-ன் உயிர்த்தெழுந்திருந்தார் தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்து அனைத்திற்கும் நித்திய ஜீவனைக் கொண்டு வரும்படியாக, அவர் பூமியின் மேல் இருப்பதை முன்னறிவினால் கண்டிருந்தார். 42 இனி முடியாது—தாவரவியல் வாழ்க்கை அதை உயிர்ப்பிக்க சூ-ரி-ய-ன் இல்லாமல் ஆரம்பத்தில் அங்கு வாழ்ந்தது; இன்றைக்கு, தேவனுடைய புத்திரர்கள் பூமியில் இருக்கையில், அவர்களை நித்திய ஜீவனுக்குக் கொண்டு வரும்படியாக, அதற்கு தேவையாயிருக்கிறது கு-மா-ர-னி-ன் வெளிச்சம் உலகத்தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்த அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களை அவர் அறிந்திருந்தார். அவர் அவர்களை உலகத்தோற்றத்திற்கு முன்னரே தமக்குள் தெரிந்துகொண்டார். 43 ஈஸ்டர் காலையன்று, அப்பொழுது, அந்த நேரத்தில் நம்முடைய சரீரங்கள் எங்கோ இந்த மண்ணில் கிடந்தன, ஏனென்றால் நாம் பூமியின் தூளாய் இருக்கிறோம். பரலோகத்தில் ஒரு ஞாபகப் புத்தகம் இருந்தது, அவருடைய தன்மைகள் அவருக்குள் இருந்தன, ஏனெனில் இந்த தேவகுமாரன் உயிர்த்தெழுப்பப்படுவார் என்பதை அறிந்திருந்தார். அது இந்த மகத்தான காலத்திற்கு முன்நியமிக்கப்பட்டிருந்த ஒவ்வொரு குமாரனையும் உயிரோடு எழுப்பும். அது எழுப்பும் என்று அவர் அறிந்திருந்தார். அது தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும், அது முதன்முதலில் விடிந்த நேரத்தில் இருந்ததை விட என்ன ஒரு மகிமையான சூரியோதயமாயிருந்தது! இப்பொழுது, இந்த மகத்தான ஈஸ்டர் முத்திரை உடைப்பின் பேரில்!
2144 இப்பொழுது, இன்றைக்கு நமக்கு ஒரு காசநோய், ஈஸ்டர் முத்திரை உள்ளது. ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் ஒரு செய்தியை அனுப்பி, இந்த மகத்தான நிதியை அல்லது உந்துதலுக்கு ஆதரவளிக்க, காசநோய் முற்றிப்போகாமலிருக்க அல்லது பரவாமல் தடுக்க, மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானமும் ஏதோ ஒரு காரியத்தின் பேரில் பணிபுரிகின்றனர். அவைகள் முத்திரையாயிருக்கின்றன, நாம் ஒருவருக்கொருவர் செய்தியை அனுப்பும்போது, நாம் ஈஸ்டர் முத்திரை என்று அழைக்கிறோம். ஆனால் நாம் செய்தியைப் பெற்றுக் கொள்ளும்போது, அந்த முத்திரை உடைக்கப்படுகிறது, ஏனென்றால் முத்திரையானது உட்புறத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு செய்தியைப் பெற்றுள்ளது. 45 இப்பொழுது, இந்த சூரியோதயத்தின்போது, உண்மையான ஈஸ்டர் முத்திரை உடைக்கப்பட்டது; மரணத்திற்குப் பின் ஜீவனின் இரகசியம் வெளிப்பட்டது. அந்த நேரத்திற்கு முன்பு, நாம் அறிந்திருக்கவில்லை. உலகமானது இருளில் மூழ்கி, சுற்றித் தடவிக்கொண்டிருந்தது, மனிதனுடைய சந்தேகம். கோட்பாடுகள் மனிதனுடைய இருதயத்தினூடாக, பாரம்பரியத்தினால் உண்டாக்கப்பட்டன. மனிதர் விக்கிரகங்களை வழிபட்டனர். அவர்கள் சூரியனை வழிபட்டனர். அவர்கள் எல்லாவிதமான தேவர்களையும் வழிபட்டனர். எல்லாவிதமான ஜனங்களும் உரிமை கோருகின்றனர், அவர்கள் யாவரும் கல்லறைக்குள் சென்றனர், அவர்கள் கல்லறையில் தரித்திருந்தனர். 46 ஆனால் உண்மையான முத்திரை உடைக்கப்பட்டுவிட்டது, நாம் ஜீவிப்பது போல ஒரு காலத்தில் வாழ்ந்தவர், நாம் மரிக்கப் போவது போல மரித்தார், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். என்னே ஒரு காலை! உலகத்தின் சரித்திரம் முழுவதிலும், அதைப் போன்ற ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை. அவர் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருந்தார் என்ற இரகசியமானது தெரியப்படுத்தப்பட்டது.
2247 மேலும் அவர், அந்த காலையில் அவர் வந்தபோது, “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்றார். அவர் உயிர்த்தெழுதலின் பயனாளியாய் மாத்திரமல்ல, ஆனால் தேவனுடைய மகத்தான வாக்குத்தத்தத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த அந்த வித்துகள் யாவரும் அந்த ஜீவனுக்கென்று உயிர்த்தெழுதலின் ஒரு பயனாளியாய் இருந்தனர். ஏனென்றால் அவர், “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்றார். அதுவே முத்திரை உடைக்கப்படுதலாயிருந்தது. அவர் எழுப்பப்பட்ட காரணத்தால், கிறிஸ்துவுக்குள் உள்ள ஒவ்வொருவரும் அவரோடு எழுப்பப்படுவார்கள். 48 இந்த மகிமையான சூரியோதயத்தில், தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபித்திருந்தார், அல்லது ரூபகாரப்படுத்தியிருந்தார். ஜனங்களுடைய சிந்தையில் அசைந்து கொண்டிருந்த எல்லா இருளும், சந்தேகமும் அகற்றப்பட்டிருந்தது, ஏனென்றால் இங்கே அவர் ஒரு காலத்தில் புசித்து, குடித்து, மனிதவர்க்கத்துடன் ஐக்கியங்கொண்டு, “என் ஜீவனைக் கொடுக்க எனக்கு அதிகாரமுண்டு; அதை மீண்டும் எழுப்ப எனக்கு அதிகாரமுண்டு” என்றார். இப்பொழுது அவர் அறிக்கையை அளித்திருந்தார் என்பது மாத்திரமல்ல, ஆனால் அது சத்தியம் என்பதை அவர் நிரூபித்தார். ஓ, அது என்னே ஒரு மகிமையான காரியம்! 49 அதை விசுவாசிக்கிற நம்மாலும் கூட, அது என்ன ஒரு மகத்தான காரியமாயிருந்தது என்பதை கிரகித்துக் கொள்ள முடியாது என்று நான் இந்தக் காலையில் நிச்சயம் நம்புகிறேன். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபடியால், நாமும் ஏற்கனவே மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறோம், ஏனென்றால் நாம் அவருக்குள் இருந்தோம்.
2350 இப்பொழுது கவனியுங்கள். இருள் பூமியை மூடியது போல, சூரியன் உதிக்காமல் விதைகள் வாழ முடியாது, இருள் பூமியை மூடியிருந்தது. இப்பொழுது கு-மா-ர-ன் உயிர்த்தெழுந்தார், இந்த ஒளியானது தேசங்களினூடாகவும், ஜனங்களிடத்திலும் பரவினபோது, எல்லா இருளும் மறைந்து போய்விட்டது, “அவர் இங்கே இல்லை, ஆனால் அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. என்ன ஒரு—என்ன ஒரு அறிக்கை! அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்திருந்தார். அது உண்மையென்று அவர் நிரூபித்திருந்தார், ஏனென்றால் அவர் இப்பொழுது மரணத்தையும், நரகத்தையும், கல்லறையையும் ஜெயித்திருந்தார். 51 பிசாசின் திரித்துவம்: மரணம், நரகம், கல்லறை; ஏனென்றால் சாத்தான் மரணத்தின் ஆக்கியோன், அவன் பாதாளத்தையும், கல்லறையையும் உடையவனாயிருக்கிறான். அது சாத்தானின் திரித்துவமாயிருந்தது, ஒரு காரியத்தினால் உண்டானது, அது மரணமாயிருந்தது. மரணம், நீங்கள் கல்லறைக்குச் செல்கிறீர்கள்; நீங்கள் ஒரு பாவியாக இருப்பதால், நீங்கள் நரகத்திற்கு செல்கிறீர்கள். அந்த ஒரே காரியம், சாத்தானின் திரித்துவம், அது மரணமாயிருந்தது. அது இத்தனை ஆண்டுகளாக மனிதனை சிறையிருப்பில் வைத்திருந்தது.
2452 ஆனால் இப்பொழுது தேவனுடைய உண்மையான திரித்துவம், கிறிஸ்துவில் வெளிப்பட்ட ஒருவராயிருந்து, அவர் ஜீவனாயிருந்து, முத்திரைகளை உடைத்து, சத்துருவை ஜெயங்கொண்டு, ஒரே உண்மையான, ஜீவனுள்ள தேவனாக எழும்பினார். “நான் மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” தேவன் ஒருவராக மனிதனை உண்டாக்கி, நம் மத்தியில் வாசம் செய்து, ஒவ்வொரு சத்துருவையும் ஜெயங்கொண்டார். சாத்தானின் திரித்துவம் ஜெயங்கொள்ளப்பட்டது, தேவனுடைய திரித்துவம் தெரியப்படுத்தப்பட்டது, ஏனென்றால் தேவன் மாத்திரமே ஜீவனை திரும்ப அளிக்க வல்லமை உடையவராயிருந்தார். அவர்தான் அந்த இம்மானுவேல். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். 53 அவர் அங்கு உரிமை கொண்டாடுவதில் ஆச்சரியமில்லை, மத்தேயு 27-ம் அதிகாரம், “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் என் கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும், என்னுடைய சாட்சிகளாயிருக்கும்படி நான் உங்களை அனுப்புகிறேன்.” அவர் மரணம், நரகம், கல்லறை இரண்டையும் ஜெயித்திருந்தார். அவர் அதைச் செய்தது மாத்திரமல்ல; வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா வல்லமையோடும் வெற்றிச் சிறந்து விளங்கினார். பிதாவாக இருந்த யாவும், பரிசுத்த ஆவியானவராய் இருந்த யாவும், அங்கிருந்த யாவும், அவருக்குள் இருந்தன. “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.” மற்ற யாவும் வல்லமையற்றதாயிருக்கின்றன. அவர் அதை ஜெயங்கொண்டிருந்தார்.
2554 இப்பொழுது! அதன்பின்னர், அது மாத்திரமல்ல, அவர் தம்முடைய விசுவாசமுள்ள, தம்முடைய சீஷர்களுக்கு வார்த்தையை அனுப்பினார். “பயப்படாதிருங்கள், நான் மரித்தேன், ஆனாலும், இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் திறவுகோல்களை உடையவனாயிருக்கிறேன்; நான் ஏற்கனவே அதை ஜெயித்துவிட்டேன். இனி பயப்படாதிருங்கள், ஏனென்றால் ஒவ்வொரு முன்நியமிக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்தும் மகிமையான சுவிசேஷத்தின் வெளிச்சம், பூமி முழுவதும் பரவுகிறபோது ஜீவனை அடையும். ஒவ்வொரு காலத்திலும், தேவன் அதற்கு நியமித்திருந்த பயிரையே அது பிறப்பிக்கும்.” அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருந்தார். 55 ஓ, “நான் உயிரோடிருக்கிறேன், இல்லை உயிர்ப்பிக்கப்பட்டேன்” என்பது என்ன ஒரு அற்புதமான காரியமாய் உள்ளது. அந்த வார்த்தை உயிர்ப்பிக்கப்படுதல், என்ற வார்த்தையைக் குறிக்கிறது. கிரேக்க வார்த்தையின் அர்த்தம் அது “மரணத்திற்குப் பிறகு உயிர்ப்பிக்கப்படுதல்” என்பதாகும். 56 பூமிக்குள்ளாகச் செல்லும் விதையைப்—போன்றே, விதையின் ஒவ்வொரு துணுக்கும், அது மரிக்க வேண்டும். விதையின் ஒவ்வொரு துணுக்கும், அது அழுக வேண்டும். அந்த வித்தில் இருந்த, ஜீவனின் ஒவ்வொரு துணுக்கும் மீண்டும் தோன்ற வேண்டியதாயுள்ளது. 57 அவர் “உயிர்ப்பிக்கப்பட்டார்.” அது மாத்திரமல்ல. “என்னை உயிர்ப்பித்த அதே ஜீவனை, என்னை கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வந்த அந்த வல்லமையை, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே நீங்களும் இருப்பீர்கள் என்று உங்களை உயிர்ப்பிக்கும்படிக்கு, நான் அதை உங்களுக்கு அனுப்புவேன்.”
2658 லூக்கா 24-ம் அதிகாரம் 49-ம் வசனம். அவர், “இதோ, பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் தங்கியிருங்கள் அல்லது காத்திருங்கள்” என்றார். அதிலிருந்து எல்லா நன்மைகளையும் அவர் வெளியே எடுத்தார் என்பதை காண்பிக்க மாத்திரமல்ல, ஆனால் அவர் அந்த நன்மைகளையும் பகிர்ந்து கொண்டார். 59 அவர் அந்த முன்குறிக்கப்பட்ட வித்தை மீட்க அல்லது ஜீவனைக் கொண்டுவர வந்தார் அதாவது தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னரே கண்டு, ஜீவபுஸ்தகத்தில் அவர்களுடைய பெயர்களை பதிவு செய்தார். இதோ அவர்கள் பூமியின் மேல், ஒரு நம்பிக்கையுமின்றி இருக்கிறார்கள்; அவர் ஆசீர்வாதமாக இருக்க மாத்திரமல்ல, ஆனால் ஒவ்வொரு முன்குறிக்கப்பட்ட வித்தோடும் ஆசீர்வாதத்தைப் பகிர்ந்து கொள்ளவே வந்தார். இப்பொழுது, அந்த வித்து பூமியில் இல்லாமலிருந்தால், அது ஜீவிக்க முடியாது. அது பூமியில் இருக்க வேண்டியதாயிருந்தது, மேலும் அது முளைப்பிக்கப்பட வேண்டியதாயிருந்தது. அது எவ்வளவு காலம் இருளில் வைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, கு-மா-ர-ன் அதன் மேல் பிரகாசிக்கிறபொழுது அது வெளிவரும். இப்பொழுது கவனியுங்கள், அவர் அதை நம்மோடு பகிர்ந்துகொள்ள வந்தார்.
2760 சுவிசேஷம் நற்செய்தியாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. சுவிசேஷம் என்ற வார்த்தையே “நற்செய்தி” என்று பொருள்படுகிறது. நற்செய்தி, என்ன? ஒரு மனிதன் நம் நிமித்தமாக மரித்திருந்தால், அது நற்செய்தியாகும். கிறிஸ்து பிறந்திருந்தால், அது நற்செய்தியாகும். ஆனால் ஒரு செய்தியும் இல்லை, இது போன்ற செய்திகள் இல்லை, வாக்குத்தத்தம் பண்ணினவர் வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்திவிட்டார் என்றும், “அவர் என்றென்றைக்குமாய் உயிரோடிருக்கிறார் என்றும், மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களைத் தம்முடைய கரத்தில் வைத்திருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது. எல்லா இருளும் அசைக்கப்பட்டது. குமாரன் கல்லறையிலிருந்து எழுந்திருந்தபடியால், அதற்கு மேல் இருளும் காணப்படவில்லை. “பாருங்கள், அவர் வருவார், இல்லையென்றால் அவர் வரலாம்” என்ற ஒன்று இருக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்திருந்தார், சுவிசேஷம், நற்செய்தி!
2861 கவனியுங்கள், சுவிசேஷத்தின் செய்தியே, அவர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை ஜனங்களுக்கு நிரூபிக்கும்படியாய் உள்ளது. “நான் மரித்தோரிலிருந்து எழுந்து விட்டேன் என்று போய் என் சீஷர்களிடத்தில் சொல்லுங்கள், நான் அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு இதை உறுதிப்படுத்துவேன்.” ஓ, தேவனே, இந்த கடைசி நாளில் பூமியெங்கும் வெளிச்சம் எப்படியாய் மீண்டும் உண்டாகும்! “என் சீஷர்களுக்கு நான் அதை நிரூபிப்பேன். நான் மரிக்கவில்லை என்றும், நான் ஒரு பாரம்பரியமல்ல என்றும், ஆனால் நான் ஒரு ஜீவிக்கிற கிறிஸ்து என்றும் போய் அவர்களிடம் கூறுங்கள். நான் அவர்களை சந்திப்பேன். நான் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தேன் என்ற இந்தச் செய்தியை என்னுடைய சீஷர்களிடத்தில் கொண்டு செல்லுங்கள்” என்பதே சுவிசேஷம், நற்செய்தி. நீங்களோ, “அது சரியா?” என்று கேட்கலாம்.
2962 எபிரெயர் 13:8, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. அவருடைய பயனாளிகளாகிய, நாம், இப்பொழுது இந்த ஜீவனின் பயனாளிகளாகிய நமக்குள் அவருடைய ஜீவன் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அந்த ஜீவன், அதைப் போன்ற ஒரு ஜீவியம் ஒருபோதும் வாழ்ந்ததேயில்லை; அவர் தேவனுடைய குமாரனாயிருந்தார். அவர் மரித்தார், அது அதை அடைத்தது; ஆனால் அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தபோது, ஈஸ்டர் காலையிலே, அப்பொழுது அவருடைய ஊழியக்காரர்களாகிய நாம் உலகம் முழுவதிலும் சென்று, ஒவ்வொரு நபருக்கும் இந்த நற்செய்தியைக் கொண்டு வரும்படியாக அவரால் கட்டளையிடப்பட்டிருக்கிறோம் அவர் ஒரு ஜீவனுள்ளவராயிருக்கிறார். நாம் எப்படி வார்த்தையினால் மாத்திரம் அதைச் செய்ய முடியும்? ஏனென்றால் அது, “சுவிசேஷமானது வார்த்தையினால் மாத்திரமல்ல, ஆனால் அவர் உயிரோடிருக்கிறார் என்று நிரூபிக்கும்படியாக, பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதல் மற்றும் வல்லமையினூடாகவே” என்று எழுதப்பட்டிருக்கிறது.
3063 இப்பொழுது, பவுல் குழுக்களில் ஒருவரிடம் பேசினது போல, வேறொரு சுவிசேஷம் இருக்குமானால், “நீங்கள் வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்பியதற்காக நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன்.” அது ஒரு பாவனை விசுவாச சுவிசேஷமேயல்லாமல் வேறொன்றுமில்லை, அந்த நற்செய்தியிலிருந்து விலகி, ஒரு ஸ்தாபன கட்டுக்கதையாக உள்ளது. 64 “நான் பிழைக்கிறபடியால், நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்குள் ஜீவிக்கிறேன், நான் செய்கிற கிரியைகள்,” யோவான் 14:12, “நான் செய்கிற கிரியைகள் உங்களில் என்னை அடையாளங்காட்டும்.” என்னே ஒரு செய்தி! நாம் வேத சாஸ்திரத்தின் இருண்ட உலகத்தை உடையவர்களாயிருந்து வருகிறோம் என்பதில் வியப்பொன்றுமில்லை, ஆனால் சாயங்கால நேரத்தில் வெளிச்சம் மீண்டும் உண்டாகும். சாயங்கால நேரத்தில் ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும். சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.
3165 இப்பொழுது, “அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்,” என்பதே, அனுப்பப்பட்ட செய்தியின் சாராம்சமாகும். நாம் அவருடைய பயனாளிகள், அவரோடு உயிர்த்தெழுதலை பகிர்ந்துகொள்ளுகிற நாம், அவர் உயிரோடிருக்கிறார் என்பதை உலகத்திற்கு நிரூபிப்பதன் மூலம், இதிலிருந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறோம். நாம் அதை வார்த்தையினால் மாத்திரம் செய்ய முடியாது. மனிதனின் பாரம்பரியத்தினால் நாம் அதைச் செய்ய முடியாது. நாம் சுட்டிக் காட்டுகிறதை மாத்திரமே நாம் சரியாக பிரதிபலிக்கிறோம். 66 நம்மில் அநேகர் கிறிஸ்துவண்டை ஜனங்களை கொண்டு செல்வதில்லை என்று நான் இன்றைக்கு பயப்படுகிறேன். நாம் அவர்களை ஒரு சபைக்கு, ஒரு கோட்பாட்டிற்கு கொண்டு செல்கிறோம். ஆனால் நாம் அவர்களை கிறிஸ்துவண்டை கொண்டு செல்ல வேண்டும். அவர் ஒருவர் மாத்திரமே ஜீவனை உடையவராயிருக்கிறார். “குமாரனைப் பெற்றிருக்கிறவன் ஜீவனை உடையவனாயிருக்கிறான்.” 67 மரித்த ஒரு மனிதனுடைய ஜீவன் உங்களுக்குள்ளாக வெளிப்படுத்தப்பட்டால், அவன் வாழ்ந்த அதே ஜீவியத்தை நீங்களும் வாழ்வீர்கள். 68 ஒரு குறிப்பிட்ட மாதிரியாயுள்ள ஒரு மனிதனின் இரத்தத்தை, நீங்கள் ஒரு மனிதனிடமிருந்து அந்த இரத்தத்தை எடுத்து அந்த மனிதனின் இரத்தத்தை மற்றொரு மனிதனுக்குள் மாற்றினால், அவன் முற்றிலும் அந்த மாதிரியான இரத்தமாக இருப்பான். 69 உங்களுக்குள் இருக்கிற ஆவி மரித்ததாக எண்ணப்பட்டால், கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்களே, அது உங்கள் மேல் இருக்கிறதே! ரோமர் 8:11, “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் உங்களில் வாசமாயிருந்தால், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தையும் உயிர்ப்பிப்பார்” என்று கூறியுள்ளது, அதே ஜீவனை, அதே வல்லமைகளை, அதே பயனாளிகளை, அவர் இங்கே பூமியில் தேவனிடத்திலிருந்து பெற்றிருந்தார். அவர் உங்களை மீட்டார், தேவனால் முன்னறிந்த ஒரு வித்து, உலகத்தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருக்கிறது.
3270 அந்த உயிர்த்தெழுதலின் சுவிசேஷ வெளிச்சம், வார்த்தையை உறுதிப்படுத்துதல்! அவர் கிறிஸ்து என்று நாம் எப்படி அறிந்துகொண்டோம்? ஏனென்றால் அவர் எதைக் குறித்து பேசினார் என்பதை அவர் நிரூபித்தார். இந்த நேரத்துக்கான செய்தியை நான் எப்படி அறிந்துகொள்வேன்? தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிரூபிக்கிறார், அவர் அதைக் குறித்து பேசுகிறார். அதுவே அடையாளம், அதாவது நாம் உயிர்த்தெழுதலில் அவரோடு பயனாளிகளாக இருக்கிறோம். அவர் எதைக் குறித்து பேசியிருக்கிறார் என்பதை அவர் நிரூபிக்கிறார். 71 அவர் கிறிஸ்துவுக்குள் என்ன செய்வதாக வாக்குத்தத்தம் செய்தாரோ, அதை அவர் உயிர்த்தெழுதலின் பேரில் நிரூபித்தார். மோசேயின் நாட்களில் செய்வதாக அவர் வாக்களித்ததை, அவர் அதை நிரூபித்தார். ஏனோக்கின் நாட்களில் அவர் வாக்களித்ததை அவர் நிரூபித்தார். அப்போஸ்தலருடைய எல்லா நாட்களிலும், அவர் அதை நிரூபித்தார். 72 இப்பொழுது இந்நாளில், அவர் கூறினதை அவர் நிரூபிக்கிறார், ஏனென்றால் அவர்கள் ஜீவ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த வித்தின் ஒரு பாகமாக இருக்கிறார்கள் அதாவது அவர் மீண்டும் தேவனண்டை மீட்க வந்தார். ஓ, என்னே ஒரு செய்தி!
3373 ஈஸ்டர் காலையில் அவர் உயிரோடெழுந்தது மாத்திரமல்ல, ஆனால் அவருடைய பயனாளிகளும் அவரோடு எழுப்பப்பட்டனர். அவர்…அவர்கள் கிறிஸ்துவுக்குள் அவருடைய சிலுவையில் அறையப்பட்டனர். அவர்கள் அவருடைய உயிர்த்தெழுதலில் அவருக்குள் இருந்தனர். நாம் அவருடைய பயனாளிகள், இருளில் மரித்த பிறகு உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம். 74 அவிசுவாசத்தின் இருளடைந்த உலகம், அங்கே சபைகளும், ஸ்தாபனங்களும், மற்றவைகளும் நம்மை வெளியே இழுத்துக் கொண்டன. நமக்குள்ளாக ஏதோ ஒன்று, “ஓ, நமக்கு தேவன் வேண்டும்! நாம் தேவனுக்காக பசியாயும், தாகமாயும் இருந்து கொண்டிருக்கிறோம்” என்றது. நாம் மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்துக்கள், பிரஸ்பிடேரியன்கள், இன்னும் என்னவோ, அப்பொழுதும் ஏதோக் காரியம் தவறாயிருந்தது, எங்களால் அதை இன்னமும் கண்டறிய முடியவில்லை. திடீரென்று, நாம் இருளில் தடவிக்கொண்டிருந்தபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்துதலில் மகத்தான உயிர்த்தெழுதல் நம்மிடம் வந்தது. 75 அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்துதலாயிருந்தார். “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்.” அவர் அதை, அவருக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் வெளிப்படுத்தினார். அவர் ஈஸ்டர் காலையில் எழுந்தபோது அதை நிரூபித்தார்.
3476 இப்பொழுது, ஒரு காலத்தில் இருளில் தடவிக்கொண்டும், சுற்றிலும் யோசித்துக்கொண்டிருந்தவர்கள், இந்த நாளில் பாதங்களைக் கழுவ வேண்டுமா என்றும், அல்லது ஒரு குறிப்பிட்ட நாளை ஆசரித்தாலும், அல்லது ஒரு குறிப்பிட்ட விதிகளை கடைபிடித்தாலும், அந்தக் காரியங்கள் யாவும் ஒழிந்துபோயின. ஏனென்றால், மனிதன் எப்போதும் செய்திருந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு புத்திசாலித்தனத்தையும் எதிர்த்த ஒரு மகிமையான உயிர்த்தெழுதல் இருந்தது. 77 அந்த நேரம் வரையிலும் தன்னுடைய ஜீவனைக் கொடுத்து, அதை மீண்டும் எடுக்கக்கூடிய ஒரு மனிதன் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்களிடமிருந்த அந்த விஞ்ஞான நிரூபணத்தை, அவர் மறுபடியுமாக எழுப்பி மறுத்தார்.
3578 அவர்கள், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரல்ல” என்றும், “அவருடைய வல்லமை ஒரேவிதமானதல்ல” என்றும், “அவருடைய சுவிசேஷம் ஒரேவிதமானதல்ல” என்று கூறும்போதும், அது ஒரேவிதமானது என்று வேதம் கூறுகிறதே! தேவன் ஒவ்வொரு ஸ்தாபனத்தையும், ஒவ்வொரு கோட்பாட்டையும் எதிர்த்தார், அவர் வாக்குத்தத்தம் செய்தபடியே, அவர் தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு, அவர் உயிரோடிருக்கிறார் என்பதை நமக்கு நிரூபித்திருக்கிறார். 79 நாம் பாவத்திலும், அக்கிரமங்களிலும் உலகத்தில் மரித்த பிறகு உயிர்ப்பிக்கப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலின் பயனாளிகளாய் இருக்கிறோம். “அவர் நம்மை அவரோடு உயிர்ப்பித்து, அவரோடு எழுப்பி, இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் வீற்றிருக்கிறார்.” அவருடைய… 80 அவருடைய ஆவி அவருடைய அதே ஜீவனை பூமியின் மேல் மீண்டும் கொண்டு வருகிறது. “தேவனுடைய ஆவி, கிறிஸ்துவை எழுப்பினதென்றால்”, அந்த சரீரம், அபிஷேகம் பண்ணப்பட்ட சரீரம்; அந்த வித்து பூமிக்குள் விழுந்தபோது, தேவனுடைய ஆவியானவர் அந்த சரீரத்தை அப்படிப்பட்ட ஒரு வழியில் அபிஷேகம் செய்திருப்பாரானால், அவர் அங்கே அவரை இளைப்பாற அனுமதிக்கவில்லை. இல்லை. அவர் அவரை உயிர்ப்பித்து, அவரை எழுப்பினார். “அதே ஆவி,” அதே கிரியைகளினால், அதே வல்லமையினால், அதே அடையாளங்களினால், “உங்களுக்குள்ளாக இருக்கும், அது உங்களையும் கூட எழுப்பும்.”
3681 நான் இங்கே உங்களுக்காக ஒரு சிறு வேத வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். நான் இங்கு எழுதி வைத்துள்ள மற்றொரு வேதவாக்கியத்திற்கு நீங்கள் திருப்பும்படி நான் விரும்புகிறேன். அது உங்களுக்கு ஒரு சிறு உதவியாக இருக்கலாம். அது லேவியராகமம் 23-ம் அதிகாரம் 9-ம் வசனம் முதல் 11-ம் வசனம் வரை காணப்படுகிறது. கூர்ந்து கவனியுங்கள். நியாயப்பிரமாணத்தில், லேவிய பிரமாணத்தில் தேவன் மோசேயிடம் பேசுகிறார். கவனியுங்கள். இந்தக் காரியங்கள் யாவும் இப்பொழுது மாதிரிகள், நாம் இந்த மாதிரியைப் பார்க்க ஒரு சில நிமிடங்களுக்கு இங்கே நிறுத்துவோம். பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோட சொல்ல வேண்டியது…நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய் சேர்ந்து… 82 “நான் உங்களுக்கு அளித்துள்ள, ஸ்தானத்தை, ஸ்தானத்தை. இப்பொழுது நீ இஸ்ரவேல் புத்திரரிடம் பேசு, நான் உங்களுக்கு வாக்களித்துள்ள இந்த குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் வரும்போது, நீங்கள் இந்த தேசத்திற்கு சென்றடையும்போது, நான் உங்களை அழைத்துச் செல்வேன்” என்று கூறினார். இப்பொழுது ஆவிக்குரியதற்கு முன்னடையாளமாக, இங்கே இயற்கையைப் பேசுகிறார். அறுப்பின் முதற்பலனிலிருந்து …(நான் அதைக் குறித்து உங்களுக்குச் சொன்னதை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்), உங்கள் அறுப்பின் முதற்பலனிலிருந்து ஒரு கதிர் கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டு வர வேண்டும். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி ஆசாரியன் அந்த கதிர்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளிலே கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்.
3783 பரிசுத்த சடங்கு ஏதாகிலும் இருக்குமானால், அது ஓய்வு நாளில் வரவேண்டும், அது வாரத்தின் ஏழாம் நாளாயிருந்தது, அது சனிக்கிழமையாயுள்ளது. ஆனால் இந்த நினைவு கூருதலாக செய்யப்படுவதில், வாரத்தின் முதல் நாளில் அசைவாட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? 84 “அந்த கதிர்கட்டு, நீங்கள் நட்ட உங்களுடைய வித்தின் முதற்பலன், அது முதிர்வடைந்து, முதிர்வடைந்தவுடன், நீங்கள் இந்த கதிர்க்கட்டை அறுத்து, அதை ஆசாரியனிடம் கொண்டு செல்லுங்கள். அவன் அதை எடுத்து நீங்கள் அங்கிகரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற, உங்களுடைய அங்கிகரிப்பிற்காக, கர்த்தருக்கு முன்பாக அசைவாட்ட வேண்டும். நீங்கள் உங்களுடைய கதிர்களோடு வந்திருக்கிறீர்கள், அவன் கர்த்தருக்கு முன்பாக அதை அசைவாட்ட…” 85 ஏழாம் நாளாகிய, ஓய்வுநாளில் அல்ல; ஆனால் முதல் நாளை, நாம் ஞாயிற்றுக்கிழமை, ஞா-யி-ற்-று-க்-கி-ழ-மை என்று அழைக்கிறோம். 86 உண்மையாகவே, அது ஒரு—ஒரு ரோம வார்த்தை, அவர்கள் அதை சூரிய தேவனுக்கு சூரிய நாள் என்று அழைத்தனர். ஆனால் அது எவ்வளவாக மாற்றப்படுகிறது! 87 அது இனி சூ-ரி-ய-ன் அல்ல. அது தான் கு-மா-ர-னி-ன் நா-ள், குமாரனின் நாள், (மரித்தோரிலிருந்து எழுந்த தேவனுடைய முதல்வர்) அந்த கோதுமை மணியானது அசைவாடப்பட வேண்டும், அதாவது நாம் அவருடைய வித்தாயிருக்கிறோம்; அது நித்திரையடைந்தவர்களின் முதல் வித்து, வாரத்தின் முதல் நாளிலே அசைவாடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, அவர் எழுந்தார். கை அசைத்து விடைபெற்று, ஜனங்களின் முன்னிலையில் உன்னதத்திற்கு ஏறிச் சென்றார்.
3888 கவனியுங்கள், அது மரித்தோரிலிருந்து எழுந்திருந்த தேவனுடைய முதல் கோதுமை மணியாயிருந்தது, தேவனுடைய முதல் கோதுமை மணியாகும். தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையினால், தேவன் அவருடைய ஜீவனை உயிர்ப்பித்து, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், அவர் நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாயிருந்தார், முதற்பலனாயிருந்தார். அவரே அந்த கதிர்கட்டாயிருந்தார். 89 அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் அந்த கதிர் கட்டை அசைக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அதுவே முதலில் முதிர்ச்சியடைந்தது. மற்றவர்கள் வருவார்கள் என்று விசுவாசித்து, தேவனுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நினைவுச் சின்னமாக அது அசைவாட்டப்பட்டது. அது ஒரு அடையாளமாயிருந்தது.
3990 மேலும், இன்றைக்கு, அவர் தேவனுக்குள்ளாக இருக்க, முழுமையாக முதிர்ச்சியடைந்த தேவனுடைய முதல் குமாரனாயிருந்தார், அவர் பூமியிலிருந்து பிடுங்கப்பட்டு, ஜனங்களின் மேல் அசைவாட்டப்படுகிறார். ஓ, என்னே ஒரு மகிமையான பாடம்! முதற்பலனானவர், ஜீவனின் வல்லமையினால்! இருப்பினும், அவர்—அவர் முன்னடையாளமாக்கப்பட்டார்; அநேக சமயங்களில், அவர் முன்னடையாளமாயிருந்தார் என்பதை, நாம் பின்னர் பார்ப்போம். ஆனால் உண்மையாகவே நித்திரையடைந்தவர்களின் முதற்பலன் இதுவாயிருந்தது. அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜீவனையுடைய வித்தின் மேல் அசைவாட்டப்பட்டார். 91 பெந்தெகொஸ்தே நாளன்று அவர் அசைவாட்டப்பட்டார், “அங்கு பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல வானத்திலிருந்து உண்டானபோது,” பெந்தெகொஸ்தே நாளில் இருந்த பெந்தெகொஸ்தே ஜனங்கள், வரவிருக்கும் ஆசீர்வாதத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். 92 மறுபடியும் அசைவாட்டப்பட, லூக்கா 17:30-ன்படி, கடைசி நாளில், மீண்டும் குமாரனின் நாளில், “அந்த நாளிலே, ம-னு-ஷ கு-மா-ர-ன் வெளிப்படுவார்” அல்லது மீண்டும் ஜனங்களின் மேல் அசைவாட்டப்படுவார் என்பதை, நாம் உணருகிறோம்.
4093 இப்பொழுது, மனுஷகுமாரன் யார்? “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” நாம் பெற்றுள்ள எல்லா உபதேசங்களும், தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுத்துதலும்; தேவனுடைய வார்த்தையினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், நாம் மேற்கோள் காட்டியபடி, அதை இங்கே லூக்காவின்—புத்தகத்தில், அல்லது லூக்கா 17-ம் அதிகாரம் 30-ம் வசனம்; மல்கியா 4-ம் அதிகாரத்தையும், நாம் அறிந்திருக்கிற வெவ்வேறு வேத வாக்கியங்களையும், அந்த வார்த்தை மீண்டும் ஜனங்களின் மேல் அசைவாடப்படுகிறது என்றும், மரித்துப்போன மனிதனின் பாரம்பரியங்கள் மரித்துவிட்டன என்றும், தேவனுடைய குமாரன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நமக்கு மத்தியிலே மீண்டும் உயிரோடிருந்து, நமக்கு ஜீவனை அளித்துக் கொண்டிருக்கிறார் என்றும், இன்றைக்கு நாம் காண்கிறோம்.
4194 கிறிஸ்து எல்லா தீர்க்கதரிசிகளிலிருந்தும், முதலாவதாக உயிர்த்தெழுந்தார்; பல இடங்களில் மாதிரியாகப்பட்டிருந்த போதிலும், அவர் நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாயிருந்தார். மணவாட்டியில், கிறிஸ்துவின் வருகை, சபையை விட்டு வெளியே வருதல், கடைசி நாட்களில் ஒரு கதிர்கட்டு மீண்டும் அசைக்கப்பட வேண்டியதாயிருக்கும். ஓ, என்னே! 95 கதிர்கட்டு அசைவாட்டப்படுதல்! அந்த கதிர்கட்டு என்னவாயிருந்தது? முதலில் முதிர்ச்சியடைந்தது, அது ஒரு கோதுமை என்பதை முதலில் நிரூபித்தது, அது ஒரு கதிர்கட்டு என்று நிரூபித்தது. 96 அல்லேலூயா! நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அது ஜனங்களின் மேல் அசைவாட்டப்பட்டது. முதன்முறையாக மணவாட்டியின் காலம், இருண்ட ஸ்தாபனக் கொள்கையிலிருந்து, உயிர்த்தெழுதல் உண்டாகும், வார்த்தையின் முழு முதிர்ச்சியும் அதனுடைய முழு வல்லமையோடும் மீண்டும் திரும்பி, அவர் அங்கே முன்பு செய்த அதே அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், ஜனங்களின் மேல் அசைவாட்டப்படுகிறார் என்ற, ஒரு செய்தி உண்டாகும்.
4297 “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள்,” என்று தம்முடைய மனைவியினிடத்தில் பேசுகிறார். “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைத்திருக்கிறீர்கள்.” அது என்னே ஒரு உயிர்த்தெழுதலாயிருந்தது! மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவது என்ன ஒரு உயிர்த்தெழுதலாயிருக்கிறது, தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையினால், “கிறிஸ்து இயேசுவுக்குள் பிழைக்கப்பட வேண்டும்!” என்பதாகும். 98 அவர் அவர்களுக்கு அசைவாட்டப்பட்டார். அவர் என்னவாயிருந்தாரோ, அந்த வார்த்தை பெந்தெகொஸ்தே நாளில் அவர்களுக்கு அசைவாடப்பட்டு, அந்த வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது. இப்பொழுது, நான் கூறுவதுபோல, கடைசி நாளில் அது மீண்டும் அசைவாக்கப்பட வேண்டும். இப்பொழுது, உதாரணமாக…
4399 நீங்களோ, “சரி, இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள், சகோதரன் பிரான்ஹாம். ஒரு சபையை நான் அறிவேன்…” பாருங்கள், எனக்கும் கூட தெரியும். பார்த்தீர்களா? 100 ஆனால் இப்பொழுது, உதாரணமாக, நாம் இன்று பிற்பகல் டூசானுக்கு திரும்பிச் செல்லப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோமானால், இப்பொழுது, நாம் ஒவ்வொருவரும் ஒரு…புத்தம் புதியதாக ஒரு—ஒரு பெரிய காடிலாக் காரில் செல்லப் போகிறோமா? எல்லா இருக்கைகளும் மான் தோலினால் செய்யப்பட்டதாகவும், மிகவும் மிருதுவானதாகவும், உட்காருவதற்கு எளிதானதாகவும்; தரை பலகைகள் பட்டாயிருந்தன; காரின் இயக்காழி வெள்ளி முலாம் பூசப்பட்டு, அதன் மேல் முழுவதும் வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த இயந்திரம் சரியாக சரியான இயந்திரமா என்று இயந்திரத்தனமாக சோதிக்கப்பட்டது; சக்கரங்களில்…எண்ணெய் தடவப்பட்டிருந்தும்; டயர்கள் யாவும் துளைக்காததாகவும், வெடிப்பு இல்லாததாகவும் இருந்தன. அவை யாவும் விஞ்ஞான ரீதியாக சோதிக்கப்பட்டிருக்கின்றன. 101 அவைகளின் எல்லா பாகங்களுமே நல்ல நிலைமையில் சரிபார்த்து பொருத்தப்பட்டு, எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளது. அதுதான் இயங்கும் சக்தி, எரிபொருள், ஏனென்றால் அதில் எரியக்கூடிய சக்தி உள்ளது. ஆனால் இப்பொழுது நீங்கள் அவைகளை ஆரம்பிக்கும்போது, அவை இரண்டும் ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், ஆனால் அவைகளில் ஒன்றில் எந்த தீப்பொறியும், எந்த எரியும் வல்லமையும் இல்லை. 102 “பாருங்கள்,” நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், எரிபொருளில்தான் வல்லமை உள்ளது” என்று கூறலாம். ஆனால் எரிபொருளில் எவ்வளவு சக்தி இருந்தாலும் எனக்குக் கவலையில்லை; அந்த வல்லமையை வெளிப்படுத்தும்படியான ஒரு தீப்பொறி அங்கே உண்டாயிருந்தாலொழிய, அது எரிபொருள் என்பதை உறுதிப்படுத்த அங்கே ஒரு வல்லமை இல்லையென்றால், அது தண்ணீராக இருக்கலாம்…
44103 எவ்வளவுதான் வேத சாஸ்திரிகள் உரிமை கோரினாலும், நீங்கள் உங்களுடைய சபையை எவ்வளவு நன்றாக அமைத்திருந்தாலும், நீங்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தாலும், எவ்வளவு வேதாகமத்தைப் போன்று இருந்தாலும்; அந்த கதிர்கட்டு, அந்த வார்த்தையை உயிர்ப்பிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் அந்த நபர் மேல் வரும்வரை! எரிபொருள் வார்த்தையைக் குறிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது; ஆனால் ஆவியின்றி, அது அசையாது. 104 நாம் இயக்கவியலின் பேரில் அதிக அழுத்தம் கொடுத்துவிட்டோம், இயங்கும் சக்தியின் பேரில் ஒன்றுமேயல்ல. அதற்கு தேவனுடைய இயங்கும் வல்லமையும், சபையின் மேல் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையும், இது எரிபொருளாயுள்ளது என்பதை வெளிப்படுத்தவும், நிறைவேற்றவும் தேவைப்படுகிறது. அது ஒரு எரிபொருள் தொட்டியில் இருக்கலாம்; அது இன்னும் தண்ணீராக இருக்கலாம், பாருங்கள். ஆனால் அதனுடைய ஒரே ஆதாரம், இந்த ஜீவனை அதன் மேல் பொருத்துவதேயாகும், அது எரிபொருளா அல்லது இல்லையா என்பதை அது நிரூபிக்கும்.
45105 நீங்கள் பரிசுத்த ஆவியை ஒரு ஸ்தாபனத்தில் சேர்க்க முயற்சிக்கும்போது, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்து… நீங்கள் கூச்சலிடும் சத்தத்தையே பெறலாம்; நீங்கள் உங்களுடைய இயந்திரத்தை முழுவதுமாக கரியினால் பாழாக்கிக்கொள்வீர்கள். 106 ஆனால், ஓ, தேவனுடைய வல்லமையை ஒரு மனிதனுடைய ஜீவியத்திற்குள்ளாக, அல்லது ஒரு ஸ்திரீயினுடைய ஜீவியத்திற்குள்ளாக, அல்லது ஒரு சபைக்குள்ளாக உயிர்த்தெழுப்புவதற்காகவே, பத்தாயிரம் நீர்கரிம வல்லமையுள்ள, தேவனுடைய வார்த்தையும், அதை ஒளிரச் செய்ய ஒரு பரிசுத்த ஆவியும் இருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அது அந்த காடிலாக் காரை சாலையில் ஓடச் செய்வது போல, திரும்பி வந்த பரிசுத்த ஆவியின் இயங்கும் வல்லமையின் கீழ், பெந்தெகொஸ்தே நாளில் ஜனங்கள் மேல் அசைவாடி, அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக்கினார்.
46107 எல்லா தீர்க்கதரிசிகளிடத்திலிருந்தும் முதலாம் கதிர்கட்டு எழும்பியது, அது தேவ குமாரன், எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் ராஜாவாயிருந்தார். 108 சபைகள், சபைகள், மணவாட்டிகள், மணவாட்டிகள், சபைகள், மணவாட்டிகள், மணவாட்டிகள் இருந்திருக்கின்றனர். 109 ஆனால் ஒருவர் வரத்தான் வேண்டுமே! அல்லேலூயா! ஒரு உண்மையான மணவாட்டி வரவேண்டும்! இயக்கவியலைப் பெற்றுள்ள ஒருவர் வர வேண்டும், என்பது மட்டுமல்ல, ஆனால் அதனுடைய இயங்கு சக்தியும் வர வேண்டும். அந்த சபையை ஜீவிக்கச் செய்கிறது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் அசைவாடுகிறது. நாம் அந்த ஸ்தானத்திற்கு வரும் வரை, நாம் அந்த ஸ்தானத்தை கண்டறியும் வரை, சக்கரத்தின் அச்சை பொருத்தும் இடத்தை மெருகேற்றுவது என்ன நன்மையைச் செய்கிறது? அதில் இயங்கும் சக்தியே இல்லாதிருக்கையில், அவளுக்கு ஒரு முகமாற்றம் அல்லது ஒரு சிறிய உருவகப்படுத்துதல் வேலையைக் கொடுப்பதனால் என்ன பயன்? இயக்கவியல் எவ்வளவுதான் சரியென்று நிரூபிக்கப்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல, அது கிரியை செய்ய ஒரு இயங்கு சக்தி இருக்க வேண்டும்.
47110 அதைத்தான் அவர் நிரூபித்தார்! அல்லேலூயா! அதைத்தான் ஈஸ்டர் நிரூபித்தது. அவர் வார்த்தையாக மாத்திரம் இருக்கவில்லை, ஆனால் அவர் தேவனாய், வார்த்தையில், இயங்கும் சக்தியாய் இருந்தார். அது இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை (குளிர்ந்து போய், விறைத்துக்கொண்டு, கல்லறையில் மரித்திருந்ததை) ஜீவனுக்குள்ளாக அசைத்து, மீண்டும் எழும்பி, கல்லை உருட்டிப்போட்டது. சூரியன் மரித்துப்போய்விட்டதாகக் கூறின வரைக்கும், “மரித்திருந்த அவர் நானே” என்றும், அவர் மரித்துப்போய்விட்டார் என்று சந்திரனும் கூறினது, அவர் மரித்துப்போய்விட்டார் என்று நட்சத்திரங்களும் கூறின. அவர் மரித்துவிட்டார் என்று எல்லா இயற்கையும் கூறின. இப்பொழுது முழு உலகமும் அவர் மீண்டும் உயிரோடிருக்கிறார் என்பதை அங்கீகரிக்க வேண்டும். அவர் தேவனுடைய வார்த்தையின் இயக்கவியலாக மாத்திரமல்ல, அவர் அதை நிரூபிக்கும்படியான இயங்கு சக்தியாகவும் இருந்தார். 111 அவர் மணவாளனாயிருக்கிறபடியால், மணவாட்டி வெளியே வர வேண்டும், ஏனென்றால் அது அவருடைய பாகமாயிருக்கிறது. அது மணவாட்டியைக் குறித்து வேறு எவரேனும் கூறியுள்ள எல்லா வெளிப்பாடுகளும் நிறைவேறுதலின் வெளிப்படுத்துதலாக மாத்திரமே இருக்க முடியும்; அது வெளிப்பட மாத்திரமே முடியும். அது மணவாளனிடமிருந்து வித்தியாசமான ஏதோ ஒரு காரியத்தைச் செய்தால், அது மணவாட்டி அல்ல. ஏனெனில், அவள் அவருடைய மாம்சத்திலிருந்து மாம்சமாயும், அவருடைய எலும்பின் எலும்புமாயுமிருக்கிறாள்; அவருடைய ஜீவனின் ஜீவன், அவருடைய வல்லமையின் வல்லமை! அவள் அவரே! புருஷனும் ஸ்திரீயும் ஒன்றாயிருப்பதால், ஸ்திரீ அவனுடைய பக்கவாட்டிலிருந்து எடுக்கப்பட்டபோது, அவள் அவரிலிருந்து ஒரு ஆவியை, பெண்மைக்குரிய ஆவியை எடுத்துவிட்டிருந்தாள். அவருடைய பக்கவாட்டிலிருந்து வந்த மாம்சமானது, மனைவியாகிய, இயக்கவியல் மற்றும்இயங்கு சக்தி இரண்டையுமே உண்டாக்கியது. அவருடைய ஆவியும், அவருடைய மாம்சமும் ஒன்று சேர்ந்து, இயக்கவியலையும், இயங்கு சக்தியையும் உண்டாக்கினது. சபையோ அல்லது ஜனங்களோ…
48112 இந்த ஈஸ்டர் முயல்கள், சடங்குகள், பெரிய சபைகள், மற்றும் நேர்த்தியான ஆடம்பரங்கள் யாவும் தவறிப்போய் ஒழிந்துபோகும். 113 அவர் செய்த காரியங்களைச் செய்யும்படி, அவரைத் தூண்டின தேவனுடைய ஆவியானவர்; அந்த சபை இயக்கவியலாகவும் மற்றும் இயங்கு சக்தியாகவும் மாறும் வரை! அவர் பதினாறு உருளைகளையுடைய இயந்திரத்தை இயக்கினால், மணவாட்டியும் அவ்வாறே இருப்பாள். ஆமென்! ஏனென்றால் அவர் யோவான் 14:12-ல், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். உலகம் அதற்கு எதிர்த்து நிற்க முடியாதபடிக்கு, நான் அவனுடைய இயக்கவியலில், என்னுடைய இயங்கு சக்தியைக் குறித்து ஒரு பொறுப்பை அவனுக்குக் கொடுப்பேன்; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். அதுதான் ஈஸ்டர் செய்தி, இயங்கும் சக்தியும், இயக்கவியலும் ஒன்று சேர்ந்துள்ளது! இயங்கும் சக்தியில்லாத இயக்கவியல், நல்லதல்ல; இயக்கவியல் இல்லாமல் இயங்கும் சக்தியும் இல்லை. 114 நீங்கள் கூச்சலிடலாம், சத்தமிடலாம், மேலும் கீழும் குதிக்கலாம், நீங்கள் விரும்புகிற எல்லாவற்றையும் செய்து, இந்த வார்த்தையை மறுதலிக்கலாம், அது எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் துப்பாக்கியை சுழற்றிக் கொண்டிருக்கிறீர்கள்…அங்கே தீப்பொறியை எரிய வைக்க வேண்டும், ஆனால் அதை எரிக்க எரிபொருள் இல்லை. 115 அவர்கள் ஒன்று சேரும்போது மாத்திரமே அது கிரியை செய்யும். ஆமென்! எனவே, ஒன்று அசையாமல் அமர்ந்திருக்கும், மற்றொன்று மேலே செல்லும். அது மாத்திரமே அதற்குரிய காரியமாகும். அதே சமயத்தில் அவை இரண்டும் ஒரே மாதிரியாகக் காணப்படலாம், இரண்டுமே சபைகள் என்று உரிமை கோரலாம், இருவரும் மணவாட்டி என்று உரிமை கோருகின்றனர். ஆனால் ஒன்றோ இயக்கவியலையும் மற்றும் இயங்கு சக்தியையும் உடையதாயிருக்கிறது, அவர் கூறியது சத்தியமாயிருக்கிறது என்பதை, அது நிறைவேற்றுகிறது. 116 இயங்கும் சக்தி வரும் வரையில் அது எவ்வளவுதான் நல்ல இயக்கவியலாயிருந்தாலும் அது அசையாது. இயங்கு சக்தி வரும்போது, அந்த அக்கினியானது அந்த நீர் கரிமம் என்ற எரிபொருளோடு இணைக்கப்படுகிறது. அது வெடிக்கும்போது, அது ஒரு எரிபொருளை உண்டாக்குகிறது, அந்த எரிப்பு ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு அசைவையும் உண்டாக்குகிறது, ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதுதான் உயிர்த்தெழுதல். அதுதான் உண்மையான தேவனுடைய வல்லமை, இயங்கு சக்தியோடு கூடிய இயக்கவியல். கவனியுங்கள், “ஆவியே உயிர்ப்பிக்கிறது.” அது—அது எரிகிற தீப்பொறியாகும். அது எரிகிற வாயு அல்ல; அந்த தீப்பொறி தான் அந்த வாயுவை சுடுகிறது. பார்த்தீர்களா?
49117 “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது; என்னோடே எல்லாக் காரியங்களையும் உங்களால் செய்ய முடியும்” என்றார். அவர் வார்த்தையாயிருக்கிறபடியால், அது ஜீவனுள்ள பிதாவாயிருக்கிறது. “பிதா என்னை அனுப்பினார், எனவே நான் உங்களை அனுப்புகிறேன். பிதாவானவர் என்னை சுடச் செய்து, எல்லாவற்றிற்குள்ளும் என்னைத் தள்ளியுள்ளதுபோல, நான் தேவனுக்குப் பிரியமாயிருக்கிறதை மாத்திரமே செய்கிறேன். இப்பொழுது, அவர் என்னை அனுப்பினது போல, அதேவிதமான இயங்கு சக்தியோடு நானும் உங்களை அனுப்புகிறேன். அதை இயக்க அதே இயங்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த அடையாளங்கள் இயக்கவியலை பெற்றிருப்பதாக உரிமை கோருகிறவர்களை பின் தொடரும். இயங்கும் சக்தி அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும்.”
50118 பவுல், “சுவிசேஷமானது வார்த்தையில் மாத்திரமல்ல, எரிபொருளினூடாக மாத்திரமும் நம்மிடம் வரவில்லை, ஆனால் தீப்பொறியினூடாகவும் கூட” என்றான். அது இயங்கச் செய்யும். அங்குதான் காரியம். அது அந்தவிதமாகவே நம்மிடம் வந்தது. 119 அவரை எழுப்பின அதே ஆவிதான் உண்மையான விசுவாசியை நித்திய ஜீவனுக்கு உயிர்ப்பித்தது. இப்பொழுது நினைவிருக்கட்டும், மறைந்திருக்கும்…இப்பொழுது கவனியுங்கள், நமக்கு நம்முடைய நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது ரோமர் 8:1-ல், “அதே ஆவி” என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது நாம் அதை மீண்டும் ரோமர் 8:1-ல் வாசிப்போம். அது என்ன கூறுகிறது என்று நாம் பார்ப்போம். சரி. ரோமர்கள் அல்ல…நான் 8:11-ஐ பொருட்படுத்திக் கூறுகிறேன். நான் வருந்துகிறேன். 120 ரோமர் 8:11-ல், “ ஆனால் …” என்று கூறப்பட்டுள்ளது. அதில்தான் பிரச்சனை உள்ளது. அங்கே அவருடைய நிபந்தனை உள்ளது. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின ஆவி (தேவன், பரிசுத்த ஆவி) உங்களில் வாசமாயிருந்தால்… 121 இப்பொழுது, அங்குதான் காரியமே உள்ளது, “மணவாளனின் ஆவி மணவாட்டிக்குள் வாசமாயிருந்தால்!”
51122 தேவன் தம்முடைய முதல் மணவாளனை உண்டாக்கினபோது, அவர் முதலில் மணவாளனை உண்டாக்கினார், மேலும் அவன் ஆணும் பெண்ணுமாக ஆவியில் இருந்தான்; அவனை பொருளாக்க, பூமியின் தூளில் அவனை உருவாக்கினார். கவனியுங்கள், அவர் ஆதாமிலிருந்து ஏவாளை உண்டாக்கினபோது, அவர் வேறொரு களிமண்ணை எடுக்கவில்லை, அவர் அதே களிமண்ணிலிருந்து எடுத்தார்; அதே வார்த்தை, ஏனென்றால் ஆதாம் உரைக்கப்பட்ட வார்த்தையாயிருந்தான். பார்த்தீர்களா? அவர் அவனிடத்திலிருந்து எடுத்தார், அதன்பின்னர்…அவன் ஆண்மை மற்றும் பெண்மையின் ஆவியை உடையவனாயிருந்தான். அவர் ஆதாமிலிருந்து பெண்மையின் ஆவியை எடுத்துப்போட்டு, அதை ஏவாளுக்குள் வைத்தார்; எனவே அது இன்னமும் ஆதாமின் ஆவியின் பாகமாக இருந்து வருகிறது, அது ஆதாமின் மாம்சமாகும். அதன்பின்னர், அது ஆதாமின் ஆவி, இயங்கும் சக்தி, அவனுடைய சரீரத்தின் இயக்கவியலை உயிர்ப்பித்தது. 123 எனவே மணவாட்டியும் கூட அவருடைய மாம்சத்தில் மாம்சமாகவும், அவருடைய எலும்பில் எலும்புமாயும் இருக்க வேண்டும். அப்படியானால் இந்த அழிவுள்ள மாம்சம் எப்படி அவருடைய மாம்சமாக மாறப்போகிறது? நாம் இன்னும் ஒரு நிமிடத்தில் அதைக் காண்போம், பாருங்கள். அது எப்படி செய்யப்படுகிறது? எப்படி? இந்த மகத்தான மறுரூபமாகுதல் என்ன? கவனியுங்கள். இப்பொழுது அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினருடைய ஆவி (தேவனின்) உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
52124 ஓ, என்னே! முன்குறிக்கப்பட்ட ஒருவர், உண்மையாகவே, பூமியின் மேல் வைக்கப்பட்ட வித்தைப் போல, அந்த ஒருவர் அவர்களுக்குள் ஜீவனை உடையவராயிருந்தார். அவர்களில் அநேகர் மரித்தார்கள்; அவர்கள் அழுகிப்போன விதைகளாயிருந்தனர்; தண்ணீரும் மற்றவைகளும் அவர்களைச் சுட்டெரித்தன. ஆனால், உங்களுக்குத் தெரியும், அங்கே ஜீவனுக்கு ஆயத்தமாக ஒரு வித்து இருந்தது. அது அங்கே இருந்தது என்பதை தேவன் அறிந்திருந்தார். 125 இப்பொழுது, முன்குறிக்கப்பட்டவர்கள் முதலில் பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்படுகின்றனர், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் தமக்குச் சொந்தமானவர்களை உரிமை கோர வருகிறார். இப்பொழுது, இது இப்பொழுது ஆழமாக உள்ளது, இந்த நன்மையை நிச்சயமாகப் புரிந்துகொள்ளுங்கள்.
53126 இப்பொழுது, சூரியன் பூமியின் மேல் கற்பாறைகளை கொண்டுவர, மண்ணிற்கு ஜீவனைக் கொண்டு வர அனுப்பப்படவில்லை, அது எல்லா மண்ணையும் ஜீவனுக்குள் கொண்டு வருவதற்காக அல்ல, ஆனால் ஒரு ஜீவனைச் சுற்றி சூழ்ந்திருந்த மண்ணின் ஒரு பாகத்தை கொண்டு வருவதற்காக இருந்தது. 127 எல்லா மனிதரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஓ, இல்லை. ஆனால் தேவன் ஜீவனுக்கென்று முன்னரே தீர்மானிக்கப்பட்டவர்கள், பூமியின் சில மண்ணைச் சுற்றிலும் தங்கியிருக்கிறார்கள், அந்த ஒருவரைத்தான் அவர் உயிர்ப்பிக்க வருகிறார். அவர்கள் தான். 128 அதாவது, இப்பொழுது, அந்த மண் அங்கே வெயிலில் படிந்து, “ஓ, இந்த பண்டைய சூரியன் மிகவும் உஷ்ணமாக இருக்கிறதே!” என்று கூறும். அந்தப் பாறை, “இந்த பண்டைய சூரியன் மிகவும் உஷ்ணமாக இருக்கிறதே!” என்று கூறும். ஆனால் அந்த சிறிய வித்து, “அதைத்தான் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினது, அது ஜீவனைப் பெறத் துவங்குகிறது. அது அந்த மண்ணின் பாகத்தை துரிதப்படுத்தியது. ஏனென்றால் சூரியன் கன்மலையை உயிர்ப்பிக்க அனுப்பப்படவில்லை, மண்ணை உயிர்ப்பிக்க அல்ல, ஆனால் வித்தின் ஜீவனை உயிர்ப்பிப்பதற்கே அனுப்பப்பட்டது.
54129 இப்பொழுது, பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது வருகிறார். உண்மையாகவே, அது அனுப்பப்படவில்லை…ஏன் எல்லா ஜனங்களும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை? அது அவர்களுக்கு அனுப்பப்படவில்லை. 130 ஒரு பையன் என்னிடத்தில், “நான் நம்புகிறதில்லை. நீங்கள் என்ன கூறினாலும் எனக்கு கவலையில்லை. உம்மால் மரித்தோரை அல்லது வேறெந்த காரியத்தையாவது எழுப்பி, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, அதை எப்படியாவது நிரூபிக்க முடிந்தாலும், நான் இன்னமும் அதை விசுவாசிப்பதில்லை” என்றான். 131 நான், “நிச்சயமாக முடியாது. நீ ஒரு அவிசுவாசி. அது உனக்கு ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. அது உனக்கு அனுப்பப்படவில்லை. விசுவாசிப்பவர்களுக்கே அது அனுப்பப்பட்டிருக்கிறது” என்றேன். 132 செய்தி விசுவாசிக்கு உரியது. அழிந்துபோகிறவர்களுக்கு அது பைத்தியம்; கிறிஸ்துவுக்குள் இருக்கிறவர்களுக்கும், அந்த வித்தின் ஒரு பாகத்திற்கும், அது ஜீவனாயிருக்கிறது.
55133 விவசாயி ஒரு முட்டையை, இல்லை கழுகு முட்டையை கோழியின் கீழ் வைப்பதைக் குறித்த என்னுடைய எளிமையான சிறு கதை. பார்த்தீர்களா? அந்த சிறிய கழுகு, முற்றிலுமாக, அது ஒரு—அது ஒரு விநோதமான தோற்றமுடைய, சிறிய சிருஷ்டியாயிருந்தது. இந்த விவசாயி செய்திருந்த காரியம், இந்த கோழியின் கீழ் இந்த கழுகு முட்டையை வைத்தான். அது ஒரு வினோதமான தோற்றமுடைய கோழிக்குஞ்சைப் பொறித்தது, அது—அது ஒரு வினோதமான, குஞ்சியாய் இருந்தது. அது அவைகளைப் போல் காணப்படவில்லை. அதனுடைய சிறகுகள் மற்ற சிறகுகள் போல இல்லை, அது—அது…அது ஒரு வினோதமான, சிறிய குஞ்சியாயிருந்தது. மற்ற எல்லா கோழிகளும் அதனை ஒரு விநோதமான நபராக அடையாளம் கண்டு கொண்டன. கோழி சுற்றி சுற்றி… 134 தாய்க்கோழி அதற்கு அளித்து வந்த உணவு முறையும் கூட அதற்குப் பிடிக்கவில்லை. பண்ணை முற்றத்தில் கிளறுவதை அது விரும்பவில்லை. அதற்கு, மற்றவைகளோடு எந்த சம்மந்தமும் வைக்கவில்லை. எனவே அது ஏன் விநோதமானவனாக அங்கே இருக்க வேண்டும் என்று அது வியப்படைந்தது. பார்த்தீர்களா? அது எந்தக் காரியத்தையும் ஒருபோதும் ருசி பார்த்ததேயில்லை…அதை உயிரோடு வைத்திருக்க அது போதுமான அளவு புசித்தது, ஏனென்றால் அது அதனுடைய ருசியை விரும்பவில்லை, பாருங்கள். காரணம், அது துவக்கத்தில் ஒரு கோழிக் குஞ்சு அல்ல. பார்த்தீர்களா?
56135 கோழி கூச்சலிட்டு, உங்களுக்குத் தெரியும், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. சபையில் சேர்ந்து கொள்ளுங்கள்” என்றது. அது அந்த சிறு நபரோடு, சரியாக பொருந்தவில்லை. எனவே அது ஒரு நாள் தன்னுடைய தாயைப் பின்தொடர… 136 தான் அநேக முட்டைகளை இட்டிருந்ததை அந்த வயோதிகக் கழுகு அறிந்திருந்தது, அதில் ஒன்று விடுபட்டிருந்தது. அந்த கழுகு எங்கோ இருப்பதை அது அறிந்திருந்தது, எனவே அது அதைத் தேடத் துவங்கினது. அது மலையுச்சியிலும், பள்ளத்தாக்குகளிலும், அது இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் வட்டமிட்டது. இந்த நேரத்தில், அது, அது பிறப்பதற்கான நேரமாய் உள்ளது. அது குஞ்சு பொறிக்கப்பட வேண்டிய நேரமாய் உள்ளது. மேலும், “ஒரு காகம் உள்ளே வந்து என்னுடைய முட்டையை எடுத்துப் போட்டிருக்கலாம்; ஒரு பருந்து அதை செய்திருக்கலாம். எனக்குத் தெரியாது. ஏதோ ஒன்று என்னுடைய முட்டையை எடுத்தது. ஆனால் நான் அறிவேன்…அந்த முட்டை என் சிந்தையில் உள்ளது. எனக்கு எங்கோ ஒரு மகன் இருக்கிறான். நான் அவனை தேட வேண்டும்” என்றது.
57137 தேவனும் அவ்வாறே செய்கிறார். அவரே அந்த மகத்தான கழுகு. அவர் ஒரு சபையை உடையவராயிருப்பார் என்பதை அவருடைய சிந்தனைகளில் அவர் அறிந்திருந்தார். அவருக்கு ஒரு ஜனம் உண்டு என்பதை அவர் அறிந்திருந்தார். அவைகள் எதைக் கட்டித் தழுவினாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவைகள் எதைக் கொண்டு குஞ்சு பொறிக்கப்பட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் தேடிக் கொண்டிருக்கிறார். அவர் தமக்குச் சொந்தமானவர்களுக்காக தேடிக் கொண்டிருக்கிறார். 138 ஒரு நாள், இந்த வயோதிகக் கழுகு அந்த பண்ணை முற்றத்தின் மேல் பறந்து சென்றதாக, கதை கூறுகிறது. அது எல்லாவிடங்களிலும் தேடிக்கொண்டிருந்தது, அது அதனைக் கண்டுபிடித்தது. ஓ, அந்த உயிர்த்தெழுதலுக்காக, எப்படியிருந்தாலும், அது உண்மையாகவே ஒரு கோழிக் குஞ்சு அல்ல என்பதை அடையாளங் கண்டு கொண்டது. அது ஒரு கழுகாயிருந்ததே! அது எப்பொழுதுமே கீழே நோக்கிப் பார்க்கும்படி கற்பிக்கப்பட்டிருந்தது, தொழுவத்தில் பூச்சி அல்லது வேறெதையோ தேடினது. ஆனால் அது, “ இந்த பக்கம் நோக்கிப் பார்!” என்று ஒரு சத்தத்தைக் கேட்டது. அப்பொழுது அது அதற்கு மேல் நோக்கிப் பார்த்தது. அங்கே பதினான்கு அடி உயர இறக்கைகளையுடைய ஒரு சிருஷ்டி இருந்தது. அது பண்ணையின் முற்றத்தில் இருந்த எல்லா கோழிக் குஞ்சுகளைக் காட்டிலும் வல்லமையுள்ளது, அது தன்னுடைய குஞ்சு என்று உரிமை கோரினது. அது, “அம்மா, நான் எப்படி உங்களிடம் வர முடியும்?” என்று கேட்டது. 139 “வெறுமனே குதித்து, உன்னுடைய செட்டைகளை அடிக்கத் துவங்கு, ஏனென்றால் நீ ஒரு கழுகு” என்றது. 140 பாருங்கள், அதற்க்கு எங்கோ ஒரு குஞ்சு இருந்தது என்பதை அது அறிந்திருந்தது. அது எந்த நிலையில் வளர்க்கப்பட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது எங்கோ ஒரு குஞ்சை உடையதாய் இருந்தது.
58141 தேவன் அதை அறிவார்! அல்லேலூயா! அவர் ஒரு முன்குறிக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட சபையைப் பெற்றுள்ளாரே! அவர் குமாரரையும், குமாரத்திகளையும், ஒரு மணவாட்டியையும் உடையவராய் எங்கோ காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார்; பரிசுத்த ஆவியானவர் அதன் மேல் பறக்கத் துவங்கும்போது, அந்த அசைவாட்டும் கதிர் கட்டு. ஓ, என்னே! அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஏதோ ஒரு கட்டுக்கதை அல்ல, அது ஒரு உண்மை! 142 எத்தனைபேர் அவனிடத்தில், “ஒரு கழுகு” என்று கூற முயன்றபோதிலும், அவன் ஒரு கழுகு என்றால் என்னவென்று அறிந்திருக்கவில்லை. அதே சமயத்தில், அவன் ஒரு கழுகாயிருந்தான். அவனைப் பிரதிபலித்த ஏதோ ஒரு காரியத்தை அவன் காணும் வரை, அவன் அதை பிரதிபலித்ததை, சரியாகக் கூறினால், அவன் அதை புரிந்து கொள்ளமாட்டான். 143 நாம், ஒரு ஸ்தாபனத்தை அல்ல, ஒரு பிஎச்.டி., அல்ல, ஒரு எல். எல். டி., அல்ல, ஒரு நல்ல அண்டை வீட்டாரையல்ல; ஆனால் இந்த நாளின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும்படியான தேவனுடைய இயங்கும் வல்லமையோடு, தேவனுடைய சாயலில் வார்ப்பிக்கப்பட்ட ஒரு தேவனுடைய குமாரன், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், எந்தக் கோழியும் உங்களை பிடித்து வைத்திருக்கப் போவதில்லை என்பதைக் காணும்போதே. அது தன்னுடைய தாயைத் தேடுகிறது. அது துவக்கத்திலேயே ஒரு கழுகாயிருந்தது. அவர் அடையாளம் கண்டு கொள்கிறார். இந்த உண்மையான கழுகு தேவனுடைய வார்த்தையின் அழைப்பை அங்கீகரிக்கிறது. ஏன்? அவன் ஒரு கழுகு. ஒரு கழுகிலிருந்து இன்னொரு கழுகிற்கு! அஸ்திபாரத்திற்கு முன்னான வார்த்தை, வார்த்தைக்கு வார்த்தை! முன்குறிக்கப்பட்ட வார்த்தை, அந்த வேளைக்காக எழுதப்பட்ட வார்த்தை. நீங்கள் உங்களுடைய நிலையை உணருகிறீர்கள். அவர் அதற்காக தேடித் திரிகிறார்.
59144 அப்பொழுது இது, இந்த பூமிக்குரிய சரீரம் உயிர்ப்பிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்படி தேவனுடைய உயிர்ப்பிக்கும் ஆவியினால் கொண்டுவரப்பட்டது. 145 துரிதமாக. அது எப்படி தாயோடு அங்கு செல்ல முடியும் என்று அது அறிய விரும்பினது. அதனால் அதைச் செய்ய முடியாது என்று அதற்கு போதிக்கப்பட்டிருந்தது. “உங்களால் குதிக்க முடிந்ததைக் காட்டிலும் உயரத்திற்கு செல்ல முடியாது.” அது ஒரு கோழி. பார்த்தீர்களா? ஆனால் இந்தக் கழுகு, “அப்படி அல்ல” என்றது. “சரி, கோழிகளைப் பாருங்கள்!” 146 “கோழிகள் என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீ ஒரு கழுகுதான். அந்தச் சிறகுகளை விரிக்கத் தொடங்கி, அவைகளில் ஒரு சிறு பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள். மேலே செல்லத் துவங்குங்கள்!” 147 வார்த்தைக்கு வார்த்தை! “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” பார்த்தீர்களா? “நான் பிழைக்கிறபடியினால், அவனும் கூட பிழைக்கிறான்.” “மரித்தோரிலிருந்து அவரை எழுப்பின ஆவியானவர் உங்களுக்குள் வாசமாயிருந்தால், அது சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கும்.” பார்த்தீர்களா?
60148 அது என்ன செய்கிறது? நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இப்பொழுது கவனியுங்கள். இந்த ஈஸ்டர், எந்த ஈஸ்டரைக் காட்டிலும் இது உங்களுக்கு அதிக அர்த்தத்தை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பார்த்தீர்களா? நீங்கள் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது அவருக்காக என்ன செய்தது என்பதை நாம் அறிவோம்; ஆனால் நீங்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், செய்யும் என்பதை அல்ல, அது உங்களுக்கு அதேவிதமாக செய்துள்ளது. பார்த்தீர்களா? அது என்ன செய்கிறது? அது அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பிக்கிறது. நாம் ஜீவிக்கிற இந்த அழிவுள்ள சரீரம், அதுவே அதை உயிர்ப்பிக்கிறது, வேறு வார்த்தைகளில் கூறினால், அதை ஜீவனுக்கு கொண்டு வருகிறது. 149 இப்பொழுது, ஒரு காலத்தில் உங்களுடைய வாயில் ஒரு பெரிய சுருட்டு, மற்றும் மற்ற எல்லாவற்றையும் அல்லது ஒரு கொத்து சிகரெட்டுகளுடன் நடந்து வந்த நீங்கள்; ஒரு காலத்தில் குட்டையான கூந்தலை, வர்ணம் பூசி, குட்டைக் கால் சட்டைகளை அணிந்த பெண்களாகிய உங்களையும், அதுபோன்ற காரியங்களையும், திடீரென்று, ஏதோ ஒன்று கூச்சலிட்டது, நீங்கள் இங்கே கீழே நோக்கிப் பார்த்தீர்கள், அது வார்த்தையாயிருந்தது. பாருங்கள், அது உங்களை உயிர்ப்பித்தது… நீர், “இனிமேல் எனக்கு அரைக்கால் சட்டை இல்லை, இனிமேல் எனக்காக மதுபானம் இல்லை, இனி ஒருபோதும் பொய்யுரைப்பதில்லை, இனி ஒருபோதும் ஒருபோதும் திருடுவதில்லை, இனிமேல் இது , அது இல்லை” என்றீர். பார்த்தீர்களா? அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி, உங்களுக்குள் வாசமாயிருந்து, பூமியின் தூளாகிய உங்கள் அழிவுள்ள சரீரங்களையும் கீழ்ப்படிதலுக்குள் கொண்டுவரும். உங்களுக்குப் புரிகிறதா? அது என்ன? எதற்கு கீழ்படிதல்? கிறிஸ்து. கிறிஸ்து யார்? வார்த்தை. வேத சாஸ்திரம் அல்ல, வார்த்தை! 150 அப்படியானால் நீங்கள், “இந்தக் காரியங்கள், ஓ, பெண்கள் தளர் ஆடைகளை அணிவது சரியென்று நான் நினைக்கிறேன்” என்று கூறலாம். 151 வார்த்தை, “இல்லை” என்று உரைத்துள்ளது. பாருங்கள், அது அதற்கு உங்களை உயிர்ப்பிக்கிறது. பார்த்தீர்களா? நீங்கள் அதற்கு இழுக்கப்பட்டிருக்கிறீர்கள். பாருங்கள், அப்படியானால் அது நீங்கள்தான். அது…நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாகிவிடுகிறீர்கள். அது உங்களுடைய சரீரத்தைக் கொண்டு வந்தது…
61152 பாருங்கள், நீங்கள், “சரி, இப்பொழுது, நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும். என்னுடைய போதகர்…” உங்களுடைய போதகர் என்னக் கூறினார் என்று நான் கவலைப்படுகிறதில்லை; வார்த்தை என்ன கூறுகிறது என்பதே! நீங்கள் ஒரு கோழியாக இருக்க விரும்பினால், அதனோடு செல்லுங்கள். ஆனால் போதகர் இந்த வார்த்தையிலிருந்து வித்தியாசமாக பேசினால், அப்பொழுது அவர் கழுகுகளை போஷிக்கிற ஒருவர் அல்ல; ஊ-ஹூ, அவர் கோழிகளுக்கு உணவளிப்பவர், பாருங்கள், கழுகுகளுக்கு அல்ல. பார்த்தீர்களா? கழுகு கழுகின் ஆகாரத்தைப் புசிக்கிறது. பார்த்தீர்களா? அது உயிர்ப்பிக்கிறது! 153 அதைச் செய்வது தவறு என்று வேதம் கூறியுள்ளது, மனிதர்களாகிய, நீங்கள் எல்லோருமே செய்வது தவறு, அது தவறாயுள்ளது. “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று கூறலாம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று இந்த வேதம் உரைத்துள்ளது. அவர்கள், “அது மனோத்தத்துவம். அது ஒருவிதமான மனோவசியம், இந்த பகுத்தறிதல். இந்த எல்லா தரிசனங்களும் மற்ற காரியங்களும் அர்த்தமற்றவை” என்று கூறுகின்றனர், பாருங்கள், அவைகள் கோழிகள். கழுகு ஆகாரம் என்பது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது.
62154 ஆனால், சகோதரனே, நீங்கள் அந்த சத்தமிடுதலைக் கேட்கும்போது, உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று இருக்கிறதே! நீங்கள் துவக்கத்திலேயே, ஒரு கழுகாயிருக்கிறீர்கள். ஏன்? நீங்களே அந்த வித்து, அதாவது அந்த கு-மா-ர-னி-ன் உயிர்த்தெழுதல் உதயமாகி, பூமியின் மேல் அசைவாட்டப்படும் கதிர் கட்டானது, நீங்கள் ஒரு கழுகு என்றும், ஒரு ஸ்தாபனக் கோழியல்ல என்றும் உங்களை அடையாளங்கண்டு கொள்ளும்படிச் செய்கிறது. நீங்கள் அதைக் புரிந்துகொள்கிறீர்களா? ஹா! 155 “அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி,” வார்த்தை, வார்த்தையின் இயங்கு சக்தி, “உங்களுக்குள் வாசமாயிருக்கிறது, அது சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கிறது.” இப்பொழுது நாம் எப்படி அவருடைய மாம்சத்திலிருந்து மாம்சமும், அவருடைய எலும்பில் எலும்புமாயிருக்கிறோம்? ஏனென்றால் நாம் அழிவுள்ள பாவிகளாக, சாவுக்கேதுவானவர்களாக, இந்த சரீரங்கள், மரிக்க ஆயத்தமாயிருக்கையில், அது அந்த சரீரத்தை உயிர்ப்பிக்கிறது. எது உயிர்ப்பிக்கிறது ? “ஜீவனுக்குக் கொண்டு வருகிறது.” ஒரு காலத்தில் குடித்து, சுற்றித் திரிந்து, விபச்சாரம் செய்து, இவையனைத்தும் செய்ய விரும்பின ஆவி, அது உயிர்ப்பிக்கப்படுகிறது; ஏன், அந்தக் காரியம் மரித்துப்போய், நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறீர்கள். அது உங்களுடைய அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பிக்கிறது. 156 ஆகையால், உங்களுடைய சரீரங்கள் இயங்கு சக்தியின் ஆலயமாயிருக்கின்றன, ஏனெனில் (ஏன்?) துவக்கத்திலிருந்தே நீங்கள் இயக்கவியலின் பாகமாயிருக்கிறீர்கள். ஓ! அங்குதான் உங்களுடைய உயிர்த்தெழுதல் உள்ளது. அவரோடு, உயிர்த்தெழுதலில் சபை உள்ளது. இந்த சரீரங்கள் இப்பொழுது உயிர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. பாருங்கள், நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அது உங்களை ஒரு ஸ்தாபனத்திலிருந்து வார்த்தைக்கு மாற்றினது. பார்த்தீர்களா?
63157 இயங்கும் சக்தி, அது தண்ணீரின் மேல் வந்தால், அது கிரியை செய்யாது, “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன.” பம்ப்-பம்ப்-பம்ப், “ஓ, நான் வேதாகமத்தை விசுவாசிக்கிறேன்,” பம்ப்-பம்ப்-பம்ப், “ஆனால் அங்கே—அங்கே இல்லை…” பம்ப்-பம்ப்-பம்ப்! பார்த்தீர்களா? 158 ஆனால் ஆயிரம் அலகு எரிபொருள் மீது படும்போது, “வ்ர்ர்ர்ர்ர்” என்ற அந்த ஒலியை சத்தமிடுகிறது, நீங்கள் பாருங்கள். என்னே, இயங்கு சக்தி அதன் மீது படும்போது அது எவ்வாறு இருக்கும்! ஆனால் அது ஒரு கோழியின் மேல் விழுந்தால், அது எந்த நன்மையும் செய்யாது. ஆனால் அது கழுகிகின் மேல் விழுந்தால், அது கிரியை செய்கிறது. ஆமென்! இயங்கு சக்தியோடு இயங்குகிறது! நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அதாவது இப்பொழுது அது ஒரு உண்மையான கழுகாயிருக்குமானால், அது “புரிந்துகொள்ளும்” என்பதாகும்.
64159 நான் தெளிவாக்க இங்கே உங்களுக்காக ஒரு சிறு வேதவாக்கியத்தை குறிப்பிடட்டும். நாங்கள் தொலைபேசி இணைப்பை நிறுத்திவிட்டோம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம். பரிசுத்த யோவான் 5:24-ல் இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” என்றார். இப்பொழுது பாருங்கள், நான் தெருக்களுக்குச் சென்று, ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல் இல்லாமல், அதை அப்படியே உண்மையாகவே எடுத்துக்கொள்கிறேன்… அது வேறெதையும் கூறும்படிச் செய்யாமல், அது என்ன கூறுகிறதோ அதையே கூறி, பாருங்கள், அங்கே சரியான வார்த்தை, கிரேக்க மொழியில், மூல மொழியில், அது, “என் வார்த்தையைப் புரிந்து கொள்ளுகிறவன்” என்று கூறுகிறது. 160 இப்பொழுது, அது சரியென்று நிரூபிக்க வேண்டும். நான் இங்கு செல்கிறேன், இதோ ஒரு குடிகாரன் தெருவில் மற்றொரு மனிதனின் மனைவியை தன்னுடைய கரங்களில் அணைத்துக் கொண்டு, தூஷித்துக்கொண்டு, தேவனுடைய நாமத்தை வீணாக உபயோகித்துக் கொண்டு மற்றும் அதைப் போன்ற மற்ற ஒவ்வொரு காரியத்தையும் செய்துகொண்டு வந்து கொண்டிருக்கிறவனை. “அந்த பிரசங்கியார் கூறியதை நீர் கேட்டீரா? நீர் கேட்டீரா?” என்று கேட்டால், “ஆம், நான் அதைக் கேட்டேன்!” என்பான். அப்படியானால் அது அவன் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறான் என்று அர்த்தமல்ல. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? “என் வசனத்தை புரிந்து கொள்ளுகிறவன்,” ஒரு கழுகாயிருக்கிறவன்! 161 “இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாம், எனக்கு அதைக் காட்டிலும் அதிகமான வேதவாக்கியங்கள் வேண்டும்.” 162 சரி, “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கிறது. அவைகள் அந்நியனுக்கு பின் செல்வதில்லை.”
65163 அன்றொரு நாள், விவாகமும் விவாகரத்தும் என்ற காரியத்தில் பார்த்தது போல. பரிசுத்த ஆவியானவர் அதை என்னிடத்தில் கூறியிருந்தபோது, அவர் என்னிடம் கூறின விதமாகவே நான் வந்தேன். 164 ஏதோ ஊழியக்காரப் பெண்மணி என்னிடம் கடுமையாக சற்று கடிந்து கொண்டாள். அவள், “நீர் தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளலாமா என்று நான் யூகிக்கிறேன்?” என்று கேட்டாள். அதற்கு நான், “இல்லை அம்மா” என்றேன். 165 மேலும், “பாருங்கள், அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று நீர் அவர்களுக்கு கூறினீர்” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள். “தேவனுக்கு மாத்திரமே வல்லமை உண்டு” என்றாள். பாருங்கள், மற்றொரு பரிசேயன். பார்த்தீர்களா? …?… 166 நான், “நீங்கள் பாருங்கள், அதாவது நீங்கள் அறிந்திருக்கலாம், பேதுருவுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் இயேசு தாம் யாராயிருந்தார் என்ற வெளிப்பாட்டைப் பெற்றப் பிறகு அதைக் கூறினார்” என்றேன். அவன் அவரிடம், “நீர் தேவ குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 167 அவர், “யோனாவின் குமாரனாகிய” பாருங்கள், “நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. நான் திறவுகோல்களை உனக்குக் கொடுக்கிறேன்; பூமியிலே நீ கட்டுகிறது எதுவோ, நான் அதை பரலோகத்தில் கட்டுவேன்; நீங்கள் பூமியின் மேல் கட்டவிழ்ப்பது எதுவோ…” என்றார்.
66168 அது மாம்சமான வார்த்தையின் அந்த தெய்வீக வெளிப்பாடு. அது அந்த நாளில் குமாரன், மணவாளன் மூலமாக மாம்சமாக இருந்தது என்றால், அது இன்றைக்கு மணவாட்டியின் மூலமாக மாம்சமாக இருக்கிறது. பார்த்தீர்களா? “எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும்.” 169 இப்பொழுது, கத்தோலிக்க சபை அதை எடுத்துக்கொண்டு, அதை தங்களுடைய ஆசாரியர்களிடம் கொண்டு செல்கிறது, ஆனால் அது மாம்சப்பிரகாரமானதாகும். 170 கவனியுங்கள், ஆவிக்குரிய, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையே அதைச் செய்தது! 171 அந்தக் காரணத்தினால் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் “நாமத்தில்” ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி அவர் அவர்களிடம் கூறினார். அவர் யாராயிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் என்பதை அவர் அறிந்திருந்தார்.
67172 அன்றொரு நாள் ஒரு சிறிய பிரசங்கியாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் கூறினார், அவர், “இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாம், நான் வெளியே வந்து, ஒரு குறிப்பிட்ட-குறிப்பிட்ட சபையில், ஒரு பெந்தேகோஸ்தே சபையில் சென்று சேர்ந்திருக்கிறேன்” என்றார். 173 பெந்தெகொஸ்தேயினர், இப்பொழுது வட்ட வடிவமான அப்பத்தை எடுக்கத் துவங்கியுள்ளனர் என்பதை, நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அதைக் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று, நான் நினைக்கிறேன்; கோஷர், சந்திரனுக்குரிய தெய்வம், உங்களுக்குத் தெரியும். அவர்கள் யாவரும் அதை ஏற்றுக்கொண்டு அதை எடுத்துக்கொண்டனர். இந்த மனிதன் கூறினார்…அவருடைய—அவருடைய சபையோர் அவரிடம் சென்றனர்; அவர், “நான் ஆசீர்வதிக்கிறதே ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கிறது” என்றார். இப்பொழுது, குருவானவர், அவர், “கிறிஸ்துவின் சரீரமாக அதை மாற்றுவதற்கு அதிகாரம் உண்டு” என்று கூறுகிறதில்லையா? பாருங்கள், ஆறில் ஒன்று மற்றும் அரை டஜன் என்பதைப் போன்று வித்தியாசம் இல்லாமல் இருக்கிறார்கள். 174 அவர், “நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்றார். அவர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதைக் குறித்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார், ஏனெனில் இந்த மனிதன் தான் அதைச் செய்தான் என்று கூறினான்—அதைச் செய்தது அந்திக்கிறிஸ்துதான். அவர், “ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவது அவசியமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம், ஐயா” என்றேன். 175 அவர், “‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்’ நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகா?” என்று கேட்டார். 176 நான், “ஆம், ஐயா. அவன் ஞானஸ்நானம் பண்ணப்படவேயில்லை. பார்த்தீர்களா? அவன் ஞானஸ்நானம் பண்ணப்படவேயில்லை; நாமம் இல்லை. அது ஒரு பட்டப்பெயர்” என்றேன். அதற்கு நான், “அது அங்கீகரிக்கப்படவில்லை” என்றேன். நான், “ஏன்—ஏன் பேதுரு…” என்றேன். 177 அவர், “சரி, இப்பொழுது, நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கூறட்டும்” என்றார். அவர், “இப்பொழுது, அப்போஸ்தலர் 10:49-ல், அவர், ‘பேதுரு இந்த வார்த்தைகளைக் பேசிக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்’” என்றார். 178 “ஆனால்,” நான், “அவன் நேராகத் திரும்பி, ‘இவர்கள் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு ஒரு மனிதனுக்குத் தண்ணீர் தடையாயிருக்க முடியுமா என்று கேட்டானே?’” என்றேன்.
68179 அவர், “சரி, சற்றுமுன், அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தைக் குறித்து, நீங்கள் அங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள், பவுல் எபேசுவின் மேடான தேசங்களினூடாகச் சென்றபோது, சீஷர்களான அவர்களைக் கண்டான்” என்றார். மேலும், “ஏன், அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை” என்றார். 180 நான், “இல்லை, அவர்கள் பாவமன்னிப்புக்கென்று அல்ல, ‘மனந்திரும்புதலுக்கேற்ற’ ஞானஸ்நானம் பெற்றார்கள். ‘மனந்திரும்புதலுக்கேற்ற’ ஏனென்றால் இயேசுவானவர் இன்னும் அறியப்படாமலிருந்தார். பலியானது இன்னும் கொல்லப்படாதிருந்தது” என்றேன். அவர், “சரி, அவர்கள் ஏன் மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருந்தது?” என்று கேட்டார். 181 நான், “திறவுகோல்களை வைத்திருந்த அந்த மனிதன், ‘நீங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை என்று நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கடவது என்று இதைக் கூறினார்’” என்றேன். 182 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மாத்திரமே இரட்சிப்பு உண்டாகிறது. “வார்த்தையினாலோ அல்லது கிரியையினாலோ நீங்கள் எதைச் செய்தாலும், அவை எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்யுங்கள்.” வேறொரு நாமமோ, எந்த சபையோ இல்லை, எந்த தலைமைத்துவமோ, பட்டங்களோ அல்லது வேறெந்தக் காரியமோ கிடையாது! அதே சமயத்தில், அவர் சாரோனின் ரோஜாவாகவும், பள்ளத்தாக்கின் லீலியாகவும், விடிவெள்ளி நட்சத்திரமாகவும், அல்பாவாகவும், ஒமேகாவாகவும், ஆதியும் அந்தமுமாகவும், யேகோவா-யீரே, ரப்பா, மனாசே, இவை எல்லாமுமாக இருக்கிறார். இந்த எல்லாக் காரியங்களிலுமே அவர் இருக்கிறார், ஆனால் அதே சமயத்தில் அவர்…அந்த பட்டப்பெயர்கள் எதிலும் இரட்சிப்பு இல்லை; யேகோவா, இரட்சிப்பு இல்லை; சாரோனின் ரோஜா , அதே சமயத்தில் அவர், இரட்சிப்பு அல்ல; பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவி , இரட்சிப்பு இல்லை. “இயேசு கிறிஸ்துவின்” நாமத்தில் மாத்திரமே! அப்பொழுது வேதம், “மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் அவருடைய நாமத்தில் போதிக்கப்பட வேண்டும், எருசலேமில் துவங்கி, பூமியின் கடைசி பரியந்தமும்” என்று கூறியுள்ளது. அதற்கு அவர், “அது ஏதாவது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.
69183 நான், “ஐயா, நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்றேன். அவரும் நானும், என் மனைவியும் மேஜையண்டை உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவர் குடிபெயர்ந்து வந்திருந்தார். என்னைப் பார்த்துவிட்டு வந்தார்…நான், “நாங்கள் இருவரும் அரிசோனா நாட்டவர்கள்; நாங்கள் இங்கே வாழ்கிறோம். எனக்கும், எங்களுக்கும் எங்களுடைய ஆலோசனை சங்கம், எங்களுடைய தெரு மற்றும் எல்லோரையும், எங்களுடைய நகராண்மைக் கழகத் தலைவர், ஆளுநர், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் தெரியும்” என்றேன். அதற்கு அவர், “ஆம்” என்றார். 184 நான், “இப்பொழுது, சகோதரனே, நான் உங்களிடம், ‘இங்கே போய் நம்முடைய இரவு விருந்துக்காக அரிசோனா மாகாண ஆளுநரின் நாமத்தில், பதிவு செய்து கொள்ளுங்கள் என்றால், நீங்கள் போய் அந்த விதமாக கையொப்பமிடுவீர்களா? அவர்கள் அதை அங்கீகரிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன். 185 “ஏன்,” அவர், “இல்லை என்று நான் யூகிக்கிறேன்” என்றார். அவர், “ஏன் இயேசு அதைக் கூறினார்?” என்று கேட்டார். 186 நான், “இதுதான் அது, பாருங்கள். ஏன்? நான் உங்களை ‘அரிசோனா மாகாண கவர்னர் என்ற பெயரில் இந்த விருந்துக்கு கையெழுத்திடூ’ என்று சொன்னால், நாம் அரிசோனாவின் குடிமக்களாயிருக்கிறோம், ஆளுநர் யார் என்பதை அறிந்திருக்கிறோம், ஏன், ‘சாம் கோடார்ட்,’ என்ற நாமத்தில் நீ கையொப்பமிட உங்களுக்கு தெரியும், பாருங்கள்.” என்றேன். நான், “ஏனென்றால், அவர் மாநில ஆளுநர். நான் உங்களை கேள்வி கேட்க வேண்டியதில்லை. கவர்னர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும், அவர், ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவி’ என்று கூறினபோது, அவர்கள் எப்படி ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் யாராயிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ‘என் ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும்.’ பார்த்தீர்களா? பார்த்தீர்களா?” என்றார். அவர், “ஓ, எனக்குப் புரிகிறது” என்றார். 187 ஆனால் இப்பொழுது, அடுத்த காரியம், நீங்கள் விசுவாசிப்பீர்களா? பார்த்தீர்களா? “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.” இந்த புதிய நித்திய ஜீவன் உங்களுக்குள் வாசம்பண்ணும்போது, அது மறைவாக உள்ளது.
70188 பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் பெற்ற பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது; அவர்கள் இயக்கவியலாயிருந்தனர், இப்பொழுது இயங்கும் சக்தி வர வேண்டியதாயிருந்தது. அவர்கள் விசுவாசித்திருந்தனர். நம்முடைய நல்ல பாப்டிஸ்டு நண்பர்கள் நம்மிடம், “நாம் விசுவாசிக்கும்போது, நாம் அதைப் பெற்றுக்கொள்வோம்” என்று சொல்வதை, நீங்கள் அறிவீர்கள். ஆனால், அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை, அதே சமயத்தில் அவர்கள் விசுவாசித்திருந்தனர். 189 அப்போஸ்தலர் 19-ல் அவர்கள் விசுவாசித்திருந்தனர், ஆனால் அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை. “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” பார்த்தீர்களா? அவர்கள் இயக்கவியலை உடையவர்களாயிருந்தனர், சரி, ஏனென்றால் அப்போஸ்தலர்கள்… இல்லை, அதாவது, அப்பொல்லோ அவர்களுக்கு போதித்து, இயேசுவே கிறிஸ்து என்று, இயந்திரவியல், வேதாகமத்தின் மூலம் நிரூபித்தான். ஆனால் அவர்கள் இன்னமும் இயங்கும் சக்தியை உடையவர்களாயிருக்கவில்லை. பார்த்தீர்களா? அதுதான். சரி. 190 [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] …இயக்கவியல், நீங்கள் மறைமுகமான அச்சாரத்தை, காத்திருத்தலை பெற்றுள்ளீர்கள். 191 இப்பொழுது, நீங்கள் இயங்கும் சக்தியைப் பெறும்போது, நீங்கள் அழிவிலிருந்து அழியாமைக்கு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளீர்கள். அது முழு சரீரத்தையும் வார்த்தைக்கு கீழ்ப்படியச் செய்கிறது. அது உங்களை வித்தியாசமாக செயல்படச் செய்யும், வித்தியாசமாக தோற்றமளிக்கச் செய்யும், வித்தியாசமாக வாழச் செய்யும். அது உங்களை வித்தியாசமாக்கும்.
71192 இப்பொழுது பாருங்கள்… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …அது உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. “பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும், அந்தகாரத்தினாலும் ஒருதரம் மரித்த உங்களை அவர் உயிர்ப்பித்திருக்கிறார்.” எதன் மூலம்? “இயேசுவை எழுப்பின அவருடைய ஆவி,” ஈஸ்டர் காலையன்று, “மரித்தோரிலிருந்து எழுப்பினார். அது சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களில் வாசமாயிருந்தால்,” இப்பொழுது கவனியுங்கள், “அது அதை உயிர்ப்பித்து, ஜீவனைக் கொண்டு வந்து, வார்த்தைக்கு கீழ்படியச் செய்கிறது.” 193 இப்பொழுது, அந்த ஆவியைப் பெற்றிருப்பதாக நீங்கள் உரிமை கோரிக் கொண்டு, வார்த்தையை விட்டு உங்களை எப்படி தூர விலக்கிக் கொள்ள முடியும்? நீங்கள் வேறொன்றினால் உயிர்ப்பிக்கப்படுகிறீர்கள். ஏனென்றால், அது உங்களுடைய அழிவுள்ள சரீரங்களை வார்த்தைக்கு உயிர்ப்பிக்கும். நிச்சயமாக, அது நடக்கும். 194 அது இல்லாமல் உங்களால் இயங்க முடியாது. நீங்கள் அதைக் குறித்த எல்லாவற்றையும் விசுவாசிக்கவில்லையென்றால், நீங்கள் அப்படியே இயங்க முடியாமல் சத்தமிடுவீர்கள். நீங்கள் ஒரு பகுதி எரிபொருள் மற்றும் ஒரு பகுதி தண்ணீரை வைத்திருந்தால், நீங்கள் எங்கும் செல்லப் போவதில்லை. பார்த்தீர்களா? நீங்கள் அதற்கு நூறு சதவிகிதம், எரிபொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், நீங்கள் எதிர்விளைவுகளையே சந்திக்க நேரிடும், நீங்கள் இயங்கும் திறனை பெற்றிருக்கமாட்டீர்கள். பார்த்தீர்களா? “ஆனால் நான்—நான் இதை விசுவாசிக்கிறேன், ஆனால் நான் அதை விசுவாசிப்பதில்லை,” பாம்ப்-பாம்ப்-பாம்ப்-பாம்ப். நீங்கள் எங்கும் செல்லமாட்டீர்கள். 195 ஆனால், ஓ, நீங்கள் பரிபூரணத்தை எடுத்துக் கொள்ளும்போது! ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமாயிருக்கிறபடியால், அதன்பேரில் அது பற்றி எரியட்டும்!
72196 ஆகையால் இப்பொழுது கவனியுங்கள், நாம் முடிக்கையில், இதைக் கவனியுங்கள். கவனியுங்கள், அது ஒரு சிறு—ஒரு சிறு விதை நிலத்தில் கிடப்பதைப் போன்றது. 197 இப்பொழுது, மறைமுகமாக, நீங்கள் உயிர்த்தெழுப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியை உங்களுக்குள் பெற்றுக்கொள்ளும்போது, நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுகிறீர்கள். உங்களுடைய சரீரம் மறைமுகமாக உயிர்த்தெழுப்பப்பட்டுள்ளது. 198 ஒரு சிறு விதையைப் பாருங்கள். அதை நிலத்தில் நடலாம். அது அவருடைய ஊற்றிலிருந்து, பொங்கி வழிகிற தண்ணீரைப் பருக வேண்டும். அது பானம்பண்ணும்போது, அது அவரை நோக்கி மேலே தள்ளப்பட்டு, நிலத்திற்குள் சென்ற விதையின் சாயலைப் போல வருகிறது. பார்த்தீர்களா? 199 சபையானது நீதிமானாகுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஆகியவற்றின் மூலமாக அந்தவிதமாக வந்தது, இப்பொழுது அது மலர்ந்துள்ளது. பார்த்தீர்களா? தேவனுடைய ஆவியானவர் அதனூடாக வருகிறார். 200 உலகத்தின் ஆவி அந்திக்கிறிஸ்துவின் மூலமாகவும் அதேவிதமாகவே வந்துள்ளது. இப்பொழுது சபைகளின் ஒரு மகத்தான இணைப்பில், பாருங்கள், முழு காரியமும் மலர்கிறது.
73201 தனிப்பட்ட நபர் அந்த வழியாக வருகிறார். ஒவ்வொரு காரியமும் ஒரேவிதமாக, தேவனுடைய அதே தராசில் கிரியை செய்கிறது, ஏனெனில் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். கவனியுங்கள், ஆவியானவரால் வழி நடத்தப்பட்டு, உயிர்த்தெழுதலின் பரிபூரணத்திற்கு வளருகிற உங்கள் வழியிலே! 202 சூரியனைப் போல, சூ-ரி-ய-ன், தேவனுடைய ஊற்றிலிருந்து குடித்துக்கொண்டிருக்கிற அந்த சிறு செடியை இழுத்து, அப்படியே… பாருங்கள், அது ஒரு காரியத்திலிருந்து மாத்திரமே குடிக்க முடியும். நீங்கள் அந்த சிறு விதையின் மேல் ஒரு முறை எண்ணெயை ஊற்றிப் பாருங்கள்; அதைக் கொன்றுவிடும். அது உண்மை. நீங்கள் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை, நல்லதல்லாத பழைய தண்ணீரை ஊற்றினால், அது மாசுபட்டதாயுள்ளது, அது வளர்ச்சியை தடை செய்யும். அது கனி கொடுக்காது. அது சரியா? ஆனால் நீங்கள் உண்மையாகவே நல்ல மென்மையான மழைத் தண்ணீரை ஊற்றுங்கள், ஆமென், அதில் மனிதனால் உண்டாக்கப்பட்ட இரசாயனங்கள் இல்லை, அது மேலே வானத்திலிருந்து வரட்டும், அந்த சிறிய செடியை கவனித்துப் பாருங்கள். அந்த மழைத் தண்ணீரைப் போல எந்த தண்ணீரிலும் வளராது. நீங்கள் அதில் குளோரின் மற்றும் மற்ற பொருட்களைப் போட்டு, நீங்கள் நமக்கு மருந்தின் அளவைக் குறைக்க முயலும்போது, முதலாவதாக, அது தாவரத்தை கொன்றுவிடுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
74203 அதுதான் இன்றைக்கு காரியமாயுள்ளது. அவர்கள் ஸ்தாபன ஊற்றிலிருந்து அவர்களுக்கு தண்ணீரைக் கொடுக்க முயற்சிக்கிறார்கள், அது வளர்ச்சியை தடை செய்கிறது. பார்த்தீர்களா? ஆனால் அவன் அதை பெற்றுக்கொள்ளட்டும்: இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு வாருங்கள்; இரவும் பகலும் என்னைச் சூழ்ந்து பிரகாசிக்கும், இயேசு, உலகத்தின் ஒளி. அப்பொழுது, நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள். நாம் ஒளியில் நடப்போம், அந்த அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு வருகிறது; என்னைச் சுற்றிலும் பிரகாசிக்கட்டும்! 204 இந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட ஊற்றுகளை என்னிடத்திலிருந்து எடுத்துப் போடும்! “இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறெந்த ஊற்றையும் நான் அறியேன்!” அந்த ஊற்றைத்தான் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். கர்த்தாவே, வார்த்தை எனக்குள் வாசமாயிருப்பதாக; அதற்கு உம்முடைய ஆவியினால் தண்ணீர் கொடும்.
75205 இப்பொழுது கவனியுங்கள், இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பின அந்த ஆவி, உங்களுக்குள் வாசமாயிருந்தால், நீங்கள் ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும்; உங்களுக்கு வார்த்தையை உயிர்ப்பித்து, அதை விசுவாசிக்கும்படி, ஆவியானவரால் வழிநடத்தப்படுதல். அந்த சிறு காரியம் வளர வளர அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்கிறது. 206 கவனியுங்கள், பெந்தேகோஸ்தேவில், அவர்களுடைய சரீரங்கள் ஒரு புதிய ஜீவனுக்கு உயிர்ப்பிக்கப்பட்டன. ஒரு கூட்ட சிறு கோழைகளைப் பாருங்கள். 207 நான் உங்களை நீண்ட நேரம் பிடித்துக் கொண்டிருக்கிறேனா? [சபையோர், “இல்லை” என்கின்றனர்.—ஆசி.] பாருங்கள், நான் உஷ்ணமடைந்துள்ளேன், அவ்வளவுதான், நன்றாக உணருகிறேன். ஓ, என்னே!
76208 கவனியுங்கள், அவர்கள் கோழைகளாயிருந்தனர். கவனியுங்கள். ஆனால், அவர்கள் இயக்கவியலை உடையவர்களாயிருந்தனர். பார்த்தீர்களா? ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கே பின்னால் அமர்ந்துகொண்டு, “ஓ, நான் அவர்களைக் குறித்து பயப்படுகிறேன். ஓ, நான் வெளியே சென்று ஒரு உரிமைகோரலைக் கூற பயப்படுகிறேன், ஏனெனில், ஓ, அங்குள்ள மகத்தான பெரிய ஆயர்கள் மற்றும் மற்ற காரியங்களும் உள்ளன. ஓ, நான் அதைக் குறித்து பயப்படுகிறேன். அந்த ஆசாரியர்களும் மற்ற காரியங்களும், நான் அதை உரிமை கோருவதற்கு பயப்படுகிறேன், நான் அவர் மேல் விசுவாசம் வைத்திருக்கிறேன் என்று நான் கூறவே பயப்படுகிறேன். ஓ, நீங்கள் பாருங்கள், என்னால் அதைச் செய்ய முடியாது” என்கின்றனர். 209 ஆனால் திடீரென்று இயங்கும் சக்தி வந்தது. ஆம். அது என்ன செய்தது? அது அவர்களுடைய ஆவியை உட்புறத்தில் நிரப்பியது மட்டுமின்றி, அது அவர்களுடைய இயங்கு சக்தியை உயிர்ப்பித்தது. அவர்களுடைய சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்டன. அவர்கள் அதற்குப் பின் கோழைகளாயிருக்கவில்லை. அவர்கள் நேராக ஜனங்களிடத்திற்குச் சென்றனர். ஆம், ஐயா. “யூதேயாவின் மனுஷரே, எருசலேமில் குடியிருக்கிறவர்களே!” அங்கு, இயங்கும் சக்தி வருவதற்கு முன்பு, அவர்கள் இயக்கவியலை உடையவர்களாக இருந்தனர். பார்த்தீர்களா? “எருசலேமில் வாசமாயிருக்கிற மனுஷரே, இதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள், என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்கள் அல்ல.” 210 நானும் அவர்களில் ஒருவன். இதுதான் அது! அது என்ன என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். அது வேதவாக்கியமாயுள்ளது. இதுதான் அது! நான் எப்பொழுதும், “இது அதுவல்லவென்றால், அது வரும் வரையில் நான் இதை வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறி வந்துள்ளேன். 211 “இல்லை, இது தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டது, ‘கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் சொல்லுகிறார்.’” பாருங்கள், இயங்கும் சக்தி இயக்கவியலுக்குள்ளாக வருகிறது. அவர்கள் அதற்குபிறகு பயப்படவில்லை.
77212 ஜனங்களாகிய உங்களில் சிலர் நீண்ட தலைமுடியை உடையவர்களாயிருப்பதற்காக உங்களை ஒரு பெண்மணி கேலி செய்துவிடுவாள் என்று பயப்படுகிறீர்கள், அல்லது முகஒப்பனை அணிவதை விட்டுவிட்டால்; உங்கள் ஸ்தாபனம் உங்களை வெளியே தூக்கி எறிந்துவிடும் என்று பயப்படுகிறீர்கள் நீங்கள் உங்களுடைய சபையோருக்கு வேதப்பிரகாரமான ஞானஸ்நானம் கொடுக்கும்போது; இயங்கும் சக்தி வரும் வரையில் நீங்கள் உங்களை மேலறையில் அடைத்துக் கொள்ள வேண்டும். அது உண்மை. 213 அது அவர்களை மாற்றினது. அது அவர்களை உயிர்ப்பித்தது. அது அவர்களை வித்தியாசப்படுத்தியது. அப்பொழுதிலிருந்து அவர்கள் மாற்றப்பட்ட ஜனங்களாக இருந்தனர். அது ஒரு கோழைத்தனமான பண்டைய வாழ்க்கையிலிருந்து, யூதா கோத்திரத்து சிங்கத்தைப் போலிருக்க அவர்களை உயிர்ப்பித்தது. அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு, எரிக்கப்பட்டு, சிங்கங்களின் கெபியில் போடப்பட்டு, இரத்த சாட்சிகளாக முற்றிலுமாக எதிர்கொண்டனர். அவர்களைக் குறித்து, இனிமேல் கோழைகள் என்று கூற முடியாது. மரணம் அவர்கள் மேல் ஜெயங்கொள்ளவேயில்லை. இயங்கும் சக்தி இயக்கவியலில் இருந்தது. ஆம், ஐயா. அது அவர்களுடைய அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பித்தது.
78214 இப்பொழுது கவனியுங்கள். இங்கே மற்றொரு காரியம், நிரூபணமாக உள்ளது. அது அவர்களை அப்படிப்பட்ட ஒரு வழியில் உயிர்ப்பித்து (என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?) அவர்கள் உன்னதங்களில் உயர்த்தப்பட்டு, அவர்களுடைய பாஷை மாறுமளவிற்கு அவர்களுடைய அழிவுள்ள சரீரங்கள் அவ்வளவு உயிர்ப்பிக்கப்பட்டிருந்தன. அது மாத்திரமே…அது அவர்களுடைய பாஷையை உயிர்ப்பித்தது. அதைத்தான் வேதம் கூறியுள்ளது. அவர்களுடைய அழிவுள்ள சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, அவர்களுடைய பாஷை உயிர்ப்பிக்கப்பட்டது. அவர்களுடைய சிந்தனைகள் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவர்களுடைய ஆவிகள் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவர்களுடைய ஜீவியம் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒட்டு மொத்தமாக உயிர்ப்பிக்கப்பட்டனர்! அவர்கள் பேச முயன்றனர், அதற்கு மேல் மானிட பாஷைகளில் பேச முடியவில்லை. அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தில் அவ்வளவாய் உயிர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் புதிய பாஷைகளில், ஒரு பரலோக பாஷையில் பேசினார்கள். வ்யூ! என்னே ஒரு உயிர்ப்பிக்கும் வல்லமை!
79215 “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவி உங்களில் வாசமாயிருந்தால்,” ஓ, அல்லேலூயா, “அது சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கும்.” அது நீங்கள் இதற்கு முன்பு செய்யாத காரியங்களைச் செய்யும்படிச் செய்யும். அப்பொழுது அவர்கள் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தனர். பார்த்தீர்களா? 216 நீங்கள், உங்களுடைய இச்சைகள்; உங்கள் சரீரம் இனி ஒருபோதும் பாவத்திற்கு உட்பட்டிருக்காது. அவன், “இங்கே வெளியே வா!” என்றான். நீங்களோ, “உன்னுடைய வாயை மூடு” என்று கூறலாம். “ஓ, நாங்கள் மிகப்பெரிய…” “உன் வாயை மூடு.” என்னே, நீ ஒரு கழுகு! 217 ஒரு வயோதிக கழுகு எவ்வளவு சுயாதீனமாக நடக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு பருந்து போல, பாருங்கள், மரித்துப்போன ஒவ்வொன்றுக்கும், தரையில் கிடக்கும் எல்லா அழுகலுக்கும் குதிப்பதில்லை. இல்லை ஐயா. அது பெருமையாக நடக்கிறது. “உன் வாயை மூடு.” “ஓ, இங்கே ஒரு நல்ல இரவு விருந்து உள்ளது.” 218 “எனக்காக அல்ல. பாருங்கள், என்னுடைய வாஞ்சைகள் மாறிவிட்டன. என்னுடைய பசி வித்தியாசமானது. ‘மனுஷன் பூமியின் செத்த மாம்சத்தினால் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் உலகத்தின் மேல் பிழைப்பான்.’” அதன் மூலம் ஒரு அசலான உயிர்ப்பிக்கப்பட்ட கழுகு ஜீவிக்கிறது. ஆமென்!
80219 ஓ, அவர் கிறிஸ்துவை கல்லறையிலிருந்து எழுப்பி, உங்களுக்குள் வாசம் செய்து, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை அவருடைய பிரசன்னத்திற்கு உயிர்ப்பித்திருக்கிறார். நீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் இனிமேல் ஒரு தோட்டி அல்ல. நீங்கள் ஒரு கழுகு. நீங்கள் உலகத்தின் காரியங்களை விரும்புகிறதில்லை. நீங்கள் தேவனுடைய குமாரனும், குமாரத்தியுமாயிருக்கிறீர்கள். உலகம் ஒன்றுமே அறியாத ஒரு ஊற்றைக் குறித்து நீங்கள் விருந்துண்டு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பருகிக்கொண்டிருக்கிறீர்கள். யாரோ ஒருவர் அறிவார்…உலகம் இதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறது. உலகம் அதைக் குறித்து ஒன்றுமே அறியாத மறைவான மன்னாவை நீங்கள் புசித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் ஒரு கழுகாயிருக்கிறீர்கள். நீங்கள் அதை அடையக்கூடிய இடத்தில் நீங்கள் உயிர்பிக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை இங்கே கீழே கொண்டு செல்ல முடியாது, நீங்கள் இங்கே மேலே செல்ல வேண்டும். நீங்கள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும், அங்கே மேலே உயர்த்தப்பட வேண்டும், எனவே அது உயிர்ப்பிக்கும்.
81220 அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் வேறொரு பாஷையில் பேசினர். அவர்கள் அவ்வாறு செய்தனர் என்று வேதம் கூறியுள்ளது. “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு பாஷையிலும் அவர்கள் பேசினர்.” 221 அங்கே உள்ளே இருக்கிற அந்த பழைய அழிவுள்ள சரீரங்களை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா, “பாருங்கள், இப்பொழுது, என்னால் இதை விசுவாசிக்க முடிகிறதா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுவீர்களா? 222 திடீரென்று, யூதா கோத்திரத்து சிங்கத்தின் வீரம் அவர்களுக்கு உண்டாகும் அளவிற்கு அவர்கள் அவ்வளவாய் உயிர்பிக்கப்பட்டனர், அந்த அசைவாட்டும் கதிர்கட்டின் மேல். ஓ, அந்தக் கழுகு தமக்கு சொந்தமானவர்களை அழைக்க வந்திருக்கிறதே! “அவர்கள் மரணபரியந்தம் அவர்களுடைய ஜீவியங்களில் அன்பு கூரவில்லை.” ஆமென். இன்னும் அநேகர் தங்களுடைய ஜீவனின் இரத்தத்தைக் கொடுக்கப் போகிறார்கள் இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்திற்காகவும், அதனுடைய இளஞ்சிவப்பு நிற இரத்த வெள்ளத்திற்காகவும். 223 கடைசி நாளில் மணவாட்டியில், குமாரன் மீண்டும் வெளிப்பட வேண்டும். உயிர்ப்பிக்கும் வல்லமை வர வேண்டியதாயிருக்கிறது, மரித்த ஸ்தாபனங்களிலிருந்தும் மற்றும் கோட்பாடுகளிலிருந்தும், ஜீவனுள்ள தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைக்கு அவர்களை உயிர்ப்பிக்கவே. ஓ!
82224 இல்லை, அது அவர்களை புதிய ஜீவனுக்கு உயிர்ப்பித்தது. இப்பொழுதும் அது நமக்கு அதேக் காரியத்தைச் செய்கிறது. கவனியுங்கள், ஆகையால், அவர்கள் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையில் அவ்வளவாய் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தனர். இப்பொழுது நான்… இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நான் உங்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 225 உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களுடைய ஆத்துமாவில் மாத்திரமல்ல, ஆனால் அது அவர்கள் மேல் முழுவதும் இருந்தது. அது…உயிர்ப்பிக்கும்படி, இயங்கும் சக்தி உள்ளே வந்தது மாத்திரமல்ல, ஆனால் அது இயக்கவியலை உயிர்ப்பித்தது. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? அவர்களுடைய நாவுகள் வேறொரு பாஷையில் பேசத் துவங்குமளவிற்கு அவர்கள் அவ்வளவாய் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தனர், அவர்கள் தங்களுடைய கரங்களை… அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைத்தபோது, அவர்கள் சுகமடைந்துவிடுமளவிற்கு, அவர்கள் அவ்வளவாய் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்பட்டிருந்தனர். “அது சாவுக்கேதுவான உங்களுடைய சரீரத்தை உயிர்ப்பித்தது.” அவர்கள் தங்களுடைய கரத்தை மேலே வைப்பதன் மூலம் சுகமடைந்தனர்.
83226 ஆவியானவர் தேவனோடு அவர்களுடைய ஐக்கியத்தை உயிர்ப்பித்தார், அவர்களும் கூட தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக உயிர்ப்பிக்கப்பட்டிருந்தனர், ஒரு நபர் மரித்போது, அவர்களுடைய ஆத்துமாக்கள் மரித்துப் போய்விட்டிருந்தன, அது அவனை மீண்டும் ஜீவனுக்கு திரும்ப அழைத்தது. ஆமென்! மகிமை! இப்பொழுது நான் பக்தி பரவசப்படுவதை உணருகிறேன். 227 அது உண்மை, உயிர்ப்பிக்கப்பட்டது! அவருடைய உயிர்த்தெழுதல் தமக்காக மாத்திரமல்ல, ஆனால் அங்கே வைக்கப்பட்டிருக்கிற இந்த முன்குறிக்கப்பட்ட வித்திற்கு, விருப்பமுள்ள யாவருக்குமானதாய் இருந்தது. உயிர்ப்பிக்கிறது, அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பிக்கிறது! 228 அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தனர்; அவர்கள் சொஸ்தமானார்கள். அவர்கள் ஜெபித்தனர்; அவர்கள் ஆவியில் தரிசனம் கண்டபோது, மரித்தோரை உயிர்ப்பித்தனர். அது உண்மை. “சாவுக்கேதுவான அவர்களுடைய சரீரத்தை உயிர்ப்பித்தனர்.” 229 அது உங்களுக்குள்ளாக வந்தால்; அது அவ்வண்ணமாய் இருக்குமானால்…இப்பொழுது, நீங்கள் அதை அவ்வண்ணமாய்க் கூறலாம்; ஆனால் அது அவ்வாறே இருக்குமானால், இந்த அடையாளங்கள் அதை பின்தொடரும், நீங்கள் பாருங்கள். “அது சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கிறது.” அது உங்களை உயிர்ப்பிக்கும். 230 இப்பொழுது, கவனியுங்கள், தேவனுடைய பிரசன்னத்தில் உயிர்ப்பித்தல். ஏன்? அது இயேசுவை கல்லறையிலிருந்து எழுப்பின தேவனுடைய ஆவியாய் இருந்தது. மேலும், தேவனுடைய ஆவி, “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்,” கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. நீங்கள் அதை மேலே நோக்கிப் பார்த்தால், ஸோயீ, அது உங்கள் மூலமாக அசைவாடி, (அவர்களுடைய) சிந்தையையும் கூட உயிர்ப்பிக்கிறது.
84231 இப்பொழுது பாருங்கள். ஆவியானவர் உங்களுக்குள் வாசம் செய்கிறார் என்று எப்படி உங்களால் கூற முடியும்? நீங்கள் சரியென்று நினைத்த ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் செய்திருந்தாலும், நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா அல்லது இல்லையா என்பது இங்கே உங்களுடைய அத்தாட்சியாகும். கிறிஸ்துவுக்குள் இருந்த ஆவி உங்களுக்குள் இருக்குமானால், அது உங்களை வார்த்தைக்கு உயிர்ப்பிக்கிறது, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருக்கிறார். அது, முரண்பாடாக, வார்த்தையிலிருந்து உங்களை உயிர்ப்பித்தால், அப்பொழுது அது கிறிஸ்துவின் ஆவி அல்லவே! …அது வார்த்தையில் உங்களிடம் அசைவாடும் வரைக்கும், நீங்கள் என்ன செய்திருந்தாலும் கவலையில்லை. “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது, அவைகள் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கும்,” ஒவ்வொரு வார்த்தையினாலும்! அன்றொரு நாள் நான் அதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன்.
85232 என்னுடைய சொந்த தாயார், அவள் இப்பொழுது மரித்துப் போய்விட்டாள். அவள் மிகவும் வினோதமான ஒரு பெண்ணாயிருந்தாள். அவள் கிட்டத்தட்ட, பாதி இந்தியப் பெண்ணாயிருந்தாள் என்பதை, நீங்கள் அறிவீர்கள். ஆனால் அங்கே அவள் சொப்பனம் காணாத ஒரு நபராயிருந்தாள். ஆனால் நான் நினைக்கிறேன்…அவளுடைய வாழ்நாள் முழுவதும், அவள் நான்கு அல்லது ஐந்து சொப்பனங்களை மாத்திரமே கண்டிருந்தாள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் ஒரு சொப்பனம் கண்டபோது, அது உண்மையாயிருந்தது. அவள் ஒரு சொப்பனம் கண்டாள், அது உண்மையாயிருந்தது. 233 அநேக ஆண்டுகளுக்கு முன்னர், நான் முதன் முதலாக பிரசங்கிக்கத் துவங்கின ஒரு சமயம் எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் சரியாக இங்கே சாலையில், இங்கிருந்து மேலே வசித்துக் கொண்டிருந்தோம். நான் இங்கே இந்த சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவள் ஒரு சொப்பனங்கண்டாள், அதாவது நான் இங்கே மூன்று படிகளுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன். நான் நின்று, ஒவ்வொருவரிடமும் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அவர்கள் நெடுஞ்சாலையை அடைவதற்கு முன்பு அவர்கள் இந்த மூன்று படிகளுக்கு மேலே செல்ல வேண்டும். நெடுஞ்சாலையில் ஒரு சிறிய முத்து போன்ற வெள்ளைக் கோடு உள்ளது, அது பரலோகத்தின் வாசல்களுக்குள்ளாக, முத்து வாசல் வரை செல்கிறது. அந்த முத்து இந்த படிகளின் உச்சி வரை நீட்டப்பட்டிருந்தது. அது சரியாக இன்றைக்கு என்னுடைய செய்தியாயிருக்கவில்லையென்றால்: நீதிமானாகுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்! ஒரு நபர் அந்த நெடுஞ்சாலையில் நடந்து செல்ல, இந்த மூன்று படிகளின் வழியாக வர வேண்டும் என்று நான் கூறிக்கொண்டிருந்தேன். மேலும் கூறினதோ…
86234 அங்கே ஒரு பெண்மணி வந்தாள். இப்பொழுது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜனங்கள் எந்தவிதமான காலணிகளை அணிந்திருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே ஒரு பெண்மணி, அவர்கள் இன்றைக்கு அணிவது போன்ற ஒரு பெரிய ஜோடி, கூரான குதிங்கால் கொண்ட காலணிகளை அணிந்திருந்தாள். அவள் வந்தாள். நான், “சகோதரியே, ஒரு நிமிடம் பொறுங்கள். நீங்கள் அதைக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில் நடக்க முடியாது” என்றேன். நான், “உங்களால்—உங்களால் அதைச் செய்ய முடியாது” என்றேன். 235 அவள், “ஆ!” என்றாள். அவள் மற்ற பெண்களை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “அவரை நம்ப வேண்டாம். அவன் ஒரு பைத்தியக்காரன். பார்த்தீர்களா? அவரை நம்பாதீர்கள். நான் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, இன்னும் அவ்விதமாக நடக்க முடியும் என்பதை நான் உனக்கு காண்பிப்பேன்” என்றாள். அவள்…நான் அவளை அப்படியே விட்டுவிட்டேன். அதைக் குறித்து மேற்கொண்டு ஒன்றும் செய்ய முடியவில்லை, அவளைத் தடுக்க முடியவில்லை. அவள் நெடுஞ்சாலையில் குதித்தாள். அவள் அந்த சகோதரியை திரும்பிப் பார்த்து, “பாருங்கள், நான் உங்களிடம் கூறினேனே!” என்றாள். அவள் ஓடத் துவங்கினாள், அவள்… 236 ஏசாயா 5-ம் அதிகாரத்தில், “கழுத்தை நெறித்து நடப்பார்கள்” என்று வேதம் கூறியுள்ளதை, நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், அவர்கள் முன் பக்கமாக சாய்ந்து இருக்க வேண்டியதாய் இருந்தது; அவர்கள் அவ்வாறு தான் இருக்க வேண்டி இருந்தது. “ஒய்யாரமாய் நடப்பார்கள்…” அவர்கள் நெளிந்து, “அவர்கள் ஒய்யாரமாய் செல்லும்போது, தங்கள் குதிங்கால் பாதங்களினால் ஒரு ஒலியை உண்டாக்குகிறார்கள்; பாருங்கள், கடைசி நாளில் சீயோனின் குமாரத்திகள்.”
87237 அவள் அந்த நெடுஞ்சாலையில், தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடத் துவங்கினாள். சிறிது நேரம் கழித்து, சாலை குறுகிக்கொண்டே சென்றது. அவள் தள்ளாடத் துவங்கி, இந்தவிதமாக ஒடுங்கிக் கொண்டே சென்றுவிட்டாள். 238 தாயார், “என் வாழ்க்கையில் நான் கேட்டதிலேயே மிகவும் பயங்கரமான கூக்குரல்கள், அந்த ஸ்திரீ அந்த அக்கினி ஜூவாலையிலும் புகையிலும் விழுந்து, அந்தவிதமாக கீழே சென்று கொண்டிருந்தாள்” என்று கூறினாள். “நான் திரும்பிப் பார்த்து, ‘பார்த்தீர்களா?’ என்று கேட்டேன்”, என்றாள். 239 அவள் எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்தாள், ஒரு வார்த்தையைத் தவிர, பாருங்கள், எல்லாவற்றிலும் ஒரு வார்த்தையைத் தவிர. நிச்சயமாக, பெந்தேகோஸ்தே ஸ்திரீகள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அதன்பின்னர் தோல்வியடைகின்றனர். முற்றிலுமாக. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அவள் அதில் தவறிப்போனாள். நான் கூறினதுபோல, பாருங்கள், சரி, அவள் உள்ளே சென்றிருப்பாள், ஆனால், பாருங்கள், அவள் செவிகொடுக்கத் தவறினாள்; என்ன நடக்கப் போகிறது என்று அவளிடம் கூறிக்கொண்டிருந்தேன். அவர் சீஷர்கள், அப்போஸ்தலர்களைக் கொண்டு சுவிசேஷத்தை எழுதினார், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் போன்றவர்களின் உபதேசங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்.
88240 இப்பொழுது இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கவனியுங்கள், ஸோயீ, வார்த்தையைக் கொண்டு வருகிறது, அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இருந்த சிந்தை உங்களுக்குள் இருந்தது. நீங்கள் எழும்பினீர்கள் என்பதை, நான் உங்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினபோது, அவர் உங்களையும் எழுப்பினார். அவரோடு கூட ஜீவனுக்கு உயிர்ப்பிக்கப்படுகிறீர்கள், நீங்கள் இப்பொழுது ஜீவனுக்கு உயிர்ப்பிக்கப்படுகிறீர்கள், அப்பொழுது நீங்கள் அவருடைய சிந்தனைகளில் ஒரு தன்மையாகவே இருந்தபோதிலும், ஆனால் தேவன் எல்லாவற்றையும் அவருக்குள் கண்டிருந்தார், பாருங்கள். தேவன் சரீரத்தை நோக்கிப் பார்த்தபோது… 241 ஆவியானவர் அவரை கெத்சமனே தோட்டத்தில், விட்டுச் சென்றார். அவர் ஒரு மனிதனாக, மரிக்க வேண்டியதாயிருந்தது. நண்பர்களே, அவர் அதைச் செய்ய வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் தேவனாயிருந்தார். தேவன் அந்த மாம்சத்தை அபிஷேகித்தார், அது மானிட மாம்சமாக இருந்தது. அவர்…தேவன் என்ற முறையில், அவர் அங்கு சென்றிருந்தால், அவர் அந்த விதமான மரணத்தில் ஒருபோதும் மரித்திருந்திருக்கமாட்டார்; தேவனைக் கொல்ல முடியாது. ஆனால் அவர் அதைச் செய்ய வேண்டியதாயிருக்கவில்லை. 242 ஆனால் நினைவிருக்கட்டும், அவருக்குள் உங்களோடு அவர் அங்கு சென்றார். பாருங்கள், தேவன் மணவாளனிடமிருந்து மணவாட்டியை ஒருபோதும் பிரிக்கவில்லை. ஆகையால் தேவன் கிறிஸ்துவின் சரீரத்தை நோக்கிப் பார்த்தபோது, அவர் ஆணும் பெண்ணுமாகவே கண்டார். அவை யாவும் அந்த ஒரே சரீரத்தில் மீட்கப்பட்டது. பார்த்தீர்களா? அவர்கள் ஒரே, ஒரே வார்த்தையாயிருக்கிறார்கள். மணவாளனைக் குறித்துப் பேசிய அதே வார்த்தை மணவாட்டியைக் குறித்துப் பேசுகிறது.
89243 பாருங்கள், எப்படி மணவாட்டி வந்து, அவரால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் வெளிப்படுத்தத் தவறிப்போக முடியும்; மணவாளன் வரும்போது, அவர் மணவாட்டியாக இருக்கமாட்டாரா? ஆனால் அவர் மரித்தோரிலிருந்து தம்மைத்தாமே உயிரோடெழுப்புவதன் மூலம் அதை நிரூபிக்கும்படியான ஒவ்வொரு காரியத்தையும் செய்தபோது, அதன்பின்னர், அப்பொழுது மணவாட்டியும் அதேக் காரியத்தைச் செய்ய வேண்டியதில்லையா, இந்த கடைசி நாட்களில் அவள் எப்படி இருப்பாள் என்று வார்த்தை கூறியுள்ளதோ, அதே விதமாக சரியாக இருக்க வேண்டுமே? அவள் மல்கியா 4-ம் அதிகாரத்தினூடாக திரும்பி வர வேண்டுமல்லவா? சோதோமின் நாட்களில் இருந்தது போன்று அவள் வெளிப்படுத்தப்பட வேண்டியதில்லையா? உலகம் உள்ளதைப் போலவே இருக்க வேண்டுமல்லவா? இந்தக் காரியங்கள் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையின் பரிபூரண அடையாளங்காட்டலாயிருக்கவில்லையா? 244 சரி, நண்பர்களே, நான் உங்களை நீண்ட நேரம் வைத்திருக்கிறேன் என்பதை நான் அறிவேன், இரவு உணவிற்காக இன்னும் பதினைந்து நிமிடங்கள் உள்ளன, ஆனால் அதற்குள் நான் முடித்துவிடுவேன். ஆனால் கவனியுங்கள், இங்கே பாருங்கள், அது என்ன ஒரு பரிபூரணமான காரியமாய் உள்ளது. நான் உங்களை எப்பொழுது மீண்டும் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியாது. பார்த்தீர்களா?
90245 பாருங்கள், இதைக் கவனியுங்கள். ஆனால் தேவனோ மணவாளனுக்குள் மணவாட்டியை முன் கூட்டியேக் கண்டார். அல்லேலூயா! பாருங்கள், ஆதாமைப் போல, தம்முடைய மனைவியை இரட்சிக்க, அவர் அவளோடு செல்ல வேண்டியதாயிருந்தது. ஆதாம் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான்; ஏவாள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை அறியாதிருந்தாள். ஆனால் ஆதாம் தன்னுடைய மனைவியோடு வெளியேறினான். பார்த்தீர்களா? இயேசு தம்முடைய மனைவியின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, அவளுக்காக பாவமானார். நினைவில் கொள்ளுங்கள், அவர் நீங்கள் ஆனார், நீங்கள் அவருடைய ஸ்தானத்தில் நிற்கும்படியாக, அவர் உங்களுடைய தண்டனையில் நின்றார். நீங்கள் அவருடைய ஸ்தானத்தில் நிற்கும்படியாக, அவர் உங்களுடைய ஸ்தானத்தில் நின்றார். என்னே ஒரு அன்பு! என்னே ஒரு ஐக்கியம்! நாம் எப்படி அதை மறுக்க முடியும்? நண்பரே, அவரை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நாம் எப்படி செய்ய முடியும்? என்னால் அதன் பேரில் மணிக்கணக்கில் தரித்திருக்க முடியும், ஆனால் நாம் இன்னும் சற்று மேற்கொண்டு பார்ப்போம்.
91246 இன்றைய பெந்தேகோஸ்தே அனுபவத்தைப் போலவும், இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியின் வருகையைப் போலவும், வாக்களித்தப்படி, ஒரு உரிமைப் பத்திரத்தின் சாரம்சத்தைப் போன்றதாகும். பார்த்தீர்களா? 247 இப்பொழுது, நீங்கள் ஒரு உரிமைப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். நிச்சயமாக. பார்த்தீர்களா? நீங்கள் ஒரு இடத்திற்கு ஒரு உரிமைப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம், ஆனால் அது இன்னமும் உங்களுடையது என்று கூற முடியாது. இல்லை ஐயா. எங்கிருந்தோ யாரோ ஒருவர் உள்ளே வந்து அதன் பேரில் உரிமை கோரலாம். ஆனால் நீங்கள் ஒரு சாராம்சத்தை எடுத்துக் கொள்ளும்போது, அதற்கு எதிராக இருக்கிற ஒவ்வொரு காரியமும், அஸ்திபாரத்திலிருந்து முறியடிக்கப்படுகிறது. அது சரியா? 248 ஒரு மனிதன் தான் வார்த்தையை விசுவாசிக்கிறேன் என்று கூறி, அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அது உரிமைப் பத்திரத்திற்கு சாரம்சமாய் இருக்கிறது. அது உங்களுக்கு அனுமதி அளிக்கிறது, நீங்கள் அந்த சாரம்சத்தை உடையவர்களாயிருக்கும்போது, அதில் உள்ள ஒவ்வொரு துணுக்கும் உங்களுக்கு சொந்தமானது, அதிலுள்ள ஒவ்வொரு காரியமும் உங்களுக்கு சொந்தமானது. ஆமென்! அது நமக்கு அந்த சாரம்சத்தை அளிக்கிறது, பரிசுத்த ஆவியானவர் இந்த உரிமைப் பத்திரத்தின் மேல் வரும்போது, தேவன் முன்பு உலகத்தோற்றத்துக்கு முன்னே ஜீவபுஸ்தகத்தில் பெயரை எழுதியிருந்தார்; ஆனால் ஒரு மனிதன் மற்றும் ஸ்திரீயினூடாகப் பிறந்து, பாவத்திற்கு உட்பட்டு, பாவத்தின் குற்றவாளியாயிருந்தான். ஆனால் நான் அதை விசுவாசித்தபோது, நான் அந்தப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டேன்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, என்னுடைய தாயார் அதை செய்திருந்தாலும், என்னுடைய தந்தை அதை செய்திருந்தாலும், என்னுடைய பாட்டி அதை செய்திருந்தாலும் எனக்கு எதிரான ஒவ்வொரு காரியத்திற்கும் அது அச்சாரமாக இருந்தது.… 249 ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், தாத்தா பாட்டி மூலமாக வந்த, காக்காய் வலிப்பினால் பாதிக்கப்பட்ட அந்த சிறு பிள்ளைக்காக நான் ஜெபித்தேன். காக்காய் வலிப்பு அந்தக் குழந்தையின் மேல் வந்தது என்று, நான் கூறினேன்.
92250 ஆனால் சாராம்சம் வந்துவிட்டபோது, அது விட்டுவிட்டுகிறது, எல்லாவற்றையும் விட்டுவிடுகிறது. அப்பொழுது நான் ஒரு சாராம்சத்தை உடையவனாய் இருக்கிறேன். ஆமென்! கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பிய ஆவியானவர் உண்மையென்றால், நான் அந்த சரீரத்தின் பாகமாயிருக்கிறேன் என்ற ஒரு சாரம்ச உரிமை பத்திரம் எனக்கு உண்டு, பரிசுத்த ஆவியின் சாராம்சம் அவருக்குள் ஜீவித்தது போலவே சரியாக அந்த வார்த்தையின் சரீரத்தை ஜீவிக்கச் செய்ய, கடைசி நாளில் அவர் வாக்குப்பண்ணினார். சாராம்சம்! என்னுடைய பாவங்கள் யாவும் ஒழிந்துபோயின, உங்களுடைய பாவங்கள் யாவும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் ஒழிக்கப்பட்டுவிட்டன, தேவன் கிருபையினால், முன்னறிவினால் எனக்கு அளித்த உரிமைப் பத்திரத்திற்கு ஒரு சாராம்சமாக பரிசுத்த ஆவி வருகிறது. ஓ, என்னே!
93251 நீங்கள் எதைக் குறித்து பயந்தீர்கள்? அவர், “பயப்படாதே; மரித்து மீண்டும் உயிரோடிருக்கிறவர் நானே; நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்; அவர்கள் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவர்களாயிருப்பார்கள்” என்றார். எதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள். மரணம் கூட உங்களை புண்படுத்தப் போவதில்லை. கவனியுங்கள். அழகானது! நாம் இப்பொழுது துரிதமாக செல்வோம். 252 சாரம்சமான உரிமைப் பத்திரம்! கடன் தீர்க்கப்படுகிறது. அதற்கெதிரான யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. ஹா-ஹா-ஹா! மகிமை! நான் முட்டாள்தனமாக நடந்து கொள்ளலாம், ஆனால் நான் நன்றாக உணருகிறேன். கவனியுங்கள். பார்த்தீர்களா? ஓ, ஒரு சாரம்சமான செயல், அது என்ன பொருட்படுத்துகிறது என்பதை நீங்கள் உணருகிறீர்களா? சகோதரனே, அது என்ன பொருட்படுத்துகிறது என்பதை நீங்கள் உணருகிறீர்களா? எதுவுமே அதை உங்களிடத்திலிருந்து எடுத்துப் போட முடியாது. ஆமென். நான் உரிமைப் பத்திரத்தை பெற்றுக் கொண்ட ஒருவன். ஆமென். என்ன ஒரு… 253 என்னே உரிமைப் பத்திரம்? நான் இப்பொழுது என்னுடைய பயனாளியின் மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதலைக் குறித்து கிரயம் செலுத்தியுள்ளேன். நான் அவராகும்படிக்கு, அவர் நானாக மாறினார். இப்பொழுது, நான் ஒரு குமாரனாகும்படிக்கு, ஆமென், சாரம்ச உரிமை பத்திரத்தை உடையவனாய் இருக்கும்படிக்கு, அவர் ஒரு பாவியானார். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்,” பாருங்கள், சாரம்ச உரிமைப் பத்திரம்! இப்பொழுது துரிதமாக, முன்பு…நமக்கு இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளன.
94254 இப்பொழுது நாம் துரிதமாக, ஆவியின் உயிர்ப்பித்தலை, கவனிப்போமாக. நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக நான் உங்களுக்கு சில அடையாளங்களைக் காண்பிக்கப் போகிறேன். பாருங்கள், இப்பொழுது என்ன என்பதைக் கவனியுங்கள், இந்த “உயிர்ப்பிக்கும் வல்லமை” என்னுடைய பாடப் பொருளாயிருந்தது. குமாரன் உயிரோடெழுந்த பிறகு, பெந்தெகொஸ்தே நாளில் அது அவர்கள் மேல் எப்படி இருந்தது, அது அவர்களுக்கு என்ன செய்தது, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களுக்கு என்ன செய்தது. அது அவர்களை உயிர்ப்பித்தது. 255 இப்பொழுது அது ஸ்தேவானைக் குறித்து என்ன செய்தது என்பதை நாம் கவனிப்போம். ஸ்தேவான் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அது சரிதானே? பாருங்கள், அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அது அவனுக்கு ஒரு பயத்தையும் உண்டாக்கவில்லை. அவன், “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனமில்லாதவர்களே, நீங்கள் எப்பொழுதும் பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நிற்கிறீர்கள்; உங்கள் பிதாக்கள் செய்ததுபோல, நீங்களும் அவ்வாறே செய்கிறீர்கள். நீதிபரருடைய வருகையை முன்னறிவித்த தீர்க்கதரிசிகளில் எந்த ஒருவரை, உங்கள் பிதாக்கள் கல்லெறியவில்லை?” என்று கேட்டான். ஓ, என்னே! அவனுக்கு ஏதோ ஒரு காரியத்தைச் செய்தனர். நிச்சயமாகவே, அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அவர்கள், “நாம் அந்த நபரை ஒழித்துவிடுவோம்” என்றனர். 256 அவன் மரித்தபோது, அவனைக் கல்லெறிந்தார்கள்; அவனுடைய பரிதாபமான தலையில், கற்கள் இந்தவிதமாக அதனின்மேல் மோதினர். அவன் மேலே நோக்கிப் பார்த்து, “வானம் திறந்திருக்கக் காண்கிறேன்” என்றான். உயிர்ப்பிக்கும் வல்லமை கிரியை செய்து கொண்டிருந்தது. “வானம் திறக்கப்பட்டதையும், இயேசுவானவர் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் நான் காண்கிறேன்.” அந்தவிதமாகத்தான் உயிர்ப்பிக்கும் வல்லமை ஸ்தேவானுக்குச் செய்தது.
95257 இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த மற்றொரு நபரைக் கவனியுங்கள், அவனுடைய பெயர் பிலிப்பு என்பதாகும். அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அவன் சமாரியாவில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தான். பிசாசுகள் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தன. ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அவர்கள் ஒரு உண்மையான கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆவியானவர் அவனிடத்தில் பேசினார், ஓ, இயங்கும் சக்தி இறங்கி வந்தது, அப்பொழுது அது, “இந்த எழுப்புதலை விட்டுப் போ” என்று கூறியது. ஆனால் ஊழியக்காரர்கள் என்ன கூறுவார்கள்? அவர்கள் கூறுவது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குகிறதில்லை. பார்த்தீர்களா? அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். அவன் எரிபொருளை உடையவனாயிருந்தான். அவன் மேல் இயங்கும் சக்தி விழுந்து கொண்டிருந்தது. “வனாந்திரத்திற்குப் போ” என்றார். 258 அவன் அங்கே ஒரு மந்திரியைக் கண்டு, அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான். ஒரு மனிதன் செய்தியை எத்தியோப்பியாவிற்கு கொண்டு சென்றான். அது சரியா? அவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். 259 தேவனுக்குக் கீழ்ப்படிவதில், நீங்கள் ஒருபோதும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படாதிருந்தால், அதைச் செய்யுங்கள். அப்பொழுது உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களை பற்றிக்கொள்ளுகிறதைக் கவனித்துப் பாருங்கள். பார்த்தீர்களா?
96260 ஸ்தேவான் இந்த மகத்தான காரியத்தைச் செய்தபோது…இல்லை, ஸ்தேவான் அல்ல. ஆனால் பிலிப்புவோ அந்த மகத்தான எழுப்புதலை விட்டு தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து, அவன் நிறைவேற்றினபோது, நிறைவினால்… இந்த மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்ததின் மூலம், தேவனுக்குக் கீழ்ப்படிவதில், அது அவனைப் பற்றிக்கொள்ளும்படியாக அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான். “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின இந்த ஆவியே சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கும்.” அது பிலிப்புவை, அவன் நூற்றைம்பது மைல் தூரத்திற்கு, வேறெங்கோ, வேறொரு தேசத்தில் காணப்படாமலிருக்குமளவிற்கு உயிர்ப்பித்தது. அது அவனுடைய சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பித்தது. அவன் அதை எப்படிச் செய்தான்? அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான்.
97261 ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, இன்றைக்கு நாம் இங்கு பாலூட்டிக் கொண்டிருக்கிற சிறிய சர்க்கரை துண்டை மாத்திரம் ருசித்துக்கொண்டு இங்கு நிற்க முடியாது. நாம் பரிசுத்த ஆவியின் உயிர்ப்பித்தல் வரை, உயிர்ப்பிக்கும் வல்லமையோடு முழுமையாய் ஜெபிக்க வேண்டும். நாம் என்றோ ஒரு நாள் அந்த எடுத்துக்கொள்ளப்படுதலில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆம், ஐயா. ஆமென்! ஓ, என்னே! 262 அந்தவிமாக வெளிப்படுத்திக் கூறுவதற்காக மன்னிக்கவும். நாம் வழக்கமாக, அந்த குழந்தைக்காக அந்த சிறிய சாக்குப்பைகளை தயாரிக்கும் ஒரு தாயைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன். வயதான தாய்மார்களாகிய உங்களில் சிலருக்கு அது நினைவிருக்கும். அந்த சிறு குழந்தை வீறிட்டு அலறுகிறது; நீங்கள் கொஞ்சம் காபித் தூள் மற்றும் சிறிது சர்க்கரையை எடுத்துக் கொள்ளுகிறீர்கள், அதை ஒரு சாக்குப் பையில் சுற்றி, அவனைச் சாந்தப்படுத்த, அவன் அதை உறிஞ்சும்படி செய்கிறீர்கள். அதில் பெலமில்லை. அது அவனைக் கொன்றுவிடும். பார்த்தீர்களா? அங்கே உள்ள அந்த பழைய காஃபின் மற்றும் மற்ற காரியங்கள், அவனை அதை விழுங்கச் செய்யும்படி சிறிது இனிமையாக்குகின்றன, அது அவனுக்குள்ளாக காஃபினை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 263 நாம் அதைப் போன்ற அப்படிப்பட்ட காரியத்தைக் குறித்து சோர்ந்து போய்விட்டோம். திரும்பி வாருங்கள்! நீங்கள் கழுகுகளாயிருக்கிறீர்கள்; தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள்! திடமானவர்களாயிருங்கள்; எதுவுமே உங்களுடைய உணர்வுகளைப் புண்படுத்த முடியாது, ஆகையால் நீங்கள் மனிதனின் எல்லா அவதூறுகளிலிருந்தும் விடுதலையாயிருக்கிறீர்கள். உங்களுக்கு எதிராக யார் என்ன கூறினாலும், அது அதிக அன்பைக் கொண்டு வருகிறது. ஆமென். மேலும், உயிர்ப்பிக்கும் வல்லமை, பரலோகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கோழிகளுக்கு மேலே பறந்து சென்ற ஒரு கழுகு, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே வீற்றிருக்கிறது! ஓ! அது பிலிப்புவின் மேல் இருந்தது. அது அவனை உயிர்ப்பித்து, அவனை தூக்கிச் சென்றது.
98264 நாம் வேறொரு மனிதனை எடுத்துக் கொள்வோம். ஏனோக்கு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் இருந்தான். இப்பொழுது, அவன் ஏறக்குறைய ஐநூறு வருடங்களாக, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் சஞ்சரித்தான். அவன், “நான் அவருடைய வார்த்தையில் ஒரு முறை கூட தவறியதில்லை” என்ற, ஒரு சாட்சியை உடையவனாயிருந்தான். அந்த இயக்கவியலின் மேல், அந்த இயங்கு சக்தி அவனைத் தாக்கினபோது, அவன் அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் மிகவும் நிறைந்திருந்தான், அவன் மரிக்க வேண்டியதில்லை; அவன் பரலோக வீட்டிற்குச் சென்றான். அப்படியே நடக்கத் துவங்கினான். அவன் மிகவும்…பிலிப்புவைப் போல, அவன் முழு உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தான், காசாவுக்குச் சென்று, வேறொரு இடத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்கள் அங்கே மேல் கரையோரங்களில் அவனைக் கண்டனர். அந்த வழிக்கு பதிலாக, அவன் சென்று, ஓ, “நான் எப்படியும் ஒரு வயோதிக மனிதன். நான் அதிக உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவனாயிருக்கிறேன், எனவே நான் பூமியை விட்டு வெளியே நடந்து சென்றுவிடுவேன்” என்றான். 265 இப்பொழுது நாம் பெற்றுள்ள அதே உயிர்ப்பிக்கும் வல்லமைதான் அது. பாருங்கள், அது உங்களுடைய அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பிக்கும். அது சரிதானே? அது உயிர்ப்பிக்கும் வல்லமைகள். 266 ஏனோக்கு அந்த பரிபூரண சாட்சியோடு, அதாவது, “தேவன் என்னை செய்யும்படி கூறினதையெல்லாம், நான் செய்தேன். அவர் எனக்காக என்ன செய்யக் கூறினார் என்பதை நான் கண்டேன், நான் அதைச் செய்தேன்” என்றான். அவன் இயங்கும் சக்தியினால் நிறைந்திருந்தான், இல்லை—இல்லை இயக்கவியல், உயிர்ப்பிக்கும் வல்லமை அவனைத் தாக்க, இயக்கவியல், அது அவனை மேலே தூக்கினது. அவன் பூமியை விட்டு பரலோகத்திற்கு நடந்து சென்றான்.
99267 இப்பொழுது, இப்பொழுது எலியாவைக் கவனியுங்கள். பிறகு…பாருங்கள், எலியா, அந்த மகத்தான தீர்க்கதரிசி, அந்த நாளுக்குரிய மனிதன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். சகோதரனே, சகோதரியே, அந்நாளில் அவன் முகத்தில் வர்ணம் தீட்டப்பட்ட பெண்களை, யேசபேல்களையும், ஆகாப்களையும் எதிர்த்து நின்றான். நின்ற…அவனோடு நின்றவர்கள், எவருமே இல்லை. அவன் கடிந்துகொண்டு, பட்சித்துப் போட்டு, அங்கே நின்றான், தேவன் அவனைக் கவனித்து, ஒவ்வொரு இடத்திலும் அவனுக்கு உதவி செய்தார். உங்களுக்குத் தெரியும், அந்த வயோதிக நபர் ஒரு நாள் களைப்படைந்தான். அவன், “எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது, எனவே என்னால் மேற்கொண்டு செல்ல முடியாது” என்றான். அவனுக்கு தொண்ணூறு வயது இருக்கும் என்று, நான் யூகிக்கிறேன். உண்மையாகவே வயோதிகனாய், அங்கே சுற்றி நடந்து கொண்டிருந்தான், அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் மிகவும் நிறைந்திருந்தான். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவன் யோர்தானை நோக்கிப் பார்த்தான். ஓ தேவனே! என்னால் கிட்டத்தட்ட மறுபக்கத்தைப் பார்க்க முடிகிறது. உங்களால் முடியாதா? 268 அங்கே ஒரு ரதம் இணைக்கப்பட்டு இருப்பதை காணுமளவிற்கு, உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தான், சில அக்கினிமயமான குதிரைகளும், அக்கினிமயமான இரதமும் அங்கிருந்த ஒரு மரத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. அவன் மரிக்காமலேயே ஆற்றைக் கடந்து, வீட்டிற்குச் சென்றான். உயிர்ப்பிக்கும் வல்லமை, பரலோகத்திலிருந்து ஒரு இரதம் இறங்கி வந்து அவனை மேலே கொண்டு செல்லும்படிச் செய்தது. அவனுடைய மேலங்கியைக் கழற்றி எலியாவுக்காகத் வீசியெறிந்தான். அது உண்மை.
100269 இப்பொழுது, அதன்பின்னர் அந்த நபர் அந்த அங்கியை எடுத்தான், அது மீண்டும் சபைக்கு ஒரு மாதிரியாயுள்ளது, பாருங்கள், அந்த அங்கியை எடுத்தான். இப்பொழுது, அவன் இரண்டு முறை அற்புதங்களைச் செய்தான், அது கிறிஸ்துவுக்கும் சபைக்கும் ஒரு மாதிரியாயிருக்கிறது. பார்த்தீர்களா? எலியா நான்கு முறை செய்தான்; அவன் எட்டு முறை செய்தான். பாருங்கள், இப்பொழுது, அவன்—அவன் இரட்டிப்பான வல்லமையுள்ளவனாயிருந்தான், ஏனென்றால் அவன் அதைக் கேட்டான். “நான் செய்கிற இதைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வீர்கள்.” பார்த்தீர்களா? ஆனால் அவன் உயிர்ப்பிக்கும் வல்லமையினாலும், மற்ற ஒவ்வொரு காரியத்தினாலும், எலிசா செய்ததைக் காட்டிலும், இரட்டிப்பாக, அவன் அதிகமாகச் செய்தான். கவனியுங்கள், அவன் ஏறக்குறைய எண்பது அல்லது தொண்ணூறு வயது வரையிலும் ஒரு வாழ்க்கை வாழ்ந்தான். அவன் வயோதிகனாகவே, அவன்—அவன் மரித்தான். அவன் மரித்தான், அவர்கள்—அவர்கள் அவனை வெளியே கொண்டு சென்று அடக்கம் செய்தனர். 270 அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவனை விட்டுச் செல்லவில்லை என்பதை, பாருங்கள், நீங்கள் அறிவீர்கள். அதற்கு அநேக, அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, அவனுடைய எலும்புகளிலிருந்து மாம்சம் அனைத்தும் அழுகிப்போனபோது, அவன் ஒரு கல்லறையில் வைக்கப்பட்டிருந்தான். அவர்கள் ஒரு நாள் மரித்துப்போன ஒரு மனிதனை சுமந்து கொண்டிருந்தபோது, அவர்கள் சத்துருவைக் கண்டனர், அவர்கள் இந்த மனிதனை எலிசாவின் எலும்புகளின் மேல் வீசியெறிந்தனர். அந்த எலும்புகளின் மேல் அதிக உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது, அந்த மனிதன் மீண்டும் ஜீவிக்க குதித்தெழுந்தான். ஓ!
101271 “அது சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்கும்.” மரித்துப்போய் கல்லறையில் அழுகிப் போயிருந்தாலும், அதே சமயத்தில் உயிர்ப்பிக்கும் வல்லமை அந்த மண்ணின் மேல் தங்கியிருந்தது. அல்லேலூயா! ஊ! “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தையும் உயிர்ப்பிப்பார்.” அங்கே பின்னால் உள்ள எலியா, எலிசாவும் எலியாவும்… 272 நினைவிருக்கட்டும், அந்த மரித்த மனிதன், அந்த தீர்க்கதரிசி, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்து, கல்லறையில் கிடந்து அழுகிப்போனான்; உயிர்ப்பிக்கும் வல்லமை அதிகமாயிருந்தது, அவர்கள் மரித்த மனிதனை அவன் மேல் வீசியெறிந்தபோது, அவன் உயிர் பெற்றான். அவனால் அப்பொழுதும் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்க முடியும், அவனால் முடியவில்லையா? ஆமென். அங்குதான் காரியம்.
102273 நாம் அவருடைய மாம்சத்தின் மாம்சமாகிய இயேசு கிறிஸ்துவை, நினைவில் கொள்ளுவோம். “நாம் அவருடைய மாம்சத்தில் மாம்சமும், அவருடைய எலும்புகளில் எலும்புகளுமாயிருக்கிறோம்.” ஓ, அதிலிருந்து வெளியேற வழியேக் கிடையாது. நாம் எழும்பப் போகிறோம், அவ்வளவுதான். நீங்கள் எழும்பப் போகிறீர்கள், அவ்வளவுதான். 274 ஈஸ்டர் என்பது ஒரு பாரம்பரியத்தைக் காட்டிலும் மேலான பொருளைக் கொண்டுள்ளது. அது இப்பொழுதும் கூட, ஏனென்றால் நம்முடைய சரீரங்கள் அவரோடு உயிர்ப்பிக்கப்பட்டு, நாம் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். 275 இந்த சரீரம் கடலில் அழுகலாம்; அது நிலத்தில் அழுகலாம்; ஒரு கரண்டியளவு சாம்பலாய் இல்லாமலிருக்கலாம்; ஆனால் அவள் வந்து கொண்டிருக்கிறாள். ஏனென்றால் என் ஆண்டவரை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர் இந்த சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பித்திருக்கிறார். அது உங்களுடைய அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பித்துள்ளது. நாம் அவருடைய உயிர்த்தெழுதலின் அவருடைய பயனாளிகளாக இருக்கிறோம், அவருடைய கொள்கையான நித்திய ஜீவனைக் குறித்து நான் அதிகமாக பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர், “பயப்படாதே” என்று கூறியதில் வியப்பொன்றுமில்லை. அவர் அறிந்திருப்பார். 276 பவுல், “மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நான் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். ஆம், ஐயா! உயிர்ப்பிக்கும் வல்லமை. ஓ, என்னே!
103277 அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார், “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” எபிரெயர் 13:8. கவனியுங்கள், மேசியா, அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர்; அவருடைய மணவாட்டியும், மேசியானிக்கள், பாருங்கள், அபிஷேகம் பண்ணப்பட்டவர். 278 கவனியுங்கள், மரணம் தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமையை நிறுத்துகிறதில்லை. மரணம் அதை நிறுத்த முடியாது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்போது, அது நித்தியமாயிருக்கிறது. எதுவுமே அதை தடுத்து நிறுத்தப் போவதில்லை. நீங்கள் அதை சேணம் பூட்டமுடியாது; நீங்கள் அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது—முடியாது. நீங்கள் ஜீவிக்கிற உங்களுடைய ஜீவியம் போய்விட்டாலும், அது அதனை தடுத்து நிறுத்துகிறதில்லை; அது இருந்ததைப் போன்று நன்றாக உள்ளது. 279 கவனியுங்கள், மோசே அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருக்கிறான். அவன் அப்படித்தான் இருந்தானா? அவன் வார்த்தை அவனிடத்தில் வந்த ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் வார்த்தையின் ஒரு பாகமாக இருந்தான். அவன் அந்நாளின் வார்த்தையாயிருந்தான். அது சரியா? அவன் மரித்த, எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் மறுரூப மலையின் மேல், எலியாவுடன் நின்றான். அது சரியா? உயிர்ப்பிக்கும் வல்லமை, மரணம் அதை ஒருபோதும் எடுத்துப் போடுகிறதில்லை. இல்லை, இல்லை. “நான் அதை மீண்டும் எழுப்புவேன்.” தூதர்கள் வருகிறார்கள்; அவனை அங்கே ஒரு பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தனர். அவன் அழுகிப் போயிருந்தான், அவனுடைய எலும்புகள், மற்றவைகள் யாவும் போய்விட்டிருந்தன, ஆனால் உயிர்ப்பிக்கும் வல்லமை இன்னமும் அங்கிருந்தது. அது அவனை உயிர்ப்பித்து, மேலே கொண்டு வந்தது. அவன் அங்கே நின்று கொண்டிருந்தான். கவனியுங்கள்.
104280 நீங்கள், “எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சகோதரன் பிரான்ஹாம், அது சரியா?” என்று கேட்கலாம். ஓ, என்னே! 281 நீங்கள் மத்தேயுவை வாசிப்பீர்களானால், நான் மத்தேயு 27:51-ல், ஒரு வேதவாக்கியத்தை வைத்திருக்கிறேன். நீங்கள் அதை, எழுதி வைத்துக் கொள்ளலாம். அவர் வருவார் என்று அங்கே முன்னர் இருந்த யாவரும் விசுவாசித்தபோது… அவர் வந்த பிறகு, அவர்கள் பூமியில் உறங்கிக் கொண்டிருந்தனர் என்று வேதம் இங்கே கூறியுள்ளது. உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்கள் மேல் இருந்தது, அவர்கள் அவருடைய ஒரு பாகமாக, பரிசுத்தவான்களாக இருந்தனர். அவர்கள் அவருடைய ஒரு பாகமாயிருந்தனர், ஏனென்றால் அவர்கள் அவர் மேல் விசுவாசம் கொண்டிருந்தனர். 282 ஒரு பாவநிவிர்த்தியான, ஒரு ஆட்டின் பலியின் மூலமாக, அவர்கள் அந்த ஜீவனை மறைமுகமாக உடையவர்களாயிருந்தனர், அது மனிதனின் மேல் ஒருபோதும் ஒரு ஆட்டின் ஆவியை திரும்பக் கொண்டுவர முடியாது. இப்பொழுது எப்படி மனிதனின் ஆவியோடு, தேவன் தாமே, உங்கள் மீது, பாருங்கள், நாம் எவ்வளவு அதிகமாக உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவர்களாயிருக்கிறோம்! ஆனால் பாவத்திற்கான பாவநிவிர்த்தியின் மூலமாக, முன்னடையாளமாக ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டது. நாம் பெற்றுள்ளது மாதிரி அல்ல; அது முன்னடையாளமாயிருக்கிறது. நாம் எதைக் குறித்து பயப்படுகிறோம்? அவருடைய உயிர்த்தெழுதலைச் சுட்டிக் காட்டி, அதனோடு கல்லறைக்குச் சென்ற ஒரு மாதிரியை மாத்திரமே கொண்டிருந்த அந்த நபர்கள்.
105283 அங்கே யோபு தன்னுடைய மிகுந்த சிரமத்தின் கீழ் இருந்தபோது, என்னே, எல்லாமே அவனிடத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தன! பிசாசு, “நான் அவனை பிடித்துக்கொள்ளட்டும். நான் அவனை உம்முடைய முகத்திற்கு முன்பாக உம்மை சபிக்கும்படிச் செய்வேன்” என்றான். அதன்பின்னர் அவன் செயல்பட்டான். 284 “அவனுடைய ஜீவனை எடுக்காதே” என்றார். அவன் அவனுடைய ஜீவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் (அவன்) எடுத்துக் கொண்டான். 285 அவனுடைய மனைவியும் கூட அவனுக்கு எதிராக திரும்பினாள். அவளுடைய சுவாசம் அவனுக்கு விநோதமாகிவிட்டதாகக் கூறினான். வேறு வார்த்தைகளில் கூறினால், அவளுக்கு—அவளுக்கு அவனோடு எந்த சம்மந்தமும் இருக்காது. அவள் அவனை அதற்கு மேல் நேசிப்பதாகத் தெரியவில்லை, அப்படியே அவனைத் தள்ளிவிட்டாள். “யோபு, நீ பரிதபிக்கப்படத்தக்கவனாயிற்றே! நீ ஏன் தேவனை தூஷித்து மரிக்கக்கூடாது?” என்று கேட்டாள். “நீ ஒரு புத்தியில்லாத ஸ்திரீயைப் போல் பேசுகிறாய்” என்றான். ஓ, என்னே! 286 பாருங்கள், அவன் பெற்றிருந்ததை சரியாக பற்றிக்கொண்டான். இப்பொழுது, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவர், “நான் ஒரு பாவி அல்ல. நான் பலி செலுத்தியிருக்கிறேன்” என்றான். ஆமென். அவன் என் நிலையில் இருந்து கொண்டிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் வார்த்தையின் பேரில் இருந்தான். மற்றவர்கள் என்ன கூறினபோதிலும், அவன் வார்த்தையில் சரியாக இருந்தான். அப்பொழுது அந்த மகத்தான பயங்கரமான வேளையில்…“நீ ஒரு புத்தியில்லாத ஸ்திரீயைப் போல் பேசுகிறாய்” என்றான். அவன், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக!” என்றான். “நான் இந்த உலகத்தில் ஒன்றுமேயில்லாமல் வந்திருக்கிறேன். நான் நிர்வாணமாக இங்கே வந்தேன், நான் அதே வழியில் செல்வேன். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக!” என்றான். அங்கே உட்கார்ந்திருக்கையில், கொப்புளங்கள் ஏற்பட்டன, அவனுடைய பிள்ளைகள் மரித்து, அவன் வறுமையில் வாடிக்கொண்டிருந்தான், அவனுடைய நண்பர்கள் யாவரும் அவனுக்கு எதிராக திரும்பினர், தன்னுடைய சபை அங்கத்தினர்கள், மற்ற ஒவ்வொரு காரியமும், தன்னை ஒரு…சுரண்டிக் கொண்டு…என்ன ஒரு பரிதாபமான இழிவான நிலை! உங்களில் எவருமே இதுவரை அதைப் போன்ற நிலைமைக்கு வந்ததில்லை. அப்பொழுதும், அவன் அந்த வார்த்தையைப் பற்றிக் கொண்டிருந்தான்.
106287 அவன் ஒரு கழுகாயிருந்தான். ஓ, என்னே! நீங்கள் எல்லா நேரத்திலும் அவனுடைய கண்களை மூடி வைத்திருக்க முடியாது. இல்லை, இல்லை. உடனே, வார்த்தையின் பேரில் நின்றபோது, என்ன சம்பவித்தது? ஆகாயமானது பின்னோக்கிச் சென்றது, இடிமுழக்கங்கள் முழங்கத் தொடங்கின, மின்னல்கள் பிரகாசிக்கத் தொடங்கின, யோபு மேலே நோக்கிப் பார்த்து தரிசனத்தைக் கண்டான், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களில் அவர் இந்த பூமியின் மேல் நிற்பார். தோல் புழுக்கள் இந்த சரீரத்தையும், எலும்புகளையும் மற்ற எல்லாவற்றையும் அழித்தப் பிறகு, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அங்கே இருக்கும். நான் எனக்காக தேவனைக் காண்பேன், நான் அவரை எனக்காகவே காண்பேன். என் கண்கள் காணும் அந்நிய கண்களல்ல” என்றான். அது சரியா? “என் உள்ளிந்திரியங்கள் எனக்குள்ளே பட்சித்தாலும், இப்பொழுது என் சரீரத்திலுள்ள தோல் புழுக்கள், அதை அழிக்கும்.”
107288 உங்களுக்குத் தெரியும், தோல் புழுக்கள் உங்களிடம் வருவதில்லை. அந்தப் புழு ஏற்கனவே உங்களுக்குள் உள்ளது, உங்களுடைய சொந்த தோல் புழுக்கள். நீங்கள் அதை எப்போதாவது கவனித்தீர்களா? உங்களை ஒரு சவப்பெட்டியில் வைத்து, அதை காற்று புகாதவாறு வைத்துப் பாருங்கள்; பூச்சிகள் உங்களை அப்படியே தின்றுபோடும், ஏனென்றால் அவைகள் உங்களுக்குள் இருக்கின்றன. நீங்கள் உட்புறத்தில், துவக்கத்திலேயே, ஒரு கூட்ட பூச்சிகளாய் இருக்கிறீர்கள். 289 “தோல் புழுக்கள், தோல் புழுக்கள் என்னை அழிக்கிறது, என் மாம்சத்தை அழித்தாலும், நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைக் காண்பேன்.” 290 அந்த உயிர்த்தெழுதலின் காலையில்! மகிமை! அல்லேலூயா! மத்தேயு, இந்த மகத்தான எழுத்தாளர், 27:51, “அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, அதாவது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், பூமியின் தூளில் நித்திரையடைந்தவர்களில் அநேகர் கல்லறையிலிருந்து வெளியே வந்து, நகரத்துக்குள் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டனர்” என்றான். அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, எலியாவின் எலும்புகள் கிட்டத்தட்ட இல்லாமல் இருந்தபோதிலும், எலும்புகளின் மேல் இன்னமும் இருந்தது, யோபுவின் சரீரத்தில் ஒரு கரண்டியளவு தூசி கூட மீதியாக இல்லாமல் இருந்த போதிலும் அது இருந்தது. ஆனால் உயிர்ப்பிக்கும் வல்லமை அப்பொழுதும் அங்கிருந்தது. 291 “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின இந்த ஆவி உங்களில் வாசமாயிருந்தால், அவர் உங்களுடைய சாவுக்கேதுவான சரீரத்தையும் உயிர்ப்பிப்பார்” என்றார். இப்பொழுது துரிதமாக கவனியுங்கள்.
108292 நீங்களோ, “ஓ, நான் முன்பு வாழ்ந்திருந்தால் நலமாயிருக்கும்…” என்று கூறலாம். நீங்கள் ஒரு மேலான நேரத்தில் ஜீவிக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் யாவரும்… 293 நீங்கள் சில வேதவாக்கியங்களைக் குறித்துக் கொள்வதை நான் காண்கிறேன். சரி, முதலாம் தெசலோனிக்கேயர் 4:16-ஐ குறித்துக்கொள்ளுங்கள். பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறது. “கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்த, பரிசுத்தவான்களை, தேவன் அவரோடு கொண்டு வருவார்”…பாருங்கள், கல்லறையில், இளைப்பாறுகிற பரிசுத்தவான்கள். எலியா இருந்ததைப் போன்றே; எலிசாவைப் போல சிலர்; பாருங்கள், அவர்களில் சிலர் உயிர்ப்பிக்கப்படுவார்கள், சிலர் எடுத்துக்கொள்ளப்படுவார்கள், சிலர் கல்லறையில் இருப்பார்கள். அவர்கள் அவரோடு செல்வார்கள். “தேவ எக்காளம் தொனிக்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.” ஜீவனுள்ளவர்கள் மேல் உயிர்ப்பிக்கும் வல்லமை; மரித்தோர் மேல் உயிர்ப்பிக்கும் வல்லமை. பார்த்தீர்களா?
109294 இந்த இரண்டு தீர்க்கதரிசிகளுக்குள்ளும் அதே தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எலிசா, எலியா ஆகிய இவர்களுடைய பெயர்கள் ஏறக்குறைய ஒரேவிதமாகவே உள்ளன. மணவாளனைப் பார்க்கிறீர்களா? அவர்களில் ஒருவர் திரு. இயேசு; மற்றொருவர் திருமதி இயேசு. நீங்கள் பாருங்கள், ஏறக்குறைய அதேவிதமாகவே, அவருக்கும் அவளுக்கும் இடையே உள்ளது. பார்த்தீர்களா? 295 எலியா, அது எப்படி இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது என்று பாருங்கள். இப்பொழுது எலிசா… எடுத்துக் கொள்ளப்படுதலில் எடுத்துக் கொள்ளப்பட்டு, சபைக்கு அடையாளமாக எடுத்துக் கொள்ளப்பட்டான், சரி, எலியா; எலிசா உயிர்த்தெழுதல் வரை காத்திருந்தான். பார்த்தீர்களா? அது ஒரு பறவையைப் போன்றது, அது தன்னை சமன்படுத்திக் கொள்ள இரண்டு சிறகுகள் தேவைப்படுகின்றன. பார்த்தீர்களா? அந்த இரண்டு தீர்க்கதரிசிகளிலும் சபையானது அடையாளங்காட்டப்பட்டது. “கர்த்தருடைய வருகை வரைக்கும் உயிரோடிருக்கிற நாம், நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை; தேவ எக்காளம் தொனிக்கும்” என்று கூறி, இரு செட்டைகளும் ஒன்று சேர்ந்து வரும், அப்பொழுது நாம் பறந்து செல்வோம், அல்லேலூயா, பறந்து செல்வோம். காரணம், (என்ன?) ஜீவனுள்ள, அல்லது மரித்த, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை இன்னமும் ஜீவிக்கிறது. 296 கவனியுங்கள். நினைவில் கொள்ளுங்கள், இந்த காரியங்கள் என்னவென்பதை காண உயிர்ப்பிக்கப்பட்டதை, இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இந்த நாளின் உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கவனியுங்கள். நினைவிருக்கட்டும், நாம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம். அண்மையில் உதவிக்காக…
110297 நம்முடைய கர்த்தர் கூறினார் என்று நான்—நான் நினைக்கிறேன், பவுலும் அவ்வாறே செய்தான், “பிதாவானவர் எனக்கு காண்பித்ததை, நான் ஒன்றையுமே மறைத்து வைக்கவில்லை. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றான். இந்தக் கடைசி நாட்களில் நம் மேல் அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கண்டபோது, வியாதியஸ்தர் சுகமடைவதைக் காண, அவர் நமக்கு உயிர்ப்பிக்கும் வல்லமையைக் கூட அருளினார். ஆதி நாட்களில் அவர்கள் மேல் இருந்ததுபோல, உயிர்த்தெழும் வல்லமை நமக்கு மத்தியில் கிரியை செய்வதை நாம் கண்டிருக்கிறோம், பாருங்கள், அது தரிசனத்தின் மூலம் திரும்பக் கொண்டு வரப்படுவதையும், மரித்தோரை எழுப்புவதையும், அது வியாதியஸ்தரை சுகப்படுத்துவதையும் பாருங்கள்.
111298 அன்றொரு நாள் நான் இங்குள்ள வாலிப டோனாவன் வீர்ட்ஸ் என்பவனிடம் கூறிக்கொண்டிருந்தேன், நீங்கள் யாவரும் அவனை அறிவீர்கள் என்று நான் யூகிக்கிறேன். நான் அவனோடு வேட்டையாடிக்கொண்டிருந்தேன். பரிதாபமான வாலிப நபர்…அவன் ஒரு அருமையான வாலிப பையன். அவன் இங்கே சபைக்கு வருகிறான். அவன்…என்னுடைய ஒரு நல்ல நண்பன். மேலும் அவன்…அவன், “உங்களை தொல்லைப்படுத்த விரும்பவில்லை” என்றான். 299 நான் அவனுடைய காதை, உட்புறம், வெளிப்புறம் முழுவதுமாக நோக்கிப் பார்த்தேன். நான், “டொனாவன், நீ எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டேன். அந்தவிதமாக , அவனைக் கரம் பிடித்துப் பார்த்தபோது, அது ஒரு புற்று நோய்யாய் இருந்தது. நான், “டோனாவான், உன்னுடைய காதுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். 300 அதற்கு அவன், “சகோதரன் பிரான்ஹாம், எனக்குத் தெரியாது. ஏறக்குறைய ஆறு, ஏழு மாதங்கள், தொடர்ந்து…” என்றான். அதற்கு நான், “நீ ஏன் அதைக் குறித்து ஒன்றும் கூறவில்லை?” என்று கேட்டேன். 301 “சகோதரன் பிரான்ஹாம், நான்—நான் உங்களை தொல்லைப்படுத்த விரும்பவில்லை” என்றான். நான், “அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “எனக்கு ஒரு யோசனை உண்டு” என்றான். 302 நான் என்னுடைய கரத்தை அவன் மீது வைத்தேன், ஒரு வார்த்தையும் கூறவில்லை. அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, அதில் ஒரு வடு கூட இல்லை. அது என்ன? உயிர்ப்பிக்கும் வல்லமை, பாருங்கள், அது உங்களுடைய அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பிக்கும். அவனுடைய காது அரித்துப்போயிருக்கும், அவனுடைய மூளை செயலிழந்திருக்கும், பாருங்கள், அவன் மரித்திருப்பான். ஆனால், உயிர்ப்பிக்கும் வல்லமை! பார்த்தீர்களா?
112303 ஒரு நாள் நான் களைப்புற்றிருந்தபோது, நானே, ஏறக்குறைய…நான், “நீ…மகனே, நீ முன்னேறுவது நல்லது, உனக்கு ஐம்பது வயதாகிறது. நீ, கர்த்தருக்காக எந்தக் காரியத்தையாவது செய்யப்போவதாயிருந்தால், நீ துரிதமாக அதைச் செய்வது நல்லது. உனக்கு வயதாகிக் கொண்டே போகிறது” என்றேன். பார்த்தீர்களா? அங்கே அந்த காலையில், உயிர்ப்பிக்கும் வல்லமை வந்தபோது, அவர் என்னை திரைக்குப் பின்னால் காணும்படி செய்தார், நான் உங்கள் எல்லோரையும் அங்கே கண்டேன். ஹூ-ஹூ. பார்த்தீர்களா? அவர், “நீ எப்போதும் நேசித்தவை, உன்னிடத்தில் அன்பு கூர்ந்த யாவும், அவைகள் உனக்கு அளிக்கப்படுகின்றன” என்றார். பார்த்தீர்களா? அந்தவிதமாக அவர்கள் எல்லோரையும் நான் கண்டேன். அது என்னவாயிருந்தது? உயிர்ப்பிக்கும் வல்லமை. 304 வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதினவனாகிய யோவான் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தவனாய், எழும்பி நின்று, துவக்கத்தில் இருந்து முடிவு வரை கண்டான். 305 ஏசாயா உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்து, எழுந்து நின்று ஆயிரவருட அரசாட்சியையும் மற்ற எல்லாவற்றையும் கண்டான். 306 உயிர்ப்பிக்கும் வல்லமை! “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர், உங்களில் வாசமாயிருந்தால், அது உங்களுடைய சாவுக்கேதுவான சரீரத்தை…சாவுக்கேதுவான சரீரத்தை உயிர்ப்பிப்பார்.” நினைவிருக்கட்டும், உயிர்ப்பிக்கும் வல்லமை!
113307 இந்த நாளில் நாம் என்ன கண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். ஏழு முத்திரைகளை திறக்க, உயிர்ப்பிக்கும் வல்லமை நமக்கு வந்துள்ளது. அது என்னவாயிருந்தது, ஒரு மனிதனின் அறிவுத்திறனா? இல்லை, தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை. பாருங்கள், இது சம்பவிக்கும் என்று தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை முன்னறிவித்தது. பாருங்கள், தேவனுடைய உயிர்ப்பிக்கும் வல்லமை உலகத்தை அதற்கு சாட்சி பகரச் செய்தது, அது சத்தியமாயிருக்கிறது. கர்த்தருடைய தூதனானவர், ஒரு அக்கினி ஸ்தம்பத்தில், சுற்றிலுமிருந்தார் என்று, நான் உங்களிடம் கூறியிருந்தேன்; உயிர்ப்பிக்கும் வல்லமை அது சத்தியம் என்பதை உலகத்தை சாட்சி பகர வைக்கட்டும். மேலும், அதில், அது என்னவாயிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை; இந்த ஒரு வழியாக நோக்கிப் பாருங்கள், அங்கே மேலே நம்முடைய கர்த்தர் இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொண்டோம், நீங்கள் பாருங்கள்.
114308 அவரே அந்த முத்திரைகளைத் திறந்தார். அவரே அந்த முத்திரைகளாயிருக்கிறார், ஏனென்றால் முழு தேவனுடைய வார்த்தையும் கிறிஸ்துவாயிருக்கிறது, கிறிஸ்து திறக்கப்பட்ட முத்திரைகளாயிருக்கிறார். அப்படியானால் முத்திரைகள் திறக்கப்படுவது என்றால் என்ன? கிறிஸ்துவை வெளிப்படுத்துதல். 309 அதே ஏழு தூதர்களும், முழுவதும் முடிவுற்ற ஏழு சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர், மேலும் நாங்கள் அதைப் பார்க்கவும் கூட முடியவில்லை. அவர்கள் அதை எடுத்தனர், அவர்கள் படம் எடுத்தனர், நாங்கள் அல்ல. அவர் அங்கே நின்றுகொண்டிருக்கிறார், உன்னத நீதிபதி; அவர் அல்பாவும் ஓமெகாவுமாக, ஆதியும் அந்தமுமாயிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது. என்னே அடையாளம்! உயிர்ப்பிக்கும் வல்லமை அதை நமக்குச் செய்தது. 310 உயிர்ப்பிக்கும் வல்லமை அவருடைய வருகையைக் காண நம்மை அனுமதிக்கிறது. உயிர்ப்பிக்கும் வல்லமை மரணத்திலிருந்து நம்மை ஜீவனுக்குப் பறித்தெடுத்தது. உங்களுக்கு என்ன கோளாறு உள்ளது என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும் அறிந்துகொள்வதற்காக, உயிர்ப்பிக்கும் வல்லமை பகுத்தறிதலை அளிக்கிறது; நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்திருக்கக் கூடாது; நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்றும், நீங்கள் என்னவாயிருப்பீர்கள். உயிர்ப்பிக்கும் வல்லமை, இந்த எல்லாக் காரியங்களையும் அளிக்கிறதே!
115311 நம்முடைய கர்த்தராகிய இயேசு உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருக்கிறார், அவர் அதை குறித்த எல்லாவற்றிலும், ஒன்று சேர்ந்தவராய் இருந்தார். அவர் உயிர்ப்பிக்கும் வல்லமையினால் நிறைந்திருந்தார், அவர், “நீங்கள் இந்த சரீரத்தை அழித்துப் போடுங்கள், நான் மூன்று நாட்களுக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று கூறினார். உயிர்ப்பிக்கும் வல்லமையில் உள்ள நம்பிக்கையைக் குறித்து பேசுங்கள்! “இந்த சரீரத்தை அழித்துப் போடுங்கள், நான்…இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், நான் இதை மூன்று நாட்களுக்குள் எழுப்புவேன்.” 312 ஏன், ஏன் அவர் அதைக் கூறினார்? அது அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார், பாருங்கள், தவறிப்போக முடியாத தேவனுடைய வார்த்தையினால் அது அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்தது. வார்த்தை, “என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டேன், அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடீர்” என்று உரைத்துள்ளது. உயிர்ப்பிக்கும் வல்லமை அவரை உயிரோடு எழுப்பும் என்றும், ஒரு உயிரணுவும் அழிந்துபோகாது என்றும் அவர் அறிந்திருந்தார். 313 அவர், “நீங்கள் இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், நான் மூன்று நாளுக்குள்ளே இதை எழுப்புவேன்” என்றார். 314 ஏன்? அது தீர்க்கதரிசனமாய், தேவனுடைய வார்த்தையாயிருந்தது. தீர்க்கதரிசனம் உண்மையான தேவனுடைய வார்த்தையாயிருந்தால், அது தவறிப்போக முடியாது. அவர் அவரை எழுப்புவார் என்று கூறிய அதே தீர்க்கதரிசனமும், தேவனுடைய வார்த்தையும், நாம் ஏற்கனவே அவரோடு எழுப்பப்பட்டிருக்கிறோம் என்று கூறுகிறது. அவர், “பயப்படாதே” என்று கூறியதில் வியப்பொன்றுமில்லை. “அவருக்குள் இருந்த, இப்பொழுது நமக்குள்ளிருக்கிற ஆவியானது சாவுக்கேதுவான நம்முடைய சரீரத்தையும் உயிர்ப்பிக்கிறது” என்று எழுதப்பட்டுள்ளது. நண்பனே, பயப்படாதே கு-மா-ர-ன் எழுந்துவிட்டார். குமாரன் எழுந்திருக்கிறார். இல்லை…
116315 இப்பொழுது மறுரூபமாகுதலைப் பாருங்கள். நாம், ஒவ்வொருவரும், அங்கே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருந்தோம். எடுத்துக்கொள்ளப்பட்ட ஜீவனுள்ள பரிசுத்தவான்கள் இருந்தனர். அங்கே எலியா நின்றுகொண்டிருந்தான்; அங்கே மோசே நின்றான், மரித்த பரிசுத்தவான்களுக்கு பிரதிநிதித்துவ-… மேலும், அவர்கள் இருவருமே உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவர்களாயிருந்தனர். ஒருவர் மரித்தாலும், மற்றவர் மரிக்கவில்லையென்றாலும், அவர்கள் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். 316 கவனியுங்கள், ஓ, இந்த கடைசி நாட்களில் நாம் இப்பொழுது என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். யோவான் 14:12-ல் அவர் வாக்குத்தத்தம் செய்த அதே காரியம். இப்பொழுது பாருங்கள்… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] நிச்சயமாக. ஜனங்கள், “நீங்கள் அதிகாரம் கொண்டிருப்பதாக உரிமை கோருகிறீர்களா?” என்று கேட்கின்றனர். இல்லை, இல்லை, இல்லை. 317 நாம் மறுரூப மலையிலுள்ள அவர்களைப் போன்றே இருக்கிறோம், பாருங்கள். நிச்சயமாகவே, நாம் வல்லமையை உரிமைகோரவில்லை. ஆனால், நாமோ, அவர்களைப் போன்று—போன்று…மறுரூப மலையில், மோசே, “யாரென்று பாருங்கள், நான் யாரென்று பாருங்கள்” என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை, சீஷர்கள், “நான் யார் என்று பாருங்கள், நான் யார் என்று பாருங்கள்” என்று கூறவில்லை. என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? கவனியுங்கள், அவர்கள் மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவைக் கண்டனர். இயேசுவானவர் பிரதிநிதித்துவப்படுவதை, மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவைக் அவர்கள் காண விரும்பினர்.
117318 அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது, நாம் ஏதோ பெரிய நபராக இருக்க முயற்சிப்பதில்லை. ஜனங்கள் நம்மைக் குறித்து என்ன கூறினாலும் நாம் கவலைப்படுகிறதில்லை. நம்முடைய நாமம் ஒன்றுமில்லை; அது அவருடைய நாமம். நம்முடைய ஜீவியம், அது ஒன்றுமில்லை; அது அவருடைய ஜீவன். அது அவருடைய வல்லமை, நம்முடைய வல்லமை அல்ல. நாம் செய்ய விரும்புகிற ஒரே ஒரு காரியம், அவர் மகிமைப்படுவதைக் காண்பதேயாகும். அது எப்படி இருக்க முடியும்? நமக்குள்ளாக இருக்கிற அவருடைய உயிர்த்தெழுதலினால், அவர் நமக்குள் மகிமைப்படும்போதே. இன்றைக்கு, அவர் இருந்த வண்ணமாகவே அவர் மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். 319 நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? பாருங்கள், நம்முடைய வாஞ்சை மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதல்ல. நம்முடைய வாஞ்சை ஏதோ ஒரு பெரிய பெயர் அல்ல. நம்முடைய வாஞ்சை ஏதோ ஒரு சபையை உயர்த்துவதோ அல்லது ஞாயிறு பள்ளியை அதிகமாக்குவதோ அல்ல, அல்லது உள்ளே கொண்டு வர முயற்சிப்பது, பன்றியை கட்டி இழுப்பதுபோல, உள்ளே தள்ளுவது, ஒரு சுற்றுலா விருந்துக்கு ஏற்பாடு செய்வது, அல்லது திரைப்பட நட்சத்திரங்களை, சிறு வெகுமதிகளை, அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றைக் கொண்டு வர முயற்சிப்பது அல்ல. அது நம்முடைய விருப்பம் அல்ல. அவர் மகிமைப்படுவதைக் காண வேண்டும் என்பதே நம்முடைய வாஞ்சையாயுள்ளது. மகிமைப்படுத்தப்பட்டார், (என்ன?) சுயபெருமையினால் அல்ல; ஆனால் நமக்குள், நம்முடைய ஜீவியங்களில், அவர் உயிரோடிருக்கிறார் என்றும், நமக்குள் ஜீவிக்கிறார் என்றும் நிரூபிக்கவேயாகும். 320 நான் என்னை வழியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடிந்தால், வில்லியம் பிரான்ஹாம் அதை நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு, நீங்களும் நினைத்துக் கூட பார்க்காத அளவிற்கு, இயேசுவானவர் நமக்கு மத்தியில் மகிமைப்படுத்தப்படுவதை நாம் காணமுடியும். அவரைப் பார்ப்பதோ, அதுவே நம்முடைய வாஞ்சையாயுள்ளது. அதுவே உயிர்ப்பிக்கும்-…நமக்கு உயிர்ப்பிக்கும் வல்லமையை அளிக்கிறது. நாம் அவரோடு இருக்கிறோம், அவருடைய மாம்சமும் எலும்புமாய் இருக்கிறோம், அவருடைய மணவாட்டியாய் இருக்கிறோம் என்று அறிந்து கொள்வது, அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது; அவருடைய அதே ரூபகாரப்படுத்தப்பட்ட முறைகளை கண்டு, அவர் இப்பொழுது மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நமக்குள் நிரூபிக்கிறார். பார்த்தீர்களா?
118321 அவர், “பயப்படாதே” என்று கூறியதில் வியப்பொன்றுமில்லை, இப்பொழுது, கவனியுங்கள், நாம் அவரால் மீட்கப்பட்டோம், இப்பொழுது அவரோடு உயிர்த்தெழுந்திருக்கிறோம். அதைத்தான் ஈஸ்டர் ஜனங்களுக்குப் பொருட்படுத்துகிறது, “அவரோடு உயிர்த்தெழுதல்”! கவனியுங்கள். இப்பொழுது நாம் அவருடைய ஆவியை நமக்குள்ளாக உடையவர்களாயிருக்கிறோம், உரிமைப் பத்திரத்தின் சாராம்சம் முழுவதுமாக செலுத்தப்பட்டது. 322 இல்லை, நீங்கள், “பாருங்கள், நான் அங்கு அடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன்” என்று கூறாதீர்கள். நீங்கள் அதை ஏற்கனவே அடைந்துவிட்டீர்கள். “நான் அங்கு அடைந்துவிடுவேன்” என்றல்ல. நான் அதை ஏற்கனவே அடைந்துவிட்டேன். ஆனால் நான் அங்கு ஒருபோதும் அடைய முடியாது; அவர் எனக்காக அதைச் செய்தார். பார்த்தீர்களா? நானல்ல; அவரே! “சரி, சகோதரன் பிரான்ஹாம், அவர்கள் கூறுகிறார்கள்…” அவர்கள் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. அவர் எனக்காக, அதை அடையும்படிச் செய்தார். அதைத்தான் நான் விரும்புகிறேன், நான் அதைக் குறித்து அக்கறை கொண்டிருக்கிறேன். 323 அவர் வெளிப்படுத்தப்படுவதை நான்—நான் காண விரும்புகிறேன். நீங்கள் அதை எப்படி செய்ய முடியும், அவரைக் கீழே அழைக்க முடியுமா? இல்லை. அவர் உங்களுக்குள் இருக்கிறார். பாருங்கள், அவர் உங்களுக்குள் இருக்கிறார். “பாருங்கள், அப்படியானால், கர்த்தாவே, நான் என்னை வழியிலிருந்து விலக்கிக்கொள்ள முடிந்தால், உம்மால் வெளிப்படுத்த முடியும். நானே… எப்படி உம்மால் அதைச் செய்ய முடியும்? ஏனென்றால் நீர் அதை அவ்வண்ணமாய் நியமித்தீர். ‘பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் வரும்.’” கவனியுங்கள். மகிமை!
119324 அந்த எல்லா அத்தாட்சிகளும் சேகரிக்கப்பட்டு, இந்தக் காலையில் நம்மோடு இப்பொழுது, ஓ, நான் அந்தப் பாடலைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன்: அந்த உயிர்த்தெழுந்த காலையில், மரணத்தின் கயிறுகள் அறுபடும்போது, நாம் எழும்புவோம், (அல்லேலூயா!) நாம் எழும்புவோம். 325 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் எழும்புவோம்! அவருக்குள் நாம் அவருடைய ஒரு பாகமாகி, ஈஸ்டரின், மரணத்திற்குப் பின்னான ஜீவனின், அப்பொழுது இருந்ததைப் போன்றே வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய இரகசியமாகிவிட்டோம். ஒரு காலத்தில் பாவத்திலும் அக்கிரமங்களிலும் மரித்திருந்த, நாம் இப்பொழுது உயிரோடிருக்கிறோம். உண்மையான ஈஸ்டர் முத்திரை என்னைச் சுற்றியிருந்த மரணத்தை உடைத்தெறிந்துவிட்டது, நான் உயிரோடிருக்கிறேன். ஈஸ்டர் முத்திரை, துவக்கத்தில், ரோம முத்திரையின் முத்திரையை, ஈஸ்டர் முத்திரையை உடைத்து, அவர் முத்திரையிடப்பட்டார். மனுஷர், அவர்கள் மரித்தபோது, அவர்கள் போய்விட்டார்கள்; ஆனால் அவர் அந்த முத்திரையை உடைத்து அந்த இரகசியத்தை வெளிப்படுத்தினார். இப்பொழுது தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியினாலே, நம்முடைய ஜீவியங்களைச் சுற்றியுள்ள முத்திரையை உடைத்தெறிந்திருக்கிறார், கிறிஸ்து நமக்குள் ஜீவிக்கும்போது, இப்பொழுது நாம் அவரோடு உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறோம். ஓ, பக்கம் பக்கமாக! நாம் எழும்புவோம், (அல்லேலூயா!) நாம் எழும்புவோம்! (ஆமென்!) அந்த உயிர்த்தெழுந்த காலையில், மரணத்தின் தடைகள் உடைக்கப்படும்போது, நாம் எழும்புவோம், (அல்லேலூயா!) நாம் எழும்புவோம். 326 ஓ, நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கவில்லையா! நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்! முன் காலத்தில், ஒரு நாள் காலையில் ஒரு சிறிய பழைய நிலக்கரி கொட்டகையில், முத்திரைகள் உடைக்கப்பட்டு, நான் அவரோடு ஒரு புதிய சிருஷ்டியாக எழும்பினேன். அவருடைய உயிர்ப்பிக்கும் வல்லமை; குமாரன் எழுந்திருக்கிறார்.
120327 அண்மையில், ஒரு—ஒரு மீனவனைக் குறித்த ஒரு சிறு கதை எனக்கு கூறப்பட்டது. ஒரு நபர் வெளியே வந்து, ஒரு வயோதிக மீனவனைக் கூலிக்கு அமர்த்தி, அவனை மேற்குக் கடற்கரைக்கு மீன்பிடிக்க அழைத்துச் சென்றார். அன்று காலை அவர்கள் வெளியே சென்றனர். 328 உங்களில் எவரேனும் அங்கே வஞ்சிர வகை மீன்களுக்காக மீன் பிடித்திருந்தால், ஏன், என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், அங்கே வெளியே பயங்கரமான மூடுபனி காணப்படுகிறது. என்னுடைய வாலிப சகோதரன் எடி பிஸ்கல், அங்குள்ள இந்தியர்களுக்கு மிஷினரியாக இருப்பதை நான் காண்கிறேன். நாங்கள், தாமே, அந்த கடற்கரைகளில் மீன்பிடித்தோம். 329 எனவே இந்த மீன் பிடிக்கச் சென்றவன் ஒருவிதமான மீன் பிடிக்கும் அனுபவம் இல்லாதவன், உங்களுக்குத் தெரியுமா. அவன் மீன்பிடிக்கச் சென்றான், அவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் சென்றனர். பகல் வெளிச்சம் வருவதற்காக காத்துக் கொண்டிருப்பதை, நீங்கள் அறிவீர்கள். அவர்களால்—அவர்களால் அதற்கு மேல் பனி எச்சரிக்கை ஒலியைக் கேட்க முடியவில்லை, இந்த மீனவன் முழுவதும் பதட்டமடைந்திருந்தான், எனவே, “நாம் கடலில் சென்று கொண்டிருக்கிறோமே! ஏய்!” என்று கூறினான். முழுவதும் பதட்டமடைந்திருந்தான். 330 அவர், “மகனே, உட்காரு. உட்காரு” என்றார். அந்த வயோதிக மீனவன் அமைதியாக இருக்கிறார் என்பதை, நீங்கள் அறிவீர்கள். அவர் எதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தார். மேலும், “சூரியன் உதிக்கும் வரை காத்திருங்கள், அப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நம்மால் காண முடியும்” என்றார். நீங்களோ, “நான் மெத்தோடிஸ்டாக இருக்க வேண்டுமா? பாப்டிஸ்டாகவா? பெந்தேகோஸ்தேயா?” என்று கேட்கிறீர்கள்.
121331 அப்படியே காத்திருங்கள். குமாரன் வருகிறார், நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நாம் பார்ப்போம். அவரே வார்த்தையாயிருக்கிறார். வார்த்தை வெளிப்படுவதை, வித்தாகிய, அசைவாட்டும் கதிர்கட்டினூடாக பிரகாசிப்பதை நீங்கள் காணும் வரை காத்திருங்கள், அப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நாம் காண்போம். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? 332 நான் உங்களை இவ்வளவு நேரம் வைத்திருந்ததற்கு மன்னிக்கவும். உங்களில் எத்தனை பேர் இன்றிரவு தங்கியிருக்கப் போகிறீர்கள்? ஓ, அதன்பின்னர் மீண்டும் திரும்பி வந்து, இன்று மாலை, பாருங்கள். ஏறக்குறைய ஏழு மணிக்கா? உங்களிடம் வேறு யாராவது இருந்தார்களா? [சகோதரன் நெவில், “இல்லை” என்கிறார்.—ஆசி.] நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
122333 இங்கே எவரேனும், அல்லது அநேகர், இந்த உயிர்ப்பிக்கும் வல்லமையை உங்களில் பெற்றிருக்கவில்லையா? குமாரன் முழுவதும் பிரகாசித்திருக்கிறார், நீங்கள் இந்த கூடாரத்தில் அமர்ந்திருக்கிறீர்கள், நீங்கள் ஒலிநாடாக்களைக் கேட்டிருக்கிறீர்கள், அதே சமயத்தில் நீங்கள் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றும் வரையில், ஸ்திரீகளாகிய நீங்கள், புருஷர்களாகிய நீங்கள் அவர் எழுதியுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்ப்படியும் வரையில் ஆவியானவர் உங்களை ஒருபோதும் உயிர்ப்பித்திருக்கமாட்டாரே! ஓ, அது ஒரு ஆபத்தான காரியம். நீங்கள் ஒரு மரித்த வித்தாயிருந்து, உங்களுக்குள் ஜீவன் இல்லாமற்போனால் என்னவாகும்? ஆனால் உங்களுக்குள்ளாக ஏதோ ஒன்று உள்ளது, அது உங்களிடத்தில், “நான்—நான் இந்தக் காலையில், எழுந்திருக்க விரும்புகிறேன். நான் இருக்கிற நிலைமையிலிருந்து நான் எழும்ப விரும்புகிறேன். நான் ஒரு மரித்துப்போன வித்தாயிருந்து, அழுக்குக்கும், மிதந்து செல்லும் மரக்கட்டையாகவும் விடப்பட விரும்பவில்லை. நான் எழும்ப விரும்புகிறேன்” என்று சொல்கிறது. 334 நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரனே, எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னே, கரங்களைப் பாருங்கள்; பீட அழைப்புக்கு வழியேக் கிடையாது. நாம் ஒரு பீட அழைப்பு என்று அழைக்கிறோம், ஜனங்கள் பீடத்தை சுற்றி வருவார்கள், எப்படியாயினும், நான் அதன் பேரில் அதிகமாக இருப்பதில்லை. அது மெதோடிஸ்டு எழுப்புதலின் நாட்களில் சபையில் சேர்க்கப்பட்டது. பார்த்தீர்களா?
123335 வேதம், “விசுவாசித்தவர்கள் யாவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று கூறியுள்ளது. பாருங்கள். தங்களுக்கு மரிக்க ஆயத்தமாயிருக்கிற எந்த நபருக்காகவும், தண்ணீர் நிறைந்த, ஒரு தொட்டி இங்கே உள்ளது. 336 இப்பொழுது, நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அநேக சமயங்களில், அடக்கம் பண்ணப்படலாம்; ஆனால் அந்த வித்து ஜீவனாயிருக்கும் வரை, பாருங்கள், அது அதை உயிர்ப்பிக்காது. இல்லை, இல்லை, இல்லை. தண்ணீர் ஞானஸ்நானம் வானத்திலிருந்து விழுந்த பனியைப் போன்றது; அது விதையின் மேல் விழக்கூடும், ஆனால், அங்கே ஜீவன் இல்லையென்றால், அதனால் ஜீவிக்க முடியாது. 337 ஆனால் அது உண்மையான தண்ணீர் ஞானஸ்நானமாயிருந்தால், உங்களுடைய மரணத்தையே குறிக்கிறது, நீங்கள் கோட்பாடுகளினாலும், ஸ்தாபனங்களினாலும் கற்பிக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்திற்கும் நீங்கள் மரிக்க ஆயத்தமாயிருக்கிறீர்கள், அது வார்த்தைக்கு முரணாயிருக்கும், நீங்கள் ஒரு தேவனுடைய குமாரனாக அல்லது ஒரு குமாரத்தியாக சஞ்சரிப்பீர்கள், அப்பொழுது நீங்கள் அதை உங்களுடைய இருதயத்தில் பொருட்படுத்திக் கூறுவீர்கள், இந்தக் காலையில் தண்ணீர் ஞானஸ்நானம் உங்களுக்கு என்ன செய்யும் என்பதை கவனியுங்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, உங்களுடைய தவறுகளின், உங்களுடைய பாவத்தின் மன்னிப்புக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அசைவாட்டும் காணிக்கையாகிய, கதிர்கட்டைப் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் இயங்கும் சக்தியை, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், அவர்கள் எல்லோருக்கும் உரியது. அது எல்லா தலைமுறையினருக்கும், அவ்வாறே இருக்கும்.”
124338 பிதாவாகிய தேவனே, நான்—நான் நீண்ட நேரம் பேசி, ஜனங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக் கொண்டேன், ஆனால் தேவனாகிய கர்த்தாவே, அதை நிறுத்துவதற்கு முடியாது. நாங்கள் அதை விட்டுவிட்டு நடந்து சென்று, இளைப்பாறி, திரும்பி வர வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு ஜீவ செய்தியோடும், உயிர்த்தெழுதலின் ஒரு அத்தாட்சியோடும்; நாங்கள் ஒரு மரித்துக் கொண்டிருக்கும் உலகத்தில், மரித்துக் கொண்டிருக்கிற ஜனங்களுக்கு மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம்; அன்புள்ள தேவனே, நாங்கள் ஒருமுறை மாத்திரமே சாவுக்கேதுவானவர்களாக இருக்கப் போகிறோம். நாங்கள் இந்த தருணத்தை எங்களைக் கடந்து செல்ல அனுமதிப்போமானால் அது என்னவாயிருக்கும்? 339 எங்களுடைய இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன; எங்கள் ஆத்துமாக்கள் சிலிர்க்கப்படுகின்றன; அவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். இங்குள்ள அநேகர் இந்த காலையில் இந்த செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆம், இருநூறு அல்லது முந்நூறு பேர் தங்களுடைய கரங்களை உயர்த்தினார்கள். கர்த்தாவே, அவர்கள் விசுவாசிக்க விரும்புகிறார்கள். ஓ, நிச்சயமாகவே அந்த வித்து சாகவில்லை, கர்த்தாவே. எப்படி அவர்களால் இந்தவிதமாக தங்களுடைய கரத்தை உயர்த்த முடிந்தது? ஏதோ ஒன்று உண்டு. ஓ, தேவனே, அது பழமையானது, அது யோபின் மனைவி அங்கே நின்றுகொண்டு, “ஓ!” என்று கூறுகிறதாயுள்ளது. ஆனால், கர்த்தாவே, அந்த யோபு, அந்த விசுவாசி, இந்தக் காலையில், முற்றிலும் மரித்து, இந்த தண்ணீர் ஞானஸ்நானத்தில் இங்கே அடக்கம் பண்ணப்பட வேண்டும். 340 வானத்திலிருந்து வருகிற பனித்துளிகள், அது ஒவ்வொரு பாவத்தையும் கழுவி, அதை மன்னிக்கும் என்று தேவனுடைய வார்த்தையே கூறுகிறதே! நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள், எதற்காக? உங்களுடைய பாவ மன்னிப்பிற்கே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கே.
125341 அப்படியானால், பிதாவே…அவர்கள் சுகவீனமாயிருந்தால், அவர்கள் சுகமடைவார்களாக. அவர்கள் முடமானவர்களாயிருந்தால், அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழ் நடந்து செல்வார்களாக. அவர்கள் பாவிகளாயிருந்து வந்திருந்தால், அவர்கள் கழுவப்பட்டு சுத்தமாக நடந்து செல்வார்களாக. உள்ளே செல்வதன் மூலம் இயக்கவியல்; கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர், மேலிருந்து வந்து, அவர்களைப் பற்றிக்கொள்வாராக. அவர்களுடைய அழிவுள்ள சரீரத்தை உயிர்ப்பியும், அப்பொழுது நாங்கள் அசலான புதிய பாஷைகளையும், தேவனுடைய வல்லமைகளையும், சொல்லப்படாத அன்பையும் நாங்கள் கேட்போம், மரித்தவருக்கும் கிருபை உயிரோடு உள்ளவர்களுக்கும் கிருபை; ஒரு உயிர்த்தெழுந்த கிறிஸ்து, ஒரு சரீரம், ஒரு மணவாட்டி அவரை பூமியில் பிரதிநிதித்துவப்படுத்துதல். 342 பிதாவே, அவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தினார்கள். நான் வார்த்தையை பிரசங்கித்திருக்கிறேன். இப்பொழுது பிதாவே, அவைகளை ஏற்றுக்கொள்ளும்படி, நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.
126343 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவரல்லவா? நீங்கள் அவரோடு எழுப்பப்பட்ட, அந்த ஈஸ்டர் உயிர்த்தெழுதலின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள் என்பதில் நீங்கள் திருப்தியடைந்துவிட்டீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நீங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறீர்கள். 344 பவுல், “என்னுடைய சிறு பிள்ளைகள்” என்று கூறியிருப்பான். அவனைப் பாவனை செய்ய முயற்சிக்கவில்லை, ஆனால், அன்பே, நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களோடு பேசும்படியாக, இங்கு வருவதற்காக, சாலைகளில் புயல் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் சந்திக்கிறேன். பாலைவனத்திலிருந்து, பனிப்பொழிவுகள் போன்றவற்றினூடாக, இங்கு வந்து. நாங்கள் விமானங்களில் பறந்து வருகிறோம். நாம் ஒன்று சேரும்படியாக, நீங்கள் தேசத்தினூடாக காரோட்டி வருகிறீர்கள். நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். 345 நாம் ஒருவருக்கொருவர் பாகமாக இருக்கிறோம். சாத்தான் உங்களுக்கு வேறெதையும் கூற அனுமதிக்க வேண்டாம். நாம் ஒருவருக்கொருவர் ஒரு பாகமாக இருப்பதால், நாம் அவருடைய ஒரு பாகமாக இருக்கிறோம். நாமும் இராஜ்ஜியத்தின் உடன் பிரஜைகளாயிருந்து, உயிர்த்தெழுதலின், இந்த ஆசீர்வாதங்களை, ஒன்றாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
127346 இப்பொழுது, பாருங்கள், இப்பொழுது நீங்கள் ஏற்கனவே உயிர்த்தெழுந்துவிட்டீர்கள். தேவன் அவரை எழுப்பினபோது, அவர் உங்களை எழுப்பினார். குமாரன் இப்பொழுது உங்கள் மேல் இருக்கிறார், இப்பொழுது நீங்கள் அவர் இருந்தவிதமாகவே ஒரு மலர்ச்சியான ஜீவனுக்குள் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள், அந்த கடைசி நாளில் முழுமையாக உயிர்த்தெழுப்பப்பட வேண்டும். உங்களுடைய திறமைகள், இப்பொழுது நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஏன் உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய ஆத்துமா மாறிவிட்டது, அது மாறவில்லையா? உங்களுடைய சரீரம் அதற்கு கீழ்ப்படிந்து கொண்டே வந்தது, அது இல்லையா? (என்ன, ஒரு சபை?) வார்த்தைக்கு கீழ்ப்படிவதில், அது ஜீவனாயிருக்கிறது, அப்படியானால் நீங்கள் இப்பொழுது மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுகிறீர்கள். இது இயேசுவோடும், நானும் கொண்ட ஈஸ்டராயுள்ளது. இது உம்மோடும் இயேசுவோடும் உள்ள ஈஸ்டர். இது உங்களோடும், நானும் இயேசுவோடும், உள்ள ஈஸ்டராயுள்ளது. நாம் யாவரும்…அல்லது, இயேசு, நீர், நான், நாம் யாவரும் ஒன்றாக உயிர்த்தெழுந்திருக்கிறோம். 347 நம்முடைய ஆவிகள் நம்முடைய சரீரங்களை விட்டுச் சென்றாலும், சரீரங்கள் மக்கிப்போனாலும், அவைகள் மண்ணுக்குப் போனாலும், அவைகள் சுட்டெரிக்கப்பட்டுப் போனாலும், அவைகள் சமுத்திரத்தின் ஆழத்தில் இருந்தாலும், நாம் கடைசி நாளில் எழும்புவோம். வேதம், “ஒரு தூதன் தன்னுடையதிலிருந்து சமுத்திரத்திலே ஊற்றினான், மரித்த யாவரும் மேலே வந்தனர்” என்று கூறியுள்ளது. நாம் நன்றாக நேசித்து, நம்மை ஒன்று சேர்த்து எழுப்பின அந்த தேவனிடத்திலிருந்து, எதுவுமே நம்மை மறைக்கவோ, அல்லது நம்மை பிரிக்கவோ முடியாது.
128348 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களை நீண்ட நேரமாக இங்கே வைத்திருக்கிறேன். அந்த ஜனங்கள் இன்னமும் அந்த தொலைபேசி இணைப்பில் இருந்தால், அவர்கள் நிச்சயமாக…ஒரு நிமிடத்திற்கு ஐம்பது சென்டுகள், அவர்கள் உண்மையாகவே இந்தக் காலையில் செலுத்திவிட்டனர். ஆனால் அந்த நேரத்தில் என்னால் நிறுத்த முடியவில்லை, நான் தொடர்ந்து செல்ல வேண்டியதாயிருந்தது. 349 இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், உங்களோடு மீண்டும் பேச, இன்றிரவு நான் திரும்பி வருவேன். என்னால் முடியவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் யாவரும் அறிவீர்கள்… நாம் தொலைபேசி இணைப்பில் இல்லை இல்லை…இல்லை இல்லை…நாம் இனி தொலைபேசி இணைப்பில் இருக்கவில்லையா? தொலைபேசி இணைப்பில் இல்லை. 350 நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள், நீங்கள் அறிந்திருக்கவில்லையா? ஆப்பிரிக்கா! நான் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வருகிறேன்; அநேக வருடங்களாக நான் திரும்பி செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது ஒரு தரிசனம், கர்த்தருடைய ஆவியானவர் வழியை ஆயத்தம் செய்திருக்கிறார். அந்த ஏழ்மையான பூர்வீகவாசிகள் கடைசியாக நான் அங்கு இருந்தபோது நான் வரவில்லை என்பதை, அதைக் கேட்டபோது, அவர்கள் இரவும் பகலும் தரையில் படுத்து புலம்பி, கதறி, “கர்த்தாவே, நாங்கள் என்ன செய்தோம்?” என்று கூறிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆயிரக்கணக்கானோர். அந்த ஜனங்கள் தங்களுக்கு ஒரு ஆத்துமா உண்டு என்று கூட விசுவாசிப்பதில்லை. பார்த்தீர்களா? அவர்கள் கதறினர், அவர்கள் புலம்பினர், அவர்கள் கதறினர்.
129351 நீங்கள் எந்த வார்த்தையையும் முன் கூட்டியே அனுப்ப வேண்டாம். தயவு செய்து வேண்டாம். பாருங்கள், அந்த அயல் நாட்டு நுழைவுச் சான்றானது அங்கு செல்ல நேர்ந்தால், அந்த ஊழியக்காரர்கள் மத்தியில் செல்ல நேர்ந்தால், அவர்கள் என்னை அங்கேயே நிறுத்திவிடுவார்கள். நான் ஒரு வேட்டைக்காரனாக உள்ளே செல்ல வேண்டும். நான் பதினேழு இரயில் பெட்டிகள் நிறைந்த கூட்டத்தினரோடு வந்த அந்த மகாராணியை சந்திக்கப்போகிறேன். நான் சென்று அவளுடைய எல்லையில் வேட்டையாடப்போகிறேன். நான் உள்ளே செல்லும்போது, என்னுடைய அரசாங்க பயண இசைவுச் சீட்டு மற்றுமுள்ள ஒவ்வொரு காரியமும் ஒரு வேட்டைக்காரனுக்கான அழைப்பையே விடுகிறது, ஒரு மதசம்பந்தமான ஆராதனைக்கு அல்ல. 352 அப்பொழுது ஒரு சகோதரன் என்னைச் சந்தித்து, “நீங்கள் ஏன் எங்களுக்காக ஒரு சிறு கூட்டத்தை நடத்தக் கூடாது?” என்று கேட்கப் போகிறார். அரங்கங்கள் ஏற்கனவே வாடகைக்கு எடுக்கப்பட்டுவிட்டன. அது அவர்களுக்குத் தெரியாது. பார்த்தீர்களா? ஓ, மகிமை!
130353 தேவனுடைய சித்தம் தடைபடாதபடிக்கு ஜெபியுங்கள். அதாவது, நான் புறப்பட்டுச் சென்றது முதற்கொண்டு ஆப்பிரிக்காவுக்காக என்னுடைய ஆத்துமா கதறியது, நான் மீண்டும் திரும்பி வரலாம், பிறகு ஒரு மகத்தான கூட்டத்தின் செய்தியை உங்களிடம் கொண்டு வரலாம். இன்றைக்கு, நான் திரும்பி வரும் வரை, அநேகமாக நான் உங்களை காணவேமாட்டேன். நாங்கள் இன்னும் ஒரு சில நாட்களில், மே மாதம் பத்தாம் தேதி, செல்லப்போகிறோம். நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்களா? 354 நினைவிருக்கட்டும், தொல்லைகள் அங்கே உங்களுக்கு நேரிடும் வரை, அவை என்னவென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்; ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சூனியக்காரர்களும், பிசாசும், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது என்று நினைக்காதீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் அவர்களுக்கு முன்பாக நிற்கும்போது, நீங்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வது நல்லது. “ஆனால் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புவித்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறார் என்று நான் நிச்சயத்துமிருக்கிறேன்.” இப்பொழுது, இங்கே சில கைக்குட்டைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. 355 அன்புள்ள தேவனே, இந்தக் காலையில் இந்த உயிர்த்தெழுதலின் செய்தி, நான் இங்கே நின்று கொண்டிருக்கையில், கர்த்தாவே, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை விசுவாசிக்கும் பிள்ளையில் உள்ளது என்பதை வார்த்தையைக் கொண்டு நிரூபிக்கிறார். ஆகையால், விசுவாசத்தின் பேரில், விசுவாசத்தில், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை என் ஜீவியத்தை மாற்றிவிட்டது. கர்த்தாவே, இந்த ஜனங்கள் விசுவாசிக்கிறார்கள், அது அவர்களுடைய ஜீவியங்களை மாற்றினது. நாங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிறோம். 356 நான் என்னுடைய கரங்களை இந்த உறுமால்களின் மேல் வைக்கிறேன், அதாவது… இயேசு கிறிஸ்துவை உயிர்ப்பித்து, அவரை மரித்தோரிலிருந்து கொண்டு வந்த தேவன், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின அந்த ஆவி, நம்முடைய சரீரத்தில் வாசமாயிருப்பதாக. 357 எலிசாவின் சரீரத்தின் மேல் இருந்த ஆவி, அதாவது மரித்து, எலும்புகளைத் தவிர வேறொன்றுமில்லாமல் இருந்தபோது, அதற்குள் உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது. அப்போஸ்தலருடைய கரங்களில் உயிர்ப்பிக்கும் வல்லமை இருந்தது. அப்போஸ்தலருடைய சிந்தைகள், அப்போஸ்தலருடைய பார்வை, விசுவாசிகளின் பாஷைகள், யாவும் உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையதாயிருந்தன. 358 இப்பொழுது அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, நான் இந்த வார்த்தையை அவர்கள் மேல் வைக்கும்போது, என்னுடைய கரங்கள் ஒரு சுதந்திரவாளியாக பிரதிநிதித்துவப்படுத்துகிறபடியால், கிருபையினால், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, அது இந்த சுகவீனமான சரீரங்கள் ஒவ்வொன்றையும் உயிர்ப்பிப்பதாக, அவர்கள் தேவனாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம், சொஸ்தமாக்கப்படுவார்களாக. 359 அது இந்த உறுமால்களுக்காக மாத்திரமல்ல, ஆனால் அங்கே கூட்டத்தில் உள்ள அந்த ஜனங்களுக்கும், அவதியுறும் ஒவ்வொருவருக்குமாக இது இருப்பதாக. அந்த சிறு பிள்ளைகள், வயோதிபர்கள், அவர்கள் யாராயிருந்தாலும், இயேசுவின் நாமத்தில், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை இப்பொழுதே அவர்களை உயிர்ப்பிப்பதாக. ஆமென்.
131360 இப்பொழுது, எத்தனை பேர் உயிர்ப்பிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளீர்கள்? இப்பொழுது அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களுக்குள் இருக்குமானால், உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். 361 இப்பொழுது, அதைத் தடுக்கிற, ஒரே ஒரு காரியம் மாத்திரமே அதற்கு தடையாக இருக்கிறது, அது உங்களுடைய அவிசுவாசமாயுள்ளது. ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு, குணமடைந்தாள்; ஒரு ரோம போர்வீரன் அவருடைய முகத்தில் துப்பி, நரகத்திற்குச் சென்றான். பார்த்தீர்களா? எனவே அது…அது நீங்கள் எங்கே சார்ந்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 362 இப்பொழுது நீங்கள் உங்களுடைய தலையை வணங்கி ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படியே—அப்படியே ஜெபியுங்கள், “கர்த்தாவே, இந்த நபர்”…பாருங்கள், ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள்.
132363 அன்புள்ள தேவனே, நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறோம், நாங்கள் இரட்சிக்கப்படவோ அல்லது சுகமடையவோ முடிந்த ஒரே நாமம் மனிதருக்கு மத்தியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜனங்கள், அவர்கள் இராஜ்ஜியத்தின் சக குடிமக்களாக, உயிர்ப்பிக்கும் வல்லமையை உடையவர்களாக இருக்கிற, இவர்களுக்கு அதை இப்பொழுதே, கர்த்தாவே, உயிர்ப்பியும். ஆவியானவர் ஒரு கழுகிலிருந்து மற்றொரு கழுகுக்கு, வார்த்தையிலிருந்து மற்றொரு வார்த்தைக்கு, இயேசு கிறிஸ்துவின் பரிபூரணம் ஒவ்வொரு சரீரங்களிலும் வெளிப்படும் வரை, சரீரப்பிரகாரமாகவோ, ஆவிக்குரிய பிரகாரமாகவோ, அல்லது அவர்களுக்கு எந்த தேவையிருந்தாலும், எங்களுடையடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்வராக.