சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்

65-0822E

சகதரன மன, உஙகளகக நனற. நர ஒர சகதரன கணட வநததக கணடன. கரததர உஙகள ஆசரவதபபரக. எலலக கரயஙகளம கடம, வசவசகக மததரம சயயஙகள. நம ஜபபபமக. ஓ தவன, வசவசகக மததரம சயவத, இனறரவ உணமயகவ அததன எஙகளடய இரதயததன வஞசயயளளத. நஙகள இனறரவ இஙக கடரததல கட வநதரககறம, சரயன மறகல அஸதமததக கணடரககறத, அனபளள தவன, கலததன பரலம கட சரயனனத எவவளவ நரககமக அ

சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்

65-0822Eமாலைஜெபர்ஸன்வில் இந்தி1161965-08-22

சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்

65-0822Eமாலைஜெபர்ஸன்வில் இந்தி1161965-08-22

1 சகோதரன் மான், உங்களுக்கு நன்றி. நீர் ஒரு சகோதரனை கொண்டு வந்ததைக் கண்டேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லாக் காரியங்களும் கூடும், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நாம் ஜெபிப்போமாக. ஓ தேவனே, விசுவாசிக்க மாத்திரம் செய்வது, இன்றிரவு உண்மையாகவே அதுதான் எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாயுள்ளது. நாங்கள் இன்றிரவு இங்கே கூடாரத்தில் கூடி வந்திருக்கிறோம், சூரியனோ மேற்கில் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது, அன்புள்ள தேவனே, காலத்தின் பேரிலும் கூட சூரியனானது எவ்வளவு நெருக்கமாக அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீர் நாங்கள் உணரச் செய்ய வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம். அது விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. பொழுதும் போயிற்று. நாங்கள் ஒரு சமயம் அந்த நாள் பொழுது போயிருந்தபோது, இரண்டு பிரயாணிகள் நீர் உள்ளே வந்து அவர்களோடு தங்கி இருக்கும் படி கேட்டுக் கொண்டதை நாங்கள் நினைவு கூருகிறோம். அப்பொழுது உம்முடைய வார்த்தையை விளக்கி, கிறிஸ்து பாடுபட வேண்டியதாயிருக்கிறது என்ற இந்த எல்லா காரியங்களையும் முதலில் அவர்கள் காணும்படிச் செய்வதன் மூலம், நீர் உம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினீர். 2 ஆகையால் தேவனே, இந்த நாளின் பொழுதும் போய்விட்டபடியால், நீர் எங்களுடைய வீடுகளுக்குள் வந்து, எங்களோடு ஜீவிக்கும்படியாயும், கர்த்தாவே, நாங்கள் மிகுந்த கிருபையோடு உம்மிடத்திலிருந்து வந்துள்ள ஒரு பொக்கிஷமாகவும், எங்கள் இருதயத்தில் ஒரு வரமாகவும் பற்றிக்கொண்டிருக்கிற வார்த்தையை எங்களுக்கு விளக்கிக் கூறுவீராக. நாங்கள் அதை ஒருபோதும் மீறாதிருப்போமாக; நாங்கள் எப்பொழுதும் எங்களுடைய முழு இருதயத்தோடும் அதற்கு பயபக்தியாய் இருப்போமாக. 3 இந்தக் காலையில் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு நீர் செய்ததற்காகவும். கிட்டத்தட்ட மரிக்கும் தருவாயில் இருந்த சகோதரன் கேப்ஸின் சிறு பையனுக்கு நீர் என்ன செய்தீர் என்பதற்காகவும், இன்றிரவு இங்கே அவன் கூட்டத்தில் இருக்கிறான் என்பதற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, இந்த எல்லாக் காரியங்களுக்காகவும் நாங்கள் உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம்! 4 கர்த்தாவே, நாங்கள் எப்படி உமக்கு துதி செலுத்த வேண்டும் என்பதை நாங்கள் அறிந்துகொள்ளும்படி, அருளும். நாங்கள்…உமக்கு எப்படி துதி செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது எங்களுடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டதாயுள்ளது. ஆனால், கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம் என்பதற்கு எங்களுடைய இருதயங்களை நன்றி தெரிவிக்கும் அடையாளங்களாக ஏற்றுக்கொள்ளும். நாங்கள்—நாங்கள் சரியானதைச் செய்ய விரும்பும்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்குக் காண்பியும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.

25 இன்றிரவு நிரம்பியிருக்கும் இந்த மகத்தான சபைக்கும், தொலைபேசிகள் மூலமாகவும் நாடு முழுவதும் பரவியுள்ளவர்களுக்கும் மாலை வணக்கம். இன்றிரவு அவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர். என்னுடைய மனைவி கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நான் நம்புகிறேன். நான் அவளை அழைக்கவில்லை, எனவே இந்த ஆராதனைக்குப் பிறகு நான் அவளை அழைக்கப் போகிறேன். 6 இந்தக் காலையில் சகோதரன் ஜாக்ஸனின் சகோதரன்…இல்லை தகப்பனார் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பதால், அப்படிப்பட்ட ஒரு முன்னேற்றம் ஏற்பட்டதால், அவர் நாளை வீட்டிற்கு வரலாம். 7 சகோதரன் கேப்ஸின் சிறு பையன், அன்றொரு இரவு அவர் என்னை அழைத்தார், சகோதரன் கேப்ஸ் கூட்டத்தில் இருந்தாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவருடைய சிறு பையன் மிகவும் சுகவீனமாயிருந்தான். நானும் ஜோசப்பும் துப்பாக்கிச் சூடு நடத்தும் இடத்தில் என்னுடைய சிறிய .22 துப்பாக்கியை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தோம். கடந்த வாரம் அதைக் குறித்து நான் உங்களிடம் கூறினேன். அவன் உண்மையிலேயே நன்கு குறி வைத்து சுடுவதில் சிறந்தவனாக இருக்கப் போகிறான். எனவே அவன் நிச்சயமுடையவனாயிருந்து, தான் என்ன செய்தான் என்பதை கேரி மற்றும் லாரியிடம் கூற விரும்பினான். திரும்பி வரும்போது, அவன் என்னிடத்தில் கூறினான்…நான், “நீ அதைக் குறித்து சகோதரன் ஜீன் நார்மனிடம் கூற வேண்டும்” என்றேன். அவன், “முதலில் நின்று பில்லியிடம் சொல்ல வேண்டும்” என்றான், அவனுடைய சகோதரன். அவன் எப்படி நன்றாக சுட்டான் என்பதை அவனுக்கு காண்பித்த பிறகு, அவன், “இப்பொழுது இனிமேல் நீ என்கிட்ட வராதே” என்றான். பார்த்தீர்களா?

38 நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, ஏன், தொலைபேசி ஒலித்தது, பில்லி ஓடிப்போய் பேசினான்…நான், “அது இப்பொழுது ஒரு சுகவீனமான அழைப்பாய் இருக்கலாம்” என்றேன். நாங்கள் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்திருந்தோம், அது சகோதரர் கேப்ஸ்ஸாக இருந்தது. அந்தச் சிறு பையனுக்கு வயிற்றுச் சளி சவ்வு வீக்கம் உண்டாயிருந்தது, மேலும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. கர்த்தர் அவனைக் குணப்படுத்தியிருக்கிறார். அன்றொரு இரவு அவன் ஒருவிதமான வலிகளால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறான் என்று திருமதி உட் என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். நாங்கள் அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தோம், நான்… நான், “திருமதி. உட், இப்பொழுது இது மிகவும் காலதாமதமாகிவிட்டது, பத்து மணிக்கு மேல், அவர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா என்று நான் சந்தேகிக்கிறேன்” என்றேன். நான், “நான் வீட்டிற்கு மேலே சென்று கதவை அடைத்துக் கொள்ளப் போகிறேன்” என்றேன். நான் மேலே சென்று ஜெபித்தேன். இன்றிரவு கூட்டத்தில் அந்த சிறு பையன் இருக்கிறான் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே நாம் அதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 9 இப்பொழுது நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்; நாம் இன்னும் கேள்விப்பட்டிருக்கவில்லை. சகோதரன் லியோ மெர்சியரும், சகோதரி மெர்சியரும் கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் உங்களுடைய தகப்பனாரிடமிருந்து இதுவரை எதையும் கேள்விப்பட்டிருக்கவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படி இருக்கிறார் என்பதை நாம் கேட்போம் என்று நம்புகிறோம். ஆனால் அவர் சரியாகிவிடுவார் என்று நான் ஏறக்குறைய நிச்சயமுடையவனாய் இருக்கிறேன், எனவே நாம் சர்வ வல்லமையுள்ள தேவனிடம், தேவன் அந்த அருமையான, வயோதிக பரிசுத்தமாக்கப்பட்ட மனிதனை, ஒரு பழைய அனுபவம் வாய்ந்த சுவிசேஷ ஊழியக்காரரைக் கவனித்துக்கொள்வார் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

410 இப்பொழுது, ஓ, அநேகக் காரியங்கள் செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது, அதைச் செய்ய இவ்வளவு குறுகிய காலமே உள்ளது, எனவே நம்முடைய கர்த்தருக்காக நம்மால் செய்ய முடிந்தவைகளில் நம்முடைய எல்லா முயற்சிகளையும் இப்பொழுது செய்யுங்கள். 11 நான் சற்று முன்னதாகவே வந்துவிட்டேன். நான்—நான் மிக நலமாக இருப்பதாக உணரவில்லை. நான் மிகவும் களைப்புற்றிருந்தேன், நான் இந்த பிற்பகல் படுத்துக் கொண்டேன். ஒருபோதும்…நான் இன்னும் இரவு ஆகாரம் கூட உண்ணவில்லை. எனவே நான்—நான் உள்ளே சென்று, பிற்பகல் முழுவதும் அப்படியே படுத்துக்கொண்டிருந்தேன். நான் மிகவும் மோசமாக உணர்ந்து, அங்கேயே படுத்துக் கிடந்தேன். அதன்பின்னர் நான் ஜெபிக்கத் துவங்கினேன், நான் நன்றாக உணர்ந்தேன். நான் எழுந்து, என்னுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, சபைக்கு வந்தேன். 12 எனவே நாங்கள்—நாங்கள் இப்பொழுது கர்த்தராகிய இயேசு நம்முடைய முயற்சிகளை ஒன்று சேர்ந்து இன்றிரவு ஆசீர்வதித்து, அவருடைய ஆடுகளை போஷிக்கும் உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறபடியால், தேசம் முழுவதிலுமுள்ள நாங்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் இந்த பாகத்தில் சேர முயற்சிக்கிறோம். ஆடுகளுக்கு எனக்குத் தெரிந்த சரியான ஆகாரத்தை மாத்திரமே நான் என்னுடைய அறிவில் மிகச் சிறந்த முறையில் அளிப்பேன். நாம் யாவரும் ஒரே இடத்தில் கூடும் வேளைக்காக நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் ஏழு வாதைகள், ஏழு கலசங்கள், எக்காளங்கள் போன்றவற்றின் பேரில் பிரசங்கிக்க வேண்டும். அவை யாவும் ஒன்று சேர்ந்தே நிகழ்கின்றன. அந்தக் காரணத்தினால்தான், நம்மால் கூடுமானால், ஒரே ஒரு கூட்டத்தில் அதைக் குறித்து முடிக்க, நமக்கு ஏறக்குறைய ஒரு வாரம், பத்து நாட்கள் அல்லது அதற்கும் மேலாக எடுத்துக் கொள்ளலாம். அது மிகவும் போதுமானது என்று நினைக்கிறேன்.

513 இப்பொழுது, உங்களில் அநேகர் வெகுதூரம் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் இங்கே வெளியே நோக்கிப் பார்க்கையில், சற்று முன்னர், டூசானில் உள்ள எல்லோரையும் நான் கவனித்தேன். திருமதி சாத்மன், சகோதரன் ஃபிரட் சரியாக வந்ததை நான் காண்கிறேன். நான் அவரை இந்தக் காலையில் கூட்டத்தில் பார்த்தேன். இன்றிரவு சகோதரன் டான் ரடல் அவருக்குப் பக்கத்தில் அங்கே அமர்ந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சகோதரன் டானை உள்ளே காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜூனியர், ஜூனியர் இங்கே இருக்கிறாரா, அல்லது அவர் தன்னுடைய சபையில் இருக்கிறாரா? அவர்கள் இன்றிரவு சபையில் தொலைபேசி இணைப்பில் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நான் யூகிக்கிறேன். எனவே, சகோதரர்களாகிய நீங்கள் யாவரும், இன்றிரவு நீங்கள் எங்களோடு இங்கே இருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், என்றோ ஒரு நாளில் நாம் கர்த்தருக்குள் நம்பிக்கை கொண்டு, வாழ்க்கையின் நாள் முடிவுறும்போது, நம்முடைய சிறிய அழிவுள்ள ஜீவனின் வெளிச்சம் மங்கலாகி, அணைந்து போகிறது, நாம் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டோம், ஏனென்றால் இந்த…

614 அரிசோனாவில் உள்ள பிரஸ்காட்டில் உள்ள…நான் உங்களிடம் ஒரு அறிக்கையைப் பெற்றுள்ளேன். சகோதரன் காக்கின்ஸ் மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிடப்பட்டுள்ளார். எனவே நாம் அதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நல்லது. அது அருமையாயிருக்கிறது. எனவே நாம் அதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். சகோதரி மெர்சியர், உங்களுடைய தந்தையார் இப்பொழுது சுகமடைந்து கொண்டிருக்கிறார். நாங்கள் ஜெபித்தப் பிறகு, அவர் சரியாகிவிடுவார் என்று நான் உணர்ந்தேன். எனவே அவர்கள் தொலைபேசி இணைப்பில் கேட்டுக் கொண்டிருக்கலாம். அவர்கள் கேட்கிறார்கள் என்று நம்புகிறேன்; அவர்கள் கேட்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே நம்முடைய சகோதரன் இப்பொழுது சரியாக இருக்கிறார் என்பதற்கும், சரியாகிவிடப்போகிறார் என்பதற்கும் நாங்கள் அதற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். எனவே இந்த எல்லாக் காரியங்களுக்காகவும் நாம் கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம். 15 நேற்றிரவு ஒரு வேண்டுகோள் இருந்தது; இங்கே ஒரு அருமையான சகோதரன், அவர் இன்றைக்கு நம்மோடு இருக்கமாட்டார் என்று நான் யூகிக்கிறேன். கென்டக்கியில் உள்ள ஒரு சகோதரன் அவருடைய மகளைக் குறித்து என்னிடம் கூறினார். அழகான குடும்பம், அந்த—அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படப் போகிறார்கள், ஒரு இளம் தாய் முதுகில் புற்று நோயோடு இருக்கிறாள். எனவே தேவன் இந்த வாலிபப் பெண்ணை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள்—நாங்கள் ஜெபிக்கிறோம். அவர் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன், நாங்கள் அப்படியே… சபையோர், நாம் யாவரும் ஒன்று சேர்ந்து, இந்த ஜனங்கள் எல்லோருக்குமாக ஒன்று சேர்ந்து ஜெபிப்போம். அதைத்தான் நாம் ஒரு குழுவாக, செய்ய வேண்டும். இவ்வாறு…

716 நாட்கள் நெருங்க நெருங்க, பாதை குறுகிக்கொண்டே போக, நாம்—நாம் ஒன்று சேர்ந்து நெருங்கி வர வேண்டும். என்னே, நாம் ஒரே, ஒரே சரீரமாய் இருக்க வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து செயல்பட்டு, ஒருவருக்கொருவர் செய்த பாவங்களையும், நம்முடைய வேறுபாடுகளையும் மறந்து, அந்த நாள் நெருங்கி வருவதை நாம் காண்கையில், இன்னும் நெருக்கமாக இணைந்திருக்க வேண்டும். நாம் யாவரும் ஏகமனதோடும், ஒரே இருதயத்தோடும் கூடி வருகிறோம். ஒரு சகோதரன், சகோதரி வழியை விட்டு விலகிச் சென்றால், அந்த நபருக்காக ஜெபிப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யாதீர்கள், அன்பில், எப்பொழுதும் ஒருவரையொருவர் தாங்குங்கள். உங்களில் ஒருவரும் வெளியேற அனுமதிக்க வேண்டாம்—வேண்டாம். ஒன்றாக இருங்கள். உங்களால் கூடுமானால், எல்லா நேரத்திலும், தொடர்ந்து அதனோடு இன்னும் கூடுதலாகக் கூட்டுங்கள்.

817 சகோதரன் நெவில், இங்கே அமர்ந்துள்ள சகோதரன் ஜார்ஜ் ரைட், சகோதரன் ரைட் அவர்களைக் குறித்த உங்களுடைய வேண்டுகோளை நான் இங்கே பெற்றுள்ளேன். சகோதரன் ரைட்டும், சகோதரி ரைட்டும் இங்கு…மகிழ்ச்சியடைகிறோம். சிறுமி எடித், நான்…ஒரு நாள் நாங்கள் வரும்போது, நாங்கள் இங்கே ஒரு சிறு நினைவு ஆராதனையை நடத்த விரும்புகிறோம். நான் எடித் சென்றபோது, அவளுக்காக திரும்ப வரவில்லை. ஆனால், சகோதரி ரைட், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவள் கண்ட சொப்பனம் உங்களுக்கு நினைவிருக்கும். அப்பொழுது நான் உங்களிடம் கூறினேன், நான், “அது, சிறுமி எடித் இப்பொழுது நம்மோடு நீண்ட காலம் இருக்கமாட்டாள்” என்று கூறினேன், ஏனென்றால் அவள் கண்ட அந்த சொப்பனத்தினூடாக அவள் மரித்து கொண்டிருக்கிறாள் என்று கர்த்தர் ஏற்கனவே கூறியிருந்தார். அவள் தேவனை சந்திக்கப் போகிறாள் என்ற வியாக்கியானத்தை நான் பெற்றுக்கொண்டேன். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து அவள் தேவனை சந்திக்கச் சென்றாள். இப்பொழுது அவளுடைய அப்பாவும், அம்மாவும் அழிவுக்கும் அழியாமைக்கும் இடையேயுள்ள பிளவுக் கோட்டைக் கடக்க காத்திருக்கிறார்கள். 18 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என்னால் முடிந்தால், நான் உடனே உங்களைக் காண முயற்சிக்க விரும்புகிறேன். எனவே தேவன் உங்களோடும், ஷெல்பியோடும், எல்லோரோடும் இருப்பாராக. நான் இந்தக் காலையில் ஷெல்பியைக் கண்டேன் என்று நினைத்தேன்; எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. நீங்கள் இங்கே நன்றாக பார்க்க முடியாது; கூரையானது இந்தவிதமாக கீழே உள்ளது, அது அதைப் போன்ற ஒரு—ஒரு ஒளியை வீசுகிறது. உங்களால் புள்ளிகளைப் போல காண முடிகிறது, ஆனால் உங்களால் ஜனங்களை நன்றாகக் காண முடியாது.

919 இப்பொழுது நேராக செய்திக்கு வருவோம். இது ஒரு செய்தியாக நான் எண்ணாகமம் 19:9 மற்றும் எபேசியர் 5:26-லிருந்து வாசிக்க விரும்புகிறேன். நீங்கள் பாடப் பொருளை எழுதி வைத்திருப்பவராக இருந்தால், ஏன், நீங்கள் அதை குறித்துக் கொள்ளலாம். 20 இப்பொழுது நினைவிருக்கட்டும், இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறதா…எனக்குத் தெரியாது. என்னால் யாரையும் காண முடியவில்லை. ஆம், எனக்கு தெரிகிறது, நான் ஒலிப்பதிவு அறையில் சகோதரன் டெர்ரியை காண்கிறேன். இது ஒலிப்பதிவு செய்யப்பட்டால்; எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் உள்ள எந்த ஊழியர்களிடமும், இது உங்களுடைய போதகங்களை அவமதிப்பதற்காக அளிக்கப்படவில்லை, இது உங்களுடைய ஆடுகளுக்குக் கூட அளிக்கப்படவில்லை. இந்த செய்தியும், நான் பேசும் மற்ற எல்லா செய்திகளும் என்னுடைய சபையோருக்கு அனுப்பப்படுகின்றன. உங்களுடைய சபையோர் அதைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் ஒழிய அது அவர்களுக்குரியதல்ல. ஆனால் அது இங்குள்ள இந்த ஜனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 21 ஜனங்கள் இந்த ஒலிநாடாக்களை வாங்குகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் அவைகளை வாங்கி அவைகளைப் போட்டு கேட்கிறார்கள். அநேக சமயங்களில் அவர்கள் கடிதம் எழுதுகிறார்கள். நான் எப்பொழுதுமே அவர்களைக் குறிப்பிடுகிறேன், அவர்கள் ஏதோ ஒரு சபையின் அங்கத்தினராயிருந்தால், “உங்களுடைய போதகரைப் பாருங்கள்” என்று கூறுகிறேன்.

1022 இப்பொழுது, போதகரே, நான் இந்த காரியங்களை என்னுடைய சபையோரிடம் மாத்திரமே கூறுகிறேன் என்பதை, அதாவது, இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைச் செய்ய எனக்கு உரிமையுண்டு, ஏனென்றால் இந்த ஆடுகளைக் கண்காணிக்க பரிசுத்த ஆவியினால் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன். சத்தியம் என்று நான் கருதுகிறதையும், அது வரும் என்று நான் நினைக்கிற விதத்தையும் அவர்களுக்கு நான் கூறவில்லையென்றால், எனக்கு ஐயோ. ஆனால் அது உலகத்திற்காகவோ அல்லது மற்ற சபைகளுக்காகவோ அல்ல. தேவன் உங்களைச் செய்யும்படி கூறுகிற எல்லாவற்றையும் நீங்கள் செய்யுங்கள். உங்களுக்காக என்னால் பதில் கூற முடியாது, எனக்காக உங்களாலும் பதில் கூற முடியாது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஊழியத்திற்காக தேவனுக்கு முன்பாக பதில் கூற வேண்டும். ஆகையால், என்னுடைய ஊழியத்திற்கு நான் பதிலளிக்க வேண்டுமானால், நான் அதைப் பார்க்கும் விதத்தில் அதைப் பிரசங்கிக்க வேண்டும், அது எனக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தில். எனவே அது இப்பொழுது தெரியப்படுத்தப்படட்டும்.

1123 இப்பொழுது எண்ணாகமம் 19:9-ல் நாம் இந்த பாடப்பொருளை அல்லது சரியாகக் கூறினால் இந்த வேதவாக்கியத்தை வாசிக்க விரும்புகிறோம். சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் (இப்பொழுது கவனியுங்கள்) சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்துவைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். 24 கவனியுங்கள், ஒவ்வொருவருக்கும் அல்ல, “இஸ்ரவேல் புத்திரரின் சபைக்கு; தீட்டுக்கழிக்கும் ஜலம்.” இப்பொழுது எபேசியரில், 5-ம் அதிகாரம், 22-ம் வசனத்திலிருந்து துவங்குகிறது. மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, இப்பொழுது இங்கே நான் இப்பொழுது கூற விரும்புகிறேன். தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,

1225 இப்பொழுது, இன்றிரவு இந்த சிறு பாடப் பொருளை, நான் இதை ஒரு பாடப் பொருளாக அழைக்க வேண்டுமானால் நலமாயிருக்கும். இங்குள்ளவர்களும், தொலைபேசி இணைப்புகளில் இருப்பவர்களும், இதை பொருட்படுத்தாமல், அது இழிவான முறையில் கூறப்பட்டுள்ளது என்று எண்ண மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இதைப் போன்ற ஒரு பொருளை எடுத்துக் கொண்டாலும், அது பரிசுத்த குலைச்சலாக தொனிக்கும். இன்றிரவு நான் உபயோகிக்கும் பொருள்: ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி. புகைபிடிப்பதை மிகவும் எதிர்க்கும் ஒரு ஊழியக்காரன், அதைப் போன்ற ஒரு பாடப் பொருளை எடுத்துப் பேசினால், ஒரு பாடப் பொருளுக்காக அது மிகவும் பொருத்தமற்றது போல் தெரிகிறது, ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி: அன்றொரு நாள் காலை நான் அணில் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, அது நிறைவேறினது. 26 ஜனங்களாகிய நீங்கள் வெளியே வானொலியில், ஒலிபரப்பில், அல்லது தொலைபேசி ஒலிபரப்பில் உள்ளவர்கள் நான் என்னுடைய பாடப் பொருளை அறிவித்தபோது, இந்த சபையோர் முகத்தில் இருந்த உணர்ச்சியைக் கண்டிருந்தால், நீங்கள் அதிலிருந்து ஒரு சிரிப்பு சிரித்திருப்பீர்கள். ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி.

1327 சரி, ஒரு நாள் காலையில் கர்த்தருடைய தூதர்கள் எனக்குத் தோன்றிய இடத்தில், இவை எல்லாம் நடந்தது, அந்த அணில்கள் பேசி சிருஷ்டிக்கப்பட்டன. அது எப்போது நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். மேலும், நான் நின்று கொண்டிருந்த மலையின் உச்சியில்…ஏழு சபைக் காலங்களைப் பற்றி பிரசங்கிப்பதற்கு முன்பு, ஒரு நாள் காலை பொழுது விடிவதற்கு முன்பு வேட்டைக்குச் சென்றேன். அங்கே நின்று…சூரியன் உதயமாகிக் கொண்டிருக்கும் என்று நான் நினைத்தேன், அது காலை சுமார் நான்கு மணி இருக்கும். வழக்கத்திற்கு மாறானவை; நான் அந்த ஒளியைக் கண்டேன், நான் சுற்றித் திரும்பினேன், அங்கே ஏழு பொன் குத்துவிளக்குகள் நின்றன அங்கே குன்றின் உச்சியில் நின்றுகொண்டு, ஒரு வானவில்லைப் போன்று குழாய்களினூடாக மேலே பாய்ந்து அளித்துக் கொண்டிருந்தது. 28 அதற்குப் பிறகு உடனடியாக கர்த்தராகிய இயேசு எங்களுக்குத் தோன்றினார். அப்பொழுது நான், “பழைய ஏற்பாட்டின் யேகோவா புதிய ஏற்பாட்டின் இயேசு” என்று உரைத்த ஒரு சத்தத்தைக் கேட்டேன். அந்த ஏழு பொன் குத்துவிளக்குகளுக்குப் பிறகு, சிறிது நேரம் கழித்து அவர் வெளிப்பட்டார். அப்படியானால் அதைக் கவனியுங்கள். எத்தனை பேருக்கு அந்த வசனம் நினைவிருக்கிறது? நான் என்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த தோட்டாக்களைக் கொண்ட ஒரு பெட்டியின் பின்புறத்தில் அதை எழுதினேன். “பழைய ஏற்பாட்டின் கர்த்தர் புதிய ஏற்பாட்டின் இயேசுவாயிருக்கிறார்.” அது உண்மை என்பதை பரலோகத்திலுள்ள தேவன் அறிந்திருக்கிறார்.

1429 அணில்களைக் குறித்து, அவர் எனக்கு தரிசனமான அந்த இடத்தை சிறிது நேரம் கழித்து நான் கடந்தபோது. 30 ஒரு சில மாதங்கள் கழித்து என்னுடைய நல்ல நண்பர் ஜேக் மூரை நான் தொலைபேசியில் அழைத்து கேட்டபோது, வெளிப்படுத்தின விசேஷம் 1-ம் அதிகாரத்தில் நான் ஏழு சபைக் காலங்களைப் பிரசங்கிக்கத் துவங்கிருந்தேன். முழுவதும் வெண்மையான தலைமுடியோடு, அவர் நின்று கொண்டிருந்தார்; அவருடைய சிரசின் மயிர் வெண்பஞ்சைப் போல இருந்தது. அவர் முப்பத்தி மூன்று வயதாயிருந்து, எப்படி அவர் முழுவதும் வெண்மையான தலைமுடியோடு இருக்க முடியும்? சகோதரன் மூர், ஒரு மிக அருமையான, நாகரீகமான, கிறிஸ்தவ பெருந்தன்மையுள்ள, ஒரு மேதை, நான் அறிந்த மிகச் சிறந்தவர்களில் ஒருவர்; மேலும் அவர், “சகோதரன் பிரான்ஹாம், அது அவருடைய மகிமையடைந்த நிலைக்குப் பிறகு இயேசுவாயிருந்தது. அந்தவிதமாகவே இப்பொழுது அவர் காணப்படுகிறார்” என்றார். ஆனால் அது எனக்கு சரியாக தென்படவில்லை. நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன், ஒரு நாள்… 31 ஏழு சபைக் காலங்களை நான் துவங்குவதற்கு முன்பு, அந்த 1-ம் அதிகாரத்தை என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. முப்பத்தி மூன்று வயதுள்ள ஒரு மனிதனாக, அப்போஸ்தலர்கள் அவரை அடையாளங்கண்டு கொண்ட, தெரிந்துகொண்ட உயிர்த்தெழுந்த அதே சரீரத்தில் இருந்தவரை; எப்படி மிக வயதான ஒரு எண்பது அல்லது தொண்ணூறு வயதுடையவராக, தம்முடைய முகத்தின் மேல் வெண் பஞ்சைப் போலவும், அவருடைய தாடி உறைந்த மழையைப் போல வெண்மையாயும் இருக்க முடியும்?

1532 நான் தானியேலின்…புஸ்தகத்தில் படித்திருந்தேன், அங்கே அவர், “நீண்ட ஆயுசுள்ளவரிடத்திற்கு வந்தார், அவருடைய தலைமுடி வெண் பஞ்சைப் போல இருந்தது,.” அப்பொழுது நான் அந்த நீண்ட ஆயுசுள்ளவரை கண்டேன். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத அந்த நீண்ட ஆயுசுள்ளவராயிருந்தார். பாருங்கள், அப்பொழுது அது ஒரு அடையாளமாக இருந்தது. ஏன் வெண் பஞ்சைப் போல இருந்தது? அதன்பின்னர் நான்… ஒரு முறை நான் பார்த்த ஒரு பண்டைய நீதிபதியின் படத்தைப் பற்றி பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசியதாகத் தோன்றியது. அதன்பின்னர் நான் வரலாற்றிற்குச் சென்றேன்; நான் அதைக் கண்டறிய வேதாகம சரித்திரம் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் திரும்பிப் பார்த்தேன். பழைய நியாயாதிபதிகள், இஸ்ரவேலிலிருந்த பிரதான ஆசாரியனைப் போன்றே, அவன் வெள்ளை, நரைத்த ஆட்டு உரோமம் போன்ற முடியையும், தாடியையும் உடையவனாய் இருக்க வேண்டியதாய் இருந்தது, ஏனெனில் அவன் மீது இருந்த வெள்ளை நிறம், அவன் இஸ்ரேலில் நியாயாதிபதிகளின் பிரதான அதிகாரம் பெற்றிருந்தான் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இன்றைக்கும் கூட, சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட, ஒருக்கால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம் அல்லது அதற்கு மேலாக இருக்கலாம். ஆங்கிலேய நீதிபதிகள் யாவரும், அவர்கள் எவ்வளவு வாலிபமாயிருந்தாலும் அல்லது எவ்வளவு வயதானவர்களாயிருந்தாலும், அவர்கள் நியாயத்தீர்ப்புக்காக உள்ளே சென்றபோது, அவர்களுடைய வார்த்தைக்கு மேலான, அந்த இராஜ்ஜியத்தில், வேறெந்த அதிகாரமும் இல்லை என்பதை காண்பிக்கும்படியாகவும், அவர்கள் ஒரு வெள்ளை தலைமுடியை அணிந்திருந்தனர்; அவர்களுடைய வார்த்தையே இராஜ்ஜியத்தின் முடிவானது. அவர்கள் என்ன கூறுகிறார்களோ, அவ்வளவுதான் அது. 33 இப்பொழுது, அப்பொழுது, நான் அதைக் கண்டேன். அவர் அங்கே ஒரு வாலிப மனிதனாக நின்று கொண்டிருந்தார், ஆனால் வெண்மையான தலையங்கியை அணிந்திருந்தார். அவர் முழுமையான, உன்னதமான அதிகாரமுள்ளவராயிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தார். அவர் வெள்ளை தலையங்கியை அணிந்திருந்தார்.

1634 அதன்பின்னர் நாங்கள் பிரசங்கத்தை முடித்துக் கொண்டு, மேற்கு நோக்கிச் சென்றபோது, ஏழு முத்திரைகளுக்காக கர்த்தருடைய தூதர்கள் அங்கே தோன்றியபோது, அது ஆகாயத்தில் உயர்ந்தது (நாங்கள் அதைக் குறித்த புகைப்படத்தை இங்கே வைத்துள்ளோம், நாடு முழுவதிலும்) அவர் அங்கே நின்று கொண்டிருந்தார், அவர் இன்னமும் அந்த உன்னதமான அதிகாரத்தைக் கொண்டவராய் இருந்தார். அவரே சபையின் தலைவராயிருக்கிறார். அவர் சரீரத்தின் தலையாயிருக்கிறார். அவரைப் போன்றவர், எங்குமே இல்லை. “சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. அவர் சகலத்தையும் தமக்கென்று உண்டாக்கினார், உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.” “வானத்திலும் பூமியிலும் அவர் சகல அதிகாரத்தையும் உடையவராயிருக்கிறார்,” எல்லாமே அவருக்கு சொந்தமானது. “தேவத்துவத்தின் பரிபூரணம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.” “வார்த்தை தேவனாயிருந்து, நம்மிடையே வாசம் பண்ணினார்.” அவரே எல்லா தீர்க்கதரிசிகளும், சாஸ்திரிகளும் உரைத்திருந்த இரட்சிப்பின் முழு திட்டத்தின் முழு இரகசியத்தையும் வெளிப்படுத்தினார். அவர் மாத்திரமே அந்த வெள்ளை தலையங்கியை அணிந்த ஒருவரும், உன்னதமான அதிகாரமுமாயிருந்தார்.

1735 இப்பொழுது, நான் அன்றொரு காலையில் மலையின் மேல் நின்றிருந்தபோது, அங்கே சில அணில்கள் இருந்தது போன்று காணப்பட்டது. நான் அமரத் துவங்கினேன். நான் அங்கே ஒரு நிமிடம் இருந்தேன், எனக்கு அருகில் இருந்த புதர்கள் அசைய துவங்கின போது, அப்பொழுது பெரிய உருவம் படைத்த ஒரு நபர் அங்கே இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் புதரின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான், எனக்கு மிகவும் திகில் உண்டானது போல் இருந்தது. நான் வேகமாக சென்று, அமர்ந்து கொண்டேன். நான் அசையவே பயந்தேன், அவன் என்னை சுட்டுவிடுவான் என்று பயந்தேன். புதர்கள் அசைந்து கொண்டிருந்தன, எனவே நான் மிகவும் அமைதியாயிருந்தேன். 36 ஒரு அணில் குன்றின் மேல் ஏறிச் சென்றது, அவன் இரட்டை குழல் துப்பாக்கியால் அதை சுட்டான். அவன் அதைத் தவறிவிட்டான், எனவே அணில் குன்றின் மேல் சென்றது. நான், “இப்பொழுது நான் போய்விடுவேன்; அந்த எல்லா சத்தமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அவன் தன்னுடைய துப்பாக்கியை இறக்கிவிட்டான்” என்று நினைத்தேன். நான் மலையிலிருந்து கீழே இறங்கினேன், அப்பொழுது எனக்கு முன்னால் ஒரு நபர் சுட்டார். அது என்னை இந்தவிதமாக திருப்பினது. நான் மற்றொரு வழியாக செல்ல, ஒரு .22 துப்பாக்கி வெடிக்கச் செய்ய, தோட்டாக்கள் எனக்கு மேலே ரீங்காரமிட்டன. நான், “நான் ஒரு பயங்கரமான இடத்தில் இருக்கிறேன்” என்றேன்.

1837 எனவே நான் திரும்பி ஆற்றண்டை சென்றேன். மேலும் நான், “அவர்கள் சுட்டு முடிக்கும் வரை நான் இங்கே போய் ஒளிந்து கொள்வேன், அதன் பின்னரே நான் வெளியேற முடியும்” என்று எண்ணினேன். நான் அந்த வழியில் சென்று கொண்டிருந்தபோது…என்னுடைய கவனம் என்னுடைய வலது பக்கமாக நோக்கிப் பார்க்கும்படி இழுக்கப்பட்டது. மேலும், நான் அவ்வாறு பார்த்தபோது, அவர்களில் ஒருவன் கீழே வீசியெறிந்த ஒரு வெற்று சிகரெட் பொட்டலம் அங்கே கிடந்தது, அனைத்து ஓட்டத்திலும்…அணில்கள் புதர்கள் வழியாகச் செல்லும் போது. 38 நான் இந்த குறிப்பிட்ட சிகரெட் பெட்டியை எடுத்து, பார்த்து… நான் அதை ஒருபோதும் எடுக்கவில்லை; நான் உங்களுடைய மன்னிப்பை வேண்டுகிறேன். நான் அதை நோக்கிப் பார்த்தேன். நான் அதை எடுக்கவில்லை, ஏனென்றால் நான் அந்த காரியங்களின் வாசனையை துவக்கத்திலேயே விரும்புகிறதில்லை. நான் அங்கே கீழே நோக்கிப் பார்த்தேன், அது ஒரு—ஒரு குறிப்பிட்ட புகையிலை நிறுவனத்தை நான் அழைக்கக் கூடாது என்று நான் யூகிக்கிறேன். ஆனால் நீங்கள் அதை அறிவீர்கள். அது, “ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி மற்றும் ஒரு புகைபிடிக்கும் மனிதனின் சுவை” என்று கூறப்பட்டுள்ளது. நான் அந்த காரியத்தைப் பார்த்தேன், “ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியா?” என்று நான் எண்ணினேன். நான், “அந்த மனிதனால் சிந்திக்க முடிந்தால், அவன் புகைக்கவே மாட்டான். அது எப்படி ‘ஒரு சிந்திக்கிற மனிதனுடைய வடிகட்டியாக இருக்க முடியும்’? சிந்திக்கும் மனிதன் புகைக்கவே மாட்டான்” என்று நினைத்தேன். சரி.

1939 இப்பொழுது, நான், “அது எவ்வளவு வஞ்சிக்கத்தக்கது!” என்று எண்ணினேன். இப்பொழுது, அந்த புகையிலை நிறுவனங்கள் அமெரிக்கர்களுடையதாய் இருக்க வேண்டும். ஓ, நாம் நம்முடைய கொள்கையின்படி ஜீவிப்போமானால், நாம் ஒருவருக்கொருவர் ஒரு உணர்வை உடையவர்களாக இருந்தால் ஒருவருக்கொருவர் உதவி செய்ய உழைப்போம். எவ்வளவு மாய்மாலம்! நான் அந்த நிறுவனத்தின் பெயரை ஒருபோதும் கூறாததன் காரணம், நான் அவர்களைக் குறித்து சில மோசமான காரியங்களைக் கூற வேண்டியதாயுள்ளது. எவரேனும் பணம் சம்பாதிக்க, எவ்வளவு மாய்மாலமாய் இருக்க முடியும்? 40 சிந்திக்கும் மனிதன் புகைக்கவே மாட்டான். ஆனால் எப்படி அமெரிக்க பொதுமக்கள் அதற்காக விழுகின்றனர்; அது அற்புதம் என்று அவர்கள் நினைக்கின்றனர்! 41 இப்பொழுது பாருங்கள், உங்களால் முடியாது, உங்களால் முடியாது…யாரையும், விஞ்ஞானிகளைக் கேட்டால், நீங்கள்…உங்களுக்கு தார் இல்லாமல் புகை இருக்க முடியாது. ஒரு சிறு துளி புகை வந்தாலும், அது தார்தான். நீங்கள் புகையைப் பிடிக்கவில்லையென்றால், நல்லது, நீங்கள் எந்த தார்களையும் எடுப்பதில்லை, நீங்கள் எதையும் பெறுவதில்லை. அவ்வாறில்லையென்றால் நீங்கள் வெறுமென ஒரு குச்சியையே இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் புகையை இழுத்துக் கொண்டால், நீங்கள் புற்று நோயை, நிக்கோடினை இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

2042 நீங்கள் கடந்த வருடம் அல்லது அதற்கு முந்தைய வருடம் என்னுடன் இருந்திருந்தால், அது உலக கண்காட்சியில் இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன், யூல் பிரைனர் மற்றும் அவர்கள் எல்லோருமே அங்கு பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் அந்த சிகரெட்டை எடுத்து, அதை ஏதோ ஒரு பொருளில் போட்டு, அதை ஒரு பளிங்குக்கல்லில் இழுத்து ஊதுவதை நீங்கள் காண்கிறீர்கள். அந்த மருத்துவர் ஒரு துணியை எடுத்து, அங்கே முழுவதும் தேய்த்து உருட்டி, அதிலிருந்த நிகோடின் வெளியே எடுத்து, அதை ஒரு வெள்ளை எலியின் முதுகில் தடவி, அதை ஒரு கூண்டில் அடைத்தனர். ஏழு நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் அதனை வெளியே கொண்டு வந்தனர். ஒரு சிகரெட்டிலிருந்து வெளிவரும் நிகோடின் காரணமாக, அந்த எலியானது புற்று நோயினால் நிறைந்திருந்ததால் அதனால் நடக்க முடியவில்லை. 43 அதன்பின்னர் அவர், “உங்களுக்குத் தெரியும், நீங்கள் அதை ஒரு வடிகட்டி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்” என்றார். அவர், “நீங்கள் ஒரு வடிகட்டியை வைத்திருக்க முடியாது…எந்தவொரு வடிகட்டியும் நிக்கோடினை வெளியேற்றி, புகையை வெளியே எடுக்கிறது,” “ஏனென்றால் உங்களுக்கு புகை இருக்க வேண்டும்…புகையை உண்டாக்க தார் இருக்க வேண்டும், அது புற்று நோயைக் கொடுக்கிறது” என்றார். 44 அதன்பின்னர் அவர் சென்று, அதை தண்ணீரினூடாக இழுத்து, “சில சமயங்களில் நீங்கள் அதை வடிகட்டலாம் என்று நினைக்கிறீர்கள்” என்றார். “ஒவ்வொரு முறையும், நீங்கள் அதை எங்கே இழுத்தாலும் அது ஒரு பொருட்டல்ல” என்றார். மேலும், “அவர்கள், ‘நான் அதை சுவாசிப்பதில்லை’ என்று கூறி, அதை அவர்களுடைய வாயில் போட்டு, அதை வெளியே துப்புகிறார்கள்” என்றார். அதன்பின்னர் அவர் அதை எடுத்து, அதை சுருட்டி, அங்கே ஏதோ ஒன்றின் கீழ் வைத்து, அது இன்னமும் புற்று நோயாகவே இருப்பதைக் காண்பித்தார். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் தொண்டைக்கு கீழே அதை விழுங்குகிறீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் என்ன செய்தாலும், அது இன்னமும் மரணமாயுள்ளது. பார்த்தீர்களா?

2145 அதன்பின்னர் ஒரு நிறுவனம் போதுமான அளவு ஒரு மனிதனை ஏமாற்றலாம் அல்லது தங்களுடைய சொந்த ஜனங்களையே ஏமாற்ற முயற்சிக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அது அவர்களுடைய சொந்த இனத்திலிருந்தே வாழும் ஒரு பருந்து போன்றது. பணம் சம்பாதித்தல், மரணத்தை தேசத்திற்கும், வாலிபர்களுக்கும் விற்றல். போர்க்களத்தில் சென்று அவர்களுக்காக மரித்து, அதன்பின்னர் திரும்பி, அதைப் போன்ற ஒரு காரியத்தை விற்று, “ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, ஆனால் புகைக்கிற மனிதனின் ருசி” என்ற ஒரு போலியான பாசாங்கின் கீழ். அந்த ருசியைப் பெற்றுக்கொள்ள நீங்கள் புகையைப் பெற்றிருக்க வேண்டும். “புகைக்கிற ஒரு மனிதனுடைய ருசி.” 46 ஜனங்கள் அதற்காக எப்படியாய் விழுந்து போகிறார்கள்! அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்பொழுது, அது உங்களை அதிகமாக ஏமாற்றுவதற்காக மாத்திரமே உள்ளது. பாருங்கள், அது பிசாசினால் உண்டானது. அவர்கள் உங்களுடைய உயிருக்காக கவலைப்படுகிறதில்லை. அவர்கள் உங்களுக்காக எந்த உணர்வும் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு பணம் கிடைக்கும் வரை, நீங்கள் மரிப்பதைக் காணும்படியாக அவர்கள் உங்களுக்கு அந்த பொருட்களை விற்கிறார்கள்.

2247 அரசியல், யுத்தம் போன்றவை. எனக்கு யுத்தத்தில் நம்பிக்கையில்லை. நாம் ஒரு யுத்தத்திலும் போரிட்டிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். தேவன் கொண்டு வரும் மகத்தான இராஜ்ஜியத்தில் நான் விசுவாசங்கொண்டிருக்கிறேன், மகத்தான நாகரீகம் அவருடைய சொந்த மகத்தான ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்படும்; அங்கே மற்றொரு யுத்தமே இருக்காது. தேசங்கள் தேசங்களுக்கு எதிராக ஈட்டிகளை உயர்த்தாது. அவர்கள் யாவரும் சமாதானமாய், நித்திய சமாதானமாயிருப்பார்கள். 48 எனவே இந்த விதமான ஒரு நாகரீகம் யுத்தத்தைக் கொண்டு வருகிறது. நாம் அதிகமாக நாகரீகமடைந்து வரும்போது, நமக்கு அதிக யுத்தம் உள்ளது. ஒன்று மற்றவரைக் காட்டிலும் அதிக நாகரீகமாக இருக்க முயற்சிக்கிறது, மேலும் அதிக நாகரீகமானது அதிக யுத்தத்தை உண்டாக்குகிறது. பார்த்தீர்களா? 49 இந்த நாகரீகத்தின் கீழ், ஒரு நபர் அதைப் போன்ற ஒரு காரியத்தை என்ன செய்கிறார் என்பதைப் பாருங்கள். அது செய்கிற ஒரே காரியம், அது உங்களை அதிக சிகரெட்டுகளை வாங்கச் செய்யும்படி உங்களை வஞ்சிக்கிறது. ஒரு மனிதன் சிகரெட்டுகளைப் புகைத்தால்…அது பிசாசினால் உண்டானது என்று நான் விசுவாசிக்கிறேன், ஒரு மனிதனுக்குள்ளும், அல்லது ஒரு பெண்ணிலும் ஒரு நிக்கொடின் பிசாசு உண்டு. ஒரு சிகரெட் அந்த நிக்கோடின் பிசாசை திருப்திப்படுத்துமானால் அவன் உங்களைத் தனியே ஒரு சிகரெட்டோடு, அலைகழிப்பதை விட்டுவிடுவான். அதன்பின்னர் நீங்கள் ஒரு வடிகட்டியை எடுத்து, அந்த புகையின் மூன்றில் ஒரு பாகத்தை உள்ளே இழுக்கச் செய்தால், அல்லது மூன்றில் ஒரு பங்கு நிகோடினை உள்ளே இழுக்கச் செய்தால் அப்பொழுது அந்த மூன்று சிகரெட்டுகள் ஒரு சிகரெட்டுக்கு சமமாகும், நீங்கள் ஒன்றுக்கு மூன்றை புகைப்பீர்கள். 50 பாருங்கள், அது ஒரு—ஒரு திட்டம், ஒரு வஞ்சகம், சிகரெட்டுகளை விற்க முயற்சிக்கும் ஒரு திட்டம். ஒரு மனிதன் தன்னுடைய குழாயை உபயோகித்து அல்லது வடிகட்டும் பொருள் இணைக்கப்படாத சிகரட்டை புகைக்க அவர்கள் அனுமதிப்பதை காட்டிலும் இவ்வழியில் அவர்களால் அதிக சிகரெட்டை விற்க முடியும். இப்பொழுது, பாருங்கள், அது பிசாசினால் உண்டானது.

2351 நான் அங்கே நின்று அதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கையில், அது எவ்வளவு வஞ்சகமாயிருந்தது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்தபோது, அந்த கேள்வி எனக்கு உண்டானது. நான் பின்னால் குனிந்து, அந்த பெட்டியை மீண்டும் நோக்கிப் பார்த்தேன், நான்…ஏதோ என்னிடம் கூறுவது போன்று தென்பட்டது, “ஆனால் முழக்கம் சரியாயுள்ளது, ‘ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, ஒரு புகைபிடிக்கும் மனிதனின் சுவை.’” அந்த வஞ்சகம், இயற்கையான உலகிலும், புகையிலையிலும் கூட, இருப்பது எனக்குத் தோன்றியது, இன்றைய சபைகளின் ஒழுங்கின் பேரிலான ஏதோ ஒரு காரியமாய் உள்ளது, பாருங்கள், ஒரு வஞ்சனை. 52 முழு உலகமும் எது உண்மை, எது சரியானது என்பதைப் பற்றிய ஒரு பெரிய வஞ்சகமாக ஆகிவிட்டது. பாருங்கள், அரசியலிலும், சமுதாய விவகாரங்களிலும், பள்ளியிலும், ஒவ்வொரு காரியத்திலும் கூட, அது ஒரு வஞ்சகமாக மாறுகிறது.

2453 ஒரு வாலிப நபர் அன்றொரு நாள் அவர் ஒரு இராணுவ முகாமில் இருப்பதாக என்னிடம் கூறிக்கொண்டிருந்தான், ஒரு வாலிப இராணுவ வீரன் மேல் பீரங்கி வண்டி ஏறிவிட்டதால்; அவனுடைய நுரையீரல்கள், அவனுடைய வயிறு, அல்லது அதில் ஏதோ நசுங்கிவிட்டிருந்ததாம். அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றனர்; அவர்கள் வரிசையில் மூன்று அல்லது நான்கு மருத்துவர்கள் நின்று கொண்டிருந்தனர், எல்லோரும் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இரண்டு அல்லது மூன்று போர்வீரர்கள் தங்களுடைய நண்பனை மேலே தூக்கிப் பிடித்திருக்க, அவனால் மூச்சுவிட முடியவில்லை… ஒவ்வொரு முறையும் அவன் சுவாசிக்கும் போது, அந்த விலா எலும்பு சரியாக அவனுடைய நுரையீரலில் குத்திகொள்ள, அது அவனுக்கு உட்புறமாக இரத்தம் கசியும். அவர்கள் அந்த வாலிபனை அந்த வரிசையில் நிற்க, வரிசையின் பின்னால் நிற்கவிட்டனர், காது வலி அல்லது ஏதோவொன்றைத் தவிர வேறு எதுவும் இல்லாத சிலரை, அவர்கள் முன்னால் அனுப்பினர். 54 ஏறக்குறைய அவர் அங்கு சென்றபோது, ராணுவ படைத்தலைவர் ஒருவர் சொறி கொண்ட ஒரு சிறு பிள்ளையோடு வந்து, அவருடைய சிறு பையனுக்கு அல்லது பெண்ணுக்கு கரங்களில் சொறி இருந்தது. அவர்கள் அந்த வரிசையை நிறுத்தினர், அந்த ராணுவப்படைத் தலைவனின் பிள்ளையை உள்ளே நிறுத்த, நசுக்கப்பட்டிருந்த அந்த பையன் குத்தப்பட்டு மரித்துக்கொண்டிருந்தான். அங்குதான் காரியம். 55 ஓ, அந்த ராணுவ படைத்தலைவர் பதவியில் அங்கிருந்த அவருடைய சகோதரனுக்கு ஒரு உண்மையான உணர்வு இருந்திருந்தால், அவர், “இந்த சிறுவன் காத்திருக்க முடியும். அந்த மனிதனை இங்கே சீக்கிரமாய் அழைத்து, அவனுக்கு ஏதாவது செய்யுங்கள்!” என்று சொல்லியிருப்பார்.

2556 ஆனால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அதிகாரத்தை காண்பிக்க விரும்புகிறான். இப்பொழுது, அவர்கள் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல; இல்லை, அவர்கள் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. ஆனால் அதைப் போன்ற அநேகர் உண்டு. அப்படிப்பட்டவர்களில் அநேகர் உள்ளனர். ஆனால் அந்த மனிதன், அவருடைய சொந்த சிறு பையனுடைய கையில் சொறி இருந்தது என்பது மாத்திரமே, அவர் நினைத்துக் கொண்டிருந்த ஒரே காரியமாயிருந்தது, ஒரு பீரங்கி வண்டியின் கீழ் நசுங்கி அங்கு நின்று கொண்டிருந்த அந்த பரிதாபமான பையனை குறித்து ஒன்றுமே நினைக்கவில்லை, அதே பீரங்கி வண்டியால், அதே பையன் போர்க்களத்தில் என்றோ ஒரு நாள் தன்னுடைய உயிரைக் காப்பாற்றக் கூடியவனாக இருக்கலாம். பாருங்கள், அவர்கள் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்காமல்; தங்களை குறித்து மாத்திரமே சிந்திக்கிறார்கள். “ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி.” 57 நான் அதை நோக்கிப் பார்த்தேன், நான், “அது இன்றைய ஸ்தாபனங்கள், நமக்குள்ள சபைகளைப் போன்றது” என்று எண்ணினேன். அவைகள் ஒவ்வொன்றும் தங்களுடைய சொந்த வடிகட்டியைக் கொண்டுள்ளன; அவர்கள் தங்களுடைய சொந்த வகை வடிகட்டியை வைத்துள்ளனர். அவர்கள் விரும்புகிறதை உள்ளே வர வைத்து, வரக்கூடாததை உள்ளே அனுமதிக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய சொந்த விதமான ஒரு வடிகட்டியைக் கொண்டு வடிகட்டுகிறார்கள். அங்குள்ள அவிசுவாசிகளை திருப்திபடுத்த அவர்கள் உலகத்தின் பெரும்பகுதியை உள்ளே அனுமதிக்கிறார்கள். அவர்கள் என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், அவர்களிடம் பணம் இருந்தால், அவர்கள் அவர்களை உள்ளே அழைத்துச் செல்வார்கள். அவர்கள் புகழ் வாய்ந்தவர்களாயிருந்தாலும், அவர்கள் என்னவாயிருந்தாலும் கவலைப்படாமல், அவர்கள் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அதைக் குறித்த ஒரு காரியம் உண்டு, நீங்கள் அதைப் போன்ற தேவனுடைய சபைக்குள் பிரவேசிக்க முடியாது; இப்பொழுதுள்ள ஸ்தாபனம் அல்ல, நான் உண்மையான, அசலான தேவனுடைய சபையைக் குறிப்பிடுகிறேன்.

2658 இன்றைய புகையிலை நிறுவனங்களைப் போல, இந்த கூறப்பட்ட சபைகளுக்குள் அல்லது ஸ்தாபனங்களுக்குள் வரும் ஜனங்கள், அவர்கள் ஒரு ரசனையை உடையவர்களாயிருக்கிறார்கள், அந்த ரசனையே உலகத்தின் உன்னதமானதாய் இருக்கிறது. ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்களுடைய சொந்த வடிகட்டியை உடையதாயிருக்கின்றன, அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, “ஆமென்” என்று கூறும் உண்மையான கிறிஸ்தவர்கள் அனைவரையும் அவர்கள் வடிகட்டுகிறார்கள்; அவர்கள் பிரபலமாக இருக்கும் வரையில், தேசத்தில் உள்ள எல்லா குட்டை முடியையுடைய, வர்ணம் பூசிய முகத்தையுடைய யேசபேல்களை இங்கு கொண்டு வருவார்கள். “இன்னார்-மற்றும்-மற்றும் இன்னாராகிய எங்களுடைய…ஒரு திரைப்பட நட்சத்திரம், ஒரு மகத்தான நபர் வருகிறார்.” அந்தவிதமான வடிகட்டியைத்தான் அவர்கள் உபயோகிக்கிறார்கள். “எங்களுடைய ஸ்தாபனம். இன்னார்-மற்றும்-இன்னார், ஜனாதிபதி, அல்லது ராணுவ படைத்தலைவர் அல்லது யாரோ ஒருவர் எங்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்.” அவர்கள் எந்த விதமான வடிகட்டியை உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தீர்களா? அந்த வடிகட்டி, உண்மையாகவே, உலகத்தின், உலக ஜனங்களுக்குரியதாயுள்ளது. 59 ஜனங்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் விரும்புவதை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அப்பொழுது அவர்கள் ஒரு குறிப்பிட்ட விதமான வடிகட்டியை வைத்திருக்க வேண்டும், தங்களுடைய உலகப்பிரகாரமான ரசனையை திருப்திபடுத்தும்படியாக, போதியளவு உலகத்தினூடாக பேசுகின்றனர். “ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, ஒரு புகைபிடிக்கும் மனிதனின் சுவை.” ஒரு மதசம்பந்தமான உலகத்தின் வடிகட்டி, ஒரு உலகப்பிரகாரமான மனிதனுடைய சுவை.

2760 அவர்கள் மதசம்பந்தமானவர்களாயிருக்க விரும்புகிறார்கள். அவர்கள் மதசம்பந்தமானவர்களாயிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஒரு ஆத்துமா உண்டு. 61 நாம் முதலில் இந்த தேசத்திற்கு வந்தபோது, இந்தியர்கள் சூரியனை வழிபடுவதை நீங்கள் கண்டீர்கள், ஏனென்றால் (ஏன்?) அவன் ஒரு மனிதனாயிருக்கிறான். நாம் ஆப்பிரிக்காவின் தூர காடுகளுக்குச் சென்று, பழங்குடியினர் ஏதோ ஒன்றை வழிபடுவதை நாம் காண்கிறோம். ஏன்? அவர்கள் மானிடர்கள், அவர்கள் தொழுது கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். 62 எனவே மானிட வர்க்கம், அவன் எவ்வளவுதான் விழுந்து போனாலும் கவலைப்பட வேண்டியதில்லை, எங்கோ ஏதோ ஒன்று உள்ளது என்பதை அவன் இன்னமும் அறிந்திருக்கிறான். ஆனால் அவன் உலகத்திற்காக அப்பேர்ப்பட்ட ஒரு ருசியை உடையவனாயிருக்கிறான் எனவே அவனால் சரியான வடிகட்டியை எடுத்துக்கொள்ள முடியாது. அவன் சொந்தமாக தயாரித்த வடிகட்டியை வைத்திருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த விதமான வடிகட்டியை தயாரிக்கின்றனர். 63 ஒவ்வொரு சிகரெட் நிறுவனமும், அவர்களால் என்ன செய்ய முடியும் என்று தங்களுடையதைக் குறித்து பெருமையடித்துக் கொள்கின்றன, “ஒரு உண்மையான வடிகட்டி! இதுதான் சிறந்த வடிகட்டி! எல்லாமே முன்னரே!” மற்றும் எல்லாம் அப்படித்தான். மேலும், “ருசி வருகிறது” அல்லது ஏதோ ஒன்று, “முன்னால் இருந்து வருகிறது” என்று கூறப்பட்டது. ஓ, நன்மையின் நிமித்தமாக. “முன்னாலா”? அதன் பின் முனையில் என்ன உள்ளது? அது நிச்சயமாக ஒரு சிந்திக்கும் மனிதனோ அல்லது ஒரு சிந்திக்கும் பெண்ணோ அல்ல. ஆனால் அவர்கள் அதைத்தான் கூறுகின்றனர், வெறுமனே ஜனங்களை வஞ்சிக்கிறார்கள்.

2864 இப்பொழுது நம்முடைய நாளைக் குறித்து, ஜனங்கள் ஒரு ருசி பார்த்துள்ளனர் என்பதை நாம் கண்டறிகிறோம். ஒரு மனிதன் ஏன் ஒரு சிகரெட்டை புகைக்கிறான்? ஒரு சுவையை திருப்திபடுத்தவே. ஒரு பெண் ஒரு சிகரெட்டை எதற்காக புகைக்கிறாள்? ஒரு சுவையை திருப்திபடுத்தவே. 65 அதன்பின்னர் சபையானது, ஒரு மதசம்பந்தமான குழுவைக் கண்டுபிடித்திருந்தால், அவர்கள்…அங்கு ஜனங்களை சேர்க்க, ஜனங்கள் விரும்புகிற ருசியை அளிக்க அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான வடிகட்டி இருக்க வேண்டும். எனவே அவர்கள் விரும்புகிற எந்த ருசியையும் பெறவில்லையென்றால், அவர்கள் சிகரெட்டை விரும்புகிறதில்லை. அவர்கள் மார்க்கத்தில் விரும்புகிற சுவையை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது, அது எவ்வளவு தெளிவாக இருக்க முடியுமோ அவ்வளவு தெளிவாகக் கூறலாம். 66 குட்டையான தலைமுடியோடு, வர்ணம் தீட்டப்பட்ட முகங்களோடு, கவர்ச்சியாக உடை உடுத்தியிருக்கிற ஸ்திரீகள், அவர்கள் அதை விரும்புகின்றனர். அவர்களுக்கு அது பிடிக்கும். 67 நான் இந்தக் காலையிலும், கடந்த ஞாயிறு காலையிலும் பேசினதுபோல, சக்கரத்தின் நடுவில் உள்ள அந்த சக்கரத்தில், அல்லது ஆவியின் உட்புறத்தில் உள்ள அந்த சிறிய உட்புற ஆத்துமா. எப்படியாய் வெளிப்புறத்தில் உள்ள ஆவி, ஆத்துமாவிற்கும் சரீரத்திற்கும் இடையே, பரிசுத்த ஆவியினால் முற்றிலுமாக அபிஷேகம் பண்ணப்பட முடியும். நீங்கள் யாவரும் அதைப் புரிந்து கொண்டீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.]

2968 இப்பொழுது செய்தியின் தொடர்ச்சியோடு அதைப் பின்பற்றுகையில், இந்த உலகத்தின் தேவன், கடைசி நாட்களில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். அந்த வெளிப்புறத்தில், அந்த நடுத்தர வட்டம்… முதல் வட்டம் என்பது மனித புலன்கள் ஆகும். இரண்டாவது வட்டமானது ஆவிக்குரிய புலன்கள்; விருப்பம், சுய விருப்பம், வாஞ்சை போன்றவை. ஆனால் உட்புறமோ ஆத்துமாவாகும்; அந்த ஆத்துமா முன்குறிக்கப்பட்டது. எனவே வெளிப்புற சரீரம் ஆவிக்கு கீழ்ப்படியச் செய்ய அவர்களால் இந்த ஆவியை அபிஷேகிக்க முடியும். “ஆனால் பாவஞ்செய்கிற ஆத்துமாவோ, அந்த ஆத்துமா சாகும்.” அவிசுவாசத்தினால், தேவனுடைய வார்த்தையை புறக்கணிக்கிற ஆத்துமா, அது ஒரு பாகமாயிருக்கிறது, அந்த ஆத்துமா நித்தியமாக…எப்பொழுதும் உடையதாயிருக்கும். 69 நான் ஒரு நித்திய பரலோகத்தில் விசுவாசிப்பது போல, நான் ஒரு நித்திய மரணத்தில் விசுவாசங்கொண்டிருக்கிறேன், ஆனால் ஒரு நித்திய நரகத்தை அல்ல. நித்திய நரகம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. ஜனங்களுக்கு நித்திய மரணம் உண்டு… அவர்களில் அநேகர், மத ரீதியானவர்கள், இன்றைக்கு உலகத்தில், எப்பொழுதுமே மரித்துப் போயிருக்கிறார்கள். 70 குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடியோடும், வர்ணம் தீட்டப்பட்ட முகத்தோடும், “சுகபோகமாய் வாழ்கிற ஸ்திரீயானவள் உயிரோடிருக்கும்போதே மரித்தவளாயிருக்கிறாள்.” வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. பார்த்தீர்களா? பாருங்கள், அவள் பக்தியுள்ளவளாய் இருக்கலாம், ஆனால் அவள் ஒருபோதும் இரட்சிக்கப்படவில்லை. அவள் வெளிப்புறமாக நோக்கிய ஒரு அசைவைப் பெற்றிருக்கிறாள். அவள் பாடும் குழுவில் பாடலாம் அல்லது அவள் ஆவியில் நடனமாடலாம், அவள் அந்நிய பாஷைகளில் பேசும்படியாகவும், ஆவியின் எல்லா வெளிப்படுத்துதல்களையும் பெற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்கலாம். ஆனால் உட்புறத்தில் உள்ள அந்த ஆத்துமா தேவனுடைய குமாரத்தியாயிருந்தாலொழிய, பாருங்கள், அவள் என்ன செய்தாலும், அவள் போய்விட்டாள்.

3071 இஸ்ரவேல் யாவரும் புறம்பே ஆவிக்குரிய பிரகாரமாக, யாவரும் தேவனுடைய நன்மையினால் நிரப்பப்பட்டிருந்தனர், அவர்கள் எப்படி தேவனுக்கு பயபக்தியாயிருந்தனர் என்றும், அதுபோன்று இருந்தபோதிலும் அது கிரியை செய்யவில்லை. அவர்களுடைய உட்புறம் அந்த வார்த்தையையே அடையாளங்கண்டு கொள்ள முடியவில்லை. 72 ஆனால் நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறக்கும்போது, அப்பொழுது நீங்கள் ஒரு…நீங்கள் ஒரு தேவனுடைய குமாரனாயிருக்கிறீர்கள், நீங்கள் எப்பொழுதுமே ஒரு தேவனுடைய குமாரனாயிருந்தீர்கள், நீங்கள் எப்பொழுதுமே ஒரு தேவனுடைய குமாரனாயிருப்பீர்கள். அதைப் பிரிக்க வழியேயில்லை, ஏனென்றால் அது…நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறீர்கள். நித்தியமானது ஒருபோதும் துவங்கவேயில்லை; அது ஒருபோதும் முடிவடையாது.

3173 ஓ, தேவனுடைய கிருபையினால், அவர் நமக்கு அப்பேர்ப்பட்ட மகத்தான இரகசியங்களைக் குறித்த புரிந்துகொள்ளுதலைத் தருவாராக! பவுல் இங்கே பேசியது போல, எபேசியரில் மேலும் கீழே, கணவன் மனைவியைப் பற்றிப் பேசுகையில், ஸ்திரீகள் தங்களுடைய கணவனுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்ற, “இது ஒரு இரகசியமாயிருக்கிறது”. இது முழு வேதாகமத்திலும் கூட, பயபக்தி என்று எப்போதும் பேசப்பட்டது இரண்டாம் இடத்தில் உள்ளது என்று நான் நினைக்கிறேன். மேலும், “ஸ்திரீகள், அவள் தன் கணவனுக்கு பயபக்தியுள்ளதைக் கண்டு, தன் கணவனுக்கு பயப்படுகிறாள்” என்றான். அப்படியானால் ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு முன்பாக அப்பேர்ப்பட்ட ஒரு ஜீவியத்தை ஜீவிக்க வேண்டும், அதாவது அவனுடைய மனைவி அவனை ஒரு தேவனுடைய குமாரனாகக் கருதி பயபக்தியோடு இருக்க முடியும். அவன் அந்தவிதமான வாழ்க்கை வாழவில்லையென்றால், பாருங்கள், அப்படியானால், நிச்சயமாக, அவள் அவனை மதிக்கமாட்டாள், ஏனென்றால் அவன் எதனால் உண்டானவன் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். ஆனால் ஒரு மனிதன் பயபக்தியுள்ள மனிதனாயும், பயபக்தியாயும், சுத்தமான மனிதனாயும், தன்னுடைய மனைவியோடும், தன்னுடைய குடும்பத்தாருக்கு முன்பாகவும், ஒரு உண்மையான தேவனுடைய ஊழியக்காரராக இருந்தால், அப்பொழுது ஸ்திரீகளும், பிள்ளைகளும், மற்றும் யாவரும் அந்த தேவனுடைய ஊழியக்காரனை பயபக்தியோடு மதிக்க வேண்டும்.

3274 இப்பொழுது கவனியுங்கள். ஸ்திரீகளே, அவர்கள் குட்டையாக முடியை வைத்திருக்க விரும்புகின்றனர். அவர்கள் குட்டை கால்சட்டை, வர்ணம் தீட்டி, ஒப்பனை செய்ய விரும்புகிறார்கள். தற்காலத்தில் அவர்கள்—அவர்கள் அணிந்து கொண்டிருக்கிற இந்த சிறிய கோடு போன்ற குளியல் ஆடைகளை, அவர்கள் அதை அணிய விரும்புகின்றனர்; அதே சமயத்தில் அவர்கள் சபைக்குச் செல்ல விரும்புகிறார்கள். நீங்கள் அந்த அபிஷேகத்தை ஆவியின் மேல் காண்கிறீர்கள், ஆத்துமாவின் மேல் அல்ல. பார்த்தீர்களா? 75 அவள் ஒரு கிறிஸ்தவனாயிருக்க விரும்பி, இந்தக் காரியங்களையும் கூட செய்ய விரும்புகிறாள் என்றும், போதகர் அது சரியென்றும் கூறுகிறார். அப்படியானால் பரவாயில்லை என்று அவர் கூறினால், “நீங்கள் ஒரு அங்கத்தினராகலாம்; இங்குள்ள என்னுடைய சபை புத்தகத்தில் உங்களுடைய பெயர் இருக்கலாம்; அது பரவாயில்லை,” அதன்பின்னர் அவர் ஒரு உலகப்பிரகாரமான ஸ்திரீயினுடைய ரசனைக்கு ஏற்றவாறு தன்னுடைய ஸ்தாபன வடிகட்டியை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவள் உலகத்தை நேசிக்கிறாள்; அவள் அதன் சுவையை விரும்புகிறாள். எனவே அவர் அவளுக்காக ஒரு வடிகட்டியை வைத்திருக்கிறார், ஆனால் அவள் சிந்திக்கும் ஒரு பெண்ணிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறாள். ஆனால் அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அங்குதான் இந்த பாடப் பொருளை நான் கண்டேன். 76 இல்லை, அவள் சிந்திக்கிற ஒரு—ஒரு ஸ்திரீ அல்ல. அவள் சிந்தித்துக் கொண்டிருந்தால், சபையானது கடைசி நாளில் அவளை நியாயந்தீர்க்கப் போவதில்லை என்பதை அவள் அறிந்திருப்பாள். சபையானது இப்பொழுது அவளுடைய அங்கத்தினராகி, அவள் சார்ந்திருக்கிற வட்டங்களுக்கும், சங்கங்களுக்கும் அவளுடைய விசுவாசத்தைக் கொண்டும் அவளை நியாயந்தீர்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதைக் கொண்டு இப்பொழுது அவளை நியாயந்தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடைசி நாளில் தேவன் அவளை நியாயந்தீர்க்கப் போகிறார். எனவே அவள் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை.

3377 புகைபிடித்துக் கொண்டிருக்கும் மனிதனைப் போன்றே; அவனுடைய சிந்தனைத் திறன்கள் நிகோடினினால் மரத்துப் போய்விடுமளவிற்கு அவன் சிகரெட்டை மிகவும் விரும்புகிறான். அந்த ஸ்திரீயினுடைய வாஞ்சைகள் கர்த்தருடைய பார்வையில் பொல்லாங்கான காரியங்களை அவள் செய்யுமளவிற்கு, அவளுடைய சிந்திக்கும் திறமைகளை மரத்துப் போகச் செய்துவிட்டன, ஏனென்றால் அவள் அதைச் செய்ய விரும்புகிறாள்; அது ஒரு உலகப்பிரகாரமான ஸ்திரீயின் ரசனையை திருப்திபடுத்துகிறது. எனவே அவள் உலகப்பிரகாரமான சபையின் வடிகட்டியை எடுத்துக் கொள்கிறாள்; அவள் அதனூடாக நன்றாக செல்கிறாள், தொந்தரவு செய்ய ஒன்றுமேயில்லை. நிகழ்ச்சிகள்… 78 இப்பொழுது அது சத்தியம் என்பதை நாம் அங்கே காண்கிறோம். போதகரோ, “அதெல்லாம் சரிதான். அவ்வாறு செய்கிற ஸ்திரீகளை நாங்கள் கண்டனம் செய்வதில்லை. பரவாயில்லை” என்று கூறுகிறார். அதில் போதுமான பாவம் உண்டு; அது அவருடைய வடிகட்டியினூடாக உள்ளது. அவர்கள் ஒரு வேத சாஸ்திர வடிகட்டியினூடாக சென்றனர் என்பதையே இது காண்பிக்கிறது. அவர்கள் ஒரு வேத சாஸ்திர சுவையை உடையவர்களாயிருந்தனர்; அவர்கள் ஒரு வேத சாஸ்திர சுவையை உடையவர்களாயிருந்தனர். ஆனால் அது நிச்சயமாக தேவனுடைய வடிகட்டியினூடாக செல்லவில்லை. இல்லை ஐயா.

3479 இப்பொழுது, வேத சாஸ்திர சிந்தனையாளனுக்கு ஒரு வேத சாஸ்திர வடிகட்டி இருக்குமானால், சபையின் சிந்தனையாளனுக்கு ஒரு சபை வடிகட்டி உள்ளது, சிகரெட் பிடிப்பவனுக்கு ஒரு சிகரெட் வடிகட்டி உள்ளது, உண்மையான சிந்தனையாளர்களுக்கு எங்கோ ஒரு உண்மையான வடிகட்டி இருக்க வேண்டும். தேவன் ஒரு வடிகட்டியை உடையவராயிருக்கிறார், அது அவருடைய வார்த்தையாயுள்ளது. அது ஒரு பிரித்து வேறாக்குபவர், ஏனென்றால் அது பாவத்திற்காக தீட்டுகழிக்கும் ஜலமாய் உள்ளது. இப்பொழுது, அதுதான் சிந்திக்கும் மனிதன் அல்லது பரிசுத்த மனிதனுடைய சுவை. 80 ஒரு மனிதன் இந்தவிதமான உலகத்தின் வடிகட்டியினூடாகச் சென்றால், அவன்—அவன் ஒரு உலகப்பிரகாரமான சுவையை உடையவனாயிருக்கிறான். புகையிலை நிறுவனத்தைப் போல, இந்த வடிகட்டியினூடாக அவர்களை தள்ளிவிடுவதன் மூலம் அவன் தன்னுடைய சபையில் அதிகமான அங்கத்தினர்களை பெற்றுக் கொள்கிறான். அவர்கள், “ஆண்கள் சபைக்குச் செல்வதைக் காட்டிலும் பெண்களே அதிகம்” என்று கூறினால். அது அவ்வாறு இருக்கலாம். இப்பொழுது, அவள் விரும்புகிற எந்தக் காரியத்தையும் அவளால் செய்ய முடியும் என்பதனால், அது மிகவும் உண்மையாயிருக்கலாம். அது உண்மை. அவள் அதைச் செய்வாள், அவள் எந்தக் காரியத்தோடும் சேர்ந்து கொள்வாள், ஆனால் அவள் அந்த சபையின் வடிகட்டியினூடாகச் சென்றாள். அவள் தேவனுடைய வடிகட்டியினூடாகச் சென்றால், அவள் அதிலிருந்து வித்தியாசமாக வெளியே வருவாள். பார்த்தீர்களா? அவளால் தேவனுடைய வடிகட்டி வழியாக சென்று, குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடியோடு வெளியே வரமுடியவில்லை. அவளால் அதைச் செய்ய முடியாது.

3581 இப்பொழுது இது யாருக்காவது ஒரு—ஒரு சிறு கசப்பானதாய் இருக்கப் போகிறது. ஆனால் அவள் தேவனுடைய வடிகட்டியினூடாக பார்க்கத் துவங்கின போது, அவர்கள் தங்களுடைய தலைமுடியைக் கத்தரிக்கக் கூடாது என்று அங்கே கூறுகிறது, அதன்பின்னர் (என்ன?) அவள் மறுபுறம் தங்குகிறாள். ஒரு ஸ்திரீ அப்படிப்பட்ட காரியத்தைச் செய்வது ஒரு பாவம் என்று உரைக்க்கப்பட்டிருக்குமானால், அவள் அப்படிச் செய்வது கனவீனமாயிருக்கிறது. “அவள் வேண்டுமானால்,” அவன், “பாருங்கள், அவள் தன்னுடைய தலைமுடியை கத்தரித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறுகிறான். அப்பொழுது அவன், “அப்படியானால் அதை சிரைத்துவிடுங்கள்” என்றான். மேலும், “ஒரு ஸ்திரீயின் தலையை கத்தரிப்பது ஒரு அவமானம் என்பதை நாம் அறிவோம்” என்றான். “அப்படியானால் அவள் தலையை மூடிக்கொள்ளட்டும்” என்றான். அவளுடைய தலைமுடி அவளுக்கு முக்காடு; பெண்மணியே, ஒரு தொப்பி அல்ல. அவளுடைய தலைமுடிதான் அவளுடைய முக்காடு என்று வேதம் கூறியுள்ளது. சரி. அவள் கர்த்தருக்கு முன்பாக நசரேயனாக இருக்கிறாள் என்பதைக் காண்பிக்கிறது. ஒரு ஸ்திரீக்கு நீண்ட தலைமுடி என்பது கர்த்தருக்கு ஒரு நசரேயனை பொருட்படுத்துகிறது. இப்பொழுது, அது உண்மை என்பதை நாம் கண்டறிகிறோம். 82 ஆனால் உலகில் சிந்திக்கும் மனிதன் என்று அழைக்கப்படுபவன் புகைபிடித்தாலும் தன் ரசனையைப் பெற முடியுமா என்பதைக் காண்கிறோம், அவன் புகையிலையிலிருந்து தார் படிந்து கொண்டிருக்கிறதை அறிந்துகொள்ள போதிய புத்தியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது மாத்திரம், அது செய்திருப்பது என்னவென்றால், அவனுக்கு அதிகமாக விற்று, அவனை அதிக சிகரெட்டுகளை வாங்க வைக்கிறது.

3683 சபை வடிகட்டி அங்கத்தினர்களையும் அதைப் போன்ற காரியங்களையும் பெற்றுக் கொள்கிறது அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்ய அனுமதிக்கும்போது, இன்னும் சபையைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது, அவர்கள் அதிகமான அங்கத்தினர்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். நாம் இன்றிரவு சபைகளுக்குச் சென்று, வார்த்தையில் பிறந்த அசலான கிறிஸ்தவர்களைத் தவிர மற்ற ஒவ்வொருவரையும் வடிகட்டினால் என்னவாகும். இன்றிரவு சுவருக்கு எதிரே ஏராளமான வெற்று பிரசங்கங்கள் இருக்கும், அது உண்மை, ஏனென்றால் அது வடிகட்டியினூடாக சென்றது. 84 என்னுடைய இருதயத்தில் நான் ஒரு வாஞ்சையைப் பெற்றிருந்தால், நான் கூறுவதைக் கேட்கும் ஒவ்வொருவரும் ஒரே காரியத்தை உடையவர்களாயிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், “தேவனே, உம்முடைய வடிகட்டுதலினூடாக என்னை எடுத்துக் கொள்ளும்”. தாவீது, “கர்த்தாவே, என்னை சோதித்தறிந்து, என்னை நிரூபித்து, எனக்குள்ளே பொல்லாங்கு ஏதாகிலும் உண்டாயிருக்கிறதா என்று பார்த்து, அப்பொழுது அதை எடுத்துப்போடும்” என்று கூறினதுபோல, பார்த்தீர்களா? எனக்கு தேவனுடைய வடிகட்டி வேண்டும். உலகம் என்ன செய்தாலும், சபை என்ன வைத்திருக்கிறது என்பதைக் குறித்தும் கவலைப்படாதீர்கள்; இந்நாட்களில் ஒன்றில் நியாயத்தீர்ப்பிற்காக நான் நிற்கப் போகிறேன் என்று சிந்திக்க, சிந்திக்கிற ஒரு மனிதனாயிருக்க விரும்புகிறேன்.

3785 கவனியுங்கள், புகையிலை நிறுவனம் அதிக சிகரெட்டுகளை விற்கவே அதைச் செய்கிறது; சபையானது அதிகமான அங்கத்தினர்களைப் பெற்றுக்கொள்ளவே அதைச் செய்கிறது. குட்டையான தலைமுடியோடு, குட்டை கால் சட்டை அணிந்துள்ள ஒரு ஸ்திரீ தேவனுடைய வடிகட்டியில் அகப்பட்டுக் கொள்வாள். குட்டையான தலைமுடியுடன் அவளால் அதனூடாக செல்ல முடியவில்லை, ஏனென்றால் அவள் அதைச் செய்யக் கூடாது என்று வேதம் கூறியுள்ளது. அவள் அதைச் செய்யும்போது, அவள் தன்னுடைய தலையை கனவீனப்படுத்துகிறாள். நாம் அதை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவள் சபைக்குள்ளாகவே சென்றுவிடுகிறாள், மற்ற எல்லோருமே. நான் சில நேரங்களில் நிற்கிறேன்… 86 யாரையும் இழிவாகக் கருதவில்லை; நான் தனிப்பட்ட முறையில் எந்த நபரைக் குறித்தும் ஒருபோதும் பேசுவதில்லை, ஆனால் அது சபையில் பாவமாயுள்ளது. நீங்கள் அதைக் குறித்து எனக்கு சாட்சி பகருகிறீர்கள். நான், “ திருமதி இன்னார்-மற்றும்-இன்னார் இன்னார்-மற்றும்-இன்னார், அல்லது திரு. இன்னார்-மற்றும்-இன்னார், அல்லது சங்கை இன்னார்-மற்றும்-இன்னார் இன்னார்-மற்றும்-இன்னார்” என்று கூறவில்லை. இல்லை ஐயா. பாவம் பாவமே என்று நான் கூறுகிறேன். அது என்னுடைய குடும்பத்தில் இருக்குமானால், அது எனக்குள்ளாக இருந்தாலும், அது யாராயிருந்தாலும், அது இன்னமும் பாவமாகவே உள்ளது. தனிப்பட்ட நபராக அல்ல, தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக நான் பேசவில்லை. நான் பாவத்திற்கு எதிராக பேசுகிறேன். அது நானாயிருந்தாலும் அல்லது அது யாராயிருந்தாலும், தேவனுடைய வடிகட்டியினூடாக துவங்கினாலும் எனக்குக் கவலையில்லை எந்த பாவமும் உங்களை அங்கேயே தடுத்து நிறுத்தும்.

3887 கவனியுங்கள். ஆனால் குட்டையான தலைமுடியை உடையவளாய், குட்டையான கால் சட்டைகளை அணிய விரும்புகிற ஸ்திரீ, அல்லது வர்ணம் பூச விரும்புகிறவள், அவள் ஒரு பெந்தெகொஸ்தே வடிகட்டியினூடாக பை பழ பணியாரத்தை போல எளிதாகச் மரணத்திற்குள் செல்ல முடியும், அதைப் பற்றி எதுவும் இல்லை. காரணம், அவன்…அவள், “நல்லது, அதில் எந்த தீங்கும் இல்லை” என்று கூறுகிறாள். “நீங்கள் உலகத்திலும் அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், அதற்குக் காரணம் தேவனுடைய அன்பு உங்களுக்குள்ளும் கூட இல்லை.” 88 இந்த ஆவியினூடாக, அப்பொழுது, அவளால் தன்னுடைய ஆத்துமாவிற்குள் இழுக்க முடியும், தேவனுடையதாயில்லாத காரியங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயிருக்கின்றன, அது ஆத்துமாவின் சுவையாயிருந்தால். அது சுவை வழியாக வரலாம்; பார்வை, சுவை …அது சிந்தனையின் மூலமாகவும், தர்க்க அறிவின் மூலமாகவும் வரலாம், “அதில் எந்த தீங்கும் இல்லை. எனக்கு ருசி உண்டு. எனக்கு உணர்வுகள் உண்டு. இதெல்லாம் சரிதான் என்ற ஒரு உணர்வு எனக்கு உண்டு.” அவளுடைய ஆத்துமா அந்த மாதிரியாயிருந்தால், அவளால் அதனூடாக கீழே இறங்கி வந்து, அவளுடைய ஆத்துமாவிற்குள்ளாக சரியாக வரமுடியும். அவள் தேவனுடைய வடிகட்டியினூடாக இழுத்துக் கொண்டிருக்கவில்லை என்பதையே அது காண்பிக்கிறது. ஆனால் அவள் தலைமுடியை குட்டையாக வெட்டி, ஒப்பனை செய்து, குட்டை கால்சட்டை, கால்சட்டை, மனிதனுடையதைப் போன்றே காணப்படுகின்றன, இந்த தளர்கால்சட்டைகள், அவர்கள் அவர்களை என்னவென்று அழைக்கிறார்கள்; அந்தவிதமான காரியங்களைச் சொல்லி, அந்தக் காரியங்களைச் செய்து, உலகத்திற்காக ஜீவித்தால், அவள் நின்றுவிடுவாள்; அவளால் அங்கு செல்ல முடியாது. இல்லை ஐயா. அது அவளை துவக்கத்திலேயே நிறுத்திவிடும்.

3989 கவனியுங்கள், ஒரு மனிதன் அவளுடைய அழகான சிவந்த உதடுகளையும், வர்ணம் தீட்டப்பட்ட முகத்தையும், குட்டைக் கால்சட்டையையும், சிறு கோடு போன்ற குளியல் ஆடையையும், அவளிடம் என்ன இருந்தாலும்; ஒரு உண்மையான சிந்தனையுள்ள மனிதன் அவளை நோக்கிப் பார்க்கமாட்டான். இப்பொழுது, ஒரு சபை அங்கத்தினனாயிருக்கிற ஒரு மனிதன் அவளைப் பார்த்து, அவளைப் பாராட்டுகிறான். ஆனால் அவள் கண்ணுக்கு எப்படிக் காணப்படுகிறாள் என்று எனக்குக் கவலையில்லை, ஒரு சிந்திக்கும் மனிதன் தன் தலையைத் திருப்பிக் கொள்வான். ஏன்? அவன் தேவனுடைய வடிகட்டியினூடாக வந்திருக்கிறான், அவன் அவளை நோக்கிப் பார்ப்பது தன்னுடைய இருதயத்தில் விபச்சாரமாக இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறான். அவள் அழகாக இருக்கிறாள் என்று அவன் நினைக்கவில்லை. “அவள் ஒரு அழகானவள் அல்லவா!” என்று கூறலாம். அது அது அவனுக்கு அவ்வாறு இல்லை. ஒரு சிந்திக்கும் மனிதனுக்கு, அவள் ஒரு அசுத்தமான தோற்றமுடைய, பரிதாபமான யேசபேலைப் போன்று இழிவானவளாய் இருக்கிறாள். ஒரு தேவனுடைய குமாரன் அவளைச் சார்ந்திருக்கிற குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற வெட்கத்தோடு அவளைப் பார்க்கிறான். அது உண்மை. “அது எப்படி என்னுடைய சகோதரியாயிருந்து அந்தவிதமாக நடந்து கொள்ள முடியும்?” 90 பாருங்கள், அவள் ஒரு வடிகட்டியினூடாக இழுத்தாள், அவன் மற்றொரு வடிகட்டியினூடாக வந்தான். அவள் அழகாக இருக்கிறாள் என்று அவன் நினைக்கமாட்டான். அது ஒரு உண்மையான தேவனுடைய மனிதனுக்கு அழகல்ல.

4091 நினைவிருக்கட்டும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வடிகட்டியாக மாறுவதற்கு முன்பு ஒரு முறை, சில நிமிடங்களில் நாம் அதைப் பார்ப்போம், “தேவனுடைய குமாரர் மனுஷகுமாரத்திகளை மிகவும் அழகுள்ளவர்களென்று கண்டு, தங்களுக்கு மனைவிகளாகத் எடுத்துக்கொண்டார்கள்.” தேவன் அதை ஒருபோதும் மன்னிக்கவில்லை. அது மீண்டும் இஸ்ரவேலரின் அணிவகுப்பில் சம்பவித்தது, தேவன் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவேயில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அழிந்து போனார்கள். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி! நான் இங்கே கூட்டத்திலிருந்து வெளியே வந்தபோது, ஒரு இரவு இங்கே சபைக்குப் பின்னால் ஒரு சிறிய ரிக்கி நின்று கொண்டிருந்தான், சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், என்னிடத்தில், “நீங்கள் அதைக் கூறுவதற்கான காரணம், நீங்கள் ஒரு வயோதிக மனிதன்” என்று கூறினான். “அவர்கள் அழகாக இருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்” என்றான். நான், “என்னால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறது” என்றேன். அவனுடைய தோற்றத்திலிருந்தே, அவன் எப்படியிருந்தான் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். நான், “நான் உன்னிடம் ஒன்றைக் கூறட்டும். உனக்கு எத்தனை வயதாகிறது?” என்று கேட்டேன். “சுமார் முப்பது வயது இருக்கும்.” 92 நான், “நான் உன்னைவிட பதினைந்து வயது இளையவனாக இருந்தபோது, நான் அதேக் காரியத்தை நினைத்தேன்” என்றேன். சரி. அது இன்னமும் அசுத்தமாகவே உள்ளது!

4193 சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி! இப்பொழுது கவனியுங்கள், அவனுடைய சிந்தை தேவனுடைய வார்த்தையினூடாக, தேவனுடைய வடிகட்டியினூடாக வடிகட்டப்பட்டிருந்தால், அவன் அவளை நோக்கிப் பார்க்கமாட்டான். அவள் அழகாக இருக்கிறாள் என்று அவன் நினைக்கமாட்டான்; அவள் ஒரு யேசபேல் என்று அவன் நினைப்பான். அந்த சிவந்த உதடுகளுக்குப் பின்னால் அவனைக் கொட்டும் விஷப்பற்கள் இருப்பதாக, அவன் நினைப்பான். வேதம், “அதன் வாசல் பாதாளத்தின் வாசல்களாம்; அடிக்கும்படியாய் கொண்டு போகப்படுகிற காளையைப் போல் ஒரு மனிதன் அதற்குள் பிரவேசிக்கிறான்” என்று கூறப்பட்டுள்ளது. ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி உள்ளது. 94 நீங்கள் எதை வாஞ்சிக்கிறீர்கள்? அந்தவிதமான உடை உடுத்திக் கொண்டு தெருவில் ஒரு பெண் வரும்போது, புருஷராகிய நீங்கள் உங்களுடைய தலையைத் திருப்பி, அந்தவிதமாக சுற்றிப் பார்க்கும்போது, நீங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை உபயோகிக்கவில்லை. ஏனென்றால், நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் விபச்சாரம் செய்கிறீர்கள், ஏனென்றால், “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு ஏற்கனவே விபச்சாரம் செய்தாயிற்று” என்று அந்த வடிகட்டி உரைத்துள்ளது. சிந்திக்கும் மனிதனே, உன்னுடைய தலையைத் திருப்பு. அவளை விட்டு அகன்று போ. அவள் அழகாக இல்லை. அவள் ஒரு சர்ப்பமாயிருக்கிறாள்; அது உண்மை, அந்த ஒன்றைப் போல நெளிகிறாள், அந்த ஒன்றைப் போல நடந்து கொள்கிறாள், அந்த ஒன்றைப்போல கடிக்கிறாள். அவளிடமிருந்து விலகி இருங்கள்.

4295 ஓ, ஆம், தேவனுடைய வார்த்தை சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியாயுள்ளது. எவருமே அதை அறிவர். அந்தவிதமாகத்தான் உங்களுடைய ஆத்துமா தேவனுடைய வார்த்தையினூடாக வடிகட்டப்படுகிறது. அது, நீங்கள் தேவனுக்குள் வரும்போது… ஒரு சிந்திக்கும் மனிதன் தேவனுடைய வடிகட்டியினூடாக வரும்போது, அது அவனுக்கு ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையை அளிக்கிறது. அது உண்மை. நீங்கள் தேவனுடைய வடிகட்டியினூடாக வரும்போது, அப்பொழுது உங்களுடைய சுவை ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையாக இருக்கிறது. அது ஒரு நீதிமானின் சுவையை உண்டாக்குகிறது. அந்த முழக்கம் நிச்சயமாக சரிதான். 96 இப்பொழுது இது எப்படி இஸ்ரவேல் சபைக்கு மாத்திரமே, இஸ்ரவேலில் ஒரு மாதிரியாக செய்யப்பட்டது என்று நாம் கண்டறிகிறோம். அந்தக் காரணத்தினால்தான், இப்பொழுது இதைக் கூறுகிறேன், கூறப்பட்டுள்ள எந்தக் காரியத்தின் பேரிலும் போதகர்கள் இணங்கவில்லையென்றால்; இது என்னுடைய சபைக்கு பிரசங்கிக்கும்படியாக கர்த்தர் எனக்கு கொடுத்திருக்கிறதாயுள்ளது.

4397 யாத்திராகமம் 19-ம் அதிகாரத்தில் கவனியுங்கள், நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது, உங்களுக்கு அதிக நேரம் இருக்கும்போது, நீங்கள் அதை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கவனியுங்கள், இஸ்ரவேலர் பாவம் செய்திருந்தபோது, அவர்கள் முதலில் ஒரு சிகப்புக் கிடாரியை கொண்டு வந்தனர், அதனுடைய கழுத்தில் எந்த ஒரு நுகமும் பிணைக்கப்படாதிருந்தது. அவள் ஒருபோதும் எந்தக் காரியத்தினாலும் பிணைக்கப்படவில்லை என்பதையே அது பொருட்படுத்துகிறது. 98 அது சிவப்பாக இருக்க வேண்டியதாயிருந்தது. சிவப்பு நிறம் பாவநிவிர்த்தி செய்யும் நிறமாயுள்ளது. உங்களுக்குத் தெரியும், நீங்கள் சிகப்பு நிறத்தை எடுத்து, சிகப்பு நிறத்தினூடாக நோக்கிப் பார்த்தால், அது வெள்ளை நிறத்தில் உள்ளது என்பதை அறிவீர்கள். சிவப்பு நிறத்தினூடாக சிவப்பை நோக்கிப் பாருங்கள், அது வெள்ளை நிறமாயுள்ளது. அவர் கர்த்தராகிய இயேசுவின் சிவந்த இரத்தத்தினூடாக நோக்கிப் பார்க்கிறார், நம்முடைய சிவந்த பாவங்கள் பனியைப் போல வெண்மையாகின்றன; சிவப்பு நிறத்தினூடாக சிவப்பு. இஸ்ரவேலின் முழு சபையாராலும், சாயங்கால நேரத்தில் அந்தக் கிடாரி கொல்லப்பட்டது. அப்பொழுது சபையார் யாவரும் பிரவேசிக்க வேண்டிய வாசலின்மேல் அதனுடைய இரத்தத்தின் ஏழு பட்டைகள் போடப்பட்டிருந்தன. ஏழு சபைக் காலங்களுக்கு ஒரு மாதிரியாயிருக்கிறது.

4499 அதன்பின்னர் அதனுடைய சரீரம் எடுத்து எரிக்கப்பட்டது. அது குளம்பினாலும், தோலினாலும், குடலினாலும், சாணத்தினாலும் எரிக்கப்பட்டது. எல்லாமே ஒன்று சேர்ந்து எரிக்கப்பட்டன. அது ஒரு சுத்தமான மனிதனால் எடுக்கப்பட வேண்டியதாயிருந்தது, சபைக்கு வெளியே ஒரு சுத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆகையால், இஸ்ரவேலர் அந்த மாதிரியை மாத்திரம் காண முடிந்தால் நலமாயிருக்குமே! இந்தத் தேவனுடைய வார்த்தையானது அவிசுவாசத்தின் அழுக்கான கரங்களால் கையாளப்படக் கூடாது. அது ஒரு சுத்தமான மனிதனாயிருக்க வேண்டும். அவன் சுத்தமாக இருந்தால், அவன் தேவனுடைய வடிகட்டியினூடாக வந்தாக வேண்டும். ஒரு சுத்தமான மனிதன், சுத்தமான கரங்கள், ஒரு சுத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டியதாயிருந்தது; யேசபேல்களும், ரிக்கிகளும் மற்றும் யாவரும் பங்குபெறும் ஒரு இடத்தில் அல்ல; இராபோஜனம் எடுத்துக் கொண்டு, மற்ற காரியங்களையும் செய்து, மனைவிகளும், கணவன்மார்களும் உண்மையில்லாமல் சுற்றிக்கொண்டு, எல்லாவிதமான அசுத்தங்களோடும்; நடனங்களுக்கும், விருந்துகளுக்கும் சென்று, தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டும், குட்டை கால் சட்டைகளை அணிந்து கொண்டும், தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அது ஒரு சுத்தமான இடத்தில் வைக்கப்பட்டு, சுத்தமான கைகளால் கையாளப்பட வேண்டும். 100 அதன்பின்னர் இஸ்ரவேலர் பாவம் செய்து, தாங்கள் தவறு செய்ததை அடையாளங் கண்டு கொண்டபோது, அதன்பின்னர் இந்த கிடாரியின் சாம்பலை, அவர்கள் மேல் தெளித்தனர். அது தீட்டுக் கழிக்கும் ஜலமாய், பாவத்திற்கான ஒரு சுத்திகரிப்பாய் இருந்தது.

45101 கவனியுங்கள். இதோ அது உள்ளது! இஸ்ரவேலர், அவர்கள் ஆராதனையில் ஐக்கியத்திற்குள் வருவதற்கு முன்பு, அவர்கள் முதலில் தீட்டு கழிக்கும் ஜலத்தினூடாக கடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. “விசுவாசத்தினால் நீதிமானாகுதல்; கேட்பதன் மூலம், தேவனுடைய வார்த்தையை கேட்பதன் மூலம் வருகிறது.” அப்பொழுது அவர்களுடைய பாவத்தினிமித்தம் ஏதோ ஒன்று மரித்து, அவர்களுக்கு முன்பாக சென்றது என்பதை காண்பிக்கும்படியாக, அவர்கள் ஏழு பட்டைகளைக்கொண்ட, இரத்தத்தின் கீழ் சபைக்குள் பிரவேசித்தனர். அவர்கள் வார்த்தையைக் கேட்டதன் மூலம் வேறுபிரிக்கப்பட்டனர், தீட்டு கழிக்கும் ஜலம், அதன்பின்னர் ஐக்கியத்திற்குள் பிரவேசித்தனர். 102 தேவன் ஒரு மனிதனை சந்தித்த ஒரே இடம் அந்த ஒழுங்குமுறைக்கு பின்னால் இருந்தது. அவர் அவனை வேறு எங்கும் சந்திக்கமாட்டார். அவர் அந்த கட்டளைக்கு பின்னால் வர வேண்டியதாயிருந்தது. தேவன் இஸ்ரவேலரை ஒரு இடத்தில் மாத்திரமே சந்தித்தார். இன்றைக்கு தேவன் உங்களை ஓரிடத்தில் மாத்திரமே சந்திக்கிறார், அது இயேசு கிறிஸ்துவுக்குள்; அவரே வார்த்தையாய், தீட்டு கழிக்கும் ஜலமாயிருக்கிறார். அவருடைய இரத்தம் ஏழு சபைக் காலங்களுக்காக சிந்தப்பட்டது. அதன்பின்னர், பரிசுத்த ஆவியினாலே, நாம் அந்த ஐக்கியத்திற்குள் பிரவேசிக்கிறோம், அது சபைக்கு மாத்திரமே அளிக்கப்படுகிறது. ஓ, அவர் எவ்வளவு மகத்தானவர்!

46103 மேலும், இப்பொழுது, நாம் எபேசியர் 5:26-ஐ பார்க்க விரும்புகிறோம், “அது வார்த்தையினால் தண்ணீர் கழுவப்படுதலாயுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. தீட்டுக் கழிக்கும் ஜலம். அது என்ன செய்கிறது? அப்படியானால் தேவனுடைய வடிகட்டி வார்த்தையாகும். தீட்டு கழிக்கும் ஜலம், “வார்த்தையினால், தண்ணீர் முழுக்கினால், தீட்டு கழித்தல்,” தேவனுடைய வடிகட்டி. 104 அப்படியானால், நீங்கள் ஒரு சபை வடிகட்டியினூடாக கிறிஸ்துவுக்குள் வர முடியாது. நீங்கள் ஒரு ஸ்தாபன வடிகட்டியினாலோ அல்லது ஒரு கோட்பாட்டு வடிகட்டியினாலோ வர முடியாது. அந்த பரிசுத்த ஸ்தலத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க, ஒரே ஒரு வடிகட்டி மாத்திரமே உண்டு, அது “வார்த்தையினால் தண்ணீர் கழுவுதலின்” மூலமாகும். தேவனுடைய வார்த்தை ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியாயுள்ளது.

47105 நீங்கள் ஒரு நல்ல அங்கத்தினரா அல்லது இல்லையா என்று இங்கே சபை உங்களை நியாயந்தீர்க்கும். அவர்கள் உங்களுக்கு ஒரு நல்ல அடக்க ஆராதனையை நடத்தி, உங்களுடைய மரணத்தின்போது கொடி அரை கம்பத்தில் பறக்கவிட்டு, மகத்தான மலர் மாலைகளை அனுப்பி, உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் உங்களுடைய ஆத்துமா தேவனை எதிர் நோக்கியபடி வரும்போது, அது நித்திய ஜீவனை உடையதாயிருக்க வேண்டும். அது ஒரு நித்திய ஜீவனாயிருந்தால், அது வார்த்தையின் ஒரு பாகமாயுள்ளது. என்னுடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியாததுபோல… என்னுடைய சொந்த கரமானது என் கரத்தை மறுதலிக்க முடியாது. என் சொந்தக் கண்கள் என் கையையோ, என் பாதத்தையோ, என் பெருவிரலையோ அல்லது என்னுடைய எந்த பாகத்தையோ மறுதலிக்க முடியாது. அவைகளால் அதை மறுக்க முடியாது. தேவனுடைய வார்த்தையின் பாகமாயிருக்கிற ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ தேவனுடைய வார்த்தையின் ஒரு பாகத்தையும் மறுக்க முடியாது. அப்படியானால் ஸ்திரீகளே, நீங்கள் தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டு தேவனுடைய சமுகத்தில் வரலாம் என்று நீங்கள் நினைக்கும்போது, நீங்கள் தவறாக இருக்கிறீர்கள். உங்களுக்கு அது புரிகிறதா? நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்; நீங்கள் தேவனுடைய வடிகட்டியினூடாக வர முடியாது, அங்கு நீங்கள் வார்த்தையின் தண்ணீரினால் கழுவப்படுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் ஐக்கியத்திற்குள் பிரவேசிக்கிறீர்கள். நீங்கள் அப்படித்தான் என்று நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் வார்த்தையினூடாக, ஒவ்வொரு சிறிய இடத்தினூடாகவும், ஒவ்வொரு சிறிய தேவனுடைய வார்த்தையினூடாகவும் வரும் வரையில் உங்களால் ஐக்கியத்திற்குள் இருக்க முடியாது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” அது அந்த வடிகட்டுதலினூடாக வரவேண்டும். அது ஒரு நீதிமானின் ருசியை அளிக்கிறது, ஏனென்றால் அதைத்தான் அவன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறான், அவனை சுத்திகரிக்க ஏதோ ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறான்.

48106 வார்த்தை, தேவனுடைய வார்த்தை ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, அது ஒரு நீதிமானின் ருசியை உண்டுபண்ணுகிறது. அது உண்மை என்பதை நாம் அறிவோம்; அவிசுவாசத்தின் பாவம் யாவையும் வடிகட்டுகிறது. நீங்கள் வடிகட்டியினூடாக வரும்போது, இனிமேல் அவிசுவாசமே இருக்காது, ஏனென்றால் அது ஒரு உண்மையான விசுவாசியின் சுவை. 107 உண்மையான விசுவாசி அதைப் பொருட்படுத்தாமல் சரியாக இருக்க விரும்புகிறான். அவன், “நல்லது, நான் சமூக நிலைகளை சேர்ந்தவன். நான் சபையைச் சேர்ந்தவன், நகரத்திலேயே மிகப் பெரிய சபை” என்று கூற விரும்பவில்லை. அது மூலையில் உள்ள ஒரு ஊழியமாயிருந்தாலும், அது ஒரு சாதாரண பந்தலாயிருந்தாலும், எங்காவது இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஒரு சிந்திக்கும் மனிதன் தான் தேவனை சந்திக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறான். சபை என்ன கூறினாலும் அல்லது வேறு எவரும் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், அவன் தேவனுடைய நிபந்தனைகளின் பேரில் வர வேண்டும். தேவனுடைய விதிமுறைகள் தேவனுடைய வார்த்தையாயிருக்கின்றன. “நல்லது,” அவர்கள், “‘தேவனுடைய வார்த்தை’” என்கின்றனர். நிச்சயமாக, அவர்கள் எல்லோருமே அது தேவனுடைய வார்த்தை என்று விசுவாசிக்கின்றனர், ஆனால் உங்களால் அதை வடிகட்ட முடியுமா? அங்கே ஒரு குட்டை முடியையுடைய பெண்ணை எப்படி நீங்கள் வர அனுமதிக்கப் போகிறீர்கள்? நீங்கள் அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? இந்த உபதேசத்திற்காக நிலைத்து நிற்காத ஒரு மனிதனை நீங்கள் எப்படி அனுமதிக்கப் போகிறீர்கள்? பார்த்தீர்களா? அது ஒரு சிந்திக்கும் மனிதனின் ரசனையல்ல. இல்லை. ஒரு சிந்திக்கும் மனிதன் சிந்திப்பான், சிந்திக்கும் ஒரு மனிதன் அதைப் போன்ற ஒரு காரியத்திற்குள்ளாக அவன் குதிப்பதற்கு முன்பு இருமுறை சிந்தித்துப் பார்ப்பான்.

49108 கவனியுங்கள், அந்த வார்த்தை தன்னை மறுதலிக்க முடியாது. அப்பொழுது அது திருப்தியடைகிறது அல்லது அது வாஞ்சையாயுள்ளது. அது என்ன ஒரு வாஞ்சையாயுள்ளது? முதலிலேயே, உங்களை அதற்கு வாஞ்சிக்கச் செய்தது எது? ஏனென்றால் உங்களுடைய ஆத்துமாவில் ஒரு முன்குறிக்கப்பட்ட வித்து நித்திய ஜீவனாயிருந்தது, எப்பொழுதும் அங்கேயே கிடக்கிறது, எப்பொழுதும் அங்கேயே இருந்தது. “பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அவர்களில் ஒருவரும் இழக்கப்படப் போவதில்லை.” 109 ஒரு சிந்திக்கும் மனிதனின் சுவை, ஒரு சிந்திக்கும் மனிதன் தேவனுடைய வார்த்தையை கேட்கும்போது, “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கின்றன, அவைகள் அந்நியனைப் பின்தொடராது,” ஏனென்றால் அங்கே ஜீவன் இருக்கிறது, ஜீவனானது ஜீவனோடு இணைகிறது. பாவம் பாவத்தோடு இணைகிறது, பாவமானது இரட்சிக்கப்படாதபோது, தான் இரட்சிக்கப்பட்டதாக நினைக்குமளவிற்கு அது மிகவும் மாய்மாலமானது. அது மாய்மாலத்தின் மிக ஆழத்தில் உள்ளது. 110 சபை அங்கத்தினர்கள் தங்களுடைய சொந்த வாஞ்சையை உடையவர்களாயிருக்க ஒரு ஸ்தாபன வடிகட்டியையே விரும்புகின்றனர் அதே சமயத்தில் “மத” வகுப்பினராகவே இருக்கிறார்கள். அவர்கள், “ஓ, அவன் மிகவும் பக்தியுள்ளவன்” என்று கூறுவதை நீங்கள் கேட்கிறீர்கள்.

50111 ஒரு நாள், ஆப்பிரிக்காவில் இருந்தபோது, அவர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர், எல்விஸ் பிரெஸ்லி பாடின இந்த ராக் அண்ட் ரோல் பாடல்களைக் குறித்து சில சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தனர், பேட் பூன் மற்றும் இன்னும் யாராக இருந்தாலும், ரிக்கி நெல்சன் மற்றும் அவர்கள் எல்லோருமே. நான், “அவர்கள் ஒரு கூட்ட துரோகிகள்” என்றேன். ஒரு சிறு பெண், “ஏன், அவன் மிகவும் பக்தியுள்ளவன்” என்றாள். 112 நான், “யூதாஸும் அவ்வாறேயிருந்தான்” என்றேன். நான், “யூதாஸுக்கு முப்பது வெள்ளிக் காசுகள் மாத்திரமே கிடைத்தன; எல்விஸ் பிரெஸ்லி பல இலட்சம் டாலர்களைப் பெற்றுள்ளான்” என்றேன். பார்த்தீர்களா? “அவர்கள் இருவரும் தங்கள் பிறப்புரிமையை விற்றுப்போட்டனர்.” பார்த்தீர்களா? நான், “அவைகள்…இந்த தேசம் பெற்றுள்ள மிக மோசமான கடன்” என்றேன். இருப்பினும், சிகரெட்டின் வடிகட்டியைப் போலவே ஏமாற்றும் இந்த ஸ்தாபனங்களும் அந்த உறுப்பினர்களை உள்ளே வர அனுமதிக்கின்றன. அவர்கள் இருக்கக் கூடாது…அவர்கள் மதசம்பந்தமான பாடல்களைப் பாடக் கூடாது என்று ஒரு சட்டம் இருக்க வேண்டும். இது எதிரானது…அவர்கள் அதைச் செய்வது நியாயப்பிரமாணத்திற்கு முரணானதாக இருக்க வேண்டும். ஆனால் முழு காரியமும் ஒரு பெரிய மாய்மாலக் குவியலாக மாறியுள்ளது, இன்றைக்கு அவர்கள் அங்கேதான் தங்கியுள்ளனர். உண்மையான வடி… [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] உண்மையான ஆத்துமா, “நீங்கள் உலகத்திலும் உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் இல்லை” என்று கூறுகிறது.

51113 பாருங்கள், நீங்கள் ராக் அண்ட் ரோல் உலகத்திலிருந்து…இல்லை தேவனால் உண்டானது என்று கூற முடியாது. ராக் அண்ட் ரோல் உலகத்திற்குரியது. அந்த நடனங்கள் மற்றும் வடிகட்டிய…மோசமான அசுத்தமான காரியங்கள், சரியாகக் கூறினால், அது உலகத்திற்குரியதாயிருக்கிறது. அது முழு உலகத்திற்குரியதாயுள்ளது. ஒரு பெண் முடியை குட்டையாக வெட்டிக் கொள்வது தேவனால் உண்டானது என்று நீங்கள் கூற முடியாது. வேதம் அது அல்ல என்று கூறுகிறது, எனவே அது உலகத்தின் அசுத்தமாயுள்ளது. நீங்கள் உலகத்தின் ஒரு துளியை நேசித்தாலும், தேவனுடைய அன்பு உங்களிடத்தில் கூட இல்லை. பார்த்தீர்களா? 114 அது என்ன? சரி, அதை இழுத்துக் கொண்டிருப்பது எது? அது உட்புறத்தில் இழுத்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு காரியமாய் உள்ளது. ஆத்துமா உங்களுடைய ஆதாரத்தை வெளிப்புறத்தினூடாக, கீழே ஆவியினூடாக, ஆத்துமாவிற்குள்ளாக இழுத்துக் கொண்டிருக்கிறது. ஆத்துமா உலகத்தை நேசித்தால், அது மரித்ததாயுள்ளது. அது எப்படி அபிஷேகம் செய்யப்பட்டாலும், அது இங்கே இருக்கிறது, அது இங்கே எவ்வளவு நீதியானது என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை; இங்கே அது இறந்துவிட்டது. “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூருகிறவனுக்கு தேவனுடைய அன்பு இல்லை.” எவ்வளவுதான் பக்தியுள்ளவர்களாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. 115 உண்மையான வடிகட்டி, அந்தவிதமாக, அந்த காரியங்கள் எல்லாவற்றையும் சரியாக அமைக்கும் உண்மையாயுள்ள உண்மையான ஆத்துமாவுக்குள் தேவனுடைய சத்தியத்தை, வார்த்தையைத் தவிர வேறொன்றையும் கொண்டுவராது.

52116 அவர்கள் ஏசாவைப் போன்று காணப்படுகின்றனர். ஏசா வெளிப்புறத்தில் பக்தியுள்ளவனாயிருந்தான். அது மார்க்கம் என்று வரும்போது, அது யாக்கோபைக் காட்டிலும் அதிக பக்தியுள்ளதாய் தென்பட்டது. அவன் யாக்கோபைக் காட்டிலும் ஒரு மேலான மனிதனாகத் தென்பட்டான், ஆனால் அவனுடைய உட்புறத்தில், அவன் என்னவாயிருந்தான். அவன் புறம்பே பக்தியுள்ளவனாயிருந்தான், ஆனால் அவனுடைய சிந்தனை வடிகட்டப்படவில்லை. அவன் பிறப்புரிமையைக் குறித்து சரியாக நினைக்கவில்லை. அவன்—அவன் தேவன், அது சேஷ்டபுத்திர பாகம் என்று தேவன் கூறுமளவிற்கு அர்த்தமுள்ளதாயிருந்தது என்று நினைக்கவில்லை. அப்பொழுது அவன், “நான் பசியாயிருக்கிறேன், அந்த பழைய சேஷ்டபுத்திர பாகம் என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நீங்கள் விரும்பினால், நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றான். ஓ, என்னே! பார்த்தீர்களா? “நான் சபைக்குச் செல்கிறேன்; நான் உங்களைப் போலவே நல்லவன். என்னுடைய ஸ்தாபனம்…ஏன், அது உலகத்திலேயே மிகப்பெரிய ஸ்தாபனங்களில் ஒன்றாகும். என்னுடைய தாயார் அதைச் சேர்ந்தவர். என்னுடைய தகப்பனார் அதைச் சேர்ந்தவர். இது, அது, மற்றவை. என்னுடைய போதகர் படித்தவர்; அவர் இன்ன-இன்னதை உடையவனாயிருக்கிறார்.” அது அவரை தேவனிடத்திலிருந்து அதிக தூரமாக வைக்கிறது. அது சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி அல்ல. அப்படி நடந்தால், ஆனால் பேதுரு சொந்தமாக கையெழுத்து போட முடியாதபோது, அவன் எப்படி இருந்தவனாக இருக்க முடியும்? ஆனால் அவன் சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை எடுத்துக்கொண்டான். கவனியுங்கள். ஓ, என்னே!

53117 அந்த சேஷ்டபுத்திர பாகம், தேவன் கூறினதை அது பொருட்படுத்தவில்லை என்று ஏசா எண்ணினான். அதுவே ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசமாயிருந்தது. எனவே ஏவாளைப் போலவும், யூதாஸைப் போலவும் தங்களுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டனர் நாகரீகத்தின் அறிவின் ருசியின் திருப்திக்காகவே. ஏவாள் தன்னுடைய சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்டாள். அவள் அதை ஒரு சிறு விஞ்ஞான ருசிக்காகவும், உலகப்பிரகாரமான அறிவின் ஒரு சிறு ருசிக்காகவும், ஒரு சிறிய மேலான சபைக்காக, சற்று மேம்பட்ட வகுப்பான ஜனங்களுக்காக, இன்றைக்கு அது அவ்வாறு அழைக்கப்படும். பார்த்தீர்களா? யூதாஸ் தன்னுடைய சேஷ டபுத்திர பாகத்தை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்று, ஒரு சில டாலர்களை கூடுதலாக சம்பாதித்தான். “என்னுடைய சபையோர் எனக்கு இங்கே அதிக சம்பளம் கொடுக்க முடியும், நான் இங்கே பிரசங்கிப்பேன்.” பார்த்தீர்களா? “எனவே, நான் ஒரு பிரசங்கியாக மாறினால்…”

54118 அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம், செய்தியானது சத்தியம் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், ஆனால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஏற்றுக்கொண்டால், ஏன், நாங்கள் எங்கே பிரசங்கிப்போம்?” என்றனர். ஹூ! உலகம், சகோதரனே, அதுதான் திருச்சபை. நிச்சயமாக. “சரி, சகோதரர்கள் யாரும் எனக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்.” நான்—எனக்கு ஆதரவாக எந்த சகோதரர்களையும் நான் தேடவில்லை. இயேசு கிறிஸ்து எனக்கு ஆதரவளிக்க நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அவர் அதை ஆதரிப்பார். அவர் ஒருவரே அதைக் கூறினார். 119 உண்மையான பிறப்புரிமை, வார்த்தையினால் வடிகட்டப்பட்ட இரத்தம்; எல்லா பாவங்களையும், உலகத்தையும், சபையையும், ஸ்தாபனங்களையும், பிரிவினையும் வெளியே விடப்படுகின்றன. கல்வி, நாகரீகம், சபை, ஸ்தாபனம், முறைமை, ஒரு சிந்திக்கும் மனிதன் தேவனுடைய மதிப்பீட்டின்படி, ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை எடுத்துக் கொள்ளும்போது, எல்லா விதமான பாவமும் வெளியே விடப்படுகிறது. 120 ஒரு மனிதன் தன்னுடைய—தன்னுடைய ஜீவியத்தை ஒரு தேவனுடைய வடிகட்டியினூடாக எடுத்துக் கொள்ளும்போது, அதில் ஒன்றுமே விடப்பட்டிருக்காது; கவனியுங்கள், இங்கே உங்களுடைய ஜீவியம் முழுவதும் பாவத்தினால் குழப்பமடைந்திருந்தது, ஏனென்றால் நீங்கள் “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, உலகத்திற்கு வந்து பொய் பேசுகிறவர்களாய்” இருந்தீர்கள். சகோதரன் மெக்கல்லோ வழக்கமாக கூறுவதுபோல, நான் ஒன்றைக் கூறப்போகிறேன். எனக்கு செவிகொடுங்கள்.

55121 நீங்கள் இவ்வுலகில் வந்தபோது, நீங்கள் பாவத்தில் பிறந்தீர்கள். நீங்கள் மிகச் சிறிய வாய்ப்போடு கூட வரவில்லை. நீங்கள் “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவராய் உலகத்திற்கு வந்து,” உங்களுடைய சொந்த ஆவிக்குள்ளாக, பாவத்தின் வாஞ்சையோடு, பாவத்தை நேசிக்கும் ஒருவராய் இருந்தீர்கள், ஏனென்றால் நீங்கள் பாவத்தில் பிறந்திருந்தீர்கள். உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உங்களுடைய உட்புறத்தில், எங்கோ, இங்கே நீங்கள் வருகிறீர்கள், அங்கே உள்ளே ஏதோ ஒன்று இழுக்கத் துவங்கியது. நீங்கள் அறிந்திருந்தால், அது எங்கோ ஒரு தேவன் இருக்கிறார் என்று உங்களிடம் கூறியுள்ள ஏதோ ஒரு காரியமாயிருந்தது; நீங்கள் அவருடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள். அதன்பின்னர் நீங்கள் சபையை எடுத்துக் கொண்டீர்கள், உங்களுக்கு சிறப்பாக கூறப்பட்டபோது, நீங்கள் அவர்களுடைய கருத்துக்களை எடுத்துக் கொண்டீர்கள், அதன்பின்னர் நீங்கள் சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை ஒருபோதும் உபயோகிக்கவில்லை. ஆனால் நீங்கள் தேவனுடைய வடிகட்டியை உபயோகிக்கும்போது, அது சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியாய் உள்ளது, ஏனென்றால், “மற்ற எல்லா வடிகட்டிகளும் ஒழிந்துபோம், ஆனால் என்னுடையவைகளோ ஒழிந்துபோகாது.” நீங்கள் தேவனுடைய வடிகட்டியை எடுத்து, உங்களுடைய ஜீவியத்தை, உங்களுடைய வாஞ்சைகளை இழுத்துக் கொள்ளும்போது; நீங்கள் உங்களுடைய வாஞ்சைகளை தேவனுடைய வடிகட்டியினூடாக, ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியினூடாக பெற்றுக்கொண்டால், பரிசுத்த ஆவியைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்காது. 122 இப்பொழுது, பரிசுத்த ஆவியின் அத்தாட்சி உங்களுக்கு வேண்டுமானால், அது இங்குள்ளது. உங்களுடைய ஆத்துமா ஒவ்வொரு வகையிலும் தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப் போகும்போது, சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி, தேவனுடைய வடிகட்டியினூடாக நீங்கள் உங்களுடைய ஜீவியத்தை பெற்றிருக்கிறீர்கள் என்பதையே அது காண்பிக்கிறது.

56123 கவனியுங்கள், அது தேவனுடைய வடிகட்டியா? அவர், “நாம் வார்த்தையின் தண்ணீரினால் கழுவப்பட்டோம்” என்றார். ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரு வடிகட்டியை அளித்தபோது, அவர், “ இதில் ஒன்றையும் அங்கே உள்ளே இழுக்க வேண்டாம்” என்றார். ஆனால் சாத்தானோ அதற்குள் ஒரு துளையிட்டு, “ஓ, அது சிறிதளவு தான், அது புண்படுத்தாது” என்றான். ஒரு துளி மாத்திரமே, மரணத்தை மானிட வர்க்கத்திற்குள்ளாக அது போதுமானதாக இருந்தது. 124 அவ்வளவுதான், நிக்கோடினை ஒரு முறை ருசித்தால், அப்பொழுது அவர்கள் போய்விடுவார்கள். 125 பரிசுத்த ஆவியைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. 126 அப்பொழுது அது உங்களுக்குள்ளாக முன்குறிக்கப்பட்ட வித்து இருந்தது என்பதையே அது காண்பிக்கிறது, அதுவே உங்களை தேவனுக்காக பசிக்கொள்ள செய்கிறது. “பிதாவானவர் எனக்குக் கொடுத்த யாவையும், மீட்கும்படி எனக்குக் கொடுத்திருக்கிறார்; அவர்கள் என்னோடு கல்வாரியிலே மரித்தார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலில் என்னோடு உயிரோடெழுந்தனர்; அவர் எனக்கு கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அவர்கள் சரீரத்தில் பொருத்தப்படுவார்கள், அங்கே கால், கை, மூக்கு, வாய், அது என்னவாயிருந்தாலும்; அவர்கள் அங்கே பொருத்தப்படுவார்கள். அவர்கள் தங்களுடைய காலத்தில் என்னிடத்தில் வருவார்கள்.” ஓ, என்னே!

57127 உலகத்தின் பாவம் யாவுமே உண்மையான வடிகட்டுதலாய் உள்ளது, உலகத்தின் அன்பு மரித்துப்போய், இந்த ஆத்துமா ஒரு காரியத்தை மாத்திரமே இழுத்துக் கொண்டிருக்கிறது. இங்கே அது உள்ளது,…நினைவில் கொள்ளுங்கள்! அதை மறந்துவிடாதீர்கள். அங்கே தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருக்கிற நீங்கள் யாவரும் இதை உங்கள் சிந்தையில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிந்திக்கும் மனிதன், தான் யாருக்கு முன்பாக நிற்கப் போகிறேன் என்றும், தேவனுடைய வார்த்தை என்னவென்பதையும் சிந்திக்கத் துவங்கும்போது; அவன் சிந்திக்கத் துவங்கும்போது, அதன்பின்னர் அவன் அதை பெற்றுக் கொள்ளும்போது, பரிசுத்த ஆவியைத் தவிர வேறொன்றும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. அது என்ன? நீங்கள் ஆதியிலே தேவனுக்குள்ளாக இருந்தீர்கள் என்பதற்கு ஆதியிலிருந்து வார்த்தையாகிய வித்தாய், உயிரணுவாய் இருக்கிறது, இங்கே நின்று கொண்டு ஜீவ வித்தை இழுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வித்து முன் கூட்டியே உங்கள் இருதயத்தில் உள்ளது. அல்லேலூயா! தேவனுடைய முன்னறிவினால், முன்குறிக்கப்பட்ட வித்து அங்கே ஏற்கனவே உள்ளது. அது இழுக்கும்போது, வார்த்தையைத் தவிர வேறெதன் மூலமாகவும் அது இழுக்க முடியாது. அதன்பின்னர் அது சிந்திக்கும் மனிதன், நீதியுள்ள மனிதன், வேதத்தைக் காண்கிற பரிசுத்த மனிதன், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதே ஆகும். அங்கே அந்த இடத்திற்குள் என்ன வருகிறது? அந்த வார்த்தை, அது இருதயத்தில் உள்ளது. “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உம்முடைய வார்த்தையை என் இருதயத்தில் மறைத்திருக்கிறேன்.” அது வார்த்தையினூடாக இழுத்துக் கொள்ளும்போது, அது என்ன? ஒரே ஒரு காரியம் மாத்திரமே வார்த்தையினூடாக கடந்து செல்லும்; அது பரிசுத்த ஆவியாகும். வார்த்தையினூடாக கடந்து செல்லக்கூடிய ஒரே காரியம் பரிசுத்த ஆவியாகும். ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி ஒரு பரிசுத்த மனிதனுக்கு ஒரு சுவையை அளிக்கிறது.

58128 அதன்பின்னர், அவன் பரலோகக் காரியங்களை ருசிபார்த்தான்; அவன் தேவனுடைய வார்த்தையை தன்னுடைய இருதயத்தில் பெற்றிருக்கிறான். அது அவனுக்கு முன்பாக வெளிப்பட்டதை அவன் காண்கிறான், அவனுடைய முழு ஆத்துமாவும் அதற்குள் சுற்றிக் கொள்ளப்பட்டு, உலகமும், அவனைச் சுற்றியிருக்கிற யாவும் மரித்துவிட்டன. 129 ஒரு சிந்தனையுள்ள மனிதனுடைய வடிகட்டப்பட்ட மார்க்கம்; நான் இப்பொழுது மார்க்கத்தை வடிகட்ட நினைத்துக் கொண்டிருக்கிறேன். சிந்திக்கும் ஒரு மனிதனுடைய வடிகட்டி ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையை அளிக்கும்போது, பாருங்கள், அது அவனுடைய சுவையை திருப்திபடுத்துகிறது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அவன் காண்கிறான். இதோ அது உள்ளது. அவர் செய்த அதேக் காரியங்களைச் செய்து, நமக்கு முன்பாக அவரைக் காண்பீர்கள்; அது பரிசுத்த மனிதனுடைய ரசனையையும், அவனுடைய சிந்தனையையும் திருப்திப்படுத்துகிறது. 130 அப்பொழுது அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்பதை அவர் அறிகிறார். அவன் நேசிக்கிறான், மேலும்—மேலும்—அது உலகம்…உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று நேசிக்கிறான், மேலும் வார்த்தை உறுதிப்படுத்தப்பட்டு, ரூபகாரப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறான். ஒவ்வொரு காலத்திலும் அவன் அதற்காக காத்திருக்கிறான், ஏனென்றால் அவன் ஒரு பரிசுத்த மனிதனாயிருக்கிறபடியால், அவன் தேவனைக் காண ஒரு வாஞ்சையை உடையவனாயிருக்கிறான். மற்றவர்கள் சபையில் சேர விரும்புகிறார்கள். இந்த மனிதன் தேவனைக் காண விரும்புகிறார். அவர் ஒரு கூட்ட கோட்பாடுகளில் அவரைக் காண்கிறதில்லை. அவர் அவரை பெரிய அருமையான இசைப்பேழையிலும் அல்லது தேவாலயங்களிலும், உயரமான சிலுவைகளிலும், அல்லது மெருகேற்றப்பட்ட பண்டிதர்கள் தங்களுடைய கழுத்துப்பட்டைகளைத் திருப்பிக் கொண்டுள்ளதிலும் காணவில்லை. அவர் அவரை வேத சாஸ்திரத்திலும், ஒரு வேத சாஸ்திரியிலும் காண்கிறதில்லை. அவர் அவருடைய வார்த்தையின் உறுதிப்படுத்தலில் அவரைக் காண்கிறார். நான் அவரை அதன் கண்காணிப்பு அக்கினியில் கண்டேன். கர்த்தருடைய வருகையின் மகிமையை என் கண்கள் கண்டிருக்கின்றன; அவர் கோபாக்கினையின் திராட்சை பழங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள திராட்சைப் பழங்களை மிதித்துக் கொண்டிருக்கிறார்; அவர் தம்முடைய பயங்கரமான வேகமான பட்டயத்தினால் கேடு விளைவிக்கக் கூடிய மின்னலை அவிழ்த்துவிட்டார்; அவருடைய சத்தியம் தொடர்ந்து அணிவகுத்துச் செல்கிறது. (அது முடிவுபரியந்தம் இருக்கும். ஆம், ஐயா.)

59131 நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஒரு வடிகட்டி, மனிதன்…இல்லை, ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி; தேவனுடைய பிரசன்னத்தில் நிற்க விரும்பும் ஒரு மனிதன். தேவனுடைய வடிகட்டி என்னவாயிருந்தது? அவருடைய வார்த்தை. “நீ அதைப் புசிக்கும் நாளிலே சாவாய்.” இங்கே வெளியே என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள்; நீங்கள் அந்த வார்த்தையை கடந்து செல்ல வேண்டாம். “வார்த்தையின் தண்ணீர்களினால் கழுவப்படுதல்,” சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி. ஒரு ஸ்தாபனமல்ல, ஒரு கோட்பாடு அல்ல, ஒரு சபையல்ல, ஒரு தேவாலயம் அல்ல; ஆனால் சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி, ஏனென்றால் நீங்கள் வார்த்தையினால் நியாயந்தீர்க்கப்படப் போகிறீர்கள். ஒரு சிந்திக்கும் மனிதன் அதையே நினைப்பான். ஒரு புத்தியில்லாத மனிதன், அல்லது உலகத்தை ருசி பார்க்கிறவன், ஒரு மாற்றீடாக எதையும் எடுத்துக் கொள்வான். உண்மையான ஒருவர் இருக்கும்போது, ஏன் அதற்கு மாற்றீட்டை வைக்க வேண்டும்?

60132 அதைக் குறித்து ஒரு நிமிடம், சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஸ்திரீ அந்நிய பாஷையில் பேசி, குட்டையான தலைமுடியோடும், உதட்டுச் சாயம் பூசிக்கொண்டும், அது பரிசுத்த ஆவியின் அத்தாட்சி என்பதை சபையானது இன்னமும் பற்றிக் கொண்டிருக்கிறது. 133 அல்லது ஒரு வேதபாட கருத்தரங்கு அல்லது ஏதோ ஒரு வேதாகம பள்ளியிலிருந்து வந்த ஒரு பிரசங்கியார், திரித்துவ ஞானஸ்நானத்தை உபயோகித்து அல்லது ஏதோ ஒரு கோட்பாட்டிற்கு அல்லது ஸ்தாபனத்திற்கு வார்த்தையோடு சமரசமாகுதல். அது ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியா? சகோதரனே, நான் அதைப் பார்க்கிற விதமாக இல்லை. ஒரு புத்தியில்லாத மனிதன் அதனூடாக இழுத்துக் கொண்டிருக்கிறான். அது உண்மை. உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தேவனுடைய வார்த்தையை தன்னுடைய ஆத்துமாவிற்கான வடிகட்டியாக உபயோகிப்பதற்கு பதிலாக; தேவனுடைய வார்த்தையை ஒரு வடிகட்டியாக எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, அந்தப் பழைய கோட்பாடுகளையும், ஸ்தாபனத்தையும் அவன் மேல் இந்தவிதமாக குவிக்க விட்டுவிட்டான். அப்பொழுது அவன் எல்லாவற்றிலும் மாசுபட்டிருக்கிறான். அவைகள் மனிதனுடைய உபதேசங்களை அவனுக்குள் தூண்டிவிட, காரியங்களைச் செய்து, “தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஏறக்குறைய வஞ்சித்து,” வார்த்தையை அலட்சியப்படுத்துகின்றனர். இழுத்துக் கொள்ள ஏதாகிலும் இருக்குமானால், அவன் தன்னுடைய சொந்த ஆத்துமாவை இழுத்துக் கொள்ள முடியும். ஆனால் அந்த முன்குறிக்கப்பட்ட வித்து… இதைத் தவறவிடாதீர்கள். அந்த முன்குறிக்கப்பட்ட வித்து அங்கு இல்லையென்றால், அது அங்கே உள்ளே இழுக்காது, ஏனென்றால் அது அதனுடைய இச்சையை இழுக்கும்.

61134 ஒரு புகைப்பிடிக்கும் மனிதன் புகைப்பிடிக்கும் ஒரு மனிதனின் ருசியை விரும்பினால், அவன் ஒரு தடியைப் பிடித்திருந்தால்… நான், “உங்கள் விரலை உறிஞ்சுங்கள்” என்று கூற, அவன் அங்கே நின்றுகொண்டு தன்னுடைய விரலை உறிஞ்சிக்கொண்டிருப்பான். 135 ஏன், அவன், “அது முட்டாள்தனமானது” என்று கூறுவான். ஏன்? அவனுடைய ருசி நிக்கோட்டினுக்காகவே உள்ளது. எனவே, அவன் சிந்திக்கிற மனிதன் அல்ல. பார்த்தீர்களா? ஆனால் நீங்களோ, “பாருங்கள், நான் ருசி பார்க்க மாட்டேன், நான் எதையும் ருசி பார்க்க மாட்டேன். நான் ருசி பார்க்க விரும்புகிறேன்… நான் புகையிலையை ருசி பார்க்க விரும்புகிறேன். நான் அந்த ருசியை ருசிப்பதில்லை” என்று கூறுகிறீர்கள். 136 அவனுக்கு ஒரு துணி கௌவியை கொடுக்க அதை அவன் உறிஞ்சட்டும். பார்த்தீர்களா? நிச்சயமாக, அவன் அதை உறிஞ்சட்டும். அவன், “நான் எதையும் ருசி பார்ப்பதில்லை” என்று கூறுகிறான். அப்படியானால், நீங்கள் எதற்காக அதை உறிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்? நிக்கோடினை ருசி பார்க்க உங்களுக்கு ஒரு வாஞ்சை உள்ளது. நீங்கள் ஒரு சபைக் கோட்பாட்டை உறிஞ்சிக் கொண்டிருக்கையில், இன்னமும் ஸ்திரீகளாகிய நீங்கள் தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொண்டும், முகத்தில் வர்ணம் பூசிக் கொண்டும், கவர்ச்சியாக உடை உடுத்தியிருப்பீர்கள்; மனிதர்களாகிய நீங்கள் அவைகளையும், இந்த மற்ற எல்லாக் காரியங்களையும் பார்த்து, நீங்கள் செய்கிறவிதமாகவே தொடர்ந்து செய்கிறீர்கள். அது என்ன? அங்கே உள்ளே என்ன இருக்கிறது? உலகம் இன்னமும் அங்கே உள்ளது, நீங்கள் ஒரு ருசி பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு சுவைக்காக அதை இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

62137 “நான் இந்த சபைக்கு செல்கிறேன்; அவர்கள் அந்த காரியத்தை பெயரிட்டு ஒருபோதும் குறிப்பிடுவதில்லை. அவர்கள் இதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை, அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. இந்தக் காரியங்கள் எதுவும் மேலே கொண்டு வரப்படவில்லை. நம்முடைய பிரசங்கியார் அதைக் காட்டிலும் பரந்த மனப்பான்மை கொண்டவர். நாங்கள் அதைப் போன்ற காரியங்களைக் கூறுகிறதில்லை.” அது என்ன? நீங்கள் உறிஞ்சிக் கொண்டிருக்கிற உலகத்தின் சுவையை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். சரியே! 138 ஆனால் ஒரு சிந்திக்கும் ஸ்திரீ அந்தவிதமான ஒரு காரியத்தை ஏற்றுக்கொள்ளமாட்டாள். அவள் பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். தேவனுடைய வார்த்தையினூடாக நீங்கள் கிரகித்துக் கொள்ளக்கூடிய ஒரே காரியம் ஆவி மாத்திரமே, வார்த்தையை தாமே உண்டாக்க உயிர்ப்பிக்கும் வல்லமை, அது உங்களுக்குள் இருக்கிறது, நீங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற காலத்தில் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தும்படி ஜீவியுங்கள். அல்லேலூயா! சகோதரனே, அது சத்தியமாயில்லையென்றால், சத்தியம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. அது சத்தியமாயில்லையென்றால், நான் என்னுடைய சிந்தையை இழந்துவிட்டேன். 139 அது உங்கள் இருதயத்தில் முன்குறிக்கப்பட்ட வார்த்தையாயுள்ளது, அது இழுத்துக் கொண்டிருக்கிறது. அது அந்த உலகத்தை துப்புகிறது; அது அதை விரும்புகிறதில்லை. ஆனால் அது இங்கே வார்த்தையில் வரும்போது, அது இழுக்கத் துவங்குகிறது. அது வார்த்தையினூடாக இழுக்கப்படும்போது, அந்த வார்த்தையை உயிர்ப்பிக்க பரிசுத்த ஆவியைத் தவிர வேறு எதுவுமே இருக்க முடியாது.

63140 அப்படியானால் ஒரு சிந்தனை, பக்தியுள்ள மனிதனுடைய வடிகட்டி வார்த்தையாயுள்ளது, அது அவனுடைய இருதயத்தில் உள்ள அந்த பரிசுத்த சுவையை திருப்திப்படுத்துகிறது; ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, ஒரு பரிசுத்த மனிதனின் சுவை. ஓ, என்னே, நாம் என்ன நிலையில் இருக்கிறோம்! 141 அவனுடைய ஆத்துமாவிற்காக தேவனுடைய வடிகட்டியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவன் சாத்தான் ஏதோ ஒரு ஸ்தாபனம் அல்லது கோட்பாட்டினால் அவனை வஞ்சிக்க அனுமதிக்கிறான், சிகரெட் பிடிக்கும் ஜனங்களாகிய உங்களை புகையிலை நிறுவனங்கள் வஞ்சிப்பது போன்றே உள்ளது. நீங்கள் அதிகமான அங்கத்தினர்களைப் பெற்றுக் கொள்வீர்கள், அவ்வளவுதான். ஓ, இன்னும் ஒரு சில நிமிடங்களில் இதை கூறி முடிக்க விரும்புகிறேன்.

64142 குருடான லவோதிக்கேயா! நாம் எவ்வளவு குருடாக இருக்க முடியும்! இந்தக் காலத்தின் குருடரை வழிநடத்தும் குருடான லவோதிக்கேயா, போலியான பாசாங்கின் கீழ், கள்ளக் கோட்பாடுகளின் கீழ், தவறான கொள்கைகளின் கீழ், தவறான ஸ்தாபனத்தின் கீழ், பிரமாணத்தின் கீழ் உள்ள பொய்யான புத்தகங்கள். ஓ, குருடான லவோதிக்கேயா, குருடரை வழி நடத்திச் செல்கிறது, நீங்கள் யாவரும் பள்ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்! 143 பிரசங்கியாரே, இன்றிரவே உங்களுடைய வடிகட்டியை மாற்றுங்கள். அந்த ஸ்தாபன நிக்கோடினை உங்கள் முறைமைகளுக்குள்ளாக இழுத்துக்கொள்ளாதீர்கள், இயேசு, “இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால்” என்றார். உங்களுடைய சபையோர் பெண்கள் அதைச் செய்வது சரியானது என்றும், அந்த ஆண்கள் அதைச் செய்வது சரியானது என்று நீங்கள் கூறும்போது, இந்த எல்லாக் காரியங்களையும், அது மற்றும் மற்றவை; அவர்கள் இதற்கு உண்மையாய் இருந்து, அதை செய்கிற வரையிலும், இந்தக் கோட்பாடுகளையும் மற்றக் காரியங்களையும் கைக்கொள்ளும்போது, நீங்கள் உங்களைக் குறித்து வெட்கப்படவில்லையா? இயேசு, “குருடான பரிசேயர்” என்றார்.

65144 இயேசு, “குருட்டு பரிசேயர்களே” என்று சத்தமிட்டதுபோல, பரிசுத்த ஆவியானவர் என்னுடைய சொந்த இருதயத்தில் இன்றிரவு, “குருட்டு லவோதிக்கேயா! தேவன் உங்களுக்கு எத்தனை முறை ஒரு எழுப்புதலை அளித்திருப்பார்! ஆனால் இப்பொழுது உங்களுடைய நேரம் வந்துவிட்டது; இப்பொழுது மிகவும் காலதாமதமாகிவிட்டது. தேவன் உங்களிடத்தில் அனுப்பின ஜனங்களைக் குறித்து நீங்கள் எப்படியாய் சிரித்து பரிகசித்தீர்கள்! ஆனால் இப்பொழுது உங்களுடைய நேரம் வந்துவிட்டது. ஓ, அமெரிக்க ஐக்கிய நாடுகளே, அமெரிக்க ஐக்கிய நாடுகளே, ஒரு—ஒரு கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டி சேர்த்துக் கொள்ளும் வண்ணமாய் தேவன் எத்தனை தரமோ உன்னை கூட்டி சேர்த்துக் கொள்ள மனதாய் இருந்தார், ஆனால் உனக்கோ மனதில்லாமல் போயிற்று” என்று கதறுகிறார். இப்பொழுது இந்த சத்தம் கடற்கரையிலிருந்து கடற்கரைக்கு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, கிழக்கிலிருந்து மேற்காக சென்று கொண்டிருக்கிறது. தேவன் உன்னை கூட்டி சேர்த்துக் கொள்ள மனதாய் இருந்தார், உனக்கு மனதில்லாமல் போயிற்று! இப்பொழுது உங்களுடைய நேரம் வந்துவிட்டது. 145 நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன. உலகம் விழுந்து கொண்டிருக்கிறது. முந்நூறு அல்லது நானூறு மைல் அகலம் கொண்ட அதன் பாகம், இந்நாட்களில் ஒன்றில், நூறு…அல்லது நாற்பது மைல் தூரத்தில் அந்தப் பெரிய பழுதலில் மூழ்க, அலைகள் கென்டக்கி மாநிலம் வரைக்கும் எழும்பும். அது அவ்வாறு வரும்போது, அது உலகத்தை மிகவும் பலமாக அசைத்து, அதன் மேல் உள்ள யாவும் நிலை குலைந்துவிடும். 146 ஓ, காலங்களின் கன்மலையில் என்னை மறைத்துக் கொள்ளும்! தேவனே, நான் மறைந்து கொள்ளட்டும், நான் மறைந்து கொள்ளட்டும். கர்த்தாவே, என் மேல் ஊதும். ஜீவனுள்ள தேவனுடைய ஆவியை, என் மேல் ஊதும். கர்த்தாவே, நான் தேவனுடைய வடிகட்டியை எடுத்து அதன் கீழ் ஜீவிக்கட்டும். ஓ, கர்த்தாவே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு, பரிசுத்த ஆவியின் புதிய காற்றை நான் என்னுடைய ஆத்துமாவில் என் நுரையீரலுக்குள் சுவாசிக்கட்டும். என் மேல் ஊதும், பரிசுத்த ஆவியானவரே, என் மேல் ஊதுவீராக! நான்…

66147 தேவனுடைய வார்த்தையை நான் என் இருதயத்தில் விதைத்து, நான் அதை விட்டு வலது புறமோ அல்லது இடது புறமோ திரும்பமாட்டேன் என்பதுதான் என் நோக்கம், ஆனால் நான் என் ஜீவிய காலமெல்லாம் அதற்கு உண்மையாய் வாழ்வேன். ஓ, பிதாவாகிய தேவனே, அப்படியானால் இந்த வார்த்தைகளை எனக்கு உயிர்ப்பிக்கும்படி, ஜீவனின் பரிசுத்த ஆவியை என்மேல் அனுப்பும், எனக்கு முன்பாக இருக்கிறவர்களுக்கு முன்பாக நான் இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தும்படியாகவும், அது சம்பவிக்கும்படி எதிர்நோக்கியிருக்கவும் நான் விரும்புகிறேன். அதுவே என்னுடைய ஜெபமாயுள்ளது. 148 ஓ, என்னே! அவர்கள் இன்றைக்கு எப்படி அந்த சபைகளில் செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அந்த ஸ்தாபன வடிகட்டிகளினூடாக ஜனங்களை உறிஞ்சி, உலக ஆலோசனை சங்கத்திற்குள்ளாகச் சேர்ப்பது. ஏன்? ஏன்? ஏனென்றால் அது அவர்களுக்கு அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையை, ஸ்தாபனத்தை அளிக்கிறது. அவர்கள் ஸ்தாபனத்திற்காக ஒரு சுவையைக் கொண்டுள்ளனர். அவர்கள் அதைச் செய்வார்கள். 149 ஒவ்வொரு முறையும் தேவன் அவர்களுக்கு ஒரு எழுப்புதலை அனுப்பியபோது, அவர்கள், அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அதை ஸ்தாபனமாக்குகின்றனர். அது சரியா? எனவே அவர்கள் தங்களுடைய ஒருவிதமான வடிகட்டியை வைத்துள்ளனர், ஏனென்றால் அவர்கள் ஒரு மகத்தான ருசியைப் பெற்றுள்ளனர். இப்பொழுது தேவன் அவர்களுடைய ருசியைக் குறித்த அவர்களுடைய வாஞ்சையை அவர்களுக்கு அளிக்கப் போகிறார். அவர் அவர்களுக்கு கொடுக்கப் போகிறார்…அவர்கள் அவர்களை உலக ஆலோசனை சங்கத்திற்குள்ளாக உறிஞ்சி, அதன்பின்னர் அவர்கள் தங்களுடைய ஸ்தாபன சுவையை பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர்.

67150 ஓ, லவோதிக்கேயா சபையே, இந்தக் காலத்தில் அவர்களுடைய வஞ்சனைகளினால் வஞ்சிக்கப்படாதிருங்கள். ஓ, பெந்தெகொஸ்தேயினரே, லவோதிக்கேயாவுக்குள்ளாகச் சென்றிருக்கிறவர்களே, லவோதிக்கேயா சபையின் பாகமாயிருக்கிறவர்களே, சபை மரித்துப்போய்விட்டது; மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரெஸ்பிடேரியன் மூலமாக, வெறுமென ஒரு சடங்காச்சார முறைமையின் மூலமாகவே உள்ளது. ஆனால் பெந்தேகோஸ்தேயினராகிய நீங்கள் எப்பொழுதாவது “ஆமென்” என்று கூறலாம்; அவர்கள் மேடையின் மேல் நிறைய இசையை இசைக்கக் கூடியவர்களாயும், தலைமுடியைக் கத்தரித்துக் கொண்ட பெண்களை நடனமாட வைத்து, இன்னமும் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டுள்ளனர்; தேவன் உங்களை எத்தனை முறை எடுத்திருப்பார், ஆனால் நீங்கள் மற்றொரு வடிகட்டியை, ஒரு ஸ்தாபன வடிகட்டியை எடுத்துக் கொண்டீர்கள். தேவன் உங்களை எத்தனை முறை அழைத்திருப்பார்! 151 அது எவ்வளவு வஞ்சகமாய் இருந்தது! மத்தேயு 24:24-ல் இயேசு…“கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்” என்றார். நீங்கள் ஏவாளைப் போல், எவ்வளவு அருகாமையில் இருக்கிறீர்கள், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு சிறிய காரியங்களை பெற்றுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் ஸ்தாபனமாக்கப்பட்டு, அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வளவுதான். முழு விஷயத்தையும் எடுத்துக்கொள்வது நல்லது, “ஏனென்றால், குறைந்தபட்சம் புண்படுத்துவது முழுமைக்கும் குற்றவாளி.”ஓ!

68152 பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே, உங்களுடைய சிந்தையை தேவனுடைய வடிகட்டியினூடாக அனுப்புங்கள், உங்களுடைய ஸ்தாபன சொப்பனங்களினூடாக அல்ல, அப்பொழுது நீங்கள் பரிசுத்த மனிதனின் சுவையோடு, உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு வெளியே வருவீர்கள். 153 ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை அவளுடைய தலைமுடியை கத்தரிக்கவோ, குட்டைக்கால் சட்டை அணியவோ அல்லது தளர் கால் சட்டைகளை அணியவோ அனுமதிக்கும்போது, அவன் சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியினூடாக வந்து கொண்டிருக்கிறான் என்று கூற முடியுமா? அதைப் போன்ற ஒரு காரியத்தை ஒரு மனிதன் செய்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 154 ஒரு பிரசங்கியார் பிரசங்க மேடையில் நிற்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, ஏனென்றால் அவரை முதுகில் தட்டிக் கொடுத்து, “பாண்டித்தியம் பெற்றவரே, சகோதரரே, சங்கை” என்று அழைக்கும் ஒரு சபையோரால் அவர் நல்ல சம்பளம் வாங்குகிறார், எல்லாவிதமான விருந்துகளுக்கும் அவரை அழைத்துச் சென்று, அவர்கள் ஆண்களும் பெண்களும் சேர்ந்து குளிப்பதற்கும், மற்றெல்லா காரியங்களுக்கும், கடற்கரைகளிலும்; ஒரு மனிதன் தான் சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியினூடாக வருவதாகக் கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 155 அந்த ஸ்திரீகளில் சிலர் மேடையின் மேல், தங்களுடைய முழங்கால்களுக்கு மேலாக தங்களுடைய ஆடைகளோடு, மிகவும் இறுக்கமாக வெட்டி, ஒவ்வொரு வடிவத்தையும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும் காட்டுகிறது, அவர்களுடைய ஆடைகளினூடாக அவர்களுடைய உள்ளாடைகள் காண்பிக்கப்படுகின்றன; அரைக்கால் சட்டை அணிவது, சிறிய கோடு போன்ற உடைகள் அல்லது வேறு எதையாவது அணிவது போன்றே மிக மோசமானது. பெந்தேகோஸ்தேயினரே, குருடரே, லவோதிக்கேயா பிரசங்கிமார்களே, தேவன் உங்களோடு எவ்வளவு காலம் பொறுமையாயிருப்பார் என்று எனக்குத் தெரியாது. இருங்கள்…தேவன் உங்களுடைய—உங்களுடைய குருடான கண்களுக்கு இரக்கமாயிருப்பாராக. நீங்கள் காணும்படியாக, உங்களுடைய கண்களைத் திறக்க, இன்றிரவு அவர் கண் கலிக்கத்தை வைத்திருக்கிறார்.

69156 நான் இந்தக் காலையில் கூறினதுபோல, நாம் காணும் காலத்தில், உச்சநிலையில் இருக்கிறோம். அதை நீங்கள் அறிந்துகொள்ள புறம்பே அசைந்து பார்க்கும்படி, அதற்கு மேல் திறன்கள் கிடையாது. நீங்கள், உங்களுடைய மூக்கிலிருந்து, உங்களால் முகர முடியும்; உங்களுடைய உதடுகளிலிருந்து, உங்களால் பேச முடியும்; உங்களுடைய கரங்களிலிருந்து, உங்களால் உணர முடியும், எட்டித் தொட முடியும்; உங்கள் கால்கள் போன்றவை; ஆனால் உங்களால் உங்களுடைய கண்களுக்கு அப்பால் செல்ல முடியாது. 157 மல்கியா 4 வந்துவிட்டது; பார்வை! “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” ஓ, ஒளியில் நடவுங்கள்! நாம் ஒளியில் நடப்போம், ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு அதுவே வருகிறது; இரவும் பகலும் என்னைச் சூழ்ந்து பிரகாசிக்கும், இயேசு, வார்த்தை, உலகத்தின் ஒளி. 158 ஆம், ஐயா. அதைக் கடந்து செல்லுங்கள், ஓ, சகோதரனே, நீங்கள் பரிசுத்த மனிதனின் சுவையோடு, பரிசுத்த ஆவியோடு வெளியே வருவீர்கள்.

70159 ஓ, ஸ்திரீயே, உடையைக் குறித்த உங்களுடைய நவீன சிந்தனையை அப்படியே விட்டுவிடுங்கள். நீங்கள் மனிதனுக்கு முன்பாக வீதிக்கு செல்வதற்கு முன்பு, வாலிப ஸ்திரீகளே, வயோதிக ஸ்திரீகளாகிய நீங்கள், உங்களுடைய ஆடைகளை மிகவும் இறுக்கமாக அணிந்து கொண்டு, நீங்கள் பின்பக்கமாகவும் முன் பக்கமாகவும் தள்ளப்பட்டு வீதிக்கு செல்வதற்கு முன்னர், உங்களுடைய நவீன சிந்தனையை கடந்து செல்லுங்கள். நான் குறை கூறுகிறவன் அல்ல. நான் உங்களுடைய சகோதரன். நான் மரித்தோருக்கும் ஜீவனுள்ளோருக்கும் இடையே நின்று, நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். நீங்கள் வெளியே பிரவேசிக்கும் முன்பு, உங்களுடைய சரீரம் ஒரு புனிதமான ஒழுங்கு அல்லது தேவன் உங்களுக்கு அளித்துள்ள ஒரு புனிதமான ஜாதி என்பதை அறிந்துகொள்வதற்கு முன்பு; நீங்கள் அந்தவிதமாக உடை உடுத்திக்கொண்டு, வீதியில் பிரவேசிப்பதற்கு முன்னர், ஒரு சிந்தையுள்ள ஸ்திரீயினுடைய வடிகட்டியினூடாக உங்களுடைய சிந்தையை செலுத்துங்கள். அது நினைவிருக்கட்டும், அதாவது, “உன்மேல் இச்சையோடு பார்க்கிற எவனும் நீ ஏற்கனவே அவனோடு விபச்சாரம் செய்திருக்கிறாய்.” சகோதரியே, அதை நினைவில் கொள்ளுங்கள். 160 மேலும், சகோதரனே, நீ உன் தலையைத் திருப்பி அவளைப் பார்ப்பதற்கு முன்பு, அந்த இரண்டாவது பார்வையில், ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியினூடாக உங்களுடைய சிந்தையைக் கொண்டு செல்ல முடியும். நீ ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையோடு வெளியே வருவீர், பாருங்கள், சரியானதைச் செய்ய வேண்டும்.

71161 கவனியுங்கள், நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீயினுடைய வடிகட்டியினூடாக உங்களுடைய சிந்தையைக் கடந்து சென்றால், அப்பொழுது நீங்கள் ஒரு பரிசுத்த ஸ்திரீயினுடைய ஆடையோடு வெளியே வருவீர்கள். அது உண்மை. சகோதரனே, நீங்கள் ஒரு பரிசுத்த மனிதனின் தோற்றத்தோடு வெளியே வருவீர்கள். இப்பொழுது, அது ஒரு காரியம். நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியமும், அதை தேவனுடைய வார்த்தையின் வடிகட்டியினூடாக கடந்து, அது சரியா அல்லது தவறா என்று பாருங்கள். 162 நீங்கள் ஒரு பரிசுத்த ஸ்திரீயின் உடையோடும், நீண்ட தலைமுடியோடும், கண்ணியமாக உடை உடுத்திக்கொண்டும் வெளியே வருவீர்கள்; ஒரு அமைதியான, தாழ்மையான ஆவி; சண்டையிட்டுக் கொண்டும், போராடிக் கொண்டும் இருக்கமாட்டீர்கள். “அமைதியான, சாந்தமான ஆவி, அது தேவனிடத்திலிருந்து வந்த ஒரு பெரிய பொக்கிஷம்.” வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. இப்பொழுது தேசங்களில் உள்ள உங்களை நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் இன்னும் சில நிமிடங்களில் முடிக்கப் போகிறோம்.

72163 இப்பொழுது இன்றிரவு நாம் யாவரும் நம்முடைய வாஞ்சைகளை சரிபார்த்து, அதன்பின்னர் நீங்கள் எந்த விதமான ஒரு வடிகட்டியினூடாக பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் காண முடியும். நாம் ஒவ்வொருவரையும் சோதித்துப் பார்ப்போமாக, இங்கேயும் வெளியேயும் தேசம் முழுவதிலும். உங்களுடைய வாஞ்சைகளை, நீங்கள் உண்மையாகவே ஜீவியத்தில் என்ன விரும்புகிறீர்கள் என்பதை சோதித்துப் பாருங்கள். நீங்கள் எதற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சோதித்துப் பாருங்கள். நீங்கள் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள். நீங்கள் எதற்காக சபைக்குச் செல்கிறீர்கள் என்று பாருங்கள். நீங்கள் செய்கிற எது…சபைக்குச் செல்வது நல்லதுதான். ஆனால் சபைக்கு மாத்திரம் செல்லாதீர்கள். அது உங்களை இரட்சிக்காது. பார்த்தீர்களா? ஒரு சில நிமிடங்கள் அப்படியே சரிபார்த்து, “என்னுடைய குறிக்கோள்…எந்தவிதமான ஒரு வடிகட்டியினூடாக நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்?” என்று கூறுங்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகவில்லையென்றால், உங்களுடைய ஆத்துமா அதைச் செய்யவில்லையென்றால், அப்பொழுது ஏதோக் காரியம் தவறாயுள்ளது; ஏனென்றால் அது ஜீவன்…எப்படிப்பட்ட ஒரு ஜீவியம் உங்களுக்குள் இருக்கிறது என்பதையும், உங்களுடைய ரசனையையும் அது காண்பிக்கிறது. அது பரிசுத்தமாயும், விவேகமுள்ளதாயும், கனமானதாயுமிருந்தால், அது அந்தவிதமாகவே வெளிவரும். அது அவ்வாறில்லையென்றால், நீங்கள் வேறொரு சுவையை உங்களுக்குள்ளிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். அது முற்றிலும் உண்மை. ருசி தேவனுடைய வார்த்தையாயும், தேவனுடைய சித்தமாயும் இருக்குமானால், அப்பொழுது உங்களுக்குள் என்ன இருக்கிறது, எது அந்த சுவையை இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அந்த வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது. அந்த வார்த்தை உங்களுக்குள் இருந்து, அந்த வார்த்தையிலிருந்து எடுக்கிறது.

73164 அது என்ன இழுத்துக் கொண்டிருக்கிறது? அது வார்த்தையினூடாக இழுத்துக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் நீங்கள் இந்தக் காலத்தின் கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். அந்த வார்த்தை உங்களுக்குள் இருக்குமானால், அது வார்த்தையினூடாக மாத்திரமே அதை உள்ளே இழுக்க முடியும், உங்களில் உள்ள அந்த வார்த்தையை உயிர்ப்பிக்கிற ஆவி. வார்த்தை மாத்திரமே பிழைக்காது. அந்தக் காரணத்தினால்தான், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; நான் உயர்த்தப்பட்டால், எல்லா மனுஷரையும் என்னண்டை இழுத்துக் கொள்வேன்” என்றார். பார்த்தீர்களா? பாருங்கள், “பிதா,” உலகத்தில் உள்ள கிறிஸ்துவின் சரீரத்தின் பாகம், முன்குறிக்கப்பட்டு, இருதயத்திற்குள் வைக்கப்பட்டது. 165 ஒரு உண்மையான கிறிஸ்தவனாயிருக்கிற எந்த மனிதனும், இன்றைக்கு மறுபடியும் பிறந்திருந்தால், அவன் ஒரு சிறு பிள்ளையாயிருந்தபோதோ அல்லது ஒரு சிறு பெண்ணாயிருந்தபோதோ, ஒன்று உங்களில் ஏதோ ஒன்று தேவனுக்காக பசியாயிருந்தது என்பதை அறிந்திருக்கிறான். நீங்கள் சபைகளில் சேர்ந்து கொள்ள முயற்சித்தீர்கள். அது கிரியை செய்யாது. அது என்னவாயிருந்தது? அது அந்த வார்த்தையாயிருந்தது. நீங்கள் ஒரு வடிகட்டியை தேடிக் கொண்டிருந்தீர்கள். ஒரு நாள் அது உங்களுக்கு முன்பாக பிரகாசித்தது; இயேசு கிறிஸ்துவை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக நீங்கள் கண்டீர்கள். அதுவே சுவையைத் திருப்திப்படுத்தியது. பார்த்தீர்களா? காரணம், ஜீவன் உங்களுக்குள் இருந்து, இழுத்துக் கொண்டிருந்தது. பாருங்கள், உங்களுக்குள் இருக்கும் ஜீவன் இழுத்துக் கொண்டிருக்கிறது. அது—அது நீங்கள் இங்கே என்ன வாஞ்சையை உடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதையே கூறுகிறது. நீங்கள் இழுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இதை , அதை , மற்றும் மற்றவற்றினூடாக இழுக்க முடியாது. நீங்கள் அந்த சரியான வடிகட்டியைக் கண்டறிய வேண்டும், ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் நபராய் இருக்கிறீர்கள். பார்த்தீர்களா? 166 நீங்கள் சிந்திக்கும் ஒரு நபராயிருந்தால், நீங்கள் உலகத்தோற்றத்துக்கு முன்னே…முன்குறிக்கப்பட்ட அல்லது வடிகட்டப்பட்டிருக்கிறீர்கள்.

74167 ஒரு ஸ்தாபன ஊழியக்காரர் இதைக் கேட்டால், அவன் ஒரு ஸ்தாபன ஊழியக்காரனாயிருந்தால், அவன் சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை எடுத்துக் கொள்வான் என்று நான் நம்புகிறேன். அப்பொழுது அவன் நிச்சயமாக அழிந்துபோகும் அந்த ஸ்தாபன கூட்டத்தை தூக்கியெறிந்துவிடுவான், ஏனெனில் அது மனிதனின் வார்த்தை; ஒருக்காலும் தவறிப்போகவோ, ஒழிந்து போகவோ முடியாத தேவனுடைய வடிகட்டப்பட்ட வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள், அது பரிசுத்த மனிதனுடைய சுவைக்கு ஏற்றதாயிருக்கும். யாக்கோபைப் போல எல்லா உலகத்தையும், ஒவ்வொரு ஸ்தாபனத்தின் பசியையும் அல்லது கீர்த்தியையும் தியாகம் செய்வான், உலகத்தில் நீங்கள் எங்கே பேராயராகவோ, போப்பாண்டவருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவராகவோ இருக்க முடியும் என்றும், நீங்கள் ஒரு மாநிலப் போதகராக இருக்க முடியுமா என்றும், அல்லது ஏதோ ஒரு மகத்தான சபையின் மேய்ப்பன். அங்குள்ள எல்லாவற்றையும் நீங்கள் தியாகம் செய்வீர்கள். உலகத்தின் பாகமாக ஆக ஏசாவைப் போல் அல்ல; ஆனால் யாக்கோபைப் போல, நீங்கள் பெற்றுள்ள சேஷ்டபுத்திரபாகத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் பெற்றுள்ள ஒவ்வொரு காரியத்தையும், சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியைக் கொடுப்பீர்கள்; ஏனென்றால் அது பரிசுத்த மனிதனுடைய சுவையை உங்களுக்கு அளிக்கும். அது திருப்தியாக்கும். அது திருப்தியடைந்து, தேவனுடைய பரிசுத்த நற்குணத்தின் நித்திய சுவையினால் பரிசுத்தமாக்கப்படும்.

75168 ஏவாளின் மனதில், அல்லது அவளுடைய சிந்தனையில் சாத்தான் முதல் துளை போட்டான் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அவனுடைய ஞானத்தையும், அறிவையும் ருசிபார்க்கச் செய்தான். 169 இப்பொழுது இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நான் முடித்துக் கொண்டிருக்கிறேன். சாத்தான் முதல் துளையினூடாக குத்தினான், ஏனென்றால் அவளால் இழுக்க முடிந்ததெல்லாம் வார்த்தையை மாத்திரமே. அது தேவனுடைய வார்த்தையினூடாக வந்த ஆவியாயிருந்தது, ஏனென்றால் அவள், “நீங்கள் இந்த வடிகட்டியினூடாக சுவாசிக்கும் வரை, நீங்கள் ஒருபோதும் மரிக்கமாட்டீர்கள்; ஆனால் நீ இதை இங்கே கொஞ்சம் சுவாசித்தால் நீ மரித்துப் போவாய்” என்றாள். பார்த்தீர்களா? 170 சாத்தான், “ஆனால் இங்கு உனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நீர் இங்கே இதை சற்று சுவைத்துப் பார், அப்பொழுது நீர் அறிந்து கொள்வீர்; நீர் தேவனைப் போலிருப்பீர். பாருங்கள், அவர் நன்மை தீமை அறிந்திருக்கிறார்; நீர் அதைச் அறிந்திருக்கவில்லை. நீர் இதை சற்று ருசிபார்த்தால் நலமாயிருக்கும்” என்றான். அவள் அவனை அதில் ஒரு சிறு துவாரத்தை, ஒரு துளை போட அனுமதித்தாள். 171 இப்பொழுது நான் ஏன் கூறுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்… நீங்களோ, “நீர் ஏன் ஸ்திரீகளுக்கு எப்படி வரங்களையும், அதைப் போன்ற காரியங்களை எப்படி பெறுவது என்று கற்றுக் கொடுக்கக் கூடாது?” என்று கேட்கலாம். 172 நான், “அவர்கள் தங்களுடைய மொழியின் முதல் எழுத்துக்களையே கற்காதிருக்கும்போது, நீங்கள் எப்படி அவர்களுக்கு இயற்கணிதத்தைக் கற்பிக்க முடியும்?” என்று கேட்டேன். ஒரு சிறு துவாரம் மாத்திரமே அதற்கு தேவைப்பட்டது. அவன் உலகத்தின் ஞானத்தை எடுத்துக் கொண்டபோது, அது ஞானத்தை ருசி பார்க்க விரும்பி, முழு குடும்பத்திற்கும் மரணத்தை ஏற்படுத்தியது.

76173 இப்பொழுது வடிகட்டியைப் பாருங்கள், நிச்சயமாகவே அது அவளுடைய சுவையை வெளிப்படுத்தியது. அவளுடைய சுவை உலகத்திற்கானதாயிருந்தது; அதைத்தான் அவள் பெற்றிருக்கிறாள். அதுதான் இன்றைக்கும் உள்ளது. அவர்கள் உலகத்திலும் உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்து, தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறார்கள். பாருங்கள், சாத்தான் அவர்களை அந்நிய பாஷையில் பேச அனுமதிப்பான்; அவன் அவர்களை ஆரவாரமிடச் செய்வான்; அவன் அவர்களை தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்த அனுமதிப்பான்; இந்தவிதமான எல்லாக் காரியங்களையும் செய்ய அவன் அனுமதிப்பான். 174 அவர், “அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து: ‘கர்த்தாவே, நான் பிசாசுகளைத் துரத்தவில்லையா, நான் அநேகக் காரியங்களைச் செய்யவில்லையா, இதைச் செய்தேனா’ என்பார்களே?” என்றார். அவர், “அக்கிரமச் செய்கைக்காரரே, உங்களை நான் அறியேன்” என்பார். வார்த்தை உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டபோது, நீங்கள் இன்னமும் உலகத்தின் அந்த பழைய வடிகட்டியை உறிஞ்சினீர்கள், பாருங்கள், அது இருதயத்தில் இருந்த சுவையைக் காண்பிக்கிறது.

77175 புறாக்களால் அழுகிப்போன இறைச்சியை புசிக்க முடியாது. அவைகளால் அதைப் புசிக்க முடியாது. அவைகளுக்கு பித்தப்பை கிடையாது. ஒரு காகம் ஒரு புறாவைப் போல விதையைத் தின்ன முடியும், ஒரு காகத்தைப் போல ஒரு அழுகிப்போன அழுகிப்போன ஒரு மாமிசத்தையும் தின்ன முடியும், பாருங்கள், ஏனென்றால் அது ஒரு மாய்மாலக்காரனாயிருக்கிறது. ஆனால் ஒரு புறா மற்ற பறவைகளைப் போல உருவாக்கப்படவில்லை, எனவே தான் தேவன் வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு புறாவாக தம்மை சுட்டிக்காட்டினார். பார்த்தீர்களா? அது—அதனால் ஒரு அழுகிய நாற்றத்தை தாங்க முடியாது. அது ஒரு பருந்து அல்ல; காரணம், அதற்கு பித்தப்பை கிடையாது. அதனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அது அதைப் புசித்தால், அது அதைக் கொன்றுவிடும். ஒரு புறா ஒருபோதும் குளிக்க வேண்டியதில்லை. ஒரு புறாவின் சரீரம் உட்புறத்திலிருந்து எண்ணெயை வெளியேற்றுகிறது, அதுவே அதை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. அது புறாக்குள்ளிருக்கிற ஒரு ஜீவன்; அது சிறகுகளை சுத்தமாக வைத்திருக்கும் எண்ணெயை அதில் உற்பத்தி செய்கிறது. ஒரு கிறிஸ்தவனும் அவ்வண்ணமே; அவர்களுக்குள்ளே ஒரு ஜீவன் அவர்களை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. அது வடிகட்டப்படுகிறது. 176 ஓ, கவனியுங்கள்! இப்பொழுது அவன்…வடிகட்டியைப் பாருங்கள், இன்றைக்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயமாகவே அதன் சுவையைக் காண முடியும்.

78177 இந்த நவீன சபையைப் பாருங்கள். அவர்களுடைய வடிகட்டியைப் பாருங்கள். அவர்கள் எதை நேசிக்கிறார்கள் என்பதை உங்களால் காண முடியும். அவர்கள் பெற்றுள்ளதைப் பாருங்கள். அன்பை, அவர்கள் எதை நேசிக்கிறார்கள்? குமாரி லவோதிக்கேயா தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு சென்று கொண்டிருக்கிறாள். அது உண்மை. அன்பு, சபை அன்பு இன்றைக்கு லவோதிக்கேயாவிற்கானதாய் உள்ளது, ஒரு பெரிய ஸ்தாபனம், ஒரு பெரிய அமைப்பு, ஒரு மகத்தான, பிரபலமான காரியம், கிறிஸ்துவின் சபையின் வஞ்சனையின் கீழ், மிகவும் அழகாக உடை உடுத்தியிருக்கிற ஜனங்கள், உயர்ந்த நாகரீகமுள்ளவர்கள், முழு ஞானம், பிசாசினால் நிறைந்தவர்கள். “அந்திக்கிறிஸ்து” என்ற ஒரே ஒரு வார்த்தை மாத்திரமே அதில் இருக்க வேண்டும். ஏனென்றால், கிறிஸ்து போதித்த ஒவ்வொரு காரியத்திற்கும், அவர்கள் நடைமுறையில் ஒவ்வொரு காரியத்திற்கும் எதிராக இருக்கிறார்கள்; சரி, அவர்கள் தங்களை அப்படி அழைத்துக் கொள்வதற்கு போதுமானது. 178 இப்பொழுது நீங்கள் இன்றிரவு சிந்திக்க கூடிய ஒரு ஜனமாக இருந்தால், செய்தியானது போய்க் கொண்டிருக்கும் தேசத்தில், உங்களுடைய வாஞ்சை ஒரு வேதாகம சுவையாக இருக்கும், ஒரு ஸ்தாபன சுவையாக அல்ல, ஏனென்றால் நீங்கள் உங்கள் ஆத்துமாவை வடிகட்டும்படி நான் கேட்டுக்கொண்டிருக்கிற வார்த்தையின்படியே நீங்கள் அதே வேதாகமத்தினால் நியாயந்தீர்க்கப்படுவீர்கள். அதிலுள்ள ஒரு வார்த்தையையும் புறக்கணித்து, அந்த ஒரு வார்த்தையினூடாக உங்களுடைய ஆத்துமாவை கடந்து செல்ல அனுமதிக்கவில்லையென்றால், நீங்கள் புறக்கணிக்கப்படுவீர்கள். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” 179 அது முன்குறிக்கப்பட்ட உங்களுக்குள் கொண்டுவரப்படும். கர்த்தர் உங்கள் மேல் ஊதும்போது, அவருடைய ஆவி அந்த வார்த்தையை ஒரு உண்மைக்கு உயிர்ப்பிக்கும், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஓ, என்னே!

79180 உலகத்தின் ஸ்தாபனத்தை, மதசம்பந்தமான குழுவை விட்டு வெளியேறுங்கள். அது அந்த சிகரெட் பெட்டியைப் போன்று காட்டில் கிடக்கட்டும். அது அழுகிப் போகட்டும். அது—அது ஒரு தவறான வடிகட்டி. அதைக் கொடுக்கிற கிறிஸ்துவாகிய, வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள், அது நித்திய ஜீவனை வந்தடையச் செய்கிறது, அதை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும், நித்திய ஜீவனின் ருசியைப் பாதுகாக்கிறது. 181 அந்த வார்த்தை, நீங்கள் முன்குறிக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதைக் காண்பீர்கள். அதை உங்களிடமிருந்து மறைக்க வழியேக் கிடையாது. நீங்கள் அங்கே நோக்கிப் பார்த்து, “ஏன், அது என் முகத்திற்கு முன்பாக மிகவும் தெளிவாக இருக்கிறதே! நான் அதை நோக்கிப் பார்ப்பேன்; அது அங்கே உள்ளது. நான் அதை சரியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் அதைக் காண்கிறேன். இதோ அது, வார்த்தை; ஒவ்வொரு வார்த்தையும், வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஜீவிக்கிறது. அப்படியானால் நீங்கள் விரும்புகிற நித்திய ஜீவனின் ருசி உண்டு. நீங்கள் அதனூடாக சுவாசிக்கும்போது, தேவனுடைய வடிகட்டியினூடாக என்ன வரமுடியும்? ஆவியைத் தவிர வேறொன்றுமில்லை; உலகம் இல்லை; அவிசுவாசமே இல்லை. அது தேவனுடைய வடிகட்டியாயுள்ளது. நீங்கள் அதனூடாக சுவாசிக்கும்போது, பரிசுத்த ஆவியைத் தவிர வேறு எதுவும் அதனூடாகச் செல்ல முடியாது.

80182 இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியின் அத்தாட்சியைப் பெற்றுள்ளீர்கள், பாருங்கள், ஒரு பரிசுத்த மனிதன் அல்லது ஸ்திரீயின் சுவை. அவர்கள் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளனர். இந்த வார்த்தை அவர்களுக்கு உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறபடியால், அவர்கள் ஜீவிக்கிறார்கள்; ஒரு சிந்தையுள்ள மனிதனுடைய வடிகட்டி, ஒரு பரிசுத்த மனிதனுடைய ருசி. 183 சிகரெட் நிறுவனங்களைப் போல உலகத்தை ஒரு வஞ்சகத்தின் கீழ் கொண்டு செல்லாதீர்கள், ஆனால் உண்மையான சிந்தனையுள்ள மனிதனின் வடிகட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சுவாசிக்கும் சுவாசத்தையும், நீங்கள் உண்ணும் உணவையும், நீங்கள் இருக்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் வடிகட்டி; அதை தேவனுடைய வார்த்தையினூடாக ஊதினால், நீங்கள் ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையைப் பெற்றுக்கொள்வீர்கள். ஏனென்றால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறபடியால், அது அதை பிறப்பிக்கும். 184 நாம் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை, நான் அறிவேன்…நாம் அவ்வாறு இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நாம் அவ்வாறில்லையென்றால், கிறிஸ்துவின் சரீரத்தின் பாகமாயிருக்கிற யாரோ ஒருவர் இன்றைக்கு உலகத்தில் இருக்கிறார்; அது தேவனுடைய வார்த்தையினால் மாத்திரமே, நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் காலத்திற்கான தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் ஜீவிக்கும்.

81185 ஸ்தாபனம் எங்கே என்று எனக்குப் புரியவில்லை.…அது சம்பவிக்கும் என்று, வேதத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், மற்றும் இருக்கப்போகும் காரியங்கள், நாம் இப்பொழுது அதில் சரியாக ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். இங்கே நாம் இப்போது அதில் வாழ்கிறோம். இதைத் தவிர வேறெந்த காரியமும் எங்கே இருக்க முடியும் என்பதை என்னால் காண முடியவில்லை. 186 சபையே, என்றோ ஒரு நாள் நான் உங்களோடு நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டும் என்பதை நான் உணருகிறேன். புகழ்ச்சிக்காக உங்களிடத்தில் தவறான ஒன்றைக் கூறுவது எனக்கு தூரமாய் இருக்கட்டும். எனக்கு அது வேண்டாம். எனக்கு ஆசை இருந்திருந்தால், நான், எனக்கு மனித ஆசை மட்டும் இருந்திருந்தால், என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டிற்குச் சென்று எனக்காக ஒரு அறையைக் கட்டிக்கொள்வேன், என்னுடைய எஞ்சியுள்ள ஜீவியம் முழுவதும் கண்ணி வைத்து வேட்டையாடுவேன். நான் வயோதிகமாகி, களைப்புற்று, களைப்புற்று, தளர்வுற்றுக் கொண்டிருக்கிறேன், ஆனால் என்னால் விட்டுவிட முடியவில்லை. எனக்குள்ளாக ஏதோ ஒன்று உள்ளது. நான் சத்தியத்தையும், முழு சத்தியத்தையும் கூறவில்லையென்றால், எனக்கு ஐயோ. சரீரத்தின் கடைசி சுவாசம் என்னை விட்டு நீங்கும் வரை நான் இங்கே நிற்கவில்லையென்றால் எனக்கு ஐயோ. யார் என்ன கூறினாலும் பொருட்படுத்தாமல், நான் நிற்க வேண்டும். நான் தேவனுக்கு முன்பாக பொறுப்புள்ளவனாயிருக்கிறேன்.

82187 நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிற காரியங்கள் சத்தியமாயிருக்கின்றன என்று நான் உண்மையாகவே விசுவாசிக்கிறேன். நான் அதை பிரசங்கிக்கிறேன் என்ற காரணத்தினால் அல்ல. இல்லை, என் சகோதரனே. இல்லை ஐயா. தேவன் என் இருதயத்தை அறிந்திருக்கிறார். நான் எப்படியாய் சபையில் அமர்ந்து அபிஷேகம் பண்ணப்பட்ட பிரசங்கத்தைக் கேட்க விரும்புகிறேன். அது எனக்கு எவ்வளவு இலகுவாயிருக்கும், ஏனென்றால் நிச்சயமாகவே பிரசங்க பீடத்திலுள்ள மனிதனைப் போன்றே நித்திய ஜீவனை நான் உடையவனாயிருப்பேன். அவரைப் போலவே நானும் அதன் ஒரு பாகமாக இருக்கிறேன். நான் அதே பரலோகத்திற்குச் சென்று, அதே சிலாக்கியங்களைப் பெற்றிருப்பேன். இந்தக் காயங்கள், அடிகள் அனைத்தையும் தாங்கிக் கொள்ளாமல், அங்கே புறப்பட்டுச் செல்வது எனக்கு எவ்வளவு எளிதாக இருக்கும். ஏனென்றால், இரவு முழுவதும், ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி; இப்படி நேர்ந்துள்ள காரியங்களோடு இரவு முழுவதும் போராடிக்கொண்டிருப்பதை விட அது எவ்வளவு சுலபமாயிருக்கும். நான் அடுத்த நாள் காலையில் என்னுடைய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, என்னுடைய மீன் பிடிக்கும் தூண்டிலை எடுத்துக்கொண்டு, மீன்பிடிக்க அல்லது வேட்டையாடச் செல்வது எவ்வளவு சுலபமானது. அது எவ்வளவு எளிதாக இருக்கும்! சகோதரனே, அது என்னுடைய பங்கு. என்னுடைய கடமையின் பதவியை ஒருபோதும் புறக்கணிக்காமல், உத்தமமாகவும், உண்மையாகவும் நிற்க தேவன் எனக்கு உதவி செய்வாராக, ஒரு பரிசுத்த மனிதனுடைய ருசியை உங்களுக்கு அளிக்கும் ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை உங்களுக்கு பிறப்பிக்கும். 188 சிந்திக்கும் மனிதன் வடிகட்டிய தண்ணீர், தீட்டுக் கழிக்கும் ஜலம். அது தேவனுடைய வார்த்தையாகிய பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுதலாய் உள்ளது. சிந்திக்கும் மனிதன், அவன் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிற மனிதன், வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் பதில் கூற வேண்டும் என்பதை அறிந்திருக்கிறான், அது உங்களுடைய இருதயத்தில் உள்ள அந்த ருசியை திருப்திபடுத்தும். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், அதை பெற்றுக்கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக.

83189 அன்புள்ள தேவனே, இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. கடிகாரம் இப்பொழுது நகர்ந்து சென்றுவிட்டது. செய்தியானது இப்பொழுது சரித்திரத்திற்குள் செல்கிறது, அது புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் செய்த ஒவ்வொரு அசைவுக்கும், நாம் கூறின ஒவ்வொரு வார்த்தைக்கும், எங்களுடைய சிந்தையினூடாக சென்ற ஒவ்வொரு எண்ணமும், ஒலிப்பதிவாகி இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஜீவியம் முடிவுறும் வரை அது தொடர்ந்து இயங்கும். அதன்பின்னர் நாம் நியாயத்தீர்ப்பின் நாளிலே பதிலளிப்போம். 190 ஓ, தேவனே, நாங்கள் விசுவாசிக்கின்ற வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்த மகத்தானவரே, நான் இந்நாளின் இந்த ஜனங்களுக்காக ஜெபிக்கிறேன். நான் அவர்களோடு எனக்காக ஜெபிக்கிறேன், கர்த்தராகிய இயேசுவே, நீர் உம்முடைய வடிகட்டுதலைப் பற்றிக் கொள்ள வேண்டும். கர்த்தாவே, நான் புனிதத்துவத்தை பாழாக்குகின்ற எதையாவது கூறினால், என் இருதயத்தில் நான் அதை அறியேன். நான் உம்முடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதைப் போன்ற ஒரு காரியத்தை உபயோகிப்பது தவறாயிருந்தால், அதற்காக நீர் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

84191 ஆனால் கர்த்தாவே, அங்கே காட்டில் நீர் என்னிடத்தில் பேசினபோது, காலையிலுள்ள நேரத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்று நான் நினைத்தேன், அதை என்னால் என் சிந்தையில் இருந்து அகற்ற முடியவில்லை. நான் அதை உம்மிடத்திலிருந்து வந்ததாக ஏற்றுக்கொண்டேன். எனவே, பிதாவாகிய தேவனே, நான் இதை ஏற்கனவே உரைத்திருக்கிறேன். தேவனே, நீர் நான் நினைத்தவிதமாகவே அது இருக்கட்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதாவது சிந்திக்கும் மனிதன், அந்த மனிதனுக்கு சிறிது சிந்தனை இருந்தால், அவன் தேவனுடைய சமூகத்தில் நிற்க வேண்டும் என்பதை அவன் அறிந்து கொள்வான், அவன் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கிற அல்லது மாசுபடுத்துகிற எந்தக் காரியத்தையும் தன் ஆத்துமாவில் ஏற்றுக்கொள்ளமாட்டான். 192 பிதாவே, நான் இதை இன்றைய ஸ்தாபனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, கர்த்தாவே, வித்தியாசமாக இருப்பதற்கு அல்ல என்பதை நாங்கள் அதை உணருகிறோம். என் இருதயத்திலிருந்து என்றோ ஒரு நாள் நீர் என்னை நியாயந்தீர்ப்பீர். தேவனே, அது வித்தியாசமாயிருக்க வேண்டியதாயிருக்கவில்லை, ஆனால் அது உண்மையாயிருக்க வேண்டும் என்பதையும், உத்தமமாக இருக்க முயற்சித்து, நான் இப்பொழுது என்னுடைய கரத்தில் கடற்கரையிலிருந்து கரைக்கு, உம்முடைய இரத்தத்தை கிரயத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என்பதை உணருகிறேன். அவர்களில் அநேகர் அந்த அறிக்கையை விசுவாசித்திருக்கிறார்கள். 193 பரலோகத்தின் தேவனே, அவர்களில் ஒருவரும் இழக்கப்படாதிருப்பார்களாக. நான் அவர்கள் ஒவ்வொருவரையும் உரிமை கோருகிறேன், பாவத்திலிருந்து வடிகட்டும் வடிகட்டியை அவர்களுக்கு முன்பாக வைத்திருக்கிறேன், தீட்டுக்கழிக்கும் ஜலம், இயேசு கிறிஸ்துவின் இரத்தம், வார்த்தை மாம்சமானது. கர்த்தாவே, அதை அருளும். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு வாக்குத்தத்தத்தின் மூலமாகவும் எங்களுடைய ஆத்துமாக்களுக்குள்ளாக ஊற்றப்படுவாராக. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியின் ஜீவனுள்ள பிரதிநிதிகளாயிருப்போமாக, கண்களின் நேரத்திலும், மாலையில் ஒளியைக் காணும் நேரத்திலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை உமக்கு சமர்ப்பிக்கிறோம். ஆமென்.

85194 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [“ஆமென்.”] நான், “மனிதனின் வடிகட்டி” என்று கூறி, நான் தவறாக ஏதாகிலும் கூறினால், அதற்கு மேல் என்னால் கூற முடியாது. எனக்கு கல்வியறிவு கிடையாது. எனக்கு என்ன தோன்றுகிறது என்பதை நான் கூற வேண்டும். அது அங்கே கிடப்பதை நான் கண்டபோது, நான், “என்ன ஒரு மாய்மாலத்தின் எழுத்துக்களைக் கொண்ட வரி!” என்று எண்ணினேன். ஏதோ ஒன்று, “சபையைப் போல” என்று கூறியது. 195 சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி! ஓ, என்னே! அதற்கு அதைக் காட்டிலும் அதிகமான காரியம் உண்டு. சிந்திக்கும் மனிதன் அதை உபயோகிக்கவேமாட்டான். பார்த்தீர்களா? நிச்சயமாக இல்லை. புகைபிடிக்கும் ஒரு மனிதனின் ருசியை அது வாஞ்சிக்கிறது, அது உண்மை, ஏனென்றால் அவனுடைய ருசியை திருப்திபடுத்த அவன் அதைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு உண்மையான, சிந்திக்கும் மனிதன் தன்னுடைய ஆத்துமா நியாயத்தீர்ப்புக்கு செல்லப் போகிறது என்பதை அறிந்திருக்கிறான், அவன் தேவனுடைய வார்த்தையினூடாக தன்னுடைய சுவையை வடிகட்டுவான். “ஏனென்றால் பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் அவன் பிழைப்பான், அது நம்மை பாவத்திலிருந்து பிரிக்கிற தீட்டுக் கழிக்கும் ஜலமாய் உள்ளது. ஏனென்றால் அது வார்த்தையினூடாக வரும்போது, அதை அவிசுவாசிப்பது பாவம் என்று நாம் காண்கிறோம், எனவே நாம் அதை விசுவாசித்து, தொடர்ந்து செல்கிறோம். அது பாவத்திலிருந்து ஒரு வேறு பிரிதலாகும். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நான் அவரை நேசிக்கிறேன், நான் நேசிக்கிறேன்… நாம் இப்பொழுது நம்முடைய கரங்களை அவரண்டை உயர்த்துவோம். ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தின் மேல்.

86196 அவர் என்ன கூறினார்? “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்போது, நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” இப்பொழுது நாம் இதை மீண்டும் பாடும்போது, நாம் யாரோ ஒருவருடைய கரத்தைக் குலுக்கி, “சகோதரனே, நானும் உங்களை நேசிக்கிறேன்” என்று கூறுவோமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான்…(அதை நீங்கள் அறியும்படிக்கு இது…) …அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தின் மேல்.

87197 இப்பொழுது, சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை நீங்கள் விரும்புகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சகோதரனே, சகோதரியே, நாளை உலகத்தோடு கைகோர்க்க நீங்கள் தெருவில் செல்லும்போது, சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை நீங்கள் பெற்றுள்ளீர்களா? அந்த மனிதன் உங்களை பரிசுத்த உருளையர் என்று அழைக்கும்போது, நீங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை உபயோகிக்கிறீர்களா? யாராவது ஒருவர் உங்களுக்கு எதிராக பொல்லாங்கான காரியத்தை கூறும்போது, சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி உங்களுக்கு உண்டா? பாருங்கள், தீமைக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபியுங்கள், அப்பொழுது நீங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியினூடாக சுவாசிக்கிறீர்கள்.

88198 நாம் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியது போல, உங்களை நேசிக்கிறவர்களை நீங்கள் நேசித்தால், கர்த்தருக்குள் மிகவும் பிரியமானவர்களாயிருப்பீர்கள், அது நல்லதுதான், ஆனால் நீங்கள் நேசிக்கக் கூடாதவர்களையும் நேசிக்க முடியுமா? அதுதான் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி. அதுவே உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவின் ஆவியாயுள்ளது, உங்களை நேசிக்காதவர்களை நேசித்தால், அப்பொழுது நீங்கள் தேவனுடைய பலனைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஆனால், இப்பொழுது, நீங்கள் அதை ஒரு கடமையாக செய்தால், நீங்கள் இன்னமும் சிந்திக்கும் மனிதனைப் பெற்றிருக்கவில்லை…நீங்கள் இரண்டாம் சுழற்சியில் தான் இருக்கிறீர்கள். ஆனால் அது உங்களுடைய இருதயத்திலிருந்து நீங்கள் அவரை உண்மையாகவே நேசிக்கிறீர்கள், அப்பொழுது நீங்கள் சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியினூடாக சுவாசிக்கிறீர்கள். அது ஒரு பரிசுத்த மனிதனுடைய ருசியை திருப்திபடுத்துகிறது, அதாவது நீங்கள் உங்களுடைய இருதயத்திலிருந்து ஒவ்வொருவரையும், ஒவ்வொரு காரியத்தையும், என்ன நடந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் அற்புதமானவரல்லவா? …முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தின் மேல். நாம் ஒளியில் நடப்போம், அது ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு அது வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், இயேசு, உலகத்தின் ஒளி. நாம் இந்த ஒளியில் நடப்போம், அது அப்படிப்பட்ட ஒரு அழகான ஒளி; வடித்த இரக்கத்தின் துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு அது வருகிறது; ஓ, இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், இயேசு, உலகத்தின் ஒளி. ஒளியின் பரிசுத்தவான்களே, நீங்கள் எல்லோரும் வந்து, இயேசு, உலகத்தின் ஒளி; அப்பொழுது பரலோகத்தின் மணிகள் ஒலிக்கும், இயேசு, உலகத்தின் ஒளி. ஓ, நாம் ஒளியில் நடப்போம், அது அப்படிப்பட்ட ஒரு அழகான ஒளி; இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு அது வருகிறது; ஓ, இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், இயேசு, உலகத்தின் ஒளி. (நீங்கள் அதை விரும்புகிறீர்களா?) ஓ, நாம் இந்த ஒளியில் நடப்போம், அது அப்படிப்பட்ட ஒரு அழகான ஒளி; இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கிற இடத்திற்கு அது வருகிறது; இரவும் பகலும் நம்மைச் சுற்றி பிரகாசிக்கும், அது இயேசு, உலகத்தின் ஒளியாயுள்ளது. (நான் அதை விரும்புகிறேன்!) என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, கல்வாரியின் ஆட்டுக்குட்டியானவரே, ஓ தெய்வீக இரட்சகரே; இப்பொழுது நான் ஜெபிக்கையில், என்னுடைய பாவம் முழுவதையும் எடுத்துக் கொண்டு… கர்த்தாவே, வார்த்தையினூடாக என்னை வடிகட்டும். ஓ இந்நாள் முதற்கொண்டு நான் முழுவதும் உம்முடையவனாக இருப்பேனாக! அதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள், “முழுமையாய் உம்முடையது” என்ற வார்த்தையினூடாக வடிகட்டப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் இருண்ட சிக்கலில் நான் மிதிக்கும்போது, துக்கம் என்னைச் சுற்றிலும் பரவுகையில், நீரே என்னுடைய வழிகாட்டியாயிரும்; இருளை பகலாக மாற்ற கட்டளையிடும், துக்கத்தின் பயங்களைத் துடைத்து, உம்மிடத்திலிருந்து புறம்பே நான் ஒருபோதும் வழிதவறிச் செல்ல அனுமதிக்க வேண்டாம். [ என் விசுவாசம் உம்மை நோக்கிப் பார்க்கிறது என்ற பாடலை சகோதரன் பிரான்ஹாம் பாடுகிறார்—ஆசி.] …என் மயக்கமடைந்த இருதயத்திற்கு, என்னுடைய வைராக்கியம் ஏவுகிறது; ஓ, இருள் பகலாக மாற கட்டளையிடும், துக்கத்தின் கண்ணீரைத் துடைத்து, ஓ இந்நாள் முதற்கொண்டு நான் உம்முடையவனாய் இருப்பேனாக!

89199 அன்புள்ள தேவனே, நாங்கள் உம்மிடம் பாட விரும்புகிறோம், ஏனென்றால் அங்கே நாங்கள் எங்களுடைய உணர்வுகளையும், எங்களுடைய உணர்ச்சியையும், முழு சபையையும் வெளிப்படுத்துகிறோம், நீர் எங்கள் மேல் ஜீவ வார்த்தையை ஊதுவீராக. கர்த்தாவே, நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அந்த பாடலை பாடுகையில், கர்த்தாவே, நீர் எங்களை ஏற்றுக் கொள்வீரா? அதுவே எங்களுடைய வாஞ்சையாயுள்ளது, தேவனுடைய வார்த்தையினூடாக வடிகட்டப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒளியில், சுவிசேஷத்தின் வெளிச்சத்தில் நடக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொரு நாளும் எங்கள் வழியை அன்பினால் நிரப்பி, நாங்கள் பரலோகப் புறாவோடு நடக்கையில்; நாங்கள் எப்பொழுதும் போகட்டும், ஒரு பாடலுடனும், ஒரு புன்னகையுடனும், ஒவ்வொரு நாளும் எங்கள் வழியை அன்பினால் நிரப்பும். 200 கர்த்தாவே, அதை அருளும். இப்பொழுது எங்களை ஒருமித்து ஆசீர்வதியும். உம்முடைய கிருபையும், இரக்கமும் எங்களோடு இருப்பதாக. தேசம் முழுவதிலும் உள்ள வியாதியஸ்தர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சுகப்படுத்தும். 201 இன்றிரவு சகோதரன் காக்கின்ஸ் நலமாக வீடு செல்ல, மருத்துவமனையை விட்டு வெளியேற அவரை அனுமதித்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் செய்திருக்கிற எல்லாக் காரியங்களுக்காகவும், இப்பொழுது நாங்கள் உயர்த்தப்பட்டதை உணருகிற எங்களுடைய சொந்த பெலத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

90202 கர்த்தாவே, இன்றிரவு வெட்டப்பட்டு அளிக்கப்பட்ட சிறு செய்திக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நான்—நான் அதைச் சரியாகச் செய்யவில்லை, ஆனால் கர்த்தாவே, அது எதற்காக அளிக்கப்பட்டது என்பதை அவர்கள் கண்டு அறிந்துகொள்ளும்படியாக, நீர் ஜனங்களின் பார்வையில் அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அதிலிருந்து மகிமையைப் பெற்றுக்கொள்ளும், நாங்கள் இந்த புரிந்துகொள்ளுதலை உடையவர்களாயிருப்போமாக, தேவனுடைய வார்த்தையாகிய அப்பத்தினால் நாங்கள் ஜீவிக்க வேண்டும் என்றும், அவருடைய பிள்ளைகளுக்காக மாத்திரமே தேவனிடத்திலிருந்து வடிகட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அது ஒரு வேறுபிரிக்கப்பட்ட சபையாயுள்ளது. அது வேறு யாருக்காகவும் அல்ல. அது அவர்களுக்கு மாத்திரமே, உம்முடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக மாத்திரமே, சிவப்பு கிடாரியின் தீட்டுக் கழிக்கும் ஜலம் இஸ்ரவேல் சபைக்கு மாத்திரமாயிருந்தது. எனவே பிதாவே, அப்பம் ஆட்டுக்குட்டிகளுக்கு மாத்திரமே என்பதை நாங்கள் அறிவோம். இயேசு, “பிள்ளைகளுடைய அப்பத்தை எடுத்து நாய்களுக்குப் போடுவது சரியல்ல” என்றார். அதற்கு அந்த ஸ்திரீ, “ஆம், கர்த்தாவே, அது உண்மைதான், ஆனால் நான் துணிக்கைகளை எடுத்துக் கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன்” என்றாள். கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் அந்தவிதமாகவே உணருகிறோம். பிதாவே, நீர் எங்களுக்கு அளிக்க முடிந்த யாவற்றையும் நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் நாங்கள் உமக்காக பசியாயும், தாகமாயும் இருந்து கொண்டிருக்கிறோம். 203 எங்களுடைய பசிகள் நிறைவேற்றப்பட்டு, எங்களுடைய வாஞ்சைகள் தெரியப்படுத்தப்படும்படி அருளும், பிதாவே, நாங்கள் ஒரு நீதிமானுடைய வாஞ்சையை உடையவர்களாயிருக்க விரும்புகிறோம். நீதியுள்ள மனிதன் இயேசு கிறிஸ்துவாயிருந்தார், வார்த்தையாகிய பிதாவின் சித்தத்தைச் செய்ய வேண்டும் என்பதே அவருடைய வாஞ்சையாயிருந்தது. பிதாவே, அதை எங்களுக்கு அருளும். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இயேசுவின் நாமத்தை உம்மோடு கொண்டு செல் என்ற நம்முடைய கலைந்து செல்லும் பாடலை நாம் பாடுகையில் இப்பொழுது நாம் எழும்பி நிற்கட்டும்.

91204 இப்பொழுது செய்தியானது இன்றிரவு சென்றுள்ள எல்லா இடங்களிலும், நாம் ஜெபத்தில் கலைந்து செல்லுகையில், இப்பொழுது தேவன் உங்களோடு இருப்பாராக. அங்கே உள்ள, நீங்கள் ஒவ்வொருவரும், நான் அதை உங்களிடத்தில் கொண்டு வருவது எவ்வளவு மகிழ்ச்சியாயிருந்ததோ அதைப் போலவே நீங்கள் கேட்டு மகிழ்ந்துள்ளீர்கள் என்று நான் நம்புகிறேன். தேவன் அதை உங்களுடைய இருதயங்களில் வைத்து, அதற்கான சரியான வியாக்கியானத்தை உங்களுக்கு அளிப்பார் என்று நான் நம்புகிறேன். 205 இங்கே கூட்டத்தில் இந்த கைக்குட்டைகளை வைத்துள்ள ஜனங்களாகிய உங்களுக்கு, நான் அவைகளின் மேல் கைகளை வைத்திருக்கிறேன். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், சுகவீனமானவர்கள் யாரும் நம் மத்தியில் இருக்கக்கூடாது, நம்முடைய தேவன் எப்படி ஜெபத்திற்கு பதிலளிக்கிறார் என்பதை நீங்கள் பாருங்கள். 206 நாம் ஒன்று கூடும்போது, “என் நாமம் தரிக்கப்பட்ட ஜனங்கள் ஒன்று கூடி ஜெபம் பண்ணினால், அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கேட்பேன்” என்றார். அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார்.

92207 எனவே, நாம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. நாம் ஒரே நபர்; நாம் யாவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம். ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவருக்காக ஜெபியுங்கள்; நான் உங்களுக்காக ஜெபிப்பது போல நீங்களும் எனக்காக ஜெபியுங்கள். நாங்கள் உங்களை மீண்டும் காணும் வரை தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 208 நீங்கள் ஒரு நிலையானவராக இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்…இங்கே அருகில் வசிப்பவர்களே, கூடாரத்திற்கு வந்து, நம்முடைய நல்ல போதகரான சகோதரன் நெவிலை இங்கே சந்தியுங்கள். அவர் உங்களுக்கும், சகோதரன் மான் அவர்களுக்கும் மற்றும் இங்கே கூடாரத்தில் உள்ள அருமையான ஜனங்களுக்கும் நன்மை செய்வார். 209 நீங்கள் சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் அவர்களுடனோ அல்லது தேசம் முழுவதிலும் உள்ள மற்றவர்களுடனோ நெருங்கியிருந்தால், நியூயார்க் மற்றும் அரிசோனா மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் அவர்கள் தங்களுடைய கூட்டங்களை நடத்திய பல்வேறு இடங்களிலும், நீங்கள் அங்கே இருந்தால், அந்த சபைகளுக்குச் செல்லுங்கள். நீங்கள் மீண்டும் திரும்பி வந்து, கர்த்தராகிய இயேசுவைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ள போதகர் உங்களுக்கு உதவி செய்யும்படி நாங்கள் ஜெபிக்கிறோம்.

93210 இயேசுவின் நாமத்தை உங்களுடன் கொண்டு செல்லுங்கள் என்று நாம் பாடுகையில், இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. …இயேசுவின் நாமத்தை உங்களோடும், துன்பமும் துயரமுமான பிள்ளையே; அது உங்களுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அளிக்கும், (நீங்கள் என்ன…போகிறீர்கள்? அவர் உங்களைத் தரித்துக்கொள்வார் …?… ) …நீங்கள் போங்கள். விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!), ஓ எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையானது!) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்.

94211 இன்றிரவு சபையோரை நோக்கிப் பார்க்கிறேன், அங்கே பின்னால் உள்ள சகோதரன் எஸ்டில் பீலர், சகோதரன் பால்மர், மற்றும் அநேகர், சகோதரன் ஜே.டி, மற்றும் அநேக ஊழியக்காரர்கள் இங்கே சுற்றி நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்களை என்னால் கூற முடியவில்லை. இங்குள்ள உங்கள் ஒவ்வொருவரையும், நீங்கள் யாவரும் சபையிலிருந்து கலைந்து செல்ல அல்லது ஏதோ ஒரு காரியத்தை செய்ய நான் விரும்புகிறேன். நீங்கள் புரிந்து கொண்டீர்கள், நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? நீங்கள் ஒரு கிறிஸ்தவ இருதயத்தை உடையவர்களாயிருக்கிறீர்கள் என்பதையும், நாம்…எப்படி—எப்படி நாம் இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நாம் முழுவதுமாக கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே நபராயிருக்கிறோம். 212 இப்பொழுது இந்த நம்முடைய சகோதரன் மார்டின் இங்கே ஜெபத்து அனுப்பி வைக்கையில், இப்போது நாம் பாடுகையில் இந்த அடுத்த சரணத்தை நாம் நினைவில் கொள்வோமாக. நான் விரும்புவது…இது சகோதரன் ஏர்ல் மார்டின் ஆர்கன்சாஸிலிருந்து இல்லை—இல்லை மிசோரியிலிருந்து வந்தவர் என்று நான் நினைக்கிறேன். [சகோதரன் ஏர்ல் மார்டின், “மிசோரி” என்று கூறுகிறார்.—ஆசி.] மிசோரி, ஆர்கன்சாஸ், மிசோரி லைன் அங்கே உள்ளது. அவர்கள் அங்கே ஒரு சபையை வைத்துள்ளனர். 213 நான் இந்த மற்ற சகோதரனை அங்கே கீழே இருந்து கவனித்தேன், என்னால் அவருடைய பெயரை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை, ப்ரூவர். அவர் இன்று காலை இங்கிருந்தார். இன்றிரவும் அவர் இங்கிருப்பார் என்று நான் யூகிக்கிறேன். ஆம், சகோதரன் ப்ரூவர், அவர் இங்கு நிற்பதை நான் காண்கிறேன். நான் அநேக முறை வந்து அவர்களுடைய சபைகளை பிரதிஷ்டை செய்வதாக வாக்குப்பண்ணினேன். என்னால் முடிந்தளவு, கர்த்தருடைய ஒத்தாசையினால் நான் என்றாவது ஒரு நாள் அங்கு செல்வேன். இப்பொழுது, இந்த அடுத்த சரணத்தை நாம் இப்பொழுது பாடுகையில்: இயேசுவின் நாமத்தில் தலைவணங்கி, அவருடைய பாதத்தில் விழுந்து பணிந்து, பரலோகத்தில் ராஜாதி இராஜாவாக நாம் அவருக்கு முடிசூட்டுவோம். நம்முடைய யாத்திரை முடிவுறும்போது. இப்பொழுது நாம் அதைப் பாடுவோமாக. இயேசுவின் நாமத்தில் தலைவணங்கி, அவருடைய பாதத்தில் விழுந்து பணிந்து, பரலோகத்தில் ராஜாதி இராஜாவாக நாம் அவருக்கு முடிசூட்டுவோம். நம்முடைய யாத்திரை முடிவுறும்போது. விலையேறப்பெற்ற நாமம், (விலையேறப்பெற்ற நாமம்!) ஓ எவ்வளவு இனிமையானது! (ஓ எவ்வளவு இனிமையானது!) பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம். ஓ, இயேசுவின் நாமத்தை உன்னோடு கொண்டு செல், ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக, (இப்பொழுது கவனியுங்கள்.) ஓ, சோதனைகள் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, (நீங்கள் என்ன செய்ய வேண்டும்?) ஜெபத்தில் அந்த பரிசுத்த நாமத்தை அப்படியே உச்சரியுங்கள். விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. ஓ, விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; விலையேறப்பெற்ற நாமம், (அதில் ஞானஸ்நானம் பண்ணப்படுதல்; அதில் ஜெபம்பண்ணுதல்) ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம். சகோதரர் மார்டின். [சகோதரன் மார்டின் ஜெபிக்கிறார்—ஆசி.] 