ஏற்ற காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம்

65-0718E

வசவசகக மததரம சயயஙகள, வசவசகக மததரம சயயஙகள, எலலக கரயஙகளம கககடம,மததரம எபபட, இபபழத அத இநத வதமக: இபபழத நன வசவசககறன, இபபழத நன வசவசககறன, எலலம கககடம, இபபழத நன வசவசககறன; இபபழத நன வசவசககறன, இபபழத நன வசவசககறன, எலலக கரயஙகளம கககடம, இபபழத நன வசவசககறன. நம இபபழத நமமடய தலகள வணஙகயரபபதட, தடரநத நனற கணடரபபமக. கரததவ, இத

ஏற்ற காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம்

65-0718Eமாலைஜெபர்ஸன்வில் இந்தி891965-07-18

ஏற்ற காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம்

65-0718Eமாலைஜெபர்ஸன்வில் இந்தி891965-07-18

1 விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், எல்லாக் காரியங்களும் கைக்கூடும்,…மாத்திரமே எப்படி, இப்பொழுது அதை இந்த விதமாக: இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், எல்லாம் கைக்கூடும், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்; இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், எல்லாக் காரியங்களும் கைக்கூடும், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்கியிருப்பதோடு, தொடர்ந்து நின்று கொண்டிருப்போமாக. கர்த்தாவே, இது ஒரு பாடலாக மாத்திரமல்லாமல், “இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்!” என்று மெய்யாகவே எங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து பாடுவதாக இருப்பதாக. சீஷர்கள் ஒரு முறை, இயேசு அநேக மகத்தான காரியங்கள் செய்த பிறகு, அவர்கள், “கர்த்தாவே, இப்போது நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள். இயேசு, “நீங்கள் இப்பொழுது என்னை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டார். 2 அவர்கள், “நீர் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறீர் என்றும் ஒருவனும் உமக்கு போதிக்க வேண்டுவதில்லை என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றனர். ஆகவே பிதாவே, எங்களுடைய போதனை உமக்குத் தேவையில்லை என்று இந்த இரவு நாங்கள் உணருகிறோம், ஆனால் உம்முடைய போதனை எங்களுக்கு அவசியமாக இருக்கின்றது. ஆகவே நாங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் என்றும், எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும், எப்படி விசுவாசிக்க வேண்டும் என்றும் நீர் எங்களுக்கு போதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த இரவு ஆராதனை மூலமாக, அதைத் தந்தருளும். கர்த்தாவே, எங்களிடத்தில் ஏதாவது குறையிருக்குமானால், அதை எங்களுக்கு தந்தருளும், கர்த்தாவே. நாங்கள் இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென்.

23 உங்களில் அநேகர் இன்றிரவும் மீண்டும் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என்று நான் அறிவேன். மேலும், வெளியே, அவர்களால் உள்ளே வரமுடியவில்லை என்று கூறின குழுக்களை நான் சந்தித்தேன், ஆகவே அவர்கள் வெவ்வேறு கார்களில் தங்களுடைய வானொலி மூலம் செய்தியை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறினார்கள். இப்பொழுது இன்றிரவு நம்மால் முடிந்தளவு முடிக்க முயற்சிப்போம், ஞாயிறு இரவு, நாம் சுகவீனமாக இருப்பவர்களுக்காக ஜெபிக்க ஏற்பாடு செய்வோம், இங்கு நாம் ஒரு ஜெப வரிசையை ஒழுங்கு செய்யலாம். ஆனால் இன்றிரவு இந்த ஆராதனையை நோயாளிகளுக்காக ஜெபிப்பதற்காக பிரதிஷ்டை செய்கிறோம். 4 நீங்கள் தேவனுடைய பரிசுத்தமான வாக்கியங்களில், விசுவாசத்தில் இந்த மணி நேரத்தின் விசுவாசத்தில்…இப்பொழுது கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விசுவாசம்! எந்தக் காலத்திலும் இருந்திராத அளவு, அதிகமான விசுவாசம் தேவைப்படப்போகிறது ஏனெனில் அது எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய, விசுவாசமாக இருக்கிறது. ஆகையால் இன்றிரவு நீங்கள் கண்டிருக்கிற, கேட்டிருக்கிற எல்லாவற்றிலும், நீங்கள் கேட்டிருக்கிற பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையிலும், நீங்கள் காணத்தக்கதாக நிறைவேறின அடையாளங்கள், அற்புதங்கள் எல்லாவற்றிலும் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இவைகள் எல்லாவற்றையும் உங்கள் இருதயத்தில் சேர்த்து வைத்து இவைகள் எல்லாம் தேவனால் உண்டானவையோ, அல்லவோ என்று நீங்கள் நிதானித்துப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 5 பண்டைய எலிசா, “தேவன் தெய்வமானால் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்” என்று சொன்னதுபோல, கிறிஸ்தவனுக்கு இயேசு எல்லாவற்றிற்கும் மையமாக இருப்பாரானால், அப்பொழுது நாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரையே பற்றிக்கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன். நினைவிருக்கட்டும், அவரே மையமாக இருக்கிறார், அவரே வடதுருவ நட்சத்திரமாக இருக்கிறார், அவரே முடிவாக இருக்கிறார், அவரே முற்றிலுமானவராக இருக்கிறார், அவர் வடதுருவ நட்சத்திரமாக இருப்பாரானால்… ஒரே ஒரு காரியம் மாத்திரமே வடதுருவ நட்சத்திரத்தை சுட்டிக் காட்டும், அதுதான் நீங்கள் கப்பலில் பயணம் செய்யும்போது உங்களோடு கொண்டு செல்லும் திசைக்காட்டும் கருவி. கப்பலில் செல்லும்போது உங்களோடு நீங்கள் கொண்டு செல்ல வேண்டும் என நான் விரும்பும் திசைக்காட்டும் கருவி வார்த்தையே, மற்றும் வார்த்தை எப்போதும் அவரையே சுட்டிக்காட்டுகிறது.

36 நாம் ஒரு பெரிய இக்கட்டான நேரத்தினூடாகவும் மற்றும் சோதனைகளினூடாகவும் சென்று கொண்டிருக்கிறோம் என்பது போன்று நாம் உணருகிறோம். காலத்தின் குழப்பம் மற்றும் நாடுகளுக்கிடையேயான துன்பங்கள், மற்றும் எல்லா வகையான விஷயங்களும் நடக்கின்றன, சில சமயங்களில் நான் எங்கு பார்த்தாலும், கடலில் ஒரு கப்பல் இருப்பது போலவே ஒரு…என்னை மூழ்கடிப்பதுபோல் செய்துவிடுகிறது. மேலும் எனக்கு படகு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எப்படி கடந்து செல்லப்போகிறோம்? இதோ என் கப்பலைவிட நூறு மடங்கு பெரிய வெள்ளை அலை ஒன்று வருகிறது. ஆனால் நாம் அவைகள், ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்வோம். “நாம் அவர் மூலமாய் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாக இருக்கிறோம்.” தளபதி, தலைமை தளபதி, கப்பலின் முனையில் உள்ள கயிற்றை பிடித்துள்ளார், அவர் அதை உள்ளே இழுப்பார். அவைகள் ஒவ்வொன்றையும் தாண்டிவிடுவோம்.

47 இப்பொழுது, இன்றிரவு, துரிதமாக முடித்து சீக்கிரமாகவே உங்களை அனுப்பிவிடுகிறோம்… வெகு தூரத்திலிருந்து நீங்கள் காரோட்டி வந்திருப்பதையும், எவ்விதமாக, எவ்வளவு தியாகம் செய்து நீங்கள் கார் ஓட்டி வந்திருக்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து உங்களை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும், பாருங்கள், அது என்னை நான் எங்கு நின்று பேச வேண்டுமோ என்னால் இயன்ற உதவி செய்ய முடியுமோ அதை செய்ய வைக்கிறது. ஆனால் நான் இங்கு இருக்கும்போது நாமிருக்கும் அந்த நேரத்திற்குரிய உதவியை என்னால் இயன்ற அளவு செய்ய மிகவும் பிரயாசப்படுகிறேன். அப்பொழுது நீங்கள்…நீங்கள் மக்களுக்கு ஒரே சமயத்தில் அதிகமாகப் பிரசங்கித்தால் அவர்களால் அதை நினைவில் வைத்திருக்க முடியாது. நீங்கள்—நீங்கள் ஒரு காரியத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு அதை அந்த நபர் காணும் மட்டுமாக அதைக் கூறிக்கொண்டிருங்கள். அப்பொழுது அதை அவர்கள் தங்கள் இருதயங்களில் பதிய வைத்துக்கொள்ளும்போது, அப்பொழுது அவர்கள்…அப்பொழுது அவர்களுக்கு வேறு காரியத்தையும் போதியுங்கள். நாம் போவதுபோல படிப்படியாக செல்ல வேண்டும். 8 இப்பொழுது, நீங்கள் ஜெபித்து நன்கு தைரியமாக இருங்கள், இன்றிரவு இப்பொழுது சுகமளித்தலுக்காக விசுவாசியுங்கள். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற காலத்தைக் குறித்து உங்கள் உள்ளத்தில் ஏதாவது சந்தேகம் இருக்கும் என நான் நினைக்கவில்லை. தேவன் தம்முடைய ஜனத்தின் மத்தியில் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைக் குறித்து உங்கள் உள்ளத்தில் ஏதாவது சந்தேகம் இருக்கும் என நான் நம்பவில்லை. அவை எல்லாவற்றையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் நான்…அதைக் குறித்து என் உள்ளத்தில் ஒரு சந்தேகமும் இல்லை. என்னுடைய ஜனங்கள் என்னுடைய நண்பர்கள், கிறிஸ்துவின் நண்பர்கள், கிறிஸ்துவின் பிள்ளைகள், அதை விசுவாசிக்கிறார்கள் என்பதை நான்—நான்—நான் அறிவேன்.

59 நீங்கள் தேவனிடத்திலிருந்து ஒரு செய்தியை பெற்றுள்ளதை நீங்கள் அறிந்திருக்கும்போது, நீங்கள் அதை மக்களுக்கு அளித்து, அதை மக்கள் ஏற்றுக்கொள்வதைக் காணும்போது, அது எனக்குப் பெரிய சந்தோஷத்தைத் தருகிறது. பிறகு நீங்கள் திரும்பி, “பிதாவே, உமக்கு நன்றி” என்று கூறுகிறீர்கள். ஓ, பிள்ளைகள் அவர்களுக்காக அனுப்பப்பட்ட அப்பத்தை சாப்பிடுவதைக் காணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சில வருடங்களுக்கு முன்பு இந்த கூடாரத்தில் தரப்பட்ட ஒரு தரிசனமாக அது இருந்ததை உணருகிறீர்களா? அது உண்மை. “ஜீவ அப்பம்.” சகோதரன் நெவில், நீங்கள் அதை நினைவுகூருகிறீர்களா. மகத்தான—மகத்தான நேரம்!

610 வேதம் வாசிப்பதை நீங்கள் கவனிக்க விரும்பினால் அல்லது குறித்துக்கொள்ள விரும்பினால் இப்போது வேதத்தை திருப்புவோமாக, அப்படியே… தேவனுடைய வார்த்தையை வாசிக்காமல், சில கருத்துக்களை கூறி ஆராதனை நடத்துவதுதான் முறை என்று என்னால் நம்ப முடியவில்லை, அது ஒரு சுகமளிக்கும் ஆராதனையானாலும் அல்லது எதுவானாலும் சரி. நாம் எல்லோரும் புரிந்துகொள்கிறோம். நமக்கு மத்தியிலே அந்நியர் யாரும் இல்லை என்று, நான் எண்ணுகிறேன். ஆனால் நாமெல்லாரும் சுகமளித்தல் என்றால் என்ன என்பதை புரிந்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யாரோ ஒருவர் செய்கிற காரியமாக அது இல்லை; அது தேவன் ஏற்கனவே செய்து முடித்ததாக இருக்கிறது. இரட்சிப்பும் அதே விதமாக இருக்கிறது. ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அதுவேதான் சத்தியம் என்று மக்கள் விசுவாசிக்கும்படியாக செய்ய வேண்டும். மேலும் தேவன் அதை அவருடைய வார்த்தையில் போதித்து பிறகு அதை விசுவாசிக்கிறவர்களுக்கு நிரூபிக்கிறார், ஏனென்றால் அவர், “விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கைக்கூடும்” என்றார். 11 நீங்களோ, “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்று கூறுகிறீர்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களாலும் கூடாத காரியம் ஒன்றுமில்லை. ஏனெனில் “விசுவாசிக்கிற அவர்களுக்கு ,” (தேவன் ஒரு நபராய் இருக்கிறார்) “அவர்களுக்கு எல்லாம் கூடும்.” புரிகிறதா? எனவே நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால், உங்களுக்கான, உங்களாலும் கூடாதது ஒன்றுமில்லை.

712 கர்த்தருக்கு சித்தமானால், இப்போது முதலாம் இராஜாக்கள், 17-ம் அதிகாரத்தில், முதல் ஏழு வசனங்களை நான் வாசிக்க விரும்புகிறேன். கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்றான். பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசை, கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். கவனியுங்கள், “ அங்கே உன்னைப் போஷிக்க.” வேறு எந்த இடத்திலோ அல்ல. “அங்கே!” அவன் போய், கர்த்தருடைய, இல்லை கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். தேசத்திலே மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப் போயிற்று.

813 கர்த்தர் அவருடைய வார்த்தையின் வாசிப்பிற்கு அவருடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இப்பொழுது, இன்றிரவு, அங்கிருந்து “அதனுடைய காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம்” என்று அழைக்கப்படுகின்ற ஒரு பாடத்தை நான் எடுக்க விரும்புகிறேன். இன்று காலை, “தேவனுக்கு ஒரு ஊழியம் செய்தல், அல்லது…சித்தமில்லாமல் தேவனுக்கு ஒரு ஊழியம் செய்ய முயற்சித்தல்—தகுந்த நேரமாய் இராமல், காலமாய் இராமல், இடமாய் இராமல், நபராய் இராமல் அவருக்கு ஒரு ஊழியம் செய்ய முயற்சித்தல்” என்பதன் பேரில்—பேரில் ஒரு—ஒரு பாடத்தை நாம் பெற்றோம். இப்போது: ஏற்ற காலத்தில் ஆவிக்குரிய ஆகாரம்.

914 இந்த தீர்க்கதரிசி, எலியா, நாம் அவனைக் குறித்து மிக குறைவாகவே அறிவோம். ஆனால் அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்றும், அந்த மணி நேரத்திற்கான தேவ ஊழியக்காரன் என்றும் நாம் அறிவோம். 15 தேவன் எலியாவின் மீது, தமது ஆவியை உபயோகித்திருக்கிறார், ஏற்கனவே மூன்று முறை, இன்னுமாக இரண்டு முறை வாக்குத்தத்தங்கள்; ஐந்து முறை, கிருபைக்காக. அவர் அதை எலியாவின் மேல் ஊற்றியிருக்கிறார்; அது எலிசாவின் மேல் இரண்டு மடங்காக வந்தது; யோவான் ஸ்நானகன் மீது இருந்தது; புறஜாதி மணவாட்டியில் தோன்ற வேண்டியதாயுள்ளது; யூதர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல மோசேயுடன் வர வேண்டும். அது சரிதான். எலியாவின் ஆவியை ஐந்து முறை உபயோகிப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார், மூன்று முறை ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். 16 இப்பொழுது, இந்த மகத்தான தீர்க்கதரிசி, எங்கிருந்து வந்தான் என்று நமக்கு தெரியாது. அவன் ஒரு திஸ்பியன் என்று நாம் அறிவோம். ஆனால் எப்படி வந்தான்…

1017 தீர்க்கதரிசிகளைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. மிகவும் அபூர்வமாக…சபை ஸ்தாபனத்திலிருந்து வந்த எவரையும் அல்லது அவர்களுக்குப் பின்னாக வம்ச வரலாறு இருப்பதாகவோ எனக்குத் தெரியவில்லை. பயமே இல்லாத, ஒரு சாதாரண மனிதராகவே இருந்தனர், அநேக சமயங்களில், கல்வி அறிவில்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் எதையும், தாங்களாகவே எழுதி வைப்பதில்லை. ஏசாயா மற்றும் எரேமியா, ஆகிய இந்த இரண்டு பேரும், கொஞ்சம் எழுதி வைத்திருக்கிறார்கள், ஆனால் இந்த மகத்தான மனிதன் எலியா ஒன்றையும் எழுதி வைக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதி வைக்கவில்லை; ஒரு வேளை அவர்கள் எழுத முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் கரடுமுரடான மனிதர்களாயிருந்தனர். இந்த பண்டைய தீர்க்கதரிசிகளைப் போல வேதத்திலே ஒரு மனிதனும் இல்லை. அவர்கள் ராஜ்ஜியங்களுக்கு, ராஜாக்களுக்கு, மக்களுக்கு, சபைகளுக்கு மற்றும் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நின்று, தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நிலைத்து நின்றார்கள், தேவனும் அவர்கள் சொன்னதே சரி என்று நிரூபித்தார். அவர்கள் மிகவும் கரடுமுரடான தனிப்பட்ட நபர்களாக இருந்தனர். 18 இந்த எலியா அவர்கள் எல்லாரிலும் மிகவும் கரடுமுரடான ஒருவனாக இருந்தான். அவன் ஒரு வனாந்திர மனிதனாய் இருந்தான். அவன் வனாந்திரத்திலிருந்து வந்தான்; அவன் வனாந்திரத்தில் வாழ்ந்தான். அவன் ரோமமுள்ள மிருகத்தின் தோலைத் தரித்துக்கொண்டிருந்தான். அவன் தன்னைச் சுற்றிலும் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டிருந்தான் என்றும், ஒரு தோல் துண்டை, அரையில் ஒரு ஒட்டகத் தோலை அணிந்திருந்தான் என்றும், மிக…முகமெல்லாம் முடி இருந்ததென்றும் வேதாகமம் கூறியுள்ளது, அவன் பார்ப்பதற்கு, மிகவும் முரட்டுத்தனமாக காணப்படும் ஒருவனாக இருந்தான் என்பதை நான் கற்பனை செய்து பார்த்தேன்.

1119 ஆனால் நாம்…அவர்கள் எல்லாரும் மரிக்கவில்லை. அவர்கள் எல்லோரும்—எல்லோரும் இறந்து போய்விடவில்லை. நிசாயா ஆலோசனை சங்கத்தின் நாட்களிலே, ஜனங்களாகிய உங்களில் அநேகர் சபையின் ஆதிகால நிசாயா ஆலோசனை சங்கம் என்பதைப் படித்திருப்பீர்கள், மற்ற எல்லா சபைகளையும் கலைத்து, ஒன்றாக இணைத்து, ஒரு ஸ்தாபனமாக ஆக்கிக்கொள்ள அவர்கள் விரும்பினபோது, அந்த நிசாயா ஆலோசனை சங்கத்தை நடத்தினார்கள், அப்போது எலியாவைப் போன்ற கரடுமுரடான மனிதர், மூலிகைகளை மாத்திரம் உண்பவன், வனாந்திரத்திலிருந்து உள்ளே வந்தான்; மிகவும் கரடு முரடான மனிதர். கான்ஸ்டன்டைனுக்குக் கீழான, கெளரவம் வாய்ந்தவர்கள், உயர்ந்தவர்கள் எல்லாரும் அவர்கள் சத்தத்தை அடக்கிவிட்டனர். ஏனென்றால் அவர்கள், தீர்க்கதரிசிகளாய் இருந்ததினால், மணவாளனின் கோதுமை மணியானது நிலத்தில் விழ வேண்டும் என்பதைப் போலவே, மணவாட்டி சபையின் கோதுமை மணியானது நிலத்தில் விழவேண்டியதாய் இருக்கிறது என்பதை அறிந்திருந்தார்கள். அங்கு அது ஆயிரம் வருஷங்களாக விழுந்திருந்தது. 20 ஆகவே தான் இந்நாட்களில் சிலர் புத்தகங்களிலே, “சிறு பிள்ளைகள் கொலை செய்யப்படுவதையும், ஸ்திரீகள் சிங்கங்களால் துண்டுகளாக பிய்த்துப் போடப்படுவதையும் பார்த்துக்கொண்டு, வானத்தில் அமர்ந்துகொண்டு இதைக் குறித்து ஒன்றும் சொல்லாமல் இருக்கும் அந்த மெளனமான தேவன் எங்கே?” என்று எழுதுகிறார்கள். அவர்கள் வார்த்தையை அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு கோதுமை மணியானது நிலத்தில் விழ வேண்டும். ஒரு நீதியுள்ள தேவன் எவ்விதம் நின்றுகொண்டு தம் சொந்த குமாரன் மரிப்பதையும், துப்பப்படுவதையும், மற்றவர்களையும் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஆனால் வார்த்தையின்படி, அவ்விதமாகவே நடக்க வேண்டும். இந்த மணி வேளையிலும் அது அவ்விதமாகவே இருக்கிறது.

1221 இந்த மனிதன், அவன் ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். அவனுக்கு முன்பாக பாவம் நிறைந்த சந்ததி இருந்தது. ஆகாப் ராஜாவாக இருந்தான், அவன் தகப்பன் அவனுக்கு முன்னே பொல்லாதவனாய் இருந்தான். சாலமோனுக்குப் பிறகு, அடுத்தடுத்து ஒரு பொல்லாத ராஜா இருந்துகொண்டிருந்தான். ஆகாப், இந்த மனிதன், இருபத்திரண்டு ஆண்டு காலமாக சமாரியாவில் அரசாண்டான், அவர்கள் எல்லாரைக் காட்டிலும் மிகவும் மோசமானவனாக இருந்தான். அவன் ஒரு சரியான தற்காலத்து மனிதன். அவன் நிச்சயமாகவே, மார்க்கத்தில் விசுவாசம் கொண்டிருந்தான். அவன் ஒரு தற்காலத்து முறைப்படியே எல்லாவற்றையும் வைத்திருந்தான். அவன் நன்றாகப் படித்து பயிற்றுவிக்கப்பட்ட நானூறு எபிரெய தீர்க்கதரிசிகளை வைத்திருந்தான். தேவன் அவனிடத்தில் ஒருவனை அனுப்ப இவனோ அவனை விசுவாசிக்கவில்லை, அவன்தான் எலியா. 22 ஆனால் திஸ்பியனான, இந்த எலியாவோ, வனாந்திர மனிதனாக இருந்தான். பக்குவமான மனிதனாக இராமல்; அவன் ஒரு கரடுமுரடான மனிதனாய் இருந்தான். தேவன் பொறுத்துக்கொள்ளக் கூடாதபடி ஆகாப், பாவம் செய்தபோது, ஒரு நாள், அவர் வனாந்திரத்தில் எலியாவிடம் பேசினார். நான் அடிக்கடி சித்தரித்துக் காண்பித்ததுபோல, இதோ அவன் சமாரியாவின் பாதையில் வருகிறான். ஒருவேளை முகத்தைச் சுற்றி வெண்தாடி மீசையோடும், சூரிய ஒளியில் பளபளக்கும் வழுக்கைத் தலையோடும், குறுகிய சிறு கண்களோடும், அங்கே கையில் ஒரு தடியோடும், முகத்தில் ஒரு புன்னகையோடும், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நேராக நடந்து சென்று, “…நான் சொல்லும் வரை பனி கூட பெய்யாது” என்றான். 23 தேவனே, கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையை வைத்து என்ன செய்வது என்பதை அறிந்த மனிதரை, பாருங்கள், அதைப்போன்ற மனிதரை எங்களுக்கு தந்தருளும்.

1324 இப்பொழுது, அவன் இவ்விதம் செய்யும் முன்பாக, தேவன் அவனை அழைத்தார் என்று நாம் பார்க்கிறோம். தேவன் அவனோடு பேசினதினால், அதனால், அவன் எதற்கும் பயப்படவில்லை. அது சம்பவிக்காது என்று, அவன் தன்னுடைய செய்தியைக் குறித்து பயப்படவில்லை; அது நடக்கும் என்று அவன் அறிந்திருந்தானே! அது கர்த்தருடைய வார்த்தையின்படியே இருந்தது என்று அவன் அறிந்திருந்தான், அவன் அந்த மணி வேளைக்கான தேவனுடைய தீர்க்கதரிசி என்றும் அவன் அறிந்திருந்தான். ராஜா அவனுடைய தலையை வெட்டுவதாக இருந்தாலும், சிறையில் போடுவதாக இருந்தாலும், அவர்கள் எதைச் செய்தாலும், அது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை; ராஜாவுக்கு நேராக, “ கர்த்தர் உரைக்கிறதாவது,” என்று சொல்லும் ஒரு கட்டளையை அவன் பெற்றிருந்தான். என்ன ஒரு கரடு முரடான நபர்! ஆனால் அவன் இதை செய்வதற்கு, இந்தப் பெரிய பஞ்சத்தைக் குறித்து முன்னறிவிக்கும் முன்பாக… 25 தேவன் பாவத்தை தண்டிக்கப்படாமல் விடமாட்டார். தண்டனை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு—ஒரு தண்டனை இல்லாமல் ஒரு சட்டம் இருந்து என்ன பயன்? “விளக்கு எரிவது சட்ட விரோதமானது” என்று சொல்லிவிட்டு, அதற்கு அபராதமோ அல்லது அதற்கு தண்டனையோ இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? அது ஒரு சட்டமே அல்ல. ஆகவே பாவத்திற்கு ஒரு தண்டனை உண்டு. தேவன் ஒரு சட்டத்தைத் தரும்போது, அந்த சட்டம்—சட்டம் மீறப்படும்போது, அப்பொழுது அதற்கான ஒரு தண்டனை இருக்க வேண்டும். 26 இந்த நாடானது அவருடைய எல்லா சட்டங்களையும் மீறிவிட்டது. ஓ, அவர்களுக்கு ஒரு பெரிய சபை இருந்தது, அவர்களுக்கு ஆலயம் இருந்தது. அநேக ஏராளமான படித்த மனிதர்களை உடையவர்களாயிருக்கிறோம். அவர்கள் தேசம் முழுவதிலும் தீர்க்கதரிசிகளை உடையவர்களாயிருந்தனர், அவர்களுக்கு பள்ளிக் கூடங்கள் இருந்தன, இயந்திரம்போல அவர்களை வெளியே அனுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏராளமான தீர்க்கதரிசிகள் இருந்தனர், அவர்களுக்கு ஏராளமான ஆசாரியர்கள் இருந்தனர், அவர்களுக்கு ஏராளமான வேதபாரகர்கள் இருந்தனர், அவர்கள் ஏராளமான மார்க்கத்தை உடையவர்களாக இருந்தனர், ஆனால் அவர்கள் எல்லாரும் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகியிருந்தனர். ஆகவே தேவன் அவர்களுடைய இந்த தரத்தில் இல்லாமல் புறம்பே இருந்து ஒரு மனிதனை அழைத்து கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையோடு அவனை அனுப்பி வைத்தார்.

1427 தமக்கு சொந்தமானவர்களுக்காக அவர் எவ்வளவு அக்கறைகொள்கிறார் என்பதை கவனியுங்கள். அவர் இந்த தீர்க்கதரிசியை செய்தியுடன் அனுப்பும் முன்பாக, அவர், “எலியாவே, போய் இந்தக் காரியங்களை எல்லாம் ஆகாப் ராஜாவுக்கு அறிவி. மேலும் இப்பொழுது, நீ அறிவித்து முடிந்தவுடன், அவனை விட்டுப் புறப்பட்டு தூர வந்துவிடு, ஏனென்றால் பஞ்ச காலத்தின்போது நீ போகத் தக்கதாக ஒரு இடத்தை நான் ஆயத்தம் செய்திருக்கிறேன். எலியாவே, உன்னை நான் கவனித்துக் கொள்ளப்போகிறேன், நீ என்னுடைய வார்த்தையை மாத்திரம் பிரசங்கித்தால், நான் உனக்கு செய்யும்படி சொல்வதை அப்படியே செய்” என்றார். 28 இப்பொழுது, இந்த இரவு, எலியாவையும் எலியாவின் வேளையையும், இந்த மகத்தான ஊழியத்தையும், நாம் இப்பொழுது ஜீவித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தோடு பொருத்திக் காட்டப்போகிறேன். அது ஒரு பரிபூரணமான பொருத்தம் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் தேசங்களைக் குறித்து யோசிக்கிறேன்…நான்…நாம் பின் நோக்கிப் பார்க்க நேரமிருந்தால், ஆனால் ஜெப வரிசைக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புகிறேன்.

1529 எனவே நாம் திரும்பிச் சென்று பார்க்க முடிந்தால், நாம் இந்த அமெரிக்க தேசத்தை எப்படி அடைந்தோமோ அதே அடிப்படையில் இஸ்ரவேல் மக்கள் பாலஸ்தீன தேசத்தை கைப்பற்றியிருந்தனர். நாம் இந்த அமெரிக்க தேசத்திற்குள் வந்து இங்கு குடியிருந்த இந்தியர்களை விரட்டிவிட்டு நாட்டை சுதந்தரித்துக்கொண்டோம். அவ்விதமாகவே இஸ்ரவேல் மக்களும், தேவனுக்குக் கீழாக, யோசுவாவின் தலைமையில் பாலஸ்தீனாவிற்கு வந்து, அங்கு குடியிருந்தவர்களைத் துரத்திவிட்டு நாட்டை எடுத்துக்கொண்டார்கள். 30 அவர்களுடைய முதல் ராஜாக்கள் பராக்கிரமசாலிகளாய் இருந்தனர்: தாவீது, சாலமோன் போன்ற பெரிய மனிதர்கள். நம்முடைய முதல் ஜனாதிபதிகள்: வாஷிங்டன், லிங்கன், போன்றவர்கள் பெரிய மனிதர்களாக இருந்தனர். பிறகு கடைசியாக ஜனாதிபதிகள் அல்லது ராஜாக்கள் எல்லாக் காலத்திலும் மோசமாகிக் கொண்டே வந்து, இறுதியாக இந்த ஆகாப் ராஜாவில் அவர்கள் முடிவடைந்தார்கள். நம்முடைய நாளுக்கு முன்னடையாளமாக, மிகவும் மாதிரியாக இருக்கிறது. உண்மையான கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க விரும்பாத அளவுக்கு மக்கள் நவநாகரீகம் அடைந்துவிட்டார்கள்.

1631 அப்படிப்பட்ட நாகரீகமடைந்த மக்களுக்கு, ஒரு உண்மையான தேவ ஊழியக்காரன் எப்படிக் காணப்படுவான் என்பதை, நீங்கள் நினைத்துப் பார்க்கலாம். “ஏன், அவன் பித்துப்பிடித்தவன், புத்தி சுவாதீனமில்லாதவன். அவ்விதமான காரியம் ஒன்றுமே இருக்க முடியாது” என்பார்கள். அவர்கள் மார்க்க பக்தியுள்ளவர்கள், மிகவும் மார்க்க பக்தியுள்ளவர்கள். அவர்களுக்கு உத்தமமான மக்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் மார்க்க பக்தியுடையவர்கள். 32 ஒரு சாதாரண வேத அறிவைக் காட்டிலும், ஒரு சாதாரண செய்தியைக் காட்டிலும், வார்த்தையை போதிப்பதைக் காட்டிலும்—காட்டிலும், அவர்களுடைய கல்லான இருதயங்களை உடைப்பதற்கு, அதற்கும் மேலான ஒன்று தேவைப்படும் என்று அவன் அறிந்திருந்தான். அந்த மக்கள் மீது நியாயத்தீர்ப்பை அனுப்பும்படியாக கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியே தேவைப்பட்டது என்பதை அவன் அறிந்திருந்திருந்தான். எனவே அதை அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற வார்த்தையோடு சென்றபோதே அறிந்திருந்தான் (அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயிருந்தது.), அதைப் புறக்கணிப்பது நியாயத்தீர்ப்பாயிருந்தது. நாம் அதை நம்முடைய நாளிலும், கூட பார்க்கிறோம். நீங்கள் அதை எந்த நாளிலும் காண்கிறீர்கள். நீங்கள் இரக்கத்தின் எல்லையைக் கடந்து செல்லும் போது நியாயத்தீர்ப்பேயன்றி வேறொன்றும் விடப்படுவதில்லை.

1733 இப்பொழுது, அங்கே அந்த மாதிரி, அதாவது, இன்றைக்கு எலியாவோடு நான் ஒப்பிட்டுக் காட்டப்போவது, இந்நாளில் உள்ள சபையையே. நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இந்த செய்தியை அவன் பெற்றுக்கொண்டான். எலியா, தேவனுடைய வார்த்தையின்படி மூன்று வருஷமும் ஆறு மாதமும், அல்லது எலியா சொல்லும் மட்டுமாக மழை பெய்யாது என்பதால் அவனுடைய இயற்கையான ஆகாரத்தில் பராமரிக்கப்பட்டு வந்தான், ஏனென்றால் இப்பொழுது மழை பெய்யப் போவதில்லை. “எலியாவே, எந்த நேரத்தை நீ சொல்கிறாயோ அது அப்படியே ஆகும்.” ஆகவே அவன் ராஜாவிடம் சென்று, “நான் சொல்லுமளவும் பணி கூட விழாது” என்று சொன்னான். அது ஒரு—ஒரு பெரிய செய்தி, அல்லவா? அது முற்றிலும் ஒரு செய்தியாயிற்றே! 34 இப்போது நாம் அதை இந்நாளில் நிலவும் ஆவிக்குரிய பஞ்சத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கப்போகிறோம். இப்பொழுது, ஆவியின்படி பேசுவோமானால், இந்நாளில் ஒரு பெரிய ஆவிக்குரிய பஞ்சம் தேசத்தில் இருப்பதை, நாம் நன்கு அறிந்திருக்கிறோம், நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். தீர்க்கதரிசிகளால் அது முன்னுரைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக என்பதையும், நீங்கள் அறிவீர்களா? “தேசத்திலே பஞ்சம் உண்டாயிருக்கும். வெறும் ஆகாரத்திற்காக அல்ல, தேவனுடைய வார்த்தையைக் கேட்க இயலாத பஞ்சம்” என்று கூறியிருக்கிறார்கள். அந்த நாள் இப்பொழுதே, “தேவனுடைய உண்மையான வார்த்தையைக் கேட்பது.” இப்பொழுது, இயற்கையான அந்த பஞ்சம் இந்த ஆவிக்குரிய பஞ்சத்திற்கு மாதிரியாக இருக்கிறது. 35 பாவமும் அவிசுவாசமும், சபையில் உள்ள கள்ள போதகர்களாலும் நாகரீக பிரசங்கிகளாலும், இந்த வரப்போகும் நியாயத்தீர்ப்புக்கு, வரப்போகும் இதற்கே இடமளித்துவிட்டன. அவர்கள் தேவனுடைய வார்த்தையையும் அவருடைய தீர்க்கதரிசியையும் விட்டு விலகி, அவருடைய வார்த்தைக்கு வேதசாஸ்திர வியாக்கியானத்தை நாடிப் போகிறார்கள்.

1836 நீங்கள் இங்கே கவனிப்பீர்களானால், சரியாக அந்த சமயத்தில்தானே தேவன் ஒன்றை எழுப்புகிறார். ஏனென்றால், அவர், எப்போதும், அவர் அதை ஜனங்களுக்கு முதலில் வெளிப்படுத்தாமல், அவர் எப்பொழுதுமே தம்முடைய ஊழியக்காரர்களுக்கு வெளிப்படுத்தாமல் அவர் ஒன்றையுமே செய்கிறதில்லை. 37 இப்பொழுது, ஆனால் எலியா, இந்த நேரத்தில், தேவன் அவன் போகும்படியாக ஆயத்தம் பண்ணியிருந்த ரகசியமான ஒரு இடத்தை உடையவனாக இருந்தான். இப்பொழுது நாம் ஜெப வரிசையை அமைப்பதற்கு முன்பு அந்த காரியங்களைத்தான் நாம் காண விரும்புகிறோம். தேவன்தாமே அருளியிருந்த ஒரு ரகசிய இடத்தை எலியா உடையவனாயிருந்தான். இப்பொழுது, சபை அவனுக்காக ஒருபோதும் அதை அருளியிருக்கவில்லை, ராஜா அவனுக்காக அதை ஒருபோதும் அருளியிருக்கவில்லை, தனக்காக அவனே அளித்துக்கொள்ளவில்லை, ஆனால் பஞ்சகால முழுவதும் எலியா போஷிக்கப்படுவதற்காக தேவன் ஒரு ரகசிய இடத்தை அருளினார், அங்கே அவனுடைய ஆகாரம் நாளுக்கு நாள் அளிக்கப்பட்டது. நாளைய தினத்தில் என்ன நடக்குமோ என்று அவன் கவலைப்படத் தேவையில்லை அல்லது சுத்தமாக ஆகாரம் தீர்ந்துவிடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை. தேவன், “நான் காகங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் அவைகள் உன்னை போஷிக்கும்” என்றார். என்னே அற்புதமான ஒரு காரியம், கிறிஸ்துவுக்குள் நமக்கிருக்கும் ஒரு ரகசிய இடத்தை குறித்த ஒரு மாதிரி.

1938 “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று கூறுகிற உலக ஆலோசனை சங்கமும் மற்றும் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற யாவும். தேவனுடைய மகத்தான வல்லமைகள் சபைகளைவிட்டு எடுக்கப்பட்டுவிட்டன. அவை “ஒரு சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஒரு ஓசையிடுகிற கைத்தாளமும்” அல்லாமல், வேறொன்றுமில்லை என்று சொல்லுமளவிற்கு காணப்படுகிறது. அது உண்மை என்று நாம் அறிந்திருக்கிறோம். “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள்.” 39 அதே காரியத்தைத் தான் தாவீது செய்தான் என்று, இந்த காலையில் பார்த்தோம், மாட்டு வண்டியைக் கொண்டு, வார்த்தையைக் விட்டு விலகிச் சென்றான். வார்த்தை அளிக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டபோது, அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; ஆகையால், அவர்கள் அதை விட்டு விலகியே போய்விட்டார்கள். 40 அதைத்தான் இந்த ஜனங்கள் எலியாவின் நாட்களில் செய்திருந்தனர், வார்த்தையை விட்டு விலகிப்போனார்கள். அந்த மக்கள் வார்த்தையை அவர்கள் பெற்றிருந்ததாக நினைத்தார்கள், ஆனால் அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை.

2041 ஆகையால் கவனியுங்கள், அப்பொழுது…அவிசுவாசியை அவர் தண்டிக்க இருந்த நாட்களில், விசுவாசிக்கு அவர் ஒரு வழியை ஏற்படுத்தினார். அதே காரியத்தையே அவர் ஒவ்வொரு முறையும் செய்கிறார். ஜலத்தைக் கொண்டு உலகத்தை அவர் அழிக்கப்போவதாயிருந்த நாட்களில், தப்பிக்கும்படியான ஒரு வழியை அவர் நோவாவுக்கு ஏற்படுத்தினார். எகிப்தை அவர் தண்ணீரில் மூழ்கடிக்கப் போவதாயிருந்த நாட்களில், அவருடைய ஜனங்கள் தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு வழியை சமுத்திரத்தின் வழியாக ஏற்படுத்தித் தந்தார். தேவன் எப்படியாய் தம்முடைய வழியை ஏற்படுத்துகிறார்! வழியே இல்லாத இடத்தில், அவரே அந்த வழியாக இருக்கிறார். அவரே அந்த வழியாக இருக்கிறார்! 42 இப்பொழுது நாம் ஏதோ…சரித்திரம் இதுவரை கண்டிராத மகத்தான வேளைகளில் ஒன்றை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம் என்பதை நாம் உணருகிறோம். நாம் பயப்பட வேண்டியது, ஒரு பிரகாசமான பளபளப்பான ஏவுகணைகளைக் கொண்ட போர் ஆயுதங்களைக் குறித்து அல்ல. சபைகளைக் குறித்தே நாம் பயப்பட வேண்டும். நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நேரத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

2143 இப்பொழுது கவனியுங்கள், ஆனால் எலியா தப்பித்துக்கொள்ள தேவன் ஒரு வழியை ஏற்படுத்தினார். கோபாக்கினைக்கும், வரப்போகும் மற்ற காரியங்களுக்கும், தப்பித்துக் கொள்ளும்படியாக, அவருடைய விசுவாசிக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு வழியை அவர் இப்போது ஏற்படுத்தியிருக்கிறார். 44 ஏனென்றால், தேவன் அந்த ஜனங்களை நியாயத்தீர்த்து அவர்களுக்கு தண்டனையளித்து, சோதோம் கொமாராவை அழித்து, கப்பர்நகூமை நடுக்கடலில் மூழ்க வைத்து, சோதோம் கொமாரைவையும், அந்த சந்ததிகளையும் அழித்துவிட்டு, அதன்பின்னர் அதே காரியங்களை நாம் செய்துவிட்டு அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படியாக விட்டுவிடுவாரானால் அவர் நீதியுள்ளவர் அல்ல. அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நிச்சயமாய் இருந்ததைப் போலவே நமக்கும் நியாயத்தீர்ப்பு நிச்சயம். இப்பொழுது நாம் அதை கவனிக்கையில்…

2245 இந்த காரியங்கள் நிகழும்போது, அந்த நாட்களில் இருந்த நவீன முறை, ஒரு மனிதனை அந்த நாளில் தேவன் எழுப்பினார், சரியாகக் கூறினால், அவைகளோடு போராடவே, அவர்களோ அதற்கு செவி சாய்க்காமல் போனார்கள். அவன் ஒரு பைத்தியக்காரன் என்றும், அவன் தன் சுயபுத்தியை இழந்துவிட்டான் என்றும், அவன் ஒரு மத வைராக்கியமுள்ளவன் என்றும், வனாந்திரத்திலிருந்து வந்த மூடன் என்றும், ஒரு விதமான காட்டு வெறியன் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அதே சமயத்தில், அவன் கர்த்தருடைய வார்த்தையை உடையவனாய் இருந்தான்.

2346 “வார்த்தை அது சொல்வதைப் போலவே அர்த்தமாவதில்லை” என்று அவர்கள் இன்று கூறுகிறார்கள். “ஓ பாருங்கள், வேதாகமம் ஒரு சரித்திர புத்தகம்தான்.” அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று நான் யூகிக்கிறேன், அதாவது இப்பொழுது அவர்கள் கூறுகிறார்கள், அதாவது, “ஏவாள் ஆப்பிள் பழத்தை சாப்பிடவில்லை. அவள் சாப்பிட்டது ஒரு…” அது என்னவாயிருந்தது? நான் நினைக்கிறேன்…“அது ஒரு ஏப்ரிகார்ட் பழம்,” என்று அவர்கள் இப்பொழுது கூறுகிறார்கள். “அது ஒரு ஏப்ரிக்காட் பழமாய் இருந்தது.” அதன் பிறகு அவர்கள், “மோசே இஸ்ரவேல் புத்திரரை சிவந்த சமுத்திரத்தின் வழியாக அழைத்து வரவில்லை. அங்கே கொத்தாக நாணல் செடிகள் இருந்தன, அவர்கள் கடற்கரையோரம், நாணல் செடிகள் ஊடாக கடந்து சென்றார்கள்” என்று கூறுகிறார்கள். அப்படியானால் தண்ணீர், த-ண்-ணீ-ர், எப்படி மதில் சுவர் போல் இருபக்கமும் எழும்பி, அவர்கள் வெட்டாந்தரையில், கடந்து சென்றார்கள்? ஓ, என்ன அர்த்தமற்ற பேச்சு! ஆனால், நீங்கள் பாருங்கள், அதைப் போல ஒரு நாளிலே அந்த மக்கள் மீது தேவனுடைய கோபாக்கினை விழப் போகிறது. அது அதைச் செய்யப்போகிறது. 47 இதைப் போல—அத்தகைய ஒரு காரியமும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்…சபை மக்கள் கூட அற்புதங்களை நம்புகிறதில்லை. அவர்கள், “உனக்கு ஆயிரம் டாலர் தருவேன்” என்றும், “எனக்கு ஒரு அற்புதத்தை காண்பி. எனக்கு ஒரு அற்புதத்தை காண்பி!” என்கின்றனர். சரி, அவர்கள் முன்பாக பத்தாயிரம் காரியங்கள் நடத்தப்பட்டாலும் அவர்களால் அதைக் காண முடியாது. ஏன், அவர்கள், அவர்கள் அதை ஒருபோதும் காணமாட்டார்கள். நீங்கள், “அது கூடாத காரியம்” என்கிறீர்கள். ஓ, இல்லை, அது அப்படி இல்லை.

2448 எலியா ஒரு முறை தோத்தானில் இருந்தான், அவனைப் பிடித்துக்கொள்ள சீரியர் இராணுவம் அந்தப் பட்டணத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது, ஏனெனில் அந்த—அந்த நாட்டின் பலம், தீர்க்கதரிசியினிடத்தில் இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஏன், ராஜா…அவர்களில் ஒருவன் சீரிய ராஜாவினிடத்தில், “ஏன், உங்களுக்குத் தெரியுமா, எலியா என்னும் தீர்க்கதரிசி, திஸ்பியன், நீர் உம்முடைய ரகசிய அறையில் பேசுவதை இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் சொல்லிவிடுகிறான்” என்றான். 49 “போய் அந்த நபரை பிடித்து வாருங்கள்! நமக்கு தடங்கலாய் இருப்பவன் அந்த நபர் தான்” என்றான். சீரியரின் முழு இராணுவமே தோத்தானை சூழ்ந்து கொண்டது. அவர்கள் அதை சுற்றிலும் வளைத்துக் கொண்டார்கள். 50 அப்போது கேயாசி, அந்த—அந்த தீர்க்கதரிசியின் வேலைக்காரன், உறக்கத்திலிருந்து விழித்துப் பார்த்து, அவன், “ஓ, என் தகப்பனே, ராணுவம் இங்கே நம்மை சூழ்ந்துகொண்டது. நாம் முற்றிலுமாக வளைக்கப்பட்டுவிட்டோம்” என்றான். 51 அதற்கு அவன், “ஏன், அவர்களோடு அங்கே இருப்பவர்களைக் காட்டிலும் நம்முடன் இருப்பவர்களே அதிகம்” என்றான். பார்த்தீர்களா? கேயாசி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “நான் ஒருவரையும் காணவில்லையே” என்றான். 52 அதற்கு அவன், “தேவனாகிய கர்த்தாவே, அந்த பையனுடைய கண்களைத் திறந்தருளும்” என்றான். அவன் கண்கள் திறக்கப்பட்டன, மலைகள் முழுவதுமே தேவதூதர்களாலும் சுற்றி இரதங்களாலும், காணப்படாத சேனைகளாலும் நிறைந்திருந்தன.

2553 எலியா அங்கு நடந்து சென்றான், வேதம், “அவன் அவர்கள் கண்களைக் குருடாக்கினார்” என்று கூறியுள்ளது. அவன் அவர்களிடத்திற்கு நடந்து சென்றான்; அவர்கள் அவனுக்கு குருடாயிருந்தனர். நடந்து சென்று, “நீங்கள் எலியாவைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?” என்றான். அவர்கள், “ஆம், அவனைத்தான் நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றனர். 54 அப்பொழுது, “வாருங்கள், அவன் எங்கேயிருக்கிறான் என்பதை சரியாக உங்களுக்கு சொல்கிறேன்” என்று கூறியபடி அவர்கள் பதுங்கி இருந்த இடத்திற்கே கொண்டு சென்றான், இராணுவம் இருந்த இடத்திற்கு நேராக சென்று அவர்களைப் பிடித்தான். 55 இப்பொழுது, வேதம், “அவன் அவர்களைக் குருடாக்கினான்” என்று கூறியுள்ளது. அதுவே இதற்கு தீர்வாகிறது. இன்றைக்கு ஜனங்கள் மிகவும் ஆவிக்குரிய குருடராய் இருப்பதினால், தேவனாகிய கர்த்தர் மக்கள் மத்தியில் இறங்கி வந்து எந்த காரியத்தை செய்தாலும், அவர் வாக்குத்தத்தம் பண்ணின காரியங்களைச் செய்தபோதிலும், அவர்களால் அதைக் காண முடியவில்லை. அவர்கள் ஆவியின்படி குருடராய் இருக்கிறார்கள்; தேவனை அறியவில்லை, அவருடைய மகத்தான வல்லமையை அறியவில்லை. இப்பொழுது, அதையே அவர்கள் எலியாவின் நாட்களில் செய்தார்கள் என்பதையும், இன்றைக்கும் அதையே அவர்கள் செய்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்கிறோம். தேவன் அவர்களுடைய கண்களைக் குருடாக்குகிறார். இன்றைக்கு அவர்கள், “அற்புதங்கள் என்று ஒன்றுமில்லை, அது போல ஒரு காரியமும் இல்லை, இவைகள் எல்லாம் உணர்ச்சிவசப்படும் காரியம்” என்று, கூறுகிறார்கள்.

2656 எலியாவைக் குறித்தும் அவர்கள் அதே காரியத்தை கூறினார்கள், ஏனென்றால் அவன் எடுத்துக்கொள்ளப்பட்டு எலிசா அவனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டபோது, ஒரு இளம் வாலிபனாக, வழுக்கைத் தலையனாகி சென்றபோது, வாலிப, பிள்ளைகள் அவன் பின்னாக ஓடி, “வயதான மொட்டைத் தலையா, எலியாவோடு நீ ஏன் மேலே போகவில்லை” என்றார்கள். பாருங்கள், அநேக காரியங்கள் செய்யப்பட்ட போதிலும், ஜனங்கள், ஆரம்பத்தில் அதை அவர்கள் நம்பக் கூட இல்லை. இந்த மகத்தான தேவனுடைய மனுஷன் மறுரூபமாகி அக்கினி இரதத்தில் பரலோகத்திற்கு சென்றான், ஆனாலும் மக்கள் இன்னும் அதை நம்பவில்லை. அவர்களுடைய சிறு பிள்ளைகளை இந்த மனிதன் பின்னாக ஓடி, “வயதான மொட்டைத் தலையா, நீ ஏன் மேலே போகவில்லை” என்று கூற வைத்தார்கள். பார்த்தீர்களா? அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி பிள்ளைகளை சபிக்க, ஒரு பெண் கரடி நாற்பத்திரண்டு பேரைக் கொன்றுபோட்டது.

2757 இப்போது கவனியுங்கள். அந்த நாளில் நடந்தது போல, இன்றும், அவர்கள் வார்த்தைக்கு தங்கள் சொந்த வியாக்கியானத்தை தருகிறார்கள். இப்பொழுது, அப்படி அவர்கள் செய்ய விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது, ஆனால் நாம் அதை நம்ப வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். வேதம், “இந்த தேவனுடைய வார்த்தை தனிப்பட்ட வியாக்கியானத்தைக் கொண்டதாய் இருக்கவில்லை.” என்று, தேவனே நம்முடைய சொந்த வியாக்கியானத்தைத் தருகிறார். தேவன் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்போது, அதுவே அதற்கு வியாக்கியானமாக இருக்கிறது. நான் பலமுறை கூறியதுபோல, ஆதியிலே அவர், “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. அது வியாக்கியானிக்கப்பட வேண்டிய அவசியமில்லை; அது சம்பவித்துவிட்டது. அவர், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றார், அவள் அப்படியே ஆனாள். அவர் “அவருடைய ஆவியை ஊற்றுவதாகக்” கூறினார், அப்படியே செய்தார். அவர், “கடைசி நாட்களில்,” அவர் என்னென்ன காரியங்கள் செய்வதாகக் கூறினாரோ, அதை அவர் செய்துகொண்டிருக்கிறாரே! அதற்கு எந்த வியாக்கியானமும் அவசியமில்லை; தேவனே அவருடைய சொந்த வியாக்கியானத்தை அளித்துக்கொண்டிருக்கிறார். மூடத்தனமான மனிதன் என்ன கூறினாலும் சரி, அது தேவனை இம்மியளவு கூட தடுக்கிறதில்லை.

2858 இயேசு பூமியில் இருந்தபோது, இந்த நாளில் நாம் என்ன பெற்றிருக்கிறோமோ, அந்தக் காரியத்தைக் குறித்து தர்க்கம் செய்யுமளவிற்கு அவர்களுக்கு அவநம்பிக்கை இருந்தது, ஒரு வேளை அதற்கும் அதிகமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் அது அவரைத் தடுக்கவில்லை; அவருடைய கடமையை அவர் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே சென்றார், தேவனும் அவர் செய்திருந்த ஒவ்வொன்றையும் உறுதிப்படுத்திக்கொண்டே சென்றார். அவர், “நான் தனியாய் இருக்கவில்லை. என் பிதாவும் நானும் ஒன்றாக இருக்கிறோம். அவர் என்னில் வாசமாயிருக்கிறார். இந்தக் கிரியைகளை நான் சுயமாய் செய்யவில்லை, என்னில் வாசமாய் இருக்கும் பிதாவே அதைச் செய்கிறார். நான் அவருடைய கிரியைகளை செய்யாவிட்டால், என்னை விசுவாசிக்காதீர்கள். ஆனால் நான் கிரியைகளைச் செய்தும் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை என்றால் கிரியைகளையாவது விசுவாசியுங்கள்” என்றார். புரிகிறதா? வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள்…“வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்,” அவர், “வேத வாக்கியங்களை அறிவதன் மூலம் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருப்பதாக எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுப்பவைகளும் வேதவாக்கியங்களே” என்றார். ஆமென்! எப்படிப்பட்ட ஒரு வாக்குமூலம்! இயேசு, “நான் யாரென்று உங்களுக்குக் கூறுவது, அந்த வேதவாக்கியங்களே, அவைகளே” என்றார். 59 எந்த மணிவேளையில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை வேத வாக்கியங்களே உங்களுக்கு சொல்லுகின்றன. நீங்கள் காணத்தக்கதாக நடந்த காரியங்கள், அது தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் இருக்கிறார் என்பதாகும். தேவன் ஒருவரேயன்றி வேறு எதுவும் மரித்தவனை உயிரோடு எழுப்ப முடியாது. இப்போது அவர் செய்துகொண்டிருக்கும் காரியங்களை அவரேயன்றி வேறெதுவும் செய்ய முடியாது. ஏனெனில் வேதம், “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்” என்று கூறியுள்ளது.

2960 இப்பொழுது நாம் ஜனங்களுடைய தற்காலப் போக்கைப் பார்க்கிறோம், ஆகையால், “ஓ, காலம் கடந்து போய்விட்டது, அற்புத அடையாளங்கள் என்று ஒன்றுமில்லை. மக்கள் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள்.” 61 இவர்களுக்கும், இவர்களுடைய வேத சாஸ்திரிகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பும் தீர்க்கதரிசியாகிய, அந்த எலியாவுக்கு செவி கொடுங்கள். கவனியுங்கள், கவனியுங்கள், அவன் பேசினபோது தானே தேவனைப்போல் பேசினான். எலியாதானே தேவன்போல பேசினான், “நான் சொன்னாலொழிய வானத்தில் இருந்து பனிகூட கீழே விழாது.” ஆமென்! ஆம், ஐயா. 62 தேவனுடைய சமூகத்திலே தீர்க்கதரிசி வெகு காலமாக காத்திருந்தான், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள், அல்லது வேறு எந்தக் காலத்திலும், அவர்கள் தேவனுடைய வார்த்தையாக மாறும் அளவிற்கு தேவனுடைய சமூகத்தில் ஜீவித்தபோது, அவர்களுடைய செய்தியானது வார்த்தையாகவே இருக்கிறது. அவன், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொன்னதை, நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அந்த மனிதர் தேவனிடத்தில் இருந்து செய்திகளைப் பெற்றுக்கொண்டபோது, அவர்களுடைய சுய சிந்தனையானது…அவ்வளவாய் மறைக்கப்பட்டார்கள். அது அவர்களுடைய சிந்தனைக்கு மாறாக இருக்கலாம், அது சரிதான் என்பதை அவர்களால் உணர முடியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று சொல்லி தேவனுடைய வார்த்தையை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். 63 “நான் சொன்னாலொழிய மழை பெய்யாது.” ஓ, என்ன ஒரு வாக்குமூலம்! அவன் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து அவ்வளவு பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்பட்டான். மேலும், அது ஆமோஸ் 3:7-லும் கூட இணைந்து செல்வதை, நினைவுகூருங்கள், “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” “மழையே பெய்யப் போவதில்லை!” என்று கூறினான். அவன் முதலாவது…

3064 அவர்கள் அவனைப் பார்த்து நகைத்தனர். அவன் வெறிபிடித்தவன் என்று நினைத்தனர். “அந்த மத வெறியன்!” ஆனால், பாருங்கள், மழை பெய்யப்போவதில்லை என்று கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அவன் உடையவனாய் இருந்தான். மேலும், தேவன், அவர் அதை செய்வதற்கு முன்பு, அவர் அதை அவருடைய ஊழியக்காரனாகிய எலியாவுக்கு வெளிப்படுத்தினார். அவன் ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட, நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக இருந்தான், எனவே ஜனங்கள் மனம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக, அவர்கள் அவனை நோக்கி நகைத்து, “ஓ, நாம் ஏராளமான மழையைப் பெற்றுவிட்டோமே! நீர்த்தேக்கங்கள் எல்லாம் நிறைந்திருக்கின்றன. ஆறுகளிலும் தண்ணீர் நன்றாக ஓடுகிறது” என்றார்கள். 65 வேதம், “மூன்று வருஷமும் ஆறு மாதமும் அங்கே பனி கூட பெய்யவில்லை” என்று கூறியுள்ளது. எல்லா இடத்திலும், எல்லா ஓடைகளும் நீர் நிலைகளும் காய்ந்துவிட்டன். அது அந்த மனிதனல்ல, தேவன் அந்த மனிதன் மூலம் பேசினார். அது “நான்” என்பதாயிருந்தது. நாம் அதை எப்போதும் அறிவோம். ஆகவே அவன்…

3166 உண்மையான கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்தியுடன், தேவனால் நியமிக்கப்பட்டு, தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு மனிதன் வரும்போது, செய்தியும் அதைக் கொண்டு வந்த தூதனும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று நாம் கண்டறிகிறோம். ஏனென்றால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்ற செய்திக்கு, வார்த்தைக்கு வார்த்தை, அடையாளமாக இருக்கத்தக்கதாக அனுப்பப்பட்டிருக்கிறான், ஆகவே அவனும் அவனுடைய செய்தியும் ஒன்றாக உள்ளது. 67 ஸ்தாபன அனுசரணையில் உள்ள ஒரு ஸ்தாபன மனிதன், அவனும் சபையும் “ஒன்றாகவே” உள்ளது. ஏதோ ஒரு ஸ்தாபனத்தால் உண்டாக்கப்பட்ட, வேத சாஸ்திரத்தின் கீழ் உள்ள ஒரு வேதபண்டிதன், அவனும் அவனுடைய செய்தியும் ஒன்றாயிருக்கின்றன; வேத சாஸ்திர சபை, ஒரு வேத பண்டிதர். அது சரியாக உள்ளது. 68 பிறகு ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வரும்போது, அவனும் அந்த செய்தியும் ஒன்றாக இருக்கின்றது. எலியா கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வந்தபோது, அவனும் அவன் செய்தியும் ஒன்றாகின. அதேவிதமாக இயேசு, அவர் வந்தபோது, அவர் வார்த்தையாக இருந்தார், பரிசுத்த யோவான் 1. ஆகவே தேவனுடைய வார்த்தையும் அந்தக் காலத்து செய்தியாளரும் எல்லாக் காலத்திலும், ஒன்றாகவே இருக்கிறார்கள். அதுதான் சரி.

3269 இயேசு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட வார்த்தையாக இருந்தார். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி இந்தக் குழந்தையைப் பெறுவாள்” என்பது சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசிகளால் கூறப்பட்டிருந்தவராய் அவர் இருந்தார். பின்னோக்கிப் பார்த்தோமானால், ஆதியில் தேவன் அவர்களிடம், “ஸ்தீரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும், அவன் அவருடைய குதிங்காலை நசுக்குவான்” என்றார். இந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. தாவீது கதறினான், மற்ற எல்லா தீர்க்கதரிசிகளும் காலங்கள் தோறும் அவரைக் குறித்துப் பேசினார்கள். அவரே அந்த வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாய் இருந்தார்! அல்லேலூயா!

3370 இப்பொழுது நான் என்ன சொல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்று காண்கிறீர்களா? இந்தக் காலையிலே உங்களுடன் மிகவும் தெளிவாகப் பேசினேன். மணவாட்டி எனும், ஜீவனுள்ள சபையில் ஜீவனுள்ள தேவனுடைய அதிகாரத்தை நீங்கள் காணவில்லையோ? நோயாளிகள் சுகமடைகிறார்கள், மரித்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குருடர்கள் பார்வையடைகிறார்கள், சுவிசேஷம் அதன் வல்லமையோடு அறிவிக்கப்படுகிறது, ஏனென்றால் செய்தியும் செய்தியாளரும் ஒன்றாக இருக்கிறார்கள். வார்த்தையானவர் சபைக்குள்ளும், தனி நபருக்குள்ளும் இருக்கிறார். 71 எலியா கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு சென்றபோது, தேவனுடைய வார்த்தை எலியாவுக்குள் இருந்தபடியால், “மழை பெய்யாது” என்று சொன்னான். அது எலியா அல்ல, எலியாவுக்குள் இருந்த தேவன்.

3472 நான் ஒரு முறை கூறின, நான் ஒரு முறை கூறின கிறிஸ்தவ விஞ்ஞான பெண்மணியைப் போன்றே. நான் இதைக் குறித்து பல முறைகள் கூறியிருக்கிறேன். அவள், “திரு. பிரான்ஹாமே, நீங்கள் அளவிற்கு மிஞ்சி இயேசுவை மிகவும் உயர்த்துகிறீர்கள்” என்றாள். நான், “அது ஒன்றிற்காக மட்டுமே நான் பதில் அளிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்றேன். அதற்கு அவள், “நீங்கள் அவரை தெய்வீகம் வாய்ந்தவராக்க முயற்சிக்கிறீர்கள்” என்றாள். நான், “அவர் தெய்வீகம் வாய்ந்தவர்தான்” என்றேன். 73 “ஓ, அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார், அவர் ஒரு நல்ல மனிதனாயிருந்தார், ஆனால் அவர் தெய்வீகம் வாய்ந்தவரல்ல” என்றாள். 74 நான், “பாருங்கள், அவர் தெய்வீகம் வாய்ந்தவர் அல்ல என்று சொல்லும் ஒரு வசனத்தை எனக்கு காண்பியுங்கள்” என்றேன். 75 அதற்கு அவள், “அவர் லாசருடைய கல்லறைக்குச் சென்றபோது, அவர் ‘கண்ணீர்விட்டார்’ என்று, பரிசுத்த யோவான் புத்தகத்தில் கூறுகிறது” என்றாள். 76 “பாருங்கள்,” நான், “நிச்சயமாகவே, அவர் கண்ணீர்விட்டார். அவர் மனிதனாகவும் தெய்வீகம் வாய்ந்தவராகவும் இரண்டும் சேர்ந்திருந்தார். அவர் ஒரு மனிதனாக இருந்ததினால், அழுதார்: ஆனால் மரித்தவனை உயிரோடு எழுப்புவதற்கு அவர் தேவனாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறினேன். சரி. நான், “அவர் ஒரு மனிதனாக இருந்தபடியால், பசியாயிருந்தார்; ஆனால் அவர் தேவனாக இருந்தபடியால் இரண்டு அப்பங்களையும், ஐந்து மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேரை போஷித்தார்” என்றார். அது உண்மை. “அவர் ஒரு மனிதனாக இருந்தபடியால், ஒரு படகின் பின்னணையத்தில் தூங்கினார்; ஆனால் தண்ணீரை அமைதலாக்கக் கூடிய தேவன் அவருக்குள் இருந்தார்.” எதற்காக? அவரும் அவருடைய செய்தியும் ஒன்றாக இருந்தது. 77 அவர், “நானும் என் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம். என் பிதா எனக்குள்ளே வாசமாக இருக்கிறார்” என்று கூறினார். சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாயிருந்தார்.

3578 அன்றொரு நாள் நான் ஏழு சபையின் காலங்கள் என்ற செய்தியைக் கொண்டு வந்தபோது, இந்தக் காரியம் எனக்கு மிகவும் விசேஷமானதாக இருந்தது என நான் நினைக்கிறேன். தொடக்கமாக சொல்ல வேண்டுமானால், இயேசு அந்த விதமாக தலையில் அந்த வெண்மையோடு அங்கே…நின்றுகொண்டிருப்பதை என்னால்—என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை, “அவருடைய மயிர் பஞ்சைப் போல வெண்மையாய் இருந்தது” என்று சொல்லப்பட்டிருந்தது. முப்பத்தி மூன்று வயதான ஒரு மனிதன் எவ்விதம் உறைந்த பனியைப் போல வெண்மையாக இருக்க முடியும் என்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. 79 ஒரு நல்ல வேத அறிஞரை, பெந்தேகோஸ்தே அறிஞரை, ஒரு நல்ல அன்பான நண்பரை அழைத்தேன். பாருங்கள், அவர் தான் சகோதரன் ஜாக் மூர். அவர் புத்திசாலியான, அறிவாற்றல் நிறைந்த மனிதன். அவர், “சகோதரன் பிரான்ஹாமே, அது மகிமைப்படுத்தப்பட்ட இயேசு. அவர் மகிமையடைந்த பின்பு அவ்விதமாக அவர் காட்சியளிக்கிறார்” என்றார். இல்லை. என்னால் அதை நம்பமுடியவில்லை. இல்லை. நான்—நான்—நான், “பாருங்கள், சகோதரன் மூர், உங்களுக்கு நன்றி” என்றேன்.

3680 நான் அறைக்குள்ளே சென்று தேவனோடு பேசத் தொடங்கினேன். நான் என்னுடைய வேத அகராதியை புரட்டி தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் அங்கே அவரைக் குறித்து சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தேன், அங்கே அது சொல்லப்பட்டிருந்தது, “அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடம் வந்தார் அவருடைய தலைமயிர் பஞ்சைப் போல வெண்மையாக இருந்தது.” நான், “கர்த்தாவே, என்ன சொல்வதென்றே எனக்குத்—எனக்குத்—எனக்குத் தெரியவில்லையே, எனக்கு பொறுப்பு இருக்கிறதே” என்றேன். இப்பொழுது, அது ஏழு-…முன்பு, ஞாபகம் இருக்கட்டும், ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டதற்கு முன்பாக, சுமார் ஒரு வருஷம் அல்லது அதற்கும் முன்பாக. “கர்த்தாவே, இது என்ன?” என்று அங்கே நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். 81 நான் பார்த்தபோது, எனக்கு முன்பாக, ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தார், அவர் ஒரு நீதிபதி, அவர் ஒரு வெண்மையான போலி முடியை தலையில் அணிந்திருந்தார். முன்காலத்தில் நீதிபதிகள் அவர் பிரதானமான அதிகாரம் பெற்ற ஒருவர் என்பதை எடுத்துக் காட்ட வெண்மையான போலித் தலைமுடியை அணிவது வழக்கம். 82 அதன்பின்னர் வெண்மையான தலைமுடியோடு இயேசுவைப் பார்த்தபோது, நாம் அறிந்தவண்ணம் அவர்தான் பிரதான அதிகாரம் பெற்றவர் என்ற, சத்தியத்தையே அது ரூபகாரப்படுத்துகிறதாய் இருக்கிறது என்று நான் கூறினேன். அதையே தேவனும் மறுரூபமலையில் சாட்சியாகக் கூறி, “இவர் என் நேச குமாரன், பிரதான அதிகாரம் பெற்றவர், இவருக்கு செவி கொடுங்கள்!” என்றார்.

3783 ஏழு முத்திரைகளின் தொடக்கத்தில் கூர்நுனிக் கோபுர வடிவத்தில் ஏழு தூதர்கள் கீழே வந்தபோது, அங்கே நின்று என்னிடத்தில் நான் திரும்பி இங்கே வந்து ஏழு முத்திரைகளின் பேரில் பேச வேண்டும் என்றும், அவர் என்னோடு இருப்பார் என்றும், இழக்கப்பட்ட காரியங்கள், என்ன என்பதையும் அவர் காண்பிப்பதாகக் கூறினார். அது புஸ்தகத்தின் புறம்பாக முத்தரிக்கப்பட்டிருந்தது என்றும், அவை வேதத்திலே எழுதப்பட்டிருக்காத காரியங்களாக இருக்கும் என்றும் நான் எப்போதும் நினைப்பேன், ஆனால் அவரால் அதைச் செய்ய முடியாது என்று வெளிப்பட்டது. அவை புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் காரியங்கள் அல்ல…அவை புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காரியங்களாக இருக்கின்றன. “ஆகவே ஒருவன் இத்துடன் ஒரு வார்த்தையை கூட்டினாலும் அல்லது எதையாகிலும் எடுத்துப் போட்டாலும்…” ஆகவே இந்த ஏழு சபையின் காலங்களில் புத்தகத்தில் இருக்கும் இரகசியமாக அவை இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு—ஒரு இரகசியத்தை வெளிப்படுத்தின, தண்ணீர் ஞானஸ்நானத்தைக் குறித்தும் மற்றும் அவர்கள் இத்தனைக் காலமாகத் தடுமாறிக் கொண்டிருக்கும் மற்ற காரியங்களைக் குறித்துமே. 84 அதன்பின்னர் அது மேலே சென்றபோது, கலிபோர்னியா, மெக்ஸிகோ, டூசான், மற்றும் பல இடங்களிலும் பெரிய ஆய்வுக்கூடங்களில் இருந்து அதைப் புகைப்படம் எடுத்தனர். அது விசித்திரமான காட்சியாக இருந்தது. இதோ இங்கே அமர்ந்திருக்கும் சகோதரன் பிரட் சாத்மன்னும், நானும், ஜீன் நார்மனும் அது மேலே சென்றபோது அங்கே நின்று கொண்டிருந்தோம். அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்தும், இன்னமும் அது என்ன என்பதை அறியாதிருக்கிறார்கள். இங்கே சில காலத்திற்கு முன்பு, ஒவ்வொருவரும், “இங்கே பாருங்கள். இது இவ்விதமாகக் காணப்படுகிறது, அந்த தூதர்களின் இறக்கைகளையும், அவை எப்படி மூடப்பட்டிருக்கின்றன என்பதையும் பாருங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

3885 ஒரு நாள் அதை வலப்பக்கமாகத் திருப்பிப் பார்த்தபோது, ஹாப்மன் வரைந்த இயேசு கிறிஸ்து படத்தைப் போல மிகவும் தத்ரூபமாக இருந்தது. தலையில் வெண்மையான தலைமுடியை அணிந்தவராய், அவரே சர்வத்துக்கும் மேலான அதிகாரம் பெற்றவர் என்பதைக் காண்பித்தவராய், பூமியைக் கீழ்நோக்கிப் பார்த்தவராக நின்று கொண்டிருந்தார். அதை வானங்கள் அறிவிக்கின்றன, வேதாகமம் அதை அறிவிக்கின்றது, செய்தியும் அதை அறிவிக்கின்றது, இவை எல்லாம் ஒன்றாயிருக்கின்றன. வெள்ளை தலைமுடியை அணிந்தவராய், சர்வத்துக்கும் மேலான அதிகாரம் பெற்றவர்; நீங்கள் அவருடைய கருந்தாடியை கீழே காண்கிறீர்கள். உங்களில் அநேகர் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்கள். அதை நாமும் இங்கே வைத்திருக்கிறோம். வலப்புறமாக, சாய்த்து பக்கவாட்டில், அதைப் பாருங்கள். அவரையே புகைப்படம் எடுத்ததுப்போல, எவ்வளவு பரிபூரணமாக இருந்திருக்குமோ, அவ்வளவு பரிபூரணமாய் அவர் இருக்கிறார். அவர்கள் அதைத் தவறான கோணத்திலிருந்து பார்க்கிறார்கள். நீங்கள் அதை சரியான கோணத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். தேவனாகிய கர்த்தர்தாமே எது சரியான கோணம் என்பதை வெளிப்படுத்த முடியும். உங்களுக்கு வலதுபக்கமாகத் திருப்பி அதைப் பாருங்கள். அதோ அவர் இருக்கிறார், அங்கே மேலே, அது புகைப்படமாக எடுக்கப்பட்டிருந்தால் எவ்வளவு பரிபூரணமாக இருக்குமோ அவ்வளவு பரிபூரணமாக இருக்கிறார். 86 நான் அவரை முதன் முதலாகப் பார்த்தபோது, அவர் ஹாப்மன் வரைந்த… தலையைப் போலக் காணப்பட்டார். இதற்கு முன்பு நான் அதைப் பார்த்தது கிடையாது. சில வருடங்களுக்குப் பின்பு, பில்லி சண்டே கூடாரத்தில், நான் அதைப் பார்த்தேன். அன்று முதற்கொண்டு என் வீட்டில் அந்தப் படங்களில் ஒன்றாகிலும் இல்லாமல் இருந்ததில்லை. 87 அதன்பின்னர், இங்கே ஆகாயத்திலே, இந்த தரிசனத்திலே நான் கண்ட அதே தேவன், இந்தப் பள்ளிக் கட்டிடம் நிற்கும் ஸ்தலத்திலே நான் சிறுபையனாக இருந்தபோது அவ்விதமாகவே அவர் காணப்பட்டார். இங்கே வானத்திலே, முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இதுவே சத்தியம் என்று, அறிவிக்கிறார். அவ்விதமாகத்தான் அவர் காணப்படுகிறார்; யாரோ ஒருவருடைய யோசனையாக புரிந்துக் கொள்ள முடியாதபடி இருக்கும் ஒரு காரியம் அல்ல அது.

3988 வாடிகன் நகரில் இருப்பதுபோல், அவர்கள் கிறிஸ்துவை ஒரு—ஒரு—ஒரு படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள், தாடி வரை அவருடைய முகவாய்க் கட்டைச் சுற்றிலும், சுமார் அரை அங்குல அளவிற்கு ஒரு வெள்ளை வளையத்துடன், அவருடைய வாய் வரையிலும் சுற்றி இவ்விதமாய் இருக்கிறது, அதை கிறிஸ்து என்று அழைக்கிறார்கள். 89 ஒருமுறை ஒரு பழைய தேவாலயத்தில் நான் பார்த்த ஒரு கிரேக்கப் படத்தையே அது என் நினைவிற்கு கொண்டு வந்தது, அதில் ஆதாம் ஏவாள் மிருகங்களாகவோ அல்லது ஏதோ ஒன்றாக இருந்தார்கள் என்று சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆவிக்குரிய சில காரியங்களை மாம்ச சிந்தையானது இவ்விதமாகத்தான் புரிந்து கொள்கிறது. ஜீவித்தவர்களிலேயே ஆதாம் தான் மிகவும் அழகானவன் என்றும், ஏவாள் எல்லா விதத்திலேயும் பரிபூரணமானவளாக இருந்தாள் என்றும் நான் நினைக்கிறேன். 90 இப்பொழுது மாம்ச சிந்தையானது தெய்வீக காரியத்தை, அவர்கள் சுயயோசனைக்குள் மூடி மறைத்துவிடுகிறது, பிறகு தேவன் அவருடைய வல்லமையை அனுப்பி அதைக் கொண்டு அந்தக் காரியத்தைப் பிரித்துவிடுகிறார். சரியாக அதே காரியம்தான் ஆகாபின் நாட்களில் இங்கு நடந்தது.

4091 இப்பொழுது, எலியா அதைச் சொல்லக் கூடும் என்று நாம் கண்டறிகிறோம், ஏனென்றால் அந்த மணி நேரத்திற்கான செய்தியும் தேவனுடைய வார்த்தையும் அல்லது செய்தியாளரும், செய்தி—செய்தி, வார்த்தை முற்றிலும் ஒரே காரியமாக இருக்கின்றன. தீர்க்கதரிசி, வார்த்தை, செய்தி; செய்தியாளர், செய்தி, செய்தி எல்லாம் ஒன்றே. இயேசு, “என்னைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் கிரியைகளை நான் செய்யாவிட்டால், அப்பொழுது என்னை விசுவாசிக்க வேண்டாம்” என்றார். அது நல்லது. எந்த மனிதனும் அவனுடைய செய்தியும் ஒன்றே. 92 ஆகவே தான் தேவனுடைய கிரியைகள் செய்வதை அவர்கள் இந்நாளில் விசுவாசிப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் தேவனுடைய செய்தியை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் செய்தியை விசுவாசிப்பதில்லை. 93 ஆனால் தேவனுடைய நேரத்தில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறவர்களுக்கு இந்தக் காரியங்கள் மறைவான ஆகாரமாக இருக்கின்றன. அவர்கள் அதையே நோக்கிப் பார்த்தாலும் அதைக் காண கூடாதபடி தேவன் அவ்வளவாக அதை மறைத்து வைத்தார் என்பதை, சற்று சிந்தித்துப் பாருங்கள். அவ்விதமாக எலியா சீரியரின் ராணுவத்தைக் குருடாக்கினான். அதேவிதமாகவே தேவனும் விசுவாசி என்னும் பிள்ளைக்குரிய உண்மையான அசல் ஆகாரத்தைக் காணாதபடிக்கு அவிசுவாசியைக் குருடாக்குகிறார்.

4194 “ஒரு மத வெறியன்” என்று அவர்கள் நோவாவை அழைத்தபோது, ஒரு பேழையைக் கட்டிக் கொண்டிருந்தான், அவனுடைய கண்கள் தேவனுடைய வார்த்தைக்கும் வாக்குத்தத்தத்திற்கும் திறந்திருந்தன. மதவெறி என்று அவர்களால் அழைக்கப்பட்ட அந்தக் காரியமே, நோவாவையும் அவன் குடும்பத்தையும் காத்துக்கொண்டது. பாருங்கள், அதே காரியம் தான். மக்கள் எந்தக் காரியத்தை நோக்கி நகைக்கிறார்களோ, அதே காரியத்திற்காகவே நாம் ஜெபிக்கிறோம். மக்கள் “பைத்தியம்” என்று அழைப்பதை நாம் “மகத்தானது” என்கிறோம். உலகம் “மகத்தானது” என்று அழைப்பதை, தேவன் “முட்டாள்தனம்” என்கிறார். உலகம் “முட்டாள்தனம்” என்றழைப்பதை, தேவன் “மகத்தானது” என்கிறார். அது சரியானதிற்கும் தவறானதிற்கும் இடையில் முற்றிலுமான வித்தியாசமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

4295 நினைவிருக்கட்டும், தேவனுடைய வார்த்தையின்படியும், தேவனுடைய அழைப்பின்படியும், தேவனுடைய திட்டத்தின் படியும் அவன் தன்னுடைய ரகசியமான இடத்திற்குச் சென்றான். எலியா தேவனுடைய முன்னறிவிப்பின்படியேயும், திட்டம், அவனுடைய வாழ்க்கையின் அழைப்பின்படியேயும், வார்த்தையின்படியேயும், தன்னுடைய ரகசிய இடத்திற்குச் சென்றான். நாம் நுழைந்திருப்பது அந்த வழியாக இல்லையென்றால் வேறு எவ்விதம் நாம் அங்கே போக முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. 96 கவனியுங்கள், பஞ்சம் தொடங்கும் முன்பே, எலியா தன் ஜீவனத்திற்காக இந்த ரகசியமான இடத்திற்குச் சென்றான். நியாயத்தீர்ப்பு பூமியைத் தாக்கத் தொடங்கும் முன்பாக சபையானது ஏற்கனவே அழைக்கப்பட்டாகிவிட்டது என்பதற்கு இது ஒரு முன்னடையாளமாக வைக்கப்பட்டிருக்கிறது, மணவாட்டி ஏற்கெனவே முன்குறிக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு தாக்கும் முன்பாகக் காத்துக் கொண்டிருக்கிறாள். ஏற்கனவே காத்துக்கொண்டு, தேவனுடைய ஆகாரத்தைப் புசித்துக்கொண்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். சரியான சுயாதீனத்திலுள்ள எந்த மனுஷனும் நாம் சரியாக, நியாயத்தீர்ப்பின் நேரத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வான்.

4397 பாருங்கள்! சகோதரன் பாங்க்ஸ் மற்றும் இன்றிரவு இங்கு இருக்கும் உங்களில் அநேக புருஷர்கள், அந்த மலையின் மீது அந்தக் காலையில் நின்று கொண்டிருந்தீர்கள். 98 கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு காலை, அந்த மலையைக் குறித்துப் பேச விரும்புகிறேன். இன்றிரவு சொல்லாமல் விலகி இருக்க முடியாதபடி கூடுதலான மகத்தான வெளிப்படுத்தல் ஒன்றைப் பெற்றுக்கொண்டேன். ஆனால் நான் அதைப் பெற்றிருக்கிறேன்…புரிகிறதா? அது தொடர்ந்து, எல்லா நேரத்திலும், ஒன்றன்பின் ஒன்றாக இடைவிடாமல் நிகழ்ந்துக்கொண்டே வருகின்றது. பார்த்தீர்களா? அது ஒருபோதும் சம்பவிப்பதை நிறுத்தாது, ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று இருக்கிறது. 99 இங்கிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும், நான் நின்று “ கர்த்தர் உரைக்கிறதாவது, இது இன்னின்ன மற்றும் இன்னின்ன விதமாக இருக்கும்” என்று சொல்வதை ஆயிரமாயிரம் முறைகளுக்கு மேலாக ஒலிநாடாக்களில் கேட்டிருக்கிறீர்கள். மேலும் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் கூட அது அவ்விதமாகவே இருப்பதாக அறிக்கையிட நேர்ந்திருக்கிறது. அது எதைப் பற்றியது என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைப் பார்த்திருக்கிறார்கள். அது என்னவென்பதை அவர்கள் அறியவில்லை, ஆனால் வார்த்தையே சரியான சத்தியம் என்று, அது உறுதிப்படுத்துவதைக் கண்டிருக்கிறார்கள்.

44100 முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு அல்லது 1933-ல் நாம் அந்த நதியில் நின்று கொண்டிருந்தபோது, கர்த்தருடைய தூதனானவர் அந்த நாளில் கீழே இறங்கி வந்து அவர் செய்த காரியங்களைப் பற்றி சொன்னார். நான் வெளியே வந்தபோது அந்தக் கரையில் நின்று கொண்டிருந்தவர்களில் அநேகர், “பில்லி, இதனுடைய அர்த்தம் என்ன?” என்றார்கள். 101 நான், “அது எனக்காக இல்லை; அது உங்களுக்காகவே. நான் விசுவாசிக்கிறேன்; நீங்களோ விசுவாசிப்பதில்லை” என்றேன். பின்னர் அப்படியே நடந்து சென்றுவிட்டேன். 102 பிறகு அந்த போதகர் என்னிடம், அவர், “நீ உன் ஏழாம் வகுப்புப் படிப்பை வைத்துக்கொண்டு, உலகம் முழுவதும் சென்று பேரரசர்களுக்கும், சக்கரவர்த்திகளுக்கும் ராஜாக்களுக்கும் மற்றுமுள்ளோருக்கும் ஜெபிக்கப் போவதாக எண்ணமா? மேலும், ஓ,” என்று கூறிவிட்டு, “அதை மறந்துவிடு!” என்று கூறினார். 103 என்னால் அதை மறக்க முடியவில்லை, அது என் இருதயத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளது. அவர் எவ்விதமாக செய்வதாகக் கூறினாரோ அவ்விதமாகவே, அவர் சொன்ன ஒவ்வொரு காரியமும் இப்போது இங்கே, முப்பத்தி மூன்று வருடங்களுக்குப் பிறகு, பரிபூரணமாக நடந்தேறியது. அவர் தேவனாயிருக்கிறபடியால் தவறிப்போக முடியாது. அவர் எப்போதும் தம்முடைய வார்த்தையைக் காக்கிறார். அவர்…ஒருபோதும் அதை சந்தேகிக்காதீர்கள்.

45104 இப்போது, கவனியுங்கள், அவன் தேவனுடைய திட்டத்தின்படியேயும் (முன்னறிதல்), தேவனுடைய அழைப்பின்படியேயும், தேவனுடைய வார்த்தையின்படியேயும், பஞ்சம் தொடங்கும் முன்பாக அங்கே சென்றான். இப்போது, நியாத்தீர்ப்பு தாக்க ஆயத்தமாக இருக்கிறது என்று அறிகிறோம். 105 அந்த நாளில் மலையின் மேல் நின்று கொண்டிருந்தபோது, சகோதரன் பாங்க்ஸ் உட் இங்கே நின்றுகொண்டு இருக்கையில், நாங்கள் மலையின் மேல் எறிக்கொண்டிருந்தோம். அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில், நடைபெறவிருக்கும் ஜெபவரிசைக்காக உங்கள் விசுவாசம் கட்டப்படத்தக்கதாக, மீண்டும் இதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சகோதரன் பாங்க்ஸுக்கு முன்பாக நடந்துச் சென்று கொண்டிருந்தேன். அவர்…சகோதரி ரூபி சுகவீனமாக இருந்ததால் அவளை விட்டுவிட்டு அவர் வந்திருந்தார் என நான் நினைக்கிறேன். எனக்குப் பின்னாக வந்து கொண்டிருந்த, அவருடைய முகத்தை கவனித்தேன், சிவந்துபோயிருந்தது. நான் பின்னாகத் திரும்பிப் பார்த்தேன். மலையானது ஒரு வேளை அவர் மேலே ஏறி நடப்பதற்கு சற்று கடினமாக இருக்கிறதுபோலும் என நினைத்துக்கொண்டு, நான் சற்று மெதுவாக நடந்தேன். சரியாக அந்த பாலைவனங்களில், அதைப் போன்று மலையில், அங்குதான் கர்த்தருடைய தூதர்கள் தோன்றினர். அதே திசையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தோம், அங்குதான் அவர்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தோன்றியிருந்தனர். 106 நான் மலையின் மீது ஏறினபோது, தேவ ஆவியானவர்…நான் சுற்றும் முற்றும், மலையுச்சியைப் பார்த்தபோது, அவர், “அந்தக் கல்லை எடுத்து அவரை நோக்கி ‘ கர்த்தர் உரைக்கிறதாவது , இன்னும் சிலமணி நேரத்தில் தேவனுடைய மகிமையைக் காண்பாய்’ என்று கூறு” என்றார். 107 நான் அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு, “சகோதரன் பாங்க்ஸ், ஏன் என்று எனக்குத் தெரியாது” என்று கூறியபடி, அதை வானத்தில் வீசி எறிந்துவிட்டு, நான், “கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் தேவனுடைய மகிமையைக் காணப்போகிறீர்கள்” என்று கூறினேன். அப்பொழுது அவர், “அது ரூபியைப் பற்றியதா?” என்று கேட்டார். 108 அதற்கு நான், “இல்லை, அது உன்னைப் பற்றியோ, ரூபியைப் பற்றியோ, எவரைப் பற்றியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ‘ கர்த்தர் உரைக்கிறதாவது , ஏதோ ஒன்று நிகழப்போகிறது’ என்று அது சொன்னதாக மாத்திரம் நான் நினைக்கிறேன்” என்று கூறினேன்.

46109 மறுநாள் காலையில் நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோது, புருஷர்களில் அநேகர், அவர்களில் இங்கு எத்தனை பேர் அமர்ந்திருக்கிறீர்களோ நான் அறியேன், எங்களில் பன்னிரண்டோ அல்லது பதினான்கோ, பதினைந்து பேரோ அங்கு அமர்ந்திருந்தோம். திடீரென்று, ஒரு ஊழியக்காரன் என்னை நோக்கி நடந்து வந்து, “சகோதரன் பிரான்ஹாமே,” என்று கூறி, “என்னுடைய பெயர் இன்னார்-இன்னார்” என்றார். “கலிபோர்னியாவில் உங்களுடைய ஆதரவாளர்களில் நானும் ஒருவன்” என்றார். 110 நான், “உம்மை சந்திப்பதற்காக நான் சந்தோஷப்படுகிறேன், ஐயா” என்று கூறினேன். டக்ளஸ் மக்ஹ்யூஸ். அவர், “நான்…” என்றார். நான், “உம்மை சந்திப்பதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்” என்று கூறினார். அவருடன் கரங்களை குலுக்கினேன். 111 அவர், “பாருங்கள், இப்பொழுது, நான் உம்மை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்று கூறினார். கூறிவிட்டு… இங்கு தர்மகர்த்தா ராய்ராபர்ஸன்; சகோதரன் உட், டெர்ரி மற்றும் பில்லி மற்றும், ஓ, சகோதரன் மக்நெல்லி, இன்னும் யாரெல்லாம் அங்கு நின்றுகொண்டிருந்தார்களோ நான் அறியேன். மேலும் நான்…அவர், “நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்றார். அவர், “கர்த்தர் எப்போதாவது உமக்கு இந்தவிதமாக வெளியே இருக்கும்போது தரிசனங்களைத் தருவது உண்டா?” என்று கேட்டார். 112 நான், “ஆம், சகோதரனே, ஆனால் அதையெல்லாம் விட்டு சற்று விலகி, ஓய்வெடுக்க வந்திருக்கிறேன்” என்று கூறினேன். நான் இவ்விதமாக சுற்றிப் பார்த்தபோது, பருமனான மருத்துவர் ஒருவர் அவரைப் பார்த்து, “சங்கை. மக்ஹ்யூஸ், உம் கண்ணிலுள்ள இந்த ஒவ்வாமை சீக்கிரத்தில் உம் கண் பார்வையையே போக்கிவிடும். நான் உமக்கு இரண்டு வருடமாக மருத்துவம் பார்த்து வருகிறேன், இதற்கு மேலும் அதைக் குறித்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறுவதைக் கண்டேன். நான் அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவர், “நீர் எதற்காக என்னைக் கேட்டீர் என்றால், அன்று உமது மருத்துவர், ‘உம்முடைய கண்ணில் ஒவ்வாமை இருக்கிறது’ என்று கூறினார்” என்றேன். ஏறத்தாழ பதினோரு மணி அளவில், நடுப்பகலாக இருந்தது, அவர் கண்களில் குளுமைக் கண்ணாடி அணிந்திருந்தார். நான், “காரணம்; நீர் அதை அணிந்திருப்பது சூரிய ஒளியின் நிமித்தமாக அல்ல, உம்முடைய கண் நிமித்தமாகவே. நீர் உம்முடைய ‘கண்ணை இழந்துவிடப் போகிறீர்’” என்று அவர் உம்மிடம் கூறினார். அவர் கண்ணீர்விடத் தொடங்கி, “அது உண்மை” என்றார்.

47113 கையில் ஒரு நீண்ட பிடியுள்ள மண்வெட்டியைப் பிடித்தபடி, நான் மறுபடியும் நடக்கத் திரும்பினேன். நான் பார்த்தபோது; அவர் கண்கள் பிரகாசமாக பளபளக்க என்னையே பார்த்துக்கொண்டு நிற்பதாகக் கண்டேன். நான், “ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது, நீர் அந்தக் கண்ணை இழக்கப்போவதில்லை” என்றேன். கடந்த இலையுதிர் காலத்தில் அவருடன் வேட்டையாடி கொண்டிருந்தேன், அவரே என்னையும் இந்தக் கூட்டத்தில் உள்ள எவரையும் விட தெளிவாகக் காணக்கூடியவர். அவர் ஒருபோதும்… 114 வயதான பெண்மணி ஒருவர் காலுறைகளை கீழே இறக்கிவிட்டு தன் பாவாடையை பக்கவாட்டில் சற்று மேலே உயர்த்துவதைக் கண்டேன். அவள், “மகனே, நீ சகோதரன் பிரான்ஹாமைக் கண்டாயானால், என் பாதத்துக்காக ஜெபிக்கும்படி அவரிடம் கூறு” என்றாள். நான் அங்கு பார்த்தபோது, சிறிய…அந்தப் பெண்மணியின் பாதத்தைச் சுற்றிலும், கட்டிகள் காணப்பட்டன. 115 நான், “உம்முடைய தாயார் நரைத்த தலையுடைய பெண்மணி. ‘என் மகனே,’ நீங்கள் பாருங்கள். நீர் புறப்படும் முன்பாக, நீர் என்னைப் பார்க்கும் பட்சத்தில், தன் பாதத்திற்காக நான் ஜெபிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்ளும்படி அவள் உம்மிடம் கூறினாள். அவர் பாதத்தைச் சுற்றிலும், சிறு கட்டிகள், போன்றவை, தொங்கிக்கொண்டு இருக்கின்றன” என்று கூறினேன். அவர் மயக்கமே அடித்து விழுந்து விடுவார் போலிருந்தது. “அது உண்மை” என்றார். நான், “அவளைக் கவலைப்பட வேண்டாம் என்று கூறுங்கள். அது சரியாகிவிடும்” என்று கூறினேன்.

48116 நான் சுற்றி நடக்கத் தொடங்கினேன். அப்பொழுது நான் தேவனுடைய சத்தம் பேசக் கேட்டேன், “சீக்கிரமாகப், பாதையை விட்டு ஓடிப்போங்கள்” என்று கூறியது. அங்கே ராய் ராபர்ஸன் நின்றுகொண்டிருந்தார், அவர் போரில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் என்று அறிந்திருந்தும், நான் அவர் தோளின் மீது என் கைகளை வைத்து, நான், “சகோதரன் ராய், உங்களால் முடிந்த அளவு துரிதமாக, மறைந்துகொள்ளுங்கள்!” என்று கூறினேன். “என்ன விஷயம்?” என்றார். “பாதையை விட்டு ஓடிப்போங்கள்! மறைந்து கொள்ளுங்கள்!” என்று கூறினேன். 117 என்னுடைய மண்வெட்டியைக் கீழே போட்டு விட்டு, சுற்றி நடக்கத் தொடங்கி, என் தொப்பியையும் எடுத்துவிட்டேன். இங்கே அவர் வந்தார், தேவ மகிமையானது சுழல் காற்றாக உருவெடுத்து அந்த மலையின் பக்கவாட்டில் கிழித்தெறிந்து, வெடித்து சிதறி மற்றும் அந்த இடத்தையே தகர்த்து அதிர வைத்து, புதர்களின் மேல்பகுதி பிய்த்துக் கொண்டு; என் தலைக்கு மேலாக மூன்று அல்லது நான்கு, ஐந்து அடி உயரத்தில் பறந்தது. சுழற்காற்றானது ஒரு புனலைப் போலச் சென்று; திரும்ப வெடித்தது; மேலும், இதோ அது வருகிறது. இவ்விதமாக மூன்று முறை. 118 அப்பொழுது மூன்றாவது முறைக்குப் பின் அது கடந்து சென்ற பின்பு, சகோதரன் பாங்க்ஸ் வந்து, “இதைக் குறித்துத்தான் கூறிக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்டார். நான் “ஆமாம்” என்றேன். அவர், “அது என்ன?” என்று கேட்டார். 119 நான், “தேவன் சுழல் காற்றில் பிரசன்னமாகிறார்” என்றேன். இதை மக்களிடம் கூறுவதை அவர் விரும்பினாரா இல்லையா என்று நான் அறியேன். 120 அதன்பின்னர் நான் சற்று ஜெபித்தேன். அப்பொழுது நான் அவர்களிடம் சொல்லலாம் என்று அவர் கூறினார். எனவே நான், “இது மேற்கு கடற்கரையைத் தாக்கும் நியாயத்தீர்ப்பு” என்று கூறினேன். இன்று அதைப் பாருங்கள்! சில மணி நேரம் கழித்து என்ன நடந்தது என்று பாருங்கள்: அலாஸ்கா தண்ணீரில் மூழ்கியது. இப்போது முழுப் பகுதியுமே கீழே போய்க்கொண்டிருக்கிறது. நாம் நியாயத்தீர்ப்பில் பிரவேசித்துக்கொண்டிருக்கிறோம். இரக்கமானது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

49121 ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, இந்தக் கடைசி நாட்களில், தம் ஜனத்தின் மத்தியில் ரூபகாரப்படுத்தப்பட்ட, இயேசு கிறிஸ்துவைப் பற்றின வெளிப்படுத்தலின் நன்மை மற்றும் கிருபை ஆகியவற்றின் மீது சார்ந்து ஜீவிக்கத்தக்கதான மறைவான ஆகாரத்தை, ஆவிக்குரிய ஆகாரத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆமென்! அவர்கள் அதற்குள்ளே சென்றுவிட்டனர். பஞ்சம் துவங்கும் முன்பாக எலியா உள்ளே சென்றுவிட்டான். நியாயத்தீர்ப்புக்கு முன்பாக உள்ளே வந்து விட்டதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். இப்பொழுது நாம் வெளியே வந்து உள்ளே போகும் ஒரு நேரம் இதுவேயாகும், அந்த ஸ்தாபனங்களில் இருந்து வெளியே வந்து கிறிஸ்துவுக்குள்ளாக போவது, எல்லா உண்மையான விசுவாசிகளுக்கும் வெளியே வருவதும் உள்ளே போவதுமான நேரம். 122 அப்பொழுது அவன் அழைக்கப்பட்டு, அங்கேயே தங்கியிருந்தான். நினைவிருக்கட்டும், தேவன் அவனை அழைக்கும் மட்டுமாக அவன் ஆற்றை விட்டு விலகவே இல்லை. 123 ஏறத்தாழ பஞ்சம் முடிந்தவுடன், தேவன் அங்கேயிருந்து அவனை அழைத்து, ஒரு விதவையின் வீட்டிற்கு அனுப்பினார். கவனியுங்கள், அவர் இந்த விதவையை அழைத்தார். இந்த விதவை அவிசுவாசிகளுடன் தொடர்பில்லாதிருந்தாள்; பழைய காலத்தில் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொண்டார்கள். ஆகவே அவர் அவளை அழைத்து…இந்த விதவையை ஆதரிக்குமாறு எலியாவை அழைத்தார். ஒரு சின்ன அடை மாத்திரம் அவர்களுக்கு இருந்தது, அவள் சார்ந்திருந்த சிறு வஸ்து அதுவே. எலியா, “முதலில், எனக்கு அதைத் தா. ஏனென்றால் கர்த்தர் உரைக்கிறதாவது, பூமியின் மீது தேவனாகிய கர்த்தர் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டுமாக பானை வெறுமையாகிப் போவதுமில்லை, கலசம் வெறுமையாவதுமில்லை,” என்றான். தேவனை முதலாவதாக வைத்தல், அவருடைய வார்த்தையை முதலாவதாக வைத்தல்!

50124 கவனியுங்கள், பானையில் மாவு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவள் மாவிற்காகப் போனபோது பானையில் மாவு இருந்தது. ஒவ்வொரு முறையும் அவள் எண்ணெய்க்காகப் போனபோது கலசத்தில் எண்ணெய் இருந்தது. ஏன்? போஜன பலியில் மாவானது கிறிஸ்துவைக் குறிக்கின்றது. மாவில் உள்ள ஒவ்வொரு கட்டியும் அரைக்கும்படியாக இயந்திரப் பல் சக்கரங்கள் இருக்க வேண்டும். மாவில் உள்ள ஒவ்வொரு உருண்டைக் கட்டியும் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறதாய், ஒன்றாகவே இருக்கின்றன. வார்த்தையை ரூபகாரப்படுத்த, செய்தியைப் பின் தொடரும் ஜீவ அப்பமாகிய வார்த்தையாய் அது இருந்தது. 125 இன்றும் அது அவ்விதமாகவே இருக்கிறது, நண்பர்களே. இன்றும் அவ்விதமாகவே, பஞ்ச காலத்தில் அவர்களை ஆதரிக்கத்தக்கதாக பிள்ளைகள் புசிக்கும் ஜீவ அப்பமானது தேவனுடைய செய்தியை தொடர்ந்தே செல்கிறது. இன்று அவர் நம் மத்தியில் வந்து நின்றால் எப்படி இருக்கும்? இப்பொழுது அவர் நம் மத்தியில் வந்து நின்றால் எப்படி இருக்கும்? இந்த பூமியின் மீது அவர் மாம்சத்தில் வந்திருந்த நாட்களில் எவ்விதமாக கிரியை செய்தாரோ அவ்விதமாகவே கிரியை செய்வார். மணவாட்டியானவள் மணவாளனின் ஒரு பகுதியாகவே இருக்கிறாள், சபையானது கிறிஸ்துவைப் போலவே இருக்கிறது. “நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” வார்த்தையே அதைச் செய்தது. அவர் செய்த காரியங்களையே நாமும் செய்வோம் என்று அவர் கூறினார்.

51126 மறுபடியும் நாம் இங்கே கவனிக்கிறோம், அந்த நாளில் வார்த்தையானது எலியாவினிடத்திற்கு வந்ததுபோல, வார்த்தை நமக்குள் இருந்து நம்மிடத்தில் வந்திருக்குமானால், அவன் செய்த காரியத்தையே அது செய்யும், உலகத்திற்கு மறைக்கப்பட்ட தேவனுடைய ரகசியமான காரியங்களை அவன் போஷிப்பான். ஓ! மீண்டுமாக, அது செய்தியையும் செய்தியாளரையும் ஒன்றாக ஆக்குகிறது. ஆவிக்குரிய ஆகாரம் ஆயத்தமாக இருக்கிறது, அது இப்போதைய காலத்தில் வந்திருக்கிறது. நீங்கள் அதை விரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ஆதாரத்தை புசிக்க முடியும், இந்த நேரத்திற்கான அவிசுவாசம் அனைத்திலுமிருந்து வெளியே வர விரும்பினால், கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் வருவதற்கு ஆயத்தமாயிருப்பீர்களானால், அவருடைய வாக்குத்தத்தத்திற்குள் வாருங்கள். மல்கியா 4-ல், லூக் 17:30-ல், பரிசுத்த யோவான் 14:12-ல் கூட அவருடைய வாக்குத்தத்தங்களை நினைவுகூருங்கள், மேலும் எத்தனையோ வேத வாக்கியங்கள், யோவேல் 2:38, அவர் செய்யப்போகும் எல்லாவற்றையும், இல்லை 2:28 சரியாக கூறினால், இந்த கடைசி நாட்களில் அவர் என்ன செய்வார் என்பதைக் குறித்து சொல்லுகின்றன. எவ்விதமாகத் தீர்க்கதரிசி இந்தக் கடைசி நாட்களில் வெளிச்சம் உண்டாயிருக்கும் என்றும், அது எவ்விதமாக கிரியை செய்யும் என்றும், அது என்ன செய்யும் என்றும், எல்லா வேத வாக்கியங்களும் இந்தக் கடைசி நாட்களையே சுட்டிக் காண்பிக்கின்றன என்பதையும் கூறினார். அது கிறிஸ்துவே! நீங்கள் இப்பொழுது அதிலே, அந்த இரகசியமான இடத்திலே மறைந்துகொள்வீர்களானால், நீங்கள் புசித்து தேவனுடைய நன்மையையும் இரக்கத்தையும் காணமுடியும். நீங்கள் சுகவீனமாக இருப்பீர்களானால், அங்கே சுகமளித்தல் உண்டு.

52127 எலிசா, பின்னர், அழைத்தபோது உங்களுக்கு நினைவிருக்கும்… கிறிஸ்துவைக் குறிக்கும், போஜன பலியை அவன் பெற்றுக்கொண்டபோது, அதைக் கொண்டு விதவையினுடைய வீட்டைப் பராமரித்தான். கவனியுங்கள், பிறகு அவன் வானத்திலிருந்து அக்கினியை, அழைத்தபோது, தீர்க்கதரிசியின் ஆவியானது, அவனுடைய அனுப்புதலையும், தேவனைக் குறித்தும் நிரூபித்தது. 128 கவனியுங்கள், வனாந்திரத்திலே, அவன் சூரைச் செடிகளின் கீழாகப் படுத்திருந்தபோது, ஒரு தூதன் அதேவிதமான, மாவிலே சுடப்பட்ட அடைகளைக் கொண்டு வந்து அவனைப் போஷித்தான். சிறிது நேரம் கழித்து அவர் அவனை உறங்கவிட்டு, அவனை எழுப்பி, அவன் இன்னும் சில அடைகளை அங்கு அவனுக்காக ஆயத்தப்படுத்திக் கொடுத்தான். அந்த போஜனத்தின் பலத்தினால் அவன் நாற்பது நாட்கள் சென்றான். தேவனுக்கு மகிமை! அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஓ, எவ்வளவாக நாம் அவரை நேசிக்கிறோம், அதனுடைய காலத்தின் ஆவிக்குரிய ஆகாரம்!

53129 “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிக்குப் போடுவது நல்லதல்ல.” இவ்விதமாக இயேசு அந்த சிரோபேனிக்கேயா ஸ்தீரியினிடம் கூறவில்லையா? அவருக்கு சொந்தமானவர்களிடத்தில் அவர் அனுப்பப்பட்டார். அது சரிதான். அவர்களுக்காகத்தான் அவர் வந்தார்…அவர் புறஜாதியிடத்தில் ஒருபோதும் செல்லவில்லை. 130 இப்பொழுது இன்றைக்கு அவர் புறஜாதிகளை அவர்களுடைய காலத்தில் சந்திக்கிறார், இது சந்திப்பு இல்லை… 131 நீங்களோ, “அந்த செய்தி இந்த மிகப்பெரிய ஸ்தலங்களுக்கு, ஸ்தாபனங்களுக்கு மத்தியிலே உள்ளதை போல, இந்த பெரிய கூட்டங்களுக்கு, செல்லவில்லையா?” என்று கேட்கிறீர்கள். 132 இது அவர்களுக்குரிய ஆகாரமல்ல. சபை என்று தன்னை அழைத்துக்கொள்ளும், ஸ்தாபனத்தின் ஆகாரமல்ல. மணவாட்டியின் ஆகாரம். இது காலத்திற்கேற்ற ஆவிக்குரிய ஆகாரம். இது அவர்களுடைய வயிற்றில் கோளாறு உண்டாக்கி அவர்களை சுகவீனமாக்கிவிடும். அது அவர்களுக்கு பலமான ஆகாரம். புரிகிறதா? புரிகிறதா? உங்களால்—உங்களால்—உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால், பிள்ளைகளுக்கு, அதுதான் அப்பம். அதுதான் ஜீவன், அதுதான் நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்து.

54133 நாம் ஜெப வரிசையை இப்போது தொடங்காவிட்டால், நமக்கு மிகவும் நேரமாகிவிடப்போகிறது, எனவே நாம் நம்முடைய தலைகளை சற்று நேரம் வணங்குவோமாக. 134 அன்புள்ள தேவனே, ஏற்ற வேளையில் ஆகாரம், ஆவிக்குரிய ஆகாரம். இந்த உலகம் அறிந்திராத ஒரு காரியம். எப்படியாய் நம்முடைய கர்த்தர் அந்த இரவிலே கூறினதை நாங்கள் கேட்டோம், இல்லை அங்கே சமாரியாவிலே அந்த நாளிலே எலிசா நடந்து வந்து, “ஏன், நான் உரைத்தாலன்றி, பனி கூட பெய்யாது” என்று கூறினான். இங்கே இயேசு நின்றுகொண்டு தம்முடைய சீஷர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ரபி, நீ ஏன் போஜனம் பண்ணகூடாது?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நீங்கள் அறியாத போஜனம் எனக்கு உண்டு” என்றார். 135 மெய்யாகவே, கர்த்தாவே, தேவனுடைய கிரியைகளை அவருடைய வேளையில் வெளிப்படுத்தப்படுவதைக் காண்பதுமே, அவருடைய சித்தத்தை செய்வதே அவருடைய போஜனமாய் இருந்தது. அது அவ்விதமாக நிகழ்வதை காண்பதற்காகவே அவர் அங்கிருந்தார். “முதலில் என் பிதாவானவர் எனக்கு எதைக் காண்பிக்கிறாரோ, அதைத் தவிர வேறு ஒன்றையும் செய்யேன். பிதாவானவர் எதைக் காண்பிக்கிறாரோ அதையே நான் செய்கிறேன்.” 136 பிதாவே, இன்றைக்கும் அது அவ்விதமாகவே இருக்கிறது. சபை, உண்மையான விசுவாசி, விசுவாசிகளின் சரீரமானது, ஆகாரத்தை, ஆவிக்குரிய ஆகாரத்தை பெற்றுக் கொள்ளும் வழியை அறிந்திருக்கிறார்கள், பெயரளவிலானவர்கள் அது குறித்து ஒன்றை அறிந்திருக்கவில்லை. இந்த ஆகாரத்தைக் குறித்து உலகமானது ஒன்றையும் அறிந்திருக்கவில்லை, பிதாவே. ஆனால் உம்முடைய சபை, உம்முடைய ஜனங்கள், உம்முடைய குமாரனுடைய மணவாட்டி, அதை நேசிக்கிறாள். 137 மருத்துவர்கள் தவறியிருக்கும்போது எங்களுடைய சரீரங்களின் சுகமளித்தலுக்கான அணுக்கலைப் நாங்கள் பெற்றுள்ளோம். நாங்கள் இதற்கு அணுகலாம். தேவன் தம்முடைய சபைக்கு அளித்திருக்கும், தேவனுடைய ஆகாரங்களில் இதுவும் ஒன்று, அவரை விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கு இந்தக் கடைசி நாட்களில் இதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பிதாவே, நாங்கள் விசுவாசிக்கும் பிள்ளைகளாய் இருக்கும்படி, எங்களுக்கு உதவி செய்தருளும், ஏனென்றால் விசுவாசிப்பவர்களுக்கு எல்லாம் கூடும். அதைத் தந்தருளும். அன்புள்ள தேவனே, நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.

55138 அவர்கள் சில ஜெப அட்டைகளை விநியோகித்திருப்பதாக பில்லி என்னிடம் கூறினான் என நான் நினைக்கிறேன். அந்த ஜெப அட்டைகளின் மீது என்ன எழுத்து இருக்கிறது என்பதை யாராவது கூறினால் நலமாயிருக்கும், அவ்வளவுதான் எனக்குத் தேவை. [யாரோ ஒருவர், “சி” என்று கூறுகிறார்.—ஆசி.] சி, சரி, நான் நம்முடைய வரிசையை துவங்கும்படியாக, நாம் சி, ஒன்றை, எடுத்துக்கொண்டு துவங்குவோம். பாருங்கள், இப்பொழுது, அவை யாவும் முடிவு பெறலாம். இப்போது, ஒவ்வொருவரும்…சரி, பாருங்கள், நான் இதை முயற்சி செய்யப்போகிறேன். நாம் அதை செய்யலாமா வேண்டாமா என்று நான் அறியேன். அல்லது நாம் ஒரு வரிசையை அழைக்கலாம்; நீங்கள் அப்படியே அமர்ந்திருங்கள். அது எனக்கு ஒரு பொருட்டல்ல. நீங்கள் இங்கு மேடையின் மீதும் வருவீர்களானால், அல்லது ஒரு வரிசையை அழைத்தாலும், எப்படியானாலும், அது ஒரு பொருட்டல்ல. நான் பரிசுத்த ஆவியின் பேரிலேயே சார்ந்திருக்கிறேன். நான் பிரசங்கித்த இந்த வார்த்தையை காக்கும்படி அவர் மீது சார்ந்திருக்கிறேன். 139 சகோதரன் ஜார்ஜ் ரைட், நான் அதை விசுவாசிக்கிறேன். ஒரு சிறு பையனாக இருந்தது முதற்கொண்டே, பல வருஷங்களுக்கு முன்பு உம்முடைய வீட்டிற்கு வந்து, மரத்தில் அமர்ந்திருக்கும் வயோதிக விப்பூர்வில் பறவையின் குரலை ரசித்தது முதல், நான் அதே செய்தியையே விசுவாசிக்கிறேன். அது மாறாதது என்று நான் விசுவாசிக்கிறேன்.

56140 சரி, அவர்கள் ஒரு ஜெப வரிசைக்காக திரும்பி வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். சரி, ஜெப அட்டை சி எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, முதலில் வந்து இங்கு நில்லுங்கள். உங்களால் எழுந்திருக்க முடியாவிட்டால், நீங்கள் கரங்களை உயர்த்தினால் போதும், அவர்களில் யாராவது வந்து உங்களை இங்கு கொண்டு வருவார்கள். [யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்—ஆசி.] (அது என்ன? ஆம், உ-ஊ.) ஜெப அட்டை சி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. இப்போது கவனியுங்கள், ஒரு ஜெப அட்டை இல்லாதவர்கள்… 141 இப்பொழுது, நீண்ட, நீண்ட காலமாக இவ்விதமான முறையில் ஒரு ஜெப வரிசையை நான் கொண்டிருக்கவில்லை. நாம் இங்கே கூடாரம் கட்டினபோது எனக்களிக்கப்பட்ட கட்டளையை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? “ஒரு சுவிசேஷனுடைய வேலையைச் செய்” என்றார். நான் ஒரு சுவிசேஷகன் என்று அவர் கூறவில்லை. “ஒரு சுவிசேஷகனுடைய வேலையைச் செய்” பாருங்கள், “ஏனென்றால் நேரம் வரும் அப்போது அது மாற்றப்படும்” என்று கூறினார். அந்த நேரம் வந்துகொண்டிருக்கிறது. சரி. இப்போது, இதில், அவர்… 142 நீங்கள் இரண்டு மூன்று வித்தியாசமான ஊழியங்களை ஒன்றாகக் கலந்து, மேய்ப்பனாகவும் மற்றும் சுவிசேஷகனுமாக, ஒரே சமயத்தில் இருக்க முடியாது. ஒரு—ஒரு தீர்க்கதரிசியாகவும், அதே வேளையில், ஒரு மேய்ப்பனாகவும் நீங்கள் இருக்க முடியாது, பாருங்கள், ஏனென்றால் உங்களுக்கு இருப்பது வேறுபட்ட கிரியைகள், வேறுபட்ட ஊழியம். 143 ஆனால் என்னுடைய செய்தியில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கர்த்தர் அருளினார். ஆனால் அதன்பின் அவர், “ஒரு சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தைக் குறித்த முழு உத்திரவாதத்தை ஏற்படுத்து, ஏனென்றால் நேரம் வரும் அப்போது அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமாட்டார்கள்” என்றார். அது இப்பொழுது வந்திருக்கவில்லையென்றால்! ஒவ்வொரு சபை ஸ்தாபனமும் என்னை புறக்கணித்துள்ளன. அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க மனதில்லாதிருந்தனர். “ஆனால் அவர்கள் தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை தங்களுக்கு சேர்த்துக்கொண்டு, கட்டுக்கதைகளுக்கு சாய்ந்துபோவார்கள். மோசேக்கு விரோதமாக எதிர்த்து நின்ற யந்நேயும் யம்பிரேயும் போல தங்கள் சுயநலத்திற்காக மகத்தான காரியங்கள் செய்வார்கள், ஆனால் அவர்களுடைய மதிகேடு வெளிப்படும்.” புரிகிறதா? பார்த்தீர்களா? சரி, போலியாக நடப்பித்தல்! நீங்கள் எவ்விதமாக யம்பிரே என்பதை பார்க்கிறீர்கள்…

57144 மேலும், பரலோகத்தின் தேவன் அறிந்திருக்கிறார், அங்கே இந்த மூலையில்-…(அந்த கூடாரத்தின்)…-கல் 1933 முதற்கொண்டு வைக்கப்பட்டு, ஒரு வேதாகமத்தின் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டு, அங்கே இருக்கிறது. அவர்கள் அதை எப்படி செய்தார்கள் என்று பாருங்கள். என்ன நிறைவேறுகிறது என்று பாருங்கள். போலியாக நடித்தல், சரியா அப்படியே. “அவர்கள் அவ்விதமாகவே இருக்கட்டும். அவர்களுடைய மதிகேடு யம்பிரேயும் யந்நேயும் போல அதேவிதமாக வெளிப்படும்” என்றார். இதோ, அந்த நாளில் நாம் இருக்கிறோம். 145 நாங்கள் மூலைக்கல்லை நாட்டினபோது சபையானது எவ்விதமாக காணப்பட்டது என்று நான் காண்கிறேன், மக்கள் சுவற்றை சுற்றிலும் நின்றுகொண்டும், கூடாரத்தின் சுவரைச் சுற்றிலும் நின்றுகொண்டும் இருந்தனர். அங்குதான் காரியமே உள்ளது. அது கட்டப்பட்டு வந்த சமயத்தில், அவர்கள் கூறினர், இங்கே இந்த நகரத்தின் மக்கள், “இன்னும் ஆறுமாத காலத்திற்குள்ளாக…” என்றார்கள். ஒரு டாலரும் எண்பது செண்டும் வைத்துக் கொண்டு ஒரு கூடாரம் கட்டத் தொடங்கினபோது, இது தங்களுடைய மோட்டார் வாகன பழுது பார்க்கும் கொட்டகையாகிவிடும் என்று மோட்டார் வாகன பழுது பார்ப்பவர்கள் அநேகர் தீர்மானமாக இருந்தார்கள். ஆனால் இது ஒரு தேவனுடைய ஆட்டுத் தொழுவமாகவே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

58146 ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. சி, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. சரி. 147 இப்பொழுது, “கர்த்தராகிய நான் இதை நட்டேன், ஒருவனும் அதை என் கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாதபடி அதற்கு நான் பகலிலும் இரவிலும் நீர் பாய்ச்சுகின்றேன்.” விமர்சனத்தை கவனித்துப் பாருங்கள்! எந்த ஸ்தாபனமும் பின்னால் நின்று இதைத் தாங்காது. இந்த தேசத்தைச் சுற்றிலும் எங்கும் இதைப் போன்ற சபை எதுவும் இல்லை. இதை ஆதரிக்க தேசத்தில் பெந்தேகோஸ்தேயினரோ, அல்லது ஒன்றுமே இல்லை. எல்லோரும் தண்ணீர் ஞானஸ்நானத்திற்கு எதிராகவும், மற்ற காரியங்களுக்கு விரோதமாகவும் இருக்கிறார்கள். என்னுடைய சொந்தக் குடும்பத்திலேயும் கூட, என்னுடைய சொந்த தகப்பனார் என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார், நான் என் உடைகளை ஒரு சிறிய காகித உறையில் எடுத்துக்கொண்டு வெளியேறி நியூ ஆல்பனிக்குச் சென்று அங்கு வாழ்ந்தேன். உண்மையே. ஆனால் அநேக ஆபத்துக்கள், கடினவேலை மற்றும் கண்ணிகள் மூலம், நான் ஏற்கனவே கடந்து வந்து விட்டேன்; கிருபையே என்னை இம்மட்டாய் பத்திரமாய் கொண்டு வந்தது, எனக்கு ஐம்பத்தி ஆறு வயதாகிறது, சீக்கிரத்தில் நான் ஆற்றைக் கடக்க வேண்டியவனாய் இருக்கிறேன். கிருபையே என்னை மேலும் கொண்டு செல்லும். அங்கே நான் பத்தாயிரம் வருஷம் இருக்கும்போது, பிரகாசமாக சூரியனைப்போல ஒளிவீசிக் கொண்டு; முதலில் நாம் தொடங்கினதைக் காட்டிலும், தேவனைப் பாடித் துதிக்க குறைவான நாட்கள் நமக்கில்லையே. ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன்! எனக்கு சர்வ உலகமும் அவர்தான்!

59148 ஓ, சரி, நான் எத்தனை…? எங்கு நான் விட்டேன், பத்தா? இன்னும் சிலரை நாம் சேர்த்துக் கொள்ளலாமா? சரி. அது என்ன, பத்தா, பதினைந்தா? சரி. சி, பத்து முதல் பதினைந்து முடிய, நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கே எழுந்து நின்று வந்து விடுங்கள். என்ன கூறுகிறீர்கள்? ஹு? சரி. அப்படியானால், சி, பதினைந்து முதல் இருபது, சி, பதினைந்து முதல் இருபது மட்டும் இருக்கட்டும். பத்துபேர் இன்னும் அதிகமாக இருப்பர். நாம் காண்கிறோம்…நீங்கள் பாருங்கள்—வரிசை எங்கு நிற்கிறதோ பாருங்கள், நாங்கள் அங்கு வந்து அவர்களை—அவர்களை கூட்டமாக்க விரும்பவில்லை. மேலும் நாங்கள்…சரி. 149 இப்போது உங்களுடைய முழுமையான கவனத்தை என் மீது வையுங்கள்; நாங்கள் நேரம் கடத்தமாட்டோம். ஆனால், இப்போது, ஓ, என்னே ஒரு வேளை, என்னே ஒரு நேரம்! ஒவ்வொருவரும் கர்த்தரை நேசிக்க வேண்டும் என நான்—நான் வாஞ்சிக்கிறேன். இந்த நிமிடத்தின் மறைந்திருக்கும் சக்தியை உணரத்தக்கதான நிலைக்கு நாம் எல்லோரும் கொண்டுவரப்பட வேண்டும் என்றே நான்—நான் விரும்புகிறேன். நாம் அதை முயற்சிப்போம். உங்கள் கவனத்தை மாத்திரம் என் மீது வையுங்கள்.

60150 நாம் இங்கே என்ன—என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்? தேவனுடைய வார்த்தையை ஒரு சோதனையினூடாக வைக்கிறோம். எலியாவும் அதே காரியத்தைச் செய்தான், அதைச் செய்யத்தக்கதாக, தான் தேவனால் அனுப்பப்பட்டவன் என்பதை அவன் அறிந்துக் கொண்ட பிறகே அந்த மலையின் மீது நடந்து சென்றான். அவன், “இப்பொழுது யார் தேவன் என்பதை நாம் நிரூபிப்போம், அக்கினியினால் உத்தரவு கொடுக்கும் தேவனே தேவனாக இருக்கட்டும்” என்றான். 151 அந்த அஞ்ஞானிகள்: தங்களைக் கீறிக்கொண்டு, ஓ “பாருங்கள், நிச்சியமாகவே, இல்லை…” என்றார்கள். அந்த—அந்த அஞ்ஞானிகள் வானத்திலிருந்து அக்கினி வந்து விழாது என்று அறிந்தபடியால், அவர்கள் கூச்சலிட்டு உரத்த சத்தமிட்டுகொண்டே இருந்தனர். 152 ஆனால் எலியாவோ அது வானத்திலிருந்து விழும் என்று அறிந்திருந்தான், ஏனென்றால், கர்த்தரிடத்திலிருந்து ஒரு தரிசனத்தை அவன் பெற்றிருந்தான். நீங்களோ “அவனுக்கு ஒரு தரிசனம் உண்டாயிருந்ததா?” என்கிறீர்கள். 153 ஆம், ஐயா! அவன் எல்லாவற்றையும் கிரமமாக ஒழுங்கு செய்துவிட்டு, “கர்த்தாவே, உம்முடைய கட்டளையின்படியே இவையெல்லாம் செய்துள்ளேன்” என்றான். பிறகு அக்கினி விழத் தொடங்கினது. தேவனுடைய வார்த்தையை எழுத்துக்கு எழுத்து காத்துக்கொள்ளும்போது, அப்பொழுது மீதி காரியங்களைப் பொறுப்பெடுத்துக்கொள்வது தேவனுடைய வேலையாகிவிடுகிறது. அவர் அதை அங்கே நீங்கள் வைக்கும்படி கேட்டுக்கொள்கிறார். நீங்கள் அதை அங்கே வைக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற நிச்சயமுடையவராயிருங்கள். புரிகிறதா? அவ்விதமாக நீங்கள் செய்யும்போது, மீதியை அவர் பார்த்துக்கொள்வார்.

61154 இப்பொழுது, நான் ஜெபிக்கப்போகும் இந்த வரிசையின் வழியாக எல்லாரும் வருவார்கள்… இப்பொழுது, சரி, நீங்கள் இப்பொழுது, வரிசையை துவங்கும்படி, சுவரண்டையில்தான் இருக்கிறீர்கள், சரி. இப்போது, முதலில், குறைந்த பட்சம் இந்தக் கட்டிடத்தில் எங்கோ, சில மக்கள்… ஜெப அட்டை இல்லாமல் சுகவீனமாக இருப்பவர்கள் இங்கே எத்தனை பேர் இருக்கிறீர்கள், உங்களுடைய கையை உயர்த்துங்கள். பாருங்கள், முழுவதுமே. இப்பொழுது, நம்முடைய கர்த்தர்…நீங்கள் அறிவீர்கள், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருந்தால், அவர் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். அவரும் ஜெப வரிசைகளை நடத்துகிறார். திரளான ஜனங்கள் பெரிய வரிசைகளில் அவரிடம் வந்தனர், அவர் அவர்களைத் தொட்டு, ஆசீர்வதித்தார். ஒரு சமயத்தில் அவர் நின்று, “யார் என்னைத் தொட்டது?” என்றார். சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு, ஒரு ஸ்திரீயினிடம் தன்னை அவள் ஏன் தொட்டாள் என்று கேட்டார்; அவளுடைய உதிரப் பெரும்பாடு போய்விட்டது என்றும், அவளுடைய விசுவாசம் அவளை சொஸ்தமாக்கிற்று என்றும் கூறினார். 155 அவள் திரும்பி, “கர்த்தாவே, நான் அறியேன், இது வெகுகாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருந்தால் எப்படி இருக்கும்? அவ்விதமாக நடந்திருக்காது. இல்லை, அவ்விதமாக நடந்திருக்காது. இல்லை. 156 சீரோபேனிக்கேயா ஸ்தீரியிடம், “உன் மகளைப் பற்றி நீ சொன்ன வார்த்தையின் நிமித்தம் பிசாசு அவளை விட்டு நீங்கிற்று” என்று அவர் கூறியிருந்தால், “சரி, இப்போது, கர்த்தாவே, நீர் இதை இந்த ஒரு வழியாக செய்ய வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன்” என்று கூறியிருந்தால் எப்படி இருக்கும்? பிசாசு இன்னும் அந்தப் பெண்ணுக்குள் இருந்திருக்கும். ஆனால் அவள் பிள்ளையை எவ்விதம் காண்பாள் என்று அவர் கூறினாரோ அவ்விதமாகவே காண விரும்பினாள்.

62157 இப்பொழுது, அவர் நம்மிடம், “நீங்கள் விசுவாசித்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்! நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து போ’ என்று கூறி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீங்கள் சொன்ன விதமாகவே நடக்கும் என்று விசுவாசித்தால் அவ்விதமாகவே நடக்கும், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசித்தால், அது உங்களுக்குத் கொடுக்கப்படும்” என்றார். என்னே ஒரு வாக்குத்தத்தம்! 158 இப்பொழுது சமுதாய சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஒரு மனிதன் இதையெல்லாம் விசுவாசிப்பதில்லை. அவன் வாசற்படி மட்டும் வந்து நின்று, உள்ளே பார்த்துவிட்டு, “சரி, இன்னொரு பரிசுத்த உருளைக் கூட்டம் என்று கூறிவிட்டு,” சென்றுவிடுவான். புரிகிறதா? ஆனால் இது மறைவான ஆகாரம் என்பதை அவன் அறியமாட்டான். அவனுக்கு மறைக்கப்பட்டிருக்கும் இரகசியமான காரியம் இது என்பதை அவன் அறியமாட்டான். அவன் அதை அறியவில்லை. அது—அது—அது பரிதாபமானதாயும், நிர்வாணமாக்கப்பட்டிருக்கிற ஒரு சிந்தையாயும், பரிதபிக்கப்படத்தக்கதாயும், குருடாயும், அதை அறியாமலும் இருக்கிறது. புரிகிறதா? அது மோசமான காரியம். 159 ஓ தேவனே, நான் முதலில் மரிக்கட்டும், ஆனால் என்னை ஒருபோதும் அந்த விதமாக ஆக்கிவிடாதேயும். இவ்விதமாக நான் இருப்பதைக் காட்டிலும் நான் மரித்துப்போவதையே விரும்புவேன் (ஆம், ஐயா). நாம் ஒவ்வொருவரும் அவ்விதமாகவே இருப்போம் என்றே நான் எண்ணுகிறேன், நாம் அவ்வாறு இருக்க விரும்பவில்லையா?

63160 ஆனால், இப்பொழுது, தேவன் இந்த காரியங்களை இந்தக் கடைசி நாட்களில் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். மல்கியா 4-ல், இயேசுகிறிஸ்து மாம்ச சரீரத்தில் தாமே வந்து சோதோமிலே என்ன செய்தாரோ அதையே செய்து காண்பிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது சரிதான். உலகமானது சோதோமின் நிலைமையில் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “அப்பொழுது இருந்ததுபோலவே, மனுஷகுமாரன் அந்த நாளில் வெளிப்படுவார்” என்றார். பாருங்கள், ஆபிரகாமிடத்தில், மனித உருவில் வந்த “ஏலோயீமாகிய,” இந்த மனிதன், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளை வருவதற்கு முன்னாக வந்தார். அது என்னவென்று பாருங்கள், ஆபிரகாம் அதை தேவன் என்று கூறினான். அங்கே அவனிடம் மூன்று பேர் வந்தனர் என்றும், பிரயாணத்தினால், அவர்களுடைய உடையில் அழுக்கு படிந்திருந்தது என்றும், அவர்கள் அமர்ந்து மனிதனை போல புசித்தார்கள் என்றும் வேதம் கூறியுள்ளது. இயேசு, “உலகமானது சோதோமின் நிலைக்குள் வரும்போது, மனுஷகுமாரன் தாமே மீண்டும் தம்மை வெளிப்படுத்துவார்.” என்றார். தேவகுமாரன் அல்ல, மனுஷகுமாரன், பாருங்கள், தம்மை வெளிப்படுத்துவார். 161 இப்போது கடைசி தீர்க்கதரிசி சொன்னதை குறித்துக்கொள்ளுங்கள். “இதோ, எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புகிறேன். அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களுக்குத் திருப்புவான்.” பார்த்தீர்களா? அவர்களை வேதத்தின் பக்கமாகத் திருப்பிக் கொண்டு வரும்படியான ஒரு செய்தி, அந்த நாளில் மனுஷகுமாரன் தாமே தம்மை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார். கடைசி சபையின் காலத்தில், ஏழாம் தூதன் எக்காளம் ஊதும்போது தேவ ரகசியங்கள் அந்த நாளில் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஏழு முத்திரைகளும் உடைக்கப்படும். இந்த சபைகளையும் அதன் காரியங்களையும் குறித்த எல்லா இரகசியங்களும், அவை எப்படி நிகழ்ந்தன, என்ன நட-…எப்படி, என்ன நடந்தது என்பன.

64162 பாருங்கள், அவர்கள் அதை அறியவில்லை. இயேசு, “குருடரான பரிசேயர்களே நீங்கள்!” என்றார். “குருடன் குருடனுக்கு வழி காட்டினால், இருவரும் குழியில் விழுவார்கள் அல்லவா?” என்றார். பாருங்கள், மக்கள் அதை காணாதிருப்பதின் காரணம் அதுதான். 163 அதைக் குறித்த ரகசியம், என்னவென்றால், அந்த முத்திரைகள், அந்த சபைகள் ஒவ்வொன்றும் ஸ்தாபனமாகி அதிலேயே அடங்கிவிட்டன, தேவனுக்கு முன்பாக தவறாக இருக்கும் ரகசியமான காரியங்களில் இதுவும் ஒன்று. டாக்டர் லீ, அதை உங்களால் காணமுடிகிறதா? பாருங்கள், கவனியுங்கள். இது அவ்வாறே உள்ளது. அதுதான் அங்குள்ள காரியம் ஆகும். அது இரகசியங்களில் ஒன்றாகும். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, பாருங்கள், தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலுமாக புறம்பாகிவிட்டார்கள். அது கடைசி நாட்களில் வெளியாக்கப்ப்பட்டு, ஜனங்களை வழிநடத்த ஒரு கோட்பாட்டிற்கு அல்ல, அல்லது ஒரு ஸ்தாபனத்திற்கு அல்ல, ஆனால் உண்மையான வார்த்தைக்கு திரும்ப கொண்டு வரும். உண்மையான வார்த்தையானது ஜனங்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மாத்திரம் வரும், அவர்கள் மத்தியில் மனுஷகுமாரன் தம்மை “நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்” என்று வெளிப்படுத்துவார். 164 ஓ, என்னே! ஓ, அதை நான் நேசிக்கிறேன். அவரை மேன்மை பாராட்ட நான்—நான் விரும்புகிறேன். மக்களுக்கு முன்பாக அவர் பெரியவர் என்று காண்பிக்க விரும்புகிறேன். நான் அவரை பெரியவராக்க வேண்டியதில்லை; அவர் ஏற்கனவே பெரியவராக இருக்கிறார். நீங்கள் அவரை கடந்து போக முடியாதபடி அவர் மிகவும் உயரத்தில் இருக்கிறார், நீங்கள் அவரை கடந்து போக முடியாதபடி மிகவும் ஆழமானவராக இருக்கிறார், நீங்கள் சுற்றிக் கொண்டு கடந்து போக முடியாதபடி அவர் மிகவும் பரந்திருக்கிறார், இருந்தபோதிலும் அவர் இருக்கத்தக்கதான ஒரு இடத்தை உங்களுடைய இருதயத்தில் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? நம்முடைய கர்த்தர் எவ்வளவு அற்புதமானவர்! சரி.

65165 இப்போது நாம் ஒவ்வொருவரும், மிகவும் அமைதியாக இருப்போம். இப்பொழுது, இதைக் குறித்து நாம் பேசியிருக்கிறோம். இப்பொழுது அதைக் குறித்து காரியம், அது உண்மைதானா? இப்பொழுது, இங்கு ஒரு வேளை சில அந்நியர்கள் இருக்கக்கூடும். கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருந்தால், நான் உங்களிடத்தில்…அவ்வாறு கூறினால், உங்களுக்கு…இந்த நிமிடத்தில் அவர் என்ன செய்வார்? முன்பு அவர் இங்கிருந்தபோது செய்த அதே காரியத்தையே அவர் செய்வார். அது சரிதானே? ஜனங்களுடைய விசுவாசம் அவருடைய வஸ்திரத்தைத் தொடும், அப்போது அவர் திரும்புவார். கிணற்றிணடியில் அந்த ஸ்திரியினிடமும், மற்ற இடங்களிலும் அவர் செய்தவிதமாகவே, அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்துக் கொண்டார். இப்போது, நீங்கள், “அவர் என்னை சுகப்படுத்துவாரா?” என்கிறீர்கள். 166 அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார் என்று அவருடைய வார்த்தை கூறியுள்ளது. ஆனால் அவர் இங்கே இருக்கிறார் என்று அவரை வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டியதே அதைக் குறித்த காரியமாய் இருக்கிறது.

66167 இப்பொழுது அவர் நமக்கு ஒரு மாம்ச சரீரத்தில் பிரசன்னமாவாரானால், ஹாப்மன்னின், முப்பத்தி மூன்று வயதில் கிறிஸ்துவின் தலை என்ற படத்தில் உள்ள அதே வடிவில் காணப்பட்ட, அவருடைய கரத்திலிருந்தும், மற்றும் அவர் மீது உள்ள ஆணிகள் அடித்த காயங்களில் இருந்தும், இரத்தம் வழிந்தோடினால், அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இல்லை, இல்லை. இல்லை, இல்லை. அவர் தாமே, வரும்போது, “கண்கள் யாவும் அவரைக் காணும், நாவுகள் யாவும் அவரை அறிக்கையிடும், மின்னல் கிழக்கிலிருந்து மேற்குவரை பிரகாசிக்கிறதுபோல, அவ்விதமாகவே இருக்கும்.” புரிகிறதா? நாங்கள் இந்த வழிபாட்டு வெறியரையோ மதவெறிக் குழுக்களையோ நம்புகிறதில்லை. தேவன் வார்த்தையாக இருக்கிறார் என்றே நாங்கள் விசுவாசிக்கிறோம். 168 ஆனால் அவர் உங்களுடைய சரீரத்தையும் என்னுடைய சரீரத்தையும் எடுத்து தம்மை உருவாக்கிக்கொண்டு உங்களுக்கு வரங்களை அளித்து, எனக்கு வரங்களை அளித்து, இந்த வரங்கள் மூலம் தம்மையே வெளிப்படுத்திக் காண்பிக்கிறார். அதுதான் ரகசியமான ஆகாரம். அவர் என் மூலமாக எவ்வளாய் தம்மை வெளிப்படுத்திக் காண்பித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், அதை விசுவாசிப்பதற்கு, உங்களுக்கும் கூட, விசுவாசம் என்னும் ஒரு வரத்தை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்,” என்கின்றனர்.—ஆசி.] இப்போது அவர் அவ்விதமாகவே தம்மை வெளிப்படுத்தினால், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? [“ஆமென்.”] உங்களுடைய முழு இதயத்தோடு, நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா? ஓ, அவருக்காக காத்திருப்பது, அவர் என்ன செய்யச் சொல்கிறார் என்பதைக் காணக் காத்திருப்பது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது.

67169 இதோ இங்கே ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை, நான் இதுவரை, என் ஜீவியத்தில் அவரைக் கண்டதே கிடையாது. ஒரு நல்ல, பலசாலியாக, ஆரோக்கியமான மனிதனைப் போன்று காணப்படுகிறார், அவரை அநேகமாக, எனக்குத்—எனக்குத்—எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இங்க நின்று கொண்டிருக்கிறார். இப்போது, நான் சென்று அந்த மனிதன் மீது கைகளை வைத்து அவருக்காக ஜெபித்து, அவர் விசுவாசிப்பாரா என்று அவரைக் கேட்கலாம். அவர் இங்கு நின்று என்னிடத்தில், “நீர் இன்னார்-இன்னாருக்கு ஜெபிக்க வேண்டும் என்று நான்—நான்—நான் விரும்புகிறேன். நான்—நான் பாதக் கோளாறை உடையவனாக இருக்கிறேன். எனக்கு தொடர்ச்சியாக தலைவலி இருக்கிறது. எனக்கு என்னுடைய வயிற்றிலே குடல்புண் இருக்கிறது,” அல்லது வேறு ஏதாவது என்பார். அவர்—அவர், எனக்குத் தெரியாது. இவைகளில் ஏதாவது ஒன்றை அவர் சொல்லக்கூடும். 170 நான், “சரி, ஐயா, சகோதரனே. நான் உன் மீது கைகளை வைத்து உனக்காக ஜெபிப்பேன்” என்று சொல்வேன். அது முற்றிலும் சரியாகவே இருக்கும். நாம் இத்தனை காலமாக அதையேதான் செய்துக் கொண்டு வந்தோம். அது சரியா? 171 ஆனால், நினைவிருக்கட்டும், அவருடைய வருகையின் நேரத்தில் அது வித்தியாசமாக இருக்கும் என்றும், சோதோமின் நாட்களில் இருந்ததுபோல என்றும் இயேசு கூறினார். அந்த மனிதன் வந்து, சாராள் இருந்த கூடாரத்தின் பக்கம் தன் முதுகைத் திருப்பியிருக்க, அவர், (இப்பொழுது “ஆபிராமே” என்றல்ல) “ஆபிரகாமே” என்றழைத்தார். 172 பாருங்கள், அதற்கு முந்தின தினத்தில், அவன் ஆபிராமாய் இருந்தான். ஆனால் அவன் ஒரு தரிசனம் கண்டான், கர்த்தர் அவனிடம், “உன் பெயரை மாற்றப்போகிறேன்” என்றார். 173 இதோ கர்த்தர், தாமே, ஒரு மனித உருவில் வந்து, அவனோடு புசித்துக் குடித்தார். “ஆபிரகாமே, உன் மனைவியாகிய, சாராள் எங்கே?” என்றார். சா—ரா-ள்; சா-ரா-ய் என்றல்ல. அவர், “அவள் உமக்குப் பின்புறம், கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 174 “இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் தந்த என் வாக்குத்தத்தின்படி நான் உன்னிடத்தில் வருவேன்” என்றார். 175 அப்போது சாராள் தனக்குள்ளே நகைத்தாள். அவர், “அப்பொழுது சாராள், ‘இந்தக் காரியங்கள் எப்படியாகும்’ என்று சொல்லி, சாராள் கூடாரத்தில் நகைத்தாளோ?” என்றார். உ-ஊ. “தேவனுக்கு கடினமான காரியம் ஏதாவது உண்டா?” புரிகிறதா? ஒன்றுமில்லை. இல்லை, ஐயா.

68176 இப்பொழுது அவர் கூறினார், இயேசு, “மனுஷகுமாரன், வார்த்தையாய் இருக்கிற, அவர்,” (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?) “கடைசி நாட்களில் வந்து, உலகமானது சோதோம் கொமோராவைப் போலவே இருக்கும் சமயத்தில் அவர் தம்மை வெளிப்படுத்துவார்” என்று வாக்குரைத்திருக்கிறார். அது சரிதான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 177 நாம் ஒரு ஜெபத்தை செய்யும் முன்பாக, அங்கிருப்பவர்களில் யாராவது ஒருவர் ஜெபித்து மனுஷகுமாரன் இன்னமும் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறாரா என்று பாருங்கள். அவர் அவ்விதமாகவே இருக்கிறாரா என்று அவரைக் கேளுங்கள், அப்படியானால், “ஆண்டவரே, அந்த மனிதன் என்னை அறியவில்லை, ஆனால் நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று நான் அறிவேன்” என்று சொல்லுங்கள். ஆம், ஐயா. இப்பொழுது சிறிது நேரம் உங்கள் தலைகளை உயர்த்துங்கள். 178 அது எனக்குப் பின்னாக இருக்கிறது. அது ஒரு பிள்ளை. அதற்கு காய்ச்சலினால் அனல் பறக்கிறது. அவள் ஒரு சிறுமி. நீங்கள் பட்டணத்திற்கு வெளியே இருந்து வந்திருக்கிறீர்கள். அந்தப் பிள்ளைக்கு ஒரு வயிற்றுக் கோளாறு இருக்கிறது. அதுவே இதை செய்தது. அப்படியே விசுவாசியுங்கள். 179 இப்பொழுது, தாம் செய்யப்போவதாக அவர் சொன்னது இதுதானா? அந்த நபரை என் வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது. பரலோகத்தின் தேவன் அதை அறிவார்.

69180 இங்கே இருக்கும் இந்த மனிதன், மிகவும் பலசாலியாகவும், ஆரோக்கியமாகவும் அவர் காணப்படுகிறார். ஆனால் அவர் மீது இருக்கும் அந்த நிழலைப் பார்த்தீர்களா? அதன் பொருள் என்னவெனில், தேவன் அவருக்கு உதவி செய்யாவிட்டால் அவர் வெகுகாலம் இங்கே இருக்கமாட்டார். அவருக்கு புற்றுநோய் உள்ளது. அது உம்முடைய நுரையீரலில் உள்ளது. இப்போது, மனுஷகுமாரன் இங்கே இருக்கிறார். அவர் தன்னுடைய இருதயத்தில் ஒரு சிறு பையனுக்கான, ஒரு சிறு பிள்ளைக்கான ஒரு பாரத்தை உடையவராயிருக்கிறார். அது சரியா? அந்தப் பிள்ளையோடு உள்ள கோளாறு என்ன என்பதை தேவனால் எனக்கு சொல்ல முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரரன், “அவரால் சொல்ல முடியும் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்று கூறுகிறார்.—ஆசி.] அவரால் முடியும். அவனுக்கு ஒரு விதமான காக்காய் வலிப்பு நோய் போன்ற ஒரு சிறு மயக்க நிலை உண்டாகியிருக்கிறது. அண்மையில் அவனுக்கு ஒன்று உண்டாயிருந்தது. [“இந்தக் காலையில்.”] அது உண்மை, இந்தக் காலையில். அவன் நலமடைவான் என்றும், அந்த பையனை வளர்க்கும்படியாக நீங்கள் உயிரோடு இருக்கப் போகின்றீர்கள் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 181 சார்லி காக்ஸ் எங்கே இருக்கிறார்? அவர் எங்கே இருக்கிறார்? சார்லி, நீ எங்கே இருக்கிறாய்? இன்றிரவு இவர் இங்கே இருக்கிறார் என்று நான் நினைத்தேன். இதோ இங்கே, சார்லி. கேரி, நீ எங்கே இருக்கிறாய்? லாரி, அவன் இங்கே இருக்கிறானா? அவனுடைய சிறு பையனுக்கு இதே தான், சரியாக இதே தான் இருந்தது. லாரி, நீ எங்கே இருக்கிறாய்? ஒரு நிமிஷம் இங்கே வா. பாருங்கள், நீ இங்கே இருக்கிறாய். இங்கே இருக்கும் இந்த சிறு பையனுக்கு இதேதான் இருந்தது. இவனுடைய தகப்பனாரும், தாயாரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். நான் சில வருஷங்களுக்கு முன்பு அங்கு இருந்தபோது, இந்த சிறு பையனுக்கு மயக்கம் உண்டாகி அவன் மயக்கம் அடைந்தது, சுயநினைவற்றுப் போய்விடுவான். அது காக்காய் வலிப்பாய் இருந்தது. இந்தப் பையனிடத்தில் நான் அதைக் கண்டபோது, அவனை சுகப்படுத்தும்படி நான் தேவனிடத்தில் கேட்டுக் கொண்டேன். அதிலிருந்து ஒருமுறை கூட அவனுக்கு அது வரவில்லை. அது அவனுடைய தகப்பனாரும்; அவனுடைய தாயாரும் இங்கே எங்கேயோ உட்கார்ந்திருக்கிறார்; அந்த சிறு பையன்தானே, இங்கே இருக்கிறான். 182 இப்போது நீர் விசுவாசிக்கிறீரா, ஐயா? (உங்களுக்கு நன்றி, லாரி.) ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பரலோகத்தில் தேவன் தாமே அதையே உமக்கும் தந்தருள்வாராக, நீரும் அந்தப் பிள்ளையை வளர்க்க ஜீவிக்க வேண்டும். தேவன் உங்களை ஆசிர்வதிப்பார். நாம் ஜெபம் செய்வோமாக. 183 அன்புள்ள தேவனே அவனுக்கு உதவி செய்யும். உம்முடைய இரக்கமும் கிருபையும் அவர் மீது இருந்து அவரை ஆசீர்வதிக்கும்படியாக நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். 184 இப்பொழுது லூயிசியானாவுக்குத் திரும்பிச் சென்று, சந்தோஷத்தோடு, அவனுக்காக தேவனைத் துதியும். 185 ஓ, ஆமாம், அவர் லூசியானாவிலிருந்து வந்திருக்கிறார், நிச்சயமாக, சார்லஸ் ஏரி அருகில். சரிதான். பாருங்கள், உம்முடைய எண்ணங்களை இப்போது என்னால் அறிந்துகொள்ள முடியும். தேவனுக்குத் துதி உண்டாவதாக!

70186 பாருங்கள், நீங்கள் ஒரு—ஒரு நல்ல காரியத்திற்காகவே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், உனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று விரும்புகிறாய். உனக்கு ஏற்கனவே பிள்ளைகள், இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர், ஆனாலும் உனக்கு இன்னும் ஒன்று வேண்டும். என் சகோதரியே, பரலோகத்தின் தேவன் தாமே அதை உனக்குத் தந்தருள்வாராக. இங்கே வாருங்கள், நான் என் கைகளை வைக்க விரும்புகிறேன். 187 அன்புள்ள தேவனே, இந்த ஸ்தீரிக்கு அவளுடைய இருதயத்தின் வாஞ்சையைத் தந்தருளும், ஏனென்றால் அது ஒரு தகுதியான காரணமாய் உள்ளது. இயேசுவின் நாமத்தில். ஆமென். இப்போது போய் குழந்தையை பெற்றுக்கொள். 188 தேவன் ஒரு நல்ல தேவனாகவே இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய தேவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் அதை விசுவாசித்தால், நம்முடைய ஒவ்வொரு தேவையையும் அவர் பூர்த்தி செய்கிறார். அவர், “நீங்கள் விசுவாசித்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்!” என்று கூறினார்.

71189 நான் எங்கேயோ உம்முடைய கரத்தை குலுக்கினேன். அது எங்கு என்று எனக்கு நினைவில்லை, ஆனால் எங்கேயோ உம்முடைய கரத்தைக் குலுக்கினேன். எனக்கு சரியாக நினைவில்லை, ஆனால் நாம் எங்கேயோ, இன்று எங்கேயோ, ஆனால் எங்கு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது எங்கே என்பதற்காக, நாம் பேச இங்கு வரவில்லை. நீர் இங்கே பேசுவதற்கு, இல்லை ஜெபிப்பதற்கு, யாரோ ஒருவருக்காக நாம் ஜெபிக்க வேண்டும் என்பதற்காக இங்கு இருக்கிறீர்கள். அது உண்மை. அவர் இங்கில்லை. அவர் ஜார்ஜியாவில், சுகவீனமாக இருக்கிறார். அவர் சரீரப்பிரகாரமாக சுகவீனமாக இருக்கிறார் என்பது மாத்திரம் அல்ல, அவர் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சுகவீனமாக இருக்கிறார்; உங்களுடைய உறவினர். நீர் அவருக்காக இருப்பதால் தேவன் அதை பொறுப்பெடுத்துக் கொள்வார் என்று நீர் விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிக்கிறீரா? இங்கே வாரும் நாம் சேர்ந்து ஜெபிப்போமாக. 190 அன்புள்ள தேவனே, இவர் போய் அந்த மனிதன் தேவனுக்காகக் கதறிக்கொண்டிருப்பதைக் காணும்படியாக, அவருடைய இருதயத்தின் விருப்பத்தைத் இந்த மனிதனுக்கு தந்தருளும். இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சந்தேகப்படாதீர். முழு இருதயத்தோடும் விசுவாசியும்.

72191 நீர் எப்படி இருக்கிறீர்? நீர் உம்முடைய கரத்தை நீட்டியபோது கைகுலுக்குவதற்காக நான் என் கரத்தை நீட்டவில்லை, நீர் உன்னுடைய கரத்தை நீட்டியபோது, நான் ஒரு காரியத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு நிழலாய், இருளான ஒரு கருமையாயிருந்து. அதன் காரணமாகத்தான். நான் உம்முடைய கரத்தைப் பிடித்தேன் என்பதை நான் அறிவேன், நான் அதை அந்த விதமாக கண்டறிவேன், பாருங்கள். ஆனால் அது ஒரு புற்றுநோயாயிருக்கிறது. தேவன் அதை எடுத்துப்போட வல்லவராய் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுடைய மார்பகத்தில், இடது பக்கத்தில் உள்ளது. நீங்கள் கரோலினாவுக்குத் திரும்பிச் சென்று, சுகமடைந்ததற்காக தேவனை துதிக்க விரும்புகிறீர், நீர் அப்படி விரும்பவில்லையா? நான் என்ன பொருட்படுத்துகிறேன் என்று புரிகிறதா? நாம் ஜெபம் செய்வோமாக 192 அன்புள்ள தேவனே, இப்போது பிரசன்னமாக இருக்கிற, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, தேவனுடைய அப்பத்தை பிள்ளைகள் புசித்துக் கொண்டிருக்க, இந்தப் பிள்ளையும் கூட விசுவாசத்தை அனுபவித்து மகிழும்படியாக, அவனுடைய சுகம் அளித்தலுக்காக அவர் இப்பொழுது அளிக்கிற தேவனுடைய அப்பத்தை புசிப்பானாக. அவன் சென்று சுகமடைவானாக இயேசுவின் நாமத்திலே. ஆமென். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

73193 இது ஒரு அற்புதமான நேரமா? ஜனங்கள் மீது ஒரு பயம் எழுப்புவது போன்றே காணப்படுகிறது. அல்லது, என்னுடைய காதுகளில், “வ்வூயு!” ஏதோ ஒன்று என்பது போன்று தொனிக்கலாம். “வ்வூயு” என்பது போல, அந்த விதமாக, ஒரு சத்தத்தை எழுப்புகிறது. பாருங்கள். இது பிள்ளைகளுடைய அப்பம். புரிகிறதா? அது உங்களுடையது. அது உங்களுக்காகவே. அது எனக்காக அல்ல; அது உங்களுக்காகவே. இப்பொழுது இந்த நேரத்தில், நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன், நான்… நான் அறிந்த வரை, நான் நலமுடன் இருக்கிறேன்; ஆனால் எனக்கு கூட தேவைப்படும்போது, அது எனக்காகவும் அப்பமாக இருக்கிறது. அது உங்களுக்கும் அப்பமாக இருக்கிறது. அது உற்சாகமாகவே இருக்கிறது. சுகவீனமாயிராத உங்களுக்கும் கூட, அது நம் இருதயங்களை தேவனுக்கு முன்பாகக் கொண்டு வருகிறது. 194 அவர் என்ன செய்வதாகக் கூறினாரோ, இது சரியாக இந்த காலமாகவே இருக்கிறது. “சோதோமின் நாட்களில் இருந்ததுபோல, மனுஷகுமாரன் வருகையிலும் இருக்கும், அப்போது மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார்.” புரிகிறதா? “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அவன் ஜனங்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடம் திருப்புவான்.” புரிகிறதா? புரிகிறதா? 195 “பின்பு நீதிமான்கள் துன்மார்க்கருடைய, சாம்பலின் மீது நடப்பார்கள்.” பூமியானது, சூரியனைப்போல எரியும், பாருங்கள். அதோ அங்கே அது விழப்போவதை நாம் காணப் போகிறோம். எரிமலை பூமி முழுவதும் பரவும், வானங்கள் அக்கினியால் எரியும். ஓ காலங்களின் கன்மலையே, இப்போதும், அப்போதும் என் மீது இரக்கமாய் இரும்.

74196 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? சரி, ஒரு காரியம், உங்களுக்கு ஸ்திரிகளுக்கான ஒரு கோளாறு, பெண்மைக்குரிய கோளாறு இருக்கிறது. மற்ற காரியங்களும் இருக்கின்றன. உங்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி இருக்கிறது, அந்த வயதிலேயே நரம்பு தளர்ச்சி உண்டாகும். எல்லாவிதமான சிக்கல்களுமே. ஆனால் உங்களுக்கும் கூட, ஒரு வாஞ்சை உண்டு, அது பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. அது உண்மை. அதுதான் அதுவாய் இருக்கிறது. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா…நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் அறிக்கை செய்துள்ளீர்களா? நான் உன் மீது கரங்களை வைத்து அதை செய்யும்படி தேவனிடத்தில் வேண்டிக்கொண்டால் பரிசுத்த ஆவியானது வரும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்த சகோதரி, “ஆம்” என்கிறார்.—ஆசி.] நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [“ஆம், ஐயா.”] நாம் ஜெபம் செய்வோமாக. 197 அன்புள்ள தேவனே, அப்போஸ்தல முறைமையின்படி, இந்த ஸ்திரீயின் மீது நான் என் கைகளை வைத்து, அவள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவள் அதைப் பெற்றுக் கொள்வாளாக. ஆமென். 198 அதை சந்தேகிக்காதே. அது உனக்குரியது, பாருங்கள். அது உன்னுடையது. அது பிள்ளைகளின் அப்பம். 199 நான் “ஸ்திரீகளுக்கான கோளாறு,” என்று நான் சொன்னபோதே, உங்களுக்கு சிறு வினோதமான உணர்வு உண்டானது, உண்டாயிருக்கவில்லையா? ஏனெனில் நீங்களும் கூட, அதை உடையவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது, நீங்கள் நன்றாகிவிடுவீர்கள் என்று இப்போது விசுவாசிக்கிறீர்களா? போய், கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.

75200 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய முழு இருதயத்தோடு நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வெகுநாட்களுக்கு முன்பு நீங்கள் சாப்பிட்டதைப் போல இப்போது உங்களால் சாப்பிட முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. போய், “கர்த்தாவே, உமக்கு நன்றி. நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். கர்த்தரின் பிரசன்னம். 201 முதுகுத் தொல்லை உங்களை விட்டு நீங்கப்போகிறது என்றும் நீங்கள் சுகமடையப்போகிறீர்கள் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. அப்படியே போய், “அன்புள்ள தேவனே, உமக்கு நன்றி” என்று கூறுங்கள், தேவன் அதை அருளுவார். 202 நீங்கள் சுகமாய் இருக்க முடியும் என்றும், கர்த்தர் உங்களை சுகப்படுத்துவார் என்றும், மூட்டு வலி இருக்காது என்றும், சுகமாயும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? போய், அவருக்கு நன்றி செலுத்தி, “கர்த்தாவே, நான் என் முழு இருதயத்தோடு ஏற்றுக்கொள்கிறேன், நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் எல்லோரும் அதைக் குறித்து அங்கே என்ன விசுவாசிக்கிறீர்கள்?

76203 நீங்கள் இங்கேயே, அங்கே உங்களுக்கு அடுத்தபடியாக அமர்ந்துள்ள அந்த பெண்மணியின் மீது உங்களுடைய கரத்தை வைத்து, வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் மற்றும் மூட்டு வீக்கங்கள் அவளை விட்டு போய்விடும் என்று சொல்லுங்கள். அவள் …?… 204 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது நீங்கள் சுகமடையப்போகின்றீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வீட்டிற்குச் சென்று சுகமாயிருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய பாதையில் சென்று, “கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறுங்கள். 205 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஸ்திரீகளுக்கான தொல்லையும், கூட, உங்களைவிட்டுப் போய்விடும் என்றும் நீங்கள் சுகமடையப்போகிறீர்கள் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? போய், “கர்த்தாவே, உமக்கு நன்றி” என்று கூறுங்கள். 206 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? [சகோதரி, “ஒரு குறுத்தெலும்பு இழுக்கப்பட்டது” என்கிறார்.—ஆசி.] ஏன், என்னே, என்னே! [“டோட்டன்.”] நான் உங்களுடைய பெயரை அறிவேன். நான்—நான் முன்பே… [“டோட்டன்.”] நான் பாப்டிஸ்டு சபையில் போதகராக இருந்தபோது. [“டோட்டன்.”] டோட்டன். [“டெல்லா டோட்டன்.”] சகோதரி டெல்டா டோட்டன். நீங்கள் இப்பொழுது முதுகுத் தொல்லையினால் அவதியிற்றுக் கொண்டிருக்கிறீர்கள். [“ஆம்.”] இப்பொழுது, அது சரியாகப் போகிறது. அவர் உங்களை சுகமாக்கப்போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பு மில் டவுன் பாப்டிஸ்ட் சபையில் அங்கே என்ன நடந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? [“ஆம். எனக்கு அது நினைவிருக்கிறதே!”] இன்றும் அவர் அதே தேவனாகவே இருக்கிறார். என்னுடைய சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஜார்ஜ் ரைட், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உமக்கு நினைவிருக்கிறதா? என்னே, எப்படி… நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், இந்த அபிஷேகத்தோடு, நான் உங்கள் மேல் என்னுடைய கரங்களை வைத்தால், நீங்கள் சுகமடைவீர்கள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவள் சுகமடைவாளாக. ஆமென். விசுவாசமாயிருங்கள்! பாருங்கள், நீங்கள் எல்லோரும் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா?

77207 இப்போது, இந்தப் பெண்மணியைப் பார்ப்பது, எவ்வளவாக பழைய நினைவுகளைத் திரும்பக் கொண்டு வருகிறது! இன்னும், இவளுடைய பெயரை என்னால் இன்னும் நினைவுகூர முடியவில்லை, ஆனால் நான்… [யாரோ ஒருவர், “டோட்டன்” என்கிறார்—ஆசி.] டோட்டன். டோட்டன், அது உண்மை. ஓ, ஆம், அவளுடைய மகள் பெர்டி. அது சரி. அது முற்றிலும் சரியாக இருக்கிறது. நான் என் நிலையில் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள், நான் ஒரு விதமாக கொஞ்சம், உங்களுக்கு தெரியும், அது ஒரு விதமான…என்னால் அதை விளக்க முடியாது. 208 ஆனால் பெண்மணியே, உங்களுடைய முதுகுத் தொல்லை நீங்கிவிட்டது. போய், கர்த்தரை துதித்து, “கர்த்தாவே உமக்கு, நன்றி” என்று கூறுங்கள். 209 உங்களுடைய இருதயக் கோளாறும் கூட, குணமாகிவிடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியே போய், களிகூர்ந்துகொண்டே, “கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறி, இதை விசுவாசியுங்கள். சரி. இப்பொழுது விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படாதீர்கள். 210 பெண்மணியே, வாருங்கள். உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு அநேக குறைகள் இருக்கின்றன. உங்களுக்கும் கூட, முதுகுத் தொல்லை இருக்கிறது. தேவன் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. களிகூர்ந்துகொண்டே, செல்லுங்கள். அது, அது அவரே உங்களை அந்த விதமாக உணரச் செய்கிறார். கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

78211 வா, மகனே. தேவன் அந்தக் குழந்தையின் நரம்புத்தளர்ச்சியைக் குணப்படுத்தி அதை சுகப்படுத்தப்போகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி. வா, நண்பனே, நான் உன்னுடைய கரத்தைக் குலுக்கட்டும். 212 அன்புள்ள தேவனே, அந்த பொல்லாத காரியத்தை இந்த சிறு பையனிடமிருந்து எடுத்து போடும், அவன் இயல்பாக ஜிவிப்பானாக. இயேசுவின் நாமத்தில். ஆமென். 213 சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா, நீங்கள் விசுவாசிக்கவில்லையா? அவன் சுகமடைவான். சந்தேகமே கொள்ளாதே. 214 மிக இளமையான வாலிபத்திலேயே இருதயக்கோளாருடன் இருப்பவரே. தேவன் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? போய், “என்னை சுகப்படுத்தினதற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி” என்று கூறுங்கள். 215 தேவன் வயிற்றுக் கோளாறைக் குணப்படுத்தி, உங்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? போய், “உமக்கு நன்றி, கர்த்தாவே” என்று கூறி, களிகூர்ந்துகொண்டே செல்லுங்கள். 216 அவர் இன்னமும் தேவனாகவே இருக்கிறார், அவர் அவ்வாறில்லையா? நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் விசுவாசிப்பதுதான். அது சரிதானே? கடைசி நாட்களிலே மனுஷ குமாரனை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?

79217 இங்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு காரியம் சம்பவித்தது, அது எங்கு நடந்தது என்று கண்டறிய முயற்சிக்கிறேன்…என்னால் முடியவில்லை. யாரோ ஒருவர் விசுவாசத்தை உடையவராயிருந்தபடியால் ஏதோ காரியம் செய்யப்பட்டது. இல்லையென்றால், அடுத்த ஞாயிற்றுக்கிழமை அல்லது என்னால் முடியும்போது நான் அவர்களைக் கண்டறிவேன். நீங்கள்—நீங்கள்…அதோ மீண்டும் வந்திருக்கிறது. நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தியுள்ளீர்கள். தேவனால் அந்த இருதய கோளாறைக் குணப்படுத்த முடியும் என்றும், உங்களை சுகப்படுத்த முடியும் என்றும், உங்கள் மகளையும் அங்கே குணப்படுத்த முடியும் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா… நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? திருமதி. நெஃப், நீங்கள் அந்தத் தேவனை விசுவாசிக்கிறீர்கள்…லியோ நெஃப். நான் உங்களை அறியேன், ஆனால் நீங்கள்தான் அவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு இருதயக்கோளாறு இருக்கிறது, உங்களுடைய சிறிய மகளுக்கு ஒரு சிறுநீரக கோளாறு இருக்கிறது. அவள் சுகமடைய போகிறாள் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய விசுவாசம் உங்களை சொஸ்தப்படுத்துகிறது. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 218 அங்கே பின்னால் ஞானஸ்நான தொட்டியண்டை, அங்கே வயிற்று கோளாறோடு நின்றுகொண்டிருக்கும் உங்களை, இயேசு கிறிஸ்து குணமாக்குகிறார். 219 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைப்போம். ஓ, நாம் எந்த நேரத்தில் இருக்கிறோம் என்பதை குறித்து சிந்தித்துப் பாருங்கள், அந்த நேரத்தை குறித்து சிந்தியுங்கள். நாம் மெய்யாகவே தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள். கடைசி நாட்களில் அவர் இதைச் செய்வதாக வாக்குரைத்திருக்கிறார். நான் இந்த கைக்குட்டைகளின் மீது கைகளை வைக்கிறேன். 220 அன்புள்ள தேவனே, ஜனங்களுடைய சரீரங்கள் சுகப்படுவதற்கென்று இந்த உறுமால்களை நீர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினூடாக, ஆசிர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

80221 இப்போது உங்களுடைய கரங்கள் ஒருவர் மற்றொருவர் மேல் இருப்பதோடு, நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினராய் இருக்கிறீர்கள். இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துவதாகவும் இந்தக் காரியங்களை செய்வதாகவும் வாக்குத்தத்தம் செய்த அதே பரிசுத்த ஆவியானவர், அவர் உங்களுக்குள் இருக்கிறார். நீங்கள் அவருடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள், அவர் உங்களுடைய ஒரு பாகமாக இருக்கிறார். இப்பொழுது, அவர், இதை, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றார். அது நீங்கள்தான். “அவர்கள் வியாதியஸ்தர் மீது கைகளை வைப்பார்களானால், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” இப்போது, நீங்கள் உங்களுக்காக ஜெபிக்காதீர்கள், யார் மீது உங்கள் கைகளை வைத்திருக்கிறீர்களோ அவருக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் சேர்ந்து ஜெபிப்போமாக, இக்கட்டிடத்தில் பலவீனமான ஒருவரும் இல்லாதிருப்பார்களாக. நாம் இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும், என்னுடைய அருமை சகோதரனே, சகோதரியே, அது இங்கே இருக்கிறது, நாம் பேசியிருக்கிற அதே காரியம், பரிசுத்த ஆவி, தேவன், இங்கேயே இருக்கிறார்.

81222 அன்புள்ள இயேசுவே, நாங்கள் உம்முடைய பிரசன்னத்தை அடையாளம் கண்டு கொள்கிறோம். அன்றொரு நாளில், மரித்துப்போயிருந்த சிறு குழந்தைக்கு விசுவாச ஜெபத்தின் மூலம் திரும்ப ஜீவன் தந்தீர். அன்புள்ள தேவனே, நாங்கள் ஒவ்வொருவரிடமும் செல்ல முடியாதபடி அதிகமான பேர் இங்கே இருக்கின்றனர், நேரமோ கடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கைகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் விசுவாசிகள். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். 223 சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டுவிட்டாய்! இயேசு கிறிஸ்து உன்னைத் தோற்கடித்துவிட்டார்! அவர் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்து, இன்றிரவு எங்கள் மத்தியில் நின்றுகொண்டு, இந்தக் கடைசி நாளின் செய்தியை ரூபகாரப்படுத்துகிறார். இந்த ஜனங்களை விட்டு வெளியே வா! இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்களை விட்டு போ! “என் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்,” நீ துரத்தப்பட்டுவிட்டாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்த சபையாரை விட்டு போ!

82224 இப்பொழுது உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஒவ்வொருவரும், எழுந்து நில்லுங்கள். சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும், எழுந்து நில்லுங்கள். இப்போது உங்களுடைய கரங்களை உயர்த்தி அவருக்கு துதி செலுத்துங்கள்! “என்னுடைய சுகமளித்தலை இப்போதே நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தேவனிடம் கூறுங்கள். “என்னுடைய சுகமளித்தலை நான் இப்போதே ஏற்றுக்கொள்கிறேன். கிறிஸ்துவே, நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர். இப்போது நான் உம்மை விசுவாசிக்கிறேன், என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். ஆமென்.” நான் அவரைத் துதிப்பேன், நான் அவரைத் துதிப்பேன், பாவிகளுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரைத் துதிக்கிறேன்; ஜனங்களே நீங்கள் எல்லோரும், அவருக்கு மகிமையை செலுத்துங்கள், ஏனெனில் அவருடைய இரத்தமே ஒவ்வொரு கறையையும் கழுவிற்று. 225 நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அப்படியானால் நாம் அவரைத் துதிப்போமாக. இப்போது அந்த சகோதரன் இங்கே நம்மை கலைந்து செல்லும்படி அனுப்பி வைக்க வருகையில், ஓவ்வொருவரும், உங்கள் கரங்களை உயர்த்தி, அவருக்கு துதி செலுத்துங்கள். 