1 இப்பொழுது நாம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்குவோமாக. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, வானங்களுக்கும் பூமிக்கும் சிருஷ்டிகரான மகத்தானவரே, மரித்தோரிலிருந்து இயேசுவை திரும்பக் கொண்டு வந்தவரே, இந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களோடு உயிரோடிருந்து, அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தவும், ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அதை உண்மையாக்கவும் எப்போதும் ஜீவித்துக்கொண்டிருக்கிறவரே. நாங்கள் இந்த மகத்தான உறுதியைப் பெற்றுள்ளோம் என்ற இதை அறிந்து, நாங்கள் இப்பொழுது அவருடைய தெய்வீகப் பிரசன்னத்திற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இந்த ஜீவியம் முடிவுற்ற பிறகு, வரப்போகும் உலகத்தில் எங்களுக்கு நித்திய ஜீவன் உண்டாயிருக்கும். கர்த்தாவே, இதற்காக, உமக்கு நன்றி. அந்த நம்பிக்கை, ஆத்துமாவுக்கு ஒரு நங்கூரம், அது புயல் காலத்தில் மாறாத நிலையான உறுதியாய் உள்ளது. புயல்கள் உண்டாகும்போது, பெரிய அலைகள் எழும்பும்போது, அவரில் உள்ள விசுவாசத்தினால் நாங்கள் ஒவ்வொரு அலைகளின் மேலே தாண்ட முடியும் என்பதை நாங்கள் உணருகிறோம். 2 தேவனே, வியாதியஸ்தர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் நாங்கள் ஊழியம் செய்ய வரும்போது, இன்றிரவு எங்களுக்கு உதவி செய்யும். தேவனே, நாங்கள் இன்றிரவு புறப்பட்டுச் செல்லும்போது, எங்கள் மத்தியில் ஒரு சுகவீனமான நபரும் இருக்காதபடிக்கு, நாங்கள் ஜெபிக்கிறோம். ஒவ்வொரு நபரும், இங்கேயும் மற்றும் தேசத்தினூடாக தொலைபேசி இணைப்பில் இருப்பவர்களும், உம்முடைய தெய்வீக வல்லமையினால் சுகமாக்கப்படுவார்களாக, இன்றிரவு எந்தக் கட்டிடத்திலிருந்தும் அல்லது எந்தக் கூட்டத்தை விட்டும் பலவீனமான ஒரு நபரும் வெளியே செல்லாதிருப்பார்களாக. உம்முடைய ஆவி அவர்களைச் சுகப்படுத்துவதாக. மகத்தான நீதியின் சூரியன், அவருடைய சுகமளிக்கும் செட்டைகளோடு, எழும்பி, அவர்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்கும்போது, ஒவ்வொரு இருதயத்திலும் உள்ள விசுவாசக் கதிர்களை அனுப்ப, பரிசுத்த ஆவியின் வெளிப்படுத்துதல்கள் அவர் இன்னமும் உயிரோடிருக்கிறார் என்று அவர்களை நம்பச் செய்வதைக் காண்போமாக. பிதாவே, இயேசுவின் நாமத்தில், நாங்கள் இந்த ஆசிர்வாதங்களுக்காக ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.
23 இன்றிரவு மீண்டும் ஜனங்களிடம் பேசவும், வியாதியஸ்தருக்காக ஜெபிக்கவும், இங்கே இருப்பது ஒரு மகத்தான சிலாக்கியமாகவே நிச்சயமாக நாங்கள் கருதுகிறோம். தேசம் முழுவதிலும் தொலைபேசி இணைப்புகளில் உள்ள தேசத்தில் உள்ள அனைவரையும் இன்றிரவு நாங்கள் மீண்டும் வாழ்த்த விரும்புகிறோம். எனவே தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், இந்தக் காலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட யாவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவார்கள் என்று நம்பி, இந்த அழிவுக்கேதுவான ஜீவியத்தில் இங்கே பூமியின் மேல் ஜீவியம் முடிவடையும் வரையிலும் அவருக்கு உண்மையாயும், உண்மையாகவும் ஜீவிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அதன்பின்னர் அவர்கள், அதைச் செய்வதன் மூலம், அவர்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறார்கள். நாம் யாவரும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிற அந்த மகத்தான காலத்தில், வரப்போகும் காலத்தில் அவர்கள் ஒருபோதும் மரிக்கமாட்டார்கள்.
34 நான் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையில், இப்பொழுது நாம் கூறப்போவதற்கு, குறுக்கிட வேண்டாம். சகோதரன் வேயில் இங்கே இருக்கிறார், நான் அவரைக் காணாமலிருக்கலாம். நான்…நான் டூசானுக்கு திரும்பும்போது, நான் அந்த கையெழுத்துப் பிரதியை உங்களுக்கு அனுப்பலாமா? நான் அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன், இன்னும் அவை முழுவதுமாக வாசிக்கப்படவில்லை, நான் டூசானுக்கு சென்றவுடன் அதை உங்களுக்குத் திருப்பி அனுப்புகிறேன். 5 இப்பொழுது நான் ஒரு அறிவிப்பைச் செய்ய விரும்புகிறேன். இது விசேஷமாக எங்குமுள்ள சபைகளுக்கு, விசேஷமாக மேற்கில், அல்லது எங்கிருந்து வர விரும்பினாலும் சரி. நம்முடைய அருமை சகோதரன், சகோதரன் பியரி கிரீன் அவர்களுடன்…இந்தத் தொலைபேசி இணைப்பை இங்கே துவங்கிய ஒரு மனிதன் தான். அவர் டூசானுக்கு வந்து நம்மைச் சந்தித்து ஒரு எழுப்பதிலை ஆரம்பிக்க வேண்டும் என்பதை கர்த்தர் அவருடைய இருதயத்தில் அருளியிருக்கிறார், அது நமக்கு உண்மையாகவே தேவைப்படுகிறது. சகோதரன் பியரி டூசானில் இருப்பார். நீங்கள் அவரைத் தொடர்பு கொள்ள விரும்பினால், அங்குள்ள எங்களுடைய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். அது ஆகஸ்ட் 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் இருக்கும். அவர் நீண்ட காலமாகவே அவருடைய இருதயத்தில் அதைக் கொண்டிருந்தார், எனவே நான் அவரிடம், “உங்களுடைய இருதயத்திலிருந்து அதை அகற்ற ஒரே வழி, போய் அதைச் செய்யுங்கள்” என்று கூறினேன். அவர் ஒரு கிறிஸ்தவ சகோதரன், ஒரு உண்மையான தேவனுடைய ஊழியக்காரன். டூசானில் உள்ள ஜனங்களாகிய நீங்கள், அவர் அங்கே எங்காவது ஊழியம் செய்யும்போது, அவர் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார் என்பதை நான் அறிவேன், ஒரு வேளை ரமதா விடுதியிலோ அல்லது கர்த்தர் எங்காவது ஒரு இடத்தை அளித்தாலும், அவர் அதற்கு இங்கே இடத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் சகோதரன் கிரீன் நமக்கு தேவனுடைய வார்த்தையை விளக்கிக் கூறுவதை நீங்கள் வந்து கேட்பதன் மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும், ஒருவேளை வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம் அல்லது செய்ய வேண்டிய தேவனுடைய அபிஷேகத்தின் கடமையில் உள்ள வேறெந்த காரியத்தையும் செய்யலாம்.
46 நாம் சகோதரன் ஆர்மன் நெவில், சகோதரன் மான், அவர்களுடன் ஐக்கியங்கொண்ட இந்த அற்புதமான நேரத்திற்காகவும் கூட நன்றி கூற விரும்புகிறோம். சகோதரன் நெவில், சகோதரன் மான், போன்றவர்களுடன் தொடர்பு கொண்டதற்கும், இங்குள்ள இந்த மற்ற எல்லா ஊழியக்காரர்களுக்கும், நான் எப்படியாய் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். இங்குள்ள நம்முடைய நிர்வாகக் குழு மற்றும் நமது சபையின் மூலம் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளாமலிருந்தாலும், தேவன் உங்களை இங்கே அவருடைய ஊழியக்காரர்களாக அடையாளம் கண்டு கொள்கிறார் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். கர்த்தர் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பாராக.
57 இப்பொழுது, நான் இங்கே ஒரு சிறு காரியத்தைக் கேட்டேன், ஒரு சிறு குறிப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது… அவர்கள் அன்றொரு இரவு இங்கு தர்மகர்த்தாக் குழு மற்றும் உதவிக்காரர்களின் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தக் காலையில் சபைக்கு முன்பாக சில நிமிடங்கள் வாசிக்கப்பட்டன என்று நான் நினைக்கிறேன். நாம் அதைச் செய்வது வழக்கம். இங்கே சபையில் உள்ள தர்மகர்த்தாக் குழு மற்றும் உதவிக்காரர்களின் குழுவினால் செய்யப்பட்ட தீர்மானங்களில், நிச்சயமாகவே, அது எல்லோரையும் பிரியப்படுத்த முடியாது. நாம் அதைச் செய்ய முடியாது. தர்மகர்த்தாக் குழுவோடு அல்லது உதவிக்காரர் குழுவோடு எனக்கு எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. சமநிலை ஏற்பட்டாலொழிய எனக்கு ஒரு வாக்கு கூட கிடையாது, அப்பொழுது நான் அதைச் செய்ய இங்கிருக்க வேண்டும், சகோதரன் ஆர்மன் நெவில் அந்த இரண்டாவது வாக்கைப் போடுகிறார். அப்படியானால் நாம் இவைகளில் கையெழுத்திட வேண்டும், ஏனென்றால் நாம் சபையின் பாகமாயிருக்கிறோம். ஆனால் தர்மகர்த்தாக் குழுவும், அந்த சபைக் குழுக்கள் என்ன முடிவு எடுக்கின்றனரோ, நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு நூறு சதவீதம் பின்னால் நிற்கிறோம், ஏனென்றால் அதற்காகத்தான் அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய தீர்மானங்கள் அவர்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ளது. அந்தத் தீர்மானத்திற்கு நான் எந்த வகையிலும், முரண்பட முடியாது, அந்த முடிவை நான் எந்த வகையிலும் எதிர்க்க முடியாது, முடியாது, எதிர்க்கவும் மாட்டேன். மற்றொரு காரியம், நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்தால் அது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க அமெரிக்க அரசாங்கத்தால் நான் தடைசெய்யப்பட்டுள்ளேன், எனவே தயவு செய்து அவர்களுடைய தீர்மானங்களை நான் திருத்தும்படி கேட்க வேண்டாம். என்னால் அதைச் செய்ய முடியாது, நான் அதைக் குறித்து ஒன்றுமே கேட்கமாட்டேன். பார்த்தீர்களா? எனவே அவர்களுடைய தீர்மானங்களை திருத்தும்படி என்னைக் கேட்க வேண்டாம். நீங்கள் பாருங்கள், அந்த குழுதான் தீர்மானங்களைச் செய்கிறது. சரி.
68 இப்பொழுது வரப்போகும் ஒரு கூட்டம், கர்த்தருக்குச் சித்தமானால், அது கூடுமானால், நான் சுமார் நான்கு முதல் ஆறு வாரங்களில், அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு வாரத்தில், மற்றொரு ஞாயிறு கூட்டத்திற்கு வரலாம். நான் இந்தக் காலையில் தேவன் தம்முடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டதின் பேரில் பேச விரும்பினேன் என்று அறிவித்தேன். இன்றிரவு எனக்குப் நேரமிருக்காது, மேலும் வெளிப்படையாகக் கூறினால், அதைச் செய்ய எனக்குப் போதுமான குரல் இல்லை. அப்படியானால் உட்புறத்தில் உள்ளதைப் போலவே கிட்டத்தட்ட அதே அளவு வெளிப்புறத்திலும் கூட்டம் உள்ளது, அந்தப் பேருந்துகளிலும் திறந்த சரக்கு வண்டிகளிலும் அங்கே வெளியே ஜனங்களோடு உட்கார்ந்திருக்கிறவர்களை எண்ணினால் ஒருகால் அதிகமாக இருக்கலாம். ஒலிபரப்பு துவங்கி, சற்று அதிகரித்தது, நாம் அதைக் கேட்க முடிகிறது, இந்தச் சிறிய அலை வரிசையை, கூடாரத்திலிருந்து ஒரு குறுகிய அலை வரிசையை, நாம் ஒரு நகரத் தொகுதி தூரத்திலிருந்து அதைக் கேட்க முடியும். சில கார்கள் பல நகரத் தொகுதிகளுக்கு அப்பால் உள்ளன, கார்களின் வரிசைகள் மேலும் கீழும், தெருக்களைச் சுற்றிலும், இன்றிரவு கூடாரத்தைச் சுற்றிலும் உள்ளன. நான் எந்த நேரத்திலும், காணக்கூடிய விதத்தில், இன்றிரவு எங்களுக்கு இருந்ததைக் காட்டிலும் அதிகமான ஜனங்கள் சபைக்குள்ளும் அதைச் சுற்றிலும் நெருக்கிக் கொண்டிருப்பதை நாம் எப்போதும் பார்த்ததில்லை. எனவே நாம்…அநேகர், அநேகர், கார் ஓட்டி வந்து போகிறார்கள்ள். 9 எனவே அது, “பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் கூடும்” என்பதையே அது காண்பிக்கிறது. நான் இன்றிரவு உங்களுக்குக் கூறுகிறேன், இந்தச் சிறிய குழு ஜனங்கள், இது ஒரு சர்வதேச கூட்டம். ஐந்து அந்நிய தேசங்களைத் தவிர, நடைமுறையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் இங்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், ருஷ்யாவிற்கும், மற்றும் நாட்டின் பல்வேறு பாகங்களிலுமிருந்து வந்துள்ளனர். வெனிசுலாவிற்குள்ளும், ஜமாய்க்காவிற்கும், நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள ஜனங்கள், தேவனுக்காகப் பசியாயும், தாகமாயும் இங்குள்ளனர். என்னே ஒரு அற்புதமான நேரம்!
710 இப்பொழுது நான் வேதாகமத்தை வாசிப்பதற்கு முன்பு, இப்பொழுது நீங்கள் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான்—நான் தெய்வீக சுகமளித்தலின் சுகத்தைக் குறித்து ஒரு சிறு செய்தியைக் கொண்டு வர முயற்சிக்கப் போகிறேன். ஏனென்றால், இந்தக் காலையில் நாம் இரட்சிப்பைக் குறித்துப் பேசினோம். இன்றிரவு நாம் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து ஒரு சில நிமிடங்கள் பேசப் போகிறோம், அதன்பின்னர் ஜெப வரிசையை அழைத்து ஜனங்களுக்காக ஜெபிக்க வேண்டும். நாங்கள் இதைச் செய்துகொண்டிருக்கையில், நீங்கள் எங்கிருந்தாலும், சுற்றிலும் உள்ள பேருந்துகளிலும், கார்களிலும் கூட, கூடாரத்தின் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்குள்; வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டிய நேரம் வரும்போது, உங்களால் கட்டிடத்திற்குள் பிரவேசிக்க முடியாவிட்டால்… அது, உங்களால் முடியாது, இப்போது எனக்கு உறுதியாகத் தெரியும், ஏனென்றால் எல்லா இடங்களிலும் கதவுகள் இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ளன, கடந்த காலத்திலும், எங்கும் இடமில்லாதவர்களாய், எனவே நீங்கள் ஜெபித்து, அங்கே ஒருவர் மீது ஒருவர் உங்கள் கரங்களை வைக்க வேண்டும். சுகமளிக்கும் ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இன்றிரவு தொலைபேசி இணைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு ஊழியக்காரனும் தன்னுடைய சபையாருக்காக ஜெபிக்கக்கடவன். தேவன் எங்கும் சர்வ வியாபியாக இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். இப்பொழுது நாம் வாசிப்பதற்கு முன்பு அல்லது…
811 நாம்—நாம் ஜெபிப்பதற்கு முன்பு, நாம் தேவனுடைய வார்த்தையில் சிலவற்றை வாசிக்க விரும்புகிறோம். நான் சற்று முன்னர் என்னுடைய—என்னுடைய வேத வாக்கியங்களை மாற்றினேன், ஏனென்றால் இன்றிரவு என் சிந்தையில் நான் அமைத்திருந்த அந்த மாதிரியான கூட்டத்தை மாற்ற விரும்பி, நான் அதைச் சிறிது மாற்றியிருக்கிறேன்; எனவே நான் என்னுடைய வேத வாக்கியங்களை மாற்ற வேண்டியதாயிருந்தது, அவைகளை மாற்றவில்லை, ஆனால் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து, ஜனங்கள் அதை—அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அவைகளை வேறொரு வரிசைப்படி அமைக்க வேண்டியிருந்தது. நாம் பரிசுத்த லூக்கா, 24-ம் அதிகாரத்திற்கு திருப்புவோமாக. நாம் 24-ம் அதிகாரத்தின் 12-ம் வசனத்திலிருந்து தொடங்கி, ஏறக்குறைய 34-ம் வசனம் வரையிலும் வாசிப்போம். அது கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்ததாயுள்ளது. பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்து பார்க்கையில், சீலைகளைத் தனிப்பட…சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான். அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். இப்பொழுது, ஒரு மைல் தூரத்தைச் சுற்றுவதற்கு—சுற்றுவதற்கு பத்து பர்லாங் தூரம் தேவைப்படுகிறது, எனவே அது சுமார் ஆறு மைல் தூரமாயிருந்தது. போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர்: எவைகள் என்றார்.
9இப்பொழுது, நினைவிருக்கட்டும், இது இயேசுதாமே, உயிர்த்தெழுந்து, பேசிக்கொண்டிருக்கிறார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள்.
10இப்பொழுது கவனியுங்கள்; இயேசு. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு, வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.
1112 இப்பொழுது நாம் ஜெபிப்போமாக. அன்புள்ள கிருபையுள்ள பிதாவே, உம்முடைய வார்த்தைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனென்றால் உம்முடைய வார்த்தை சத்தியமும், உம்முடைய வார்த்தை ஜீவனுமாயுள்ளது. ஓ, கர்த்தாவே, நீரும் உமது வார்த்தையும் ஒன்றே. எனவே கர்த்தாவே, நீர் உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் எங்கள் மத்தியில் வரவேண்டுமென்றும், எம்மாவூரிலிருந்து வந்தவர்களைப் போலவே, இன்றிரவு நாங்களும் கூட எங்களுடைய வீடுகளுக்குத் திரும்புவோம் என்றும் காண்பிக்க வேண்டும் என்றும் இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம், “நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று கேட்டனர். கர்த்தாவே, இதை அருளும், இது மீண்டும் சாயங்கால நேரத்தை நெருங்குகிறது. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
1213 இப்பொழுது நான் இந்த வேதாகமத்தைக் குறித்துப் பேச விரும்புகிறேன். தலைப்பிற்கான, இன்றிரவு என்னுடைய பொருள்: தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள். தீர்க்கதரிசனத்தால் தெளிவாக்கப்பட்ட சம்பவங்கள் என்பதாகும். 14 இப்பொழுது, வேதாகமம் மற்ற எல்லா புனித புத்தகங்களிலிருந்தும் ஒரு வித்தியாசமான புத்தகமாக உள்ளது. வேதாகமம் ஒரு வித்தியாசமான புத்தகமாக உள்ளது. அது ஒரு தீர்க்கதரிசனப் புத்தகமாக, வரப்போகும் சம்பவங்களை முன்னுரைக்கிறது. அது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதலாகவும் கூட உள்ளது. ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலான வழி நெடுகிலும், அவர் என்னவாயிருந்தார், இருக்கிறார் என்பதை அவருடைய பரிபூரணத்தில் வெளியேக் கொண்டு வருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 1:1 முதல் 3 முடிய உள்ள முழு புத்தகமும், “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தின விசேஷப் புத்தகம்” என்று கூறப்பட்டுள்ளது. அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடு,” தேவனுடைய வார்த்தை!
1315 இப்பொழுது, மற்ற எல்லா புத்தகங்களும், புனித புத்தகங்களும், ஒரு நெறிமுறை நெறிமுறைகள், ஒரு ஒழுக்க நெறிமுறைகள், அல்லது ஒரு வேத சாஸ்திர நெறிமுறைகள் மாத்திரமே உள்ளன. ஏதோ ஒன்று…எத்தனை பேர் குரான், முகமதியர்களின் வேதாகமம், புத்த மதத்தினரின் புத்தகம் போன்றவற்றை வாசித்திருக்கிறீர்கள்? அது ஜனங்கள் எப்படி வாழ வேண்டும், அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்ற வெறும் ஒரு நெறிமுறையாக உள்ளது, ஆனால் அது தீர்க்கதரிசனம் உரைக்கிறதில்லை, இந்தக் காரியங்களைக் குறித்தும், அல்லது யாருக்காவது அளிக்கப்படும் எந்த விசேஷித்த வரங்களைக் குறித்தும், நடைபெறவிருக்கிற எந்தக் காரியத்தையும் குறித்தும் கூறுகிறதில்லை. ஒரு விடுதியிலோ அல்லது ஏதோ ஒரு காரியத்திலோ சேர்ந்துகொள்வது போல. ஆகையால், சபைகள் அந்த இடத்திற்கு வரும்போது, அவர்கள் தங்களுடைய சபையை ஒரு சேரும்படியான ஒரு விடுதியாக ஆக்கிக்கொள்ளும்போது, அப்பொழுது அவர்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிவிடுவார்கள்.
1416 ஏனென்றால் வேதம் ஜீவனுள்ள, இயேசு கிறிஸ்துவைக் குறித்து முன்னுரைக்கப்பட்ட சாட்சியாக உள்ளது. பூமியானது தன்னுடைய முழுமைக்குள்ளாக வளர்ந்து, திராட்சைச் செடிகளும் தங்களுடைய முழுமையில் வளரும்போது, அந்த நாள் அதனுடைய முழுமைக்குள்ளாக வளர்கிறது, வேதாகமம் அதனுடைய பரிபூரணத்தில் இயேசு கிறிஸ்து என்னும் நபரில் வெளிப்பட்டது. அவர் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார், முழுவதுமாக மீட்பின் புஸ்தகம். வேதாகமம் தேவனுடைய வார்த்தையாயுள்ளது, அது வரப்போகும் சம்பவங்களைக் கூறுகிறது. அதனுடைய விசுவாசிகள் அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் வாசித்து விசுவாசிக்கும்படி அதன் ஆக்கியோனால் கட்டளையிடப்பட்டுள்ளனர், அதிலுள்ள ஒரு பாகத்தை மாத்திரமல்ல. ஒரு வார்த்தையை அவிசுவாசித்தால், நீங்கள் அந்த வார்த்தையை விசுவாசிக்கும் வரைக்கும் மற்றதை முயற்சிப்பதை விட்டுவிடலாம். ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலுமாக சர்வ வல்லமையுள்ள தேவனின் ஒரு பாகமாயிருக்கிறது; தேவன் தம்முடைய வார்த்தைக்குள் பதிந்து, தாம் யாரென்பதை காண்பிக்கும்படி வெளிப்படுத்தினார். விசுவாசிகளாகிய நாம், அதனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறோம். அது தேவனுடைய ஆக்கியோனால் தாமே எழுதப்பட்டுள்ளது. அதனோடு எந்தக் காரியத்தையும் கூட்டவோ அல்லது அதிலிருந்து எதையும் எடுக்கவோ முடியாது. நீங்கள் விரும்பினால், அது ஒரு விநோதமான தேவனுடைய சரீரமாக இருக்கும். அது, ஒரு கரத்தில் ஆறு விரல்கள் அல்லது—அல்லது மூன்று கரங்கள், போல இருந்திருக்கும், அல்லது ஏதோ ஒன்றைக் கூட்ட, அதிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துப் போட்டு, ஒரு கரம் குறைவாக, ஒரு விரல் குறைவாக இருக்கும். அது இயேசு கிறிஸ்துவின் முழுமையான சரீரமாயுள்ளது. கிறிஸ்துவில், ஆணாக, மணவாட்டியாக இருப்பதால், மணவாட்டி அவரிலும் கூடச் சுட்டிக்காட்டப்படுகிறாள். இந்த இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள். “நான் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.” என்னே ஒரு முழுமையான காட்சி! 17 இந்த வார்த்தையை அந்தவிதமாக ஏற்றுக் கொள்கிற உண்மையான விசுவாசிகள், அதை விசுவாசித்து, அதனுடைய தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றும் அதனதன் காலத்தில் வெளிப்படும் வரைக்கும் பொறுமையோடு காத்திருங்கள். ஒவ்வொரு விசுவாசியும் அதைக் கவனித்து வந்துள்ளனர். விழித்திருந்து, கண்காணித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு விசுவாசியும் வெளிப்படுத்தப்பட்ட ஒருவனாயிருக்கிறான்.
1518 இப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் வருகையின் நாட்களைப் பாருங்கள். வேதம் ஏசாயாவின் மூலம் வெளிப்படையாகச் சொல்லப்பட்டபோது, அந்த மக்கள் ஏன் யோவானை அடையாளம் காணவில்லை, “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணுங்கள்’ என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாகுமென்று” என்று கூறவில்லையா? மல்கியா 3, அவர்களுக்கு இருந்தது, அவர்களுடைய கடைசி தீர்க்கதரிசி, “இதோ, வழியை ஆயத்தம் பண்ணும்படிக்கு என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்” என்றான். அவர்கள் ஏன் அதைக் காணவில்லை? ஏனென்றால் அவர்கள் செய்யப்பட்டிருந்த ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர், முன்பே சென்ற சில செய்திகளின் அடிப்படையில் தங்கள் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் ஜீவித்துக் கொண்டிருந்த நாளில் தேவனுடைய தற்போதைய வெளிப்படுத்துதலைக் காணத் தவறினர். 19 கிறிஸ்தவர்களும், எல்லாவிடங்களிலும், சரியாக அந்தவிதமாகத்தான் உலகம் இன்றிரவு இருக்கிறது. முரண்பாடில்லாமல், அதுதான் உண்மை! கிறிஸ்தவர்கள், எல்லாவிடங்களிலும், ஏதோ நெறிமுறைகளை திரும்பிப் பார்க்க முயற்சிக்கின்றனர், அதாவது திரு. லூத்தர் எழுதினார் அல்லது திரு. வெஸ்லி, சாங்கி, ஃபின்னி, நாக்ஸ், கால்வின்; நாம் யாரும் அதைக் குறித்து தீமையாகப் பேச முடியாது, ஆனால் அது கடந்த ஒரு நாளில் இருந்தது.
1620 மோசே என்னக் கூறினான் என்பதைக் காண பரிசேயர்கள் திரும்பிப் பார்த்தனர், அவர்கள், “எங்களுக்கு மோசே உண்டு. நீர் எங்கிருந்து வந்தீர் என்பதை நாங்கள் அறியோம்” என்றனர்.“ 21 ஆனால் நினைவிருக்கட்டும், மோசே இங்கே இருந்தபோது, அவன் எங்கிருந்து வருகிறான் என்பதை அவர்கள் அறியவில்லை. பார்த்தீர்களா? இப்பொழுது அவர்கள்…இயேசு அவர்களிடத்தில், “நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை அலங்கரிக்கிறீர்கள், நீங்கள்தான் அவர்களை அங்கே உள்ளே வைத்தீர்கள்” என்று இயேசு கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவர்களுடைய செய்தி போய்விட்ட பிறகு! ஒரு செய்தி கடந்து செல்கிறது, ஜனங்கள் அதைக் காண்கிறார்கள், அவர்கள் அதை பரிகசிக்கிறார்கள் (உலகம் செய்கிறது). அதன்பின்னர் செய்தியாளன் முடிவுற்று, செய்தி நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன்பின்னர் அவர்கள் செய்தியின் மேல் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் அங்கேயே மரித்து, மீண்டும் ஜீவனுக்கு வரவில்லை.
1722 ஜனங்களாகிய உங்களில் சிலரை ஒரு நிமிடம் நோக்கிப் பாருங்கள், விசேஷமாக நான் கத்தோலிக்க ஜனங்களாகிய உங்களிடம் பேசுகிறேன். நீங்கள் எப்போதாவது உண்மையான வரலாற்றை, ரோமன் கத்தோலிக்க சபையின் வரலாற்றைப் படித்து, அறிந்துள்ளீர்களா? ஹிப்போவைச் சேர்ந்த பரிசுத்த அகஸ்டின் காலம் முதற்கொண்டு எத்தனை குற்றமற்றவர்களை சபை கொன்று போட்டுள்ளது என்பதை ரத்த சாட்சிகளின் பட்டியலில் பாருங்கள்! நான் மறந்துவிட்டேன், சரியான எண்ணை கூற முடியாது, ஆனால் அது கோடிக்கணக்கில் உள்ளது, ஹிப்போவைச் சேர்ந்த பரிசுத்த…ஹிப் புனித அகஸ்டின்-…ஆப்பிரிக்காவின் ஹிப்போ, இதை ஒரு பிரகடனமாக மாற்றியது ரோமன் கத்தோலிக்க சபையை எதிர்க்கும் எவரையும் மரணத்திற்குட்படுத்துவது முற்றிலும் தேவனுடைய சித்தமாயிருந்தது என்று. பரிசுத்த பாட்ரிக் மரிக்கும் வரையிலும் ஒரு ரோமன் கத்தோலிக்கராக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை நீங்கள் உணருகிறீர்களா? அவர் போப்பை எதிர்த்தார் மற்றும் அவருடைய எல்லா செயல்களையும் எதிர்த்தார், கத்தோலிக்க சபையே பல்லாயிரக்கணக்கான அவருடைய பிள்ளைகளைக் கொன்றது. கத்தோலிக்க சபையானது ஜோன் ஆஃப் ஆர்க் என்ற அந்தச் சிறிய பரிசுத்த ஸ்திரீயை கழுமரத்தில் கட்டி எரித்துக் கொன்றது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனென்றால்…அவள் ஒரு சூனியக்காரி என்று கூறப்பட்டது. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அது தவறு என்று அவர்கள் கண்டறிந்தபோது, ஆசாரியர்களின் உடல்களைத் தோண்டியெடுத்து, அவைகளை பரிசுத்த பூமியில் அடக்கம் செய்யாமல், தவம் செய்யாமல் சமுத்திரத்தில் வீசியெறிந்தனர். முட்டாள்தனமாக இருந்து, அந்த நாள் உங்கள் தலைக்கு மேல் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம்.
1823 இயேசுவை ஆக்கினைக்குட்படுத்திய அந்த ஆசாரியர்களும் எப்படியாய் இன்றிரவு வர விரும்புகிறார்கள். ஒரே காரியம், அவர்கள் அந்த நேரத்தின் முன்னறிவிப்பை ஒருபோதும் காணவில்லை. அவர்கள்…இயேசு, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், ஏனென்றால் அவற்றில் நீங்கள் நினைக்கிறீர்கள்,” அல்லது, சரியாகக் கூறினால், “நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள் என்றும், வேதவாக்கியங்கள் நான் யார் என்பதை உங்களுக்குக் கூறுகிறது என்றும் உரிமை கோருகிறீர்கள்,” ஏனென்றால் அந்த வேளைக்காகவே. 24 கவனியுங்கள், வேதாகமம் தவறிப்போக முடியாது. அது தேவனுடைய வார்த்தையைத் தவறிவிடுகிற, ஒரு காரியத்தைச் செய்ய முடியாது, ஏனென்றால் அவர் அதைச் செய்வதற்கு முன்பு, அது அதனுடைய ஆக்கியோனுடைய கிரியைகளை முன்னுரைக்கிறது.
1925 இப்போது, ஒரு மனிதன் ஒரு கணிப்பு சொல்ல, மற்றொரு காரியம் சம்பவிக்கப் போகிறது என்றும், அது சம்பவிக்கும் என்றும் சொல்ல ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஆனால் அதன்பின்னர் அது எங்கே நிகழப்போகிறது என்பதை அவன் நிர்ணயித்தால், அது அவனை ஒருகால் பத்தாயிரத்தில் ஒரு வாய்ப்பாகக் குறைத்துவிடும். அது சம்பவிக்கப் போகிற நாள் என்று அவன் கூறினால், அது ஏறக்குறைய பத்து லட்சத்தில் ஒரு வாய்ப்பாக குறைத்துவிடும். அது யாருக்கு நேரிடப் போகிறதோ, அது கோடிக்கணக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. 26 ஆனால் இந்த வேதம் சரியாக யாரை, எப்பொழுது, எங்கே, எதை எதிர்நோக்க வேண்டும் என்று உங்களுக்குக் கூறுகிறது, ஆனால் ஒரு முறை கூடத் தவறியதேயில்லை. ஆகையால், அண்மையில் இங்குள்ள சேக்ரட் ஹார்ட் சபையின் குருவானவர் ஒருவருடன் ஒரு சிறு கலந்துரையாடலில்; அவர், “திரு. பிரான்ஹாம், நீர் ஒரு வேதாகமத்தை வைத்து வாதிட முயற்சிக்கிறீர்” என்றார். “அதுதான் சபையின் சரித்திரம்” என்றார். நான், “அது ஒரு வரலாறு அல்ல. அது அச்சு வடிவில் உள்ள, தேவனே, தாமே,” என்றேன். அவர், “தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார்” என்றார். 27 நான், “தேவன் வார்த்தையில் இருக்கிறார். அதற்கு முரணான எந்தக் காரியமும், அது ஒரு பொய்யாயிருக்கட்டும். ஏனென்றால் அவர், ‘என் வார்த்தை உண்மையாயும், எந்த மனுஷனுடைய வார்த்தையும் பொய்யாயிருப்பதாக’” என்றார் என்று கூறினேன். அவர், “நாம் வாக்குவாதம் செய்யக் கூடாது” என்றார். 28 நான், “உங்களை விவாதம் செய்யும்படி நான் ஒருபோதும் கேட்டுக் கொள்ளவில்லை, ஆனால் வேதம், ‘வழக்காடுவோம் வாருங்கள்,’ என்று கூறுகிறது” என்றேன்.
2029 அவர் அதைச் செய்வதற்கு முன்பு, அது ஆக்கியோனுடைய செய்கைகளை முன்னுரைக்கிறது. ஆகையால், அதைக் கூறினால், அப்பொழுது அது ஒவ்வொரு மனிதனையும், ஸ்திரீயையும் எந்தச் சாக்குபோக்கும் இல்லாமல் நியாயத்தீர்ப்பில் நிறுத்துகிறது. அதைக் குறித்து மெத்தோடிஸ்டுகள் என்ன கூறுகின்றனர் என்பதை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதைக் குறித்து பாப்டிஸ்டுகள் கூறுவதை நீங்கள் எடுத்துக் கொண்டால், கத்தோலிக்கம் என்ன கூறுகிறது, பெந்தேகோஸ்தே என்ன கூறுகிறது அல்லது வேறெந்த சபையையும் எடுத்துக் கொண்டால், நீங்கள் நியாயத்தீர்ப்பில் சில ஏமாற்றங்களைக் காணலாம். ஆனால் என்ன சம்பவிக்கப் போகிறது என்று வேதம் கூறுகிறதை நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது நிகழும்போது, என்ன சம்பவிக்கிறது என்பதை அப்பொழுது நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 30 இப்பொழுது, எல்லா ஜனங்களும் அதைக் காண முடியும் என்பது வெளிப்படையான பார்வையில் அல்ல, ஏனென்றால் இயேசு அதை ஞானிகளின் கண்களுக்கும், கல்விமான்களின் கண்களுக்கும் மறைத்ததற்காகத் தேவனுக்கு நன்றி செலுத்தினார், கற்றுக்கொள்ளக்கூடிய பாலகருக்கு அதை வெளிப்படுத்துவார். சர்வ வல்லமையுள்ள தேவன் தம்முடைய சொந்த வார்த்தையிலிருந்து, ஐசுவரியவான்களையும், திமிர்பிடித்தவர்களையும், மற்றும்—மற்றும் படித்த கல்விமான்களையும் குருடாக்கும் வல்லமையோடு, அவர்கள் அவரைக் காண முடியாதபடி தங்களுடைய கண்களைக் குருடாக்கி, ஏழை எளியோரின் கண்களையும், படிப்பறியாதவர்களையும் திறக்கின்றதை சிந்தித்துப் பாருங்கள்.
2131 எம்மாவூரிலிருந்து வந்த இந்த ஜனங்களைக் கவனியுங்கள், அவரைக் குறித்த அவர்களுடைய—அவர்களுடைய புரிந்துகொள்ளுதல் மறைக்கப்பட்டுவிட்டது என்று அவர் கூறினார். அவர்கள் அவரிடத்தில் பேசியும், நாள் முழுவதும் அது யார் என்று கூட அறியாதிருந்தனர். தேவனால் அதைச் செய்ய முடியும், ஏனென்றால் அவர் தேவனாயிருக்கிறார். 32 அதைத்தான் அவர் அந்த ஆசாரியர்களுக்கும், அந்த வேதபாரகர்களுக்கும் செய்தார், ஏனென்றால் அவர் அதைச் செய்ய வேண்டுமென்று எழுதப்பட்டிருந்தது. நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்படியாகத் தேவன் அவர்களுடைய கண்களைக் குருடாக்கினார். கவனியுங்கள், அவர்கள் எவ்வளவுதான் பண்டிதர்களாய் இருந்தும், எவ்வளவுதான் குருமார்களாயிருந்தாலும், அவர்கள் என்ன செய்திருந்தாலும், அவர்கள் குருடாயிருந்தபடியால், அவர்களால் இன்னும் அதைக் காண முடியவில்லை. அவர்களுடைய பார்வையோ சரீரப்பிரகாரமாக, இருபதுக்கு—இருபதாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய ஆவிக்குரிய பார்வை!
2233 இன்று காலை ஸ்திரீகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதைக் குறித்தும், அவர்கள் இப்பொழுது செய்கிற விதமாகவே உடை உடுத்துவதைக் குறித்தும் நான் கூற முயற்சித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் விபச்சாரக்காரர்கள். தேவனுடைய புத்தகத்தில் அவர்கள் ஒவ்வொரு முறையும் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கும் ஆடைகளை உடுத்தும்போது, அவர்கள் விபச்சாரக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய ஆத்துமா, அதை அறியாமலிருக்கிறது. அவர்களில் அநேகர், அவர்களில் ஆயிரக்கணக்கானோர், குற்றமற்றவர்கள் என்றும், எந்த விதத்திலும் விபச்சாரம் செய்யமாட்டார்கள் என்றும் நான் நினைக்கிறேன். பரிதாபமான ஸ்திரீகள், அவர்களைச் சமாளிக்க அனுமதிக்கும் ஒருவருடன், அதை வெளிப்படுத்தாமல், உண்மையைக் கூறாமல், விபச்சாரம் செய்கிறார்கள். வேதம், “திரளான தண்ணீர்களின்மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசி, பூமியின் எல்லா ராஜாக்களோடும், பூமியின் ஜனங்களோடும், சபைகள் போன்றவற்றோடு, அவளோடு ஆவிக்குரிய வேசித்தனம் செய்தார்கள். அவள் வேசிகளுக்குத் தாயாயிருந்தாள்,” ஸ்தாபனங்கள்.
2334 நாம் வேதாகமத்தை கவனிக்கிறோம், ஏனென்றால் தேவன் நம்மை இருளில் விடுகிறதில்லை. அவைகள் சம்பவிப்பதற்கு முன்னதான சம்பவங்களையும், அவை வரப்போகும் இயற்கையானவைகளையும் நேரத்தையும் நமக்கு முன்னுரைக்க அவர் வேதாகமத்தை அனுப்பினார். 35 இப்பொழுது, அது என்ன தேதி என்பதைக் காண ஒரு நாள்காட்டியைப் பார்ப்பது போன்றே உள்ளது. இது இந்தச் சனி, ஞாயிறு என்று நீங்கள் யோசித்தால், அது என்ன? நாள்காட்டியைப் பாருங்கள். அது எந்த நாள் என்பதை நாள்காட்டி உங்களுக்குக் கூறும். நீங்கள் ஜனங்களின் செய்கைகளைக் காணும்போது, ஒருக்கால் சபைக்குச் செல்லும்போது, நீங்கள் அந்த—அந்த…மணியோசை ஒலிப்பதைக் கேட்கிறீர்கள், அது என்ன நாள் என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். நாள்காட்டியை நோக்கிப் பாருங்கள், அது எந்த நாள் என்று உங்களுக்குச் சொல்லும்.
2436 சபையானது உலகப்பிரகாரமாகி வருவதை நீங்கள் காணும்போது, சோதோமின் நாட்களில் நடந்தது போலவே, சபை உலகமும் “இந்தப் பொல்லாத காலத்தின் தேவனை” தொழுதுகொள்வதற்குள்…செல்வதை பாருங்கள், அதைக் கண்டு; அப்பொழுது தேவனுடைய ஆவியின் ஏவுதலினால் ஒரு சிறுபான்மைக் குழு ஒன்று கூடுவதைக் கண்டு, இயேசு கிறிஸ்துவின் ஜீவனை மீண்டும் தோன்றச் செய்து, சம்பவிக்க வேண்டிய வேத வாக்கியங்களின் மூலம், நீங்கள் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 37 நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும், நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் இந்த வேதம் தீர்க்கதரிசனத்தின் மூலம் முன்னுரைக்கிறது, என்னவிதமான சம்பவங்கள் சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. அது அதை எழுத்தோடு சரியாக முன்னுரைக்கிறது, எல்லா நேரத்திலும், ஒரு காலத்தையும் தவறவிட்டதில்லை. அது ஒரு முறை கூடத் தவறவிட்டதில்லை, அது தவற விடாது, ஏனென்றால் அதைக் காண முன் குறிக்கப்பட்டிருக்கிறவர்கள் அதைக் காண்பார்கள். இயேசு, “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் வரும்” என்றார். அது வார்த்தையானது வார்த்தையோடு இணைவதாகும். அதனால் வேறெதையும் செய்ய முடியாது. நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற அந்த நாளில் நாம் அதை அறிவோம்.
2538 ஆனால் ஒவ்வொரு காலத்திலும் இது இருந்து வருகிறது போல, ஜனங்கள் இந்த வார்த்தைக்கு மனிதர்கள் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்க அனுமதிக்கிறார்கள், சம்பவித்த சம்பவத்திற்கு அவர்களைக் குருடாக்கச் செய்கிறது. பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும் அதுவே செய்தது. பவுலும் கூட அங்கே நின்று, வேதவாக்கியங்களை மேற்கோள் காட்ட முயன்றபோது, ஒரு மனிதன் பிரதான ஆசாரியனை வெள்ளையடிக்கப்பட்ட சுவர் என்று அழைத்த காரணத்தால் அவனை முகத்தில் அடித்தான். அதன்பின்னர் அவர்கள் தேவன் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதைக் காணத் தவறினர்.
2639 பாருங்கள், வேதம் தாமே முரண்படுகிறதில்லை; வேதாகமம் தேவனாயிருக்கிறது. தேவனிடத்தில் எந்த முரண்பாடும் இல்லை; அவர் பரிபூரணமானவர். 40 ஆனால் ஜனங்களோ, தங்களுடைய சொந்த வியாக்கியானத்தோடு! இப்பொழுது கவனியுங்கள், நண்பர்களே, நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். சபைகள் தாமே அதைக் குறித்த வியாக்கியானத்தின் பேரில் உடன்பட முடியாது. மெத்தோடிஸ்டுகள் பாப்டிஸ்டுகளோடும், பாப்டிஸ்டு பிரெஸ்பிடேரியன்களோடும், பிரஸ்பிடேரியன்கள் பெந்தேகோஸ்தேக்களோடும் இணங்க முடியாது. ஏறக்குறைய நாற்பது வித்தியாசமான பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களோடு, அவர்கள் ஒன்றுக்கொன்று இணங்க முடியாது. எனவே நீங்கள் பாருங்கள், அது மீண்டும் பாபிலோனாக மாறி, குழப்பத்தை உண்டாக்கும். 41 ஆனால் தேவனோ தம்முடைய வார்த்தைக்குத் தம்முடைய சொந்த வியாக்கியானத்தை அளிக்கிறார். அவர் இந்தக் காரியத்தை வாக்குத்தத்தம் செய்து, அதன்பின்னர் அவர் தானே அதைச் செய்கிறார். அவர் தாமே, அதைக் குறித்த வியாக்கியானத்தை அளிக்கிறார், ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவின் சரீரம் பாதத்திலிருந்து தலைவரை எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது!
2742 கவனியுங்கள், ஆகையால் தான் இந்த ஜனங்கள் அதைப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள், ஏனென்றால் இயேசு அவர்களிடம் செய்யக் கூறின வார்த்தையை வாசிப்பதற்குப் பதிலாக, வேறு யாரோ ஒருவர் அதைக் குறித்து என்ன கூறுகிறாரோ அதற்கு அவர்கள் செவிகொடுக்கிறார்கள், “அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்கள், என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், கவனியுங்கள், “என்ன? வேதவாக்கியங்களை வாசித்து, மேசியா என்ன செய்ய வேண்டியவராயிருந்தார் என்பதைப் பாருங்கள். மேசியா எந்த நேரத்தில் வரவேண்டியதாயிருந்தது என்று பாருங்கள். மேசியாவிற்கு யார் முன்னோடியாக இருக்கப் போகிறது என்று பாருங்கள். நேரத்தைப் பாருங்கள். யோவானே, வனாந்திரத்தில் கூப்பிடுகிற ஒருவனுடைய சத்தம் இருக்கப்போகிறது. நீங்கள் என்ன பட்டியலிட்டீர்களோ, அதையே அவனுக்குச் செய்தீர்கள். நான் வரும்போது என்ன செய்ய வேண்டியவனாயிருந்தேன் என்று பாருங்கள். இப்பொழுது நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? நான் இதை நிறைவேற்றத் தவறிவிட்டேனா?” என்று கேட்டார். பாருங்கள், இயேசு, “நான் இதை நிறைவேற்றத் தவறிவிட்டேனா?” என்று கேட்கிறார்.
2843 கவனியுங்கள், இந்தப் பிற்பகலில் நாம் வேதவாக்கியங்களினூடாக ஆராய்ந்து பார்க்கையில், எப்படி அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தனவோ அவைகள் யாவும் சரியாக அது சம்பவிக்க வேண்டி விதத்தில் சம்பவித்தன. அவர்கள் இந்தச் சம்பவத்தை அறிந்திருக்க வேண்டும். “இந்த மதவெறியர், ஏறக்குறைய முப்பத்தி மூன்று…அல்லது முப்பது வயதுடைய வாலிப நபர், அங்கே சென்று எல்லாவிதமான வெளிச்சங்களையும், புறாக்கள் எழும்பி இறங்கினதையும் உரிமை கோரினார். மேலும், ஏன், அது ஒரு—ஒரு அவமானமாயிருந்தது.” அவர்கள், “அவர் முறைதவறிப் பிறந்த பெற்றோர்களுடன் பிறந்தார், அவர் ஒரு கன்னிப் பிறப்பின் மூலம் பிறந்ததாக உரிமை கோரினார்” என்றனர். 44 ஏசாயா 9:6-ல், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்” என்று ஏசாயா கூறியுள்ளதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? ஏசாயா தீர்க்கதரிசி, “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்று கூறியுள்ளதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? அவர்கள் இந்தக் காரியங்களை அறிந்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் பாருங்கள், அதைக் குறித்த காரியம், அவர்கள் அதை எங்கோ முற்காலத்திற்கு பொருத்திக் கொண்டிருந்தனர். இந்த மனிதன், அவர்களுக்கு, விவரக்குறிப்பைப் பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அவர் அவர்களை நோக்கி, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்கள், அவைகளே என்னுடைய செய்திக்குச் சாட்சி பகருகின்றன” என்று கேட்டார். ஏதோ ஒரு வேத சாஸ்திரி கூறினது அல்ல; ஆனால் தேவன், தம்முடைய சொந்த வார்த்தை, கூறினது சம்பவிக்கும் என்று கூறினதே! ஆமென்! 45 இப்பொழுதும் அவ்வாறே உள்ளதே! வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், ஏனென்றால் அவைகள் தான் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற வேளையைக் கூறுகின்றன, இந்நாளில் என்ன சம்பவிக்கும் என்று சரியாக நமக்குக் கூறுகிறது. அவைகளைத்தான் நீங்கள் சார்ந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவைகள் இயேசு கிறிஸ்துவின் நபரைக் குறித்து சாட்சி பகர்ந்து கொண்டிருக்கின்றன. ஏனென்றால் வேதம், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறியுள்ளது. ஏனென்றால் அவர் காலத்தின் வார்த்தையின் வெளிப்பாடாயிருக்கிறார். வித்தியாசமாக இருக்க முடியாது.
2946 ஆகையால் மனிதனுடைய வியாக்கியானத்தைக் கேட்பதன் மூலம், அவர்கள் தேவனுடைய வார்த்தையின் உறுதிப்படுத்துதலைக் காண்கிறார்கள், அவர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். ஏனென்றால், அது எல்லா நேரத்திலும் நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் அவர்கள் செவிகொடுக்கிறபடியினால்… இயேசு, “அவர்கள் குருடான தலைவர்கள்” என்றார். குருடர் குருடருக்கு வழிகாட்டினால், அவர்களுக்கு என்ன நேரிடும்? இப்பொழுது இந்த லவோதிக்கேயா சபை, குருடாயிருந்தது என்று வேதம் முன்னுரைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அவரைச் சபைக்கு வெளியே வைத்திருந்தனர். இயேசு வெளிப்புறத்தில் இருந்தார் என்பது வேறெந்த சபைக் காலத்திலுமே கிடையாது. ஆனால் லவோதிக்கேயா சபையின் காலத்தில், அவர் வெளிப்புறத்திலிருந்து, உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருந்தார், “நான் வாசலண்டை நின்று கதவைத் தட்டுகிறேன்.” அவர் உள்ளே இருக்க வேண்டும். ஆனால் அவரோ, “நான் ஐசுவரியமுள்ளவனும், திரவியசம்பன்னனென்றும், ஒரு குறைவுமில்லையென்றும் அறியாமல் நீ அதைச் சொல்லுகிறபடியால், நீ குருடாய் இருப்பதை அறியாமல், குருடரை வழி நடத்துகிறவனாயும், ஆவியில் தரித்திரனாயும், நிர்பாக்கியமுள்ளவனாயும், பரிதபிக்கப்படத்தக்கவனாயும், நிர்வாணியாயும் இருந்தும், அதை அறியாமல் இருக்கிறாய்” என்றார். என்ன ஒரு…ஒரு மனிதன் நிர்வாணமாக வீதியில் பரிதபிக்கப்படத்தக்கவனாய், குருடனாயிருந்தால், அவன் நிர்வாணமாயிருக்கிறான் என்று அவனிடம் கூற முடிந்தால், அவன் அதைக் குறித்து ஏதாவது செய்ய முயற்சிப்பான். ஆனால் அவன் தன்னுடைய தலையை அசைத்து, “நான் அதைப் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கூற நீங்கள் யார்? நான் எங்கே நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன்” என்று கூறுகிறான். இப்பொழுது, அது ஒரு பரிதாபமான நிலையாயில்லையென்றால், அது என்னவென்று எனக்குத் தெரியாது. அந்தவிதமாகத்தான் இந்த வேதாகமத்தின் தேவன் இப்பொழுது இந்த பொல்லாத காலத்தில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற கடைசி சபையின் காலத்தில், சபையானது இருக்கும் என்று கூறினார். 47 கவனியுங்கள், ஆனால் ஜனங்களோ, “நான் சிநேகிக்கிறவர்களைக் கடிந்துகொள்கிறேன்.” இப்பொழுது, நீங்கள் செய்துகொண்டிருக்கிற காரியங்களைக் குறித்து கர்த்தரால் கடிந்து கொள்ளப்பட்டால், அப்பொழுது அதிலிருந்து வெளியே வாருங்கள்! அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களை நான் கடிந்துகொள்கிறேன்.”
3048 இப்பொழுது, தேவனைக் காணும்போது, இப்பொழுது, அந்தப் பரிசேயர்கள், “ஒரு நிமிடம் பொறும். அந்த மனிதன் நமக்கு முற்றிலும் ஒரு சவாலை அளித்திருக்கிறார். அவர், ‘வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன.’ நான் வேதவாக்கியங்களை பின்னோக்கிப் பார்த்து, அவர் என்ன செய்ய வேண்டியவராயிருக்கிறார் என்பதைக் கண்டறிவது மேலானதாயிருக்கிறது, அவர் யாராயிருக்கிறார், என்ன சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது. நான் பின்னோக்கிப் பார்த்து அதைக் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்களா? அதற்குப் பதிலாக அவர்கள் ஆசாரியர்களிடம் சென்று, “அதைக் குறித்து என்ன?” என்று கேட்டனர். வித்தியாசம் புரிகிறதா? அவர்கள் வார்த்தையை வாசித்திருக்க வேண்டும்.
3149 எபிரெயர் 1:1-ல் வேதம், “தேவன் பூர்வ காலங்களில்” என்று கூறியுள்ளது. அதாவது, “பண்டைய காலங்களிலும், பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் வேதாகமத்தை எழுதினார்கள்” என்பதாகும். இப்பொழுது கவனியுங்கள், அவர் தம்முடைய சொந்த தெரிந்துகொண்ட வழியில் வேதாகமத்தை எழுதினார். பார்த்தீர்களா? இப்பொழுது, அவர் அதை அந்தவிதமாக எழுத வேண்டியதில்லை, அதேவிதமாக அவர் மனிதனை இரத்தத்தினால் இரட்சிக்க வேண்டியதில்லை. அவர் மனிதன் மூலம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியதாயிருக்கவில்லை; அவரால் சூரியனையோ அல்லது சந்திரனையோ அல்லது நட்சத்திரங்களையோ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அனுமதித்திருக்க முடியும், அவரால் சுவிசேஷத்தை காற்றுகள் முழங்கச் செய்ய முடிந்திருக்கும். ஆனால் அவர் மனிதனைத் தெரிந்துகொண்டார்! அவர் தம்முடைய வார்த்தை வந்த வழியைத் தெரிந்துகொண்டார், அதாவது அவருடைய தீர்க்கதரிசிகள் முன்குறிக்கப்பட்டிருந்து முன்நியமிக்கப்பட்டிருந்தபடியால், தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகமாயிருந்து, அவருடைய வார்த்தையின் வெளிப்பாட்டை அந்தந்த காலத்திற்கும், அந்த நேரத்திற்கும் அறிவித்துக் கொண்டிருக்கிறார். “ஏனென்றால் தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வந்தது.” அது ஒருபோதும் ஒரு வேத சாஸ்திரிக்கு வருவதில்லை. வேத வாக்கியங்களை எனக்குக் காண்பியுங்கள். அது தீர்க்கதரிசிகளுக்கு மாத்திரமே வருகிறது. தேவனால் பொய்யுரைக்க முடியாது. எனவே தேவன் வேதாகமத்தை தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்ட முறையைக் கொண்டு எழுதினார், அவர் சொந்தமாகத் தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகள்; மனிதன் தெரிந்துகொண்டிருந்த தீர்க்கதரிசிகளையல்ல, ஆனால் தேவன் தெரிந்துகொண்டிருந்த தீர்க்கதரிசிகளையே.
3250 அதன்பின்னர் அதனுடைய விசுவாசிகள், தங்களுடைய தீர்க்கதரிசி கூறினது நிறைவேறுவதற்காக, அதுவே அவர்கள் தேவனுடைய தீர்க்கதரிசிகள் என்ற அடையாளமாயுள்ளது. ஏனென்றால் முதலில் அவர்கள் ஏவப்பட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக, அவர்கள் சரியாக இந்த நேரத்தின் வார்த்தையோடு தரித்திருக்கிறார்கள். அப்படியானால் அது அவருடைய நற்சான்றிதழ்கள். பாருங்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் அதனூடாகச் சென்றோம். அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்புவார்கள். பிலேயாமும் மோசேயும் ஒரே ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டதற்கான உதாரணங்களை நாங்கள் தருகிறோம், அவர்களில் ஒருவன், “நாம் எல்லோரும் ஒன்றாயிருக்கிறோம். நாம் வந்து சேர்ந்து, நம்முடைய பெண் பிள்ளைகள் மற்றும் எல்லோரையும் ஒன்று சேர்ப்போமாக. நாங்கள் இங்கே அழகான பெண்களை உடையவர்களாயிருக்கிறோம், பையன்களாகிய நீங்கள் இங்கு வந்து உங்களுக்கு ஒரு அருமையான மனைவியைப் பெற்றுக்கொள்கிறீர்கள். பரவாயில்லை, நாம் எல்லோரும் ஒரே ஜனங்கள், எப்படியாயினும், ஒரே இனம்” என்றான். தேவன் அதற்காக அவர்களை ஒருபோதும் மன்னிக்கவில்லை. அவர்கள் அதற்குச் செவி கொடுத்தனர். 51 பாருங்கள், உலகமும், ஜனங்களும் ஏதோ ஒரு வடிகாலை, ஏதோ ஒரு சிறு புறவழிச் சாலையை, சிறு குறுக்கு வழிகளை நோக்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் தேவனுடைய வார்த்தையில் குறுக்கு வழிகளேக் கிடையாது. முறைமை ஒன்று உண்டு. நீங்கள் உங்களை அந்த மாதிரிக்குப் பொருத்தமாக வெட்டிக் கொள்ள வேண்டும், உங்களுக்குப் பொருத்தமாக அந்த மாதிரியை வெட்டிக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. ஒவ்வொருவரும் அதைச் செய்ய வேண்டும். அந்தவிதமாகத்தான் தேவன் அதைச் செய்கிறார்.
3352 இப்பொழுது கவனியுங்கள், அந்த வார்த்தை உறுதிப்படுத்தப்படும் வரை விசுவாசிகள் காத்திருக்கின்றனர். பாருங்கள், இது மனிதனால் எழுதப்படவில்லை, ஆனால் தேவனாகிய கர்த்தரால் எழுதப்பட்டது, ஆகையால் இது ஒரு மனிதனின் புஸ்தகம் அல்ல. 53 யாரோ ஒருவர், “அது சில பண்டைய எபிரெய எழுத்துக்கள்” என்றார். எபிரெயர்கள் தங்களை ஆக்கினைக்குள்ளாக்கும் ஒரு நிரூபத்தை எழுதுவார்களா? அந்த அருமையான தேசமான யூதர்கள், சுய போக்கும் மெருகேற்றப்பட்டவர்களுமான, அவர்கள் தங்களுடைய அக்கிரமங்களை எழுதி வைத்துத் தங்களையே குற்றப் படுத்திக் கொள்வார்களா? நிச்சயமாக இல்லை. அவனுடைய சொந்த பாவங்களைக் குறித்தும், அவர்கள் எப்படி விக்கிரகாராதனைக்குள்ளாகச் சென்றனர் என்றும், அவர்கள் எப்படி தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக வேசித்தனம் செய்தனர் என்றும் சொல்லுவீர்களா? இல்லை, இல்லை. அந்தப் பெருமை வாய்ந்த தேசத்தார், அதை ஒருபோதும் கூறமாட்டார்கள். 54 அது ஒரு மனிதனின் புத்தகம் அல்ல. அது ஒரு தேவனுடைய புத்தகம். தரிசனங்களைக் காணும் அல்லது தேவனுடைய சத்தத்தைக் கேட்கிற மனிதன், அநேக சந்தர்ப்பங்களில், (அநேக சமயங்களில்) அதைப் புரிந்து கொள்ளவேயில்லை. பார்த்தீர்களா? மனிதன் வேதாகமத்தை எழுதவில்லை. தேவன் வேதாகமத்தை எழுதினார். அது இல்லை…அது ஒரு மனிதனுடைய புத்தகம் அல்ல. அது தேவனுடைய புத்தகம். அது மானிட உதடுகளினூடாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சிந்தனைகளாகும். அதுவே அதை வேதாகமமாக ஆக்குகிறது. வெளிப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனை ஒரு வார்த்தையாகும். ஆதியிலே தேவனுடைய சிந்தனை இருந்தது, அவர் அதைத் தம்முடைய தீர்க்கதரிசிகளின் உதடுகளின் மூலம் வெளிப்படுத்தி, தம்முடைய ஊழியக்காரர்கள் மூலம் அதை உறுதிப்படுத்தினார். பார்த்தீர்களா? கவனியுங்கள்.
3455 தேவன் தம்முடைய சொந்த தெரிந்துகொள்ளுதலைச் செய்கிறார், முன்குறித்தலின் மூலம் ஒவ்வொரு காலத்துக்கும் தீர்க்கதரிசிகளைத் தெரிந்துகொண்டார். அதைக் கவனியுங்கள். அவர் அந்தத் தீர்க்கதரிசியின் சுபாவத்தை அந்தக் காலத்திற்கு ஏற்றதாய் பொருத்துகிறார். பாருங்கள், அவர் என்ன செய்தாலும், அவருடைய பாணிக்கு அவர் பொருந்துகிறார். அவன் படித்திருந்தாலும் அல்லது படிக்கவில்லையென்றாலும் அவர் அவனைப் பொருந்த வைக்கிறார். அவன் பிரசங்கிக்கும் விதத்திலும், அவனுக்கு இருக்கப்போகும் வரங்களோடும் அவர் பொருந்துகிறார். அந்த குறிப்பிட்ட காலத்திற்கான செய்தி, குறிப்பிட்டக் காரியம் சம்பவிக்கும்படியாகத் தேவனால் முன்குறிக்கப்பட்டிருக்கிறது, வேறொரு காரியம் அதனுடைய இடத்தை எடுக்க முடியாது. அது என்னவாயிருந்தாலும் கவலையில்லை, எத்தனை மனிதனால் உண்டாக்கப்பட்ட சாதனைகள், எதுவுமே அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அவர் அந்த மனிதனை முன்குறித்திருக்கலாம், ஒருவேளை ஒரு அறியாமை மனிதனாக இருக்கலாம். அவர் அவரை வேறு வகையான மனிதனாக முன்குறித்திருக்கலாம். அவன் என்னவாயிருந்தாலும், அவர் அவனுக்கு அவனுடைய தரத்தை, அவனுடைய—அவனுடைய வரத்தை அளித்து, அவனுக்கு அவனுடைய சுபாவத்தை அளித்து, அவனுடைய நடை, அது என்னவாயிருந்தாலும், அவன் என்ன செய்தாலும், அவன் எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவர் அந்த நேரத்தின் ஜனங்களைப் பற்றிப் பிடிக்கும்படிக்கு அந்த நேரத்துக்கான மனிதனை உண்டாக்குகிறார். சரி. அவர் அதைச் செய்கிறார். 56 ஒவ்வொரு காலத்தின் முடிவிலும், சபையானது உலகத்திற்கும், பாவத்திற்கும் திரும்பியிருக்கும்போது, வார்த்தையின் மனிதனுடைய வியாக்கியானத்தின் பேரில் சார்ந்திருப்பதையும் நான் கண்டேன். எப்போதும் போல, அவர்கள் எப்போதும், காலத்தின் முடிவில், தங்களுடைய வேத சாஸ்திரிகளாலும், குருமார்களாலும், அது எப்பொழுதுமே ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது. அவர்களுடைய வியாக்கியானம் எப்பொழுதுமே தவறாக இருக்கிறது, ஒரு முறை கூட அது தவறாக இருக்கத் தவறவில்லை. தேவனுடைய வார்த்தை சரியானதாயிருக்க ஒரு முறை கூடத் தவறியதில்லை. அதுதான் வித்தியாசம்.
3557 இப்பொழுது நீங்கள் பாருங்கள், தேவன் தாமே வேதாகமத்தை எழுதினார். இப்பொழுது, தேவனால் பேச முடியும். அவர் அவனிடத்தில் பேசினார் என்று மோசே கூறினான். எரேமியா, “அவருடைய வார்த்தைகளை என் வாயில் போட்டார்” என்றான். தேவனால் எழுத முடியும். அவர் தம்முடைய சொந்த விரலினால் பத்து கற்பனைகளை எழுதினார். அவர் பாபிலோனின் சுவர்களில் எழுதினார். பழைய ஏற்பாட்டில் மாத்திரம் இரண்டாயிரம் தடவைகள் தீர்க்கதரிசிகள், “ கர்த்தர் உரைக்கிறதாவது !” என்று கூறினார்கள் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். தேவனால் பேச முடியும், தேவனால் எழுத முடியும். நிச்சயமாக. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவானின் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம், இயேசு கிறிஸ்து பேசின, தேவனுடைய வார்த்தைகள்தான். எனவே, தேவனால் எழுத முடிந்தால், தேவனால் வாசிக்க முடிந்தால், தேவனால் பேச முடிந்தால், அவர் மற்றவர்களையும் அவ்விதமாகச் செய்யும்படி செய்ய முடியாதா? அவர் மோசேயினிடத்தில், “மனுஷனை ஊமையாக்குகிறது யார் அல்லது அவனைப் பேசச் செய்கிறது யார்?” என்று கூறவில்லையா. தேவன் செய்கிற விதத்தின்படியே, தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் வேதாகமத்தை எழுதினார்.
3658 இப்பொழுது ஒவ்வொரு முறையும் சபை குழப்பமடையும்போது (தேவன் எல்லாவற்றையும் முன்னறிந்து அறிந்திருந்ததால், அவர்கள் அதை முன்னறிந்து கொள்வார்கள் என்பதை அவர் முன்னறிந்து கொண்டார்), ஆகையால் அந்தக் காலத்திற்குரிய தம்முடைய குறிப்பிட்ட தீர்க்கதரிசியை அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிறார், தம்முடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையின் அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துதலினாலும், அவர் வாக்குத்தத்தம் செய்தபடியே, “வசனத்தை உறுதிப்படுத்தும் அடையாளங்கள் பின்தொடர்ந்தன.” தீர்க்கதரிசி தானே ரூபகாரப்படுத்தப்பட்ட பிறகு, அவன் உண்மையான வியாக்கியானத்தை அளிக்கிறான். 59 அவர் அனுப்பப்பட்ட தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் அவரை வெறுக்கிறார்கள். இப்பொழுது, அது சரியா அல்லது இல்லையா என்று ஒவ்வொரு சம்பவத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அவர் அனுப்பப்பட்டவர்களுக்கு மாத்திரமே! “அவர் தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்தார், அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய புத்திரராகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” என்று கூறப்பட்டுள்ளது. கவனியுங்கள், எந்த…வார்த்தையின் ஒவ்வொரு பரிசோதனையிலும், ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு காலத்தின் முடிவிலும் அல்லது உச்சக்கட்டத்தில் அல்லது சந்திப்பிலும், நான் அதன் பேரில் அநேக முறை பிரசங்கித்திருக்கிறேன்.
3760 நோவாவின் காலத்தைப் பாருங்கள், அது நியாயத்தீர்ப்புக்கு முன்பாக உச்சக்கட்டத்தில் இருந்தது. என்ன நடந்தது? நோவா, அவனுடைய சொந்த குடும்பத்தினர் மாத்திரமே அந்த மனிதனை விசுவாசித்தனர். மற்றவர்கள் அவனைக் குறை கூறினர். முழு உலகத்தையும் அழித்துவிட்டது. 61 ஆபிரகாமின் நாட்களில், விசுவாசித்த ஆபிரகாமின் குழுவினர் மாத்திரமே இருந்தனர். தூதர்கள் சோதோமிற்குச் சென்று பிரசங்கித்தபோது, லோத்தும் அவனுடைய மனைவியும் இரண்டு குமாரத்திகளும் மாத்திரமே வெளியே வந்தனர், அவள் உப்புத்தூணாக மாறினாள். 62 மோசேயின் நாட்களில், இஸ்ரவேல் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே வெளியே வந்தனர். பார்வோன் அவனை வெறுத்தான். 63 எலியாவின் நாட்களில், ஏழாயிரம் பேரைத் தவிர மற்ற யாவரும் (கிட்டத்தட்ட) அவனை வெறுத்தனர், அவர்கள் ஒவ்வொருவரும், முழு தேசமும் அவனை வெறுத்தனர். 64 எரேமியாவின் நாட்களில், ஏன், அவர்கள் அவன்மீது பழுக்காத கனிகளை வீசியெறிந்து, அவனை ஒரு மதவெறியன் என்று அழைத்தனர், ஏனென்றால் அவன் அநேக நாட்களாகத் தன்னுடைய பக்கத்தில் படுத்துக்கொண்டு, மறுபக்கமாக, மற்றும்—மற்றும் பொருட்களை எடுத்து, அடையாளங்களை உண்டாக்கினான். அவர்கள் அவனை வெறுத்தனர். 65 ஏசாயா தீர்க்கதரிசி, அவன் அந்தச் சந்ததியை மிக அதிகமாகக் கடிந்து கொண்டதால், அவர்கள் அவனை ஒரு வாளால் இரண்டாக வெட்டினர். உண்மை.
3866 யோவான் ஸ்நானன். “அவன் அங்கே ஒரு காட்டுத்தனமான மனிதனாய், கூக்குரலிட்டுக்கொண்டிருந்த ஒரு பைத்தியக்காரனாயிருந்தான்.” இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு சபையாக அவன் அளித்த அந்தச் சீஷர்களைத் தவிர—அனைவருமே! அதுதான் காரியம். யோவான் ஜனங்களை ஆயத்தப்படுத்தினான். அவன் எத்தனை பேரை வைத்திருந்தான்? நீங்கள் அவர்களை இரண்டு விரல்களிலும் எண்ணலாம்.…இரண்டு கைகள், உங்கள் விரல்கள், இயேசு வரும்போது யோவான் எத்தனை பேர்களை அவருக்கு அளித்தான். இப்பொழுது, அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்து என்ன? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 67 ஆனால் உண்மையான வேதாகம விசுவாசிகள் அந்தக் காலத்திற்காக வார்த்தை மிகவும் வெளிப்படையாக ரூபகாரப்படுத்தப்படுவதைக் காணும்போது, அவர்கள் விசுவாசிக்கிறார்கள். அதிலிருந்து அவர்களைத் தடுக்க வழியேக் கிடையாது, அதை விசுவாசியுங்கள். அவர்கள் தங்களுடைய சாட்சியை அவர்களுடைய இரத்தத்தினால் முத்திரையிடுகிறார்கள். அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். அப்படியானால் அது முன்குறிக்கப்பட்டவர்களுக்கு, அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கானது, அதைக் கண்டு விசுவாசிக்கின்றனர்.
3968 மற்றவர்களால் அதைக் காண முடியாது; அவர்கள் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது, நீங்கள், “அவர்களால் அதைக் காண முடியவில்லை” என்று கூறலாம். இப்பொழுது, பிலேயாமைப் போல, ஏன் பிலேயாமினால் அதைக் காண முடியவில்லை? அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். ஏன் பார்வோனால் அதைக் காணமுடியவில்லை? தேவனுடைய கரம் இறங்கி வந்து அங்கே அற்புதங்களை நிகழ்த்தினதை அவன் கண்டபோது, அது அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தவே செய்தது. அது சரியா? ஒரு யூதனான தாத்தானால் ஏன் அதைக் காணமுடியவில்லை? அங்கே வெளியே, சவக்கடல் வழியாக வந்து, ஒவ்வொரு இரவும் புதிதாக விழுந்த மன்னாவைப் புசித்தும், அப்பொழுதும் அதைக் காணமுடியவில்லை. கோராகு ஏன் அதைக் காணவில்லை? காய்பா ஏன் அதைக் காணவில்லை? அவர் அந்த நேரத்தில் உலகத்தின் தலைமை மத மனிதனாயிருந்தார். அது மேசியா என்பதை அவன் ஏன் காணவில்லை? யூதாஸ் ஏன் அதைக் காணவில்லை? யூதாஸ் அவர்களோடு சரியாக இருந்து, அவர்களோடு நடந்து, அவர்களோடு அற்புதங்களை நிகழ்த்தினான். ஆனால் வார்த்தை நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அந்த ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள உயிரோடெழுப்பப்பட்டனர் என்று வேதம் கூறுகிறது. அந்த நோக்கத்திற்காகவே அவர்கள் உயிரோடெழுப்பப்பட்டனர். அது உண்மை. ரோமர் 8 அதைக் கூறுகிறது.
4069 இப்பொழுது விசுவாசிகள் தங்களுடைய சந்ததியில் வார்த்தை மாம்சமானதை, தேவன் பேசுவதைக் காண முடிகிறது. இப்பொழுது, அவர்கள் உண்மையான உண்மையான விசுவாசிகளாயிருந்தனர், அவர்கள் ஏழாயிரம் (அல்லது அது எழுநூறு பேர்களா?) எலியாவின் நாட்களில் இருந்தனர். ஏழாயிரம் என்பது சரியே. எலியாவின் நாட்களில் ஏறக்குறைய இரண்டு அல்லது முப்பது லட்சம்பேரில் ஏழாயிரம் பேர் மாத்திரமே, அது சரியாயிருந்தது என்று கண்டனர். ஜனங்களில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. ஆனால் அது சரியென்று அவர்கள் கண்டனர். தேவன் வெளிப்படுவதை அவர்கள் கண்டனர். எலிசா அனுப்பப்பட்ட அந்த வயோதிக விதவை, ஒரு அடையை உண்டாக்க, அந்த விறகுகளை பொறுக்கச் சென்றாள், அவளுக்கும் அவளுடைய மகனுக்கும் வெறுமென ஒரு அடையை உண்டாக்கி, அதன்பின்னர் மரிப்பதற்கு இருந்தாள். ஆனால் எலியாவைக் கவனியுங்கள், அவன், “முதலில் எனக்கு ஒன்றை உண்டு பண்ணு. ஏனென்றால், கர்த்தர் உரைக்கிறதாவது , தேவனாகிய கர்த்தர் பூமியின் மேல் மழையைப் பொழியப்பண்ணும் நாள் வரைக்கும் பானையில் மாச்செலவழிந்து போவதும் இல்லை கலசத்திலே எண்ணெய் குறைந்து போவதும் இல்லை.” எந்தச் சந்தேகமும் இல்லை, அவள் உடனே புறப்பட்டுச் சென்று அடையை அவனுக்குக் கொடுத்தாள். “முதலில் என்னுடையதை உண்டாக்கு, அதன்பின்னர் போய் உனக்கும் உன் மகனுக்கும் ஒன்றை உண்டாக்கு” என்றான். ஏனென்றால், அவள் அவனை நோக்கிப் பார்த்து, அவனுக்குச் செவி கொடுத்தாள்; அவள் ஒரு முன்குறிக்கப்பட்ட வித்தாய் இருந்தாள்.
4170 அவர்களில் அநேகர், “மீண்டும் அந்தப் வயோதிக பைத்தியக்காரன் இருக்கிறான். நினைவில் கொள்ளுங்கள், எலியா, அவன் நிமித்தமாகத் தேவன் நம்மைச் சபித்தார்” என்றனர். “நீர்தான் இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன்” என்றான். 71 அவன், “நீர்தான் இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன்” என்றான். தேவன் பாருங்கள்…அவர் யாருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்திக் கொண்டிருந்தார்? அவருடைய சொந்த வார்த்தை. 72 அவர்கள் இந்த நோக்கத்திற்காகவே உயிரோடெழுப்பப்பட்டனர் என்று வேதம் கூறுகிறது, ஆனால்…அவிசுவாசிகள். ஆனால் இப்பொழுது ஒரு உண்மையான விசுவாசி அந்த காலத்தின் வார்த்தை மாம்சமானதைக் காணும்போது, தேவன் மானிட உதடுகளினூடாகப் பேசி, அவர் செய்வதாகக் கூறினதைச் சரியாகச் செய்கிறார், அதுவே இதற்குத் தீர்வாகிறது!
4273 இப்பொழுது மற்ற பாகத்தைக் கவனியுங்கள். அடையாளங்களைக் கவனிக்க வேண்டாம். நீங்கள் அடையாளங்களைக் கவனித்தால், உலகமானது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிப்பார்கள். வார்த்தையைக் கவனியுங்கள். இந்த ஆசாரியர்கள், இந்தத் தீர்க்கதரிசிகள், எபிரெய தீர்க்கதரிசி அங்கு நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். சிதேக்கியா இரண்டு பெரிய கொம்புகளை உடையவனாய், “நான் தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி” என்று கூறுகிறான். அது உண்மைதான். “என்னோடு இங்கே முந்நூற்று தொண்ணூற்றொன்பது பேர் உள்ளனர், பரிசுத்த ஆவியானவர் எங்கள்மேல் உள்ளபடியால், தேசம் எங்களுக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தி, அதைக் கூறுகிறான். நாம் சென்று அதை எடுத்துக் கொள்வோம். இந்தக் கொம்புகளினால், ஆகாப், நீ சத்துருவை எங்களுடைய தேசத்திலிருந்து தள்ளிவிடுவீர், ஏனென்றால் தேவன் நமக்கு நிலத்தை அளித்தார்” என்றான்.
4374 அந்தப் பக்தியான மனிதன், நல்ல மனிதன், யோசபாத் கூறினதை கவனியுங்கள், “உனக்கு இன்னும் ஒருவன் இல்லையா?” என்று கேட்டான். 75 “இன்னும் ஒன்றா? நானூறு பேர் உடன்படிக்கையில் உள்ளனரே!” அதற்கு அவன், “ஆம், இங்கே இன்னும் ஒருவன் இருக்கிறான், ஆனால் நான் அவனை வெறுக்கிறேன்” என்றான். மேலும், “அவன் எப்பொழுதும் நம் எல்லோரையும் கூச்சலிட்டு, நாம் எவ்வளவு பெரிய பாவிகளாயிருக்கிறோம் என்றும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் நம்மிடத்தில் கூறிக்கொண்டிருக்கிறான்” என்றான். “நான் அவனை வெறுக்கிறேன்! அவன், அவன் இம்லாவின் குமாரனாகிய மிகாயா” என்றான். 76 அவன், “ஓ, ராஜா அவ்வாறு கூற வேண்டாம். போய் அவனை அழைத்து வா, அவன் என்ன கூறினான் என்பதைக் கேட்போம்” என்றான். 77 எனவே அவர்கள் அவனை அங்கே கொண்டு வந்தனர். அவன், “இன்றிரவு பொறுத்திருங்கள், அப்பொழுது கர்த்தர் அதைக் குறித்து என்ன கூறுகிறார் என்று நான் பார்ப்பேன்” என்றான். 78 ஆகாப், “உண்மையைத் தவிர வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” என்றான். 79 அப்பொழுது அந்த மனிதன் வந்து, “இப்பொழுது, நீர் நல்ல ஐக்கியத்திற்கு திரும்ப விரும்பினால், மற்றவர்களைப் போலவே சொல்லும்” என்றான். மிகாயா, “தேவன் கூறுகிறதையே நான் கூறுவேன்” என்றான். பார்த்தீர்களா? 80 அடுத்த நாள் காலையில் அவர்கள் வெளியே வந்தனர். ராஜாக்கள் தங்களுடைய அங்கிகளை உடுத்திக் கொண்டு, பிரபலங்கள் யாவரும் வாயிலில் அமர்ந்திருந்தனர். தீர்க்கதரிசி அங்கே நின்று கொண்டிருக்கிறான். “இப்பொழுது, மதவெறியரே, நீங்கள் அதைக் குறித்து என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டான். 81 “மேலே போங்கள்” என்றான். “ஆனால் இஸ்ரவேலர் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் சிதறடிக்கப்பட்டதைக் கண்டேன்” என்றான்.
4482 அவன்…அவனுடைய கையைப் பிடித்து, அவனுடைய வாயில் அடித்தான். தீர்க்கதரிசி அந்தத் தீர்க்கதரிசியின் வாயில் அடித்தான். இப்பொழுது, அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள் இருவரும் அங்கே நின்றுகொண்டு, ஒருவருக்கு எதிராக நானூறு பேர் தீர்க்கதரிசனம் உரைத்தனர், அவர்கள் பக்கம் பலமுள்ளதாகக் காணப்பட்டது. இப்பொழுது, திரளான ஆலோசனையில் அது எப்பொழுதுமே பாதுகாப்பாய் இருப்பதில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே…அவர்கள் எதைக் குறித்து ஆலோசனை கூறுகிறார்கள், அவர்களுடைய ஆலோசனை என்ன என்பதைப் பொறுத்தது. அங்கே ராஜாவுக்குப் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், அவன் அந்த ஜனக்கூட்டத்தை தங்களுடைய ஆலோசனை சரியாயிருக்கும்படி அழைத்துக் கொண்டான். ஆனால் அவன் சற்று நிறுத்திவிட்டு, புஸ்தகத்தை திருப்பிப் பார்த்துவிட்டு, எலியா என்ன கூறினான் என்று பாருங்கள்!
4583 அதன்பின்னர், மிகாயாவால் ஒன்றும் கூற முடியவில்லை, அவன் அதை அறியவில்லை, தேவன் அதற்காக அவனை மன்னித்திருக்கலாம். ஆனால் முதலாவதாக, அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், தேவன் என்ன கூறினார் என்பதை கண்டறியும்படி தேவனிடம் சென்றான். தேவன் என்ன கூறினார் என்பதை அவன் கண்டறிந்தான். அவன், “தேவன் ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதைக் கண்டேன், அப்பொழுது அவர் கூறினார்…பரலோகத்தின் ஆலோசனைக்காரர் யாவரும் அவரைச் சூழ்ந்து, ஆகாபைக் குறித்து கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தை நாம் நிறைவேற்ற நாம் யாரை அழைத்து வந்து அவனை இங்கே வரச் செய்ய முடியும்?’ என்று கூறினார்” என்றான். 84 பாருங்கள், தீர்க்கதரிசனம், எலியா ஏற்கனவே, “உன் இரத்தத்தை நாய்கள் நக்கும்” என்று கூறியிருந்தான். 85 எனவே அவன் கூறினான் அவன், “கீழே இருந்து ஒரு பொய்யின் ஆவி மேலே வருவதைக் கண்டேன், மேலே வந்து, அவருக்கு முன்பாக மேலே வந்து, ‘நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகளையும், ஆகாபின் தீர்க்கதரிசிகளையும் அழைத்து, அவர்கள் ஒரு பொய்யைத் தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்வேன்’” என்றான்.
4686 இப்பொழுது, அந்த மனிதர்கள் மிகவும் இறுமாப்படைந்திருந்தனர் என்பதை தேவன் அறிந்திருந்தார் அவர்கள் வேத சாஸ்திரத்தினால் நிறைந்து, தாங்கள் எல்லாவற்றையும் சரியாக உடையவர்களாயிருந்ததாக எண்ணினர். அவர்கள் அந்த வேளைக்கான வார்த்தையை ஒருபோதும் கவனிக்கவில்லை. எனவே தேவன், “நீ வெற்றி பெறுவாய்; கீழே போ” என்றார். மிகாயா அதைக் கூறினபோது, அது அவர்களைப் பொல்லாத ஆவியின் கீழ் தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்தது. அவர்கள் தொலைபேசியின் இணைப்பைத் துண்டித்திருப்பார்கள், அல்லது வானொலியை நிறுத்தியிருப்பார்கள் அல்லது வேறெதையாவது செய்திருப்பார்கள்; தங்களுக்கு எதிராக வருகிறதை அவர்கள் கேள்விப்பட்டு, எழும்பி வெளியே நடந்து சென்றிருப்பார்கள். ஆனால் என்ன நடந்ததென்று பாருங்கள். இப்பொழுது, மிகாயா எழுதப்பட்ட வார்த்தையைக் கொண்டு தன்னுடைய தரிசனத்தை சோதித்துப் பார்க்க வேண்டியதாயிருந்தது, ஆகையால் அவன் அதை அறிந்திருந்தான். 87 அவர், “நான் வரும்போது…அந்த மனிதனை சிறையிலடைத்து, அவனுக்கு இடுக்கமான தண்ணீரையும், இடுக்கத்தின் அப்பத்தையும் கொடுங்கள். நான் திரும்பி வரும்போது, நான் அவனைப் பார்த்துக் கொள்வேன்” என்றான். 88 அவன், “நீர் திரும்பி வருவது உண்டானால், தேவன் என்னிடம் பேசவேயில்லை” என்றான். அப்பொழுது தான் அவனுடைய தரிசனம் அந்த மணி நேரத்திற்கான ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக இருப்பதை அறிந்து கொள்கிறான். அது ஆகாபின் நேரமாயிருந்தது. 89 சகோதரனே, சகோதரியே, இதுவே பாபிலோனிலிருந்து அழைக்கப்படும் வேளையும் நேரமுமாயுள்ளது. சாயங்கால வெளிச்சம் இங்கே உள்ளது. வெளிச்சம் இருக்கும்போதே வெளிச்சத்தில் நடந்து செல்லுங்கள். கவனியுங்கள், விசுவாசிகள் வார்த்தை வெளிப்படுத்தப்பட்டதைக் கண்டு, அதை விசுவாசித்தனர். இயேசு, “என் ஆடுகள் என் சத்தத்தையும், என் வார்த்தையையும், என்னுடைய காலங்களின் அடையாளங்களையும் அறிந்திருக்கிறது. அவர்கள் போலியான ஒன்றைப் பின்பற்றமாட்டார்கள்” என்றார்.
4790 இப்பொழுது நாம் நம்முடைய பாடப் பொருளைப் பார்ப்போம், ஏனென்றால் நான் விலகிச் செல்லப் போகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. அந்த ஜெப வரிசையை நான் அதிகம் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். நாம் இங்கே ஒரு நிமிடம், கலந்தாலோசித்துள்ள பொருளின் பொருளுக்குத் திரும்பிச் செல்வோம். பாருங்கள், அது எப்போதும் சம்பவித்தது போல, வழக்கமாக, அது மீண்டும் சம்பவிக்கும். 91 மல்கியா 3-ம் அதிகாரத்தில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள அவருடைய வார்த்தை கூறியிருந்தபடியே, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியாகிய, யோவானை அனுப்பினார், “இதோ, வழியை ஆயத்தம் பண்ணும்படிக்கு என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்.” யோவானும் அதே காரியத்தைச் சாட்சி பகர்ந்தான். ஏசாயா 40:3-ல், ஏசாயா சொன்னதையும் நாம் காண்கிறோம், “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்’ என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிற தீர்க்கதரிசியின் சத்தம் உண்டாகும்” என்றான். பார்த்தீர்களா? அந்தத் தீர்க்கதரிசனங்கள் யாவுமே! மேலும்—பாருங்கள், கவனியுங்கள், வேதம் அவனை அடையாளங்காட்டினது. அவர்கள், “நீர் யார்? நீ தான் மேசியாவா?” என்று கேட்டனர். அவன், “நான் இல்லை” என்றான். “நீ எரேமியாவா? தீர்க்கதரிசிகள் அல்லது அவர்களில் ஒருவரா?” 92 அவன், “நான் அப்படியில்லை. ஏசாயா தீர்க்கதரிசி உரைக்கிறதுபோல நானோ வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான். 93 அவர்கள் அதை விசுவாசிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை ஐயா. ஏன்? அவர் அவர்களுடைய சபையினூடாக வரவில்லை. அவர் அவர்களுடைய… பாருங்கள், அவன் ஒன்பது வயதில் வனாந்திரத்திற்குச் சென்று, முப்பது வயதில் வெளியே வந்தான். அவனுடைய செய்தி ஒரு வேத சாஸ்திர பள்ளியினூடாகச் சென்று பார்க்க முடியாதபடி மிகவும் மகத்தானதாய் இருந்தது; அவன்தான் மேசியாவை அறிமுகப்படுத்தினான். ஒவ்வொருவரும் அவனை இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் இழுத்துக் கொண்டிருப்பார்கள். அவனுடைய தகப்பனாகிய சகரியாவின் மரணத்திற்குப் பிறகு, தேவன் அவனை வனாந்திரத்திற்கு அனுப்பினார். அவன் ஒரு ஆசாரியனாயிருந்தான், ஆனால் அவன் ஒருபோதும் தன்னுடைய தகப்பனின் வழியைப் பின்பற்றினதில்லை. 94 காரணம், அப்படிப்பட்ட காரியங்களிலிருந்து தீர்க்கதரிசிகள் வெளியே வருவதில்லை. அவர்கள் கரடுமுரடான தேசங்களிலிருந்து, வனாந்திரத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதையோ அல்லது அவர்கள் எப்படி காட்சியில் எழும்பினர் அல்லது அவர்களுடைய சரித்திரத்தையோ எந்த மனிதனும் அறியான். அவர்கள் வெளியே வந்து வார்த்தையைப் பிரசங்கிக்க, மேலும் தேவன் அவர்களை எடுத்துக் கொள்கிறார், அவர்கள் போய்விடுகிறார்கள்; அந்தச் சந்ததியைக் கண்டனம் செய்து, அவருடைய வார்த்தைக்குள்ளாக முன்னேறி, அந்த மகா நாளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
4895 சபையோ அவனை விசுவாசிக்கவில்லை, ஏனென்றால் அவன் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் தங்களுடைய புத்தகங்களில் அவருடைய நியமனத்தைப் பற்றிய எந்தப் பதிவேடும் இல்லாதிருந்தபடியால், அவர்கள் அவனை மறுத்துவிட்டனர். பாருங்கள், அவர்கள் தேவனுடைய ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையை, தெளிவாக, எழுத்திற்கு எழுத்து விசுவாசிக்கவில்லை. பார்த்தீர்களா? மல்கியா 3, அவனை ரூபகாரப்படுத்த இரண்டு வேதவாக்கியங்கள், மல்கியா 3 மற்றும் ஏசாயா 40:3. பாருங்கள், அந்த இரண்டு வேதவாக்கியங்களுமே கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துகிற ஒரு மனிதனைக் குறித்து உரைத்தன. அவர் அதைக் குறித்த ஒவ்வொரு விவரக் குறிப்பையும் சந்தித்தார். 96 அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். “நான் உன்னிடத்திற்கு எலிசாவை அனுப்புகிறேன்” என்றார். அவன் ஒவ்வொரு, கரடுமுரடான வழியிலும் இருந்தான். அவனுடைய சுபாவம் எப்படி எலியாவுடன் இணைந்திருந்தது என்பதைக் கவனியுங்கள். எலியா வனாந்திரத்தைச் சேர்ந்தவனாயிருந்தான், யோவானும் அவ்வாறே இருந்தான்; வெளிப்புறங்களில். அவன் ஒரு மிருதுவான மனிதனாயிருக்கவில்லை, அவன் ஒரு கரடுமுரடான மனிதனாயிருந்தான். 97 மீண்டும் கவனியுங்கள், எலியா ஸ்திரிகளை வெறுக்கும் ஒருவனாய் இருந்தான், அவன் யேசபேலிடம் அவளுடைய வர்ணம் பூசினதைக் குறித்தும், எங்கு ஏற வேண்டும், இறங்க வேண்டும் என்பதையும் கூறினான். யோவானும் அவ்வாறே இருந்தான். யேசபேல் எலியாவைக் கொல்ல முயன்றாள், அவனுடைய தலையை அவனிடத்திலிருந்து எடுத்துப் போடுவதாகத் தன் தேவர்கள்பேரில் ஆணையிட்டாள். ஏரோதியாளும் அவ்வாறே செய்தாள். பார்த்தீர்களா? 98 எப்பொழுதுமே அவர்களுடைய செய்தியைக் கவனியுங்கள், அவர்கள் என்ன செய்தனர் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது வேதம் என்ன கூறியுள்ளது என்பதை அவர்கள் பின்னோக்கிப் பார்த்தால், அந்த மனிதனின் சுபாவத்தையும், அவன் வேத வாக்கியங்களோடும் மற்றும் ஒவ்வொரு காரியத்தோடும் சரியான நேரத்தில் எவ்வளவு பரிபூரணமாயிருந்தான் என்பதை கவனித்தோம் என்பதை நாம் கண்டறிகிறோம், அது அவன்தான் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். சுமார் அரை டஜன் பேர் அதை அறிந்திருந்தனர். அது உண்மை. அரை டஜன் பேருக்கு மேல் அதை உணரவில்லை. அவர்கள் அவனுக்குச் செவி கொடுக்கச் சென்றனர். ஆனால் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. பார்த்தீர்களா? ஏன்? அவர்களுடைய நேரத்தில் தீர்க்கதரிசனத்தின் அடையாளங்காட்டலை அவர்கள் விசுவாசிக்கவில்லை.
4999 கவனியுங்கள், அவர்கள் அவனைப் பரிகசித்து, அவனை “கூக்குரலிடுகிற, மூர்க்கத்தனமான, பள்ளிப் படிப்பு இல்லாத, படிப்பறியாத மதவெறியன் என்று அழைத்து, இலக்கணமற்ற பிழையான வார்த்தைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டினர்.” வழக்கம்போல அவர்கள் அவனுடைய கல்வியறிவைக் கொண்டு அவனை நியாயந்தீர்க்கிறார்கள். அவர்கள் அவனுடைய இலக்கணத்தைக் கொண்டும், அவன் உடை உடுத்தும் விதத்தைக் கொண்டும் அவனை நியாயந்தீர்க்கிறார்கள். அவன் ஒரு துண்டு ஆட்டுத்தோலையும், ஒரு ஒட்டகத்தோல் கச்சையையும் அணிந்திருந்தான், அவன் முழுவதும் உரோமமுடையவனாய் இருந்தான். தண்ணீருக்குள் நடந்து செல்லுதல்; சபை இல்லை, எந்த நீண்ட இருக்கையும் இல்லை, ஒத்துழைப்பு இல்லை; அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவர்கள் உலகத்தின் தெய்வத்தைத் தொழுது கொண்டிருந்தனர். பார்த்தீர்களா? 100 யந்நேயும், யம்பிரேயும் போன்ற கள்ளத் தீர்க்கதரிசிகள் தோன்றவில்லை என்று நான் பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் நீங்கள் செய்ய விரும்புகிற விதம், மூல செய்தியை வார்த்தையைக் கொண்டு சரிபார்த்துக் கொள்வதேயாகும், அப்பொழுது அது எந்தக் காலத்தில் உண்டாயிருக்கிறது என்றும், அந்த காலத்திற்கான தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்றும், நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள்;
50101 அப்பொழுது யோவானின் தீர்க்கதரிசனம் தேவனுடைய சொந்த ஒழுங்கின்படி ரூபகாரப்படுத்தப்பட்டது. எவ்வளவு பரிபூரணமாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். வேதம், “கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது” என்று கூறியுள்ளது. இயேசு வார்த்தையாயிருந்தார். யோவான் நிறைவேற்றத்திற்கான வார்த்தையின் வருகையைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருந்தான்; வார்த்தையாகிய, இயேசு, தீர்க்கதரிசியினிடத்தில், தண்ணீருக்குள் வந்தார். ஓ, எவ்வளவு அழகானது! எவ்வளவு தவறாதது…பார்த்தீர்களா? அந்த நாளில் வார்த்தை ஒரு அரிதான காரியமாயிருந்தது. இதோ தீர்க்கதரிசி வந்து, “நான் வார்த்தையின் சத்தமாயிருக்கிறேன்” என்று கூறுகிறான். அவர்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். 102 “அவருடைய பாதரட்சைகளை அவிழ்க்க நான் பாத்திரன் அல்ல. ஆனால் உங்கள் மத்தியில் எங்கோ ஒருவர் நின்று கொண்டிருக்கிறார், அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பவராக இருப்பார். அவருடைய தூற்றுக்கூடை அவருடைய கரத்தில் உள்ளது, அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கி, பதரை அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார், கோதுமையை களஞ்சியத்திற்கு கொண்டு சேர்ப்பார்” என்றார். ஓ, என்ன ஒரு தீர்க்கதரிசி! அந்த நாள் வரையிலும் அவனைப் போன்ற பெரிய ஒரு மனிதன் ஒரு ஸ்திரீயினிடத்தில் பிறந்ததில்லை என்று இயேசு கூறினார். ஓ, எவ்வளவு அபத்தமானது! அவன் எங்கே நின்று கொண்டிருக்கிறான் என்பதை அவன் எப்படி அறிந்து கொண்டான்! அவன் சரியாக அறிந்திருந்தான். அவன் தேவனிடத்திலிருந்து கேட்டறிந்தான், அது சரியாக வார்த்தையோடு இருந்தது, எனவே ஜனங்கள் என்னக் கூறினாலும் அவன் கவலைப்படவில்லை. அவன் எப்படியாயினும் அதைப் பிரசங்கித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். மேலும் கவனியுங்கள், ஒரு மனிதன் சத்தியத்திற்காக நிற்கும்போது, அப்பொழுது தேவன் அந்த மனிதனுக்கு சத்தியத்தை ரூபகாரப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார்.
51103 மோசே எகிப்தில் வந்து, “நான் வனாந்தரத்தில் அங்கே இருந்தபோது, ஒரு மரத்தின் மேல் அக்கினி எரிகிறதைக் கண்டேன், ஆனால் அது பட்சிக்கவில்லை. நான் மரத்தின் அருகில் சென்றேன், நான் சென்றபோது, அங்கே ஒரு பெரிய அக்கினி ஸ்தம்பம் தொங்கிக்கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு சத்தம், ‘ நான் இருக்கிறவராக இருக்கிறேன் ’ என்று உரைத்தது. அவர் இந்தக் கோலை எடுத்து இங்கே வந்து இந்த அற்புதங்களைச் செய்யும்படி என்னிடம் கூறினார், அப்பொழுது தேவன் தம்முடைய வார்த்தையை ரூபகாரப்படுத்துவார்” என்றார். அவன் தன்னுடைய கோலை நீட்டினபோது, அங்கே வண்டுகளும், பேன்களும், அந்தகாரம் போன்றவைகள் தோன்றின. அதன்பின்னர் அந்தத் தீர்க்கதரிசியை ரூபகாரப்படுத்த, அவர் அந்த விசுவாசிகளை மீண்டும் மலையின் மேல் கொண்டுவந்து, தேவன் அதே அக்கினி ஸ்தம்பத்தில், அதே மலையின் மேல் இறங்கி வந்து, அது சரிதான் என்பதை நிரூபித்தார். இப்பொழுது அவர் இந்நாளில் என்ன செய்துள்ளார் என்பதைப் பாருங்கள். சரியாக.
52104 இப்பொழுது, வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வந்து, அவன் உண்மையான நபர் என்பதை ரூபகாரப்படுத்தினது, வேதவாக்கியங்கள் கூறின அதே நபராக அவன் இருப்பான். இப்பொழுது சீக்கிரம். ஆனால், மீண்டும், இயேசுவானவர் அவர்களுடைய மனிதனால் உண்டாக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் வியாக்கியானத்திலிருந்து ஒரு வித்தியாசமான ரூபத்தில் வந்தார். அது என்னவாயிருக்கும் என்பதை மனிதன் வியாக்கியானம் செய்திருந்தான். நிச்சயமாக. அது அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று பிரஸ்பிடேரியன்கள் நினைக்கிறார்கள். தேவன் எந்தக் காரியத்தையாவது செய்யும்போது, மற்ற ஒவ்வொரு ஸ்தாபனமும் ஒன்று சேர்ந்து எழும்புவதைக் கவனியுங்கள். ஆம், எப்பொழுதுமே அந்தவிதமாகவே இருந்து வந்துள்ளது. அவர்கள் எங்கும் யந்நேயுவையும், யம்பிரேவையும் பெற்றுள்ளனர். கவனியுங்கள், அவர்கள் வார்த்தையின் ஒரு பகுதியைக் கூறினர். ஆனால், தீர்க்கதரிசியின் வார்த்தையின்படி, ஒவ்வொரு நிரூபமும்!
53105 அவர்கள் வழக்கம்போல, அதை மறுபடியும் தவறவிட்டு, அவரை குறி சொல்பவர் என்று அழைத்தார்கள், “ஒரு பிசாசு என்றும்; பெயல்செபூல்,” என்றும், அவர் தேவனாயிருந்தார் என்பதை அவர்களுடைய வேதாகமத்தின் மூலம் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியிருந்தபோது, அவர் தம்மைத் தேவனாக்கிக் கொண்டார் என்றனர். கவனியுங்கள், அவர் ஏசாயாவினால் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டார், ஏசாயா 9:6-ல், “அவருடைய நாமம் வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தகப்பன்மார்களே இருக்கப் போவதில்லை, ஏனென்றால் அவர் ஆதியிலே முந்தின பிதாவாயிருந்தார், அவர் ஒருவரே பிதா; “அதற்குப் பிறகு, நீங்கள் இந்தப் பூமியின் எந்த மனிதனையும் ‘பிதா’ என்று அழைக்க வேண்டாம்” என்றார். “அவரே—வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு.” நிச்சயமாக. 106 இப்பொழுது, எல்லா தீர்க்கதரிசிகளும் என்ன செய்வார்கள் என்று பட்டியலிட்டிருந்ததோ, அதையே அவர்கள் அவருக்குச் செய்திருந்தனர், இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் போலவே, அவர் சபையிலிருந்து வெளியே தள்ளப்பட்டார். “குருடாயும், நிர்வாணமாயும், அதை அறியாதவர்களாயும் இருக்கிறார்கள்.” தீர்க்கதரிசி என்ன கூறினாரோ, அதுவே வேதாகமத்தின் தீர்க்கதரிசியாகும். மனுஷருடைய பாரம்பரியங்களினால் குருடாக்கப்பட்டவர்களாய், அவர்கள் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டபடியே, வழக்கம்போல, அவர்களுடைய சபைகளிலிருந்து வார்த்தையை வெளியே தள்ளிவிட்டனர்.
54107 இப்பொழுது துரிதமாகக் கவனியுங்கள். இப்பொழுது இதைத் தவறவிடாதீர்கள். இயேசுவானவர் எப்படியாய் இந்த இரண்டு சீஷர்களிடமும் தம்மை அவர்களுடைய மேசியா என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தினார் என்பது, பற்றிய பாடம் இங்கே உள்ளது! இப்பொழுது, எல்லாருடைய கண்களும் இந்தப் பக்கம் இருக்கட்டும். தேசத்திற்கு வெளியே உள்ளவர்களும் இதை இப்பொழுது தவறவிடாதீர்கள். வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று நாங்கள் உங்களுக்குக் கூற முயற்சித்தோம், தேவனால் தாமே, மனிதனின் உதடுகளின் மூலமாகவும், கருவித்திறன் மூலமாகவும் எழுதப்பட்டது. தேவன் தாமே எழுத முடியும். தேவன் தாமே பேச முடியும். தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்ய அவர் மனிதனைத் தெரிந்து கொண்டார், ஏனென்றால் அதை எழுதிய மனிதன் தேவனுடைய ஒரு பாகமாயிருக்கிறான். எனவே, தேவன் வேதாகமத்தை எழுதினார். அந்த மனிதர்கள் தங்களுடைய சொந்த மானிட சிந்தனையில், தாங்கள் என்ன எழுதிக் கொண்டிருந்தனர் என்பதை கூட அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதனோடு இணங்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் அதை எழுதினர். அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. வேதம், “பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட பண்டைய மனிதர்களே!” என்று கூறியுள்ளது. தேவன் அவர்களுடைய கரங்களில் அசைவாடி, அவர்களுடைய தரிசனங்களில் கண்களில் அசைவாடினார். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர வேறொன்றும் கூற முடியவில்லை. அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை, ஏனென்றால் அவர் நாவு, விரல், சரீரத்தின் ஒவ்வொரு அங்கமும் தேவனோடு முழுமையான கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேவர்கள் என்றும், அவர்கள் தேவனுடைய ஒரு பாகமாயிருந்தனர் என்றும் வேதம் கூறியுள்ளது என்பதில் வியப்பொன்றுமில்லையே! அவர் தேவனுடைய பரிபூரணமாயிருந்தார்.
55108 இயேசு, வார்த்தை, இருதயம் நொறுங்குண்ட இந்த இரண்டு சீஷர்களும், அவர் அவர்களுடைய மேசியா என்பதை எப்படி அறிந்துகொள்ளச் செய்தார் என்பதைக் கவனியுங்கள், மேசியா, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை. அவர் என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள், அவர் தீர்க்கதரிசனத்திற்கு முறையிட்டார். கவனியுங்கள், “தீர்க்கதரிசிகள் எழுதின யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே.” இப்பொழுது, “சரி, என்ன, அதைக் குறித்து சபை என்ன கூறுகிறது?” என்று அவர் ஒருபோதும் கூறவேயில்லை. 109 அவர்கள் அவருக்கு அந்தச் சம்பவத்தைக் கூறினார்கள். அவர்கள் சம்பவித்த எல்லா சம்பவங்களையும் அறிந்திருந்தனர். அவர்கள் யாவரும் வருத்தமாயிருந்தனர். அவர்கள் அவரிடம், “நீர் இங்கே ஒரு அந்நியரா அல்லது எருசலேமில் என்ன சம்பவித்தது என்பதை நீர் அறியவில்லையா?” என்று கேட்கத் துவங்கினர். 110 அவர், அவருக்குத் தெரியாது போல, “என்னென்ன காரியங்கள்?” என்று கேட்டார். பாருங்கள், நீங்கள் அதைக் குறித்து என்ன செய்வீர்கள் என்று காணும்படியாக சில நேரங்களில் அவர் காரியங்களைச் செய்கிறார். பார்த்தீர்களா? “என்னென்ன காரியங்கள்? அது யாராயிருந்தது? என்ன சம்பவித்தது?” என்றார். 111 “நீர் ஒரு அந்நியரா?” அவர்கள் மூன்றரை வருடங்களாக ஜீவித்திருந்த மனிதனிடம் சரியாகப் பேசிக்கொண்டிருந்தும், அவரை அறிந்திருக்கவில்லை. “என்னென்ன காரியங்கள்? என்ன நடந்தது?” 112 “சரி,” அவர்கள், “நாசரேயனாகிய இயேசு, ஒரு தீர்க்கதரிசி. நம்முடைய சிந்தையில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக வார்த்தையிலும், கிரியையிலும் வல்லமையுள்ளவராயிருந்தார். அவர் இந்தக் காலத்திற்கான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அடையாளங்காட்டப்பட்ட காரியங்களை அவர் செய்ததை நாம் கண்டோம். நாம் அதை அறிவோம். அவர் மீட்பராக இருப்பார் என்றும், அவர் இஸ்ரவேலரை மீட்டு இரட்சிப்பார் என்றும் நாங்கள் நம்பியிருந்தோம்.” 113 அதன்பின்னர் அவர் திரும்பி, “நீங்கள் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளளவர்களே தீர்க்கதரிசிகள் அவரைக் குறித்துக் கூறின யாவும் நிறைவேறாது என்று விசுவாசிப்பதா?” என்று கேட்டார். புரிகிறதா? அவர் இப்பொழுது தீர்க்கதரிசனத்திற்கு திரும்பிச் செல்வதைக் கவனியுங்கள். அவர்கள் அவரை விசுவாசித்ததாக உரிமை கோரும் விசுவாசிகளுக்கு என்னே ஒரு கடிந்து கொள்ளுதல்!
56114 அவர் அந்தப் பொருளை எப்படி அணுகினார் என்பதைக் கவனியுங்கள். அவர் ஒருபோதும் வெளிப்படையாக, “நான்தான் உங்களுடைய மேசியா” என்று கூறவில்லை. அவரால் அதைச் செய்திருக்க முடியும், ஏனென்றால் அவர் அவ்வாறு இருந்தார். ஆனால் கவனியுங்கள், அவர் வார்த்தையில் தம்மை அடையாளங்காட்டினார், அப்பொழுது அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள். அவர் அதைக் கூறியிருந்தால், அவரால் அதைக் கூறியிருக்க முடியும், அது அவ்வண்ணமாய் இருந்திருக்காது; ஆனால் அவர் போய், அவரைக் குறித்து தீர்க்கதரிசிகள் கூறின எல்லாவற்றைக் குறித்தும் பேசத் துவங்கினபோது, அவர்கள் அதைக் கண்டு, அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாயிருந்தார்களா என்பதை அவர்கள் தாமே கூற முடியும். ஆனால் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்திருந்ததற்கு அவர்களுடைய கவனத்தை திருப்பினார்கள் மேசியா, அவருடைய காலத்தில் வெளிப்படும் காலத்தை எதிர்நோக்கியிருக்கும்படி கூறினார். யோவானாகிய அவர், வார்த்தை, வேதாகமம், அவர்களுடைய செய்தியை அடையாளங்காட்ட அனுமதித்தார். எந்த உண்மையான தீர்க்கதரிசியும் அதைச் செய்வான். ஆம். வெளியே வந்து, “நானே அவர். நான்…” அது ஒரு உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசி அல்ல. பார்த்தீர்களா? ஆனால் அவரோ, “வேதவாக்கியங்களுக்குத் திரும்பிப் பாருங்கள்” என்றார். பாருங்கள், அவர் அதைச் செய்யும் தம்முடைய வழியில் ஒருபோதும் தவறுவதில்லை. பார்த்தீர்களா? அவர், “மோசேயை நாங்கள் அறிவோம்” என்றார். 115 அவர், “நீங்கள் மோசேயை அறிந்திருந்தால், நீங்கள் என்னையும் அறிந்திருப்பீர்கள்” என்றார். அவர், “மோசே என்னைக் குறித்து எழுதினான்” என்றார். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. வேதவாக்கியமே என்னைக் குறித்து சாட்சி பகருகிறது. போய் வேதவாக்கியங்களுக்குள்ளாக ஆராய்ந்து பார்த்து, அதைப் பாருங்கள்” என்றார்.
57116 இங்கே அவர் அதைச் செய்யும் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றுவதில்லை, ஒருபோதும் மாற்றியிருக்கவில்லை. அவரால் ஒருபோதும் மாற முடியாது, ஏனென்றால் அவர் மாறாத தேவனாயிருக்கிறார். பார்த்தீர்களா? கவனியுங்கள், அவர் எம்மாவூருக்குப் போகும் வழியில் இருந்த இந்த இரண்டு சீஷர்களாகிய கிலெயோப்பாவினிடமும், அவனுடைய நண்பனிடமும் திரும்பிச் சென்று, வேத வாக்கியங்களைக் கொண்டு முறையிட்டு, கூறி, “தீர்க்கதரிசிகள் எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் விசுவாசிக்காதபடிக்கு நீங்கள் ஏன் இவ்வளவு புத்தியில்லாதவர்களாயிருக்கிறீர்கள் என்றும், மேசியாவின் காரியம் நிறைவேற வேண்டியதாயிருக்கிறதல்லவா?” என்று கேட்டார். ஓ, என்னே ஒரு நாள்! 117 யோவானும் அதையே செய்தான். “வேதவாக்கியங்களை ஆராய்ந்து, பின்னோக்கிப் பாருங்கள், அப்பொழுது வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தம் உண்டாயிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நான் எங்கிருந்து வந்தேன்?” பார்த்தீர்களா? அது அவர்களுக்கு அதைத் தெளிவாக்கியிருக்க வேண்டும். சரியே! 118 பரிசுத்த ஆவியானவர் செய்து கொண்டிருக்கிற காரியத்தை நாம் இன்றைக்கு தெளிவாக்க வேண்டும். அவர் ஒருமுறை, “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்” என்றார். நாம்…நாம் அதை இன்றைக்கு செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
58119 கவனியுங்கள், அவர் மோசேயின் தீர்க்கதரிசனத்தோடு துவங்கினார், வேதம், “அவர், மோசே தொடங்கி, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளைக் குறித்தும் கூறினார்” என்று கூறியுள்ளது ஆனால் அவர் மோசேயில் துவங்கினார். மோசே, “ஒரு தீர்க்கதரிசியை” “உன் தேவனாகிய கர்த்தர் உன் ஜனங்களுக்கு மத்தியிலும், ஜனங்களுக்கு மத்தியிலும் எழுப்புவார். தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்” என்றார். 120 இப்பொழுது அவர், “கிலெயோப்பாவும், இங்குள்ள உன்னுடைய நண்பனும், இந்நாட்களில் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார் என்று மோசே கூறவில்லையா? என்று கூறியிருக்கலாம். அவர்கள் சிலுவையில் அறைந்த இந்த மனிதன், அவர் அந்தத் தகுதியை அடைந்தாரா? இப்பொழுது, மோசே இதைத் தீர்க்கதரிசனம் உரைத்தான். இப்பொழுது உங்களுக்கு நூற்றுக்கணக்கான வருடங்களாக ஒரு தீர்க்கதரிசியும் இல்லாதிருந்தது, இங்கே இந்த மனிதன் எழும்பினார். இந்த மனிதனின் முன்னோடி யார் என்று நீர் கூறினீரா?” இது புரிகிறதா? அவருடைய காலத்தில் எல்லா தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து கூறினர், அவர் அவர்களிடத்தில் பேசினார். அது நிச்சயமாகவே அவருக்குச் செவிகொடுக்க ஆர்வமாயிருந்திருக்கும். நீங்கள் அவர் பேசுவதைக் கேட்க விரும்பமாட்டீர்களா? தீர்க்கதரிசிகள் தம்மைக் குறித்து என்னக் கூறினர் என்று, அவர் கூறுவதைக் கேட்க நான் விரும்புகிறேன், ஆனால் அது அவர் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. அவர் அவைகளை தீர்க்கதரிசனத்தின் மூலம் காண்பித்தார். அவர், “இது சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசி கூறினார்” என்று மாத்திரமே கூறினார். பார்த்தீர்களா?
59121 நாம் ஒரு சில நிமிடங்கள் பின்னோக்கிச் செல்வோம், இப்பொழுது நாம் அவரிடத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போமாக. வார்த்தை தாமே தம்முடைய வார்த்தையை மேற்கோள் காட்டுவதை இங்கே கவனியுங்கள். வார்த்தை தாமே தம்முடைய வார்த்தையை மேற்கோள் காட்டுகின்றது. அவர் அதுவாயிருந்தார் என்று அவர்களிடம் கூறாமல், வார்த்தை தனக்காகப் பேசட்டும், அப்பொழுது அவர் யாராயிருந்தார் என்பதை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். வார்த்தையின் எழுத்து, வார்த்தையை மேற்கோள் காட்டுதல்…வார்த்தை மாம்சத்தில், எழுத்தின் வார்த்தையை மேற்கோள் காட்டுதல், தம்முடன் முழுமையாக அடையாளங் கண்டு கொள்ளப்படுதல். இங்கே பாருங்கள், இப்பொழுது நாம் அவருடைய மேற்கோளுக்குச் செவி கொடுப்போம். எப்படி…இப்பொழுது, அவர்கள் யாவரும் காலதாமதமாகச் சம்பவித்தவைகளைக் குறித்து விளக்கிக் கூறப்பட்டிருந்தனர் என்பதை நாம் அறிவோம், அதாவது சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதலின் சம்பவத்தையும், கல்லறையைக் குறித்தும் நாம் சற்று வாசிக்கிறோம். இப்பொழுது அவர் தம்மைக் குறித்த தீர்க்கதரிசன வார்த்தைக்கு நேராகச் செல்கிறார். இப்பொழுது அவர் இதைக் கூறினார் என்று நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போம்; அவர் இதைப் பார்க்கிலும் அதிகமாகக் கூறினார், ஆனால் கவனியுங்கள்.
60122 நாம் அவர் என்று…அவர் கூறுவதைக் கேட்போம், “சகரியா 11:12-க்கு திருப்புங்கள். தீர்க்கதரிசியின்படியே மேசியா முப்பது வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்பட வேண்டியவர் அல்லவா? இந்த மனிதன் முப்பது வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்பட்டான் என்று நீர் கூறினீர். திருப்புங்கள்…” நீங்கள் அந்த வேத வாக்கியங்களைப் எடுத்துக் கொண்டீர்களா? சகரியா 11:12 அதன்பின்னர் அவர், “சங்கீதம் 41:9-ம் அதிகாரத்தில் தாவீது கூறியுள்ளதை நீங்கள் கவனித்தீர்களா? அவர் அவருடைய நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் மீண்டும், சகரியா 13:7-ல், அவர் தம்முடைய சீஷர்களால் கைவிடப்பட்டார். சங்கீதம் 35:11-ல் பொய் சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டார். அவர் அவ்வாறு இருந்தார் என்று நீங்கள் கூறினீர்கள். ஏசாயா 53:7-ல் அவர் மேல் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு முன்பாக அவர் வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 50:6-ல் அவர்கள் அவரை வாரினால் அடித்தனர் என்று தீர்க்கதரிசி கூறினான். சங்கீதம் 22, அவர் சிலுவையிலிருந்து, ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்று கதற வேண்டியதாயிருந்தது. நேற்று முந்தினம் பிற்பகல் அவர் அதைச் செய்தாரா? மீண்டும் சங்கீதம் 22, 18-ல் அவருடைய வஸ்திரங்கள் அவர்களுக்கு மத்தியில் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன. அவர்கள் அதைச் செய்தார்களா? சங்கீதம் 22:7 முதல் 8 வரை, அவருடைய சத்துருக்களால், சபையால் பரியாசம் செய்யப்பட்டது. சங்கீதம் 22 மீண்டும், அவருடைய சரீரத்தில் ஒரு எலும்பும் முறிக்கப்படக் கூடாதிருந்தது, ஆனால் ‘அவர்கள் என் கைகளையும் என் கால்களையும் உருவக்குத்தினார்கள்’” என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் அவருடைய கரங்களை அவருக்குப் பின்னால் கட்டியிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை. “ஏசாயா 53:12-ல் அவர் அக்கிரமக்காரருக்கு மத்தியில் மரிப்பார் என்று கூறியுள்ளது. அவர் ஐசுவரியவான்களோடு அடக்கம் பண்ணப்பட்டார் என்று ஏசாயா 53:9 கூறுகிறது. சங்கீதம் 16:10, ‘அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் நான் விடேன், என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டேன்’ என்று உரைத்துள்ளது. மல்கியா 3 இந்த மனிதனுக்கு முன்னோடியாக இருக்கவில்லையா?” ஓ, அவர் அதை மேற்கோள் காட்டுவதை நான் கேட்க விரும்புகிறேன். தீர்க்கதரிசனங்களைப் பாருங்கள்! கவனியுங்கள், அதன்பின்னர் அவர் ஈசாக்கைக் குறித்து ஆதியாகமம் 22-ம் அதிகாரத்தில், எப்படியாய் தேவன் ஈசாக்கை முன் நிழலிட்டார், எப்படி தகப்பனாகிய ஆபிரகாம் தன்னுடைய சொந்த மகனை மலையின் மேல் விறகு சுமந்து செல்லச் செய்து, தன்னுடைய சொந்த குமாரனை பலியாக அளித்தான்.
61123 அது இப்பொழுது அவர்களுக்குள் பதியத் துவங்கியிருந்தது. அந்நாளுக்கான தீர்க்கதரிசனத்தை நோக்கிப் பார்க்காத காரணத்தால் அவர்கள் புத்தியில்லாதவர்கள் என்று அவர் அவர்களிடத்தில் கூறியிருந்தார். இப்போது அது பதியத் தொடங்குகிறது, கடந்த சில நாட்களில் சம்பவித்த இவை யாவற்றின் நிறைவேற்றத்தைக் காணத் துவங்கி, கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், காலத்தின் ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசனம். சிலுவையில் அறையப்பட்ட அவர்களுடைய சிநேகிதனாகிய இயேசு, இதன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றியிருந்தார் என்பதை அப்பொழுது அவர்கள் அறிந்திருந்தனர். ஓ, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த அந்த—அந்த மனிதன் உண்மையாகவே அந்த மேசியாவாயிருந்தார் என்பதை அப்பொழுது அவர்கள் அறிந்திருந்தனர். “கல்லறை அவரைப் பிடித்து வைக்க முடியவில்லை. ‘என் பரிசுத்தர் அழிவைக் காண நான் விடேன்.’ தீர்க்கதரிசனத்தில் ஒரு வார்த்தையும் தவறிப்போக முடியாது. அவர் உயிர்த்தெழுந்தார்.”
62124 “அப்படியானால் இந்தக் காலையில் கல்லறையண்டை வந்திருந்த செய்தியாளர்கள் சொன்னது சரிதான். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் உயிரோடிருக்கிறார். அவரே அந்த மேசியா.” ஏன்? அதைத் தவறிவிடாதீர்கள். “அவருடைய செயல், அவருடைய ஊழியம் மற்றும் அவர் செய்திருக்கிற ஒவ்வொரு காரியமும் ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது இந்நாளுக்கெனச் சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசி கூறியிருந்த வார்த்தைகள் சரியாக அப்படியே நிறைவேறின. அது அதைச் செய்துவிட்டது.” சிலுவையில் அறையப்பட்ட அவர்களுடைய சிநேகிதனாகிய இயேசுவே அதைச் செய்திருந்தார் என்பதை அப்பொழுது அவர்கள் அறிந்து கொண்டனர். அவர் அவர்களிடத்தில் பேசினபோது, அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்ததில் வியப்பொன்றுமில்லை. இப்பொழுது அவர்கள் ஆறு மைல் தூரம் நடந்து வந்திருந்தனர், அது ஒரு குறுகிய நேரமாகத் தென்பட்டது.
63125 இங்கே அவர்கள் செய்திருந்த மற்றொரு காரியம், உங்களுக்குத் தெரியும், அவர்கள் தீர்க்கதரிசனம் உறுதிப்படுத்தப்படுவதைக் குறித்த ஆறு மணி நேர பிரசங்கத்தை கேட்டிருந்தனர். அப்படித்தான் அவர் பாதை நெடுகிலும் அவர்களிடத்தில் பேசினார். அவர்கள் பாதையில் செல்லத் துவங்கினவுடனே, அவர் அடியெடுத்து வைத்தார், ஏனென்றால் அவர் அங்கே எருசலேமில் இருந்தார். ஆறு மணி நேரம் தாமதமாக…பிறகு, அறுபது பர்லாங் தூரம், அவர்கள் எம்மாவூருக்கு செல்லும் பாதையில் ஆறு மைல் தூரத்தில் இருந்தனர். அதுதான் அது. அவர் ஆறு மணி நேரமாக உறுதியான தீர்க்கதரிசனத்தை பிரசங்கித்திருந்தார். என்னுடைய மூன்றின் பேரில் என்னைக் குற்றப்படுத்த வேண்டாம், பாருங்கள். பார்த்தீர்களா? ஆனால் கவனியுங்கள், அவர்கள் பிரசங்கித்திருந்தனர்…அவர்…தீர்க்கதரிசனத்தின் பேரில் ஆறு மணி நேர பிரசங்கம் உறுதிப்படுத்தப்பட்டு, ரூபககாரப்படுத்தப்படுவதை அவர்கள் கேட்டிருந்தனர்.
64126 இப்பொழுது சாயங்கால நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்பொழுது எபிரெயர் 13:8-ல் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய கண்களைத் திறந்தார். சாயங்கால நேரத்தில் சம்பவங்கள் தீர்க்கதரிசனத்தின் மூலம் தெளிவாக்கப்படுகின்றன. இந்த நேரத்தின் தீர்க்கதரிசனத்தை நீங்கள் விசுவாசிப்பீர்களேயானால், நவீன காலத்தில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை எளிதில் அடையாளங்கண்டு கொள்ள முடியும். 127 “ஆம், விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இதயமுள்ளவர்களே, (நீங்கள் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டேயிருக்கிறீர்கள்), மேசியாவைக் குறித்து எல்லா தீர்க்கதரிசிகளும் கூறினதை விசுவாசிக்கும்போது, அது சம்பவிக்க வேண்டுமல்லவா?” இப்பொழுது அவர் இந்த எல்லாக் குறிப்புகளையும் சரிபார்த்து, அது என்ன சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசி கூறினார் என்பதைக் காண்பித்தார். அப்பொழுது அவர்கள் புரிந்து கொள்ளத் துவங்கினர். எனவே அவர் கூறினார்…அவர் கடந்து செல்லப் போவது போல நடந்து கொண்டார். அவர்கள் இந்த மனிதனை விரும்பினர். அவர்கள், “நீர், நீர் எங்களுக்கு ஏதோ ஒன்றை அளித்திருக்கிறீர். நாங்கள் அதை ஒருபோதும் நினைக்கவில்லை. அவர் எங்கோ உயிரோடு இருக்கிறார்” என்றனர். அவர்கள் அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தும், அதை அறியாதிருந்தனர். எனவே அவர்…அவர் அவர்களை வருத்தத்துடன் நோக்கிப் பார்த்தார் என்பதில் சந்தேகமில்லை, அவர் நடந்து செல்லத் துவங்கி, ஆனால் அவர்கள் அவரை அழைப்பதற்காக அவர்—அவர் காத்துக் கொண்டிருந்தார். நீங்கள் அவரை அழைக்க இன்றிரவு அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
65128 கவனியுங்கள், அந்தச் சீஷர்கள் மேசையைச் சுற்றி தங்களுடன் ஐக்கியங்கொள்ள அவரை அழைத்தபோது, அப்பொழுது அவர் தம்முடைய சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு செய்ததைப் போன்ற ஒரு காரியத்தைச் செய்தார், அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவருடைய விதத்தையும், அவருடைய பாணியையும் அறிந்திருந்தனர். அவர் என்ன செய்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர், அவர் முன்பு செய்தது போலவே அப்பொழுதும் அவர் அதைச் செய்தார். அவர்களோ, “அது அவர்தான்!” என்றனர். உடனே அவர்கள் அதைக் கூச்சலிட எழும்பினர், அவர் மறைந்துவிட்டார். இந்தப் பிரசங்கத்தைக் கேட்க அவர்கள் ஆறு மணி நேரம் எடுத்துக் கொண்டனர், ஒருவேளை இருபது நிமிடங்களிலேயே அவர்கள் மற்றவர்களிடம் சொல்ல விரைந்து வந்திருக்கலாம், “அவர் உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார். அவர் உண்மையிலேயே உயிருடன் இருக்கிறார்.”
66129 நண்பர்களே, இது மல்கியா 4, பரிசுத்த லூக்கா 17, பரிசுத்த யோவான் 15, ஓ, இவ்வளவு, வெளிப்படுத்தின விசேஷம் 10, அநேக தீர்க்கதரிசனங்கள் இந்நாள் வரைக்கும் சரியாக பொருத்தப்பட்டிருக்கின்றன. மாற்குவின் புத்தகத்திலும், மத்தேயுவிலும் கூட, இந்த மகத்தான அடையாளங்களும், அற்புதங்களும் ஆகாயத்தில் தோன்றும் என்று அவர் கூறினார், ஜனங்கள் அவற்றைத் தட்டுகள், பறக்கும் தட்டுகள் என்று அழைக்கிறார்கள்—ஒரு சிந்தனையின் சக்தியாலும் வேகத்தாலும் மறைந்து போகலாம், நுண்ணறிவு உள்ளே நுழையக் கூடியது. அவரால் எழுத முடியும், அவரால் பேச முடியும், அவர் விரும்புகிற எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். மகத்தான அக்கினி ஸ்தம்பம், “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” பூமியின் மேல் காட்சிகள் வரும்போது, அங்கே முப்பது மைல் உயரத்தில், ஈரப்பசையோ அல்லது எதுவுமே இல்லாதபடியால், அங்கே கூர் நுனிகோபுர வடிவிலான புகையானது ஆகாயத்தை நோக்கி எழும்புகிறது. அது அந்தவிதமாகவே இருக்கும் என்று அது சம்பவிப்பதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டது. அதன்பின்னர் படத்தைத் திருப்பி, அது யாரை நோக்கிப் பார்க்கிறது என்று பாருங்கள். கூறப்பட்ட எந்த ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை, இதோ தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தை உள்ளது, அது சத்தியம் என்பதை உறுதிப்படுத்துகிறது. மீண்டும் சாயங்கால நேரம் வந்துவிட்டது. அவர் இன்றிரவு கிருபையினால் திரும்பிவந்து, அவர் முன்பு செய்தது போன்று இப்பொழுது ஏதாவது செய்வாரா என்று நான் எதிர்பார்க்கிறேன். நாம் ஜெபித்து, அவரிடத்தில் கேட்போம். சம்பவங்கள் ரூபகாரப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசனத்தினால் தெளிவாக்கப்பட்டுள்ளன.
67130 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்களுக்கு உதவி செய்யும். அன்புள்ள தேவனே, நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய காரியங்களைப் புரிந்துகொள்ளவும், உம்முடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்யும். இப்பொழுதும் கர்த்தாவே, நாங்கள் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பிரசங்கங்களையும், புத்தகங்களில் எழுதப்பட்டவைகளையும் கேட்டிருக்கிறோம். இங்கே இந்தக் கடைசி நாட்களில் அது மீண்டும் சம்பவித்துக் கொண்டிருக்கிறது, இப்பொழுது அது சாயங்கால நேரத்தை நோக்கியதாய் உள்ளது. மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், இன்னும் அநேகர் காலந்தோறும் உம்மோடு பேசி வந்துள்ளனர், இந்த மகத்தான நாளின் பாதையில், தீர்க்கதரிசி கூறியதுபோல, இரவாகவோ அல்லது பகலாகவோ இல்லாமல், ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும். இயேசு கல்லறையிலிருந்து எழுந்து சீமோனுக்கும், ஸ்திரீகளுக்கும் தரிசனமாகி, அவர் உயிரோடிருக்கிறார் என்பதை அவர்களுக்குக் காண்பித்தார். அது காலை வேளையாய் இருந்தது. அதன்பின்னர் சாயங்கால வேளையில் அவர் மீண்டும் வந்தார். ஆனால் அவர் நாள் முழுவதும் அவர்களிடம் நடந்து சென்று, அவர்களுடைய குருட்டுத்தனத்திற்காக அவர்களைக் கடிந்துகொண்டார், ஆனால் அதன்பின்னர் அவர் தம்மை சாயங்கால நேரத்தில் அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
68131 தேவனே, வார்த்தையின் பேரில் நாங்கள் கொண்டுள்ள எங்கள் ஐக்கியத்திற்குள் இன்றிரவு வாரும். தேவனே, அது இன்றைக்கு ஜனங்கள் மத்தியில் மிகவும் அரிதாகவே விசுவாசிக்கப்படுகிறது, ஆனால் நீர் சிலரை நித்திய ஜீவனுக்கென்று நியமித்திருக்கிறீர் என்பதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன், நீர், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவரும் வரும்” என்று கூறினீர். இப்பொழுது சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில், கர்த்தாவே, ஒரு தீர்க்கதரிசனமும் (நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்களில்) ஒரு முறை கூடத் தவறிப்போகவில்லை. அப்படியானால், அது உண்மையாகவே அடையாளங்காட்டினால், அது நீராய் இருக்க வேண்டும், ஏனென்றால் எந்த நபரும் அவ்வளவு துல்லியமாக இருக்க முடியாது. வேதாகமத்தைப் போன்று, எந்த மனிதனாலும் எழுத முடியவில்லை, ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளில் யாராலும் தவறாக எழுத முடியவில்லை, நாற்பது வெவ்வேறு எழுத்தாளர்களால், எழுத முடிந்தது, ஆனால் அதில் ஒரு பிழை கூட இருக்கவில்லை. அன்புள்ள தேவனே, எபிரெயர் 13:8ஐ இன்றிரவு நீர் உம்மை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். அப்பொழுது நீர் செய்த கிரியைகளையே இன்றைக்கும் நீர் செய்கிறீர். நீர் அதை வாக்குத்தத்தம் செய்தீர், நீர், “இந்தக் கடைசி நாட்களில், உலகம் சோதோம் கொமோராவைப் போல, தாறுமாறாக உட்கார்ந்து கொண்டிருக்கும்போது” என்று கூறினீர். நாங்கள் இந்தப் பையன்களைப் பெண்பிள்ளைகளைப் போன்றே இருப்பதைப் பார்க்கிறோம், அவர்களைப் போன்ற ஆடைகளை அணிந்து, மேலும்—மேலும் பெண் பிள்ளைகள் பையன்களைப் போல் நடந்து கொள்ள முயற்சிப்பதைக் கண்டு, இந்தத் தாறுமாறாக்கப்பட்ட காலத்தில் ஸ்திரீகளையும், ஆண்களையும் கண்டு, பாலியல் கவர்ச்சி ஒரு—ஒரு வழிபாட்டு விக்கிரகமாக மாறிவிட்டதைப் பார்க்கிறோம். சுவிசேஷமானது ஒரு பக்கத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது, லவோதிக்கேயா சபை நிர்வாணமாயிருக்கிறது. ஓ, தேவனே, என்னே ஒரு வேளை! வாரும், கர்த்தராகிய இயேசுவே, உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம்.
69132 இப்பொழுது நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், உங்களுடைய கண்கள் மூடியிருக்கும்போது, நான் உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். தேவன் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது இன்றைக்கு செய்து கொண்டிருக்கிற காரியங்கள் தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இங்கிருந்தபோது, அந்த நாளுக்கான மாம்சத்தில் வெளிப்பட்டபோது, அங்கே அவர் செய்த கிரியைகள் இந்த நாளில் மீண்டும் செய்யப்பட வேண்டியதாயிருந்ததா? தீர்க்கதரிசி அவ்வண்ணமாய்க் கூறினார். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. எல்லா வேதவாக்கியங்களும் நிறைவேற்றப்பட வேண்டும், அது தவறிப்போக முடியாது. அவர் எப்படி தம்மை அடையாளங்காட்டினார்? மோசே பேசின அந்தத் தீர்க்கதரிசியாயிருப்பதன் மூலம். ஜனங்களின் இருதயங்களின் இரகசியங்களை அறிந்தவர். அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், அவர் திரும்பி, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார். சீமோன் பேதுரு அவரண்டை வந்தபோது, அவர் அவனுடைய பெயரை அறிந்திருந்தார், அவன் யாரென்றும், அவனுடைய தகப்பன் யார் என்றும் அவனிடம் கூறினார். அதே அருமையான இயேசு மரித்துவிடவில்லை, அவர் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறார். தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக! இப்பொழுது இந்தச் சாயங்கால நேரத்தில் அவர் நம்மை மீண்டும் ஒன்று சேர்த்து அழைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.
70133 ஓ கர்த்தராகிய இயேசுவே எங்கள் மத்தியில் வாரும். எங்களைக் கடந்து செல்லாதேயும். வந்து, உம்முடைய அன்பும் கிருபையும் இரக்கமும் எங்களோடிருக்கும்படிக்கு நாங்கள் உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில்; உம்மை அறிந்துகொள்ளும்படியாக, இந்த இரவு முடியும் வரையில் முழு இரவும் எங்களோடு தரித்திரும், அதன்பின்னர் நாங்கள் நாளை உம்மோடு செல்வோம். ஓ நித்திய தேவனே, இந்தக் காரியங்களை அருளும். தேவன் மாத்திரமே அவைகளை அருள முடியும் என்பதை நாங்கள் அறிவோம். 134 பயபக்தியான இந்த வேளையில் நாம் இதைக் கூறுவோம். எங்கள் பிதாவாகிய தேவனே, எங்களுடைய மாம்சம் உமக்கான ஒரு ஏழ்மையான கூடாரமாய் உள்ளது. ஆனால் கர்த்தாவே, உம்முடைய பரிசுத்தமாக்கும் கிருபை, உம்முடைய பரிசுத்த ஆவி இப்பொழுதே வருவதாக. எங்களுக்குள்ளாக இருக்கும் ஒவ்வொரு சந்தேகத்திலிருந்தும், ஒவ்வொரு குழப்பத்திலிருந்தும், ஒவ்வொரு சந்தேகத்திலிருந்தும், ஒவ்வொரு சந்தேகத்தினின்றும் எங்களை சுத்திகரியும், நாம் ஒரு சந்தேகத்திற்கிடமின்றி விடுதலையாகும்படி; பேதுருவைப் போலத், வெளியே வந்து, தைரியமாக, “நீர் கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர்” என்று அறிக்கை செய்கிறோம்.
71135 கர்த்தாவே, உம்முடைய வார்த்தையே சத்தியம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நாங்கள் இந்த ஜெப வரிசையை துவங்குவதற்கு முன்பு, கர்த்தாவே, உம்மை எங்களுக்கு வெளிப்படுத்த நாங்கள் சற்று பார்ப்போமாக. நீர், “லோத்தின் நாட்களில் நடந்தது போல” என்று கூறினது போல, ஆபிரகாம், ஒரு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனுக்காக காத்துக் கொண்டிருந்த அந்த அழைக்கப்பட்ட குழு, லோத்து அங்கே நவீன பில்லி கிரஹாம் மற்றும் ஓரல் ராபர்ட்ஸ் போன்றவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஒரு தேசமாக, அந்த ஸ்தாபன அமைப்புக்கு. ஆனால் ஆபிரகாமோ எந்த ஸ்தாபனமும் இல்லாமல் பரதேசியாக இருந்தான், அவன் சுதந்தரவாளியாக இருந்த தேசத்தினூடாக இந்த சிறு குழுவாக அலைந்து திரிந்து கொண்டிருந்தான். “சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” ஒரு நாள், நிழல் தரும் மரத்தின் கீழ், அவர்கள் உட்கார்ந்து, இளைப்பாறிக் கொண்டிருக்கையில், தேவன் ஒரு மனித ரூபத்தில் இறங்கி வந்தார். இரண்டு தூதர்கள் சோதோமுக்குள் சென்றனர். தேவன், மாம்ச சரீரத்தில், அவர் இருந்தார் என்பதை நிரூபித்தார், அவர், “ஆபிரகாம், உன் மனைவியாகிய சாராள் எங்கே?” என்று கேட்டார். அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவன் ஆபிராம்; மற்றும் சா-ரா, சாரா; சாராள் அல்ல, “ராஜகுமாரி.” நீர் அவளை அவளுடைய இளவரசியின் பெயரால், ஒரு இராஜாவின் குமாரத்தி என்று அழைத்தீர். நீர் ஆபிரகாமை ஆபிரகாம், ஜாதிகளுக்குத் தகப்பன் என்று அவனுடைய நாமத்தினால் அழைத்தீர். நீர், “நான் உன்னைச் சந்திக்கப் போகிறேன்” என்றீர்.
72136 தேவனே, அந்தத் தீர்க்கதரிசியின் இருதயம் எப்படியாய் துடித்திருக்க வேண்டும்! அப்பொழுது நீர் யாராயிருந்தீர் என்பதை அவன் அறிந்திருந்தான். அவர் உமது பாதங்களைக் கழுவி, அவருக்கிருந்த எல்லா ஆகாரத்தையும் வெளியே கொண்டு வந்து, மிகச் சிறந்ததை உமக்கு முன்பாக வைத்ததில் வியப்பொன்றுமில்லை. அது அங்கே தேவன் என்பதை அவன் அறிந்திருந்தான். அப்பொழுது அவர், “சாராள் எங்கே?” என்று கேட்டார். அவர் அதை அறியாதவர்போல் இருந்தார். மேலும் நீர்… 137 ஆபிரகாம் அவரிடத்தில், “அவர் கூடாரத்தில்…அவள் உமக்குப் பின்னே கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 138 என்ன நடக்கப் போகிறது என்று நீர் கூறினீர். அவள் தன் இருதயத்தில் அதைச் சந்தேகப்பட்டாள். அப்பொழுது நீர்—நீர் ஆபிரகாமிடம், “சாராள் அதைச் சந்தேகித்து, ‘இந்தக் காரியங்கள் இருக்க முடியாது’ என்று தன் இருதயத்தில் ஏன் சொல்லிக் கொண்டாள்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” என்று கேட்டீர். 139 ஓ தேவனே! இயேசு, வார்த்தையின் தேவனாக வெளிப்பட்டார், நீர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல,” என்றீர். புறஜாதி உலகத்தின் அழிவிற்கு, புறஜாதி யுகத்திற்கு சற்று முன்னர் உலகம் அந்த நிலையில் இருக்கும். இதோ நாம் முழுமையாகச் சோதோமியரைப் போன்றே இருக்கிறோம்! அதன்பின்னர் நீர் கூறினீர், மனுஷகுமாரன், அவர் எப்பொழுதுமே ஒரு “தீர்க்கதரிசி” என்று குறிப்பிடப்படுகிறார், அந்த நேரத்தில் வெளிப்படும். ஓ, தேவனே, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றும். உம்முடைய விசுவாசமுள்ள பிள்ளைகளாகிய, நாங்கள், கர்த்தாவே, எங்களுக்கு விசுவாசத்தை அளிக்க உத்தம இருதயங்களோடு காத்திருக்கிறோம், நாங்கள் ஜெப வரிசையை நடத்தும்போது, ஜனங்கள் விசுவாசிப்பார்கள். பிதாவே, இது சாயங்கால நேரம். தேவனுடைய குமாரனுடைய சாயங்கால வெளிச்சங்கள் (இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர்) அவர் அளித்துள்ள தீர்க்கதரிசனத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்திக்கொள்வாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
73140 நான் இப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிக்க ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால் நாம் இங்கே நிற்கும்போது, அது எப்படியாய் ஒரு விசித்திரமான காரியமாயிருக்கிறது. தேவன் இன்னமும் தேவனாயிருக்கிறார் என்று தேசம் முழுவதிலும் இணைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நான் இங்கே நின்று ஒரு சவாலை விடுக்கிறேன். அவரால் தவறிப்போக முடியாது. அவர் என்ன வாக்குத்தத்தம் செய்கிறாரோ, அதை அவர் செய்வார். அவர் அதைச் செய்ய ஒருபோதும் தவறமாட்டார், ஏனென்றால் அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார். ஆகையால் அவர் கூறினவற்றில் நான் பயபக்தியான நம்பிக்கையை வைக்க முடியும். ஆகையால் அவருடைய வருகைக்காக நான் எதிர்நோக்கியிருக்கிறேன், அவர் எந்த நேரத்திலும் தோன்றுவார் என்று நான் எதிர்நோக்குகிறேன், ஏனென்றால் அவர், “நீங்கள் நினைக்காத நேரத்தில்” உலகம் நினைக்காதபோது, “அப்பொழுது அவர் வெளிப்படுவார்” என்று கூறினார். 141 இப்பொழுது, எனக்குத் தெரிந்தமட்டில்…நான் இங்கே என்னுடைய கூடாரத்தில் இருக்கிறேன், எனக்குத்—எனக்குத் தெறிந்த ஒரு சில ஜனங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். சகோதரன் ரைட், இங்கே அமர்ந்துள்ள, இவர்களில் ஒரு சிலரை நான் அறிவேன். ஆனால் உங்களில் அநேகரை எனக்குத் தெரியாது. தேவன் இன்றிரவு இதைச் செய்வார் என்று கூறுவதற்கு எனக்கு வழியே கிடையாது. கடந்த பல வருடங்களாக அவர் அதைச் செய்வதை நாம் கண்டிருக்கிறோம், ஆனால் அவர் அதை இன்றிரவே செய்யாமலிருக்கலாம். எனக்குத் தெரியாது. அது அவரைப் பொறுத்ததாயுள்ளது. அவர் இராஜாதிபத்தியம் படைத்தவர். அவர் விரும்புகிறதை அவர் செய்கிறார். என்ன செய்ய வேண்டும் என்று ஒருவரும் அவரிடத்தில் கூற முடியாது. அவருடைய சித்தத்திலும், அவருடைய வழிகளிலும் அவர் தனித்து நிலைத்திருக்கிறார். ஆனால் அவர் அதை வாக்குத்தத்தம் செய்த காரணத்தால், நான் அதைச் செய்யும்படி அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு அது தேவை என்ற எங்கள் நிமித்தமாக அல்ல, ஆனால் சில அந்நியர்களின் நிமித்தமாக, பரிசுத்த ஆவி அபிஷேகம் செய்யப்படுவதற்காக…இப்போது நம் மீது அபிஷேகம். இப்பொழுது, அவர் என்னை எவ்வளவுதான் அபிஷேகித்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர் உங்களையும் கூட, நிச்சயமாக விசுவாசிக்கும்படி அபிஷேகம் பண்ணத்தான் வேண்டும்.
74142 இப்பொழுது நான் ஒரு ஜெப வரிசையை வைக்க விரும்புகிறேன், என்னால் முடிந்தளவு நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க விரும்புகிறேன். இப்பொழுது, ஒன்று நாம் ஜனங்களை அழைக்க ஒரு வரிசையை வைத்துக் கொள்ளலாம் அவர்களை இங்கே கொண்டு வந்து, ஒரு ஜெப வரிசையை நடத்தி, இங்குள்ள சுகவீனமாயிருக்கிற ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கலாம் என்று நான் நினைக்கிறேன், என்னுடைய ஊழியக்கார சகோதரர்களை இங்கே எங்களோடு வந்து, உங்கள் மீது கைகளை வைக்கச் செய்யலாம். நம்மால் அதை நிச்சயமாகச் செய்ய முடியும். அல்லது நாங்கள் எங்கள் பிதாவிடம், உங்களுக்காக எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடிந்த ஒரே ஒருவரிடத்தில் நாங்கள் கேட்கக்கூடும், ஏனென்றால் என்னுடைய கரங்கள் உங்களைப் போன்ற ஒரு மனிதனாய் இருக்கின்றன. ஆனால் அதைக் குறித்த காரியம் என்னவென்றால், அது மானிட கரம் அதைச் செய்கிறதல்ல; அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. அந்த வார்த்தையில் உள்ள விசுவாசமே அதைச் செய்கிறது. அதைக் குறித்து எந்த விஞ்ஞான பூர்வமான காரியமும் இல்லை, அது முற்றிலும் அறிவியல் பூர்வமானது அல்ல. 143 ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய ஆயுதங்களில் விஞ்ஞானப் பூர்வமாக அணிந்துள்ள ஒரு காரியமும் கிடையாது. அது உங்களுக்குத் தெரியுமா? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை, விசுவாசம், பரிசுத்த ஆவி, ஒவ்வொரு காரியமும் விஞ்ஞானத்தினால் காணப்படவில்லை. அது மாத்திரமே உண்மையானதாகவும், நீடித்து நிலைத்ததாகவும் இருக்கிறது. நீங்கள் நோக்கிப் பார்க்கும் ஒவ்வொரு காரியமும் பூமியிலிருந்து வந்து பூமிக்கு திரும்பிச் செல்கிறது. ஆனால் உங்களுடையக் கண்களினால் காணக்கூடாத காரியங்கள், ஆனால் அது தம்மைத்தாமே அறிக்கையிடுகிறதைக் காண்பது, அதுவே நித்திய உலகமாயுள்ளது.
75144 தேவன் தம்மை வெளிப்படுத்தி, அவர் இங்கே உயிரோடிருக்கிறார் என்று காண்பிப்பாரானால், தொடக்கத்தில் அவர் செய்த அதேக் காரியங்களை, இந்தச் செய்திக்குப் பிறகு, நீங்கள் அதை உங்களுடைய சுகமளித்தலாக ஏற்றுக் கொள்வீர்களா? தேவன் அதை அருளுவாராக. இப்பொழுது வீட்டில் உள்ள எவரையும் நான் கேட்கிறேன், நீங்கள் யாராயிருந்தாலும் அல்லது நீங்கள் எங்கிருந்து வந்தாலும், இந்தச் செய்தி சத்தியம் என்று பயபக்தியோடு விசுவாசிக்கும்படி உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த மணி நேரத்துக்காகத் தேவன் தம்முடைய வேதாகமத்தில் வைத்துள்ள செய்தி அதுவேயாகும், இயேசு கிறிஸ்து இன்றிரவு இங்கிருக்கிறார் என்றும், உயிரோடிருக்கிறார் என்றும் கூறுகிறோம். இப்பொழுது கிட்டத்தட்ட… 145 ஜனங்களாகிய நீங்கள் யாவரும் என்னைக் குறித்து அறிந்திருக்கிறீர்கள், நான் இங்கே வளர்க்கப்பட்ட நகரத்திலேயே இருக்கிறேன். எனக்கு இலக்கணப் பள்ளிக் கல்வி கூட கிடையாது. அது முற்றிலும் உண்மை. நீங்கள் என்னை நீண்ட காலமாக அறிந்திருக்கிறீர்கள், நான் நேர்மையும், உத்தமமுமாயிருக்கிறேன் என்பதை உங்களுக்கு காண்பிக்கும்படியாக நான் உங்களுக்கு முன்பாக வாழ்ந்திருக்கிறேன் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு மாய்மாலக்காரன் அல்ல. என்னை விமர்சிப்பவர்கள் கூட அதைக் கூறுவதில்லை. அவர்கள், அவர்கள், “நீ—நீ ஒரு மாய்மாலக்காரன் அல்ல, ஆனால் நீ வெறுமனே தவறாயிருக்கிறாய். நீங்கள் அறியாமையினால் தவறாயிருக்கிறீர்கள், மனப்பூர்வமாய் அல்ல” என்கின்றனர். நான் அறியாமையினால் தவறாயிருக்கிறேன் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் தேவனுடைய வார்த்தை என்னுடைய செய்தியைக் குறித்து சாட்சி பகருகிறது, அது யார் என்பதை உங்களுக்குக் கூற வேண்டும். அது நானல்ல, என்று நான் கூறுவதை நீங்கள் தெளிவாகக் கேட்கிறீர்கள் எனவே அது அவராகத்தான் இருக்க வேண்டும். அது சரியா? அப்பொழுது தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். இந்த ஒரு வழியாய் நோக்கிப் பாருங்கள், நீங்கள் தேவனை விசுவாசியுங்கள். உங்களால் தேவனை விசுவாசிக்க முடிந்தால், தேவன் உங்களுக்கு அருளுவார். அவர் முன்பு செய்தது போல அதை அவரால் செய்ய முடிந்தால், அப்பொழுது அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
76146 நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இங்கே எனக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு பெண்மணி என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்க, அவளுடைய கண்களில் கண்ணீர் உத்தமமாக வழிந்தோடுகிறது. அவள் யாரென்று எனக்குத் தெரியாது, அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. நான் உங்களுக்கு ஒரு அந்நியன். தேவன் உங்களுடைய இருதயத்தின் இரகசியத்தை, உங்களுடைய வாஞ்சைகளை, அல்லது உங்களுடைய பாவத்தை அல்லது அது என்னவாயிருந்தாலும் அதை அறிந்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவருக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுடைய பாவம் என்னவென்பதையும், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் என்ன செய்திருக்கக் கூடாது என்பதையும், அல்லது உங்களுடைய விருப்பம், அது என்னவாயிருந்தாலும் சரி? அவர் அதைச் செய்வாரானால், அது உங்களை அவரை விசுவாசிக்கச் செய்யுமானால், அது அவராகத்தான் இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளச் செய்யுமா? நீங்கள் அதை அவராக ஏற்றுக் கொள்வீர்களா? உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருப்பது உங்களுடைய பாவம் அல்ல; நீங்கள் அதை அறிக்கை செய்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் அவருடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். அது அவளன்டை அசைவதை நான் கண்டேன். 147 நான் அந்த ஸ்திரீயை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றும், அவள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள் என்றும், நான் உங்களுக்குப் பரிசுத்த ஆவியைக் காண்பிக்க விரும்புகிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக. இங்கே என்னுடைய பாதத்தின் கீழே அமர்ந்துள்ள இந்தச் சிறிய ஸ்திரீயை நோக்கிப் பாருங்கள். நான் அதைக் கூறியபோது, அவள் அதே காரியத்தையே விரும்புகிறார், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையே விரும்புகிறாள். சகோதரியே, நீங்கள் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நான் என் வாழ்க்கையில் அந்த பெண்ணை அறிந்ததுமில்லை கண்டதுமில்லை.
77148 இந்த மனிதன் இங்கே தன்னுடைய தலையைத் தாழ்த்திக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதையும், அங்கே சரியாக உட்கார்ந்து கொண்டிருப்பதையும், தன்னுடைய கழுத்துப்பட்டை அவருக்குச் சரியாகப் பொருந்தாமல் இப்படி பல இருப்பதை பாருங்கள். நீங்கள் ஒரு சிறுநீர்ப்பை கோளாறினால் அவதியுறுகிறீர்கள். தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி, தேவன் உங்களுடைய வேண்டுகோளை உங்களுக்கு அருளுவார். 149 இந்த வாலிப மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறான். ஐயா, உங்களுடைய வெள்ளைக் கழுத்துப் பட்டை பின்னாகத் தொங்கிக் கொண்டிருக்க, தேவன் அதை உங்களுக்குத் தருவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்? தேவன் அதை அருளுவார். 150 இந்த மனிதன் இங்கே தன்னுடைய மனைவிக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவள் ஒரு நிலையத்தில் இருக்கிறாள். தேவன் அவளைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம். 151 உங்களுடைய கரத்தை உங்களுடைய தொண்டையில் வைத்திருக்க, உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த இருதய நிலையைத் தேவனால் சுகப்படுத்த முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், உங்களுக்கு இருக்கிற வயிற்றுக் கோளாறு என்ன? நீங்கள் அங்கே உட்கார்ந்து கொண்டு இப்பொழுது அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அது சரியா? அவர் உங்களைச் சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆமென்.
78152 அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நீங்கள் பாருங்கள். அந்த ஜனங்களை நான் அறிந்திருக்கிறேனா என்று கேட்டுப் பாருங்கள். எனக்குத் தெரியாது, ஆனால் அவர் செய்கிறார். ஆமென். அங்கே சுவற்றின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஒரு மனிதனின் மேல் அந்த ஒளி தொங்கிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். அவர் தன்னுடைய முதுகில் உள்ள ஒரு முதுகெலும்பு கோளாறினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இங்கிருந்து வரவில்லை, அவர் ஜார்ஜியாவிலிருந்து வருகிறார். திரு. டங்கன் அவர்களே, உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள், தேவன் அந்த முதுகுத் தொல்லையைச் சுகப்படுத்துவார். நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 153 இதோ ஒரு மனிதன் பின்னால் உட்கார்ந்து கொண்டு, முதுகுத் தொல்லையோடு என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எனக்கு அவரைத் தெரியாது, ஆனால் அது திரு. தாம்ஸன். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஐயா, அங்கே பின்னால் எழுந்திருங்கள், எனவே…நான் உங்களுக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். அது உண்மை. ஆனால் நீங்கள் அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய முதுகுத் தொல்லை இப்பொழுது சுகமடைந்து விட்டது. இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துகிறார்.
79154 154 “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? அவர் இன்றிரவு இங்கிருக்கிறார்! நான் இருக்கிறேன் என்ற மகத்தானவர் அவரே. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இது இயேசு கிறிஸ்து தம்மைத் தெரியப்படுத்தி, தீர்க்கதரிசனத்தில் தம்மை அடையாளங் காட்டுகிறார் என்று நீங்கள் திருப்தியடைந்து, உறுதியாக நம்புகிறீர்களா? 155 கண்ணைக் குறித்து கவலைப்பட வேண்டாம். தேவன் வியாதியஸ்தரையும், அவதியுறுவோரையும் குணப்படுத்துகிறார். 156 எத்தனை பேர்…இங்கே எத்தனை பேர் சுகவீனமாக இருக்கிறீர்கள்? நாங்கள் உங்களுடைய கரங்களைக் காணட்டும். அது அப்படிப்பட்ட ஒரு இழுப்பு மற்றும் ஒரு சிரமம் போன்றே தென்படுகிறது. ஜனங்களாகிய உங்களில் எவரேனும் ஜெப அட்டைகளை வைத்திருக்கிறீர்களா? உங்களை எப்படி இங்கு கொண்டு செல்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன், அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. சுவரை நோக்கிப் பாருங்கள், நான் எப்படி அவர்களை உள்ளே கொண்டு வருவேன்? நீங்கள் ஒரு நடைபாதையில் சிக்கிக் கொண்டால் என்னவாகும்? நீங்கள் மற்றொன்றை அங்கேயே தடுத்துவிட்டீர்கள், எல்லோரும் அப்படியே நின்றுவிட்டனர்.
80157 கவனியுங்கள், எனக்குச் செவிகொடுங்கள். நான் எப்பொழுதாவது கர்த்தருடைய நாமத்தில் கூறின காரியம் நிறைவேறாமல் போனதுண்டா? அது சரியா? எல்லாமே எப்பொழுதுமே சரியாக இருந்து வருகிறது. என் ஜீவியத்தில் நான் ஒரு பைசா கூட உங்களிடம் கேட்டதேயில்லை, அப்படித்தானே? ஒரு முறையும் அல்ல. என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் ஒரு காணிக்கையை எடுத்ததேயில்லை. நான் பணத்திற்காக இங்கு வரவில்லை. உங்களை வஞ்சிக்க நான் இங்கு வரவில்லை. இந்த நேரத்திற்கான தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்தவே நான் இங்கே இருக்கிறேன். நான் உங்களுக்கு சத்தியத்தை கூறியிருக்கிறேன், அது சத்தியம் என்று தேவன் சாட்சி பகர்ந்திருக்கிறார். இப்பொழுது நான் உங்களுக்கு வேத வாக்கியங்கள் உரைக்கிறதாவது, விசுவாசி தன்னுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைக்கும்போது, இயேசு, “அவர்கள் சுகமடைவார்கள்” என்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், தேவனுடைய பிரசன்னத்தில், அவர் அதை இப்பொழுதே செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா?
81158 இப்பொழுது உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைத்து, ஒரு நிமிடம் அதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது, ஜெபிக்காதீர்கள், அங்கே வெளியே தேசத்தில் உள்ளவர்களே; உங்களுடைய கரங்களை ஒருவர் மற்றொருவர் மீது வையுங்கள். நான், என்னையே, நானே இந்தக் கைக்குட்டைகளின் மேல் கரத்தை வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் ஒரு நிமிடம் என்னை நோக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தேவன் என்ன செய்யாமல் விட்டுவிட்டார்? அவர் எப்படிப்பட்டவர் என்றும், நாம் வாசித்த வார்த்தை என்னவென்றும் பாருங்கள், தீர்க்கதரிசனங்களின் மூலம் இயேசு தம்மை அடையாளங்காட்டினார் என்பதை நாங்கள் கூறியுள்ளோம். இப்பொழுது இந்தக் கடைசி மூன்று வாரங்களை நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற அந்த நேரத்தைப் பாருங்கள். கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்தும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களை கிட்டத்தட்ட வஞ்சிக்கும் அடையாளங்களைக் குறித்தும் நாம் வாசித்திருப்பதைப் பாருங்கள். எப்படியாய் வார்த்தை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, எப்படியாய் இந்தக் காலத்தின் தேவன் பொய்யை…ஜனங்களின் இருதயங்களை குருடாக்கியிருக்கிறான். எப்படியாய் தேவன் தாமே தம்முடைய தீர்க்கதரிசனங்களின் மூலம் இந்தக் காரியங்கள் இந்த லவோதிக்கேயா காலத்தில் சம்பவிக்கும் என்று கூறியிருக்கிறார். ஒன்றுமே செய்யாமல் விடப்பட்டிருக்கவில்லை. எம்மாவூரில் உள்ள அந்த ஜனங்களிடத்தில் பேசின அதே தேவன் இங்கே இருக்கிறார், அவரைக் குறித்து முன்னுரைக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களினால் தம்மை அடையாளங்காட்டி, இந்தக் காலத்திற்கான முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களின் மூலம் அவர் தம்முடைய பிரசன்னத்தை அடையாளங்காட்டிக் கொண்டு இன்றிரவு அவர் இங்கே இருக்கிறார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்களால் அதை நம்ப முடிகிறதா? அப்படியானால் உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். உங்களுக்காக ஜெபிக்காதீர்கள், ஆனால் உங்களுடைய சொந்த வழியில் நீங்கள் உங்களுடைய கரங்களில் உள்ள அந்த நபருக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது பாருங்கள், சந்தேகப்படாதீர்கள்.
82159 இப்பொழுது நான் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் காண முடிந்தால் நலமாயிருக்குமே! நான் இங்கே நின்று கொண்டு உங்களிடம் பொய் சொல்லமாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களால் காண முடிந்தால், உங்களுடைய விசுவாசத்தினால் அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் அப்பால் உள்ள ஆகாயத்தில்—ஆகாயத்தில் சென்றதை, விஞ்ஞானம் புகைப்படம் எடுத்துள்ளது, அது தரையிறங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நங்கூரமிடப்பட்ட இடத்தைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறார். என் சகோதரனே, அதை மாத்திரம் விசுவாசி. அது சரியென்று அவர் வேத வாக்கியங்கள் முதலானவைகளைக் கொண்டு அதை அடையாளங்காட்டியுள்ளார். இப்பொழுது நீங்கள் உங்களுடைய கரங்களை வைத்துள்ள அந்த நபருக்காக உத்தமத்தோடு ஜெபியுங்கள்; அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
83160 அன்புள்ள நாசரேயனாகிய இயேசுவானவரே, ஏன், கர்த்தாவே, நீர் இங்கிருக்கிறீர் என்பதை நாங்கள் வார்த்தையினாலே அறிந்திருக்கிறோம், நீர் இங்கே இருக்கிறீர் என்ற வாக்குத்தத்தத்தினால், “இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தில் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் மத்தியில் நான் இருக்கிறேன். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” இந்த தொலைபேசி அலைகளுக்கு அப்பால், மகத்தான பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு சபைக்குள்ளும் பிரவேசிப்பாராக. இங்கே சபையில் நாம் நோக்கிப் பார்க்கிற அதே பரிசுத்த வெளிச்சம் ஒவ்வொருவர் மேலும் விழுவதாக, இந்த நேரத்தில் அவர்கள் சுகமடைவார்களாக. கிறிஸ்துவின் பிரசன்னத்தில் சத்துருவாகிய பிசாசை நாங்கள் கடிந்துகொள்கிறோம்; நாங்கள் சத்துருவிடம், அவர் மற்றவர்களுக்காகப்பட்ட அந்தக் கொடிய துயரத்தினால், கர்த்தராகிய இயேசுவின் மரணம் மற்றும் மூன்றாம் நாளில் வெற்றிகரமான உயிர்த்தெழுதல் மூலம்; ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இன்றிரவு இங்கே நம் மத்தியில் உயிரோடிருக்கிறார் என்பதற்கு அவருடைய நிரூபிக்கப்பட்ட அத்தாட்சியை அளிப்பதனால் அவன் தோற்கடிக்கப்படுகிறான் என்று கூறுகிறோம். ஜீவனுள்ள தேவனுடைய ஆவியானவர் ஒவ்வொரு இருதயத்தையும் விசுவாசத்தினாலும், வல்லமையினாலும் நிரப்புவாராக, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலிலிருந்து குணமாக்கும் நற்பண்பையும், அவருடைய பிரசன்னத்தில், சபையைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கிற இந்த மகத்தான ஒளியினால் அவர் இப்பொழுது அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக இதை அருளும். 161 நாங்கள் ஜெபிக்கும் இந்த உறுமால்களை, அவைகள் சுகவீனமானவர்களிடத்திற்கும், அவைகள் நோக்கங்கொண்டுள்ள பாதிக்கப்பட்டவர்களிடத்திற்கும் கொண்டு செல்லப்படுவதாக. இப்பொழுது இங்கிருக்கிற அதே பரிசுத்த ஆவியானவர் தம்மை அடையாளங்காட்டி, இவைகள் கிடத்தப்பட்டுள்ள ஒவ்வொரு நோயாளியின் மேலும் தம்மை அடையாளங்காட்டுவாராக. அவர்களுடைய சரீரத்தின் சுகவீனம் சுகமடையும் வரை தேவனுடைய பிரசன்னம் அவர்களுடைய இருதயத்தை விசுவாசத்தினால் நிரப்புவதாக. இதை நாங்கள் தேவனுடைய மகிமைக்காக இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய நாங்கள் அதைக் கேட்கிறோம். ஆமென்.
84162 இப்பொழுது உங்களுடைய இருதயங்களிலிருந்து, உங்களுக்கு என்ன கோளாறு இருந்தபோதிலும் நான் கவலைப்படுகிறதில்லை, நீங்கள், உங்களுடைய இருதயத்திலிருந்து, தேவனுடைய வார்த்தை உங்களுடைய வேண்டுகோளை உங்களுக்கு அளித்துள்ளது என்று உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? என்னால் காண முடிந்த ஒவ்வொரு கரமும் மேலே உயர்த்தப்பட்டது என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதை விசுவாசித்தால், அது முடிந்துவிட்டது என்பதை, இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். 163 அங்கே வெளியே தொலைபேசி கம்பி இணைப்புகளில் இருக்கிற நீங்கள், நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்திருந்தால், போதகர்கள் உங்கள்மீதும், உங்களுடைய அன்பார்ந்தவர்கள் உங்கள்மீதும் கரங்களை வைக்கும்போது, அது முடிந்துவிட்டது என்று நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், அது முடிந்துவிட்டது. மகத்தான பரிசுத்த ஆவியானவர், அவர் இன்றிரவு இங்கே கூடாரத்தில் இருக்கிறார். அவர் ஜனங்களின் மேல் அசைவாடி, இங்கே ஒரு சுவற்றின் பக்கமாகத் தம்மைக் காண்பித்து, கீழே இறங்கி ஒரு மனிதனின் மேல் சென்று, இந்தக் கட்டிடத்தினூடாக இறங்கி வந்து, இருதயங்களின் இரகசியங்களைத் தெரியப்படுத்தி, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை காண்பிக்கும்படியாகவே அவருடைய பிரசன்னத்தின் அடையாளம் உள்ளது. அவர் நம் மத்தியில் இருக்கிறாரே! அவர் தேவன், ஒருபோதும் தவறாத தேவன்.
85164 நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லை, அது இப்பொழுது எரிகிறதல்லவா, நாம் இப்பொழுது உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்றும், அவருக்கு என்றென்றும் மகிமையும் துதியும் உண்டாவதாக; சர்வ வல்லமையுள்ள யேகோவாவின் வெளிப்படையான சாயலில் இருக்கிறவர்; ஒரு தீர்க்கதரிசியின் கவனத்தை கவர்ந்திழுக்கும்படியாக, எரிகிற முட்செடியில் அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் பயணம் செய்தவர்; மலையின் மேல் இறங்கி இருந்தபோது, மோசேயையும் யோசுவாவையும் தவிர, அதைத் தொட்ட எவரும் கொல்லப்பட வேண்டியதாயிருந்தது. எப்படியாய் அவர் இஸ்ரவேல் புத்திரரை அவர்களுடைய பிரயாணத்தில் வனாந்திரத்தினூடாக வழி நடத்தினது, இன்றைக்கு அழைக்கப்பட்ட ஜனங்களுக்கு ஒரு முன்னடையாளமாயிருக்கிறதே. இங்கே அவர் விஞ்ஞான ஆராய்ச்சியினால், விஞ்ஞானத்திற்கு முன்பாகத் தம்மை அடையாளங்காட்டினார். அவருடைய செயல்களினாலும், அவருடைய தீர்க்கதரிசனத்தினாலும், இந்த நாளில் அவர் செய்ய வேண்டுமென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிற காரியங்களினாலும், அவரை நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக ஆக்குவது பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய இருதயங்களை நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியச் செய்ய அது போதாதா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
86165 இப்பொழுது ஒருமனதோடு, நாம் எழும்பி நின்று: “இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும், சுகமளிப்பவராகவும் நான் இப்பொழுது ஏற்றுக்கொள்கிறேன். அவருடைய கிருபையினால், இது முதற்கொண்டு ஓ, தேவனே, அவிசுவாசம் என் இருதயத்தில் ஒருபோதும் பிரவேசிக்காதிருக்கட்டும், ஏனென்றால் இந்நாளின் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை நான் கண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் என்றும், இங்கே இப்பொழுது இந்த மணி நேரத்துக்கான அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்கள் இப்பொழுது எங்கள் மத்தியில் நிறைவேறியுள்ளன. அவரே என் இரட்சகர், என் தேவன், என் ராஜா, என்னுடைய சர்வமும் அவர்” என்று கூறுங்கள்.
87166 அன்புள்ள தேவனே, எங்களுடைய சாட்சியைக் கேட்டருளும். நாளுக்கு நாள் ஜீவ அப்பத்தை எங்களுக்குத் தாரும். ஓ தேவனே, எங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நாங்கள் உமக்குத் துதியை ஏறெடுக்கிறோம். வல்லமையுள்ள ஒருவரை, தீர்க்கதரிசிகளின் தேவனாகிய உம்மை நாங்கள் துதிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். ஓ, என்னே ஒரு கணம், என்னே ஒரு நேரம்! …விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள்; விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், எல்லாக் காரியங்களும் கூடும், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நாம் இதை இந்தவிதமாகப் பாடுவோமாக. இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், ஓ, இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், எல்லாம் கூடும், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்; இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், ஓ, இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன், எல்லாக் காரியங்களும் கூடும், இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன். அதுதான் உங்களுடைய சாட்சியா? இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்: நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை; நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக! [சகோதரன் பிரான்ஹாம் தேவன் உம்மோடிருப்பாராக என்ற பாடலை மெளனமாகப்பாடுகிறார்—ஆசி.] (நீங்கள் ஒன்றைக் கூற விரும்புகிறீர்களா? வேயில்.) …இயேசுவின் பாதத்தில்; நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக!
88167 நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, சகோதரன் வெயில் ஜெபத்தில் கலைந்து செல்லும்படி அனுப்பி வைக்க இங்கே நின்று கொண்டிருக்கிறார். சகோதரன் லீ வேயில், அவர் இங்கே கூடாரத்தில் பிரசுரங்கள், புத்தகங்கள் போன்றவற்றிற்கு ஒரு எழுத்தாளராக இருக்கிறார். மிகவும் விலையேறப்பெற்ற சகோதரனே, அவர் என்னோடு அநேக தொடர் பிரச்சாரங்களில் இருந்திருக்கிறார். ஒவ்வொரு ஊழியக்காரரையும் இங்கே அழைத்து வந்து, அவர்களோடு பேச எனக்கு ஒரு தருணம் கிடைத்தால் நலமாயிருக்கும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். ஒவ்வொரு ஊழியக்காரரும், நீங்கள் இங்கே இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எல்லா சபையோரே, வெவ்வேறு சபைகளைச் சேர்ந்த ஜனங்களே, இன்னும் அதிகமாக, நீங்கள் இங்கே இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். “நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களுடனே கூட இருப்பாராக” என்பதே உண்மையாகவே ஒருவருக்கொருவருக்கான நம்முடைய ஜெபமாயுள்ளது. நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நம்முடைய கரங்கள் உயர்த்தப்பட்டிருப்பதோடு, நாம் இதைத் தேவனுக்கு உண்மையாகவே இனிமையாக மீண்டும் பாடுவோம். நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் இயேசுவின் பாதத்தில் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு இருப்பாராக!