கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார்

65-0822M

நம நமமடய தலகள வணஙகவமக. கரததரகய இயசவ, மகததன மநதயன மயபபன, கரததவ, நஙகள உமகக எவவளவய கடனபடடளளம, எஙகளடய இரதயஙகளல நர ஊறறயரககற அனபறகக நஙகள ஒரபதம உமகக கரயதத சலதத மடயத. நஙகள எஙகளடய தலகள வணஙக, உமமடய பரசனனததல நறகயல, நஙகள மகவம தகதயறறவரகளக உணரகறம. எலல தவறகளலரநதம, எலல பவஙகளலரநதம எஙகள சததகரககமபட நஙகள உமம வணடக களகறம

கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார்

65-0822Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1241965-08-22

கிறிஸ்து தமது சொந்த வார்த்தையில் வெளிப்படுகின்றார்

65-0822Mகாலைஜெபர்ஸன்வில் இந்தி1241965-08-22

1 நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. கர்த்தராகிய இயேசுவே, மகத்தான மந்தையின் மேய்ப்பனே, கர்த்தாவே, நாங்கள் உமக்கு எவ்வளவாய் கடன்பட்டுள்ளோம், எங்களுடைய இருதயங்களில் நீர் ஊற்றியிருக்கிற அன்பிற்காக நாங்கள் ஒருபோதும் உமக்கு கிரயத்தை செலுத்த முடியாது. நாங்கள் எங்களுடைய தலைகளை வணங்கி, உம்முடைய பிரசன்னத்தில் நிற்கையில், நாங்கள் மிகவும் தகுதியற்றவர்களாக உணருகிறோம். எல்லா தவறுகளிலிருந்தும், எல்லா பாவங்களிலிருந்தும் எங்களை சுத்திகரிக்கும்படி நாங்கள் உம்மை வேண்டிக் கொள்கிறோம். இன்றைக்கு நீர் எங்களுடைய சரீரங்களை பெலப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அநேகர் சுகவீனமாயும், அவதியுறும் நிலையில் இருக்கின்றனர், அது இங்கே காண்பிக்கிறபடி, கைக்குட்டைகளோடு தொலைபேசியிலும் மற்றும் எங்கும் வேண்டுதல்கள் வருகின்றன. 2 நாம் இந்த உலகத்தின் சரித்திரத்தை இப்பொழுது முடித்துக் கொண்டிருக்கிறோம் என்றும், சீக்கிரத்தில் நேரம் நித்தியத்திற்குள் மங்கிப் போய்விடும் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம், அந்த வேளைக்காக நாங்கள் ஆயத்தமாயிருக்க விரும்புகிறோம். அந்தக் காரணத்தினால்தான் அந்த நேரத்துக்காக ஆயத்தப்படுவதற்காகவே நாம் இந்தக் காலையில் இங்கே கூடி வந்திருக்கிறோம். இன்று காலை தேசம் முழுவதிலும், கடற்கரையிலிருந்து கடற்கரைக்கு அநேக தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்று எனக்குக் கூறப்பட்டுள்ளது. எங்கெல்லாம் எங்களுடைய சத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றனவோ, அந்த சிறு குழு ஆசீர்வதிக்கப்படுவதாக. அவர்களுக்கு மத்தியில் உள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தும், நீர் அவர்களுடைய ஆத்துமாக்களை எல்லா பொல்லாங்குகளிலிருந்தும் சுத்திகரிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்களும் கூட அந்த மகத்தான சிலாக்கியத்தை அனுபவித்து மகிழும்படி, இந்தக் காலையில் இங்கே கூடாரத்தில் எங்களுக்கு உதவி செய்யும்.

23 இன்றைக்கு நீர் எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையின் மூலமாக எங்களோடு பேசும்படி நாங்கள் வேண்டிக் கொள்கிறோம், நாங்கள் இப்பொழுது நாடு தழுவிய ரீதியில் ஒன்று கூடியிருக்கையில், எங்களுக்கு தேவையான காரியங்களை பரிசுத்த ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்துவாராக, நாங்கள் ஒரு சிறிய ஜனமாயிருக்கிறோம் என்பதை உணருகிறோம், ஆனால் மீட்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு ஸ்தானத்தை உடையவர்களாயிருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்துள்ளோம். கர்த்தாவே, இந்தக் காரியங்களை எங்களுக்கு அருளும். 4 நாங்கள் ஆராதனையை முடித்துவிட்டு, தேசம் முழுவதிலும் உள்ள நம்முடைய வெவ்வேறு வீடுகளுக்குச் செல்லும்போது, எம்மாவூரிலிருந்து வந்தவர்களைப் போல நாங்களும், “வழியிலே அவர் நம்முடனே பேசினபோது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று கூறுவோமாக. 5 இப்பொழுது, பிதாவே, நான் என்ன கூறினாலும் நிச்சயமாக போதாது என்பதை நான் அறிவேன், இப்பொழுது தேசம் முழுவதிலும் இதை வானொலி அலைவரிசை மூலமாக கேட்டுக் கொண்டிருக்கும் அருமையான கிறிஸ்தவர்களுக்கு, அது—அது போதுமானதாயிருக்காது. அது எந்த நன்மையையும் செய்யக் கூடிய ஒன்று என்று என்னால் கூற முடியாது, ஏனென்றால் நாம் எல்லோரும் ஒரே வகையினரில் இருக்கிறோம். நாம் மானிடர்கள், அழிவுள்ளவர்கள். ஆனால் மகத்தான பரிசுத்த ஆவியானவரே பேசட்டும்; அவர் வார்த்தையைப் பற்றிப்பிடித்து தம்மை வெளிப்படுத்துவாராக. நாம் இப்பொழுது இயேசுவின் நாமத்தில் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஆமென். நீங்கள் அமரலாம்.

36 நான் ஒருவிதமாக…எனக்கே ஆச்சரியமாய் உள்ளது. நான் அவள் டூசானில், கேட்டுக் கொண்டிருக்க நேர்ந்தால், நான் திரும்பி வரும்போது எனக்கு எந்த ஆராதனையும் இருக்காது என்று நான் நினைக்கவில்லை என்று என்னுடைய மனைவியிடம் கூறினேன்; நான் துணிகளைக் கூட கொண்டு வரவில்லை. நான் என்னுடைய மருமகளிடம் கூறினேன், அவள் என்னுடைய மேற்சட்டையை சலவைப் பெட்டியிட்டாள், நான், “நான் பிரசங்க பீடத்திற்குப் பின்னால் தரித்திருக்கிறேன்…அவர்கள் கால்சட்டை ஒருவிதமாயும், மேலங்கி வேறொருவிதமாயும் இருப்பதை அவர்கள் அறிந்து கொள்வதில்லை” என்றேன். அவைகள் நான் வீட்டில் அணிந்திருந்தவை. ஆனால் மேடா, அவள் என்னுடைய சட்டையை சலவை செய்தாள், எனவே ஒவ்வொரு காரியத்தையும்…கவலைப்படாதே; எல்லாமே நன்றாக இருக்கிறது.

47 இப்பொழுது, இங்கே நமக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது, அதாவது மிகவும் அருமையான ஒரு சகோதரன்… பிரஸ்காட், அரிசோனாவிலுள்ள பிரெஸ்காட் என்ற இடத்தில் இன்று காலை தொலைபேசியில் இணந்துவிட்டார் என்று—என்று நான் நினைக்கிறேன். சகோதரி மெர்சியரின் தந்தை இங்கே கூட்டத்திற்கு அவருடைய பாதையில் வந்துகொண்டிருக்கிறார் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அவர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், சகோதரர் காக்கின்ஸ். மேலும், சகோதரன் ஜூனியர் ஜாக்ஸன் அவர்களும் கூட, அடுத்த வானொலியில் நிலைய இணைப்பில் அவர் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அல்லது கிளார்க்ஸ்வில் அல்லது நியூ ஆல்பனியில் உள்ள அடுத்த தொலைபேசியைக் கேட்டால், அவருடைய தந்தை மருத்துவமனையில் இருக்கிறார் என்பதையும், கல்லீரலில் புற்றுநோயின் தீவிர அறுவை சிகிச்சையுடன் இருக்கிறார் என்று நான் புரிந்துகொள்கிறேன். எனவே நம்முடைய ஜெபங்களில் அவர்களை நாம் நிச்சயமாகவே நினைவு கூர விரும்புகிறோம். இப்பொழுது இங்கே மற்றவர்களும் கூட, இருக்கிறார்கள், ஆனால் நாங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. தேவன் அவர்களைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், எனவே நாம் இப்பொழுது அவர்களுக்காக ஜெபிப்போமாக.

58 அன்புள்ள தேவனே, அந்த அருமையான, வயோதிக, சுருக்கம் விழுந்த கரம் கொண்ட மனிதனான, சகோதரன் காக்கின்ஸ், வயோதிக களத்தில் அனுபவம் வாய்ந்தவர், …அவருடைய இருதயத்தில் ஏற்பட்ட ஒரு தாக்குதலினால் அவதியுற்று, எங்கோ, மருத்துவமனையில் இந்தக் காலையில் படுத்துக் கொண்டிருக்கிறார். தேவனே, அந்த ஏழை இருதயம் மிகுந்த தொல்லைகளினூடாகச் சென்றது. தேவனே, அவருக்கு உதவி செய்யும்படி, நான் ஜெபிக்கிறேன். அதை அருளும். அவர் விரும்புகிற…எங்கள் எல்லோரையும் போல அவர் ஜீவியத்தை நேசிக்கிறார், மேலும் அவர் ஜீவிக்க விரும்புகிறார். தேவனாகிய கர்த்தாவே, அதை அருளும். நீர் அவரை சுகப்படுத்தி, அவரை வெளியே கொண்டு வர வேண்டும் என்று, தேசத்தினூடாக உள்ள நாங்கள் அவருக்காக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். நீர் செய்வீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்; அவர் கூட்டத்திற்கு வருவார்.

69 சகோதரன் ஜாக்சனுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம், ஜூனியரைப் போன்ற ஒரு அருமையான பையனை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த அவருடைய விலையேறப்பெற்ற தகப்பனார் மரணத்துக்கேதுவாயிருக்கிறார். அன்புள்ள தேவனே, நீர் அவனை சுகப்படுத்த வேண்டும் என்று நான்—நான்—நான் ஜெபிக்கிறேன். அது முடியாத காரியம் போல் எனக்கு தோன்றுகிறது. மருத்துவர்கள், வைத்தியர்கள், அவர்களுக்கு—அவர்கள் அந்த விதமான ஒரு விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையே அறியாதிருக்கின்றனர். ஆனால் சகோதரன் ஹால் அவர்களையும் கூட நினைவு கூருகிறோம், லூயிவில்லில் உள்ள மிகச் சிறந்த மருத்துவர்களே இங்கே கூறின போது, கல்லீரலில் புற்று நோயோடு உள்ள, “அவர் இன்னும் சில மணி நேரங்களே உயிரோடுருப்பார்” என்று கூறினர். அவர் இன்றைக்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறார், அது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உம்முடைய கிருபையின் காரணமாகவே. ஆகையால் கர்த்தாவே, நீர் சகோதரன் ஜாக்ஸனை இன்றைக்கு சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், உமது கிருபையும், இரக்கமும் அவரோடு இருப்பதாக. 10 மேலும் இந்த பெரிய கைக்குட்டை குவியல்கள், துணிகள் மற்றும் கோரிக்கைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள்; பிதாவே, அவைகள் எல்லோரையும் நீர் அறிந்திருக்கிறீர். நீர் அவர்கள் எல்லோருக்கும் சுகத்தை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.

711 இப்பொழுது தொடங்குங்கள், இந்தக் காலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, முதல் இடத்தில், நான் வரப்போகிறேன் என்று நான் நினைக்கவில்லை. அதன்பின்னர் மீண்டும், நாம் அதை அறிவித்தபோது, நான் வந்தேன். சகோதரன் நெவில் என்னைப் பேசச் சொன்னார்! அதன்பின்னர் நாங்கள் இன்றைக்கு இருக்கப்போவதாக அறிவித்தோம், அது தேசத்தைச் சுற்றிலும் உள்ள ஜனங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. நாம் இப்பொழுது இந்த தொலைபேசி முறையைப் பெற்றுள்ளோம், அது மிக மிக அருமையானது. ஜனங்கள் தங்களுடைய வீடுகளில் அல்லது அவர்களுடைய…தங்களுடைய இடங்களிலும், தங்களுடைய சபைகளிலும் கூடி, ஆராதனையைக் கேட்க வேண்டும். நான் அதைப் பாராட்டுகிறேன்.

812 கடந்த வாரம், இந்த செய்தியின் பேரில் கடந்த ஞாயிறு நான் கூறினதன் பேரில், இப்பொழுது நான் இங்கே அநேக வேண்டுகோள்கள் கிடப்பதைக் காண்கிறேன். நான் என்ன தலைப்பிட்டேன் என்று இப்பொழுது மறந்துவிட்டேன் என்று நான் நினைக்கிறேன். ஆனால் உங்களுடைய கடன்களை செலுத்துவதைக் குறித்த ஒரு காரியத்தை நான் கூறினேன். நீங்கள் என்ன கூறினாலும் அது ஒரு பொருட்டல்ல, அது அநேகரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் காரணம் அல்ல…அவர்கள் அதை தவறாக புரிந்து கொள்ள விரும்பவில்லை, ஆனால் நீங்கள் அதை தவறாக புரிந்து கொள்ளுகிறீர்கள். இப்பொழுது யாரோ ஒருவர், “நாம் ஒரு காரை வாங்க வேண்டுமா?” என்று கேட்டார். அல்லது, “நான் என்ன செய்ய வேண்டும்…” இப்பொழுது, அதைக் குறித்து இயேசு உரைக்கவில்லை, அல்லது அங்கே வேதமோ, “ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்” என்று உரைத்துள்ளது. அது நீங்கள் செலுத்தக் கூடிய நீடித்த கடன்களாகும். அவர்களுக்கு பணம் செலுத்துங்கள். அது…அது எந்த மனிதனுக்கும் கடன்பட்டதல்ல. அது அர்த்தம் இல்லை…என்னே, நாம் நம்முடைய வாடகைக்கும், நம்முடைய தொலைபேசி கட்டணத்திற்கும், நாம்…மற்றும் இன்னும் என்னவெல்லாம் கடன்பட்டிருக்கிறோம். நாம்—நாம் அந்த காரியங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம், நாம் அவைகளுக்கு செலுத்த வேண்டும். ஆனால் நீங்கள் செலுத்த வேண்டிய ஒரு பழைய நீடித்த கடனை அடைத்துவிடுங்கள். பார்த்தீர்களா? இப்பொழுது, இந்தவிதமாக எந்தக் காரியமும் உங்கள் மேல் தொங்கிக் கொண்டு போக வேண்டாம்.

913 நான் ஒரு சிறுவனாக இருந்தபோது, நான் சுகவீனமாயிருந்த ஒரு நேரம் எனக்கு நினைவிருக்கிறது. நான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது ஏறக்குறைய இரண்டாயிரம் டாலர்கள் செலுத்த வேண்டியதாயிருந்து. திரு. ஸ்வானிகர் அவர்களுக்கு நான் ஒரு மருந்துக் கடன் கட்டணமாக முன்பு சுமார் முந்நூறு அல்லது நானூறு டாலர்கள் செலுத்த வேண்டியிருந்தேன். அவருக்கு என்னைக் கூட தெரியாது. அந்த மனிதன்…நான் அவரிடம் சென்றேன். நான் அவரை அறியேன். அவர் எப்படியோ, அதை அனுப்ப ஒருபோதும் மறுக்காமல், அதை அங்கே அனுப்பினார். அதற்கு நான், “நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன்” என்றேன். மேலும் நான் கூறினேன்…ஸ்வானிகர்…நான் நினைக்கிறேன், அது கோர்ட் அவென்யூ மற்றும் ஸ்பிரிங் என்ற இடத்தில் திரு. மேசன் இருந்தார். மேலும் நான், “நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். நான்—நான் இன்னமும் மிகவும் பலவீனமாகவே இருக்கிறேன், ஆனால் நான் வேலைக்குச் செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, என்னால் உங்களுக்கு பணம் செலுத்த முடியாவிட்டால்…” நான் சற்று முன்னர் தான் ஒரு கிறிஸ்தவனானேன். நான், “முதலாவது காரியம், திரு. மேஸன் அவர்களே, தேவனுக்கு என்னுடைய கடமை, என்னுடைய தசமபாகத்தை நான் அவருக்கு அளிக்க வேண்டும். நான் முதலாவதாக என்னுடைய தசமபாகத்தை அவருக்கு செலுத்த விரும்புகிறேன்” என்றேன். மேலும் நான், “அப்படியானால் என்னுடைய அடுத்த கடமை என்னுடைய கடனை அடைப்பதாகும்” என்றேன். மேலும் நான், “என் தகப்பனார் சுகவீனமாயிருக்கிறார், அவர்…நாங்கள்…குடும்பத்தில் நாங்கள் பத்து பிள்ளைகள் இருக்கிறோம்” என்றேன். ஆனால் நான், “நான்…ஒவ்வொரு சம்பள நாளிலும், அந்த கடன் ரசீதின் பேரில் என்னால் உங்களுக்கு இருபத்தைந்து சென்டுகளுக்கு மேல் செலுத்த முடியவில்லையென்றால்; என்னால் உங்களுக்கு இருபத்தைந்து சென்டுகள் கூட கொடுக்க முடியவில்லையென்றால், நான் வந்து அதைக் குறித்து உங்களிடம் கூறுவேன். ‘இந்த முறை என்னால்—என்னால்—என்னால் அதைச் செய்ய முடியாது’ என்று நான் உங்களுக்குச் சொல்லுவேன்” என்றேன். இப்பொழுது, தேவனுடைய உதவியினால், நான் செலுத்த வேண்டிய ஒவ்வொரு சிறு தொகையையும் செலுத்தினேன். பார்த்தீர்களா? ஆனால் அதைத்தான் நான் கூறுகிறேன், புரிகிறதா? யாரோ ஒருவர் கூற வேண்டாம்…

1014 ஓ, ஒரு சமயம் இங்கே சபையில் இருந்த ஒரு கிறிஸ்தவர் வெளியே சென்று, இங்கே ஒரு காரின் சில வேலைகளை செய்து முடித்தார், அந்த மனிதன் வந்து…அந்த மனிதன், “நான் உனக்குப் பணம் தருவேன். எனக்கு சனிக்கிழமை சம்பளம் கொடுக்கப்படுகிறது” அல்லது அதைப்போன்று மற்ற ஏதோ ஒன்றை கூறினார். அவர் அவருக்கு ஒருபோதும் பணம் கொடுக்கவில்லை. வாரங்கள் உருண்டோடினபோதிலும், அவருக்கு பணம் கொடுக்கவில்லை, ஒரு வார்த்தையும் கூறவில்லை. மேலும்—மேலும் அந்த மனிதன் என்னிடம் வந்து கேட்டார், அவர் கூறினார்…பாருங்கள், அது சபைக்கு எதிராக பிரதிபலிக்கிறது. அது கிறிஸ்துவுக்கு எதிராக பிரதிபலிக்கிறது. நீங்கள் அவருக்கு பணம் செலுத்த முடியாவிட்டால், போய், “நான் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறேன், நான் உங்களுக்கு செலுத்தப் போகிறேன். நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் என்னால்—என்னால்…இப்பொழுது என்னால் அதைச் செய்ய முடியவில்லை, நான்…இதற்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறுங்கள். மேலும், நினைவில் கொள்ளுங்கள், அது தேவனுடைய புத்தகங்களிலும் கூட உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அது… நான் எனக்காகவும், நம் எல்லோருக்காகவும் ஒன்று சேர்ந்து, ஆயத்தமாயிருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் நாம் ஏதோ ஒரு காரியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம், ஏதோ ஒன்று நிகழப்போவதாக மிக அருகில் உள்ளது. எனவே நாம் ஆயத்தமாயிருக்க விரும்புகிறோம். கர்த்தருடைய வருகை இப்பொழுது மிக சமீபமாயிருக்கும்போது, அந்த மகத்தான வேளைக்காக நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

1115 இப்பொழுது நாம் ஆயத்தமாகி, இந்தக் காலையில் இங்கே நான் தெரிந்து கொண்ட ஒரு சிறு பொருளின் பேரில் பேச விரும்புகிறோம், கர்த்தருடைய ஒத்தாசையினால். நாம் நம்மால் முடிந்தளவு சுருக்கமாக பேசுவோம், ஏனென்றால் ஜனங்கள் தொலைபேசியில் இணைப்பில் உள்ளனர். உங்கள் எல்லோருக்கும்…தேசம் முழுவதிலும் உள்ள ஒரு அருமையான காலை நமக்கு இங்கே இந்தியானாவில் உள்ளது போன்ற ஒரு அருமையான காலை உண்டாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். மழைக்குப் பிறகு இப்பொழுது நமக்கு அருமையான, குளிர்ச்சியான, அருமையான வானிலை இருந்து வருகிறது. அது மிகவும் அருமையாயுள்ளது.

1216 இப்பொழுது நான் எபிரெயர் புத்தகம் 1-ம் அதிகாரத்திலிருந்தும்; பரிசுத்த யோவானின் புத்தகம் 1-ம் அதிகாரத்திலிருந்தும் வாசிக்க விரும்புகிறேன்;. எபிரெயர் 1:1 முதல் 3 வரை, பரிசுத்த யோவான் 1:1 வசனம். இந்தக் காலையில் என்னுடைய பொருள் வேதவாக்கியங்களில் ஒரு ஆய்வு என்பதாகும். இப்பொழுது நாம் எபிரெயர் 1:1-ஐ வாசிப்போம். பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகத்தையும் உண்டாக்கினார். இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். என்ன ஒரு அழகான வாசிப்பு! இப்பொழுது பரிசுத்த யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

1317 இப்பொழுது, இந்தக் காலையில் என்னுடைய பாடப் பொருள்: கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகின்றார் என்பதாகும். இப்பொழுது, நான் இதன் பேரில் பேச வேண்டிய முடிவுக்கு வந்தேன், ஏனென்றால் அது… நாம் ஒன்றுகூடியிருப்பதனால் எதையும் தடுமாற்றமாக ஏதோ சொல்வதற்காக சொல்லிவிடக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டு, ஆனால் அது ஜனங்களை ஸ்திரப்படுத்த உதவும் ஏதோ ஒரு காரியமாயுள்ளது, ஏனென்றால் நாம் ஆபத்தான, துரோகமான தண்ணீர்களினூடாக கடந்து செல்லப் போகிறோம். நாம் ஏற்கனவே அவைகளினூடாக பயணம் செய்து கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் அது என்னுடன் உள்ளது போன்றே உங்களுக்கும் உள்ளது என்று நான் யூகிக்கிறேன், அது அவ்விதமாக தென்படுகிறது, அதைக் குறித்த பெரும்பாலானவை, அது அப்பேர்ப்பட்ட ஒரு பயமாக இருக்கிறது.

1418 ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, நான் ஒரு வாலிப ஊழியக்காரருடனும் அவருடைய மனைவியுடனும் அறையில் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் இருவருமே மற்ற உலகத்தைப் போலவே, பூமியிலுள்ள மற்ற மானிட வர்க்கங்களையும் போலவே நரம்புத்தளர்ச்சியடைந்துள்ளனர். நான், “நினைவில் கொள்ளுங்கள், சாத்தான் உன்னை அடிக்க வருகிறான்” என்றேன். நீர் யாராயிருந்தாலும் கவலைப்பட வேண்டாம், தேவனே…அந்த ஒரு குத்தை குத்துவதற்கான ஒரு உரிமையை அவன் பெற்றுள்ளான். அந்தக் குத்து உங்களை குருடாக்கியிருக்கலாம், அல்லது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மூட்டு வலி கொண்டவராக இருக்கலாம், அல்லது நரம்புத்தளர்ச்சியாய் இருக்கலாமல்லவா? பார்த்தீர்களா? அவன் உங்களை குத்தக்கூடிய எங்கோ ஒரு இடத்தை உடையவனாய் இருக்கிறான். அந்த திறந்த இடத்தில் குத்த அவனுக்கு உரிமை உண்டு. இப்பொழுது, அந்த இடத்தைத்தான் நீங்கள் எப்பொழுதும் மூடி வைக்க வேண்டும். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த நரம்புத்தளர்ச்சியான காலத்தைக் காணும்படியாக!

1519 கடந்த வார ஒலிநாடாக்கள், நாம் பேசப்போகும் மகத்தான பயங்கரமான காரியங்களையும், இந்நாட்களில் ஒன்றில் நாம் போதுமான இடத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தால், பூமியின் மேல் ஊற்றப்பட வேண்டிய அந்த கடைசி வாதைகளின் திறப்பு, அந்த கலசங்கள், சரியாகக் கூறினால், கலசங்களிலிருந்து ஊற்றப்பட்டு, ஏழு இடி முழக்கங்களையும், பூமியின் மேல் வரப்போகும் அந்த பயங்கரமான காட்சிகளையும் உங்களுக்கு வெளிப்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது மனிதனும், ஜனங்களும் இன்றைக்கு அப்படிப்பட்ட ஒரு நரம்பு தளர்ச்சி நிலையில் உள்ளனர்; முழு உலகமும்!

1620 நீங்கள் கடந்த மாத ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழைப் படித்தால், அங்குள்ள பொருளை நீங்கள் கவனிப்பீர்கள்; அது மகத்தான சுவிசேஷகரான பில்லி கிரஹாமின் பேரில் உள்ளது. அவர் மிகவும் சோர்வுற்று தன்னுடைய கூட்டங்களை நடத்த முடியவில்லை, அவர்—அவர் சரீரப் பரிசோதனைக்காக மேயோஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அவரோடு எந்தத் தவறும் இல்லை, அவர் போதிய வேலை செய்வதில்லை. அவர்கள் அவரை ஓட வைத்தனர்; உடல் பயிற்சி. அவர் ஒவ்வொரு நாளும் ஒரு மைல் தூரம் ஓடுகிறார். அதன்பின்னர் அந்தக் கட்டுரை, இன்றைக்கு இளம் பிள்ளைகள், இந்த சிறு பையன்களும் பெண்பிள்ளைகளும், “இருபது வயதிலேயே தங்களுடைய நடுத்தர வயதை அடைந்து விட்டார்கள்” என்பதை இன்றைக்கு விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது என்று தொடர்ந்து கூறுகிறது. மேலும் இருபத்தைந்து வயதிற்குள்ளாக, அநேக சமயங்களில், அநேக சமயங்களில், பெண்பிள்ளைகளுக்கு இருபத்தைந்து வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறது. நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்களா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு சில இரவுகளுக்கு முன்னர் பரிசுத்த ஆவியானவர் இங்கே கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற ஒரு சிறு பெண், அந்த வாலிப பிள்ளையை கூப்பிட்டபோது, சரியாக இந்க கோளாறு இருந்தது. நான் இரண்டாம் முறை அவளை நோக்கிப் பார்த்தேன், மீண்டும் பார்த்தேன், பின்னர் நான் காரியம் என்னவாயிருந்தது என்பதைக் கண்டேன். நான், “அவ்வாறு இருக்க முடியாது; அந்தக் வாலிப பிள்ளை மிகவும் இளமையாயிருக்கிறாள்” என்று நினைத்தேன். ஆனால் அது இறுதி மாதவிடாயாயிருந்தது, சுமார் இருபது வயது, இருபத்தி மூன்று, அதைப் போன்ற ஏதோ ஒரு காரியமாய் இருந்தது. பார்த்தீர்களா?

1721 என்னுடைய தாயாருக்கும், உங்களுடைய தாயாருக்கும் ஏறக்குறைய நாற்பத்தைந்து வயது முதல் ஐம்பது வயதுக்குள் அந்நிலையை அடைந்தனர். என்னுடைய மனைவிக்கு சுமார் முப்பத்தைந்து வயதில் அந்நிலையை அடைந்தாள். இப்பொழுது அது இருபதாகக் குறைந்துவிட்டது. முழு மானிட வர்க்கமும் அழுகிப் போய்விட்டது. பாருங்கள், கலப்பினமான உணவுகளை உண்பதனால் நம்முடைய சரீரத்தின் மாம்சப்பிரகாரமான ஜீவியங்கள் இந்த விதமாக சீரழிந்துகொண்டிருந்தால், அதை அழுகச் செய்யும் இறுக்கங்கள், அது மூளையின் உயிரணுவையும் அழுகச் செய்யவில்லையா? அப்படியானால் பெண்கள் எப்படியாய் நிர்வாணமாக வீதியில் செல்ல முடிகிறதை நாம் காண முடிகிறது. எப்படி அவர்கள் வீதிகளினூடாக மணிக்கு நூற்று இருபது மைல் வேகத்தில் ஓட்டிச் சென்று இந்த காரியங்களைச் செய்கின்றனர் என்பதை நாம் காண முடிகிறது. முழு தேசமும், முழு உலகமும், இந்த தேசம் மாத்திரமல்ல, ஆனால் எல்லாவிடங்களிலும் ஒரு சரியில்லாத மனநிலைக்கு அது வந்துள்ளது.

1822 கர்த்தருக்குச் சித்தமானால், அந்த ஏழு கலசங்களை நாம் திறந்து, அந்த அருவருப்பான காரியங்களைக் காண்பிக்கும்போது… ஒரு மலையின் அளவுள்ள எறும்புகளை அவர்கள் காண்பதாக கற்பனை செய்துகொள்ளுமளவிற்கு, கொஞ்சகாலம் கழித்து, மனிதர்களுக்கு மிகவும் பைத்தியம் பிடித்துவிடும். அது ஸ்திரீகளை வேதனைப்படுத்தும்; வெட்டுக்கிளிகள் பூமியின் மேல் வந்து, நீண்ட தலைமுடியை வெட்டிய ஸ்திரீகளை வேதனைப்படுத்த; பெண்களைப் போன்ற முடி, கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது; சிங்கத்தைப் போன்ற நீண்ட பற்களைக் கொண்டிருக்கிறது; பூமியின் மேல் உள்ள மனிதரை சித்திரவதை செய்ய, வாலில் கொடுக்குள்ள ஒரு தேள் போன்று, மற்றும்—மற்றும் பூமியில் மனிதர்களை வேதனைப்படுத்தும். ஆனால் அப்பொழுது அதைக் குறித்து எதையும் செய்ய மிகவும் காலதாமதமாகிவிடும். நீங்கள் இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? வேதனைப்படுத்துதல்!

1923 கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் அந்த சுழற்சிகளுக்குள் சென்று கொண்டிருந்தபோது, புற மண்டலத்தில் ஐம்புலன்கள் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி பார்த்தோம். அதுதான் சரீரத்திற்கு ஐந்து புலன்களின் நுழைவாயிலாகும். நீங்கள் சரீரத்திற்குள் பிரவேசிக்க ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு, அது அந்த ஐம்புலன்களின் மூலமாகவேயாகும்: பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல். சரீரத்தோடு தொடர்பு கொள்ள வேறு வழியே கிடையாது. 24 அந்த மனிதனின் உட்புறத்தில் ஆவி என்று அழைக்கப்படும் ஒரு மனிதன் இருக்கிறார், அவன் ஐந்து புலன்களை உடையவராயிருக்கிறான்: சிந்தை, சிந்தை…சிந்தனை, அன்பு, மனசாட்சி போன்றவை. சரி. 25 இப்பொழுது, நீங்கள் உங்களுடைய சரீரத்தைக் கொண்டு சிந்திக்க முடியாது. நீங்கள் உங்களுடைய சிந்தையில் சிந்தியுங்கள். அங்கே அநேக கிறிஸ்தவர்கள் மாத்திரமே நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் வயலில் தானியத்தையும், வயலில் உள்ள களைகளையும் போல இருக்க முடியும், உண்மையான விசுவாசி எந்த பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறாரோ, அதே பரிசுத்த ஆவியினால் அவர்களும் அபிஷேகிக்கப்பட முடியும். ஆனால் அதன் உட்புறத்தில், அடுத்த மண்டலம், மூன்றாவது மண்டலம், ஆத்துமா; அது தேவனால் முன்குறிக்கப்பட்டுள்ளது. அங்கேதான் உண்மையான விதை-விருத்தி அங்கே உள்ளது. 26 மேலும், நினைவிருக்கட்டும், நான் ஒரு களையை எடுத்து, அதை அறுத்துத் திறந்தால், கோதுமை மணியோடு அதை ஓட்டுப் போட்டு, அதை புதைத்தால், அது அந்த களையிலிருந்து கோதுமையைக் கொண்டு வரும்; வெளிப்புறமானது என்னவாயிருந்தாலும், உணர்ச்சிகள் என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

2027 இன்றைக்கு, பரிசுத்த ஆவியின் அத்தாட்சி போன்றவற்றைக் குறித்து குழப்பமடைந்துள்ளனர். சாத்தானால் தேவன் பெற்றுள்ள எந்த விதமான ஒரு வரத்தையும் பாவனை செய்ய முடியும், ஆனால் அவனால் அந்த வார்த்தையை வார்த்தைக்கு வார்த்தை கொண்டு வர முடியாது. அங்கேதான் அவன் ஏதேன் தோட்டத்தில் தவறிப்போனான், அங்கேதான் அவன் எப்பொழுதும் தவறிப்போயிருக்கிறான். அங்குதான் அவர்கள், கள்ள அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்… இல்லை, அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்… அவர்கள் ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, அந்நிய பாஷைகளில் பேசலாம், நடனமாடலாம், சத்தமிடலாம், சுவிசேஷத்தைப் பிரசங்கித்தாலும், இன்னும் பிசாசாய் இருக்க முடியும். அது உட்புறம் தான்! இப்பொழுது நினைவிருக்கட்டும், இயேசு, “பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா ஒருவனை முதலில் இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் வரமாட்டான்” என்றார். இப்பொழுது, நாம் பாடத்தினூடாக அதைக் காண்பிப்பதற்காக… நீங்கள் முன்காலத்திலிருந்தே உங்களுடைய முப்பாட்டனாரின் முப்பாட்டனாரின் முப்பாட்டனாருக்குள் இருந்தீர்கள், சரீரப் பிரகாரமாக பேசுகிறேன். அப்படியானால், நீங்கள் சரீரப்பிரகாரமாக, இயற்கையில் அப்படித்தான் இருக்கிறீர்கள். சில சமயங்களில் ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை சிவப்பு தலைமுடியுடன் பிறக்கும். அது தகப்பனை வியக்க வைக்கிறது, ஏனென்றால் அவனுக்குத் தன்னுடைய ஜனங்களைக் குறித்தும், சிவப்பான தலையுடையவர்கள் அல்லது தாயினுடைய ஜனங்களைக் குறித்தும் தெரியாது. ஆனால் நீங்கள் பல தலைமுறைகளுக்கு பின்னோக்கிச் செல்வீர்களேயானால், யாரோ ஒருவர் தலை சிவப்பாக இருந்தது என்பதை நீங்கள் கண்டறியலாம். அந்த வித்து தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது, நீங்கள் பின்னோக்கிச் சென்ற ஒன்றின் சுபாவத்திற்கு வருகிறீர்கள். எபிரெயர் 7-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளபடி, “மெல்கிசேதேக்கு, ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு தசமபாகத்தைச் செலுத்தினான். தசமபாகத்தைப் பெற்ற லேவி, தசமபாகத்தை செலுத்தினான்,” ஏனென்றால் அவன் மெல்கிசேதேக்கை சந்தித்தபோது, மெல்கிசேதேக்கின் அறையில், சரியாகக் கூறினால்…இல்லை, “ஆபிரகாமின் அறையில்” இருந்தான்.

2128 இப்பொழுது இதுவும் அதேக் காரியமாகும். நீங்கள் ஒரு தேவனுடைய குமாரனாயிருந்தால், நான் ஒரு தேவனுடைய குமாரனாயிருந்தால், அல்லது ஒரு தேவனுடைய குமாரத்தியாக இருந்தால், நாம் ஆதியிலே தேவனுக்குள் இருந்தோம். இயேசுவானவர் வார்த்தையின் பரிபூரணமானபோது, அப்பொழுது நாம் அவருக்குள், ஜீவ அணுவின் ரூபத்தில் இருந்தோம். அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, நாமும் அவருடைய சரீரத்தில் சிலுவையில் அறையப்பட்டோம். அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபோது, நாம் அவரோடு உயிர்த்தெழுந்தோம். இப்பொழுது, நாம் அதை அடையாளங்கண்டு கொண்டது முதற்கொண்டு, “நாம் அவரோடேகூட உன்னதங்களில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உட்கார்ந்திருக்கிறோம்.” பார்த்தீர்களா? ஏனென்றால் அவர்…நாம், நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருந்தால், நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், அப்பொழுது நாம் தேவனுடைய தன்மைகளாயிருக்கிறோம். அப்பொழுது நாம்…நித்திய ஜீவனைப் பெற்றோம். தேவன் மாத்திரமே அங்கே நித்திய ஜீவனை உடையவராய் இருக்கிறார். அப்படியானால் நாம் ஆதி முதல் அவருக்குள் இருந்தோம். இயேசு அந்த முழு வார்த்தையானபோது, அப்பொழுது நாம் அவருடைய ஒரு பாகமாயிருந்தோம். ஆமென்! அங்குதான் காரியம். அது அங்கே உள்ளே உள்ளது, எந்த பிசாசும் கிடையாது, எந்த வல்லமையும் கிடையாது, எந்தக் காரியமும் அதை ஒருபோதும் அசைக்க முடியாது. அதுவே ஆத்துமாவை இணைக்கும் கம்பம். 29 நீங்கள் இங்கே இந்த ஆவியில் அபிஷேகம் பண்ணப்பட்டு, வாஞ்சையாயிருந்து, இந்த மற்ற எல்லாக் காரியங்களையும் செய்ய முடியும். ஆனால் இந்த வார்த்தை அந்த வார்த்தையுடன் இணைக்கப்படும்போது, நீங்கள் அங்கிருந்து ஒருபோதும் நகரவேமாட்டீர்கள். அது தன்னால் இயன்றவரை அந்த வார்த்தையை உறுதியாக நிலைத்து உண்மையாகப் பற்றிக்கொள்ளும். அதற்கு புறம்பாக, நீங்கள் என்ன செய்தாலும் பொருட்படுத்தாமல், நீங்கள் இன்னமும் இழக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர்கள்.

2230 அந்த லவோதிக்கேயா சபைக் காலம், “நிர்வாணமாயும், குருடாயும், பரிதபிக்கத்தக்கதாயுமிருந்து, அதை கூட அறியாமல் இருக்கிறது.” பாருங்கள், அது…உண்மையான ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். பாருங்கள், ஒரு மனிதனின் ஆவியில், பரிசுத்த ஆவியானவர் விழலாம். ஆனால் அவனுடைய ஆத்துமாவே அவனுடைய வித்து; அந்த உயிரணு வார்த்தையாயுள்ளது. பார்த்தீர்களா? எப்படி…உங்களால் எவ்வளவு பிரசங்கிக்க முடிந்தாலும், நீங்கள் எவ்வளவு நன்றாக இதை செய்தாலும், நீங்கள் எவ்வளவு அன்பு கூர்ந்தாலும் எனக்குக் கவலையில்லை; அது ஆவிக்குரிய நுழைவாயில்களில் ஒன்றாகும். நீங்கள் உங்களுடைய சரீரத்தினால் நேசிக்க முடியாது; நீங்கள் உங்களுடைய ஆவியோடு நேசிக்கிறீர்கள். அது நுழைவாயில்களில் ஒன்று. நீங்கள் நேசித்து, தேவனை நேசித்தாலும், அப்பொழுதும் சரியாக இருக்க முடியாது. நீங்கள் பிசாசுகளைத் துரத்தவும், பிரசங்கிக்கவும், இந்தக் காரியங்களைச் செய்யவும் முடியும்; அப்பொழுதும் சரியாக இருக்கவில்லை. இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார், அந்நாளில் அநேகர் வருவார்கள் என்று கூறினார். அந்த வார்த்தை அதை தீர்த்து வைக்கிறது! ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்…

2331 கவனியுங்கள், கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்பட்டதைக் குறித்த இந்த வேதாகமப் பொருளின் பேரில் நான் பேசப் போகிறேன். என்னுடைய அறையில்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். யாரோ ஒரு அருமையான நபர், இந்தக் காலையில் இங்கே அமர்ந்திருக்கலாம்… நான் அங்கே என்னுடைய படிக்கும் அறையில் ஒரு புகைப்படத்தை தொங்கவிட்டுள்ளேன், அது ஹாஃப்மேனின் கிறிஸ்துவின் தலை என்ற ஒரு புகைப்படமாகும், அதில் மலைப்பிரசங்கத்தில் வரும் பாக்கியவான்கள் என்பவை எழுதப்பட்டிருந்தது. நீங்கள் தலைமுடியின் பாகத்தண்டை வரும்போது, நீங்கள் அந்தப் பகுதியை பார்க்கும்போது, அவர்கள் எழுதுகோலை சற்று கடினமாக அழுத்தி வரைந்துள்ளனர். அங்கே, அவர் தம்முடைய வார்த்தையில் அமர்ந்து, வெளியே நோக்கிப் பார்க்கிறார்; கிறிஸ்து மலைப் பிரசங்க பாக்கியவான்கள் என்பவைகளில் இருக்கிறார். யாரோ ஒருவர், அது யாராயிருந்தாலும், அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். எலியா ஒரு அக்கினி இரதத்தில் ஏறிச் செல்வதைக் குறித்த புகைப்படத்தை யாரோ ஒருவர் கொண்டு வந்து அங்கே என்னுடைய படிக்கும் அறையில் வைத்திருந்தார். நாம் இந்தக் காரியங்களைப் பாராட்டுகிறோம். அநேக சமயங்களில், பெரிய கூட்டங்களில், இந்தக் காரியங்களை பேசவும், கூறவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை, ஆனால் சகோதரனே, சகோதரியே, நான் அதை காண்கிறேன். நான்—நான் அதை அறிவேன், தேவனும் அதை அறிவார். 32 இப்பொழுது நான் இந்த பொருளின் பேரில் பேசப் போகிறேன்: கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் வெளிப்படுத்தினார். எப்படியாய், பாக்கியவான்கள் என்ற மலைப் பிரசங்க பகுதியில், கிறிஸ்துவின் புகைப்படம் ஒன்று நிற்கிறது, சரியாக நிற்கிறது. அங்குதான் நான் இந்தப் பொருளைக் குறித்து சிந்தித்தேன். இப்பொழுது, கிறிஸ்துவும் வார்த்தையும் ஒன்றே. பார்த்தீர்களா?

2433 அவர்கள், “வேதம் எப்படியிருந்தது…?” என்று கேட்கிறார்கள். ஜனங்கள் கூறுகின்றனர். அண்மையில் நான் ஒரு மனிதனோடு சவாரி செய்து கொண்டிருந்தேன். அவர், “அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நாம் இங்கே இந்த பூமியில், நாம் இந்தவிதமாகவே, வேதாகமம் என்று அழைக்கப்படுகின்ற ஏதோ ஒரு யூத கட்டுக்கதையைக் கொண்டு மாத்திரமே நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று மட்டுமே தெரியும் அல்லது சொல்ல முடியும்” என்றார். 34 நான், “ஐயா, நீங்கள் அதை எப்படி கூறுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஒரு யூத கட்டுக்கதை என்று நான் நம்பவில்லை” என்றேன். அவர், “பாருங்கள், நீங்கள் ஜெபியுங்கள், நீங்கள் எதற்காக ஜெபிக்கிறீர்கள்? நான் இன்ன-இன்ன மற்றும் குறிப்பிட்ட காரியங்களைக் கேட்டேன்; எனக்கு அது கிடைக்கவில்லை” என்றார்.

2535 நான், “நீங்கள் தவறாக ஜெபிக்கிறீர்கள். தேவனுடைய சிந்தையை மாற்ற நாம் ஒருபோதும் ஜெபிக்கக் கூடாது; நாம் நம்முடைய மனதை மாற்ற ஜெபிக்க வேண்டும். தேவனுடைய சிந்தைக்கு எந்த மாற்றமும் தேவையில்லை. பார்த்தீர்களா? பாருங்கள், அது சரிதான்” என்றேன். நான், “நீங்கள் எதற்காக ஜெபித்தீர்கள் என்றல்ல…” என்றேன். ஒரு சமயம் ஒரு வாலிப கத்தோலிக்க பையன் தன்னுடைய தாயார் உயிர் வாழ்வதற்காக ஜெபங்களை கூறி ஜெப புத்தகத்தை வைத்திருந்தான் என்பதை நான் அறிவேன். அவள் மரித்துப்போனபோது, அவன் ஜெப புத்தகத்தை அக்கினியில் போட்டான். பாருங்கள், பாருங்கள், நான் ஜெப புத்தகத்தில் உள்ள ஜெபத்தை சொல்வதில்லை; ஆனால் எப்படியாயினும், பாருங்கள், நீங்கள் தவறான மனப்பான்மையை எடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவனிடம் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜெபம், “கர்த்தாவே, உம்முடைய வார்த்தைக்கு பொருத்தமாக என்னை மாற்றும்” என்பதாக இருக்க வேண்டும். “மாற்றும்” என்றல்ல, “நான் உம்முடைய மனதை மாற்றட்டும் என்றல்ல. நீர் என்னுடைய மனதை மாற்றும்” என்பதாய் இருக்க வேண்டும். பார்த்தீர்களா? “நீர் என் மனதை உமது சித்தத்திற்கு மாற்றும். உம்முடைய சித்தம் இங்கே புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தாவே, உம்முடைய சிந்தையைப் போன்றே என்னுடைய—என்னுடைய சிந்தையை நீர் அமைக்கும் வரையில் என்னைப் போகவிடாதேயும். என்னுடைய சிந்தை உம்முடைய சிந்தையைப் போன்று அமைந்திருக்கும்போது, அப்பொழுது நான் நீர் எழுதின ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிப்பேன். உம்மை நேசிக்கிறவர்களுக்கு ‘ஒவ்வொரு காரியமும் ஒருமித்து நன்மைக்கேதுவாக நடக்கச் செய்வீர்’ என்று அங்கே நீர் கூறினீர். கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன். அவை யாவும் ஒன்று சேர்ந்து நன்மைக்கேதுவாக கிரியை செய்து கொண்டிருக்கின்றன.”

2636 நான் இந்த வாரம் தேசத்தில், சில அருமையான நண்பர்களோடு தங்கியிருந்தேன். நேற்றைய தினம் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மேசையிலிருந்த அவர்களில் சிலரிடம் நான் கேட்டேன். நாங்கள் எப்பொழுதுமே அமர்ந்து ஒரு சிறு…வேதாகமத்தின் பேரில் ஒரு சிறு ஆய்வைப் போன்றே நடத்துவோம். நாங்கள் அன்பைக் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு குறிப்பிட்ட நபர் என்னிடத்தில் கூறினார், அவர், “நீர் அந்திக்கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றார். 37 நான், “அது என்னுடைய கர்த்தருக்கு பிரியமாயிருக்குமானால், அப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன். நான் என்னவாயிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அவ்வாறே நான் இருக்க விரும்புகிறேன். நான் அவரை நேசிக்கிறேன். அவர் என்னை நரகத்திலே தள்ளினாலும், இப்பொழுது நான் பெற்றுள்ள அதே ஆவியோடு நான் சென்றாலும், நான் இன்னமும் அவரை நேசிப்பேன்” என்றேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார். நான் நான்கு அல்லது ஐந்து வாலிபர்களை அங்கே கண்டேன்; இளம் மனைவிகள், அருமையான பெண்கள். அந்த பையன்கள் தங்களுடைய மனைவிகளை எப்படி நேசித்தார்கள் என்பதை நான் அறிவேன், எனவே நான் அவர்களிடத்தில் கூறினேன், நான், “இதோ அதை சோதித்துப் பார்க்க வேண்டிய வழி உள்ளது. உங்களுடைய மனைவி, உங்களுக்கு விவாகமாவதற்கு முன்பு… இப்பொழுது, நீங்கள் திரும்பிச் சென்று, நீங்கள்…இந்த விவாக வாழ்க்கை, நீங்கள் விவாகம் செய்து கொண்டதாக சொப்பனங் கண்டு கொண்டிருந்தீர்கள்; நீங்கள் உண்மையாகவே விவாகம் செய்துகொள்ளவில்லை, ஆனால் நீங்கள் சொப்பனங் கண்டீர்கள். நீங்கள் விழித்தெழுந்து, நீங்கள் போய் உங்களுடைய காதலியிடம் அதைக் குறித்து பேசி, ‘உனக்கு தெரியுமா, நாம் விவாகம் செய்து கொண்டோம் என்றும், நமக்கு பிள்ளைகள் இருந்தனர் என்றும் நான் சொப்பனங் கண்டேன். நாம் மகிழ்ச்சியாய் வாழ்ந்து, கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.’ அப்பொழுது இந்தப் பெண் உங்களிடம், ‘நான் உங்களை நேசிப்பதைக் காட்டிலும் வேறொரு மனிதனையே அதிகமாக நேசிக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் மற்ற மனிதனோடு மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள், உங்களுடைய இருதயத்திலிருந்து, நீங்கள் சொல்லும் அளவுக்கு அவளை நேசிக்க முடியுமா, ‘என் அன்பே, தேவனுடைய ஆசீர்வாதங்கள் உன் மேல் தங்கியிருக்கின்றன. இந்த வேறொரு மனிதனோடு செல்வாயா’?” என்று கேட்டேன். இப்பொழுது, ஆண்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் அல்லது ஸ்திரீகளாகிய நீங்களும் இப்பொழுது அதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? பாருங்கள், உங்களுடைய அன்பு சரியானதாயிருந்தால், நீங்கள் அதைச் செய்வீர்கள், ஏனென்றால் நீங்கள் அவளுடைய நலனில் அக்கறை கொண்டிருக்கின்றீர்கள். என்ன, நீங்கள் அவளை பெற்றுக் கொள்ள முடியும், நீங்கள் அவளுடன் வாழ முடியும், நீங்கள்…அவள் உங்களுடைய மனைவி; அவள் இருப்பாள். அவள் உன்னை மணந்து கொள்வாள், ஆனால் அவள் மகிழ்ச்சியாயிருக்கமாட்டாள். அவள் அதிக மகிழ்ச்சியாயிருப்பாள்…அப்பொழுது, நீங்கள் அவளை நேசித்தால், அப்பொழுது நீங்கள் அவள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆகையால், தேவனுடைய சித்தம் என்னவாயிருந்தாலும், நான் அதில் மகிழ்ச்சியாயிருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், தேவனுடைய சித்தம் செய்யப்படுவதாக. நான் செய்கிறதைக் குறித்து அவர் பிரியப்படும்படியாக நான் ஜீவிக்க விரும்புகிறேன். ஆகையால் அதன் மூலம் உங்களுடைய—உங்களுடைய குறிக்கோளையும், உங்களுடைய நோக்கத்தையும் சோதித்துப் பாருங்கள்; நீங்கள் தேவனை நேசிக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர், “நான் உன்னைத் துரத்தப் போவதாயிருந்தால், நீ எனக்கு ஊழியம் செய்கிறாயா?” என்று கூறினால் என்னவாகும். “நான் எப்படியாயினும் உம்மை நேசிக்கிறேன்.”

2738 ஆகையால், சபைகள் அதைக் கண்டு, அந்த விதத்தில் அதை விசுவாசிக்க முடிந்தால், ஒருவன் கால்பந்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போது, மற்ற நபர் அவனிடமிருந்து கால்பந்தை பிடுங்க முயற்சிக்கமாட்டான். அவன் அந்த ஒன்றை பாதுகாத்துக்கொண்டிருப்பான். பார்த்தீர்களா? உண்மையான உண்மையான நோக்கமும், குறிக்கோளும், “ஹே, நானும் கூட இதைப் பெற்றுக் கொண்டேன்! நான், இது நான், இது” என்று ஒருவன் கூற முயற்சிக்க மாட்டான். பாருங்கள், தேவனால் ஒரு மனிதனை உபயோகிக்க முடியாது. அதைப் பின்தொடரும் ஏராளமான போலியான காரியம் உள்ளது, அது சாத்தான். ஜனங்களால் அதை உணர முடியவில்லை. அவர்கள் யாரோ ஒருவரிடமிருந்து பந்தை எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் ஒரு குறிப்பிட்ட ஊழியத்தை எழுப்பி, எத்தனை பேர் அதற்குப் பின் செல்கிறார்கள் என்பதைக் கவனிக்கட்டும். பார்த்தீர்களா? பார்த்தீர்களா?

2839 இப்பொழுது, தேவனுக்கான அசலான அன்பு, “கர்த்தாவே, நான் எந்த பாகமாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நான் அதற்காக ஒரு வார்த்தை மாத்திரம் கூறி, அதைப் பாதுகாக்க உதவி செய்ய முடிந்தால், நான் அதைச் செய்யட்டும்” என்றேன். பார்த்தீர்களா? உங்களுடைய மனைவியைக் குறித்தும் அதே காரியம் தான் இருக்கும். நீங்கள் உண்மையாகவே அவளை நேசிப்பீர்களானால், பாருங்கள், அது இல்லை—அது ஒரு—ஒரு மாம்சப்பிரகாரமான அன்பு அல்ல; அது ஒரு தெய்வீக அன்பு, ஒரு உண்மையான அன்பு. அவள் வேறு யாரோ ஒருவரோடு மகிழ்ச்சியாக வாழ முடியும்; நீங்கள் இப்பொழுது விவாகம் செய்துகொள்ளவில்லை, நிச்சயமாகவே, உங்களால் முடியாது.

2940 அதே சமயத்தில் ஜனங்கள் இந்த ஒலிநாடாக்களைக் கேட்கும்போது, சிலர், அநேகர், “ஏன், விவாகமும் விவாகரத்தும் என்ற செய்தியில், நீங்கள் இதைக் கூறினீர்கள், நீங்கள் அதைக் கூறினீர்கள்” என்று கூறினர். நான் அதை அநேக முறை கூறியிருக்கிறேன்; இந்த ஒலி நாடாக்கள்…சகோதரனே, நான் என்னுடைய சபையாரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். தேவன் உங்களுக்கு மேய்ப்பதற்காக அளித்ததற்கு நான் பொறுப்பல்ல; இந்த ஜனங்களுக்கு நான் எந்த விதமான ஆகாரத்தை அளிக்கிறேன் என்பதற்கு நான் பொறுப்பு. இது இந்தக் கூடாரத்திற்கு மாத்திரமேயாகும். பார்த்தீர்களா? இப்பொழுது, ஜனங்கள் ஒலிநாடாக்களைக் கேட்க விரும்பினால், அது அவர்களைப் பொறுத்தது. ஆனால் தேவன் எனக்களித்துள்ளவர்களோடு நான் பேசிக்கொண்டிருக்கிறேன். அது அவர்களுடைய பாவங்கள் நீக்கப்பட்டிருந்தன. யாரோ ஒருவர் எழுதினார், “பாருங்கள், நான் இதைச் செய்தேன், நான் அதைச் செய்தேன். எங்களுடைய பாவம் என்று நீர் கூறினீர்…” என்றார். நான்—நான் அதைக் கூறவில்லை. நான், “இதுவரைக்கும் பாருங்கள்; இது இங்கே இந்த ஜனங்களுக்கு மாத்திரமே, இங்கே கூடாரத்தில் உள்ள ஜனங்களுக்கு, என்னுடைய சொந்த மந்தைக்கு மாத்திரமே” என்றேன். இப்பொழுது, ஜனங்கள் அங்குள்ள உணவையும் மற்ற பொருட்களையும் கலப்பினமாக்க விரும்பினால், நீங்கள்—நீங்கள் தேவனிடத்திலிருந்து வெளிப்பாட்டைப் பெற்று, தேவன் உங்களைச் செய்யும்படி கூறுகிறதைச் செய்யுங்கள். நானும் அதையே செய்வேன். ஆனால் இந்த செய்திகள் இந்த சபைக்கானதாயுள்ளன.

3041 இப்பொழுது கவனியுங்கள், நாம் திரும்பி வருவோம், நாம் மற்றொன்றைப் பற்றிக்கொள்ள வேண்டியதாயுள்ளது. ஏதோ ஒன்று ஒரு கட்டு கம்பமாக இருக்க வேண்டும், வேறு வார்த்தைகளில் கூறினால், அது ஒரு முடிவாகும். ஒவ்வொருவரும் ஒரு முடிவான அல்லது முற்றிலுமான ஒன்றை உடையவர்களாயிருக்க வேண்டும். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நான் முற்றிலுமானது என்பதன் பேரில், ஒரு முறை பிரசங்கித்தேன், அது கடைசி வார்த்தையாயிருக்கிற ஒரு ஸ்தானமாகும். 42 ஒரு பந்து விளையாட்டில் நடுவரைப் போல, அவர் அது அடிக்காமல் சென்று விட்ட ஒரு பந்து என்று கூறினால், அது சரியாக அவ்வாறேயிருக்கும். நீங்கள் அதை எப்படி பார்த்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது அடிக்காமல் சென்ற ஒரு பந்து என்று நடுவர் கூறினார். நீர், “நான்—நான்—நான்…அது அடிக்காமல் சென்ற ஒரு பந்து அல்ல. அது சென்றது…நான் அதைக் கண்டேன்…” அது என்னவாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அவன், “அடிக்கவில்லை” என்று கூறினபோது, அதுதான் அது, அதுவே தீர்வாகிறது. அவரே, அவரே முடிவானவர். 43 போக்குவரத்து விளக்கு “போ” என்று கூறினால், அது முடிவாகும். நீங்களோ, “நல்லது, நான், நான் அவசரமாக இருக்கிறேன், நான்…” என்று கூறலாம். இல்லை, இல்லை. அது, “மற்ற நபர் செல்லும்போது நீங்கள் அசையாமல் நில்லுங்கள்” என்று கூறுகிறது. பார்த்தீர்களா? அது முடிவானது.

3144 இப்பொழுது, நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் முடிவானது இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய மனைவியைத் தெரிந்து கொள்ளும்போது, ஒரு முடிவான நிலை இருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு பெண்மணி இருக்க வேண்டியதாயிருந்தது. 45 இப்பொழுது, நீங்கள் ஒரு காரை வாங்கப் போகிறபோது, என்னவிதமான ஒரு முடிவான நிலையை உருவாக்கப் போகிறீர்கள் என்பதற்கு ஒரு நேரம் இருக்க வேண்டும். அது ஃபோர்ட், செவி, பிளைமவுத், வெளிநாட்டு காராக இருக்குமா? அது என்னவாயிருந்தாலும், நீங்கள் ஒரு முடிவான நிலையை உடையவர்களாயிருக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையோடும் அது அவ்வண்ணமே உள்ளது. ஒரு முடிவானது இருக்க வேண்டும்.

3246 இப்பொழுது, ஒரு மனிதன், மற்றொரு மனிதனிடம் சென்று, கூறினான்…யாரோ ஒருவர், “பாருங்கள், நீங்கள் ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்று கூறுவதைக் கேட்டால், இந்த நபர் ஒருபோதும்…அவருடைய, ஞானஸ்நானம் கொடுக்காத சில சபைகள் தெளித்திருக்கலாம். உதாரணமாக, மெத்தோடிஸ்டுகளைக், அவர்கள் கேட்கப்பட்டால் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அல்லது ஒருக்கால்…ஒரு கத்தோலிக்கர், அவர்கள் மாத்திரமே தெளிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகையால் அப்பொழுது ஒரு மனிதன் “தண்ணீரில் முழுக்கு” செய்யப்படுவதைக் குறித்து கேள்விப்பட்டால், பாருங்கள், அவன் அதை புரிந்து கொள்ளவில்லை; அவன் கத்தோலிக்கனாக வளர்க்கப்பட்டான். எனவே அவன் குருவானவரிடம் சென்று, “தந்தையே, நாம் முழுக்கு ஞானஸ்நானம்பண்ணப்பட வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நம்முடைய சபை அதைக் குறித்து என்ன கூறுகிறது?” என்று கேட்டான். 47 “ஏன், நாம் தெளிக்கப்பட வேண்டும் என்று அது—அது கூறுகிறது.” அந்த சபையானது அவனுடைய முடிவான முடிவாயிருந்தால், அதுவே அதற்கு தீர்வாகிறது. எல்லா சண்டைகளும் முடிந்துவிட்டன; சபை அவ்வாறு கூறியுள்ளது, அவ்வளவுதான்.

3348 ஒரு பாப்டிஸ்டு சகோதரன் நாம் “முழுக்கினால்” ஞானஸ்நானம் பண்ணப்படுவதை விசுவாசிக்கிறோம் என்று நாம் கூறுவதை கேட்டிருந்தால்… அவர், “நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறுவார். “‘இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.’” இப்பொழுது, சபையின் இந்த—இந்த அங்கத்தினர் போதகரிடம் திரும்பிச் சென்று, “போதகரே, நாம் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று ஒரு நபர் என்னிடத்தில் கூற நான் கேட்டேன், சரி, ஆனால் ‘இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்’” என்று கூறினார். 49 “பாருங்கள்,” அவன், “இப்பொழுது நாம் பார்ப்போம். ஏன், இங்கே நாம் ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால்’ ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று இப்புத்தகம் கூறுகிறது’” என்பார். அந்த சபையானது முடிவானது என்றால், அதுவே அதற்கு தீர்வாகிறது. மற்ற எந்தக் காரியம் என்ன கூறினாலும் அவன் கவலைப்படுகிறதில்லை; அதுவே அவனுடைய முடிவாகும்.

3450 பாருங்கள், ஒவ்வொரு ஸ்தாபனமும் தங்களுடைய விசுவாசிகளுக்கு முடிவான ஒன்றாக இருக்கிறது. ஆனால், எனக்கும், நான் கிறிஸ்துவண்டை வழி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறவர்களுக்கும், கிறிஸ்துவினால், வேதமே நம்முடைய முடிவானதாய் உள்ளது. பரவாயில்லை…காரணம், தேவன், “தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும்” கூறினார். வேதாகமம் தேவனுடைய முடிவானது என்று நான் விசுவாசிக்கிறேன். யார் என்ன கூறினாலும் கவலைப்பட வேண்டியதில்லை; அது முடிவானது. வேதாகமம் முறைமைகளைக் கொண்ட ஒரு புத்தகம் அல்ல. இல்லை ஐயா. அது முறைமைகளின் புத்தகம் அல்ல, அல்லது ஒழுக்க நெறிமுறைகளின் புத்தகமும் அல்ல. வேதாகமம் முறைமைகளைக் கொண்ட, அநேக முறைமைகளைக் கொண்ட ஒரு புத்தகம் அல்ல. இல்லை ஐயா. அது ஒழுக்கங்களைப் பற்றிய ஒரு புத்தகம் அல்ல. இல்லை ஐயா. அது அல்ல. அது முழுவதுமாக ஒரு சரித்திரப் புத்தகம் அல்ல. அல்லது, அது ஒரு வேதசாஸ்திர புத்தகம் அல்ல. ஏனென்றால் அது இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாய் உள்ளது. இப்பொழுது நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், உங்களுடைய காகிதத் தாள்களில் எழுதி வைத்துள்ள நீங்கள், அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அது வெளிப்படுத்தின விசேஷம் 1 முதல் 3 வரை, வேதாகமம் “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்துதல்” என்பதாய் உள்ளது.

3551 நமக்கு நேரம் கிடைக்கும்போது நாம் அதைப் படிப்போம். என்னுடைய…பேசுவதற்கு இங்கு அதிகமான குறிப்புகள் இல்லை என்று நான் நினைக்கிறேன். கர்த்தர் தாமதித்தால், ஏன், நாம் அவைகளிலிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

3652 எனவே வேதாகமம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழுமையான வெளிப்பாடாய் உள்ளது. அது தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டது. எபிரெயர் 1:1-ல்…“பூர்வகாலங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாளில், அந்த தீர்க்கதரிசிகள் யாவரும் ஒன்றுசேர்ந்ததாயிருந்த, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நம்மிடத்தில் பேசுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. இயேசு மல்கியாவாயிருந்தார்; இயேசு எரேமியா, ஏசாயா, எலியா. அவர்கள் யாவரும் அவருக்குள் இருந்தனர். நீங்கள் யாவரும், எனக்குள்ளே யாவும் அவருக்குள் இருக்கின்றன; வார்த்தைகள், வார்த்தையின் சாட்சிகள். எனவே இது ஒரு முறைமைகளின் புத்தகம் அல்ல, ஒரு ஒழுக்க நெறிமுறை நெறிமுறைகள் அல்ல, அல்லது ஒரு சரித்திர புத்தகம் அல்ல, அல்லது ஒரு வேத சாஸ்திர புத்தகம் அல்ல. அது அல்ல. ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் ஒரு வெளிப்பாடு, தேவன் தாமே வார்த்தையிலிருந்து மாம்சத்திற்கு வெளிப்படுத்தினார். அதுதான் அது. வேதாகமம் வார்த்தையாயுள்ளது, தேவன் மாம்சமாயிருக்கிறார், தேவன்…அதில் தேவன் வார்த்தையாயிருக்கிறார், சரியாகக் கூறினால், இயேசு மாம்சமாயிருக்கிறார். அது எவ்வாறு தேவன் (வார்த்தை) மானிட சரீரத்தில் வெளிப்பட்டு, நமக்கு வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடாய் உள்ளது. அந்தக் காரணத்தினால்தான் அவர் ஒரு தேவனுடைய குமாரனாகிறார்; அவர் தேவனுடைய ஒரு பாகமாயிருக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது, அவர்…சரீரம் தேவனுடைய பாகமாயிருக்கிறது, அந்த அளவுக்கு அது ஒரு குமாரன்.

3753 ஒரு குமாரன், கத்தோலிக்கர் அதை “நித்திய குமாரன்” என்று குறிப்பிடுவது போல, மற்ற எல்லா சபைகளும்; அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட இல்லை. பார்த்தீர்களா? நித்தியம் என்று ஒன்று இருக்க முடியாது, அதன்பின்னர் ஒரு குமாரன் இருக்க முடியாது, ஏனென்றால் ஒரு குமாரன் என்பது “பிறந்தெடுத்த” ஏதோ ஒரு காரியமாகும். நித்தியமான வார்த்தை, அவர் ஒரு நித்தியமாக இருக்க முடியாது…அவர் ஒரு குமாரனாக இருக்க முடியும், ஆனால் அவரால் ஒரு நித்திய குமாரனாக இருக்க முடியாது. இல்லை ஐயா. அது ஒரு நித்திய குமாரனாக இருக்க முடியாது. 54 இப்பொழுது, ஆனால் அவர் குமாரனாயிருக்கிறார், அவ்வளவு அதிகமாக, எரேமியாவுக்கும், மோசேக்கும் இருந்த எல்லா வார்த்தையும், அவர் சொன்னது போல் அந்த வார்த்தைகள் அனைத்தும், “அவர்கள் என்னைப் பற்றி பேசுகிறார்கள்.” வார்த்தையின் உண்மையான தெய்வீக வெளிப்பாடு யாவும் ஒரே மானிட சரீரத்திற்குள்ளாக இணைக்கப்பட்டு, தேவன் அதைச் சுற்றி மாம்சத்தை வைத்தார். அந்தக் காரணத்தினால்தான் அவர் “குமாரன்” என்று அழைக்கப்பட்டார், காரணம் அவர் “பிதா” என்று குறிப்பிடுகிறார். ஏன், தேவன் அதை உங்களுடைய சிந்தையில் ஊற்றும்படி நீங்கள் அனுமதித்தால், அது அவ்வளவு எளிமையானது. பார்த்தீர்களா? தேவன் ஒரு மாம்ச சரீரத்தில் வெளிப்பட்டார், கவனியுங்கள், மாம்சத்திலிருந்து…இல்லை வார்த்தையிலிருந்து மாம்சத்திற்கு வெளிப்படுத்தினார். அது பரிசுத்த யோவான் 1:14, “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்.”

3855 இப்பொழுது இந்த வேதாகமத்தைக் கவனியுங்கள். அவர்களில் சிலர், “ஓ, நல்லது, அது இதைச் செய்துவிட்டது, அது அதைச் செய்துவிட்டது” என்றனர். ஆனால் நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும், நாம்… நாம் ஒரு நிமிடம் வேதத்தின் சரித்திரத்திற்குச் சென்று, அது எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்ப்போம். அது நாற்பது வித்தியாசமான எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் இடைவெளியில் நாற்பது பேர் வேதாகமத்தை எழுதினர், வெவ்வேறு சமயங்களில் உலக சரித்திரத்தில் எப்போதும் சம்பவித்திருந்த மிக முக்கியமான சம்பவங்களை முன்னறிவித்து, அநேக சமயங்களில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அது சம்பவித்தது. அறுபத்தாறு புத்தகங்கள் முழுவதிலும் ஒரு பிழை கூட இல்லை. ஓ, என்னே! தேவனைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் அவ்வளவு திருத்தமாக இருக்க முடியாது. ஒரு வார்த்தையும் மற்ற வார்த்தைக்கு முரண்படுகிறதில்லை. நினைவிருக்கட்டும், ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளாக, வேதாகமம் எழுதப்பட்டது, மோசேயிலிருந்து பத்மு தீவில் அல்லது யோவானின் மரணம் வரை. ஆயிரத்து அறுநூறு வருடங்களாக நாற்பது வித்தியாசமான ஆசிரியர்களால் எழுதப்பட்டது. ஒருவர் மற்றவரை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதை ஒருபோதும் “வார்த்தையாக” பெற்றிருக்கவில்லை. அவர்களில் சிலர் ஒரு போதும் “வார்த்தையைக் கூட” காணவில்லை. ஆனால் அவர்கள் அதை எழுதி, தீர்க்கதரிசிகள் என்று புரிந்து கொள்ளப்பட்டபோது, அதன்பின்னர், அவர்கள் தங்களுடைய தீர்க்கதரிசனங்களை ஒன்றாக இணைத்தபோது, அவைகள் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன.

3956 பெந்தெகொஸ்தே நாளில் அறிவித்த பேதுருவைப் பாருங்கள், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்.” பவுல் அதைக் குறித்து ஒன்றுமே கேள்விப்பட்டதேயில்லை. அவன் பழைய ஏற்பாட்டை ஆய்ந்து படிக்க அரேபியாவிற்கு மூன்று ஆண்டுகள் சென்றான், வழியிலே அவனிடத்தில் பேசின இந்த அக்கினி ஸ்தம்பம் யார் என்று கண்டு, “சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டது. அவன் எப்படி தவறாக இருக்க முடியும்? அவன் சபையை ஒருபோதும் கலந்தாலோசிக்கவேயில்லை. பதினான்கு ஆண்டுகள் கழித்து, அவன் பேதுருவை சந்தித்தபோது, அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தனர். அதுவே நம்முடைய வேதாகமம். மற்றவர்களுடைய வார்த்தைகள் தவறிப்போகட்டும். இதை , எந்த மனிதனும் அதனோடு கூட்ட முடியாது. நீங்கள் வேதத்தில் இனி ஒன்றும் சேர்க்க வேண்டாம். இல்லை ஐயா. இதுவே முழுமையான வெளிப்படுத்துதலாய் உள்ளது. அது எல்லாமே.

4057 ஏழு முத்திரைகளைப் போல. “ஏழு முத்திரைகள்,” யாரோ ஒருவர் தொடர்ந்து என்னிடம், “இப்பொழுது நீங்கள்…சகோதரன் பிரான்ஹாமே, இந்த முத்திரைகள் வெளிப்படும்போது, கர்த்தர் உங்களிடத்தில் பேசுவார், எப்படி தேவனிடத்தில் நெருங்கிச் செல்ல வேண்டும் என்றும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் நமக்குக் கூறுவார்” கூறிக் கொண்டிருந்தார். 58 நான், “இல்லை ஐயா, அது இருக்க முடியாது. ஏனென்றால், வேதாகமம், அதனுடைய ஏழு முத்திரைகள் மறைக்கப்பட்டிருந்த ஏழு இரகசியங்களைக் கொண்டிருந்தன. அது ஏற்கனவே எழுதப்பட்டிருந்தது, ஆனால் அது என்னவென்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றேன். அவர்கள் “இயேசுவின்” நாமத்தில் பெற்று, அதனோடு எவ்வாறு போராடி வந்தனர் என்பதை கவனியுங்கள்; பாருங்கள், அது அதுவல்ல. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்” நாமம்! அது எப்படியிருந்தது என்று அந்த எல்லாக் காரியங்களையும் பாருங்கள். காரணம், அநேக இயேசுக்கள் உண்டு; எனக்கு “இயேசு” என்று பெயரிடப்பட்ட அநேக நண்பர்கள் இங்கே பூமியில் உள்ளனர், ஊழிய நண்பர்கள். அது அதுவல்ல. அது நம்முடைய “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து” என்பதாகும். தேவனைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் அவ்வளவு சரியாக இருக்க முடியாது. இப்பொழுது இந்த வேதாகமம் எப்படி எழுதப்பட்டது என்று பார்ப்போம்.

4159 இப்பொழுது, உதாரணமாக, அதைக் கூறுகிறேன்…இப்பொழுது நாம் சென்று, சரீரத்தைக் குறித்துப் பேசுகிற அறுபத்தாறு மருத்துவ புத்தகங்களை எடுத்துப் பார்த்தால், நூற்றுப் பதினாறு…அல்லது ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நாற்பது வெவ்வேறு மருத்துவப் பள்ளிகளில் எழுதப்பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? நாம் எந்தவிதமான தொடர்ச்சியை கொண்டு வருவோம் என்று வியப்புறுகிறேன்? ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது ஜனாதிபதியாகிய ஜார்ஜ் வாஷிங்டன், சீதசன்னிக்காக, அவர்கள் அவருடைய கால் நகத்தை வெளியே இழுத்து அவருக்கு ஒரு பவுண்டு அளவு இரத்தத்தை சிந்த வைத்தனர். நாம் எடுத்துக் கொண்டால்… 60 நாம் இன்றைக்கு, கவரப்பட்டிருக்கிற விஞ்ஞானத்தின் பேரில், நாம் இன்னும் சற்று மேலே செல்வோம். ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் இடைவெளியில் உள்ள வித்தியாசமான அறிவியலிலிருந்து நாம் நாற்பது வெவ்வேறு அறிவியலை எடுத்துக்கொண்டு, நாம் என்ன கொண்டு வந்தோம் என்று பார்ப்போமேயானால் என்னவாயிருக்கும்? முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி, ஒரு பந்தை உருட்டி, அதாவது மணிக்கு முப்பது மைல் பயங்கரமான வேகத்தில் சென்றால், அந்த பொருள் பூமியை விட்டு கீழே விழுந்து விடும். விஞ்ஞானம் எப்பொழுதாவது அதை திரும்பக் குறிப்பிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் இங்கே வீதியில் மணிக்கு நூற்றைம்பது மைல் வேகத்தில் காரோட்டிச் செல்லும்போது, அதனோடு இப்பொழுது ஏதாவது தொடர்ச்சி உண்டா? பார்த்தீர்களா? ஆனால் அவர் அதை தரையில் உருளும் பந்தின் அழுத்தத்தால், அறிவியல்பூர்வமாக நிரூபித்தார், மணிக்கு முப்பது மைல் வேகத்தில், செல்லும் எந்த பொருளும், பூமியிலிருந்து மேலே எழும்பி, அது விண்வெளியில் விழுந்துவிடும். இல்லை, அதற்கு தொடர்ச்சியே கிடையாது.

4261 ஆனால் வேதாகமத்தில் உள்ள ஒரு வார்த்தையும் மற்றொரு வார்த்தைக்கு முரண்படவில்லை. ஒரு தீர்க்கதரிசியும் மற்ற தீர்க்கதரிசியோடு முரண்படவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் பரிபூரணமாயிருந்தனர். ஒருவன் உள்ளே வந்து தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அந்த உண்மையான தீர்க்கதரிசி எழும்பி, அவனை கடிந்து கொண்டபோது, அப்பொழுது அது வெளிப்படுத்தப்பட்டது. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? எனவே வேதாகமம் எல்லா உண்மையான விசுவாசிகளுக்கும் தேவனுடைய வார்த்தையாய் உள்ளது.

4362 இப்பொழுது, மருத்துவர்கள் என்ன ஒத்துக்கொள்வார்கள் என்பதில் நீங்கள் எந்தத் துல்லியத்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. அவைகளைக் குறித்து இப்பொழுது உங்களால் சரியாக புரிந்து கொள்ள முடியாது. இப்பொழுது உங்களால் விஞ்ஞானத்தில் துல்லியத்தைப் பெற முடியாது. இப்பொழுது, உங்களுக்குத் தெரியும், கொஞ்ச காலத்திற்கு முன்பு, அவர்கள் நம்மிடம் கூறினார்கள் அதாவது…அதாவது, “‘பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நிற்கக் கண்டான்’ என்று வேதம் கூறியுள்ளது. அது அப்படி இருக்க முடியாது. பூமி உருண்டையாயிருந்தது” என்றார். ஆனால் வேதமோ, “நான்கு மூலைகள்” என்று கூறியுள்ளது. சரி, இப்போது நீங்கள் பார்த்தீர்கள், இரண்டு வாரங்களுக்கு முன்பு, அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு, இது இப்போது, இந்த கட்டுரையை செய்தித்தாள்கள் வெளியிட்டன, உலகம் சதுரமானது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். எத்தனை பேர் அதைக் கண்டீர்கள்? ஏன், நிச்சயமாக. பார்த்தீர்களா? நான் அவை யாவற்றையும் நகலெடுத்து, யாரோ ஒரு காரியத்தை கூறுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

4463 என்றோ ஒரு நாள் அவர்கள் கண்டு கொள்ளப் போகிறார்கள், அதாவது அவர்கள் ஒரு இலட்சத்து ஐம்பது இலட்சம் ஒளி ஆண்டு கால விண்வெளியைக் காணவில்லை. அவர்கள் ஒரு வட்ட வடிவில் சென்று கொண்டிருக்கிறார்கள். அது சரியாகத்தான் உள்ளது. இந்நாட்களில் ஒன்றில், நீங்கள் பரலோகத்திற்கு செல்லும்போது, நீங்கள் வேறு எங்கோ பறந்து செல்லுகிறதில்லை என்பதை நீங்கள் கண்டறியப் போகிறீர்கள். நீங்கள் இன்னமும் கூட இங்கே இருக்கிறீர்கள், இதைவிட வேகமான மற்றொரு பரிமாணத்தில். சரியாக இந்த அறையினூடாக வந்து கொண்டிருக்கும் வண்ணம் உள்ளது. ஒவ்வொரு நிறமும், சட்டையும், உடையும், நீங்கள் எதை அணிந்திருந்தாலும், அது நித்தியமானதாயுள்ளது, உலகத்தைச் சுற்றிலும் சுற்றிலும் சென்று, பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் கண்களை இமைக்கும்போது, அது சரியாக பதிவு செய்யப்படுகிறது. கவனியுங்கள், தொலைக்காட்சி அதை நிரூபிக்கும்.

4564 நீங்கள் பிறக்கும்போது, தேவன் ஒரு ஒலிப்ப்பதிவை ஆரம்பிக்கிறார். அது… ஒரு பதிவு போடுங்கள், அது சிறிது நேரத்திற்கு அதிக சத்தத்தை உண்டாக்காது என்பதை, நீங்கள் அறிவீர்கள். அந்த சிறு குழந்தை கணக்கொப்புவிக்கும் வரைக்கும், அது சிறு குழந்தையாயுள்ளது; அதன் பின்னரே அந்த சத்தம் துவங்குகிறது, அவன் பதில் கூற வேண்டிய காரியங்களைச் செய்யவும் கூறவும் துவங்குகிறான். அதன்பின்னர் அந்த ஜீவியம் முடிவுறும்போது, அந்த ஒலிப்பதிவு அல்லது ஒலிநாடா அகற்றப்பட்டு, அந்த மகத்தான பெரிய தேவனுடைய நூலகத்தில் வைக்கப்படுகிறது. இப்பொழுது, நீங்கள் எப்படி நியாயத்தீர்ப்பினை சந்திக்கப் போகிறீர்கள்? நீங்கள் செய்த ஒவ்வொரு அசைவும், உங்களுடைய சிந்தையில் சென்ற ஒவ்வொரு எண்ணமும், உங்களுக்கு முன்னால் திரும்பவும் போட்டு காண்பிக்கப்படுகிறது. உங்களால் அதைக் காண முடிகிறதா? இப்பொழுது தேவன் எங்கே…

4665 அன்றொரு இரவு இங்கே நின்று கொண்டிருக்கையில், மேடையின் மேல் ஒரு மனிதன் இருந்தார், உயரமான, மொட்டைத் தலையுடைய மனிதன், உண்மையாகவே அழகான தோற்றமுடைய நபர், வலிமையான நபர். அவர் வெளியே சென்றார்…கர்த்தர் அவருடைய குடும்பத்தைக் குறித்தும், அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்தும் ஏராளமான காரியங்களைக் கூறியிருந்தார். அவர் வெளியே சென்று உட்கார்ந்தார். ஒரு சில நிமிடங்களில், இங்கே அதைப் போன்ற மற்றொரு மனிதன் எனக்கு முன்பாக வந்தார், ஆனால் அவர் தன்னுடைய தலையை குனிந்த நிலையில் இருந்தார். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் மீண்டும் அந்த மனிதனைப் பார்த்தேன். அவர்…அவர் அல்ல, ஏனென்றால் அது வேறொன்றாயிருந்தது. இந்த மனிதனை, என்னால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், பின்னால் யாருமில்லை. நான், “அந்த மனிதன் அங்குள்ள திரைச்சீலைகளுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்” என்றேன். அது நம்முடைய…ஒரு சகோதரன் இங்கே சபைக்கு வருகிறார், உயரமாக, வழுக்கைத் தலையுடன், அழகான ஒரு நபர் அங்கே அதைப் போன்றே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் தன்னுடைய தலையை தொங்கப் போட்டு ஜெபித்துக் கொண்டிருந்தார், ஏனென்றால் அவர் வயிற்றுக் கோளாறினால் மரிக்க வேண்டியதாயிருந்தது. அவர் ஒரு ஜோடி காலணிகளை வாங்கப் போவதாயிருந்தார். அவருடைய மனைவி அவர் ஒரு புதிய ஜோடி காலணிகளை வாங்கித் அணிய வேண்டும் என்று விரும்பினார். அதற்கு அவர், “இல்லை, நான் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை, ஏனென்றால் நான் அவைகளை அணிந்து கொள்ளும்படி ஜீவிக்கப் போவதில்லை” என்றார். அவர் மரித்துக் கொண்டிருந்தார். அங்கே அமர்ந்து, நீங்கள் பாருங்கள், அந்த பரிமாணத்தில், அல்லேலூயா, தேவன் அங்கே நகர்ந்து வந்து, அவர் இருந்த நிலையில், “அவர் அமர்ந்திருக்கிறார்” என்று கூறினார். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா?

4766 இப்பொழுது கவனியுங்கள், வேத வாக்கியங்களில் எந்த பிழையும் இல்லை. தேவனுடைய வார்த்தையாகிய இயேசு, இருதயத்தில் உள்ள சிந்தனையை உணருகிறார். எபிரெயர் 4:12-ல், “தேவனுடைய வார்த்தையானது வல்லமையுள்ளதாயும், கருக்கானதாயுமிருக்கிறது.” “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், யோசனைகளையும் மனதின் எண்ணங்களையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” பார்த்தீர்களா? சிந்தைக்குள்ளாகச் சென்று, வெளியே இழுத்து, பகுத்தறிகிறது. பகுத்தறிதல் என்றால் என்ன? “தெரியப்படுத்துதல், வெளிப்படுத்துதல்.” தேவனுடைய வார்த்தை அதைத்தான் செய்கிறது. இன்றைக்கு நாம், “கத்தோலிக்க சபையானது தேவனுடைய வார்த்தை; பாப்டிஸ்டுகள், மெத்தோடிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர், கூடாரம்” என்று கூறுகிறோம். அது தவறு. வார்த்தையே வெளிப்பாடு; வார்த்தையினால் வெளிப்படுத்தப்பட்ட தேவன்.

4867 இல்லை, நாம்…மருத்துவக்காரர்கள் மத்தியிலும், விஞ்ஞானிகளிடையேயும், பல்வேறுபட்டவர்களிடையேயும் தொடர்ச்சியை பெற்றிருக்க முடியும். ஐன்ஸ்டீன் சரீரப்பிரகாரமான விண்ணப்பத்தை கொண்டிருந்தது போன்றே, ஆவிக்குரிய விண்ணப்பத்தை மாத்திரமே பெற்றிருந்திருந்தால், அவன் ஒளியின் பிரமாணங்களை ஆராய்ந்து பார்த்தபோது, அவன் நமக்கு ஏதோ ஒரு காரியத்தை கூறியிருக்க முடியும். வானத்தில் எங்கோ அந்த மகத்தான மையத்தின் பேரிலான அவருடைய செய்தியை நான் கேட்டபோது, “அந்த மையத்தோடு தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் பூமியை சிருஷ்டிக்க முடியும், எந்தக் காரியத்தையும் செய்ய முடியும், அப்பொழுது வல்லமை வரம்பற்றதாயிருக்கும்” என்று கூறினார். பார்த்தீர்களா? அவர் அதைக் கண்டிருந்தார்.

4968 இந்த சிறிய பைகள் ஆகாயத்தினூடாக செல்வதை நீங்கள் காண்கிறீர்கள், அவர்கள் “தட்டுகள்” என்று அழைக்கின்றனர். ஜனங்கள்…அது, பாருங்கள், நாம் அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. “இந்த ஜனங்கள் எல்லோரும் காணாமற்போனதைக் கேட்கிறீர்களா?” நீங்கள் கூறுகிறீர்கள். அவர்களிடத்திலிருந்து எந்த தகவலையும் கேட்பதில்லை; அவர்கள் அங்கே நின்று கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அங்கே இல்லை. அந்தவிதமாகத்தான் எடுத்துக் கொள்ளப்படுதல் இருக்கப் போகிறது. அவைகளில் ஒன்று கீழே விழுந்து, இந்த பூமிக்குரிய சரீரம் ஒரு வான சரீரத்தை தரித்துக்கொள்ளும். அவர்கள்…தோல், முடி, எலும்புகள் இங்கு விடப்படும்; அது ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாக்கப்படும், விண்வெளியிலிருந்து கீழே விழுந்து, அதை பரமவீட்டிற்கு கொண்டு செல்கிறது. இப்பொழுது இவை யாவும் சம்பவிக்கிறதை நாம் காண்கிறோம், பென்டகன் இந்த விளக்குகளைக் குறித்தும், மர்மமான ஒளிகளைக் குறித்தும், அவர்கள் வானத்தில் காண்கிற ஒவ்வொரு காரியத்தையும் கண்டனர். இந்த வாரம் ஜெபர்ஸன்வில்லில் அவர்கள் செய்தித்தாளில், “ஒரு மர்மமான ஒளி” என்று ஒன்றை வெளியிட்டிருந்ததை நீங்கள் பார்த்தீர்கள். எனவே, ஓ, அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் சிறு பிள்ளைகளே, கவனியுங்கள், இந்நாட்களில் ஒன்றில் அது உங்களை அழைத்துச் செல்லப் போகிறது. பார்த்தீர்களா? பார்த்தீர்களா? கவலைப்பட வேண்டாம். நினைவிருக்கட்டும், இயேசு, “சோதோமின் நாட்களில் நடந்தது போல” என்றார்.

5069 சோதோமுக்கு முன்பு என்ன சம்பவித்தது? தேவன் சில தூதர்களோடு இறங்கி வந்தார், அவர்கள் ஒரு விசாரணை நியாயத்தீர்ப்பை உடையவர்களாயிருந்தனர். மேலும், “நான் கூக்குரலைக் கேட்டிருக்கிறேன், அதாவது அது மிகவும் பாவமுள்ளதாயும், மிகப்பெரியதாயுமுள்ளது, எனவே அது முற்றிலும் உண்மையா அல்லது இல்லையா என்று கண்டறியவே நான் இறங்கி வந்துள்ளேன்” என்றார். அது சரியா? ஆபிரகாமோடு தங்கியிருந்த முக்கியமான ஒருவரைக் கவனியுங்கள், அவருக்குப் பின்னே இருந்த சாராளின் இருதயத்தில் இருந்த சிந்தனைகளை வகையறுத்திருந்தது. இப்பொழுது, நீங்கள் சற்று சுற்றும் முற்றும் பார்த்து, கவனியுங்கள், பாருங்கள், அது இன்றைக்கும் அதேக் காரியத்தை செய்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். அது ஒரு விசாரணைத் தீர்ப்பு. ஏன், சிறிது காலம் கழித்து, சபையானது, அது அந்த இடத்தில் தரித்திருக்கும்போது, ஒவ்வொரு விதையும் அதனதன் இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கும்போது, அவர்கள் போய்விட்டிருப்பார்கள். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். ஒருவர் ஒரு வழியில் சென்று கொண்டிருப்பார். பார்த்தீர்களா? ஒருவர் போதகரின் வீட்டிற்குச் செல்வார், ஒருவர் இங்கே அல்லது அங்கே போய்க்கொண்டிருப்பார், முதல் காரியம் என்னவெனில், அவர்கள் அங்கே இல்லை. ஏனோக்குக்கு முன்னடையாளமாயிருந்தது, “தேவன் அவனை எடுத்துக்கொண்டார், அவன் காணப்படாமற்போனான்.” விசாரணைக்காக இறங்கி வருகின்றனரே! தொடர்ச்சியாய், எப்படியாய் ஏனோக்கின் மறுரூபமாகுதல், பேழையில் கொண்டு செல்லப்படுதல் இஸ்ரவேலருக்கு ஒரு மாதிரி…

5170 அவ்வளவு பரிபூரணமாக, தேவனுடைய வார்த்தை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் கூட மிகவும் பரிபூரணமாக இரண்டு பாகங்களும், ஒரு முழுமையுமாக உள்ளது. அது உண்மை. பழைய ஏற்பாடு அதனுடைய பாதி, புதிய ஏற்பாடு அதனுடைய பாதி; அதை ஒன்று சேர்த்து, நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய முழு வெளிப்பாட்டையும் பெற்றுள்ளீர்கள். அங்கே தீர்க்கதரிசிகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள், இங்கே அவர் நேரில் இருக்கிறார்; பாருங்கள், இரண்டு பாகங்கள், ஒன்று முழுவதுமாக இருக்கும். இப்பொழுது நாம் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை…

5271 இப்பொழுது, புதிய ஏற்பாடு இல்லாமல் பழைய ஏற்பாடு முழுமையடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பழையது இல்லாமல் புதியது முழுமையாய் இருக்க முடியாது. அந்தக் காரணத்தினால்தான் நான் இரண்டு பாகங்களையும், முழுவதுமாக கூறினேன். ஏனென்றால் தீர்க்கதரிசிகள், “அவர் இங்கே இருப்பார்! அவர் இங்கே இருப்பார்! அவர் இங்கே இருப்பார்; அவர்கள் இதை அவருக்குச் செய்வார்கள். அவர்கள் இதை அவருக்குச் செய்வார்கள்!” என்றனர். இதோ அவர், “அவர் இங்கிருந்தார்! அவர் இங்கிருந்தார், அவர்கள் இதை அவருக்குச் செய்தனர், அவர்கள் இதை அவருக்குச் செய்தனர்.” ஒரு சில இரவுகளுக்கு முன்பு நான் அதன் பேரில் பிரசங்கித்தேன்.

5372 இப்பொழுது, வேதத்தை ஆராய்வதற்காக, பவுல் தீமோத்தேயுவிடம், “சத்திய வசனமாகிய, தேவனுடைய வார்த்தையை நாம் நிதானமாய் பகுத்து, படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்” என்று கூறினான். அவைகள் வேதத்தில் மூன்று கட்டாயங்களாக உள்ளன. தேவனுடைய வார்த்தையை உபயோகிப்பதில், நீங்கள் செய்யக் கூடாத மூன்று காரியங்கள் உள்ளன. இப்பொழுது நாம் அவைகளை அடுத்த பத்து நிமிடங்களுக்கு படிப்போம்; நீங்கள் செய்யக்கூடாத மூன்று காரியங்கள். தேசத்தில் உள்ள அனைவரும், தேசம் முழுவதும், நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் ஒரு பென்சிலைப் வைத்திருக்கவில்லையென்றால், இவைகளை உங்களுடைய சிந்தையில் நிச்சயமாகவே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது. நீங்கள் எப்படி செய்ய வேண்டும் என்று நாங்கள் எல்லா நேரத்திலும் உங்களுக்கு கூறுகிறோம், இப்பொழுது நீங்கள் என்ன செய்யக்கூடாது என்பதை நான் உங்களுக்கு கூறப்போகிறேன். 73 இப்பொழுது, நீங்கள் வார்த்தையை தவறாக வியாக்கியானிக்கக் கூடாது. நீங்களோ, “பாருங்கள், இது இதைப் பொருட்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறலாம். அது என்ன கூறுகிறதோ அதையே அது பொருட்படுத்துகிறது. அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. நீங்கள் வார்த்தையை தவறான இடத்தில் பொருத்த வேண்டாம். நீங்கள் வார்த்தையை இடம் பெயரச் செய்யக்கூடாது. நாம் இவைகளில் ஒன்றைச் செய்தால், அது முழு வேதாகமத்தையும் ஒரு குழப்பத்திலும், ஒரு பெருங்குழப்பத்திலும் ஆழ்த்துகிறது.

5474 கவனியுங்கள். ஒரு மனிதனில் தேவனுடைய ரூபத்தில் உள்ள, இயேசுவை தவறாக வியாக்கியானிப்பது, நீங்கள் அவரை மூன்றில் ஒரு தேவனாக ஆக்குவீர்கள். வார்த்தையாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை தவறாக வியாக்கியானம் செய்தால், நீங்கள் அவரை மூன்றில் ஒரு தேவனாக்குவீர்கள், அல்லது நீங்கள் அவரை ஒரு தேவத்துவத்தில் இரண்டாம் நபராக்குவீர்கள். அப்படி செய்தால், நீங்கள் முழு வேத வாக்கியத்தையும் குழப்பிவிடுவீர்கள். நீங்கள் ஒருபோதும் எங்கும் செல்லமாட்டீர்கள். எனவே அது தவறாக வியாக்கியானிக்கப்படக் கூடாது. 75 நீங்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தைக் கூறினால், நீங்கள் அதன் பேரில் ஒரு வியாக்கியானத்தை அளித்து, நீங்கள் அதை மற்றொரு நேரத்தில் பொருத்துவீர்களேயானால், அல்லது அது வேறொரு காலத்திற்கு பொருத்தப்பட்டிருந்தால், நீங்கள் தவறான அர்த்தம் உரைப்பீர்கள்.

5576 வேதத்தில் காணப்படும் இயேசு கிறிஸ்துவை, அவர் தாமே தேவனல்ல என்றுயாராகிலும் தவறாக வியாக்கியானம் செய்தால், அவரை இரண்டாம் நபராக அல்லது மூன்றில் ஒரு தேவனாக ஆக்கினால், அது முழு வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிலைகுலையச் செய்யும். அது, “என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்” என்ற முதல் கட்டளையை மீறும். சரி. அது முழு கிறிஸ்தவ இனத்தையும் மூன்று வித்தியாசமான கடவுட்களை வழிபடும் ஒரு கூட்ட அஞ்ஞான வழிபாட்டாளர்களாக்கும். நீங்கள் எந்தவிதமான ஒரு வேதாகமத்தை வைத்திருப்பீர்கள் என்று பார்த்தீர்களா? அப்படியானால் நாம் என்னவாயிருக்கிறோம் என்று யூதர்கள் கூறுகிறாரோ அதுஅதுவாகத்தான் நம்மை ஆக்கிவிடும். “அவைகளில் எந்தத் தேவர்கள் உங்களுடைய தேவன்?” என்று கேட்டனர். பார்த்தீர்களா? எனவே, நீங்கள் பாருங்கள், உங்களால் முடியாது…நீங்கள் வேதத்தை தவறாக வியாக்கியானம் செய்யக் கூடாது. ஏனென்றால் இயேசுதாமே வேதத்தின் வியாக்கியானமாயிருக்கிறார், அவருடைய சரீரத்தின் பாகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிற காலத்தில் அவர் வெளிப்படுகையில். அது ஒரு கரத்தின் காலம் என்றால், அது ஒரு கரமாகத்தான் இருக்க வேண்டும்; அது தலைக் காலமாக இருக்க முடியாது. அது ஒரு சத்தத்தின் காலமாயிருந்தால், நல்லது, அப்படியானால், அது ஒரு கால் காலமாய் இருக்க முடியாது. பார்த்தீர்களா? இப்பொழுது நாம் கண்ணின் காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது அடுத்தபடியாக, அவரே வரப்போகிறார். காணுதல்; தீர்க்கதரிசனமாக!

5677 பாருங்கள், காலங்கள் தோறும், நாம் அஸ்திபாரத்திலிருந்து, முதலாம் சபையின் காலம் முதற்கொண்டு; அந்த வித்து நிலத்திற்குள் சென்றபோது, அது முழுமையான வித்து. அதன்பின்னர் அது லூத்தரின் பாதங்களினூடாக வெளிவந்தது; அதன்பின்னர் வெஸ்லியினூடாக மீண்டும் வெளியே வந்து; அதன்பின்னர் பெந்தேகோஸ்தேயினருக்கு, அந்நிய பாஷைகளில், உதடுகளில், பாருங்கள்; இப்பொழுது அது மல்கியா 4-ம் அதிகாரம் போன்றவற்றில் உள்ள தீர்க்கதரிசன கண்களில் உள்ளது. இப்பொழுது அது வருவதற்கு அவரே அதற்குள் அடியெடுத்து வைப்பதைத் தவிர வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை, ஏனென்றால் அதுவே அங்குள்ள கடைசி காரியமாகும். அடுத்தது அறிவுத்திறன், நமக்கு சொந்த அறிவு கிடையாது; அது அவருடையது. நமக்கு நம்முடைய சொந்த பார்வையே கிடையாது. ஒரு மனிதன் எப்படி இந்தக் காரியங்களை முன்னறிவிக்க முடியும்? அவனால் அதைச் செய்ய முடியாது. அது தேவன் தாமே. பாருங்கள், அது—அது ஒரு இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அவர் சரீரத்தை முழுவதுமாக ஆளுகை செய்து, அப்பொழுது கிறிஸ்துவின் முழுமையான சரீரம் அவருடைய பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மணவாட்டியின் ரூபத்தில் வெளிப்படுகிறது, ஆதியில் ஆதாம் செய்தது போல…சரியாகக் கூறினால் ஆதியில் இருந்த ஆதாமினுடையது போல.

5778 ஆம், “தேவன்,” இது முழு வேதாகமத்தையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும், முதல் கட்டளையை மீறி, மூன்று பேர் கொண்ட ஒரு அஞ்ஞான தெய்வத்தை உண்டாக்கிக் கொண்டனர். அது—அது வேதாகமத்தின் முழு காட்சியையும் பாழாக்கிவிடும். எனவே நீங்கள் வேதத்தை தவறாக வியாக்கியானம் செய்ய கூடாது. இப்பொழுது, அது ஒரு காரியம். 79 வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வேதவாக்கியமும் ஒரேவிதமாக பொருந்துகிறதாயிருக்கும்போது, நீங்கள் அதை அதனுடைய இடத்தில் அமைக்க வேண்டும். அதற்கு தவறான ஸ்தானத்தை அளிக்க, நீங்கள் ஒரு காலத்தில் அவரை தேவனாக ஆக்கி, அதற்கு அடுத்த காலத்தில் அவரை ஒரு சரித்திரமாக ஆக்கிவிடலாம். எனவே நீங்கள் வேதவாக்கியங்களை தவறாக வைக்கக் கூடாது. அவர் எல்லா நேரத்திலும் தேவனாயிருக்கிறார். நீங்கள் அவரை இன்றைக்கு ஒரு சரித்திரத்தின் தேவனாக்கினீர்களேயானால், அப்பொழுது என்னவாயிருந்தது, அவர் இன்றைக்கு மாறாதவராயிருந்தால், எபிரெயர் 13:8-ஐ நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? பாருங்கள், “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” 80 இப்பொழுது, இது என்ன செய்யும் என்றும், அது என்ன செய்துள்ளது என்றும் பாருங்கள். அது வேதவாக்கியங்களை தவறான இடத்தில் வைக்கும்படி, தம்முடைய சொந்த வார்த்தையை அவர் மறுதலிக்கச் செய்யும்படி, அதை ஏற்கனவே செய்துவிட்டது.

5881 வேதவாக்கியங்களை இடமாற்றம் செய்யும்போது, நீங்கள் அவருடைய சரீரத்தை தவறாக பொருத்தி விடுவீர்கள், தலை இருக்க வேண்டிய இடத்தில் பாதம் அல்லது ஏதோ ஒன்று இருக்கும். அப்படியே ஒரு…வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் இயேசு மோசேயின் செய்தியை போதித்திருக்கலாம். நீங்கள்…அல்லது வெஸ்லியும் கூட லூத்தரின் காலத்தைப் போதித்திருக்கலாம். நீங்கள் இப்பொழுது, நம்முடைய காலத்தில், பெந்தெகொஸ்தே, பெந்தெகொஸ்தே செய்தியை போதிப்பதுபோலாகும். அது என்ன ஒரு குழப்பத்தில் இருக்கும் என்று நீங்கள் பார்த்தீர்களா? பெந்தேகோஸ்தே ஏற்கனவே அதனுடைய சுயரூபத்தைக் காண்பித்து விட்டது. லூத்தர் தன்னுடைய ஸ்தாபனத்திற்குள் சென்றுவிட்டார் என்பதை ஏற்கனவே காண்பித்துள்ளார். அது அங்கேயே மரித்துப் போய்விட்டது. காலப்போக்கில் அப்படி ஆகிவிட்டது; அங்கே அது சென்றது. 82 கவனியுங்கள், அது ஸ்தாபிக்கப்பட்டவுடனே, அது மரித்துவிட்டது. இப்பொழுது, அது சரியாயிருக்கிறதா என்று பாருங்கள். சரித்திரத்தின் பக்கங்களினூடாக திரும்பிப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் அது ஸ்தாபனம் உண்டாக்கினபோது, அது அங்கேயே மரித்துப் போனது; அதற்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லை. அது இந்த உலகத்தின் தெய்வத்தை தொழுதுகொள்ளுகிற ஒரு—ஒருவனாய், ஜீவனுள்ளவர்களாகவும், ஸ்தாபனங்களாகவும், ஸ்தாபனங்களாகவும், மாயைகளுக்குள்ளும் சென்றுவிட்டனர். ஒரு கூட்ட ரிக்கிகள் அதற்குள் நுழைந்து, அதற்குள் தங்களுடைய சொந்த ஆட்சேபனைகளை அல்லது தங்களுடைய சொந்த சிந்தனைகளை அதற்குள் புகுத்திவிட்டனர். அது என்ன சம்பவித்தது? அது ஒரு அலங்கோலமாகிவிட்டது. இந்த உலகத்தின் தேவனுக்குள்ளாக சென்று, அங்கே அவர்கள் சாத்தானை சிங்காசனத்தில் அமர்த்துவார்கள், அவர்களுக்கு சமாதானத்தைக் கொண்டு வர ஒரு மகத்தான உலகத் தலைவர் இருக்கிறார் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

5983 நான் அன்றொரு நாள் உங்களிடம் கூறினேன், நான் அதை மீண்டும் கூறவுள்ளேன், இன்றைக்கு நாகரீகம் கூட தேவனுக்கு முற்றிலுமாக முரணாக உள்ளது. நாகரீகம் தேவனுக்கு முரணானது. கல்வி அவரிடமிருந்து பத்து இலட்சம் மைல்கள் தூரத்தில் உள்ளது; விஞ்ஞானம் என்பது கோடிக்கணக்கான மைல்கள் தூரத்தில் உள்ளது. விஞ்ஞானமும் கல்வியும் தேவனை பொய்யென்று நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன, பாருங்கள், வேத சாஸ்திர கருத்தரங்குகள், பள்ளிகள், விஞ்ஞான அறைகள் போன்றவற்றினூடாக. அவர்கள் தங்களுடைய அசைவைப் பெற்றிருந்தனர். அன்றொரு இரவு தரிசனத்தைக் குறித்து என்ன, அந்த மனிதனைக் குறித்து அவன் கூச்சலிட்டபோது, அங்கே அந்த விஞ்ஞானிகளிடம் அந்த பொருளை இந்த விதமாக ஊற்றிக்கொண்டிருந்தானா? அவர்கள் அப்படியே திரும்பி மேலே நோக்கிப் பார்த்துவிட்டு சென்றனர். இன்னும் ஒரு சவாரி இருக்கும்.

6084 கவனியுங்கள், ஓ, இந்த மூன்றும் இருக்க வேண்டும். இப்பொழுது, உங்களால் முடியாது…இயேசு நோவாவின் செய்தியைப் பிரசங்கிக்க வரவில்லை, அவர் மோசேயின் செய்தியைப் பிரசங்கிக்க வரவில்லை, அல்லது மோசே பிரசங்கிக்க வரவில்லை… பாருங்கள், வேதவாக்கியங்களை தவறாக இடம் பெறச் செய்யாதீர்கள், அது சரியான நேரத்தில் இருக்க வேண்டும். இப்பொழுது, நீங்கள் விண்ணப்பிக்க முடியாது… அந்த மகத்தான மனிதர் ஜான் வெஸ்லி வெளியே வந்தபோது, அல்லது, அந்த மகத்தான மனிதன், லூத்தர், லூத்தர் தன்னுடைய நீதிமானாக்கப்படுதலின் செய்தியுடன் வந்தபோது, இப்பொழுது அது ஒரு…லூத்தர் ஒரு மகத்தான மனிதனாயிருந்து, அவர் சபையை இருளிலிருந்து அழைத்தார், அவர் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலை அளித்தார், அவர் அதைச் செய்தபோது, அவர்கள் அதன் மேல் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கினர், அது மரித்துப் போனது. ஜீவன் ஒரு கோதுமை தண்டுக்குள் பிரயாணம் செய்தது போன்று வெஸ்லியின் காலத்திற்குள், பட்டுக் குஞ்சத்திற்கு சென்றது. லூத்தரிலிருந்து மரித்த மற்ற இலைகள் தோன்றின, அந்த மகத்தான சீர்திருத்தத்திலிருந்து வெளியே வந்த ஸ்விங்கிலி, கால்வின் மற்றும் மற்ற எல்லோருமே.

6185 அதன்பின்னர் வெஸ்லி தோன்றினார், மற்றொரு காலம் ஒரு பட்டுக் குஞ்சமாக மலர்ந்திருந்தது. வெஸ்லி, அட்டர்பரி, மற்றும்—மற்றும் ஜான் மற்றும் அவருடைய சகோதரன், அவர்கள் யாவரும், ஒரு செய்தியோடு மகத்தான தேவனுடைய மனிதர்கள் தேசம் முழுவதும் பரவினர். அவர்கள் அதை ஸ்தாபித்தனர்; அது மரித்துவிட்டது. அப்பொழுது அது சரியாக அவள் இப்பொழுது தானியத்தை முளைக்கப்போவதைப் போன்றே காணப்பட்டது, அது பெந்தேகோஸ்தே என்ற, பதராக இருந்தது என்று கண்டறியப்பட்டது. ஆனால் அவை அனைத்திற்கும் பின்னால் ஒரு சிறு மொட்டு வந்தது. நீங்கள் கவனியுங்கள், வழக்கமாக…லூத்தர் களத்தில் இருந்த சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், லூத்தரன் சபை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. வெஸ்லி களத்தில் இருந்த சிறிது காலத்திற்குப் பிறகு, அது ஸ்தாபனமாக்கப்பட்டது.

6286 டூசானில், எப்படி வெஸ்லி சபை அல்லது மெத்தோடிஸ்டு சபையானது தோன்றினது என்பதைக் குறித்த ஒரு—ஒரு திட்டத்தை நாங்கள் உடையவர்களாயிருந்தோம். அவர்கள் அமெரிக்காவிற்கு இங்கு வந்தபோது, அவர்களில் அநேகர் திரும்பி வந்து, அவர்கள் ஒரு—ஒரு சாசனத்தை ஏற்படுத்திக் கொண்டதாகக் கூறி, இங்கிலாந்திலிருந்து அதை இங்கே கொண்டு வர, எப்படி அது முழுவதுமாக நாடகமாக்கப்பட்டது. அப்பொழுது என்ன நடந்தது என்பதை நான் கண்டேன். அங்கே அவள் மரித்துப் போனாள். 87 பாருங்கள், பெந்தேகோஸ்தேக்கள் தோன்றினர், நீண்ட நாட்களுக்கு முன்பு சத்தமிட்டவர்கள், அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தைப் பெற்று, அந்நிய பாஷைகளில் பேசத் துவங்கினார். அதன்பின்னர் அவர்கள் அதற்கு, “பரிசுத்த ஆவியின் அத்தாட்சி” என்று பெயரிட்டனர். அதன்பின்னர் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். ஒருவன் இதைச் செய்யப் போவதாகவும், மற்றவன் அதைச் செய்யப் போவதாகவும் கூறினபோது, அவர்களுக்கு பிரச்சனைகளுக்கு மேல், பிரச்சனைகள் இருந்தன. அது என்ன செய்தது? அவைகள் ஒவ்வொன்றும் தண்டில் மடிந்தது போலவும், பட்டுக் குஞ்சத்தில் இருந்தது போலவும் விரிகின்றன. அவர்கள் ஒருத்துவத்தையும், இருத்துவத்தையும், மூவத்துவத்தையும், தேவனுடைய சபையையும், இந்த மற்ற யாவற்றையும் உடையவர்களாயிருந்தனர். அப்படியே வெளிப்பட்டு, வெளிப்பட்டு, வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஆனால் இப்பொழுது, இயற்கையின்படி, இது ஒரு பரிபூரண உதாரணமாக உள்ளது, அதிலிருந்து அதைக் கற்றுக்கொள்ள நீங்கள் ஒருபோதும் எந்த ஒன்றாகவுமே இருக்கமாட்டீர்கள்.

6388 கென்டக்கியில் உள்ள என்னுடைய நண்பர்கள் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு, அன்றொரு நாள் ஒரு சிறு—சிறு குழந்தை பிறந்தது, அவர்கள் எங்களுடைய இரவு ஆகாரத்தை சமைத்துக்கொண்டிருந்தபோது, அந்த தாயார் எழுந்திருந்தாள். அவள் அவள் வேட்டையாட சென்றிருந்த ஒரு கூட்ட புருஷர்களாகிய எங்களுக்கு இரவு உணவு சமைக்க மற்ற சகோதரிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். எனவே குழந்தை அழத் துவங்கியது, நான் பேசிக்கொண்டிருந்தேன். அந்தத் தாய் ஒரு சிறு சங்கடத்தை உணர்ந்தாள் என்று நான் நினைக்கிறேன், எனவே அவள் ஓடிச் சென்று குழந்தையை எடுத்து, மேலும்—மேலும் அந்த சிறு நபருக்கு உணவளிக்கத் தொடங்கினாள். நான், “உங்களுக்குத் தெரியும், அது இயற்கையானது” என்றேன். பார்த்தீர்களா? இப்பொழுது, உங்களால் முடியாது… ஒரு குழந்தை விரும்புகிறதைப் பெற்றுக் கொள்ள, அதற்காக அழுவதைக் காட்டிலும், வேறெந்த மேலான வழியையும் அவர்கள் ஒருபோதும் கண்டறிந்ததில்லை. இப்பொழுது, நீங்கள் அதற்கு ஒரு—ஒரு நெறிமுறை புத்தகத்தைக் கொடுத்து, “மகனே, நான் உனக்கு வேத சாஸ்திரத்தைக் கற்பிக்க விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் மற்ற சிறு பிள்ளைகளைப் போல இங்கே கூச்சலிட வேண்டாம்; நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள். இப்பொழுது, நீ போஷிக்கப்பட விரும்பும்போது, நீ இங்கே இந்த சிறு மணியை ஒலிப்பாயாக” என்று கூறலாம். கிரியை செய்யாது. இல்லை, அது கிரியை செய்யாது.

6489 ஆகையால், நீங்கள் இயற்கையை கவனிக்கும்போது, இப்பொழுது ஒவ்வொரு காலத்திலும் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று நேரடியாக அதை வடிவமைத்துள்ளதை நாம் காண்கிறோம். பதர் விலகிச் சென்றுவிட்டது. நாம் பதினைந்து ஆண்டுகளாக, கிட்டத்தட்ட இருபது வருடங்களாக செய்தியானது தேசத்திலிருந்து தேசத்திற்கு பரவி, இன்று காலை இந்த தேசம் முழுவதிலும் இணைக்கப்பட்டுள்ளனர், பாருங்கள், எந்த ஸ்தாபனமும் இல்லை. அதனால் ஸ்தாபனமாக முடியாது. அதைப்போன்று எந்தக் காரியமும் இருந்ததில்லை அல்லது இதற்குப் பிறகும் இருக்கப்போவது கிடையாது. பார்த்தீர்களா? இன்றைக்கு செய்தியோடுள்ள காரியம் என்னவெனில், அதை தங்களுடைய இருதயங்களில் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் முதிர்ச்சியடைய குமாரனின் பிரசன்னத்தில் கிடக்க வேண்டும். பார்த்தீர்களா? நீங்கள் செய்தியை எடுத்து, அதன்பின்னர் குமாரன் உங்களிடத்திலிருந்து எல்லா பசுமையையும் சுடச் செய்யட்டும், பாருங்கள், அது முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களை உருவாக்கும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? தேவன் தம்முடைய சபையை ஏற்றுக்கொள்ள சீக்கிரத்தில் வருகிறார், அவர் ஏற்றுக்கொள்ள அந்த மாதிரியான கிறிஸ்தவர்களை நாம் பெற்றிருக்க வேண்டும். கோதுமை முதிர்ச்சியடைய வேண்டும். சரி.

6590 இந்த மூன்றும் இருக்க வேண்டும். அதை தவறாக வியாக்கியானிக்கவோ, அல்லது தவறாகக் கையாளவோ, அல்லது தவறாக வியாக்கியானிக்கவோ, அல்லது தவறாக-…அதை இடமாற்றம் செய்யவோ கூடாது. அது தேவன் கூறினவிதமாகவே அது இருந்தபடியே சரியாக அப்படியே வைக்கப்பட வேண்டும். உலகத்திற்கு, அது ஒரு இரகசியமான புஸ்தகம். அது ஒரு இரகசியமான புத்தகம் என்று ஜனங்கள் நம்புகின்றனர். ஒரு சமயம் நான் இங்கே நகரத்தில் மிகவும் பிரபலமான ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டிருந்தேன், அவர் கிறிஸ்தவ மார்க்கத்தின் மகத்தான அந்தஸ்தை உடையவராயிருக்கிறார், அவர், “ஓரிரவு நான் வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை வாசிக்க முயற்சித்தேன்” என்றார். மேலும், “யோவான் மிகக் காரமான உணவை உண்டிருக்க வேண்டும், மேலும் ஒரு கெட்ட கனவு கண்டிருக்க வேண்டும்” என்றார். பாருங்கள், ஒரு இரகசிய புத்தகம்.

6691 ஆனால் உண்மையான விசுவாசிக்கு, அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் தேவன் வெளிப்படுவதைக் குறித்த வெளிப்பாடாய் உள்ளது. அவர், “என் வார்த்தைகள் ஆவியும் ஜீவனுமாயிருக்கின்றன” என்றார். இயேசு அதைக் கூறினார். மீண்டும், “வார்த்தையானது விதைக்கிறவன் விதைக்கிற ஒரு விதையாய் இருக்கிறது.” அது உண்மை என்பதை நாம் அறிவோம். அது வார்த்தை வடிவில் உள்ள தேவன், அவரால் மாத்திரமே வியாக்கியானிக்கப்பட முடியும். மானிட சிந்தையானது தேவனுடைய சிந்தையை வியாக்கியானிக்க வல்லதாய் இல்லை. நாம் ஒருவருடைய சிந்தையை மற்றொருவர் வியாக்கியானிக்கக் கூட முடியாதபோது, எப்படி சிறிய—சிறிய முடிவுற்ற சிந்தை முடிவற்ற சிந்தையை வியாக்கியானிக்க முடியும்? 92 நீங்கள் கவனியுங்கள், அவர் ஒருவரே அதை வியாக்கியானிக்க முடியும், அவர் தமக்குச் சித்தமானவர்களுக்கு அதை வியாக்கியானிக்கிறார். அது, “பூர்வகால மானிடர்கள், அவர்கள் பூர்வகாலங்களிலும், பலவகைகளிலும் பூமியெங்கும் நடந்து வந்தனர்” என்று கூறவில்லை. “தேவன் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு தம்மை வெளிப்படுத்தினார்.” பார்த்தீர்களா?

6793 கவனியுங்கள், “அவர் அதை யாருக்கு வெளிப்படுத்துவார்.” அவர் தம்மை வேதத்தில் மிகவும் புத்திசாலித்தனமான வேத சாஸ்திரிக்கு மறைத்துக்கொள்ளும்படியாக அவர் வடிவமைத்துள்ளார். ஓ, என்னே! அவர் தம்மை மறைத்துக் கொள்ள முடியும், நீங்கள் நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தும், அதை ஒருபோதும் காணமாட்டீர்கள். வாழ்நாள் முழுவதும் நோக்கிப் பார்த்தாலும், அதை ஒருபோதும் காண முடியாது. அவர் தம்மை மறைத்துக்கொண்டு, அங்கேயே அமர்ந்திருக்க முடியும். 94 இப்பொழுது, தயவு செய்து, எல்லாவிடங்களிலும், அது உள்ளே பதியட்டும். அதாவது, தேவன், வார்த்தையில், தம்மை வார்த்தையில் மறைத்துக்கொள்ள முடியும், உலகத்தில் எந்த ஒரு வேத சாஸ்திரியும் அல்லது ஒரு பள்ளிக்கூடமும் அவரை ஒருபோதும் கண்டறிய முடியாது என்றும், அதே சமயத்தில் அவர் அங்கேயே அமர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் நான் நம்புகிறேன். நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், அது சரியா?” என்று கேட்கலாம். பரிசேயர்களையும் சதுசேயர்களையும் குறித்து என்ன? ஒவ்வொரு காலத்திலும் எப்படி இருக்கும்? அவர் அதை செய்துவிட்டார். நிச்சயமாக. அவர் ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே செய்துள்ளார். இப்பொழுது நாம் அதை சரிபார்த்துக் கொள்ளலாம். நாம் நோவாவின் நாட்களைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போமாக; புத்திசாலியான, அறிவாற்றல் கொண்ட காலத்தில், எப்படியாய் அவர் தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையில் தம்மை மறைத்துக் கொண்டார். மோசேயின் நாட்களில், எப்படியாய் அவர் தம்மை மறைத்துக் கொண்டார். எலியாவின் நாட்களில், எப்படியாய் அவர் தம்மை மறைத்துக் கொண்டார். இயேசுவின் நாட்களில், எப்படியாய் அவர் தம்மை மறைத்துக் கொண்டார். “அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவரால் உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானவர்களிடத்திற்கு வந்தார்; அவருடைய சொந்தங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.” பார்த்தீர்களா?

6895 அவர் பூமியின் மேல் உள்ள புத்திசாலியான, அறிவாற்றலுள்ள மனிதனுக்கு தம்மை மறைத்துக் கொள்கிறார். நீங்களோ, “பாருங்கள், இது வேத பண்டிதர் பரிசுத்த பிதா இன்னின்னார் ” என்று கூறலாம். அவன் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் அவனிடமிருந்து தம்மை மறைத்துக்கொள்கிறார்; கற்றுக்கொள்ளும், பாருங்கள், தேவனுடைய குழந்தைகளான, முன்குறிக்கப்பட்ட வித்துக்கு அதை வெளிப்படுத்துவார். 96 சிந்தியுங்கள். வல்லமையுள்ள தேவன் தம்முடைய சொந்த வார்த்தைகளில் அமர்ந்து, இந்த நிகழ்காலத்தின் அறிவாளிகளையும், படித்த ஜனங்களையும் குருடாக்குகிறார், அவர்கள் அதைக் கண்டு கொள்வதில்லை. அது வெறுமென ஒரு கூட்ட மதவெறித்தனம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பெந்தேகோஸ்தேயினர், பாப்டிஸ்டுகள், மெத்தோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் ஆகியோரிடம் மறைந்து நின்று கொண்டிருக்கிற அவரை நோக்கிப் பாருங்கள். தம்மை பகிரங்கமாக வெளிப்படுத்தி, எல்லாவிதமான காரியங்களையும் காண்பித்து, அதை செய்தித்தாள்களில் வெளியிட்டாலும், அது போன்ற காரியங்கள், அதே சமயத்தில் அவர்கள் அதை கண்டு கொள்வதில்லை. ஓ, நம்முடைய தேவன் எவ்வளவு மகத்தானவர், தாம் சித்தமுள்ளவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். 97 “ஓ,” நீங்களோ, “சகோதரன் ஜோன்ஸ் அல்லது சகோதரன் இன்னார் இன்னார் அவர்—அவர் ஒரு மகத்தான மனிதர். அவர் அதைக் காண்பார்” என்று கூறுகிறீர்கள். ஓ, இல்லை. அவர் அதை தாம் விரும்புகிறவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். “என் மனைவி அதைக் காணவில்லை, அவள் ஒரு கிறிஸ்தவ பெண்” என்று கூறலாம். அவர் விரும்புகிறவர்களுக்கு தம்மை வெளிப்படுத்துகிறார். “பாருங்கள், என்னுடைய போதகர் ஒரு மகத்தான மனிதர்.” அது உண்மை, ஆனால் அவர் தம்மை விரும்புகிறவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இப்பொழுது என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்தப்பட்டுள்ளதைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள், அப்பொழுது நீங்கள்…உங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

6998 இப்பொழுது அப்படியானால் நாம் கவனிப்போம், அது ஒரு தேவனுடைய புஸ்தகமாக ஆக்குகிறதேயன்றி, ஒரு மனிதனுடைய புத்தகமல்ல. அது மனிதனாயிருக்குமானால்…இப்பொழுது அது தன்னை எப்படி வெளிப்படுத்தும் என்று நாம் பார்ப்போம். அதை எழுதின மனிதர்களின் பாவத்தை அது எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பாருங்கள், கவனியுங்கள், அதன் நாளில் வாழ்ந்த மனிதர்கள். உதாரணமாக, ஆபிரகாம், அவன் “உண்மையுள்ளவர்களின் தகப்பன்” என்று அழைக்கப்படுகிறான். அது எப்படி என்பதைக் கவனியுங்கள்…ஆபிரகாம் தன்னுடைய சொந்த கோழைத்தனத்தைக் குறித்து தன்னைக் குறித்து இந்த புஸ்தகத்தை எழுதிக் கொண்டிருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த காலையில் அவன் ராஜாவினிடத்தில் பொய்யுரைத்ததாக அவன் எழுதியிருப்பான் என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள், அது அவருடைய மனைவியாயிருந்தபோது, அது அவருடைய சகோதரி என்று கூறினதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்களா? அவன் செய்த கோழைத்தனமான செயல்களை எழுதுவானா? நிச்சயமாக, அவன் அதை ஒருபோதும் செய்திருக்கமாட்டான். 99 யாக்கோபு தன்னுடைய வஞ்சனையைக் குறித்து என்ன? யாக்கோபு ஒரு சிறு ஏமாற்றுக்காரனாயிருந்தான். ஒரு—ஒரு—ஒரு மனிதன், தன்னுடைய எபிரெய சகோதரனின் எபிரெய எழுத்தில், அவனுக்குள் இஸ்ரவேல் யாவரும் அழைக்கப்பட்டிருந்தனர், முழு தேசத்தின் தகப்பனின் வஞ்சகத்தை எழுதத் துணிவானா? யாக்கோபிலே கோத்திரப் பிதாக்கள் தோன்றினர்; கோத்திரப் பிதாக்களிலிருந்து, கோத்திரங்கள் தோன்றினது. அவை எல்லாவற்றிற்கும் அஸ்திபாரக் கல்லாக, அவன் ஒரு வஞ்சகன் என்று வேதம் அம்பலப்படுத்துகிறது. அது சரியா? மனிதன் அதை எழுதியிருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை ஐயா.

70100 இங்கே பூமியில் எப்போதும் இருந்ததிலேயே மகத்தான இராஜாவாக முடிசூட்டப்பட்ட ஒரு மனிதனைக் குறித்து எழுதின ஒரு மனிதன்; தாவீது, தன்னுடைய விபச்சாரத்தில் ஈடுபட்டதா? அந்த யூதர்கள் தங்களுடைய மிகவும் உன்னதமான ராஜா ஒரு விபச்சாரக்காரன் என்று எப்போதாவது எழுதுவார்களா? ஓ, “ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு போதும் பொய்யுரைத்ததில்லை” என்பது போன்ற வரலாறு நமக்கு உண்டு, அது போன்ற காரியங்கள் உள்ளன. நாம் அதை வரலாறு என்று அழைக்கிறோம். ஆனால் இந்த ஒரு மனிதனை, வேதாகமம் தாவீதை “விபச்சாரம் செய்தவன்” என்று அழைக்கிறது. இஸ்ரவேலின் ராஜா, விபச்சாரஞ் செய்த குமாரன்…இயேசு தாவீதின் குமாரனாயிருக்கிறான். அதே தலைக்கல்; அவருடைய தகப்பன் மாம்சத்தின்படி விபச்சாரஞ் செய்தவராயிருந்தார். யூதர்கள் அதைப் போன்ற ஒரு புத்தகத்தை ஒருபோதும் எழுதமாட்டார்கள். மனிதன் சுயமாக இதை எழுதுவானா? நிச்சயமாக இல்லை.

71101 அந்த பெருமை வாய்ந்த இஸ்ரவேல் தேசம் எப்படி இருக்கும்? அவர்கள் எவ்வளவு பெருமையாயிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பெருமை வாய்ந்த இஸ்ரவேல் தேசம் தங்களுடைய சொந்த விக்கிரகாராதனையைக் குறித்தும், தங்களுடைய தேவனுக்கு விரோதமாக அவர்கள் செய்த கலகத்தைக் குறித்தும், அவர்கள் செய்த அசுத்தமான, அசுத்தமான காரியங்களுக்கு எதிராக, ஒரு புஸ்தகத்தில் எழுதினார்களா? அவர்கள் நிச்சயமாக அதை மறைத்திருப்பார்கள். அவர்கள் நல்ல காரியங்களையே காண்பித்திருப்பார்கள். ஆனால், இந்த வேதாகமம் எது சரி, எது தவறு என்பதைக் கூறுகிறது. யூதர்கள் தங்கள் சொந்த அசுத்தத்தைப் பற்றி இப்படி ஒரு புத்தகத்தை எழுதியிருக்க மாட்டார்கள் என்பது எவருக்கும் தெரியும். விக்கிரகாராதனை, தோல்வி, மற்றும் அவர்கள் கொண்டிருந்த ஒவ்வொரு காரியத்தையும் கண்டனர். அவர்கள் அதை ஒருபோதும் எழுதியிருக்கமாட்டார்கள். ஓ, இல்லை. அப்படியானால், அதை எழுதியது யார்? வேதம் எபிரெயர் 1:1-ல், “தேவன் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றினார்” என்று கூறியுள்ளது. அப்படியானால், அது தீர்க்கதரிசிகள் அல்ல, அவர்கள் அழிவுள்ளவர்கள் அல்ல. “தேவனே!” “பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகள்” என்றல்ல. ஆனால், “தேவன் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றினார்.” நான் இங்கே ஒரு வேதவாக்கியத்தை எழுதி வைத்துள்ளேன். அது என்னவென்று எனக்குத் தெரியாது; என்னால் அதைக் குறிப்பிட முடியாது. வழக்கமாக, நான் இவைகளைக் குறித்து குறிப்பிடும்போது, நான் ஒரு வேதவாக்கியத்தை நோக்கிப் பார்ப்பேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்களானால், நான் அதை ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்க்கப் போகிறேன். அது இரண்டாம் தீமோத்தேயு 3:16-ல் உள்ளது. நான்—நான்—நான் அதை நினைவில் வைத்துக் கொள்வேன் என்று நினைத்தேன், ஆனால் நான் வருந்துகிறேன். அது என்ன என்பதைக் கண்டறிய நான் ஒரு நிமிடம் நிறுத்துவேன்.

72102 “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்.” இப்பொழுது இரண்டாம் தீமோத்தேயு 3, 3:16. அது 3:16-ல் என்ன கூறுகிறது என்பதை நாம் பார்ப்போம். வேதவாக்கியங்களெல்லாம் (ஆம்) (தீர்க்கதரிசிகளா? இல்லை.) தேவ ஆவியினால் (என்ன?) அருளப்பட்டிருக்கிறது ; அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக. 103 சரி, அப்படியானால் வேதவாக்கியங்கள் யாவும் ஆவியின் ஏவுதலினால் எழுதப்பட்டிருக்கின்றன. இயேசுவானவர் இங்கே பூமியின் மேல், வானமும் பூமியும் ஒழிந்துபோம் என்று கூறினார், ஆனால் அவருடைய வார்த்தை ஒழிந்துபோகாது. வேதவாக்கியங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ஆகையால் அந்த புஸ்தகம் மனிதனுடைய எழுத்துக்களைக் கொண்ட ஒரு புத்தகம் அல்ல. அது தேவனுடைய புத்தகங்களின் புத்தகமாயிருக்கிறது.

73104 இப்பொழுது, தேவன் தம்முடைய சபை, அவருடைய ஸ்தானம், அவருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் அதைக் குறித்த எல்லாவற்றையும் முன்குறித்தலின் மூலம் தெரிந்துகொண்டார் என்பதை நாம் அறிவோம். முன்னறிவினால் அவர் தம்முடைய தீர்க்கதரிசியை முன்குறித்தார். காலமானது வந்தபோது, அவர் தம்முடைய தீர்க்கதரிசியை அதே நேரத்தில் வரவழைத்தார், அவர் அவரைக் கொண்டு வேதாகமத்தை எழுதினார். இப்பொழுது, தேவன் தீர்க்கதரிசியைக் கொண்டு மாத்திரமே வேதாகமத்தை எழுதினார், ஏனென்றால் அதுவே அவருடைய வழியாய் உள்ளது. எனவே, பாருங்கள், அது வார்த்தையல்ல…எனவே, பாருங்கள், அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது, மனிதனுடைய வார்த்தையல்ல.

74105 தேவன் ஒரு நபர். தேவனால் பேச முடியும். தேவனால் பேச முடியும். தேவனால் எழுத முடியும். அவர் அதை அந்தவிதமாகச் செய்ய வேண்டியதில்லை, ஆனால் அந்தவிதமாகவே அவர்—அவர் அதைச் செய்யத் தெரிந்து கொண்டார். அவர் அதை அந்தவிதமாக செய்ய வேண்டியதில்லை, ஆனால் அவர் அதை அந்தவிதமாக செய்யத் தெரிந்து கொண்டார். இப்பொழுது நீங்கள், “தேவன் தம்முடைய விரலினால், தம்முடைய கம்பீரமான விரலினால் பத்து கற்பனைகளை எழுதினார். எனவே தேவன் தாமே எழுத விரும்பினால், எழுத முடியும்” என்று கூறுகிறீர்கள். பார்த்தீர்களா? ஆனால் அவர்—அவர் அதை தீர்க்கதரிசிகள் மூலமாக எழுத தெரிந்து கொண்டார், பாருங்கள். ஏனென்றால் அது அவருடைய தன்மைகளாயிருந்தன, அவருடைய வார்த்தை, அவர் அவைகளினூடாக வெளிப்படுத்தி, எல்லோரையும் அவருடைய ஒரு பாகமாக்கினார். பார்த்தீர்களா? அவரால் தம்முடைய விரலினால் எழுத முடிந்தது. அவர் தம்முடைய விரலை எடுத்து, பாபிலோனின் சுவர்களில், “நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” என்று எழுதினார். அவர் தம்முடைய சொந்த விரலினால் எழுதினார்.

75106 தேவனால் பேச முடியும். தேவனால் பேச முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் மலையின் மேல் எரிகிற முட்செடியில் மோசேயினிடத்தில் பேசினார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா. அவர் ஒரு புறாவின் ரூபத்தில், யோவானிடத்தில் பேசினார், (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?) “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது. அவர் அவனிடம் பேசினார். அவர் மறுரூப மலையின் மேல், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு முன்பாக இயேசுவிடம் பேசினார். அவரால் பேச முடியும். அவர் ஒரு ஊமை அல்ல. தேவனால் பேச முடியும். எனவே அவர் மறுரூப மலையில் இயேசுவிடம் பேசினார். அவர் திரளான ஜனங்களுக்கு முன்பாக இயேசுவினிடத்தில் பேசினார்; அப்பொழுது இடிமுழக்கம் என்று ஜனங்கள் கூறினர், ஆனால் அது தேவன் இயேசுவிடம் பேசினதாயிருந்தது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவை ஏறக்குறைய இயேசு பேசினவையே. அவர் தேவனாயிருக்கிறார். எனவே, தேவனால் பேச முடியும்.

76107 ஒரு நாள் தம்முடைய சொந்த விரல்களை எடுத்து மணலில் எழுதினார். அவர் பேசினார், அவர் பிரசங்கித்தார், அவர் தம்முடைய சொந்த உதடுகளினால் தீர்க்கதரிசனம் உரைத்தார், அவர் மாம்சமாகி, நம் மத்தியில் வாசம் செய்தபோது, தேவன் அவ்வாறு செய்தார், “தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.” அவரால் எழுதவும், பேசவும் முடிந்தால், மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் கூட அவரால் கூற முடியாதா? நிச்சயமாக முடியும். அவரால் அவர்களிடத்தில் ஒரு மானிட சத்தத்தில் பேச முடியும். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு எழுதிக் காண்பிக்க முடியும். அவர் அதை செய்திருக்கிறார். எனவே, “தேவன் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றினார்.” அவர், “அது நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது” என்று அதன் பேரில் எழுதப்பட்டுள்ளது என்று, கூறினார், அதன்பின்னர் அது வெளிப்படுகிறது; அப்பொழுது அது நிறைவேறும், ஏனென்றால் அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பொழுது அது நிறைவேற முடியாது, ஆனால் வார்த்தைதாமே மாம்சமாகிறது. ஜாட் என்றால் “சிறிய சொல்” என்று பொருள். டிட்டில் என்றால் “சிறிய குறி” என்று பொருள். தேவனுடைய வார்த்தையில் ஒரு நிறுத்தற்குறியோ, ஒரு சொற்றொடரோ, எந்தக் காரியமும் கூட ஒருபோதும் தவறிப் போவதில்லை. அது தவறிப்போக முடியாது, ஏனென்றால் அது தேவன், தேவன் ஒரு மானிட மாம்ச ரூபத்தில் வெளிப்பட்டார். ஏனென்றால் அது தேவன் தாமே எழுத்து வடிவிலும், தீர்க்கதரிசியின் ரூபத்திலும், மாம்சத்தில் வெளிப்பட்டவராயிருக்கிறார். இப்பொழுது, அந்தக் காரணத்தினால்தான் இயேசுவானவர், “உங்களிடத்தில் பேசினவர்களை நீங்கள் தேவர்கள் என்று அழைக்கிறீர்கள், தேவனுடைய வார்த்தையினால் உங்களிடத்தில் பேசினவர்களை நீங்கள் தேவர்கள் என்று அழைக்கிறீர்கள்” என்றும், “அவர்கள் தேவர்களாயிருந்தனர்” என்றும் கூறினார். அந்த தீர்க்கதரிசிகள் தேவனுடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, சரியாக தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வந்தனர், அப்பொழுது அவர்கள் தேவர்களாயிருந்தனர். அவர்கள் மூலமாக தேவனுடைய வார்த்தை பேசினது, அவர்கள்—அவர்கள் வியாக்கியானம் செய்ய ஆக்கியோன் அனுமதிக்கும் விதத்தில் மாத்திரமே வியாக்கியானிக்க முடியும்.

77108 இப்பொழுது, நீங்கள் அதைக் கண்டறிய வேண்டுமானால், அது பேதுரு இரண்டாம் 1:20 மற்றும் 21-ல் உள்ளது. சரி. ஏனென்றால், இங்கே, தேவன்…அங்கு சொந்த வியாக்கியானம் சொல்பவர் இல்லை, அவர் தம்முடைய சொந்த வியாக்கியானத்தை உரைக்கிறார். தேவன் தாமே அதை பேசி, அதற்கு வியாக்கியானம் அளித்து, அதன்பின்னர் அவர் விரும்புகிறவர்களுக்கு அதை வெளிப்படுத்தி, மற்றவர்களிடமிருந்து மறைத்துக் கொள்கிறார். அவர் விரும்பாமலிருந்தால், அவர் அதை எவருக்கும் வெளிப்படுத்த வேண்டியதில்லை. அவர்…அவர், அவர் தம்முடைய முழுக் காரியத்தையும் வேதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார், ஆகையால் அந்த முழு காரியமும் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது; அது சம்பவிப்பதை அவர் அங்கே அமர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். பார்த்தீர்களா? இல்லை. சரீரம் உண்டாக்கப்பட்டு, அதனுடைய ரூபத்திற்கு, மீண்டும் அவருடைய மணவாட்டிக்கு வருவதைக் காண்கிறோம். சரி.

78109 விசுவாசிகள் அதை விசுவாசிக்கிறார்கள், இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்த ஆபிரகாமை போல. 110 இந்த வார்த்தை எபிரெயர் 4:12-ல் இருதயங்களின் இரகசியங்களை வகையறுக்கிறது. “அது இருதயத்தின் இரகசியங்களை வகையறுக்கிறது.”

79111 தீர்க்கதரிசிகள் எப்பொழுதுமே தாங்கள் என்ன எழுதிக் கொண்டிருந்தனர் அல்லது அவர்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவில்லை, அல்லது அவர்களால் அதை புரிந்து கொள்ள முடிந்திருந்தால், அவர்கள் அதை எந்த விதத்திலும் கூறியிருக்கமாட்டார்கள். பார்த்தீர்களா? ஆனால் வேதமோ, “அவர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டனர்” என்று கூறியுள்ளது. ஏவப்பட்டனரே! பரிசுத்த ஆவி உங்களிடத்தில் அசைவாடும் போது, நீங்கள் அசைவாடுகிறீர்கள். மனிதன்…“பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்ட தீர்க்கதரிசிகளிடத்தில் தேவன் பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் பேசினார்.” அதனால்தான் எல்லா காலங்களிலும், ஆவிக்குரிய ஜனங்கள் நேரங்களைக் குறித்தும், என்ன சம்பவிக்கப் போகிறது என்பதைக் குறித்தும் தீர்க்கதரிசிகளிடம் ஆலோசனை கேட்டனர். தீர்க்கதரிசி-எழுத்தாளன் தொடர்ந்து ஆக்கியோனுடன் ஐக்கியத்தில் இருக்க வேண்டும். பார்த்தீர்களா? புத்தகம் என்னவாக இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள, அவன் தொடர்ந்து ஆக்கியோனுடைய பிரசன்னத்தில் வாழ வேண்டும். பார்த்தீர்களா? தீர்க்கதரிசி-எழுத்தாளன், அவன் எந்த நேரத்திலும் எழுதுகோலை ஆயத்தமாக வைத்திருந்தான், தேவனாயிருந்த, ஆக்கியோனோடு தொடர்ந்து ஐக்கியங்கொண்டிருந்தான், அவர் எழுதும்படி கூறியதை உடனே எழுதினான். பார்த்தீர்களா? அவன் எவ்விதமான ஒரு ஜீவியத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை…தன்னுடைய எல்லா சகோதரர்களிடமிருந்தும் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்பதை காண்பித்தது.

80112 இப்பொழுது, அந்தக் காரணத்தினால்தான் தீர்க்கதரிசி தன்னுடைய சிந்தையை தேவன் கூறினதின் பேரில் தொடர்ந்து பொருத்தியிருந்தான்; மனிதன் என்ன நினைத்தான் என்பதையும், காலங்கள் என்ன நினைத்தன என்பதையும், சபை என்ன நினைத்தது என்பதையும், இராஜ்ஜியம் என்ன நினைத்தது என்பதையும் அல்ல. தேவன் என்ன நினைத்தார் என்பதையே! அவர் தேவனுடைய சிந்தனைகளை வார்த்தைக்கு மாத்திரமே வெளிப்படுத்தினார், ஏனென்றால் ஒரு வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது அது ஒரு சிந்தனையாக இருக்கிறது. நீங்கள் அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? வார்த்தை வெளிப்படுத்தப்பட்ட ஒரு சிந்தையாயுள்ளது, எனவே தீர்க்கதரிசி தேவனுடைய சிந்தனைகளுக்காக காத்திருந்தான். தேவன் தம்முடைய சிந்தனைகளை அவனுக்கு வெளிப்படுத்தினபோது, அவன் அதை வார்த்தையில், “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று வெளிப்படுத்தினான். பாருங்கள், “தீர்க்கதரிசியாகிய நான் சொல்லுகிறதாவது” என்று அல்ல. “ கர்த்தர் உரைக்கிறதாவது! ” பார்த்தீர்களா? சரி. 113 அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் இராஜ்ஜியங்களையும், சபையின் காலங்களையும் எதிர்த்தனர், அவர்களுடைய நாட்களில் அதற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீங்கள் ஒரு இராஜாவின் முகத்திற்கு முன்பாக நடந்து சென்று, “கர்த்தர் உரைக்கிறதாவது, இன்ன- இன்ன-இன்ன சம்பவிக்கப் போகிறது” என்று கூறினால், உங்களுடைய தலை உங்களுக்கு துண்டிக்கப்பட்டு விடும். அதைச் செய்கிறதற்காக சபையானது உங்களை இப்பொழுதே மரணத்திற்குட்படுத்தும். ஆனால் இந்த தீர்க்கதரிசிகள் தைரியமானவர்கள். ஏன்? அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டனர், பாருங்கள், மேலும், அவர்கள், அதனால்தான் அவர்கள் தைரியமடைந்தனர். அவர்கள் பிழையற்ற தேவனுடைய வார்த்தையை எழுதினர்.

81114 ஆசாரியர்களைப் போன்று அநேகர் தீர்க்கதரிசிகளைப் போல பாவனை செய்ய முயற்சிக்கப்பட்டனர். அவர்கள் என்ன செய்தனர்? குழப்பம், அவ்வளவுதான். அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. காரணம், தேவன் அந்தக் காலத்திற்கான மனிதனைத் தேர்ந்தெடுத்து, செய்தியைத் தேர்ந்தெடுத்து, மனிதனின் சுபாவத்தையும், அந்தக் காலத்தில் என்ன நடக்கும் என்பதையும், அவரால் என்ன செய்ய முடிந்தது என்பதைக் கொண்டு, எப்படி அவரால் அந்த குறிப்பிட்ட மனிதனின் சுபாவத்தைக் கொண்டு மற்றவர்களுடைய கண்களை குருடாக்க முடிந்தது. அந்த மனிதன் கூறும் வார்த்தைகள், அவன் செயல்பட்ட விதம், சிலரை குருடாக்கி, சிலருடைய கண்களைத் திறக்கும். பார்த்தீர்களா? அந்த மனிதனுக்கு அவன் இருந்த மாதிரியான ஆடையை உடுத்தியிருந்தான்; சுபாவத்தையும், லட்சியத்தையும், ஒவ்வொரு காரியத்தையும் அவன் இருந்தவிதமாகவே அந்த குறிப்பிட்ட காலத்திற்காக அவர் அழைக்கும் குறிப்பிட்ட ஜனங்களுக்காக அது பரிபூரணமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் நின்று அவனைப் பார்த்து, “பாருங்கள், என்னால் முடியாது. அங்கே…என்னால்—என்னால் காண முடியவில்லை” என்றனர். அவர்கள் குருடாக்கப்பட்டிருந்தனர்.

82115 இயேசுவும் அதேவிதமாகவே உடை உடுத்தி வந்தார், அழியாமையுள்ள தேவன் மானிட சரீரத்தை உடுத்தியிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு முன்னணையில் பிறந்தார், சாணம் நிறைந்த ஒரு தொழுவத்தில், அவருடைய தலையை சாய்க்க ஒரு இடமும் இல்லை; முறைதவறிப் பிறந்த ஒருவர் என்ற எண்ணத்தோடு, அவருக்கு பெயர் இடப்பட்டிருந்தது. பார்த்தீர்களா? அவர் இந்த எல்லா காரியங்களை உடையவராய் இருந்தார், அவர் எப்படியாய் ஒரு தச்சனுடைய குமாரனாக இருந்து வந்தார், எப்படியாய் அவருக்கு பள்ளிப் படிப்பு இல்லாதிருந்தது. ஏறக்குறைய உலகத்தில், இந்த உலகத்தின் ஞானத்தை, அவர் அதனோடு எந்த சம்மந்தமும் கொண்டிருக்கவில்லை. இந்த உலகத்தின் நாகரீகம், கல்வி, அல்லது எந்தக் காரியத்திற்கும், அவர் அதனோடு எந்த ஒரு காரியத்திலும் சார்ந்திருக்கவில்லை. ஏன்? அவர் தேவனாயிருக்கிறார். அது மோதும். அவர் எங்காவது ஒரு வேதபாட கருத்தரங்கிற்குச் சென்று, இந்த உலக சபைகள் செய்து கொண்டிருந்த ஏதோ ஒரு காரியத்தைக் கற்றுக் கொள்ள முயன்றிருந்தால், என்ன… ஏன், அது அவ்வாறு கூட இருந்திருக்காது…ஏன், அது அவ்வாறு கூட இல்லை…அது அவருடைய புரிந்துகொள்ளுதலோடு ஒத்துப் போகாது, ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். எனவே கல்வி, பள்ளிப்படிப்பு, வேதாகம கருத்தரங்குகள் போன்றவை தேவனுடைய சித்தத்திற்கு முற்றிலுமாக முரணாயுள்ளன. முழு கல்வி முறையும் தேவனுக்கு முரணாக உள்ளது. ஒவ்வொரு காரியமும் எல்லா நேரத்திலும், தேவனிடத்திலிருந்து விலகிச் செல்லவே போதிக்கிறது. நான் ஒரு மனிதன் டாக்டர், பிஎச்.டி., எல்.எல்.க்யூ என்று கூறுவதைக் கேட்கும்போது, என்னைப் பொருத்தவரையில், அது அவரை தேவனிடத்திலிருந்து வெகு தூரமாய் அப்புறப்படுத்துகிறது. பார்த்தீர்களா? அவன் உண்மையாகவே எதைச் செய்யும்படி அழைக்கப்பட்டிருந்தானோ, அதைவிட அதிக தூரமாய் தன்னையே விலக்கிக் கொள்ளவே கல்வி கற்றான். அது உண்மை. இப்பொழுது அவர்கள் எப்படி பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டனர் என்பதைக் கவனியுங்கள்.

83116 இப்பொழுது, படித்த மனிதர்கள் உள்ளே வருவதில்லை என்று அது பொருட்படுத்தவில்லை. பவுலைப் பாருங்கள். தர்சு பட்டணத்தானாகிய சவுலாய் இருந்த பவுலைக் காட்டிலும் அவனுடைய நாளில் புத்திசாலியானவன் ஒருவன் இல்லை என்று நான் யூகிக்கிறேன். அவர் அந்நாளின் மகத்தான ஆசிரியர்களில் ஒருவரான கமாலியேலின் கீழ் கல்வி கற்றான். மகத்தான, கண்டிப்பான எபிரெயர், ஒரு ஸ்தாபன பரிசேயன். பவுல் அவனுக்கு கீழ் வளர்க்கப்பட்டான். அவர் யூத மார்க்கம் அனைத்தையும் அறிந்திருந்தார். ஆனால் அவர் சபைக்கு வந்தபோது, அவர், “நான் மனிதனின் கல்வி முதலியவற்றைக் குறித்து உங்களிடம் ஒருபோதும் வரவில்லை. ஏனென்றால், நீங்கள் அவ்வாறு செய்தால், அப்பொழுது நீங்கள் அதில் நம்பிக்கைக் கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்களுடைய விசுவாசம் தேவனில் இருக்கும்படிக்கு நான் பரிசுத்த ஆவியின் வல்லமையிலும், வெளிப்படுதலிலும் உங்களிடத்தில் வருகிறேன்” என்றான். அங்குதான் காரியம். பார்த்தீர்களா? அது உண்மை.

84117 அநேகர் இந்த ஜனங்களை ஆள்மாறாட்டம் செய்ய முயன்றனர், ஆனால் இன்றைக்கு அவர்கள் செய்வது போலவே அவர்கள் காரியத்தையெல்லாம் குழப்பிவிட்டனர். இயேசுவின் காலத்திற்கு முன்னர் நானூறு பேரை தவறாக வழி நடத்தின ஒருவன் எழுப்பப்பட்டான். வேத வாக்கியங்கள் இந்தக் காரியங்களைக் குறித்து எப்படி வாசிக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள், நேரம் வருவதற்கு முன்பே அதைச் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களில் சிலர் அவரை ஆள்மாறாட்டம் செய்ய முயன்றனர், மேலும் அவர்கள் இந்த, அது, அல்லது மற்ற ஒன்றாக இருந்தனர். மேலும் அவர், “கடைசி நாட்களில், எப்படியாய் கள்ளக் கிறிஸ்துகளும், கடைசி நாட்களில் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து காண்பிப்பார்கள்” என்று அவர் கூறினர். நாம் அவையனைத்தையும் உடையவர்களாயிருக்கிறோம். பார்த்தீர்களா? ஆனால் அது உண்மையானதை விட்டு விலகுகிறதில்லை. அது அதை சிறப்பாக பிரகாசிக்கச் செய்கிறது, ஏனென்றால் நாம் ஒரு உண்மையான கிறிஸ்துவை உடையவர்களாயிருக்கிறோம், ஒரு போலியான கிறிஸ்து அல்ல.

85118 இப்பொழுது, இப்பொழுது, அப்பொழுது தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார் என்பதை நாம் தெளிவாக உணருகிறோம். அந்தவிதமாகவே அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளின் உதடுகளின் மூலம் தம்முடைய வார்த்தையை ஜனங்களுக்கு கொண்டு வந்தார். உங்களுக்கு தெரியுமா, நீங்கள் அதை யாத்திராகமம் 4-ம் அதிகாரம், 10-ம் மற்றும் 12-ம் வசனங்களில் வாசிக்க விரும்பினால், மோசே கூறுவதைக் கவனியுங்கள். தேவன் தன்னிடத்தில் பேசினார் என்று மோசே கூறினான். தேவன் ஒரு மனிதனிடத்தில் உதட்டிலிருந்து செவிக்கு பேசினார். அவன், “நான் மந்த நாவுள்ளவன்” என்றான். மோசே, “நான், நான் தகுதியுடையவன் அல்ல. என்னால்—என்னால் போக முடியாது” என்றான். 119 அவர், “மனுஷனைப் பேசச் செய்தது யார் இல்லை அவனை ஊமையாக்கியது யார்? அவனைக் காணச் செய்தது யார்? அல்லது அவனைக் கேட்கச் செய்தது யார்? கர்த்தராகிய நான் அதைச் செய்யவில்லையா?” என்றார். “நான் உன்னுடைய வாயினால் பேசுவேன்” என்றார். பார்த்தீர்களா? எனவே… 120 நீங்கள் அதை எரேமியா 1:6-ல் படிக்க வேண்டுமானால், எரேமியா கூறினான். எரேமியா, “தேவன் வார்த்தைகளை என் வாயில் அருளினார்” என்று கூறினான். பார்த்தீர்களா? அவர்—அவர், ஒரே ஒரு தீர்க்கதரிசியோடு, உதட்டிலிருந்து செவிக்குப் பேசினார்; மற்ற தீர்க்கதரிசியினூடாக பேசினபோது, அவனால் கட்டுப்படுத்த முடியாமற் போய், தன்னுடைய உதடுகளினூடாக பேசினான்.

86121 அவருடைய வார்த்தையை வெளிப்படுத்த அவர் வழிகளை வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆம், ஐயா. எனவே வேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, தேவனுடைய வார்த்தை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மோசே, “தேவன் என்னிடத்தில் ஒரு சத்தத்தினால் பேசினார், நான் அவருக்குச் செவி கொடுத்தேன். அவர் கூறினதை நான் எழுதி வைத்தேன்” என்றான். 122 எரேமியா, “என்னால் பேசவே முடியவில்லை. மேலும், உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், என் உதடுகள் பேசிக் கொண்டிருந்தன, மற்றும்—மற்றும்—மற்றும் நான் எழுதிக்கொண்டிருந்தேன்.” தேவன் அவனுடைய உதடுகளினூடாகப் பேசினார், அது நிறைவேறினது. தானியேல், ஏசாயா, போன்ற அந்த தீர்க்கதரிசிகள் யாவரும் ஏறக்குறைய ஒரே விதமாக இருந்தனர்.

87123 உங்களுக்கு தெரியுமா, பழைய ஏற்பாட்டில் மாத்திரம், கர்த்தர் உரைக்கிறதாவது என்று தீர்க்கதரிசிகள் கூறினது இரண்டாயிரம் முறைகளுக்கு மேலாக உள்ளன, இப்பொழுது, ஒரு மனிதன் கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறினால், அது அந்த மனிதன் பேசுகிறதில்லை. அவன் பேசினால், அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருக்கமாட்டான், அவன் ஒரு மாய்மாலக்காரனாயிருப்பான், பாருங்கள், ஏனெனில் அது (ஒருபோதும்) நிறைவேறாது; பத்து லட்சம் முறைகளில் ஒரு வாய்ப்பு, பாருங்கள், அவர்கள் அதை யூகிக்கலாம். ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாயிருந்தால், தேவனாகிய கர்த்தர் அதைக் கூறியிருக்கிறார். நான், “ஆர்மன் நெவில் இவ்வாறு கூறுகிறார்” என்று கூறினால், என்னுடைய சகோதரன், “இவ்வாறு திரு. மான் கூறுகிறார்” என்று கூறுகிறார்; நான், “சகோதரன் வெயில் இவ்வாறு கூறுகிறார்” என்று கூறலாம், அல்லது இந்த மற்ற சகோதரர்களில் யாராவது, உங்களில் எவரேனும்; நீங்கள் கூறினதையே நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் உண்மையுள்ளவனாயிருந்தால், நீங்கள் கூறினதையே நானும் கூறிக்கொண்டிருக்கிறேன். தீர்க்கதரிசிகளாயிருக்கிற, இந்த மனிதர்கள், “அது நானல்ல. எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது, ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்” என்றனர். எனவே வேதாகமம் தீர்க்கதரிசிகள் மூலமாய் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும்.

88124 கவனியுங்கள், அவர்கள் கிறிஸ்துவின் ஆவியை தங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, சம்பவிக்கப்போகும் சம்பவங்களை முன்னறிவித்தனர். முன்னறிவிப்புகளைக் குறித்து பேசுங்கள்! காலங்கள் தோறும் என்ன சம்பவிக்கும் என்று அவர்கள் கூறினர், அவர்கள் உட்காரும்போதும், நிற்கும் போதும், படுக்கும்போதும், நடக்கும் போதும் கிறிஸ்துவின் ஆவியை தங்கள் மேல் கொண்டவர்களாக இருந்த காரணத்தால் அவர்கள் கிறிஸ்துவைப் போல் செயல்பட்டனர். வாசகர்கள் அதை வாசித்து, தீர்க்கதரிசிகள் தங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர் என்று எண்ணுவார்கள். அந்த மந்திரி ஏசாயா 53;1ஐ- குறித்து எப்படியாய், “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” என்று வாசித்துக் கொண்டிருந்தான் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மந்திரி பிலிப்புவினிடத்தில், “அந்த தீர்க்கதரிசி யாரைப் பற்றி பேசுகிறார், தம்மைக்குறித்தோ அல்லது வேறொருவரைக் குறித்தோ”? என்று கேட்டான். பாருங்கள், தீர்க்கதரிசி அது தன்னைப் போலவே பேசினான்.

89125 தாவீது ஆவியில் கதறுவதை நோக்கிப் பாருங்கள், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளை, அவர்கள் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தாவீது கூறினான். தாவீது, “அவர்கள் என் கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்” என்றான். “அவர்கள் என் கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்,” தாவீது பரிசுத்தமானவன் என்று தன்னைக் குறித்து பேசிக் கொண்டது போல் காணப்படுகிறது. அது தாவீதின் குமாரனாயிருந்தது, அந்த முளைப்பிக்கப்பட்ட, ஆவிக்குரிய வித்து அங்கே அதனூடாக இறங்கி வந்தது. தாவீது ஒரு களையாக இருந்தபோதிலும், உட்புறத்தில் ஒரு கோதுமை மணி இருந்தது. உங்களுக்கு அது புரிகிறதா? ஆகையால், முழு வேதாகமமும் மனிதனின் வார்த்தை அல்ல, அது மனிதனால் எழுதப்படவில்லை, மனிதனால் கொண்டுவரப்படவில்லை, அல்லது அது—அது மனிதனால் வெளிப்படுத்தப்பட முடியாது. அது தேவனால் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாயுள்ளது, அவருடைய சொந்த வியாக்கியானி, கிறிஸ்து தம்முடைய சொந்த வார்த்தையில் தம்மை வெளிப்படுத்துதல்.

90126 இங்கே கிறிஸ்து தாவீதின் பின்னால் நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள். தாவீதினால் இப்பொழுது நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அவனுடைய சிந்தை அவனை விட்டுப் போய்விட்டிருந்தது. அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார், நீங்கள் இங்கே அந்தச் சிலையைக் காண்பதுபோல; சிலுவையில் தொங்கிக் கொண்டு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளையெல்லாம் அவர்கள் நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என் கைகளையும், என் கால்களையும் உருவக் குத்தினார்கள். அவர்கள் என் விலாவில் உருவக் குத்தினார்கள்” என்றான். பார்த்தீர்களா? “நீர் ஏன் எனக்கு தூரமாய் இருக்கிறீர்? பாசான் தேசத்து பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. அவர்கள் தங்களுடைய தலைகளை துலுக்கி, ‘தேவன் அவனை விடுவிப்பார் என்று அவரில் இவன் நம்பிக்கையாய் இருந்தானே. இப்பொழுது அவர் அவரை விடுவிப்பாரா என்று நாம் பார்ப்போம்”என்றனர், அதே வார்த்தைகளையே பேசினர். எனவே, நீங்கள் பாருங்கள், தேவன் இங்கே பூமியில் வெளிப்பட்டபோது, தாவீது கூறிய அதே வார்த்தைகளை அவர் கூறினார். உங்களுக்கு அது புரிகிறதா? எனவே, நீங்கள் பாருங்கள், அது மனிதனுடைய வார்த்தையல்ல; அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. தாவீதுக்குள் தேவன் இருந்தார்; அது தாவீது அல்ல. அவன் என்ன கூறிக்கொண்டிருந்தான் என்பதை அவன் அறியாதிருந்தான்; அவன் அப்படியே ஆவியில் இருந்தான். அந்தவிதமாகத்தான் மோசேயும் இருந்தான். அவன் அவ்வளவாய் ஆவியில் இருந்தான், அவன் ஜீவித்துக் கொண்டிருந்த பரிமாணத்தை விட்டு கடந்து சென்று, அங்கே முகமுகமாய் நின்று, அந்த எரியும் முட்செடியில் தேவனோடு—அவரிடமே பேசினான். மேலும், “உன் கால்களில் இருக்கிற பாதரட்சையை கழற்றிப்போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். மோசே அங்கிருந்து புறப்பட்டபோது, அவன், “என்ன சம்பவித்தது? என்ன சம்பவித்தது? அது என்னவாயிருந்தது?” என்று எண்ணியதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “எகிப்துக்குப் போ. நான் உன்னோடு வருவேன்” என்றார். அவர், “அது எனக்கு மிகவும் உண்மையானது, நான் செல்ல வேண்டும்” என்றான். அவன் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும்…சரியாகக் கூறினால் தன்னுடைய பிள்ளையையும், தன்னுடைய கையிலே தன்னுடைய கோலையும், எடுத்துக்கொண்டு ஜனங்களை விடுவிக்க, எகிப்திற்கு புறப்பட்டுச் சென்றான். பார்த்தீர்களா?

91127 தேவன் தாமே தீர்க்கதரிசிகள் மூலமாக பேசுகிறார். பாருங்கள், அவர்கள், அவர்கள் முற்றிலும்…அது தீர்க்கதரிசிகள் அல்ல; அது தேவனாயிருந்தது. காரணம், அந்த தீர்க்கதரிசி, அவர்களால் அந்தக் காரியங்களைக் கூற முடியவில்லை. “எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?” என்று ஏசாயா கூறுகிறான், நீங்கள் பாருங்கள். “எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? அவர் ஒரு தொழுவத்தில் ஒரு—ஒரு கன்றுக்குட்டியைப் போல நமக்கு முன்பாக வளருவார். எப்படியாய், அதேசமயத்தில், நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நம்முடைய சமாதானதை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமாகிறோம்” என்றான். நாம் சுகமடைந்தோம், இங்கே இந்த காலத்தில் இங்கே; கிறிஸ்துவுக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர், ஏசாயாவும் கூறியுள்ளான். பார்த்தீர்களா? “அவருடைய தழும்புகளால்,” கடந்த காலம், ஏற்கனவே, “குணமாக்கப்பட்டோம்.” ஓ, என்னே! எப்படி, தேவனுடைய வார்த்தை மிகவும் பரிபூரணமானது! மக்களே, அதில் நம்பிக்கை வையுங்கள். அது மாத்திரமே உங்களை இரட்சிக்க முடியும்.

92128 மற்ற எல்லா வார்த்தைகளும், அவைகள் எவ்வளவு நன்றாக வைக்கப்பட்டிருந்தாலும், எப்படி, யாரிடமிருந்து வந்தாலும், அவர்கள் எந்த ஸ்தாபனத்திலிருந்து வந்திருக்கிறார்கள், அல்லது மனிதன் எவ்வளவு புத்திசாலியாயிருந்தாலும், வார்த்தைக்கு முரணான எந்த காரியமும், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட வேண்டும். நீங்கள் அந்த வேதவாக்கியத்தை குறித்துக்கொள்ள விரும்பினால், அது கலாத்தியர் 1:8-ல் உள்ளது. பார்த்தீர்களா? பவுல், “நாங்களாயிருந்தாலும், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனானாலும், நீ ஏற்கனவே கேள்விப்பட்ட இதையல்லாமல் வேறெந்த காரியத்தையும் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். வேறு வார்த்தைகளில் கூறினால், ஒரு பிரகாசமான பிரகாசிக்கும் தூதனாகிய பரலோகத்திலிருந்து ஒரு தூதன் உங்களிடத்தில் வந்து நிற்பாரானால்; பையனே, அது இந்நாளுக்கான தூண்டிலாக இருக்கும், இல்லையா? ஒரு பிரகாசமான பிரகாசிக்கும் தூதன் அங்கு வந்து நின்று, வார்த்தைக்கு முரணான காரியங்களைக் கூறுகிறார்; நீங்கள், “சாத்தானே, என்னை விட்டு அகன்று போ” என்று கூறலாம். சரி. அவர் ஒரு பேராயராயிருந்தால், அவர் ஒரு…அவர் யாராயிருந்தாலும், அவர் சரியாக அந்த வேதாகமத்தோடு வார்த்தைக்கு வார்த்தை பேசவில்லையென்றால், நீங்கள் அவரை ஒருபோதும் நம்பமாட்டீர்கள். அவனைக் கவனியுங்கள், அவன் இப்பொழுது உங்களை வேதாகமத்தோடு கொண்டு செல்வான். அவன் உங்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்று, அதன்பின்னர் அதை அங்கே இணைப்பான். வேதம் ஒரு காரியத்தைக் கூறுவதை நீங்கள் காணும்போது, அவன் அதைக் கடந்து செல்வதைக் காணும்போது, அங்கே அவனைக் கவனியுங்கள். பாருங்கள், அந்தவிதமாகவே அவன் ஏவாளுக்குச் செய்தான். அவன் வந்து எல்லாவற்றையும் சரியாகக் கூறினான். “பாருங்கள், தேவன் இதைக் கூறினார்.” “அது உண்மை, ஏவாள். ஆமென். நாங்கள் அதை ஒன்று சேர்ந்து விசுவாசிக்கிறோம்.” “பாருங்கள், தேவன் இதைக் கூறினார்.” “ஆமென். நாங்கள் அதை ஒன்று சேர்ந்து விசுவாசிக்கிறோம்.” “தேவன் இதைக் கூறினார்.” “நாங்கள் அதை நிச்சயமாக, விசுவாசிக்கிறோம்.” “சரி, ஆனால் நாம் மரிப்போம் என்று தேவன் கூறினார்.” 129 “பாருங்கள், இப்பொழுது, அவர் ஒரு நல்ல தேவன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.” அவர் அவ்வாறு கூறமாட்டார் என்று அவர் கூறவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். “ஆனால் நிச்சயமாக…” ஓ, என்னே! இதோ அவர் இருக்கிறார். அவன் அந்தவிதமாக வஞ்சகனாயிருந்தால், வேதம், “கடைசி நாட்களில் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அவன் வஞ்சிப்பான்” என்று கூறியுள்ளது, நண்பர்களே, இன்றைக்கு நாம் எங்கே இருக்க வேண்டும்? இப்பொழுது, இந்த சிறிய ஞாயிறு பள்ளி பாடங்கள், நம்முடைய இருதயங்களுக்கு மிக அருகாமையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள், பாருங்கள்… நாம் உண்மையாகவே கூர்ந்து கவனித்து, அது எவ்வளவு வஞ்சகமான காரியமாய் உள்ளது என்பதைக் காண வேண்டும்.

93130 கவனியுங்கள், நாம் வேறொரு மனிதனுடைய வார்த்தைக்கு செவிகொடுக்க முடியாது, நாம் செய்யக்கூடாது. எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும் நாம் கவலைப்படுகிறதில்லை. வேதம், நீதிமொழிகளில், “நாம் யோசனைகளை கைவிட வேண்டும்” என்று கூறுகிறது. பார்த்தீர்களா? இப்பொழுது, இங்கே இந்த இரண்டாம் மண்டலத்தில்… முதலாவது மண்டலம் என்பது உங்களுடைய புலன்களான பார்வை, ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல் என்பவைகளாகும். அது உங்களுடைய வெளிப்புற சரீரத்தில் உள்ளது. உள்ளான சரீரத்தில், அதாவது ஆவியாகிய, யோசனைகளும், சிந்தனைகளும் போன்றவை உள்ளன. நாம் அதையெல்லாம் தள்ளிவிட வேண்டும். இப்பொழுது காத்திருங்கள், “தேவன் ஒரு நல்ல தேவனாயிருப்பாரேயானால்…” என்று யோசித்து யோசிக்க முடியாது. அவர் ஒரு நல்ல தேவனாயிருக்கிறார் என்று நமக்கு இன்றைக்கு அதிகமாக கூறப்பட்டுள்ளது. “அவர் ஒரு நல்ல தேவனாயிருப்பாரானால், அப்பொழுது நான் உத்தமமாயிருந்தால், அதை அந்த வேதாகமத்தில் சரியாயிருப்பதை என்னால் காண முடியாவிட்டாலும், நான் உத்தமமாயிருந்தாலும், நான் இரட்சிக்கப்படுவேன்.” நீங்கள் இழக்கப்படுவீர்கள். [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] 131 “நான் சபைக்குச் சென்று, சரியென்று நான் கருதுகிற காரியங்களைச் செய்து, நான் எது சரியென்று கருதுகிறேனோ, அதை நிலைநிறுத்த முயற்சித்தாலும், பாருங்கள், நான்…” நீங்கள் இன்னமும் இழக்கப்பட்டிருக்கிறீர்கள். “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” பார்த்தீர்களா? நீங்கள் இரட்சிக்கப்படமாட்டீர்கள்; நீங்கள் இழக்கப்படுவீர்கள். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? அது மனிதனின் உட்புறத்தைக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

94132 “சரி. சகோதரன் பிரான்ஹாம், நான் அந்நிய பாஷையில் பேசியிருக்கிறேன். பாருங்கள், சகோதரன் பிரான்ஹாம், அந்நிய பாஷைகளில் பேசுவதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” என்று கேட்கலாம். முற்றிலுமாக. “பாருங்கள், நான் சத்தமிட்டேன்; நீர் அதை விசுவாசிக்கவில்லையா?” என்று கேட்கலாம். ஆம், ஐயா. “நான் ஒரு நல்ல கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்கிறேன். நீங்கள் அதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்கலாம். ஆம், ஐயா. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அது பொருட்படுத்துகிறதில்லை. நீங்கள் ஒரு நல்ல நபர்; சுத்தமான, ஒழுக்கமுள்ள, பரிசுத்தமான, நல்ல நபர். அவ்வாறே அந்த ஆசாரியர்களும், மிகவும் பக்தியானவர்களாய், ஒருவர் தவறாக புரிந்து கொள்ளுமளவிற்கு அவ்வளவு பயபக்தியுள்ளவர்களாய் இருந்தனர், அவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஏமாற்றுவதற்கான மரண தண்டனை மரணமாயிருந்தது.

95133 இன்றைக்கு நம்முடைய தேசத்தோடுள்ள காரியமும் அதுதான். நாம் இன்றைக்கு பூமியில் பல தளர்வான காரியங்களை பெற்றுள்ளதற்கான காரணம், தண்டனைகள் போதுமான பலமுள்ளதாயிருக்கவில்லை. ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடைய மனைவியோடு அலைந்து திரிந்தபோது பிடிபட்டால், அவர்கள் இருவருமே பொது இடத்தில் கொண்டு செல்லப்பட்டு, இனப்பெருக்க ஆற்றல் அழிக்கப்பட்டு, சரியாக, பொது இடத்தில், விடப்ப்பட வேண்டும். அது உண்மை. ஒரு மனிதன் சாலையில் வேகமாக காரை ஓட்டி ஏதாவது தவறு செய்து பிடிபட்டால், அவனுக்கு பத்து வருட காலத்திற்கு குறைவாக கொடுக்கப்படக்கூடாது. அவன் முன் கூட்டியே…முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்துள்ளான். பார்த்தீர்களா? நீங்கள் அதன் பேரில் அதைப் போன்ற தண்டனைகளை விதித்தால், நீங்கள் அவைகளைக் குறைத்துவிடுவீர்கள். ஆனால் ஏதோ ஒரு நேர்மையற்ற அரசியல்வாதி இங்குள்ள இந்த ஒருவரிடம் வந்து, “பாருங்கள், அவர் சிறிது குடித்துக்கொண்டிருந்தார், அவர்…அதைச் செய்ய வேண்டுமென்று எண்ணவில்லை” என்று கூறலாம். ஒரு மனிதனையும், மனைவியையும், ஒரு கூட்ட அப்பாவி பிள்ளைகளையும் கொன்று போடுவது, ரிக்கி அதைச் செய்ய விட்டுவிடுவது, அதுவே அரசியல். அதுதான் உலகம். அதுதான் பிசாசு.

96134 ஒரு மனிதனோ அல்லது ஒரு ஸ்திரீயோ விபச்சாரத்தில் பிடிபட்டால், அவர்களை அங்கே கொண்டு சென்று, அவர்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று தேவன் கூறினார். அதுவே அதை தீர்த்து வைத்தது. பார்த்தீர்களா? ஒருவன் விறகை சுமந்து, ஓய்வுநாளில் பிடிபட்டால், “அவனைக் கொண்டுபோய் அவனைக் கல்லெறிய வேண்டும்.” அப்பொழுது அவர்கள் அதன்படி வாழ்ந்தனர். இப்பொழுது, பாருங்கள், இன்றைக்கு அந்தவிதமான பிரமாணங்கள் நம்மிடம் இல்லை. ஆனால் கிறிஸ்தவர்களுடனும், சபையுடனும், இந்தக் காலையில் நான் பேசிக்கொண்டிருக்கிற தேவனுடைய பிரமாணம் உங்களுடைய இருதயத்தில் உள்ளது. பார்த்தீர்களா? அதைச் செய்ய உங்களுக்கு விருப்பமில்லை. அது இங்கே உள்ளே இருக்கிறது. நீங்கள் தேவனுடைய பிரமாணத்தை மிகவும் பரிபூரணமாகக் கைக்கொள்ள விரும்புகிறீர்கள். அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் என்னவாயிருக்க விரும்புகிறீர்கள்… தேவனுக்கு வாசலில் ஒரு மிதியடி தேவைப்படுமானால், நீங்கள் அந்த மிதியடியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினால், நீங்கள் அவ்வாறு இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள். அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நீங்கள் கதவு மெத்தையாக இருக்க விரும்புவீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ, அதைத்தான் நீங்கள் செய்ய விரும்புவீர்கள், ஏனென்றால் அது தேவனாயிருக்கிறது. இப்பொழுது, அங்குதான் நீங்கள் உண்மையாகவே தேவனுக்கான உங்களுடைய உண்மையான, அசலான, உண்மையான அன்பைக் கண்டறியலாம்.

97135 இப்பொழுது, “ஒரு தூதன் வேறெந்த காரியத்தையும் பிரசங்கிப்பான்” என்று நாம் கண்டறிகிறோம், ஏற்கனவே பிரசங்கித்ததை தவிர வேறு எதையாவது பிரசங்கித்தால், “அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று வேதத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. யாராலும் முடியாது. அதைச் செய்ய முடியாது; அது சரியாக அது கூறுகிற விதமாகவே இருக்க வேண்டும். 136 நாம் மீண்டும் வெளிப்படுத்தின விசேஷம் 22:18 மற்றும் 19-ல் வாசிக்கிறோம், “ஒருவன் இதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அப்பொழுது தேவன் ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கை எடுத்துப் போடுவார்.” சரி. தேவன் அவனுடைய பங்கை ஏற்றுக்கொள்வார், அவன் ஒரு ஊழியக்காரனாயிருந்தாலும், அவன் என்னவாயிருந்தாலும், அவனுடைய வார்த்தை…அவனுடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தேவன், “அவன் அதனோடு ஒரு காரியத்தைக் கூட்டினாலோ அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டாலோ, நான் அதை அப்படியே தேய்த்து அழித்துவிடுவேன்” என்றார். அது உண்மை. அந்தவிதமாகத்தான் தேவன் தம்முடைய வார்த்தையை பிழையற்றதாக ஆக்கியிருக்கிறார். பார்த்தீர்களா? நீங்கள் சபையில் சேர்க்கலாம் அல்லது சபையிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் அந்த வார்த்தையைக் கூட்டவோ அல்லது அதிலிருந்து எடுத்துப்போடவோ வேண்டாம், ஏனெனில் தேவன் உங்களுடையப் பெயரை ஜீவபுஸ்தகத்தில் இருந்து எடுத்துப் போடுவார். மேலும், அதாவது, நீங்கள் அப்பொழுது முடிந்துவிட்டீர்கள். பார்த்தீர்களா? நீங்கள் அதனோடு கூட்டவோ அல்லது அதிலிருந்து எடுக்கவோ முடியாது. அது சரியாக என்ன…

98137 அதற்கு அர்த்தம் உரைப்பவர் தேவையில்லை, ஏனென்றால் தேவன் வேதத்திற்கு தம்முடைய சொந்த வியாக்கியானத்தை செய்கிறார் என்று வேதம் கூறியுள்ளது. பேதுரு, “அது தனிப்பட்ட அர்த்தம் கொண்டதல்ல” என்றான். சரி. 138 வேதவாக்கியங்கள் யாவும் தெய்வீக பிரகாரமாக அளிக்கப்பட்டு, தெய்வீக ரீதியில் ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளன, முழு காரியமும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப்பாடாய் உள்ளது. புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும், அவருடைய வருகையைக் குறித்து அவர்கள் முன்னறிவித்தனர், அவர் இங்கு வரும்போது என்ன செய்வார் என்றும், வரப்போகும் இக்காலத்தில் அவர் என்ன செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே அதுவே அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக்குகிறது. பார்த்தீர்களா? பவுல் அதை எழுதினபோது, அங்கே எபிரெயரில் உள்ளது போல. அவர் பழைய ஏற்பாட்டின் “நேற்றைய இயேசு கிறிஸ்து” என்ற தேவனாயிருக்கிறார். அவர் “இன்றைக்கு இயேசு கிறிஸ்துவாய்” மாம்சத்தில் வெளிப்பட்டார். “அவர் என்றென்றைக்கும் இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார்,” ஆவியில், “வரப்போகிறவர்.” பார்த்தீர்களா? பார்த்தீர்களா? “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” தம்முடைய வார்த்தை அந்த காலத்திற்கு என்ன செய்யும் என்று அது கூறியுள்ளதோ அதை ஜீவிக்கும்படி அவர் எப்போதும் ஜீவிக்கிறார். அவர் உயிரோடிருக்கிறார்.

99139 அவர் பழைய ஏற்பாட்டில் உயிரோடிருந்து வெளிப்பட்டார். உங்களால் அதை பொறுத்துக்கொள்ள முடிந்தால், நான் இங்கே ஒரு சிறு காரியத்தை நீங்கள் காணும்படி செய்ய விரும்புகிறேன். கவனியுங்கள், நாம் அதை விசுவாசிக்கின்றபடி, பழைய ஏற்பாட்டில் இயேசு வெளிப்பட்டபோது. இப்பொழுது, அங்குள்ள பிரசங்கிகளாகிய நீங்கள், நீங்கள் அதனோடு வாதிடலாம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் நான் என்ன நினைக்கிறேனோ…அதற்காகவே பேசிக்கொண்டிருக்கிறேன். பார்த்தீர்களா? 140 இயேசுவானவர் பழைய ஏற்பாட்டில் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் மெல்கிசேதேக்கின் உருவில் வெளிப்பட்டபோது; ஒரு ஆசாரியத்துவம் அல்ல, ஆனால் அந்த நபர், மனிதன். பார்த்தீர்களா? ஏனென்றால் இந்த மனிதன் அப்பொழுது பிறக்கவில்லை, ஆனால் அவர் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார், எனவே அவருக்கு தகப்பனும், தாயும் இல்லை. அவர் தாமே தேவனாயிருந்தார். அவர் “சாலேமின் ராஜா, அவர் சமாதானத்தின் ராஜா, நீதியின் ராஜா” என்று அழைக்கப்பட்ட ஒரு மனித ரூபத்தில் வெளிப்பட்டார். பார்த்தீர்களா? அவர் மெல்கிசேதேக்காக இருந்தார். “அவனுக்குத் தகப்பனும், தாயும் இல்லாதிருந்தது, நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவுமில்லாதிருந்தது.” பார்த்தீர்களா? அது ஒரு ஆவிக்குரிய சரீரத்தில், ஒரு மனித ரூபத்தில் இருந்த இயேசுவாக இருந்தது. நீங்கள் அதற்கு செல்ல முடியுமா? சரி.

100141 அதன்பின்னர் அவர் உண்மையாகவே மானிட மாம்சமாகி, நம் மத்தியில் வாசம் செய்தார், கன்னி மரியாளின் மூலம் பிறந்த இயேசு கிறிஸ்து என்ற நபரில் தாமே. அவர் மரிக்கும்படியாக அந்த ரூபத்தில் வந்து, பரலோகத்திற்கு திரும்பிச் சென்றார். இப்பொழுது இந்த கடைசி நாட்களில், அவர் தம்முடைய மாம்சத்தின் பரிபூரணத்தில், ஆவியில் தம்மை மீண்டும் வெளிப்படுத்துவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார். பார்த்தீர்களா? “சோதோமின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்.” இப்பொழுது சோதோமை நோக்கிப் பாருங்கள், அது எப்படி அமைந்திருந்தது, என்ன சம்பவித்தது. இன்றைக்கு அவருடைய சபையில் இயேசு கிறிஸ்து சரீர ரூபத்தில் வெளிப்பட்டிருக்கிறார், பாருங்கள், அதே காரியத்தை, அதே கிரியையை, அவர் எல்லா நேரத்திலும் செய்த அதே காரியங்களை, ஒருபோதும் மாறாதவராக, நித்தியமானவராக செய்கிறார். பார்த்தீர்களா? இன்றைக்கு பூமியின் மேல், அவர் தம்மை மானிட சரீரங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார், அவர் அழைத்திருக்கிற நம்முடைய மானிட சரீரங்களில், அவர் பூர்வகாலங்களில் செய்த அதேக் காரியத்தை, பூமியின் மேல் தம்முடைய மாம்சத்தின் காலங்களில் செய்தார். இன்றைக்கும் அதேக் காரியத்தைச் செய்கிறது, ஏனென்றால், “தேவன் பூர்வகாலங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றினார், இந்தக் கடைசி நாட்களில் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக.” பாருங்கள், கடைசி நாட்களில் குமாரன் வெளிப்பட்டு, தேவன் மானிட சரீரத்தில் வெளிப்பட்டு, சோதோமின் அழிவிற்கு சற்று முன்னர், புறஜாதி உலகத்தின் முடிவிற்கு முன்பாக வெளிப்பட்டார். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? மூன்று வெளிப்படுத்துதல்கள் உள்ளன.

101142 இப்பொழுது, அடுத்ததாக நிகழவிருப்பது எல்லாமே அந்த இயேசு கிறிஸ்துவுக்குள் ஒன்று கூடுகின்றன, கர்த்தராகிய இயேசுவின் சரீர வருகையிலே. அவருடைய மூன்று வேளைகளை…அவர் பூமியின் மேல் கொண்டுவரப்பட்டபோது; கொல்லப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடெழுப்பப்பட்டார். தம்முடைய சரீரத்தின் ரூபத்தில் தம்மை வெளிப்படுத்துதல், அது தம்முடைய மணவாட்டி, ஸ்திரீ. உங்களுக்கு அது புரிகிறதா? அவள் அவருடைய சரீரத்தின் ஒரு பாகமாயிருக்கிறாள். ஸ்திரீயும் ஆணும் ஒன்றாக நெருங்கியிருக்கிறார்கள், அவர்கள் கிட்டத்தட்ட…அவர்கள் ஒரே விதமாக இருக்கிறார்கள். எப்படியாயினும் அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். இதோ அவைகள் உள்ளன, பாருங்கள், அவர்கள் சரியாக அதேவிதமாகவே வெளிப்பட்டனர். அவள் அவனுடைய ஒரு பாகமாக இருக்கிறாள், ஏனென்றால் அவள் அவனிடத்திலிருந்து எடுக்கப்பட்டாள். இன்றைக்கு மணவாட்டி கிறிஸ்துவின் சரீரத்திலிருந்து எடுக்கப்பட்டு, அது இந்த நாளுக்காக செய்யும் என்று அவர் கூறினவிதமாகவே சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, மணவாட்டி, இராணி; ராஜாவும் ராணியும். சரி. இப்பொழுது நமக்கு காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது, எனவே நாம் துரிதமாக முடிக்க வேண்டியதாயுள்ளது.

102143 சரி, முழு வேதாகமமும் இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடாய், ஒவ்வொரு காலத்திலும் தம்மை வெளிப்படுத்துகிறது. அவர் லூத்தரின் நாட்களில் தம்மை ஒரு அஸ்திபாரமாக வெளிப்படுத்தினார்; சபை, பாதம், கால்கள். அவர் நேபுகாத்நேச்சார் ராஜாவுக்குச் செய்ததுபோல; அவன் எப்படி அந்த சொப்பனங்களை கண்டான் என்றும், தலையிலிருந்து கீழே இறங்கி வந்தது என்றும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? பார்த்தீர்களா? இப்பொழுது அவர் பாதத்திலிருந்து மேலே வருகிறார். பார்த்தீர்களா? பாபிலோனிய இராஜ்ஜியத்தில் அவர் அந்த பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தார், அவர் தலையிலிருந்து கீழே இறங்கி வந்து, தேவன் தாமே ஏணியின் பாதத்தில் மாம்சமாகிவிட்டார். இப்பொழுது இங்கே புதிய ஏற்பாட்டில், அவர் தம்மை மீண்டும் மேலே கொண்டு வருகிறார், மீண்டும் தலைக்கு, பொன் தலைக்கு, முடிசூட்டப்பட வேண்டும். பார்த்தீர்களா? பாருங்கள். உங்களுக்கு அது புரிகிறதா? பாருங்கள், தேவன் ஆதியில் இருந்தார், அவர் தீர்க்கதரிசிகள் மூலமாக தொடர்ந்து இறங்கி வந்து, தேவன் தாமே நம்மைப் போன்ற மானிடனாகி, ஏணியின் அடிவாரத்தில் ஒரு குழந்தையாக, ஒரு முன்னணையில் பிறந்தார்; வெறுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், இழிவாகக் கருதப்பட்டும், ஒரு கெட்ட பெயரையும், மற்றும் அவருக்கு இருந்த ஒவ்வொரு காரியத்தையும் உடைவராயிருந்தார். அதன்பின்னர் அவர் எழும்பி, பாருங்கள், அவர் சபையைக் கட்டத் துவங்கினார், மணவாட்டி, திரும்பி வருகிறாள், இப்பொழுது தலைக்கல்லுக்குள்ளாக வந்து, அங்கே அவை யாவும் ஒன்று சேர்ந்து இயேசு கிறிஸ்துவின் மகத்தான மறுரூபமான சரீரமாகிறது.

103144 தேவன் ஒவ்வொரு காலத்திலும் அவருடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையினால் அந்தந்த காலத்திற்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். இப்பொழுது நாம் இந்த கடைசி வார்த்தைகளை இப்பொழுது முடித்துக் கொண்டிருக்கையில், இன்றைக்கு அவருடைய வாக்குத்தத்தங்களில் சில என்னவாயுள்ளன என்று பார்ப்போம். 145 இப்பொழுது தேவன் சாயங்கால வெளிச்ச நேரத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்பொழுது நாம் பார்ப்போம். நாம் காண்கிறோம்… 146 நான் இங்கே ஒரு சில வேதவாக்கியங்களை எழுதி வைத்துள்ளேன். எத்தனை வேதவாக்கியங்கள் அங்கே எழுதப்பட்டுள்ளன என்பதை இந்தப் பக்கத்தில் நீங்கள் காணலாம். ஆனால் பன்னிரெண்டுக்கு இன்னும் பதினைந்து நிமிடங்களே உள்ளன. நான் வெளியேற விரும்புகிறேன். இந்தக் காலையில் பேசுகையில் எனக்கு தொண்டை கரகரப்பாய் இருக்கவில்லை. சில சமயங்களில் இங்குள்ள இந்த குளிரூட்டிகள் என்னை உண்மையாகவே கரகரப்பாக்கச் செய்கின்றன. எனவே சகோதரன் நெவில்…இன்றிரவிற்காக பேச நீங்கள் ஏதாவது வைத்துள்ளீர்களா? [சகோதரன் நெவில், “இல்லை” என்கிறார்.—ஆசி.] சரி, சரி, நான்…அது சரியாயிருந்தால், நான் ஏதோ ஒன்றை வைத்திருக்கிறேன். அன்றொரு நாள் காட்டில் ஒரு சிகரெட் பெட்டி கிடந்ததை நான் கண்டேன். கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு அந்த சிகரெட் பெட்டியிலிருந்து ஒரு செய்தியை நான் பெற்றேன். பார்த்தீர்களா? எனவே, நான் இந்த வேத வாக்கியங்களை இங்கே வைத்துள்ளேன். நான் அதிக நேரம் வேலை செய்ய விரும்பவில்லை, எனவே நீங்கள் திரும்பி வரலாம்.

104147 ஒரு சிகரெட் பெட்டி, பேசுகிறது. சரி. நான் காடுகளினூடாக புறப்பட்டுக் கொண்டிருந்தேன், அங்கே ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது, நான் நடந்து சென்றேன். நான், “நல்லது, யாரோ ஒருவர் எனக்கு முன்னால் இருக்கிறார்” என்று எண்ணினேன். அப்பொழுது ஏதோ ஒன்று, “திரும்பி அதை எடு” என்று கூறியது. நான், “ஒரு சிகரெட் பெட்டியை எடுக்கலாமா? நான் எடுக்கக் கூடாதே ” என்று எண்ணினேன். ஏதோ ஒன்று, “திரும்பி அந்த சிகரெட் பெட்டியை எடு” என்று கூறியது. நான் கீழே சென்றபோது, அங்கே ஒரு பழைய காலியான பெட்டி இருந்தது, நான் ஏதோ ஒன்றைக் கண்டேன். கர்த்தருக்கு சித்தமானால், அதைக் குறித்து இன்றிரவு நான் உங்களுக்கு கூறுவேன். சரி.

105148 இப்பொழுது நாம் ஒரு சில நிமிடங்களுக்கு, சாயங்கால வெளிச்சத்தைக் குறித்து பேசப் போகிறோம். ஒரு நேரம் வரும் என்று வேதம் முன்னுரைக்கிறது, சரியாக முடிவின் நேரத்தில், சூரியன் உதயமாகும் என்றும், ஒரு சாயங்கால வெளிச்சம் உண்டாகும் என்றும் கூறியிருந்தார். நாம் யாவரும் அதை அறிவோம். நாம் செய்ய வேண்டாமா? நாம், நாம்…இன்றைக்கு கர்த்தராகிய இயேசுவினிடத்திலிருந்து வந்த நம்முடைய செய்தியை நன்கு அறிந்திருக்கிற நாம், ஒரு சாயங்கால வெளிச்சம் இருக்கும் என்று நாம் விசுவாசிக்கிறோம். இந்த சாயங்கால வெளிச்சம்… நிச்சயமாகவே, இயேசு தாமே இங்கே பூமியில் அல்லது பரலோகத்தில் வெளிப்படும்போது, மகத்தான வெளிச்சம் வரும், தம்முடைய மணவாட்டியை எடுத்துச் செல்கிறார், அப்பொழுது ஆயிர வருட அரசாட்சி துவங்கும்.

106149 ஆனால் மானிட வர்க்கத்தினருக்கு முன்பாக எப்போதும் மிகவும் பயங்கரமான நேரங்களினூடாக கடந்து செல்ல வேண்டிய ஒன்று நமக்கு உண்டு. நான் அந்த வேளைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், நாம் பெற்றுக் கொள்ள முடிந்தால்…ஒவ்வொருவரும் ஒரு வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம், அங்கு நீங்கள் வேலையிலிருந்து புறப்பட்டு, ஒரு சில நாட்களைக் கழிக்க முடியும், அந்த வாதைகள் மற்றும் கடைசி நாட்களில் விழப்போகும் விஷயங்களைப் பற்றி நான் பேசக்கூடிய இடத்தில் நாங்கள் எங்காவது எடுத்துரைக்கலாம்; இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஒன்று சேர்ந்து, அதைச் செய்ய கர்த்தர் என்னை ஜீவிக்க அனுமதித்து, அதைச் செய்ய என்னை ஏவினால், எப்படியாய் அந்த காரியங்கள் உள்ளே விழும் என்றும், அந்த இடி முழக்கத்தையும் பார்க்கிறோம். அப்பொழுது அந்த மனிதனும் மற்ற ஜனங்களும் எதைக் குறித்து சொப்பனங்கண்டு கொண்டிருந்தனர் என்பதையும், அங்கே இந்த எல்லா காரியங்களையும் நீங்கள் கண்டறியலாம், அது நிறைவேறும்; பாருங்கள், அவர்கள் என்ன வெளிப்படுத்தினர் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள், அந்த பெரிய இடி முழக்கம் ஆகாயத்திலிருந்து புறப்பட்டு வந்தது. இப்பொழுது, உண்மையாகவே, நீங்கள் பாருங்கள், அது—என்ன பொருட்படுத்துகிறது என்பதை நான் அறிவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அந்த நேரம் வரும் வரை நாம் காத்திருப்போமாக, நீங்கள் பாருங்கள், அது இருக்க வேண்டும், பாருங்கள், இப்பொழுது, அது பருவகாலமாக இருக்கும்.

107150 இப்பொழுது, நாம் இந்த—இந்த வேதவாக்கியங்களில் சிலவற்றை இங்கே வாசிக்கப் போகிறோம். இப்பொழுது, சாயங்கால நேரத்தில் வெளிச்சங்கள் உண்டாகின்றன, இப்பொழுது, இதுவும் காலையில் இருந்த அதே வெளிச்சமாய் இருக்க வேண்டும் என்பதை நாம் கவனிக்கிறோம். காரணம், காலையில் ஒரு சூரியனும், பிற்பகலில் மற்றொரு சூரியனும் கிடையாது. அதே சூரியன் தான். பிற்பகலில் உள்ள அதே சூரியன் காலையிலும் உள்ளது; காலையிலும், பிற்பகிலும் அதேவிதமாகவே இருக்கும். இப்பொழுது, அது, “அந்த நாளே,” அந்த நேரத்திற்கு இடைப்பட்ட நாள், “ஓ, ஒரு மந்தாரமான, இருண்ட நாள் போல இருக்கும். அதற்கு இடையில் பகல் என்றோ அல்லது இரவு என்றோ அழைக்க முடியாது” என்றார்.

108151 பாருங்கள், அந்த சரீரத்தின் உருவாக்கம், பாதங்களிலிருந்து மேலே வருகிறது. அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது, அவர் குமாரனாக, அந்த சாயலாக இருந்தார், அப்பொழுது அவர் கொல்லப்பட்டார். சபையானது அவருடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, அதன்பின்னர் இரத்த சாட்சிகளாக இருண்ட காலங்களினூடாகச் சென்று, வெளியே வரும் அஸ்திபாரத்தின் மேல் கட்டத் துவங்கினது. அப்படியானால் பார்வை எங்கிருந்து வருகிறது? தலையின் உச்சியில். அந்த தரிசனத்தைப் பாருங்கள்; நேபுகாத்நேச்சாரா? அவர் புறஜாதியாரின் காலத்தின் துவக்கம் முதற்கொண்டு, அவர்களுக்காக இரத்தம் சிந்தப்பட்டு பாவநிவிர்த்தி செய்யப்படுவதற்கு முன்னர், அவர் சென்று கொண்டிருந்ததைப் பாருங்கள். அவர்கள் மதமாற்றம் செய்தவர்களாயிருந்தனர். ஆனால் கவனியுங்கள், அது கீழே, நேராக கீழே, சரியாக கீழே, அடையாளமாக, பாருங்கள், அதை கீழே கொண்டு வந்தது. அதன்பின்னர் அது திரும்பி வரத் துவங்கியது, சபையானது பாதத்திலிருந்து திரும்பி மேலே வந்துகொண்டிருந்தது. இப்பொழுது அது தலை காலத்தில்—தலை காலத்தில் உள்ளது. இப்பொழுது வெளிச்சத்தைக் கவனியுங்கள்.

109152 நீங்கள் உங்களுடையக் கரங்களினால் காண முடியாவிட்டாலும், அது சரீரத்தின் பாகமாயுள்ளது. உங்களால் காதுகளால் காண முடியாது, அதே சமயத்தில் அது கேட்க முடியும். உங்களால் மூக்கினால் பார்க்க முடியாது, அதே சமயத்தில் அது முகர்கிறது. அது பேசினாலும், உங்களால் உதடுகளைக் கொண்டு காண முடியாது; பாருங்கள், அது பெந்தேகோஸ்தே காலமாகும். ஆனால் இப்பொழுதோ கண்விழித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது. பார்த்தீர்களா? இப்பொழுது, கண்களுக்கு அப்பால் எந்த ஒரு அசையும் வல்லமையும் இல்லை. அது சரியா? அடுத்தது புத்திக்கூர்மையாயுள்ளது, அது கிறிஸ்துதாமே, அவர் முழு சரீரத்தையும் கட்டுப்படுத்துகிறார். அதற்கு அப்பால் அசைவும், அசைவும் இல்லை. பார்த்தீர்களா? மற்ற யாவும் இடம் பெயர்ந்துவிட்டன. பார்த்தீர்களா? உங்களுடைய கால்களை அசைக்கவும், உங்களுடைய கால்களில் உள்ள உங்களுடைய தசைகளை அசைக்கவும், எல்லாவற்றையும் அசைக்கவும். உங்களுடைய…உங்களுடைய காதுகளை அசைக்கவும், உங்களுடைய மூக்கு, உங்களுடைய உதடுகள் போன்றவற்றை அசைக்க முடியும். ஆனால் உங்களுடைய கண்களுக்குப் பிறகு, ஒன்றுமே அசைவதில்லை. எனவே தான் ஆண்களுக்கு விரைவில் வழுக்கைத் தலை விழும் என்று அவர்கள் கூறுகின்றனர், ஏனென்றால், பாருங்கள், தலைமுடியில், உச்சந்தலையில் உள்ள தசைகளை வளர்க்க எந்த உடற்பயிற்சியும் இல்லை. பார்த்தீர்களா? அதற்கு ஒரு மெத்தை கிடையாது எனவே அவைகள் அங்கே இரத்தத்தை மேலே கொண்டு செல்கிறது. இரத்தம் வெளிக்கொண்டு வராது, பாருங்கள், மேலே சென்று இரத்தத்தை அளிக்காது. உண்மையாகவே முடியின் வேர் இரத்தத்தினால் ஜீவிக்கிறது. இப்பொழுது அந்தப் பகுதி, நீங்கள் பாருங்கள், கண்களுக்கு அப்பால் ஒன்றுமேயில்லை என்பதை நாம் கண்டறிகிறோம்.

110153 இப்பொழுது நாம் அதைக் கண்டறிவோமாக. “சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்” (சுமார் மத்தியான வேளையிலா?) வெளிச்சம் எதற்காக அனுப்பப்படுகிறது? எனவே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்…எப்படி சுற்றி வர வேண்டும் என்பதை உங்களால் காண முடியும். அது சரியா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள். “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.” 154 இப்பொழுது, நாம் அதை இப்பொழுது எடுத்துக் கொண்டு, அதை மல்கியா 4-ம் அதிகாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். சாயங்கால நேரத்தில் மீண்டும் வெளிச்சம் உண்டாகும் என்று அவர் வாக்குப்பண்ணினார், பாருங்கள், “ஏனென்றால், நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன், அவன் பிள்ளைகளை பிதாக்களிடத்திற்கும், பிதாக்களை பிள்ளைகளிடத்திற்கும் திரும்ப அளிப்பான்,” (அது சரியா?) “நான் வந்து பூமியை சங்காரத்தால் அடிக்காதபடிக்கு” என்றார். 155 இப்பொழுது நாம் யோவானைப் பார்ப்போம்…பரிசுத்த லூக்கா 17:30, “சோதோமின் நாட்களில் நடந்ததுபோல, அப்படியே இருக்கும்…” என்று அங்கே இயேசு என்ன தீர்க்கதரிசனம் உரைத்தார் என்பதைப் பாருங்கள். இப்பொழுது நினைவிருக்கட்டும், கவனியுங்கள், இந்த நேரத்தில் மனுஷகுமாரன் வெளிப்படுவார்; மனுஷ குமாரனின் வெளிப்படுதல். இப்பொழுது, சோதோம் சுட்டெரிக்கப்படுவதற்கு சற்று முன்னர், அங்கே ஒரு சில நிமிடங்களுக்கு, மனுஷகுமாரன் உண்மையாகவே மறைமுகமாக வெளிப்படுத்தப்பட்டார். இப்பொழுது, அந்த மனிதன் ஏலோகிமாயிருந்தார். அது தேவனாயிருந்தது; இயேசு தேவனாயிருக்கிறார். தேவன் ஆபிரகாமிடம் விசாரணை நடத்தும் நியாயத்தீர்ப்பில் ஒரு சில நிமிடங்கள் பேச வல்லமையுள்ளவராக அங்கே வெளிப்படுத்தப்பட்டார். சிறிது காலத்திற்கு, மனுஷகுமாரன் வெளிப்பட்டார்; மனுஷகுமாரன், ஏலோஹீம். சபையே, நீங்கள் அதைக் காண்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] மனுஷகுமாரன், ஏலோகிம், ஒரு சில நிமிடங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டார். அடுத்த நாள் காலையில் சூரியன் மீண்டும் உதயமாவதற்கு முன்னரே (எப்பொழுது?) அவள் எரிக்கப்பட்டாள். எனவே எந்த ஸ்தாபனமும் விடப்பட்டிருக்க முடியாது, இப்பொழுது நடக்கப் போவதைக் காட்டிலும் கூடுதலான எந்த முன்னேற்றமும் இருக்க முடியாது, ஏனென்றால் பொழுது விடிவதற்கு முன்பே அது கொழுந்துவிட்டு எரிந்துவிடும். தேசம் முழுவதிலும் எழுப்புதல் முடிந்துவிட்டது. அங்கே இனிமேல் பெரிய எழுப்புதல்கள், பெரிய எழுப்புதல்கள் இருக்கப் போவதில்லை; இந்த தேசம் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் ஒரு அறிவாற்றல் கொண்ட கூட்டத்தை நடத்தலாம். ஆனால், நான் பொருட்படுத்திக் கூறுவது, ஒரு ஆவிக்குரிய எழுப்புதல், நாம் அதைக் குறித்த எல்லாவற்றையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பார்த்தீர்களா? அது முடிந்துவிட்டது. சற்று முன்னர் ஒரு அருமையான ஊழியக்காரர், “சகோதரன் பிரான்ஹாம், கர்த்தருடைய சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் நான் கொண்டிருக்கக்கூடுமானால் நலமாயிருக்குமே!” என்று கூறினார். நான், “மகனே, எழுப்புதல் முடிந்துவிட்டது” என்றேன். பார்த்தீர்களா?

111156 இப்பொழுது நிலைப்படுத்திகள் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இங்கே நமக்கு முன்பாக மகத்தான பயங்கரமான அலைகள் வந்து கொண்டிருக்கின்றன; ஆனால் நாம் அறிவோம், அந்த அலைக்கு அப்பால், நாம் கரையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். பார்த்தீர்களா? நாம் கரையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். நிலைத்து நில்லுங்கள். வார்த்தையில் நிலைத்திருங்கள். தேவனோடு தரித்திருங்கள். நீங்கள் எப்படி உணர்ந்தாலும், வேறெந்த காரியமாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; வார்த்தையோடு சரியாக நிலைத்திருங்கள். அது நிலையாக இருக்கட்டும்—இருக்கட்டும்—இருக்கட்டும், நம்மைச் சுற்றிலும் உள்ள இந்த பெரிய பெரிய பழைய மேகங்கள் யாவற்றையும், புயல்கள் வருவதையும், அணுகுண்டுகளை நீங்கள் காணும்போது, மற்றும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிற மற்ற ஒவ்வொரு காரியத்தையும் குறித்தும் பேசுகின்றனர். ஆனால் நம்முடைய நிலைப்படுத்தி சரியாக வார்த்தையில் உள்ளது. அது இங்கே இருக்கும் என்று தேவன் கூறினார்; நாம் அவைகள் ஒவ்வொன்றையும் சிகரத்தில் உட்காரச் செய்வோம். ஆம், நாம் அவைகளுக்கு மேலே செல்வோம். ஆம், உண்மையாகவே! அவர்கள், அவர்கள் நம்மை மூழ்கடிக்க முடியாது. அவைகளால் நம்மை மூழ்கடிக்க முடியாது. நீங்கள் எங்களை கல்லறையில் வைத்தீர்கள்; நாம் மீண்டும் வெளியே வருவோம். அதைக் குறித்ததெல்லாம் அவ்வளவுதான். அதை அங்கே வைத்துக் கொள்ள உலகத்தில் எந்த வழியும் இல்லை. நாம் அவர்கள் ஒவ்வொருவரையும் முகட்டில் ஏற்றிவிடுவோம், ஏனென்றால் நம்முடைய மகத்தான தலைமை தளபதி மறுபுறத்தில் அழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் இயேசுவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறோம், ஜீவ புயல்களை நான் தைரியமாக எதிர்கொள்வேன்; நான் இயேசுவுக்குள்ளாக நங்கூரமிட்டிருக்கிறேன், நான் எந்த காற்றுக்கும் அல்லது அலைக்கும் பயப்படேன்;

112157 அது என்னவாயிருந்தாலும், அது வரட்டும். எது இருக்கலாம், என்ன செய்யும், அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. நாம் அங்கே இயேசுவுக்குள் நங்கூரமிடப்பட்டிருக்கிறோம். நான் ஜீவித்தால், நான் தேவனுடைய மகிமைக்கென்று ஜீவிப்பேன். நான் மரித்தால், அப்பொழுது என்னால் தேவனுடைய மகிமைக்கென்று மரிக்க முடியும். நான்—நான்—நான் செய்ய விரும்புகிறேன்…அது தேவனுடைய மகிமைக்காக, அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். அதெல்லாம் முடிவுறும்போது, நான் இனிமேல் தரித்திருக்க விரும்பவில்லை. அவர் எனக்காக வாங்கின என்னுடைய பலனைப் பார்க்க…நான் செல்ல விரும்புகிறேன்; நான் சம்பாதித்ததன் மூலம் அல்ல, ஆனால் அவர் எனக்காக வாங்கியதை, அவருடைய கிருபையினால் அவர் எனக்கு கொடுத்தார்.

113158 எனவே சாயங்கால வெளிச்சம் இங்கே இருப்பதை நாம் காண்கிறோம். ஒளியை எப்படிச் சுற்றி வர வேண்டும் என்பதைக் காண உங்களுக்கு கண்கள் இல்லையென்றால், அதைப் பெற்றுக் கொள்ள இது என்ன செய்கிறது? சாயங்கால வெளிச்சம் என்றால் என்ன? ஏதோ ஒன்றை வெளிப்படுத்த வெளிச்சம் வருகிறது. அது சரியா? இங்கே ஏதோ ஒன்று இருக்குமானால், நீங்கள் உணர்ந்து, அது என்னவென்று உங்களால் புரிந்து கொள்ள முடியாமற்போனால், அந்த இருளில், அப்பொழுது ஒரு விளக்கைப் போடுங்கள். அதை வெளிப்படுத்துவதே! மல்கியா 4 என்ன செய்ய வேண்டும்? பார்த்தீர்களா? அதே காரியத்தைச் செய்கிறது. ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல் என்ன செய்வதற்காக இருந்தது, இந்த எல்லா ஸ்தாபனங்களும் இதில் தத்தளிக்கின்றன …?… வெளிப்படுத்துதல், வெளியே கொண்டு வருதல். உங்களுக்கு கண்கள் இல்லையென்றால், வெளிப்படுத்துவதனால் என்ன பயன்? காண முதலில் கண்கள் இருக்க வேண்டும். அது சரியா? மல்கியா 4, பரிசுத்த லூக்கா 17:30, பரிசுத்த யோவான் 14:12, யோவான் 15:24, 16:13 ஆகியவற்றை வெளிப்படுத்த. வெளிப்படுத்தல் 10:1 முதல் 7 வரை, ஏழு முத்திரைகள் திறக்கப்படுதல், ஏழாம் தூதனின் செய்தி; சாயங்கால வெளிச்சம் வரும்போது, திறந்து, வெளிப்படுத்த. இப்பொழுது ஒரு மனிதன்…

114159 லவோதிக்கேயா காலத்தில், ஜனங்கள் (என்ன?) “நிர்வாணமாயிருந்தனர்.” அவர்களா? “குருடாய்.” ஒளி ஒரு குருடான மனிதனுக்கு என்ன நன்மையைச் செய்கிறது? குருடனுக்கு குருடன் வழிகாட்டினால், அவர்கள் யாவரும் குழியில் விழுவார்களல்லவா? “நிர்வாணமாயும், குருடனாயும், அதை அறியாதவர்களாயும் இருப்பார்கள்.” அவர்களுடைய மனோதத்துவ திறமைகள் கூட போய்விட்டன, அவர்களுடைய ஆவிக்குரிய ஆவிக்குரிய மனோதத்துவ, ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல். பார்த்தீர்களா? “துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்; இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” வெளிப்பாட்டின் வல்லமை; அவர்கள் அதில் நம்பிக்கைக் கூடக் கொண்டிருக்கவில்லை. பார்த்தீர்களா? அவர்கள் தீர்க்கதரிசிகள் போன்ற காரியங்களில் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே அவர்கள் அதில் நம்பிக்கை கொள்வதில்லை. மல்கியா 4 ஒரு குறிப்பிட்ட சபையாக அல்லது ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனமாக இருக்க வேண்டும் என்று அவர்கள்—என்று நம்புகின்றனர். அவன் முதல் முறையாக வந்தபோது, அவன் ஒரு மனிதனாயிருந்தான். அவன் இரண்டாம் முறை வந்தபோது, இரட்டிப்பான பங்குடன், அவன் ஒரு மனிதனாயிருந்தான். அவன் யோவான் ஸ்நானகனின் ரூபத்தில் வந்தபோது, அவன் ஒரு மனிதனாயிருந்தான். பார்த்தீர்களா? கடைசி நாட்களில், சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கத் துவங்கும்போது, கண்கள் திறக்கப்பட்டு, நீங்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். அப்படியானால் சரீரம் ஏற்கனவே உருவாகி, அதனுடைய காலூன்றி நின்று, அசைவை எடுத்துக் கொண்டு, பரிசுத்த ஆவியினால் அசைவாடுகிறது. என்ன? வேதாகமத்தை எழுதின தீர்க்கதரிசிகளின் மேல் அசைவாடிய அதே ஒருவர், அதே பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு சரீரத்தில் அசைவாடி, பரிசுத்த ஆவியில் அசைவாடி, ஒவ்வொரு ஸ்தாபனத்திலிருந்தும், ஒவ்வொரு இனத்திலிருந்தும், பாஷைக்காரரிலிருந்தும் வந்த மக்களிடம் அசைவாடுகிறார்.

115160 இங்குள்ள ஒரு சிறு பெண்மணி, அவள் இந்த ஸ்தாபனத்தை அல்லது இந்த ஸ்தாபனத்தை…இந்த சபையை சேர்ந்தவள் அல்ல. அவள் வேறொரு இடத்திலிருந்து வருகிறாள், அவள் இந்தக் காலையில் வந்திருக்கிறாள், அங்கே ஒரு புகைப்படம் உள்ளது. அவள்…அதை என் மகனுக்குக் கொடுத்தாள், அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான். அவள் இதைக் குறித்து எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறாளா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது. அவள் இந்த கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை வைத்திருந்தாள் அது ஏழு சபைக் காலங்களைப் பற்றியதாயிருந்தது, அது நிகழ்ந்த போது, அங்கே, ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டன. அங்கே திரும்பிப் பார்த்தபோது, அவள் ஒரு சொப்பனத்தில், ஆகாயத்தில் நிற்பதைக் கண்டாள். அவள் அங்கே திரும்பிப் பார்த்தபோது, யாரோ ஒருவர் வெண் வஸ்திரம் தரித்தவராய் முன்னோக்கிச் செல்வதைக் கண்டாள். அதற்குப் பின்னால், அது காணப்பட்டது…என்று கூறினார். “சகோதரன் பிரான்ஹாம், அது நீங்கள்தான்” என்றார். மேலும், “அங்கே அணிவகுத்துச் சென்றீர்கள்” என்றும், “உங்களுக்குப் பின்னால், பல்வேறு நிறங்களையுடைய ஜனங்கள், கொடிகளைப் பிடித்துக் கொண்டு; ஜார்ஜியா, அலபாமா, எல்லாவிதமான இடங்களிலிருந்தும் முன்னோக்கி அணிவகுத்துச் சென்று,” கிறிஸ்து தரிசனத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்த தலைமைத்துவத்திற்குள் வந்து கொண்டிருந்தனர். ஓ, அல்லேலூயா!

116161 நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம், நாட்களின் கடைசி மணி நேரங்களில் இருக்கிறோம். இப்பொழுது நீங்கள் அவரை அவருடைய வார்த்தையில் காண்கிறீர்களா, அவருடைய வார்த்தை யாவும் இங்கே நமக்கு முன்பாக வெளிப்படுவதைக் காண்கிறீர்களா? ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையே, உங்களுடைய காலூன்றி எழுந்து, உங்களுக்குள்ள எல்லாவற்றோடும் அவரை விசுவாசியுங்கள். சக்கரத்தின் நடுவில் உள்ள அந்தச் சிறிய சக்கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள், அது நீங்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு அசைவையும் உறுதிப்படுத்தட்டும். நீங்கள் கொண்டுள்ள ஒவ்வொரு சிந்தனையும், அது உங்களுடைய உட்புறத்தில் உள்ள இந்த கோபுரத்தினால் கட்டுப்படுத்தப்படுவதாக. ஏனென்றால் தேவன் இந்த மணி நேரத்தின் தம்முடைய வார்த்தையில் சரியாக அமர்ந்து, சாயங்கால வெளிச்சத்தில் ஒளியைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

117162 ஒரு வெளவாலின் குருட்டுத்தனம்! நீங்கள் ஒரு விளக்கைப் போடலாம், அப்பொழுது அந்த வெளவால்—வெளவால் பறக்க முடியாதபடி குருடாயிருக்கும். ஒரு அலறும் ஆந்தை, இரவில் வேட்டையாடுபவை, அது போன்ற காரியங்கள், கரப்பான் பூச்சிகள் மற்றவைகளால் பகல் நேரத்தில் பார்க்க முடியாது. அது எதைக் குறித்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களால் காண முடியாது. சாயங்கால வெளிச்சம் உண்டாயிற்று. ஒவ்வொரு உவமையையும், நாம் எங்கு சென்றாலும், இயற்கைக்கு, வேதாகமத்திற்கு, தானியேல் கண்ட மெல்கி…சிலைகளுக்கு, அன்றைய அரசன், அவர்கள் யாவரும் கண்டனர்; இந்த எல்லாக் காரியங்களையும், ஒவ்வொருவரும், ஒவ்வொரு உருவமும், ஒவ்வொரு அசைவும், சரீரத்திலுள்ள ஒவ்வொரு இடமும், நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற அதே நேரத்தையே நமக்கு சரிவர பொருத்தி எடுத்துக் காண்பிக்கிறது. அதற்கு மேல் வேறெந்த அசைவும் வர முடியாது. கரத்தின் அசைவு இருந்தது; தொண்டு, வெஸ்லி. அஸ்திபாரத்தின் ஒரு அசைவு இருந்தது; லூத்தர். அன்பு, மகத்தான ஒன்று இருந்ததேயில்லை; அது வெஸ்லி இயக்கம் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் உலகம் முழுவதிலும் மிஷனரிகளை அனுப்பினார்கள். அதற்கு முன்பிருந்த காலத்தில், செய்யப்பட்டிருந்த மிகப்பெரிய அசைவுகளில் ஒன்று. அதன்பின்னர் பெந்தேகோஸ்தே காலம் வந்தது; அதன்பின்னர் வித்தியாசமான விரல்கள், காரியங்கள், பெந்தேகோஸ்தேயின் காலம், அந்நிய பாஷைகள், மூக்கு போன்றவை தோன்றின. இப்பொழுது அது கண்களில் உள்ளது. காண்பதற்கு அங்கே கண்கள் இல்லையென்றால், உங்களுக்கு தேவைப்படுகிற கண்களினால் அல்லது தேவைப்படுகிற வெளிச்சத்தினால் என்ன நன்மை உண்டாகும்? காண முதலில் கண்கள் இருக்க வேண்டும். அதன்பின்னர் அது வந்தபோது, அவர் ஏழு முத்திரைகளை திறந்து, சாயங்கால வெளிச்சத்தை வெளிப்படுத்தினார். இச்சபைக் காலங்களினூடாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் யாவற்றையும், இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 10:1 முதல் 7 வசனங்களில் அவர் செய்வதாக வாக்குத்தத்தம் செய்தபடியே அவைகளை வெளிப்படுத்தினார். இங்கே நாம் இன்றைக்கு வார்த்தையின் மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், அந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவினால் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அப்படியானால், இது தேவனுடைய வார்த்தையாயுள்ளது.

118163 அவருடைய பிரஜைகளாயிருக்க, அது வெளிப்படுத்தும்படியாக, நாம் அதைப் புரிந்துகொள்ள, ஆக்கியோனண்டை நெருங்கி நடக்க வேண்டும். “ஓ, கர்த்தாவே, நீர் எனக்கு என்ன செய்ய வேண்டும்? நான் ஊழிய களத்திற்கு சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமா அல்லது நான் வீட்டிலேயே தரித்திருக்க வேண்டுமா? அது என்னவாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, நான் ஒரு நல்ல இல்லத்தரசியாக இருக்க வேண்டும், நான் ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என்றால், நான் இதை, அதை அல்லது மற்றதை செய்ய வேண்டுமா? அது என்னவாயிருந்தாலும், நான் ஒரு விவசாயியாக இருக்க வேண்டுமானால், நான்…அது என்னவாயிருந்தாலும், கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?” 164 சவுல், “ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் சித்தம் கொண்டீர்?” என்று அங்கே கதறினான். அவன் சபை…அவன் முழு சபையையும் சிறையில் அடைக்கும்படியான தன்னுடைய பாதையில் இருந்தான். ஆனால் அப்பொழுது அவன், “நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?” என்று சத்தமிட்டான். வெளிச்சம் பிரகாசித்தபோது, ஒரு பெரிய அக்கினி ஸ்தம்பம் அவனுக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. “நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?” 165 முடிப்பதற்கு இது ஒரு நல்ல வார்த்தை என்று நான் நினைக்கிறேன், “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்? இந்த வேதவாக்கியம் மிகவும் பரிபூரணமாக இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நான் காணும்போது; கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?” என்று கேளுங்கள். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக.

119166 இப்பொழுது உங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பார்த்து, “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்?” என்று இந்தக் கேள்வியைக் கேட்கும்படி இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஜனங்களாகிய நீங்கள், நீங்கள் இன்னமும் தேசம் முழுவதிலும் தொலைபேசிக் கம்பிகளில் இருந்தால், நீங்கள் உங்களுடைய தலையை வணங்கி, “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்? நாம் இங்கே கடைசி நாட்களிலும், கடைசி மணி நேரத்திலும் இருப்பதைக் காணும்போது, எங்களுக்கு முன்பாக மிகவும் பரிபூரணமாக, மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டபோது, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்?” என்று கேளுங்கள்.

120167 அன்புள்ள தேவனே, அவர்கள் உம்மிடம் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கையில்; ஒவ்வொரு நாளும் கணக்கிடப்பட வேண்டும் என்பதை நான் உணர்ந்துள்ளபடியால், கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டுமென்று நீர் விரும்புகிறீீர் என்பதை நானே உம்மிடம் கேட்கிறேன். கர்த்தாவே, ஒவ்வொரு நாளும் உம்முடைய கனத்திற்கும் மகிமைக்கும் எண்ணப்படும்படியாக ஜீவிக்க நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். தேசம் முழுவதிலும் உள்ள ஒவ்வொருவருக்கும் நீர் உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் எங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்கையில், இந்த கூடாரத்தில் இங்குள்ளவர்கள் “கர்த்தாவே, நான் என்ன செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்? கர்த்தாவே, உம்முடைய இராஜ்ஜியத்தையும், உம்முடைய நோக்கத்தையும் பெரிதுபடுத்த நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேளுங்கள். தேவனே, அதை அருளும். எங்களுடைய இருதயங்களை ஆராய்ந்து, எங்களை சோதித்தறியும். கர்த்தாவே, எங்களுக்குள்ளே ஏதாவது அக்கிரமமும், சுயநலமும், கெட்ட நோக்கங்களும், குறிக்கோள்களும் இருக்குமானால், ஓ தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் எங்களை சுத்திகரியும், அவருடைய மரணத்திற்கும், அவருடைய உயிர்த்தெழுதலுக்கும் அவருடைய பாவநிவிர்த்தியை நாங்கள் தாழ்மையாய் ஏற்றுக்கொள்கிறோம். அவர் இதைச் செய்தார் என்று விசுவாசிப்பதன் மூலம் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நீர் எங்களுக்கு அளித்துள்ள இரட்சிப்பின் திட்டத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம். பிதாவே, இந்த நாளின் செய்திக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், நாங்கள் என்ன விசுவாசிக்கிறோம் என்றும், நாங்கள் எதைப் பற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும், அறிந்து அது உம்முடைய வார்த்தையில் உள்ளது என்றும் உம்முடைய செய்தி என்பதை விசுவாசிக்கிறோம். மற்ற ஜனங்களிடத்திலிருந்து வித்தியாசமாயிருக்க அல்ல, ஆனால் நம்முடைய முன்மாதிரியாக இருக்கிற இயேசு கிறிஸ்துவைப் போல அதிகமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

121168 அன்புள்ள தேவனே, இங்கே கைக்குட்டைகள் வைக்கப்பட்டுள்ளன சுகவீனமான ஜனங்கள் எங்கும் உள்ளனர். கர்த்தாவே, நானே இந்தக் காலையில் சோர்வுற்று, களைப்புற்றிருக்கிறேன். அன்புள்ள தேவனே, நீர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் பெலனுக்காக உம்மை எதிர்நோக்கியிருக்கிறோம். நீர் எங்களுடைய பெலனாயிருக்கிறீர். அன்புள்ள தேவனே, நீர் அநேகருக்கு உதவி செய்திருக்கிறீர். 169 அன்றொரு நாள், அந்த காட்டில் சகோதரன் பாங்க்ஸ் உட் அவர்களோடு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மருத்துவர்கள்… அவருடைய இருதயம் மிகவும் மோசமாக இருந்ததால், அவரால் நடந்து செல்ல முடியவில்லை. பிறகு நான் எப்படி என்று யோசிக்க…அந்த தரிசனத்திற்குப் பிறகு நான் அந்த மலைகளில் நடந்து செல்லும் போது எனக்கு ஒன்றுமே தெரியாது. “நான் அந்த சிங்கத்தை பிடிக்க வேண்டும். அந்த சிங்கம் கொல்லப்படுவதை நான் காண வேண்டும்.” அதன்பின்னர் அங்கு வந்து, அங்கே டூசானில் உள்ள ஃபர்ஸ் சிற்றுண்டி விடுதியில் நின்று, அவனுடைய ஆடைகள் அனைத்தும் கீழே தொங்கிக் கொண்டிருப்பதையும், அவனுடைய கண்கள் சொருகிக் கொண்டிருப்பதையும் கண்டேன். “தேவனே, நீர் ஒரு தரிசனத்தைக் காண்பிக்கக் கூடுமானால், அங்கே ஒரு சிங்கம் உள்ளது, நிச்சயமாகவே சகோதரன் உட் அவர்களைக் குறித்தும் உம்மால் காண்பிக்க முடியும்” என்றேன். அப்பொழுது, “உன் கைகளை அவர் மேல் வை” என்று உரைத்தது. இதோ அவர் இன்றைக்கு, நமது சகோதரன் பாங்க்ஸ் மீண்டும் பலமாக, அந்த மலைகளில் மேலும் கீழும் ஓடுகிறார். அருமையான தேவனே, நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் சகோதரன் உட் அவர்களுக்கு இருப்பது போன்றே எங்கள் எல்லோருக்கும் அதே தேவனாயிருக்கிறீர். நீர் அவரை நேசிக்கிறீர் என்பதை நான் அறிவேன், ஏனென்றால் அவர் நேர்மையும், உத்தமமுமான உம்முடைய ஊழியக்காரனாயிருக்கிறார்.

122170 அன்புள்ள தேவனே, நீர் எங்கள் ஒவ்வொருவரோடும் இடைபடவும், எங்களுடைய பாவங்களை மன்னிக்கவும், எங்களுடைய சரீரங்களின் வியாதிகளை சுகப்படுத்தவும் வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நாங்கள் இயேசு கிறிஸ்துவின் அந்த முழு வளர்ச்சிக்குள்ளாக வரும் வரையில், நாளுக்கு நாள் இன்னும் அதிகமாக உம்மைப் போல எங்களை ஆக்கியருளும். கர்த்தாவே, அதை அருளும். இப்பொழுது நீர் ஒவ்வொரு இருதயத்தையும் ஆராய்ந்து பார்த்திருக்கிறீர் என்றும், என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் நான் நம்புகிறேன். நீர் எங்களை இப்பொழுது ஆசீர்வதிக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

123171 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், இங்குள்ள யாராகிலும், அல்லது தொலைபேசி மூலமாக தேசமெங்கும் இணைக்கப்பட்டுள்ளவர்களில் எவராகிலும், நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கையில், உங்களுடைய தலை வணங்கியிருக்கையில், இப்பொழுது உங்களுடைய கரத்தை தேவனண்டை உயர்த்த விரும்புகிறீர்களா? உங்களால் செய்ய முடிந்ததெல்லாம் அவ்வளவுதான்; இன்று காலை இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது. அப்படியே உங்களுடைய கரத்தை தேவனண்டை உயர்த்தி, “தேவனே, இன்னும் அதிகமாக என்னை இயேசுவைப் போலாக்கும். நான்—நான் அதிகமாக இயேசுவைப் போலிருக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேசம் முழுவதிலும் உள்ள தேசத்திற்கு வெளியே, எங்கும் கரங்கள், ஒரு திடமான கூட்டம். மேலும், என்னுடையதும் மேலே உயர்த்தப்பட்டது. “நான் இன்னும் அதிகமாக அவரைப் போல் இருக்க விரும்புகிறேன். கர்த்தாவே, ஆராய்ந்து பாரும், என்னில் ஏதாகிலும் பொல்லாங்கு காணப்படுமாயின்; அதை வெளியே எடுத்துப் போடும். நான்—எனக்கு வேண்டும்…” என்ன? நாம் நீண்ட காலமாக இங்கிருந்தாலும், நீங்கள் என்னவாயிருந்தாலும் சரி, நீங்கள் என்னவாயிருந்தாலும் சரி, எவ்வளவு ஐசுவரியவானாக, எவ்வளவு ஏழையாக, எவ்வளவு இளைஞனாக, எவ்வளவு வயோதிகனாக இருந்தாலும் சரி.

124172 நேற்றைய தினம் ஒரு—ஒரு எளிய ஏழை ஜனங்களிடம் ஒரு மலையின் மேல்…கீழே ஓடையில். அங்கே ஒரு சிறு குடும்பம் இருந்தது, ஒரு மனிதனிடம் நான் தேவனைக் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய எளிய மனைவி, ஏழு அல்லது எட்டு பிள்ளைகள் இருக்கின்றனர்; அவன், ஒரு சிறு உருவம் கொண்ட, மெலிந்த உருவமாயிருந்தான், அங்கே வெளியே வேலை செய்ய முயற்சிக்கிறான், ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் சம்பாதிக்கிறான். ஒரு மனிதன் அவனை ஒரு சிறிய குடிசையில் வாழ அனுமதித்தான். அங்கே அவருடைய மனைவி கிட்டத்தட்ட மற்றொரு குழந்தையைப் பெற்றெடுக்க ஆயத்தமாயிருந்தாள், அவள் மரத்தை வெட்டி கீழே இழுக்க, அங்கே ஒரு பெரிய அகன்ற கோடாரியை வைத்திருந்தாள்; ஒரு இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டே, மற்றொரு கையினால் விறகை இழுத்து; அந்த விறகை வெட்ட வந்தாள், பிளாக் பெரி பழங்களை டப்பாவில் அடைத்து வைத்து, குளிர்காலம் முழுவதிலும் பட்டினியாயிருப்பதை போக்கினர். என்னே, நாங்கள் எவ்வளவாக அவளுக்காக வருத்தப்பட்டோம்! நானும் சகோதரன் உட் அவர்களும் அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு, அங்கே சென்று அவளுடைய விறகை வெட்டி, அதை உள்ளே கொண்டு வந்தோம். அவள், நன்றியுள்ள சிறு பெண்மணி, அங்கே நின்று கொண்டிருந்தாள். நான் அவளுக்காக பரிதாபப்பட்டேன். நாங்கள் அவர்களுக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தோம்.

125173 அவளுடைய சிறு குழந்தைக்கு காக்காய் வலிப்பு வந்தது. நாங்கள் சென்று அந்த சிறு குழந்தைக்காக ஜெபித்தோம், தேவன் அதை சுகப்படுத்தினார். அன்றொரு நாள் அவளுடைய கணவனுக்கு குடலிறக்கம் உண்டாக்கியிருந்தபடியால், உள்ளே போய்… நான் அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அவர் இருவருமே புகைப்பிடித்தனர். அவள் புகையிலையை உபயோகித்தாள், அவனும் கூட, மலைவாசிகளின் பிரத்தியேக பழக்கம். அதன்பின்னர் நான் அதைக் குறித்து அவர்களிடத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நேற்று காலை நான் உள்ளே சென்றபோது, பொழுது விடிந்தபோது, இதோ அவர் வெளியே நடந்து வந்து, தன்னுடைய கரங்களை ஒன்றாக சேர்த்துப் பிடித்துக்கொண்டு, “சகோதரன் பில்லி, நான் ஒரு மாற்றப்பட்ட மனிதனாகிவிட்டேன்.” அவர், “நான் என்னுடைய கடைசி சிகரெட்டை புகைத்திருக்கிறேன். நான் கர்த்தருடைய பக்கத்தில் இருக்கிறேன்” என்றார். அவள், “நானும் கூட என்னுடைய கடைசி சிகரெட்டைப் புகைத்துவிட்டேன்” என்றாள். ஓ, விதையை நடுவோம்! “கர்த்தராகிய நான் தண்ணீர் பாய்ச்சினேன். என் கையிலிருந்து அதை பறித்துக் கொள்ளாதபடிக்கு, நான் அதற்கு இரவும் பகலும் தண்ணீர் பாய்ச்சுவேன்.”

126174 ஓ தேவனே, இப்பொழுதே இரக்கமாயிரும், எங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை எங்களுக்குத் தாரும் என்று நான் ஜெபிக்கிறேன், ஏனென்றால் நாங்கள் உம்மை சேவிக்க விரும்புகிறோம். இப்பொழுது, பிதாவே, அவை யாவும் எங்கும், உம்முடைய கரங்களில் உள்ளன. அவர்கள் உம்முடைய பிள்ளைகள். கர்த்தாவே, இரக்கத்தின்படியே அவர்களிடத்தில் இடைபடும்; நியாயத்தீர்ப்பில் அல்ல, இரக்கத்தில். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.

127175 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] உங்கள் முழு இருதயத்தோடு! இப்பொழுது கைக்குட்டைகளை வைத்துள்ள நீங்கள் அவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இப்பொழுது, நம்முடைய ஆராதனைகளை, அவர்கள் சற்று சீக்கிரமாக, ஏழு மணிக்கு அல்லது அதைப் போன்ற ஏதோ ஒன்றைத் துவங்குவார்கள் என்று நான் நினைக்கிறேன். சகோதரன் நெவில் இன்னும் ஒரு நிமிடத்தில் அதை எப்பொழுது துவங்க வேண்டும் என்பதைக் குறித்து அறிவிப்பார். இந்தக் காலையில் ஞானஸ்நானம் உண்டா என்று நான் யூகிக்கிறேன். [சகோதரன் நெவில், “தண்ணீர் ஆயத்தமாயுள்ளது” என்கிறார்.—ஆசி.] நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்படாத எவரேனும் இங்கிருந்தால், ஏன், அது நிச்சயமாகவே…ஞானஸ்நான ஆராதனைக்காக தண்ணீர் ஆயத்தமாக உள்ளது.

128176 நாங்கள் எல்லா ஊழியக்கார சகோதரர்களையும் பாராட்டுகிறோம். நான் பார்க்கிறேன் சகோதரன்…சகோதரன் பார்நெல், உங்களுடைய கூட்டம் எப்படி இருந்தது, சரியாக நடந்ததா? சகோதரன் மார்டின், மற்றும், ஓ, இங்கே அவர்களில் அநேகர், சகோதரன் லீ வெயில். ஓ, எல்லா இடத்திலும் ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இங்கே இருந்து, வார்த்தையைச் சுற்றி எங்களோடு ஐக்கியங்கொண்டிருப்பதை நாங்கள் நிச்சயமாகவே பாராட்டுகிறோம்.

129177 ஒருக்கால் நீங்கள் என்னுடன் சரியாக இதன் பேரில் இணங்காமல் இருக்கலாம்; ஆமோதிக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை, நீங்கள் பாருங்கள். ஒரே காரியம், நீங்கள் அதை சற்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் எனக்கு என்ன கூறுகிறீர்களோ, அதை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். போதகர்கள் இந்த ஒலிநாடாவை எடுத்து, “நான் அதனுடன் உடன்படவில்லை” என்று கூறினால், பரவாயில்லை, என் சகோதரனே. நீங்கள் ஒரு வேளை சில ஆடுகளை மேய்க்கலாம்; நீங்கள்—நீங்கள் விரும்புகிறதையெல்லாம் அவர்களுக்கு போஷிக்கிறீர்கள். தேவனுக்காக என்னுடைய கரங்களில் கொடுக்கப்பட்டுள்ள இவர்களுக்காக, நான் வார்த்தையோடு நிலைத்திருக்க என்னால் முடிந்தளவு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் செம்மறியாடுகளுக்கு ஆடுகளின் ஆகாரம் தேவையாயிருக்கிறது. “என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கும்.” அதனாலேயே நாம் வாழ்கிறோம், புறப்பட்டுச் செல்லும் ஒவ்வொரு வார்த்தையினாலும்…எல்லாவற்றையும் அல்ல…இப்பொழுது ஒரு வார்த்தை மாத்திரம் அல்ல; ஆனால் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பரிசுத்தவான்கள் ஜீவிக்க வேண்டும். நாம் இப்பொழுது நம்முடைய காலூன்றி எழும்பி நிற்போம். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்… சகோதரன் நெவில், நீங்கள் அவர்களிடம் ஏதாவது கூற விரும்புகிறீர்களா? [சகோதரன் நெவில், “இல்லை” என்கிறார்.—ஆசி.] சகோதரன் மேன்? சரி. எல்லோரும் நலமாக உணருகிறீர்களா? “ஆமென்” என்று கூறுங்கள். [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] சரி. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். நான் சகோதரன் லீ வெயிலை அவர் இங்கு வருவாரா அல்லது அவரால் வர முடியுமா என்று கேட்கப் போகிறேன். உங்களால் அங்கு செல்ல முடிந்தால், சகோதரன் வெயில், உங்களால் முடிந்தால். சகோதரன் வேயில் இங்கே நம்முடைய சகோதரன், புத்தகங்களை எழுதியவர். அவர் இப்பொழுது ஏழு சபையின் காலங்கள் என்ற புத்தகத்தை ஆயத்தம் செய்து, ஏழு முத்திரைகளோடு வேலை செய்துகொண்டிருக்கிறார். சீக்கிரத்தில் அவைகள் வெளியாகும் என்று நாங்கள் நம்புகிறோம். சரி. சகோதரர் லீ வேயில். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 