1 விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், எல்லாக் காரியங்களும் கூடும், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. பிதாவாகிய தேவனே, இந்நாளில் ஜனங்களுக்காக நீர் செய்துகொண்டிருக்கிற யாவற்றையும் கண்டு, அதுவே இன்றிரவு எங்களுடைய உத்தமமான ஜெபமாக இருக்கிறது. கர்த்தாவே, நாங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்வோம், அது சத்தியமாயிருக்கிறது என்றும், எழுதப்பட்ட வார்த்தை எங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது என்றும் விசுவாசிப்போம் என்று நாங்கள் உம்மை வேண்டிக்கொள்கிறோம். பிதாவே, இந்தக் காரியங்களை அருளும். 2 இப்பொழுது இன்றிரவு இந்தக் காலையில் எங்களுக்காக வேத வாக்கியங்களின் மேல் நீர் காண்பித்த வெளிச்சத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி கூற விரும்புகிறோம். கர்த்தாவே, நீர் உம்முடைய வார்த்தை சத்தியம் என்பதை ரூபகாரப்படுத்த வேண்டும் என்று, அந்த ஜெப வரிசையில் இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். 3 நாங்கள் எல்லா சபைகளுக்காகவும், தேசம் முழுவதிலுமிருந்து சிறிய ஒலிபெருக்கிகள் மூலம் கேட்கும்படி கூடியிருக்கிற சபைகளுக்காகவும் ஜெபிக்கிறோம், மேற்கு கடற்கரை வரையிலும், அரிசோனா மலைகள் வரையிலும், டெக்ஸாஸ் சமவெளிகளிலும், கிழக்கு கடற்கரை வரையிலும், தேசம் முழுவதிலும், கர்த்தாவே, அவர்கள் அங்கு கூடியுள்ளனர். பல மணி நேர இடைவெளியில் நாங்கள் இருக்கிறோம், ஆனால், கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். பரலோகப் பிதாவே, நீர் அவரை உம்முடைய சபைக்காக விரைவில் அனுப்ப வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
24 நீங்கள் அமரலாம். இன்றிரவு இங்குள்ள யாவருக்கும் கிறிஸ்தவ வாழ்த்துக்கள். நாம் இன்னமும் மூச்சுவிட முடியாத அளவிற்கு நெருக்கமாக கூடியிருப்பதை குறித்து நான் வருந்துகிறேன். அநேக ஜனங்கள் உள்ளபடியால், குளிரூட்டப்பட்ட குளிர்சாதன கருவிகளும் கூட, அதிக பலனை விளைவிப்பதில்லை. வழக்கமான சபை கூடுகை நேரங்களில், அந்த குளிரூட்டும் கருவிகள் உங்களை உறைய வைக்கும். ஆனால் இப்பொழுது குளிர்சாதன இயந்திரம் கூடுமானவரை காற்று வீசிக்கொண்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு விசிறியை வைத்து கொண்டிருக்கிறார்கள். 5 கிழக்குக் கரையிலிருந்து மேற்கு வரையிலும், கிறிஸ்துவுக்குள் கேட்டுக் கொண்டிருக்கிற, நம்முடைய நண்பர்கள் யாவருக்கும் நாங்கள் வாழ்த்துக்களை அனுப்புகிறோம். நாங்கள் சான் ஜோஸில் உள்ள, சகோதரன் பார்டர்ஸ், அங்குள்ள குழுவினருக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறோம். அரிசோனாவில் உள்ள பிரஸ்காட் என்ற இடத்தில் உள்ள மலைகளுக்கு, கர்த்தருடைய வருகைக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கிற சகோதரன் லியோ மெர்சியருக்கும் மற்றும் அவருடைய குழுவினருக்கும் நாங்கள் வாழ்த்துக்களை அனுப்புகிறோம். இன்றிரவு கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிற டூசானில் உள்ளவர்களுக்கு நாங்கள் வாழ்த்துக்களை அனுப்புகிறோம். டெக்ஸாஸில் உள்ள ஹூஸ்டனில் கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்குமே. சிக்காகோவில், கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்குமே. கிழக்கு கடற்கரையிலும், நியூயார்க்கிலும், கனெக்டிகட்டிலும், அங்குள்ள பெரிய குழுக்கள், அது கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அமர வைக்க நமக்கு இங்கு இடமில்லை, எனவே நாம் தொலைபேசி மூலமாக வார்த்தையை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். இன்றிரவு சகோதரன் ஜூனியர் ஜாக்ஸனுக்கும், கிளார்க்ஸ்வில்லில் உள்ள அவருடைய குழுவினருக்கும் நாங்கள் வாழ்த்துக்களை அனுப்புகிறோம். சகோதரன் ரடல், 62-ல் உள்ள, அவருடைய குழுவினரும் கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். நாம் இன்றிரவு இங்கே சொந்த சபையில், கூடாரத்தில் கூடி, கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
36 இப்பொழுது, உங்களில் அநேகர் இன்று காலை ஆராதனைகளில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வராத ஒவ்வொருவரும், அந்த ஒலி நாடாவைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் ஐயன்மீர், இது என்ன சமயம்? என்னும் செய்தி பிரசங்கிக்கப்பட்டது முதற்கொண்டு இதுவே சபைக்கு அளிக்கப்படும் மிகவும் ஒளிவு மறைவில்லாத செய்தியாகும் என்று நான் நினைக்கிறேன். நான் ஆவியின் அபிஷேகத்தை உணர்ந்தேன், நான் செய்ததைக் கூற வழி நடத்தப்பட்டதை உணர்ந்தேன். அது நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்டது, ஆனால் அதே சமயத்தில் நான் அதைச் செய்யும்படி வழிநடத்தப்பட்டதை உணர்ந்தேன். நாம் எந்த வேளையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை, கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம், காண்பித்தார் என்று நான் நினைக்கிறேன். சம்பவித்துக் கொண்டிருக்கிற இந்த இரகசியமான காரியங்களை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வோம். வேதம், “ஞானிகள் புரிந்து கொள்வார்கள்,” என்று கூறியுள்ளதை, நீங்கள் அறிவீர்கள். 7 ஆனால் தேசங்களும் ஜனங்களும் “பலவீனமடைந்து, அறிவுக்கூர்மையடைவார்கள்.” சற்று சிந்தித்துப் பாருங்கள், இப்பொழுது சராசரி அமெரிக்கன் நடுத்தர வயதில், கிட்டத்தட்ட இருபது வயதிற்குட்பட்டவனாய், பலவீனமானவனாய், ஆனால் புத்திசாலியானவனாய் இருக்கிறான். அந்நாட்களில் அவர்களிடம் ஜெட் விமானங்களும், மற்றும்—மற்றும் அணுகுண்டுகளைக் கொண்ட விமானங்களும் கிடையாது, ஆனால் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர். நாம் பலவீனமடைந்து, ஞானமுள்ளவர்களாகிக் கொண்டிருக்கிறோம், நம்முடைய சொந்த ஞானமே நம்மை அழிக்கப் போகிறது. நாம் நம்மை அழித்துக் கொள்வோம். தேவன் நம்மை அழிக்கமாட்டார்; நம்முடைய ஞானம் நம்மை அழித்துப் போடும். அது எப்பொழுதும் அவ்விதமாகவே இருந்து வந்துள்ளது, மீண்டும் அவ்வாறே இருக்கும்.
48 இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு காலையில், நான் என்ன பேசுவேன் என்று இப்போது தெரியவில்லை, ஆனால் கர்த்தர் நம்மை ஜீவிக்க அனுமதித்து, ஒன்றும் சம்பவிக்காமல் இருந்தால், அது அவருடைய சித்தமாயிருக்கும் என்று நான் நம்புகிறேன், அடுத்த ஞாயிறு காலை மற்றொரு செய்தியைப் பேசவும், அடுத்த ஞாயிறு இரவு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவும் நாங்கள் தீர்மானம் கொண்டுள்ளோம். பின்னர் அரிசோனாவிலுள்ள பிள்ளைகளை பள்ளியில் பதிவு செய்யும்படியாக குடும்பத்தை அழைத்துக் கொண்டு திரும்பிச் செல்ல வேண்டியது என்னுடைய கடமையாயுள்ளது. அப்பொழுது நீங்கள்…கூட்டங்களைக் குறித்து முழுமையாக, அல்லது நாங்கள்…நாங்கள் இருக்க வேண்டுமென்ற நோக்கங்கொண்ட இடங்களைக் குறித்து அந்த குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு அறிவிப்போம். எனவே, தேவன் உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. 9 இப்பொழுது இன்றிரவு, அது…என்று தெரியும், நான் துவங்குவதற்கு பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்துவிட்டேன், இங்கே ஜெபர்ஸன்வில்லில் ஏழு மணி நாற்பத்தைந்து நிமிடங்களும்; அதாவது கிழக்கு கடற்கரையில் எட்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்களும், மற்றும் மேற்கு கடற்கரையில் சுமார் ஐந்து மணி இருக்கும். எனவே இப்பொழுது நாம் இங்கே கிட்டத்தட்ட சூரிய அஸ்தமனத்தில் இருக்கிறோம். நான் ஒரு குறுகிய ஆராதனைக்காக உங்களிடத்தில் பேச விரும்புகிறேன், ஆவியின் அபிஷேகத்தை கண்டறிய முயற்சித்து, அதன்பின்னர் ஜெப வரிசையை அழைக்க வேண்டும்.
510 இங்குள்ள சபையை, மற்ற இடங்களில் கூடியிருக்கும் சபையைப் போலவே நான், ஒரு மனிதனை, ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு சகோதரனை கண்டுபிடிக்க விரும்புகிறேன்; நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் துவங்கும்போது, உங்களுடைய சபையில் உள்ளவர்கள் மேல் போய் கரங்களை வையுங்கள். தேவன் சர்வவல்லமையுள்ளவர் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அவர் எங்கும் இருக்கிறார். எனவே, டெக்ஸாஸில், கலிபோர்னியாவில், அரிசோனாவில், நீங்கள் எங்கிருந்தாலும், நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் துவங்கும்போது, சுகவீனமாயிருக்கிறவர்கள் மேல் கரங்களை வைக்க வேண்டும். தேவன் ஜெபத்தைக் கேட்டு பதிலளிப்பார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். 11 விநோதமான காரியம், கடந்த ஞாயிறு இரவு, அபிஷேகம் இருந்து கொண்டிருந்தது, பரிசுத்த ஆவியானவர்… அது ஒரு பெரிய காரியமாயிருந்தது. மற்ற சமயம் நான் இங்கிருந்தபடியால், நான் பல மாதங்களாக ஒரு—ஒரு பகுத்தறியும் ஜெப வரிசையை உடையவனாய் இருக்கவில்லை. அப்பொழுது அங்கே ஒரு வாக்குத்தத்தத்தின் கீழ் நடப்பது…அவர் அதைச் செய்வார் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அவர் அதைச் செய்வார் என்று உங்களால் கூற முடியாது. நீங்கள் அங்கு நடந்து சென்று காத்திருக்க வேண்டும். அவர் இராஜாதிபத்தியம் படைத்தவர். அவர் விரும்புகிறதை அவர் செய்கிறார். ஆனால் அங்கே நின்று, அவர் என்ன செய்வார் என்பதைக் காண காத்திருங்கள், அப்பொழுது அது அந்தவிதமாக உங்கள் மேல் ஊடுருவுவதை உணருவீர்கள்.
612 கூட்டத்தின் முடிவில், அது யாரென்று தெரியாமல் இருந்தது, ஆனால் அங்கே உயரமாக வழுக்கை தலையோடு ஒரு—ஒரு மனிதர் இருந்தார், அவர் அவர் மிகவும் வியாதிப்பட்ட ஒரு நபராய் இருந்தார். 13 அதன்பின்னர் கடைசியாக, ஒரு மனிதன் இங்கே மேடையின் மேல் தோன்றி, அவர் தன்னுடைய தலையை குனிந்து, வயிற்றை பிடித்துக் கொண்டு அவதியுறுவது போன்று காணப்பட்டார். அது அந்த முதல் மனிதனாகவோ அல்லது இரண்டாம் மனிதனாகவோ இருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன், அல்லது எப்பொழுதோ நான் அவருக்காக ஜெபித்திருந்தேன், ஏனெனில் அவர் வழுக்கை தலையையுடையவராய் தன்னுடைய தலையை தாழ்த்திக் கொண்டிருந்தார்; ஒரு பெரிய உருவமுடைய மனிதன், குனிந்து நின்றார். ஆனால் நான் சுற்றும் முற்றும் பார்த்தபோது, அங்கே வெளியே அமர்ந்திருந்த அந்த பெருந்தன்மையான மனிதரைக் கண்டேன், ஆனால் அவர் களிகூர்ந்து கொண்டிருந்தார். நான், “அது எங்கே உள்ளது?” என்று எண்ணினேன். அது எங்கே இருந்தது என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை. என்னால் அதை உணர முடிந்தது, எனக்கு முன்னால் உள்ள மனிதனைக் காண முடிந்தது. அது இந்த வழியாக சுற்றி இழுப்பதை நான் உணர்ந்தேன், அது பின்னால் இருந்து வந்து கொண்டிருந்தது. நான் சகோதரன் நெவிலையும், இங்கே அமர்ந்துள்ள இந்த இருவரையும் நோக்கிப் பார்த்தேன், அது அவர்கள் அல்ல. அப்பொழுது நான், “அந்த மனிதன் அந்த ஞானஸ்நான அறையின் உட்புறத்தில் இருக்கிறார்” என்றேன். அது யாரென்று உங்களுக்குத் தெரியுமா? சகோதரர் ஷெப்பர்ட். அவர் அங்கே பின்னால் தன்னுடைய தலை வணங்கியிருப்பதோடு உட்கார்ந்து, ஜெபித்துக் கொண்டிருந்தபடியால், என்னால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. 14 தான் மரிக்கப் போவதாக எண்ணியிருந்தார், கடந்த சில வாரங்களாக அவர் அதையே எண்ணிக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரிடம் ஒரு புதிய ஜோடி காலணிகளை வாங்கி வரும்படி கூறினபோது, அவர், “எனக்கு அவைகள் தேவைப்படாது. நான் அவ்வளவு நேரம் இங்கே இருக்கமாட்டேன்” என்றார்.
715 அன்றொரு நாள் அவர் என்னை சந்தித்தார்…அங்கே முற்றத்தில், சகோதரன் உட்ஸ், சத்தமிட்டு தேவனைத் துதித்தார். மேலும், “நான் பன்றி இறைச்சி, முட்டை, தக்காளி மற்றும் நான் விரும்பும் எதையும் புசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். 16 தாழ்மையாய் தன்னுடைய இருக்கையை விட்டுவிட்டு, அங்கிருந்து திரும்பி ஜெபித்துக் கொண்டிருந்தார். பாருங்கள், உங்களுக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை, உங்களுக்கு விசுவாசம் மாத்திரமே தேவை. பார்த்தீர்களா? இப்பொழுது, அவர் சுகமடைந்துவிட்டாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, நான், “ஒரு—ஒரு மனிதன், ஜெபித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஏதோ கோளாறை உடையவராய் இருக்கிறார்” என்றேன். அது என்னவாயிருந்தது என்று கூறி அழைக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன், “வயிற்றுக் கோளாறு, இங்கே பின்னால் ஜெபித்தல். கர்த்தராகிய இயேசு உங்களை சுகமாக்குகிறார்” என்று கூறினேன். இப்பொழுது, என்னால் கூற முடிந்ததெல்லாம் அவ்வளவுதான். அந்த இழுப்பு அவர் ஜெபித்துக் கொண்டிருந்ததாய் இருந்தது. என்னால் அதைக் காண முடிந்தது, ஆனால் என்ன சம்பவிக்கிறது என்று எனக்குத் தெரியாது. பார்த்தீர்களா? 17 ஆனால் அது திரும்பி வருவதை நீங்கள் கேட்கும்போது, எல்லோருக்கும் தெரியும், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று அது கூறும்போது, பாருங்கள், அதன்பின்னர் இனி பேசுவது நான் அல்ல; அது அவரே.
818 ஆனால் நான் எப்பொழுதுமே, “இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்கிவிட்டார்” என்று கூறுகிறேன், அது முற்றிலும் உண்மை. “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 19 ஆனால் அது, “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று வரும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும், என்ன நடக்கப் போகிறது என்றும் கூறும்போது, அதை கவனியுங்கள், அது அந்தவிதமாகவே இருக்கும். 20 ஆனால் நான், “இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்தி, உங்களை சுகமாக்குகிறார்” என்று கூறும்போது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், ஏனென்றால் அவர் அதை ஏற்கனவே கூறியிருக்கிறார். அவர் கூறினதையே நான் திரும்பவும் கூறிக்கொண்டிருக்கிறேன். 21 ஒரு தரிசனம் என்பது அவர் காண்பித்ததையே திரும்பக் கூறுவதாகும். உங்களுக்குப் புரிகிறதா?
922 இப்பொழுது நாம் துரிதமாக வார்த்தைக்குள்ளாகச் செல்வோமாக, ஏனென்றால் உங்களில் அநேகர் இன்றிரவு பல மைல்கள் பயணிக்க வேண்டியவர்களாக உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். தேவன் உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு உதவி செய்து, சாலைகளில் உங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது நான் இன்றிரவு பரிசுத்த மத்தேயு 21-ம் அதிகாரம், 1 முதல் 11 வசனங்கள், பரிசுத்த மத்தேயுவுக்கு திருப்ப விரும்புகிறேன். மேலும், இப்பொழுது, நீங்கள் உங்களுடைய வேதாகமத்தை வைத்திருக்கவில்லையென்றால் அல்லது நீங்கள் இந்த வேதவாக்கியங்களை குறித்து வைத்துக் கொள்ள விரும்பினால், சரி.
1023 இப்பொழுது இந்தக் காலையில் செய்தியை ஒருபோதும் கேட்காத உங்களுக்கு, நீங்கள் ஒரு ஒலிப்பதிவு கருவியை வைத்துள்ளீர்கள்; ஒலி நாடாக்களை விற்பதற்கு நாங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை. நாம் எந்தக் காரியத்தையும் விற்பதற்கு ஒருபோதும் கோருவதில்லை. சில சமயங்களில் ஒரு பெரிய கூட்டத்தில் அவர்கள் சில புத்தகங்களை அங்கே பின்னால் வைத்திருப்பதாக அறிவிப்பார்கள்; நாம் அவைகளிலிருந்து எந்தக் காரியத்தையும் கூடுதலாக சம்பாதிக்கிறதில்லை. சகோதரன் வேயில் எழுத்தாளர். ஒலிநாடாக்களில், ஒலிப்பதிவு செய்யும் தொழிலை நடத்தும் மனிதர் உங்களிடம் கூறுவார், நாங்கள் ஒலிநாடாக்களை பதிவு செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவில்லை. நாம்…அது “ஒலிநாடாக்கள்” அல்ல; அது செய்தியாயுள்ளது. அது பணம் என்று ஒரு மனிதன் தன்னுடைய சிந்தையில் புரிந்து கொள்ளும்போது, அவன் இனிமேல் ஒலிநாடாக்களை பதிவு செய்யப்போவதில்லை. அது உண்மை. நான் அதைக் குறித்து கேட்டுக்கொண்டிருந்தபோது, நம்முடைய ஒலிநாடாக்கள் சுமார் ஐந்து டாலர்களுக்கு குறைவாக விற்கின்றன என்று நான் நினைக்கிறேன், மூன்று முதல் ஐந்து வரை, அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்று. என்ன கூறுகிறீர்? நீண்ட ஒலிநாடாக்களுக்கு, அவைகள் நீண்டதாய் இருப்பதால், மூன்று; மற்றும் நான்கு என்றவாறு விலை நிர்ணயிக்கப்படுகிறது. 24 ஒரு குறிப்பிட்ட ஊழியக்காரரிடம், அவருடைய ஒலிநாடாக்களில் ஒன்றைக் குறித்து நான் கேட்டேன், அது ஒன்பது டாலர்கள், சுமார் இருபது அல்லது முப்பது நிமிடங்களுக்கான ஒரு செய்தியாக இருந்தது.
1125 எனவே அங்கே பின்னால் உள்ள நம்முடைய சகோதரன் சாத்மன், அவர்களில் எவருமே பணக்காரர்களாகிக் கொண்டிருக்கவில்லை என்பதை நான் காண்கிறேன், இந்த ஒலிநாடாக்களை அவர்கள்—அவர்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாருங்கள், அவர்கள் அதை நடத்துவதற்கு போதிய அளவு சம்பாத்தியத்தை அவர்கள் பெறுகின்றனர். இதற்கு மேல் அவர்களை வேறு ஏதும் செய்யும்படி கேட்க முடியாது, ஏனென்றால் அவர்கள் ஒலிநாடாக்களையும் மற்ற ஒவ்வொரு காரியத்தையும் வாங்க வேண்டும். இயந்திரங்கள் மிகவும் விலையுயர்ந்தவை, துவக்கத்திலேயே, அந்த ஒலிநாடாக்களை பதிவு செய்யும்படி அமைக்க சுமார் பத்தாயிரம் டாலர்கள் செலவாகும். 26 இப்பொழுது, நான் சமீபத்தில் புரிந்து கொண்டேன்…இன்னும் நான் அதை அறிவித்திருக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒரு ஒலிநாடா ஏலம் இருக்கும். ஒவ்வொரு முறையும் நாம்…தர்மகர்த்தாக்களே, எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நான்…எந்தக் கூட்டத்திலும் கூட வருவதில்லை. அது ஆதரவாகவும் அல்லது எதிராகவும் இல்லை. அவர்கள் தங்களுடைய ஏலத்தில் தொகையை அறிவிக்கின்றனர்; ஒலிநாடாக்களை பதிவு செய்ய வேண்டிய அடுத்த மனிதன் யார் என்பதை தர்மகர்த்தாக்கள் தீர்மானித்து, அவருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார்கள். அதைக் குறித்து எனக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். அவர்கள் அதை கவனித்துக்கொள்கிறார்கள், ஏனென்றால் எனக்கு குழந்தைகளை பிரதிஷ்டை செய்யவோ அல்லது ஞானஸ்நானம் கொடுக்கவோ நேரமில்லாதிருக்கும்போது, ஒலிநாடாக்களை அவர்கள் கவனித்துக்கொள்ள விட்டுவிடுகிறேன்.
1227 எனவே நான் என்னுடைய சிந்தையை இந்த செய்தியின் மேல் வைத்துள்ளேன், அதுதான் அந்த மூன்றாம் இழுப்பு, அது நான் உண்மையாயும், பயபக்தியோடும் இருக்க வேண்டும். 28 மத்தேயு 21:1 முதல் 11 வரை. நீங்கள் கவனமாயிருக்கும்படியாக…இல்லை வேத வாக்கியங்களுக்கு திருப்பும்படி நான் கூறினேன். அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். ஒருவன் உங்களை ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவர்களை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள், தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது, சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். 29 இப்பொழுது ஜெப வரிசை துவங்குவதற்கு முன்னர் சுமார் முப்பது நிமிடங்களுக்கு அதிலிருந்து ஒரு பாடப்பகுதியை நான் எடுத்துக் கொள்வேனானால், நான் இதை ஒரு பாடப் பொருளாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்: மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?
1330 இப்பொழுது, அது மிகவும் சோர்வுற்ற, நரம்புத்தளர்ச்சியான நாளாக இருந்து வந்தது, அது வழக்கத்திற்கு மாறான ஒரு நாளாகும். இயேசுவானவர் பஸ்காவில் கலந்து கொள்ள ஆயத்தமாக எருசலேமிற்கு வந்ததை நாம் காண்கிறோம். பஸ்காவில் தான் பஸ்கா ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது, ஜனங்களின் பாவநிவிர்த்திக்காக கிருபாசனத்தின் மேல் இரத்தம் பூசப்பட்டது. அவர் பெத்பகேயிலிருந்து வந்து, ஒலிவ மலையின் உச்சிக்கு வந்திருந்தார், அது எருசலேம் கட்டப்பட்டிருந்த மற்றொரு குன்றின் மேல் நோக்கிப் பார்க்கிறதாயுள்ளது. அவர் நோக்கிப் பார்த்தபோது, இது அவருடைய கடைசி விஜயம் என்பதை அறிந்திருந்தார். 31 அவர் பாவமுள்ள மனிதர்களின் கரங்களில் ஒப்புவிக்கப்படும்போது, அவர்கள் அவரைக் கொன்று போடும் நேரமாய் இது இருந்தது. அவர் ஒரு மனிதனால் மரித்த ஒரு பயங்கரமான மரணத்தை அடைந்து, அடக்கம் பண்ணப்படுவார். அவர் தம்முடையவர்களாலேயே காட்டிக் கொடுக்கப்படுவார், அவர்களில் சிலர் அவரோடு சரியாக நிற்கின்றனர். அவர் தேவனாயிருக்கிறபடியால், அவர்களுடைய இருதயங்களில் என்ன இருந்தது என்பதை அறிந்திருந்தார், அவரை யார் காட்டிக் கொடுப்பார்கள் என்பதை ஆதி முதல் அறிந்திருந்தார். அந்த மனிதன் அவருடைய பக்கத்தில் உட்கார்ந்து, அவருக்கு அவருடைய பணத்தை எண்ணுவான் என்பதை அறிந்திருந்தார், அந்த மனிதன் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்பதை அறிந்திருந்தார். அங்கே அவருக்காக ஒரு கொடூரமான ரோம சிலுவை காத்துக் கொண்டிருந்ததை அறிந்திருந்தார். அவருடைய சரீரத்திலுள்ள அவருடைய தண்ணீரும், அவருடைய சரீரத்தின் இரத்தமும் பிரிக்கப்படும் என்பதையும், அவருடைய நெற்றியிலிருந்து இரத்தம் வழியும் என்பதையும், வியர்வை போன்ற பெரிய துளிகள் வழிந்தோட வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்,. அவருக்கு முன்பாக இருந்த யாவற்றையும் அவர் அறிந்திருந்தார். அவர் மலையின் மேல் நின்றுகொண்டு எருசலேமை நோக்கிப் பார்க்கிறார்.
1432 “ஒரு மேலான பக்தியான ஜனங்கள்” என்று அந்நாளில் அவர்கள் அழைத்த, அக்காலத்திலிருந்த ஜனங்கள், அவரை வெறுத்தனர். அந்த நாளின் சபைகள் அவரை வெறுத்து, அவரைக் கண்டனம் செய்தன, அவருக்கு செவிகொடுத்த யாவரையும் கண்டனம் செய்தன. அவர்கள் சென்று அவருடைய பிரச்சாரங்களில் கலந்துகொண்டால், அவர்கள் உடனடியாக சபையின் ஐக்கியத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். வேதம், “அவர் தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறியிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அவரிடத்தில் அன்பு கூர வேண்டியவர்கள், அவருக்காக இருந்திருக்க வேண்டியவர்கள், அவருடைய கசப்பான, கசப்பான சத்துருக்களாய் இருந்தனர்.
1533 அவர் தம்முடைய சிறு குழுவை ஒரு கூட்ட ஏழை ஜனங்களிடத்திலிருந்தும், மீனவர்களிடத்திலிருந்தும், வரிவசூலிப்பவர்களிடத்திலிருந்தும், கல்வியறிவற்றவர்களிடத்திலிருந்தும் ஏற்படுத்தியிருந்தார். அவர்களில் சிலர், “பேதமையுள்ளவர்களும், படிப்பறியாதவர்களுமாயிருந்தனர்” என்று வேதம் கூறியுள்ளது. சிலர் தங்களுடைய பெயரைக் கூட கையொப்பமிட முடியவில்லை. அவர் ஒருபோதும் தம்முடைய ஜனங்களைக் கொண்டு வர சபைகளுக்குச் செல்லவில்லை. 34 அவர் சபைத் தலைவர்கள் எவருடனும் ஒருபோதும் இணங்கவில்லை. மேலும், அதுமட்டுமின்றி, அவர் ஒரு தீர்க்கதரிசியின் போக்கையே பின்பற்றினார். அவருக்கு முன்னிருந்தவர்கள் செய்ததுபோல, அவர்கள் செய்த ஒவ்வொரு காரியத்தையும் அவர் கண்டனம் செய்தார்; ஏனென்றால் அவர்கள் வார்த்தையின் ஒரு பாகமாயிருந்தனர், அவர் வார்த்தையாக அதன் பரிபூரணத்தில் இருந்தார்.
1635 ஆனால் அவை எல்லாவற்றின் மத்தியிலும், ஒவ்வொரு காலத்தினூடாகவும், இருந்த ஒவ்வொரு தீர்க்கதரிசிக்குமே, அந்த செய்தியைக் கேட்க ஒரு குறிப்பிட்ட அளவு முன்குறிக்கப்பட்ட ஜனங்கள் இருக்கப் போவதாயிருக்கின்றனர், அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள். அவர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் அவிசுவாசியின் விமர்சனத்தை புறக்கணிக்கின்றனர். அவர்களுக்கு—அவர்களுக்கு அவர்களோடு வாக்குவாதம் கிடையாது. அவர்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் உண்டு, அதாவது விசுவாசித்து, அவர்களால் முடிந்தளவு அதன் ஒவ்வொரு துணுக்கையும் பெற்றுக்கொள்ள வேண்டும், இயேசுவின் பாதத்தண்டை அமர்ந்திருந்த மரியாளைப் போன்றே அதைப் பதித்துக் கொள்ள வேண்டும். 36 மார்த்தாள் அவருடைய இரவு ஆகாரத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தாள், இயேசு அவளிடம், “ஆனால், மார்த்தாளே, நீ உலகத்துக்குரிய காரியங்களைக் குறித்து அதிக அக்கறை கொண்டிருக்கிறாய், மரியாளோ மேலான பங்கைத் தெரிந்து கொண்டாள்,” என்று கூறினார், பாருங்கள், நித்திய ஜீவனின் காரியங்கள்.
1737 இப்பொழுது, அதை புரிந்து கொண்ட அநேக ஜனங்கள்… நாம் இன்றைக்கு உள்ளது போன்ற பிரசுரங்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை, அவர்கள் தொலைக்காட்சியையோ அல்லது தொலைபேசிகளையோ அல்லது அந்நாளின் எந்தக் காரியத்தையும் பெற்றிருக்கவில்லை, ஆனால் அவர் பஸ்காவில் இருக்கப் போகிறார் என்ற ஒருவிதமான பேச்சு சுற்றிலுமாய் இருந்தது. ஏனென்றால் ஜனங்களில் அநேகர், ஆவிக்குரிய சிந்தையுள்ளவர்களாயிருந்து, அவரே அந்த பஸ்கா ஆட்டுக்குட்டி என்பதை அறிந்திருந்தனர், ஏனென்றால் அவர் ஏற்கனவே நடக்கப்போகும் காரியங்களை அவர்களுக்கு கூறியிருந்தார்.
1838 அப்பொழுது, உண்மையாகவே, அவர் அங்கிருப்பார் என்பதை அறிந்து, அவர்கள் செய்தவிதமாக அவர்கள் அவரை நேசித்தார்கள், அவர்கள் அவருக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஒரு வாயிலில் இருந்து இன்னொரு வாயிலுக்கு தள்ளாடிக்கொண்டும், தள்ளிக்கொண்டும் இருந்த ஒரு கூட்டம் இருந்தது, ஒவ்வொரு விதத்திலும் கவனித்துக் கொண்டிருந்தனர், ஏனென்றால் அவர் அந்த வேளைகளில் ஒன்றில் தோன்றுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். 39 இந்த ஜனங்கள் ஒரு வாசலிலிருந்து மற்றொரு வாசலுக்கு ஓடிக்கொண்டிருப்பதன் காரணம் என்னவென்று மற்றவர்கள் யோசித்துக்கொண்டிருந்தனர். “என்ன கவர்ச்சி?” 40 அவர்கள் அதைக் கண்டறிய இந்த பக்கமாக மற்றும் இந்த பக்கமாக நோக்கிப் பார்ப்பார்கள். ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பின் கீழ் அவர்கள் ஏதோ ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருப்பது போன்று காணப்பட்டது. 41 ஓ, ஒரு சில நிமிடங்களுக்கு என்னுடைய பாடப்பொருளை எப்படி நான் மாற்றி இதைக் கூற விரும்புகிறேன், அதுதான் இன்றைய காரியமாய் உள்ளது. அவருடைய வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற ஜனங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடும், எதிர்பார்ப்புகளோடும் இருக்கின்றனர். நாம் அதை, அழுத்தத்தை உணர முடியும். அவர்கள் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு அடையாளத்தையும் வேதவாக்கியங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
1942 அவரைக் குறித்து முன்னுரைக்கப்பட்டிருந்த எல்லாக் காரியங்களையும், முடிவு வரையிலும் அவர்கள் கண்டபோது, முடிவு சமீபமாயிருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் அங்கு இருக்க விரும்பினர், எனவே அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். சிறுபான்மையினரில் ஒரு பகுதி ஜனக்கூட்டம் அவருக்காக இருந்தது. சிலர் அவருக்கு எதிராக இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர், தொண்ணூறு சதவிகிதம் அவருக்கு எதிராக இருந்தனர். 43 இன்றைக்கு அது அந்தவிதமாகவே மதசம்பந்தமான கூட்டங்களில் உள்ளது, அது உண்மையாகவே வார்த்தைக்கும் கிறிஸ்துவுக்கும் வரும்போது, ஏறக்குறைய ஒரு சதவிகிதம் பேர் அதை விசுவாசிப்பார்கள். என்ன செய்யப்பட்ட போதிலும், மற்ற பகுதியினர் அதில் கவனம் செலுத்தமாட்டார்கள், அவர்கள் அதைக் குறித்து ஒருவிதமான கேலிப் பேச்சையோ அல்லது அவதூறாகவோ பேசுவார்கள். ஏறக்குறைய அதேதான். காலம், காரியங்கள் பெரிதாக மாறுவதில்லை, சரித்திரம் திரும்பத் திரும்ப சம்பவிக்கிறது.
2044 பாருங்கள், அது ஒரு பதட்டமான இறுக்கத்தை இழுத்ததை நாம் கண்டறிகிறோம். அது செய்ய வேண்டியதாயிருந்தது. அது அதைச் செய்ய வேண்டும். அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர், அவர் அங்கு சென்றடையும்போது அவர் என்ன செய்வார் என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். அவர் செய்த எந்தக் காரியத்தையும் செய்து முடிக்க அவர்கள் அங்கு இருக்க விரும்பினர். அவர்கள் அதை விரும்பினர். அவர்கள் அதைக் காண விரும்பினர். அவர்கள் அவரை விசுவாசித்தனர். அவர் வருகிறார் என்று மற்றவர்கள் கேள்விப்பட்டிருந்தனர், அவர்கள் அவரைப் பரிகசிக்க அங்கு சென்றனர். எனவே எல்லா பதட்டமான எதிர்பார்ப்புக்கும் பிறகு, மிக வழக்கத்திற்கு மாறான நாள், மிகவும் வழக்கத்திற்கு மாறான நேரம், சபைகள் உறங்கிக் கொண்டிருக்க, ஜனங்களுடைய நரம்புத் தளர்வுற்றிருந்தது, அங்கே அநேக ஜனங்கள் இருந்தனர், அப்பொழுது அது சம்பவித்தது!
2145 ஒலிவ மலையின் மேல் ஒரு சிறிய வெள்ளைக் கழுதை வந்து, மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, ஒரு கூட்ட ஜனங்கள் மரங்களிலிருந்து பனை ஓலைகளை பிடுங்கிக்கொண்டு, தங்களுடைய ஆடைகளை வீதியிலே வீசியெறிந்து, “கர்த்தருடைய நாமத்தினால் வருகிற தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர். அந்த…இந்த சிறு கோவேறு கழுதை, அதில் சவாரி செய்தவர் வேறுயாருமல்ல, அந்த வேளையின் தேவனால் அபிஷேகிக்கப்பட்ட மேசியாவாயிருந்தார். 46 தேவன், அப்படியானால் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன? அது தேவன் சரித்திரம் படைக்கிறதாயும், தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறதாயும் உள்ளது. அது எப்பொழுதுமே ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. அது (இந்த காலை செய்தியைக் குறித்து) விமர்சிப்பவர்களையும், வல்லூறுகளையும், கழுகுகளையும் கூட மேலே கொண்டு வருகிறது. பார்த்தீர்களா? என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய அவர்கள் ஒன்று கூடுகின்றனர். சிலர் ஆர்வத்திற்காகவும், சிலர் குறைகளைக் கண்டறியவும், மற்றவர்கள் குறை கூறவும் வருகின்றனர். நாம் இந்தக் காலையில் கூறினதுபோல; எல்லாவிதமான விசுவாசிகளும், பாவனை விசுவாசிகளும், அவிசுவாசிகளும் அங்கு கூடியிருக்கின்றனர். மலையின் மேல் என்ன இருக்கிறது? தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.
2247 இப்பொழுது, சகரியாவின் புத்தகத்தில் 9-ம் அதிகாரம் 9-ம் வசனம். தீர்க்கதரிசிகளில் ஒருவரான சகரியா ஆவியில் பேசி, இதைக் கூறினார். சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். 48 இப்பொழுது, அந்த வேதபாரகர்களோடு இருந்த காரியம் என்னவாயிருந்தது? அந்த ஆசாரியர்களோடு இருந்த காரியம் என்னவாயிருந்தது? அந்த மதசம்பந்தமான ஜனங்களோடு இருந்த காரியம் என்ன? இது சம்பவிப்பதற்கு நானூற்று எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியால், ஏற்கனவே எழுதப்பட்டு, வேதாகமம் என்றும், பழைய ஏற்பாட்டின் சுருள்கள் என்றும் அழைக்கப்பட்டது. அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை அவர்களால் ஏன் காண முடியவில்லை? அதேக் காரணத்தினால் இன்றைக்கு அவர்களால் அதைக் காண முடியவில்லை. அவர்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்து, (பாரம்பரியங்களாக) மனுஷருடைய பாரம்பரியங்களை உபதேசங்களாக ஜனங்களுக்கு போதிப்பதன் மூலம் வியர்த்தமாக்கினர். 49 வேதபாரகர், பிரசங்கிமார்கள், ஊழியக்காரர்கள், ஆவிக்குரிய மனிதர் (அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள்), அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், வேதத்தை மாத்திரம் வாசிப்பார்கள், என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள், அது என்னவென்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார்!
2350 சரித்திரம் படைக்கப்பட்டுக் கொண்டிருந்தது, தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருந்தது. உலகத்திற்கு இரட்சிப்பு வந்து கொண்டிருந்தது, எல்லா தீர்க்கதரிசிகளும் எதிர்நோக்கியிருந்த அந்த மகத்தான நாள். கல்லறையிலிருந்த யாவரும் அந்த நாளுக்காக காத்திருந்தனர் (என்னே, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்), மரித்த யாவரும், இரத்த சாட்சிகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் இரத்தத்தின் நீதிமான்கள். 51 அவர், “எருசலேமே, ஓ எருசலேமே, நான் உங்களிடத்தில் அனுப்புகிற ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் கல்லெறிந்து, நீதிமான்களைக் கொல்லுகிற உன்னை, ஒரு கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டி சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டி சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. ஆனால் இப்பொழுதோ உங்களுடைய வேளை வந்துவிட்டது” என்றார்.
2452 கல்லறையில் இருந்த ஒவ்வொருவரும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மற்றும் எல்லா தீர்க்கதரிசிகளும், இந்த நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். 53 சபையோ அதற்கு குருடாயிருந்தது. “இந்த எல்லா இரைச்சலையும் உண்டாக்குகிற இவர் யார்? யார் அந்த நபர்?” அவர்கள் ஒரு சமயம், “அந்த தச்சனுடைய மகன் இங்கே இருக்கிறான் அல்லவா? நாம் அவரை அறிந்திருக்கிறோம். இந்த ஞானத்தை அவர் எங்கிருந்து பெற்றார்? ஏன், அவர் நம்முடைய பள்ளிகள் எதனோடும் இணைக்கப்பட்டிருப்பதை நாம் காணவில்லை. அவர் எந்த புத்தகத்திலிருந்தும் கற்றுக்கொண்டதை நாம் அறியோம். அது யார்?” என்றனர். 54 அவர் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின் பதிலாய் இருந்தார். இதோ அவர் அந்த கழுதை குட்டியின் மேல் சவாரி செய்து இதோ வருகிறார். என்னே ஒரு கவர்ச்சி! தேவன் தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார், அந்த நேரத்துக்காக நான்காயிரம் வருடங்களாக காத்துக் கொண்டிருந்தனர். ஆதியாகமம், 3-ம் அதிகாரம் 15-ம் வசனத்தில், தேவன் முன்னுரைத்திருந்தார், “ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார், அதின் தலை அவருடைய குதிங்காலை நசுக்கும்,” அந்த தீர்க்கதரிசனம் வேதாகமத்தினூடாக இந்த மனிதன் வருவதைக் குறித்து முன்னுரைக்கப்பட்டிருந்தது.
2555 இங்கே அண்மையில் அவர்களுக்கு மத்தியில் ஒரு தீர்க்கதரிசி எழும்பி நின்றான், அவன் ஒரு தீர்க்கதரிசி என்று ரூபகாரப்படுத்தப்பட்டான், சகரியா, அவன், “எருசலேமின் குமாரத்திகளே, சீயோனின் குமாரத்திகளே, நீங்கள் களிகூர்ந்து, சத்தமிடுங்கள், ஏனென்றால் உம்முடைய ராஜா சாந்தமாயும், தாழ்மையாயும், தாழ்மையாயும், கழுதைக் குட்டியின் மேல் சவாரி செய்து உன்னிடத்திற்கு வருகிறார்” என்றான். 56 இங்குள்ள அந்த ஜனங்கள் நாளுக்கு நாள் வேதத்தை வாசிக்கின்றனர், அவர் சவாரி செய்வதைக் கண்டு, “இவர் யார்?” என்று சத்தமிட்டார்கள். பார்த்தீர்களா? தேவன் தம்முடைய வார்த்தையை ஜனங்களுக்கு நிறைவேற்றினார், அது என்னவாயிருந்தது என்பதை அறிந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. 57 தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றும்போது, அது எப்பொழுதுமே ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது, அது எப்பொழுதுமே செய்கிறது. அது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது, ஏனென்றால் அது வழக்கத்திற்கு மாறானதாயுள்ளது. மிகவும் வழக்கத்திற்கு மாறானதாய், அவர் தம்முடைய வார்த்தையை இந்நாளின் நவீன போக்குக்கு நிறைவேற்றும்போது, ஏனெனில் இன்றைய நவீன போக்கு அதில் நம்பிக்கை கொள்வதில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த வழியை உடையவர்களாயிருக்கிறார்கள்.
2658 இப்பொழுது, நாம் பார்க்கிறோம், நாம் வேதவாக்கியங்களுக்குத் திரும்பிச் சென்று, வழக்கத்திற்கு மாறான வேறு சில சம்பவங்களை எடுத்துக் கொள்வோம், தேவன் தம்முடைய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினபோது, இன்னும் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே இருக்கும். தேவன் எந்தக் காரியத்தையாவது கூறும்போது, அவர் அதைச் செய்யப்போகிறார். வானங்களும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போக முடியாது. எனவே அது வழக்கமாக ஒரு காட்சியை, ஒரு வழக்கத்திற்கு மாறான காட்சியை ஏற்படுத்துகிறது. 59 தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டிய ஒரு—ஒரு ஜனத்திற்கு அது எவ்வளவு கேலித்தனமாய் உள்ளது என்பதைக் கவனியுங்கள், அதே சமயத்தில் அவர்கள் கதறுவது மிகவும் வழக்கத்திற்கு மாறானதாயும், “பாருங்கள், இது என்ன? அந்த பொருளை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? இது யார்? இது என்ன?” என்பதாயும் உள்ளது. “கர்த்தருடைய நாமத்தினால் வருகிற இராஜாவுக்கு ஓசன்னா!” என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு சிறு குழு அதைச் செய்து கொண்டிருந்தது, ஒரு சிறு குழு. நான்காயிரம் வருட தீர்க்கதரிசனத்தில், தேசத்திற்கு எப்போதும் சம்பவிக்கக் கூடிய மிகப்பெரிய காரியம், ஏனென்றால் மரித்தோரின் நம்பிக்கையெல்லாம் அதன்மேல் தங்கியிருந்தது, எதிர்காலம் முழுவதும் அதில் அடங்கியிருந்தது; தாங்கள் அதை விசுவாசிப்பதாகக் கூறிக்கொண்ட, மதசம்பந்தமான ஜனங்கள், “அது யார்? இந்த கவர்ச்சி என்ன?” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். வழக்கத்திற்கு மாறான ஒன்று! ஏறக்குறைய அதேவிதமாக, அது இப்பொழுது, வழக்கத்திற்கு மாறானதாக மாறவில்லை.
2760 நான் ஏற்கனவே கூறியுள்ளது போல, வழக்கத்திற்கு மாறான சில காரியங்களை நாம் பார்ப்போம். நியாயத்தீர்ப்பு உலகத்தை தாக்கி, அதை தண்ணீரினால் அழிக்கப்படுவதற்கு சற்று முன்பு கவர்ச்சியானது என்னவாயிருந்தது? ஏறக்குறைய நூற்றிருபது வயது நிரம்பிய ஒரு வயோதிக மனிதன், அதில் மிதக்க தண்ணீர் இல்லாதிருந்தபோது, ஒரு பேழையை உருவாக்கிக் கொண்டிருந்தான். அங்கே அநேக வருடங்களாக, வாசலில் நின்று கொண்டு, உட்புறத்திலும், உட்புறத்திலும், அதை உள்ளேயும் வெளியேயும் உருவாக்கி, “உலகம் தண்ணீரினால் விழுங்கப்படப் போகிறது” என்று கூறினான், அந்த மகத்தான விஞ்ஞான சகாப்தம். 61 “அங்கே மலையின் மேல் அடிக்கிற சத்தம் கேட்கிறது என்ன?” “ஏன், அது நோவா என்னும் பெயர்கொண்ட ஒரு வயோதிக மனிதன், அவன் அங்கே மேலே இருக்கிறான், ஒரு பண்டைய மதவெறியன். அந்த வயோதிகர் நீண்ட நேரம் வெயிலில் நின்றான். அவன் வெயிலினால் பாதிக்கப்பட்டுள்ளான். அவன் தன்னுடைய புத்தியை இழந்துவிட்டான். அவன் ‘ஒரு பேழை,’ என்று அழைக்கும் ஒன்றைக் கட்டிக்கொண்டு, தண்ணீர் இல்லாத இடத்திலிருந்து தண்ணீர் வரப்போகிறது என்றும், அது ஜனங்கள் எல்லோரையும் அடித்துக் கொண்டு போகப் போகிறது என்றும், அவனுடைய செய்திக்கு செவிகொடுக்காத ஒவ்வொருவரும், அந்தப் பேழைக்குள் வராத யாவரும் மூழ்கடிக்கப்படுவார்கள் என்றும் கூறிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு காரியத்தைக் குறித்து நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” அது வழக்கத்திற்கு மாறான ஒரு கவர்ச்சியாய் இருந்தது!
2862 ஜனங்கள் நன்றாக சிரிக்க விரும்பினபோது, அவர்கள் சென்று பேழையின் வாசலுக்கு முன்பாக நின்று நகைத்தனர் என்று நான் யூகிக்கிறேன். “ஏன், நூறு ஆண்டுகளுக்கு முன்பே மழை பெய்யப்போவதாக நீங்கள் கூறினீர்களே! மழை பெய்யப் போகிறது என்று நீங்கள் கூறினதை அவர் கேட்டதாக தாத்தா என்னிடம் கூறினார், நீர் இன்னமும் இங்கே இந்த பழைய மரத்துண்டுகளை சுற்றி அடித்துக் கொண்டிருக்கிறீர். நீர் ஏன் உம்முடைய புத்தியீனினத்திலிருந்து வெளிவரக் கூடாது?” என்றனர். 63 ஆனால் தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தவும், தம்முடைய தீர்க்கதரிசி கூறியிருந்த ஒரு தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றவும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். மிகவும் அசாதாரணமானது! மற்றவர்கள் சிரித்துக் கொண்டிருந்தபோது, தேவன் நோவாவிற்கு தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். இந்த நாளிலும் கூட, தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு காண்பிக்கும்படி சரித்திரம் படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அது எவ்வளவு உண்மையற்றதாகத் தென்பட்டாலும், பகுத்தறிவற்றதாகத் தென்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அவர் இன்னமும் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார். அந்த வயோதிக மனிதன் அந்தப் பேழையின் மேல் மோதிக்கொண்டு, இன்றிரவு இங்கே அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள இந்த ஜனங்களுக்காக, அவன் அதை ஒரு உதாரணமாகக் கூறிக்கொண்டிருந்தான். விஞ்ஞானம் என்ன கூறினாலும், அவர்கள் என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை, இது, அது, அல்லது மற்றது, அவர் இன்னமும் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தார்.
2964 ஒரு நாள் கவர்ச்சி என்னவாயிருந்தது; அப்பொழுது வனாந்திரத்தில் வழக்கத்திற்கு மாறான ஒரு காரியம் சம்பவித்தது, அது ஒரு முட்செடி எரிந்து கொண்டிருந்ததாய் இருந்தது. ஓடிப்போன ஒரு தீர்க்கதரிசி வனாந்திரத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் ஒருபோதும் சத்தத்தைக் கேட்கவில்லை, அவன் எந்த சத்தத்தையும் கேட்கவில்லை, ஆனால் அவன் மலையின் உச்சியில் வழக்கத்திற்கு மாறான ஒன்றைக் கண்டான். தேவன் அவனுடைய கவனத்தை கவர முயற்சித்துக் கொண்டிருந்தார். இன்றைக்கும் அதேவிதமாகத்தான் உள்ளது! 65 தேவன் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஆபிரகாம் மூலம், தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருந்தார், “உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் நானூறு வருடங்கள் சஞ்சரிப்பார்கள். நான் அவர்களை ஒரு பலத்த கரத்தினால் வெளியே கொண்டு வருவேன்” என்றார். 66 விசுவாசிக்கும் யாவருக்கும் ஒரு பாதுகாப்பான இடமாக அவர் ஒரு பேழையை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தது போல, அவர் ஒரு மனிதனை பணிக்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். தேவன் இந்த முட்செடியை அக்கினியிலே போட, இந்த ஆடு மேய்ப்பவன், மோசே, “இந்த விநோதமான காரியம் என்ன பொருட்படுத்துகிறது என்பதை அறிய நான் வேறு பக்கமாக செல்வேன்” என்றான். அவர் மோசேயை முட்செடிக்கு அழைத்துச் சென்றபோது, அவர் அவனிடத்தில் பேசினார்.
3067 பிலாத்துவின் கூடத்தில் பின்னாளில் என்ன கவர்ச்சியாய் இருந்தது, இந்த ஆடு மேய்ப்பவன் ஒரு தடியை வீசியெறிந்தபோது, அது ஒரு சர்ப்பமாக மாறியது? தேவன் மோசேக்கு அளித்த தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுதல். சவக்கடலில் இருந்த கவர்ச்சி என்ன, பார்வோனின் குதிரைகள் அனைத்தும் வியப்படைந்தன, அவர்கள் வானத்திலிருந்து ஒரு காற்று அடித்து, சிவந்த சமுத்திரத்தை வலமிருந்து இடமாகப் பிளந்ததைக் கண்டபோது, தேவனுடைய கடமையில் நடந்து கொண்டிருக்கிற ஒரு ஏழ்மையான அடிமைக் கூட்டத்தை, வறண்ட நிலத்தில் அதை நடத்திச் சென்றாரா? அது என்னவாயிருந்தது? தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொண்டிருக்கிறார். மரணம் நீங்கியது, ஜீவனுள்ள ஜனங்கள் கடந்து சென்றனர்; ஆவிக்குரியப்பிரகாரமாக மரித்த ஜனங்கள் அதை ஆள்மாறாட்டம் செய்ய முயன்று, மூழ்கி மரித்தனர். தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி சரித்திரம் படைக்கிறார். அதுவே சவக்கடலின் கவர்ச்சியாயிருந்தது.
3168 அதற்குப் பிறகு இரண்டாம் நாள் சீனாய் மலையின் மேல் என்ன கவர்ச்சியாய் இருந்தது, எல்லா ஜனங்களும் தங்களுடைய மனைவிகளிடத்தில் வரக்கூடாது என்று கட்டளையிடப்பட்டிருந்தபோது, அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்து, தங்களைப் பரிசுத்தமாக்கிக் கொண்டு, ஒரு மலையைச் சுற்றி ஒன்று கூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் மோசே என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் தேவனை அங்கே ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் சந்தித்ததாகக் கூறினானா? தேவன் மோசேயினிடத்தில், “நான் ஜனங்களுக்கு மத்தியில் வரப்போகிறேன். நான் யார் என்று நான் உங்களிடம் கூறினதை நான் உறுதிப்படுத்தப் போகிறேன். நானே அந்தத் தேவன் என்பதை அவர்களுக்குக் காண்பிக்கப் போகிறேன்” என்றார். அது கவர்ச்சியாயிருந்தது, தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்.
3269 சரித்திரத்தில் ஒரு நாள் கவர்ச்சி என்ன, ஒரு தேசம் தேவனை மறந்திருந்தது, அங்கே ஜனங்கள் சம்பிரதாயமானவர்களாகவும், அலட்சியமுள்ளவர்களாகவும் ஆகிவிட்டனர், ஆசாரியர்கள் யாவரும் நவீன போக்குடன் சென்று, ஆசாரியர்களின் சித்தத்தின்படியே தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் உரைத்தார்களா? அந்த நாளிலும், வழக்கம்போல, அவர்கள் ஒரு மதவெறியர் என்று கருதப்பட்ட ஒரு மனிதனை உடையவர்களாயிருந்தனர். பெண்கள் வர்ணம் பூசுவதைக் குறித்தும், மற்றவைகளைக் குறித்தும் அவன் பேசினான், அவன் ஒரு விதமான வினோதமான நபராய் இருந்தான். இந்த வயோதிக நபர் வந்து ராஜாவை நோக்கி, “நான் கூப்பிடுகிற வரைக்கும்…பனி கூட வராது” என்று கூறியிருந்தான்.
3370 அதன்பின்னர், அவன் தன்னை மறைத்துக் கொண்டு அதிலிருந்து ஓடிப்போய், அவன் வனாந்திரத்தில் எங்கோ ஒளிந்து கொண்டான் என்று நாம் கண்டறிகிறோம். அவன் பட்டினியால் மரித்துப் போயிருக்கலாம் அல்லது அழிந்து போயிருக்கலாம் என்று அந்தக் கூட்டம் நினைத்தது. ஆனால் அவனோ நன்கு போஷிக்கப்பட்டு, தண்ணீரும் கூட, பருக வைக்கப்பட்டான். இதோ அவன் வந்து, “நான் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நீ காண்கிறாயா? இப்பொழுது, நீங்கள் இன்னமும் உறுதியாக நம்பவில்லையென்றால், நாம் மலையின் உச்சிக்கு ஏறி, யார் தேவன் என்பதை நிரூபிப்போம்” என்று கூறினான், ஏனென்றால் அவன் கர்த்தரிடத்திலிருந்து மற்றொரு தரிசனத்தைப் பெற்றிருந்தான். 71 அவன், “நீங்கள் ஒரு—ஒரு பலிபீடத்தைத் தெரிந்துகொண்டு, அதை உண்டாக்கி, மற்றும்—மற்றும் காளையைத் தெரிந்துகொண்டு அவைகளை அடிக்க வேண்டும். நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, என்னுடைய காளையையும் கூட மேல் வைப்பேன். நாம் இருவருமே ஒரு பலி செலுத்துவோம், அப்பொழுது தேவன் பதிலளிக்கட்டும்” என்றான். கர்த்தர் அவனிடத்தில் ஒன்றைக் கூறாமலிருந்திருந்தால், அவன் அதைச் செய்திருக்கமாட்டான்; பின்னர் அவன் அவ்வாறு கூறினான், “கர்த்தாவே, உம்முடைய கட்டளையின்படியே நான் இதை…இதையெல்லாம் செய்திருக்கிறேன்.”
3472 ஆனால் கவர்ச்சி என்ன? மலையின் மேல் நானூறு ஆசாரியர்கள் நிற்க, அங்கே ராஜா தன்னுடைய இரதத்தில், தன்னுடைய எல்லா ஆயுதங்களோடும், சுற்றிலும் காவலர்களோடும் நின்று கொண்டிருக்கிறார். இந்த வயோதிக, முகம் முழுவதும் உரோமத்தோடுள்ள முகத்தையுடைய, வழுக்கைத் தலையுடன், முடிகள் தன்னுடைய முகத்தின் மேல் தொங்கிக் கொண்டு, செம்மறியாட்டுத் தோல் சுற்றி போர்த்தப்பட்டு, அவனுடைய சரீரம் முழுவதும் முடிகளோடு, தன்னுடைய கையில் ஒரு தடியோடு அங்கே எழும்பி நின்று, மற்றொரு கையில் ஒரு கலச எண்ணெயையும்; அதற்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், “நான் அதிலிருந்து அழைக்கும் வரை பனியும் கூட பெய்யாது” என்று கூறி, தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டு, ஒளிவட்டங்கள், நிழல்கள் போன்ற காரியங்களோடு, அவர்கள் பேசுகிற எல்லாவற்றையுங் கொண்டவனாயிருந்தான். “இங்கே அந்த வயோதிக மதவெறியன் அங்கே மலையின் மேல் நின்று கொண்டு, இந்த ஜனங்கள் எல்லோரையும் அங்கு கொண்டு வருகிறான்.” அந்த கவர்ச்சி என்னவாயிருந்தது? அது தேவன் தம்முடைய தீர்க்கதரிசி சரியென்று ரூபகாரப்படுத்த ஆயத்தமாயிருந்தது. அது தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதாக இருந்தது. தேவனும் கூட சரித்திரத்தை படைத்து, வார்த்தையை நிறைவேற்றுகிறார்.
3573 அதற்கு சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்தான், அவனுடைய தந்தை ஒரு ஸ்தாபன மனிதனாய்; ஒரு ஆசாரிய ஒழுங்கின் முறையில் இருந்தபோதிலும், அவன் எந்த ஸ்தாபனங்களுடனும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் அவன் வனாந்திரத்திலிருந்து வெளியே வந்து, ஒரு செம்மறியாட்டுத் தோலை உடுத்திக் கொண்டு, அவனுடைய முகம் முழுவதும் முடி. அது சாம்பல் நிறமாயிருப்பதற்குப் பதிலாக, கறுப்பாக இருந்தது. எருசலேம் மற்றும் யூதேயா முழுவதையும் கவர்ந்திழுத்த இந்த மனிதனின் கவர்ச்சி என்ன? அவர்களில் சிலர் வெளியே சென்று, “அங்கே கீழே ஒரு காட்டு மனிதன் இருக்கிறான். அவன் ஜனங்களை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு காரியத்தைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோமா?” என்று கேட்டனர்.
3674 மற்றவர்கள் ஆர்வங்கொண்டு, “இதுதான் மேசியாவாக இருக்க வேண்டும்” என்று கூறினர். அவர்களில் ஒருவன், “அது தீர்க்கதரிசிகளில் ஒன்றாக இருக்கலாம்” என்றான். அவர்களுக்கு என்ன நினைக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் அது என்னவாயிருந்தது? அது தேவன் ஏசாயா 40-ஐ நிறைவேற்றுவதாயிருந்தது, அங்கே அவர், “இதோ…” கடைசி நாட்களில் அவர் என்ன செய்வார் என்றும், அவர் தம்முடைய ஊழியக்காரனை எப்படி அனுப்புவார் என்றும், அவர் என்ன செய்வார் என்றும் கூறினார். 75 அதன்பின்னர் ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, அந்த மனிதன் தன்னுடைய செய்தியைக் குறித்து மிகவும் உறுதியாய் இருந்து, “உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார், அவருடைய பாதரட்சைகளை சுமக்கிறதற்கு நான் பாத்திரனல்ல. நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்ததுபோல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்” என்றார்.
3776 ஒரு நாள் ஏறக்குறைய முப்பது வயதுடைய ஒரு சாதாரண வாலிபன் அங்கு நடந்து வந்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டார். இந்த மனிதன் வந்தபோது, தீர்க்கதரிசியினிடத்தில் அப்படிப்பட்ட ஒரு கவர்ச்சி உண்டானது, அந்த தீர்க்கதரிசி அந்த நாளில் விநோதமாக நடந்து கொண்டான். சபையோரால் அந்த தீர்க்கதரிசியின் செயலை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. 77 ஆற்றின் அருகே ஆசாரியர்களோடு அவன் விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள், “தேவன் இந்த பலிபீடத்தைக் கட்டினார். இதைச் செய்யும்படி தேவன் நம்மிடம் கூறினார். மோசே ஒரு தீர்க்கதரிசி. நாங்கள் மோசேயை விசுவாசிக்கிறோம். அந்த பலி ஒருபோதும் ஒழிந்து போகாது” என்றனர். 78 அதற்கு யோவான், “தானியேல் தீர்க்கதரிசி என்ன கூறினான் என்று வேதத்தில் நீங்கள் வாசித்திருக்கவில்லையா, ‘அன்றாட பலி இல்லாமல் போய்விடும்’? அந்த நேரம் வந்துவிட்டது! ஏசாயா 40-ம் அதிகாரத்தில் என்ன கூறினார் என்பதையும், ‘கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று, வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தமாய் இருப்பதை நீங்கள் வாசித்திருக்கவில்லையா’? என்று திருப்பி பதில் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது, எனக்காக இரண்டு தீர்க்கதரிசனங்கள் உள்ளன. மற்றொரு காரியம், நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய தீர்க்கதரிசியாகிய, மல்கியா, 3-ம் அதிகாரத்தில் அவர், ‘இதோ, வழியை ஆயத்தம் பண்ண என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்’ என்று உரைத்திருந்த, தீர்க்கதரிசனமான இது நிறைவேறுகிறது என்பதை நீர் அறியவில்லையா?” என்று கேட்டான். தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது!
3879 ஏறக்குறைய அந்த நேரத்தில் தீர்க்கதரிசி திரும்பி வந்து, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவர் வருகிறார்!” என்றான். இப்பொழுது கவர்ச்சி என்பது என்ன? அது தீர்க்கதரிசியிலிருந்து அவனுடைய தீர்க்கதரிசனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 80 இப்பொழுது என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். இங்கே யாருமே அறியாத, ஒரு சாதாரண மனிதன், ஒரு தச்சனின் மகன் தண்ணீரில் நடந்து வருகிறார். மகத்தான தீர்க்கதரிசியாகிய யோவான், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டும். நீர் ஏன் என்னிடத்தில் வருகிறீர்?” என்று கேட்டான். 81 அவர், “இப்பொழுது இடங்கொடு. ஆனால், ஒரு தீர்க்கதரிசியாக, வார்த்தையாக, எல்லா நீதியையும் நிறைவேற்றும்படி அது நமக்கு ஏற்றதாயுள்ளது” என்றார். 82 எனவே பலி செலுத்தப்படுவதற்கு முன்பு கழுவப்பட வேண்டும் என்பதை அவன் புரிந்துகொண்டு, அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
3983 இப்பொழுது அவர் தண்ணீரிலிருந்து மேலே சென்றபோது, மற்றொரு கவர்ச்சி சம்பவிக்கிறது. இந்த தீர்க்கதரிசி தன்னுடைய காலத்தையும், நேரத்தையும் அறிவிக்க மிகவும் உண்மையுள்ளவனாயிருந்தான், அவன் மேல் நோக்கிப் பார்த்தபோது, அவன் வானங்கள் திறந்திருக்கக் கண்டான். அவன் தேவனுடைய ஆவி, ஒரு புறாவைப் போல, அவர் மேல் இறங்கி வர, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று ஒரு சத்தமும் கூறினது. தேவன் ஒரு தீர்க்கதரிசியின் செய்தியை ரூபகாரப்படுத்திக் கொண்டிருந்தார், அது யோர்தானில் கவனத்தை கவர்ந்து கொண்டிருந்தது.
4084 சற்று நேரத்திற்கு முன்னர் ஒரு சகோதரன் பாடினார், இல்லை அவர், “தூரத்திலுள்ள மலைகளின் மேல் ஒரு பழைய கரடுமுரடான சிலுவை நின்றது” என்று பாட வேண்டியதாயிருந்தது. கல்வாரி மலையின் மேல் உள்ள கவர்ச்சி என்ன? மதசம்பந்தமான உலகம் அவரை ஆக்கினைக்குட்படுத்தியிருந்ததை நாம் காணும்போது, ரோம அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இங்கே அவர் இரண்டு கள்ளர்களுக்கு மத்தியில், தாகம் கொண்டவராய் தொங்கிக் கொண்டிருந்தார், அவருடைய சரீரத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அங்கே அவர் தொங்கிக் கொண்டு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறுகிறார். மதசம்பந்தமான ஜனங்கள் அங்கு நின்று கொண்டு, அதைப் பார்த்து, அந்த நேரத்தில் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனம் கல்வாரியில் அங்கே நிறைவேறிக் கொண்டிருந்தது என்பதை அவர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. 85 தாவீது தாமே எழுதினான், எல்லா தீர்க்கதரிசிகளையும் போல ஆவிக்குள்ளாகி…செயல்பட்டான், அவன் அவரைப் போலவே நடந்து கொண்டான். தாவீது 22-ம் சங்கீதத்தில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம். அவர்கள் என் கைகளையும், என் கால்களையும் உருவக் குத்தினார்கள்” என்றான். தாவீது, அவரைப் போலவே பேசினான். அது தாவீதாயிருக்கவில்லை, அது தாவீதிலிருந்த கிறிஸ்துவாயிருந்தது. 86 வெவ்வேறு தீர்க்கதரிசிகளைக் குறித்த, தீர்க்கதரிசனம் இங்கே, கல்வாரி மலையில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. கல்வாரி மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன? தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுதல்.
4187 பெந்தெகொஸ்தே நாளில் இருந்த, மற்றொரு கவர்ச்சி மலையின் மேல் இருந்தது, அவர்கள் யாவரும் அங்கே ஒரு மத சம்பந்தமான விருந்தில் இருந்தபோது, அவர்கள் எல்லா மதவெறியர்களையும் ஒழித்துவிட்டதாக எண்ணினர். பத்து நாட்களாக அவர்களிடத்திலிருந்து அவர்கள் எந்தக் காரியத்தையும் கேட்கவில்லை. திடீரென்று, ஒரு தேன் கூடு போல, அவர்கள் கட்டிடத்தின் உச்சியிலிருந்து வெளியே வந்து, தெருக்களுக்குச் சென்று, கூச்சலிட்டு, தொடர்ந்து சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். 88 “இது என்ன? இதன் பொருள் என்ன? இந்த மனிதர்கள் யாவரும் குடித்திருக்கிறார்களா?” 89 கவனியுங்கள்! ஒரு தீர்க்கதரிசியின் கட்டளைப்படி, ஒரு தீர்க்கதரிசி அவர்கள் நடுவில் நின்று, “இஸ்ரவேலரே, யூதேயாவில், எருசலேமில் குடியிருக்கிறவர்களே, இதை நீங்கள் அறிந்து, என் வார்த்தைகளுக்கு செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மதுபானத்தினால் வெறிகொண்டவர்கள் அல்ல. ஆனால் இதுவோ தீர்க்கதரிசியாகிய யோவேல் மூலமாக கர்த்தரால் உரைக்கப்பட்டு, ‘கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்’” என்று கூறினார். அதுதான் கவர்ச்சியாயிருந்தது.
4290 மதசம்பந்தமான ஜனங்கள், ஜீவாதிபதியை சிலுவையில் அறைந்த பிறகு, பரிசுத்த ஆவியின் வருகையைப் பற்றிய வாக்குத்தத்தத்தை இன்னமும் காணவில்லை. கவர்ச்சி, “இது யார்? இதன் பொருள் என்ன? அந்த ஜனங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்பதாயிருந்தது. 91 ஓ, என்னே! இன்றைக்கும் அதேவிதமாகவே உள்ளது. இதை இந்த வேளைக்குக் கொண்டு வரும்படி நாம் இதைப் போன்ற அநேக காரியங்களை விட்டுவிடுவோம். இன்றைக்கும் அதேக் காரியம்தான். அதே காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. அதே கேள்விதான் கேட்கப்படுகிறது. “அந்த மோசடி என்ன?” மிக்சிகனிலிருந்து புளோரிடா வரையிலும், மெயினிலிருந்து கலிபோர்னியா வரையிலும், தெருவில் மேலும் கீழுமாக கார்களைப் பாருங்கள். இன்று காலை நான் சவாரி செய்து கொண்டிருந்தபோது, இல்லை பிற்பகலுக்குப் பிறகு, நாங்கள் வீதியில் சென்று கொண்டிருந்தோம், நானும் மனைவியும் கார்களுக்கான உரிம எண்களை பார்த்துக் கொண்டிருந்தோம். அங்குதான் நான் இந்த உரையைக் குறித்து சிந்தித்தேன். “இதன் அர்த்தம் என்ன?” 92 “பிணமானது எங்கே இருக்கிறதோ, அங்கே கழுகுகள் கூடும்” என்று கூறப்பட்டுள்ளது.
4393 நான் என் மனைவியினிடத்தில், “தேனே, கடந்த இரவு உனக்கு நினைவிருக்கிறதா? பூமியிலிருந்த எனக்கு அருமையானதாய் இருந்த ஒவ்வொரு காரியத்திலிருந்தும் நான் விடைபெற வேண்டியிருந்தபோது, தேவன் கூறியிருந்த ஏதோ ஒரு காரியத்தை துவக்க ஊழியக்களங்களுக்குள் செல்ல, நீ தான் அந்தப் பாடலைப் பாடினாய்” என்றேன். ஓ, அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள், அவர்கள் தூர தேசங்களிலிருந்தும் வருவார்கள், நம்முடைய இராஜாவுடன் விருந்துண்ண, அவருடைய விருந்தினராகப் போஜனம்பண்ணவே; இந்த யாத்திரிகர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! அவருடைய பரிசுத்தமான முகத்தைக் காணும் போது தெய்வீக அன்பினால் கொழுந்துவிட்டெரியும்; அவருடைய கிருபையில் பங்குபெறும் பாக்கியவான்கள், அவருடைய கிரீடத்தில் இரத்தினங்களாக பிரகாசிப்பர்.
4494 அதுதான் கவர்ச்சி. தேவனுடைய முன்குறிக்கப்பட்ட வித்தை பின்பற்றுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாது, அது நமக்கு ஜீவனைக் காட்டிலும் மேலானதையே பொருட்படுத்துகிறது. நம்முடைய ஜீவியங்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்வதில்லை. கவர்ச்சி என்பது என்ன? தேவன், வழக்கம்போல, தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார். அவர் சகரியா தீர்க்கதரிசியின் வார்த்தையை, மீண்டும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். 95 சற்று முன்னர் நான் 9-ம் வசனத்தை வாசித்தேன், இயேசு தம்முடைய ஆலயத்திற்குள் சவாரி செய்தபோது…இல்லை எருசலேமுக்குள் பிரவேசித்தபோது, ஒரு சிறிய வெள்ளைக் கழுதையின் மேல் சவாரி செய்தபோது, சகரியா கூறின தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டது. இதோ அது, “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.” அந்தவிதமான கவர்ச்சி எருசலேமில், மத தலைமை அலுவலகமாக இருந்தது.
4596 இப்பொழுது கடைசி நாளில் சம்பவிக்கிறதை நாம் காண்கிறோமே! நாம் சகரியா புத்தகத்தில், ஒரு சில பக்கங்களை திருப்பி, அதைக் குறித்து அவன் என்ன கூறினான் என்பதைப் பார்ப்போம். நாம் கடைசி நாட்களுக்குரிய அதைத் திருப்புவோம். அது காலத்தின் மையத்திலிருந்தது; நாம் இப்பொழுது கடைசி நாட்களுக்குரிய அதைத் திருப்புவோம். சகரியா 14-ம் அதிகாரம், 4-ம் வசனம் தொடங்கி, திருப்புங்கள். கவனியுங்கள்! நாம் வேதவாக்கியத்தின் ஒரு பகுதியை, ஏறக்குறைய ஒன்பது வசனங்களை, 4 முதல் 9 வரை வாசிக்கப் போகிறோம். கூர்ந்து கவனியுங்கள். அது அவருடைய வருகையைக் குறித்த தீர்க்கதரிசனமாயிருக்கிறது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். அவை வேதவாக்கியங்களாயுள்ள, சகரியா 14-ம் அதிகாரம். சகரியா 9-ம் அதிகாரம், அது என்ன கூறியுள்ளது என்பது நினைவிருக்கிறதா? அவர்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது இன்றைக்கு அது என்னவாயிருக்கிறது? சகரியா 14-ல் அவருடைய வருகையைக் குறித்துப் பேசுகிறார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; மலையின் பாதி வடக்கேயும், பாதி…தெற்கேயும் அசைந்து போகும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்;
4697 மற்றொரு பூமியதிர்ச்சி பூமியை பிளக்கிறது! நீங்கள் இங்கே ஒரு வேதவாக்கியத்தை பின்பற்ற விரும்பினால், இந்த 5-ம் வசனத்தில் கவனியுங்கள், பூமியதிர்ச்சியின் காரணமாக ஒலிவ மலை பிளந்தது என்பது பொருந்தும், இது ஏசாயா 29:6 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 16:9 மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சரியாக! அது என்ன? அதே தீர்க்கதரிசி அவருடைய முதல் வருகையைக் குறித்தும், அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்தும் கூறினான். கவனியுங்கள், “பூமியதிர்ச்சி நாட்களில் நடந்ததுபோல.” பூமியதிர்ச்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று பார்த்தீர்களா? அவைகளின் முன்னறிவிப்புகளைப் பார்த்தீர்களா? …உன் தேவனாகிய கர்த்தர் வருவார், அவருடைய பரிசுத்தவான்கள் யாவரும் உன்னோடே கூட வருவார்கள். அந்நாளில் (அல்லேலூயா) வெளிச்சம் இல்லாமல் , ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும் . ஒருநாள் உண்டு…ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.
4798 ஓ தேவனே! சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், அதே தீர்க்கதரிசி, ஜனங்கள் குருடாயிருக்கிறார்கள்! கவர்ச்சி என்பது என்ன? நாம் இன்னும் இரண்டு வசனங்களை வாசிப்போம். அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிக்காலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். (சுவிசேஷம் புறப்பட்டுச் செல்கிறது; யூதர் மற்றும் புறஜாதியார்.) அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், (சரி!) மகிமைக்கு செல்லும் வழியை நீங்கள் நிச்சயமாகக் கண்டடைவீர்கள்; இன்றைக்கு தண்ணீர் வழியில், வெளிச்சம் உள்ளது, விலையேறப்பெற்ற இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்பட்டோம். வாலிபரே, வயோதிபரே, உங்களுடைய பாவங்கள் எல்லாவற்றிலிருந்தும் மனந்திரும்புங்கள், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உள்ளே பிரவேசிப்பார்; சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது, தேவனும் கிறிஸ்துவும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பது ஒரு உண்மை. நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்த்தீர்களா? நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகிறாள், நம்முடைய தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள்; (அந்த பூமியதிர்ச்சி கடைசி நாளில் புறஜாதியாருக்கு உண்டாகும்.) புறஜாதி நாட்கள் எண்ணப்பட்டு, திகில்கள் சூழ்ந்திருக்க; “ஓ, சிதறடிக்கப்பட்டவர்களே, உங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்பி வாருங்கள்.” 99 உதைத்துத் தள்ளப்பட்டிருக்கிற நீங்கள், இந்த உடன்படிக்கை பெட்டிகள் புதிய வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டு, மரணம் உங்களை தாக்குவதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறுங்கள். தேவன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அது அப்படியே இருக்கும்.
48100 நாம் பழைய ஏற்பாட்டிலுள்ள மற்றொரு வேதவாக்கியத்திற்கு திருப்புவோம், மல்கியா 4-ம் அதிகாரம், அந்த சிறிய 4-ம் அதிகாரத்தைப் படியுங்கள். இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; 101 இப்பொழுது, இதுவல்ல…அது மல்கியா 3, முதலாம் வருகையாயிருந்தது, இப்பொழுது இங்கே அடுத்த வருகை உள்ளது. இங்குள்ள வேதபண்டிதர் ஸ்கோபீல்டு அவர்களும் கூட, அவருடைய அடிக்குறிப்புகளில் அவருடைய கருத்துடன் நான் நிச்சயமாக இணங்கவில்லை, ஆனால் அவர் அதை சரியாக இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறார். “யோவானின் கட்டளை” மல்கியா 3; “கிறிஸ்துவின் இரண்டாம் வருகை” மற்றும் எலியா முன் கூட்டியே. சரி. …அகங்காரிகள் யாவரும் வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (அப்படியானால் “நித்திய” நரகம் எங்கே உள்ளது?) ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள்;… நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள்.
49102 இங்கே எலியாவின் வருகை உள்ளது. இதோ,…நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 103 பழைய ஏற்பாட்டின் கடைசி வேதவாக்கியம்! …கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 104 இப்பொழுது, அது யோவானாக இருக்க முடியாது. இல்லை. பாருங்கள், உலகம் சுட்டெரிக்கப்படவில்லை, நீதிமான்கள் துன்மார்க்கர் மேல் நடந்து சென்றனர். பார்த்தீர்களா? இல்லை, இல்லை. …கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். 105 பரிசுத்த ஆவியின் சரியான தன்மையைக் கவனியுங்கள், அது எலியாவின் இரண்டு வருகைகளைக் குழப்பிவிடாது. மல்கியா 3, “இதோ, நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளது. யோவானைக் குறித்து இயேசுவிடம் கேட்கப்பட்டது; அவர், “நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், ‘நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன்’ என்று தீர்க்கதரிசி கூறினவன் இவன்தான். இது வரவிருந்த எலியா” என்றார். மல்கியா 3.
50106 வேதம் அதை மிகத் திருத்தமாக அளிக்கிறதைக் கவனியுங்கள். விசுவாசிக்க விரும்புகிறவர்களுக்கும், காண விரும்புகிறவர்களுக்கும் என்ன காண்பிக்கும்படியாக இது…கவனியுங்கள். நினைவிருக்கட்டும், இயேசு வேதவாக்கியத்தின் நடுவில் நிறுத்தி, ஏனெனில் அதன் ஒரு பாகம் அவருடைய இரண்டாம் வருகைக்காக நிறைவேற்றப்பட்டதா? “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்திப்படுத்தவும், இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கவும்” என்று கூறி நிறுத்தினார். அவருடைய இரண்டாம் வருகை வரைக்கும் “புறஜாதியாருக்கு நியாயத்தீர்ப்பைக் கொண்டு வருவதில்லை”.
51107 இந்த வேதவாக்கியம் இங்கே அதற்கு இணையாக இருப்பதைக் கவனியுங்கள். “எலியாவாகிய அவன், பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளண்டைக்கு திருப்புவான்.” (இப்பொழுது மல்கியா 4 இல்லை மல்கியா 3-ஐக் குறித்து பேசுகிறேன், அதைக் குழப்ப வேண்டாம்.) யோவான், எலியா, கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னர் வந்த நாட்களில், பழைய கோத்திரப்பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளின் செய்திக்கு, புதிய செய்திக்கு திருப்பினான். 108 இப்பொழுது கவனியுங்கள். “பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களிடத்திற்கு.” அவனுடைய இரண்டாம் வருகையில், கடைசி நாட்களில், அவன் மறுபடியும் அப்போஸ்தல விசுவாசத்திற்கு திருப்புகிறான். வேதவாக்கியங்கள் எவ்வளவு பரிபூரணமாக வரிசைப்படுத்துகின்றன என்று பார்த்தீர்களா? 109 அதுவே பழைய ஏற்பாட்டின், பழைய ஏற்பாட்டின் முடிவாயிருந்தது. இப்பொழுது சாயங்கால நேரத்தில் வெளிச்சம் இருப்பதை நாம் காண்கிறோம். அது என்ன? அது மரத்தின் உச்சியில் உள்ளது.
52110 நான் இந்தக் காலையில் கூறினதுபோல, நாம் ஸ்தாபனங்களினூடாக வந்திருக்கிறோம், (ஒரு ஆரஞ்சு மரத்தினூடாக அல்ல) நான் இந்தக் காலையில் பேசினது போன்று, ஆனால் நாம் திராட்சைப்பழம், எலுமிச்சைப் பழங்கள், துவக்கத்தில் இருந்ததைப் போன்றே இல்லாத எல்லாவிதமான மற்ற காரியங்களையும் உடையவர்களாய் இருந்து வந்தோம். ஆனால் அதற்குப் பிறகு…அதைத் தவறவிடாதீர்கள். இதோ அது வருகிறது. எல்லா ஸ்தாபனங்களும் செயல்பட்ட பிறகு, அவர்கள் துவக்கத்தில் எந்த ஒளியையும் பெற்றிருக்கவில்லை, பகல் அல்லது இரவு என்று அழைக்கப்பட முடியாத ஒரு நாள் உண்டாயிருக்கும். 111 அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு ஆரஞ்சு மரத்தில் ஒரு—ஒரு எலுமிச்சம் பழம் என்ன செய்கிறது? அது மேலே வளர்ந்து வரும் ஆரஞ்சு பழத்தின் மூல ஜீவனை எடுத்து, அதை ஒரு எலுமிச்சையினூடாக தாறுமாறாக்குகிறது. அதைத்தான் ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தைக்கு செய்து, தங்களுடைய பாரம்பரியங்களினால் தேவனுடைய வார்த்தையை அவமாக்கிவிட்டன. அது கர்த்தருடைய ஆவியானவர் உரைக்கிறதாவது. அவர்கள் ஆரஞ்சு பழங்களை அல்ல, எலுமிச்சை, திராட்சைப் பழங்களையே பிறப்பித்துள்ளனர்.
53112 ஆனால் தீர்க்கதரிசி என்ன கூறினான்? இன்றிரவு நம்முடைய பாடப் பொருளுக்காக கூறிய அதே ஒன்று, “எருசலேம் குமாரத்திகளே, சந்தோஷப்படுங்கள், சீயோன் குமாரத்திகளே, மிகுந்த சத்தமிடுங்கள், ஏனென்றால் உன்னுடைய ராஜா சாந்தமும், தாழ்மையுமாய், கழுதை குட்டியாகிய மறியின் மேல் ஏறி உன்னிடத்திற்கு வருகிறார்,” அதே தீர்க்கதரிசி, “பழுக்கும் காலம் ஒன்று வரும்” என்று கூறினான் என்பதை கவனியுங்கள். கனிகளை முதிர்வடையச் செய்ய சூரியன் பூமிக்கு அனுப்பப்படுகிறது. ஏன் அதை முதிர்ச்சியடையச் செய்ய முடியவில்லை? அங்கே பழுக்கக் கனியே கிடையாது. ஆனால் ஜீவன் இன்னமும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
54113 அது ஒரு ஆரஞ்சு பழமாயிருக்கும்படியான ஒரு திராட்சைப்பழத்தினூடாக அது ஸ்தாபிக்கப்பட்டதைக் கண்டறிந்தது; அது ஒரு திராட்சைப் பழமாயிருந்தது. அது மீண்டும் புறப்பட்டுச் சென்றது, அந்த நேரத்தில் அது ஒரு எலுமிச்சை பழம் வெளிவந்தது. மீண்டும் தொடர்ந்து சென்றபோது, அது வேறொன்றாக மாறியது. கடைசியில், மரத்தின் உச்சியில், அது டேன்ஜலோ பழமாக மாறினது, அது பாதி ஆரஞ்சு பழமும், பாதி எலுமிச்சை பழமுமாக உள்ளது; ஒரு கலப்பு இனம், ஒரு தாறுமாறான காரியம்; ஒரு தாறுமாறான நிலைக்கு வந்து, அதே மரத்திலிருந்து ஜீவிக்கின்றன; பதரானது, “தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஏறக்குறைய வஞ்சிக்கும்.” அது ஒரு ஆரஞ்சு பழத்தைப் போன்று காணப்படுகிறது, ஆனால் அதுவல்ல. 114 “ஆனால் அது வெளிச்சமாயிருக்கும்,” அது ஸ்தாபன எல்லைக்கு அப்பால் வளருகிறது. அது ஸ்தாபனத்தைக் கடந்த பிறகு, அது மீண்டும் மலர்கிறது, அது நிலத்திற்குச் சென்றபோது இருந்தது போன்றே ஆரஞ்சு பழங்களைத் தரும், அப்பொழுது வெளிச்சம் உண்டாகும். 115 இந்த கவர்ச்சி என்ன? இதில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுதல். இது சம்பவிக்கும் என்பதற்கு, பழைய ஏற்பாட்டில் இரண்டு சாட்சிகள் உண்டு.
55116 நாம் புதிய ஏற்பாட்டின் யோவான் 14:12-ஐ எடுத்துக் கொள்வோம், இயேசு கூறினார். …என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்… 117 மேலும், லூக்கா 17:22 முதல் 30 வரை, அவர் கூறினார். சோதோம், சுட்டெரிக்கப்படுவதற்கு முன்பு, லோத்தின் நாட்களில் இருந்ததுபோல, மனுஷகுமாரன் திரும்பி வரும் நாளிலும், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே இருக்கும். 118 ஓ, அப்படியே வேத வாக்கியங்களை நோக்கிப் பாருங்கள்! “மனுஷகுமாரன்,” இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், ஸ்தாபனங்களைக் கடந்து வளர்ந்து, மரத்தின் உச்சியில் வளர்ந்துவிட்டது. அவர் யோவான் 14 அல்லது 15-ல் என்ன கூறினார்? “என்னில் கனிகொடாதிருக்கிற, ஒவ்வொரு கொடியும், அது வெட்டப்பட்டு, கிளை நறுக்கப்பட்டு, அக்கினியிலே போடப்பட்டு சுட்டெரிக்கப்படும். ஆனால் கனி கொடுக்கும் ஒவ்வொரு கொடியும், சுத்திகரிக்கப்படும்.”
56119 சாந்தமும் தாழ்மையுமாய், எந்த ஸ்தாபன-…ஸ்தாபனமுமில்லாமல், “கர்த்தருடைய நாமத்தினால் வருகிற இராஜாவுக்கு ஓசன்னா!” என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்த, இந்த சிறு கழுதையின் மேல் அவரோடு வந்த அந்த சிறு குழுவின் மேல், ஓ, கடைசி நாட்களில் உண்மையாகவே முன்மாரியும், பின்மாரியும் இருக்கும். இன்றைக்கு என்ன காரியம்? மலையின் மேல் உள்ள கவர்ச்சி என்ன?
57120 அண்மையில், இந்த பிரசங்க பீடத்தில் நின்று கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியினால், “அந்த நாள் வரும், அப்பொழுது அவர்கள் உம்முடைய வீட்டிற்கு முன்பாக ஒரு ஒரு முளையை அடித்து; அவர்கள் உன்னுடைய வாயிலை பெயர்த்துவிடுவார்கள். எனவே, அதாவது, நீ அதற்கு கோபப்படாமல் கடந்து செல்ல வேண்டும்” என்று உரைக்கப்பட்டது. என்னுடைய வாசல் இடிக்கப்பட்டு குன்றின் மேல் கிடந்ததை நான் கண்டேன். எனக்கு முன்னால் இருந்த குன்றினை நான் கண்டேன், எல்லாமே தோண்டியெடுக்கப்பட்டு, பலகைகள் மற்றவைகள் அங்கே கிடந்தன. அவர் கூறினார்… நான் பார்த்தபோது, அங்கே ஒரு சிறிய ரிக்கி அங்கு எழும்பி, அந்த வாயிலை இடித்து, இதைச் செய்ததைக் கண்டேன். நான், “நீ ஏன் என்னிடம் கூறவில்லை?” என்று கேட்டேன். அவன் என்னோடு சாமர்த்தியமாக நடந்து கொண்டான், எனவே நான் அவனை அடிக்க வேண்டியதாயிருந்தது. மேலும் அது நிகழ்ந்தபோது, நான், “நான் குத்து சண்டையிடுவதை நிறுத்திய பிறகு இதைச் செய்ததே கிடையாது, ஆனால் நீ இதை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றேன். நான் அவனுக்கு ஒரு குத்துவிட்டேன். நான் அவனை குத்தி கீழே தள்ளி, நான் அவனை மீண்டும் தூக்கி, மீண்டும் அவனை குத்தி கீழே தள்ளினேன். நான் அவனை மூன்று அல்லது நான்கு முறை அவ்வாறு செய்த பிறகு, மலையின் மேல் உதைத்துத் தள்ளினேன். எனவே அதன்பின்னர் நான் அங்கு சென்றேன், நான், “அது சரியல்ல” என்றேன். நான் அவனை தூக்கி, அவனுடைய கரங்களைக் குலுக்கி, “நான் உங்கள் மேல் கோபங்கொள்ளவில்லை, ஆனால் நீ என்னிடத்தில் அந்தவிதமாகப் பேச முடியாது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறினேன். அதன்பின்னர் நான் சுயநினைவிற்கு வந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அங்கே வாசலில் நின்று கொண்டிருந்தார், “இப்பொழுது இதைத் தவிர்த்து விடு. அந்த முளை கீழே அடிக்கப்படும்போது, மேற்கு நோக்கிப் போ” என்றார். எனக்குத் தேவையான ஒவ்வொரு காரியமும், இந்த புத்தகத்தில் உள்ளது, இந்த புத்தகம் ஒரு நல்ல செய்முறையாயுள்ளது, என்னுடைய தொல்லையைக் கடந்து செல்ல அது வழியைக் காண்பிக்கிறது. ஆமென்! 121 அந்த புஸ்தகம் வார்த்தையாயுள்ளது, அந்த வார்த்தை தேவனாயிருக்கிறது. உங்களுடைய தொல்லைகளைக் கடந்து செல்லுங்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அது உங்களுக்கு சொல்லும்.
58122 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சந்தில் வசிக்கும் என் நண்பர், நகர நிலம் அளப்பவர், ஒரு முளையடிக்கும் சத்தத்தை நான் கேட்டேன். நான் அங்கு சென்று, “என்ன விஷயம் மட்?” என்று கேட்டேன். திரு. கிங் என்பவரின் மகன், தனிப்பட்ட நண்பர். “பில்லி, அவர்கள் இந்த சாலையை அகலப்படுத்தப் போகிறார்கள்” என்றார். 123 உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். நான், “அது ஒரு பாலமாக இருக்கலாம்” என்றேன். நான் சகோதரன் உட் அவர்களிடம், “உங்களுடைய சொத்தை விட்டுவிடாதீர்கள். ஒருக்கால் அந்த பாலம் இங்கே மேலே வரப்போகிறது, ஏதோ ஒன்று” என்றேன். பாதை உடைக்கப்பட்டது; செங்கற்கள், பாறைகள், எல்லாவற்றின் மீதும் வீசியெறிந்தனர். எனவே அவர் கூறினார்…நான், “உங்களுடைய சொத்தை வைத்துக்கொள்ளுங்கள்” என்றேன். அப்பொழுது நான்… அது சம்பவிக்கப் போவதாக திரு. கிங் என்னிடம் கூறினார். 124 நான் உள்ளே சென்று, அங்கு அமர்ந்திருந்த என் மனைவியினிடத்தில், “தேனே, அதைக் குறித்து ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. அது எங்கோ, கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறினேன்.
59125 நான் உள்ளே சென்று என்னுடைய புத்தகத்தை எடுத்து, அதற்குள் பார்த்தேன். அதில், “அது நிறைவேறும்…” என்று எழுதப்பட்டிருந்தது, இது எட்டு ஆண்டுகள் கழித்தே! 126 அதன்பின்னர் நான் அதை நோக்கிப் பார்த்தபோது, நான், “தேனே, இப்பொழுதே நேரமாகிவிட்டது, நாம் மேற்கே செல்ல வேண்டும்” என்றேன். 127 அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, ஒரு நாள் காலை சுமார் பத்து மணிக்கு அறையில் நின்றுகொண்டிருந்தபோது, நான் தேவனுடைய ஆவிக்குள்ளானேன். நான் சிறிய புறாக் கூட்டம் பறந்து கொண்டிருந்ததைக் கண்டேன், அந்த சிறு பறவைகளை நோக்கிப் பார்த்தேன். நீங்கள் அதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு கூர்நுனிக்கோபுர வடிவில் ஏழு தூதர்கள் என்னிடத்தில் விரைந்து வருவதை நான் கண்டேன். மேலும், “மேற்கே, திரும்பி வடகிழக்கில் நாற்பது மைல் தொலைவில் உள்ள, டூசானுக்குச் செல்லுங்கள். நீ ஒரு ஊமுள்ளை எடுத்துக் கொண்டிருப்பாய்,” அல்லது கடினமான ஒரு முள்ளை, அவர்கள் அதை எவ்வாறு அழைக்கிறார்கள், “உன்னுடைய ஆடையில் இருந்து எடுப்பாய்” என்று கூறப்பட்டது.
60128 சகோதரன் ஃபிரட் சாத்மன், அங்கே உட்கார்ந்து இப்பொழுது என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார், அன்று காலை அங்கே இருந்தார். நான் அதைக் குறித்து மறந்துவிட்டேன். 129 மேலும் நான், “ஒரு பூகம்பம் போன்ற ஒரு வெடி வெடித்தது, அது தேசத்தில் இருந்த ஒவ்வொரு காரியத்தையும் கிட்டத்தட்ட அசைத்தது. ஒரு மனிதன் எப்படி அதில் தப்பிப்பிழைக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினேன். நான் பயமடைந்தேன். நான் பீனிக்ஸில் நின்றேன், இன்றிரவு செவி கொடுத்துக் கொண்டிருக்கிற நீங்கள் யாவரும் எனக்கு சாட்சிகள். ஐயன்மீர், இதுவா சமயம்? என்பதன் பேரில் நான் பிரசங்கம் செய்தேன். “நாம் எங்கே இருக்கிறோம்?” நான் மேற்கு நோக்கிச் சென்றேன். இங்குள்ள உங்களில் அநேகர் அந்த ஒலிநாடாவைப் பெற்றுள்ளீர்கள், இங்குள்ள உங்களில் அநேகர், அது சம்பவிப்பதற்கு ஓராண்டு அல்லது அதற்கும் மேலாக கூறப்பட்டதைக் கேட்டிருக்கிறீர்கள்.
61130 என்ன சம்பவிக்கப் போகிறது என்று யோசித்துக்கொண்டே நான் மேற்கு நோக்கிச் சென்றேன். ஒரு நாள் கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் என்னுடைய மனைவியிடம் கூறினேன், நான், “தேனே, நான்…அநேகமாக என்னுடைய வேலை முடிந்துவிட்டது” என்றேன். எனக்குத் தெரியாது. நான், “நான்…தேவனே, தேவன் அநேகமாக இப்பொழுது என்னோடு முடித்துவிட்டார், நான் பரலோக வீட்டிற்கு சென்றுவிடுவேன். நீ பிள்ளைகளை அழைத்துக்கொண்டு போய், பில்லியோடு தங்கியிரு. தேவன் எப்படியோ, உங்களுக்காக ஒரு வழியை உண்டுபண்ணுவார். தொடர்ந்து சென்று தேவனுக்கு உண்மையாய் ஜீவி. பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்து, தேவனுடைய போதனையில் அவர்களை வளர்க்கும்படி பார்த்துக் கொள்” என்றேன். அவள், “பில், அது உண்மையென்று உனக்குத்—உனக்குத் தெரியாதல்லவா” என்றாள். நான், “இல்லை. ஆனால் ஒரு மனிதனால் அதில் தப்பிப்பிழைக்க முடியாது” என்றேன். 131 ஒரு நாள் காலையில் கர்த்தர் என்னை எழுப்பி, “அங்கே சபினோ கன்யான் என்ற இடத்திற்குச் செல்” என்றார். நான் ஒரு துண்டு காகிதத்தையும் என்னுடைய வேதாகமத்தையும் எடுத்துக் கொண்டேன். மனைவியோ, “நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டாள். நான், “எனக்குத் தெரியாது. நான் திரும்பி வரும்போது நான் உனக்குச் சொல்லுவேன்” என்றேன்.
62132 நான் பள்ளத்தாக்கிற்குச் சென்று, கழுகுகள் சுற்றி பறந்து கொண்டிருந்த இடத்திலிருந்து மேலே ஏறினேன். நான் அங்கே சில மான்கள் நிற்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். நான் முழங்காற்படியிட்டு ஜெபித்து, என்னுடைய கரங்களை உயர்த்தினபோது, ஒரு பட்டயம் என் கரத்தில் விழுந்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். நான், “அது என்ன? எனக்கு புத்திமாறாட்டம் ஏற்படவில்லையே. இதோ அந்த பட்டயம் என் கையில் உள்ளது; பிரகாசமாகவும், பளபளப்பாகவும், சூரிய வெளிச்சத்தில் பளபளக்கிறது” என்று எண்ணினேன். நான், “இப்பொழுது, இங்கே இந்த பள்ளத்தாக்கில் எனக்கு மைல் கணக்கில் ஜனங்கள் இல்லை. அது எங்கிருந்து வரக்கூடும்?” என்று கேட்டேன். அப்பொழுது நான், “அது ராஜாவின் பட்டயம்” என்று கூறப்பட்ட ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான், “ஒரு ராஜா ஒரு பட்டயத்தைக் கொண்டுதான் ஒரு மனிதனுக்கு பட்டத்தை சூட்டுகிறான்” என்றேன். 133 அவர், அந்த சத்தம், திரும்பவுமாக, “ஒரு ராஜாவின் பட்டயம் அல்ல, ஆனால் ‘ராஜாவினுடைய பட்டயம்’, கர்த்தருடைய வார்த்தை” என்றது. “பயப்படாதே. அது மூன்றாம் இழுப்பு மாத்திரமே. அது உம்முடைய ஊழியத்தின் ரூபகாரப்படுத்துதலாய் உள்ளது” என்றது.
63134 என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை அறியாமல், நான் ஒரு நண்பரோடு வேட்டையாடச் சென்று கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்தார், கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தைக் குறித்து என்னை குறை கூறிய ஒருவர், அதை எடுத்தவர். அவருடைய மகனைக் குறித்து நான் ஹூஸ்டனுக்குச் செல்ல வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவன் மரண தண்டனையில், இன்னும் ஒரு சில நாட்களில் கொல்லப்படப் போவதாயிருந்தான். அவர் என்னை அங்கே சந்தித்து, தன்னுடைய கரங்களை என் மீது போட்டு, “நான் குறைகூறின அதே மனிதன் என்னுடைய ஒரே மகனை காப்பாற்ற வருகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்” என்று கூறினார். மனிதாபிமானமுள்ள சமுதாயம் ஒரு உயிரைக் காத்ததற்காக, ஆஸ்கார் விருதை அல்லது நீங்கள் அதை என்னவென்று அழைக்க விரும்புகிறீர்களோ அதையே எனக்கு அளித்தது.
64135 அதன்பின்னர் நாங்கள் திரும்பிச் சென்றோம், நான் வேட்டையாட மலைக்குச் சென்றேன். அங்கே, சகோதரன் ஃபிரட்டும் நானும், ஒரு நாள் காலையில் நான் வெளியே நடந்து சென்றபோது, எனக்கு—எனக்கு ஏற்கனவே என்னுடைய காட்டுப்பன்றி கிடைத்துவிட்டிருந்தது, நான் அவைகள் சென்ற இடத்தை நோக்கிப் பார்த்துவிட்டேன். நான், “சகோதரன் ஃபிரட், விடியற்காலையில், அதிகாலையில், அந்த மலைக்குச் செல்லுங்கள், நான் மற்றொன்றில் ஏறுவேன். நான் அந்தப் பன்றியை சுடமாட்டேன், அதைக் கொல்லமாட்டேன். ஆனால் அவைகள் இந்த வழியாக புறப்படுமானால், அந்த மந்தையை, நான் அவைகளுக்கு முன்னால் சுட்டு, அவைகளை பின்னுக்கு விரட்டிவிடுவேன்” என்றேன்.
65136 சகோதரன் ஃபிரட் அங்கு சென்றார், அங்கே பன்றிகளே இல்லை. அவர் என்னை நோக்கி கை அசைத்ததை நான் கண்டேன். நான் ஒரு பள்ளத்தாக்கிற்குள் சென்றேன், சில பெரிய பள்ளங்கள், சூரியன் மேலே வந்து கொண்டிருந்தது. நான் தீர்க்கதரிசனங்களைக் குறித்து ஒன்றுமே சிந்திக்காமல், மலையின் மறுகரையில் சுற்றி வந்தேன். உட்கார்ந்து, காத்துக்கொண்டும், இளைப்பாறிக் கொண்டும் இருந்தேன்; நான், “அந்த பன்றிகளுக்கு என்ன நேர்ந்தது?” என்று எண்ணினேன். 137 நான் என்னுடைய…இந்தியர்கள் செய்வது போல உட்கார்ந்து, உங்களுக்குத் தெரியும், கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்டேன். என் மேல் ஆடையின் கால் பாகத்தை நோக்கினபோது, ஊமுள் அங்கிருந்தது. அதை நான் எடுத்தேன். நான், “அது விசித்திரமாயுள்ளதே! இதோ நான் டூசானுக்கு வடகிழக்கே சுமார் நாற்பது மைல் தூரத்தில் இருக்கிறேன். அங்கே என் குட்டிப் பையன் ஜோசப் உட்கார்ந்து எனக்காக காத்துக் கொண்டிருக்கிறான்” என்றேன். நான் பார்க்கத் துவங்கினபோது, எனக்கு சுமார் ஆயிரம் கெஜ தூரத்தில் உள்ள ஒரு மலையின் மேல் ஒரு பன்றிக்கூட்டம் வருவதை நான் கண்டேன், நான் ஊமுள்ளை கீழே வீசினேன். நான், “நான் அவைகளைப் பெற்றுக் கொள்வேன். நான் சகோதரன் ஃபிரட்டை அழைத்து வந்து, எந்த வழியாக செல்ல வேண்டும் என்பதை அறியும்படியாக நான் ஒரு துண்டு காகிதத்தை, இங்கே இந்த ஒகோடிலோ செடியில் வைத்துவிட்டு, நாம் சகோதரன் ஃபிரட்டை கூட்டிச் செல்வோம்” என்றேன். 138 நான் மலையின் மேல் ஏறத் துவங்கினேன், என்னால் முடிந்தளவு வேகமாக மறுபுறம் ஓடினேன். திடீரென்று யாரோ ஒருவர் என்னை சுட்டதாக நான் எண்ணினேன். அப்படிப்பட்ட ஒரு வெடி சத்தத்தை நான் ஒருபோதும் கேட்டதேயில்லை; அது முழு இடத்தையுமே அசைத்தது. மேலும், அது நடந்தபோது, எனக்கு முன்பாக ஏழு தூதர்கள் ஒரு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
66139 நான் சிறிது நேரம் கழித்து, சகோதரன் ஃபிரட்டையும், மற்றவர்களையும் சந்தித்தேன். “அது என்னவாயிருந்தது?” என்று கேட்டனர். நான், “அதுதான் அது” என்றேன். “நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” 140 “வீட்டிற்குத் திரும்புங்கள். கர்த்தர் உரைக்கிறதாவது, இத்தனை ஆண்டுகளாக வேதாகமத்தில் மறைக்கப்பட்டிருந்த ஏழு இரகசியங்களும், தேவன் ஏழு முத்திரைகளில் உள்ள அந்த ஏழு இரகசியங்களையும் நமக்குத் திறக்கப் போகிறார்” என்றேன். 141 அங்கே பூமியிலிருந்து ஒரு மூடுபனி உருவாவதைப் போல அந்த வட்டம் வந்து கொண்டிருந்தது. அது வந்தபோது, அது மலையின் மேல் சென்று, அது வந்த வழியிலிருந்து மேற்கு நோக்கி வட்டமிடத் துவங்கியது. விஞ்ஞானம் சிறிது கழித்து, முப்பது மைல் உயரமும், இருபத்தைந்து மைல்கள் குறுக்கேயும் இருப்பதைக் கண்டுபிடித்தது, கூர்நுனி கோபுரத்தின் வட்டத்தில் சரியாக உள்ளது.
67142 அன்றொரு நாள் அங்கே நின்று கொண்டிருந்தபோது, புகைப்படத்தை வலது பக்கம் திருப்பி, ஏழு சபைக் காலங்களிலும் இயேசு வெள்ளை தலைமுடியை அணிந்திருந்த, உன்னத தெய்வீகத்தன்மையை காண்பித்தார். அவர் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறார்; அவரே முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார்; அவர் இந்த மணி நேரத்தின் செய்தியை உறுதிப்படுத்த அங்கு நின்று கொண்டு, எல்லா நித்தியத்திற்கும் உன்னத நியாயாதிபதியாயிருக்கிறார். சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். அது எதைக் குறித்தது? அது என்னவாயிருந்தது?
68143 நான் மேற்கு நோக்கிச் சென்றேன். அதே மலையின் மேல், அங்கே பாங்க்ஸ் உட்டுடன் கடந்து சென்றபோது, “ஒரு கல்லை எறி. திரு. உட் அவர்களிடம், ‘கர்த்தர் உரைக்கிறதாவது, நீ தேவனுடைய மகிமையைக் காண்பாய்’ என்று கூறு” என்றார். 144 அடுத்த நாள், அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஒரு சுழற்காற்று இறங்கி வந்து, மலைகளை வெடிக்கச் செய்தது. என்னுடைய தலைக்கு ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில், பாறைகள் மரங்களின் உச்சியை வெட்டிச் சாய்த்தன. மூன்று பெரிய வெடி சத்தங்கள் உண்டாக, சகோதரர்கள் ஓடி வந்தனர். அங்கே கிட்டத்தட்ட பதினைந்து புருஷர்களும், பிரசங்கிமார்களும் மற்ற யாவரும் நின்று கொண்டிருந்தனர். “அது என்னவாயிருந்தது?” அவர், “அது என்னவாயிருந்தது?” என்று கேட்டார். நான், “நியாயத்தீர்ப்பு மேற்குக் கடற்கரையைத் தாக்கிக்கொண்டிருக்கிறது” என்றேன்.
69145 அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பூமியதிர்ச்சி கிட்டத்தட்ட அலாஸ்காவை மூழ்கடித்தது. அரிசோனாவின் கரோனாடோ காட்டில் உள்ள சூரிய அஸ்தமன மலையின் மேல் உள்ள இந்த ஒளி என்ன? ஜனங்கள் மேற்கிலிருந்து கிழக்கே அது தாக்கிய இடத்தைச் சுற்றி அமைந்திருந்த கற்களை எடுக்க அங்கே மேலே நடந்த இந்த விசித்திரமான காரியம் என்ன? அவைகள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு கல்லும், அதற்கு மூன்று மூலைகளை உடையதாயிருந்தது. (மூன்றும் ஒன்றாயிருக்கிறது.) அவைகள் தேசம் முழுவதிலும் மேசைகளில், காகிதம் பறக்காதபடி உபயோகிக்கப்படும் பொருட்களாக பயன்படுகின்றன. கரோனாடோ காட்டில் உள்ள சூரிய அஸ்தமன மலையின் மேல் உள்ள இந்த விநோதமான காரியம் என்ன?
70146 ஜூனியர் ஜாக்ஸன் இதைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் கண்ட சொப்பனத்திற்கு நான் அர்த்தம் உரைத்ததை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், “சூரிய அஸ்தமனத்தை நோக்கிச் செல்லுகிறதா”? இது “சூரியன் அஸ்தமன” மலையில் சம்பவித்தது. அது சாயங்கால நேரம், சூரிய அஸ்தமன நேரம். சூரிய அஸ்தமன செய்தியானது ஒரு சரித்திரத்தின் அமைப்பினூடாக, தீர்க்கதரிசனத்தின் ஒரு அமைப்பாக, சரியாகக் கூறினால், அது நிறைவேற்றப்படுகிறது. டூசானுக்கு வடக்கே நாற்பது மைல் தொலைவில் உள்ள, கொரோனாடோ காட்டில் உள்ள அஸ்தமன மலையின் மேல் சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும். அங்கே சூரிய அஸ்தமன சிகரம் இருக்கிறதா என்று வரைபடத்தில் பாருங்கள். சரியாக அங்கேதான் அது சம்பவித்தது. அன்றொரு நாள் வரைக்கும் எனக்கு அது தெரியாது.
71147 ஒவ்வொரு காரியமும்…அது ஒருபோதும் மரிப்பதில்லை. அது தன்னைத் தானே தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சம்பவிக்கிற அந்த காட்சியிலிருந்து, இயேசு நின்றுகொண்டு நம்மை நோக்கிப் பார்ப்பது வரை; இப்பொழுது சரியாக சூரிய அஸ்தமன மலையில், மற்றும் சூரிய அஸ்தமன ஒளியில் உள்ளது. சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது, தேவன் தம்மை ரூபகாரப்படுத்துகிறார். அது என்ன? தேவனும் கிறிஸ்துவும் ஒன்றாயிருக்கிறார்கள் என்ற உண்மைகளே அது. வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்தில் நாம் பேசினதுபோல, வெள்ளை தலையங்கி அவர் மீது இருந்ததை, “வெள்ளை” என்பதை எத்தனை பேர் கண்டீர்கள்? பாருங்கள், உன்னத தெய்வீகம், உன்னத அதிகாரம்; வேறெந்த சத்தமும் இல்லை, வேறெந்த தேவனும் இல்லை, வேறு ஒன்றுமே இல்லை! “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.” தேவதூதர்கள் தாமே அவருடைய தலைமுடியாயிருந்தனர். ஆமென்.
72148 சூரிய அஸ்தமன மலையில் என்ன சம்பவித்தது? தேவன் தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துதல். இந்த இரைச்சல் அதை குறித்துதான். கவனியுங்கள், அது வெளிப்படுத்தின விசேஷம் 10:1 முதல் 7 முடிய உள்ள தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை தேவன் மீண்டும் நிறைவேற்றுகிறார், “ஏழாம் தூதனின் செய்தியின் சத்தத்தின் நாட்களில், தேவரகசியம் நிறைவேற வேண்டும்.” வெளிப்படுத்தின விசேஷம் 10:1 முதல் 7 முடிய உள்ள மறைவான இரகசியம், கடைசி சபைக் காலத்திற்குரிய கடைசி செய்தியாகும். இக்காலத்தில், பரிசுத்த லூக்கா 17:30-ல், “மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில்” சரியாக நிறைவேறுகிறது. 149 “கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளக் கிறிஸ்துக்களும் எழும்புவார்கள், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக, மகத்தான அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பிப்பார்கள்.” ஜனங்கள் இன்னமும் சந்தேகத்தில் உள்ளனர். மேலும், வழக்கம்போல, சபையானது குழப்பமடைந்துள்ளது.
73150 விஞ்ஞானம், டூசான் முழுவதிலும், அவர்கள் துண்டு துண்டாக எழுதி, செய்தித்தாளில் வெளியிடுகிறார்கள். அங்கே தூரத்தில் உள்ள லெம்மோன் மலையில், அந்த பெரிய புகைப்படக் கருவிகள் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அது மேலே எழும்பி வருவதைக் காணவில்லை; மேற்கு நோக்கி நகர்ந்து சென்று, காலம் முடிந்துவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. அது ஒரு சிறு துண்டேயன்றி அங்கே செல்ல முடியாது; அது மேற்கு கடற்கரையில் உள்ளது. அது சென்ற அதே வழியில் நியாயத்தீர்ப்பும் சம்பவித்தது. பீனிக்ஸூக்கு மேலே சென்று, பிரஸ்காட்டிற்கும், மலைகளைக் கடந்து மேற்கு கடற்கரைக்கும் சென்று, சரியாக…அவர்கள் எங்கே சென்று கொண்டிருந்தனர்? நேராக அலாஸ்காவிற்கு சென்று கொண்டிருக்கையில், அது இடிமுழக்கத்துடன் அந்த வழியாக சென்று கொண்டிருக்கிறது.
74151 டூசானில் உள்ள ஆய்வகங்கள் மற்றும் அவர்கள் அனைவரும் இன்னும் கேட்கிறார்கள், விஞ்ஞான ஆராய்ச்சி அது என்ன என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறது. மிக உயரமாக மூடுபனியோ, பனியோ அல்லது மேலே ஒன்றுமே இருக்க முடியாது. “அது என்ன செய்தது? அது எங்கே உள்ளது?” இயற்கைக்கு மேம்பட்ட ஒளிவட்டம் வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் குறித்து அவர்கள் குழப்பமடைந்துள்ளனர் வான சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று கேட்டனர். அது என்னவாயிருந்தது? தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார், “ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்.”
75152 பரலோகத்தின் தேவன் சாயங்கால நேரத்தில் சாயங்கால வெளிச்சம் உண்டாகும் என்று வாக்களித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரகசியம், “ஐயா, இப்பொழுது இது என்ன சமயம்?” என்ற ஒரு தீர்க்கதரிசனமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அது சரித்திரமாயிருக்கிறது. அது கடந்துவிட்டது. வாக்குத்தத்தம் நிறைவேற்றப்படுகிறது. ஐயா, இது என்ன சமயம், இந்த கவர்ச்சி என்ன? தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார்! அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நாம் ஜெபிப்போமாக.
76153 அன்புள்ள தேவனே, நான் நினைத்ததைக் காட்டிலும் நீண்ட நேரம் ஜனங்களை பிடித்து வைத்திருக்கிறேன். தேவனே, எங்குமுள்ள ஜனங்கள் புரிந்து கொள்ளும்படியாக ஏதோ ஒன்று கூறப்பட்டிருக்க வேண்டும் அல்லது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நீர் மெய்யான கிறிஸ்து என்று அவர்கள் அதைக் கண்டு புரிந்து கொள்வதனால், உறுதிப்படுத்தப்படுகின்ற வார்த்தைகள் அவருடைய வார்த்தை பரிபூரணமாயிருக்கிறதையும், அதனுடைய காலத்தில் நிறைவேற்றப்படுவதையும் உறுதிப்படுத்துவதாகும். 154 இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சொந்த வார்த்தைகளிலிருந்து, உலகம் ஒரு சோதோமின் நிலையில் இருக்கும் என்று நீர் கூறினீர். நாங்கள் அதை அறிவோம், நாங்கள் அதை நோக்கிப் பார்க்க முடிகிறது. அந்த நாளிலே, “சோதோமில் நடந்தது போல” என்று நீர் கூறினீர். புறஜாதிகளுக்கும் எபிரெய உலகத்திற்கும் மூன்று தூதர்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர், தேவன்தாமே, மனுஷ குமாரன், தம்மை ஒரு மானிட ரூபத்தில் வெளிப்படுத்தி, ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார், அவருக்குப் பின்னால் சாராள் கூடாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஆபிரகாமுக்கு கூறினார். 155 முழு புறஜாதி உலகமும் ஒரு சோதோம் நிலையில் இருக்கும் போது அது மீண்டும் நிகழும் என்று நீர் கூறினீர். கர்த்தாவே, நாங்கள் இங்கே இருக்கிறோம். இதே காரியத்தை உறுதிப்படுத்துகிற மற்ற தீர்க்கதரிசனங்களும், கடைசி நாட்களில் எலியாவை அனுப்புதல், பிதாக்களின் இருதயங்களை, இல்லை, “பிள்ளைகளை பிதாக்களிடத்திற்குத் திரும்பக் கொண்டுவரும்படிக்கு” பூமியின் மேல் எலியாவின் ஆவி வரும். தேவனே, இந்த வேளையில் நீர் உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் நான் ஜெபிக்கிறேன். பிதாவே, இதை அருளும். அவர்கள் யாவரும் உம்முடையவர்கள். நீர் இந்த ஆசீர்வாதங்களை அளித்து, தேவனுடைய மகிமைக்காக, கூறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
77156 ஒரு வார்த்தை பேசுவது ஒரு மனிதனாயிருக்கிறது; தேவன் ஒரு வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். ஒரு காரியத்தைக் கூறுவது, ஒன்றாகும்; தேவன் அதையச் செய்ய வேண்டும் என்பது, மற்றொரு காரியமாகும். தேவனுக்கு எந்த வியாக்கியானியும் தேவையில்லை; அவர் தம்முடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்கிறார். 157 இப்பொழுது தேவனுக்கு சித்தமானால், வியாதியஸ்தருக்காக ஜெபிக்க, நாங்கள் ஒரு ஜெப வரிசையை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். உங்களை சுகப்படுத்த அங்கே ஒருவரும் இல்லை, புருஷனும் இல்லை, ஸ்திரீயும் இல்லை, மானிடரும் இல்லை, தூதனும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் தேவன் அதை ஏற்கனவே செய்துவிட்டார். அவரே ஆயத்தத்தை உண்டாக்கினார், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் அதைப் பெற்றுக் கொள்வதேயாகும்.
78158 எந்த மனிதனும், எந்த தூதனும், வேறெவருமேயில்லை, தேவனால் கூட உங்களுடைய பாவங்களை மன்னிக்க முடியாது. அது ஏற்கனவே முடிந்துவிட்டது. இயேசு அதை சிலுவையில் செய்தார். ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் வரை அது உங்களுக்கு ஒருபோதும் செழிக்கவோ அல்லது உங்களுக்கு எந்த ஒரு ஆதாயத்தையும் அளிக்காது. பார்த்தீர்களா? 159 விசுவாசிகள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கும்படி தேவனால் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகள் மாத்திரமே செய்யப்பட முடியும். காலங்களினூடாக அவர்கள் எழுப்புதல்களினூடாக அதைச் செய்து வந்துள்ளனர். அவர்கள் அதை, “தேவன்” என்று அழைத்துள்ளனர்.
79160 ஆபிரகாம் அநேக அடையாளங்களைக் கண்டான். ஆனால் சோதோம் எரிக்கப்படுவதற்கு சற்று முன்னர், ஆபிரகாம் தன்னுடைய கடைசி அடையாளத்தைக் கண்டபோது, அது தேவன் ஒரு மனித ரூபத்தில் தம்மை வெளிப்படுத்துவதாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது மீண்டும் நடக்கும் என்று இயேசு கூறினாரா?
80161 இப்பொழுது, இங்கு எத்தனை பேர்…தேசம் முழுவதிலும் வானொலியில் அல்லது தொலைபேசியில் நீங்கள் இன்னமும் செவி கொடுத்துக் கொண்டிருந்தால், ஜெபத்திற்காக இப்பொழுதே ஆயத்தமாகுங்கள், இந்த கைக்குட்டைகளை இங்கே வைத்துள்ள நீங்கள், ஜெபித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, என்ன செய்ய வேண்டும் என்று தேவனுக்கு என்னால் கூற முடியாது. இல்லை, நான் அதை முயற்சித்தாலும் கூட அது தூரமாயிருப்பதாக. அவர் ராஜாதிபத்தியமுள்ளவர்; அவர் விரும்புகிறதை அவர் செய்கிறார். என்னால் கீழ்ப்படிந்து அவர் கூறுகிறதை மாத்திரமே கூற முடியும்.
81162 இப்பொழுது அவர்கள் சுவர்களைச் சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள், அவர்கள் மிக நெருக்கமாக கூடியிருக்கிறார்கள். “இந்த கவர்ச்சி என்றால் என்ன?” என்ற இந்த வார்த்தைகளின் பேரில் நாம் தேவனைக் கேட்க முடியுமா என்று நான் எதிர்பார்க்கிறேன். தேவன் மீண்டும் நம் மத்தியில் அசைவாடி (இங்கே அந்நியர்கள் இருக்கலாம்), நமக்கு மத்தியில் அசைவாடி, அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட முகத்தை நமக்கு மத்தியில் காண்பிப்பாரானால், அவருடைய ஆவி இங்குள்ளது என்பதை காண்பிப்பாரானால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையே காண்பிப்பாரானால், நாம் ஒவ்வொருவரும் (இந்த இரண்டு பலமான செய்திகளுக்குப் பிறகு) அது அவ்வண்ணமாய் இருக்கும் என்று விசுவாசிக்க முடியுமா? உங்களால் அதைச் செய்ய முடியுமா? சரி.
82163 உஷ்ணத்தோடு, நெரிசலாக, சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருக்கிறபடியால்; ஒரு ஜெப வரிசையை அழைக்க வேண்டாம். என்னுடைய ஜெப வரிசையை அழைக்க நான் இந்த வழியாக சுற்றும் முற்றும் பார்க்கிறேன், அதைச் செய்ய முடியாது; அங்கே நிற்பதைப் பாருங்கள். நான் அதை இந்த விதமாக அழைக்கலாமா? உங்களுடைய சுகவீனங்களினால் கட்டில்களிலும் மற்ற ஒவ்வொரு காரியங்களிலும் கீழே கிடத்தப்பட்டிருக்கிறபடியால்; அதை செய்ய முடியாது. எனவே நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே அமர்ந்து, தேவனை விசுவாசியுங்கள். நீங்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருந்தால், அதை வைத்துக் கொள்ளுங்கள், அது நலமாயிருக்கும். நீங்கள் ஒரு வரிசையினூடாக வர விரும்பினால், நாங்கள் உங்களை அணுகுவோம். ஆனால் நீங்கள் ஒரு வரிசையினூடாக வர வேண்டியதில்லை.
83164 அந்த திரு. ஷெப்பர்ட், கடந்த ஞாயிறு இரவு, எந்த வரிசையினூடாகவும் வரவேயில்லை. அவர் ஒரு ஜெப அட்டையை வைத்திருந்தார் என்று நான்—நான் யூகிக்கவில்லை. இன்றிரவு திரு.ஷெப்பர்ட் இங்கே இருக்கிறாரா? அவர் எங்கே இருக்கிறார்? அவர் இங்கிருக்கிறாரா? அவர் பின்னால் இருக்கிறார். திரு.ஷெப்பர்ட் அவர்களே, நீங்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருந்தீர்களா? நீங்கள் வைத்திருக்கவில்லை? அவர் வைத்திருக்கவில்லை. அவர் மீண்டும் இன்றிரவு, அங்கேயே அமர்ந்திருக்கிறார். சகோதரன் ஷெப்பர்ட், இருக்க வேண்டிய அது ஒரு நல்ல இடம்.
84165 நீங்கள் அங்கே இருக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, ஆனால் அப்படியே விசுவாசமாயிருக்க வேண்டும். ஏனென்றால், ஒரு சிறு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டபோது, அவர் அதை உணர்ந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். புதிய ஏற்பாட்டில் எபிரெய நிருபத்தில், அவர் இன்றிரவு பிரதான ஆசாரியராய் இருக்கிறார் என்றும், அவர் “உங்களுடைய பெலவீனங்களினால் தொடப்படக் கூடியவர்” என்றும் கூறியுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் விசுவாசமாயிருங்கள்! அதை சந்தேகப்படாதீர்கள். அதை விசுவாசியுங்கள், அப்பொழுது அது நிறைவேறும். நீங்கள் அதை விசுவாசிக்கக் கூடுமானால், நீங்கள்—நீங்கள் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்வீர்களா? நீங்கள் யாவரும் அதை விசுவாசிப்பீர்களா? இப்பொழுது எத்தனை பேர் அதை விசுவாசிப்பீர்கள்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 166 யார் யார் என்று எனக்குத் தெரியாது. உங்களில் ஒருவரையும் எனக்குத் தெரியாது. உங்களில் யாரையும் அறிந்து கொள்வது என்னுடைய வேலை அல்ல. இந்தக் காரியங்களை அறிந்து கொள்வது தேவனுடைய வேலையாயுள்ளது. ஆனால் நீங்கள் அதை விசுவாசித்தால் அவர் அதைச் செய்வார். இப்பொழுது நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா?
85167 இப்பொழுது, அன்புள்ள தேவனே, நிச்சயமாகவே நாங்கள் ஒரு கூட்ட கலப்பின கிறிஸ்தவர்கள் அல்ல, நாங்கள் அப்படி இருக்கக் கூடாது, யாரும் தட்டிக் கொடுத்து குழந்தையைப் போல பராமரிக்க வேண்டியதில்லை. கர்த்தாவே, நீர் அந்த விதமான ஜனங்களை பெற்றுக் கொள்வதில்லை. நீர் கரடுமுரடான விசுவாசிகளை உடையவராயிருக்கிறீர். தேவனுடைய பிரசன்னமே ஒரு மனிதனுடைய இருதயத்தை அனல் மூட்டுகிறது. ஆபிரகாமைப் போல, அவன் தேவனை விசுவாசித்தான். நீர் உம்மை அவனுக்கு வெளிப்படுத்தினீர், அப்பொழுது நீர் அவனுக்குத் தரிசனமாகி, ஒரு அடையாளத்தை நிகழ்த்தினீர், அப்பொழுது அவன் உம்மை விசுவாசித்தான். நீர் அவனுடைய சரீரத்தை ஒரு வாலிப மனிதனாக மாற்றினீர், அவனுடைய மனைவியையும் கூட, அவனுடைய மனைவி அவனுடைய சொந்த சரீரத்தின் பாகமாயிருந்தாள். அதன்பின்னர் புதிய பிள்ளை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரன் பிறக்கின்றான்.
86168 தேவனே, இந்த நாளிலும் அது அதேவிதமாகவே இருக்கும் என்று நீர் வாக்குப்பண்ணினீர். நீர் இந்த வார்த்தையை உறுதிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். சோதோம் எரிக்கப்பட்டு, நியாயத்தீர்ப்பு சோதோமை தாக்குவதற்கு சற்று முன்பு, புறஜாதி உலகத்தில், அங்கே சோதோமில் நடந்தது போல, அந்த ஒரு வாக்குத்தத்தத்தின் பேரில் நாங்கள் இடைபடுவோம். எனவே நியாயத்தீர்ப்பு புறஜாதி உலகத்தை தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது, யூதர்கள் உபத்திரவ காலத்தினூடாக இன்னும் மூன்றரை ஆண்டுகளை உடையவர்களாக இருக்கின்றனர், யாக்கோபின் தொல்லை, தானியேலின் எழுபது வாரங்களின் தொடர்ச்சி. ஆனால் புறஜாதிகள் எண்ணப்பட்டிருக்கிறார்கள், இது போக வேண்டிய நேரம். நீர் அந்த அடையாளத்தை அளித்தீர், அது மீண்டும் இருக்கும் என்று நீர் கூறினீர். தேவனே, அதை அருளும். அவர்கள், நாங்கள் உம்முடைய கரங்களில் இருக்கிறோம், நீர் பொருத்தம் என்று காண்கிறபடி எங்களோடு செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
87169 இப்பொழுது பதட்டமடைய வேண்டாம். நான் பதட்டமடைந்திருந்தால் அது என்னவாயிருக்கும்? இப்பொழுது, நான் இங்கே ஒரு காரியத்தைக் கூறுகிறேன், அது தேவனுடைய இராஜாதிபத்தியத்தின் பேரில் சார்ந்திருக்க வேண்டும். ஆனால் நான் ஏன் இதைச் செய்கிறேன்? அப்படி இருக்கும் என்று அவர் கூறினார். அதுவே அதை தீர்த்து வைக்கிறது. அவர் தம்மை உங்களுக்கு முன்பாக அந்த விதமாக உறுதிப்படுத்திக்கொண்டால், பாருங்கள், உங்களால் அவரை விசுவாசிக்க முடியவில்லையா? நிச்சயமாக. இப்பொழுது நீங்கள் விசுவாசத்தை உடையவர்களாயிருந்து விசுவாசியுங்கள். பரிசுத்த ஆவியானவர் எங்கே வழிநடத்துவார் என்றும், அவர் என்ன செய்வார் என்றும் பார்க்க நான் சற்று சுற்றும் முற்றும் பார்க்கட்டும். அவர் என்ன செய்வார் என்று எனக்குத் தெரியாது, அது அவரைப் பொறுத்ததாயுள்ளது. ஆனால் உங்களுக்கு விசுவாசம் மாத்திரம் இருந்தால், “விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்” என்று மாத்திரம் விசுவாசியுங்கள். நீங்கள் எல்லோரும் அதை விசுவாசித்து, உங்களுடைய கரங்களை உயர்த்தி, “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். [சபையோர், “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்கின்றனர்.—ஆசி.] என் முழு இருதயத்தோடு, நான் அதை விசுவாசிக்கிறேன்.
88170 அது சரியென்று உங்களுக்கு நிரூபிக்கும்படி, அவர் அதை சரியாக மூன்று முறை செய்வாரானால், இப்பொழுது மூன்று ஒரு உறுதிப்படுத்துதலாய் இருக்கும். நீங்கள் எங்கேயிருந்தாலும், நீங்கள் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் விசுவாசத்தை மாத்திரமே உடையவராயிருந்து விசுவாசியுங்கள். இப்பொழுது, அங்கும் இங்கும் அசைய வேண்டாம். இந்தப் பக்கமாக. 171 ஜெபித்துக் கொண்டிருக்கும் பெண்மணியே, எனக்கு உங்களைத் தெரியாது. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே அப்படியே இருங்கள்; நீங்கள் வர வேண்டியதில்லை. எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் நீங்கள் உங்களுடைய கரத்திலோ அல்லது உங்களுடைய மடியிலோ ஒரு சிறு பெண்ணை வைத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்கு முற்றிலும் ஒரு அந்நியன். அந்த சிறு பெண் சாதாரணமாக காணப்படுகிறாள், அவள் நன்றாகக் காணப்படுகிறாள். அவள் ஒரு அழகான குட்டிப் பெண், சிறிய சிகப்பு தலை முடி கொண்ட பெண். நான் இங்கே அவளை நோக்கிப் பார்க்கிறேன், அவள் முடமாக இருப்பது போன்றோ அல்லது வேறெந்த காரியமோ காணப்படுகிறதில்லை. அவளுக்கு என்ன கோளாறு என்று எனக்குத் தெரியவில்லை. அது அந்தக் குழந்தைக்கானதாயில்லாதிருக்கலாம்; அது உங்களுக்காக இருக்கலாம். ஆனால் நீங்கள் அந்தக் குழந்தையோடு அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் காண நேர்ந்தது. இயேசு அந்த ஸ்திரீயிடம், “தாகத்துக்கு தா,” என்று பேசிக் கொண்டிருந்தது போல, நானும் உங்களுடைய ஆவியை கிரகித்துக் கொள்ள உங்களிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும், பாருங்கள், ஒரு நபரைக் கண்டறி—கண்டறியலாம். இங்கு அமர்ந்துள்ள சகோதரன் பிரையன்ட் அவர்களையும், இங்கு அமர்ந்துள்ள இந்த ஜனங்களையும் நான் அறிவேன். அவர்களும் கூட தேவையுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு அந்நியராயிருந்தீர்கள். 172 நீங்கள் என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? இன்றிரவு நீங்கள் கேள்விப்பட்ட இந்தக் காரியங்கள் சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நீங்கள் செய்திருக்கிற ஏதோ ஒரு காரியத்தை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், அல்லது நீங்கள் செய்திருக்கக் கூடாத ஏதோ ஒரு காரியத்தை அல்லது உங்களோடு ஏதோக் காரியம் தவறாயிருந்தாலும் அல்லது உங்களுடைய வாஞ்சை என்னவாயிருந்தாலும், அது உண்மையா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் அறிந்து கொள்ளமாட்டீர்களா? அவர் அதைச் செய்வாரானால், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்ற அவருடைய வார்த்தையை அது உறுதிப்படுத்துமானால், பரிசுத்த லூக்கா 17:30 வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
89173 இப்பொழுது, நாம் அந்நியர்கள் என்று அந்தப் பெண்மணி தன்னுடைய கரத்தை உயர்த்தினாள். எனக்கு உங்களைத் தெரியாது, ஆனால் நான் அவளுடைய ஆவியை, ஒரு நபரை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். உங்களில் அநேகர் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் இதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். இப்பொழுது, அது அந்த சிறு பெண்ணுக்கானதாயுள்ளது. அது நீங்கள் அல்ல. நீங்கள் பதட்டமாக இருக்கிறீர்கள், ஆனால் அது உங்களை தொல்லைப்படுத்துகிற பதட்டம் அல்ல. உங்களுடைய இருதயத்தில் உள்ள பெரிய காரியம் அந்த சிறு பெண். அது என்னவென்று தேவனால் என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது உங்களுக்கு உதவியாக இருக்குமா, அப்படியானால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? அது ஒரு மூளைக் காயம். அது சரியா? இப்பொழுது உங்களுடைய கரத்தை அந்த சிறு பிள்ளையின் தலையின் மேல் வையுங்கள்; உங்களுடைய கரத்தையே.
90174 அன்புள்ள தேவனே, நீர், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றீர். இந்த ஸ்திரீ ஒரு விசுவாசியாயிருக்கிறாள். அவளுடைய கரம் குழந்தையின் மேல் உள்ளது. அது சுகம் பெறுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆமென். 175 இப்பொழுது நீங்கள் எல்லோரும் விசுவாசிக்கிறீர்களா? உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், எல்லாம் கூடும். நிச்சயமாக! 176 அவளுக்கு அடுத்தபடியாக அமர்ந்துள்ள அந்தப் பெண்மணியை நான் அறிவேன், ஆனால் அவள் மிகவும் உத்தமமாக இந்த பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்னால் அவளுடைய பெயரைக் கூற முடியாது, ஆனால் நான்…நான் அவளை ஒரு நிமிடம் நோக்கிப் பார்த்தால், நான் அறிந்து கொள்வேன். ஆனால் தோற்றத்தினாலே அந்த ஸ்திரீயை நான் அறிவேன், ஆனால் உங்களுடைய தொல்லை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான்…உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் எனக்குத் தெரியப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள்…அது உங்களுக்கு உதவியாக இருக்குமா? சர்க்கரை நீரிழிவு. இப்பொழுது, அது உண்மையென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நிச்சயமாக! 177 படுத்துக்கிடந்த பெண்மணி…உங்களுக்கு அடுத்தபடியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறவளுக்கும் அதே காரியம் தான். அவள் ஒரு அந்நியர். மற்றொரு பெண்மணி யாரோ ஒருவருக்காக, ஒரு முடமான குழந்தைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், தேவன் அதை அருளுவார்.
91178 யாரோ ஒருவர் இங்கே பின்னால் இருக்கிறார். ஒரு மனிதன் அங்கே உட்கார்ந்து கொண்டு, சிகரெட்டுகளைப் புகைப்பதை விட்டுவிட முயற்சித்துக் கொண்டிருந்தார். தேவன் அவைகளை உங்களிடத்திலிருந்து எடுத்துப் போடுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். நான் என்னுடைய ஜீவியத்தில் அந்த மனிதனைக் கண்டதேயில்லை. 179 இங்கே ஒரு மனிதன் இருக்கிறார். ஒரு கட்டிலில் அல்லது ஒரு நாற்காலியைப் போன்ற ஒரு நாற்காலியில் படுத்திருக்கிற இந்த மனிதனின் மேல் அந்த கருமையான நிழல் இங்கே தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தீர்களா? அவர் மரித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிழலிடப்பட்டிருக்கிறார். அவருக்கு புற்றுநோய் உள்ளது. எனக்கு அந்த மனிதனைத் தெரியாது, அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. தேவன் உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஐயா, அதுதான் உண்மை. தேவன் உங்களைக் குறித்து ஏதோ ஒரு காரியத்தை என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொள்ள அது உங்களுக்கு உதவி செய்யுமா? [அந்த சகோதரன், “ஆம், நான் விசுவாசிக்கிறேன்” என்கிறார்.—ஆசி.] நீங்கள் ஒரு நண்பரால் இங்கு கொண்டு வரப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் இங்கிருந்து வரவில்லை, ஜனங்கள் மீன்பிடிக்கும் ஒரு பெரிய நீர்நிலை இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஆம், அல்பானி, கென்டக்கி. அது உண்மை. விசுவாசியுங்கள், நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லலாம். அது போய்விட்டது என்று விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களேயானால் நலமாயிருக்கும்! நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும், அது உங்களுக்காக செய்யப்பட்டுள்ளது என்று விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
92180 உங்களுக்கு, டென்னஸியிலிருந்து வந்துள்ள, உங்களுக்கு மூச்சுத்திணறல் உள்ள ஒரு பையன் இருக்கிறான். இங்கே இல்லை, ஆனால் அவன் சுகமடைவான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆகையால் உன்னுடைய கரத்தில் உள்ள…உன்னுடைய கைக்குட்டையை எடுத்துகொண்டு, அவனிடம் செல்லுங்கள். நீங்கள் அதை விசுவாசித்தால், அவன் சுகமடைவான். 181 அங்கே மருத்துவர் வேயிலுக்கு எதிரே அமர்ந்திருந்த அந்தப் பெண்மணி அழுதுகொண்டிருக்கிறாள். அவள் நிழலிடப்பட்டிருக்கிறாள், அது ஒரு கருமையான நிழலாகவும் கூட இருக்கிறது. நான் என் வாழ்க்கையில் அந்த பெண்ணை கண்டதேயில்லை, ஆனால் அவளுக்கு புற்று நோய் உள்ளது. அவளுக்கு ஏதாவதொன்று செய்யப்படாவிட்டால், அவள் மரித்துப் போவாள். பெண்மணியே, அவர் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களால் முடியுமா? நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் உங்களுடைய சுகமளித்தலைப் பெற்றுக்கொள்ள முடியும். 182 அவளுக்குப் பின்னால் ஒரு சிறு பெண்மணி தன்னுடைய வாய்க்கு மேலே ஒரு கைக்குட்டையுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு வயிற்றில் புண் உள்ளது, சுகவீனமாயுள்ளது. நீங்கள் மயக்கமடைந்து, குருடாக்கிக் கொண்டு, கீழே விழுந்து கொண்டிருக்கிறீர்கள். யாரோ ஒருவர் உங்களை இங்கு கொண்டு வந்தார். உங்களுக்கு ஸ்திரீகளுக்கான தொல்லை உள்ளது. நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் சுகமாகி, வீட்டிற்கு செல்ல முடியும்.
93183 நீ, வாலிபனே, நீ ஒரு அந்நியனாயிருக்கிறாய்; இங்கே எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீங்கள் யார், புவேர்ட்டோ ரிக்கன் அல்லது வேறெதாவதொன்றைச் சேர்ந்தவரா? ஆம், நான் என்ன பொருட்படுத்திக் கூறினேன், நான் உங்களுக்கு ஒரு அந்நியன். நீங்கள் அதை அறிவீர்கள்; நீங்கள் என்னுடைய தேசத்திலிருந்து கூட வரவில்லை. ஆனால் உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை தேவன் உங்களுக்கு அளிக்க முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய வாஞ்சை என்னவென்பதை நான் உங்களுக்குக் கூறினால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாடிக்கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. என் சகோதரனே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள். 184 இங்கே பின்னால் இங்கே ஒரு கறுப்பு நிற மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான், அவனுடைய இருதயத்தில் ஒரு பாரம் உள்ளது. அது அவருடைய மனைவிக்கானது. அவள் கூட இங்கே இல்லை. அவளுக்கு அவளுடைய பாதங்களில் கோளாறு உள்ளது. அவர் அவளை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இங்கே ஒரு அந்நியர். நீங்கள் சமுத்திரத்திற்கு அப்பால் இருந்து வருகிறீர்கள். நீங்கள் ஜமாய்க்காவிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் யாரென்று தேவனால் என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? திரு. பிராடி. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
94185 அங்கே திருமதி ரைட்டுக்கு அடுத்தபடியாக இந்த முனையில் அமர்ந்துள்ள இந்தப் பெண்மணி, அவளுடைய இருதயத்தில் ஒரு பாரம் உள்ளது. அவள் ஒரு மகளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடும், அவளுக்காக விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவளை விசுவாசிக்கச் செய்தால், அவளுக்கு அது தேவைப்படாது. என்னால் சுகப்படுத்த முடியாது. 186 சிறுவர் இல்லத்தில், நான் கர்த்தருடைய ஆவியைக் காண்கிறேன், ஒரு தூதன், ஒரு ஒளி சிறுவர் இல்லத்தில் அசைவாடிக்கொண்டிருக்கிறது. அது ஒரு வாலிபப் பெண்மணியைக் குறித்ததாயுள்ளது, அவள் ஒரு ஆவிக்குரியப் பிரச்சனையைக் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறாள். நான் எப்படியாவது அந்த பெண்ணை, ஒரு வாலிபப் பெண்மணியை அறிந்திருக்க வேண்டும் என்பது போன்று தென்படுகிறது. அவளுக்கு ஸ்திரீகளுக்கான ஒரு கோளாறும் கூட உள்ளது. ஆம். அவளுடைய பெயர் திருமதி. வெஸ்ட், அலபாமாவிலிருந்து வந்துள்ள திருமதி. டேவிட் வெஸ்ட். விசுவாசியுங்கள்; தேவன் அதை உங்களுக்கு அருளுவார்.
95187 “மனுஷகுமாரன் வெளிப்படும் அந்த நாளிலே வெளிச்சம் உண்டாகும்.” அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவாயில்லையென்றால், நான் அதைக் குறித்து ஒன்றுமே அறியேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். 188 இப்பொழுது தேசம் முழுவதிலும் உள்ள ஒலிபெருக்கிகளில், இந்தக் கூடாரத்தில், உங்களில் எத்தனை பேர் உங்களுடைய கரங்களை உயர்த்தி, “நான் ஒரு விசுவாசி” என்று கூறுவீர்கள்? இப்பொழுது, அங்கே தேசங்களில் உள்ள நீங்கள், இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறீர்கள். தேசம் முழுவதிலும், அப்பால், நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தியிருப்பீர்கள் என்பதில், சந்தேகமில்லை. இப்பொழுது உங்களுடைய கண்களை மூடி, உங்களுடைய கரங்களை உங்களுக்கு அருகில் உள்ள யாரோ ஒருவர் மீது வைக்க வேண்டும். அவர்களுடைய கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். அதை அவர்களுடைய தோளின்மேல் வையுங்கள். நான் என்னுடைய கைகளை அந்த கைக்குட்டைகளின் மேல் வைத்திருக்கிறேன். இன்றைக்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்! இப்பொழுது என்ன செய்யப்பட்டுள்ளது என்று பாருங்கள். அவருடைய பரிசுத்தமான முகத்தைக் காண தெய்வீக அன்பினால் கொழுந்துவிட்டெரிகிற; அவருடைய கிருபையில் பங்குபெறும் பாக்கியவான்கள், அவருடைய கிரீடத்தில் இரத்தினங்களாக பிரகாசிப்பார்கள். இப்பொழுது ஜெபியுங்கள். நாம் எங்கும், ஜெபிப்போமாக.
96189 அன்புள்ள தேவனே, வேளையானது வந்துவிட்டது. இதன் பொருள் என்ன? தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார்! கர்த்தாவே, இதன் கவர்ச்சி என்ன? அது தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவதாகும். தேசம் முழுவதிலும், ஒரு தொலைபேசி பரப்புதலின் வாயிலாக, ஒரு கடற்கரையிலிருந்து மற்றொரு கரைக்கு, வடக்கிலிருந்து தெற்கே, கிழக்கிலிருந்து மேற்காக, தேசம் முழுவதிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஜனங்கள் தங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள இது என்ன? இங்கே வெளி நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வருபவர்கள், மெக்ஸிகோ, கனடா மற்றும் நாம் நம்முடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ளோம். தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறார்! 190 எப்படி ஒரு நபர் பரிசுத்த ஆவியினாலே இங்கே நின்றுகொண்டு, அவர் சீமோன் பேதுருவுக்கு செய்ததுபோல, ஒரு மனிதனை அழைத்து, “உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்” என்பதுபோன்று கூற முடிகிறது? “போய் உன்னுடைய புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா.” “எனக்குப் புருஷன் இல்லை.” “உண்மையாகவே. உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள்.” 191 அவள், “மேசியா இதைச் செய்ய வருகிறார் என்பதை நான் அறிவேன், ஆனால் நீர் யார்?” என்று கேட்டாள். அவர், “நானே அவர்” என்றார்.
97192 நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். நீர், “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், இவைகளைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள்” என்று வாக்களித்துள்ளீர். “இதோ, கடைசி நாட்களில் நான் உங்களிடத்திற்கு எலியா, தீர்க்கதரிசியை அனுப்புவேன், அவன் ஜனங்களின் சிந்தனைகளை மாற்றுவான், வேதாகமத்தின் அப்போஸ்தல உபதேசத்திற்கு பிள்ளைகளின் இருதயங்களை திருப்புவான்” என்று கூறப்பட்டுள்ளது. “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” 193 இதோ நாங்கள் இருக்கிறோம், மகத்தான பரலோகத்தின் தேவனே! நேரம் வந்துவிட்டது! கரங்கள் ஜனங்கள் மேல் உள்ளன. 194 சாத்தானே, நீ தோற்கடிக்கப்பட்டாய். நீ ஒரு பொய்யன். மேலும், தேவனுடைய ஊழியக்காரன் என்ற முறையில், ஊழியக்காரர் என்ற முறையில், நீ தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, ஜனங்களை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கட்டளையிடுகிறோம், ஏனெனில், “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” என்று எழுதியிருக்கிறதே. 195 எல்லா ஜனங்களும் விடுதலையாவார்களாக. அன்புள்ள தேவனே, அதை அருளும். அந்த நாளில் கல்வாரி மலையின் மேல் ஒரு கவர்ச்சியினால், எல்லா சுகவீனங்களையும், வியாதிகளையும், பிசாசினுடைய எல்லாக் கிரியைகளையும் நீர் தோற்கடித்துவிட்ட பரலோகத்தின் தேவனாயிருக்கிறீர். நீர் தேவனாயிருக்கிறீர். ஜனங்கள் உம்முடைய தழும்புகளால் குணமாக்கப்படுகிறார்கள். அவர்கள் விடுதலையாயிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
98196 தேவனே, இங்கே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கைக்குட்டையும், தேவனுடைய ஆவி பிரசன்னமாயிருக்கையில், இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் ஜனங்களின் மேல் இருக்கையில், அவர் வாக்குத்தத்தம் செய்த மகத்தான அடையாளங்கள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில், பூமியானது நடுங்குகிறது, பூமியதிர்ச்சிகள் உண்டாகின்றன, அவர் கூறின அந்த மகத்தான அடையாளங்களையும், வேதவாக்கியம் நிறைவேற்றப்படுவதையும், சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பாகங்களில் உள்ள விசுவாசிகளின் பிரதிநிதியாக என் சரீரத்தை இந்த கைக்குட்டைகளின் மேல் கிடத்தி; பிசாசினிடம், “இது வைக்கப்படும் ஒவ்வொரு வியாதியஸ்தரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் விட்டுப் போ” என்று தேவனுடைய வார்த்தையின் கனத்திற்கும் மகிமைக்கும் கூறுகிறேன். தேவனுடைய வார்த்தையாகிய நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
99197 இப்பொழுது, அமைதியாக, நல்லறிவோடு, தெளிந்த புத்தியோடு, விசுவாசிகளாகிய உங்களுடைய சரியான சிந்தையில், நீங்கள் இப்பொழுது விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சர்வ வல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து உங்களுடைய சுகத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? நீங்கள் அப்படி செய்தால், உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். அங்கே வெளி தேசங்களில் உள்ள யாவரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். என்னால் காண முடிந்த வரையில் இங்குள்ள ஒவ்வொரு நபரும் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருந்தனர்; உட்புறத்திலும், வெளிப்புறத்திலும், ஜன்னல்களுக்கு எதிராகவும், கதவுகளுக்கு எதிராகவும், எங்கும் சுற்றிலும் ஜனங்கள் தங்களுடைய கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். சாத்தான் தோற்கடிக்கப்பட்டான்! இயேசு கிறிஸ்துவின் தழும்புகள் உங்களை குணமாக்குகின்றன, இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் அவர் இன்றைக்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது, அவர் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் காத்துக்கொள்ள முடியும். ஆமென்! நான் அவரை விசுவாசிக்கிறேன். நீங்கள் விசுவாசிக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]
100198 இப்பொழுது நாம் எழும்பி நிற்போமாக. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், செய்யப்பட்டுள்ள அல்லது கூறப்பட்டிருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் ஏற்றுக்கொண்டு, எங்கள் முழு இருதயத்தோடும் அவரில் அன்புகூருகிறோம். எங்களுக்குள்ள எல்லாவற்றோடும் நாங்கள் அவரை நேசிக்கிறோம். இப்பொழுது நீங்கள் இன்றிரவிலிருந்து உங்களுடைய பல்வேறுபட்ட வீடுகளுக்கு செல்லும்போது, தேவன் உங்களோடு செல்வாராக. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லையென்றால், தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைத் தருவராக.
101199 இங்குள்ள ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும் அல்லது பெண்ணும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படாதவர்களுக்கு, துணிகளும், தொட்டியும் உள்ளன. இன்றைக்கு செய்யக் கூடியதை நாளைக்குத் தள்ளிப் போடாதீர்கள். நாளை என்பது மிகவும் காலதாமதமாகலாம். “இன்றைக்கு, அந்த நாளுக்கான பாடு போதுமானதாயிருக்கிறது.” அங்கே ஊழியக்காரர்கள் நின்றுகொண்டு, காத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆடைகள் காத்திருக்கின்றன. சாக்குபோக்கே இல்லை. நீங்கள் காத்திருக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் விசுவாசியுங்கள். நீங்கள் எப்படி ஞானஸ்நானம் பண்ணப்பட்டாலும், தெளிக்கப்பட்டாலும், ஊற்றப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது என்னவாயிருந்தாலும், அது ஒரு பிழையாயுள்ளது. வெளிச்சம் வந்துவிட்டது. வந்து, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெறுங்கள். 200 பரிசுத்த ஆவி இல்லாத ஒவ்வொருவரும், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்களாக, நீங்கள் ஒவ்வொருவரும், முழு தெய்வீக வல்லமையிலும், அவர் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின அன்பிலும், நீங்கள் அவருக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக உருவாக்கப்படுவீர்களாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
102201 இப்பொழுது, அடுத்த ஞாயிறு காலை ஒன்பது முப்பது வரை, அநேக ஆண்டுகளுக்கு முன்பு நாம் வழக்கமாக பாடும் இந்த சிறு பாடலை நாம் பாடுவோமாக: குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள், இயேசு உங்களை அங்கே சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுடைய ஒவ்வொரு கவலையையும் போக்கிவிடுவார், குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள். இப்பொழுது அதை நாம் சேர்ந்து பாடுவோமாக. குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள், இயேசு உங்களை அங்கே சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுடைய ஒவ்வொரு கவலையையும் போக்கிவிடுவார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள். 202 இப்பொழுது நாம் அதை மீண்டும் பாடுகையில், உங்களுக்கு அடுத்தபடியாக ஒரு யாத்திரீகனுடன் கரங்குலுக்கிக் கொள்ளுங்கள், நாம் அதைப் பாடுகையில், பாருங்கள். குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள், ஓ, இயேசு உங்களை அங்கே சந்திக்க விரும்புகிறார்; அவர் உங்களுடைய ஒவ்வொரு கவலையையும் போக்கிவிடுவார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்துவிடாதீர்கள்.
103203 நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் (அதுவே கவர்ச்சியாயிருந்தது.) கல்வாரி மலையினிலே. சூரிய அஸ்தமன மலையிலும், நேபோ மலையிலும், சீனாய் மலையிலும், பல்வேறு மலையுச்சி அனுபவங்கள் அனைத்திலும் அதே கவர்ச்சி. அப்படியானால் சரி, இப்பொழுது நாம் அதைப் பாடுவோமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் இரட்சிப்பை…சம்பாதித்தார் கல்வாரி மரத்தினிலே. 204 அவரை நேசிக்கிற யாவரும், “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது அவ்வண்ணமாய் இருப்பதாக! இப்பொழுது அவர் உங்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்; இன்றிரவு நீங்கள் மது அருந்தும் அறையில் இருந்திருக்கக் கூடும் என்று எண்ணுகிறேன். தேவனுடைய இரக்கங்களுக்குப் புறம்பாக, நான் இருந்திருக்க வேண்டியதைப் போன்று அநேகமாக நீங்கள் கல்லறையில் இருந்திருப்பீர்கள். அவர் உங்களுக்காக என்ன செய்தார்? ஓ, நாம் எப்படி அவரை நேசிக்காமல் இருக்க முடியும்? எவரும் என்ன கூறினாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை, அவரே முதன்மையாய் இருக்கிறார்.
104205 நாம் நம்முடைய கண்களை மூடி, அதை இப்பொழுது அவருக்குப் பாடுகையில், நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அவர் பாடல்களைப் பாடுவதையும், கீர்த்தனைகளைப் பாடுவதையும் விரும்புகிறார். இப்பொழுது நாம் அதை அவரிடத்தில் பாடுவோமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தினிலே. 206 அவருடைய பிரசன்னத்தில் நம்முடைய தலைகளும், இருதயங்களும் வணங்கியிருப்பதோடு, எங்களுடைய கண்கள் கண்டவைகளுக்காகவும், எங்களுடைய காதுகள் கேட்டவைகளுக்காகவும், தேவனுடைய வார்த்தையில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவருடைய வாக்குத்தத்தம் இன்றைக்கு நமக்கு என்னவாயிருந்து வருகிறது என்பதையும் நாம் அறிவோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
105207 இன்றிரவு நம்மோடு ஒரு விருந்தாளி—ஒரு சகோதரன், நெட் ஐவர்ஸன் இருக்கிறார், அவர் முன்பு பிரஸ்பிடேரியன் ஊழியக்காரர். அவருடைய தகப்பனார், அவருடைய சகோதரர்கள், பிரஸ்பிடேரியன் ஊழியக்காரர். அவர், இன்று மீண்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார் என்பதை நான் அறிந்துகொள்கிறேன். அவர் ஒரு நல்ல ஊழியக்காரர். இப்பொழுது நான் அவரை தேவனுடைய ஊழியக்காரர் என்று நான் விசுவாசிப்பதால், நீங்கள் உங்களுடைய வீட்டிற்குச் செல்லும்போது, இந்த சபையோரின் மேல் தேவனுடைய ஆசீர்வாதங்கள் தங்கியிருக்கும்படியாய் ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 208 சகோதரன் ஐவர்சன், நாம் நம்முடைய தலைகளை ஜெபத்தில் வணங்கியிருக்கையில், முன்னோக்கி வாருங்கள். என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.