அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

65-0426

நம சறற நரம நமமடய தலகள வணஙகவமக. அனபளள பரலகப பதவ, இனறரவ நஙகள இஙக இரபபதறகக நஙகள நனறயளளவரகளயரககறம. நஙகள, உமமடய பரசனனம இஙக எஙகளட இரபபத நஙகள அறநதரபபதறகக நஙகள நனறயளளவரகளயரககறம. இபபழத எஙகளககத தவயரககறபடயல, நர எஙகள ஒவவரவரககம உதவ சயய வணடம எனற நஙகள ஜபககறம. நஙகள இத இயசவன நமததல கடகறம. ஆமன. நஙகள உடகரஙகள. இநத ஒலபரக

அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

65-0426லாஸ் ஏஞ்சல்ஸ் கலி1191965-04-26

அவருடைய வார்த்தையை நிரூபித்தல்

65-0426லாஸ் ஏஞ்சல்ஸ் கலி1191965-04-26

1 நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அன்புள்ள பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் இங்கே இருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள், உம்முடைய பிரசன்னம் இங்கே எங்களோடு இருப்பதை நாங்கள் அறிந்திருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது எங்களுக்குத் தேவையிருக்கிறபடியால், நீர் எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காருங்கள்.) இந்த ஒலிபெருக்கிகள் நன்றாக இயங்குவது நல்லுணர்வைத் தருகிறது. நேற்றைய தினம் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டதற்காக நான் மிகவும் வருந்தினேன், நான் அந்த செய்தியை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் இருந்தேன். 2 நீங்கள் அதை நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். அதுவே நமக்குள்ள நங்கூரமாயுள்ளது. நாம் ஒரு சபையினால் நங்கூரமிடப்பட்டிருக்கவில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறோம், நீங்கள் பாருங்கள். அவரே அந்த ஒரே வழியாய் இருக்கிறார். அவர் மாத்திரமே பாதுகாப்பான ஸ்தலமாக இருக்கிறார், தேவன் தம்முடைய நாமத்தை எப்பொழுதும் வைத்த ஒரே ஸ்தலமாயிருக்கிறார். தேவன் தம்முடைய நாமத்தைத் வைக்கத் தாம் தெரிந்துகொண்ட இடத்தில் ஜனங்களை சந்திப்பேன் என்று கூறினார்; எந்த வாசலிலும் அல்ல, ஆனால் அவர் தெரிந்துகொண்ட வாசலில். அந்த இடத்தில் தான், அங்கு மாத்திரமே, அவர் ஜனங்களை சந்திப்பார். தேவன் தம்முடைய நாமத்தை அவருடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எங்கும் வைக்கவில்லை என்பதை நாம் காண்கிறோம், குமாரன் எப்பொழுதுமே தகப்பனுடைய நாமத்தையே எடுத்துக்கொள்கிறான்.

2இப்பொழுது நீங்கள், “பாருங்கள், இன்றைக்கு அது எவ்விதம் பொருந்துகிறது? ஒவ்வொருவரும், ‘நான் இயேசுவுக்குள் இருக்கிறேன்’ என்று கூறுகின்றனர்” என்கிறீர்கள். 3 அவரே வார்த்தையாயிருக்கிறார். அதாவது, “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” மீண்டும், அது வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்தில் கூட எழுதப்பட்டுள்ளது, அவர் வருவதை நாம் கண்டபோது, மணவாளனும், மணவாட்டியும், அவருடைய வஸ்திரம் இரத்தத்தில் தோய்க்கப்பட்டிருந்தது. “அவருடைய நாமம் ‘தேவனுடைய வார்த்தை’ என்று அழைக்கப்பட்டது.” அவர் தேவனுடைய வார்த்தையாயிருக்கிறார். 4 மேலும், அதாவது, அவர் உயிர்ப்பிக்கும் வல்லமையாயிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியானவராயிருக்கிறார், அந்த இயக்கவியலுக்குள் வருகிற இயங்கு சக்தியாக, வார்த்தைகளை ஜீவிக்கச் செய்கிறது. அவை யாவும் ஒன்று சேர்ந்து கிரியை செய்ய வேண்டும், இல்லையென்றால் அது கிரியை செய்யாது. அது முழு வேதாகமத்தையும், முழு கிறிஸ்துவையும், முழு சுவிசேஷத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

35 நேற்றிரவு நான் தொலைக்காட்சியில் பார்த்த இந்த குழுவிற்கு, நான் கூற விரும்புகிறேன், அது நடக்கப் போகிறது என்பதை அறிந்து, நான் அதைப் பார்த்தேன். இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த இந்த சகோதரர்களுக்கு, நான் விளக்கம் கூற விரும்புகிறேன், அப்படிப்பட்ட ஒரு தலைசிறந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதே! நான் மிகவும் அதிகமாக குற்றம் கண்டுபிடிக்கும் ஒருவன் என்பதை நீங்கள், எப்படியும் அறிவீர்கள், ஆனால் அங்கே குறைகூற ஒன்றுமே இல்லை. அது முற்றிலும் அசலானதாய் இருந்தது. என்னால் அதனோடு, நூறு சதவிகிதம் இணங்க முடிந்தது. [சபையோர் கைதட்டுகிறார்கள்—ஆசி.] உங்களுக்கு நன்றி. ஆமென். அவர்களுடைய பதில்கள் சரியான காரியமாயிருந்தன. நான் நிச்சயமாகவே அதைப் பாராட்டினேன். நான் வீட்டில் உள்ள என்னுடைய சபையில் ஒரு திரைப்படத்தைக் காண்பிக்க மாத்திரமே நான் விரும்புகிறேன். அது உண்மையாகவே அருமையாக இருந்தது.

46 தேவன் மற்ற மண்டலங்களில் இடைபட்டிருக்கிறார் என்பதை—என்பதை அறிந்து கொள்வதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நம்முடைய சொந்த பெந்தேகோஸ்தே குழுவைத் தவிர, மற்ற புருஷர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார், அந்த தேவனுடைய வித்து, இத்தனை ஆண்டுகளாக அங்கே இருந்து கொண்டு, அவர்கள் முழுவதும் வெளிச்சம் பிரகாசிக்கும் வரை காத்துக்கொண்டிருந்தனர். 7 நண்பர்களே, இயேசு கூறினதை அறிந்துகொள்ளும்படி, இது நமக்கு ஒரு எச்சரிக்கையையும் கூடத் தருகிறது, “இந்த நித்திரை செய்யும் கன்னிகை எண்ணெய் வாங்க உள்ளே வரத் துவங்கியிருந்தபோது, அப்பொழுது மணவாளன் வந்து கொண்டிருந்தார்.” எனவே நாம் எபிஸ்கோபலியன், பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, லூத்தரன், எண்ணெய் வாங்க உள்ளே வந்ததைக் காணும்போது, அப்பொழுது அந்த நேரத்தில் மணவாளன் வந்தார் என்பதை நாம் அதன் மூலம் காண முடியும். நாம் அதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

58 ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு என் மகன், பில்லி என்னிடம் கூறினது போன்ற காரியத்தை, நான் ஒருபோதும் கேட்டதேயில்லை. அவன், “அப்பா, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறதில்லை. உங்களைக் கவர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஆனால், அப்பா, நீங்கள் என்ன செய்தாலும், வியாதியஸ்தருக்காக உங்களுடைய முழு நேரத்தையும் செலவிடுங்கள்” என்றான். அவன், “நான் இவ்வளவு சுகவீனமான ஜனங்களைக் கண்டதேயில்லை!” என்றான். மேலும், “நான் ஓரிரு நிமிடங்களில் இருநூறு அட்டைகளைக் கொடுத்தேன்” என்றான். “அநேக ஜனங்கள் சுகவீனமாயிருக்கிறார்கள்!” என்றான். அவன் அதை மிக அபூர்வமாகவே என்னிடம் சொல்லுகிறான். 9 அதன்பின்னர் நான் இங்கே எழுதி வைத்துள்ள சில சிறு குறிப்புகளோடும், வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்த சில குறிப்புகளோடும் நான் வந்தேன், இன்றிரவு நமக்கு கீழே தேவனுடைய கோபாக்கினை குலுக்கிக்கொண்டிருக்கிறது என்பதோடு நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும், சீக்கிரத்தில் அது துடைத்தழித்துபோடும் என்பதையும் அறிந்திருக்கிறோம். தேவனுடைய கோபம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து; இலட்சக்கணக்கானோருக்காக இந்த நேரத்தில் அது சொல்லப்படும், அது முடிந்துவிடும். என் இருதயத்தில் அதை அறிந்திருக்கிறேன், அது அவ்வண்ணமாய் இருக்கும் என்று அறிந்திருக்கிறேன்! அதன்பின்னர் அநேகர் சுகவீனமடைந்து, நெருக்கிக்கொண்டும், இழுத்துக் கொண்டுமிருப்பதை நாம் காண்கிறோம். 10 மேலும் நான், “இன்றிரவு, அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள்” என்று எண்ணினேன். தேவனுடைய பிள்ளைகளே, நான் இதைக் கூறட்டும். நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுகிறீர்கள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு, இரவும் பகலும், தேவனை சேவிக்கிறீர்கள். நீங்கள், ஏதோக் காரியம் தவறாயிருப்பதை நீங்கள் உணர முடியும். நீங்கள் தெருக்களில் நடக்கும்போது, நீங்கள்…நீங்கள் எங்கு சென்றாலும் அதை உணர முடியும். நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், உங்களுக்கு தெரியும்; நீங்கள் அவ்வாறு இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

611 நான் சகோதரன் ஸ்ட்ரோமி என்ற, ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தேன். டோனி இங்கே இருக்கிறாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவர், அவர்… [ஒரு சகோதரன், “டோனி சலேமா?” என்று கூறுகிறார்.—ஆசி.] டோனி சலேமே, சலேமே, சலாமே? இல்லை. நான் வேறொரு டோனியிடம் பேசிவிட்டேன். [ஒரு சகோதரன் ஏதோ ஒன்றைக் கூறுகிறார்.] இல்லை, அது வேறொரு டோனியாகும். இது டூசானின் டோனி. அவருடைய பெயர் என்ன? [வேறொருவர், “ஸ்டிரோமி” என்கிறார்.] ஸ்ட்ரோமி! அது சலேமியோ, ஸ்ட்ரோமியோ அல்லது வேறு யாரோ என்பதை நான் அறிவேன். எனக்கு எல்லாமே… 12 அவருடைய கடையில், அன்றொரு நாள், ஒரு மனிதன் உள்ளே வந்து, மிகவும் விசேஷித்தவராய், நான்…கடந்த முறை நான் இந்தியாவில் இருந்தபோது, அவர் எனக்கு நினைவிற்கு கொண்டு வரக்கூடிய ஒரு காரியத்தை கூறிக்கொண்டிருந்தார். 13 ஒரு காலத்தில் எங்களுக்கு இருந்ததிலேயே மிகப் பெரிய கூட்டத்தை கர்த்தர் எங்களுக்கு அளித்தார் என்று நான் நினைக்கிறேன், அது பம்பாயில் இருந்தது. இலட்சக்கணக்கான ஜனங்களை, அவர்களை வைப்பதற்கு எங்களால் எங்குமே இடங்களைக் கூட கண்டறிய முடியவில்லை. 14 நாங்கள் அங்கு செல்வதற்கு முன்பு, மொழிபெயர்க்கப்பட்ட ஒரு செய்தித்தாள் இருந்தது. பாருங்கள், அது, இந்தியா இரு மொழி பேசும் நாடு, அது—அது ஆங்கில செய்தித்தாளில் இருந்தது. மேலும், “பாருங்கள், பூகம்பங்கள் ஓய்ந்திருக்க வேண்டும், பறவைகள் தங்களுடைய கூடுகளில் தங்களுடைய வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றன” என்று எழுதப்பட்டிருந்தது.

715 வேலிகளையும் மற்ற காரியங்களையும் தகர்த்தெறிந்த, பூமியதிர்ச்சி உண்டாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர். சிறு பறவைகள் பாறைகளில், தங்களுடைய கூடுகளை தாங்களாகவே அமைத்துக் கொள்கின்றன; பிற்பகலிலோ அல்லது மதியத்திலோ, சூரியன் உண்மையாகவே உஷ்ணமாக இருக்கும்போது, எல்லா மிருகங்களும் நிழலுக்குள் செல்ல, அந்தப் பாறை சுவர்களைச் சுற்றி நிற்கின்றன. இரண்டு நாட்களாக, பறவைகள் தங்கள் கூடுகளுக்கு வராமல், மரங்களிலேயே தங்கியிருந்தன; இரண்டு நாட்களாக, மிருகங்கள், ஆடு, கால்நடைகள், அவைகள் பிற்பகலில் வராது, அல்லது அந்த சுவர்களைச் சுற்றி சாய்ந்து நிற்க வராது. அவைகள்—அவைகள் வயலில் தங்கி, நிழலுக்காக, ஒன்றின் மீது ஒன்று சாய்ந்து கொண்டன. 16 அப்பொழுது திடீரென்று, பூமியதிர்ச்சி உண்டாகி, சுவர்கள் அசைந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும், பாருங்கள், அந்த சிறு பறவைகள் அங்கே இருந்திருந்தால், அவைகள் அழிந்து போயிருந்திருக்கும். அதற்கு கீழே ஆடுமாடுகளும், ஆடுகளும் நின்று கொண்டிருந்திருந்தால், அவைகள் அழிந்து போயிருந்திருக்கும். தேவன் இயற்கையை எச்சரித்தல்!

817 ஒரு சில நாட்களுக்கு முன்பு, சகோதரன் டோனியின் கடையில், அங்கே ஒரு மனிதன் கூறுவதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… இந்த பூகம்பம் அலாஸ்காவில் ஏற்பட்டபோது, அவர் மெக்ஸிகோவில், உள்ள ஸ்டோனி பாயின்ட் என்று நாம் அழைக்கும் இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். மேலும் அவன், “பறவைகள் ஆகாரம் எடுத்துக் கொள்ளவில்லை, மீன்கள் ஆகாரம் எடுத்துக் கொள்ளவில்லை. ஏதோ தவறு இருந்தது. மேலும், சடுதியாக, பூமியதிர்ச்சி உண்டானது” என்று கூறினான். 18 அன்றொரு நாள், இந்தியாவிலோ அல்லது அது எங்கிருந்தோ அந்த சம்பவம் நிகழ்ந்தபோது, அவன் மீண்டும் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறினான். அவன், “பாருங்கள், அது விநோதமாக இருக்கிறது. அந்த மீன்கள் ஏறக்குறைய இந்த நேரத்தில் உணவெடுக்கும். தண்ணீரில் ஒரு அலையும் இல்லை, எங்கும் இல்லை. தண்ணீர் மிகவும் அமைதியானதாய், மீன்கள் இரை எடுப்பதற்கு ஏற்றதாய் இருக்கிறது, ஆனால் அவைகள் புசிக்கவில்லை. வழக்கமாக அங்கே இருக்கும் எல்லா பறவைகளும், கடற்பறவைளும், இந்த மீன்களையும் மற்ற காரியங்களையும் கொத்திக்கொண்டு, கரையில் சுற்றி நடந்து கொண்டு, ஒன்றோடு ஒன்று நெருக்கமாக நின்றுகொண்டிருந்தன. ஒரு சில நிமிடங்களில், அடியிலிருந்து கடல் பாசி இந்த விதமாக மேலே வரத் துவங்கியது, பூமியின் மறுபக்கத்தில் ஒரு பூகம்பம் உண்டானது” என்று கூறினான். பாருங்கள், ஏதோ கோளாறு இருந்ததை, ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்ததை அந்த மீன்கள் அறிந்திருந்தன. அந்தப் பறவைகளும் அதையே அறிந்திருந்தன. 19 நிச்சயமாகவே, தேவன் ஒரு மீனுக்கும், ஒரு பறவைக்கும் பகுத்தறியும் திறனை அளிக்கிறாரென்றால், அவர் தம்முடைய—தம்முடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு அதிகமாக அளிக்க வேண்டும்! நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதையும், நியாயத்தீர்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம், எனவே நாம் உண்மையாகவே பயபக்தியாயிருப்போமாக. உங்களுடைய முழு இருதயத்தோடு தேவனண்டை ஓடிப்போங்கள்! “ஓ வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்,” இன்றைக்கு அது தண்ணீரின் அடிமட்டத்தில் மூழ்கி கிடக்கிறது. அதை நினைவில் வைத்துக் கொண்டு ஜெபியுங்கள்.

920 இப்பொழுது, இன்றிரவு, நான் இங்கே வேதத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு, ஒரு இடத்தை வாசிக்க விரும்புகிறேன். நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். பில்லி ஒரு சில ஜெப அட்டைகளைக் கொடுத்ததாகக் கூறினான். அவன் நேற்றைய தினம் சிலவற்றை அளித்தான், ஆனால் அவர்களில் எவருக்கும் நேற்று இரவு நான் ஜெபம் செய்யவில்லை. பரிசுத்த ஆவியானவர் எப்பொழுது வந்தார் என்று, நான் வியந்தேன்…அது அப்படியே…உங்களால் அதை கிரியை செய்ய முடியாது. அது ஒரு சிறிய நெம்புகோலைப் போன்றது, நீங்கள் உங்களையே ஒரு இயந்திரப் பாதையில் இழுத்துக் கொள்கிறீர்கள். பரிசுத்த ஆவியின் கிரியையை செய்கிறவர்கள் நீங்கள்தான், நான் அல்ல. நீங்களாகவே அதைச் செய்கிறீர்கள். எனவே நான், நேற்றிரவு, பகுத்தறிதலில் கூட நான் கவனித்தேன், அது ஜனங்களோடு ஒருபோதும் சரியாக பொருந்தவில்லை. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. நான் அதைக் கண்டிருக்கிறேன், இங்கே சமீபத்தில், அது ஏறக்குறைய அவ்வாறு தென்படுகிறது, நான் வியாதியஸ்தர் மேல் கரங்களை வைத்து, பேசிக்கொண்டிருந்ததை, அவர்கள் அறிவார்கள். 21 நமக்குள் கொடுக்கப்பட்டிருக்கிறதை நாம் உணர்ந்தறிய வேண்டும், நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருடைய ஆவியினால் பிறந்து, அந்த உயிர்ப்பிக்கும் வல்லமையினால், உங்களுக்குள் இருக்கிற அந்த வல்லமையினால் நிரப்பப்பட்டிருக்கிறோம். காலங்களினூடாக சீஷர்கள் செய்தது போல, மற்றவர்கள் மேல், கைகளை வைப்பதன் மூலம், அது வியாதியஸ்தரை முற்றிலுமாக சுகப்படுத்தியது, மரித்தோரை உயிரோடெழுப்பியது, அது தரிசனங்களையும், தீர்க்கதரிசனங்களையும் காண்பித்தது. ஆதி அப்போஸ்தலர்கள் மத்தியில் ஜீவித்த அதே ஆவிதான் இன்றைக்கும் சபையில் ஜீவித்துக் கொண்டிருக்கிறது, அதே காரியங்களில் கிரியை செய்கின்றனர். நம்மால் அதை முடிந்தளவு துரிதமாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமே! பாருங்கள், அது எவ்வளவுதான் ஒரு கிரியையாக இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் அதை அடையாளங்கண்டு கொண்டு அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கும் வரை, அது ஒரு துளி நன்மையையும் செய்யாது. ஆனால் நீங்கள் அதை விசுவாசிக்கிற விநாடியில், உங்களுடைய தொல்லைகள் முடிவுற்றுவிடும். அது உண்மை.

1022 இப்பொழுது நாம் வேதவாக்கியத்திற்கு திருப்புவோமாக. ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், நான் அங்கே உட்கார்ந்து கொண்டு, என்னுடைய இரவிற்கான பாடப்பொருளை மாற்றுவதற்காக, இன்னும் சில வேதவாக்கியங்களை குறித்துக் கொண்டேன். நான் தேவனுடைய வார்த்தையிலிருந்து சிலவற்றை வாசிக்க விரும்புகிறேன், பரிசுத்த லூக்காவின் புத்தகத்திலிருந்து 8-ம் அதிகாரம், 40-ம் வசனத்திலிருந்து துவங்குகிறது. இப்பொழுது கவனியுங்கள், நான் விரிவாக வாசிக்கப் போகிறேன். இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். அது இன்றிரவு கூட்டத்தினருக்கு ஒரு அருமையான மனப்பான்மையாய் இருக்குமல்லவா? அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். …இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன், ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துவிட்டாள்; எஜமானை தொல்லைப்படுத்த வேண்டாம். இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல், எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப்பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள், அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

1123 இப்பொழுது நாம் ஜெபிப்போமாக. அன்புள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த வார்த்தையை வாசிக்கையில், அது உண்மை என்பதை நாங்கள் அறிவோம். இது நடந்தது. இது ஒரு செய்தித்தாளில் அல்லது ஏதோ ஒரு கட்டுக்கதை புத்தகத்திலிருந்து நாங்கள் வாசிப்பதற்கு ஏதோ ஒரு கட்டுக்கதை அல்ல, ஆனால் இது தேவனுடைய வார்த்தையென்று நாங்கள் அறிந்துள்ள புத்தகத்திலிருந்து வருகிறது. அது சம்பவித்தது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த குறிப்பிடத்தக்க காரியத்தை, இங்கே இரண்டு சம்பவங்களை இந்த இயேசு செய்தார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், பெரும்பாடுள்ள ஸ்திரீயும், மரித்துப் போன பெண் பிள்ளையைக் குறித்துமே, அவர் தேவனுடைய குமாரன் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், அதாவது தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, இன்றிரவு, அவரை பரிசுத்த ஆவி என்னும் நபராக, எங்களுக்கு அளித்திருக்கிறார். 24 அவர் இன்றிரவு இங்கே எங்களோடு இருக்கிறார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர் நேற்றும் இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசித்து, அவருடைய இரக்கங்கள் ஜனங்களை சென்றடைகிறது. ஜனங்கள் அவரை அணுகும்போது, அந்த நாளில் கொடுக்கப்பட்ட அதே பலன்கள் இந்த நாளிலும் அளிக்கப்படும். பிதாவே, நாங்கள் ஒரு புதிய அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அதை மீண்டும் அருளும். சற்று முன்னர், சகோதரன் ஷக்காரியன் மிகவும் உத்தமமாக கேட்டுக்கொண்டதுபோல, கூட்டத்தாரை விசுவாசிக்கும்படி கேட்டுக்கொண்டதுபோல, நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆமென்.

1225 நான் ஒரு சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன், அது ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே இருக்கும், ஏனென்றால் நான் ஜெப அட்டைகளோடுள்ள ஜனங்களை இங்கே அழைத்து அவர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதைத் தவிர வேறெந்த காரியத்தையும் தவிர்த்துவிடுகிறேன். ஆனால் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பு, ஜனங்களை அந்த மனப்பான்மையில் நாம் கொண்டு வர வேண்டும். மனப்பான்மையே எப்பொழுதும் பலன்களைக் கொண்டு வருகிறது. அது தேவனிடத்தில் நீங்கள் கொண்டுள்ள மனப்பான்மையாயுள்ளது. 26 இங்கே ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரி, அவள் சுகமாக்கப்பட்டாள். ஒரு போர்வீரன் அவருடைய முகத்தில் துப்பி, அவருடைய சிரசின்மேல் ஒரு முள்கிரீடத்தை அணிவித்து, எந்த வல்லமையையும் உணரவில்லை. 27 அது உங்களுடைய அணுகுமுறை. மனப்பான்மையே அதற்கு தேவைப்படுகிறது. இன்றிரவும் அந்தவிதமாகத்தான் இருக்கிறது, அருமையான நண்பனே, அதற்கு அந்த மனப்பான்மையை தேவைப்படுகிறது. நாம் இருக்கிறோம், நாம் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், இருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம், ஆனால் உங்களுடைய மனப்பான்மையே பலன்களைக் கொண்டு வருகிறது. இயக்கவியல் இங்கே உள்ளது, எனவே இயங்கும் சக்தியும் உள்ளது. உங்களால் துவங்க முடிந்தால், மற்றதை தேவன் செய்வார்.

1328 இப்பொழுது, இந்த பொருளின் பேரில் ஒரு சில நிமிடங்கள் நான் பேச விரும்புகிறேன்: அவருடைய வார்த்தையை நிரூபித்தல். இப்பொழுது அவருடைய வார்த்தையை நிரூபித்தல்; என்பதைக் குறித்து சிந்திப்பது, ஒரு மகத்தான காரியமாய் உள்ளது. 29 அவர் அதை எப்போதும் நிரூபித்தது போல, இப்பொழுது இன்றிரவும் தேவன் அதை நிரூபிக்க வல்லவராயிருக்கிறார். வேதமும் கூட, “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து. நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று உரைத்துள்ளது. 30 இப்பொழுது, “அதை நிரூபியுங்கள், நான் அதை விசுவாசிப்பேன்” என்ற பழைய பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில், சந்தேகமில்லை. ஆனால் அது உண்மையாயிருக்கவில்லை. முற்றிலுமாக விஞ்ஞான ரீதியாகவும் கூட, நிரூபிக்கப்பட்ட அநேக காரியங்களை நான் அநேக முறை கண்டிருக்கிறேன், அதே சமயத்தில் ஜனங்கள் அதை எப்படியும் விசுவாசிக்கவில்லை. 31 அண்மையில், நான் இங்கே ஒரு மனிதனோடு பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அவன், “நான் அதை விசுவாசிக்கமாட்டேன். என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை, அதைக் குறித்து உங்களால் எவ்வளவு நிரூபணம் காட்ட முடிந்தாலும், நான் அதை இன்னமும் விசுவாசிப்பதில்லை” என்றான். பாருங்கள், நிச்சயமாகவே, நீங்கள் அந்த மனிதனுக்காக என்ன செய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, ஏனென்றால் அவன்—அவன் இழக்கப்பட்டுவிட்டான். அவனால் விசுவாசிக்க முடியவில்லை. விசுவாசிக்க, அவனுக்குள் ஒன்றுமேயில்லை.

1432 நான்—நான் வேட்டையாடுவதை நீங்கள் யாவரும் அறிந்துள்ளபடியால், சுமார் ஒரு வாரங்களுக்கு முன்பு, இங்கே ஒரு—ஒரு சிறு அனுபவம் எனக்கு உண்டாயிருந்தது. நான் என்னுடைய கூட்டத்திலிருந்து திரும்பி வந்தபோது, நான் சிங்கத்தை வேட்டையாடிக் கொண்டிருந்தேன். நான் அரிசோனாவிற்கு குடிபெயர்ந்த பிறகு, அது நல்லது, நான் பெரிய மிருகங்களை வேட்டையாடுவதை விரும்புகிறேன், நான் இயற்கையின் மத்தியில் சென்று அதைக் கவனிக்க விரும்புகிறேன். 33 இப்பொழுது, நான் ஒரு கொலையாளி அல்ல. நான் வேட்டையாடுகிறேன். எனவே, நான்—நான் வேட்டைப் பொருட்களை அழிக்க விரும்புகிறதில்லை. அது சரியென்று நான்—நான் கருதவில்லை. நீங்கள் அதை உபயோகிக்காமலும் மற்றும் ஒரு நோக்கத்திற்காக அதை உபயோகிக்காமலும் இருக்கும்போது, வேட்டைப் பொருளைக் கொல்வது அவ்வளவு பெரிதான பாவம் என்று நான் கருதுகிறேன் வேறெந்த காரியத்தையும் கொன்று போடுவது போன்றே இருக்கும். அது தவறு என்று நான் நினைக்கிறேன். நாம் அதைச் செய்யக் கூடாது. தேவன் அதை நமக்கு ஆகாரத்திற்காகவும், நோக்கங்களுக்காகவும் கொடுத்திருக்கிறார், நாம் அதை அழிக்கக் கூடாது. ஆனால் இப்பொழுது சட்டம் என்ன கூறுகிறதோ, அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், சரி. அதை வீணாக்காதீர்கள். 34 நான் அங்கு இருந்தபோது, எல்லாவற்றையுமே வேட்டையாடுவதற்கான பருவ காலம் முடிந்துவிட்டது. சிங்கங்கள் ஏராளமான கால்நடைகளைக் கொல்லுகின்றன. தேசத்தில் உள்ள ஏராளமான பண்ணையாளர்களை எனக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் அவைகள் ஒன்றை கொல்லும்போது, ஏன், ஒரு சிங்கம் ஆடுகளின் மத்தியில் பாயும்போது, அவர்கள் என்னை அழைக்கிறார்கள். அன்றொரு இரவு, என்னுடைய குறிப்பிட்ட நண்பர் ஒருவர், ஒரே இரவில், ஏறக்குறைய முவாயிரத்து ஐநூறு டாலர்கள் நஷ்டமடைந்தார், ஒரே சிங்கம் ஆட்டுக்குட்டிகளை மாத்திரம் கொன்றதினாலே. அது உள்ளே பாய்ந்ததால், உண்மையாகவே, மற்ற சிங்கங்கள் அதனுடைய பாவத்திற்கான கிரயத்தை செலுத்த வேண்டியதாயிருக்கப்போகின்றன. எனவே நான் அந்த சிங்கத்தை கொன்றுபோட்டேன், எனவே அது ஒரு பெரிய சிங்கமாக இருந்தது, ஒன்பது அடி நீளமும், கிட்டத்தட்ட இரண்டுக்கு மேற்பட்ட எடை கொண்டதாகவும் இருந்தது, எனவே அது—அது ஒரு பெரிய சிங்கமாக இருந்தது.

1535 அதன்பின்னர் நான் அரிசோனா தேசத்திலிருந்து, உட்டா என்ற இடத்திற்கு, வேட்டையாடச் சென்றேன். எனவே அங்கே ஜனங்கள் இருந்தனர் என்றும், நான் வேட்டையாடப்போகும் ஒரு மனிதன் இருந்ததாகவும், அவர் ஒரு அரசாங்க வேட்டைக்காரன் என்றும் என்னிடத்தில் கூறப்பட்டது, “மேலும், நன்மையின் நிமித்தமாக, அவரைச் சுற்றிலும் உள்ள மார்க்கத்தைக் குறித்த எந்தக் காரியத்தையும் குறிப்பிடாதீர்கள்” என்று கூறப்பட்டது. மேலும், “அவர் உண்மையாகவே ஒரு முரடான நபராயிருந்தார்” என்றும் கூறப்பட்டது. மேலும் நான் கூறினேன், பாருங்கள், நான் உடன் செல்லவிருந்த மனிதனிடம் கூறினேன், மேலும் நான், “நான் அதைக் குறிப்பிடமாட்டேன்” என்றேன். 36 அவர், “‘பிரசங்கி’ என்று சொல்லாதீர்கள். நீங்கள் அவ்வாறு கூறினால், நீங்கள் ஒருபோதும் வேட்டைக்குச் செல்ல முடியாது. அவர் உங்களை அழைத்துச் செல்லமாட்டார்” என்றார். மேலும், “நான் அவரோடு மூன்று நாட்கள் வேட்டையாடினேன், ஒவ்வொரு இரவும் அவரோடு உறங்கி, ஒவ்வொரு நாளும் அவரோடு புசித்தேன், அவர் ஒருபோதும், ‘காலை வணக்கம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேண்டுமா? பாத்திரங்களைக் கழுவுங்கள்’ என்று கூட சொல்லவில்லை. ஒன்றுமில்லை!” “இப்பொழுது அதைக் குறித்து ஒன்றுமே கூற வேண்டாம்” என்றார். அதற்கு நான், “நான் ஒரு வார்த்தையும் கூறமாட்டேன்” என்றேன். எனவே நான் ஜெபிக்கமாட்டேன் என்று நான் அவரிடம் கூறவில்லை, ஆனால் நான் ஜெபிக்கிறேன்…என்று அவரிடம் தொடர்ந்து கூறி வந்தேன்.

1637 எனவே நாங்கள் அங்கு சென்றபோது, அந்த மனிதன் மிகவும் கடினமான ஒரு குணாதிசயமுள்ளவனாயிருந்தான், அவன் எதையுமே நம்பவில்லை என்று நான் எண்ணினேன். அதற்கு ஒரு சில இரவுகளுக்கு முன்னர் அவன் ஒரு குழந்தையை இழந்துவிட்டிருந்தான், ஒரு மரித்து பிறந்த குழந்தை. நாங்கள் வேட்டைக்குச் சென்றோம். இரண்டாம் நாளிலே, என்னுடன் வேட்டையாடிக்கொண்டிருந்த மனிதன், நான் தேசத்தைச் சுற்றிலும் எங்கும் வேட்டையாடப் போவதாகக் கூறினான். எனவே என்னோடு இருந்த மற்றொரு வேட்டைக்காரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது, நாங்கள் சிகரங்களின் உச்சியில் இருந்தோம்; அங்கே நாங்கள் ஒரு சிங்கத்தை ஓடவிட்டு, அதைக் கற்பாறைகளுக்குள் கொண்டு சென்றுவிட்டோம், அதுவோ அங்கிருந்து தப்பித்துவிட்டது. எனவே அந்த நாய் திரும்பி வரும் வரை நாங்கள் அங்கே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தோம். இந்த மனிதன் என்னிடத்தில் கூறினார், அவன், “மற்றொரு வேட்டைக்காரன், உன்னுடைய நண்பன், நீ எல்லாவிடங்களிலும் வேட்டையாடலாம் என்று என்னிடம் கூறுகிறான். உன்னிடம் ஏராளமான பணம் இருக்கிறதா?” என்று கேட்டான். மேலும், “அது என்னுடைய வேலையல்ல என்று நான் யூகிக்கிறேன்” என்றான். அதற்கு நான், “இல்லை” என்றேன், மேலும் நான், “அது ஏராளமான பணமல்ல” என்றேன். நான், “நான்—நான் நிதியுதவி அளித்துள்ளேன்” என்றேன். அதற்கு அவன், “ஓ, அப்படியா” என்றான். அவன், “பாருங்கள், அது மீண்டும் என்னுடைய வேலையல்ல என்று நான் யூகிக்கிறேன், ஆனால், உங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஒரு நிறுவனத்தோடு நீங்கள் இருக்கிறீர்களா?” என்று கேட்டான். அவன் அதை என்னிடத்திலிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினான். நான் சொல்லமாட்டேன் என்று வாக்களித்தேன், பாருங்கள். எனவே நான், ஆம், “இல்லை ஐயா, நான் ஒரு பிரசங்கி, ஒரு மிஷனரி” என்று கூறினேன். அவன், “நீங்கள் என்ன?” என்றான். நான், “மிஷினெரி” என்றேன். அவன் நின்று ஒரு சில நிமிடங்கள் என்னைப் பார்த்தான். அதற்கு நான், “உங்களுக்கு மறுமை வாழ்க்கைக்கான நம்பிக்கை உண்டா? உங்களுடைய நம்பிக்கை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவன், “நான் ஒரு ஜேக் மார்மன்” என்றான். நான், “நீங்கள் என்ன?” என்று கேட்டேன். அவன், “ஒரு ஜாக் மார்மன்” என்றான். நான், “அது என்னவிதமானது?” என்று கேட்டேன். “சத்தியம் செய்து காப்பி குடித்து, சிகரெட் புகைக்கிறவர்” என்று கூறினான். அதற்கு நான், “பாருங்கள், ஒரு நேர்மையான அறிக்கை ஆத்துமாவுக்கு நல்லது” என்றேன்.

1738 அப்பொழுது அவன் கூறினான்—அவன், “நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்றான். அவன், “மார்மோன் சபை மாத்திரமே உண்மையான சபை என்று எனக்கு கூறப்பட்டுள்ளது” என்றான். அவன், “நீங்கள் அதை நம்புகிறீர்களா?” என்று கேட்டான். 39 மேலும் நான், “அது சபை என்று வரும்போது, அவைகள் மற்றெல்லாவற்றையும் போல இதுவும் நல்லதாக இருக்கும் என்று நான் யூகிக்கிறேன். நான் ஒரே ஒரு சத்தியத்தை மாத்திரமே அறிந்திருக்கிறேன், அது இயேசு கிறிஸ்து” என்றேன். நான், “அவர் உண்மையானவர் என்பதை நான் அறிவேன்” என்றேன். 40 “பாருங்கள்,” அவன், “அன்றொரு இரவு எனக்கு ஒரு குழந்தை பிறந்தது, அது மரித்துப் பிறந்தது” என்றான். அவன், “இந்த குழந்தை, அது இறந்து பிறந்ததால், நான் அதை மீண்டும் ஒருபோதும் காணமாட்டேன் என்று, தேவன் அதற்குள் ஜீவ சுவாசத்தை ஒரு போதும் ஊதவில்லை” என்று கூறினான். அவன், “அதைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டான். 41 “பாருங்கள்,” நான், “நீங்கள் ஒரு ஜேக் மார்மனாக இருக்கின்றபடியால் நீங்கள் அதைக் காணமாட்டீர்கள், நீங்கள் நிச்சயமாக காணமாட்டீர்கள். அந்த ஒரு காரியம் நிச்சயம், நீ ஒரு ஜேக் மார்மோனாக நிலைத்திருக்கும் வரையில் நீ அதைக் காணமாட்டாய்” என்றேன். மேலும் அவர் கூறினார்…பாருங்கள், அவர் என்னை தள்ளிக் கொண்டிருந்தார், எனவே நான் அவரை சற்று பின்னால் தள்ளிவிட்டேன், நீங்கள் பாருங்கள். நாம் பின்னுக்குத் தள்ள வேண்டிய நேரமிருந்தது. எனவே அவன் கூறினான்—அவன் கூறினான்…நான், “என்ன விஷயம்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “ஓ, எனக்குத் தெரியாது” என்றான். அவன், “பாருங்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். நான், “அநேக அருமையானவைகளை நான் அறிந்திருக்கிறேன்…” என்றேன்.

1842 அவன் ஒரு மார்மோன் என்று எனக்குத் தெரியாது. நான் மிகவும்… அது ஊட்டாவில் இருந்தபடியால், அது அநேகமாக அவ்வாறு இருந்திருக்கலாம் என்பதை நான் அறிவேன், ஆனால் நான்…ஏனென்றால் சால்ட் லேக் நகரத்தைச் சுற்றிலும் உள்ள, அநேக ஜனங்கள் அங்கே மார்மோன்களாக உள்ளனர். இருப்பினும், இது சால்ட் லேக் நகரம் அல்ல. எனவே நான், “சரி, எனக்கு சில அருமையான மார்மன் நண்பர்கள் இருந்தனர், ஜெப வரிசைகளில் இருந்தவர்கள், அருமையான ஜனங்கள்” என்று எண்ணினேன். 43 மேலும் நான், “மார்மோன்களாகிய மிக அருமையான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன்” என்றேன். அவன் கூறினான், பாருங்கள், அவன் கூறினான்…நான், “அவர்களுடைய போதகத்தை நான் அறியேன், அவர்களுடைய போதகத்திற்கு முரணான ஒன்றை நான் கூற விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள், நான் அதை உயர்வாக மதிக்கிறேன்” என்றேன். அதற்கு நான், “பாருங்கள், நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவன், “ஆம், ஐயா, நான் விசுவாசிக்கிறேன். ஆனால்,” என்று கூறி, “நான் அதனடிப்படையில் வாழ்வதில்லை” என்றான். 44 நான், “பாருங்கள், தேவன் அந்தக் குழந்தையை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே, உலகத்தோற்றத்திற்கு முன்னரே அறிந்திருந்தார் என்று வேதம் போதிக்கிறது என்று நான் நினைக்கிறேன்,” என்றேன். மேலும் நான், “தேவன் எரேமியாவிடம், ‘நீ உன்னுடைய தாயின் வயிற்றில் உற்பத்தியாவதற்கு முன்பே, நீ வயிற்றிலிருந்து வெளிப்படுவதற்கு முன்னமே, நான் உன்னை அறிந்து, உன்னைப் பரிசுத்தப்படுத்தி, உன்னை ஜாதிகளுக்கு ஒரு தீர்க்கதரிசியாக நியமித்தேன்.’” என்றார். அதற்கு நான், “அந்த அளவுக்கு அவர் அதைக் குறித்து அறிந்திருந்தார், பாருங்கள்” என்றேன். அதற்கு அவன், “சரி,” என்று கூறி, அவன், “உமக்கு நன்றி” என்றான். 45 அவன் மலையின் கீழே நடக்கத் துவங்கினான். அதன்பின்னர் அவன் இந்த மற்ற நபரை சந்தித்து, “அந்த நபர் ஒரு பிரசங்கி என்று நீங்கள் ஏன் என்னிடம் கூறவில்லை?” என்று அவன் கேட்டான். எனவே நாங்கள்…அவர் அவனிடத்தில் சிறிது நேரம் பேசி கூட்டங்களைக் குறித்து அவனிடம் கூறத் துவங்கினார்.

1946 இப்பொழுது மார்மோன்கள் தீர்க்கதரிசனத்தை விசுவாசிக்கின்றனர். நான்…இங்கே எந்த மார்மோன்களும் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர்கள்—ஆனால் அவர்கள் தீர்க்கதரிசனத்தில் விசுவாசங்கொண்டுள்ளனர். ஆனால், எனவே, நான் உபதேசத்திற்கு புறம்பாக பேசிக்கொண்டிருக்கலாம், ஆனால் நான்…ஆம். ஆம். ஆயினும், அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவன் என்னிடம் திரும்பி வந்து, “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் புரிந்துகொள்கிறேன்” என்றான். அதற்கு நான், “இல்லை ஐயா” என்றேன். நான், “நான்…ஒரு சில காரியங்கள் நடக்க வேண்டுமென்று கர்த்தர் எனக்கு காண்பித்திருக்கிறார்” என்றேன். 47 உடனே, அவன் புறப்பட்டு, “நாம் உள்ளே போவோம்” என்றான். அவன் தன்னுடைய காரில் ஏறி, அவர் குடியிருந்த இடத்திலிருந்து தன்னுடைய சிறிய நகரத்திற்குச்…சென்றான். ஒரு சில நிமிடங்களில், அவனைக் காணவில்லை. மதிய உணவுக்குப் பிறகு மற்றொரு வேட்டைக்காக, நாங்கள் நாய்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தோம். நாங்கள் சென்றபோது, ஏன், அவன் ஒரு காரில் புறப்பட்டுச் சென்றான். 48 ஒரு சில நிமிடங்களில், சுமார் பதினேழு வயதுடைய, ஒரு அருமையான தோற்றமுடைய வாலிபன் திரும்பி வந்து, ஒரு உண்மையான பரிசுத்தமாக தோற்றமளிக்கும் கிறிஸ்தவ பெருந்தன்மையான மனிதனாய் காணப்படுகிறவன். அதற்கு அவன், “இது என்னுடைய சகோதரன்” என்றான். மேலும், “அவன் ஒரு ஜேக் மார்மன் அல்ல. அவன் ஒரு உண்மையான மார்மோன்” என்றான். நான், “மகனே, நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டேன். மேலும் அவன், “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று என் சகோதரன் என்னிடம் கூறினான் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்றான். அதற்கு நான், “இல்லை ஐயா” என்றேன். நான், “நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல” என்றேன். ஆனால் நான், “கர்த்தர் நடக்க வேண்டிய காரியங்களை எனக்குக் காண்பித்திருக்கிறார்” என்றேன். 49 அவன், “இப்பொழுது என் கையில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. நான் அறுவை சிகிச்சை செய்யும் மேஜையில் இருக்க வேண்டும்” என்றான். அவன், “ஆனால் என்னுடைய சகோதரன் இதை என்னிடம் கூறினான். நான், ‘அப்படியானால், எனக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை’” என்றேன். அவன் என் கண்களுக்கு நேராக, ஒரு நேர்மையான, உண்மையான, உத்தமமான தோற்றத்தில், “நீங்கள் உங்களுடைய கரங்களை என் மீது வையுங்கள். இந்தக் காரியங்கள் அவ்வண்ணமாய் இருந்தால், எனக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாது” என்றான். அவன் நலமுடன் வீட்டிற்குச் சென்றான்.

2050 இந்த சகோதரன், என்னுடைய கிறிஸ்தவ நண்பர், என்னுடன் பீனிக்ஸிலிருந்து வந்து வேட்டையாடிக்கொண்டிருந்தார். அவர் என்னிடத்தில் கூறினார், அவர் கூறினார்…இந்தப் பையன்களில் சிலர் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த அவர்களில் ஒருவர் இங்கே இருக்கிறார். நாங்கள் வீட்டிற்குச் சென்றோம். அவர், “சகோதரன் பிரான்ஹாமே, கர்த்தர் உங்களுக்கு ஒரு தரிசனத்தைக் காண்பிப்பாரானால் நலமாயிருக்கும் என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை மார்மோன்களிடம் கூறினால், அது அதைச் செய்யும், ஏனென்றால் அவர்கள் அதற்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார். 51 எனவே, நான் ஜெபித்தேன், நான் ஜெபித்தேன். நான் வீடு திரும்பும் பாதையில், அடுத்த திங்கட்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, சுமார் பத்து மணியளவில் நான் வந்து கொண்டிருந்தேன், அன்று காலை சபை முடிந்த பிறகு, நான் அறையில் நின்றுகொண்டு, வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். 52 நான் மின்விளக்குகள் பிரகாசிப்பதை அல்லது ஏதோ ஒரு விதமான ஒளி பிரகாசிப்பதைக் கண்டேன். அப்பொழுது நான் ஒரு மரத்தில் இருந்த ஒரு சிங்கத்தைக் கண்டேன், மேலும்—மேலும் அது என்னால் சுட முடியாத அளவுக்கு மிகச் சிறியதாயிருந்தது. நான் அதை விரும்பவில்லை. அங்கே வேறு யாரோ ஒருவர் அதை சுட்டார், அவர்கள் அதைச் சுட்டபோது, அவர்கள் மிகப் பெரிய துப்பாக்கியைக் கொண்டு அதைச் சுட்டனர். அது சிங்கத்தை பிளக்கச் செய்தது. அது செய்யப்பட்ட விதத்தை நான் பாராட்டவில்லை.

2153 நான் பீனிக்ஸூக்கு சென்றபோது, நான் அதை சகோதரன் டாசனிடமும், சகோதரன் மோஸ்லியிடமும் கூறினேன். அவர் இங்கிருக்கிறார் என்பதை நான் அறிவேன். நான் அவரை அன்றொரு நாள் இங்கே எங்கோ பார்த்தேன். அவரும் அவருடைய மனைவியும் என்னுடன் சென்று கொண்டிருந்தனர். மேலும் நான், “நீங்கள் கவனித்துப் பாருங்கள், அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அது அந்தவிதமாகவே சம்பவிக்கப் போகிறது” என்றேன். 54 நாங்கள் நான்கு அல்லது ஐந்து இரவுகள் காத்திருந்தோம், நாங்கள் வேட்டையாடியிருந்த இரவுகள், இல்லை பகல்கள். நீங்கள் இரவு நேரத்தில் ஒரு சிங்கத்தை மரத்தில் காண்பது எப்போதுமே அரிதான செயலாகும். வீட்டிற்கு வந்தபோது, இந்த வேட்டைக்காரன், இந்த மார்மோன் பையன், அவர்கள் நாய்களை அவிழ்த்துவிட்டனர். அந்த சிங்கம் ஒரு தடயத்தை கண்டுபிடித்து சென்றது, இல்லை நாய் சிங்கத்தின் தடயத்தை கண்டுபிடித்து சென்று, அதை ஒரு மரத்தின் மேல் துரத்தினது. இரவு பத்து மணிக்கு அவர்கள் வந்து, எங்களை படுக்கையிலிருந்து எழுப்பினர். நாங்கள் அங்கு சென்றோம், அங்கே அந்த மரத்தில் அதே சிங்கம் இருந்தது. விளக்குகளை பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தபோது, சகோதரன் மோஸ்லி சுமார் .44 ரக துப்பாக்கியினால் அதைச் சுட்டார், அது சிங்கத்தை இரண்டாக பிளந்துவிட்டது போன்று இருந்தது. அது கூறப்பட்ட விதமாகவே, அது இருந்தது. அடுத்த நாள், நான் அந்த மாநிலத்தின் தலைமை வேட்டைக்காவலரை, மற்றொரு ஜாக் மார்மனை சந்தித்தேன். அந்தப் பையன்களை ஒன்று சேர்த்துக் கொண்டு, வீட்டிற்குத் திரும்பும் வழியில் அவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்தினேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தேவன் தம்முடைய வார்த்தையை அவ்வண்ணமே நிரூபிக்கிறார்.

22ஜனங்கள், “காண்பதே விசுவாசிப்பதாகும்” என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது முற்றிலும் உண்மையல்ல. அநேக ஜனங்கள் காண்கிறபோதிலும் அவர்கள் இன்னமும் விசுவாசிப்பதில்லை. 55 இயேசுவானவர் பூமியின் மேலிருந்த நாட்களில், வெளிப்படுத்தப்பட்ட அந்த தேவனுடைய வார்த்தை அவர் என்று, அவர்கள் ஏன் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை? “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்” என்று மோசே கூறியதை ஜனங்கள் ஏன் உணரவில்லை? அவர் செய்வதாக வேதம் உரைத்துள்ள ஒவ்வொரு வார்த்தையையும் அவர் நிறைவேற்றினார், ஆனால் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. 56 ஆனால் தேவனோ, ஒவ்வொரு காலத்திலும், தம்முடைய வார்த்தை உண்மையென்று நிரூபித்திருக்கிறார். அவர் எப்பொழுதுமே தம்முடைய வார்த்தையை நிரூபிக்கிறார். அதன்பின்னர் அவர்கள் சில சமயங்களில், “பார்த்தல் என்பது விசுவாசிப்பதாகும்” என்று கூறுகின்றனர். அது அவ்வண்ணமாக அல்ல. ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையை ஒவ்வொரு காலத்திலும் நிரூபித்துக் கொண்டே செல்கிறார் என்பதை நாம் அறிவோம். 57 அவர் அதை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிரூபித்தார் என்பதை நாம் அறிவோம், அதாவது அவர், “நீ அதைப் புசிக்கும் நாளிலே, நீ நிச்சயமாக சாவாய்” என்று கூறியிருந்தார். அது உண்மை என்பதை, நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் அதை விசுவாசிக்கிறோம், ஏனென்றால் அவர் அதை எங்களுக்கு நிரூபித்திருக்கிறார், அது உண்மை என்பதை நாம் அறிவோம்.

2358 இப்பொழுது தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபித்த சில இடங்களை நாம் எடுத்துக் கொள்வோம். நாம் உதாரணமாக நோவாவின் நாட்களில் எடுத்துக் கொள்வோம். தேவன் நோவாவிடம் நிச்சயமாகவே விஞ்ஞானத்துக்கு முரணான நம்பத்தகாத ஒரு செய்தியை உரைத்தார். எவருமே விசுவாசித்திருக்க முடியாது. பூமியின் மேல் மழை பெய்யவேயில்லை. விஞ்ஞானத்துக்கு முரணானவை! 59 நாம் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் ஒரு வேளை அப்பொழுது அவர்கள் ஒரு பெரிய விஞ்ஞான காலத்தில் இருந்திருக்கலாம், ஏனென்றால் அவர்கள் அந்த நாட்களில் கூர் நுனி கோபுரங்களையும், சிறகுடைய பெண்முக சிங்க உருவச் சிலைகள் போன்றவற்றையும் கட்டினர், அதை இப்பொழுது நம்மால் கட்ட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு விதமான ஒரு இயந்திர சக்தியை, ஒரு வேளை அணுசக்தி அல்லது ஏதோ ஒரு வல்லமையை உடையவர்களாக இருந்திருக்கலாம், அவர்களால் அந்த பெரிய கற்பாறைகளை தூக்கிச் செல்ல முடியும், அதை இன்றைக்கு நம்மால் செய்ய முடியவில்லை. ஆனால் அவர்கள் பெரிய விஞ்ஞானக் காரியங்களைச் செய்தனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒரு சரீரமானது இயற்கையாகவே காட்சியளிக்கும்படியாக ஏதோ ஒன்றை அவர்கள் வைத்திருந்தனர். நாம் அந்த கலையை இழந்துவிட்டோம். 60 இயேசு, “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்” என்றார். நாம் மற்றொரு மகத்தான விஞ்ஞான காலத்திற்குள் பிரவேசிக்கப் போகிறோம் என்பதை நாம் அறிவோம். 61 இப்பொழுது நோவா கொண்டிருந்த செய்தியானது சபையில், அக்காலத்திலிருந்த விசுவாசத்திற்கு மிகவும் முரண்பாடாயிருந்தது, அது விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் மிகவும் முரண்பாடாகவும் இருந்தது. ஆனால் தேவன் தம்முடைய வார்த்தை உண்மையென்று நிரூபித்தார். அந்த தீர்க்கதரிசி கூறியது உண்மையென்று தேவன் நிரூபித்தார்.

2462 நாம் இன்னும் சிறிது நேரம் மற்றொன்றையும் பார்ப்போம். ஆபிரகாம் கர்த்தருடைய மற்றொரு தீர்க்கதரிசியாயிருந்தான், அவனுக்கு வார்த்தை வந்தது. அவன் எழுபத்தைந்து வயதாயிருந்தபோது, சாராள் அறுபத்தைந்து வயதாயிருந்தபோது, அவன் சாராளின் மூலம் ஒரு குழந்தையைப் பெறப்போவதாக இருந்தான். இப்பொழுது, அது ஒரு அவிசுவாசிக்கு முற்றிலும் ஒரு அதிர்ச்சியாயிருந்தது. இன்றைக்கு, இந்த நாளிலும் கூட இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்றும், நம்முடைய எல்லா விஞ்ஞான சாதனைகளையும், இந்த சோதனைக் குழாய் குழந்தைகளைக் குறித்து அவர்கள் பேசுவதையும், இன்ன பிறவற்றைக் குறித்தும் உங்களால் கற்பனை செய்ய முடியுமா? ஆனால் இந்த வயோதிக ஸ்திரீ, இப்பொழுது அறுபத்தைந்து வயது, எழுபத்தைந்து வயதுடைய ஒரு வயோதிக மனிதன், ஆனால் கர்த்தருடைய வார்த்தை ஆபிரகாமுக்கு வந்து இது சம்பவிக்கப் போகிறது என்று அவனுக்கு அறிவித்தது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். இப்பொழுது, தேவன் எவ்வளவுதான் உரைத்திருந்தாலும், அது எவ்வளவு உண்மையாயிருந்தாலும், அதை அவ்வண்ணமாக செய்ய, தேவன் கூறினதை ஆபிரகாம் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது அந்த மனிதன் எப்படியாய் அவனுடைய சாட்சியோடு, சோதிக்கப்பட்டான் என்று பாருங்கள், அவன் விசுவாசித்தான். 63 அந்த அறிக்கையை செய்த அதே மனிதன், அவன் தேவனை விசுவாசித்தான், அவன் உங்களைப் போன்ற ஒரு நபராய் இன்றிரவு இங்கே அமர்ந்திருக்கிறான். நாம் இன்னமும் தேவனை விசுவாசிக்கிறோம். அவருடைய வார்த்தையே சத்தியம் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் அதை விசுவாசித்தால், அது சத்தியம் என்று, அவர் அதை நிரூபிப்பார்.

2564 இப்பொழுது ஆபிரகாமுக்கு இருந்த தடையைப் பாருங்கள். முதலாவது காரியம் அவனுடைய வயது, எழுபத்தைந்து வயது, சாராளுக்கு அறுபத்தைந்து வயது. அவள் வாழ்க்கையின் மாற்றத்தை கடந்துவிட்டிருந்தாள், மாதவிடாய் நின்றுவிட்டிருந்தது. அநேக ஆண்டுகளுக்கு முன்பே, அது நின்றுவிட்டது என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு மனைவியாக இருந்தபடியால் அவளோடு அவன் வாழ்ந்து வந்தான். அது அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரியாயிருந்தது, அநேகமாக அவள் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு பெண்ணாய் இருந்தபோது, அவளை மணந்து கொண்டான். அவனுக்கு பிள்ளைகள் இல்லாதிருந்தது. அவள் முற்றிலும் மலடாக இருந்தாள். இதைச் செய்ய, அதை விசுவாசிக்காத எல்லா ஜனங்களிடமிருந்தும் அவன் தன்னைப் பிரித்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை இப்போது நாம் காண்கிறோம், அது நிறைவேற வேண்டும் என்பதற்காகவே. 65 நீங்கள் உங்களை ஜனங்களிடத்திலிருந்து பிரித்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் நீங்கள் உங்களை எல்லா அவிசுவாசத்தின் அவதூறுகளிலிருந்தும் பிரித்துக்கொண்டு, அதிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஜனங்கள், “ஆ, அந்தக் காரியங்கள் நடக்கிறதில்லையே! அது ஒரு கூட்ட பைத்தியக்கார ஜனங்கள்! அப்படிப்பட்ட ஒரு காரியம் நடப்பதில்லை” என்று கூறுகிறார்கள், உங்களுடைய காதுகளை அடைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள். அதற்கு எந்தக் கவனமும் செலுத்த வேண்டாம்.

2666 வேதம், “ஆபிரகாம் அவிசுவாசத்தினாலே, தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து சந்தேகப்படாமல், பலமுள்ளவனாயிருந்து, தேவனைத் துதித்துக்கொண்டிருந்தான்” என்று கூறியுள்ளது. அவனுடைய பெயர் ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம் என்று மாற்றப்பட்டது. அந்த பெயர் மாற்றமானது அவனுடைய பெயர் “ஜாதிகளுக்குத் தகப்பன்” என்று ஆயிற்று. ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடு, தன்னுடைய இனிய இருதயத்தோடு ஜீவிப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா, அவன் இப்பொழுது அவளோடு இத்தனை வருடங்களாக வாழ்ந்து வந்தான், இப்பொழுது எண்பது வயதைக் கடந்தவர், அவருடைய மனைவிக்கு எழுபது வயது, ஆனால் அதே சமயத்தில் ஒரு பிள்ளையோ அல்லது எந்த பிள்ளையின் நம்பிக்கையோ இல்லாமலிருந்தும், அதே சமயத்தில் தான் “தேசத்தின் தகப்பன்” என்று உரிமை கோரினான். அவனைக் கடந்து சென்ற அவனுடைய சக மனிதனின் விமர்சனமோ, “ஜாதிகளின் தகப்பனே, இந்த நேரத்தில் இப்பொழுது உனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள்?” என்று இவ்வாறு கூறுவதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அவன் எல்லாவிதமான விமர்சனங்களினூடாகவும் செல்ல வேண்டியதாயிருந்தது! 67 ஆனால் ஆபிரகாமோ அவிசுவாசத்தைக் குறித்து, எங்கும் தடுமாறவில்லை. தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று அவன் விசுவாசித்தான், தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபிப்பார், அது எவ்வளவு காலம் பிடித்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் பலவீனமடைவதற்குப் பதிலாக, அவன் எல்லா நேரத்திலும் பலமடைந்து கொண்டே சென்றான். “அது இன்றைக்கு நடக்கவில்லையென்றால், நாளை அது ஒரு மகத்தான அற்புதமாக இருக்கும், ஏனென்றால் அது ஒரு நாள் கூடுதலாகிவிட்டது.” அது தேவனாயிருந்தது, அது ஆபிரகாமுக்குள் இருந்த தேவனாயிருந்தது, ஏனென்றால் தேவன் தம்முடைய எல்லா வார்த்தைகளும் அவ்வண்ணமாய் இருப்பதை நிரூபித்தார் என்பதை அவன் அறிந்திருந்தான்.

27அவருடைய பிள்ளைகள் அவருடைய வார்த்தையை மாத்திரம் ஏற்றுக் கொள்வார்களானால், அப்பொழுது அவர் அதை உங்கள் மூலமாக நிரூபிக்க முடியும்! அந்த ஒரே வழியில் அவர் தம்முடைய வார்த்தையை நிரூபிக்க முடியும். அவர் அதை அவிசுவாசிகளுக்கு நிரூபிப்பதில்லை. அவைகள் நிரூபிக்கப்பட முடியாது; அவர்கள் அவிசுவாசிகளாயிருக்கிறார்கள். ஆனால், அது அவிசுவாசிகளுக்குரியதல்ல. அது அவிசுவாசிகளுக்கானது அல்ல. 68 அது விசுவாசிக்கிறவனுக்குரியது. அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் ஒருவரை அவரால் கண்டறிய முடிந்தால், அவர் தம்முடைய வார்த்தையை உங்கள் மூலம் நிரூபிப்பார். தேவன் தம்மை நிரூபிக்கும்படியாக, சில சமயங்களில் சுகவீனமும் மற்ற காரியங்களும் நமக்கு அந்தவிதமாக சம்பவிக்கிறது. இயேசு கண்டறிந்த குருடான மனிதனை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா? அவர்கள், “யார் பாவம் செய்தது, அவனா அல்லது அவனுடைய தகப்பனா, அவனுடைய தாயா?” என்று கேட்டனர். 69 அவர், “இந்தக் காரியத்திலோ தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படியாகவேயன்றி வேறல்ல” என்றார். பாருங்கள், இயேசு மகிமைப்படும்படியாக அது அந்த பையனுக்கு சம்பவித்தது. சில நேரங்களில் சுகவீனம் ஒரு சாபமல்ல, அது ஒரு ஆசீர்வாதமாயுள்ளது, நாம் நம்முடைய விசுவாசத்தை அங்கேயே நிலைநிறுத்தி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்க முடியும். தேவன் அவ்வண்ணமாய்க் கூறினார், நீங்கள் சோதனையின் கீழ் பலவீனமடையாமலிருந்தால், அது அவ்வண்ணமே என்பதை அவர் நிரூபிப்பார். 70 யோபு அவருடைய முகத்திற்கு முன்பாக அவரை தூஷிக்கமாட்டான் என்பதை, ஒருமுறை, அவரால் நிரூபிக்க முடிந்தது. யோபு அனுபவித்த சோதனையைப் பாருங்கள். ஆனால் மரணத்தின் வாசலில் இருந்தபோது, அதே சமயத்தில் அவன், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்!” என்றான். அவன் நிச்சயமாக அதை விசுவாசித்தான். தேவன் தம்முடைய வார்த்தையை யோபுவுக்கு நிரூபித்தார். அவர் அதை ஆபிரகாமுக்கு நிரூபித்தார். அவர் அதை அவ்வண்ணமே நிரூபித்தார்.

2871 அவர் அதை மோசேயைக் கொண்டும் கூட நிரூபித்தார். மோசே, அவனுக்கு எதிராக மிகுந்த சிரமம் உண்டாகயிருந்தபோது, மோசே தன்னுடைய சிந்தையில், ஒருக்கால், ஒரு விடுவிப்பாளனாய் இருக்க, அவன் ஒரு நேர்த்தியான பிள்ளையாக பிறந்திருந்தான் என்று அவனுடைய தாய் அநேகமாக அவனிடம் கூறியிருக்கலாம். பார்வோனின் அரண்மனையில் அவனை வளர்த்த அவனது ஆசிரியராக அவள்—அவள் இருந்தாள், அதை அவனிடம் சந்தேகமில்லாமல் சொல்லியிருந்தாள், “மகனே, நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபித்துள்ளோம், தேவன் விடுவிக்கப் பயன்படுத்தும் பிள்ளை நீதான் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்.” அதன்பின்னர் அவன்… 72 பாருங்கள், அவன் பார்வோனின் குமாரத்தியின் குமாரனாயிருக்க வேண்டியவனாயிருந்தான், அவன் சிங்காசனத்தின் சுதந்தரவாளியாயிருக்க வேண்டியவனாயிருந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். ஏன், அப்பொழுது அவன் அடுத்த பார்வோனாக ஆவான் என்பது, அவர்களுடைய சிந்தையில் இருந்தது என்பதில் சந்தேகமில்லை, “அடுத்த பார்வோனாக இருப்பதன் மூலம், அந்தவிதமாகத்தான் அவன் ஜனங்களை விடுவிப்பான்.” ஆனால் தேவனோ ஒரு…அது அவ்வண்ணமாய் இருந்திருக்குமானால், அப்பொழுது அவர் அதை ஒரு பொருளின் மூலமாக, ஒரு—ஒரு—ஒரு அரசியலின் செயலினூடாகச் செய்திருப்பார். ஆனால் தேவன் எப்பொழுதுமே அந்த விதமாக கிரியை செய்வதில்லை.

2973 கிரியை செய்ய தேவன் தம்முடைய சொந்த வழிகளை உடையவராயிருக்கிறார், அவர் “அவர்களை வெளியே கொண்டு வருவேன்” என்றார். அவர் ஆபிரகாமிடம், “நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு,” என்றும், அவர் “ஒரு பலத்த கரத்தினால், அவர்களை வெளியே கொண்டு வருவார்,” என்றும், அவர் “அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிப்பார்” என்றும் சொல்லியிருந்தார். அதனால் அவரால் அப்படி செய்ய முடியவில்லை, அதனால் ஆபிர-…ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்பதை நாம் கண்டறிகிறோம், இங்கே மோசே இப்பொழுது தேவனை விசுவாசிக்கிறான். 74 பார்வோன் பார்த்த அதே ஜன்னல் வழியாக மோசே பார்த்தான், அவன் அதே ஜனங்களைக் கண்டான் அந்த பார்வோன் அவர்களை நோக்கிப் பார்த்து, “சபிக்கப்பட்ட ஒரு ஜனமாக, ஒரு கூட்ட மதவெறியைத் தவிர வேறொன்றும் இல்லாத ஒரு ஜனமாக, ஒரு தேவனுக்காக, அவர்கள் ஒன்றுமே அறிந்திடாத ஏதோ ஒரு வனாந்திர தேவனுக்காக அவ்வாறு இருந்தனர்; அவர்கள் காணாத கம்பத்திற்கு ஜெபிக்கிறார்கள், அதில் ஒன்றுமே இல்லை. அவர்கள் ஒரு கூட்ட மதவெறியர்கள். அவர்கள் ஒரு கூட்ட அடிமைகளாயிருந்தனர். அவர்களுடைய தேவன் அவர்களை அடிமைகளாயிருக்க அனுமதித்து, அவர் தேவன் அல்ல என்பதை நிரூபித்தார்” என்றான்.

3075 இந்த முழு காரியத்தின் மத்தியிலும், அவர் அந்த மனிதனை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு கீழாகவே, தேவன் அந்தவிதமான விசேஷித்த வழிகளில் காரியங்களைச் செய்கிறார். ஒரு வேத சாஸ்திரி அல்ல, ஒரு போதகர் அல்ல, ஒரு குரு அல்ல, அவர்களுடைய பரிசுத்த மனிதர்களில் ஒருவரும் அல்ல; ஆனால் ஒரு சாதாரண மனிதன், அந்த வேலைக்காக பிறந்தான். தேவன் அவனை தம்முடைய தீர்க்கதரிசியாக இருக்கும்படி அழைத்து, அவனை அங்கே அனுப்பினார். இராணுவத்தை சந்திக்க, முழு உலகத்தையும் ஜெயங்கொண்டிருந்த இயந்திரத்தனமான இராணுவப் படைகளை எதிர்கொள்ள, அவன் கையில் ஒரு கோணலான தடியைத் தவிர வேறெதுவுமே இல்லாதிருந்தான். ஆனால் அந்தக் கோலைக் கையில் வைத்துக்கொண்டு, அந்தக் கோலைத் தன் கையில் பிடித்துக்கொண்டு, இஸ்ரவேலை விடுவிப்பார் என்று தேவன் சொன்னபடி, தேவன் அதை வாக்குத்தத்தம் செய்த காரணத்தால் அவன் அங்கு சென்று அதைச் செய்தான். அவன் அதை எப்படி செய்யப் போகிறான்? “நான் உன்னோடு கூட இருப்பேன்.” அவன், “கர்த்தாவே, உம்முடைய மகிமையை எனக்குக் காண்பியும். நான் மந்த நாவுள்ளவன். என்னால் சரியாக பேச முடியாது. மேலும் நான்…” அவன் பத்து இலட்சம் சாக்குபோக்குகளை உடையவனாயிருந்தான். 76 ஆனால் அவரோ, “நான் உன்னோடு கூட இருப்பேன்” என்றார். அவ்வளவுதான் அதற்கு தேவைப்பட்டது. அவன் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, புறப்பட்டான். எவ்வளவு ஆபத்தான பணி என்று தோன்றினாலும் அதைப் பொருட்படுத்தாமல், மோசே தொடர்ந்து தேவனை விசுவாசித்தான். தேவன் தம்முடைய வார்த்தை, உண்மையென்று, மோசேயின் மூலம் நிரூபித்தார். ஏனெனில், என்ன சம்பவித்தபோதிலும் பொருட்படுத்தாமல், மோசே வார்த்தையோடு சரியாக தரித்திருந்தான். பயணத்தின் நேரத்தில்…

3177 தேவன், எகிப்திலும், கூட, அவர் அவர்களை விடுவிப்பார் என்றும், “ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு, பாலும் தேனும் நிறைந்த, ஒரு நல்ல தேசத்திற்குள் கொண்டு செல்வதாகவும் அவர்களிடம் கூறினார்.” அது முற்றிலுமாக அங்கிருந்தது. அது அங்கிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை, ஆனால் அவர், “அது அங்குள்ளது, நான் அதை உனக்கு கொடுத்திருக்கிறேன். அது ஏற்கனவே உங்களுடையதாயிருக்கிறது, நீங்கள் போய் அதை உரிமையாக்கிக்கொள்ளுங்கள்!” என்றார். 78 வனாந்திரத்தில், அவர்களில் அநேகர் வெளியே வந்து, ஆவியில் நடனமாடும்போது, மிரியாம் தம்புருவை வாசித்தாள்; பரலோகத்திலிருந்து மன்னாவைப் புசித்தனர்; மோசே ஆவியில் பாடினதைக் கேட்டார்கள்; நடக்கிற அற்புதங்களையும் அடையாளங்களையும் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் தேவனுடைய முழு வார்த்தையையும், எல்லா வாக்குத்தத்தத்தையும் விசுவாசிக்க, ஒரு பலப்பரீட்சை வந்தபோது, அவர்கள் தவறிப்போயினர்.

32அவர்களில் இருவர் மாத்திரமே அதை விசுவாசித்தனர், அது யோசுவா மற்றும் காலேப். அவர்கள் தேசம் நல்ல நிலமாயிருந்தது என்பதற்கான அத்தாட்சியை கொண்டு வந்தனர். 79 ஆனால், சூழ்நிலைகளோ, அதுதான் அவர்களை தடை செய்தன. ஏனென்றால், அவர்கள், “நாங்கள் அந்த தேசத்தை கைப்பற்ற முடியாது, ஏனென்றால் அவர்களுடைய நகரங்கள் மதில்களால் சூழப்பட்டிருக்கின்றன, அவர்களுடைய—அவர்களுடைய—அவர்களுடைய பிரதிநிதிகள் அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய பிரதிநிதிகள் அல்ல, ஆனால் அவர்களுடைய—அவர்களுடைய ஜனங்கள் ஒரு மகத்தான இராட்சதர்கள். ஏன், அவர்களுக்குப் பக்கத்தில், நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல் காணப்படுகிறோம்” என்றனர். 80 யோசுவாவும் காலேபும், “நாம் அதைக் கைப்பற்றக் கூடியவர்களாயிருக்கிறோம்” என்றனர். ஏன்? தேவன் அதை அவர்களுக்கு அளித்திருந்தார், எவ்வளவு பெரிய ராட்சதர்களாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அந்தத் தடை அவர்களுக்கு ஒன்றுமே ஒன்றுமில்லை. தேவன் அவ்வண்ணமாய் கூறியிருந்தார்! தேவன் அவர்கள் மூலமாக அதை நிரூபித்தார். தேவன் அவர்கள் அதைச் செய்வதாகக் கூறினபடியே, அவர்கள் அங்கு சென்று தேசத்தைக் கைப்பற்றினர். அவர் அதை அவர்களுக்கு நிரூபித்தார்.

3381 இப்பொழுது, அவர்கள் ஏப்ரல் மாதத்தில் வரும்போது, தண்ணீர் மலைகளிலிருந்து, பனிப்பொழிவுகள் போன்றவற்றின் மேல் ஊற்றிக் கொண்டிருந்தபோது, தேவன் ஒரு ஏழ்மையான தளபதியைப் போன்று காணப்பட்டார், அவருடைய இராணுவத்தை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல, அவர் அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலிருந்து விலக்கியிருந்தார். அவர் அவர்களைக் கைப்பற்றப்போவதாயிருந்த அதே நேரத்தில், அது வருடத்தின் மிக மோசமான மாதமாயிருந்தது. அந்த மாதத்தில் யோர்தான் தன்னுடைய கரைகள் நிரம்பி வழிந்து, வயல்வெளிகளுக்குள் பாய்ந்தது. ஏன், அவர்கள் அவர்களைக் கைப்பற்றப் போவதாயிருந்தால், அது கோடைக்காலமாக இருக்கும், அப்பொழுது அவர்கள் கடந்து செல்ல முடியும். ஆனால் அவர் தண்ணீர் ஆழமடையும் வரை காத்திருந்தார். அவர் தேவன் என்பதை காண்பிக்க விரும்புகிறார். அவர் அதைப் பொருட்படுத்தாமல், தம்முடைய வார்த்தையை நிரூபிக்க விரும்புகிறார். 82 மருத்துவர், “நீ புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாய்” என்று கூறியிருந்தாலும் கவலைப்பட வேண்டாம். அந்த மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். இன்றிரவு, உங்களில் சிலருக்குத் தண்ணீர் ஆழமாக இருக்கலாம். ஆனால், நினைவிருக்கட்டும், தேவன் வாக்குத்தத்தம் செய்தார். தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்ளுகிறார், தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபிக்கிறார். அது சத்தியமாயிருக்கிறது. 83 தண்ணீர் சேறும், அவர்கள் தலைக்கு மேல் ஆழமாகப் போகும் வரைக்கும் அவர் காத்திருந்தார், அதன்பின்னர் அவர் வழியைத் திறந்தார். அவர் அவர்களுக்கு முன்பாகச் சென்று வழியை உண்டாக்கினார். 84 எரிகோ, முழுவதுமாக மூடப்பட்டிருக்கும்போது, அவர்கள் எப்படி உள்ளே வரப்போகிறார்கள்? யோசுவா யோசித்துக் கொண்டிருந்தான். தேவன் அவனை அவ்வளவு தூரம் வழி நடத்தியிருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான், அடுத்த படியானது தேவனுடையது.

3485 ஒரு நாள் அவன் வெளியே சுற்றி நடந்து, சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, உருவினப்பட்ட பட்டயத்தோடு ஒரு மனிதன் நிற்பதை அவன் கண்டான். அவன் தன்னுடைய பட்டயத்தை உருவிக்கொண்டு அந்த மனிதனை சந்திக்கச் சென்று, “நீர் யாருக்காக இருக்கிறீர்? நீர் எங்களோடு இருக்கிறீரா அல்லது நீர் எங்கள் சத்துருவாக இருக்கிறீரா?” என்று கேட்டான். 86 அவர், “நான் கர்த்தருடைய சேனையின் அதிபதி” என்றார். என்ன செய்ய வேண்டும் என்று அவர் அவனிடம் கூறினார். அவர்கள் ரத பந்தயம் நடத்துகிற அந்த மதில் சுவரானது, எப்படி இவன் எக்காளம் ஊதப் போகும்போது விழப்போகிறது? ஒரு எக்காளத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்? 87 தேவன் அத்தகைய எளிய முறைகளைப் பயன்படுத்துகிறார். அது அவ்வளவுதான், அதன் எளிமை, அது எனக்கு தேவனாக இருக்கிறது. நாம் எப்பொழுதுமே ஏதோ ஒரு மகத்தான காரியத்தைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், ஏதோ ஒன்றைச் செய்யப் போகிறோம், தேவன்…ஏதோ ஒரு பெரிய ஸ்தாபனம் முழு காரியத்தையும் எடுத்து, அவை எல்லாவற்றையும் அழித்துப் போடப்போகிறது. தேவன் ஒரு எளிய நபரை, ஒரு மனிதனை மாத்திரம் அவரால் தம்முடைய கரங்களில் ஏந்திக் கொள்ள முடிந்தால், அவர் கூறின ஒவ்வொரு வார்த்தையையும், அதன் மூலம், அவர் நிரூபிப்பார். அத்தகைய எளிய சிறு முறைகள் தேவைப்படுகிறது! 88 “ஒரு எக்காளம் ஊதுங்கள்.” சுவரைத் தோண்டி எடுப்பது அல்ல, ஆனால், “வெறும் ஒரு எக்காளம் ஊதினால், மதில்கள் இடிந்து விழும். எக்காள சத்தம் மதில்களை இடித்துப் போடும்.” மாம்ச சிந்தைக்கு அது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறது! ஆனால் தேவன் தம்முடைய வார்த்தை உண்மையானது என்பதை நிரூபித்தார், ஏனென்றால் சுவர்கள் ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தன. அவர்கள் நேராக மேலே சென்று, அவர்கள் நகரத்தைக் கைப்பற்றினர்.

3589 ஓ, தேவன் தம்மை தேவன் என்று நிரூபிக்க விரும்புகிறார்! யோசுவா அதை அறிந்திருந்தான். ஒரு நாள், அவர் அங்கு நின்று கொண்டிருந்தபோது, எப்போதும் நிகழ்ந்ததிலேயே மிகப் பெரிய நம்ப முடியாத உண்மை, இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு அடுத்தபடியானது. சத்துரு…அவன் அவர்களை முறியடித்தபோது, வெவ்வேறு சேனைகள் மலைகளில் இருந்தன. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. ஓ, என்னே, தளபதி யோசுவாவுக்கு அது என்னே ஒரு நேரமாயிருந்தது! 90 நினைவில் கொள்ளுங்கள், அவன் அந்த தேசத்தினூடாக சண்டையிட்டு, ஒரு மருத்துவமனையோ, ஒரு மருத்துவச்சியோ, முதலுதவி குழுவோ அல்லது காயப்பட்ட ஒரு மனிதனோ இல்லை. அதை முறியடிக்கக்கூடிய ஒன்றை எனக்குக் கூறுங்கள். ஆம், ஐயா. அவனுக்கு மருத்துவமனைகள் கிடையாது, செவிலியர்கள் கிடையாது, அவன் எந்த மனிதனையும் இழந்து போகவில்லை, அவர்கள் கர்த்தருடைய சித்தத்திலும் வார்த்தையிலும் நடக்கும் வரைக்கும். தேவன் அவர்களோடு இருந்தார் என்பதை நிரூபித்தார். அது உண்மை. இப்பொழுது கவனியுங்கள். 91 இரவு வந்தால், அவர்கள் நழுவிச் சென்று ஒருவரோடு ஒருவர், மேலும்—மேலும் தங்களை ஒன்று சேர்த்து மற்றொரு பெரிய சேனையை உருவாக்கிக் கொள்வார்கள் என்பதையும், அதனால் அடுத்த நாள் அவர்களோடு ஒரு கடினமான நேரம் உண்டாயிருக்கும் என்பதை யோசுவா அறிந்திருந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, எனவே அவன் தேவனை நோக்கிப் பார்த்தான். அவனுக்கு உதவி தேவைப்பட்டது, அவனுக்கு சூரியன் நிலைத்து நிற்க வேண்டியதாயிருந்தது. எனவே அவன் சூரியனை அசையாமல் நிற்கும்படி கட்டளையிட்டான், மேலும்…“சந்திரனே ஆயலோன் மேல் தரித்து நில்,” என்றான். அவன் கட்டளையிடும் வரை அசையவில்லை. யோசுவா யுத்தத்தில் சண்டையிட்டு, சத்துருவை ஜெயங்கொண்டபோது, சந்திரனும் சூரியனும் இருபத்தி நான்கு மணி நேரம் அசையாமல் நின்றது, ஏனென்றால் அவன் கடமையின் பாதையில் சரியாக இருந்தான். அவன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து கொண்டிருந்த காரணத்தால், அதைச் செய்ய அவனுக்கு உரிமை இருந்தது.

3692 நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்டு, அவர் உங்களிடத்தில் செய்யும்படிக் கூறினதைச் செய்து, தேவனுடைய கட்டளைகளின்படி அணிவகுத்துச் செல்லும்போது, அந்த மலையைப் பார்த்து, “பெயர்ந்து போ!” என்று கூற உங்களுக்கு உரிமை உண்டு. 93 தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்கிறார். “நீங்கள் இந்த மலையைப் பார்த்து: பெயர்ந்து போ என்று சொல்லி உங்களுடைய இருதயத்தில் சந்தேகப்படாமல், நீங்கள் கூறினது நிறைவேறும் என்று விசுவாசித்தால், நீங்கள் கூறினதைப் பெற்றுக் கொள்ள முடியும்.” பரிசுத்த மாற்கு 11:22-ல், இயேசு அதைக் கூறினார். அதுதான் சத்தியம். அது சத்தியம் என்பதை நான் அறிவேன். அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது, அது சத்தியம் என்பதை அது நிரூபிக்கிறது. நாம் சில நேரங்களில் பயப்படுகிறோம். நாம் ஒரு நிலையை அடைந்து, அவர் அந்த வார்த்தையை காத்துக்கொள்ளமாட்டார் என்று நாம் பயப்படுகிறோம். அவர் அந்த வார்த்தையை காத்துக் கொள்வார். அவர் அதைச் செய்வதாகக் கூறினார். இப்பொழுது, அது உண்மையென்று நாம் கண்டறிகிறோம். அவர் அதை நிரூபித்தார்.

3794 ஏசாயாவின் தீர்க்கதரிசனம், ஒரு காலத்தில், ஒருபோதும் இந்த விதமாக சம்பவித்திராத ஒரு காரியம்; இதற்கு முன்பும் ஒருபோதும் இவ்வாறு சம்பவித்ததில்லை. அவர், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றார். ஒரு புருஷனை அறியாத ஒரு ஸ்திரீக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏசாயா, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றான். தேவன் தம்முடைய வார்த்தை உண்மையை நிரூபிக்கும்படியாக, ஒரு கன்னிகையை கர்ப்பவதியாகும்படி செய்தார். அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்தார், ஏனென்றால் ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி அவள் குமாரனைப் பெற்றாள். 95 இப்பொழுது, அந்த வார்த்தை மாம்சமானது, அது என்ன செய்தது என்று பாருங்கள். அந்த குமாரன் தோன்றினபோது, அவர்தாமே வார்த்தையாயிருந்தார். “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார்.” 96 அவர் அந்த ஜீவனுள்ள வார்த்தையாயிருந்தார். அவர் அந்த ஜீவனுள்ள வார்த்தையாயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். அவர் அக்காலத்து போதகர்களை நோக்கி, “என்னிடத்தில் பாவம் உண்டென்று யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?” என்று கேட்டார். பாவம் என்பது “அவிசுவாசம்” ஆகும். “நான் அவிசுவாசி என்று யார் என்னிடத்தில் கூற முடியும்? என்னைக் குறித்து எழுதப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், நிறைவேறிற்று” என்றார். அவருடைய ஜீவியத்தின் கடைசி ஏழு முன்னறிவிப்புகளும் கடந்த ஏழு மணி நேரத்தில், சிலுவையில் நிறைவேறின. அவரைக் குறித்து எழுதப்பட்ட யாவும், நிறைவேறினது, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருந்தார். அவர் வார்த்தையாய் இருந்தார், என்பதை அவர் நிரூபித்தார். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தினார். அவர் மரித்தோரை எழுப்பினார். அவர் மரணத்தையும், பாதாளத்தையும், கல்லறையையும் ஜெயித்தார். அவர் வார்த்தையாயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.

38இங்கே யவீருவின் வீட்டில் நடந்த இந்த சம்பவத்தைக் கவனியுங்கள். அவர்…அவர் அவர்களிடம் உண்மையைக் கூறியிருந்தார். அவர் சமுத்திரத்தைக் கடந்தபோது நாம் அவரைக் காண்கிறோம். அவர் உள்ளே வருகிறார். 97 அங்கே மலையின் மேல் ஒரு ஸ்திரீ இருந்தாள், அவள் தன்னுடைய பணத்தையெல்லாம் வைத்தியர்களோடு செலவழித்துவிட்டாள். அந்தப் பெண்மணியை சுகப்படுத்த, மருத்துவர்கள் தங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்திருந்தனர் என்பதில், சந்தேகமேயில்லை. அநேகமாக எபிரெய வைத்தியர்கள், அது ஒரு எபிரெய ஸ்திரீயாயிருக்கலாம், எனவே அவர்கள் தங்களுடைய சகோதரிக்காக அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருந்தனர். இந்த உதிரப்போக்கை நிறுத்த அவர்களுக்கு ஒன்றுமே இல்லாத போதிலும், அது, ஒருக்கால், மாதவிடாய் நின்ற நேரமாக இருந்திருக்கலாம்… அந்த சிறு காரியம் மிகவும் பலவீனமாயிருந்ததால், அவளால் அதற்கு மேல் செல்ல முடியாததாயிருந்தது. அவள் இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிருந்தாள். அவள் அந்த சிறு படகை அலரிச் செடிகளுக்குள் தள்ளுவதைக் கண்டபோது, அவள் அதைக் கண்டறியச் சென்றாள்.

3998 அவருடைய விமர்சகர்கள் அநேகர் அங்கே நின்று கொண்டிருந்தனர். அவர் இன்றைக்கு குறை கூறுபவர்களிலிருந்து விடுதலையாகவில்லை. அவர் யாராயிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் அவரை விமர்சிப்பவர்களாக இருந்திருக்கமாட்டார்கள். ஆனால் அவர் யாராயிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திராத காரணத்தால் அவர்கள் அவரை விமர்சிக்கிறவர்களாயிருந்தனர். அந்தவிதமாகத்தான் இன்றைக்கு செய்தி உள்ளது, அநேக நல்ல புருஷர்களும், ஸ்திரீகளும் இது என்னவென்று அறியாத காரணத்தால் இதை குறை கூறுகின்றனர். 99 இயேசு, “நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், என்னையும் அறிந்திருப்பீர்கள். மோசே என்னைக் குறித்துப் பேசினான். அநேக மகத்தான மனிதர்கள் இந்த நாளைக் காண ஆசையாயிருந்தார்கள். என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், அப்பொழுது என்னை விசுவாசிக்காதீர்கள். நான் பெரிய சாட்சியை உடையவனாயிருக்கிறேன்” என்றார், அவர், “பிதாவானவர் என்னோடிருக்கிறார் என்று நான் செய்கிற கிரியைகளினால் நிரூபிக்கிறபடியால், யோவானுடைய சாட்சியைப் பார்க்கிலும் பெரிய சாட்சியை உடையவனாயிருக்கிறேன்” என்றார். அவர் மகத்தான கிரியைகளை உடையவராயிருந்தார், ஏனென்றால் அவர் அடையாளங்காட்டப்பட்டவராயிருந்தார். யோவானும் கூட, வனாந்திரத்தில் கூப்பிடுகிற ஒருவனுடைய சத்தமாக அடையாளங்காட்டப்பட்டான். ஆனால் அவர் வந்தபோது, எழுப்பப்படுவார் என்று மோசே உரைத்திருந்த தீர்க்கதரிசி அவரே.

40அன்றொரு இரவு நான் கூறினதுபோல, அவர் மூன்று நாமங்களில்; தேவனுடைய குமாரன், மனுஷ குமாரன், தாவீதின் குமாரன் என்ற நாமத்தில் வருகிறார். 100 அவர் முதன்முறையாக, இங்கே பூமியில் இருந்தபோது, அவர் மனுஷகுமாரனாக இருந்தார். அப்பொழுது அவர் தேவனுடைய குமாரனாக இருக்க முடியாது; அவர் ஒருபோதும் அவ்வாறு உரிமை கோரவில்லை. அவர் “மனுஷகுமாரன்” என்று கூறினார். எவரேனும் அவரிடத்தில் கேள்வி கேட்கும்போது, அவர், “நீங்கள் மனுஷகுமாரனைக் காண்கிறீர்கள்; மனுஷகுமாரன்.” என்றார். இப்பொழுது, “மனுஷகுமாரன்” ஒரு தீர்க்கதரிசி. அவர் அந்தவிதமாக வர வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் வேதவாக்கியம், அவர் வேதவாக்கியத்திற்கு முரணாக வர முடியாது. 101 ஆகையால் தான், இன்றைக்கு, நம்முடைய—நம்முடைய இக்காலத்து செய்தியானது வேத சாஸ்திரிகள் மூலமாகவும் மற்றும் வேத சாஸ்திரம் மூலமாகவும் வர முடியாது, அது செய்வதாக வாக்களித்த அதே காரியத்திற்கு அது திரும்ப வர வேண்டும். அது அந்தவிதமாகத்தான் இருக்க வேண்டும். 102 எனவே இந்த மனிதன், அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருக்க வேண்டியதாயிருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம். அங்கே தேவனுடைய குமாரன் அல்ல, அவர் மனுஷ குமாரனாயிருக்க வேண்டியதாயிருந்தது. யேகோவா தாமே தீர்க்கதரிசிகளையும், எரேமியாவையும் மற்றவர்களையும், “மனுஷகுமாரன்” என்று அழைத்தார். “நீங்கள் மனுஷகுமாரனைக் காணும்போது…” “மனுஷகுமாரன் யார்?” அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். 103 அதன்பின்னர், அவர் மனுஷ குமாரனாகிய அவருடைய உத்தியோகத்தை சேவித்தார். அதன்பின்னர் அவர் இப்பொழுது தேவனுடைய குமாரனாக அவருடைய உத்தியோகத்தை சேவித்தார். தேவன் ஆவியாயிருக்கிறார், இப்பொழுது அவர் தேவ குமாரனாக, சபை காலங்களினூடாக சேவித்தார். இப்பொழுது, ஆயிர வருட அரசாட்சியில், அவர் தாவீதின் சிங்காசனத்தில் அமரும்போது, அவர் தாவீதின் குமாரனாயிருப்பார். அவர் தாவீதின் குமாரனாகிய சிங்காசனத்தின் சுதந்தரவாளியாயிருப்பார். மனுஷகுமாரன், தேவனுடைய குமாரன், தாவீதின் குமாரன், எல்லா நேரத்திலும் ஒரே மனிதனாகத்தான் இருக்கிறார். 104 பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் போன்றே; தேவனுடைய உத்தியோகம். அவர் பிதாவாகிய தேவனாயிருந்தார், அதன்பின்னர் அவர் குமாரனாகிய தேவனானார், இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியாகிய தேவனாய் இருக்கிறார். மூன்று தேவர்கள் அல்ல; ஒரே தேவன், மூன்று வெளிப்படுத்துதல், ஒரே தேவனின் மூன்று தன்மைகள்.

41இப்பொழுது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில், தேவன் தம்முடைய வார்த்தையை அன்று செய்தது போலவே அதேவிதமாக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை, நாம் கண்டறிகிறோம். 105 அவர் சமுத்திரத்தைக் கடந்து வந்தார் என்று நாம் கண்டறிகிறோம். இந்த ஸ்திரீ அவரை விசுவாசித்தாள், அவளுக்குள்ளாக ஏதோ ஒன்று படபடக்க ஆரம்பித்தது. யோசுவா சூரியனை நிறுத்த வேண்டியதாயிருந்ததற்கு வேத வாக்கியம் இல்லாதது போல, அவளிடம் இதற்கான வேதவாக்கியமே இல்லை, ஆனால் அவர் தேவனுடைய குமாரன் என்று அவள் தன் இருதயத்தில் விசுவாசித்தாள். எனவே அவள், “என்னால் அவருடைய வஸ்திரத்தை மாத்திரம் தொட முடிந்தால், நான் சுகமடைவேன்” என்றாள். எனவே அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொடுமளவிற்கு கூட்டத்தினூடாக நெருக்கிச் சென்றாள், அப்பொழுது உதிரப்போக்கு நின்றது. 106 இப்பொழுது, அவரைத் தொட்டது யார் என்பதைக் கண்டறியும்படி, அவர் கூட்டத்தாரை நோக்கிப் பார்த்தார். யாரோ ஒருவர் இருந்தார் என்பதில் சந்தேகமேயில்லை. அவர் நிறுத்தினார். எல்லா ஜனங்களும் அவரை நெருக்கிக் கொண்டிருக்கின்றனர்; சிலர் அவரைக் குறித்து பரிகசிக்கின்றனர், சிலர் அவரைப் பார்த்து நகைக்கின்றனர்; குருவானவர் தூரமாய் நின்று அவரிடத்தில் குருமார்கள், போன்றவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவரை விசுவாசித்த சிலர் இருந்தனர். மேலும், சிறிது நேரம் கழித்து அவர் நின்றார், திடீரென்று, திரும்பி, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். 107 அவர்களில் சிலர், “ஏன் போதகரே!” என்றனர். அது பேதுரு என்று நான் நினைக்கிறேன், “ஏன், முழு கூட்டமும் உம்மை சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்க. ஏன், உம்மைத் ‘தொட்டது’ யார்? ஏன், ஒவ்வொருவரும் உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்!” என்றான். அவர், “ஆனால் என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிந்திருக்கிறேன்” என்றார். அவர் பலவீனமடைந்துவிட்டார். அது ஒரு வித்தியாசமான தொடுதலாய் இருந்தது.

42108 சகோதரனே, சகோதரியே, நம்மால் அதை மாத்திரம் காண முடிந்தால் நலமாயிருக்குமே! அந்த குறிப்பிட்ட தொடுதலினால் நீங்கள் அவரைத் தொட முடிந்தால் நலமாயிருக்குமே! ஓ, வியாதியுள்ள ஜனங்களே, இன்னும் ஒரு சில நிமிடங்களில், நான் உங்களுக்காக ஜெபிக்க ஆயத்தமாக இருக்கிறேன். நான் பரிசுத்த ஆவியை உடையவனாயிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன், ஆனால் இந்த மனிதர்கள் இங்கே பெற்றுள்ளதைக் காட்டிலும், நீங்கள் அங்கே பெற்றுள்ளதைக் காட்டிலும், நான் பரிசுத்த ஆவியை அதிகமாகப் பெற்றிருக்கவில்லை. அதே பரிசுத்த ஆவியானவர், ஆனால் அது ஒரு தேவனுடைய கட்டளை; வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதும், அவர்கள் மேல் கைகளை வைப்பதும், தேவனுடைய கட்டளை என்று நீங்கள் விசுவாசித்தால், பொல்லாத ஆவிகளைத் துரத்துவதும், அவர் அளித்துள்ள வாக்குத்தத்தங்களும், உங்களுக்கும் அதேக் காரியமாகவே இருக்கும். நீங்கள் அதை விசுவாசிக்கக் கூடுமானால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அதைப் பெற்றுக் கொள்வீர்கள். “என்னால் இதைச் செய்ய முடியும் என்று உம்மால் விசுவாசிக்க முடிகிறதா?” என்று இயேசு கேட்டார். 109 காக்காய் வலிப்போடு பாதிக்கப்பட்ட குழந்தையுடன் இருந்த அந்த மனிதன், “ஆம், ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்” என்றான். “நீர் உலகத்தில் வரவேண்டிய தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்.” இப்பொழுது, அந்த மனப்பான்மையே பலன்களைக் கொண்டு வர முடியும் என்பதை நாம் அறிவோம்.

43110 இப்பொழுது, துரிதமாக, நாம் அவரைக் குறித்து ஒரு விநாடி சிந்தித்துப் பார்ப்போமாக, இதோ அவர் தம்முடைய பாதையில் இருக்கிறார். ஒரு சிறிய குருவானவர் வந்தார், ஆனால் அந்த சிறிய நபர் ஒரு எல்லைக்கோடு விசுவாசியாயிருந்தான் என்பதில் சந்தேகமேயில்லை. 111 சிறிய எல்லைக்கோடு விசுவாசிகள், இன்றைக்கு உலகத்தில் அநேகர் உள்ளனர். அவர்கள் அதை விசுவாசிக்க விரும்புகிறார்கள். பரிசுத்த ஆவி உண்மையானவர் என்று அவர்கள் விசுவாசிக்க விரும்புகிறார்கள். கடைசி நாட்களில் தேவன் தமது ஆவியை ஊற்றுவதாக வாக்குப்பண்ணியிருந்தபடியே, இது அப்போஸ்தல அசைவு என்று அவர்கள் விசுவாசிக்க விரும்புகிறார்கள். நாம்…அவன் மல்கியா 4-ல் விசுவாசிக்க விரும்புகிறான், கடைசி நாட்களில் மூல பெந்தெகொஸ்தே விசுவாசம் மீண்டும் சபைக்கு திரும்ப அளிக்கப்படும் என்று அவர் வாக்குப்பண்ணினார். 112 மல்கியா 4 அதை உரிமை கோருகிறது. “கடைசி நாளில் இதோ நான் எலியாவை உங்களிடத்தில் அனுப்புவேன்,” அது உண்மை. “அவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களண்டை திரும்ப அளிப்பான்,” பாருங்கள், “பிதாக்களின் விசுவாசம் பிள்ளைகளிடத்திற்கும் கூட.” பாருங்கள், அது அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்களோ, “பாருங்கள், அது யோவான் ஸ்நானன்” என்று கூறலாம். இல்லை, இல்லை. 113 மல்கியா 3 யோவான் ஸ்நானனாயிருந்தது. அது உண்மை. மத்தேயு 11, “நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், ‘இதோ, என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்’” என்று உரைக்கப்பட்டிருக்கிறவன் இவன்தான் என்று கூறுகிறது. அது நிச்சயமாக, எலியாவாயிருந்தது. இயேசு அது எலியாவாய் இருந்தது என்று கூறினார். ஆனால் மல்கியா 4-ன் எலியா, அல்ல.

44114 ஏனென்றால், “உடனே அந்த செய்திக்குப் பிறகு, பூமியானது அக்கினியால் சுட்டெரிக்கப்படும், நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் சஞ்சரிப்பார்கள்.” எனவே அது யோவானின் காலத்தில் நடக்கவேயில்லை. இந்த எல்லா ஸ்தாபன நிலைமைகளிலிருந்தும் ஜனங்களை வெளியே கொண்டு வர, நாம் மீண்டும் துடைத்தெடுக்கும்படியான ஒரு செய்தியை பெற்றுக் கொள்ள வேண்டும், அசலான, அசலான பெந்தேகோஸ்தே விசுவாசத்திற்கு திரும்புதல். அது நிறைவேற வேண்டிய ஒரு வேதவாக்கியத்தின் நிறைவேறுதலாக, அது நிறைவேறுவதை நாம் காண்கிறோம். வேதவாக்கியங்கள் யாவும் நிறைவேற்றப்பட வேண்டும். நாம் இன்னும் எத்தனை முறை விண்ணப்பித்தாலும், அதைக் காண்பிக்க எனக்கு இப்பொழுதுள்ள நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் பிடிக்கும். ஆனால் இந்த காரியங்களை நீங்கள் புரிந்து கொண்டால், அவர் வாக்குத்தத்தம் செய்தபடியே, ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு, அது சரியாக இந்த விதமாக சம்பவிக்க வேண்டும்.

45115 இப்பொழுது இயேசு அந்த சிறு பெண்ணை சுகப்படுத்த புறப்பட்டுச் செல்வதை நாம் காண்கிறோம். காரணம், அந்த தகப்பன், அந்த சிறு எல்லைக்கோடு விசுவாசி, ஏதோ ஒரு இடத்தில் அவன் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியதாயிருந்தது, எனவே மருத்துவர் அவளை கைவிட்டிருந்தார். அவன் தன்னுடைய சிறிய கறுப்புத் தொப்பியை அணிந்து கொண்டு, இயேசுவை அவனால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று கண்டறிகிறான். பாருங்கள், நீங்கள் அவரை விரும்பும்போது, அவர் எப்பொழுதுமே அங்கே இருக்கிறார். அவர் கரைக்கு வருவதைக் அவன் கண்டான். 116 மேலும் அவன், “என் குட்டிப் பெண்ணிடம் வந்து, உம்முடைய கரங்களை அவள் மேல் வையும், அப்பொழுது அவள் சுகமடைவாள்” என்றான். மேலும், “அவள் மரணத் தருவாயில் கிடக்கிறாள். அவள் என்னுடைய ஒரே பிள்ளை” என்றான். மேலும், “அவளுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும். எங்களுக்கு மற்ற பிள்ளைகள் கிடையாது. எனக்கும் மனைவிக்கும்,” ஒருவேளை, “வயதாகிக் கொண்டேயிருக்கலாம். இந்த ஒரே பிள்ளைதான் எங்களுக்கு உண்டு, அவள் மரணத்தருவாயில் கிடக்கிறாள், கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். நீர் வந்து உம்முடைய கரங்களை அவள் மேல் வைத்தால், அவள் சுகமடைவாள்” என்றான். பாருங்கள், அவன் எதை அடையாளம் கண்டுகொண்டான்? அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தை இந்த மனிதனில் வெளிப்பட்டது என்பதை அவன் அடையாளம் கண்டுகொண்டான். 117 நிக்கொதேமு, “ரபீ, போதகரே, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை அறிவோம். பரிசேயர்கள் அதை அறிவார்கள்” என்றான். அவர்கள் ஏன் அதை அறிக்கை செய்யவில்லை? “தேவன் அவரோடிருந்தாலொழிய, நீர் செய்கிற காரியங்களை ஒருவனும் செய்ய முடியாது. நீர் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றான்.

46118 யவீருவும் அதேக் காரியத்தை விசுவாசித்தான் என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம். அவன், “வந்து உம்முடைய கரத்தை வையும்” என்றான். தேவன் அவருக்குள் இருந்தார் என்பதை அவன் அறிந்திருந்தான். “உம்முடைய கரங்களை என் பிள்ளையின் மேல் வையும். அவள் மரணத் தருவாயிலிருந்தாலும், அவள் பிழைப்பாள்” என்றான். 119 அவரும் அவனோடு கூடவே நடந்தார். அவன் போய்க்கொண்டிருக்கையில், இதோ ஒரு செய்தி சொல்பவன் திரும்பி வந்து, “அவரைத் தொல்லைப்படுத்தாதிருங்கள், போதகரை இனிமேல் தொல்லைப்படுத்தாதிருங்கள். அந்த—அந்த பெண், மரித்துவிட்டாள், அவள் இப்பொழுது மரித்துவிட்டாள். அவள் கடந்து சென்றுவிட்டாள்” என்றான். இயேசு யவீருவிடம் திரும்பி, “நான் உன்னிடத்தில், ‘நீ மாத்திரம் விசுவாசித்தால், நீ தேவனுடைய மகிமையைக் காண்பாய்’ என்று கூறவில்லையா? நீங்கள் அதை மாத்திரம் விசுவாசித்தால் நலமாயிருக்குமே!” என்றார். 120 அவர் அறைக்குள்ளாகச் சென்றார், அங்கே அவர்கள் யாவரும் புலம்பி, அழுது, புலம்பி, எந்த நபர்களும் செய்வது போலவே செய்தனர். ஒரு அருமையான சிறு பெண், ஒரு போதகரின் மகள், மரித்துப் போயிருந்தாள், அவள் இந்த உலகத்தை விட்டு வெளியே எடுத்துக்கொள்ளப்பட்டாள். அவள் அநேக மணி நேரங்களாக மரித்துப் போயிருக்கலாம், அதன்பின்னர் அவர்கள் அவளை படுக்கையில் கிடத்தினார்கள், ஒருக்கால் அவளுடைய சரீரத்தை தைலமிட்டு, அவளை அடக்கம் செய்ய, ஆயத்தமாயிருந்தனர்.

47அப்பொழுது இயேசு அந்த வீட்டிற்குள் நடந்து சென்றார் என்று நாம் கண்டறிகிறோம். அவர்கள் யாவரும் புலம்பிக்கொண்டிருந்தனர். அவர், “அமைதியாயிருங்கள்” என்கிறார். அவர், “அவள் மரிக்கவில்லை, ஆனால் அவள் நித்திரையாயிருக்கிறாள்” என்றார். 121 இப்பொழுது அவர்கள் என்ன நினைத்தார்கள் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? “ஏன், இந்த மனிதனை இப்பொழுது நாம் அறிந்திருக்கிறோம். அவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். நாம் அவருடைய, அவர் கூறும் அவருடைய மூர்க்கத்தனமான எல்லா முன்னறிவிப்புகளையும் குறித்து கேள்விப்படுகிறோம். இப்பொழுது குருவானவர் கூறுவது சரியென்று நாம் அறிவோம், ‘அந்த மனிதன் ஒரு பைத்தியக்காரன்’, ஏனெனில் அவள் மரித்துவிட்டாள் என்பதை நாம் அறிவோம். மருத்துவர் அவள் ‘மரித்துவிட்டதாக’ அறிவித்தார். அவள் அங்கே கிடக்கிறாள். அவள் போய்விட்டாள், அவள் மரித்துவிட்டாள் என்பதை நாங்கள் அறிவோம்” என்றனர். அவர்கள் கூறினர், அவர்கள் அவரை இகழ்ந்து நகைத்தனர், வேறு வார்த்தைகளில் கூறினால், அவரைக் குறை கூறுவதன் மூலம், அவரை தர்மசங்கடமாக உணரச் செய்தனர். 122 ஆனால் அவள் மரிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். அவ்வளவுதான். “அவள் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.” எவ்வளவுதான் குறை கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் தம்முடைய வார்த்தையை நிரூபிக்கப் போகிறார்! அவர் அவிசுவாசிகள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். பேதுரு, யாக்கோபு, யோவான், விசுவாசிகள், மூன்று சாட்சிகள், தகப்பனும் தாயும், உள்ளே சென்று மகளின் கரத்தைப் பற்றிப் பிடித்து, அவளுடைய ஆத்துமாவை நித்தியத்தில் எங்கிருந்தோ அழைக்கும் ஒரு பாஷையில் பேசினார். அந்தப் பெண் உயிர் பெற்றாள்.

48123 அவர் என்ன செய்தார்? அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்தார். அவர் என்ன கூறினார் என்பதை அவர் நிரூபித்தார். அவள் மரிக்கவில்லை. அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். இப்பொழுது நாம் கண்டறிகிறோம், இதை உணர்ந்து, அவர் அங்கே மற்றொரு காரியத்தை நிரூபித்தார். இப்பொழுது அவர் தேவனாயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். அவர் முன்னறிவை உடையவராயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். இப்பொழுது அவருடைய வார்த்தை என்ன கூறியுள்ளது என்பதைக் கவனியுங்கள். “அவள் மரிக்கவில்லை, ஆனால் அவள் நித்திரையாயிருக்கிறாள்.” பாருங்கள், அவள் துவக்கத்திலிருந்தே மரிக்கவில்லை, அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவருடைய முன்னறிவைக் காண்பித்தார். இப்பொழுது, அன்றொரு நாள் காலையில் அநேக கன்னிகைகள் மரித்திருக்கலாம், ஆனால் இவளோ மரித்திருக்கவில்லை. லாசருவைப் போல, அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவர் அவளை அந்த நித்திரையிலிருந்து எழுப்பினார், ஏனென்றால் அவள் மரிக்கவில்லை. 124 “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.” ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் இடம் பெற்றுள்ளவர்களை மாத்திரமே, அவர் மரித்தபோது மீட்டுக்கொண்டார். அந்த நாளில், அந்த நித்திரையிலிருந்து அவர்களை அழைப்பார், அவருடைய வல்லமையினால் உயிர்ப்பிக்கப்படுகிறவர்கள், அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை அவர்களுக்குள் இருக்கிறது. நேற்றிரவு நான் கூறினதுபோல; எலிசா மரித்து, அவனுடைய எலும்புகள் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பிறகும் கூட, உயிர்ப்பிக்கும் வல்லமை இன்னமும் அவனுடைய எலும்புகளில் இருந்தது.

49125 நிச்சயமாகவே, அவன் யாராயிருந்தான் என்பதை அவர் நிரூபித்தார். இப்பொழுது நாம் மீண்டும், அதேவிதமாக கண்டறிகிறோம், அவர் எபிரெயர் 4-ம், அதிகாரம் 12-ம் வசனத்தில் கூட நிரூபித்தார், அவர் தேவனுடைய வார்த்தை என்பதை அவர் நிரூபித்தார். அவர் நிச்சயமாகவே செய்தார். அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். எபிரெயர் 12, எபிரெயர் 4:12, “தேவனுடைய வார்த்தை அதிக வல்லமையுள்ளது, இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்று கூறுகிறது. இப்பொழுது ஒரு நிமிடம் கவனியுங்கள். 126 அவர் முதலில் தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் வார்த்தையாயிருந்தார் என்பதை காண்பிக்கும்படி வெளியே வந்த பிறகு, அவர் தம்முடைய சோதனையிலிருந்து வனாந்திரத்தை விட்டு வெளியே வந்தபோது, பேதுரு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் இருந்தான், அப்பொழுது அவனுடைய பெயர் சீமோன் என்பதாகும். அவன் தன்னுடைய சகோதரன், அந்திரேயாவுடன் இயேசுவினிடத்தில் வந்தான். அவன் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்திற்குள்ளாக நடந்து சென்றவுடனே, இயேசு, “உன் பெயர் சீமோன். உன்னுடைய தகப்பனார் யோனாவாயிருந்தார். இது முதற்கொண்டு நீ பேதுரு என்னப்படுவாய்” என்றார். அவர் வார்த்தையாயிருந்தார் என்பதை அது நிரூபித்தது, ஏனென்றால் வார்த்தை இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயுள்ளது. அவர் வார்த்தையாயிருந்தார்.

50127 இது சம்பவிப்பதை பிலிப்பு கண்டான். ஒரு நாள் முழுவதுமாக, மலையை சுற்றி சென்று விட்டு, திரும்பி வந்தான். அவன் தன்னோடு நாத்தான்வேல் என்னும் பெயர் கொண்ட ஒரு நண்பனை அழைத்து வந்தான். மேலும் அவன், “இந்தக் காரியங்கள் உண்மையாகவே சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. ‘நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவனைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்’ என்று மோசே கூறினான், இதோ அந்த மனிதன் இருக்கிறார். ஏன், சீமோன் யார் என்றும், அவனுடைய தகப்பன் யார் என்றும் கூட அவர் கூறினார், அவர் கூறுவது உண்மை என்பதை நாம் அறிவோம். ஏனென்றால், தேவன் அதை வார்த்தையில் கூறினார், அவர் அதைச் செய்ய வேண்டியவராயிருந்தார் என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது, அது மேசியா என்பதை நிரூபிக்கிறது” என்றான். அவன் அவருடைய சமூகத்தில் நடந்து சென்றபோது, இயேசு அவனிடம், “இதோ கபடற்ற இஸ்ரவேலன்” என்றார். அவன், “ரபீ, நீர் என்னை எப்பொழுது அறிந்தீர்?” என்று கேட்டான். “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழே இருந்தபோது, நான் உன்னைக் கண்டேன்” என்றார். அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்தார். அவர் தேவனுடைய வார்த்தையை நிரூபித்தார். அவர் அதை நிரூபித்தார்.

51128 கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீ…அவள், பாருங்கள், அவள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த குடத்திலிருந்து அவரைத் தண்ணீர் குடிக்க அனுமதிக்கும்படி அவர் அவளைக் கேட்டுக்கொண்டார், மேலும் அவள், “அது யூதர்களாகிய உங்களுக்கு வழக்கமல்ல அப்படிப்பட்ட ஒரு காரியத்தை சமாரிய ஸ்திரீகளாகிய எங்களிடத்தில் கேட்கிறீர், ஏனென்றால் நம்மிடையே எந்த தொடர்பும் இல்லை” என்று கூறினாள். அவர், “ஆனால் நீ யாரிடத்தில் பேசிக்கொண்டிருந்தாய் என்பதை அறிந்திருந்தாயானால், அப்பொழுது நீ என்னிடம் தாகத்திற்குக் கேட்பாய்” என்றார். அவள், “கிணறு ஆழமானது” என்றாள். அந்த உரையாடல், அது தொடர்ந்து சென்றபோது, முடிவிலே அவளுடைய தொல்லை என்னவாயிருந்தது என்பதை அவர் கண்டறிந்தார். அவர், “போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா” என்றார். அவள், “எனக்கு புருஷன் இல்லை” என்றாள். அதற்கு அவர், “உண்மையாய்க் கூறினாய், ஏனென்றால் உனக்கு ஐந்து பேர்கள் இருந்தனர். இப்பொழுது உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவன் உன் கணவன் அல்ல” என்றார். 129 “ஏன்,” அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்” என்றாள். அவள்…“நானூறு வருடங்களாக எங்களுக்கு ஒருவர் கூட இல்லை என்பதை நீர் அறிவீர்.” மேலும், “நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நான் காண்கிறேன். இப்பொழுது, கிறிஸ்து என்னப்பட்ட மேசியா வரும்போது, அவர் வரும்போது, அவர் இந்தவிதமான காரியங்களை எங்களுக்கு கூறுவார். அதுவே அவருடைய அடையாளமாயிருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்” என்றாள். அவர், “உங்களோடு பேசுகிற நானே அவர்” என்று கூறியபோது, அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்தார். அவர்…அவர் என்னவாக இருந்தார் என்று உரிமை கோரினார் என்பதை நாம் நிரூபிக்கிறோம். அவர் மேசியாவாக, தேவனுடைய குமாரனாயிருந்தார்.

52130 இப்பொழுது இந்த பெரும்பாடுள்ள ஸ்திரீயும், கூட, அவருடைய வஸ்திரத்தைத் தொட, அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார் என்பதை அவளுக்கும் கூட நிரூபிக்கப்பட்டது என்று நாம் கண்டறிகிறோம். 131 இப்பொழுது நினைவிருக்கட்டும், இன்றிரவு, இயேசு கூறினார்…மேலும், எபிரெயர், 1, எபிரெயர் 3-ம் அதிகாரத்தில், அது, அவர், “அவர் இப்பொழுது ஒரு பிரதான ஆசாரியராய் இருக்கிறார்” என்று கூறினார். நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், “தேவனுடைய மகத்துவமான பரலோகத்தில் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியன் நம்முடைய பெலவீனத்தைக் குறித்து பரிதபிக்கக் கூடியவர்” என்று கூறப்பட்டுள்ளது. எபிரெயர் 13:8, “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. அப்பொழுது அவர் இருந்த அதே தேவனாக அவர் இருக்கிறார். இன்றிரவும் அவர் அதே விதமாக இருக்கிறார். 132 பரிசுத்த யோவான் 14:12-ல் அவர், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் இவைகளைப் பார்க்கிலும் அதிகமான கிரியைகளையும் செய்வான்” என்றார். பார்த்தீர்களா? “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” 133 மத்தேயு 28-ல் அவர், “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களுடனே கூட இருப்பேன்” என்றார். 134 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் தம்முடைய வார்த்தையை நிரூபிக்க இன்றிரவு நிற்கிறார். (என்னுடைய நேரம் போய்விட்டது.) ஆனால் அவரால் முடியும் என்பதை அவர் நிரூபித்தார். அந்நாளுக்காக அவர் என்ன வாக்குத்தத்தம் செய்திருந்தார் என்பதை, அப்பொழுது அவர் தம்முடைய வார்த்தையை நிரூபித்தார். அவர் ஏசாயாவின் வார்த்தைகளை நிரூபித்தார். அவர் நோவாவின் வார்த்தைகளை நிரூபித்தார். அவர் மோசேயின் வார்த்தைகளை நிரூபித்தார். அவர் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நிரூபித்தார்.

53135 அவர் இந்நாளில், நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்நாளில், உலகம் ஒரு சோதோமின் நிலையில், ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடும் என்று வாக்களித்தார். அதை பாருங்கள், இன்றைக்கு உலகத்தில், உலகம் முழுவதிலும் நான் பயணம் செய்கிறேன்; இங்கு மாத்திரமல்ல, எல்லாவிடங்களிலும் உள்ளது. அது விமர்சனத்திற்குரியது. ஸ்வீடனில், வாலிப ஆண்களும் பெண்களும் அப்பட்டமான நிர்வாணமாக பனிச்சறுக்கு விளையாடுகின்றனர். அவர்கள் ஜெர்மனியிலும், பிரான்ஸிலும், மற்றெல்லாவிடங்களிலும், அது ஏறக்குறைய ஒருவிதமான ஒழுக்க கேடாய் இங்கே அமெரிக்காவிலும் நாம் பெற்றுள்ளோம். அது ஒரு காலம். நான், நான் திரும்பி வர ஒரு தருணம் கிடைத்தால், நான் சில தீர்க்கதரிசன காரியங்களின் பேரில், உங்களிடத்தில் பேச விரும்புகிறேன், நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற காலத்தில், அதை உங்களுக்கு காண்பிக்கவே. வேதம், “பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை ஆளுவார்கள்” என்று கூறியுள்ளது. [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.]

54136 …வார்த்தை. ஆனால், நினைவிருக்கட்டும், ஆபிரகாம் ஒரு வித்தை உடையவனாயிருந்தான், அந்த வித்து ஈசாக்காய் இருந்தது. சாராளின் மரணத்திற்குப் பிறகு அவன் மற்ற வித்துக்களை உடையவனாயிருந்தான். அவன் நூற்று நாற்பத்தைந்து வயதுடையவனாயிருந்தபோது, அவன் வேறொரு பெண்ணை விவாகம் செய்து, குமாரத்திகளைத் தவிர ஏழு குமாரர்களையும் உடையவனாயிருந்தான், ஏனென்றால் அவன் நூறு வயதாயிருந்தபோது தேவன் அவனை ஒரு வாலிபனாக மாற்றியிருந்தார். அப்பொழுது அவன் மீண்டும் நாற்பத்தைந்து வயதாயிருந்தான், எனவே அப்பொழுது அவன்…நாம் அதை அறிவோம். அநேக ஆண்டுகளுக்கு முன்னர் நான் இங்கே கலிபோர்னியாவில் அதை உங்களிடம் பிரசங்கித்திருக்கிறேன். 137 இப்பொழுது ஆபிரகாமின் வித்து சாராள் மூலமாக உண்டான உண்மையான பாலியல் வித்து அல்ல என்பதை நாம் புரிந்துகொள்கிறோம், அது ஈசாக்காக இருந்தது, அது ஒரு தேசத்தை உண்டாக்கியது, ஆனால் ராஜரீக வித்து வாக்குத்தத்தத்தின் மூலம் இருந்தது, அது இயேசு கிறிஸ்துவாயிருந்தது. அந்த வித்தின் மூலமாக அவர் ஒரு ராஜரீக வித்தை எழுப்பினார். ஓ, என்னே! இப்பொழுது நாம் ஒரு ராஜரீக ஆசாரியக் கூட்டமாய், ஒரு ராஜரீக தேசமாய், ஒரு பரிசுத்த ஜாதியாய், அவருடைய நாமத்தை துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை, தேவனுக்கு செலுத்தக்கடவோம். தேவன் தம்முடைய வார்த்தையை நிரூபித்தார், அவர் பரிசுத்த ஆவியை நம்மேல் மேல் ஊற்றினார்.

55138 அவர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் நடக்கும்” என்றார். இப்பொழுது நீங்கள் கவனித்தீர்களா? தேவ குமாரனிடமிருந்து, அவர் தாவீதின் குமாரனாவதற்கு சற்று முன்பு, அவர் தம்மை மீண்டும் மனுஷகுமாரனாக வெளிப்படுத்துகிறார். நீங்கள் வேதவாக்கியத்தை கவனித்தீர்களா? 139 ஏனென்றால், அவர் எப்பொழுதுமே அதைச் செய்கிறார், அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்களுக்கு அதை வெளிப்படுத்தாமல், அவர் ஒன்றையுமே செய்வதில்லை. அது சரியாகத்தான் உள்ளது. அவருடைய வாக்குத்தத்தம் அப்படித்தான் இருந்தது. பார்த்தீர்களா? அவர் ஒருபோதும் எதையும் செய்கிறதில்லை…தேவனால் பொய் சொல்ல முடியாது. அவர் அதைச் செய்வதற்கு முன்னர், முதலில், அவர் அதை எப்பொழுதும் வெளிப்படுத்துகிறார்.

56140 இன்றைக்கு நாம் உட்கார்ந்து கொண்டிருக்கிற சூழ்நிலையைப் பாருங்கள். நாம் எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள். நாம் ஒரு நவீன சோதோமில் இருக்கிறோம் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக் கொள்வீர்கள். இந்த நாடு அதற்கான நிலையில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே…நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது; இந்த தேசத்திற்கோ அல்லது வேறெந்த தேசத்திற்கோ எந்த இரட்சிப்பும் விடப்பட்டிருக்கவில்லை. நாம் இப்பொழுது அதற்கு அப்பால் இருக்கிறோம். இதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன. கடைசி ஆடு எங்கிருந்தாலும், தேவன் தேடி சேர்த்துக்கொண்டிருக்கிறார். இவையாவும், ஒரு நாளில் நிறைவேறும். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். நிலைமையை, நோக்கிப் பாருங்கள். 141 இந்த ஜனங்களுக்காக நாம் ஜெபிப்பதற்கு முன்பு, ஒரு சகோதரன் அல்லது சகோதரி என்ற முறையில், இன்னும் ஒரு நிமிடம் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நாம் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டியதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் நான்—நான்—நான் ஜெப வரிசையை துவங்க விரும்புகிறேன், அப்பொழுது செல்ல வேண்டியவர்கள் நீங்கள் செல்லலாம். பார்த்தீர்களா? ஜெப வரிசையில் தரித்திருக்க விரும்புகிற நீங்கள் தரித்திருக்கலாம். ஆனால் ஒரு சகோதரன் என்ற முறையில், நான் சற்று நேரம், உங்களுக்கு ஒன்றை சுட்டிக்காட்டட்டும்.

57142 லூக்கா 17:30-ல் இயேசுவைக் கவனியுங்கள், பாருங்கள், அவர் அங்கே கடைசிக் காலத்தைக் குறித்து கூறிக்கொண்டிருந்தபோது, நோவாவின் நாட்களில் அவர்கள் எப்படியிருப்பார்கள் என்று கூறிக்கொண்டிருந்தார். அதன்பின்னர் அவர், “சோதோமின் நாட்களில் நடந்ததுபோல” என்றார், “மனுஷகுமாரன் வெளிப்படும்போது” என்றார். மறுபடியும் மனுஷகுமாரன், தேவனுடைய குமாரன் அல்ல. “மனுஷகுமாரன்,” பாருங்கள், அது மல்கியா 4-ம் அதிகாரத்தை மீண்டும் கொண்டு வருகிறது. இந்த மற்ற எல்லா தீர்க்கதரிசனங்களும் சரியாக உள்ளே வருகின்றன, அது எப்படி செய்யப்பட வேண்டும். அவர் தம்முடைய வார்த்தையை அவ்வண்ணமே நிரூபிக்கிறார். அது உண்மை. 143 கவனியுங்கள், அவ்வாறு செய்யும்போது, அவர் மாம்சமான யாவர் மேலும் தம்முடைய ஆவியை எப்படி ஊற்றப் போகிறார், என்ன சம்பவிக்கப் போகிறது என்றும், எப்படி திரும்ப அளிக்கப்படுதல் திரும்ப வரும் என்றும். “உங்களுடைய குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் வேலைக்காரிகளின் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். நான் மேலே வானத்திலே அடையாளங்களைக் காண்பிப்பேன்” என்றார்.

58144 இங்குள்ள சகோதரன் லீ வேயில் கொடுத்த, புகைப்படத்தை இங்கே வைத்துள்ளேன். அன்றொரு நாள் மலையின் மேல் என்ன சம்பவித்தது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன், பள்ளிப் பிள்ளைகள் யாவரும் இந்த மகத்தான பொருளான, ஏழு முத்திரைகள் திறப்பதற்கு முன்பாக. பள்ளிப் பிள்ளைகள் வெளியே வந்தபோது, அங்கே ஜெபித்துக் கொண்டிருக்க, இங்கே ஒரு புனல் வடிவில் அக்கினி கீழே இறங்கி வந்து, அதன்பின்னர் மீண்டும் மேலே சென்று, சுற்றித் திரும்பி, மீண்டும் கீழே வந்தது. ஜனங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று அவர் கூறினார். நாம்…அங்கே அது, டூசானின் பள்ளிகள்…அங்கே அது ஆகாயத்தில் சென்றது. 145 விஞ்ஞானம் புகைப்படங்கள் முதலியனவற்றை எடுத்து, அதைக் குறித்து கேள்வி கேட்டது. அவர்கள், “அது எங்கே உள்ளது? என்ன நடந்தது?” என்று கேட்டனர். அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது, பாருங்கள். ஓ, அது ஒரு மூலையில் செய்யப்படவில்லை, அவர்களுக்கோ அந்தகாரமடைந்த மனசாட்சியே. அது ஒருபோதும்…இயேசு, அவர் இங்கிருந்தபோது, கோடிக்கணக்கான ஜனங்கள் அவர் பூமியில் இருந்தார் என்பதை ஒருபோதும் அறியாதிருந்தனர். ஆம். இன்றைக்கு கோடிக்கணக்கானவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள், அவர்களில் கோடிக்கணக்கானவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். 146 ஆனால் அது யாரிடத்தில் அனுப்பப்பட்டிருக்கிறதோ, அவர்கள் அதை புரிந்து கொள்வார்கள். “அந்த நாளிலே ஞானவான்கள் தங்கள் தேவனை அறிந்து, அதற்கேற்றபடி செய்வார்கள்.” நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிறது, அந்த நேரம் என்பதை நாம் உணருகிறோம்.

59147 இப்பொழுது சோதோமை நோக்கிப் பாருங்கள், என்ன சம்பவித்தது என்று பாருங்கள். அவர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல” என்றார். ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கூட்ட ஜனங்கள் அங்கே இருந்தனர். நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். அதுதான் ஆபிரகாமும் அவனுடைய குழுவினரும். ஒரு வெதுவெதுப்பான கூட்டம் இருந்தது, லோத்து, பாதி பின்மாற்றமடைந்தான், அதே சமயத்தில் ஒரு விசுவாசி; சோதோமில். மூன்று வகுப்பினர். 148 எப்பொழுதுமே மூன்று வகுப்பினர் உண்டு. காம், சேம், யாப்பேத்தின் ஜனங்கள். மேலும், விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள். அவர்கள் எல்லாவிடங்களிலும் இருக்கின்றனர். நாம்—நாம் அவர்களை ஒவ்வொரு குழுவிலும் காண்கிறோம். மேலும், எல்லா இடங்களிலும், நீங்கள் அவர்களைக் காணலாம். அந்த குழுக்கள் இன்னமும் இங்கே இருக்கின்றன. நீங்கள் அதை வகுக்க வேண்டும். நீங்கள் அதை வேதவாக்கியத்தினூடாக எடுத்துக்கொண்டால், அது சரியாக பொருந்துகிறது. 149 இதைக் கவனியுங்கள். இன்றிரவு நாம் எந்த நிலையில், தீர்க்கதரிசன ரீதியாக அமர்ந்திருக்கிறோம் என்பதைப் பாருங்கள். இப்பொழுது, உலகம் ஒரு சோதோமிய நிலையில் உள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். இஸ்ரவேலரின் எல்லா தீர்க்கதரிசனங்களும், அதனுடைய தாய்நாட்டில் உள்ளன என்பதை நாம் அறிவோம். தேசிய அளவில் நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், இஸ்ரவேல் எங்கே உள்ளது என்பதை கவனியுங்கள். 150 சபையானது என்ன நிலையில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், பெண்கள் செயல்படும் விதத்தைக் கவனியுங்கள். அவள்தான் சபை. அவளைப் பாருங்கள், ஒழுக்கக்கேடான, நாகரீகமற்ற, சபையானது எங்கே உள்ளது என்பதைப் பாருங்கள். அதைக் கவனியுங்கள், பாருங்கள், பாருங்கள், பெண்களையே கவனியுங்கள். உங்களுடைய ஸ்திரீகள் எப்படி இழிவாகவும், மிகவும் மாசுபட்டவர்களாகவும் மாறுகிறார்கள் என்பதை நீங்கள் காண்கிறீர்கள், அந்தவிதமாகத்தான் உங்களுடைய சபையும் உள்ளது, பாருங்கள், அந்த மாதிரி. 151 இஸ்ரவேல் எங்கே உள்ளது என்பதைக் கவனியுங்கள், நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் காண்பீர்கள். பாருங்கள், அந்த அடையாளங்களையும், அற்புதங்களையும் கவனியுங்கள். நீங்கள்—நீங்கள், அல்லது உங்களுடைய கண்கள் திறந்திருந்தால், நாம் எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள்.

60152 இப்பொழுது நாம் எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவனியுங்கள் உலகம் ஒரு சோதோமின் நிலையில் உள்ளது. இப்பொழுது கவனியுங்கள், “அது இருந்தது போலவே.” இப்பொழுது கவனியுங்கள், அந்த நாளில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன் வருவதற்காக, யாரோ ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். ஆபிரகாமும் சாராளும், ஆபிரகாமின் குழுவில் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சோதோமில் இருக்கவில்லை. ஆனால் இந்த நேரத்தில், சம்பவத்தின் கடைசி அதிகாரத்தில், வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன் வருவதற்கு சற்று முன்பு, வானத்திலிருந்து மூன்று மனுஷர், ஒரு தூதன்…இரண்டு தூதர்கள் இறங்கி வந்தார்கள். அவர்கள் அங்கே வந்து கர்வாலி மரத்தின் கீழே, ஆபிரகாமுடன் பேசிக்கொண்டிருந்தனர். அது சரியா? அவர்களில் இருவர் சோதோமிற்குச் சென்று, அந்த நகரத்தின் பாவங்களுக்கு எதிராக கூக்குரலிட்டனர். அது அந்த நேரத்தில், புறஜாதி உலகம் எரிக்கப்படுவதற்கு சற்று முன்பு இருந்தது. அப்பொழுது சோதோம் முழுவதும் அழிந்துபோயின. லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும், வெளியே இழுக்கப்பட்டனர். அவருடைய மனைவியும் கூட சென்றடையவில்லை; அவள் திரும்பிப் பார்த்தாள். அந்த நிலையில் அந்த சபை எங்கே நின்று கொண்டிருக்கிறது என்பதை, இப்பொழுது உங்களுக்கு காண்பிக்க எனக்கு நேரம் இருந்தால் நலமாயிருக்கும். இப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

61153 ஒரு மனிதன் பின்னால் தங்கியிருந்து, ஆபிரகாமிடம் பேசினார், அவர் ஆபிரகாமுக்கு ஒரு அடையாளத்தை செய்தார். கவனியுங்கள், ஆபிரகாம் தேவனை அநேக மகத்தான அடையாளங்களில் கண்டிருந்தான். நாம் அதை விசுவாசிக்கிறோம், நாம் விசுவாசிக்கவில்லையா? குமாரன் வருவதற்கு முன்பு. ஆனால் குமாரன் வெளிப்படுவதற்கு முன்பு, அவனுக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. 154 ஏனென்றால், குமாரன், உண்மையான குமாரன், ஆபிரகாமின் விசுவாசத்தின் மூலம், இயேசு, தேவனுடைய குமாரனாயிருக்க வேண்டியவராயிருந்தார், பாருங்கள். நாம் ஆபிரகாமின் சந்ததியாய், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாயிருக்கிறோம், நாம் ஆபிரகாமின் வித்தாயிருக்கிறோம்.

62155 அது சம்பவிப்பதற்கு சற்று முன்னர் இப்பொழுது கவனியுங்கள், இந்த குமாரன் வரப்போகிறார். இப்பொழுது, ஆபிரகாமிடம் தங்கியிருந்து பேசிக்கொண்டிருந்த இந்த ஒருவர், தம்முடைய முதுகை கூடாரப்பக்கமாக திருப்பியிருந்தார். அவர், “ஆபிரகாமே” என்றார். இப்பொழுது, அதற்கு ஒரு நாள் முன்பு, அவன் ஆபிராமாயிருந்தான். இப்பொழுது அவர், “ஆபிரகாமே, உன் மனைவியாகிய சாராள், எங்கே?” என்று கேட்டார். சாராய் அல்ல, சா-ரா-ய். சா-ரா-ள், இளவரசி. “உன் மனைவி, சாராள் எங்கே?” “அவள் உமக்குப் பின்னால் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 156 அவர், “நான் உனக்கு உண்டுபண்ணின என் வாக்குத்தத்தத்தின்படியே, பார், நான் உன்னை சந்திக்கப் போகிறேன்” என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், “ஜீவனின் நேரம், சாராள் மீண்டும் தன்னுடைய சாதாரண வாழ்க்கையின் நேரத்தில் துவங்குவாள்.” 157 இப்பொழுது நூறு வயது நிரம்பியவளாயிருக்கிற, சாராள், கூடாரத்தில் இருந்தாள், அவள் நகைத்தாள். பாருங்கள், அவள் தனக்குள்ளே நகைத்து, “அந்த மனிதன் எப்படி சரியாக இருக்க முடியும்? பாருங்கள், நான் ஒரு வயோதிக ஸ்திரீ, அங்கே என் ஆண்டவன் ஆபிரகாம் கூட, வயோதிகமானவன், குடும்ப விவகாரம் அநேக ஆண்டுகளாக ஒழிந்துபோயிருந்தது” என்றாள். மேலும், “நான் எப்படி என் ஆண்டவனோடு மீண்டும் இன்பமாக இருக்க முடியும்? அவருக்கு வயதாகிவிட்டது, எனக்கு வயதாகிவிட்டது, குழந்தை பெரும் பருவம் கடந்துவிட்டதே, பால் நரம்புகள் தளர்ந்து போய்விட்டன, ஒவ்வொன்றும்…‘அவள் வறண்டுவிட்டாள்.’ நாம் எப்படி மறுபடியும் இன்பமாக இருக்க முடியும்?” என்றாள். 158 அந்த மனிதன், தன்னுடைய முதுகை கூடாரப் பக்கமாகத் திருப்பியிருந்தபடியால், “‘இவைகள் எப்படி சம்பவிக்க முடியும்’ என்று சாராள் கூறி, ஏன் நகைத்தாள்?” என்று கேட்டார். அது என்னவாயிருந்தது? பகுத்தறிதல், ஒரு தீர்க்கதரிசனம்! பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அதைத்தான் அவன் கண்டான்.

63159 இப்பொழுது அவர், “அது மீண்டும் வரும், மேலும் மனுஷகுமாரன்,” என்று கூறினார், அது, மனுஷகுமாரன் அங்கே இருந்தார். பாருங்கள், அவன் அவரை ஏலோகிம் என்று அழைத்தான், “தேவனாகிய கர்த்தர்.” ஏலோஹீம், அது சரியென்று எவரும் அறிவர், ஏலோஹீம் தேவனாகிய கர்த்தர். “ஆதியிலே ஏலோஹீம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்,” எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவர். மனுஷகுமாரன் மாம்சமானார், அந்த நேரத்தில் அவர் அங்கே மாம்சத்தில் நின்று கொண்டிருந்தார், ஒரு ஆவிக்குரிய சரீரத்தைப் போல, அவருக்குப் பின்னே உள்ள கூடாரத்தில் சாராள் என்ன கூறிக்கொண்டிருந்தாள் என்பதை அங்கே நின்று பகுத்தறிந்தார். அவர் வாக்குப்பண்ணினார். கவனியுங்கள். ஆபிரகாமின் ராஜரீக வித்தும் அதேக் காரியத்தைக் காண்பதாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. 160 ஆனால் லோத்தை கவனியுங்கள், அவன் அங்கே ஒரு செய்தியாளனை பெற்றிருந்தான், அவர்களில் இருவர் அங்கு சென்றனர். அவர்களில் ஒருவன் புறப்பட்டுச் சென்றான், அவனோடு மற்றொருவனும் சென்றான், அவர்கள் பிரசங்கித்து, வரப்போகும் கோபாக்கினைக்கு தப்பியோட ஜனங்களை அழைத்தனர்.

64161 இயேசு வாக்குத்தத்தம் பண்ணின நாள் முதற்கொண்டு, இப்பொழுது வரையிலும், ஸ்தாபன ரீதியில் உலகம் அந்த நிலைமையில், ஒருபோதும் இருக்கவில்லை. இந்த கட்டிடத்தில் இருக்கக்கூடிய எந்த வரலாற்றாசிரியரையும் நான் கேட்க விரும்புகிறேன், அல்லது இந்த ஒலிநாடாவில் கூட நீங்கள் கேட்டிருந்தால், அதை எந்த நேரத்தில் கேட்டாலும், தயவு செய்து எனக்கு எழுதுங்கள். நான் இப்பொழுது சுமார் முப்பது வருடங்களாக சரித்திரத்தை, வேதாகம சரித்திரத்தை ஆய்ந்து படித்துள்ளேன், ஏழு சபைக் காலங்களினூடாக, சபையின் சரித்திரம் முழுவதிலும் நான் கண்ட எந்த ஒரு நபரும் அங்கே ஒருபோதும் அப்படி சென்றதேயில்லை. அதாவது நாம் இப்பொழுது லவோதிக்கேயாவில் இருக்கிறோம், நாம் அதை அறிவோம். 162 இப்பொழுது வரை, எந்த ஒரு தூதனும், தன்னுடைய பெயர் ஹா-ம், என்று முடிகின்ற எழுத்தோடு முழு சபைக்கும் சென்றதேயில்லை. கி-ர-ஹா-ம், பில்லி கிரஹாம். மூடி, ஃபின்னி, சாங்கி, நாக்ஸ், லூத்தர் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் ஒருபோதும் ஹ-ா-ம், “ஜாதிகளுக்குத் தகப்பன்” என்றிருந்ததில்லை. இப்பொழுது நினைவிருக்கட்டும், அவர் ஆறு எழுத்துக்களைக் கொண்ட, கி-ர-ஹா-ம். ஆனால் ஆ-பி-ர-கா-ம் ஏழு எழுத்துக்கள். கவனியுங்கள், அவர்கள் அங்கே இருக்கிறார்கள், பில்லி கிரஹாம், உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் சென்று, சோதோமிலிருந்து அழைக்கிறார், “வெளியே வாருங்கள், வரப்போகிற கோபாக்கினைக்கு தப்பித்துக் கொள்ளுங்கள்.” எனக்குத் தெரிந்தவரை, வெளியில், அந்த நீதிமானாக்கப்படுதலின் வார்த்தையை தேவனிடத்தில் பற்றிக் கொண்ட எந்த மனிதனும் இல்லை, பில்லி கிரஹாம் செய்வது போல. அவரால் அதை அளிக்க முடியும். அவர் அப்படிப்பட்ட ஒரு வேத பண்டிதர் அல்ல…அவர் ஒரு வேத பண்டிதர் என்று நான் யூகிக்கிறேன், ஆனால் அவர் அப்படிப்பட்ட ஒரு வல்லமையுள்ள போதகர் அல்ல. ஆனால் தேவன் அவரோடு இருக்கிறார். அந்த மனிதன் ஒரு ஞாயிறு பள்ளிப் பாடத்தைப் போன்றே அங்கு நின்று, அந்த ஜனங்களை திகைக்க வைக்கிறார். அவர் இக்காலத்து தேவனுடைய ஊழியக்காரர். யாருக்கு? மாம்சப்பிரகாரமான சபைக்கு, அது சோதோமில் உள்ளது. 163 ஆனால் நினைவிருக்கட்டும், ஒரு ஆவிக்குரிய சபை இருந்தது, அதுவும் அந்த ஸ்தாபன அமைப்பில் இல்லை. வெளியே அழைக்கப்பட்ட குழு, அவர்கள் ஒரு செய்தியையும், ஒரு தூதனையும் கூட பெற்றுக்கொண்டனர். அது என்னவாயிருந்தது? இருதயத்திலுள்ள நினைவுகளை வகையறுத்தல். தேவன் எப்பொழுதுமே தம்முடைய வார்த்தையை நிரூபிக்கிறார்.

65164 நாம் ஜெபிப்போமாக. அன்புள்ள பரலோகப் பிதாவே, தீர்மானங்கள் செய்யப்பட வேண்டிய இந்த முக்கியமான தருணத்தில், நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது, நம்முடைய கர்த்தர் எந்த வேளையில் வருவார் என்பதை நாங்கள் அறியோம். அவர் மூலமாய் உரைக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசனங்களை நாம் காண்கையில், காலங்களினூடாக உம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக, இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓ தேவனே, இதற்காக நான் எவ்வளவாய் உமக்கு நன்றி கூறுகிறேன், அதாவது சரீரத்திலுள்ள மனிதன், வேத சாஸ்திரத்தில் வல்லமையுள்ள மனிதன், உலகத்தின் தந்திரங்களுக்கும், அவிசுவாசிகளுக்கும் எதிராக நிற்கக்கூடிய, இந்த குழுக்களின் பேரில், சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால் அங்கே தைரியமாகவும், தீரத்துடனும் நின்று, அவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பதை அறிந்து, அந்த வார்த்தை உண்மையென்று, வேத வாக்கியங்களின் மூலம் நிரூபிக்க வேண்டும். கர்த்தாவே, உம்முடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிற நாங்கள், சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிற இந்த மற்ற காரியங்களையும் விசுவாசித்து, எங்கள் மத்தியில் நீர் நடப்பதை கண்டு களிகூரும்படி செய்து, என்ன நிறைவேறும் என்று உரைத்தீரோ அதை செய்து காட்டி, உம்முடைய வார்த்தை சரியென்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். நித்திய தேவனே, உம்முடைய சுகவீனமான பிள்ளைகள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். 165 நாங்கள் இன்னும் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது. சாயங்கால சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நீர் தீர்க்கதரிசிக்கு, “சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்” என்று வாக்குப்பண்ணியிருக்கிறீர். அதே சூரியன் கிழக்கில் உதயமாகிறதை நாங்கள் காண்கிறோம், அதுதான் மேற்கில் மறைகிறது. நாகரீகமானது சூரியனோடு பயணித்துள்ளது இப்பொழுது நாங்கள் மேற்குக் கரையில் இருக்கிறோம். சுவிசேஷம் நாகரீகத்தோடு பயணித்தது. இப்பொழுது பிதாவே, இது சுவிசேஷத்தின் முடிவு, காலத்தின் முடிவு, காலத்தின் முடிவு என்பதை நாங்கள் அறிவோம். அவள் நித்தியத்திற்குள் மங்கிக் கொண்டிருக்கிறாள். ஆனால் குமாரன் வெளியே வருவார் என்றும், மனுஷகுமாரன் வெளிப்படுவார் என்றும் நீர் வாக்குப்பண்ணினீர். கடைசி நாட்களில் இது சம்பவிக்கும். பிதாவே, சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது. அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். அது தாழ்மையாய் இருந்தாலும், அதே சமயத்தில் நீர் அதை மிக எளிமையாக, அநேக சமயங்களில் செய்கின்றீர், அது மகத்தான, ஆழமான சிந்தனையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் மேல் சென்று, கற்றுக்கொள்ளும் பாலகருக்கு அதை வெளிப்படுத்துகிறது.

66166 தேவனே, இன்றிரவு, நீர் அவ்விதம் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், இங்குள்ள ஏழை சுகவீனமான பிள்ளைகள் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் காணவும், அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைந்து, நாளை, புதிய பலமுள்ள சரீரங்களுடன், இங்கிருந்து வெளியே சென்று, மீண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பார்களாக. கர்த்தாவே, அந்த கடைசி ஒன்று தொழுவத்திற்குள் வரும் வரை, அவர்கள் செய்தியை ஒருவரிடத்திலிருந்து மற்றவருக்கு எடுத்துச் செல்ல, அதை அருளும், அதன்பின்னர் கதவுகள் அடைக்கப்படும். அன்புள்ள தேவனே, எங்களுக்கு உதவி செய்யும். பிதாவே, இவை யாவையும் உமது முன்னிலையில் வைத்து, நீர் இன்னும் ஒரு விசை, எனக்காக அருளுவீரா என்று, நான் உம்மைக் கேட்கிறேன். 167 அன்றொரு இரவு, ஜனங்கள் அதை அதிகம் கவனிக்கவேயில்லை என்று தோன்றியது. ஆனால், கர்த்தாவே, இன்றிரவு அது மீண்டும் சம்பவிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். காரணம், நான் பேசுவதற்கு எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கடந்திருக்கிறேன். ஆனால் இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் இதைச் செய்யப் போகிறோம் என்று எனக்குத் தெரியாது. ஆகையால், நான் ஜெபிக்கிறேன், பிதாவே, நீர் எனக்கு செவி கொடுப்பீரா? இன்றிரவு இங்கு அமர்ந்துள்ள உம்முடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும், இந்த தேவபக்தியுள்ள மனிதர் மற்றும் ஸ்திரீகளின் ஜெபத்திற்கு செவிகொடும். அவர்கள் விசுவாசிகளாயிருக்கிறார்கள், கர்த்தாவே, நீர் அவர்கள் மத்தியில் கிரியை செய்ய முடியும். நாங்கள்…நீர் கூறின உம்முடைய வார்த்தையை நீர் உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.” இயேசுவே, நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்பதை நிரூபிக்கும்படியாக அது மீண்டும் உண்டாவதாக. நான் இதை தேவனுடைய மகிமைக்காக அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.

67168 இப்பொழுது, சற்று நேரம், இங்கே எத்தனை பேர் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஜெப அட்டைகளை வைத்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய கரங்களை உயர்த்தும்படி நான்—நான் விரும்புகிறேன். பாருங்கள், இது பொதுவாக, கிட்டத்தட்ட எல்லாமே முடிந்துவிட்டது என்று நான் யூகிக்கிறேன். 169 இங்குள்ள எத்தனை பேர் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறீர்கள் என்று நான் வியப்புறுகிறேன், அதே சமயத்தில் நீங்கள் சுகவீனமாயிருந்தாலும், நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “என்னிடத்தில் ஒரு ஜெப அட்டை இல்லை, அதே சமயத்தில் நான் சுகவீனமாயிருக்கிறேன். நான் தேவையுள்ளவனாயிருக்கிறேன்” என்று கூறுங்கள். 170 நீங்கள் ஒரு நிமிடம் பயபக்தியாயிருங்கள் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது, நான் உங்களிடத்தில் பேச விரும்புகிறேன். அதுவே எப்பொழுதும் என்னுடைய தொல்லையாயுள்ளது, நான் நீண்ட நேரம் பேசுகிறேன். ஆனால் நீங்கள் வருவதற்கு முன்பு, தேவன் இதையும், நான் கூறியுள்ளது சத்தியம் என்பதையும் நிரூபிப்பார் என்று நான்—நான் நம்புகிறேன், அவர் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். இப்பொழுது, எத்தனை பேர் சுகவீனமாய் அங்கே உட்கார்ந்து கொண்டு, உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதை அறிந்தவர்கள், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அதைப் பாருங்கள். சரி.

68நீங்கள் இப்பொழுது ஜெப அட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஜெப அட்டைகள் அழைக்கப்படும். நான் உங்களுக்கு ஜெபிக்க விரும்புகிறேன். 171 வேதம், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. அவர், “அவர் ஒரு பிரதான ஆசாரியர் அங்கே உட்கார்ந்து கொண்டு நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார். அவர் ஒரு பிரதான ஆசாரியராய் இருப்பதற்கு முன்பு, நாம் அதை முதலில் அறிக்கை செய்ய வேண்டும், ஏனென்றால் அவர் நம்முடைய அறிக்கைக்காக மாத்திரமே பரிந்து பேசுகிறார். ஊழியக்கார சகோதரர்களே, அது சரியா? பாருங்கள், அவர் நம்முடைய அறிக்கையின் பேரில் மாத்திரமே பரிந்து பேசுகிறார், அவர் என்னவாக இருக்கிறார் என்றும், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்றும் நாம் அறிக்கை செய்கிறோம். அவர் என்ன செய்வார் என்றல்ல. அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார். அவர் அதை செய்துவிட்டார் என்று நாம் அறிக்கை செய்ய வேண்டும். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.”

69172 இப்பொழுது, பரலோகப் பிதா அதை அறிந்திருக்கிறார். உங்களை நோக்கிப் பார்க்கையில், ஓஹையோவிலிருந்து வந்துள்ள என்னுடைய ஒரு நல்ல நண்பர், அவரும் அவருடைய மனைவியும் இங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள்தான் திரு. டௌ மற்றும் அவருடைய மனைவி. அவர்களிலிருந்து இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் அமர்ந்திருப்பவர், நேற்றிரவு நான் கண்ட சங்கை, திரு. பிளேயர் அவர்கள் என்று நான் நினைக்கிறேன். அது கூட்டத்தாருக்கு மேலாக இருளாய் உள்ளது, எனக்கு, இங்கே இந்த விளக்குகளின் நிமித்தமாக சற்று மங்கலாக உள்ளது, நான்—நான் உங்களை சரியாகக் காணவில்லை. 173 ஆனால் நீங்கள் ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் உங்களுடைய இருதயத்தில் உங்களுக்கு தேவையாயிருக்கிற காரியத்தை வைத்து, நம்முடைய பிரதான ஆசாரியரிடத்தில், நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடியவரிடத்தில் நீங்கள் கேட்கலாம். 174 இப்பொழுது, நான் உங்களை அறியேன், நீங்கள் என்னை முழுவதுமாக தொட்டால், உங்கள் சகோதரனைத் தொட்டது போலவே, உங்களுடைய கணவர், உங்களுடைய போதகர், யாரோ ஒருவரைத் தொட்டது போலவே, அது—அது எந்த நன்மையும் செய்யாது. ஆனால் நீங்கள் அவரைத் தொட்டால், நாம் அவருடைய ஆவியோடு உண்மையாகவே இணங்கினால், அப்பொழுது அவர் உங்களுடைய விசுவாசத்தை அவரைத் தொடவும், என்னுடைய வரத்தின் மூலம் திரும்ப பேசவும் உபயோகிக்க முடியும். 175 பாருங்கள், நான் இதைப் போன்றே ஊமையாயிருப்பேன், இது இங்கே உள்ளது, இதன் மூலம் பேசும் ஒரு சத்தம் இல்லாமல் இருக்கும். அங்கே இருக்க வேண்டியுள்ளது…இது, இது பேசுவதற்கு இங்கு ஏதும் இல்லாத ஒரு ஊமையாக உள்ளது. தேவன் அவைகளின் மூலம் பேசினால் ஒழிய, இந்தக் காரியங்களுக்கு வரும்போது, எந்த நபரும் அவ்வாறே, ஒரு ஊமையாயிருக்கிறார்.

70176 இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள், நான் கூறியுள்ள இந்தக் காரியங்கள் உண்மையாயிருக்கின்றனவா என்பதை நாம் பார்ப்போம். அது அவ்வண்ணமாய் இருக்க தேவனே உதவி செய்வாராக. அவர் செய்வார் என்று நான் கூறவில்லை. அவர் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் செய்வார் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அவர் அநேக ஆண்டுகளாக, உலகம் முழுவதும், அவர் என்னை இதுவரை கைவிடவில்லை, எல்லாவிதமான தேசங்களிலும், கோடிக்கணக்கான ஜனங்களிலும். அவர் இன்னமும் என்னை விட்டு விலகவேயில்லை. நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அவர் என்னை விட்டு விலகமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 177 நீங்கள் பயபக்தியோடிருந்து, ஒரு சில நிமிடங்கள் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கும்படி நான் உங்களை கேட்டுக்கொள்ளப் போகிறேன். நாம் இன்னும் ஒரு நிமிடத்தில், முக்கிய கூட்டத்தை முடித்துவிட்டு, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். 178 ஆனால் விசுவாசிகளாகிய நீங்கள் என்னை நோக்கிப் பார்க்காமல் விசுவாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “அந்த மனிதன் கூறினது வேதவாக்கியம் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் கூறுகிறபடி நாம் அந்த நேரத்தில் இருக்கிறோம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அது அவ்வாறு இருக்குமானால், அப்பொழுது அது சம்பவிக்கத்தான் வேண்டும். அவனுடைய வார்த்தைகள் தேவனுடைய வார்த்தைகளாயிருந்தால், அவனுடைய வார்த்தைகள் தவறிப்போகும், ஆனால் தேவனுடைய வார்த்தைகள் தவறாது” என்று கூறுங்கள். 179 தேவன் தம்முடைய வார்த்தையை ஆதரிக்க கடமைப்பட்டவராயிருக்கிறார். அவர் அதை நிரூபிப்பார். அவர் அதை நிரூபிப்பார். “என்னை விசுவாசிக்கிறவன்.” இது கடைசி நாள் என்பதை அவர் நிரூபித்தார். என்ன சம்பவிக்கும் என்பதை அவர் நிரூபித்தார். இது சம்பவிக்க வேண்டியதாயிருந்தது என்பதை அவர் நிரூபித்தார்.

71180 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் வரும் வரைக்கும், ஆபிரகாமும் அவனுடைய குழுவினரும் தேவனிடத்திலிருந்து ஒரு அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அது பகுத்தறிதலின் அடையாளம்! ஆபிரகாமின் ராஜரீக சந்ததியே, நீங்கள் கூறுவதை நான் கேட்கட்டும்…நான் உங்களுக்குக் கூறட்டும், கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் உங்களுடைய கடைசி அடையாளத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது வேத வாக்கியங்களின்படியும், என்னுடைய இருதயத்தில் உள்ள தேவனுடைய வெளிப்பாட்டின்படியும், இது சத்தியம் என்று உரைக்கிறதாயும் உள்ளது. அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 181 இப்பொழுது நீங்கள் விசுவாசியுங்கள். ஒவ்வொருவரும் விசுவாசியுங்கள், “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மைத் தொடட்டும். என்னுடைய இருதயத்தில் எனக்கு ஒரு தேவை உள்ளது, சகோதரன் பிரான்ஹாம் என்னைக் குறித்து ஒன்றுமே அறியார் என்பதை நான் அறிவேன். எனக்கு அந்த மனிதனைத் தெரியாது, அவருக்கு என்னைத் தெரியாது, ஆனால் நீர் அறிந்திருக்கிறீர். அவர் என்னிடம் சத்தியத்தை கூறியிருந்தால், அது சம்பவிக்கும்” என்று கூறுங்கள். இப்பொழுது சிறிது நேரம் நகர வேண்டாம் என்று, நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உண்மையாக இருங்கள்… பாருங்கள், நீங்கள் ஆவியாயிருக்கிறீர்கள். அவருடைய வார்த்தை நிறைவேறும்படிக்கு, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இங்குள்ள ஒவ்வொரு ஆவியையும் என்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொள்கிறேன். இப்பொழுது பயபக்தியாயிருங்கள். ஜெபியுங்கள். அவரை நோக்கிப் பார்த்து, “கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன். நீர் என்னுடைய அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்” என்று கூறுங்கள். நாம் துவங்குவோமாக. நான் இங்கே கட்டிடத்தின் ஏதோ ஒரு பாகத்தின் பேரில் ஒருமுகப்படுத்த வேண்டும், ஏனென்றால், பாருங்கள், உங்களில் அநேகர், நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆவியாய் இருக்கிறீர்கள்.

72182 என்னால் முடியாது. நீங்களோ, “என்னைக் குறித்து என்ன?” என்று கேட்கலாம். என்னால் உங்களிடம் கூற முடியவில்லை. அது இராஜாஜிபத்தியமாயுள்ளது. தேவனுடைய கிரியைகள் யாவும் இராஜாதிபத்தியமானவை. இன்றிரவு, இந்த மேடையை கடக்கும்போது அநேக ஜனங்கள் சுகமாக்கப்பட்டிருப்பார்கள், அநேகமாக அநேகர் சுகமாக்கப்படாதிருக்கலாம். அவையாவும் தேவனுடைய இராஜாதிபத்தியத்தில் உள்ளன. என்ன செய்ய வேண்டும் என்று அவரிடத்தில் யார் கூற முடியும்? யாருமில்லை. அவர் தம்முடைய சொந்த சித்தத்தின்படி, அவருடைய சொந்த திட்டத்தின்படியே கிரியை செய்கிறார். 183 ஆனால் நீங்கள் அப்படியே விசுவாசியுங்கள். தாழ்மையாயிருங்கள். பதட்டமடைய வேண்டாம். தேவனுக்காக கையை நீட்டி, “தேவனாகிய கர்த்தாவே, நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். பார்த்தீர்களா? “நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடட்டும். எனக்கு இன்ன-மற்றும்-இன்ன தேவையுண்டு. அந்த சகோதரனுக்கு என்னைத் தெரியாது அல்லது என்னுடைய தேவையை அறிந்திருக்கவில்லை என்பதை நான் அறிவேன், ஆனால் நீர் செய்த இந்தக் காரியங்களைக் குறித்தும், இன்றைக்கும் நீர் இங்கே அதேவிதமாகவே இருக்கிறீர் என்றும் அவர் எங்களிடம் கூறினார்.” என்று கூறுங்கள். 184 அது இங்கே மேடையிலுள்ள சகோதரர்களாகிய உங்களை, உங்களில் எவரையும் விலக்குகிறதில்லை. என் சகோதரரே, கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் உடன் பணிவிடைக்காரராகிய, உங்களை நான் கேட்கிறேன். இந்த உலகத்தை விட்டுச் செல்ல வேண்டிய, உங்களோடு மரித்துக் கொண்டிருக்கிற ஒரு—ஒரு மனிதன் என்பதை, பாருங்கள், நான் உத்தமமாக அறிந்திருக்கிறபடியால் உங்களிடத்தில் பேசுகிறேன். நாம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். நான் கூறுகிறவைகளுக்காக, நான் நியாயத்தீர்ப்பின் நாளிலே கணக்கு ஒப்புவிக்க வேண்டும். நான் அதைக் குறித்து, மிகவும் உணர்வுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் என்னோடு இங்கே நின்று, எனக்கு உதவி செய்யும், மனிதனாகிய உங்களை நான் பாராட்டுகிறேன். தேவனுடைய இராஜ்ஜியத்தின் நிமித்தமாக, என்னால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்ய, நான் உங்களுக்கு உதவி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஜெபித்து, கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

73இங்கே, படத்தில் எத்தனை பேர் அந்த ஒளியைக் கண்டிருக்கிறீர்கள்? அதன் புகைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களா? அது அங்கே அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது. உங்களால் அதைக் காண முடியவில்லையா? 185 அந்த பெண்மணி மேலே தன்னுடைய கைக்குட்டையுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் அன்பான ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். பெண்மணியே, அது உண்மை. அந்த அன்புக்குரியவர்…நீங்கள் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று, என்னை மன்னியுங்கள், அல்லது அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது, என்ன தவறு என்பதை தேவனால் எனக்கு வெளிப்படுத்த முடியுமானால், அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீயைப் போல, ஏன், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து வந்ததாக ஏற்றுக் கொள்வீர்களா? இப்பொழுது, நீங்கள்—நீங்கள் என்னிடத்திலிருந்து இருபது அல்லது முப்பது அல்லது அதற்கும் அதிகமான அடி தூரத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் என்னை ஒருபோதும் தொட்டதேயில்லை. ஆனால் நீங்கள் ஏதோ ஒன்றைத் தொட்டிருக்கிறீர்கள், அதாவது நீங்கள் ஏதோ ஒரு காரியத்தோடு, யாரோ ஒருவரோடு தொடர்பு கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது என்னவெனில், அது ஒரு ஸ்திரீக்கானதாயுள்ளது, அது உங்களுடைய மகள். அது உண்மை. அவள் சுகமடைவாள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவள் ஒரு போதைக்கு அடிமையானவள். அது முற்றிலும் உண்மை. அவள் குடித்துவிட்டு நீந்துவதை நான் காண்கிறேன். பார்த்தீர்களா? இப்பொழுது, நீங்கள் உங்களுடைய கரத்தில் உள்ள கைக்குட்டையை, நீங்கள் அவள் மேல் வையுங்கள், சந்தேகப்படாதீர்கள். தேவன் அவளை விடுவிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னோடு நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா? ஆமென். இப்பொழுது, நான் அந்த ஸ்திரீயை அறியேன், ஆனால் தேவன் அவளை அறிந்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா?

74186 கோடுகள் போடப்பட்ட சட்டையுடன், குடலிறக்கத்தோடு அமர்ந்திருக்கிற மனிதனே, தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்றும், உங்களை சுகமாக்குவார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அதைச் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அந்த மனிதனை என் ஜீவியத்தில் கண்டதேயில்லை. ஐயா, உங்களிடம் ஒரு ஜெப அட்டை இருக்கிறதா? [அந்த சகோதரன், “இல்லை, நான் வைத்திருக்கவில்லை” என்கிறார்.—ஆசி.] உங்களிடத்தில் இல்லையா? உங்களுக்கு ஒன்று தேவையில்லை. “நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால்!” 187 இங்கே அமர்ந்துள்ள ஒரு ஸ்திரீ இங்கே அமர்ந்துள்ள இந்த ஸ்திரியின் மேல் நோக்கி பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். அவள் எனக்கு ஒரு அந்நியர். ஆனால் அவள் உண்மையாகவே பதட்டமாக இருக்கிறாள். எனக்கு அவளைத் தெரியாது. என் வாழ்க்கையில் நான் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் தேவன் அவளை அறிந்திருக்கிறார், அவள் ஏதோ ஒரு காரியத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறாள் என்பதை அவள் உணருகிறாள். நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு இருப்பதற்குக் காரணம், நீங்கள் இன்றிரவைக் காட்டிலும் இனிமேல் தங்கியிருக்க முடியாது. நீங்கள் கூட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் நாளை உங்களுடைய வீட்டிற்கு செல்ல திட்டமிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இங்கிருந்து வரவில்லை அல்லது நீங்கள் கலிபோர்னியாவிலிருந்து வரவில்லை. நீங்கள் இங்கிருந்து கிழக்கே செல்ல வேண்டும். நீங்கள் ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆகாய மார்க்கமாக செல்ல திட்டமிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓக்லஹாமாவிலிருந்து வருகிறீர்கள். ஆம். அது உண்மை. 188 நீங்களும் கூட ஒரு மரிக்கும் நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் ஜெபிக்கப்படுவதற்காக இங்கு வந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கவில்லை. ஆனால் நீங்கள் இங்கு வர முடிந்தால், நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசித்திருக்கிறீர்கள். அது உண்மை. மேலும், உங்களுடைய நிலைமை புற்று நோயாகும். புற்று நோய் எலும்பில் உள்ளது. இப்பொழுது நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என் சகோதரியே, நீங்கள் அவரோடு தொடர்பு கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒருக்கால் நீங்கள் யாரென்று தேவன் என்னிடம் கூறினால், அப்பொழுது அது உங்களுக்கு உதவியாக இருக்குமா? அது உங்களுக்கு உதவி செய்யும் என்று (தேவன்) நீங்கள் விசுவாசித்தால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி, திருமதி. ஸ்டீல், நீங்கள் ஓக்லஹாமாவுக்குத் திரும்பலாம். அந்தப் பெண்மணியை எனக்குத் தெரியாது. நான் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை.

75189 இதோ ஒரு பெண்மணி அவளுக்குப் பின்னால் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் சுருள் சிரை நாளங்களினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு மகனைப் பெற்றுள்ளாள், அவள் அவனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் விசுவாசித்தால், அவள் சுகமாக்கப்பட முடியும். திருமதி மேசன், நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்து, இயேசு கிறிஸ்து உங்களுக்கு சுகமளித்தலை அளிப்பார் என்று விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசிப்பீர்களா? சரி, அப்படியானால் அங்கே உங்களுக்கு அடுத்தபடியாக அமர்ந்திருக்கிற அந்தப் பெண்மணியின் மீது உங்களுடைய கரத்தை வையுங்கள், இரட்சிக்கப்படாத தன்னுடைய கணவனுக்காக அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். தேவன் சுகமளித்தலை அளிப்பார். நாம் ஜெபிப்போமாக. 190 அன்புள்ள தேவனே, நீர் அவளுக்கு அந்த ஆசீர்வாதத்தை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவளுடைய இருதயத்தின் வாஞ்சையை அந்த ஸ்திரீக்கு அருளும். அவளுடைய விசுவாசம் உமக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, அது உம்மைத் தொட்டுள்ளது. பிதாவே, நீர் உதவி செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? சரி. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பெண்மணியே, உங்களுடைய கணவர் இரட்சிக்கப்படப் போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள்.

76191 எனக்கு முன்பாக மிகவும் பருமனான ஒரு ஸ்திரீ இருப்பது போன்று தென்படுகிறது. அங்கே அவள் அமர்ந்திருக்கிறாள். நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். சரி. எனக்கு உங்களைத் தெரியாது. உங்களுடைய தொல்லை என்னவெனில், சுரப்பிகள் தான். நீங்கள் அதிக எடை கொண்டவர். நீங்கள் ஒரு மருத்துவரிடம் சென்றிருக்கிறீர்கள், அவர் அதைக் குறித்து அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார், ஆனால் அது ஒரு பூமிக்குரிய மருத்துவர். பார்த்தீர்களா? உங்களுடைய…உங்களுக்கு அதிக துக்கம் இருந்தது. நீங்கள் உங்களுடைய கணவரை இழந்துவிட்டீர்கள். நீங்கள் இங்கிருந்து வரவில்லை. நீங்கள் உண்மையாகவே ஆர்கன்சாஸிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்களும் கூட வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நீங்கள் அழைக்கப்படமாட்டீர்கள் என்று நீங்கள் பயந்திருந்தீர்கள். ஆனால் உங்களுடைய விசுவாசம் இப்பொழுது தேவனைத் தொட்டுள்ளது. என் சகோதரியே, நீ போய் விசுவாசி. தேவன் உங்களுக்கு ஒரு வேலையைத் தருவார், உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்குத் தருகிறார். தேவன் தம்முடைய வார்த்தை உண்மையென்று நிரூபிக்கிறார். அது அவ்வண்ணமாய் இருக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நீங்கள் மீண்டும் என்னோடு ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

77192 பிதாவாகிய தேவனே, நீர் நிரூபித்த அதே தேவனாயிருக்கிறீர். நீர், “அந்தப் பெண் மரிக்கவில்லை, அவள் நித்திரையாயிருக்கிறாள்” என்று கூறினபோது, அப்பொழுது நீர் அதை நிரூபிக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, முடிவு காலம் வருவதற்கு சற்று முன்னர், மனுஷகுமாரன் சோதோமில் செய்த அதே விதமாக தம்மை வெளிப்படுத்துவார். கர்த்தாவே, நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர். இப்பொழுது நீர் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் பூமிக்கு வந்திருக்கிறீர், இன்றிரவு எங்களிடையே வந்ததை, விசுவாசிக்கிற ஜனங்களாகிய நாங்கள் அதை நிரூபித்திருக்கிறோம். நீர் அந்த நாளில் செய்ததுபோல உம்முடைய வார்த்தையை நிரூபித்திருக்கிறீர். கர்த்தாவே, எங்களுக்கு இதற்கு மேல் ஆதாரம் தேவையில்லை. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். வேதவாக்கியங்களின்படி, இதுவே உம்முடைய வருகைக்கு முன்பாக உள்ள கடைசி அடையாளம் என்பதை நாங்கள் உணருகிறோம். எல்லா நிழல்களும், மாதிரிகளும் ஒருபோதும் தவறிப் போவதில்லை. அவர்கள் உறுதியாய் இருக்க வேண்டும். 193 எனவே பிதாவே, உம்முடைய பிள்ளைகள் இப்பொழுது வந்து ஜெபித்துக் கொள்ளப்படவிருக்கிறபடியால், ஒவ்வொருவரும் சுகமடைவார்களாக என்று, நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த சுகமளிக்கும் ஆராதனையின் முடிவில் சுகவீனமான ஒரு நபரும் எங்கள் மத்தியில் இல்லாதிருப்பார்களாக. ஓ அன்புள்ள தேவனே, இப்பொழுதே உம்முடைய அபிஷேகம் கிருபையாய் உம்முடைய ஜனங்களின் மேல் இருக்க, அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைய நீர் அனுமதிப்பீரா? 194 இன்னும் உம்முடைய பிள்ளைகளாயிராத, சிலர் இங்கிருந்தால், இந்தக் காரியங்களின் அடிப்படையில், அந்த… அவர்கள் வார்த்தையைக் கேட்டு, காரியம் சம்பவித்ததைக் கண்டுள்ளனர், நீர் யாராயிருக்கிறீர் என்றும் மற்றும் நீர் என்னவாக இருக்கிறீர் என்றும், அதாவது நீர் இங்கிருக்கிறீர் என்றும், அது சரியாக எழுத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 195 கர்த்தாவே, நீர்—நீர் ஒரு பொய்யை ஆசீர்வதிப்பாரா? ஏன், நிச்சயமாக இல்லை, கர்த்தாவே. ஆனால் நீர் உம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பதாக வாக்குப்பண்ணினீர், அது வெறுமையாய்த் திரும்பாது. அது எதற்காக நோக்கங்கொண்டிருந்ததோ அதை நிறைவேற்றும். இப்பொழுது நீர் அதை எங்களுக்கு முன்பாக, இன்றிரவு, எவ்வித சந்தேகத்தின் நிழலுக்கும் இடமின்றி செய்திருக்கிறீர்.

78196 நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, இதற்கு முன்பு ஒருபோதும் விசுவாசிக்காத ஜனங்களாய் இங்கு இருக்கிறவர்கள், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்த விரும்புகிறீர்களா? உங்களுடைய தலை வணங்கியிருப்பதோடு, உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். உங்களுடைய காலூன்றி நின்று, “நான் என் முழு இருதயத்தோடு, இப்பொழுது விசுவாசிக்கிறேன். நான் இப்பொழுதே, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களானால், எந்த ஜனங்களும், இங்குள்ள எந்த ஜனங்களும், இன்னும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதிருக்கிறவர்கள், இந்த நேரத்தில் அதைச் செய்ய விரும்புகிறீர்களா? நான் உங்களிடம் கூறமாட்டேன்…நீங்கள் தெரிந்துகொள்ளும் உங்களுடைய சபைக்கு செல்லுங்கள். ஆனால் நீங்கள் இருக்கும்போதே…இயேசு கிறிஸ்துவைப் ஏற்றுக்கொள்ளும்படி நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். அவர் பரலோகத்திலிருந்து தம்முடைய காணக்கூடிய சரீரத்தில் வரும்போது, நீங்கள் அவரை நேரில் காணும் வரையில் நீங்கள் அநேகமாக ஒருபோதும் அவரோடு நெருங்கி இருக்கமாட்டீர்கள். நீங்கள் அதை ஏற்கனவே செய்திருக்கவில்லையென்றால், இப்பொழுது நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா? 197 இங்கே ஒருவரும் நிற்கவில்லை என்பதன் அடிப்படையின் பேரில், அப்பொழுது நீங்கள் யாவரும் நல்லறிவுள்ளவர்களாயும், விவேகமுள்ளவர்களாயும், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தவர்களாயும் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அங்கே இதன் கீழே உட்கார்ந்து கொண்டிருந்தால், உங்களுக்கு நினைவிருக்கும், “மனுஷர் முன்பாக என்னைக் குறித்து நீங்கள் வெட்கப்பட்டால், நானும் என் பிதாவுக்கு முன்பாக உங்களைக் குறித்து வெட்கப்படுவேன்.” அங்கே பின்னால், கூட்டத்தில், ஆம், யாரோ ஒருவர் எழுந்து நின்று கொண்டிருந்திருக்கலாம். 198 அன்புள்ள தேவனே, அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள், நின்று கொண்டிருப்பதை நான் காணவில்லை. கர்த்தாவே, இந்த நேரம் வரை இது செய்யப்படவில்லை என்பதை அவர்கள் உணருகிறார்கள், இப்பொழுது நீர் அதை உறுதிப்படுத்தி, அது அவ்வண்ணமே என்பதை நிரூபிக்கிறீர். பிதாவே, இந்த நேரத்தில் அவர்களுடைய இருதயங்களில், விநோதமான அசைவு உண்டாயிருக்க வேண்டும் என்று, நான் ஜெபிக்கிறேன்… கடைசியாக வந்த நபர் யார் என்பதை நாங்கள் எப்படி அறிவோம்? இதுவே லாஸ் ஏஞ்சல்ஸிற்கான முடிவாயிருக்கலாம். இராஜ்ஜியத்திற்குள் பிறக்கப்போகும் கடைசி ஆத்துமா இதுவாக இருக்கலாம். அந்த நேரங்கள் எப்பொழுது வரும் என்று நமக்குத் தெரியாது. அது வரும்போது, வாசல் அடைக்கப்படும், சரீரம் முழுமையாய் இருக்கும். அது ஒரு விநோதமான சரீரமாகவோ அல்லது ஒரு வினோதமான மணவாட்டியாகவோ இருக்காது. உலகத்தோற்றத்திற்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருந்த அநேக அங்கத்தினர்களை அது கொண்டிருக்கும், இயேசுவானவர், ஆதாமைப் போல, தன்னுடைய மனைவியை இரட்சிக்க வெளியே நடந்து அழைத்துச் செல்ல வந்தார். தேவனே, நீர் அவர்களை இப்பொழுது உம்முடைய இராஜ்ஜியத்திற்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறார்கள். கர்த்தாவே, அவர்களோடு இடைபடும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

79199 நின்ற உங்கள் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. உங்களில் சிலர் நின்று கொண்டிருப்பதை நான் அறியவில்லை. சிலர் பின்பக்கத்திலும், சிலர் மேல் மாடியிலும் நின்றனர். இப்பொழுது நீங்கள் எனக்காக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தயவுகூர்ந்து என்னை புரிந்துகொள்ளுங்கள். சபை முடிந்த பிறகு, இங்கே ஒரு ஊழியக்காரரை சந்தித்து அவர்களோடு அதைக் குறித்து பேசுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? அது தவறிப்போக விடாதீர்கள். நீங்கள் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில் ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லையென்றால், அடுத்தபடியாக அதை செய்யுங்கள், அதன்பின்னர் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரையில் உங்களுடைய கரங்களை உயர்த்தியிருங்கள். 200 இப்பொழுது, அநேகர் இங்கே ஜெப அட்டைகளை வைத்திருக்கிறார்கள். நாம் அவர்களை இங்கு நிற்கும்படி கேட்டுக்கொள்ளப் போகிறோம், இங்கே நடந்து வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இல்லையென்றால் நான் வர வேண்டும்… [ஒரு சகோதரன், “இல்லை” என்கிறார்.—ஆசி.] என்னால் வரமுடியாது. [“இங்கே இந்தப் பக்கத்திலிருந்து வாருங்கள்.”] ஜெப அட்டைகளை வைத்திருக்கும் ஜனங்கள் இந்தப் பக்கத்திலிருந்து இந்த பக்கத்திலிருந்து இந்த வழியாக வெளியே வர முடியும். 201 இப்பொழுது உங்களில் எவரேனும் போக வேண்டியவராயிருந்தால், அது…எனக்கு தாமதமாகிவிட்டது. நான் வருந்துகிறேன். நாளை இரவு நான் இன்னும் சற்று சிறப்பாக செய்ய முயற்சிப்பேன். சுவற்றில் இருக்கும் கடிகாரத்தில், பத்து மணிக்குப் பிறகு பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்றிரவு உங்களுடைய வருகைக்காக உங்களுக்கு மிக்க நன்றி, பரலோகத்தின் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் தங்கியிருந்து ஜெபவரிசையைக் கவனிக்க விரும்பினால், நீங்கள் எப்பொழுதும் வரவேற்கப்படுகிறீர்கள். ஆனால் நாம் இப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் துவங்கப் போகிறோம், நீங்கள் தரித்திருக்க விரும்பினால் ஒழிய நான் உங்களைப் பிடித்து வைக்க விரும்பவில்லை. நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அனுப்பி வைக்கப்படுகிறீர்கள். தேவனுடைய சமாதானம் உங்களோடு சென்று, உங்களை ஆசீர்வதித்து, இரவு முழுவதும், உங்களுடைய சரீரங்களில் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவதாக, நாளை இரவு நீங்கள் திரும்பி வரும்படியாக உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அருளுவதாக. தேவன் இப்பொழுது உங்களோடு இருப்பாராக.

80202 இப்பொழுது உலகளாவிய ரீதியில் நாம் ஜனங்களுக்காக ஜெபிப்பதுபோல, இப்பொழுது ஜெப அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஜெபத்திற்காக நிற்கட்டும். இப்பொழுது, ஜெப அட்டையோடு நின்று கொண்டிருக்கிற உங்களிடத்தில், இப்பொழுது நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவதோ, உங்களுடைய ஜீவியத்தில் ஏதாவது சந்தேகம் உண்டா என்பதே? என்னை மன்னிக்கவும், உங்களுடைய ஜீவியத்தில் நீங்கள் அறிக்கை செய்யாத பாவம் ஏதாகிலும் உண்டா? ஏதாகிலும் இருந்தால், நான் இதைக் கேட்கட்டும். அறிக்கை செய்யப்படாத பாவத்தை உங்களுடைய இருதயத்தில் வைத்துக்கொண்டு ஜெப வரிசைக்குள் வராதீர்கள். காரணம், நீங்கள்…இது பிள்ளைகளின் அப்பம், பாருங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராயில்லையென்றால், உங்களுடைய ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு ஜெப வரிசையில் ஒப்புவியுங்கள், அதன் பின்னர் வாருங்கள். அது விசுவாசிக்கானதாயுள்ளது. நீங்கள் அதைச் செய்வீர்களா? முதலில் அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அதன்பின்னர் ஜெபிக்கப்படுவதற்காக, மேடையின் மேல் வாருங்கள்.

81203 இப்பொழுது நான் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்காகவும் ஜெபிக்கப் போகிறேன்; வெறுமனே ஒருவிதமான வழக்கமான நிகழ்ச்சியைப் போன்று, அவைகளைக் கடந்து செல்ல முடியாது. நாம் இப்பொழுது ஒரு சபையில் இருக்கிறோம். நாம் தங்கியிருந்து ஜெபிக்க முடியும் என்ற காரணத்தை சகோதரி வியாட் நமக்கு அளித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். [ஒரு சகோதரன், “ஆம், இரவு முழுவதும், நீங்கள் விரும்பும் வரை” என்கிறார்.—ஆசி.] நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரித்திருக்கலாம். நாங்கள் அதைச் செய்ய அனுமதித்ததற்காக சகோதரி வியாட் மற்றும் இங்குள்ள ஊழியர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். தேவன் அவளை ஆசீர்வதிப்பாராக. அவளுடைய தீரமான கணவர் இந்த மேடையின் மேல் நின்று, வியாதியஸ்தருக்காக ஜெபித்தார், அவர் மரிக்கும் வரை, எனக்குத் தெரிந்த வரையில், ஒரு உண்மையான சிலுவையின் போர்வீரன். இப்பொழுதும் நான் அதே காரியத்தை தொடர்ந்து செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இந்த ஜனங்களை ஆசீர்வதியும். 204 இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் இங்கு வந்து…நீங்கள் எந்தக் காரியத்தையும் கூற வேண்டியதில்லை. நீங்கள் உங்களோடுள்ள எந்தப் பிரச்சினையையும் கூற வேண்டியதில்லை. அப்படியே வந்து உங்களுக்காக நான் ஜெபிக்கட்டும், விசுவாசியுங்கள். 205 இதைச் செய்ய தேவன் என்னை அனுப்பியிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். கர்த்தருடைய தூதன் கூறியது நினைவிருக்கிறதா? “ஜனங்கள் உன்னை விசுவாசிக்கும்படி செய்தால், நீ ஜெபிக்கும்போது உத்தமமாய் இருந்தால், ஜெபத்திற்கு முன்பாக ஒன்றுமே நிற்காது.” அது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். அது மீண்டும் மீண்டும், நிரூபிக்கப்பட்டுள்ளது.

82இப்பொழுது நான் நம்முடைய சகோதரி ரோஸ் அவர்களிடம் கேட்கப் போகிறேன், அவள் விரும்பினால், விசுவாசிக்க மாத்திரம் அல்லது மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகாமையில் இருக்கிறார் அல்லது ஏதோ ஒன்றை இசைக்க வேண்டும். 206 நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது என்னோடு ஐக்கியத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஜெப வரிசையில் இடம் பெறாத ஜனங்களாகிய நீங்களும் கூட இந்த ஜனங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருப்பீர்களா? பாருங்கள், உங்களுடைய கரத்தை உயர்த்துவதன் மூலம், “நான் ஜெபித்துக் கொண்டிருப்பேன், பாருங்கள். நாம் யாவரும் ஜெபித்துக் கொண்டிருப்ப்போம்” என்று அவர்களுக்கு வாக்களியுங்கள். சரி. ஆம். நீங்கள் புறப்பட்டுச் செல்ல வேண்டுமானால், நாம் ஜெபிக்கையில் அவர்கள் தொல்லைப்படுத்தாதபடிக்கு, நீங்கள் மிகவும் அமைதியாக இப்பொழுது செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சகோதரியே, அது இப்பொழுது முடிவடையும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “என் முழு இருதயத்தோடு என்று கூறுகிறாள்.”—ஆசி.] அன்புள்ள தேவனே, நான் என்னுடைய கரங்களை சகோதரியின் மேல் வைத்து, அவளுடைய சரீரத்தின் துயரத்திற்கு சவாலிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது அவளை விட்டுப் போவதாக. ஆமென். சகோதரியே, உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய பாவங்கள் யாவும் அறிக்கை செய்யப்பட்டதா? நீங்கள் அறிந்தமட்டில், உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? 207 அன்புள்ள தேவனே, உம்முடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் என்னுடைய கரங்களை என்னுடைய சகோதரியின் மேல் வைக்கிறேன், அவளுடைய சரீரத்தின் இன்னல் நீங்கும்படி இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். எல்லா பாவங்களும் அறிக்கையிடப்பட்டு, உங்களுடைய சுகமளித்தலுக்கு நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] 208 அன்புள்ள தேவனே, கர்த்தாவே, நீர் இங்கே பிரசன்னமாயிருக்கிறீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் என்னுடைய கரங்களை என் சகோதரன் மீது வைக்கிறேன். நீர் அவரை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

83பாவங்கள் யாவும் அறிக்கை செய்யப்பட்டதா? இல்லை, உங்களுக்கு கேட்கவில்லை. நீங்கள் கேட்பீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நான் செவிடாய் இருந்து வருகிறேன்.”—ஆசி.] நீங்கள் விசுவாசியுங்கள். அந்தப் பெண் இப்பொழுது காது கேளாதவளாய் இருக்கிறாள். நாம் இங்கே ஜெபிக்கச் செல்கிறோம். 209 அன்புள்ள தேவனே, நீர் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தி, இந்த செவிட்டுத் தன்மையை அவளிடமிருந்து எடுத்துப் போட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவள் ஒரு மூடிய உலகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், அவளால் கேட்க முடியாது. நீர் அவளுக்கு இயேசுவின் நாமத்தின் மூலம் சுகத்தை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 210 ஒரு நிமிடம், உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கும்படி ஜனங்களை நான் கேட்டுக் கொள்ளப் போகிறேன். அவளுக்கு என்ன சம்பவித்துள்ளது என்பதை நான் காண விரும்புகிறேன். இப்பொழுது, தயவு செய்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஒருவரும் தங்களுடைய தலையையோ அல்லது கண்களையோ உயர்த்த வேண்டாம். இப்பொழுது, நான் உங்களுக்குச் சொல்லும் வரையில் நீங்கள் அதைச் செய்யக் கூடாது. 211 இப்பொழுது நான் பேசுவதை உங்களால் கேட்க முடிகிறதா? [அந்த சகோதரி, “இன்னும் சரியாக கேட்கப்படவில்லை” என்று கூறுகிறாள். சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய கரங்களை ஒருமுறை தட்டுகிறார். “நீங்கள் பேசுவதை என்னால் கேட்க முடிகிறது.”—ஆசி.] நான் கூறுவது கேட்கிறதா? [“சிலர்.”] கேட்க முடிகிறதா? அவளால் இப்பொழுது கேட்க முடிகிறது. [சகோதரன் பிரான்ஹாம் இன்னும் ஒரு முறை கைத்தட்டுகிறார்.] பார்த்தீர்களா? அந்த சத்தம் கேட்கிறதா? 212 இப்பொழுது நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் விசுவாசியுங்கள், தேவன் உங்களை முழுவதுமாக சுகமாக்குவார். அவள் கூறினாள்…நான் ஜெபித்துவிட்டு, என்னுடைய கரங்களை அவளுடைய காதுகளில் வைத்தேன், அவள் ஏதோ ஒன்றை கேட்க முடிகிறது என்று அவள் கூறினாள். சரி, இப்பொழுது அப்படியே தொடர்ந்து செல்லுங்கள், நீங்கள் பரிபூரணமாக கேட்கப்போகிறீர்கள், நீங்கள் கேட்ப்பீர்கள் என்று விசுவாசியுங்கள்.

84சகோதரியே, எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டதா? [அந்த சகோதரி, “ஆம்” என்கிறார்.—ஆசி.] உங்களுடைய சுகமளித்தலுக்கு நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? [“ஆம்.”] 213 அன்புள்ள தேவனே, எங்களுக்குள்ளாக, எங்களுக்குள்ளாக எந்த நன்மையான காரியமும் இல்லை என்பதை அறிந்திருக்கிறபடியால், நான் என்னுடைய கரங்களை என்னுடைய சகோதரியின் மீது வைக்கிறேன். ஆனால் நாங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்த, கிறிஸ்தவர்களாய் இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களுடைய சகோதரியின் மீது கரங்களை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 214 இப்பொழுது நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “அருமை” என்கிறாள்.—ஆசி.] சரி, இப்பொழுது நீங்கள்—நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். அந்தவிதமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். அது உண்மை. சரி. 215 பாவங்கள் யாவும் அறிக்கை செய்யப்படுகின்றனவா? [அந்த சகோதரி, “ஆம், ஐயா” என்கிறார்.—ஆசி.] உங்களுடைய சுகமளித்தலுக்கு நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்களா? [“ஆம்.”] ஜனங்களின் இருதயங்களை அறிந்த தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் கரங்களை வைக்கும்போது விசுவாசிக்கிறீர்களா? [“நான் விசுவாசிக்கிறேன்.”] 216 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் எங்களுடைய கரங்களை அவள் மீது வைத்து நீர் அவளை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறபடியால், நீர் எங்கள் சகோதரியை சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 217 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உண்மையாகவே, உங்களோடுள்ள கோளாறு என்னவென்று எனக்குத் தெரியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் அதைக் கூறவில்லை; ஏனெனில், நீங்கள் கூறுகிறீர்கள், அது—அது தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கும். ஆனால் நீங்கள் விரும்பினால்…எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டதா? [அந்த சகோதரி, “ஆம், ஐயா” என்கிறார்.—ஆசி.] தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“ஆம், ஐயா.”] நீங்கள் நம்புகிறீர்களா அந்த மூட்டு வீக்கம்…நான் அதை கூறிவிட்டேன். அன்புள்ள தேவனே, நீர் அவளுக்கு உதவி செய்து, அவளை சுகமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் இதை அருளும். நீங்கள் முடமாக்கப்படமாட்டீர்கள். போய், உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 218 தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆமென்” என்று கூறுகிறாள்.—ஆசி.] எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு, உங்களுடைய சுகமளித்தலுக்கு நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? உங்களுடைய முதுகு சரியாக இருக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர் அவளை சுகப்படுத்தி அவளைக் குணப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது அவ்வண்ணமாய் இருப்பதாக. ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. போய், இப்பொழுது விசுவாசியுங்கள்.

85சகோதரியே, எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு, உங்களுடைய சுகமளித்தலுக்கு நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? அன்புள்ள தேவனே, அவளுடைய பாவங்கள், அறிக்கை செய்யப்பட்டதாக அவள் கூறுகிறாள். நான் இந்த ஸ்திரீயின் மீது என்னுடைய கரங்களை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலுக்காக வேண்டிக்கொள்கிறேன். ஆமென். 219 பாவங்கள் யாவும் அறிக்கை செய்யப்பட்டதா? நீங்கள் சரியாக இருக்க வேண்டும், நீங்கள் மிகவும் சுகவீனமாயிருக்கிறீர்கள், நீங்கள் அதை அறிவீர்கள். உங்களோடுள்ள கோளாறு என்னவென்று எனக்குத் தெரியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் உங்களை குணப்படுத்தி, உங்களுடைய இருதயத்தை சுகப்படுத்தி உங்களை முழுவதுமாக குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அன்புள்ள தேவனே, நீர் அவளை சுகப்படுத்த, அவளை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். பிதாவே, இயேசுவின் நாமத்தில், இது அவளை விட்டுப் போவதாக. ஆமென். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சந்தேகப்படாதீர்கள். போய் விசுவாசியுங்கள். பாவங்கள் யாவும் அறிக்கை செய்யப்பட்டனவா? நீங்கள் சுகமளித்தலுக்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? அன்புள்ள பரலோகப் பிதாவே, நான் என்னுடைய கரங்களை எங்களுடைய சகோதரியின் மேல் வைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவள் சுகமடைவாளாக. ஆமென். சந்தேகப்படாதீர்கள். போய் விசுவாசியுங்கள். எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு, நீங்கள் சுகமளித்தலுக்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? 220 அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர் எங்களுடைய சகோதரனை சுகப்படுத்தவும், அவரைக் குணப்படுத்தவும் நான் ஜெபிக்கிறேன். பிதாவே, இதை அருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த நோக்கத்திற்காகவே நான் என்னுடைய கரங்களை அவர் மீது வைக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறேன். சகோதரியே, இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்லா பாவங்களும் அறிக்கையிடப்பட்டு, நீங்கள் சுகமளித்தலுக்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? அன்புள்ள தேவனே, நான் என்னுடைய கரங்களை சகோதரியின் மீது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வைக்கிறேன், உம்முடைய மகிமைக்காக அவள் சுகமடைவாளாக. ஆமென்.

86221 இப்பொழுது அதைப் போன்று அநேக முறைகள், இயேசுவானவர் கூறினதுபோல, ஒரு தொடுதலில், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைத்தால்” என்றார். கூட்டங்களில், ஜனங்களை வரிசையில் அழைத்து சிந்தனைகளை பகுத்தறிதலை காட்டிலும், இவ்விதம் கைகளை வைத்து ஜெபிப்பது ஐம்பது சதவீதம் அதிகமாகப் பலனை தருகிறது என்பதை, நான் கவனித்து வருகிறேன் ஏனென்றால் சிந்தனைகளை பகுத்தறியும் விஷயத்தில் ஒரு சிலருக்கு மாத்திரம் அவ்விதம் செய்ய முடிகிறது. மேலும், இந்த ஒரு வழியில், இன்னும் அநேகர் சுகமடைகின்றனர். 222 நீங்கள் உங்களுடைய எல்லா அவிசுவாசத்தின் பாவங்களையும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் அறிக்கை செய்துவிட்டீர்களா? இப்பொழுது நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம், விடுவிக்கப்பட்டேன்” என்கிறாள்.—ஆசி.] அன்புள்ள தேவனே, நான் அவளுடைய கரங்களை பிடிக்கையில் நீர் அவளை சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் அவளுடைய சுகமளித்தலுக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம்” என்கிறார்.—ஆசி.] எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்படுகின்றனவா? [“ஆம்.”] அன்புள்ள தேவனே, நான் என்னுடைய கரங்களை எங்களுடைய சகோதரியின் மீது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலுக்காக வைக்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது ஒரு மிகச் சிறிய காரியமாகத் தென்படுகிறது, ஆனால் அது அதை வாக்குத்தத்தம் செய்த தேவனாயிருக்கிறது. பாவங்கள் அறிக்கை செய்யப்படுகின்றனவா? அன்புள்ள தேவனே, நீர் இந்த எங்களுடைய சகோதரியை சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் மீது கரங்களை வைக்கையில், அவள் போய் சுகமடைவாளாக. ஆமென். பாவங்கள் அறிக்கை செய்யப்படுகின்றனவா? அன்புள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் கரங்களை அவள் மேல் வைக்கையில், நீர் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

87இப்பொழுது நீங்கள் இயக்கவியலுடன் வரும்போது, அது இயங்கும் சக்தியை தாக்குவதாக, அது கிரியை செய்யும். பாவங்கள் அறிக்கை செய்யப்படுகின்றனவா? [அந்த சகோதரி பதிலளிக்கிறார்—ஆசி.] நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்கள். அன்புள்ள தேவனே, நீர் அவளை சுகப்படுத்தி, அவளை குணப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பாவங்கள் யாவும் அறிக்கை செய்யப்பட்டதா? [அந்த சகோதரி, “எல்லாவற்றையுமே” என்று கூறுகிறாள்.—ஆசி.] அன்புள்ள தேவனே, இந்த ஸ்திரீ என் கண்களை நோக்கிப் பார்க்கும்போது, நான் அதை விசுவாசிக்கிறேன். நீர் அவளை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். 223 சகோதரியே, நீ, அவளை அழைத்து வருகிறாயா? நீ அவளை அழைத்துக் கொண்டு வருகிறாயா? சரி. சகோதரியே, தேவன் உங்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “தேவன் எனக்கு மீண்டும் கண்பார்வையைத் தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 224 பரலோகப் பிதாவே, நீர் குருடருக்கும், தேவையுள்ளவர்களுக்கும் எப்பொழுதும் இரக்கமாயிருக்கிறீர். இப்பொழுது இன்றிரவு நீர் என்ன செய்திருக்கிறீர் என்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். எனவே கர்த்தாவே, இந்த மகத்தான கடைசி அடையாளம் இப்பொழுது எங்கள் மத்தியில் அசைவாடிக்கொண்டிருக்கிறது என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். இந்த குருடான ஸ்திரீயினுடைய பார்வை அவளுக்கு வரவேண்டுமென்று நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். இப்பொழுது, எங்களுக்கு இப்பொழுது அதைக் குறித்து அறிவியுங்கள். அதை அறிவியுங்கள். [ஒரு சகோதரி சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்—ஆசி.] ஓ, ஆம், தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [“அல்லேலூயா!”] அன்புள்ள பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியின் மேல் என்னுடைய கரங்களை வைத்து, நீர் அவளை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள்—நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் கேட்போமாக.

88சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம், நான் விசுவாசிக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] ஓ அருமையான பரலோகப் பிதாவே, நீர் இப்பொழுது அவளை சுகப்படுத்துவீர் என்ற நம்பிக்கையோடு, எங்களுடைய சகோதரிக்காக நான் ஜெபிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், என் கரங்களை அவள் மீது வைக்கிறேன். இப்பொழுது விசுவாசியுங்கள். அது உண்மை. அப்படியே விசுவாசித்து, செல்லுங்கள். சகோதரனே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆம்” என்கிறார்.—ஆசி.] எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்படுகின்றனவா? அன்புள்ள தேவனே, நீர் எங்கள் சகோதரனை சுகப்படுத்தி அவரை குணமாக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 225 ஓ தேவனே, இந்த வேளையின் இனிமையிலும், சாந்தத்திலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தாழ்மையாய், நான் ஜெபிக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் இந்த ஸ்திரீயை சுகப்படுத்துவாராக. [அந்த சகோதரி, “நான் ஜெபிக்கிறேன், என் மகனுக்காக ஜெபிக்கிறேன். நான் அவரை இருபது வருடங்களாக காணவில்லை” என்று கூறுகிறாள்.—ஆசி.] அருமையான சகோதரியே, தேவன் உங்களுடைய மகனை உங்களண்டை அனுப்ப வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

89அன்புள்ள பிதாவே, இங்குள்ள எங்களுடைய சகோதரிக்காக நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியின் இனிமையில், அவர் இப்பொழுது வந்து இயேசுவின் நாமத்தில் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்துவாராக. ஆமென். சகோதரியே, உங்களை ஆசீர்வதிப்பாராக. அன்புள்ள தேவனே, நான் என்னுடைய சகோதரனுக்காக ஜெபிக்கிறேன், அவர் இங்கே நின்று கொண்டிருக்கையில், நான் அவர் மீது கரங்களை வைத்து, அவருடைய சுகமளித்தலுக்காக, இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். என் சகோதரனே, உன்னை ஆசீர்வதிக்கிறேன். சரி. சிறு பையனா? அன்புள்ள தேவனே, இந்தச் சிறு பிள்ளையின் மேல் கரங்களை வைத்து, அவனுடைய சுகமளித்தலுக்காக, நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவனை ஆசீர்வதிக்கிறேன். சகோதரியே, நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம்” என்கிறார்.—ஆசி.] நீங்களும் கூட ஜெபிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? 226 அன்புள்ள தேவனே, நான் அவள் மீது கரங்களை வைக்கையில், நான் அவளுக்காக ஜெபிக்கிறேன். இப்பொழுது, இது உம்முடைய கட்டளை, அதைத்தான் செய்யும்படி நீர் கூறினீர், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” கர்த்தாவே, நீர் அதைக் கூறினீர். ஆமென். இப்பொழுது, அவர் அதைக் கூறினார், அவர் கூறவில்லையா? சகோதரியே, அந்தவிதமாகத்தான் இருக்க வேண்டும். அன்புள்ள தேவனே, நீர் எங்களுடைய சகோதரியை சுகப்படுத்தவும் அவளை குணப்படுத்தவும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

90சகோதரியே, நீங்கள் விசுவாசத்தோடு வந்திருக்கிறீர்களா? 227 அன்புள்ள பரலோகப் பிதாவே, நீர் செய்யும்படி கூறினதற்கு அப்படியே கீழ்ப்படிந்து, எங்களுடைய சகோதரியின் பேரில் உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்ப நான் வேண்டிக்கொள்கிறேன். நீர், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். அவர்கள் தங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைப்பார்களேயானால்,” என்று கூறினீர். நீர், “அவர்கள் சுகமடைவார்கள்” என்று கூறினீர். 228 இதைக் கூறுவதற்கு, நான் இங்கே ஒரு நிமிடம் இங்கே நிறுத்துவேனாக, ஜனங்கள் சற்று நேரம், சற்று நேரம் இளைப்பாறட்டும். ஒருமுறை ஒரு விமர்சகர் என்னிடம், அது அவ்வண்ணமாக இல்லை என்று கூறினார். ஆனால், நீங்கள் பாருங்கள், அவர், “இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்றார். 229 இயேசுவை வழக்கு விசாரணைக்குட்படுத்தும் வழக்கு விசாரணை என்பதன் பேரிலான என்னுடைய செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பாருங்கள், அவர் நோவாவிடம், “மழை பெய்யப்போவதாயிருந்தது” என்று கூறினார். நூற்று இருபது ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை, ஆனால் எப்படியோ மழை பெய்தது. அவர் ஆபிரகாமிடம் சாராளின் மூலம் அவன் ஒரு குமாரனைப் பெற்றுக்கொள்வான் என்று கூறினார். அது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது. எப்பொழுது என்று அவர் கூறவேயில்லை. அவர்கள் ஒரு குமாரனைப் பெற்றுக் கொள்வார்கள் என்று அவர் கூறினார். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அது சம்பவித்தது. பாருங்கள், எப்பொழுது என்று அவர் கூறவில்லை. 230 அவர், “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். தேவன் அவர்களை எழுப்புவார். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். அதைத்தான் அவர் கூறினாரா? அப்பொழுது அவர்கள் குதித்தெழுந்து அதைச் செய்வார்கள் என்று அவர் கூறவில்லை. அவர், “அவர்கள் சுகமடைவார்கள்” என்றார். பாருங்கள், அது அவருடைய வாக்குத்தத்தம். அதைத்தான் நாங்கள் விசுவாசிக்கிறோம்.

91வாருங்கள், சகோதரியே. அது உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம், நான் விசுவாசிக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] அப்படியானால் நீங்கள் சுகமாக்கப்படுவதிலிருந்து தடுக்க வழியேக் கிடையாது. நான் என்னுடைய கரங்களை சகோதரியின் மீது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலுக்காக வைக்கிறேன். ஆமென். சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம்” என்கிறார்.—ஆசி.] எல்லா பாவங்களும் அறிக்கை செய்யப்பட்டு, ஆயத்தமாயிருக்குமா? அன்புள்ள தேவனே, உம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, நான் என்னுடைய கரங்களை சகோதரியின் மேல் வைக்கிறேன், அவளுடைய சுகமளித்தலுக்காக இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 231 ஜெபிக்கப்படுகிற உங்களுக்காக நான் விரும்புவது, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த கூட்டங்கள் முடிவடைவதற்கு முன்பு, என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் அறிவிக்க விரும்புகிறேன்; கூட்டத்தாரும், மற்ற ஜனங்களும் உண்மையாகவே என்ன சம்பவிக்கிறது என்பதை காணும்படி செய்ய வேண்டும். நாளை, அடுத்த நாள் அல்லது எப்பொழுது, என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் கவனித்துப் பார்க்கலாம். 232 அவர்கள் தங்களுடைய சொந்த விசுவாசத்தை சோதித்துப் பார்க்க அனுமதிக்காமல், அது—இது மிகவும் வித்தியாசமானது என்பதை என்னுடைய அஞ்சல் காண்பித்துள்ளது. ஏனென்றால் இயேசு, “அவர்கள் மேல் கைகளை வைக்கிறார்கள். அவர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். இப்பொழுது அவர் என்ன கூறினார் என்று பாருங்கள். அவர்கள் தரையில் மேலும் கீழுமாக ஓடுவார்கள் என்று அவர் கூறவில்லை. அவர்களால் அதைச் செய்யக் கூடும். ஆனால் அவரோ, “அவர்கள் சுகமடைவார்கள்” என்றார். அதைத்தான் அவர் கூறினாரா? அதைத்தான் அவர் கூறினார். அதைத்தான் நான் விசுவாசிக்கிறேன். அவர் இப்பொழுது இங்கிருக்கிறார், வார்த்தையைக் கூறின அந்த ஒருவர் அதை அவ்வண்ணமாகச் செய்ய இங்கிருக்கிறார்.

92ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரன், “ஆமென்” என்கிறார்.—ஆசி.] அன்புள்ள பரலோகப் பிதாவே, அவருடைய விசுவாச அறிக்கையின் பேரிலும், விசுவாசிக்கிறதின் பேரிலும், அவருடைய சுகமளித்தலுக்காக நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் கரங்களை அவர் மீது வைக்கிறேன். அன்புள்ள தேவனே, நான் என்னுடைய கரங்களை இந்த ஸ்திரீயின் மீது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலுக்காக வைக்கிறேன். சரி. அன்புள்ள பிதாவே, நான் என்னுடைய கரங்களை இந்த ஸ்திரீயின் மீது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலுக்காக வைக்கிறேன். நீர், “அவள் சுகமடைவாள்” என்றீர். சகோதரியே, சுகமளித்தலுக்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? அன்புள்ள தேவனே, நீர் அவளை சுகப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் என்னுடைய கரங்களை அவள் மீது வைக்கிறேன். சரி, சகோதரியே, அன்பே, சுகமளித்தலுக்காக யாவும் ஆயத்தமாயிருக்கிறதா? இப்பொழுது உங்களுடைய விசுவாசம் சந்திக்கப்பட்டுவிட்டது, நீங்கள் சுகமடையப் போகிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 233 மேலும், தேவனே, “உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும்” என்ற உம்முடைய கட்டளைக்கு கீழ்ப்படிவதில், நான் என்னுடைய கரங்களை அவள் மீது வைக்கிறேன். அவளுடைய சுகமளித்தலுக்காக நான் இயேசுவின் நாமத்தில் அவள் மீது கரங்களை வைக்கிறேன்.

93அன்புள்ள தேவனே, நான் என்னுடைய கரங்களை என் சகோதரன் மீது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவருடைய சுகமளித்தலுக்காக வைக்கிறேன். அன்புள்ள தேவனே, நான் என்னுடைய கரங்களை என் சகோதரியின் மீது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவளுடைய சுகமளித்தலுக்காக வைக்கிறேன். [ஒலி நாடாவில் காலியிடம்—ஆசி.] …உட்பாதை கீழே செல்கிறது. நான் உங்களை சோர்வடையச் செய்ய விரும்பவில்லை. நீங்கள் அதை இப்பொழுது விசுவாசித்தால், நீங்கள் சரியாகிவிடுவீர்கள். அன்புள்ள தேவனே, நீர் என் சகோதரியை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …இந்த ஜனங்களுக்காக ஜெபிக்க எனக்கு உதவி செய்யும்.

94234 இப்பொழுது நாம் இங்கே ஜெபிக்கப்படுவதற்காக, சில கைகுட்டைகள், போன்றவற்றை, இங்கே வைத்துள்ளோம். இப்பொழுது, இப்பொழுது, இந்த சிறு பொட்டலங்களுக்கு, இப்பொழுது நீங்கள் என்னோடு தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஜனங்கள் இதைப் போன்ற ஒரு சிறு காரியத்திற்காக ஜெபிப்பது மிகவும் விசித்திரமாக தொனிக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் உங்களால் ஒருமுறை, என்னுடைய அலுவலகத்திற்கு வந்து, அப்படியே கவனியுங்கள். இத்தனை வருடங்களாக நாம் சாட்சிகளை வைத்திருந்தால், இந்த மேடையில் நீங்கள் குவித்து வைத்தாலும் இடம் போதாது என்று நான் நினைக்கிறேன், இது போன்ற இந்த ஜெப துணிகளை உலகத்தைச் சுற்றி சுற்றி அனுப்புவதன் மூலம் அவர்களில் லட்சக்கணக்கானவர்கள், சுகமடைந்துள்ளனர். இப்பொழுது, அது—அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதற்காக அந்த கைக்குட்டையை யாராவது அங்கு கொண்டு வாருங்கள்—அந்த இளம்… சகோதரனே, நீங்கள் உங்களுடைய கைக்குட்டையை வைத்திருப்பதை அறிவீர்கள். சகோதரனே, நீங்கள் அறிவீர்கள் அல்லவா? சரி. 235 சிறிய, முடமான பிள்ளைகள் சுகமாக்கப்பட்டதை நான் கண்டிருக்கிறேன். நீங்கள் பாருங்கள், அது என்னவென்பதை, ஓரல் ராபர்ட்ஸ் வழக்கமாக கூறுவது போல, இது ஒரு தொடர்பாகும். அது ஒரு தொடர்பாக மாத்திரமே உள்ளது. நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுது, நாம் இதை நாமாகவே செய்யவில்லை, நாம் இதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் இதைச் செய்யும்படி வேதம் நமக்கு கட்டளையிடுகிறது. அது உண்மை என்பதை நாம் யாவரும் அறிவோம். 236 இப்பொழுது, அநேக ஜனங்கள் கைக்குட்டைகள், போன்றவற்றை அபிஷேகம் செய்கின்றனர். சரி, இப்பொழுது, அது பரவாயில்லை என்று நாம் கருதுகிறோம், நிச்சயமாக, ஆனால் நாம் அப்படியே…அவர்கள் கைக்குட்டைகளை “அபிஷேகித்தனர்” என்று வேதம் கூறவில்லை. 237 “ஆனால் அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களை எடுத்துவிட்டனர்.” இப்பொழுது நான் எதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தேன் என்று புரிகிறதா? இப்பொழுது, அவர்கள் என்ன கண்டனர் என்றால், பவுலுக்குள் இருந்த அந்த உயிர்ப்பிக்கும் வல்லமை, அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். தேவன் அவனுக்குள் இருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவன் தொட்ட ஒவ்வொரு காரியமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எத்தனை பேர் அதைப் புரிந்து கொள்கிறீர்கள்? “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]

95238 உங்களுக்குத் தெரியும், பவுல் செய்த காரியங்கள் முற்றிலும் வேதப்பிரகாரமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அப்படி நினைக்கவில்லையா? அதைச் செய்ய அவன் எங்கிருந்து யோசனையைப் பெற்றான் என்று நான் கருதுகிறேன் என்று நான் உங்களுக்கு கூற விரும்புகிறீர்களா? [யாரோ ஒருவர், “எலிசாவிலிருந்து” என்கிறார்.—ஆசி.] எலிசாவிலிருந்து என்பது உண்மை. பாருங்கள், எலியா, “இந்தக் கோலை எடுத்து, போய் இதைக் குழந்தையின் மேல் வை” என்றான். தீர்க்கதரிசி தொட்ட ஒவ்வொரு காரியமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்பதை அவன் அறிந்திருந்தபடியால், அவன் கோலை அனுப்பினான். அவன் தன்னுடைய நிலையை அறிந்திருந்தான். அவர்…அவனால் அந்த ஸ்திரீயையும் அதேக் காரியத்தை விசுவாசிக்கச் செய்ய முடிந்தால் நலமாயிருக்கும். இப்பொழுது பாருங்கள், இப்பொழுது, வேதம், “வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க வேண்டும்” என்று கூட ஒருபோதும் கூறவில்லை. அது, “அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்” என்று உரைத்துள்ளது.

96239 இப்பொழுது சற்று சிந்தித்துப் பாருங்கள், ஜனங்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவில், தேவனுடைய பிரசன்னம் இந்த மனிதனில் வெளிப்பட்டதைக் கண்டனர், அவர்கள்—அவர்கள் ஜனங்களை அவனுடைய நிழலில் கிடத்தினார்கள், அவர்கள் சுகமடைந்தனர். அது வேதப்பிரகாரமானது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அது யோவான் 3:16-ல் உள்ளதைப் போன்றே வேதவாக்கியமாய் உள்ளது. பாருங்கள், அவை யாவும் தேவனுடைய வார்த்தையாயிருக்கின்றன. இப்பொழுது, ஜனங்களே, அந்த மனிதனின் நிழல் ஜனங்களை சுகப்படுத்தவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். 240 ஆனால், பாருங்கள், தேவனுடைய வல்லமை அந்த தீர்க்கதரிசியின் மேல் இருந்ததென்றால், அவன் மரித்து அநேக வருடங்களான பிறகும், ஒரு மரித்த மனிதன் அவனுடைய சரீரத்தின் மேல், அவனுடைய எலும்புகளின் மேல் தூக்கியெறியப்பட்டான். அந்த சரீரம் கூட அங்கே இல்லை; அங்கே எலும்புகள் இருந்தன. தேவனுடைய பிரசன்னம் அந்த மரித்த மனிதன் உயிரோடு வருமளவிற்கு அந்த எலும்புகளின் மேல் இருந்தது.

97241 இப்பொழுது இந்தக் காரியங்களையெல்லாம் செய்த அதே தேவன் இன்றிரவு இங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் அறியவில்லையா? உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான ஜனங்களாக நாம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். 242 அது நானாகவே செய்கிறேன் என்று விசுவாசிக்கும்படியான என்னுடைய கூட்டத்தாரை நான் கவர்ந்திழுக்கவில்லை என்று நான்—நான் நம்புகிறேன். நீங்கள்—நீங்கள் அதைவிட நன்றாக அறிவீர்கள். நான், நான் உங்களுடைய சகோதரன், பாருங்கள், நான் உங்களுடைய சகோதரன். 243 ஆனால் தேவன் இங்கிருக்கிறார் என்பதை நான் அறிவேன், நான் இதை அறிவேன். அவர் நமக்கு ஏதோ ஒரு காரியத்தை அளித்திருக்கிறார் என்பதை நான் அறிவேன், நாம் அதை விளக்க முடியாது, தேவனுடைய வார்த்தையின் மூலம் மாத்திரமே அது இங்கே இந்த நேரத்தில் இருக்க வேண்டும் என்று உரிமை கோருகிறோம். எனவே, நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள இது நமக்கு அடையாளத்தையும் கூட அளிக்கிறது. இந்த மக்கள், இந்த தெரிந்து கொள்ளப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட, அழைக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்டவர்கள் என்பதை அறிய இது நமக்கு அடையாளத்தை அளிக்கிறது… 244 இப்பொழுது, அது ஒரு பெரிய வார்த்தை, முன்குறித்தல், ஆனால் அது சத்தியம் என்பதை நாம் யாவரும் அறிவோம். எல்லையற்ற தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னரே எல்லாக் காரியங்களையும் முன்னறிவினால் முன்குறித்தார் என்பதை நாம் முற்றிலுமாக அறிவோம், ஆட்டுக்குட்டியானவரும் கூட அடிக்கப்பட்டார்; புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெயரும், புஸ்தகம் எழுதப்படுவதற்கு முன்னரே எழுதப்பட்டது. இப்பொழுது அது உண்மையென்று எத்தனை பேர் அறிவீர்கள்? 245 அந்த புத்தகத்தில் உள்ளவர்களை மீட்க இயேசு வந்தார். வேதத்தில், ஆட்டுக்குட்டியானவர் திரைக்குப் பின்னால் இருந்து வந்து, புஸ்தகத்தை எடுத்து, அதில் முத்திரையிடப்பட்டிருந்த முத்திரைகளைத் திறந்தார், ஏனென்றால் அவர் மீட்டுக்கொண்ட எல்லாவற்றையும் உரிமை கோர வந்தார். அவர் இப்பொழுது பரிந்து பேசுகிறவர், அவர் மீட்டுள்ளவர்களுக்காக பரிந்து பேசுகிறவர். ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டிருக்கிற யாவரும் மீட்கப்பட்டனர்.

98246 அன்றொரு இரவு நான் ஒரு கரடுமுரடான சிறு அறிக்கையை அளித்தேன்…நான் இங்கே இந்த எல்லா கைக்குட்டைகளுக்காகவும்…காத்துக் கொண்டிருக்கிறேன். நான் மீண்டும் பிரசங்கிக்க முயற்சிக்கவில்லை, ஆனால் நான் ஒரு சிறு அறிக்கை இருந்ததாகக் கூறினேன்…இது புனிதமானதாகத் தெரியவில்லை என்று நான் நம்புகிறேன், பாருங்கள். ஆனால் கோழியை அடைக்காக்க வைத்த விவசாயியைப் போன்றே, போதிய முட்டைகள் இல்லாமலிருந்தபடியால், அவன் ஒரு கழுகு முட்டையை வைத்து, அவன் அதை கோழியின் கீழே வைத்தபோது, அது ஒரு கழுகைப் பொரித்தது. அது எல்லா கோழிக் குஞ்சுகளுக்கு மத்தியிலும் மிகவும் வினோதமான ஒன்றாயிருந்தது, ஏனென்றால் அவைகள் காரியங்களை ஒரே விதமாகக் காணவில்லை. ஆனால் அது கண்டதெல்லாம் கோழியை மாத்திரமேயாகும். அது ஒரே ஒரு சத்தத்தை மாத்திரமே கேட்டது. அதற்கு அது அதனுடைய சத்தத்தைப் போன்று தென்படவில்லை. அதனால் கோழியைப் போலவோ அல்லது கோழிக்குஞ்சுகளைப் போலவோ சத்தமிட முடியவில்லை. அவைகள் கொட்டகையிலிருந்து புசித்தபோது, அதற்கு அவைகளுடைய உணவு முறையை பிடிக்கவில்லை. அதனைக் குறித்து ஏதோ வித்தியாசம் இருந்தது, அதே சமயத்தில் அது வித்தியாசம் என்னவென்பதை அறிந்திருக்கவில்லை. 247 அதன்பின்னர் ஒரு நாள், அந்த தாய்க் கழுகு தான் அநேக முட்டைகளை இட்டிருந்ததை அறிந்திருந்தது. அதனுடைய குஞ்சாக இருக்க வேண்டிய, முட்டைகளில் ஒன்று, காணவில்லை. எனவே அது அதனை தேடிச் சென்றது, அது அந்தக் குஞ்சை களஞ்சியத்தில் கண்டது. அது கூச்சலிட்டது. அது கூச்சலிட்டபோது, அந்தக் கழுகு தாயின் சத்தத்தை அறிந்திருந்தது. இயேசு, “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது” என்று கூறினார்.

99248 நேற்றிரவு நான் நினைக்கிறேன், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், மற்றும் இன்னும் என்னவெல்லாமோ, அவர்கள் ஒரு கோழியின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கலாம். சகோதரனே, என்னை மன்னிக்கவும், பாருங்கள். ஆனால் அவளுடைய அருமையான பிள்ளைகள் அங்கே எங்கோ இருந்ததை தாய் அறிந்திருந்தாள். எனவே அந்த மனிதர்கள் அங்கே நின்று கொண்டு, தாய்க் கோழியினிடத்திலிருந்து பெற்ற தீவனத்தைக் குறித்து வாக்குவாதம் செய்யவில்லை, ஆனால் இப்பொழுது அவைகள் கழுகுகளாக இருக்கின்றன, நீங்கள் பாருங்கள், அவைகள் தங்களுடைய உணவுக்காக பறக்கின்றன. பார்த்தீர்களா? 249 அண்மையில் நான் டூசானிலிருந்து வந்தபோது, இல்லை பீனிக்ஸிலிருந்து, டூசானுக்குச் சென்றபோதே நான் கண்ட ஒரு காட்சியைப் போன்றே, இந்த சபை உள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு விளங்காத காட்சியைக் கண்டேன். என்ன சம்பவித்திருந்தது என்பதை காணும்போது, அது என் இதயத்தை உடைத்தது, எப்படி…ஒரு பருந்து, வழக்கமாக ஆகாயத்தில் பறந்து செல்லும், கழுகுக்கு ஒரு சகோதரன், அது சபைக்கு ஒரு மாதிரியாயுள்ளது. யேகோவா கழுகாயிருக்கிறார். அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை “கழுகுகள்” என்று அழைத்தார். அவர் தம்மை, யேகோவா, “கழுகு” என்று அழைத்தார்.

100250 ஆனால் இந்தப் பருந்து நீண்ட காலமாகவே அதனுடைய அடையாளத்தை இழந்துவிட்டது, ஏனென்றால் அது இனிமேல் ஆகாயத்தினூடாக பயணம் செய்து அதனுடைய இறைச்சியை அது வேட்டையாடுவது போல வேட்டையாடுவதில்லை. ஆனால் அது தொலைபேசிக் கம்பிகளில் அமர்ந்து ஒரு தோட்டியைப் போல் செயல்படுகிறது. அது—அது கார்கள் கொன்றுவிட்ட செத்த முயல்களை வேட்டையாடுகிறது. அதுவும், ராஜாளிகளும் ஒன்று சேர்ந்து சாப்பிடுகின்றன. அது நடக்க வேண்டியதைப் போல நடப்பதற்குப் பதிலாக, அது ஒரு ராஜாளியைப் போல துள்ளுகிறது. அது தன்னுடைய அடையாளத்தை இழந்துவிட்டது. 251 நான் இதை முழு தேவ பக்தியுடனும், மரியாதையுடனும் கூறுகிறேன், சபையானது ஒரு சகோதரி கழுகு என்ற அடையாளத்தை நீண்ட காலமாக இழந்துவிட்டது. அவள் சுற்றி அமர்ந்திருக்கிறாள். வார்த்தையை ஆராய்ந்து பார்த்து, இந்தக் காரியங்கள் சரியாயிருக்கின்றனவா என்று கண்டறிவதற்குப் பதிலாக, எங்கோ அறிவாற்றல் கொண்ட ஒரு கூட்டத்தால் உருவாக்கப்பட்ட ஞாயிறு பள்ளி இலக்கியக் கூட்டத்திற்காக அவள் காத்திருக்கிறாள், வேறெங்கோ கொல்லப்பட்டுள்ள ஏதோ ஒரு மரித்த முயல். ஒரு ராஜாளியை போன்ற துள்ளல்! அதிலிருந்து பறந்து செல்ல தேவனே எங்களுக்கு உதவி செய்யும். இந்த வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. யாரோ ஒருவர் அதைக் குறித்து என்ன கூறினார் என்பதல்ல, ஆனால் தேவன் அவர்களைக் குறித்து என்ன கூறினார் என்பதே! அவைகள் உண்மையாயிருக்கின்றன. கழுகுகளோடு இணைந்திருப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வியாதியஸ்தருக்காக நாம் ஒன்று சேர்ந்து ஜெபிப்போமாக.

101252 அன்புள்ள பரலோகப் பிதாவே, அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து, உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டு வந்து ஜனங்கள் மேல் போட, பிசாசுகள் அவர்களை விட்டுப் புறப்பட்டன என்றும். அசுத்த ஆவிகள் அவர்களை விட்டு நீங்கின என்றும் வேதத்தில் கற்பிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது, பிதாவே, நான் இங்கே இந்த உறுமால்களின் பேரில் நின்று கொண்டிருப்பது, இங்குள்ள ஒவ்வொரு நபரையும் சுட்டிக்காட்டுகிறது. அது நாங்கள் ஒன்று சேர்ந்த, கிறிஸ்துவின் சரீரமாயுள்ளது. நாங்கள் அவருடைய மணவாட்டியை பிரதிநிதித்துவப்படுத்த இங்கிருக்கிறோம் என்று, கிருபையினாலும் அன்பினாலும், நாங்கள் உரிமை கோரிக்கொண்டு, விசுவாசித்து, அவருடைய இராஜ்ஜியத்தில் அவரோடு தொடர்புகொள்ளுகிறோம். நாங்கள் பரிசுத்த பவுல் அல்ல என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் நீர் இன்னமும் இயேசுவாயிருக்கிறீர் என்பதை நாங்கள் அறிவோம். 253 நீர் இந்த ஜனங்களின் விசுவாசத்தை கனப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் பவுலின் நாட்களில் வாழ்ந்திருந்தால், அவர்கள் இதே சுவிசேஷத்தைக் கேட்டிருப்பார்கள், இதே காரியங்களைக் கண்டிருப்பார்கள். ஆகையால், அவர்களும் ஒரே விதமான ஜனங்கள்தான். நீர் அதே தேவனாயிருக்கிறீர். எனவே அன்புள்ள தேவனே, வேதாகம நாட்களில் இருந்தவர்களுக்கு நீர் செய்ததுபோல, அவர்களுடைய விசுவாசத்தை நீர் கனப்படுத்த வேண்டும் என்று, நான் ஜெபிக்கிறேன். ஒவ்வொரு பிசாசின் வல்லமையும், ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு துன்பமும், இங்குள்ள இந்த கைக்குட்டைகளும், பொட்டலங்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனங்களைக் கட்டியுள்ள அந்த பொல்லாத வியாதி அவர்களை விட்டு நீங்குவதாக.

102254 இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கடமையின் பாதையில் நடந்து கொண்டிருந்ததாக ஒரு சமயம் கூறப்பட்டது. கடமையின் பாதையில் சரியாக, சத்துரு வந்து ஒரு மூலையில் அவர்களை ஒதுக்கி விட்டான், சிவந்த சமுத்திரம் அவர்களை கடமையின் பாதையிலிருந்தும், அவர்களுடைய அணிவகுப்பிலிருந்தும் துண்டித்தது. தேவன் வானத்திலிருந்து அக்கினி ஸ்தம்பத்தினூடாக நோக்கிப் பார்த்தபோது, சமுத்திரமோ பயமடைந்தது. அது அதனுடைய அலைகளை பின்னுக்குத் தள்ளின, ஏனென்றால் தேவனுடைய அலைகள் சமுத்திரத்தின் அடியில் இருந்தன. அது அவருடைய பிள்ளைகளுக்கு வழியை உண்டுபண்ணி, கீழ்ப்படிதலின் வரிசையில் நடத்தி சென்றது. 255 இப்பொழுது, தேவனே, சிவந்த சமுத்திரமானது பயந்து, அதனுடைய அலைகளை பின்னோக்கி சுருட்டி, அதனுடைய தண்ணீரை பின்னோக்கி சுருட்டி, கீழ்ப்படிதலோடு அணிவகுத்துச் செல்லும் பிரயாணப் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தது; அன்புள்ள தேவனே, இன்றிரவு வாக்குத்தத்தம் செய்த உம்முடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தினூடாக நோக்கிப் பாரும். இந்த கைக்குட்டைகள் சுகவீனமான ஜனங்களின் சரீரங்களின் மேல் வைக்கப்படும்போது, தேவனுடைய கண்கள் நோக்கிப் பார்ப்பதாக, அந்த சுகவீனம், அந்த பிசாசு, பயமடைந்து, விலகிச் செல்வதாக. ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கான பயணத்தை நல்ல ஆரோக்கியத்தோடும், பெலத்தோடும் தொடருவார்களாக. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தினூடாக அணிவகுத்துச் செல்லும்போது, மறுமுனையில், அவர்கள் மத்தியில் பலவீனமான ஒரு நபரும் இருக்கவில்லை. பிதாவே, நாங்கள் இந்த உறுமால்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்புகிறபடியால், அது இந்த ஜனங்களுக்கு அருளப்படுவதாக. ஆமென்.

103256 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் இப்பொழுது உங்களுடைய கைக்குட்டைகளைப் பெற்றுக் கொள்ளும்போது, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவன் இதைக் கேட்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பார்த்தீர்களா? நான்—நான் இதைக் கூற விரும்புகிறேன். சற்றும், சந்தேகப்பட வேண்டாம். பாருங்கள், அது உண்மையாகவே விசித்திரமாகத் தோன்றலாம். ஒரு நிமிடம், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கூட, சந்தேகப்படாதீர்கள். ஆனால் நாம் கேட்டுள்ளதை தேவன் அளிக்கிறார் என்பதை இப்பொழுது விசுவாசியுங்கள். 257 இங்குள்ள தேவன், உங்களுடைய இருதயத்தின் இரகசியத்தை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது தேவன் என்று நீங்கள் அறிந்து விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது உங்களுடைய சிந்தையில் இப்பொழுது தீர்த்துக்கொள்ளுங்கள், அது வேறெந்த காரியமாயும் இருக்க முடியாது. பார்த்தீர்களா? 258 இப்பொழுது, ஒரு மகத்தான நாளை இருக்குமானால் என்னவாகும், அநேக ஆண்டுகளுக்கு முன்பு இது சரித்திரமாக இருக்கும். ஜனங்கள், வரப்போகும் ஆண்டுகளில், அது அப்படிப்பட்டதாக இருக்குமானால், அவர்கள் வந்து, “பாருங்கள், நான் அப்பொழுது உயிரோடிருந்திருந்தால், அது நிறைவேறியிருப்பதை நான் கண்டிருப்பேன், அவ்வளவுதான் நான் அறிந்திருக்க வேண்டியதாய் இருந்திருக்கும். அப்பொழுதே நான் அதை விசுவாசித்திருப்பேன்!” என்று கூறுவார்கள். பாருங்கள், நீங்கள் விசுவாசிக்கிற அதேக் காரியத்தை, அப்பொழுது அவர் அதைச் செய்தபோது, நீங்கள் அங்கே இருந்திருந்தால் நலமாயிருக்குமே! அது இன்னமும் அவரே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்குள் இருக்கும் அவருடைய ஜீவனாயிருக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 