1 காலை வணக்கம், கூட்டத்தாரே. நாம் இப்பொழுது நம்முடைய கர்த்தரிடத்தில் பேசுவோமாக. 2 மகத்தான தேவனே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, உமக்கு ஆராதனை செய்யும்படியாக இந்தக் காலையில் தெய்வீகமாக எங்களை நியமித்திருக்கிறீர். கர்த்தாவே, நாங்கள் அறிந்துகொள்ளும்படி நீர் விரும்புகிறதை கொண்டு வரும்படிக்கு, பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குள் கிரியை செய்ய எங்கள் இருதயங்களில் உம்முடைய தெய்வீக சித்தத்திற்கு எங்களையே முற்றிலுமாக, நாங்கள் ஒப்புக்கொடுப்போமாக. சிறந்த கிறிஸ்தவர்களாகவும், உம்முடைய சிறந்த பிரதிநிதிகளாகவும் இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய வாஞ்சையாயுள்ளது. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம் பேரில் காத்திருக்கையில், இந்தக் காலையில் நீர் இதை எங்களுக்கு அருளும். ஆமென்.
23 உட்காருங்கள். [யாரோ ஒருவர், “ஜெபத் துணிகளைக் எடுத்துவிடலாமா?” என்று கேட்கிறார்.—ஆசி.] ஆம். இக்காலையில் மீண்டும் மகத்தான இராஜாவின் ஆராதனையில் இங்கு இருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் ஜனங்களுக்கு இடமளிக்கவில்லை என்பதற்காக, நாங்கள், மீண்டும், நாங்கள் வருந்துகிறோம், ஆனால் நாங்கள்… நாங்கள் அந்த சூழ்நிலையில், எங்களால் முடிந்தளவு சிறந்ததைச் செய்ய முயற்சிப்போம். 4 இப்பொழுது, அநேகர் ஜெபிக்கப்படுவதற்காக இங்கே கைக்குட்டைகளையும் விண்ணப்பங்களையும் வைத்துள்ளனர். நான் அவைகளை ஒரு பக்கமாக வைக்கிறேன்; நான் அவர்களைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதல்ல, ஆனால் நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன்…நான் முக்கியமாக விரும்புகிறேன்…இன்றிரவு, நான் இந்தக் காலையிலும், அதன்பின்னர் இன்றிரவு மீண்டும், அப்பொழுது நான் ஜெபித்து சுகமளித்தலுக்காக தேவனுடைய ஆவியின் பேரில் காத்திருப்பேன். அப்பொழுதுதான் நான் கைக்குட்டைகளுக்கும் மற்ற காரியங்களுக்கும் ஜெபிக்க விரும்புகிறேன்.
35 விசேஷித்த விண்ணப்பங்களின் பேரில், பில்லி அவைகள் ஒவ்வொன்றையும் என்னிடத்தில் கொடுத்தான். ஏறக்குறைய முந்நூறு பேர் இருந்தனர், அப்பொழுது நான், அறைகளை விட்டு வெளியே வந்தேன். நீங்கள் பாருங்கள், என்னால் முடிந்தளவு வேகமாக, அவை ஒவ்வொன்றையும் நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். என்னால் முடிந்தளவு துரிதமாக அவைகளைக் கண்டுகொள்வேன். நான் அவைகளையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. “கர்த்தாவே, இது இந்த ஒன்றாக இருக்குமா, இந்த ஒன்றாக இருக்குமா?” என்று, ஒவ்வொன்றாக எடுத்துக் கூற வேண்டும். அது போலவே, ஏனென்றால் அவைகள், ஒவ்வொன்றும் தேவையுள்ள, உண்மையான வேண்டுகோள்கள்; சந்தேகமேயில்லாமல், நாம் ஒன்று சேர்ந்து பேச வேண்டிய, ஒரு காரியமாக இருக்கிறது. நான்…சில நேரங்களில் பரிசுத்த ஆவியானவர் நான் வாசித்த ஒரு குறிப்பிட்ட ஒன்றைக் கூறலாம் என்பதை, நீங்கள் அறிவீர்கள்; நான் மீண்டும் அதற்கு திரும்பிச் சென்று, நான் அதைக் கண்டறியும் வரையில் அங்கு தேடிச் செல்கிறேன். இல்லையென்றால், சாதாரணமாக அவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
46 இப்பொழுது, நாமும் கூட இந்தக் காலையில் கூற விரும்புகிறோம், நாட்டின் மற்ற பாகங்களில் உள்ளவர்களுக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறோம். நாம் இந்தக் காலையில் இந்த தொலைபேசி இணைப்பு மூலம் எல்லோரையும் வாழ்த்த விரும்புகிறோம், நியூயார்க் நகரத்திற்கு; பியூமாண்ட், டெக்ஸாஸ்; பிரஸ்காட், அரிசோனா; டூசான், அரிசோனா; சான் ஜோஸ், கலிபோர்னியா; கனெக்டிகட்; கெய்ன்ஸ்வில், ஜார்ஜியா; மற்றும் நியூ ஆல்பனி, இந்தியானா; தேசம் முழுவதும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் உங்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறோம். 7 இந்தக் காலை, இந்தியானாவில், இது ஒரு அழகான காலையாய் உள்ளது. நேற்றிரவு எங்களுக்கு மழை பெய்து வானிலை குளிர்ச்சியடைந்தது. நாம்… ஞாயிறு பள்ளி பாடத்திற்காக, கூடாரம் நிரம்பி வழிகிறது, ஒவ்வொருவரும் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு, காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனுடைய ஐஸ்வரியமான ஆசீர்வாதங்கள் அங்கே உங்கள் மீது இருக்கும் என்று நான் நம்புகிறேன். 8 வெகு சீக்கிரத்தில், நாமெல்லோரும் ஒன்றுகூட ஒரு—ஒரு வழியை நாம் உடையவர்களாக இருப்போம் என்று, நாம் நம்புகிறோம், ஒருக்கால் ஒரு பெரிய கூடாரத்தின் கீழ் இருக்கலாம், அங்கே வேதாகமத்தில் உள்ள கடைசி ஏழு கலசங்களைக் குறித்து பிரசங்கிக்க நான் நிச்சயமாக வழிநடத்தப்பட்டதாக உணருகிறேன்.
59 ஆகையால் இப்பொழுது, இந்தக் காலையில் ஒரு மகத்தான பாடத்தின் பேரில் நாம் நீண்ட நேரம் இருக்காதபடிக்கு… நான் கர்த்தரைத் தேடி, “நான் என்னக் கூற முடியும்?” என்று சிந்தித்திருக்கிறேன். இதுவே எங்களுடைய கடைசி ஆராதனையாக இருக்கக் கூடும் என்பதை அறிந்திருக்கிறோம். கர்த்தருடைய வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது! 10 கலிபோர்னியாவில் கூறப்பட்ட அந்த முன்னறிவிப்பிற்குப் பிறகு, நான் காண்கிறேன், அங்கே உள்ள வீடுகளும், இடங்களும், ஒரு மணி நேரத்திற்கு முப்பது அங்குலங்கள் என்ற வேகத்தில் மரங்கள் அமிழ்ந்துகொண்டும், உடைந்துகொண்டும் இருக்கின்றன. அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். நாம் முடிவில் இருக்கிறோம். இலட்சம் டாலர்கள் மதிப்புள்ள வீடுகள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. நான் செய்தித்தாளில் வந்துள்ள பெரிய தலைப்புச் செய்திகளையும், புகைப்படங்களையும் வைத்துள்ளேன், இன்றிரவு நான் கொண்டு வருவேன் என்று நம்புகிறேன், நான் இன்றிரவு அதன் பேரில் உள்ள ஒரு காரியத்தின் பேரில் பேச விரும்புகிறேன்.
611 மேலும், அதன்பின்னர், இன்றிரவு நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்போகிறோம். இன்று பிற்பகல், ஐந்து, அல்லது ஆறு மணிக்கு அல்லது எப்பொழுதாகிலும் வாருங்கள். ஜனங்கள் சீக்கிரமாக புறப்பட்டுச் சென்று, உங்களுடைய ஜெப அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும்படியாக, நாங்கள் சீக்கிரமாகவே புறப்படப் போகிறோம் என்று, நான் நினைக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம்.
712 இப்பொழுது, “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று ஜெபத்தோடு சிந்தித்த பிறகு, என்றோ ஒரு நாள் நான் இங்கே கூறுவதற்கு பதில் கூற வேண்டும் என்பதை அறிவேன்… இந்த காலையில் தீர்க்கதரிசனத்தின் பேரில், நமக்கு ஒருவிதமாக அறிவிக்கும்படியாக, நான் பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்பட்டதை உணர்ந்துள்ளேன், அல்லது தீர்மானித்திருக்கிறேன். பார்த்தீர்களா? இது நாம் செய்யும் ஒன்று…அது நமக்கு அறிவிக்கப்படாமலிருந்தால், சாதாரணமாக ஏதாவது சம்பவித்தால், நாம் இதைக் குறித்து அறிந்திருக்க வேண்டும். வருகைகளைக் குறித்து ஜனங்களை எச்சரிக்க, பரிசுத்த ஆவியானவர் அதை நமக்கு அளித்திருக்கிறார். வேதம், “தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய, தீர்க்கதரிசிகளுக்கு, முதலில் காண்பிக்காமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று கூறியுள்ளதை, நீங்கள் அறிவீர்கள். மேலும்—மேலும் என்ன சம்பவிக்கும் என்று, இயேசு ஜனங்களை எச்சரித்தார்; அது சம்பவிக்கும் என்று, தீர்க்கதரிசிகள் எப்படி ஜனங்களை எச்சரித்தனர். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த மகத்தான வேளையில், நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும், என்ன சம்பவிக்கும்-…இந்தக் காலத்தில் என்ன சம்பவிக்கப் போகிறது என்றும் காணும்படியாகவே நான் விரும்புகிறேன். எனவே இந்த விநோதமான பொருள்களில் ஒன்றை நாம் அநேக முறை வாசித்திருக்கலாம், இந்தக் காலையில் அதைக் குறித்து ஜனங்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் என் இருதயத்தில் உண்டானது.
813 இப்பொழுது நாம் நம்முடைய வேதாகமங்களில் மத்தேயு 24-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம், வார்த்தையின் ஒரு பகுதியை வாசித்து, [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய தொண்டையை சரிப்படுத்துகிறார்—ஆசி.] (என்னை மன்னிக்கவும்.) நம்முடைய பாடப் பொருளுக்கு, ஒரு சூழலைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாகவே அது உள்ளது. 14 இப்பொழுது நாம் இதை ஒரு வேதாகம வகுப்பாக, மெதுவாகப் போதிக்கப்போகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுடைய காகிதங்களையும் பென்சில்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் இங்கே அநேக வேதவாக்கியங்களை எழுதி வைத்துள்ளேன், அதாவது நீங்கள் இவைகளைக் குறித்துக்கொள்ள முடியும். அதன்பின்னர் வீட்டிற்குச் சென்று அவைகளைப் படிக்கவும், ஏனென்றால் இது ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பைப் போன்றது, நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரங்களுக்காக எச்சரிக்கப்பட்டு ஆயத்தம் பண்ணப்பட வேண்டும் என்பதை, நாம் அறிந்துகொள்ளுவோம்.
915 பரிசுத்த மத்தேயுவின் புத்தகத்தில், [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய தொண்டையை சரிப்படுத்துகிறார்—ஆசி.] (என்னை மன்னிக்கவும்.) 24-வது வசனம் இல்லை 24-ம் அதிகாரம், சரியாகக் கூறினால், 15-ம் வசனம் தொடங்கி, அவருடைய வார்த்தையின் ஒரு பகுதியை நான் வாசிக்க விரும்புகிறேன். மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, ( வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். ) நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். வீட்டின்மேல்—வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை, தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள், இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
1016 இப்பொழுது, ஒரு பொருளுக்காக, நான் 24-ம் வசனத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன், இந்தக் காலையில் நம்முடைய ஞாயிறு பள்ளி பாடத்திற்காக இந்த வசனத்தை வலியுறுத்திக் கூறுவோம். நான் இதை மீண்டும் வாசிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 17 இப்பொழுது இந்தக் காலையில் ஒரு பொருளுக்காக அல்லது ஒரு பாடப்பொருளுக்காக, சரியாகக் கூறினால், நான் எடுக்க விரும்புகிறேன்: கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள். கடைசி காலத்தில் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்: என்ற பொருளின் பேரில்தான் நான் பேச விரும்புகிறேன்.
1118 நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். நான் நினைக்கிறேன் பெரும்பாலும் யாராகிலும்… நாம் இப்பொழுது உலக சரித்திரத்தின் முடிவில் இருக்கிறோம் என்பதை, வேதத்தை வாசிப்பவர், அல்லது எந்த ஒரு—ஒரு விசுவாசியும் கூட அறிவார். அதை எழுதுவதனால் எந்த உபயோகமுமில்லை, ஏனென்றால் அதை வாசிக்க எவருமே இருக்கமாட்டார்கள். இது காலத்தின் முடிவிலே உள்ளது. எப்பொழுது, எனக்குத் தெரியாது. அது எவ்வளவு காலம் நீடித்திருக்கும், பரலோகத்தின் தூதர்கள் கூட அந்த நிமிடத்தை அல்லது மணி நேரத்தை அறியமாட்டார்கள். ஆனால் இப்பொழுது நாம் காண்கிற இந்தக் காரியங்கள் நிறைவேறத் துவங்கும்போது, அப்பொழுது நம்முடைய மீட்பு சமீபமாயிருக்கிறபடியால் நம்முடைய தலைகளை உயர்த்துவோம், என்று, கர்த்தராகிய இயேசுவினால் நமக்குக் கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, “சமீபித்து வருதல்” என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. அர்த்தம்…
1219 அன்றொரு நாள் விஞ்ஞானிகள், தொலைக்காட்சியில் கூறினதுபோல, பூமியில் உள்ள பெரிய பல்லாயிரக்கணக்கான மைல்கள் ஆழத்தில் மூழ்கப் போவதைக் குறித்து பேசுகின்றனர். “அது அங்கு மூழ்கிவிடுமா?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அது லாஸ் ஏஞ்சல்ஸ், மேற்கு கடற்கரை. உங்களில் அநேகர் அதை எவ்வாறு அவர்கள் ரேடார் கருவியில் பின்தொடர்ந்தனர் என்பதை பார்த்திருக்கிறீர்கள், அதனூடாக சென்றதை…சான் ஜோஸூக்கு கீழாக அலாஸ்காவிற்குள் சென்று, அலியூடியன் தீவுகளினூடாக, சுமார் இருநூறு மைல்கள் தூரத்தில் கடலுக்குள், மீண்டும் சான் டியாகோவிற்கு வந்து, லாஸ் ஏஞ்சல்ஸூக்கு பின்னால் சுற்றிச் சென்று, அங்கே ஒரு பெரிய பள்ளம் உண்டானது. 20 இந்த பூமியதிர்ச்சிகளையெல்லாம் நாம் அனுபவித்து வருகிறோம், இந்த எரிமலையானது அங்கே உள்ள இந்த பெரிய பள்ளத்தாக்கு பள்ளத்தாக்கினுள் விழுந்து கொண்டிருக்கிறது. அவர்கள்—அவர்கள் அழைத்த அந்த பெயரை என்னால் அழைக்க முடியவில்லை. இருப்பினும், அது அசைக்கப்படும்போது, அது பல ஆண்டுகளாக மேற்குக் கரையில் நமக்கு சம்பவிக்கும் இந்த பூமியதிர்ச்சியை அளிக்கிறது. இப்பொழுது அது முழுவதும் பிளந்துவிட்டது. மேலும் விஞ்ஞானிகள் கூறினர், ஒன்று…
13அந்த மனிதன் மற்றவனை நோக்கி, “அது உள்ளே விழக் கூடுமா?” என்று கேட்டார். அவர், “‘விழுந்துவிடுமா,’ என்றல்ல, ஆனால் அது விழும்” என்றார். “ஆனால் ஒருவேளை நம்முடைய சந்ததியில் நடக்குமா?” என்று கேட்டார். மேலும், “அடுத்த ஐந்து நிமிடங்களில், அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகளில் சம்பவிக்கலாம். எப்பொழுது என்று எங்களுக்குத் தெரியாது” என்றார். 21 இந்த வாரம், பத்திரிக்கையில் ஒரு தலைப்புச் செய்தி எனக்கு அனுப்பப்பட்டது, இலட்சம் டாலர்கள் மதிப்புள்ள பெரிய வீடுகள் பிளவுபட்டு பிளவுபட்டு, ஜனங்கள் விலகி ஓடுகின்றனர். அதை எப்படி நிறுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அதை நிறுத்த வழியேக் கிடையாது. பாருங்கள், தேவன் விரும்புகிறதையெல்லாம் அவரால் செய்ய முடியும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யாருமே அவரிடம் கூற முடியாது. 22 நீங்கள் வீடுகளைக் கட்டுகிறீர்கள், உங்களால் விஞ்ஞானக் காரியங்களை உண்டாக்க முடியும், தேவன் விஞ்ஞானத்தை சிருஷ்டித்தவராயிருக்கிறார். நீங்கள் எப்படி அவரை தடுத்து நிறுத்தப் போகிறீர்கள்? அவர் விரும்பினால் இந்தக் காலையில் பூமியை வண்டுகளால் அழிக்க முடியும். அவர் வண்டுகளை பேசி சிருஷ்டித்து, இன்னும் அரை மணி நேரத்தில், நாற்பது மைல் உயரத்தில் தோன்றி எங்கும் பரவி பாருங்கள், அங்கே…பூமியிலுள்ள ஜனங்களை தின்றுபோட முடியும். அவர் தேவனாயிருக்கிறார். அவர் தன்னுடைய விருப்பப்படியே செய்கிறார். அவர் தமக்குள், இராஜாதிபத்தியமுள்ளவராயிருக்கிறார்.
1423 இப்பொழுது, இந்த அத்தாட்சி திரட்சியைக் காணும்போது, அதாவது நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், முத்திரைகள் திறக்கப்பட்டதால், இவைகளை எடுத்து அவைகளை வரிசைப்படுத்திப் பார்ப்பது ஒரு நல்ல காரியம் என்று நான் நினைக்கிறேன், தேவன் நமக்கு மிகவும் உண்மையுள்ளவராயிருந்து, தம்முடைய கிருபையைக் கொண்டு, இந்தக் காரியங்களை நமக்கு காண்பிக்கிறபடியால், இந்தக் காரியங்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிகிறோம். 24 இங்கே மத்தேயு 24-ம் அதிகாரத்தில், இயேசு “கிறிஸ்துக்கள்” என்ற பதத்தை உபயோகித்தார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், கி-றி-ஸ்-து-க்-க-ள், “கிறிஸ்துக்கள்.” கிறிஸ்து அல்ல, ஆனால் “கிறிஸ்துக்கள்,” பன்மை, ஒருமை அல்ல. “கிறிஸ்துக்கள்.” ஆகையால் கிறிஸ்து என்ற வார்த்தை “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று பொருள்படுகிறது. ஆகையால் அது “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்றால், ஒருவர் மாத்திரமல்ல, அநேகர் அபிஷேகம் பண்ணப்பட்டிருப்பார்கள், “அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்”. பார்த்தீர்களா? 25 இல்லையெனில், நாம் அதை ஏறக்குறைய நன்றாக புரிந்துகொள்ளும்படியாக அவர் அதை விவரிக்க விரும்பினபடியால், அவர், “கடைசி நாட்களில் கள்ள, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் எழும்புவார்கள்” என்று கூறுவார். இப்பொழுது, “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்பதன் பதங்கள், பாருங்கள், அது ஏறக்குறைய சாத்தியமற்றதாகத் தென்படுகிறது. ஆனால் அதற்கு அடுத்த வார்த்தைகளைக் கவனியுங்கள், “கள்ளத் தீர்க்கதரிசிகள்,” தீ-ர்-க்-க-த-ரி-சி-க-ள், பன்மை.
1526 இப்பொழுது, அபிஷேகம் பண்ணப்பட்டவன், “ஒரு செய்தியைக் கொண்டவன்” என்பதாகும். அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவரால் மட்டுமே செய்தியை வெளிக்கொண்டு வர முடியும், அது ஒரு தீர்க்கதரிசி, அபிஷேகம் செய்யப்பட்டவர், “அபிஷேகம் பண்ணப்பட்ட போதகர்கள் எழும்புவார்கள்.” ஒரு தீர்க்கதரிசி தன்னுடைய செய்தி என்னவென்பதை போதிக்கிறான். அபிஷேகம் பண்ணப்பட்ட போதகர்கள், ஆனால் கள்ளப் போதனையினால் அபிஷேகிக்கப்பட்ட ஜனங்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், “கிறிஸ்துக்கள்,” பன்மை; “தீர்க்கதரிசிகள்,” பன்மை. ஒரு—ஒரு கிறிஸ்து என்று, ஒருமையில், அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்குமானால், அப்பொழுது இவர்கள் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக” இருக்க வேண்டும். அவர்கள் போதித்ததைக் குறித்த அவர்களுடைய தீர்க்கதரிசனம் வித்தியாசமாயிருக்கும், ஏனென்றால் அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்.
1627 இப்பொழுது, இது ஒரு ஞாயிறு பள்ளி பாடமாயுள்ளது, வேத வாக்கியங்களைக் கொண்டு, யாரோ ஒருவர் அதைக் குறித்து கூறியுள்ளதன் மூலம் அல்ல, ஆனால் வேத வாக்கியங்களை அப்படியே வாசிப்பதன் மூலமேயாகும். நீங்கள், “இது எப்படி இருக்க முடியும்? அபிஷேகம் பண்ணப்பட்டவர்களா…? அவர்கள் என்னவாயிருந்தனர்?” என்று கேட்கலாம். “கிறிஸ்துக்கள்,” கி-றி-ஸ்-து-க்-க-ள். “அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துக்கள், கள்ளத் தீர்க்கதரிசிகள்.” அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், ஆனால் கள்ளத் தீர்க்கதரிசிகள்! இயேசு, “மழையானது நீதிமான்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது” என்று கூறினார். 28 இப்பொழுது, யாராவது என்னிடம், “அந்த ஜனங்களின் அபிஷேகம் என்பது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று பொருள்படுகிறது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்கலாம். ஆம் ஐயா, ஒரு நபர் மேல் அசலான தேவனுடைய பரிசுத்த ஆவியிருந்தும், அதே சமயத்தில் அவர்கள் போலியானவர்களாக இருக்கிறார்கள். 29 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், அவர் என்ன கூறினார் என்று பாருங்கள். “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்படி அவர்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.” அவர்கள் அசலான பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமாகத் தென்படுகிறது என்பதை நான் அறிவேன், ஆனால் நாம் நேரத்தை எடுத்துக் கொண்டு, வார்த்தையைக் கொண்டு அதை விளக்கிக் கூறப் போகிறோம், அதாவது அது முற்றிலும் கர்த்தர் உரைக்கிறதாவது , என்ற சத்தியமாயிருக்கிறது.
1730 இப்பொழுது நாம் நம்முடைய வேதாகமங்களில் ஒரு நிமிடம் மத்தேயு 5-ம் அதிகாரத்திற்குத் திருப்பி, 45-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். இப்பொழுது நாம் இந்த வேத வாக்கியங்களின் பேரில் ஒரு சில நிமிடங்களுக்கு வாசிப்பதைப் பார்ப்போம். அதன்பின்னர், நாம் இங்கு வந்த பிறகு, ஏன், நாங்கள் உங்களுக்கு… எனவே நீங்கள், நாம் அவைகள் எல்லாவற்றையும் வாசிக்கத் தவறினால், அப்பொழுது நீங்கள் உங்களுடைய வேதாகமத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்ற பிறகு, நீங்கள் அவைகளை வாசிக்கலாம், அதைக் குறித்து வேதம் என்ன கூறுகிறது என்பதை நீங்கள் படியுங்கள்.
1831 இப்பொழுது நம்முடைய நேரத்தை எடுத்துக்கொகொண்டு, ஒரு—ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்துகொள்வோம், ஏனென்றால் நான் இங்கே திகைப்பூட்டும் ஒரு அறிக்கையை கூறிக்கொண்டிருக்கிறேன். எப்படி பரிசுத்த ஆவியானவர் ஒரு கள்ள போதகரை அபிஷேகிக்க முடியும்? ஆனால் அதுதான் சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். இப்பொழுது, மத்தேயு 5-ம் அதிகாரம் 45-ம் வசனத்தை நாம் வாசிப்போம். நாம் அதற்கு சற்று பின்னால், 44-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், …உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளோர் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். (மழை நல்லோர் மேல் பெய்கிறது போல தீயோர் மேலும் பெய்கிறது.)
1932 இப்பொழுது இதைப் பின்தொடர்ந்து, இதைக் குறித்த மற்றொரு தீர்க்கதரிசனத்திற்கு, நாம் இப்பொழுது எபிரெயர் 6-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம், இதைப் பற்றிய அடுத்த தொடர் வசனத்திற்காக, பவுல் இயேசு சொன்னதையே நினைவுக்குக் கொண்டுவருகிறான். பவுல், இப்பொழுது பேசுகிறான். நீங்கள் அதை தேடிக் கொண்டிருக்கையில்… ஒலிபரப்பில் உள்ள நீங்கள், உங்களுடைய வேதாகமங்களை உங்கள் அருகில் வைத்து, ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, இதைக் குறித்து வைத்துக்கொண்டு இப்பொழுது பாருங்கள். எபிரெயர் 6-ம் அதிகாரம், பவுல் எபிரெயர்களுக்கு எழுதி, அவர்களுக்கு நிழல்களையும், மாதிரிகளையும் காண்பித்து, யூத மார்க்கத்தின் கீழிருந்த அவர்களை கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் கொண்டு வந்து, பழைய காரியங்கள் யாவும் எப்படியாய் வரப்போகும் காரியங்களுக்கு முன்நிழலாக இருந்தன என்பதையே அவர்களுக்குக் காண்பிக்கிறான். பவுல் இப்பொழுது, எபிரெயர் 6-ல் பேசுகிறான். ஆகையால் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய உபதேச வசனங்களை நாம் விட்டு (கி-றி-ஸ்-து, ஒருமை), செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம். ஸதானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல் மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்னும் அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக; தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம். ஏனெனில் ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்ததும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 33 நான் ஒரு நிமிடம் உங்களுடைய கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நீங்கள் கவனித்தீர்களா? அதுதான் “ஈவு”; “ஈவுகள், அல்ல, பரமஈவுகளைப் பெற்றும்,”; ஆனால், “பரம ஈவு,” ஒருமை; “கிறிஸ்து,” ஒருமை; “ஈவு,” ஒருமை. …பரம ஈவை, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களை… ருசிபார்த்து…தேவனுடைய வார்த்தையை,… (எதை ருசி பார்த்தோம்?)… தேவனுடைய வார்த்தையையும், இனிவரும் உலகத்தின் பெலனையும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து, அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில் (கவனியுங்கள்) பூமியானது தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முட்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது. சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு.
2034 இப்பொழுது அதை மீண்டும் மத்தேயு 5:24-உடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கவனியுங்கள், மழையும் வெயிலும் பூமியின் மேல் வருகிறது என்று இயேசு கூறினார், பூமியிலுள்ள ஜனங்களுக்கான ஆகாரத்தையும் மற்றக் காரியங்களையும் ஆயத்தம் செய்ய தேவன் அதை அனுப்புகிறார். மழையானது உணவிற்காகவும், பயிர்களுக்காகவும் அனுப்பப்படுகிறது. ஆனால் புதர்செடிகள், களைகள், வயலில் இருந்தபோதிலும், அதேக் காரியத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கோதுமையை வளரச் செய்கிற அதே மழையே களைகளையும் வளரச் செய்கிறது.
2135 பெந்தேகோஸ்தே ஜனங்களை நான் முதலில் சந்தித்தபோது, அதன் பேரில் எப்படி எனக்கு அப்படிப்பட்ட ஒரு பாடம் இருந்தது! அது எனக்கு ஒரு பெரிய பாடமாயிருந்தது. நான் இரண்டு மனிதர்களைக் கண்டேன், ஒருவர்…இதற்கு முன்பு அந்நிய பாஷைகளில் பேசுவதைக் கேட்டதேயில்லை. ஒருவர் அந்நிய பாஷையில் பேசினார், மற்றொருவர், அதற்கு அர்த்தம் உரைத்தார். உண்மையைக் கூறினால், “இன்றிரவு இங்கே அநேகர் மனந்திரும்ப வேண்டும். ஸ்திரீகளும், புருஷர்களும், இருசாரருமே உள்ளனர்” என்றேன். ஜனங்கள் எழும்பி பீடத்தண்டை செல்வார்கள். நான், “எவ்வளவு மகிமையானது” என்று எண்ணினேன்.
2236 அதன்பின்னர் உங்களுக்குத் தெரியுமா, பரிசுத்த ஆவியின் சிறு வரத்தைக் கொண்டு, நான் அந்த மனிதர்களிடம், பகுத்தறிதலைக் கொண்டு, அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு சிறு வழியில் பேசினேன். அவர்களில் ஒருவன் ஒரு அசலான கிறிஸ்தவனாயிருந்தான், அவன் கிறிஸ்துவின் ஒரு உண்மையான ஊழியக்காரனாயிருந்தான், மற்றொருவன் ஒரு மாய்மாலக்காரனாயிருந்தான். அவர்களில் ஒரு மாய்மாலக்காரன் ஒரு கறுப்புத் தலைமுடியையுடைய ஒரு ஸ்திரீயோடு வாழ்ந்து, அவன் ஒரு பொன்னிற பெண்ணுடன் சுற்றி ஓடி அவள் மூலம் குழந்தைகளைப் பெற்றான். பாருங்கள், அது தரிசனத்தில் அங்கேயே இருந்தது; மறுக்கப்பட முடியவில்லை. நான் அதைக் குறித்து அவனிடத்தில் பேசினேன். அவன் என்னைப் பார்த்துவிட்டு கட்டிடத்தைச் சுற்றி நடந்து சென்றான்.
2337 இப்பொழுது நான் நிச்சயமாக, குழப்பமடைந்தேன். நான் தூதர்களுக்குள் வந்திருக்கிறேன் என்று எண்ணினேன், அதன்பின்னர் நான் பிசாசுகளுக்கு மத்தியில் இருக்கவில்லையா என்று நான் வியப்புற்றேன். இது எப்படி இருக்க முடியும்? என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அநேக வருடங்களாக நான் என்னுடைய கரங்களை அதிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தேன். அங்கே ஒரு நாள்… என்னுடைய மகளோடு செல்லும் பையன் ஜார்ஜ் ஸ்மித், நாங்கள் நேற்று ஜெபிக்க நான் செல்லும் பழைய ஆலையிருந்த இடத்திற்குச் சென்றிருந்தோம். 38 அங்கே ஓரிரு நாட்கள் இருந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் இந்த வேதவாக்கியத்தை என்னிடம் கொண்டு வந்தார்: “எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கிறது, ஆனால் அதே மழையால் முள்ளும் முட்களும் வாழ்கின்றன. சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” என்றார். ஜீவனை அளிக்கும் அதே தேவனுடைய ஆதாரத்தினால் ஜீவித்தல். அப்பொழுது நான், “அவர்கள் தங்களுடைய கனிகளினால் அறியப்படுகின்றனர்” என்று இயேசு கூறினார் என்பதைப் புரிந்துகொண்டேன்.
2439 இப்பொழுது, ஆகையால், பூமியின் இயற்கையான தாவரங்களின் மேல் மழை பொழிகிறது, சபையின் மீது விழுகிற, நித்திய ஜீவனை அளிக்கும் ஆவிக்குரிய மழைக்கு ஒரு மாதிரியாய் இருக்கிறது, ஏனென்றால் நாம் அதை முன்மாரி என்றும், பின்மாரி என்றும் அழைக்கிறோம். அது தேவனுடைய ஆவியிலிருந்து அவருடைய சபையின் மேல் பொழிகிற மழையாயுள்ளது.
2540 கவனியுங்கள், அது இங்கே மிகவும் விநோதமான ஒரு காரியமாயுள்ளது. பார்த்தீர்களா? அந்த விதைகள் நிலத்திற்குள் சென்றபோது, அவைகள் எப்படி அங்கு சென்றடைந்தாலும், அவைகள் துவக்கத்திலேயே முட்களாய் இருந்தன. ஆனால் அங்கே நிலத்தில் சென்ற கோதுமையும், பயிர்களும் துவக்கத்திலேயே பயிர்களாகவே இருந்தன. ஒவ்வொரு செடியும் தன்னைத்தானே உற்பத்தி செய்துகொண்டு, அது மூல துவக்கத்தில் இருந்தது என்பதையே, மீண்டும் காண்பித்தது. 41 “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அவர்கள் வஞ்சிப்பார்கள்,” ஏனென்றால் அவர்கள் அதே மழையையும், அதே ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு, அதே அடையாளங்களை, அதே அற்புதங்களை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பார்த்தீர்களா? “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அவர்கள் வஞ்சிப்பார்கள், அல்லது வஞ்சிப்பார்கள்.” இப்பொழுது, ஒரு முள்ளானது ஒரு முள்ளாயிருப்பதை தவிர்க்க முடியாது, கோதுமையும் ஒரு கோதுமையாயிருப்பதை தவிர்க்க முடியாது; இவை ஒவ்வொன்றையும் சிருஷ்டித்தவர் ஆதியிலே தீர்மானித்திருந்தார். அதுவே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அதே மழை!
2642 நாம் ஜீவிக்கிற இந்த பூமியும், பகலும் இருந்தது போல, சூரியன் ஒரு காலையில் உதயமாகி பூமி முழுவதும் பரவுகிறது. மேலும் சூரியன், கிழக்கில் உதிக்கும் அதே சூரியன் மேற்கில் அதே சூரியனாக மறையும். நம்முடைய சரீரங்கள் உண்டாக்கப்பட்ட அதே பூமியின் மேல் தானியத்தை முதிர்வடையச் செய்ய அந்த சூரியன் அனுப்பப்படுகிறது.
2743 நாம் மரித்த பொருளினால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தவிதமாகத்தான் நீங்கள் ஜீவிக்க முடியும். நீங்கள் இயற்கையாக வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரியம் மரிக்க வேண்டியதாயிருந்தால், அப்பொழுது அது உண்மையல்லவா உங்களுடைய— உங்களுடைய சரீரம் இயற்கை ஜீவனுக்காக, மரித்த பொருளைக் கொண்டு வாழ வேண்டும், அப்பொழுது நீங்கள் உங்களுடைய ஆவிக்குரிய ஜீவனைக் காத்துக் கொள்ள, ஆவிக்குரிய பிரகாரமாக ஏதோ ஒரு காரியம் மரிக்க வேண்டும். நாம் ஜீவிக்கும்படி தேவன் சரீரப்பிரகாரமாக, மாம்சமா மாறி, மரித்தார். தேவனைத் தவிர வேறு எந்த சபையும், உலகத்தில் வேறெந்த காரியமும் உங்களை இரட்சிக்க முடியாது. அதைக் கொண்டு மாத்திரமே அவர்கள் ஜீவிக்க முடியும். 44 இப்பொழுது வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். இயேசு வார்த்தையாயிருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, ஜீவித்து, நம் மத்தியில் வாசம்பண்ணினார்.” “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,” சரீரப்பிரகாரமாக, “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” அப்படியானால், நீங்கள் பாருங்கள், நாம் வார்த்தையினால் ஜீவிக்கிறோம், அது தேவனாயிருக்கிறது.
2845 இப்பொழுது சூரியன் உதித்து தானியத்தை முதிர்ச்சியடையச் செய்கிறது. இப்பொழுது, அதை ஒரேயடியாக முதிர்ச்சியடையச் செய்ய முடியாது. அது தொடர்ந்து, முதிர்ச்சியடைகிறது, அது முழுமையடையும் வரையில் தொடர்ந்து முதிர்ச்சியடைகிறது. 46 இன்றைக்கு, சபையும், அவ்வாறே உள்ளது. அது இருண்ட காலத்தில், அதனுடைய ஆரம்ப காலத்தில் துவங்கினது, அங்கே அது பூமிக்கு அடியில் இருந்தது. அது இப்பொழுது முதிர்ச்சியடைந்து வளர்ந்துள்ளது. எப்படியாய் தேவனை எப்பொழுதுமே இயற்கையினூடாக…பரிபூரணமாக, நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது 47 நீங்கள் இயற்கையை சீர்குலைக்க முடியாது. அதுதான் இன்றைக்கு காரியமாயுள்ளது. நாம் வெடிகுண்டுகளை, அந்த சமுத்திரத்தில் அங்கே வீசி வெடிக்கச் செய்து, அணுகுண்டுகளால் வெடிக்கச் செய்கிறோம். நீங்கள் எல்லா நேரத்திலும் அந்த நிலப்பரப்பை உடைத்துக்கொண்டு, அதற்குள் பிளவினை ஏற்ப்படுத்துகிறோம். நீங்கள் மரங்களை வெட்டுகிறீர்கள்; புயல்கள் உங்களை அடித்துச் செல்லும். ஆற்றில் அணை; அது நிரம்பி வழியும். 48 காரியங்களை செய்கிற தேவனுடைய வழியை நீங்கள் கண்டறிந்து, அதில் நிலைத்திருக்க வேண்டும். நாம் சபைகளிலும், ஸ்தாபனங்களிலும் ஜனங்களை ஸ்தாபனமாக்கியிருக்கிறோம்; நாம் பெற்றுள்ளதைப் பாருங்கள்! அதற்கு தேவனால் அளிக்கப்பட்டுள்ள வழியில் நிலைத்திருங்கள்.
2949 ஆனால், நீங்கள் பாருங்கள், “அவர் மழையைப் பொழியச் செய்கிறார்”, “நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும்” என்ற நம்முடைய பொருளுக்கு திரும்பவோம். இயேசு மத்தேயு 24-ம் அதிகாரத்தில் இங்கே உங்களுக்குக் கூறுகிறார், அது கடைசி காலத்தில் ஒரு அடையாளமாக இருக்கும். 50 இப்பொழுது, இந்த அடையாளம் முடிவு காலத்தில் மாத்திரம் அறியப்பட வேண்டுமானால், அப்பொழுது அது அந்த முத்திரைகள் திறக்கப்பட்ட பிறகே இருக்க வேண்டும். பார்த்தீர்களா? அது ஒரு முடிவின் அடையாளம். இந்தக் காரியங்கள் சம்பவிக்கும்போது, அது இருக்கும், அது கடைசி காலத்தில் இருக்கும். இப்பொழுது, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இந்தக் காரியங்களில் குழப்பமடையாதிருக்க, அது ஒரு அடையாளமாக இருக்கும். நீங்கள் அதைக் புரிந்துகொள்கிறீர்களா? அதன்பின்னர், அது வெளிப்படுத்தப்பட வேண்டும், வெளிப்படுத்தப்பட வேண்டும்.
30கவனியுங்கள், கோதுமையும், களைகளும் பரலோகத்திலிருந்து வரும் ஒரே அபிஷேகத்தினால் ஜீவிக்கின்றன. அவைகள் இரண்டுமே அதன் பேரில் களிகூருகின்றன. 51 அன்றொரு நாள் கிரீன்ஸ் ஆலை என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தை நான் நினைவுகூர்ந்தேன். அந்த தரிசனம் தோன்றுவதை நான்—நான் கண்டேன். ஒரு பெரிய பூமி இருந்தது, அது முழுவதுமாக உழப்பட்டிருந்தது. அப்பொழுது முதலில் விதைக்கிறவன் புறப்பட்டுச் சென்றார். நான் அதை உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன். முதலில் என்ன நடக்கிறது என்பதையும், அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதையும் கவனியுங்கள். இந்த மனிதன் வெண்மையான ஆடையோடு பூமியைச் சுற்றி வந்து விதையை விதைத்தபோது, அப்பொழுது அவருக்குப் பின்னால் ஒரு மனிதன் கறுத்த ஆடை அணிந்து, மிகவும் மறைவாகக் காணப்பட்டு, அவருக்குப் பின்னே நழுவிச் சென்று, களைகளை விதைத்தான். இது நடந்தபோது, இரண்டு பயிர்களும் வளர்ந்து வருவதை நான் கண்டேன். அவைகள் மேலே வந்தபோது, ஒன்று கோதுமையாயும், மற்றொன்று களைகளாயுமிருந்தன. 52 அப்பொழுது அங்கே வறட்சி உண்டானது, அப்பொழுது அவைகள் இரண்டுமே மழைக்காக அழுது புலம்பிக்கொண்டிருந்தன. அப்பொழுது பூமியின் மேல் ஒரு பெரிய மேகம் உண்டாகி, மழை பெய்தது. அப்பொழுது கோதுமை பயிர்கள் எழும்பி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்றது. களைகளும் எழும்பி, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று சத்தமிட்டன. அதே பலன்கள். அவைகள் இரண்டுமே மடிந்து கொண்டிருந்தன, அவைகள் இரண்டுமே வாடிக் கொண்டிருந்தன,. அப்பொழுது கோதுமை வளர்ந்து தாகமடைகிறது. ஏனென்றால் அது அதே வயல்வெளியில், அதே தோட்டத்தில், அதே இடத்தில், அதே நீரூற்றின் கீழ், கோதுமையும் விளைந்தது, களைகளும் அதேக் காரியத்தால் விளைந்தன. கவனியுங்கள், அதே அபிஷேக தண்ணீர் கோதுமையை முளைப்பிக்கிறது, களைகளையும் முளைப்பிக்கிறது.
3153 சபையை அபிஷேகிக்கிற அதே பரிசுத்த ஆவியானவர், அதுவே ஆத்துமாக்களை இரட்சிக்க அவர்களுக்கு வாஞ்சையை அளிக்கிறது, அதுவே அவர்களுக்கு அற்புதங்களை நிகழ்த்த வல்லமையை அளிக்கிறது, அது நீதியுள்ளவர்கள் மேல் விழுகிறவிதமாகவே அநீதியுள்ளவர்கள் மேலும் விழுகிறது. அதே ஆவிதான்! இப்பொழுது, மத்தேயு 24:24-ஐ நீங்கள் வேறு விதமாக புரிந்துகொள்ள முடியாது. அவர், “கள்ளக்கிறிஸ்துக்கள் எழும்புவார்கள்,” கள்ள, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அசலான காரியத்தினால் அபிஷேகிக்கப்பட்டு, ஆனால் அதைக் குறித்து கள்ளத் தீர்க்கதரிசிகளாகவும், அதைக் குறித்து கள்ளப் போதகர்களாகவும் இருக்கிறார்கள். 54 சத்தியத்தைப் போதிக்கும் ஒரு கள்ளப் போதகனாயிருக்க ஒரு மனிதனை தூண்டுவது எது? இப்பொழுது நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில் மிருகத்தின் முத்திரையைப் பார்ப்போம், அது ஸ்தாபனம் என்பதை நீங்கள் காண்பீர்கள். பார்த்தீர்களா? கள்ளப் போதகர்கள்; ஒரு கள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவன். அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துக்கள், ஆனால் கள்ளப் போதகர்கள். நீங்கள் அதைக் காணக்கூடிய ஒரே வழி அதுவேயாகும்.
3255 இங்கே சில காலத்திற்கு முன்பு, நான் இதை மேற்கோள் காட்டினேன். நாம் தேசத்தினூடாக இணைக்கப்பட்டிருக்கிறபடியால் நான் அதை மேற்கோள் காட்டலாம். ஒரு நாள் நான் என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன், இன்று காலை அரிசோனாவிலிருந்து, இவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு—ஒரு புளிப்பு மர பண்ணையை வைத்திருந்தார். அவர் அங்கே ஒரு ஆரஞ்சு மரத்தை வைத்திருந்தார், அது திராட்சைப் பழங்களையும், எலுமிச்சம் பழங்களையும், டேஞ்சரின் பழங்களையும், டேங்கலோஸ் பழங்களையும் ஈன்றிருந்தது. அந்த ஒரு மரத்தில் எத்தனை வித்தியாசமான கனிகள் இருந்தன என்பதை நான் மறந்துவிட்டேன். நான் அந்த மனிதனை நோக்கி, “அது எப்படி இருக்கிறது? அது என்ன விதமான மரம்?” என்று கேட்டேன். அவர், “அந்த மரம், தானே, ஒரு ஆரஞ்சு மரமாகும்” என்றார். நான், “அதில் எப்படி திராட்சைப் பழங்கள் உள்ளன? அதில் எப்படி எலுமிச்சம் பழங்கள் உள்ளன?” என்றேன். அவர், “அவைகள் அதற்குள் ஒட்டடுப்போடப்பட்டிருக்கின்றன” என்றார். 56 நான், “எனக்குப் புரிகிறது. சரி, இப்பொழுது,” என்றேன். நான், “இப்பொழுது, அடுத்த வருடம் அந்த மரமானது வேறொரு கனியுடன் தோன்றும்போது,” என்று கேட்டு, அவைகள் யாவும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் பழுக்குமா என்றேன். அப்பொழுது நான், “அது ஆரஞ்சுப் பழங்களை முற்றிலுமாக தருமா. அது ஒரு நாவல் ஆரஞ்சு மரமாக இருந்தால், அது ஆரஞ்சுகளைத் தரும், இல்லையா ஐயா?” என்றேன். அதற்கு அவர், “இல்லை ஐயா. ஒட்டுப்போடப்பட்ட ஒவ்வொரு கிளையும் அந்தந்த விதமான கிளைகளையேத் தரும்” என்றார். நான், “எலுமிச்சைச் செடியானது ஆரஞ்சு மரத்திலிருந்து ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம், ஐயா” என்றார். “அந்த ஆரஞ்சு மரத்திலிருந்து திராட்சைப்பழம் திராட்சைக் கனியைக் கொடுக்குமா?” அதற்கு அவர், “ஆம், ஐயா. அந்த கிளையின் தன்மைதான் அதற்குள் ஒட்டுபோடப்பட்டுள்ளது” என்றார். நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!” என்றேன். அவர், “நீர் என்ன கூறுகிறீர்?” என்று கேட்டார். நான், “இன்னும் ஒரு கேள்வி. இப்பொழுது, அந்த ஆரஞ்சு மரமானது எப்பொழுதாவது மீண்டும் ஆரஞ்சுப் பழங்களைக் கொடுக்குமா?” என்று கேட்டேன். 57 அவர், “அது மற்றொரு கிளையை உண்டாக்கும்போது” என்றார். அது மற்றொரு கிளையை முளைப்பிக்கும் போது, ஒன்றை அதனுள் ஒட்டுப்போடும்போது அல்ல. ஆனால் அவைகள் யாவுமே புளிப்புச் செடி வகைகளைக் கொண்டவை மேலும் அவை புளிப்பு மரத்தில் இருக்கும் புளிப்பு மர ஜீவனிலிருந்து வாழ்கின்றன.
3358 நான், “அங்கேதான் காரியம்! மெத்தோடிஸ்டுகள் ஒவ்வொரு முறையும் மெத்தோடிஸ்டுகளை பிறப்பிப்பர். ஒவ்வொரு முறையும் பாப்டிஸ்டு, பாப்டிஸ்டுகளை பிறப்பிப்பர். கத்தோலிக்கர் ஒவ்வொரு முறையும், கத்தோலிக்கத்தை பிறப்பிப்பர். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபையானது வேரிலிருந்து கிறிஸ்துவை பிறப்பிக்கும், ஒவ்வொரு முறையும் அந்த வார்த்தை, தன்னுடைய சொந்த திராட்சைச் செடியை முளைப்பிக்கும்” என்று கூறினேன்.
3459 இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நீங்கள் அதை அங்கே ஒட்டுப்போடலாம். ஒவ்வொரு திராட்சைப் பழமும், எலுமிச்சம் பழமும், டேன்ஜலோ பழமும், டேன்ஜரோன் பழமும், புளிப்பு பழங்களான அவைகள் எதுவாக இருந்தாலும், அவைகள் ஒவ்வொன்றும் அந்த மரத்தில் வாழ முடியும்; ஆனால் விருட்சத்தைக் குறித்துப் பொய் சாட்சி கொடுத்து, மரத்தினால் ஜீவிக்கின்றன. நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அவைகள் அந்த மரத்திலுள்ள அசலான ஜீவனைக் கொண்டு செழித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 60 இப்போது, மத்தேயு 24:24-ல் உள்ளது, அதே வாழ்க்கையை வாழ்கிறது, ஆனால் அவை ஆரம்பத்தில், சரியாக இல்லை. அவைகள் அந்த விருட்சத்தைக் குறித்து பொய் சாட்சி பகருகின்றன! அது ஒரு ஆரஞ்சு மரமாயிருந்தாலும், அதே சமயத்தில் அது ஒரு புளிப்பு மரமாகவே உள்ளது. அவர்கள், “இந்த சபை, இந்த ஸ்தாபனம் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகருகின்றன” என்கின்றனர். தேவனுடைய வல்லமை சீஷர்களுக்கு மாத்திரமே இருந்தது என்று கூற முயற்சித்து, பொய்யான ஞானஸ்நானத்தையும், வார்த்தையின் பொய் சாட்சியையும் பெற்றுள்ளீர்களா? 61 இயேசுதாமே, “நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் எப்போதும் இருக்கும் ஒவ்வொரு கிளைக்கும்…மரத்தில் இருக்கும் ஒவ்வொரு கிளையும், எப்பொழுதும் முளைக்கும். இந்த அடையாளங்கள் அசலான கிளைகளைத் தொடரும்” என்றார். எங்கே? அது ஒரு மரமாக இருக்கும் வரையிலும், அது உலகத்தின் முடிவுபரியந்தம், கிளைகளை பரப்பிக்கொண்டிருக்கும் வரையிலும். “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நேரத்தைப் பார்த்தீர்களா? இயேசு என்ன கூறினார் என்று பார்த்தீர்களா?
35இது கடைசி காலத்தில் இருந்தது என்பதை, நினைவில் கொள்ளுங்கள் வெஸ்லியின் காலத்திலும், அதற்கு முன்பும் அல்ல. இப்பொழுது, கடைசி காலத்தில், இது சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. 62 இப்பொழுது வேத வாக்கியங்களைக் கவனியுங்கள்; அவைகள் சாட்சி பகரட்டும். இயேசு, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று என்று நீங்கள் நினைத்தால், இல்லை விசுவாசித்தால், அவைகளே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன” என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், இந்த மரம் எப்போதாவது ஒரு கிளையை தோன்றச் செய்தால்… “நானே திராட்சைச் செடி, மரம்; நீங்கள் கொடிகளாயிருக்கிறீர்கள். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” பரிசுத்த யோவான் 14:12.
36இப்பொழுது, “என்னில் நிலைத்திருக்கிறவன், ஆதியிலே என் வேரில் இருந்தவன்…” 63 அந்தக் காரணத்தினால்தான் இயேசு தாவீதின் வேரும் சந்ததியுமாய் இருந்தார். அவர் தாவீதுக்கு முன், தாவீதில், தாவீதுக்கு பிறகு, தாவீதின் வேரும், சந்ததியும்; விடிவெள்ளி நட்சத்திரம், சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலி, அல்பா மற்றும் ஒமெகா; பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.” தாவீதின் வேரும் சந்ததியும்! 64 “அவரே தெரிந்து கொள்ளப்பட்ட ஜீவன், முன்குறிக்கப்பட்ட ஜீவன், அது எனக்குள் இருக்கிறது”. அவரே வார்த்தை, “ஆதியிலிருந்தே; அவன் புறப்பட்டு வரும்போது, அவன் என்னுடைய கனிகளைத் தருவான்.” பரிசுத்த யோவான் 14:12. ஆனால் மற்றவர்களும் தங்களை கிறிஸ்தவர்கள் என்றும், விசுவாசிகள் என்றும் அழைத்துக் கொண்டு அதே காரியத்தினால் ஜீவிப்பார்கள். “‘கர்த்தாவே, கர்த்தாவே,’ என்று சொல்லுகிற யாவரும் அதற்குள் பிரவேசிக்கமாட்டார்கள்.” இப்பொழுது, இது சம்பவிப்பதையும், கடைசி நாட்களில் வெளிப்படுவதையும், “தேவனுடைய இரகசியங்கள் எப்பொழுது முடிவடையும் என்பதையும்” நாம் சிறிது நேரம் கழித்துப் பார்ப்போம்.
3765 இந்த மரங்கள், உண்மையான திராட்சைச் செடி மற்றும் கள்ளத் திராட்சை செடி! அநேக ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் அதைக் குறித்து பிரசங்கிப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், அவைகள் எப்படி ஒன்று சேர்ந்து வளர்ந்தன. அவர்களை தனிப்பட்ட நபர்களாக கொண்டு வந்து, காயீன், ஆபேல் ஆகிய இரு திராட்சைச் செடிகள் ஒரு பலிபீடத்தில் சந்தித்தன என்பதையும், அவர்கள் இருவருமே மதசம்பந்தமானவர்கள், அவர்கள் இருவருமே அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், அவர்கள் இருவருமே ஜீவனை விரும்பி, ஒரே தேவனையே தொழுதுகொண்டனர். ஒருவன் புறக்கணிக்கப்பட்டான், மற்றவன் ஏற்றுக் கொள்ளப்பட்டான். 66 ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவன் தன்னுடைய சகோதரனைவிட வித்தியாசமாக எதையும் செய்திருக்கக் கூடிய ஒரே வழி: அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஏனென்றால் வேதம், “விசுவாசத்தினாலே…” என்று கூறியுள்ளது. எபிரெயர் 11-ம் அதிகாரத்தில், “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான், அவன் நீதிமானாயிருந்தான் என்று தேவன் சாட்சி பகர்ந்தார்.” இயேசு, கூறினார், அவர் யாராயிருந்தார் என்பதைப் பற்றிய ஆவிக்குரிய வெளிப்பாடு! “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” அவன் கூறினான், பேதுரு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 67 “யோனாவின் குமாரனாகிய சீமோன்—சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா அதை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்,” (என்ன?) வார்த்தையின் உண்மையான வெளிப்பாடு. அங்கே மீண்டும் உண்மையான திராட்சைச் செடி உள்ளது. “ஆபேல், விசுவாசத்தினாலே!” நீர், “அது ஒரு வெளிப்பாடு அல்ல” என்று கூறினீர்.
3868 விசுவாசம் என்றால் என்ன? விசுவாசம் என்பது உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஏதோவொன்றாகும்; ஆனால் அது இல்லாதிருக்கிற போதிலும், அது அவ்வாறு இருக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். விசுவாசம் என்பது தேவனுடைய சித்தத்தின் வெளிப்பாடு. எனவே, வெளிப்பாட்டினால்! 69 இன்றைக்கு சபைகள் ஆவிக்குரிய வெளிப்பாட்டைக் கூட விசுவாசிப்பதில்லை. அவர்கள் ஏதோ ஒரு முறைமையின் பிடிவாதமான போதகத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். “காயீனுடைய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை ஆபேல் தேவனுக்குச் செலுத்தினான். அவன் நீதிமானாயிருந்தான் என்று தேவன் சாட்சி பகர்ந்தார்.” ஆமென். நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்த்தீர்களா? நேரத்தைப் பார்த்தீர்களா? அண்மையில் நான் ஒரு—ஒரு பெருந்தன்மையான மனிதனுடன் பேசிக்கொண்டிருந்தேன், ஒரு கிறிஸ்தவ அறிஞரும், பெருந்தன்மையுள்ளவருமான ஒருவருடன். அவர், “திரு. பிரான்ஹாமே, நாங்கள் எல்லா வெளிப்பாடுகளையும் மறுக்கிறோம்” என்றார்.
39நான், “அப்படியானால் நீங்கள் இயேசு கிறிஸ்துவை மறுக்க வேண்டும், ஏனென்றால் அவர் தேவனுடைய வெளிப்பாடாய், தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டவராயிருக்கிறார்” என்றேன். நீங்கள் அதைக் காணாவிட்டால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். 70 இயேசு, “நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவத்திலே சாவீர்கள்” என்றார். அவர் தேவனுடைய வெளிப்பாடாய், மானிட ரூபத்தில் வெளிப்பட்ட தேவனுடைய ஆவியாய் இருக்கிறார். உங்களால் அதை விசுவாசிக்க முடியாவிட்டால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். நீங்கள் அவரை ஒரு மூன்றாம் நபராகவோ, இரண்டாம் நபராகவோ அல்லது தேவனைத் தவிர வேறெந்த நபராகவோ வைத்தால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். “நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் மரிப்பீர்கள்.” ஒரு வெளிப்பாடு!
4071 அவர்களால் அவரைக் காண முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” பார்த்தீர்களா? உங்களுக்கு அது புரிகிறதா? கடைசி நாட்களில் ஆவியின் கனியைக் காண்பதற்கும், காலத்தின் முடிவில் மணவாட்டி மரம் முதிர்ச்சியடைவதைக் காண்பதற்கும்; ஓ, நாம் எப்படி அவரை நேசிக்க வேண்டும், அவரை வணங்க வேண்டும், அவரைத் துதிக்க வேண்டும்!
4172 உண்மையான திராட்சச் செடியும், கள்ளத் திராட்சச் செடியும், இரண்டுமே ஒரே அபிஷேகத்தை உடையதாயிருந்தது. தண்ணீர் அவைகள் இரண்டின் மேலும் விழுந்தது. “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்று அவர் நம்மை எச்சரித்ததில் வியப்பொன்றுமில்லை. கவனியுங்கள், அவைகள் ஒரே விதமாகக் காணப்படுகின்றன. அவர்கள் அதே விதமாக அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கவனியுங்கள், “அவர்களுடைய கனிகளினாலே…” நீங்கள் அதை எப்படி அறிவீர்கள்? 73 அது ஒரு ஆரஞ்சு பழம் அல்ல என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் அது ஒரு திராட்சைப் பழத்தைத் தருகிறது. அந்த திராட்சை செடி பரவாயில்லை, அது மரத்தில் ஜீவிக்கிறது, ஆனால் அது ஒரு திராட்சைக் கனியைத் தருகிறது. அது முதல் ஒன்றைப் போல் இல்லை. 74 ஒரு சபையானது, “நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம்” என்று அவர்கள் கூறினாலும், அவருடைய வல்லமையை மறுதலிக்கிறார்கள், அவருடைய கிரியைகளை மறுதலிக்கிறார்கள், அவருடைய வார்த்தையை மறுதலிக்கிறார்கள்; என்றால்—என்றால்…இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற சபையானது, இயேசு கிறிஸ்துவின் கிரியைகளைச் செய்யும், அது இயேசு கிறிஸ்துவின் ஜீவனை உடையதாயிருக்கும். அது அவ்வாறில்லையென்றால், அதற்குள் ஜீவன் ஊற்றிக் கொண்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது வேரிகளிலிருந்தே, முன்குறிக்கப்படவில்லையென்றால், அது ஒவ்வொரு முறையும் அல்லது வித்தியாசமான ஏதோ ஒரு திராட்சைக் கனியைக் கொடுக்கும். ஆனால் அது முன்குறிக்கப்பட்ட ஜீவனாய், வேர்களில் இருக்குமானால், அது நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவை தாங்கி, அது வேர் மூலம் வரும் வார்த்தையாக இருந்தால். எது, அவர் தான் வேர், காலத்தின் ஆரம்பம்.
4275 கவனியுங்கள், ஆனால் அவைகள் உற்பத்தி செய்கிறவைகளே உங்களுக்கு வித்தியாசத்தைக் கூறுகின்றன. இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்றார். நெருஞ்சில் திராட்சை கொடியில் இருந்தபோதிலும், “மனுஷன் திராட்சை பழங்களை முட்செடியில் பறிப்பதில்லை.” அது கூடும், ஆனால் கனியோ அதைக் காட்டும். 76 கனி என்றால் என்ன? ப-…பருவத்திற்கான கனி, வார்த்தை. அதுதான், அவர்களுடைய போதனை. எந்த உபதேசம்? காலத்தைப் பற்றிய உபதேசம், இது என்ன நேரம். மனிதனுடைய உபதேசமா, ஸ்தாபன உபதேசமா, அல்லது பருவத்திற்கான தேவனுடைய வார்த்தையா? 77 இப்பொழுது, காலம் மிக விரைவாக கடந்து செல்கிறது, எனவே நாம் அதன் பேரில் நீண்ட நேரம் தரித்திருக்க முடியும். ஆனால் நான் உங்களுக்கு சொல்ல முயற்சிப்பதை, இங்குள்ள நீங்களும், தேசத்தினூடாகவுள்ள நீங்களும் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நிச்சயமாகவே நம்புகிறேன், ஏனென்றால் நாம் அதில் அதிக நேரம் தரித்திருக்க முடியவில்லை.
4378 ஆனால் அபிஷேகமானது அநீதியுள்ளவர்கள், கள்ளப் போதகர்கள் மேல் செல்வதை நீங்கள் காணலாம், தேவன் அவர்களிடம் என்ன செய்யக் கூடாது என்று கூறினாரோ அவர்கள் அதை எப்படியும் செய்ய காரணமாயிருப்பார்கள்; ஆனால் அவர்கள் அதை, எப்படியும் செய்வார்கள். ஏன்? அவர்களால் அதைத் தவிர்க்க முடியாது. ஒரு நெருஞ்சில் செடி நெருஞ்சில் செடியாயிருப்பதைத் தவிர வேறெப்படி இருக்க முடியும்? அதன் மேல் எவ்வளவு நல்ல மழை பெய்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது ஒரு முட்செடியாகத்தான் இருக்க வேண்டும். அந்தக் காரணத்தினால்தான் இயேசு, “அவர்கள் மிகவும் நெருக்கமாயிருந்து அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்று கூறினார். அது வேர்களில் உள்ளது, “அது கூடுமானால்,” ஆனால் அது கூடாத காரியம். ஒரு கோதுமை கோதுமையைப் பிறப்பிப்பதைத் தவிர வேறொன்றையும் பிறப்பிக்க முடியாது; அது பிறப்பிக்க முடிந்தது அவ்வளவுதான்.
4479 கவனியுங்கள். தேவன் ஸ்தாபனத்தின் ஆக்கியோன் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிசாசுதான் ஸ்தாபனத்தின் ஆக்கியோன். நான் அதை வார்த்தையைக் கொண்டு, முன்னும் பின்னுமாக, மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறேன்; இந்தக் காலையில் அதற்குள் செல்ல வேண்டியதில்லை. தேவன் ஜனங்களை இந்தவிதமாக ஒன்று சேர்த்து, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கவில்லை என்பதை நாம் அறிவோம். கடைசி சீஷன் மரித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, ‘அவர்கள் முதலாம் ஸ்தாபனத்தை உடையவர்களாயிருந்தனர். அது எப்பொழுதுமே ஒரு தோல்வியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அவ்வாறு இல்லையென்றால், நாம் ஏன் இன்றைக்கு மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கர் மற்றும் எல்லோருமே ஒன்றுசேர்ந்து அன்பாக இருக்க முடியவில்லை? அப்படியானால், ஒவ்வொரு சபையும் ஒரே காரியத்தின் பேரில், வார்த்தையின் பேரில், ஏன் தேவனுடைய கிரியைகள் நம்மைப் பின்தொடரவில்லை? அந்தக் காரியங்கள் மனிதனை, சகோதரத்துவத்தை பிரிக்கின்றன…நாம் சபைகளில், பேசுவதைக் காட்டிலும், நாம் தேவனிடத்திலிருந்து தூரமாய் விலகியிருக்கிறோம்.
4580 இப்பொழுது, “பழைய காரியங்களெல்லாம் நம்முடைய உபதேசத்திற்காகவும், கடிந்துகொள்ளுதல்களுக்காகவும், போதனைகளுக்காகவும், உதாரணங்களாக சம்பவித்தன” என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில், நம்முடைய நாளில் என்ன இருக்கும் என்று காணும்படியாக, அதாவது பழைய ஏற்பாட்டின் பழைய காரியங்கள் யாவும் சம்பவித்து, முன்னடையாளமாயிருந்தன. 81 நீங்கள் உங்களுடைய கரத்தைக் காணாதது போல, நீங்கள் மேலே நோக்கிப் பார்த்து, நீங்கள் சுவற்றின் மேல் ஒரு நிழலைக் கண்டால், என் கையை வெளிச்சத்திலிருந்து விலக்குவது போல. ஒரு நிழலில் இங்கே ஐந்து விரல்கள் இருந்தால், (எதிர்மறையாக இருக்கும்போது), நீங்கள் உங்களுடைய கரங்களை (நேர்மறையாக இருக்க) நோக்கி நகர்த்துங்கள், எதிர்மறையை நோக்கியபோது—நோக்கியபோது, அது ஐந்து விரல்களுக்கு வர வேண்டும். 82 வேதம் நமக்கு கூறுவதுபோல, அதாவது, “பழைய ஏற்பாடு ஒரு நிழலாயிருந்து, புதிய காரியங்களுக்கு அல்லது வரப்போகும் காரியங்களுக்கு முன்னடையாளமாக; இருக்கிற காரியங்கள் அல்ல, ஆனால் அது ஒரு நிழலாயிருக்கிறது, வரப்போகும் காரியங்களுக்கு ஒரு மாதிரியாய் இருக்கிறது.”
4683 இந்தக் காரியம் வேறெந்த காலத்திலாவது எப்போதாவது இருந்ததா என்று நாம் திரும்பிச் சென்று பார்ப்போமாக. நீங்கள் உற்சாகமாயிருக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்.” என்கின்றனர்.—ஆசி.] எனவே நாம் இதை முன்னும் பின்னுமாக, வார்த்தையைக் கொண்டு, நிரூபிக்க அறிந்துகொள்வோம்; ஏதோ ஒரு மனிதனின் கருத்தினால் அல்ல, ஏதோ ஒரு கோட்பாட்டினால் அல்ல. 84 அவர் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை; நானோ அல்லது வேறு யாரோ “ஒருவன் நியாயப்பிரமாணத்தின்படியும் தீர்க்கதரிசிகளின்படியும் பேசாமலிருந்தால், அவனுக்குள் வெளிச்சம் இல்லை.” பார்த்தீர்களா? அதைத்தான் வேதம் கூறியுள்ளது. அது யாராயிருந்தாலும், “எல்லா மனுஷருடைய வார்த்தையும் பொய்யாயும், என்னுடைய வார்த்தை சத்தியமாயும் இருப்பதாக.”
47இப்பொழுது நாம் திரும்பிச் சென்று, நமக்கு ஒரு உதாரணத்தைக் காண்பிப்பதற்காக, இது எப்போதாவது சம்பவித்ததா என்று கண்டறிவோமாக. 85 நாம் இப்போது யாத்திராகம புத்தகத்திற்கு திரும்பிச் சென்று, மோசே என்னும் பெயருள்ள ஒரு குணாதிசயத்தைக் குறித்துப் பேசலாம், அவன் தேவனுடைய வார்த்தையோடும், தன்னுடைய சந்ததிக்கான தேவனுடைய சித்தத்தோடும் தேவனால் அனுப்பப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான். தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் தொடர்ச்சியாக இயங்குகிறபடியால், அவர், “அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு அதை முதலில் வெளிப்படுத்தும் வரையில் அவர் ஒன்றையுமே செய்யவில்லை” என்றார். அப்பொழுது அவர் அதைச் செய்தார். ஹூ-ஹூ. இப்பொழுது, அவரால் பொய்யுரைக்க முடியாது. அவர் பொய்யுரைத்து தேவனாக இருக்க முடியாது. இல்லை ஐயா. அவர் உண்மையாய் நிலைத்திருக்க வேண்டும். அவருக்குள் பொய்யேக் கிடையாது. அவர்… 86 அவரால் அதை மாற்ற முடியாது. அவர் அப்படி செய்தால், அப்பொழுது அவர் தேவன் அல்ல; அவர் ஒரு தவறு செய்துவிட்டார். அவர் முடிவற்றவராக இருக்க வேண்டும். முடிவில்லாதவர் ஒரு தவறும் செய்ய முடியாது. பார்த்தீர்களா? எனவே தேவன் எப்பொழுதாவது என்ன கூறுகிறாரோ, அது நித்தியமாக சரியானதாயுள்ளது. பார்த்தீர்களா? அவர் அதை வாக்குப்பண்ணினார். ஆகையால், கவனியுங்கள், வேதத்தில் எந்த இடத்திலும் அது தொடர்ந்து அதை தொடர்ந்து பின்பற்றுவதாக இல்லை.
4887 இப்பொழுது, தேவன் ஆபிரகாமுக்கு அவனுடைய சந்ததியார் ஒரு—ஒரு அந்நிய தேசத்தில் நானூறு ஆண்டுகளாக ஒரு அந்நியராக இருப்பார்கள் என்று வாக்குத்தத்தம் செய்திருந்தார், அதன்பின்னர் அவர் அவனை ஒரு மகத்தான வல்லமையான கரத்தோடும் வல்லமையோடும் வெளியே கொண்டு வந்து, தம்முடைய அடையாளங்களையும், அற்புதங்களையும் அவர்கள் வாசமாயிருந்த ஜனங்களுக்கு மத்தியில் காண்பித்தார். வாக்குத்தத்தத்தின் நேரம் சமீபித்துவிட்டது. ஜனங்கள் அதைக் குறித்து மறந்துவிட்டனர். அவர்கள் பரிசேயர்களையும், சதுசேயர்களையும், இன்னும் ஸ்தாபனங்களையும் உடையவர்களாயிருந்தனர். ஆனால், திடீரென்று, தேவன் மாத்திரமே வந்து, அவர்களை எல்லோரையும், வெளியே இழுத்தார். 88 தேவன், எந்த நாளிலும் அல்லது எந்த நேரத்திலும், ஒரு ஸ்தாபனத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியை ஒருபோதும் அழைத்ததேயில்லை. இல்லை ஐயா. அவன் மிகவும் குழப்பப்பட்டிருக்கிறான், அவனால் அதைச் செய்ய முடியவில்லை; அவன் அந்த ஸ்தாபனத்தோடு தரித்திருக்க வேண்டும்.
4989 மோசே தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு மனிதன், தேவனுடைய வார்த்தையைக் கொண்டு, இஸ்ரவேலரை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் கொண்டு சென்று, தேவனுடைய கட்டளையை கண்டிப்புடன் கொண்டு செல்லும் தன்னுடைய பயணத்தில், அவன் மற்றொரு தீர்க்கதரிசியை சந்தித்தான், மோசேயின் மேலிருந்த அதே பரிசுத்த ஆவியின் அசலான அபிஷேகத்தைப் பெற்றிருந்த அபிஷேகம் பண்ணப்பட்ட மற்றொருவன். அது உண்மை. அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். பரிசுத்த ஆவியானவர் இந்த மனிதன் மேல் இருந்தார். அவனுடைய பெயர் பிலேயாம் என்பதாகும். நாம் அனைவரும் அவனைப் பற்றி அறிந்திருக்கிறோம். பாருங்கள், அதே காரியங்கள், அதே, காரியங்கள்—அந்த மனிதன் கூறின காரியங்கள், இன்னமும் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன, ஏறக்குறைய இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு. “ஓ இஸ்ரவேலே, நீ ஒரு காண்டாமிருகத்தைப் போன்றிருக்கிறாய். உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான். உங்களை சபிக்கிறவன் சபிக்கப்படுவான். உம்முடைய பெலன், வல்லமை, யாக்கோபே, உம்முடைய கூடாரங்கள் எவ்வளவு நீதியுள்ளவைகள்!” பாருங்கள், அவனால் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவன் தன்னுடைய இருதயத்தில் ஜனங்களை சபிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அங்கு வந்தான்.
5090 ஓ, கள்ளப் போதகர்களே நீங்கள் இத்தனை ஆண்டுகளாக இந்த ஒலிநாடாக்களைக் கேட்டு, தேவன் கூறினதை சரியாக உறுதிப்படுத்துவதைக் காண்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய படிப்பாய்வில் அது சத்தியம் என்பதை அறிந்திருக்கிறீர்கள்; உங்களுடைய ஸ்தாபன வேறுபாடுகளினிமித்தம், நீங்கள் அவர்களை தர்க்கித்து, உங்களுடைய ஜனங்கள் அவ்விதமாக இல்லை என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு ஐயோ! உங்களுடைய நேரம் சமீபித்துவிட்டது.
5191 மோசேயின் மேலிருந்த அதே ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட பிலேயாம். வித்தியாசம் என்னவாயிருந்தது? மோசேயின் போதகம் பரிபூரணமாயிருந்தது. வேதம் இங்கே இரண்டாம் பேதுருவில், இஸ்ரவேலர் பெற்றுக்கொண்ட “பிலேயாமின் போதகத்தை” தேவன் ஒருபோதும் மன்னிக்கவில்லை. மன்னிக்க முடியாத பாவம்! அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களின் கீழ் வெளியே வந்திருந்தபோதிலும், அவர்களில் ஒருவரும் இரட்சிக்கப்படவில்லை, இந்த வல்லமையான தீர்க்கதரிசியின் மூலம் தேவனுடைய கரம் அசைவதைக் கண்டு, அது தேவனால் சரியாக ரூபகாரப்படுத்தப்பட்டதையும் கண்டனர். ஏனென்றால், மற்றொரு தீர்க்கதரிசி ஒரு முரண்பாடான போதகத்தோடு உள்ளே வந்து, மோசேயோடு தர்க்கம் செய்து, மோசே தவறாயிருந்தான் என்று ஜனங்களுக்கு நிரூபிக்க முயன்றான். தாத்தான், கோராகு, இன்னும் அவர்களில் அநேகர் அவனோடு இணங்கி, இஸ்ரவேல் புத்திரரை வேசித்தனம் செய்யும்படி கற்பித்தனர். அவனுடைய ஸ்தாபனத்தின் பின்னால் செல்ல, அதாவது, “நாம் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கிறோம்.” “நாம் மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பிரஸ்பிடேரியனாகவோ அல்லது பெந்தேகோஸ்தேக்களாகவோ இருந்தாலும், இன்னும் என்னவாக இருந்தாலும், நாம் யாவரும் ஒரேவிதமாகவே இருக்கிறோம்.” 92 நாம் ஒரேவிதமாக இல்லை! இந்த நாளின் தம்முடைய வாக்குத்தத்தத்தின் கனியைக் கொடுக்கும்படியாக நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கும், ஆவிக்கும் பிரதிஷ்டை செய்து, கர்த்தருக்கென்று பரிசுத்தமுள்ள ஒரு பிரிக்கப்பட்ட ஜனமாயிருக்கிறீர்கள். நீங்கள் அவர்களைச் சேர்ந்தவரல்லவே! அது மிகவும் கடினமானது என்பதை நான் அறிவேன், ஆனால் அது அதே சத்தியமாயுள்ளது. இந்த கடைசி நாட்களில் ஒரு ஆராதனைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறீர்களே! “அவர்களுடைய நடுவிலிருந்து வெளியே வாருங்கள்.”
5293 இப்பொழுது, “பிலேயாமின் போதகம்,” பிலேயாமின் தீர்க்கதரிசனம் அல்ல. அது சரியாயிருந்தது. அது தேவனாயிருந்தது. எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பிலேயாமின் தீர்க்கதரிசனம் முற்றிலும் சரியாக இருந்தது, ஏனென்றால் அவனால் வேறொன்றையும் பேச முடியவில்லை. தேவனுடைய அபிஷேகம் வேறெதையும் பேசாது, அது சத்தியமாயிருந்தது என்பதை நிரூபிப்பதன் மூலம் தேவன் அதை ரூபகாரப்படுத்தினார். ஆனால் அது “பிலேயாமின் போதகமாயிருந்தது.” இப்பொழுது அதை மத்தேயு 24:24 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், ஆனால் அவர்களுடைய போதகமோ பொய்யானது. திரித்துவங்களும், அதைப் போன்ற எல்லாக் காரியங்களும்; தவறு, அந்திக்கிறிஸ்து! 94 உங்களுடைய உணர்வுகள் புண்படுத்தப்படாது என்று நான் நம்புகிறேன். தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துவிட வேண்டாம். நீங்கள் எழுந்து வெளியே செல்ல வேண்டாம். அப்படியே அமைதியாக இருங்கள், பரிசுத்த ஆவியானவர் அதை நமக்கு வெளிப்படுத்தமாட்டாரா என்று நாம் பார்த்து, அதை நமக்கு நிரூபிக்கட்டும். “ஆனால் அது…” என்று கூறுங்கள். நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்களோ, அப்படியே அமைதியாக உட்கார்ந்து கேளுங்கள். உங்களுடைய இருதயத்தை திறக்கும்படி தேவனிடத்தில் வேண்டிக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு முட்செடியா அல்லது ஒரு முள் செடியா அல்லது நீங்கள் எந்நிலையிலிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். பார்த்தீர்களா?
5395 இப்பொழுது, யூதாஸும் கூட, “ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுவதற்கு முன்குறிக்கப்பட்டவனாயிருந்தான்,” இயேசுவுக்கு முன்பாக அமர்ந்திருந்தான். இயேசு அவனிடம், “நீ தான் அந்த ஒருவன். நீ என்ன செய்யப் போகிறாய், நீ செய்ய வேண்டியதையெல்லாம் சீக்கிரமாய்ச் செய்” என்றார். அவன் என்ன செய்துகொண்டிருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார், ஆனால், அவர்களுக்காக முப்பது வெள்ளிக்காசுகளையும், புகழ்ச்சிக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விற்றுவிட்டான். தம்முடைய சீஷர்களில் ஒருவனை, சபையின் பொருளாளரை, இயேசு அவருடைய “சிநேகிதன்” என்று அழைத்தார். பார்த்தீர்களா? வேதம், “அவன் கேட்டின் குமாரனாகப் பிறந்தான்” என்று கூறியுள்ளது, இயேசு தேவனுடைய குமாரனாகப் பிறந்தது போன்றே. “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.”
5496 நாம் தொடர்ந்து படிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். நாம் இராஜாக்களின் புத்தகத்தில், மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு—ஒரு தீர்க்கதரிசி இருந்தான், அவனுடைய பெயர் மிகாயா என்பதாகும். அவன் இம்லாவின் குமாரனாயிருந்தான், அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் அப்படித்தான் இருந்தான். 97 அபிஷேகம் பண்ணப்பட்ட, தீர்க்கதரிசிகளைக் கொண்ட ஒரு ஸ்தாபனத்திற்குத் தலைவராகிய, மற்றொரு தீர்க்கதரிசி இருந்தான். அவர்கள் “தீர்க்கதரிசிகள்” என்று வேதம் கூறியுள்ளது, பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் என்று அவர் கூறியது போலவே, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாயிருந்தனர். அவர்களில் மிகாயா என்னும் பெயர் கொண்ட ஒருவன் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தையினால் தேவனால் அனுப்பப்பட்டிருந்தான். 98 சிதேக்கியா, அவன் தேவனால் அனுப்பப்பட்ட, ஒருவனாயிருந்ததாக எண்ணினான். அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான், ஆனால் அவனுடைய போதனை தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருந்தது. “கள்ளக்கிறிஸ்துக்களே, எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க மகத்தான அடையாளங்களைக் காண்பிப்பார்கள்.”
5599 கவனியுங்கள், அவர்கள் இருவருமே அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். இப்பொழுது, எது சரியானது, தவறானது என்று உங்களால் எப்படி கூற முடியும்? ஆகாபுக்கு வார்த்தை என்ன வாக்குத்தத்தம் செய்தது என்பதைக் கவனியுங்கள். அவனுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசி, அது எலியாவாயிருந்தது, அந்தக் காலத்தின் மகத்தான தீர்க்கதரிசிகளில் ஒருவன், அவன் ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான். அந்த ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி, “ஆகாப் இந்த பொல்லாங்கை செய்திருந்தபடியால், நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கும்; நாபோத்தின் ஜீவனை எடுத்தான். நாய்கள் யேசபேலைத் தின்னவும் மற்றும்…அவளுடைய சரீரம் வயல்களில் எருவைப்போலாகிவிடும்” என்று கூறினான். இப்பொழுது, தேவன் சபித்துள்ளதை நீங்கள் எப்படி ஆசீர்வதிக்க முடியும்? அல்லது பிலேயாம் கூறினதுபோல, தேவன் ஆசீர்வதித்திருக்கிறதை நீங்கள் எப்படி சபிக்க முடியும்? பார்த்தீர்களா? 100 ஆனால் இந்த தீர்க்கதரிசிகள் உத்தமமாயிருந்தனர். அவர்கள் நல்ல மனிதர்களாய், கனத்திற்குரிய மனிதர்களாயிருந்தனர் என்பதில் சந்தேகமேயில்லை. இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசியாயிருக்க, நீங்கள் கனமுள்ளவராய் இருக்க வேண்டும் அல்லது ஒரு இஸ்ரவேலனாக இருக்க வேண்டும். நீங்கள் கல்லெறியப்பட்டீர்கள், இல்லையென்றால். அவர்கள் கௌரவமான மனிதர்களாயிருந்தனர். அவர்கள் அறிவாளிகளாயிருந்தனர். அவர்கள் படித்த மனிதர்களாயிருந்தனர். அவர்கள் தேசத்திலிருந்து, ஆகாபினால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். (சகோதரி ரைட், அது புரிகிறதா?) அந்த தேசத்திலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், நல்ல பொருத்தமுடையவர்கள்-…
56இப்பொழுது, மிகாயா தன்னுடைய தரிசனத்தைக் கண்டபோது, வார்த்தை என்ன கூறியிருந்தது என்பதை அவன் தன்னுடைய இருதயத்தில் அறிந்திருந்தான், ஆனால் அவனுக்குள் இருந்த ஆவியானவர் என்ன கூறுவார் என்று அவன் காண விரும்பினான். 101 எனவே அவர்கள் அவனிடம் கூறினர், அவர்கள், “இந்த மற்ற தீர்க்கதரிசிகள் கூறுகிறதையே நீயும் கூறு. நீ அவ்வாறு செய்யும்போது, ஏன், நீ அவ்வாறு கூறினால், நாங்கள் உன்னை ஐக்கியத்திற்குள் மீண்டும், கொண்டு செல்வோம் என்பதில், சந்தேகமில்லை. பார்த்தீர்களா? நாங்கள் உன்னை எங்களில் ஒருவராக்குவோம். நாங்கள் உன்னை மீண்டும் எங்கள் ஸ்தாபனத்திற்குள் கொண்டு செல்வோம். நீர்…நீர் ஒரு தீர்க்கதரிசி என்று நாங்கள் அறிவோம், ஆனால் நீர் எப்பொழுதுமே சபித்துக்கொண்டே இருக்கிறீர். நீர் எப்பொழுதும் ஆகாபை சபித்துக் கொண்டிருக்கிறீர். இப்பொழுது, சிதேக்கியா, தலைமை மனிதன், போப்பாண்டவர் அல்லது…” என்றனர். அவன் என்னவாயிருந்தாலும். “இப்பொழுது அவன் ஆகாபை ஆசீர்வதித்து, ‘போய் அதை செய்’ என்று சொல்லிவிட்டான். இம்லா, இப்பொழுது நீர் அதேக் காரியத்தைக் கூறுகிறீர். ஏன், நீர் ஒரு ஏழை பையன். உனக்கு சபையே கிடையாது, மிகவும் குறைவாயிற்றே. இவர்களிடம் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர். முழு தேசமும் அவர்களுக்காகவே உள்ளது. இப்பொழுது அவர்கள் கூறுவது போலவே நீயும் கூறினால், நீ என்ன செய்வாய் என்று பார், அப்பொழுது நீ—நீ தேசத்தின் செழுமையைப் புசிப்பாய்” என்றனர். ஆனால் அவன் அங்கே தவறான மனிதனிடம் பேசிக்கொண்டிருக்கிறான்!
57“நீ சிதேக்கியா, மிகாயாவினிடத்தில் ஏதாவது குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?” என்று கூறப்பட்டிருந்தால் என்னவாயிருக்கும். “இல்லை.” “நீங்கள் எப்போதாவது அவரை பாவத்தில் பிடித்திருக்கிறீர்களா?” “இல்லை.” “அவன் யாரையாவது சபிக்க நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?” “இல்லை.” “அவன் குடித்து வெறித்திருப்பதை நீங்கள் எப்போதாவது கண்டுபிடித்தீர்களா?” “இல்லை.” “அவனுடைய கல்வியைக் குறித்து நீங்கள் மறுக்க முடியுமா?” “இல்லை.” “அவனுடைய வேதபாண்டித்துவ பட்டம் தவறானது என்று நீங்கள் நம்புகிறீர்களா?” “இல்லை.” “நீங்கள் அவனுடைய—அவனுடைய பிஎச்.டி. சரி என்று நம்புகிறீர்களா?” “நிச்சயமாக. சனெகரீம் ஆலோசனை சங்கத்தின் மூலம், நான் யூகிக்கிறேன் அவையாவும்…சபைக் கூட்டம், அது சரியாயிருக்கும் என்று நான் யூகிக்கிறேன்.” “சரி, அப்படியானால், நீங்கள் ஏன் அவனோடு சேர்ந்துகொள்ளக் கூடாது?” “ஏனென்றால் அவன் வார்த்தையைப் பின்பற்றாதவனாயிருக்கிறானே!” 102 பாருங்கள், அப்படியானால், இதற்கு முன்னிருந்த எலியா தீர்க்கதரிசியைப் போன்று, நாம் அதைக் குறித்த ஒரு பலப்பரீட்சை நடத்துவோம். நீங்கள் ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நீங்கள் இந்த வேதாகமத்தின் தீர்க்கதரிசியோடு தரித்திருப்பீர்கள். அது வார்த்தையாயுள்ளது. அந்த நேரத்தை, காலத்தைக் கவனியுங்கள்.
58சரி, சிதேக்கியா, “ஓ, தீர்க்கதரிசி அதைக் கூறினான் என்பதை நான் அறிவேன் என்று கூறினால் என்னவாகும், ஆனால் அது ஒரு வருங்கால சந்ததிக்கானதாயுள்ளது. அது இப்பொழுதிலிருந்து வெகுகாலத்திற்கானதா”? அவன், “நான் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு தரிசனத்தைக் காணும் வரை காத்திருங்கள், அதன் பின்னர் நான் உங்களுக்குச் சொல்வேன்” என்றான். அதற்கு அவன், “அப்படியானால் நீரும் அதையே கூறுகிறீரா?” என்று கேட்டான். அவன், “தேவன் கூறுவதையே நான் கூறுவேன்; வேறொன்றுமில்லை, அதற்கு மேல் ஒன்றுமில்லை. என்னால் அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டவோ அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போடவோ முடியாது” என்றான். எனவே அன்றிரவு, ஜெபத்தில், கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனுக்கு வந்தார். அவன் அடுத்த நாள் காலையில் வெளியே சென்று, அவன் கூறினான்… இரண்டு தீர்க்கதரிசிகள் உண்டு!
59103 சிதேக்கியா, இராணுவத்திலும் தேசத்தின் பார்வையிலும் தேசத்திலேயே மகத்தான மனிதனாயிருந்தான். அவன் இராஜாவின் மூலம், தலைமையான தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் ஸ்தாபனத்தின்படி, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் தலைவனாயிருந்தான். அவன் தன்னுடைய, ஸ்தாபனத்தினால், அவைகள் அனைத்திற்கும் தலைவனானான்; அனேகமாக மிகச் சிறந்த முறையில் படித்தவவர்களாய், சிறந்த கல்வியறிவு படைத்தவர்களாய், பணிக்கு அதிக தகுதியுள்ளவர்களாய் இருக்கலாம். அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டான், ஏனென்றால் அவன் ஒரு “தீர்க்கதரிசி” என்று அழைக்கப்பட்டான். நிச்சயமாகவே, அவன் ஒரு சாதாரண தீர்க்கதரிசி அல்ல, அவன் ஒரு எபிரெய தீர்க்கதரிசி. இப்பொழுது அவனைக் கவனியுங்கள்.
60104 சிதேக்கியா, “கர்த்தர் என்னிடம் பேசினார், இரண்டு இரும்பு கொம்புகளை எனக்கு ஒரு அடையாளமாக,’ உண்டாக்குங்கள்.” என்றான். ஒரு தீர்க்கதரிசி வழக்கமாக அடையாளங்களைக் கொடுக்கிறான். “அவன், ‘இந்த இரும்பு கொம்புகளை உண்டாக்குங்கள்’ என்றான். பரிசுத்த ஆவியானவர் என்னிடத்தில், “என்னை ஆசீர்வதித்த அபிஷேகமாகிய ‘இவைகளை எடுத்துக்கொள்’” என்றார். இது ஒரு பலி செலுத்துதலாக நினைக்க வேண்டாம், ஆனால் ஒரு குறிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். “பரிசுத்த ஆவியானவர் என் மூலமாக அந்நிய பாஷைகளில் பேசி, என்னை ரூபகாரப்படுத்தின அந்த ஒருவர், அவர், ‘இந்த கொம்புகளை எடுத்து, இதன் மூலம், அவன் சீரியாவை தேசத்தை விட்டு துரத்திவிடுவான் என்று ராஜாவிடம் கூறுங்கள். இஸ்ரவேலுக்குச் சொந்தமான தேசத்தை, சபையாகிய அவனுக்கு நான் திரும்பக் கொடுப்பேன்.’” என்றார். 105 சகோதரனே, அது பிலேயாம் இங்கே இருந்ததைப் போன்றே, மிகவும் அடிப்படையானதாய் இருக்கிறது. மோசே பேசினது போலவே பிலேயாமும் அடிப்படையாய் பேசிக்கொண்டிருந்தான். மோசே…தேவனுடைய சரியான எண் ஏழு. பிலேயாம், “எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டுங்கள்; ஏழு சுத்தமான பலிகளையும், காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும்” என்றான். அது தேவனுடைய குமாரனின் வருகையைக் குறித்துப் பேசுகிறது. அடிப்படையில், அவர்கள் எல்லோரையும் போலவே அவனும் சரியாக இருந்தான்.
61106 இதோ சிதேக்கியா, அடிப்படையில் சரியாக, “இந்த தேசம் நமக்கு சொந்தமானது. ஏன், அந்த சீரியர்களும், பெலிஸ்தியரும் அவர்களுடைய பிள்ளைகளும் அங்கே தங்களுடைய வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள், நம்முடைய சத்துரு, நம்முடைய பிள்ளைகளுக்கு உணவில்லாமல் செய்கிறார்கள்! தேவன் நமக்கு இந்த தேசத்தைக் கொடுத்தபோது!” 107 சகோதரனே, அது ஒரு நல்ல வாதம். இஸ்ரவேலருக்கு முன்பாக அவனால் அதை சத்தமிட முடியும் என்று நான் யூகிக்கிறேன், அவர்களால் முடிந்தளவு சத்தமிட முடியும். இப்பொழுது, நான் இப்பொழுது இன்றைய நாளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். முழுவதுமே கூச்சலிடுதல், சத்தமிடுதல்!
62108 கடந்த ஞாயிற்றுக்கிழமை தாவீதைப் பற்றிக் கூறினது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பார்த்தீர்களா? நீங்கள் அங்கே வெளியே வானொலி தேசத்தில் அல்லது இந்த தொலைபேசி இணைப்பு தேசத்தில்; நீங்கள் கடந்த ஞாயிறு செய்தியைப் பெற்றுக்கொள்ளவில்லையென்றால், அதை நிச்சயம் பெற்றுக்கொள்ளுங்கள். தேவனுக்கு ஒரு சேவை செய்யும்படி நியமிக்கப்படாமல் அதை செய்ய முயற்சித்தல், எவ்வளவு உத்தமமாயிருந்தாலும், நன்மையானாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது முற்றிலுமாக தேவனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பார்த்தீர்களா? இப்பொழுது, இங்கே சிதேக்கியா, தான் சரியென்று எண்ணிக்கொண்டிருந்தான்.
63மிகாயா, “நான் தேவனிடத்தில் கேட்கட்டும்” என்றான். எனவே அவன் அடுத்த நாள் காலையில் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு வந்தான். அவன் தன்னுடைய தரிசனத்தை வார்த்தையினால் சோதித்துப் பார்த்தான். இப்பொழுது அவன் சிதேக்கியாவிடம் சொல்லியிருந்தால், “இந்த நபருக்கு என்ன சம்பவிக்கும் என்று இங்கே வேதாகமத்தின் தீர்க்கதரிசி கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்களா?” 109 “ஆனால் இந்த நேரத்தில் அல்ல, ஏனென்றால் இந்த மனிதன் ஒரு மரியாதைக்குரிய மனிதன். அவன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.” இதைப் புரிந்துகொள்ளத் தவறாதீர்கள். “அவன் சபைக்கு சொந்தமான காரியங்களை சபைக்கே திரும்ப அளிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் அதனுடைய சொத்தை திரும்ப அளிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்,” ஆவிக்குரிய காரியங்கள் அல்ல; அப்படி செய்திருந்தால், எலியா செய்ததுபோல அவன் அந்த முழு தேசத்தையும் அசைத்திருப்பான். ஆனால், அவர்களுக்கு பொருள் சம்பந்தமான காரியங்களை அளிக்க முயற்சித்து, “நாங்கள் சொத்துக்களை சொந்தமாக வைத்துள்ளோம். நாங்கள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருக்கிறோம். நாம் அதைச் சார்ந்தவர்கள். நாங்கள் யாவரும், ஜனங்களாகிய நீங்கள் யாவரும், புராட்டஸ்டெண்டுகளாகிய நீங்கள் யாவரும் எங்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்.” ஹூ-ஹூ. 110 நாம் இன்னும் சிறிது நேரத்தில் அதற்கு வருவோம். “எப்படியாயினும், அவர்கள் யாவரும் சகோதர சகோதரிகளே.” அது அல்ல! உண்மையான அசலான தேவனுடைய சபையோடு ஒருபோதும் இருந்ததில்லை, ஒருபோதும் இருக்கப்போவதுமில்லை. இருக்க முடியாது!
64111 கவனியுங்கள், அவன் தரிசனத்தைக் கண்டான். எனவே அவன், “தேவன் என்னிடத்தில் பேசினார்” என்றான். இப்பொழுது, பாருங்கள், அந்த மனிதன் உத்தமமாயிருந்தான். அவன், “இந்தக் கொம்புகளை உண்டாக்கிக் கொண்டு, அங்கே ராஜாவுக்கு முன்பாகப் போய், ‘மேற்கு நோக்கித் தள்ளு’ என்றான்” என்று கூறினான். அல்லது அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து நிலமானது எந்தப் பக்கமாக இருந்தாலும் சரி. “‘தள்ளினால், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கும், அதாவது அவன் ஜெயம் பெற்று திரும்பி வரப்போகிறான், அது சபைக்கு ஒரு வெற்றியாக இருக்கும்.’ அவர்களைத் துரத்தப்போகிறேன்!” அது மிகவும் அருகாமையில் உள்ளது, இல்லையா? காரியம் என்னவாயிருந்தது? இதோ மிகாயா இறங்கி வந்தான். “இப்பொழுது நீர் உம்முடைய தீர்க்கதரிசனத்தை கூறும்” என்றான். “போங்கள்! ஆனால் இஸ்ரவேலர் ஆடுகளைப் போல் சிதறடிக்கப்பட்டதையும், மேய்ப்பன் இல்லாததையும் கண்டேன்” என்றான். வ்யூ! சரியாக நேர்மாறாக உள்ளது.
65112 இப்பொழுது, நீங்கள் சபையாயிருக்கிறீர்கள். இப்பொழுது எந்த ஒன்று சரியானது? அவர்கள் இருவருமே தீர்க்கதரிசிகள். நீங்கள் அவைகளில் உள்ள வித்தியாசத்தைக் கண்டறியக்கூடிய ஒரே வழி, அதை வார்த்தையைக் கொண்டு சரிபார்ப்பதேயாகும். அதற்கு அவன், “நீங்கள் இதை எப்படி பெற்றுக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டான். அவன், “தேவன் ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன்” என்றான். மேலும், “நான் ஆலோசனை சங்கம் யாவும் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டேன்” என்றான். 113 இப்பொழுது சிதேக்கியாவும் கூட, அதே ஆவியில், தேவனைக் கண்டதாகக் கூறினான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “நான் தேவனைக் கண்டேன். இந்த கொம்புகளை இரும்பினால் செய்ய அவர் என்னிடம் கூறினார். அங்கே போய், இங்கிருந்து தேசங்களை இடித்துத் தள்ளுங்கள், ஏனென்றால் இது நமக்கு சொந்தமானது. மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை.” அவர்கள் தேவனோடு சரியாக தரித்திருந்தால் அவர்கள் அதைப் பெற்றிருந்திருப்பார்கள். அதைப் பெற்றிருந்திருப்பார்கள், ஆனால் அவர்கள் தேவனை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். 114 அந்தவிதமாகவே ஸ்தாபன சபையும் உள்ளது. இந்தக் காரியங்களுக்கு அதற்கு உரிமை உண்டு, ஆனால் நீங்கள் அதிலிருந்து வஞ்சிக்கப்பட்டிருக்கிறீர்கள், ஏனென்றால் காலத்தின் வார்த்தையை ரூபகாரப்படுத்த, நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்தும், தேவனுடைய ஆவியிலிருந்தும், அபிஷேகத்திலிருந்து விலகிவிட்டீர்கள். நீங்கள் இந்த செய்தியை பெற்றுக்கொள்ளத் தவறாதீர்கள்.
66115 இப்பொழுது என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். அவன், “நான் தேவனைக் கண்டேன்” என்றான், மிகாயா, “பரலோகத்தில் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன். அவருடைய ஆலோசனை சங்கம் அவரைச் சூழ்ந்திருந்தது. அவர், ‘எலியாவின் வார்த்தைகளை உண்மையாக்க, நாம் யாரை போய் அனுப்பி ஆகாபை வஞ்சிக்க முடியும், ரூபகாரப்படுத்தப்பட்ட என் தீர்க்கதரிசி. அவன் வருவான் என்று நான் கூறினேன். எலியா என் வார்த்தையை உடையவனாயிருந்தான். வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் என் வார்த்தையோ ஒழிந்து போகாது. அவர்கள் எவ்வளவு நவீனமாக இருந்தாலும் அல்லது அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அல்லது அவர்கள் எவ்வளவு கல்வி கற்றவர்களாக இருந்தாலும் அல்லது அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, என் வார்த்தைகள் ஒருபோதும் தவறிப் போவதில்லை’” என்றான். 116 “அப்பொழுது ஒரு பொய்யின் ஆவி பாதாளத்திலிருந்து புறப்பட்டு வந்து, முழங்காற்படியிட்டு, ‘நீர் என்னை அனுமதித்தால், நான் அவர்களை வார்த்தையிலிருந்து விலக்கி வைக்கும்படிக்கு, நான் அவர்களுக்கு என்னுடைய அபிஷேகத்தை அளித்து, அவர்களை எந்தவிதமான ஒரு அடையாளத்தையும் அல்லது அதிசயத்தையும் செய்ய வைக்க முடியும். அது உம்முடைய வார்த்தை என்பதைக் கூட அவன் அறியமாட்டான். அவன் புகழுக்காக அதைப் புறக்கணித்துவிடுவான்’” என்றது. சகோதரனே, காலங்கள் மாறவேயில்லை. சகோதரன் நெவில், அது உண்மை. அது உண்மை என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். “‘மற்றவர்கள் செய்கிற அதேக் காரியங்களை நான் அவனைச் செய்யச் செய்வேன். நான் அவனை தீர்க்கதரிசனம் உரைத்து, பொய்யுரைக்கச் செய்வேன்’” என்றது. அது எப்படி பொய்யாக இருக்க முடியும்? ஏனென்றால் அது வார்த்தைக்கு முரணாயிருந்தது.
67117 நீங்கள் இந்த பொய்யான ஞானஸ்நானங்களில் எதையாகிலும், தவறான இன்ன-இன்ன-மற்றும்-இன்ன என்ற ஞானஸ்நானங்களை எடுத்துக் கொண்டாலும், அது எவ்வளவு உண்மையானதாக தொனித்தாலும் நான் கவலைப்படுகிறதில்லை, அவர்கள் எவ்வளவாக ஆள்மாறாட்டம் செய்ய முயன்றாலும், அது இக்காலத்து தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், அது ஒரு பொய்யாகும். அது முற்றிலும் உண்மையே. நீங்கள், “சரி, எங்களுடையது, பாருங்கள், நாங்கள் இதைச் செய்தோம், நாங்கள் இதைச் செய்கிறோம், எங்களுடைய சபை இந்த விதம், அந்த விதம்” என்று கூறலாம். 118 அது என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது இந்த வேளைக்கான எழுதப்பட்ட வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், அது ஒரு பொய்யாகும். தேவனுக்கு அதனோடு எந்த சம்மந்தமும் இருக்காது, அது இந்த மணி நேரத்தின் வார்த்தைக்கு முரணாயிருந்தால், எவ்வளவு உத்தமமாயிருந்தாலும், எவ்வளவு கல்வியறிவு பெற்றிருந்தாலும், எவ்வளவு சாமர்த்தியமாயிருந்தாலும், அது எவ்வளவு உண்மையாயிருந்தாலும், அது எவ்வளவு நியாயமானதாக தொனித்தாலும் சரி. நேரம் நமக்கு அனுமதித்தால் நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில் அதற்குள் சற்று ஆழமாகப் பார்ப்போம். நாம் அவ்வாறில்லையென்றால், நாம் அதை மீண்டும் இன்றிரவு எடுத்துக்கொள்வோம்.
68119 கவனியுங்கள், அவன் உத்தமமான, நல்ல மனிதனாயிருந்தான் என்பதில் சந்தேகமேயில்லை. மேலும் அவன் கூறினான்… அப்பொழுது, வேறுவிதமாக, மிகாயா அவனிடம், அவனுடைய முகத்திற்கு நேராக அல்ல, ஆனால் வேறு வார்த்தைகளில், “நீ ஒரு பொய்யின் ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறாய்” என்றான். அது ஒரு பேராயருக்கு கூற வேண்டிய ஒரு காரியமாய் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவன் அதைச் செய்தான். 120 எனவே இந்த பேராயர் நடந்து சென்று, “நீர் இனி ஒருபோதும் ஐக்கியங்கொள்ளமாட்டீர்” என்று கூறி, அவனை முகத்தில் அறைந்தான். மேலும், “நான் ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட மனிதன் என்பதை நீ அறிவாய். என்னுடைய சபையானது, இந்தக் காரியத்திற்கு என்னைத் தலைவனாக்கியது. தேவனுடைய ஜனங்களின் அதிகப்படியான வாக்குகளே என்னை இதற்கு உருவாக்கினது. என்னுடைய ஸ்தாபனம் என்னை இதற்கு உருவாக்கியது. தேவன் இந்த தேசத்தை நமக்கு அளித்தார், மேலும் இது நமக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் உடையவனாயிருக்கிறேன்” என்றான். அவனை அடித்து, “தேவனுடைய ஆவி என்னை விட்டுச் சென்றபோது, அது எந்த வழியாய் சென்றது?” என்று கேட்டான். 121 மிகாயா, “இந்த நாட்களில் ஒன்றில், அதை நீ கண்டு கொள்வாய்” என்றான். கலிபோர்னியா கடலுக்கடியில் சென்றப் பிறகே, இந்த எல்லாக் காரியங்களையுமே கண்டு கொள்வீர்கள். பார்த்தீர்களா? “நீங்கள் சிறைச்சாலைகளில் உட்காரும்போது, அது எந்த வழியில் சென்றது என்பதை நீங்கள் காண்பீர்கள்.”
69122 இப்பொழுது, ஆகாபே, நீ என்ன கூறப்போகிறாய்? அவன், “நான் என்னுடைய தீர்க்கதரிசியை விசுவாசிக்கிறேன்” என்றான். அவன் வார்த்தையை ஆராய்ந்து பார்த்திருந்திருந்தால் என்னவாயிருக்கும்? பாருங்கள், அவன் தன்னை சபிக்கப்பட்டவனாகக் காண விரும்பவில்லை. எனக்கு செவிகொடுங்கள்! அவன் தன்னை சபிக்கப்பட்டவனாகக் காண விரும்பவில்லை. எந்த மனிதனும் அவ்வாறு செய்வதில்லை. 123 என்னுடைய ஸ்தாபன…ஸ்தாபன சகோதரனே, அதுதான் உங்களுக்குள்ள காரியம். நீங்கள் உங்களுடைய இருதயத்தில், அறிந்துள்ளபோது, நீங்கள் சரியென்று நினைக்க விரும்புகிறீர்கள், நீங்கள் “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும்போது, நீங்கள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரியும்…நீங்கள் செய்துகொண்டிருக்கிற அந்த காரியங்களை கூறி, ஆரம்ப அத்தாட்சிகளை எடுத்துக் கொள்ளும்போது, அது போன்ற எல்லா காரியங்களிலும், நீங்கள் தவறாக இருக்கிறீர்கள். அந்நிய பாஷைகளில் பேசுவதே ஆரம்ப அத்தாட்சியாக இருந்து, அதன்பின்னர் இந்த வேளையில் தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு முரணாக பேசுவது எப்படி? அது எப்படி இருக்க முடியும்? உங்களுக்கு சாபம் வேண்டாம், அல்லவா? ஆனால் இதோ அவ்வண்ணமாய் இருக்கும் என்று, எழுதப்பட்டிருக்கிறது. அது மிருகத்தின் முத்திரை, கூடுமானால் அது தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும்.
70124 ஒவ்வொரு அடையாளமும், ஒவ்வொரு அதிசயமும், அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதனும், தீர்க்கதரிசனமும், எல்லாவிதமான காரியங்களும் புறப்பட்டுச் செல்கின்றன; எல்லாவிதமான அடையாளங்களிலும், எல்லாவிதமான அற்புதங்களிலும், நீங்கள் எப்படி வித்தியாசத்தைக் கூறப்போகிறீர்கள்? இந்த மணி நேரத்திற்கான வார்த்தையைக் கவனியுங்கள். அந்த விதமாகத்தான் நீங்கள் எடுத்துக் கொண்டு… மோசே பிலேயாமிடம் எப்படி கூறியிருப்பான் என்பதைக் கவனியுங்கள். இங்கே மிகாயாவைக் கவனியுங்கள், அவன் சரியென்று நமக்கு எப்படித் தெரியும்? வார்த்தை, அவனுக்கு முன்பாக, ஆகாபுக்காக அதை தீர்க்கதரிசனம் உரைத்திருந்தது. 125 இந்த ஸ்தாபனங்கள் இந்நாளுக்காகவும், அவர்கள் மேல் இந்த சாபம் இருப்பதாகவும், வார்த்தை, நமக்கு முன்பாக தீர்க்கதரிசனம் உரைத்துள்ளது. அவருடைய உண்மையான அபிஷேகம் பண்ணப்பட்ட சபையினால் சம்பவிக்கும் காரியங்கள், வார்த்தையை, ஒரு வார்த்தை மணவாட்டியை உடையதாயிருக்கும். இங்கே நாம் இருக்கிறோம். இதோ அது அன்று இருந்தது போலவே இன்றைக்கும் உள்ளது.
71126 வேதம், “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் எந்த வார்த்தையும் நிலைவரப்படும்” என்று கூறியுள்ளது. நான் பிலேயாமைக் குறித்துப் பேசினேன், நான் பிலேயாமைக் குறித்தும், மோசேயைக் குறித்தும் பேசினேன். நான் மிகாயாவையும் சிதேக்கியாவையும் குறித்துப் பேசினேன். இப்பொழுது நான் இன்னும் ஒன்றைக் கொடுக்கப் போகிறேன். இதில், அங்கே நூற்றுக்கணக்கானவர்கள், ஆனால் மூன்று சாட்சிகளாக்க, இன்னும் ஒன்று வேண்டும். அவைகளின் முழு காட்சியையும் நான் இங்கே எழுதி வைத்துள்ளேன்; ஆனால் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும். 127 எரேமியா ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட, புறம்பே தள்ளப்பட்ட, ஆனால் தேவனுடைய ஒரு ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாக இருந்தான். அவர்கள் அந்த மனிதனை வெறுத்தனர். அவர்கள் அவன் மீது அழு-…அழுகிய பழங்களையும், மற்ற ஒவ்வொரு காரியத்தையும் வீசினர். அவன் சாபத்தை அவர்கள் மேல் போட்டான். அவன் செய்த காரியங்கள், அவன் தன்னுடைய பக்கவாட்டில் படுத்துக்கொண்டு, மற்ற காரியங்கள், இஸ்ரவேலர் தவறாயிருந்தனர் என்பதற்கு அடையாளங்களை அளித்தான். 128 ஒவ்வொரு தீர்க்கதரிசியும், உலகத்தில் எப்போதும் எழும்பிய உண்மையான தீர்க்கதரிசியும், அந்த சபையின் ஸ்தாபன அமைப்புகளை சபித்தனர். அதை மாறாத தேவனால் எப்படி மாற்ற முடியும்? 129 பரிசுத்த ஆவியானவரே இந்த வேளையின் தீர்க்கதரிசி; அவர் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்தி, அதை நிரூபிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மோசேயின் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தார். பரிசுத்த ஆவியானவர் மிகாயாவின் காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தார். வார்த்தையை எழுதின பரிசுத்த ஆவியானவர் வந்து வார்த்தையை உறுதிப்படுத்துகிறார்.
72இப்பொழுது மிகாயாவின் காலத்தில் என்ன சம்பவித்தது? ஆகாப் கொல்லப்பட்டான், தேவனுடைய வார்த்தையின்படி நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின. 130 கள்ளப் போதகர்களே, குருடருக்குத் தலைவனாகிய குருடரே நீங்கள், தேவன் கூறுகிறபடியே, என்றோ ஒரு நாளில் நீங்கள் விதைத்ததையே அறுப்பீர்களே! நான் கோபப்படவில்லை. நான் உங்களுக்கு ஒரு சத்தியத்தைக் கூறிக்கொண்டிருக்கிறேன். அந்த அறையில், பரிசுத்த ஆவியானவர், “அந்தவிதமாக அதைக் கூறு” என்று கூறியிருக்கவில்லையென்றால், நான் இதைக் கூறியிருக்கமாட்டேன். அது சரியென்று தேவன் நிரூபித்ததைத் தவிர நான் உங்களிடம் எப்போதாவது தவறான ஏதாகிலும் கூறியிருக்கிறேனா? என் சகோதரர்களே, இது மிகவும் தாமதமாகிவிடும் முன்னர், விழித்தெழுங்கள்!
73131 ஆனால் நான் இதைக் கூறட்டும். அது முள்ளாயிருக்க முன்குறிக்கப்பட்டிருந்தபோது, ஒரு முள்ளானது எப்படி எழும்பி பூச்செடியாக இருக்க முடியும்? தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எப்படி அதைக் காணாதிருக்க முடியும்? ஏனென்றால், நீங்கள் அதைக் காணத் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். இயேசு, “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்றார். “உலகத்தோற்றத்துக்கு முன்னே அவர் அதை எனக்குத் தந்தாலொழிய, அவர்களில் ஒருவனும் வரமாட்டான். அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன” என்று கூறப்பட்டுள்ளது, ஒரு சபைத் தலைவர் பேரில் அல்ல, ஆனால் புஸ்தகத்தில், ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில்.
74கவனியுங்கள், எரேமியா எழும்பி நின்று, ஜனங்களுக்கு முன்பாக ரூபகாரப்படுத்தப்பட்டான், அதே சமயத்தில் அவர்கள் அவனை வெறுத்தனர். 132 எனவே அவர்கள் புறப்பட்டுச் சென்று, ஒரு நுகத்தை உண்டாக்கி, அவன் அதைச் செய்து, அதைத் தன்னுடைய கழுத்தில் போட்டு, ஜனங்களுக்கு முன்பாகச் சென்றான். அவர்கள், “ஓ, நாங்கள் தேவனுடைய மகத்தான ஜனங்கள். ஏன், நாம் இஸ்ரவேலர். நாங்கள் எங்களுடைய ஜெப ஆலயத்தில் மிகவும் உத்தமமாய் இருக்கிறோம்! நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலந்து கொள்கிறோம், நாங்கள், நாங்கள் பலிகளை செலுத்துகிறோம், நாங்கள் எங்களுடைய பணத்தை செலுத்துகிறோம். நேபுகாத்நேச்சார் எப்படி தேவனுடைய பரிசுத்த காரியங்களை வைத்திருக்க முடியும்?” ஹூ! உங்களுடைய பாவங்கள் அதை செய்திருந்தன. 133 தேவன், “நீங்கள் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டால், நான் இதைச் செய்யமாட்டேன். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், அது உங்களிடத்திற்கு வருகிறது” என்றார். அது முற்றிலும் உண்மை. இப்பொழுதும் அதே நிலைதான். அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள், அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள அந்த நேரத்திற்கான அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளுங்கள்.
75134 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, எரேமியா, தேவனுடைய சித்தத்தினால், தீர்க்கதரிசியாக நிரூபிக்கப்பட்டு, வெறுக்கப்பட்டாலும்… அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய நாட்களில் வெறுக்கப்பட்டனர். அவர்கள் அந்த நாளின் ஸ்தாபனத்திற்கு முரணான விநோதமான காரியங்களைச் செய்து, ஒவ்வொருவரும் அவனை வெறுத்தனர், ராஜாக்கள் மற்றும் மற்ற ஒவ்வொரு காரியமும் கூட. எனவே அவன் ஒரு—ஒரு நுகத்தை தன்னுடைய கழுத்தில் போட்டு, “கர்த்தர் உரைக்கிறதாவது, அவர்கள் எழுபது வருடங்கள் அங்கே இருக்கப் போகிறார்கள்” என்று கூறினான். ஏனென்றால் அவன் தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒரு புரிந்துகொள்ளுதலை உடையவனாயிருந்தான். “எழுபது ஆண்டுகள்!”
76135 அப்பொழுது அனனியா, அனனியா, நீங்கள் அ-ன-னி-யா என்றே, அதை உச்சரிப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன். ஜனங்களுக்கு மத்தியில் ஒரு தீர்க்கதரிசியாகிய, அனனியா, வந்து, எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து, அதை முறித்தான். அவன் தேவனுடைய வார்த்தைக்கு முரணாக பேசிக்கொண்டிருந்தபோது, பாருங்கள், அவன் ஜனங்களுக்கு மத்தியில் ஒரு பெரிய பிரபலம் வாய்ந்தவனாயிரருந்தான். மேலும் அவன், “இரண்டு வருடங்களிலே அவர்கள் திரும்பி வருவார்கள். கர்த்தர் உரைக்கிறதாவது ” என்றான். அபிஷேகம் பண்ணப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகள். அவர்களுக்குள் இருந்த வித்தியாசம் எப்படி இருந்தது? ஒருவன் வார்த்தையைப் பேசுவதை உடையவனாயிருந்தான், மற்றவன் பேசவில்லை. எரேமியா, “ஆமென்” என்றான்.
77136 எல்லா மூப்பருக்கும் மற்றும் சபையாருக்கும், எல்லா இஸ்ரவேலருக்கு முன்பாகவும், பாருங்கள், அவன் எரேமியாவைப் போல பெரியவனாய் இருக்க முடியும் என்பதைக் காண்பிக்க விரும்பினான். “அவர்கள் உன்னை எப்படியும், விரும்புகிறதில்லை என்பதை நீ அறிவாய். எனவே நானும் கூட ஒரு தீர்க்கதரிசி தான். நான் உன்னைப் பார்க்கிலும் மேலான ஒரு தீர்க்கதரிசியாயிருக்கிறேன், ஏனென்றால் நீ ஒரு பொய்யை தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருக்கிறாய். தேவனுடைய ஜனங்கள் இன்ன-மற்றும்-இன்ன ஒரு காரியத்தின் கீழ் இருக்கப்போகிறார்கள் என்று நீ என்னிடம் சொல்கிறாயா?” என்று கேட்டான். 137 இன்றைக்கு அவர்கள் அதைத்தான் கூறுகின்றனர், ஆனால் நீங்கள் ஒரு சபையைப் போல, அங்கே அதேவிதமாகவே இருப்பீர்கள். நீங்கள் ஒரு சாபத்தினால் சபிக்கப்பட்டிருக்கிறீர்கள். சபைகளாகிய நீங்கள் யாவும், ஸ்தாபனங்களும் தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக தங்களுடைய மனிதனின் பாரம்பரியத்தை பற்றிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் தேவனால் சபிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
78138 இப்பொழுது கவனியுங்கள், இதோ அவன் வருகிறான். அனனியா தேவனுடைய அடையாளமாகிய, அவனுடைய கழுத்திலிருந்த இந்த நுகத்தை, அதை உடைத்து, “கர்த்தர் உரைக்கிறதாவது . இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் திரும்பி வருவார்கள்” என்றான். “நான் இன்னார்-மற்றும்-இன்னார் ” என்ற ஒரு பெருமைக்காகவே. அவன் ஸதாபனத்திற்காக நின்ற காரணத்தால், அவன் ஒரு ஸ்தாபன தீர்க்கதரிசியாயிருந்தான். எரேமியா வனாந்திரத்தில் தனித்து வாழ்ந்தவன். அவர் எல்லா நேரத்திலும் அவர்களுக்கு எதிராக பொல்லாங்காய் தீர்க்கதரிசனம் உரைத்தான், ஏனென்றால் அவர்கள் பொல்லாதவர்களாயிருந்தனர். 139 இந்த மனிதன் அவர்களிடத்தில், “ஓ, நீங்கள் இருக்கும் வரைக்கும் சரிதான். நீங்கள் இஸ்ரவேலராயிருக்கும் வரையில், அவ்வளவுதான் அவசியம். பாருங்கள், நீங்கள், நாம்…தேவன் அதைச் செய்யப்போவதில்லை. இங்கே ஏதோ ஒரு சிறு காரியம் சம்பவித்துள்ளது என்பதை நான் அறிவேன், ஆனால் பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள்” என்றேன். 140 ஓ, சகோதரனே, அவர்கள் இன்றைக்கும் ஜீவிக்கிறார்கள். “கவலைப்படாதே, எல்லாம் சரியாக உள்ளது. நாம் ஒவ்வொரு காரியத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளோம். நாம் தான் சபை” என்றனர். நீங்கள் அதை நினைக்க வேண்டாம். ஆம்.
79141 எனவே அவன், “எல்லாம் சரிதான். அவர்கள் இரண்டு வருடங்களில் திரும்பி வருவார்கள். அந்த ஒரு சிறு காரியம் சம்பவித்துள்ளது. அது வழக்கத்திற்கு மாறான ஒன்றல்ல. நாம் அதைப் பெற்றுள்ளோம். நேபுகாத்நேச்சார் இங்கே வந்தான், ஆனால் நம்முடைய தேவன் இவை எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்” என்றான். 142 ஆனால் அந்த சந்ததி ஒழிந்துபோகுமளவும், மற்றொரு சந்ததி ஒழிந்துபோகுமளவும்; அவர்கள் எழுபது ஆண்டுகள் அங்கே இருப்பார்கள் என்று வார்த்தை கூறியுள்ளது; நாற்பது ஆண்டுகள் என்பது ஒரு தலைமுறை. “இது ஏறக்குறைய இரண்டு தலைமுறைகளுக்கு அப்பால் நீங்கள் இருக்கப் போகிறீர்கள் என்பதாயுள்ளது.” எரேமியா தேவனுடைய வார்த்தையின்படியே அதைக் கூறினான். அனனியா அதை முறியடித்தான்! எரேமியா, “சரி. ஆமென். ஆனால் அனனியா, நாம் இதை நினைவில் கொள்ளட்டும், நாம் இருவரும் தீர்க்கதரிசிகள். நாம் ஊழியக்காரர்கள்” என்றான். 143 என் சகோதரனே, நான் இதை உங்களுக்கு கூறுகிறேன். நமக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகள், என் சகோதரனே, அவர்கள் இராஜ்ஜியங்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர், அவர்கள் குறிப்பிட்ட காரியங்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் உரைத்தனர் என்பதை நினைவில் கொள்வோம். ஆனால், நினைவிருக்கட்டும், தீர்க்கதரிசி எந்தக் காரியத்தைக் கூறினாலும், அவன் வார்த்தையின்படி தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டும். மிகாயாவையும், மோசேயையும், மற்ற எல்லோரையும் போல. அது வார்த்தையின்படி இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
80144 அப்பொழுது அனனியா, அவனுடைய நீதியான கோபம் எழுந்தது. “நான் அனனியா” (சந்தேகமில்லை), “கர்த்தருடைய தீர்க்கதரிசி, நான், ‘இரண்டு வருஷம்’ என்று கூறுகிறேன்” என்று கூறினான். வேறுவிதமாக கூறினால், “வார்த்தை என்னக் கூறுகிறது என்று நான் கவலைப்படுகிறதில்லை.” அவருடைய அபிஷேகத்தினால், “‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் திரும்பி வருவார்கள்’ என்று நான் கூறுகிறேன்” என்று கூறினான். 145 எரேமியா அவனைவிட்டு, வெளியே சென்று, “கர்த்தாவே, அவன் என்னக் கூறினாலும் எனக்குக் கவலையில்லை, அந்த வார்த்தை அவ்வண்ணமாய்க் கூறுகிறது என்று நான் இன்னமும் விசுவாசித்து அறிந்திருக்கிறேன். நான் உமக்கு உண்மையாய் தரித்திருப்பேன். நான் அவனால் வஞ்சிக்கப்படமாட்டேன்” என்றான். 146 அப்பொழுது தேவன், “அடுத்த நுகத்தை, நான் அதை இரும்பினால் செய்வேன்’ என்று அனனியாவிடம் போய் சொல்” என்றார். அவன் அதைச் செய்த காரணத்தால், அதே ஆண்டில், அனனியா, அவன் பூமியிலிருந்து எடுக்கப்பட்டான். இரண்டு தீர்க்கதரிசிகளுமே, நம்முடைய முன்மாதிரிகளாயுள்ளனர். இந்த நேரத்தில் இன்னும் அநேகரைக் குறித்துப் பேசலாம்.
81147 ஆனால் கவனியுங்கள். இயேசு, இந்த கடைசி காலத்தில், மீண்டும், இரண்டு ஆவிகளும் உண்மையாகவே மீண்டும் உண்மையான நெருக்கமாக இருக்கும் என்று கூறினார். அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இப்பொழுது கவனியுங்கள். அது இருந்ததைக் காட்டிலும் நெருக்கமாக இருக்கும். இதுவே முடிவின் நேரம். ஓ, பிள்ளைகளே! தேவனே எங்கள் மீது இரக்கமாயிரும்! “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்” வரை. இப்பொழுது நீங்கள் எப்படி…அந்த நாட்களில் நாம் அதை எப்படிக் கூறினோம்? இன்றைக்கு நீங்கள் அதை எப்படி கூறப்போகிறீர்கள்? அதேவிதமாகவே, “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்ற வார்த்தையோடு தரித்திருங்கள். 148 இப்பொழுது இந்த எல்லா செய்தியையும் கவனியுங்கள். நீங்கள் ஒலிநாடாவைக் கேட்கும்போது, கர்த்தர் என்னோடு பூமியில் முடிவுறும்போது, என்றாவது ஒரு நாள் நானும் கூட போய்விடுவேன், நீங்கள் இதை திரும்பவும் குறிப்பிடுவீர்கள். நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிற, என்னுடைய சத்தத்திற்கு செவிகொடுங்கள். அவருடைய வருகைக்கு முன்னர் அவர் என்னை அழைத்துச் செல்வாரானால், நினைவில் கொள்ளுங்கள், நான் உங்களிடத்தில் கர்த்தருடைய நாமத்தில், கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு பேசியிருக்கிறேன். ஆம்.
82149 கவனியுங்கள், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும்,” அதே ஆவியினாலே, அதே அடையாளங்களை, அதே அற்புதங்களைச் செய்யும். அது சரியா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நாம் சற்று முன்னர் பேசின தீர்க்கதரிசிகளைப் போன்றே, தீர்க்கதரிசிகளும் இருந்தனர். இப்பொழுது, அதுவும் கூட எழுதப்பட்டிருக்கிறது… நீங்கள் விரும்பினால், நாம் இந்த ஒன்றிற்கு, இரண்டாம் தீமோத்தேயு 3-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். நாம் இந்த ஒன்றை விட்டுவிடாதிருப்போமாக. நான் விரும்பவில்லை… 150 நான் அங்குள்ள அந்த கடிகாரத்தை நோக்கிப் பார்க்கையில், நான்—நான் அதில் அநேகமானவற்றைத் தவிர்க்க விரும்புகிறேன். நாம் அதை இப்பொழுது செய்யக் கூடாது என்று நான் நினைக்கிறேன். பார்த்தீர்களா? கவனியுங்கள். அப்படியே…நான் நின்றுகொண்டிருக்கையில், எனக்கு இங்கே வியர்த்துக்கொண்டிருக்கிறது, பாருங்கள், ஆனாலும் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இது உண்மை என்பதை நான் அறிவேன். இரண்டாம் தீமோத்தேயு 3:8.
83151 பவுல், அந்த மனிதன், “வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து நான் கூறினதைத் தவிர வேறொரு வார்த்தை உங்களிடத்தில் பேசினால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். இப்பொழுது, ஒரு தூதன் இறங்கி வந்தான். அது இரண்டாம் தெசலோனிக்கேயர்…ஓ, என்னை மன்னிக்கவும். 152 இரண்டாம் தீமோத்தேயு 3:8-ல் கவனியுங்கள். பவுல் இப்பொழுது பேசுவதைக் கவனியுங்கள். நாம் ஏறக்குறைய…தொடங்குவோம். வசனத்தின் முதலாம் பாகத்திலிருந்து துவங்கி, இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். உங்களுடைய வேதாகமத்தை வைத்துள்ள நீங்கள் என்னோடு வாசியுங்கள். உங்களுடைய வேதாகமத்தை வைத்திருக்காத நீங்கள், கூர்ந்து கவனியுங்கள். அந்த… மேலும், கடைசி நாட்களில்…அறிவாயாக. “கடைசி நாட்களில்” என்பதை கோடிட்டுக் காட்டுங்கள். அப்பொழுதுதான் அது சம்பவிக்கப் போகிறது. …கொடிய காலங்கள் வரும் . (நாம் அதில் இருக்கிறோம்.) எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவரகளாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்ககளாயும்;
84153 நாம் இன்றைக்கு பெற்றுள்ள சீர்குலைந்த, இந்தக் கூட்டத்தைப் பாருங்கள். தெருவில் உள்ள புருஷராக இருந்தாலும், வாலிப புருஷராக இருந்தாலும் கூட, தங்களுடைய நெற்றியில் தங்களுடைய முடியை கீழே இழுத்துக்கொண்டு, ஒரு ஸ்திரீயைப் போல இழுத்து விழ வைக்கின்றனர். தாறுமாறான நிலை! சோதோமியர்களே! 154 இந்த வருடத்தில், இந்த மாதத்தின் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் நீங்கள் படித்தீர்களா? மேலும், “அமெரிக்க மக்கள் இடைப்பட்ட வயதில்.” நான், “இருபது முதல் இருபத்தைந்து வயதுடையவர்கள், ஏற்கனவே அவர்களுடைய நடுத்தர வயதுள்ள நிலையில் உள்ளனர்” என்று நினைக்கிறேன். அவர்கள் கெட்டழிந்துவிட்டார்கள்! அவர்கள் சீர்குலைந்துபோய்விட்டனர்! விஞ்ஞானம் அதைக் கூறுகிறது, அதாவது ஒரு மனிதன் தன்னுடைய நடுத்தர வயதிலும், ஒரு பெண்மணியும், அவர்கள் தங்களுடைய இருபது வயதிற்குட்பட்டவர்களாக இருக்கும்போது. அவர்களுடைய சரீரம் மிகவும் நிலைகுலைந்துபோய் அசுத்தத்திற்குள்ளாகிவிடுகிறது.
85ஓ, அமெரிக்காவே, தேவன் உன்னை எத்தனை முறை செட்டைகளின் கீழ் கூட்டிச் சேர்த்திருப்பார், ஆனால் இப்பொழுதோ உங்களுடைய நேரம் வந்துவிட்டது! நீ உலகத்தை அசுத்தத்தில் வழிநடத்துகிறாய். …தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்ககளாயும்; சுபாவ அன்பில்லாதவர்களாயும்… ஆணுக்கு பெண்ணுக்கு, பெண்ணுக்கு ஆணுக்கு, ஒருவருக்கு ஒருவர் உண்மையான அன்பு கூட இல்லை. “சுபாவ அன்பு கூட இல்லை.” அசுத்தம், பாலுணர்வு! …இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 155 வேறு வார்த்தைகளில் கூறினால், “பரிசுத்த உருளைகளின் கூட்டமே நீங்கள்” என்று கூறுதல். இங்கே சபைக்கு வருவதைக் குறித்து அன்றொரு நாள் ஒருவர் கேட்டார். “அங்கே செல்ல வேண்டாம். எல்லாமே ஒரு பெரிய இரைச்சலாயும், அவ்வாறே செய்கிறதாயிருக்கிறது” என்றனர். பாருங்கள், “அவர்களை வெறுக்கிறவர்கள்.” துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும்; நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், அது கம்யூனிஸ்டுகள்” என்று கூறலாம். அடுத்த வசனம் என்ன கூறுகிறது? தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, (என்ன?) அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; (வார்த்தை, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார், வெளிப்படுத்தப்பட்ட, இந்நாளுக்கான வாக்குத்தத்தம்)… சரியாக அனனியாவைப் போல, சரியாக சிதேக்கியாவைப் போல, பிலேயாமைப் போல, அதற்கு முன்பும் இருந்த, மற்ற கள்ளத் தீர்க்கதரிசிகளைப் போல. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து , (அபிஷேகம் பண்ணப்பட்டு…புரிகிறதா?) வேஷத்தைத் தரித்து, (அபிஷேகம் பண்ணப்பட்ட, நியமிக்கப்பட்ட ஊழியக்காரர்கள்…) தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, மறுதலித்தல் (அவர் நேற்றும், இன்றும், மாறாதவராயிருக்கிறார் என்றும்…அவருடைய வார்த்தையை மறுதலித்தல்!) 156 அந்நாளில் அவர்கள் எப்படி இயேசுவை மறுதலித்தார்கள்? அவர்கள் இயேசுவை மறுதலித்தபோது, அவர்கள் யாரை மறுதலித்தார்கள்? வார்த்தையை. அவர்கள் பக்தியுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் தங்களுடைய வேதாகமத்திலிருந்து போதித்தனர், ஆனால் நிகழ்கால வார்த்தையை மறுத்தனர். 157 இன்றைக்கு அவர்கள் என்னவாயிருக்கிறார்கள்? அதே காரியம், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், பெந்தெகொஸ்தே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஆனால் இன்றைய ரூபகாரப்படுத்தப்பட்ட வாக்குத்தத்தத்தின் வார்த்தையை மறுதலித்தல், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” நீங்கள் அதைக் புரிந்துகொள்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பாவத்தால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,…பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து அவர்களை வசப்படுத்திக்கொள்கிறார்கள். 158 “நம்முடைய சமுதாய விருந்துகளும் மற்றும் நம்முடைய இன்ன-இன்னவையுமே. ” யாரோ ஒருவர் இந்த வார்த்தையை தவறாக வியாக்கியானிக்க முயற்சித்துக் கொண்டு, “சகோதரியே, நீங்கள் குட்டையான தலைமுடியை உடையவர்களாயிருந்தாலும் பரவாயில்லை. அந்த முட்டாள்தனத்திற்கு கவனம் செலுத்த வேண்டாம். பார்த்தீர்களா? அல்லது, நீங்கள்—நீங்கள் இதை அணிந்தால், அது அதுவல்ல, ‘ஒரு மனிதனுடைய இருதயத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்துகிறது.’” என்று இப்படிச் சொல்கிறார்கள். பார்த்தீர்களா? நீங்கள் ஒரு பொல்லாத, இச்சையான, அசுத்தமான ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? நீங்கள் குட்டை முடியுடன் பாடல் குழுவில் பாடலாம், ஆனால் நீங்கள் ஒரு பொல்லாத ஆவியைப் பெற்றுள்ளீர்கள். அது வார்த்தைக்கு முரணாயுள்ளது. அது உண்மை. அதைத்தான் வேதம் கூறியுள்ளது. நீங்களோ, “பாருங்கள், நான் குட்டைக்கால் சட்டைகளை அணிகிறேன். அது என்னைக் குற்றப்படுத்துகிறதில்லை” எனலாம். “யாராக இருந்தாலும், ஒரு புருஷனின் உடையை ஒரு ஸ்திரீ உடுத்திக் கொண்டால், அது தேவனுடைய பார்வையில் அருவருப்பாயிருக்கிறது.” மாறாத தேவன் அதைக் கூறினார்.
86159 ஓ, அநேக காரியங்கள், நாம் எப்படி அதனூடாக செல்ல முடியும்? நம்முடைய நேரம் கழிந்துவிடும். ஆனால் எது சரி எது தவறு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள போதுமான அளவு அறிந்திருக்கிறீர்கள். நான் எப்படி அவர்களை அதைச் செய்ய வைக்க முடியும்? நான் எப்படி அதைச் செய்ய முடியும்? “சரி, நீங்கள் எதைக் குறித்து கூச்சலிடுகிறீர்கள்?” என்று கேட்கலாம். நான் உங்களுக்கு எதிராக ஒரு சாட்சியாயிருக்கிறேன். என்றோ ஒரு நாள், நியாயத்தீர்ப்பின் நாளிலே, நீங்கள் தப்பித்துக்கொள்ள ஒரு மூலை முடுக்கும் இருக்காது.
87160 மிகாயாவால் எப்படி அதை நிறுத்த முடியும்? மோசே எப்படி சத்தமிட்டு அதை நிறுத்த முயன்றான்? யோசுவாவும் மற்றவர்களும் ஜனங்களுக்கு மத்தியில் ஓடுகிறார்களா? லேவி தன்னுடைய பட்டயத்தை உருவி, அவர்களைக் கொன்று போட்டானா? ஆனாலும் அவர்கள் அதேவிதமாகவே சென்றனர். 161 அவர்கள் அதைச் செய்யப் போகிறார்கள் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதைச் செய்யப் போகிறார்கள், ஏனென்றால் அது கர்த்தர் உரைக்கிறதாயிருக்கிறபடியால் அவர்கள் அதைச் செய்யப் போகிறார்கள். அந்த நியமனங்கள் எப்போதாவது உடைந்து, அவர்களுடைய ஸ்தாபனம் வார்த்தைக்கு திரும்ப வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அது கர்த்தர் உரைக்கிறதாவது, அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்! அவர்கள் அந்திக்கிறிஸ்துவிற்குள் செல்வார்களா? சரியாக. அது கர்த்தர் உரைக்கிறதாவது , அவர்கள் அவ்வாறு செய்வார்கள்! “அப்படியானால் நீங்கள் எதைக் குறித்து கூறுகிறீர்கள்?” நானும் ஒரு சாட்சியாயிருக்க வேண்டும், நீங்களும் அவ்வாறே இருக்கிறீர்கள், எல்லா விசுவாசிகளுமே. கவனியுங்கள். …பற்பல இச்சைகளால் இழுப்புண்டு…பெண்பிள்ளைளை வசப்படுத்திக்கொள்கிறார்கள்,
88“பாருங்கள், மற்ற அனைத்தும் பெண்கள் செய்கிறார்கள்.” கள்ளத் தீர்க்கதரிசிகள்! இப்பொழுது கவனியுங்கள். நான் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது கடைசி நாளில் அவர்கள் என்ன செய்வார்கள்? …பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,…பெண்பிள்ளைளை வசப்படுத்திக்கொள்கிறார்கள், “பாருங்கள், மற்ற எல்லா பெண்களையும் எனக்குத் தெரியும்…” சரி, தொடர்ந்து செல்லுங்கள். 162 இங்கே கலிபோர்னியாவில் இந்த பெரிய சம்பவத்திற்கு முன்பு நான் என்ன கூறுவேன்? “இங்கே லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜனங்களாகிய நீங்கள், ஒவ்வொரு ஆண்டும் நான் திரும்பி வரும்போது, அங்கே அதிகமான குட்டை முடியையுடைய பெண்களாய், முதலாவதாக இருந்ததைக் காட்டிலும் பெண்மைத்தனம் கொண்ட மனிதர்களும், அதிகமான பிரசங்கிமார்கள் ஸ்தாபனத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றனர். உங்கள் சாக்குபோக்குக்கு இடமே இல்லை! உங்களில் செய்யப்பட்டிருந்த வல்லமையான கிரியைகள், சோதோம் கொமோராவில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றைக்கும் நிலைத்திருக்கும். ஓ, கப்பர்நகூமே, தூதர்கள் என்னும் பெயரால் அழைக்கப்படுகிற, லாஸ் ஏஞ்சலிஸ்!” என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா? அவள் சமுத்திரத்தின் அடிப்பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறாள். எப்பொழுது? அது எப்பொழுது போகிறது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது போய்க் கொண்டிருக்கிறது. வாலிப ஜனங்களே நீங்கள், என்னுடைய நாளில் நான் அதை காணவில்லையென்றால், நீங்கள் கவனியுங்கள். அவள் போய்விட்டாள்! எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்கள்… இப்பொழுது இங்கே அதிர்ச்சியளிக்கிறது, இங்கே அதிர்ச்சியளிக்கும் பகுதி உள்ளது. இதைக் கவனியுங்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். துர்புத்தியுள்ள மனுஷர்கள்; உண்மையாகவே, பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். “விசுவாசத்தைக் குறித்து.” “அவன் பிதாக்களுடைய விசுவாசத்தை, இல்லை பிள்ளைகளை, பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்.”
89163 “விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.” ஊ! பரீட்சைக்கு நில்லாதவர்கள் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு ஸ்கோபீல்டு வேதாகமத்தை வைத்திருந்தால், அங்கே ஒரு எச் என்ற குறிப்பு உள்ளது. சரியாக அங்கே, “விசுவாசத் துரோகம்” என்று கூறுகிறது. ஒரு விசுவாச துரோகம், அதுதான் அது.
90164 இப்பொழுது, ஒரு நிமிடம். நான் இங்கே ஒன்றைப் பார்க்க விரும்புகிறேன். நான் இதை சரியாக எழுதினேன் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை, ஆனால் நான் அதைக் கூற விரும்புகிறேன், நான்—நான் அதைக் கூறுவதற்கு முன்பு அதை ஆராய்ந்து பார்க்கிறேன். இப்பொழுது, ஒரு நிமிடம். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] “சத்தியத்தைக் குறித்தும், விசுவாசத்தைக் குறித்தும் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.” “விசுவாசம்,” ஒரே ஒரு விசுவாசம் மாத்திரமே உண்டு. அது உண்மை. “விசுவாசத்தைக் குறித்து, பரீட்சைக்கு நில்லாதவர்கள்!” இப்பொழுது நான் லூக்கா 18-ம் அதிகாரத்தை வாசிக்க விரும்புகிறேன். அப்படியே ஒரு நிமிடம். நீங்கள்…நீங்கள் அதை கீழே குறித்துக்கொள்ளலாம்; நீங்கள் படிக்க வேண்டியதில்லை. சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான், அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள், அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
91165 இப்பொழுது அதுதான் கேள்வி. வெளிப்படுத்தின விசேஷம் 10-ல்: இங்கேதான் நான் வலியுறுத்த விரும்பினேன். (நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில், மற்றொரு வேதவாக்கியத்தைப், பார்ப்போம்.), அவர், “ஏழாம் தூதனின் செய்தியின் நாட்களில் தேவரகசியம் நிறைவேற வேண்டும் ” என்றார். இங்கே கேள்வி என்னவென்றால், இந்த மணி நேரத்தில் நீங்கள் அந்தப் பொருளில் பின்பற்றினால், அது நிறைவடைந்துவிடுமா? “நான் விசுவாசத்தைக் கண்டடைவேனா?” இந்த நேரத்தில் மல்கியா 4 நிறைவேற்றப்படுமா, “பிள்ளைகளுடைய விசுவாசத்தை, பிதாக்களின் விசுவாசத்திற்கு, மூல வார்த்தைக்கு திரும்பக் கொண்டு வருதலா”? பார்த்தீர்களா?
92166 “பரீட்சைக்கு நிற்காதவர்கள், யந்நேயும் யம்பிரேயும், அவர்கள் எதிர்த்து நின்றதுபோலவே.” இப்பொழுது, இரண்டாம் தீமோத்தேயு 3:8-ஐயும், கூட, கவனியுங்கள். “யந்நே-…மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, கடைசி நாட்களில் இந்தப் பரீட்சைக்கு நிற்காதவர்கள் வருவார்கள்,” இப்பொழுது இங்கே சொல்கிறதைப் புரிந்துகொள்ளுங்கள், “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து,” அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். இப்பொழுது நாம் மட்டும்…நீங்கள் திரும்பி சென்று—வீட்டிற்கு வந்ததும் படிக்கவும், என்னால் முடிந்தால் இந்தக் காலையில், இதை முடிக்க முடியும். “பரீட்சக்கு நிற்காதவர்களைக் குறித்த…” ஜீவியத்தில் பரீட்சக்கு நிற்காதவர்கள் அல்ல; அவர்கள் அருமையான, பண்பட்ட மனிதர்கள்.
93167 இப்பொழுது கவனியுங்கள், மோசே கர்த்தர் உரைக்கிறதாவது என்ற ஒரு செய்தியோடு எகிப்துக்குச் சென்றபோது, அவன் ரூபகாரப்படுத்தப்பட்டான். இஸ்ரவேலரை அழைத்தது, அது ஒரு ஜனமாயிருந்தது, ஒரு சபை அல்ல. இஸ்ரவேல் ஒரு ஜனமாயிருந்தனர்; அவர்கள் ஒருபோதும் ஒரு சபையாயிருக்கவில்லை. ஏனெனில் சபை என்ற வார்த்தை “அழைக்கப்பட்டவர்கள்” என்று பொருள்படுகிறது. அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருந்தனர். அதன்பின்னர் அவர்கள் வார்த்தையின் கீழ் அபிஷேகிக்கப்பட்டு, வெளியே அழைக்கப்பட்டபோது, அவர்கள் தேவனுடைய சபையாகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காததினாலும், கள்ளத் தீர்க்கதரிசிக்கு செவி கொடுத்ததினாலும், அதன்பின்னரே பின்மாற்றமடைந்தனர். அது உள்ளே பதியும் என்று நான் நம்புகிறேன். 168 இஸ்ரவேல், தேவனுடைய ஜனமாயிருந்து, தேவனுடைய கரத்தின் கீழ் வெளியே வந்து, வார்த்தையினால் அபிஷேகிக்கப்பட்டு…தேவனுடைய வல்லமையினால், தேவனுடைய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்டனர். அதன்பின்னர் தேவன் அவர்களோடு அசைவாடிக்கொண்டிருந்தபோது, ஒரு கள்ளத் தீர்க்கதரிசி உள்ளே வந்து, அபிஷேகிக்கப்பட்டு, அவர்கள் கேட்டிருந்த தேவனுடைய மூல வார்த்தைக்கு முரணான ஒன்றை போதித்து, மூன்று பேர்களைத் தவிர மற்ற ஒவ்வொருவரும் வனாந்திரத்தில் அழிந்து போனார்கள். இப்பொழுது அதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
94169 “நோவாவின் காலத்தில் எட்டுபேர் ஜலத்தினாலே காக்கப்பட்டனர். மனுஷகுமாரனுடைய வருகையிலும் அப்படியே இருக்கும்.” “லோத்தின் நாட்களில், சோதோமிலிருந்து மூன்று பேர் வந்ததுபோல, மனுஷகுமாரன் வெளிப்படும் காலத்தில் நடக்கும்.” நான் வேத வாக்கியத்தை மாத்திரமே மேற்கோள் காட்டுகிறேன், கர்த்தருடைய வார்த்தை, “வானமும் பூமியும் ஒழிந்துபோம்…” அது சிறுபான்மையாயிருக்கும்!
95170 இங்கே கவனியுங்கள். மோசே ஆரோனிடம் செல்கிறான். மோசே தேவனாயிருந்தான். தேவன் அவனை தேவனாயிருக்கும்படிக் கூறினார், “நீ தேவனாயிருக்கிறாய், உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருக்கட்டும். உன்னால் நன்றாகப் பேச முடியாமற்போனால், நீ அந்த வார்த்தைகளை அவனுடைய வாயில் போடு” என்றார். “ஆனால் மனிதனை ஊமையாக்கியது யார்? பேசும்படி மனிதனை உண்டாக்கியது யார்?” கர்த்தர் செய்தார். 171 அவன் அங்கு நடந்து சென்றான். அவன் என்ன செய்தான்? தேவன் அவனிடம் செய்யக் கூறியிருந்த ஒரு உண்மையான, நீதியான அற்புதத்தையும் அவன் நிகழ்த்தினான். தேவன் அவனிடம், “போய் உன்னுடைய கோலைப் போடு” என்று கூறினார். அதை எடுத்தபோது, அது ஒரு சர்ப்பமாயிருந்தது. அவன் அதை எடுத்து, மீண்டும் ஒரு கோலாக மாற்றினான். “நீ பார்வோனுக்கு முன்பாக போய், ‘ கர்த்தர் உரைக்கிறதாவது ’ என்று சொல்” என்றார். 172 பார்வோன் இதைக் கண்டபோது, நாம், “ஏன், என்ன ஒரு அற்பமான மந்திரவாதியின் தந்திரம்” என்று கூறுவதுபோலவே. “அதற்கு ஒன்றுமில்லை. அது மனோத்தத்துவம் அல்லது ஏதோ ஒன்று என்பதை, நீங்கள் அறிவீர்கள். எங்களுடைய ஸ்தாபனத்தில் உள்ளவர்களும் அதே காரியத்தை செய்ய முடியும். ‘பேராயர் இன்னார்-இன்னார், இங்கே வாருங்கள். மேலும், நீங்கள், நீங்கள் இங்கே வெளியே வாருங்கள்.’ அதே காரியத்தை செய்ய முடிந்த அவர்களையும் நாங்கள் வைத்துள்ளோம்” என்றான். அது பார்வோனின் மூலமாக சாத்தான் பேசினதாயிருந்தது. அது மோசேயினூடாக தேவன் பேசிக்கொண்டிருந்ததாயிருந்தது.
96173 ஆனால் இந்த நபர் வெளியே வருவதைக் கவனியுங்கள். யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு முன்பாக நடந்து சென்று, ஜனங்களுக்கு முன்பாக மோசே செய்ய முடிந்த ஒவ்வொரு அற்புதத்தையும் நிகழ்த்தினார். “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவர்கள் வஞ்சிப்பார்கள்.” அது சரியா? மோசே செய்த அதேக் காரியத்தைச் செய்தான். உங்களுக்கு அது புரிகிறதா? இப்பொழுது இது வேதம் உரைக்கிறதாவது என்பதை நினைவில் கொள்ளுங்கள், அது கடைசி நாட்களில் மீண்டும் நிகழும். மோசேக்கும் யம்பிரேவுக்கும் இடையே இருந்த வித்தியாசம் என்ன? மோசே, “தண்ணீரில் இரத்தம் வரக்கடவது” என்றான். இந்த கள்ளத் தீர்க்கதரிசிகள், “நிச்சயமாகவே, நாங்கள் தண்ணீரில் இரத்தத்தையும் கூட, ஊற்றுகிறோம்” என்றனர். அது சம்பவித்தது. எனவே மோசே, “வண்டுகள் வரக்கடவது” என்றான். அவன் எதைப் பெற்றுக் கொண்டிருந்தான்? தேவனிடத்திலிருந்து நேராக. பார்த்தீர்களா? அவன் என்ன செய்தான்? அதற்கு அவன், “சரி, நிச்சயமாக, நாமும் கூட, வண்டுகளைக் கொண்டு வரலாம்” என்றான். அவர்கள் அதைச் செய்தனர். மோசே செய்ய முடிந்த எந்த அற்புதத்தையும் அவர்களால் செய்ய முடிந்ததே! 174 நினைவிருக்கட்டும், அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள், சிறிது நேரம் கழித்து, நாம் அதற்கு வருவோம். மற்றவர்களால் செய்ய முடிந்த எந்தக் காரியத்தையும் அவர்களால் செய்ய முடியும், ஆனால் அவர்களால் வார்த்தையோடு தரித்திருக்க முடியாது. அவர்களால் வார்த்தையோடு தரித்திருக்க முடியாது.
97175 இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் அதைச் செய்தனர். ஆனால் மோசே, தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட உண்மையான தீர்க்கதரிசி, தேவனால் கட்டளையிடப்பட்டு, அவன் அவர்களோடு ஒருபோதும் சண்டையிடவேயில்லை, “இங்கே, நீங்கள் அதைச் செய்ய முடியாது! உங்களால் முடியாது!” அவன் அவர்களைத் தனியே விட்டுவிட்டான், அவர்களை அப்படியே விட்டுவிட்டான். அவர்கள் ஸ்தாபன தீர்க்கதரிசிகள், ஆனால் முன்னோக்கி செல்கின்றனர். 176 மோசே தேவனுக்கு செவி கொடுத்தான். தேவன், “இப்பொழுது நீ இதைச் செய்” என்று கூறினார், மோசே சென்று அதைச் செய்தான். அவர் ஒரு புதிய காரியத்தைச் செய்தார். அவர்கள் அதைச் செய்தபோது, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு உணர்ச்சிவசப்படுதலை அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றை உடையவர்களாயிருந்தனர், இதோ அவர்கள் வருகிறார்கள். மோசே செய்தது போலவே, அவர்களும் கூட, அதைச் செய்தனர்.
98177 இப்பொழுது கவனியுங்கள். இந்த நபர்கள் தோன்றினர்…ஓ, ஜனங்களே நீங்கள், நீங்கள் இதைத் தவறவிடாதீர்கள்! இந்த போலியானவர்கள், போலியானவர்கள், உண்மையான ஒன்று முதலில் சென்ற பிறகு தோன்றினர். பார்த்தீர்களா? அவர்கள் பாவனை செய்ய வருகிறார்கள். பாருங்கள், அவர்கள் அப்படி செய்ய வேண்டும். பிசாசினால் எதையும் சிருஷ்டிக்க முடியாது; அவன் மூல பாகத்தையே தாறுமாறாக்கிக் கொண்டிருக்கிறான். பாவம் என்றால் என்ன? நீதி தாறுமாறாக்கப்படுகிறது. விபச்சாரம் என்றால் என்ன? சரியான செயல் தாறுமாறாக்கப்பட்டது. ஒரு பொய் என்றால் என்ன? உண்மை தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு தாறுமாறாக்குதல்! 178 அனனியாவைப் பாருங்கள், மூல வார்த்தையின் தாறுமாறாக்குதல். பிலேயாமைப் பாருங்கள், மூல வார்த்தையின் தாறுமாறாக்குதல். சிதேக்கியாவைப் பாருங்கள், மூல வார்த்தையின் தாறுமாறாக்குதல். இந்த நபர்கள் வெளியே வருவார்கள் என்று வேதம் கூறியுள்ளது, தாறுமாறாக்கப்பட்ட பிறகு…அல்லது ரூபகாரப்படுத்தப்பட்டு, சத்தியம் என்று நிரூபிக்கப்பட்ட மூல வார்த்தையை தாறுமாறாக்க வேண்டும்.
99179 அந்த மூலைக் கல்லில் எழுதப்பட்டதோ, “சுவிசேஷகனுடைய வேலையைச் செய்,” “உன்னுடைய ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தை பொறுக்க மனதில்லாத காலம் வரும், தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை திரளாகச் சேர்த்துக்கொண்டு, செவித்தினவுள்ளவர்களாகி, அதன்பின்னர் அவர்கள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்து, ‘பரவாயில்லை, நாம் அதே அடையாளங்களையும், அற்புதங்களையும் பெற்றுள்ளோம்.’ சத்தியத்தை விட்டு விலகி, கட்டுக்கதைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் கொண்டு வரப்படுவார்கள்.”
100180 ஓ, பரிசுத்த ஆவியின் உணர்வு, அது நமக்கு முன்பாக எவ்வளவு உண்மையாகவும் தெளிவாகவும் இருக்கிறது என்பதை ஒரு மனிதன் சிந்திக்கும்போது அவனுடைய ஆத்துமாவில் மலைக்கச் செய்கிறதே! இங்கே அந்த மூலைக்கல்லை தோண்டியெடுத்து, முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அங்கே போடப்பட்டிருந்த ஒரு துண்டு காகிதத்தை வாசித்துப் பாருங்கள். அந்தக் காலையில் இந்த மூலைக்கல் நாட்டப்பட்டபோது, ஏழாவது தெருவில் அவர் என்ன கூறினார் என்பதைப் பாருங்கள். இப்பொழுது அதைக் கவனியுங்கள். இங்கே ஆற்றில் கவனியுங்கள், கர்த்தருடைய தூதன் ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் இறங்கி வந்து, நூற்றுக்கனக்கான சபைகள், இல்லை சபையின் ஜனங்கள், கரையில் சுற்றி நின்று கொண்டிருந்தனர்; அவர் என்ன கூறினார், அது நிறைவேறுகிறதா என்று பாருங்கள். என்ன சம்பவித்துள்ளது என்று பாருங்கள். 181 அது மிகவும் கடினமானது. சகோதரரே, அது அங்கே, கடினமாகத் தென்படுகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் அது…வேதம் கூறியுள்ளது, இயேசு தாமே, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்று கூறினார். அதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் அதை ஒருபோதும் காணவே முடியாது. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் அதனால் வஞ்சிக்கப்படுவார்கள்.
101182 கவனியுங்கள், இந்த நபர்கள் தேவனுடைய உண்மையான அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் அனுப்பப்பட்ட பிறகு தோன்றினர்; அவருடைய உண்மையான தீர்க்கதரிசியாகிய, மோசேயின் மூலமாக. மோசே எந்தக் காரியத்தையாவது செய்யும்போது, அவர்கள் அதைப் பாவனை செய்வார்கள்.
102183 இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, நான்…இது என்னுடைய சொந்த சபை. நான் விரும்புவதை, தேவனுடைய வார்த்தையிலிருந்து பிரசங்கிக்க எனக்கு உரிமை உண்டு. ஜனங்களாகிய உங்களை நான் கடிந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தையும், அந்த நேரத்தையும் நாம் ஆராய்ந்து பார்ப்போமாக. 184 சகோதரன் ரடல் அவர்களுக்கும், ஜூனியர் ஜாக்ஸன் அவர்களுக்கும், மற்றும் இங்கே வெளியேயுள்ள நமது சகோதர சபைகளுக்கும் வாழ்த்துகள். சற்று முன்னர், நான் அவைகளை மறந்துவிட்டேன். சபையில் இடமில்லாத காரணத்தால், அவர்கள் இந்தக் காலையிலும் கூட தொலைபேசி இணைப்பில் உள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.
103185 இப்பொழுது ஒரு நிமிடம், அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். மோசே செய்த அதே அற்புதங்களை அவர்களும் செய்தனர். மோசே வண்டுகளைக் கொண்டு வந்தான்; அவர்கள் அதை ஆள்மாறாட்டம் செய்து வண்டுகளைக் கொண்டு வந்தனர். பார்த்தீர்களா? தேவன், “நீ புசிக்கும் நாளிலே சாவாய்” என்றார். 186 சாத்தான் சுற்றி வந்து, “நிச்சயமாக, நீங்கள் மரிக்கமாட்டீர்கள். நீங்கள் அதிக ஞானமுள்ளவர்களாயிருப்பீர்கள். நீங்கள் ஒரு மேலான ஸ்தாபனத்தை உடையவர்களாயிருப்பீர்கள், ஒரு மேலான…” என்றான். உங்களுக்குத் தெரியும். “உனக்குத் தெரியும், எல்லாமே உனக்கு நன்மையாயிருக்கும், அதிக வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்.” பாருங்கள், ஒரு தாறுமாறாக்குதல். வேண்டிய… 187 நினைவிருக்கட்டும், கர்த்தர் உரைக்கிறதாவது, இரண்டாம் தீமோத்தேயு 3:18-ன்படி, “கடைசி நாட்களில், அதாவது இந்த யந்நேயும், யம்பிரேயும் பூமியில் இருப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது, அவர்களில் இருவர் இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பாருங்கள், ஆள்மாறாட்டக்காரர்கள். 188 இப்பொழுது நாம் சோதோமுக்கு திரும்பிச் செல்லப் போகிறோம், சிறிது நேரம் கழித்து, அந்த மூன்று தூதர்கள், இறங்கி வந்த அந்த மூன்று தூதர்களையும், ஆள்மாறாட்டத்தையும், எது சரி, எது தவறு என்பதைப் பார்க்கிறோம். பார்த்தீர்களா? பார்த்தீர்களா?
104189 கவனியுங்கள், அவர்கள் அதே அற்புதங்களை செய்தனர். ஆனால், கவனியுங்கள், தேவன் அனுப்பின உண்மையான வார்த்தையின் மூலம் அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மையான வார்த்தைக்குப் பிறகு அவர்கள் ஆள்மாறாட்டம் செய்தனர்; இரண்டாவதாக, பின்தொடர்ந்தனர். 190 நம்மால் ஒரு நிமிடம் சிந்திக்க முடியுமா என்று நான் நினைக்கிறேன். அண்மையில், சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், ஜனங்களை கரத்தில் பிடித்து, ஒரு அடையாளம் காட்டப்பட்டது. மகனே, எல்லா காரியங்களிலும் அதிகமான அடையாளங்கள் இருந்தன, ஒவ்வொருவரும்… ஒருவன் அதை தன்னுடைய வலது கரத்தில் வைத்திருக்கிறான்; ஒருவன் அதை தன்னுடைய இடது கரத்தில் வைத்திருக்கிறான்; மற்றொன்று அதை முகருகிறது. பாருங்கள், எல்லாவிதமான… நான் ஆச்சரியப்படுகிறேன்…உண்மையாகவே உண்மை என்னவென்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு கூற தேவன் அனுமதிக்கமாட்டார், ஆனால் ஒரு நாள் நீங்கள் அதைக் கண்டறியப் போகிறீர்கள். அது அவர்களுடைய மதியீனத்தை வெளிப்படுத்துவதாகும். அது தொடக்கத்தில், சரியாக இருக்கவில்லை. கர்த்தர் அனுமதித்தால், ஒரு நாள் நான் உங்களுக்கு கூறுவேன்.
105191 கவனியுங்கள், அவர்கள் அதே அற்புதங்களைச் செய்தனர், ஆனால் அவர்கள்… கவனியுங்கள், மூல வார்த்தை முதலில் புறப்பட்டுச் செல்லும் வரையில், அவர்கள் அதைச் செய்யவில்லை. அந்தவிதமாகத்தான் சாத்தான் ஏதேன் தோட்டத்தில் செய்தான். அந்தவிதமாகவே அவன் எல்லா நேரத்திலும் செய்து வந்தான். முதலில் தீர்க்கதரிசனம் உரைத்தது யார்? மோசே. முதலில் காட்சியில் வந்தது யார், மோசேயா அல்லது பிலேயாமா? மோசே. முதலில் காட்சியில் வந்தது யார், எரேமியாவா அல்லது அனனியாவா? நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? 192 கவனியுங்கள், அவர்கள் அதைப் பாவனை செய்தனர். மாம்சபிரகாரமான ஆள்மாறாட்டக்காரர்கள், உத்தமமானவர்கள், கடந்த வாரம் தாவீதைக் குறித்து பிரசங்கித்ததைப்போல, “தேவனுக்கு ஒரு சேவை செய்கிறார்கள்” என்று எண்ணினர், ஆனால் மாம்சபிரகாரமான ஆள்மாறாட்டம். நான் ஒரு நிமிடம் காத்திருக்கிறேன். இந்த இடங்களுக்கிடையே நீங்கள் சிந்திக்கும்படி நான் விரும்புகிறேன். நான் அதைக் கூறவில்லையென்றால், நிச்சயமாகவே பரிசுத்த ஆவியானவர் அதை, விசேஷமாக தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு வெளிப்படுத்துவார். பார்த்தீர்களா?
106193 பார்வோனுடைய ஸ்தாபனம், “அதேக் காரியத்தைச் செய்யக்கூடிய மனிதனை நாங்கள் உடையவர்களாயிருக்கிறோம்” என்று கூறுகிறது, அவர்கள் அதைச் செய்தனர். பார்த்தீர்களா? பார்வோன் ஏன் இதைச் செய்தான்? தேவன் ஏன் அதை அனுமதித்தார்? தேவன் ஏன் ஒரு உண்மையான, அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியை அங்கே பார்வோனுக்கு முன்பாக ஒரு அடையாளத்தை நிகழ்த்தும்படி அனுப்பினார், அதன்பின்னர் ஒரு ஸ்தாபன மாதிரி வர ஜனங்களுக்கு முன்பாக அதை பாவனை செய்ய அனுமதிக்க முடியுமா? போலியாக பாவனை செய்பவர் எழும்பி, உண்மையான தேவனுடைய ஆவி செய்த அதே காரியத்தை செய்ய அவர் ஏன் அனுமதித்தார்? பாருங்கள், வேதவாக்கியம் நிறைவேற்றப்பட வேண்டும்.
107194 கவனியுங்கள், அவர் பார்வோனின் இருதயத்தையும், எகிப்தியருடைய இருதயத்தையும் கடினப்படுத்தும்படியாகவும், மோசே ஒருவன் மாத்திரம் வார்த்தையை உடையவனாயிருக்கவில்லை என்பதை நிரூபிக்க முற்பட்டனர். மோசே செய்ய முடிந்ததைப் போலவே அவர்களும் எல்லாவற்றையும் செய்ய முடிந்தது. 195 கடைசி நாட்களில் இந்தக் காரியம் சம்பவிக்க தேவன் ஏன் அனுமதித்தார்? எனவே, பொய்யின் ஆவி சிதேக்கியாவிடம் கூறின அதேக் காரியம், “இந்தக் காரியங்களை நிறைவேற்ற, நாம் எப்படி ஆகாபை அங்கே கொண்டு செல்லப் போகிறோம்?” அவர்களுடைய சபைகளில் நம்பிக்கை வைத்துள்ள இந்த ஜனங்களை, அவர் முன்னுரைத்த இந்தக் காரியம் நிறைவேறும்படி இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டுமா? அவர்கள், இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில், “நீ, ‘ஐசுவரியவான், ஒரு குறைவுமில்லை. நான் ஒரு இராணியைப் போல் அமர்ந்திருக்கிறேன்’ என்று சொல்லுகிறாய். ஒன்றுமே வேண்டாம்! நீ பரிதபிக்கப்படத்தக்கவனும், நிர்பாக்கியமுள்ளவனும், குருடனாயும் இருக்கிறதை நீ அறியவில்லையா? அவர், ‘எண்ணெயையும், பொன்னையும்’ என்னிடத்தில் வந்து வாங்கிக்கொள்ளும்படி நான் ஆலோசனை கூறுகிறேன்” என்றார். அவர் ஏன் அதைச் செய்தார்? 196 அவர் ஏன் இந்த கடைசி நாட்களில் இந்த ஆள்மாறாட்டம் எழும்ப அனுமதித்தார், இந்தக் காரியங்கள் உண்மையான தேவனுடைய வார்த்தையினால் நிறைவேறும்போது, ஆள்மாறாட்டக்காரர்கள் வந்து அதேக் காரியத்தைச் செய்து, உண்மையான தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க அனுமதிக்கிறாரா? அவர் மோசேக்காக அதைச் செய்தார். பார்வோன் மோசேக்கு விரோதமாகச் செய்தான்; அந்த, யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு விரோதமாக அதைச் செய்தனர். கடைசி நாட்களில் அது மீண்டும் நிகழும் என்று வேதம் கூறியுள்ளது. இங்கே நாம் இருக்கிறோம். இப்பொழுது, அது வேதவாக்கியத்தை நிறைவேறவில்லையென்றால், அது எங்கே உள்ளது?
108197 மோசே அவர்களை நோக்கி வம்பு செய்து, “இங்கே! இங்கே! உங்களால் அதைச் செய்ய முடியாது. நான் மாத்திரமே அதைச் செய்யும்படி நியமிக்கப்பட்டுள்ளேன். இங்கே! நீங்கள் அதை இப்பொழுதே நிறுத்துங்கள்” என்று கூறினானா? அவன் அவர்களை அப்படியே விட்டுவிட்டான். 198 அவர்கள் தொடர்ந்து செய்யட்டும். நினைவிருக்கட்டும், வேதம், “அவர்களுடைய மதிகேடு வெளிப்பட்டபோது, கடைசி நாளில் இவை வெளிப்படும்,” மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்டு ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படும்போதே. கவனியுங்கள்.
109மோசே, உண்மையான வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை, ஒன்றுமே கூறவில்லை, அது போகவிட்டான். ஆனால் அவர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனை வஞ்சிக்கும்படிக்கு அவர் அதைச் செய்தார். 199 அவர் ஆகாபை வஞ்சிக்கும்படியாக அதேக் காரியத்தைச் செய்தார். அங்கே தனியாக நின்று கொண்டிருந்த ஒரு சிறு நபர், எளிய மிகாயா, “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தான். “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று அபிஷேகம் பண்ணப்பட்ட மற்றொருவர் இங்கே நின்றார். ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது.
110200 நாம் இன்றைக்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதோடு நிலைநின்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானம் கடைசி நாட்களில் கொடுக்கப்பட வேண்டும். மற்றொரு மனிதன் நின்றுகொண்டு, மேலும், ஒரு திரித்துவக்காரன், அற்புதங்களை நிகழ்த்துகிறான். 201 வேதத்தில் திரித்துவம் என்ற வார்த்தையை எனக்குக் காண்பியுங்கள். மூன்று தேவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள். அப்படிப்பட்ட காரியங்கள் எங்கே உள்ளன என்பதை எனக்குக் காண்பியுங்கள். அது தேவனுடைய வார்த்தையில் இல்லை. “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” அந்த பட்டங்களை உபயோகித்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டவர்கள் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. இந்த எல்லாக் காரியங்களையும், “ஓ, சகோதரிகளே, அது சரி. பரவாயில்லை, நீண்ட…உங்களுடைய தலைமுடி குட்டையாக இருக்கட்டும். அது சரி, நீங்கள் இதை, அதை அல்லது மற்றதைச் செய்ய வேண்டியதில்லை. ஓ, அது அர்த்தமற்றது, ஏதோ ஒரு பழைமைத்தனம்.” 202 ஆனால் வேதம் கூறியுள்ளதே! அவர், “கடைசி நாட்களில், அவர் எலியாவின் ஆவியை அனுப்புவதாக, தேவனுடைய பிள்ளைகளாகிய ஜனங்களை, ஆதியில் இருந்த வார்த்தையின் மூல விசுவாசத்திற்கு திரும்பவும் அழைப்பார்” என்று வாக்களித்தார். அந்த வார்த்தை சோதோமில் இருந்தது போலவே, கடைசி நாட்களில் மனுஷகுமாரனால் உறுதிப்படுத்தப்பட்டது; நேற்றும், இன்றும், என்றும். அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார். அது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.
111கவனியுங்கள், தேவன் அதைக் குறித்த பொறுமையை இழக்கும் வரையில், மோசே செய்தது போலவே, அவர்களும் அதேக் காரியத்தைச் செய்தனர். 203 அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை, இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அது இந்நாளில் நிறைவேறும். இப்பொழுது, உலகம் முழுவதும் ஆராய்ந்து பாருங்கள்; ஒவ்வொரு வழிபாட்டையும், ஒவ்வொரு கோத்திரத்தையும் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு சபையையும் எடுத்துக் கொள்ளுங்கள்! பிரசங்கிமார்களே நீங்கள், இதைச் செய்யும்படி கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ, செய்தித்தாள்களைப் படித்துப் பார்க்கவோ அல்லது சீரிய யோசனை செய்யவோ நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன், அது இப்பொழுது பூமியின் மேல் இருக்கிறதா என்று பாருங்கள். பார்த்தீர்களா? 204 அப்படியானால் மத்தேயு 24:24 சரியாக உள்ளது. “கள்ள, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் கடைசி நாட்களில் எழும்பி, கள்ளத்தீர்க்கதரிசிகளாயிருந்து, அநேகரை வஞ்சிப்பார்கள்.” இப்பொழுது அதற்கு முன்னடையாளங்களைக் கவனியுங்கள், அது இப்பொழுது வருகிறது, பாருங்கள், “அநேகரை வஞ்சிக்கும்.” “தீர்க்கதரிசிகள்,” பன்மை; “கிறிஸ்துக்கள்,” அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், பன்மை; மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே போன்ற பல்வேறுபட்டவர்களும் உள்ளனர். பார்த்தீர்களா? ஆனால் ஒரே ஒரு அசலான கிறிஸ்துவின் ஆவிதான் உண்டு. அவர் அதைச் செய்வதாக வாக்குத்தத்தம் செய்தபடியே மாம்சமான வார்த்தையாயிருக்கிறது. இப்பொழுது நாம் இன்னும் சில வேதவாக்கியங்களுக்கு, இன்னும் சற்று கூடுதலாகப் பார்ப்போம். தேவன் அதைக் குறித்த பொறுமையை இழந்தவுடன், அது முடிந்துவிட்டது. அவர்களுடைய மதிகேடு வெளிப்பட்டது.
112205 கவனியுங்கள். பதர் சரியாக கோதுமை மணியைப் போலவே காணப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? இப்பொழுது, லூத்தரன் காலத்தில், “கோதுமை தண்டாயிருந்தது” என்று நீங்கள் கூற முடியாது, அதே சமயத்தில் அது அதற்குள் ஜீவனைப் பெற்றிருந்தது. தண்டில் உள்ள ஜீவன் சரியாயிருந்தது, ஆனால், நினைவில் கொள்ளுங்கள், ஜீவன் முன்னேறியது; எலிசாவிடமிருந்து முன்னேறி எலியாவுக்கு வந்தான். ஜீவன் தொடர்ந்து முன்னேறிச் செல்கிறது. ஆனால், அது மற்றொரு கட்டத்தில் உள்ளது என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அது அந்த நிலையில் தொடர்ந்து இருக்க முடியாது. நாம் வேறொரு காலத்தில் அழுகினதைப் புசிக்க முடியாது. நாம் பெந்தேகோஸ்தேயினருடைய, மெத்தோடிஸ்டுகளுடைய அல்லது பாப்டிஸ்டுகளுடைய அழுகிப்போன ஒன்றை புசிக்க முடியாது. பாருங்கள், அது அழுகிப் போயுள்ளது. நமக்கு புதிய ஆகாரம், இந்த மணி நேரத்தின் வார்த்தை, உள்ளது.
113206 பதரானது சரியாக கோதுமை மணியைப் போன்றேயுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களால் முடியாது…அது கதிரைப் போன்று காணப்படவில்லை, அது பட்டுக்குஞ்சத்தில் அது காணப்படவில்லை, ஆனால் அது நிச்சயமாக பதரில் இருந்தது. லூத்தரின் காலத்தில் இயேசு கிறிஸ்து நேற்றைய தினத்தில் வெஸ்லியில் இருந்ததைப் போன்று காணப்படவில்லை… ஆனால் அது நிச்சயமாக பெந்தெகொஸ்தேயில் உள்ளது, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.” பார்த்தீர்களா? அங்கே உங்களுடைய காலங்கள் உள்ளன.
114207 ஆனால் நினைவிருக்கட்டும், அந்த பெந்தேகோஸ்தே சபை, கடைசி நாட்களில், லவோதிக்கேயா; கிறிஸ்து கோதுமை மணியாக, கோதுமையாக மாறினார். அவர் முயற்சித்தபோது…நினைவில் கொள்ளுங்கள், அவர் சபையில் தம்மை வெளிப்படுத்த முயன்றபோது, அவர் வெளியே எடுக்கப்பட்டார். அது இன்னமும் ஒரு சபையாகவே; அபிஷேகம் பண்ணப்பட்டதாக உரிமை கோரினது. 208 ஆனால் இங்கே வார்த்தை, கிறிஸ்துதாமே, அது அவருடைய சரீரத்தில் மீதமுள்ள மணவாட்டிக்காக வரும், அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாயுள்ளது. நாம் பேசினதுபோல, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், கோதுமைக்குத் தண்ணீர் பாய்ச்சுகிற அதே தண்ணீர், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் களைகளுக்கும் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்லது முன்குறிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அவர்களுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை கண்டறிய முடியும். இப்பொழுது, அது எப்படி இருந்தது என்பதைக் குறித்து, எபேசியர் 5:1 உங்களுக்கு அவ்வண்ணமாய்க் கூறுகிறது.
115209 அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். ஒவ்வொருவரும், “தேவனுக்கு மகிமை! நாம் இங்கே விடுதலையைப் பெற்றுள்ளோம். அல்லேலூயா! நாம்… ஓ, அல்லேலூயா! நாம் அந்நிய பாஷைகளில் பேசுகிறோம், குதிக்கிறோம். நாம் பெண்களின் சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம்; ஜனங்களாகிய நீங்கள் இந்தவிதமான எல்லாக் காரியங்களின் கீழும் அவர்களைக் கொண்டுவர முயற்சிக்கிறீர்கள்” என்கின்றனர். பார்த்தீர்களா? தொடர்ந்து செல்லுங்கள். உங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. “பாருங்கள், நாங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறோம். நாங்கள் சத்தமிடுகிறோம். நாங்கள் ஆவியில் நடனமாடுகிறோம். நாங்கள் வார்த்தையை பிரசங்கிக்கிறோம்” என்றனர். சரியாக. அதற்கு எதிராக ஒரு காரியத்தையும் கூறவில்லை. வேதாகமத்தில் உள்ள இந்த மனிதர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இயேசு, “அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்றார்.
116210 இப்பொழுது கவனியுங்கள், பதர்…அசலான தானியத்திலிருந்து, நிலத்திற்குள் சென்றது, அது எந்த ஸ்தாபனமுமல்ல. அது தானாகவே ஒரே தானியமாக இருந்தது. ஆனால் அது மேலே வந்தபோது, அது ஒரு தானியமல்ல; அது ஒரு ஸ்தாபனமாக இருந்தது, பாருங்கள், இலைகள், தானியம். அதன்பின்னர் அது மற்றொரு கட்டத்திற்குள் சென்றது, அது ஒரு பட்டுக்குஞ்சமாக இருந்தது. அப்பொழுதும் அது துவக்கத்தைப் போல் இருக்கவில்லை. அது ஒரு ஸ்தாபனமாக இருந்தது. 211 அது பதருக்குள்ளாக, அநேக இலைகளுக்குள்ளாகச் சென்று, பெந்தெகொஸ்தேயானது, இப்பொழுது கிட்டத்தட்ட உருவாகிவிட்டது. அதைப் பாருங்கள். அது எல்லா நேரத்திலும் கிட்டத்தட்ட அதேவிதமாகவே உருவாகிக் கொண்டிருக்கிறது, நீங்கள் அங்கே அந்த சிறு பதரைக் காணும்போது, அது ஒரு கோதுமை மணியைப் போன்று காணப்படுகிறது. 212 ஆனால் முடிவிலே அது வெளிப்படுகிறது, எந்த ஸ்தாபனமும் இல்லை. இனிமேல் அதை சுமப்பவைகளே கிடையாது. ஸ்தாபனம் என்பது ஒரு சுமந்து செல்லும் ஒன்றாகும். இனிமேல் அதை சுமப்பவை இல்லை; தண்டு மரிக்க வேண்டும், பதரும் மரிக்க வேண்டும், மற்ற யாவும் மரிக்க வேண்டும், ஆனால் கோதுமையோ உயிர் வாழ்கிறது. அதுதான் உயிர்த்தெழுதலின் சரீரம், நேராக வந்து அவைகளை எடுத்துக்கொள்கிறது. “முந்தினோர் பிந்தினோராயும் பிந்தினோர் முந்தினோராயுமிருப்பார்கள்.” பாருங்கள், உயிர்த்தெழுதலில் அவர்களைப் எடுத்துக்கொள்கிறார். நான் கூறுவதை தொடர்ந்து கவனித்து வருகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. கவனியுங்கள், தானியமானது…
117213 பதர் சரியாக தானியத்தைப் போலவே காணப்படுகிறது. ஒரு மனிதன் ஒரு கோதுமைப் பண்ணையை அல்லது மற்ற ஏதோ ஒன்றை பயிரிட்டுக்கொண்டிருப்பவன், அவன் நோக்கிப் பார்த்து, “தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் ஒரு கோதுமை பயிரைப் பெற்றுக்கொண்டேன்” என்று கூறுவான். அவனிடம் ஒரு மணியும் கோதுமை இல்லாமல் இருக்கும்போதும். ஊம்? அது கோதுமையைப் போலவே காணப்படுகிறது, ஆனால் அது பதர்.
118214 இப்பொழுது, நண்பர்களே, என்னோடு திரும்பி வாருங்கள். முதல் எழுப்புதல் எங்கே உண்டானது, கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சரீரத்தில் கோதுமை மணி நிலத்தில் விழ வேண்டியதாயிருந்த (மரணத்திற்குப் பிறகு)? கிறிஸ்து தம்முடைய மணவாட்டியை, அவருடைய சபையை ஸ்தாபனமாக்கினாரா, அது சரியா? அவர் அதை ஒருபோதும் ஸ்தாபனமாக்கவில்லை; சபையை சுத்தமாக காத்துக்கொள்ள, அவர் அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், இன்னும் பலரையும் சபையில் ஏற்படுத்தினார். ஆனால் ரோமாபுரியிலுள்ள நிசாயாவில், முந்நூற்று ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அதை ஸ்தாபித்து, அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். அது சரியா? அது மரித்துப் போய்விட்டது. அந்த சபையோடு இணங்காத யாவரும் கொல்லப்பட்டனர். அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, மண்ணுக்குள் அமைதலாயிருந்தது. 215 ஆனால், கொஞ்சங் கழித்து, அவள் லூத்தருக்குள்ளாக வந்தாள். முதலில் தானியத்தின் சிறு தளிர்கள் மேலே வருகின்றன. இரண்டாவதாக, அது அங்கிருந்து துளிர்விட்டது. அவர்கள் தொடர்ந்து, ஸ்விங்கிலி போன்றவர்களையும், மற்ற ஸ்தாபனங்கள் போன்றவைகளையும், உடையவர்களாயிருந்தனர். அதன்பின்னர், கொஞ்சங் கழித்து, அந்த ஆங்கிலிக்கன் வந்தான். 216 அதன்பின்னர் என்ன நடந்தது? இதோ வெஸ்லி ஒரு புதிய எழுப்புதலோடு வந்தார், பட்டுக் குஞ்சம், அது கோதுமையைப் போன்றே காணப்படுகிறது. அப்பொழுது அதற்கு என்ன நேர்ந்தது? அது ஸ்தாபனமாகி, உலர்ந்து மரித்துப்போனது. 217 ஜீவன் ஒரு பதருக்குள்ளாகச் சென்றது, கிட்டத்தட்ட கோதுமையைப் போன்று பதர் தோன்றினது. ஆனால், முடிவிலே, அதன் மதிகேடு கடந்த எட்டு அல்லது பத்து ஆண்டுகளில், குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிப்பட்டது. இப்பொழுது அது என்ன செய்கிறது? கோதுமையிலிருந்து விலகுகிறது.
119218 இப்பொழுது இந்த மகத்தான எழுப்புதலின் கடந்த இருபது ஆண்டுகளாக ஏன் ஒரு ஸ்தாபனம் உண்டாகவில்லை; அது அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள், அபிஷேகம் பண்ணப்பட்ட போதகர்கள், போன்றவர்கள், ஆனால் ஏன் அங்கு இல்லை? தானியத்திற்கு அப்பால் ஒன்றுமேயில்லை. பாருங்கள், அது ஒரு ஸ்தாபனமில்லாமல் திரும்பி வருகிறது. ஓ, என்னே, ஒரு குருடான மனிதனால் அதைக் காண முடிந்தது. அதனால் ஸ்தாபனம் உண்டாக்க முடியாது; அது அதற்கு மிகவும் உறுதியாக எதிராக உள்ளது. அது தாமே கோதுமை மணியாயுள்ளது. மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படுவார். கோதுமை மணியானது தானே மறுபடியும் திரும்ப வரும், கடைசி நாட்களில் மனுஷகுமாரன். 219 “கடைசி நாட்களில், அதன் பொய்யான ஆள்மாறாட்டங்கள் வரும். அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும்.” இப்பொழுது விலகிச் சென்று கொண்டிருக்கிற அவர்களுடைய ஸ்தாபன பதர்களைப் பாருங்கள்.
120220 கோதுமையின் பாகமாயிருக்கிற, தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மாத்திரமே அது தெரியப்படுத்துகிறது. இப்பொழுது இது எவ்வளவு அழகாக இங்கே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் மாத்திரம்…கவனியுங்கள்; உண்மையான தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், எபேசியர் 5:1, இல்லை, 1:5, சரியாகக் கூறினால், நியமனம் செய்யப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்கள் மாத்திரமே வஞ்சிக்கப்படமாட்டார்கள். 221 கவனியுங்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள் கள்ளத் தீர்க்கதரிசிகளாக இருப்பார்கள், அவர்கள் மத்தியில் உண்மையான அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் இருப்பார்கள். நீங்கள் அதை எப்படி கூறப்போகிறீர்கள்? வார்த்தையின் மூலம். நாம் அதை நிழலைப் போல, வைத்துள்ளோம். உங்களுக்கு அது புரிகிறதா? “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] புரிகிறதா?
121222 கவனியுங்கள், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை, வார்த்தை மாத்திரமே அவர்களை பிரிக்கும், அடையாளங்கள் அல்ல. ஓ, இல்லை. அவர்கள் அதே அடையாளங்களைச் செய்வார்கள், ஆனால் வார்த்தை அவர்களைப் பிரித்தது. நிச்சயமாக. அவர்கள் யாவரும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் யாவரும் இதை, அதை, மற்றதை, நிச்சயமாகவே, அதேவிதமாகவே செய்தனர். அவர்களும் அதே காரியத்தைச் செய்வார்கள் என்று இயேசு கூறினார். ஆனால் வார்த்தை அவர்களை பிரித்தது, கவனியுங்கள், அடையாளங்கள் அல்ல. 223 நீங்கள் கவனித்தீர்களா? இயேசு இங்கே, மத்தேயு 24-ல் கூறினார். அவர், “கடைசி நாட்களில் கள்ள இயேசுக்கள் எழும்புவார்கள்” என்று கூறவில்லை. ஓ, இல்லை, அவர்கள் அதற்காக ஒருபோதும் நிலைத்து நிற்கமாட்டார்கள். இல்லை. நீங்கள் ஒரு உண்மையான பெந்தெகொஸ்தேக்காரனை உடையவராயிருந்து அந்த பெந்தகோஸ்தேகாரன், தன்னை, அவனையே, “இயேசு” என்று கூறுவதை பார்த்திருக்கிறீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் ஒரு கள்ள மெதோடிஸ்டு அல்லது ஒரு பாப்டிஸ்டு அல்லது அதைப் போன்ற ஒருவரை அல்லது ஸ்தாபனங்களில் ஒன்றை, “நாம் இயேசு” என்று கூறுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அதைக் காட்டிலும் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. ஆனால் வேதமோ அவர்கள் “கள்ளக் கிறிஸ்துக்களாக” இருப்பார்கள் என்று கூறியுள்ளது, ஆனால் இயேசுக்களாக அல்ல, ஆனால், “கள்ளக் கிறிஸ்துகளாக” இருப்பார்கள். அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாமல், “நான் இயேசு” என்று கூறமாட்டார்கள். ஓ, இல்லை.
122224 ஆனால் அவர்கள் “கள்ளக்கிறிஸ்துக்கள்” என்பதை அறியாமலிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் வார்த்தைக்கு முரணாயிருக்கிறார்கள். தேவனும் அதையே ரூபகாரப்படுத்துகிறார். இப்பொழுது, நான் இதை இப்பொழுது ஒரு பலப்பரீட்சைக்கு கொண்டு வருகிறேன், ஏனென்றால் உண்மையாகவே செய்யப்பட்டிருந்த அதேக் காரியத்தை இந்த ஜனங்கள் செய்ததை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இயேசுவும் அவ்வண்ணமாய்க் கூறினார். 225 இப்பொழுது, நான் கூறினதுபோல, இப்பொழுது அங்குள்ள ஜனங்களாகிய உங்களிடம், அங்கே தொலைபேசி இணனப்பில் பேசுகையில், நான்—நான் உங்களைக் கண்டனம் செய்யவில்லை, ஆனால் இது என்னுடைய சபையாயும் மற்றும்—மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்னை அமர்த்தியுள்ள என்னுடைய குழுவாயும் உள்ளது, நான் அவர்களிடம் சத்தியத்தை கூற வேண்டும். நேரம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
123226 இப்பொழுது, அவர்கள் அதற்காக நிற்க விரும்பவில்லை, ஆனால், “கள்ளக்கிறிஸ்துக்கள்,” கள்ள, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும், “அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசிக்கிறார்களா?” முற்றிலுமாக. “ இவை எல்லாவற்றையும் விசுவாசிக்கிறீர்களா?” ஆம். “அந்நிய பாஷைகளில் பேசுவதை விசுவாசிக்கிறீர்களா?” ஆம். “அற்புதங்களும் அடையாளங்களும் பின் தொடரும் என்றும், அடையாளங்கள் அவைகளைத் தொடரும் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” ஆம். அவர்கள் மெத்தோடிஸ்டுகள் அல்ல, அவர்கள் பாப்டிஸ்டுகள் அல்ல. இல்லை, இல்லை. அதுதான் பெந்தேகோஸ்தேக்கள். பாருங்கள், இதுவே கடைசி நாள். 227 இப்பொழுது, முதலாம் சபையின் காலம் அதை ஒருபோதும் கவனித்திருக்காது. மெதோடிஸ்டு சபைக்காலம் அதை ஒருபோதும் கவனிக்கவில்லை. பாப்டிஸ்டு சபைக்காலம், அவர்கள் அதை ஒருபோதும் கவனிக்கவில்லை; பிரஸ்பிடேரியன் சபைக் காலத்தில், அவர்கள் அதை ஒருபோதும் கவனிக்கவில்லை. ஆனால், பெந்தேகோஸ்தே, உண்மையான காரியத்தைப் போன்றே மிகவும் நெருக்கமாக இருக்கிறதே! அங்குதான், கோதுமை…பதரானது கிட்டத்தட்ட கோதுமையைப் போன்றே உள்ளது. அவர்கள் அதை ஒருபோதும் கவனிக்கமாட்டார்கள். பார்த்தீர்களா? அவர்கள் செய்யமாட்டார்கள். ஆனால் இதுவோ கடைசி நாட்களாய், இந்த நாள். ஆமாம், ஐயா.
124228 கவனியுங்கள், அது துவக்கத்தில் இருந்தது போலவே, அது முடிவிலும் இருக்கும். ஏவாள் ஒரு வார்த்தையை தவறாக வியாக்கியானம் செய்தாள், சாத்தான் ஏவாளுக்கு செய்தான், அவள் அதை விசுவாசித்தாள். அவள், அவன் அல்ல; சபையே, அவர் அல்ல. பார்த்தீர்களா? சபைதான் போலியான வார்த்தையைப் பெற்றுள்ளது. பார்த்தீர்களா? ஆதாம் அல்ல; ஏவாள். கிறிஸ்துவை அல்ல; சபை, மணவாட்டி, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக, இருக்க வேண்டியவர்கள், தன்னை மணவாட்டி என்று அழைத்துக் கொள்கிறாள், பாருங்கள், அவள் தவறான வார்த்தையைப் பெற்றுள்ளாள். 229 உங்களால் அதைக் காணமுடியவில்லையா? ஏன், அது ஒரு காலணிக் கயிற்றைப்போல, உங்களுடைய கண்ணின் மேலுள்ள இமைகளைப்போல, சரியான பொருத்தமாக ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது. ஏன், நீங்கள் வேதாகமத்திற்குத் திரும்புகிற ஒவ்வொரு காரியத்தையும், அது சரியாக ஒன்று சேர்த்து பிணைக்கிறது. ஏவாள், ஆதாம் அல்ல; ஏவாள் அதை விசுவாசித்தாள், ஆதாம் விசுவாசிக்கவில்லை. இன்றைக்கு மணவாட்டி என்று அழைக்கப்படுகிறவள் அதை விசுவாசித்தாள்; கிறிஸ்து அல்ல. மணவாட்டி எல்லாவிதமான, மணவாட்டி என்று அழைக்கப்படுகிறாள்; அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதேவிதமான எல்லாமே; ஆனால் உண்மையான ஒருவர் அல்ல. “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும்.” 230 இப்பொழுது துரிதமாக, நம்மால் பதினைந்து நிமிடங்களில் இதை முடித்துவிட முடிந்தால், நாம் சரியான நேரத்தில் முடித்துவிடுவோம். இப்பொழுது உண்மையாகவே கூர்ந்து கவனியுங்கள், எனவே நீங்கள்—நீங்கள், தவறாக புரிந்துகொள்ளமாட்டீர்கள்.
125231 இப்பொழுது, இல்லை, அவர்கள் “கள்ள இயேசு” என்று அழைக்கப்பட விரும்பமாட்டார்கள். அவர்கள் “இயேசு” என்று அழைக்கப்பட, விரும்பமாட்டார்கள். நிச்சயமாக இல்லை. அது மிகவும் தெளிவானது. எவருமே அதை அறிவார்கள். அவர்கள் இயேசு அல்ல என்பதை எவரும் அறிந்துகொள்வார்கள். அவர்கள் தங்களுடைய முதுகில் எண்ணெய் வழிந்திருந்தாலும், அவர்களுடைய கரங்களில் இரத்தம் வழிந்தாலும், அவர்களுடைய கண்களில் மேலும் கீழும் காணப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை, அவர்கள் இன்னமும் அதை அறிவார்கள்… நல்ல அறிவு படைத்த எவரும், அது இயேசு அல்ல என்பதை அறிந்திருப்பார்கள். பார்த்தீர்களா? அவர்கள் அதற்காக நிற்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் தங்களை “அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்” என்று அழைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அடையாளங்களையும், அற்புதங்களையும், “தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும்படிக்கு ஏறக்குறைய செய்கிறார்கள்.” “ஆனால் கள்ளக் கிறிஸ்துக்கள், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிப்பார்கள்.”
126இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இந்த அறிக்கையை தவறவிடாதீர்கள், ஏனென்றால் அது செவிகொடுக்க தகுதியாயுள்ளது. அவர் இங்கே இந்த ஒலிப்பெருக்கியில் சில நாடாக்களை ஒட்டவைத்து, அது மேலே பறப்பதைத் தடுக்கிறார். எனக்கு வியர்த்துக் கொண்டிருந்தது; அந்த சத்தம் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டது, உங்களுக்குத் தெரியும். எனவே அது அவ்வாறே இருக்கும் என்று வேதம் கூறியுள்ளது போன்று அது இருக்கும். பார்த்தீர்களா?
127232 கவனியுங்கள், கள்ள இயேசுக்கள் அல்ல. “கள்ளக் கிறிஸ்துக்கள்!” அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர், ஆனால் அவர்கள் இயேசு அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். பாருங்கள், அது மிகவும் தெளிவானது. மனிதன் மேலே சென்று, இன்றைக்கு, “என் கையில் உள்ள தழும்புகளைப் பாருங்கள். என் புருவத்தைப் பாருங்கள். நானே இயேசு” என்றால். சரி, இப்பொழுது, அது தவறு என்பதை நாம் அறிவோம். அவர்கள் தோன்றுவார்கள் என்று இயேசு ஒருபோதும் கூறவில்லை என்பதை, நினைவில் கொள்ளுங்கள். “கள்ளக்கிறிஸ்துக்கள்” தோன்றுவார்கள் என்று அவர் கூறினார். “கிறிஸ்துக்கள்,” பன்மை, ஸ்தாபனங்கள், போன்றவை, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்; வார்த்தையினால் அல்ல, ஒரு ஸ்தாபன ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டவர்கள். நீங்கள் அதை கவனித்து வருகிறீர்களா? கள்ள இயேசு அல்ல. “கள்ளக்கிறிஸ்துக்கள்,” கள்ள, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பார்த்தீர்களா? ஓ, எவ்வளவு தெளிவாக உள்ளது! நாம் எப்படி…நிச்சயமாக நீங்கள் அதை தவறவிடமாட்டீர்கள்!
128233 இப்பொழுது, நினைவிருக்கட்டும், மூன்று வகை ஜனங்கள் உண்டு என்று நான் எப்பொழுதும் உங்களிடம் கூறியிருக்கிறேன். மூன்று இன மக்கள் உள்ளனர்: காம், சேம், யாப்பேத், மூன்று இனங்கள். மூன்று வகுப்பினர், விசுவாசி, பாவனை விசுவாசி, அவிசுவாசி என்று நான் கூறினேன். அது எப்பொழுதும் இருந்து வந்துள்ளது, எப்பொழுதும் அவ்வாறே இருக்கும். பார்த்தீர்களா? அங்கே மோசே, விசுவாசி; யந்நேயும் யம்பிரேயும் இருந்தனர்; அவிசுவாசிகள். பார்த்தீர்களா? பிலேயாம் இருந்தான்; மோசே…எப்பொழுதும் மூன்று வகுப்பினர், மூன்று வகுப்பினர்; விசுவாசி, பாவனை விசுவாசி, அவிசுவாசி. 234 இப்பொழுது நினைவிருக்கட்டும், அவிசுவாசி, ஸ்தாபன சபை, எந்த அடையாளங்களையும் விசுவாசிக்க வேண்டாம்; குளிர்ந்த, சடங்காச்சாரமான, விரைப்பான, உலகத்திலுள்ள சபை, ஸ்தாபனம். ஆனால் பாவனை விசுவாசியோ அந்தப் பதராகும். அந்த நபர் தான் விசுவாசிக்க வைக்கிறார். அப்பொழுது உண்மையாகவே உண்மையுள்ள ஒரு உண்மையான விசுவாசி உண்டு. இப்பொழுது, அவர்கள் தொடர்ந்து செல்வதை ஒரு நிமிடம் கவனியுங்கள்.
129235 இந்த அவிசுவாசிகள் அல்லது இந்த பாவனை விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகள், எவ்வளவு தைரியமுள்ளவர்கள் என்பதைக் கவனியுங்கள். என்னே! அவர்கள் தைரியமானவர்கள், பாருங்கள், உண்மையான வார்த்தையின் முன்னிலையில் சாத்தான் எழுந்து நின்று கூறியதைப்போலவே, “எழுதியிருக்கிறதே!” என்றான். அது சரியா? 236 சாத்தான் ஏன் அதைச் செய்தான்? அதற்குரிய வார்த்தையை அவன் அறியாத காரணத்தினாலோ… அந்த வார்த்தை அந்த வேளைக்கானதாயிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான், ஆனால் இந்த தாழ்மையான மனிதன் அந்த வார்த்தையாயிருந்தார் என்பதை அவன் சந்தேகப்பட்டான். “நீர் தேவனுடைய குமாரனாயிருந்தால். தேவனுடைய குமாரன் வரப்போகிறார் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் அவர் அதைச் செய்வார் என்று அது கூறியுள்ளது. ‘அவர் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்து கட்டளையிடுவார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது. பார்த்தீர்களா? அதை எனக்கு நிரூபியுங்கள்! ஒரு அற்புதத்தை செய்வீராக! நீர் அதைச் செய்வதை நான் காணட்டும்” என்றான். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 237 பாருங்கள், அவிசுவாசி, பாவனை விசுவாசி, பாவனை செய்பவன். அவர்கள் மத்தியில் இருந்த யூதாஸைப் பாருங்கள், அதே சமயத்தில் பாவனை விசுவாசி! பார்த்தீர்களா? கவனியுங்கள், அங்கே உண்மையான வார்த்தை இருந்தது.
130238 அவர்கள் எவ்வளவு தைரியமானவர்கள்! “இப்பொழுது, அந்த அர்த்தமற்ற காரியங்களுக்கு கவனம் செலுத்த வேண்டாம். அதில் ஒன்றுமில்லை. அங்கே போக வேண்டாம். அது சத்தம்போடுகிற ஒரு கூட்டம். அதற்கு ஒன்றுமில்லை. அதெல்லாம் வெறும் கட்டுக்கதை. அது உங்களுடைய சிந்தையில் உள்ளது.” பாருங்கள், நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? வார்த்தையின் பிரசன்னத்தில் நின்று அதைக் கூறுகிறார்கள். 239 சாத்தான் உள்ளே நுழைந்தான். வேதாகமம் இங்கே யூதாவில் கூறியுள்ளது போல, “பிரதான தூதனும் கூட, சாத்தானோடு தர்க்கம் பண்ணினபோது, ‘கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக’” என்றான். வார்த்தைக்கு விரோதமாயிற்றே! இங்கே அந்திக்கிறிஸ்து, அபிஷேகம் பண்ணப்பட்டவன், இந்நாளின் அசலான வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவுக்கு எதிராக நின்று, “எழுதியிருக்கிறதே” என்றான்.
131240 கடைசி நாட்களைப் பாருங்கள். “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கத்தக்கதாக அது மிகவும் நெருக்கமாயிருக்கும்.” ஓ, என்னே! தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படாதிருப்பதற்கான காரணம், ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் வார்த்தையாயிருக்கிறார்கள். பார்த்தீர்களா? வேரிலுள்ள ஜீவனைப் போன்றே, அது தன்னை மறுதலிக்க முடியாது என்று சற்று முன்னர் நான் கூறினேன். பாருங்கள், அது வார்த்தையாயுள்ளது மற்றும் வார்த்தையின் காலத்தில் உள்ளது. அது உண்மை. 241 எரேமியாவைப் போலவே, அவன் அறிந்திருந்தான். அனனியா என்ன கூறினாலும் கவலைப்படாமல், அவன் எங்கே இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். அது மோசே செய்ததைப் போன்றே, மற்றவர்களும் செய்தனர். அதாவது கள்ளத் தீர்க்கதரிசி என்னக் கூறினபோதிலும், தேவனுடைய வார்த்தை அங்கு இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். அது எழுதப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தினால்தான் மிகாயாவால், “சரி, நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூற முடிந்தது. 242 ஆகாப், “நான் என்னுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறேன். என்னுடைய ஸ்தாபனம் சரியாயுள்ளது. நான் சமாதானத்தோடு திரும்பி வரும்போது…அந்த நபரை சிறைச்சாலையில் வையுங்கள். நான் அவனைக் கவனித்துக் கொள்வேன்! இடுக்கத்தின் அப்பத்தை அவனுக்குக் கொடுங்கள். அவனை புறம்பாக்கி, அவனோடு எந்த ஐக்கியமும் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் சமாதானத்துடன் திரும்பும்போது, நாம் அந்த நபரைக் கவனித்துக் கொள்வோம்” என்றான். 243 மிகாயா, “நீ திரும்பி வருவது உண்மையானால், கர்த்தர் என்னிடத்தில் பேசினதேயில்லை” என்றான். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை அவன் அறிந்திருந்தான், அவனுடைய தரிசனம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகவே இருந்தது. வேறொரு காலத்திற்காக அல்ல, ஆனால் அந்த காலத்திற்காக. ஆமென்! அல்லேலூயா! அந்த காலத்திற்காகவே! தைரியமாக, எழும்பி நின்று ஒரு பிரதான தூதனோடு தர்க்கம் செய்வது! “தேவதூதர்கள் நடக்கப் பயப்படுகிற இடங்களிலெல்லாம் மூடர் காலணிகளை அணிந்துகொண்டு மிதிப்பார்கள்” என்று, கூறப்பட்டுள்ளது. அது உண்மை.
132244 ஏனெனில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படமாட்டார்கள் என்று இயேசு கூறினார், ஏனென்றால் அவர்கள் அந்த வார்த்தையாயிருக்கிறார்கள். அவர்கள் வேறெதுவுமாக இருக்க முடியாது. அவர்களால் வேறு எதையும் கேட்க முடியாது. அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது. அது உண்மை. 245 நினைவிருக்கட்டும், மோசே அவர்களுடைய எல்லா போலித்தனங்களோடும் கொண்டு செல்லப்படவில்லை. அவன் அப்படித்தான் இருந்தானா? மோசே, “இப்போது, பார்வோனே, ஒரு நிமிடம் பொறும். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? கர்த்தர் இதை செய்யும்படி என்னிடம் கூறினார், ஆனால் தேவனுக்கு மகிமை, உங்களுடைய பையன்களும் அதே காரியத்தை செய்ய முடியும் என்பதை நான் காண்கிறேன். எனவே, நான் என்ன செய்வேன் என்பதை நான் சொல்கிறேன், நான் உங்களுடன் சேர்ந்துகொள்வே சொல்லுவேன்”? ஹூ! அது தேவனுடைய தீர்க்கதரிசியைப் போன்று தென்படவில்லை. இல்லை, உண்மையாகவே! அவன் தன்னால் நிற்க முடிந்த அளவு உறுதியாக நின்றான். தேவன் அதை எப்படியாவது கவனித்துக்கொள்வார் என்று சரியாக அவன் அறிந்திருந்தான், ஏனென்றால் அவர் வாக்குப்பண்ணினார். “நான் உங்களோடு இருப்பேன். நான் உன்னை விட்டு விலகமாட்டேன்.”
133246 அவன் அதை அறிந்திருந்தான். எனவே அவன் அவர்களோடு சேரவில்லை. ஓ, இல்லை. அவன் அவர்களோடு தங்கியிருந்தான். அவன் அவர்களுடைய ஸ்தாபனங்கள் எதையும் விரும்பவில்லை. அவன் சரியாக தேவனோடு தரித்திருந்தான். அவர்களால் செய்யக்கூடிய எல்லா காரியங்களாலும் அவன் எடுத்துச் செல்லப்படவில்லை. அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தபோது…அவன் பேன்களைப் பிறப்பித்தான்; அவர்களும் பேன்களைக் கொண்டு வந்தனர். அவன் இரத்தத்தைக் கொண்டு வந்தான்; அவர்களும் இரத்தத்தைக் கொண்டு வந்தனர். அவன் எல்லாவற்றையும் கொண்டு வந்தான்; அவர்களும் ஒவ்வொரு வழியிலும் அவனை ஆள்மாறாட்டம் செய்தனர். அவன் அப்படியே நிலைத்து நின்றான். தேவன் பணியில் இருந்தார் என்பதை, அவன் சரியாக, அறிந்திருந்தான். 247 இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் இரண்டை இரண்டாக, எடுத்துக்கொண்டு, நான்காக ஆக்குகிறீர்களா? [“ஆமென்.”] நீங்கள் இதற்கு மேல் அதிக சூடாக்க விரும்பவில்லை. எனவே, நீங்கள்—நீங்கள் புரிந்துகொள்ளுங்கள், பாருங்கள். ஏன்? அவர்கள் அதனால் வஞ்சிக்கப்படமாட்டார்கள், உண்மையான விசுவாசி, அவர்கள் அந்த நாளில் நிற்க வேண்டிய முன்குறிக்கப்பட்ட வித்து.
134248 அப்படியே, இயேசு இதைக் கூட, கூறினார், “அந்நாளில் அநேகர் என் நாமத்தினால், வருவார்கள், ‘கர்த்தாவே, நான் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தவில்லையா?’” என்று கேட்பார்கள். இயேசு, “முடிவு நாட்களில், காலம் முடிவடைந்து, மகத்தான உயிர்த்தெழுதல் வரும்போது, அநேகர் வந்து இராஜ்யத்தில் உட்காருவார்கள்” என்று கூறினார். தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது. 249 அநேகர், களைகள் வந்து கோதுமையோடு அமர்ந்து, “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறும், கர்த்தாவே! நான் அந்நிய பாஷையில் பேசினேன். நான் சத்தமிட்டேன். நான் ஆவியில் நடனமாடினேன். நான் பிசாசுகளைத் துரத்தினேன். நான் அந்நிய பாஷைகளில் பேசினேன். நான் இந்த எல்லாக் காரியங்களையும் செய்தேன்” என்று கூறுவர். அவர் என்ன கூறினார்? கவனியுங்கள். “அக்கிரமச் செய்கைக்காரரே, நான் உங்களை ஒருக்காலும் அறியேன்.”
135250 அக்கிரமம் என்றால் என்ன? யாரிடமாவது கேளுங்கள். அது, “நீங்கள் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை நீங்கள் அறிந்திருந்தாலும், நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள்” என்பதாகும். அவர்கள் அந்த வார்த்தையை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அதைக் கேட்கிறார்கள். நீங்கள் இந்த ஒலிநாடாவை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்த செய்திக்கு செவி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். தேவனாகிய கர்த்தர் அவ்வண்ணமாய் கூறுவதை நீங்கள் பாருங்கள்; அவர் அதை உறுதிப்படுத்தி, அதை உண்மையாக்குவதை நீங்கள் காண்கிறீர்கள். சூரியன் வெளியே பிரகாசித்துக் கொண்டிருப்பது போன்றே அவ்வளவு தெளிவாக இதை நீங்கள் அறிவீர்கள், ஆனால் உங்களுடைய ஸ்தாபனத்தைப் பற்றிக்கொள்ளும் நீங்கள், அந்த போலியான காரியங்களைப் பற்றிக்கொள்கிறீர்கள்; அக்கிரமச் செய்கைக்காரரே! “ஓ, ஆம், எனக்கு பெரிய பிரச்சாரங்கள் இருந்தன. நான் இதைச் செய்தேன். நான் அதைச் செய்தேன்.” “அக்கிரமச் செய்கைக்காரரே, நீங்கள் என்னை விட்டு அகன்று போங்கள், நான் உங்களை ஒருபோதும் அறியேன்” என்றார். 251 “பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் என் மேல் விழுந்தார்.” எனக்கு அதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. “நான் அந்நிய பாஷையில் பேசினேன். நான் ஆவியில் பாடினேன். நான் செய்தேன்…” அதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அதில் கேள்வி இல்லை. ஓ, சகோதரனே, சகோதரியே, என்ன விதமான ஒரு நிலைமை! இது ஒரு நடுக்கத்தின் நேரம். நாம் எங்கே இருக்கிறோம்? இந்த வார்த்தை இப்பொழுது ஜீவனண்டை வந்து கொண்டிருக்கிறது. கவனியுங்கள்.
136252 ஆம், அவர்கள் அதைச் செய்வார்கள் என்று அவர் கூறினார். கவனியுங்கள், “அக்கிரமச் செய்கைக்காரரே.” நான் இங்கே ஒரு வேதவாக்கியத்தை எழுதி வைத்திருக்கிறேன். அது எங்கே இருந்தது என்று எனக்குத் தெரியாது. நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். நான் ஒரு நிமிடம், அது என்னவென்று பார்க்கப் போகிறேன். நான்—நான் மத்தேயு 7:21-ஐ எடுத்துக் கொண்டேன். எங்கே என்று எனக்குத்—எனக்குத் தெரியவில்லை. நான், சில சமயங்களில் நான் அதனோடு ஏதோ ஒன்றை குறித்துக்கொள்வதில்லை, பாருங்கள், நான்—நான் இந்தவிதமாக பிரசங்கித்தபோது, நான் வேதத்தின் பேரில் என்ன குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன் என்பதை நான்—நான் மறந்துவிட்டேன். மத்தேயு 7:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! நாங்கள் தீர்க்கதரிசனம் உரைத்ததோம் அல்லவா… 253 தீர்க்கதரிசிகள், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்! அது சரியா? “நாம் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கவில்லை? நாம் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாய், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாய் இருக்கவில்லையா? நான் உம்முடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா? உம்முடைய நாமத்தினால் நான் பிசாசுகளைத் துரத்தவில்லையா?” இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற மறுக்கிற உங்களால் எப்படி அதைச் செய்ய முடியும்? பார்த்தீர்களா? ஓ, என்னே! எவ்வளவு வஞ்சனையாயுள்ளது என்று பார்த்தீர்களா? சரியாக அந்த கட்டத்திற்கு வந்துவிட்டு, அதன்பின்னர் ஏற்க்காமல் திரும்பிச் சென்றுவிடுகின்றனர். அவர்கள் வார்த்தைக்குச் சென்று, அதன்பின்னர் ஏற்காமல் திரும்பிச் சென்றுவிடுகின்றனர். இப்பொழுது இதைக் கவனியுங்கள். நாம் ஒரு நிமிடம், இதைப் பார்ப்போம். அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! நாங்கள் தீர்க்கதரிசனம் உரைத்ததோம் அல்லவா, நாங்கள் தீர்க்கதரிகளாயிருந்தோம் அல்லவா?… ஆம், நான் அதைக் குறித்து மத்தேயு 24:24-ல் பேசினேன். …உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உம்முடைய நாமத்தினாலே அநேக அற்புத-…அநேக கிரியைகளையும் செய்தோம் அல்லவா? அப்பொழுது நான் அவர்களை ஒருக்காலும் அறியேன் என்று அவர்களுக்கு தெரிவித்துவிடுவார்: அக்கிரமச் செய்கைக்காரரே நீங்கள் என்னைவிட்டு அகன்று போங்கள். 254 “அது உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டபோது நீங்கள் அதைக் கண்டு, அது அசைவதைக் கண்டு, அது வார்த்தையாயிருந்தது என்பதையும் கண்டீர்கள்; உங்களுடைய ஸ்தாபனத்தின் நிமித்தமாக, நீங்கள் அதை அப்படியே பற்றிக்கொண்டீர்கள். நான் உங்களை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் எத்தனை பிசாசுகளைத் துரத்தினாலும், எத்தனை பேர் இதை, அதைச் செய்திருந்தாலும் எனக்குக் கவலையில்லை; நான் உன்னைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை.” பிலேயாம், “உம்முடைய நாமத்தில், நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன். அது நிறைவேறினது” என்றான். “அது முற்றிலும் உண்மை, ஆனால் அது வார்த்தைக்கு வந்தபோது, நீங்கள் அதை மறுத்துவிட்டீர்கள்.” 255 ஓ, சகோதரனே, வஞ்சிக்கும் பாகத்தைப் பார்த்தீர்களா? சரியாக “தீர்க்கதரிசி” அல்ல; ஆனால் வார்த்தையோடு, உண்மையான வார்த்தையோடு, ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையோடு வெளிப்படுகிறது. “அக்கிரமச் செய்கைக்காரரே!”
137சாத்தான் எல்லா காலங்களிலும் உண்மையான வார்த்தையை ஆள்மாறாட்டம் செய்ய முயன்று வந்துள்ளான். நாம் அதை அறிவோம், நாம் அறிந்திருக்கவில்லையா?
138256 கவனியுங்கள், எல்லைக்கோடு வரை வந்து விட்டுவிடுதல். இங்கே பாருங்கள், அவன் எபிரெயர் 6-ம் அதிகாரத்தில் கூறினான் (இப்பொழுது, நாம் சற்று முன்பு வாசித்துக் கொண்டிருந்தோம், நான் உங்களிடம், “அதைக் குறித்துப் பாருங்கள்” என்று கூறினேன், அடுத்த இரண்டு நிமிடங்களில் நாம் பார்ப்போம்.), அவன் கூறினான்: முள்செடிகளையும் முள்பூண்டுகளையும்…புறக்கணிக்கத்தக்கதாயிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. (எல்லைக்கோடு!) …பரம ஈவை ருசி பார்த்தவர்களே … 257 “ருசிபார்த்தீர்கள்.” வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் அதைக் கண்டீர்கள்! உங்களால் [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய உதடுகளை வைத்து ஓசையெழுப்புகிறார்—ஆசி.] அதை உங்களுடைய வாயினால் ருசித்துப் பார்க்க முடியாது. ஆனால் நீங்கள் அதைக் கண்டீர்கள், அது சத்தியம் என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள். அது சத்தியமாயிருந்தது என்பதை நீங்கள் அறிந்திருந்தீர்கள். “பரம ஈவை ருசிபார்த்தார்கள்.” … பரிசுத்த ஆவியைப் பெற்றும், அது உங்கள்மேல் விழுந்தபோது, …தேவனுடைய நல்வார்த்தையை ருசிபார்த்து… “ருசி பார்த்தது,” அது சரியென்று நீங்கள் கண்டீர்கள். “பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் விழுதல்,” வயலில் உள்ள களைகள். …பின்னர் மறுதலித்து,… “உங்களை பரிசுத்தமாக்கி, உங்களை அழைத்து, அந்த அபிஷேகத்தை உங்கள் மேல் அளித்த அதே கிறிஸ்துவை மறுதலிக்கிறோம்.” …பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல். அது மன்னிக்க முடியாதது! “அவர்கள் சத்தியத்தை அறியும் அறிவிற்கு வருவது கூடாத காரியம்.” ஏனென்றால் பரிசுத்த ஆவியைப் பெற்றும்…புதுப்பிக்கிறது கூடாத காரியம். 258 களைகளின் மேல் விழுந்தது, பாருங்கள், “இயேசுவோடு தொடங்கி, ‘கர்த்தாவே, நான் கடந்து செல்லப் போகிறேன்’” ஆனால் நீங்கள் வார்த்தையைண்டை வரும்போது, நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள். “பரிசுத்த ஆவியைப் பெற்று, ருசி பார்த்தபோது, அல்லது வார்த்தையே வெளிப்படுவதைக் கண்டீர்கள்.” அதன்பின்னர் அதிலிருந்து விலகிச் சென்று, “அவர்கள் அதைக் காண்பதோ அல்லது அதற்கு வருவதோ முற்றிலும் கூடாத காரியம்.” 259 அது வேதம் உரைக்கிறதாவது . இப்பொழுது, நீங்கள்…“வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அது ஒழிந்துபோகாது.” நீங்கள் அதைக் காண்கிறீர்களா? “முற்றிலும் கூடாத காரியம்.” வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது, ஆவியானவர் அதைக் குறித்து சாட்சி பகருகிறார்.
139260 கவனியுங்கள், நான் உங்களுக்கு ஒரு சிறிய உதாரணத்தைக் கூறட்டும். மோசேயின் தீர்க்கதரிசனத்தின் கீழ் வந்த அந்த ஜனங்களைப் பாருங்கள், அந்த ஸ்தாபனத்திலிருந்து வெளியே வந்து, எல்லாவற்றிலிருந்தும் வெளியே வந்து, தீர்க்கதரிசனத்தின் கீழ், மகத்தான கிரியைகளையும் மற்றும் அதிசயங்களையும், அது போன்ற காரியங்களையும் கண்டு, உள்ளே நுழைவதற்கான எல்லைக்கோடு வரைக்கும் வந்தார்கள். 261 இப்பொழுது, லீ, அதோ உங்களுடைய “பெயர் புத்தகத்தில்” வருகிறது. பார்த்தீர்களா? நீங்கள் அதை பதிவுசெய்துவிட்டீர்கள். நீங்கள் இங்கே, வெளியே தொலைபேசி இணைப்புகளில் இல்லாதிருந்தால், வேதபண்டிதர் லீ வேயில் இங்கே அமர்ந்திருக்கிறார். அவர் ஏழு சபைக் காலங்களைக் குறித்த புத்தகத்தை இலக்கண ரீதியாக வகுத்துக் கொண்டிருக்கிறார். “ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்திலிருந்து உங்களுடைய பெயர் எடுக்கப்பட்டுவிட்டது” என்பதைப் பற்றிய ஒரு பிரச்சனை அல்லது கேள்வி எழும்புகிறது. பாருங்கள், இது அநேக ஊழியக்காரர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் நீங்கள் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் காத்திருங்கள், உங்களுக்குள் வெளிச்சம் இருந்தால், நீங்கள் அதைப் புரிந்துகொள்வீர்கள். பார்த்தீர்களா? 262 கவனியுங்கள், இப்பொழுது, நீங்கள் அதைக் காண விரும்பாவிடில், நீங்கள் உங்களுடைய தலையைத் திருப்பி, அதைப் பார்க்கமாட்டீர்கள். என் தாயார் வழக்கமாக கூறுவது போல, “நீங்கள் ஒரு சிவப்பு முள்ளங்கியிலிருந்து இரத்தத்தை எடுக்க முடியாது, ஏனெனில் அதில் இரத்தம் இல்லை.”
140263 கவனியுங்கள், வெளிச்சம் வரவேண்டும்; அது இருளில் இல்லை. வெளிச்சம் இருளுக்கு வருகிறது, இருள் அதை அறியாது. இப்பொழுது இந்த நாளில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களைக் கவனியுங்கள். 264 மோசே அந்த இஸ்ரவேல் புத்திரரை வெளியே கொண்டு வந்ததுபோல, அவர்கள் செவிகொடுத்து, அங்கே அந்த பெரிய தேசத்தோடு குழப்பமடைந்தனர். இப்பொழுது, இஸ்ரவேல் ஸ்தாபனமற்றதாயிருந்தது. அதற்கு நிலமும் கிடையாது, வீடும் கிடையாது. அது ஒரு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தது. 265 நமக்கு சபையே கிடையாது. நாம் இல்லை…நாம்—நாம் ஒரு சபைக்கு, முதற்பேறான சபைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம், மகிமையில் உள்ள சபை; ஒரு மனிதனால், பூமியின் மேலுள்ள சபைக்கு அல்ல. மகிமையில் உள்ள சபை, அழைக்கப்பட்டவர்கள், நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள், பாருங்கள், தங்களுடைய வீட்டிற்குச் செல்கிறார்கள். 266 அவர்கள் கடக்க வேண்டிய இடத்திற்கு வந்தபோது, அவர்கள் வார்த்தையை சந்தேகித்து, திரும்பி வந்தனர். யோசுவாவும் காலேபும் மற்றவர்களும் அங்கு சென்று அங்கே தேசம் இருந்தது என்பதை அவர்களுக்கு நிரூபிக்கும்படியாக, ஒரு குலை திராட்சை பழங்களைக் கொண்டுவந்தனர், “அது பாலும் தேனும் உள்ள நல்ல தேசம்” என்ற தேவனுடைய வாக்குத்தத்த வார்த்தையாகும். அவர்களுக்கு அதை நிரூபிக்கும்படியாக, இந்தப் பக்கத்தில் அதை திரும்பக் கொண்டு வந்தனர். அவர்கள் அதை ருசி பார்த்துவிட்டு, “ஓ, ஓ, எங்களால் அதைச் செய்ய முடியாது” என்றனர். 267 என்ன நடந்தது? அவர்கள் வனாந்திரத்தில் அழிந்துபோனார்கள். அவர்கள் அங்கேயே தரித்திருந்து, தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டு, அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தனர், ஆனால், யோசுவாவும் காலேபும் அவர்களைத் திரும்பி அழைத்து வந்தவர்கள்; மோசே மறுரூபமாக்கப்பட்டான். சபையானது காத்திருப்பதற்கு ஒரு மாதிரி; பழைய ஏற்பாட்டின் உயிர்த்தெழுதல், புதிய ஏற்பாடு; எடுத்துக் கொள்ளப்பட்ட சரீரம். அங்குள்ள மூன்றைப் பார்த்தீர்களா? விசுவாசி மற்றும் அவிசுவாசியில், பாருங்கள், எனவே, இந்த மூன்றையும் வரிசையில் வைத்திருக்க வேண்டும். பார்த்தீர்களா?
141268 அது எப்படி “முற்றிலும்” என்பதைக் கவனியுங்கள். தேவன் அந்தப் பாவத்தை ஒருபோதும் மன்னிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது அவர்கள் எப்படி உள்ளே வரப்போகிறார்கள்? துவக்கத்தில், அது முட்கள் என்றால், அது முடிவிலேயும் முட்களாகவே இருக்கின்றன. முன்குறிக்கப்பட்டவர்கள் மாத்திரமே அதைக் காண்பார்கள்.
142269 இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இருண்ட காலத்திற்கு முன்னர், பரிசுத்த மார்டினின் நாட்களைப் போலவே, ஒரு தேவபக்தியுள்ள சிறிய மனிதன். எத்தனை பேர் பரிசுத்த மார்டினின் புத்தகங்களை வாசித்திருக்கிறீர்கள்? உங்களில் அநேகர் வாசித்திருக்கிறீர்கள். பரிசுத்த மார்டினின் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள நாங்கள் சென்றோம்; பாதிரியார், “ஆனால் அவர் பரிசுத்தவானாக அறிவிக்கப்படவில்லை” என்றார். நிச்சயமாக, அவர் அவ்வாறு ஆக்கப்படவில்லை; அவர்களால் அல்ல, ஆனால் அவர் தேவனால் ஆக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவர் எங்களிடம் அந்த மூன்றாம் சபைக் காலத்தில் அவரை அங்கே பொருத்தும்படி கூறினார். பார்த்தீர்களா?
143270 அவர் என்னே ஒரு தேவபக்தியுள்ள எளிய அழைக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட; மனிதனாயிருந்தார் என்பதைப் பாருங்கள். அவருடைய பெற்றோர், அஞ்ஞானிகள். அவருடைய தந்தையார் ஒரு இராணுவ வீரர். அவர் ஒரு போர் வீரனாயிருக்க அவருடைய வழியை பின்பற்ற வேண்டியதாயிருந்தது. தேவன் எங்கோ இருக்கிறார் என்றே அவர் எப்பொழுதும் விசுவாசித்தார்; காடுகளில் இருந்த ஒரு மனிதனாய், தேவனைக் காண முடிந்தது. ஒரு நாள் அவர் ஒரு நகரத்தைக் கடந்து சென்றபோது, அங்கே ஒரு வயோதிக பிச்சைக்காரன் மரித்துக் கொண்டிருந்தான். “ஓ”, “என்னைப் போர்த்திக்கொள்ள ஏதாவதொன்றைக் கொடுங்கள்; நான் இன்றிரவு மரித்துப் போவேன்” என்றான்.
144271 எவருமே அதைச் செய்ய மனதில்லாதிருந்தனர். மார்ட்டின் ஒரு பக்கத்தில் அமர்ந்து சிறிது நேரம் அவனைக் கவனித்தார். எவருமே அதைச் செய்ய மனதில்லாதிருந்தனர். அவரோ ஒரேயொரு மேலங்கியை மாத்திரமே உடையவராயிருந்தார். அவர்—அவருக்கு அந்த மேலங்கியைக் கொடுத்தால், அவர் கடமையில் இருந்தபடியால், அவரே உறைந்து போய்விடுவார் என்பதாயிருந்தது. எனவே அவர், “நான் இதை அவனோடு இரண்டாக பகிரந்துகொண்டால் நாங்கள் இருவரும் ஜீவிக்க ஒரு வாய்ப்பு உண்டு” என்று எண்ணினார். எனவே அவர் தன்னுடைய சொந்த மேலங்கியை எடுத்து, அதை தன்னுடைய வாளினால் இரண்டாகப் கிழித்து, அதில் அந்த பழைய துணியை சுற்றிக்கொண்டார். அவர் தன்னுடைய சொந்த மேலங்கியைச் சுற்றிக் கொண்டார். எல்லோரும், “பாருங்கள் என்ன ஒரு வேடிக்கையான தோற்றமுடைய காவலாளி. பாருங்கள், என்ன ஒரு விநோதமான தோற்றமுடைய இராணுவ வீரன், பாதி மேலங்கியினால் அவரைச் சுற்றியிருந்தார்!”
145272 அடுத்த நாள் இரவு, அவர் கடமையிலிருந்து விடுபட்டு, தன்னுடைய படுக்கையில் படுத்திருந்தபோது, அவர் விழித்தெழுந்தார். நோக்கிப் பார்த்தபோது, அங்கே இயேசு கிறிஸ்து நின்றிருந்தார், அறையில் நின்று கொண்டிருந்தார், இவர் தன்னை சுற்றி அணிந்திருந்த அந்த பழைய துணியால் அவர் சுற்றப்பட்டிருந்தார். அப்பொழுது அவர், அங்கு இருக்கிற “என்னுடைய பிள்ளைகளுக்கு, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு, நீங்கள் என்ன செய்கிறீர்களோ, நீங்கள் அதை எனக்கே, செய்துள்ளீர்கள்” என்பதை அறிந்திருந்தார். 273 அவர் ஒரு மகத்தான தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தார். சபையோ அவரைப் பரிகசித்தது, அவரைத் துன்புறுத்தியது, அவரை வெளியே உதைத்துத் தள்ளினது, மற்ற காரியங்கள், ஆனால் அவர் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் கூறினது நிறைவேறினது. அந்தக் காலத்திலும் கூட அநேகர் அவரை விசுவாசித்திருந்தனர்.
146274 பிசாசு எவ்வளவாய் வஞ்சித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். ஒரு நாள் அவர் உட்கார்ந்து தன்னுடைய படிப்பாய்வில் இருந்தார். தன் தலையில் கிரீடம் சூட்டப்பட்டு, பொன் காலணி அணிந்தவனாக, தன் வஸ்திரத்தை சுற்றி சரிகை அணிந்தவனாக, ஒரு வல்லமையான தூதன் எழுந்து வந்து, “மார்டின், உனக்கு என்னைத் தெரியுமா?” அவன், “நானே உனக்கு கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிறேன். நான்தான் உன்னை இரட்சித்தேன். என்னை வணங்கு, மார்டின்” என்றான். ஆனால் அந்த தீர்க்கதரிசியோ, அங்கே ஏதோ ஒரு சிறு விசித்திரமான காரியம் இருந்தது என்பதை அறிந்திருந்தார், அவர் தொடர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அவன், “மார்டின், நானே உன்னுடைய இரட்சகர், இயேசு கிறிஸ்து. என்னைத் தொழுதுகொள்! மார்டின், உனக்கு என்னைத் தெரியாதா?” என்று கேட்டான். 275 மார்டின் அவனை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார், அவருடைய சிந்தையில் வேதவாக்கியம் ஓடிக்கொண்டிருந்தது. அவர், “சாத்தானே, என்னை விட்டு அகன்று போ” என்றார். அவர், “உன்னுடைய தலையில் ஒரு கிரீடம் இருக்கிறது. காலத்தின் முடிவில் அவருடைய ‘பரிசுத்தவான்கள் அவருக்கு முடிசூட்டுவார்கள்” என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது என்றார். அது பெந்தேகோஸ்தே தூண்டிலாக இருக்காதா? சகோதரனே, அந்த வார்த்தையைக் கவனியுங்கள். அங்குதான் அது பலனளிக்கிறது.
147276 ஒரு நாள், மீண்டும், அந்த மடத்தில், அவர்கள் அங்கே ஒரு வயதான பரிசுத்தவானை, ஒரு கூட்ட இளம் துறவிகள் உடையவர்களாயிருந்தனர். அவர்களில் ஒருவன் ஒருவிதமான எரிச்சல் மூட்டுபவனாய் இருந்தான். இதைக் கவனியுங்கள், இன்றைக்கு இங்கே ஒரு நல்ல—ஒரு நல்ல உவமை உள்ளது. அவன் மற்றவர்களைக் காட்டிலும் மேலான ஒருவனாயிருக்க விரும்பினான். அவன் தன்னை, அதிகாரத்தை, மகத்தான ஒன்றை, மேலான ஏதோ ஒன்றைக் காண்பிக்க விரும்பினான், உங்களுக்குத் தெரியும், எல்லா வகுப்பினருக்கும் மேலாக, மகத்தான பெரிய ஏதோ ஒரு காரியம். அவன் வித்தியாசமானவனாக இருக்க வேண்டுமென்றிருந்தான். எப்பொழுதுமே மற்ற சகோதரர்களுக்கு விருப்பமில்லை…அவன் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்றிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். பார்த்தீர்களா? அவன், அது என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், அவன் மிகவும் திமிர்பிடித்தவனாயிருந்தான். கடற்கரையிலிருந்த ஒரே கூழாங்கல்லாய் அவன் இருந்தான். எவருமே அவனை மிஞ்ச முடியவில்லை. இப்பொழுது என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அவன் ஏதோ ஒரு பெரிய காரியத்தைப் பெற்றிருக்க வேண்டியதாயிருந்தது. அவன் பெரிய சங்கங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதாயிருந்தது. நான் கூறுவதை நீங்கள் கவனித்து வருகிறீர்களா? பார்த்தீர்களா? எனவே, அவன் கூறினான், அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன், “கர்த்தர் என்னையும் ஒரு தீர்க்கதரிசியாக வைத்திருக்கிறார். நான் ஒரு தீர்க்கதரிசி” என்றான். இப்பொழுது, தேசத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட ஒரு தீர்க்கதரிசி இருந்தான், அது பரிசுத்த மார்ட்டின்; அவர் ஒரு தீர்க்கதரிசியாகப் பிறந்திருந்தார்.
148277 ஆனால் இந்த இளைஞன் கூறினான், அந்த வாலிப நபர் கூறினான், சுமார் இருபத்தைந்து வயதுடைய இளம் துறவி, அவன், “கர்த்தர் என்னை ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கியிருக்கிறார். நான் அதை உனக்கு நிரூபிக்கப்போகிறேன்” என்றான். “கர்த்தர் இன்றிரவு எனக்கு ஒரு பெரிய, அருமையான அங்கியைக் கொடுக்கப்போகிறார், அதை என் மேல், ஒரு வெள்ளை அங்கியை உடுத்தி, என்னை உங்கள் மத்தியில் வைக்கப்போகிறார். அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து, பாருங்கள், நீங்கள் என்னிடத்திலிருந்து கட்டளையைப் பெற்றுக்கொள்வீர்கள்” என்றான். இப்பொழுது அதை இன்றைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள், பாருங்கள், “நான் ஸ்தாபனத்தின் தலைவராக இருப்பேன். மற்ற துறவிகளே, உங்களை நான் கவனித்துக்கொள்வேன்.” 278 நிச்சயமாகவே, பரிசுத்த மார்ட்டினின் எழுத்து வரிகள், “அன்றிரவு கட்டிடத்தில் ஒரு விளக்கு எரிந்தது” என்று கூறுகிறது. அதைப் படியுங்கள். அது உண்மையானது. அது சரித்திரம். விளக்குகள் எரிய, மற்ற யாவரும் கவனித்துக் கொண்டிருந்தனர், இதோ வந்து…அவன் ஒரு வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு, அவர்கள் மத்தியில் நின்றான். அவன், “நான் உங்களுக்கு என்னக் கூறினேன் என்று பார்த்தீர்களா?” என்று கேட்டான். ஆனால் அது வார்த்தைக்கு முரணாயுள்ளது.
149279 அவன் கல்லூரியின் பழைய பீடாதிபதியை அழைத்துக் கொண்டு சென்றபோது, அவர் சற்று மேலும் கீழும் நடந்து, “மகனே, அது சரியல்ல” என்று கூறினார். அவர், “ஒரே ஒரு வழிதான் உண்டு” என்றார். இதோ அது உள்ளது! “நாம் அறிந்துகொள்ள ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. அது இயற்கைக்கு மேம்பட்டதாகக் காணப்பட்டது.” மகனே, பெந்தெகொஸ்தேயினர் இதை நம்பி விழுந்துபோயிருப்பார்கள்! அவர், “அற்புதமானது சரியானதாகத் தென்பட்டாலும், வார்த்தைக்கு அது சரியானதாகத் தென்படவில்லை. இப்பொழுது, நமக்கு அப்படிப்பட்ட ஒரு நபர், மார்டின் என்னும் பெயர் கொண்ட அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி உண்டு. வா, அவருக்கு முன்பாகப் போகலாம்” என்றார். அந்த நபர், “இல்லை, இல்லை! மார்டினுக்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது” என்றான். “நீ எப்படியும் போகப் போகிறாய்” என்றார். அவர்கள் அவனை மார்ட்டினுக்கு முன்பாக கொண்டு செல்ல, அவர்கள் அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்தனர், அப்பொழுது அந்த அங்கி அவனை விட்டு மறைந்தது.
150பாருங்கள், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கும்.” பாருங்கள், அவர்கள் இவர்களை அறிவார்கள். இயேசு, “என் ஆடுகள் என் வார்த்தையை அறிந்திருக்கின்றன” என்றார். “ஓ,” நீங்களோ, “‘என் சத்தத்தைக் கேளுங்கள்’” என்று கூறலாம். 280 அது அவருடைய வார்த்தை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” பார்த்தீர்களா? முன்குறிக்கப்பட்டவர்கள் இதை அறிவார்கள். “ஒரு அந்நிய வார்த்தையையோ அல்லது ஒரு அந்நிய சத்தத்தையோ பின்பற்றமாட்டார்கள்.” 281 அங்கே பின்னால் உள்ள அந்த நபர்களோடும் அந்தவிதமாகத்தான்; அவர்கள் பின்பற்றமாட்டார்கள். மார்டின் அங்கிருந்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அந்த காலத்தின் ஒரு தீர்க்கதரிசி, வார்த்தையின் மூலம் தேவனால் அடையாளங்காட்டப்பட்ட ஒரு தீர்க்கதரிசி, வார்த்தையை அறிந்திருந்தார். அந்த மனிதன் அதற்கு முன்பாக நிற்க விரும்பவில்லை.
151282 அவர், “பிணமானது எங்கே இருக்கிறதோ,” அல்லது வார்த்தை, “அங்கே அந்த காலத்தில், கழுகுகள் கூடும்” என்றும் கூடக் கூறினார். இப்பொழுது அது மத்தே-…நீங்கள் அதை குறித்துக் கொள்ள விரும்பினால், அது மத்தேயு 24:28 ஆகும். சற்று முன்பு, மத்தேயு 24:24; அதற்கு கீழே நான்கு வசனங்கள் உள்ளன, பாருங்கள், நீங்கள் அதை புரிந்து கொள்ள வேண்டுமானால். “பிணமானது எங்கே இருக்கிறதோ,” மன்னா என்பது, வார்த்தையாய் உள்ளது, “அங்கே கழுகுகள் கூடும்”
152283 இப்பொழுது நான் துரிதமாக முடிக்க வேண்டும். நான் அங்கு மேலே நோக்கிப் பார்த்தபோது, எந்த நேரம் என்பதைக் கண்டேன்…பன்னிரெண்டு மணிக்குப் பிறகு ஏழு நிமிடங்கள் அல்லது எட்டு நிமிடங்கள் இருக்கும். நான் துரிதமாக முடிக்க வேண்டும், இல்லையென்றால் இன்றிரவே நாம் அதை முடித்துவிடலாம், ஒன்று நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இந்தக் காலையிலா அல்லது இன்றிரவா? ஹூ? எத்தனைபேர் இன்றைக்கு ஆராதனைக்குப் பிறகு வீடு செல்ல வேண்டியவர்களாயிருக்கிறார்கள், நாங்கள் உங்களுடைய கரத்தை காணட்டும், பாருங்கள். ஓ, என்னே, தொடர்வது நலம்! 284 நான் அந்த விதமாக அவர்களை தொலைபேசிகளில் வைத்திருப்பதற்கு வருந்துகிறேன், ஆனால் நான் துரிதமாக முடிக்கவுள்ளேன். இது உங்களுடைய பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்பு வாய்ந்தது. என்னைப் பொறுத்த வரையில், அதுதான் என்று நான் நினைக்கிறேன், பாருங்கள். உங்களுடைய பணம் அழிந்து போகும். இது அழியாது; அது வார்த்தையாயுள்ளது. பார்த்தீர்களா?
153285 “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.” பிணம் எங்கேயோ, எங்கே கொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கே கழுகுகள் கூடும். எங்கே புதிய மாமிசமோ, காலத்தின் வார்த்தையோ, அங்கே கழுகுகள் கூடும். 286 ஆனால் அது அழுகிப்போன பிறகு, அதன்பின்னர் அந்த பருந்துகள் அதை நோக்கி மொய்க்கும். ஆம். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? கொல்லப்படும்போது, இங்கே கழுகுகள் வருகின்றன; ஆனால் அது அங்கே கிடந்து, அழுகிப் போன பிறகு, அதன்பின்னர் இங்கே பருந்துகள் வருகின்றன. கழுகு அதனோடு எந்த சம்மந்தமும் வைத்துக் கொள்ளாது. பார்த்தீர்களா? 287 இயேசு, “பிணமானது எங்கேயிருக்கிறது” என்று கூறினார், அங்கே மன்னா விழுந்தது, அந்த இரவில் மன்னா புதியதாக விழுகிறது, “அங்கே கழுகுகள் அதற்காக ஒன்று கூடும்.” அதுவே இந்நாளுக்கான மன்னாவாகும். பார்த்தீர்களா? கவனியுங்கள்.
154288 ஆனால் அது அழுகிப்போன பிறகு, புழுக்கள் அதற்குள் நுழைகின்றன, அதன்பின்னர் இங்கே பருந்துகள் வருகின்றன. அது அழுகிப் போகும் வரையில் அவைகளால் அதை முகர முடியாது. இயேசு அங்கே எழும்பி நின்று, “எருசலேமே, எல்லா தீர்க்கதரிசியையும் கல்லெறிந்தவளே!” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அது தனிப்பட்ட பிரதிபெயர் என்பதைக் கவனியுங்கள், பாருங்கள், “எருசலேமே, எருசலேமே, நான் எத்தனைதரமோ…” அவர் யாராயிருந்தார்? “நான் உன்னிடத்தில் அனுப்பின ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் கல்லெறிந்வளே, ஒரு கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பதுபோல, நான் உன்னை எத்தனை முறை கூட்டிச் சேர்த்திருப்பேன்,” அந்த மகத்தான சபையான, எருசலேமே.
155289 இங்கே பூமியிலுள்ள எருசலேம் அல்ல, “ஆனால் நாம் உன்னதத்திலுள்ள எருசலேமிலிருந்து வருகிறோம்,” எங்கிருந்து அந்த வார்த்தை வருகிறது, முன்குறித்தலிலிலிருந்து, பாருங்கள். அழிந்துபோகிற பழைய எருசலேம் அல்ல; புதிய எருசலேம் அழிந்து போக முடியாது. மனிதனால் கட்டப்பட்ட பண்டைய எருசலேம் அல்ல; ஆனால் தேவனால் கட்டப்பட்ட புதிய எருசலேம், பாருங்கள், அந்த வார்த்தை இப்பொழுது வெளிப்படுகிறது. “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. நான் போய் அவைகளை உங்களுக்காக ஆயத்தம் பண்ணுவேன்” என்று கூறி, சிருஷ்டிகர் வீதிகள் முதலியவற்றை, பொன்னினால் உண்டாக்கினார். அதுதான் அழிந்துபோகாத ஒன்று.
156290 ஆதிகாலத்திலிருந்தே, “எருசலேமே, எருசலேமே, நான் எத்தனை தரமோ,” மூன்றாவது நபரோ அல்லது வேறுேயாரோ ஒருவர் அல்ல, ஆனால் “ஒரு கோழி தன் குஞ்சுகளை கூட்டிச் சேர்த்துக் கொண்டது போல நான் உன்னைக் கூட்டிச் சேர்த்திருப்பேன், ஆனால் உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. ஆனால் இப்பொழுதே உங்களுடைய வேளை வந்துவிட்டது” என்றார். பார்த்தீர்களா? “பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.” ஆனால் சடலம் அழுகிப்போன பிறகு, பருந்துகள் கூடுகின்றன. பார்த்தீர்களா?
157291 கவனியுங்கள். மோசே, அவன் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒருபோதும் கொடுக்கவில்லை… மோசே ஒரு கழுகாயிருந்தான், அவன் தேவனுடைய பிள்ளைகளுக்கு நோவாவின் மீதியானதை ஒருபோதும் கொடுக்கவில்லை. பார்த்தீர்களா? அவன் புதிய தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். “தேவனாகிய கர்த்தர் என்னை வனாந்திரத்தில் சந்தித்து, தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தி, உங்களை அழைக்கும்படிக்கு என்னை இங்கே அனுப்பினார்.” அதன்பின்னர் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் சுற்றிலும் வந்து அதைப் பாவனை செய்கின்றனர். பார்த்தீர்களா? ஆனால் அவன் அந்த நேரத்தில் வார்த்தையை உடையவனாயிருந்தான். 292 காரணம், வாக்குத்தத்தத்தைப் பெற்றவனாகிய, ஆபிரகாமிடம் தேவன், “உங்கள் சந்ததியார் அந்நிய தேசத்தில் நானூறு வருடங்கள், பரதேசிகளாய் சஞ்சரிப்பார்கள், ஆனால் நான் அவர்களைச் சந்தித்து, ஒரு பலத்த கரத்தினால் அவர்களை வெளியே அழைத்துச் வருவேன்” என்றார்.
158மோசே, “தேவனாகிய கர்த்தர் என்னிடத்தில் பேசி, எனக்குக் காண்பிப்பார், என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறியுள்ளதை, நான் உங்களுக்குச் சொல்லுவேன்” என்றான். “‘ நான் இருக்கிறேன் ’ என்பவர் என்னை அனுப்பினார்” என்றான். 293 “நான் இருக்கிறேன்!” “இருந்தேன் அல்லது இருப்பேன்” என்றல்ல. “நான் இருக்கிறேன்,” நிகழ்காலம், இப்பொழுது வார்த்தை. இருந்த வார்த்தையல்ல, வரப்போகும் வார்த்தையல்ல; இப்பொழுதுள்ள வார்த்தை. பார்த்தீர்களா? உங்களுக்கு அது புரிகிறதா? “நான் இருக்கிறேன்!” “நான் இருக்கிறேன்” என்ற வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது.” அது சரியா? “நான் இருக்கிறேன்.” “இது உண்மையென்று ரூபகாரப்படுத்த, தேவன் என்னை அவருடைய தீர்க்கதரிசியாக அனுப்பினார். நான் இங்கே வந்து இதைச் செய்யும்படி என்னிடம் கூறின, இந்த வார்த்தைக்கான பதிலாயிருக்கிறேன்.” அவன் அதைச் செய்தபோது, பார்வோன், “சரி, அதைச் செய்யக்கூடிய ஏராளமான பையன்கள் எங்களுடைய குழுவில் உள்ளனர்” என்றான், போலியாக பாவனை செய்பவர்கள். 294 இயேசு, “இப்பொழுது, கடைசி நாட்களில் அது மீண்டும் நிகழப்போகிறது” என்று கூறினார், பாருங்கள், அதே காரியத்தை உரிமை கோருகிறார். யார் முதலில் வருகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். யார் வார்த்தையோடு தரித்திருந்தனர் என்பதைக் கவனியுங்கள். அதுதான். அந்த விதமாகத்தான் அது அறியப்படுகிறது.
159295 எனவே, நீங்கள் பாருங்கள், நாம் கவனிக்கிறோம், மோசே அவர்களுக்கு நோவாவின் காலத்தைக் குறித்து ஒருபோதும் கூறவில்லை, “நாம் இப்பொழுது ஒரு பேழையைக் கட்டுவோம், ஏனென்றால் அது வார்த்தை என்று, நீங்கள் அறிவீர்கள். ஒரு நாள் நோவா ஒரு பேழையைக் கட்டினான்.” இல்லை, பருந்துகள் அதை தின்று கொண்டிருந்தன. இல்லை. இல்லை. இது ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை. கவனியுங்கள், அவன் தேவனிடத்திலிருந்து பெற்றிருந்த செய்திக்காக, அவன் அந்த வேளைக்கான அசலான முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். 296 மோசேயின் மீதியானதை இயேசுவும் அவர்களுக்குச் கொடுக்கவில்லை. மோசே அந்த வேளைக்கான வார்த்தையை உடையவனாயிருந்தான், ஆனால் மோசே ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். இங்கே தேவன்தாமே இருக்கிறார், பாருங்கள், மோசேயின்—மோசேயின் மீதியானதை அவர் ஒருபோதும் சேவிக்கவில்லை. ஆனால் அந்த ஸ்தாபனத்திலுள்ள பருந்துகளைப் பாருங்கள், அதைக் குறித்து பசியாயிருந்தன என்பதைப் பாருங்கள். “எங்களுக்குத் தெரியும்! நாங்கள் மோசேயைப் பெற்றுள்ளோம்! நாங்கள் உம்மை உடையவர்களாயிருக்க வேண்டியதில்லை.” அவர், “நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், நீங்கள் என்னையும் அறிந்திருப்பீர்கள், ஏனென்றால் மோசே என்னைக் குறித்து உரைத்தான்” என்றார். பார்த்தீர்களா? 297 “பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் கூடும்.” கழுகுகளே! புதியதாக வெளிப்பட்ட வார்த்தை, வார்த்தை எழுப்பப்பட்டு, விளக்கப்பட்டு, வெளிப்படுத்தப்பட்டு, பிள்ளைகளுக்கான ஆகாரமாக அளிக்கப்பட்டது. இப்பொழுது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அங்கே கிடத்தப்பட்டிருந்த அந்த பழைய சடலம், அது அங்கே இருக்கும். 298 இப்பொழுதும் அதேதான்! லூத்தர் மனந்திரும்புதலின் ஒரு செய்தியை உடையவராயிருந்தார்; ஆனால் லூத்தரன்களாகிய நீங்கள் பருந்து கூட்டமே! பாப்டிஸ்டுக்கு ஒரு செய்தி இருந்தது; ஆனால், பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் பருந்து கூட்டமே! பார்த்தீர்களா? பெந்தேகோஸ்தே ஒரு செய்தியை உடையதாயிருந்தது, இப்பொழுது அதற்கு வருவோம், பெந்தேகோஸ்தே பருந்துகளே! “ஆனால் பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்.”
160முன்பிருந்த நாட்களில், ஒரு லூத்தரனுக்கு கத்தோலிக்கருடைய அழுகிப்போன ஒன்றை உங்களால் போஷிக்க முடியாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள், (இப்பொழுது உங்களால் முடியும்). இல்லை ஐயா. அவன் புதிய இறைச்சியை உடையவனாயிருந்தான். அது அந்த சபைக் காலமாயிருந்தது. 299 நீங்கள் லூத்தரன் செய்தியை, மெத்தோடிஸ்டுக்கு போஷிக்க முடியாது. ஓ, இல்லை, அந்த அழுகிப்போனதை அவன் விரும்பவில்லை. அது அழுகிப்போய்விட்டது. பாருங்கள், ஜீவன் அதை விட்டுவிட்டு, வேறொன்றிற்குள் சென்றது. அங்கே பின்னால் உள்ள அந்த பழைய தண்டு மரித்துப்போய்விட்டது. ஜீவன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் பெந்தேகோஸ்தே செய்தியை போஷிக்க முடியாது. இல்லை, உண்மையாகவே! புழு புழுத்த ஸ்தாபனங்கள்; ஒன்றுமே செய்யவில்லை! இல்லை, இல்லை! 300 ஏனென்றால், “பெரியதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே, நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன். அவன் பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களுடைய விசுவாசத்திற்கு திரும்ப அளிப்பான்” என்பதே வாக்குத்தத்தமாயுள்ளது. “வேதாகமத்தில் இந்த வாக்குத்தத்தங்கள் யாவும் கூறப்பட்டிருந்தன, நான் அதைச் செய்வேன், அங்கே கழுகுகள் கூடிவரும்.” “பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” பார்த்தீர்களா?
161301 இயேசு அதை ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஆனால் இயேசு வந்தபோது, அவர், “நாங்கள் மோசேயையும், நியாயப்பிரமாணத்தையும் பெற்றுள்ளோம்” என்ற அந்த பருந்துகளின் கூட்டங்களைக் கண்டார். பார்த்தீர்களா? பாருங்கள், அது கொல்லப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்டபோது அதுவே புசிக்கிறதற்கு அப்போது நல்லதாயிருந்தது. பாருங்கள், அப்பொழுது அது சரியாயிருந்தது. 302 ஆனால் இது மோசேக்கு முன்னுரைக்கப்பட்டது, அவனே அந்த பலியைக் கொன்றான், “உன் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை, உனக்காக உன் நடுவிலே, உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார். அது நிறைவேறும், அதாவது ஒவ்வொருவரும் அந்த தீர்க்கதரிசியையும் அவர் என்ன கூறுகிறார் என்பதையும் பற்றிக்கொள்ளாவிட்டால், ஜனங்களின் மத்தியினின்று அறுப்புண்டு போவார்கள்.” அது அவ்வாறு இருந்தது. 303 பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவுக்குக் கூறப்பட்ட சுமார் அறுநூறு வித்தியாசமான தீர்க்கதரிசனங்கள் அங்கே எப்படி நிறைவேறின என்று பாருங்கள். “அவர்கள் என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.” அவருடைய ஜீவியத்தின் கடைசி ஏழு அல்லது எட்டு மணி நேரத்தில் எத்தனை நிறைவேறியிருந்தன என்பதை நான் மறந்துவிட்டேன். அந்த தீர்க்கதரிசிகள் யாவரும், பரிபூரணமாக கூறினர்.
162304 இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவிக்கும் என்று நான் இன்றைக்கு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தால், அது சரியாயிருந்தாலும் அல்லது தவறாயிருந்தாலும், அது சம்பவிப்பதற்கு எனக்கு—எனக்கு இருபது சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. அது எப்பொழுது சம்பவிக்கும் என்று நான் முன்னுரைத்திருந்தால், அது எப்பொழுது என்று கூறவில்லையென்றால், நான் அதற்கு குறைந்த வாய்ப்பையே பெற்றுள்ளேன். அது எப்பொழுது நிகழும் என்று நான் முன்னுரைத்திருந்தால், அது எனக்கு அதைவிட ஒரு சிறிய வரம்பை அளிக்கிறது. அது சம்பவித்த இடத்தை நான் முன்னறிவித்திருந்தால், அது இன்னும் அதைவிட ஒரு சிறிய வாய்ப்பையே அளிக்கிறது. அது யார் பேரில் இருக்கும் என்று…நான் முன்னுரைத்திருந்தால், அது உண்மையாயிருக்கவில்லையென்றால், அப்பொழுதும் நான் அதில் ஏறக்குறைய ஒரு இலட்சத்தில் ஒரு பங்கு அளவு வரம்பை உடையவனாயிருக்கிறேன். 305 மேசியாவைக் குறித்து எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு வார்த்தையும், அல்லேலூயாவும், நிருபத்திற்கு ஏற்றவாறு நிறைவேற்றப்பட்டது. என்றாவது ஒரு நாள், வேதவாக்கியங்களை வாசித்து, அவர் வாக்கியத்தின் நடுவில் நிறுத்திவிட்டு, “சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அவர்களை விடுவிக்க…தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்.” வாக்கியத்தின் பாதியில் அங்கேயே நிறுத்திவிட்டார், ஏனென்றால் மீதமுள்ளவை அவருடைய இரண்டாம் வருகையில் உள்ளன என்றார். ஆமென்! “வானமும் பூமியும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது” என்றார். பார்த்தீர்களா?
163306 அப்பொழுது அவர் வார்த்தையாயிருந்தார், அப்பொழுது அது அவர்களை போஷித்துக் கொண்டிருந்தது. மோசே அவர்களுக்கு சத்தியத்தைக் கூறினான்; ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்கள் எப்பொழுதுமே அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள், பருந்துகளுக்காக… 307 கழுகுகள் புசித்து வீடுகளுக்குச் சென்ற பிறகும் அதில் கொஞ்சம் மீதியாக இருக்கிறது. அப்பொழுது அவர்கள் வேறொன்றைக் காண காத்துக் கொண்டிருக்கிறார்கள். “வார்த்தை” அவர்கள், “இங்கே அது வரவேண்டும். நமக்கு நேற்றைய தினம் கலைமான் கிடைத்தது. நமக்கு நாளை ஆடு கிடைக்கும்” என்கின்றனர். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? “அங்கே ஒரு பழைய கலைமான் பிணமாக, அழுகிய நிலையில் இருக்கிறது, ஆனால் இன்று ஆடுகள் வருகின்றன. அது எங்கே இருக்கிறது?” நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? தூதர்களின் ஆகாரம்! ஒரு நாள் மன்னாவைப் புசிக்கும் ஜனங்கள், அவர்கள் அதை அடுத்த நாளுக்காக வைத்திருக்க முயன்றபோது, அது கெட்டுப்போய்விட்டது. நீங்கள் எல்லா மாதிரிகளையும், எப்படி பரிபூரணமாக காணவில்லையா? இப்பொழுதும் அதேதான்!
164308 கவனியுங்கள், இயேசுவின் காலத்தின் பருந்துகள் பிசாசுகளைத் துரத்திக்கொண்டிருந்தன: பழைய பிரேதத்தின் மேல் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அது சரியா? அவர்கள் பிசாசுகளைத் துரத்திக் கொண்டிருந்தனர். இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். 309 அந்த நாட்களில் அவர்களுக்கு தீர்க்கதரிசிகள் இருந்தனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரதான ஆசாரியனாகிய காய்பா தீர்க்கதரிசனம் உரைத்தான். எத்தனை பேருக்கு அது தெரியும்? காய்பா தீர்க்கதரிசனம் உரைத்தான். வயலில் களையின் நிலையைக் கவனியுங்கள்; அது அதே அபிஷேகத்தினால் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் என்று வேதம் ஏன் கூறியுள்ளது? “ஏனென்றால் அவன் அந்த வருடத்தில் பிரதான ஆசாரியனாயிருந்தான்.” ஒரு அழுகிப்போன தோட்டியும், ஒரு முட்செடியும், களையும், கோதுமையோடு கூட இருக்கிறது; ஆனால் ஆவியானவர் அவன் மேல், அசலான தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் இருந்தார். தீர்க்கதரிசனம் உரைக்கவும், அது நிறைவேறும் என்று முன்னுரைக்கவும்; தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அவன் மீது இருந்தார், ஆனால் அந்த நேரத்தில் ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை மறுதலித்து, சிலுவையில் அறைந்தான். 310 ஓ, இரக்கம், சகோதரனே! வேதவாக்கியத்தின் மூலம் இன்னும் எவ்வளவு காலம், பாருங்கள், நாம் இந்தக் காரியங்களைக் கூற வேண்டியதாயிருக்கிறது? நான் துரிதமாக முடிக்கிறேன். நான் இங்கே கிட்டத்தட்ட பத்து பக்கங்கள் கொண்ட வேத வாக்கியங்களை வைத்துள்ளேன், எப்படியாய் எல்லாக் காரியங்களையும் நிரூபிக்கிறது. “சூரியன் நீதியுள்ளோர் மேலும் அநீதியுள்ளோர் மேலும் ஒரேவிதமாக உதிக்கிறது.”
165311 இதை நிரூபிக்கவே, இயேசு, “தேவனுடைய விரலினாலே நான் பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?” என்று கேட்டார். இப்பொழுது, அவர்கள் பிசாசுகளைத் துரத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தனர். அது சரியா? ஆனால் அவர் அந்த நேரத்துக்கான வார்த்தை என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை, (ஏன்?) ஏனென்றால் அவர் அவர்களோடு தொடர்புகொள்ளவில்லை. 312 இப்பொழுது மத்தேயு 24:24-ஐ எடுத்துக் கொள்ளுங்கள், “கள்ள கிறிஸ்துக்கள்,” அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், “உயிர்த்தெழுந்து, கள்ளத் தீர்க்கதரிசிகள் அதை தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்,” பாருங்கள், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள்.” நீங்கள் அதை இப்பொழுது புரிந்துகொண்டீர்களா?
166313 பிள்ளைகளைக் கவனியுங்கள். “யார் பிள்ளைகளுக்கு… நான் தேவனுடைய வார்த்தையினால் பிசாசுகளைத் துரத்தினால்,” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது, அவர் தேவனுடைய வார்த்தையாயிருந்தார், “உங்களுடைய ஸ்தாபனப் பிள்ளைகள் அவைகளை யாரால் துரத்துகிறார்கள்?” இப்பொழுது, தேவனால் மாத்திரமே ஒரு பிசாசைத் துரத்த முடியும் என்பதை நாம் அறிவோம், தேவன் மாத்திரமே. ஏனென்றால், பலமுள்ள மனிதன் தன்னுடைய வீட்டில் உள்ளவனைக் காட்டிலும் பலமுள்ளவனாயிருக்க வேண்டும். அதைச் செய்ய அவர்களுக்கு வல்லமை இருந்தது. 314 உங்களுக்குத் தெரியும், அங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில், அவன்…கடைசி நாட்களில் அந்த அந்திக்கிறிஸ்து எழும்பி, “அந்த அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்து, பூமியின் மேல் வாசமாயிருக்கிறவர்களைக் கூட வஞ்சித்து, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்படாதிருந்த கிறிஸ்தவர்களையும், யாவரையும், அவர்கள் ஒவ்வொருவரையும் வஞ்சிப்பான்,” மத்தேயு 24:24-ல் கூறப்பட்டுள்ளபடி, “உலகத்தோற்ற முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் அவர்களுடைய நாமங்கள் எழுதப்படவில்லை.” 315 அந்த—அந்த அசலான ஆரஞ்சு மரத்தின் வேரில் இருந்த அந்த ஜீவன், அவைகள் எல்லாவிதமான புளிப்புப் பழவகை மரங்களினூடாகவும், மற்றெல்லாவற்றினூடாகவும் வளர்ந்து, மரத்தின் உச்சியில் கனிகளைக் கொடுத்தன, எல்லா ஸ்தாபன ஒட்டுப்போடுதல்களுக்கும், கிளைகளுக்கும் மேலாக. நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? நான் துரிதமாக முடிக்கிறேன். பலமுள்ள மனிதன்…
167தாவீதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவன் நேர்மையாயும், உத்தமமாயும், தேவனுக்கு ஒரு சேவை செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தாலும், அதைச் செய்ய நியமிக்கப்படவில்லை. 316 “அவர்கள்,” அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்; ஆனால் இயேசு, “அவர்கள் (வேத வாக்கியங்களின்) போதகங்களுக்கு மனிதனுடைய அர்த்தத்தை போதிக்கிறார்கள்” என்று கூறினார். பாருங்கள், தேவனுடைய வார்த்தையல்ல, அவருடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையல்ல; பாருங்கள், ஒரு சரித்திரப்பிரகாரமான கிறிஸ்துவைப் போதித்தது. வேதம், “அவர் அப்படித்தான்” என்று கூறியுள்ளது. “இருக்கிறேன்,” “இருந்தேன் அல்லது இருப்பேன்” என்பதல்ல. “இப்பொழுது நான் இருக்கிறேன்.” அவரே இங்கே ஜீவிக்கிற அந்த வார்த்தையாயிருக்கிறார். அவர் ஆதியில் இருந்தார், அவர் அந்த—அவர் கிளைகளில் இருந்தார்; அவர் பட்டுக் குஞ்சத்தில் இருந்தார்; அவர் பதரில் இருந்தார்; ஆனால் இப்பொழுது அவர் தானியத்தில் இருக்கிறார்.
168317 இப்பொழுது, நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் ஜீவிக்க முயற்சிக்கிறீர்களா? அந்த ஜீவன் திரும்ப வருமானால், (விட்டுச்சென்ற) ஜீவன் எப்போதாவது பேசும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அந்த பழைய பதர் உலர்ந்த பிறகு திரும்பிச் சென்று, எப்போதாவது திரும்பிச் சென்று அதில் மீண்டும் ஜீவிக்குமா? அது ஒருபோதும் செய்யாது. “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு மறுதலிக்கிறவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம்” வார்த்தை நிறைவேறினபோது அதனோடு செல்லாமல், “அவர்கள் மரித்துப், போய்விட்டனர்; முள்செடிகளும் முள் பூண்டுகளும் தகாததாயும் உள்ளது, சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.” அது சரியா? இப்பொழுது என்னால் முடிந்தளவு துரிதமாக முடிக்கிறேன்.
169318 இப்பொழுது வேதவாக்கியத்தைக் கவனியுங்கள். ஒரு சரித்திரப்பிரகாரமான தேவனைப் போதித்தல், பாருங்கள், அவர்கள் கடந்த காலத்தில் வாழ முயற்சிப்பது போல, “பாருங்கள், வெஸ்லி இன்ன-மற்றும்-இன்னதைக் கூறினார்” என்பது போல. அல்லது, “இன்ன-மற்றும்-இன்னதை இன்ன-மற்றும்-இன்னதை என்று கூறினார்.” நீங்கள் இந்நாளின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையை, அந்த நாளின் தெளிவாக அடையாளங்காட்டப்பட்ட மன்னாவை ஏற்க மறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் தங்களுடைய பழைய லூத்தரன், பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே திராட்சரசங்களை நம்முடைய புதிய துருத்திகளில் கலக்க முயற்சிக்கின்றனர். அது கிரியை செய்யாது. நம்முடைய புதிய திராட்சரசம், அவர்களுடைய பழைய துருத்திகளில் கிரியை செய்யாது. அவர்கள் இந்த புதிய திராட்சரசத்தை ஸ்தாபனத்தில் சேர்க்க முயற்சித்தால், அவர்களுடைய மதிகேடு வெளிப்படும். அவர்களால் அதைச் செய்ய முடியாது. அது அவளை வெடிக்கச் செய்கிறது. “இப்பொழுது, சகோதரனே, நான் தேவனுடைய வார்த்தையை வார்த்தையினாலே பரிபூரணமாகக் கண்டேன்!” 319 “இப்பொழுது, இங்கே பாருங்கள், வேதபண்டிதரே…நாம்—நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது.” நெட், நீங்கள் சமீபகாலமாக அதில் சிலவற்றை உடையவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். “நாம், நாம் அதை இப்பொழுது இங்கே கொண்டிருக்க முடியாது. நான்—நான் ஒருக்கால் நீங்கள் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்” என்றேன். உங்களுக்குத் தெரியும். பாருங்கள், அது கிரியை செய்யாது. அது வெடித்து சிதறுகிறது. 320 “நீங்கள் ஒரு புதிய துண்டு துணியை ஒரு பழைய ஆடையில் இணைப்பதில்லை, ஏனென்றால் நீங்கள் அவைகளையெல்லாம் கிழிந்துபோகச் செய்கிறீர்கள்.” பார்த்தீர்களா? இயேசு அதைக் கூறவில்லையா? நீங்கள் புதிய திராட்சரசத்தை பழைய துருத்திகளில் வைக்க முடியாது. அது அவைகளை வெடிக்கச் செய்கிறது. புதிய திராட்சரசம் ஜீவனைப் பெற்றுள்ளது. சரி.
170321 நாம் நம்முடைய பேச்சை முடித்துக்கொண்டிருக்கையில், இங்கே ஒரு காரியத்தைக் கவனியுங்கள், இப்பொழுது மிகவும் துரிதமாக… நீங்கள் அதைக் குறித்துக்கொள்ள விரும்பினால் வெளிப்படுத்தல் 16:13 முதல் 14 வரை கவனியுங்கள். அதற்கு செல்ல எனக்கு நேரமில்லாமல் போகலாம். நீங்கள் நிச்சயமுடையவர்களாயிருந்து அதைக் காணும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது கவனியுங்கள், இது ஆறாம் கலசத்திற்கும் ஏழாம் கலசத்திற்கும் இடையே தொனிக்கிறது. இப்பொழுது நாம்…நாம் இன்னும் ஒரு சில நிமிடங்கள் உங்களால் பொறுத்துக் கொள்ள முடிந்தால், இன்னும் ஒரு நிமிடத்தில் முடித்துவிடுவோம். இப்பொழுது முடிவடைகிறது. 322 வெளிப்படுத்தின விசேஷம் 16:13 முதல் 14 வரை, ஆறாம் கலசத்திற்கும் ஏழாம் கலசத்திற்கும் இடையில் கவனியுங்கள், “தவளைகளைப் போன்ற மூன்று அசுத்த ஆவிகள்” (நீங்கள் அதை கவனித்தீர்களா?) “யாரோ ஒருவருடைய வாயிலிருந்து புறப்பட்டுச் சென்றன.” இப்பொழுது துரிதமாக கவனியுங்கள். நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஆவிகளின் திரித்துவம்!
171323 இப்பொழுது ஸ்தாபன சகோதரனே, அப்படியே ஒரு நிமிடம் அமைதியாயிருங்கள். இந்த வானொலியில், தொலைபேசி இணைப்பு இணைப்பில் பின்னால் உள்ள இந்த அறையை விட்டு எழுந்து நடந்து செல்லாதீர்கள். ஒலிப்பதிவு கருவியை அணைக்காதீர்கள். அப்படியே ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்து கேளுங்கள். நீங்கள் தேவனால் பிறந்திருக்கிறீர்கள்.
172324 திரித்துவ தவளைகள்! ஒரு தவளை எப்பொழுதுமே பின்னோக்கிப் பார்க்கும் ஒரு மிருகமாகும். அது எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அது ஒருபோதும் முன்னோக்கி நோக்கிப் பார்ப்பதில்லை; அது எங்கிருந்து வருகிறது என்று பார்க்கிறது. பார்த்தீர்களா? நீங்கள் பார்க்கவில்லையா? திரித்துவக் கொள்கை எங்கே பிறந்தது? நினைவிருக்கட்டும், “மூன்று அசுத்த ஆவிகள்,” தனிப்பட்ட ஆவிகள். நீங்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 325 கவனியுங்கள், அவர்கள் திரித்துவ உபதேசம் வேதாகமத்தில் பிறந்த நிசாயா ஆலோசனை சங்கத்தையே திரும்பிப் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. அவர்கள் ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் நடந்த நிசாயா ஆலோசனை சங்கத்தை திரும்பிப் பார்க்கின்றனர், அங்கே திரித்துவம் பிறந்தது. 326 அவைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கவனியுங்கள். கவனியுங்கள். திரித்துவ தவளைகள் ஒரு பழைய திரித்துவத்திலிருந்து தோன்றி, ஒரு புதிய திரித்துவத்தைப் பெற்றெடுத்தன, அவைகளுடைய தாய். அது எதிலிருந்து வெளிவந்தது? ஒரு திரித்துவம், “வலுசர்ப்பம்,” பாருங்கள், “மிருகம்,” மற்றும் “கள்ளத் தீர்க்கதரிசி.” ஒரு திரித்துவம், புதியது. இந்த தவளைகள் எப்பொழுது தோன்றின? அது எப்பொழுது நடந்தது? கவனியுங்கள், அவைகள் எல்லா நேரத்திலும் அங்கே இருந்தன, ஆனால் அது ஆறாம் கலசத்திற்கும் ஏழாம் கலசத்திற்கும் இடைப்பட்ட காலம் வரை, முத்திரைகள் திறக்கப்படுவதற்கு முன்பு (ம்ம்ம்?) வெளிப்படுத்தப்படவில்லை. 327 “ஏழாம் தூதனின் செய்தியில் தேவனுடைய இரகசியங்கள் அறியப்படும்,” இந்த திரித்துவக் காரியங்கள் யாவும், தவறான ஞானஸ்நானங்கள் யாவும் வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தது. சத்தியம் என்னவென்பதைக் காண தேவனே நமக்கு உதவி செய்வாராக! யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைக் கூற முயற்சிக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்…
173328 அந்த ஆவி அதைக் குறித்து கோபங்கொள்வதை நான் உணருகிறேன், நீங்கள் பாருங்கள். சகோதரனே, நான் என்னைக் குறித்து பேசவில்லை. நான் பாளையத்தில் இருக்கிற கர்த்தருடைய தூதனைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை. 329 கவனியுங்கள், ஒரு திரித்துவம்! “வலுசர்ப்பம்” என்ன என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அது ரோமாபுரியாயிருந்தது. “அவளுடைய பிள்ளை பிறந்தவுடனே அதைப் பட்சிக்கும்படிக்கு வலுசர்ப்பம் ஸ்திரீக்கு முன்பாக நின்றது.” அது சரியா? வேதாகமத்தில் “மிருகம்” என்பதன் பொருள் என்ன? வல்லமை. சரி. “கள்ளத் தீர்க்கதரிசி, ஒரு கள்ளத் தீர்க்கதரிசி,” ஒரு கள்ள, அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவன். பார்த்தீர்களா?
174330 எங்கே துவங்கினது? இது “கள்ளத்தீர்க்கதரிசி” என்று ஒருமையில் உள்ளது. “கள்ளத் தீர்க்கதரிசி,” முதல் போப்பாண்டவர்; “வேசிகளின் தாய்” என்ற அந்த முழு காரியமும் அங்கிருந்து வெளிவந்தது. 331 ஒரு போலியான திரித்துவம் எழும்பிக்கொண்டிருந்தது; ஆரம்ப நாட்களில் இல்லை, ஆரம்ப நாட்களில் வெளிப்படுத்தப்படாது, அது அதனூடாகவே தொடர்ந்து சென்றது. ஆனால் ஏழு முத்திரைகள் தோன்றி, அந்த இரகசியங்களைத் திறந்து அவைகளை வெளிப்படுத்தினபோது, அப்பொழுது தான், “தவளைகளைப் போன்ற மூன்று அசுத்த ஆவிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள புறப்பட்டு வந்தன,” சத்தியத்திற்கு விரோதமான திரித்துவ உபதேசம். பார்த்தீர்களா? ஹூ! அது எங்கிருந்து வருகிறது என்று பார்த்தீர்களா? அது எங்கே திரும்பிப் போகிறது என்று பார்த்தீர்களா? உலக சபை. எப்படியாயினும், அவர்கள் எல்லோரும் சகோதரர்கள்; அதே ஆவிகள், அதே காரியம். 332 கவனியுங்கள். மிகவும் வஞ்சித்து, அற்புதங்களை நிகழ்த்துகிறதே! இவர்கள் பூமியிலுள்ள எல்லா தேவர்களிடத்திற்கும் புறப்பட்டுச் சென்று, கடைசி நாளில் அவர்களை வஞ்சிக்கும்படிக்கு, அற்புதங்களைச் செய்து, அதைச் செய்வதில் வெற்றியடைவார்கள். அந்த பொல்லாத ஆவியைக் குறித்து தேவன் என்ன கூறினார்? மேலும், “நான் போய் அந்த தீர்க்கதரிசிகளின் வாயில் பேசி, அவர்கள் ஒரு பொய்யை தீர்க்கதரிசனமாக உரைக்கச் செய்வேன், ஆகாப் அங்கே அழிக்கப்படுவதற்குக் காரணமாயிருந்தது.”
175333 தேவன், “போ. நீ வெற்றியடைவாய். நீ அதை அவர்களை விசுவாசிக்கச் செய்வாய். அவர்கள் துவக்கத்திலிருந்தே, அந்த வார்த்தையில் இல்லை” என்றார். பார்த்தீர்களா? “போ, ஏனென்றால் நீ அவனை சம்மதிக்கச் செய்வாய். நீ கள்ளத் தீர்க்கதரிசிகளுக்குள் வரும்போது, நீ அதைச் செய்வாய், ஏனென்றால் அவன் அவர்களைச் சரியாக சார்ந்திருக்கிறான். அவன் வார்த்தையைக் குறித்து ஒன்றுமே அறியாதிருப்பான், அவன் அதைக் குறித்து கற்றுக்கொள்ள முயற்சிக்கமாட்டான். அவனால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் அவன் துவக்கத்திலேயே ஒரு நெருஞ்சில் பூஞ்சையாய் இருக்கிறபடியால்.” பார்த்தீர்களா? பார்த்தீர்களா? “நீ வெற்றியடைவாய்.”
176இங்கே இந்த கள்ளத் தவளைகளைப் பாருங்கள், பின்னோக்கிப் பார்த்து, “ஏன், அவர்கள் அங்கே நிசாயாவில் என்ன கூறினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?” 334 நிசாயாவில் அவர்கள் என்ன கூறினார்கள் என்பதைக் குறித்து நான் கவலைப்படுகிறதில்லை. இங்கே தேவனுடைய சிங்காசனத்தண்டையிலே அவர்கள் கூறினதையே நான் கூறிக்கொண்டிருக்கிறேன்; என்னவாயிருக்கும், என்னவாக இருக்காது என்பதல்ல; என்னவாயிருக்கும், ஏனென்றால் அவர் “நான் இருக்கிறேன்” என்பதாகும். பார்த்தீர்களா? “போலியானது.” அதைப் பாருங்கள். ஹூ! அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
177335 இப்பொழுது (கூர்ந்து கவனியுங்கள்.) ஏழு முத்திரைகள் திறக்கப்பட்ட பிறகு நாம் தெளிவாகப் பார்ப்போம். அது அந்த இரகசியத்தை வெளிப்படுத்துவதாகும். அந்த திரித்துவம் என்றால் என்ன? பார்த்தீர்களா? அது திரித்துவம் என்று எங்கே அழைக்கப்பட்டது? பார்த்தீர்களா? வேதத்தில் திரித்துவம் என்ற வார்த்தைக் கூட எங்கே கூறப்பட்டுள்ளது? மூன்று தேவர்கள் எங்கே இருக்க முடியும், நாம் மூன்று தேவர்களைத் தொழுதுகொண்டு, அஞ்ஞானிகளாயில்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்? 336 “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று அவர் கூறினபோது, அவர்கள் எப்படி பிரிந்திருக்க முடியும்? “நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்களுடைய பாவத்தில் அழிந்து போவீர்கள், பாருங்கள், உங்களுடைய அவிசுவாசம்.” பாவம் என்பது அவிசுவாசம். “நீங்கள் உங்களுடைய அவிசுவாசத்தில் அழிந்து போவீர்கள்.” ஓ, நான் யார் என்று நீங்கள் கூறுகிறீர்கள், நான் எங்கிருந்து வந்தேன் என்று நீங்கள் சொன்னீர்கள். ஓ, நீங்கள் என் பிதாவை அறிந்திருக்கிறீர்களா அல்லது அவருடைய நாமத்தை உங்களால் கூற முடியுமா? நான் சாரோனின் ரோஜாவும், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமு மாயிருக்கிறேன். அவர் யாரென்று உங்களால் எனக்கு கூற முடியுமா? எரிகிற முட்செடியில் மோசேயினிடத்தில் பேசினவர் நானே , நான் ஆபிரகாமின் தேவனும், பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமு மாயிருக்கிறேன். நான் சாரோனின் ரோஜா, ஓ, நான் எங்கிருந்து வந்தேன் என்று நீங்கள் கூறினீர்கள்; ஓ, நீங்கள் என் பிதாவை அறிந்திருக்கிறீர்களா அல்லது அவருடைய நாமத்தை உங்களால் கூற முடியுமா? (ஆமென்!) நானே அல்பாவும், ஓமெகாவுமாயிருக்கிறேன், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்; நானே முழு சிருஷ்டி, இயேசு என்பது அவருடைய நாமம்.
178அது உண்மை. திரித்துவம் இல்லை! இல்லை ஐயா. அது ஒரு தவறான காரியம். 337 ஏழு முத்திரைகள், “முடிவடைய வேண்டிய” அந்த இரகசியங்களைத் திறந்து காண்பிக்கின்றன. முத்திரை திறக்கப்பட்டது; முத்திரைகள் இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்தி, வெளிப்படுத்தி, அந்த எல்லா சபைகளினூடாகவும், ஸ்தாபனங்கள் மூலமாகவும். வெளிப்படுத்தின விசேஷம் ஏழு-…“பெரிய வேசி,” அவள் யாராயிருந்தாள்? ஆனால் அவளோ “ வேசிகளின் தாய் ” என்றும் கூட இருக்கிறாள். பார்த்தீர்களா?
179நீங்கள், “இப்பொழுது, நீங்கள் அவர்களை ‘பருந்துகள்’” என்று அழைத்தீர்கள். “சகோதரன் பிரான்ஹாம்” என்று கூறலாம். அது உண்மை. 338 ஆனால், நினைவிருக்கட்டும், ஒரு பருந்து ஒரு பறவை. அதுவும் கூட, பறக்கும்படி அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறது. “தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கத்தக்கதாக இவ்விரு ஆவிகளும் மிகவும் நெருக்கமாயிருக்கின்றன…” ஒரு பருந்து ஒரு—ஒரு கழுகைப் போன்ற பெரியதாயுள்ளது. அதனால் அந்தக் கழுகைப் போல பறக்க முடிந்தது; பறக்கவோ, பிரசங்கிக்கவோ, தீர்க்கதரிசனம் உரைக்கவோ அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறதைக் கவனியுங்கள், கழுகைப் போலிருக்கிறது. ஆனால் அதனால் உயரத்தில் கழுகைப் பின்பற்ற முடியாது. இல்லை, இல்லை. அது கழுகைப் பின்தொடர முயற்சித்தால், அதனுடைய மதிகேடு வெளிப்படும். ஆம், ஐயா. அதனால் கழுகைப் பின் தொடர முடியாது. 339 ஓ, அவன், “இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் பிதாவாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனை, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரை விசுவாசிக்கிறேன்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே,” என்று கூறலாம். ஓ, நிச்சயமாக, அவர்களால் அதைச் செய்ய முடியும். ஆனால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதைக் குறித்து என்ன? பார்த்தீர்களா?
180340 ஒரு கழுகு ஒரு விசேஷித்த முறையில் உருவாக்கப்பட்ட பறவை. பூமியில் அதைப் போன்ற ஒன்றுமே இல்லை. பார்த்தீர்களா? அது—அது…ஒரு பருந்தோ அல்லது வேறு எந்த பறவையோ அதை பின் தொடர முயற்சித்தால், அது சிதைந்துபோகும். அதனுடைய மதிகேடு, நிச்சயமாகவே வெளிப்படும். அவன் புதிய திராட்சரசத்தை ஒரு பழைய துருத்தியில் வைக்க முயற்சிக்கும்போது அது வெடித்து சிதறும். பாருங்கள், அது வெடித்து சிதறும். அது சிதறுண்டு போகும். அது சிருஷ்டிக்கப்படவில்லை, அது…அதனுடைய சரீரம் அதனை அங்கே உயர்த்திப் பிடிக்கக் கூடிய அமைப்புடன் ஒன்று சேர்க்கப்படவில்லை. அவன் அந்த பெரிய கோளங்களுக்குள் செல்லும்போது, அது முன்குறிக்கப்படாமல், கழுகாக பிறக்கவில்லையென்றால், அது சுக்குநூறாக உடைந்துபோகும். பார்த்தீர்களா? அதனுடைய சிறகுகளிலிருந்து சிறகுகள் பறந்து வந்து, அது பூமியில் விழுந்துவிடும். நிச்சயமாக. அதனால் உயரத்தில் கழுகைப் பின்தொடர முடியாது. அது முயற்சித்தால், அதனுடைய மதிகேடு வெளிப்படும். அது உண்மை. உங்களால் முடியாது.
181341 ஏன்? அதனால் கழுகைப் போல் பார்க்க முடியாது. உண்மையாகவே உயரத்தில் குதிக்க முயற்சித்து, நீங்கள் அங்கு இருக்கும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைக் காணமுடியவில்லையென்றால், அது என்ன நன்மையைச் செய்கிறது? அது உயரத்தில், இந்த கழுகினை ஆள்மாறாட்டம் செய்ய முயன்றால், அவன் என்ன கிரியை செய்திருக்கிறான் என்பதை அறியாதபடி அவன் மிகவும் குருடாயிருக்கிறான். அது உண்மை. அவன் கூச்சலிட்டு, சத்தமிட்டு, தொடர்ந்து அதைச் செய்கிறான்; ஆனால், அவனிடத்தில் வார்த்தையை மாத்திரம் பேசினால், அவனுடைய மதிகேடு அங்கே வெளிப்படுகிறது. 342 இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து அவனிடத்தில் பேசி, அல்லது, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், அந்தவிதமாக எல்லாமே—அனைத்துமே, அவனிடம் சொல்லிப் பாருங்கள். “ஏன், ஓ, இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள்!” பார்த்தீர்களா? ஓ, ஆம், இதோ அதனுடைய சிறகுகள் விழுந்து கொண்டிருக்கின்றன. பாருங்கள், அவன் எழும்பி, தீர்க்கதரிசனம் உரைத்து, பிசாசுகளைத் துரத்துகிறான், அந்நிய பாஷைகளில் பேசி, தொடர்ந்து தரையில் மேலும் கீழுமாக ஓடிக்கொண்டிருக்கிறான். ஆனால் அங்கே வார்த்தையைப் பின் தொடர முயற்சிக்கமாட்டான்; அவன் நிச்சயமாக வெளிப்படுத்தப்படுவான். 343 அதே சமயத்தில் அவன் நியமிக்கப்பட்டிருக்கிறான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறான். அவனால் பறக்க முடியும். அவனால் தன்னை சமன் செய்து, அங்கே மேலே செல்ல முடியும், ஆனால்…அவ்வளவு தூரம் செல்ல முடியாது. பாருங்கள், அவனால் ஒரு அழுகிப்போனதைப் புசிக்க முடியும், ஆனால் அவனால் சிங்காசனத்திலிருந்து வருகிற புதிய மாமிசத்தை புசிக்க முடியாது. 344 அவன் குருடாயிருக்கிறான். அவன் முழுவதும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறான், ஆனால் அவன் எதைக் குறித்து உணர்ச்சிவசப்பட்டான் என்பதை அவன் அறியாதிருக்கிறான். பாருங்கள், மழையைப் போல, அவனை ஒரு கோதுமையாக்க, அவன் மேல் விழுந்தது; அவனோ துவக்கத்திலேயே கோதுமை அல்ல. அவன் வெடிக்கிறான். “ஓ, என்னால் சிலவற்றிற்கு போக முடியாது…ஓ, இல்லை, ஐயா! வேதபண்டிதர் ஜோன்ஸ் கூறியதை நான் அறிவேன்…” சரி, தொடர்ந்து செல்லுங்கள். பார்த்தீர்களா? நீங்கள் விரும்பினால், தொடர்ந்து செல்லுங்கள்.
182345 இல்லை, கவனியுங்கள், அவன் அந்த விதமான பறவையாயிருக்கும்படி பிறக்கவோ, உருவாக்கப்படவோ அல்லது முன்குறிக்கப்படவோ இல்லை. அவனால்…அவன்…ஒரு ஆரஞ்சு மரத்தில் விளைந்த ஒரு எலுமிச்சம் பழமாக இருக்கக் கூடும், ஆனால் அது வேரிலிருந்து தோன்றவேயில்லை. அவன் சேர்க்கப்பட்டிருக்கிற ஏதோ ஒரு காரியமாய் இருக்கிறான். அவர்கள் தங்களுடைய ஸ்தாபனங்களில் முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை ரூபகாரப்படுத்தப்படுவதைக் காண முடியாத அளவிற்கு உயர முயற்சிக்கும்போது, அப்பொழுது அவர்களுடைய மதிகேடு வெளிப்படும். “ஓ, அந்த காரியம், தலைக்கு மேல் ஒளிவட்டம், மற்றும் அனைத்தும், ஓ, அது அர்த்தமற்றது என்றாகிவிடுகிறது.” பார்த்தீர்களா? வெளிப்படுத்தப்படுகிறது.
183346 அவ்வளவு தூரம் காணும்படியாக அவன் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அவனுடைய ஸ்தாபனக் கண்ணாடி அவனை நோக்கிப் பார்க்க அனுமதிக்கும் அளவிற்கு மாத்திரமே அவனால் காண முடியும். ஆனால், அதற்குப் பிறகு, அவன் ஒரு வௌவாலைப் போல குருடாயிருக்கிறான். அப்பொழுது அவனுடைய முட்டாள்தனம் வெளிப்படுகிறது. பார்த்தீர்களா? அங்கேதான் உண்மையான கழுகு புசிக்க அமர்ந்திருக்கிறது. ஆம், ஐயா. அங்குதான் உண்மையான, தெரிந்து கொள்ளப்பட்ட கழுகுகள் அது என்னவாயிருக்கின்றன என்பதைக் காண்கின்றன. அவனால் அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாதபோது, அப்பொழுது அவன் ஒரு ஸ்தாபன பருந்து என்பதை அவர்கள் அறிவார்கள். 347 ஏன், ஏன் அவனால் பறக்க முடியவில்லை? காரணம், அவன் என்ன புசித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பாருங்கள். அவன் ஸ்தாபனத்தில் அழுகிப்போனதையே புசித்துக்கொண்டிருக்கிறான். அது—அது அவனுடைய சரீரத்தை ஆவிக்குரிய மயமாக்காது, அவனை ஆவிக்குரிய தகுதிக்கு கொண்டு செல்லாது, வேறு வார்த்தைகளில் கூறினால், ஸ்தாபன வேறுபாடுகளுக்கு அப்பால் அவனைக் கொண்டு செல்ல வேண்டும். பார்த்தீர்களா? பாருங்கள், அவன் அழுகிப்போன ஆகாரத்தினால் போஷிக்கப்பட்டிருக்கிறான்; அவனுடைய சரீரம் அதிலிருந்து உண்டாக்கப்பட்டிருக்கிறது. கழுகு கொண்டு செல்லும் அந்த புதிய மாமிசம் உள்ள இடத்திற்கு அவனால் அங்கு செல்ல முடியாது. அவனால் அதைச் செய்ய முடியாது. பார்த்தீர்களா?
184348 அது மத்தேயு 24:24 நிறைவேறுகிறது. அது பறந்து, ஆகாயத்தில் குதித்து, தன்னுடைய சிறகுகளை அடித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் அதனால் போதிய உயரத்திற்கு செல்ல முடியவில்லை. பார்த்தீர்களா? அது உண்மை. பாருங்கள், அவனால் செல்ல முடியாது, அவனால் அந்த புதிய மன்னாவைப் பெற போதுமான உயரத்தை அடைய முடியாது. அவனால் இங்கே தரையில் உள்ள பழைய மன்னாவைப், ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மாசுபடுத்தப்பட்ட பழைய செத்த முயல்களையே புசிக்க முடியும். அவனால் அதைப் புசித்து, அதைக் குறித்து களிகூர்ந்து, கூச்சலிட்டு, சத்தமிட்டு, தொடர்ந்து குதித்து, மற்றொரு கழுகைப் போல பறக்க முடியும். அவன் மற்றொரு பறவையைப் போல அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறான். 349 அது ஒரு கழுகுக்கு ஒரு மாதிரியாயுள்ள, ஒரு பருந்தாயுள்ளது. நாம் அதை அறிவோம். அவன் நிச்சயமாகவே அவ்வாறு இருக்கிறான், ஆனால் அவனால் அந்த அசலான கழுகைப் பின்பற்ற முடியாது. பார்த்தீர்களா? அவனால் அதைச் செய்ய முடியாது. இல்லை ஐயா. அவனுடைய சரீரம் அதற்கேற்ப உருவாக்கப்படவில்லை; அவன் வேறு அழுகியவைகளை புசித்துக் கொண்டிருக்கிறான், பாருங்கள், அது…அது—அது புதிய மாமிசமாக, புதிய மன்னாவாக இருக்காது. அது லூத்தர் கூறியதாகவோ, வெஸ்லி கூறியதாகவோ அல்லது வேத பண்டிதர் இன்னார்- மற்றும்-இன்னார் கூறியதாகவோ இருக்கும். அது இந்த வேளைக்கான இயேசு என்ன கூறினார் என்பதன் பேரில் இருக்காது.
185350 இப்பொழுது நாம் கூர்ந்து பார்ப்போம். அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், “கிறிஸ்துக்கள்,” கடைசி நாட்களில், ஆனால் “கள்ளப் போதகர்கள், கள்ளத்தீர்க்கதரிசிகள்.” கவனியுங்கள், எவ்வளவு விசேஷமானது! இப்பொழுது, நீங்கள் இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; அதை வாசிக்க நமக்கு நேரமில்லை. மத்தேயு 24:24 இரண்டாம் தீமோத்தேயு 3:8 உடன். 351 மத்தேயு 24:24, கடைசி நாட்களில், பாருங்கள், “கள்ளக் கிறிஸ்துக்கள் வருவார்கள்,” என்று கூறியுள்ளது, கள்ள, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், “கள்ளத் தீர்க்கதரிசிகள், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்,” உண்மையான ஒருவரை, உண்மையான ஒருவரைப் போலவே, “தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்.” இப்பொழுது கவனியுங்கள், அது இயேசு பேசிக்கொண்டிருந்தது.
186352 இதோ பவுல் அவருக்குப் பிறகு வந்து, “இப்பொழுது, கடைசி நாட்களில், பக்தியுள்ள ஜனங்கள், பாருங்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து வருவார்கள். எல்லாவிதமான உலகப்பிரகாரமான இச்சைகளால் இழுப்புண்ட, புத்திகெட்ட பெண்பிள்ளைகளை வசப்படுத்திக்கொள்வார்கள்” என்றான். அப்பொழுது அவர்கள், “நீங்கள் ஏன் அந்த ஸ்திரீகளைத் கடிந்து கொள்கிறீர்கள்?” என்று கூறி, வியப்புறுகின்றனர். ஓ, நன்மைக்காக…அவர்கள் அதைக் கூட புரிந்துகொள்ளவில்லை. “பல்வேறு இச்சைகளால் இழுப்புண்ட, புத்திகெட்ட ஸ்திரீகளை வசப்படுத்திக்கொள்ளுதல்” போன்ற காரியங்களிலிருந்து விலகி…பாருங்கள், “யந்நேயும் யம்பிரேயும் போல…” மத்தேயு 24:24-ல், “கள்ளக்கிறிஸ்துக்கள்,” கள்ளத்தனமான, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்க அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார்கள். 353 இப்பொழுது, யந்நேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல, இவர்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள், விசுவாசத்தைக் குறித்த கேடான சிந்தையை உடையவர்களாயிருக்கிறார்கள். ஒரு விசுவாசம் அல்ல, அந்த விசுவாசம்! “ஒரே விசுவாசம், ஒரே கர்த்தர், ஒரே ஞான-…” நீங்கள் ஒரே கர்த்தரை விசுவாசிக்காமல் ஒரே விசுவாசத்தை உடையவர்களாயிருக்க முடியாது. நீங்கள் இரண்டு ஞானஸ்நானங்களை பெற்றுக்கொள்ள முடியாது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற ஒன்று அல்ல. ஒரே ஞானஸ்நானம்: இயேசு கிறிஸ்து. பார்த்தீர்களா? அது உண்மை. பாருங்கள், தவறான ஞானஸ்நானம்!
187354 கவனியுங்கள், நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் அவைகளை ஒன்றாக ஒப்பிட்டுப் பாருங்கள். கவனியுங்கள் மத்தேயு 24:24-ல் இயேசு பேசுகிறார்; பவுல், இரண்டாம் தீமோத்தேயு 3:8; இன்னும் அநேகர். இப்பொழுது அதை ஒப்பிட்டுப் பாருங்கள். அதன்பின்னர் மற்றொரு வேதவாக்கியத்தை ஒப்பிட்டுப் பாருங்கள், லூக்கா 17:30, மல்கியா 4. “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல,” அந்த வேளையின் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை, “அப்படியே இந்த மனிதர்கள்,” மனிதன் அல்ல, “மனிதர்கள்,” அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், “சத்தியத்திற்கு எதிர்த்து நிற்பார்கள்.” 355 “மனுஷகுமாரன் வெளிப்படும் அந்த நாளிலே.” வெளிப்படுத்தின விசேஷம் 10:1 முதல் 7 முடிய உள்ள வசனங்களில், “ஏழாம் தூதனின் செய்தி, முத்திரைகள் திறக்கப்படுதல்” என்பதை நீங்கள் வீட்டிற்கு சென்றவுடன் வாசியுங்கள். அது என்ன? தூதன் மனுஷகுமாரன் அல்ல; ஆனால் செய்தியாளனோ மனுஷகுமாரனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது உங்களால் அதைப் பிரித்துப் பார்க்க முடியுமா? நீங்கள் பாருங்கள், அங்குதான் அது உங்களுக்கு மிகவும் கடினமாக இருப்பது போன்று தென்படுகிறது. மனுஷகுமாரன், தாமே அல்ல; ஆனால் ஏழாம் தூதன், ஏழாம் செய்தியாளன், மனுஷகுமாரனை மக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார், ஏனென்றால் அது பதரை விட்டுவிட்டது. அவனால் அதை ஒழுங்குபடுத்த முடியாது. அது தாமே, மீண்டும், தானியமே. 356 “அந்நாளில் யந்நேயும் யம்பிரேயும் எதிர்த்து நிற்பார்கள்,” அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் (பாவனை-விசுவாசிகள், அவிசுவாசிகள், முறையான சபை மற்றும் பெந்தேகோஸ்தேக்கள்) உண்மையான தானியத்திற்கு எதிராக நிற்பார்கள், “ஆனால் அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்களுடைய மதிகேடு, அவர்களுடையது போலவே வெளிப்படும்.” பார்த்தீர்களா? இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]
188357 வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரம், “ஏழாம் தூதனின் சத்தத்தின் நாட்களில்” என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது ஏழாவது, லவோதிக்கேயா சபையின் காலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “அந்த தூதனின் முழக்கம்” அந்த சபைக்காலம் ஸ்தாபனமாக்கப்பட்டு, ஒரு சபைக்காலமாக மாறும்போது, அது அதனுடைய பெந்தேகோஸ்தே ஸ்தாபனமாக்கப்படும்போது, அதற்குரிய செய்தியாளன்… 358 ஒவ்வொரு செய்தியாளனும் என்னவாயிருந்தனர்? மார்டின் லூத்தர் என்னவாயிருந்தார்? கத்தோலிக்கருக்கு ஒரு கடிந்துரைத்தல். வெஸ்லி என்னவாயிருந்தார்? லூத்தரன்களுக்கு ஒரு கடிந்துரைத்தல். பெந்தேகோஸ்தே என்னவாயிருந்தது? மற்றவர்களுக்கு ஒரு கடிந்துரைத்தல். இப்பொழுது ஜீவன் எங்கே போய்விட்டது? ஒரு ஸ்தாபனத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். இனிமேல் பதர் இல்லை; அது தானியமாகும். அது என்ன? இந்த வேளைக்கான வேதவாக்கியம் நிறைவேறும்படியாக, பெந்தெகொஸ்தேயினருக்கு ஒரு கடிந்து கொள்ளுதல் பாருங்கள். பார்த்தீர்களா?
189359 கவனியுங்கள், இந்த செய்தியாளன்…அவன் துவங்கும் போது அல்ல, ஆனால் அவன் தன்னுடைய செய்தியை அறிவிக்கத் துவங்கும் போதே. பார்த்தீர்களா? முதல் இழுப்பு, சுகமளித்தல்; இரண்டாம் இழுப்பு, தீர்க்கதரிசனம் உரைத்தல்; மூன்றாம் இழுப்பு, இரகசியங்கள் வெளிப்பட, வார்த்தை திறக்கப்படுதல். வார்த்தையை வெளிப்படுத்த தீர்க்கதரிசிகளைக் காட்டிலும், மேலானவர், யாருமே இல்லை. ஆனால் தீர்க்கதரிசி ரூபகாரப்படுத்தப்படக்கூடிய ஒரே வழி வார்த்தையைக் கொண்டு மாத்திரமேயாகும். மூன்றாம் இழுப்பு என்பது ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டது என்பதை, நினைவில் கொள்ளுங்கள், வார்த்தையில் முத்திரையிடப்பட்டிருக்கிற மறைவான சத்தியத்தை வெளிப்படுத்தும். நீங்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 360 அப்பொழுது இந்தக் காரியம் சம்பவிக்க வேண்டிய அந்நாளில், ஆள்மாறாட்டக்காரர்களான யந்நேயும், யம்பிரேயும் மீண்டும் தோன்றுவார்கள். மோசே அதைக் கூற மூல வார்த்தையுடன் தோன்றியபோது அவர்கள் செய்தது போலவே, அவர்களும் அதை ஆள்மாறாட்டம் செய்யத் தோன்றினர். அது முற்றிலும் சரியே. இப்பொழுது மத்தேயு 24:24 என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களே!
190361 இப்பொழுது நாம் முடிப்பதற்கு முன்பு நாம் மூன்று காரியங்களைக் கூறப் போகிறோம். இதுதான் அது. நாம் முடிக்கையில், நீங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மூன்று காரியங்கள், நினைவிருக்கட்டும், மூன்று காரியங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்பொழுது உங்களுக்கு முன்பாக மூன்று காரியங்கள் உள்ளன. 362 முதலாவதாக. உலகம் ஒரு சோதோமின் நிலையில் உள்ளது. அது சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். தாறுமாறாக்குதலைப் பாருங்கள்; நம்முடைய ஸ்திரீகள் ஆண்களைப் போல் நடந்து கொள்ள முயல்கின்றனர். நம்முடைய புருஷர்கள் பெண்மைத்தன்மை கொண்ட பெண்களைப் போல் நடந்துகொள்ள முயல்கின்றனர். அழுகிப்போய், அசுத்தமாய், கீழ்த்தரமாய், பிசாசினால் பீடிக்கப்பட்டு, அதை அறியாதவர்களாயிருக்கிறார்கள். அது சம்பவிக்கும் என்று வேதம் கூறியுள்ளது, அங்கேதான் அது உள்ளது. இரண்டாவதாக. இங்கே வேதவாக்கியத்தின்படி, அந்த வேளையில்தான் யந்நேயும் யம்பிரேயும் தோன்றுகிறார்கள். இரண்டாவதாக. மூன்றாவதாக. அதே நேரத்தில் மனுஷகுமாரன் வெளிப்பட வேண்டும்.
191363 அங்குதான் உங்களுடைய விசுவாசியும், உங்களுடைய பாவனை விசுவாசியும், உங்களுடைய அவிசுவாசியும் உள்ளனர். ஒரு அசலான வார்த்தை ரூபகாரப்படுத்தப்பட்டு, நிலைத்திருக்கிறது; பாவனை விசுவாசி அதை ஆள்மாறாட்டம் செய்கிறான்; அங்கே அவிசுவாசி முழு காரியத்தையும் புறக்கணிக்கிறான். ஆனால் கிட்டத்தட்ட சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமைக்கு செல்லும் வழியை நீங்கள் நிச்சயமாகக் கண்டடைவீர்கள்; (அது சரியா?) தேசங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரேல் விழித்தெழுகிறது, நம்முடைய வேதாகமம் முன்னுரைத்த அடையாளங்கள்; புறஜாதியாரின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன (சோதோமில்), திகில் நிறைந்திருக்கும்; “ஓ, சிதறடிக்கப்பட்டவர்களே, உங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்பி வாருங்கள்.” மீட்பின் நாள் சமீபித்துவிட்டது, இந்த பயத்தில் மனுஷனுடைய இருதயங்கள் சோர்ந்து போகின்றன; தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்களுடைய விளக்குகளை சுத்திகரித்து, சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். (அதனால் நீங்கள் இந்த மணி நேரத்தின் வார்த்தையைக் காண முடியும்.) மேலே நோக்கிப் பாருங்கள்! உங்களுடைய மீட்பு சமீபமாயிருக்கிறது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறார்கள், (அவர்கள் இங்கிருப்பார்கள் என்று அவர்கள் கூறினர்; அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்.), தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுதலித்துக் கொண்டிருக்கிறார்கள், அதாவது இயேசு கிறிஸ்துவே நம்முடைய தேவன்; அதாவது அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. அந்த காரியம் இங்கே இருக்கும் என்று வேதம் கூறியுள்ளது. இதோ அது உள்ளது! ஆனால் நாம் அப்போஸ்தலர்கள் நடந்து சென்ற பாதைகளிலேயே நடப்போம். அதே ஒளி! “பிதாக்களின் விசுவாசத்தை பிள்ளைகளுக்குத் திருப்புவது.” மீட்பின் நாள் சமீபித்துவிட்டது, (மிகவும் சமீபித்துவிட்டது.) மனுஷனுடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன; (பூமி சிதைந்து கொண்டிருக்கிறது.) ஓ, தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்களுடைய விளக்குகளை சுத்திகரித்து, சுத்தப்படுத்துங்கள். மேலே நோக்கிப் பாருங்கள்! உங்களுடைய மீட்பு சமீபமாயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அப்படியானால் நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.
192364 இந்த செய்தியானது கிழக்கு கடற்கரையிலிருந்து மேற்கு வரையிலும், கலிபோர்னியாவிலிருந்து நியூயார்க் வரையிலும், கீழே தெற்கிலும், வடக்கிலும் உள்ள, ஊழியங்களுக்கும், அது எங்கும், இந்த கூடாரத்திற்கும் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள் ஏழைகள். நமக்கு இந்த மகத்தான, பெரிய, மலர்ச்சியான காரியங்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் கிடையாது. நாம் நம்மால் முடிந்தளவு சிறந்ததைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். “ஆனால் பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவரும் வரும்.”
193365 இப்பொழுது, இந்த ஒலிநாடாவைக் கேட்கிற நீங்கள், இது நிச்சயமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள நான் விரும்புகிறேன். நான் இந்த செய்தியை சுமந்துகொண்டிருந்தபடியால், நான் என்னைக் குறித்தே அதைக் கூற முயற்சித்துக் கொண்டிருந்தேன் என்று நீங்கள் இன்றைக்கு நினைத்திருக்கலாம். எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் இல்லை, வெறுமனே ஒரு சத்தம் மட்டுமே. மேலும், என்னுடைய நியாயத்தீர்ப்புக்கு எதிராகவும் கூட, என் சத்தம் உள்ளது; நான் ஒரு கன்னி வைப்பவனாக இருக்க விரும்பினேன். ஆனால் நான் செய்ய வேண்டுமென்று அறிவித்து, செய்ய தீர்மானித்தது என் பிதாவின் சித்தமாயிருக்கிறது. 366 ஆற்றண்டையில் தோன்றினவர் நான் அல்ல; அவர் பிரசன்னமானபோது நான் அங்கே நின்றுகொண்டிருந்தேன். இந்தக் காரியங்களை நிறைவேற்றுகிறதும், அவைகள் பரிபூரணமாக சம்பவிக்க இந்தக் காரியங்களை முன்னுரைக்கிற ஒருவர் நான் அல்ல; அவர் அதைச் செய்யும்போது, நான் அருகில் மட்டுமே இருக்கிற ஒருவனாயிருக்கிறேன். நான் அதைக் கூற, அவர் உபயோகித்த ஒரு சத்தமாக மாத்திரமே இருந்தேன். அது எனக்குத் தெரிந்ததல்ல; நான் என்னைத்தானே ஒப்புவித்ததன் மூலமே, அவர் உரைத்தார். அது நானல்ல, அது ஏழாம் தூதன் அல்ல, ஓ, இல்லை; அது மனுஷகுமாரனுடைய வெளிப்படுத்துதலாயிருந்தது. அது தூதனுடைய, அவனுடைய செய்தி அல்ல; அது தேவன் வெளிப்படுத்தின இரகசியமாயிருந்தது. அது ஒரு மனிதன் அல்ல; அது தேவனாயிருக்கிறது. தூதன் மனுஷகுமாரன் அல்ல; அவர் மனுஷகுமாரனிடமிருந்து வந்த செய்தியாளனாயிருந்தார். மனுஷகுமாரன் கிறிஸ்துவாயிருக்கிறார்; அவரைத்தான் நீங்கள் புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதனைப் புசித்துக் கொண்டிருக்கவில்லை; ஒரு மனிதனின் வார்த்தைகள் தவறிப் போகும். ஆனால் நீங்கள் மனுஷ குமாரனுடைய தவறாத சரீரத்தின் வார்த்தையைப் புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். 367 நீங்கள் ஒவ்வொரு வார்த்தையின் பேரிலும் முழுமையாகப் புசித்திருக்கவில்லையென்றால், இந்த எல்லா ஸ்தாபனங்களுக்கும், உலகத்தின் காரியங்களுக்கும் மேலாக பறக்க உங்களுக்கு பெலனை அளிக்கும்படிக்கு, நாங்கள் ஜெபிக்கையில், இந்த நேரத்தில் நீங்கள் அதைச் செய்வீர்களா?
194368 அன்புள்ள பிதாவே, இது ஒரு கடினமான காரியமாய் உள்ளது. ஒரு மனிதனுக்கு அதைச் செய்வது எளிதல்ல. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். அன்புள்ள தேவனே, அது தவறாக புரிந்து கொள்ளப்படாதபடிக்கு நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். ஆனால் உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஜனங்கள் நடப்பார்களாக. 369 பிதாவாகிய தேவனே, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது; நீர் அறிந்திருக்கிறீர். உம்முடைய வருகை எப்பொழுது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது சம்பவிக்கும்போது, இந்த போலியான, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், அவர்கள் சரியாக துவங்கினபோது இல்லை. 370 மோசே அவர்களை அப்படியே விட்டுவிட்டான், ஏனென்றால் அவனால் அதைக் குறித்து ஒன்றும் செய்ய முடியவில்லை. நீர் கூறிக்கொண்டிருந்ததை மாத்திரமே அவனால் கூற முடிந்தது. நீர் அவனை வண்டுகளை வரவழைக்கச் சொன்னீர்; அப்பொழுது அவர்களும் அவைகளை வரவழைத்தனர். தண்ணீரை இரத்தமாக மாற்றச் சொன்னீர்; அப்பொழுது அவர்களும் அதைச் செய்தனர். நீர் கூறினது போன்று வார்த்தைக்கு வார்த்தை மோசே அதை நிறைவேற்றினான், ஆனால் அதன்பின்னர் நீரே மதிகேட்டை வெளிப்படுத்தின ஒருவராயிருந்தீர்.
195371 இப்பொழுதும், பிதாவே, இன்னமும், நீர் தேவனாயிருக்கிறீர். கடைசி நாட்களில் இது சம்பவிக்கும் என்று அதே வார்த்தை கூறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் கூறினது போல, அநேக நேர்மையான நபர்கள் தங்களுடைய கரத்தை அந்தப் பெட்டியின் மேல், ஒரு புதிய வண்டியின் மேல் வைத்து, லேவியர்களின் தோள்பட்டைகளில் சுமக்காமல், “பாவத்தினாலும் அக்கிரமங்களினாலும் மரித்தவர்களாய்” தங்களுடைய சொந்த மனசாட்சிக்கு விரோதமாக வாதிட்டு மரித்திருக்கின்றனர். 372 அநேக ஊழியக்காரர்கள் தங்களுடைய படிப்பாய்வில் அமர்ந்துகொண்டு, அந்த வார்த்தையை வாசித்து, பக்கத்தை துரிதமாக மாற்றிவிடுகின்றனர்; தங்களுடைய சபையோடும், தங்களுடைய ஸ்தாபனத்தோடும், அவர்கள் பொதுமக்களிடம் உள்ள சமுதாய அந்தஸ்தை இழந்துவிடுவார்கள் என்பதற்காகவுமே, அதை கடிந்துரைக்காமல் தள்ளிவிடுகின்றனர். அதை ஒருபோதும் செய்யாதபடிக்கு தேவன் எங்களுக்கு உதவி செய்வீராக!
196373 கர்த்தாவே, உலகத்தின் எல்லா அசுத்தங்களிலிருந்தும் எங்கள் இருதயங்களை சுத்திகரியும். கர்த்தாவே, நான் சுத்திகரிப்புக்காக ஆயத்தமாக நிற்கிறேன். நான் இந்த சபையோடும், கேட்டுக்கொண்டிருக்கிற எல்லோரோடும், இந்த ஒலிநாடாவை கேட்பவர்களோடும் ஆயத்தமாக நிற்கிறேன். கர்த்தாவே, நான் நின்று சுத்திகரிப்புக்காக வேண்டிக்கொள்கிறேன். கர்த்தாவே, குயவனுடைய வீட்டிற்கு என்னைக் கொண்டு சென்று, என்னை உடைத்து, நீர் விரும்பும் ஒரு ஊழியக்காரனாக என்னை உருவாக்கித் தந்தருளும். 374 ஏனென்றால் கர்த்தராகிய இயேசுவே, “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்று ஏசாயா சத்தமிட்டது போல, “அசுத்த உதடுகளுள்ள ஜனங்களிடத்தில் வாசமாயிருக்கிறேன்; எனக்கு ஐயோ, ஏனென்றால் ஏசாயா தேவதூதர்களை ஆலயத்தில் கண்டதுபோல, தேவனுடைய வெளிப்பாடு வெளிப்படுவதை நான் காண்கிறேன்.” கர்த்தாவே, நான் முடிவு நேரத்தைக் காண்கிறேன், எனக்கும் என் குடும்பத்திற்கும் ஐயோ; எனக்கும் என் ஜனங்களுக்கும் ஐயோ. ஓ நித்திய தேவனே, எங்கள் மேல் இரக்கமாயிரும். நான் எனக்காகவும், ஜனங்களுக்காகவும் மன்றாடுகிறேன். விசுவாசிக்காதவர்களோடு நாங்கள் கெட்டுப்போகாமல், விசுவாசிகளோடு ஜீவிப்போமாக.
197375 ஒவ்வொரு ஸ்தாபனமும், கர்த்தாவே, ஒவ்வொரு மனிதனும் அல்லது ஸ்திரீயும்… நீர் ஒரு ஸ்தாபனத்திற்கு எதிராக இருக்கிறீர் என்பதை நான் அறிந்திருக்கும்போது, நான் அதை உம்மை ஆசீர்வதிக்கும்படி கேட்க முடியாது. ஆனால் கர்த்தாவே, அவைகளுக்கு மத்தியில் உம்முடைய ஆடுகளில் ஒன்றை நீர் வைத்திருந்தால், அவர்கள் இந்த ஒலிநாடாவைக் கேட்கட்டும் என்று மாத்திரமே என்னால் கூற முடியும். கர்த்தாவே, அவர்கள் அதைக் கேட்டு, நீர் அவர்களுக்குக் கொடுக்கும் புரிந்துகொள்ளுதலைக் கொண்டு, அவர்கள் வெளியே வந்து உம்மை ஏற்றுக் கொள்வார்களாக. அவர்கள் இந்நாளின் குருட்டுத்தனத்தினாலும் பாரம்பரியத்தினாலும் வஞ்சிக்கப்படாதிருப்பார்களாக. வேறொரு நாளில் பிரேதமாக இருந்த ஏதோ ஒன்றை அவர்கள் புசிக்க முயற்சிக்காதிருப்பார்களாக. அவர்கள் வார்த்தையை எடுத்துக்கொள்வார்களாக. 376 கர்த்தாவே, அந்த விதமாகத்தான் பரிசேயர் உம்மை சிலுவையில் அறைந்தனர். அவர்கள் மோசேயின் நாட்களின் சடலத்தை எடுத்து, அதைக் குறித்து களிகூர முயற்சித்துக் கொண்டிருந்தனர்; ஒவ்வொரு இரவும் புதிய மன்னாவை, வனாந்தரத்தில், ஒவ்வொரு சந்ததியையும் பொருட்படுத்தி, நீர் மாதிரியாக அளித்திருந்தீர். அங்குதான் அவர்கள் தோல்வியடைந்தனர். அது அவர்களை விஷமாக்கினது. அது அந்த கெட்டுப்போன உணவை புசித்த, அவர்களைக் கொன்றது. மேலும், ஆவிக்குரிய பிரகாரமாக, அது இன்றைக்கும் அதேக் காரியத்தைச் செய்கிறது; ஆவிக்குரிய பிரகாரமாக, ஒரு ஸ்தாபனத்தோடு, அவர்களைக் கொன்றுபோட வேண்டும். அன்புள்ள தேவனே, எங்களுக்கு உதவி செய்யும். அது இப்பொழுது உம்முடைய கரங்களில் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.
198நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நீங்கள் உங்களுடைய தீர்மானத்தைச் செய்யும்போது, நாங்கள் அதைப் பாடப் போகிறோம். நீங்கள் இப்பொழுது வழி நெடுக செல்வீர்களா? என்னுடைய இரட்சகர்…(அவர் வார்த்தையாயிருக்கிறார்.) கூப்பிடுவதை என்னால் கேட்க முடிகிறது. என்னால் கேட்க முடிகிறது… “ஓ, நான் நீண்ட காலமாக அலைந்து திரிந்தேன், ஆனால், உண்மையாகவே, இப்பொழுதே நான், ‘தடவிக்கொண்டிருக்கிற நீங்கள் யாவரும், என்னிடத்தில் வாருங்கள்’” என்று அவர் கூறுவதைக் கேட்கிறேன். …கேட்கிறேன்… 377 “‘உன்னுடைய சிலுவையை எடுத்துக்கொண்டு அனுதினமும் என்னைப் பின்பற்றி வா.’ ‘ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; நிழலுள்ள பசுமையான புல்லுள்ள இடங்களினூடாகவும், அமர்ந்த தண்ணீர்களண்டையிலும் நடத்துகிறார்.’” அவர் என்னை எங்கே வழி நடத்துகிறாரோ… 378 “கர்த்தாவே, நான் அந்த திரித்துவ மதிகேட்டைக் காண்கிறேன். முழு உலகமும் அதில் விதைக்கப்பட்டதை நான் காண்கிறேன்; களைகள் எங்கும் வளருகின்றன. ஆனால் கர்த்தாவே, இப்பொழுது நீர் என்னை எங்கே வழி நடத்துகிறீர், அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் உள்ளவர்களைப் போல் நான் இருப்பேன். ‘அவர்கள் இதைக் கேட்டபோது, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.’” …பின்தொடர்ந்து, “கர்த்தாவே, உம்மை ஏற்றுக்கொள்ளும்படியான பாதையின் ஒரு பகுதிக்கு நான் சென்றிருக்கிறேன்.” இப்பொழுது நான் வழி நெடுக அவரோடு செல்வேன்.
199379 அன்புள்ள தேவனே, அது என்னுடைய இருதயத்திலிருந்து வந்தது என்று நான் நம்புகிறேன். இந்த நேரத்தில் பாடிக்கொண்டிருக்கிற ஒவ்வொருவருடைய இருதயத்திலிருந்தும் அது வருகிறது என்று நான் நம்புகிறேன், இந்த ஒலிநாடாவைக் அநேகர் கேட்கலாம், இப்பொழுது அல்ல அல்லது அதை இப்பொழுது கேட்காமல் இருக்கலாம். கர்த்தாவே, கிரயத்தைப் பொருட்படுத்தாமல், நாங்கள் சித்தமுள்ளவர்களாயிருப்போமாக. உதாரணமாக, “ஒரு மனிதன் மற்றொரு இராணுவத்தை, ஒரு போர் வீரனை, ஒரு ராஜாவை சந்திக்கப் போவது போல, முதலில் அவன் அமர்ந்து எண்ணிப் பார்க்கிறான், அவனால் அதைச் செய்ய முடிகிறதா, அவனால் உலகத்தின் காரியங்களை விட்டுவிட முடியுமா? தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையின் சேனையில் சேர்ந்து கொண்டு, அவருடைய போர்வீரர்களோடு அணிவகுத்துச் சென்று, அவருடைய கழுகுகளோடு பறக்க உங்களால் முடியுமா?” கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் இதை அருளும்.
200380 நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவரை ஏற்றுக்கொள்கிறீர்களா? சரி. கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு, நாங்கள் உங்களை மீண்டும் இங்கே சந்திப்போம். அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] இது போதுமான அளவு தெளிவாயுள்ளதா? [“ஆமென்.”] அப்படியானால் இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், துன்பமும் துயரமுமான பிள்ளையே; அது உனக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அளிக்கும், அதை எங்கும் கொண்டு செல்… இப்பொழுது, உங்களுக்கு அருகில் உள்ள யாரோ ஒருவருடன் கரங்குலுக்குங்கள். விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கை, (பூமியின் நம்பிக்கை!) பரலோகத்தின் சந்தோஷம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும். இயேசுவின் நாமத்தில் தலைவணங்கி, அவருடைய பாதத்தில் விழுந்து பணிந்து, பரலோகத்தில் ராஜாதி இராஜாவாக முடிசூட்டுவோம்…(அவர் தேவனாயிருக்கிறார்.) நம்முடைய யாத்திரை முடிவுறும்போது. விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையானது!) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்.
201இன்று காலை எல்லா ஊழியக்காரர்களும் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டனர் என்று நான் நினைக்கிறேன். 381 ஒரு மனிதன் வாரம் முழுவதும் ஜெபித்திருக்கும்போது, இந்த வேதவாக்கியங்கள் உங்களுக்கு முன்பாக இருப்பதைக் கண்டு, என்னவென்று சிந்திக்கிறீர்கள். பவுல், “நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்காதிருந்தால், எனக்கு ஐயோ” என்றான். அவனுடைய பாதையின் முடிவில் அவன், “எனக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய ஆலோசனை முழுவதையும் நான் உங்களுக்கு அறிவிக்காமல் மறைத்து வைக்கவில்லை” என்றான்.
202நான் சில சமயங்களில் காரியங்களை, அடையாளம் கண்டுகொள்ள மறந்துவிட்டேன், குழந்தைகளை பிரதிஷ்டை செய்தல். அன்றொரு நாள், ஒரு மனிதன், “இரண்டு வருடங்களாக நான் என்னுடைய குழந்தையை பிரதிஷ்டை செய்ய, இங்கு வந்துகொண்டிருக்கிறேன்” என்று கூறினதாக, பில்லி கூறினான். 382 பில்லி, “அதைக் குறித்து தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு ஒரு வயது குழந்தை உள்ளது; அவன் இன்னும், பிரதிஷ்டை செய்யப்படவில்லை. எனவே அவன் அங்கே தானே நடந்து செல்ல போதுமான வயதாகும் வரை நான் காத்திருக்கப் போகிறேன் என்று, நான் யூகிக்கிறேன்” என்று கூறினான். எனவே சகோதரனே, சகோதரியே, நாம் காண்கிறோம், அது—அது அல்ல, பாருங்கள், நான்…ஒரு காரியம், நாம் நம்முடைய பிள்ளைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். 383 நாம் ஒவ்வொருவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். அங்கே ஒரு தண்ணீர்த் தொட்டி உள்ளது; இங்கே தண்ணீர் உள்ளது. நீங்கள் அப்படி செய்திருக்கவில்லையென்றால், உங்களுக்கு எது தடையாக இருக்கிறது? இங்கே தண்ணீர் உள்ளது. இப்பொழுதே வாருங்கள். இன்றிரவு வரை காத்திருக்க வேண்டாம்; இப்பொழுதே வாருங்கள். மனந்திரும்பி, அறிக்கை செய்துள்ள எவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கும் மனிதன் இங்கே நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் பன்னிரெண்டு முறை ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருந்தாலும், அவர்கள் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்கள். பார்த்தீர்களா? நாம் அந்தவிதமாக இருக்கிறோம்.
203384 ஆனால், பாருங்கள், செய்தி என் இருதயத்தில் உள்ளது. நான் அதை வெளியே கொண்டு வர வேண்டும். என்னுடைய மனைவி என்ன கூறினாலும், என்னுடைய பிள்ளைகள் என்ன கூறினாலும், என்னுடைய போதகர் என்ன கூறினாலும், நான் என்ன கூறிக்கொண்டாலும் பொருட்படுத்தாமல், அதுவே என்னுடைய ஒரே நோக்கம். அது என்னுடைய கர்த்தர். நான் அதை வெளியே கொண்டு வர வேண்டும். அதுவே என்னுடைய ஒரே நோக்கம்.
204385 இப்பொழுது, அநேக சமயங்களில், நான் ஊழியக்காரர்களை அடையாளம் கண்டு கொள்ள மறந்துவிடுகிறேன். நம்முடைய சகோதரன், சகோதரன் நெவில், ஒரு விலையேறப்பெற்ற மனிதர்…என்று நான் யூகிக்கிறேன். இங்குள்ள இந்த மற்ற சகோதரர்களே, நாங்கள் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 386 சகோதரனே, நாங்கள் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உங்களுடன் இணங்கவில்லை என்பதனால் அல்ல. இங்குள்ள அநேகர் திரித்துவ பிரசங்கிமார்களாக இருக்கலாம். நாங்கள் உங்களோடு கோபங்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாங்கள் விசுவாசிக்கவில்லையென்றால், நான் அதை விசுவாசிக்கவில்லையென்றால், நான் முழங்காற்படியிட்டு, “தேவனே, என்னை சரிப்படுத்தும்” என்று கூறும் வரையில் நான் இந்த சபையை விட்டு ஒருபோதும் செல்லவேமாட்டேன். 387 நான் அந்த கர்வமான, சுயநல ஆவி என்னுடைய ஆவியோடு கலந்திருக்க விரும்பவில்லை. என்னுடைய ஆவி தூய்மையாகவும், சுத்தமாகவும், சகோதர சிநேகமாகவும், பரிசுத்த ஆவியோடு பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, யாராவது எனக்கு ஏதாவது தவறு செய்தால், அது பரவாயில்லை. நான் அவர்களைப் பற்றி திரும்பிப் பேச உரிமையிருந்தாலும், நான் அதை என் வாழ்க்கையில் விரும்பவில்லை. இல்லை, நான்—எனக்கு அன்பு இருக்க வேண்டும். அதற்காக அப்பால் முற்றிலுமாக பதிலளிக்கிற அன்பினால், அன்பினால் திருத்திக் கொள்ள நான் ஆயத்தமாயிருக்க விரும்புகிறேன்.
205388 நான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கருதவில்லை. மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, கத்தோலிக்கர், பிரஸ்பிடேரியன், நீங்கள் யாராயிருந்தாலும், நான் இந்த காரியங்களில் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதற்காக, உங்களோடு கர்வம் கொள்ள வேண்டும் என்பதற்காக கூறவில்லை. நான் அப்படி செய்திருந்தால், நான் ஒரு மாய்மாலக்காரனாயிருக்கிறேன், நான் இங்கே இந்த பீடத்தண்டையில் தேவனிடத்தில் ஜெபித்துக்கொண்டிருக்க வேண்டும். 389 ஆனால் நான் அதைக் கூறுகிறேன், அது அன்பின் காரணமாகவே, நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் காண்கிறேன். இப்பொழுது, நான் இதை எனக்குள்ளாக கூறி, நான் யூகிக்கிறேன் என்று கூறவில்லை. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் உங்களுக்கு அளிக்கிறேன். அதுவே சத்தியமாயிருக்கிறது. அந்தக் காரியங்களுக்காக நான் உங்களை நேசிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
206390 இப்பொழுது நாம் இந்தப் பாடலின் மற்றொரு பகுதியைப் பாடுகையில், நாம் செல்வதற்கு முன்பு, நாம் பாடுவோமாக. உங்களால் முடிந்தால், நீங்கள் இன்றிரவு இங்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்களால் முடியவில்லையென்றால், நாம் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதித்து, அவருடைய தேசத்தின் மிகச் சிறந்ததை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், பாருங்கள். நாமத்தைக் கொண்டு செல்…