1 சகோதரனே, உங்களுக்கு நன்றி. [சகோதரன் கார்ல் வில்லியம்ஸ், “சகோதரன் பிரான்ஹாம் பீனிக்ஸூக்கு அடிக்கடி வருவது உண்மையாகவே ஒரு சிலாக்கியமாக இருக்கிறது. அவர் எங்கும் இல்லாத அளவுக்கு பீனிக்ஸூக்கு வருகிறார் என்று நான் நினைக்கிறேன். எப்படியாயினும், நான் இங்கு இருக்கும் வரை, அவர் தொடர்ந்து வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சகோதரன் பிரான்ஹாம், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுகிறார்.—ஆசி.] நன்றி—உங்களுக்கு நன்றி, சகோதரன் வில்லியம்ஸ். காலை வணக்கம், நண்பர்களே. நான்… ஷகாரியன் குடும்பத்தினர் இதைக் குறித்து, சகோதரன் வில்லியம்ஸ், சகோதரி வில்லியம்ஸ் இன்னும் இங்குள்ள அநேகர் இதைக் குறித்து அறிந்திருக்கிறார்கள். நான் அதை ஒரு தரிசனத்தில் கண்டேன், அவள் சுகவீனமாவதற்கு சுமார் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அது சம்பவித்தது. 2 கடந்த ஆண்டு நாங்கள் இங்கு வந்திருந்தபோது, அது ஜனவரி மாதத்தில் நடந்த தொடர் கூட்டத்திலாய் இருந்தது என்று நான் நினைக்கிறேன், அந்த குருவானவர் இங்கிருந்தார். (அவருடைய பெயர் என்ன? இப்பொழுது அவருடைய பெயரை நான் மறந்துவிட்டேன்.) [யாரோ ஒருவர், “ஸ்டான்லி” என்று கூறுகிறார்.—ஆசி.] ஸ்டான்லி, பேராயர் ஸ்டான்லி, கத்தோலிக்க சபையிலிருந்து வந்தவர். அவர் எனக்கு வேதாகமத்தைக் கொண்டு வந்தபோது, உங்களுக்கு நினைவிருக்கும், நீங்கள் அறிவீர்கள், அவர் என்னிடத்தில்… அது, “என் மகளே, நீ குணமடைந்துவிட்டாய்” என்று அநேக தீர்க்கதரிசனம் உரைத்ததாயிருந்தது. 3 அவள் சுகமடையமாட்டாள் என்று தரிசனம் கூறியிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். “அவள் விடியற்காலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் மரித்துவிடுவாள்.” அது நினைவிருக்கிறதா? [யாரோ ஒருவர், “ஆம்” என்கிறார்.—ஆசி.] எனவே, இரண்டு அல்லது மூன்று மணி.
24 என்னால் டீமாஸிடம் கூற முடியவில்லை. அதே சமயத்தில் நான் இங்கே, அந்த அறையிலிருந்த அவளுடைய மாற்றாந் தாயிடம் கூறினேன். நான், “அவள் சுகமடையப் போவதில்லை” என்றேன். திருமதி ஷகாரியன், “பாருங்கள், எல்லோரும் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்” என்றார். 5 நான், “உண்மையாகவே, நானே தவறாயிருக்கலாம், ஆனால் நான் அதைக் கூறிவிட்டேன். அவள் சுகமடையப் போவதில்லை” என்றேன். 6 நான் அவர்களில் அநேகரிடம், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, “அவள் தன்னுடைய ஜீவனுக்காக ஓடுகிறதை நான் கண்டேன், அவள் ஒரு படுக்கைக்குச் சென்றாள். அவள் தன்னுடைய கரங்களை உயர்த்தி, இந்தவிதமாக என்னிடத்தில் கூச்சலிட்டாள். என்னால்—என்னால் அவளை அணுகக்கூட முடியவில்லை. அப்பொழுது அவள் மரித்ததை நான் கண்டேன். நான் பார்த்தபோது, அங்கே ஏதோ ஒன்று இருந்தது, அங்கே ஒரு கடிகாரம் இருந்தது, அது இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையேயுள்ள ஏதோ ஒன்று என்று அதில் கூறப்பட்டுள்ளது” என்றேன். 7 எனவே பேராயர், “சரி, அது எப்படி நிறைவேறுகிறது என்பதை நான் கவனித்துப் பார்ப்பேன்” என்றார். எனவே, அது நிறைவேறினது.
38 நாம் நிச்சயமாகவே வருந்துகிறோம். சபையானது சகோதரி பிளாரன்ஸ் ஷகாரியன் என்ற ஒரு மகத்தான நபரை இழந்துவிட்டதை நான் உணருகிறேன். ஆனால், அவள் ஒரு மகத்தான பாடகியாக இருந்தாள், அவள் ஒரு ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு ஸ்திரீயாயிருந்தாள். 9 நான் அவளுடைய தாயாரோடு இருந்தேன்; அவளுடைய தாயாரும் மேற்கு கடற்கரையில் எனக்கு முதலில் தொடர்பு கொண்டவர்களில் ஒருவர், அவளுடைய தாய் சுகமடைந்தபோது. மருத்துவர்கள்…அவள் ஒரு மயக்க நிலையில் இருந்தாள், அவள் சரீரம் முழுவதும் வீங்கியிருந்தது. எனவே அங்கிருந்த மருத்துவர் என்னிடம், “இப்பொழுது நீங்கள் மிகவும் அமைதியாயிருந்து ஜெபியுங்கள். அதிக சத்தம் போடாதீர்கள். அந்த ஸ்திரீ மரித்துக் கொண்டிருக்கிறாள்” என்றார். அதற்கு நான், “சரி, ஐயா” என்றேன். 10 அப்பொழுது, அவர் என்னிடம், தொடர்ந்து கூறிக்கொண்டேயிருந்தார். மேலும், பாருங்கள், என்னுடைய வாயைத் திறக்கக் கூட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை.
411 எனவே, சகோதரன் டீமாஸ் என்னை மேலே சென்று அவளைப் பார்க்கும்படி கூறினார். 12 எனவே, நான் மேலே சென்றேன். பிளோரன்ஸ் தரையில் முழங்காற்படியிட்டுக் கொண்டிருந்தாள், அப்பொழுது ஒரு அழகான சிறு பெண், இன்னும் சில பெண்களும் இருந்தனர். மேலும் அவளிடம் சென்று அவளுக்காக ஜெபித்து, அதைக் கூறினேன். அவள் சுயநினைவின்றி இருந்தாள். அவள் மீண்டும் எழுந்திருப்பாள் என்று அவளிடத்தில் கூறினேன். அவள் அவ்வாறு எழுந்தாள். ஓரிரு ஆண்டுகள் கழித்து, அவள் மரித்துப் போனாள். இப்பொழுது தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார். 13 நாம் அதை அறிவோம், நாம் யாவரும் தேவனுடைய சித்தத்தினால் இங்கு வந்திருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம், நாம் அதேவிதமாக கடந்து செல்கிறோம். ஒவ்வொருவராக, நாம் ஒவ்வொருவரும் அந்த நுழைவாயிலைக் கடந்து செல்வோம். அந்தக் காரணத்தினால்தான் நாம் இந்தக் காலையில், இங்கே இந்த கிறிஸ்தவ வர்த்தக புருஷருடைய ஐக்கியத்தில் ஒன்று கூடி, இந்தக் காரியங்களைக் குறித்துப் பேசி, அவைகளுக்காக ஆயத்தம் செய்ய வேண்டியதாயிருக்கிறது, ஏனென்றால் அவை நிச்சயமாக வரும் என்பது நமக்குத் தெரியும்.
514 இப்பொழுது சகோதரி பிளாரன்ஸ் ஒரு வாலிபப் பெண்மணி, நாற்பத்திரண்டு வயதுடையவள், சகோதரன் வில்லியம்ஸ் சற்று இளைஞனாக, என்னிடம் கூறினார். ஆனால் அவர்கள்…அவளுக்கு இந்த வியாதி இருந்தது என்பதை அவள் அறிந்திருந்தாள், ஏன், நான் அவளைக் குறித்த ஒரு தரிசனத்தைக் கண்டேன், அவளுடைய பாதிப்பு என்னிடத்தில் கூறப்பட்டது. அப்பொழுது, அது…தேவன் அதைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், அவள் புறப்படுவதற்கு முன்பு அவள் அறையில் இயேசுவைக் கண்டாள். நாங்கள் அவளுக்காக ஜெபிக்க விரும்பவில்லை, ஏனென்றால் நாங்கள் அதற்கு அதிகமாக ஜெபித்துள்ளோம். சகோதரி ஷகாரியன் போல, நம் அனைவரையும் ஊக்கப்படுத்திய, நம் மத்தியில் இருந்த ஒரு ஜீவியத்திற்காக நாம் தேவனுக்கு நன்றி கூற விரும்புகிறோம். 15 நாம் சகோதரன் டீமாஸ், சகோதரி ரோஸ் அவர்களுக்காக ஜெபிக்க விரும்புகிறோம். நினைவிருக்கட்டும், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடைசியாக, ஒரு மோசமான கட்டத்தைப் பெற்றிருந்தனர்… அவருடைய தகப்பனார், இப்பொழுது அவருடைய சகோதரி அவருடைய…கடந்த வருடங்களுக்குள். [யாரோ ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்—ஆசி.] ஆனால், ஆம்…குறைந்தது, பத்து மாதங்களுக்குள்; மற்றும் சகோதரி—சகோதரி எட்னாவும், கூட.
616 எனவே, சகோதரன் டீமாஸோடு எப்படி அனுதாபம் கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன். எனக்கு ஒரு தகப்பனும், சகோதரனும், மனைவியும், குழந்தையும் ஒரு சில நாட்களிலேயே காலமானார்கள், எனவே இந்தக் காலையில் அவர் எப்படி உணருகிறார் என்பதை நான்—நான் அறிவேன். நீங்கள் அவர்களுடைய நிலைமையில் நிற்கும்போது மாத்திரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள், அப்பொழுதுதான் நீங்கள் எப்படி இரக்கப்பட வேண்டும் என்பதை அறிவீர்கள். மேலும்… 17 [ஒலிப்பெருக்கி அமைப்பு முறையானது சத்தமிடுகிறது—ஆசி.] நானே அதைச் செய்தேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் என்னுடைய கரத்தினால், இங்கே எங்கோ ஒரு சிறு கருவியில் தொட்டுவிட்டேன். எனவே நான்—நான் அது மிகவும் சத்தமிட்டதற்காக வருந்துகிறேன், மேலும் நான் வேண்டுமென்று செய்யவில்லை. 18 எனவே நாம் இப்பொழுது எழும்பி நிற்போமாக…உங்களால் முடிந்தால், அது இருந்தால்…நாம் நம்முடைய தலையை வணங்குவோமாக.
719 பரலோகப் பிதாவே, உம்மை ஆராதிக்க நாங்கள் இங்கே இந்தக் காலையில் கூடி வந்திருக்கிறோம், எங்கள் மீட்பராகிய இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றியையும், துதியையும் செலுத்தி, இந்த ஜீவியம் முடிவுற்றவுடன் எங்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு என்றும், நாங்கள் இங்கே ஜீவிக்கிற எல்லா நேரத்திலும் அது மிகவும் நிச்சயமற்றதாயிருப்பதைக் காண்கிறோம். மேலும், பிதாவே, இந்த சரீரங்கள் அடையக்கூடிய பரிதாபமான நிலைமைகளைக் காணும்போது, நாங்கள் எல்லா நேரத்திலும் இங்கே தரித்திருக்க வேண்டியதில்லை என்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீர் மரணத்தின் பள்ளத்தாக்கினூடாக தப்பித்துக் கொள்ள ஒரு வழியை உண்டுபண்ணியிருக்கிறீர். 20 மேலும், பிதாவே, எங்களோடு நின்ற ஒருவருடைய ஜீவியத்திற்காக, இன்று காலை உமக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஒரு வருடத்திற்கு முன்னர், சகோதரி பிளாரன்ஸ் ஷகாரியன், நாங்கள் அவளை அறிந்திருக்கிறபடி, உம்முடையத் துதிகளைப் பாடினாள். இது சம்பவிக்கப் போகிறது என்று, அநேக ஆண்டுகளுக்கு முன்பே கூட, நீர் எங்களுக்கு சொல்லியிருக்கிறீர், அது எங்களுக்கு அதிக அதிர்ச்சியாக இருக்காது. நீர் கூறுவது உண்மையென்று நாங்கள் அறிவோம். உம்முடைய வார்த்தை, “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என்று கூறுகிறது. கர்த்தாவே, அது உண்மையென்று நாங்களும் கூட அறிவோம். நாங்கள் யாவரும் அந்தப் பள்ளத்தாக்கினூடாக இறங்கி வர வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே இங்கே பூமியின் மேல் இருந்த அவளுடைய ஜீவியத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். விசுவாசத்தினால், இப்பொழுது, இந்தக் காலையில், அவள் இந்த பரிதாபமான தொற்றுநோய் பரவுகிற ஸ்தலத்தைவிட்டு, ஒருபோதும் சுகவீனமாயிருக்க முடியாத ஒரு மகிமையான சரீரத்திற்குள்ளாகச் சென்றிருக்கிறாள் என்று விசுவாசிக்கிறோம். அவளுடைய பாடும் திறமையும், அவளுக்கிருந்த குரலும், அவளுடைய ஆவியும் கிறிஸ்துவோடு கிருபையின் நிறைவாக இருந்ததே! அவள் இந்தக் காலையில் திரும்பி வர முடிந்தாலும், அவள் அதை எந்த வகையிலும் செய்யமாட்டாள்; அவள் மீண்டும் இவை எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டியதாயிருக்கும். இப்பொழுது, அது முடிந்துவிட்டது. அவள் தன்னுடைய தாயோடும், அவளுடைய தந்தையோடும் இருக்கிறாள், அவர்கள் தங்களுடைய குழந்தையை வீட்டிற்கு அழைத்தனர். எனவே, நாங்கள்—நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
821 எங்களுடைய அன்பான சகோதரன், எங்கள் சகோதரன் ஷகாரியன், ஆறுதலுக்காக நாங்களும் கூட ஜெபம் செய்ய விரும்புகிறோம், அவர் வாழ்ந்துள்ள வாழ்க்கையையும், இந்த கடைசி நாட்களில் அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிற வேதனைகளையும், அவர் எப்படியிருக்கிறார் என்பதையும் அறிந்து; அவர் வயோதிகமடைந்து, அவருடைய தலைமுடி கொட்டிப்போய், அவருடைய தோள்பட்டைகள் குனிந்து, அதே சமயத்தில் தேவனுக்காக களத்தில் தரித்திருக்க முயற்சிப்பதைக் காண்கிறோம். தேவனே, இன்றைக்கு அவருக்கு பெலனைத் தாரும். தேவனே, நீர் அதை அருள வேண்டும் என்று, நாங்கள் ஜெபிக்கிறோம். அவளுடைய பிரிவினிமித்தம் அவரை இழந்து வாடும் எல்லோருக்கும், நாங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம். 22 கர்த்தாவே, நாங்கள் இதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கையில், நாங்களும் கூட என்றோ ஒரு நாள் செல்ல வேண்டும் என்பதை, நாங்கள் நினைவில் கொள்வோமாக. நாங்கள் இங்கே கர்த்தராகிய இயேசுவின் பிரசன்னத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டிருக்கையில், நீர் இதை எங்களுடைய ஞாபகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அது இருந்தபடியே, நாங்கள் சோதித்துப் பார்ப்போமாக, அல்லது நாங்கள் இரத்தத்தின் கீழும் விசுவாசத்திலும் இருக்கிறோமா என்று, கர்த்தாவே, எங்களுடைய சொந்த ஜீவியங்களின் பட்டியலிட்டுப் பார்ப்போமாக. அதை அருளும்.
923 இப்பொழுது இந்த சூழ்நிலையில் நான் ஜனங்களுக்கு ஒரு சிறு செய்தியைக் கொண்டு வர முயற்சிக்கையில், இன்றைக்கு, கர்த்தாவே, நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். என்னை பெலப்படுத்தும், ஏனென்றால் கர்த்தாவே, எனக்கு—எனக்கு—எனக்கு அது தேவை. நீர் அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உம்மை கனப்படுத்தும்படியான ஏதோ ஒன்று கூறப்படுவதாக. இந்தக் காலையில் எங்களுடைய சத்தத்தைக் கேட்கிற எவரேனும், அவர்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள வேளையை சந்திக்க ஆயத்தமாயிராமலிருந்தால், “நானே வழியும், ஜீவனும், சத்தியமுமாயிருக்கிறேன்” என்று கூறின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அவர்கள் ஒப்புவிக்கும் நேரமாய் இது இருப்பதாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். (நீங்கள் அமரலாம்.)
1024 [மேடையின் மேல் உள்ள ஒருவர் சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்—ஆசி.] இங்குள்ள சகோதரன் எல்லோருக்கும் சரியாக கேட்கிறதா என்பதை அறிய விரும்புகிறார். அவர் இரண்டு ஒலிபெருக்கிகளை வைத்துள்ளார். அது சரிதானே? உங்களால் கேட்க முடிகிறதா? உங்களால் முடிந்தால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். உங்களால் கேட்க முடிகிறதா? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சரி. 25 இந்தக் காலையில் எல்லோருக்கும் உட்கார இடம் நம்மிடம் இல்லாததைக் குறித்து நான் வருந்துகிறேன். நான் இங்கே நீண்ட நேரம் தரித்திருக்கமாட்டேன் என்று நாங்கள் நம்புகிறோம், ஒரு வேளை வார்த்தையின் வாசிப்பை எங்களுக்குக் கொண்டு வருவதற்கு போதுமானது என்றும்; தேவனாகிய கர்த்தர் வாசிக்கப்படுகிற தம்முடைய வார்த்தையை கனப்படுத்துவார் என்றும், அவருடைய கிருபையை நமக்கு அளிப்பார் என்றும், நாங்கள் அவரை அதன் மூலம் சேவிக்கும்படிக்கு அருளும்.
1126 இப்பொழுது இந்தக் காலையில் பில்லி பால் என்னிடம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை டூசானில், உள்ள கிராண்ட்வே அசெம்பிளி ஆஃப் காட் என்ற இடத்தில் நாம் பேசக் கூடும் என்று கூறினான். டூசானிலிருந்து இங்கு யாராவது வந்திருப்பார்களானால், இந்த வாரம் உங்களை நான் காண முடியாமல் போகலாம். நான் அடுத்த ஞாயிறு, கிராண்ட்வே அசெம்பிளி ஆஃப் காட் என்ற இடத்தில் இருப்பேன். 27 எனவே இப்பொழுது நாம் கிழக்கிலிருந்து திரும்பி வருகிறோம், மலைகளில் இருந்த ஜனங்களின் அளவுக்கதிகமான தயவோடு, அளவுக்கதிகமாக புசித்ததினால், என் உடல் நிலை ஒருவிதமாக சற்று பெலவீனமடைந்துள்ளது. மேலும்—மேலும் நான் சுகவீனமடைந்தேன், எனவே இந்த வாரம் நான் நலமாக உணரவில்லை. எனவே, நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். மேலும்…
1228 [யாரோ ஒருவர், “அதிகமாக ஆப்ஸம் புசித்திருக்கிறீர்கள்” என்கிறார்.—ஆசி.] நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? [“அதிகமாக ஆப்ஸம் புசித்திருக்கிறீர்கள்.”] சகோதரன் கார்ல் வில்லியம்ஸ் தன்னுடைய நகைச்சுவை உணர்வுடையவர், இப்பொழுது நமக்கு இது தேவை என்று நான் நினைக்கிறேன், அவர், “அதிக ஆப்ஸம் புசித்தேன்” என்றார். எனக்கு அதைக் குறித்துத் தெரியாது, சகோதரன் கார்ல், ஆனால் ஏராளமான அணில்களைப் புசித்தேன். 29 ஆகையால் நீங்கள் இந்தக் காலையில் யாரோ ஒருவருக்காக ஜெபிக்க வேண்டும், ஏன், இது எனக்கான உங்களுடைய ஜெபமாக இருக்குமானால், நான்—நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன், ஏனென்றால் எனக்கு—எனக்கு அது தேவைப்படுகிறது. இப்பொழுது நாம் வார்த்தைக்குள் துரிதமாக செல்ல விரும்புகிறோம்.
1330 நான் உங்களை நீண்ட நேரம் இங்கே வைத்திருக்க விரும்பவில்லை, ஏனென்றால் இந்தக் காலையில் நாடு முழுவதிலும் ஒரு தொலைபேசி இணைப்பு உள்ளது என்று நான் நினைக்கிறேன், அது மேற்குக் கரையிலிருந்து கிழக்குக் கடற்கரை வரையிலும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் செல்கிறது. அநேக, அநேக சபைகள் இந்த கூடாரத்திலிருந்து இங்கே தங்கும் வசதியைப் பெற்றுள்ளீர்கள். அது பீனிக்ஸிலும் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது எல்லா இடங்களிலும் ஆராதனைகள் உள்ளன, அது சரியாக வருகிறது… அவர்கள் சபைகளிலும், வீடுகளிலும், அதைப் போன்ற காரியங்களிலும் ஒரு மிக அருமையான அலை வரிசையின் மூலமாக ஒன்று கூடுகின்றனர். இது ஒரு ஒலிபரப்பைக் காட்டிலும் மேலானது என்று அவர்கள் கூறுகிறார்கள். அது தொலைபேசி இணைப்பு, அவர்கள் ஒரு தொலைபேசியை அல்லது ஒலிப்பெருக்கியை, அல்லது வேறு என்னவாயிருந்தாலும், அந்த அறையில் பொருத்துகின்றனர். மேலும் அவர்கள்… சென்ற வாரம் இந்தியானாவிலிருந்து டூசானுக்கு வந்து கொண்டிருந்தபோது, அது அந்த அறையில் நிற்பது போன்றே இருந்தது என்று, என் மனைவி கூறினாள். எனவே இந்தக் காலையில் வரிசையில் வெளியே உள்ள அனைவரையும், அவர்கள் எங்கிருந்தாலும் தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இப்பொழுது நியூயார்க்கில் அது பிற்பகலாய் இருக்கும், அது தேசத்தைக் கடக்கும் போது வித்தியாசமான நேரங்களாய் இருக்கும்.
1431 இப்பொழுது ரோமர் புத்தகத்தில், 12-ம் அதிகாரம், 1-ம் மற்றும் 2-ம் வசனங்களில், நாம் இந்த வேதவாக்கியத்தை வாசிக்க விரும்புகிறோம். அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பரிபூரண… பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் . 32 இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், மறுரூபப்படுத்த தேவனுடைய வல்லமை என்பதன் பேரில் என்னுடையப் பாடப் பொருளாக இக்காலையில் எடுக்க விரும்புகிறேன். அதாவது நீங்கள் இவ்வுலகிற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம், இப்பொழுது, அது நல்லது, பரிபூரணமானது, ஏற்றுக்கொள்ளக் கூடிய தேவனுடைய சித்தமாயுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் .
1533 இது உங்களுடைய காலத்தில் உங்களுடைய போதகர்கள் அநேகர் உபயோகப்படுத்தி வந்துள்ள ஒரு பழைய பழக்கமான பாடப்பொருளாகும். அது எழுதப்பட்டது முதற்கொண்டே அது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையைக் குறித்த ஒரு காரியம், அது ஒருபோதும் பழையதாவதில்லை, ஏனென்றால் அது தேவனாயிருக்கிறது. அது ஒருபோதும் பழையதாகிவிடாது. ஏறக்குறைய கிட்டத்தட்ட, இரண்டாயிரத்து எண்ணூறு வருடங்களாக, அல்லது அதைவிட மேலான ஆண்டுகளாக, ஒவ்வொரு தலைமுறையினூடாகவும், இந்த தேவனுடைய வார்த்தை மனுஷர்களாலும், ஆசாரியர்களாலும், இன்னும் மற்றவர்களாலும் வாசிக்கப்பட்டிருக்கிறது, அது ஒருபோதும் பழையதாகிவிடுகிறதில்லை. சுமார் முப்பத்தைந்து வருடங்களாக, நானே அதை வாசித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அதை வாசிக்கும்போது, நான் முதன்முறை காணத் தவறின புதிய ஏதோ ஒன்றை நான் கண்டறிகிறேன். ஏனெனில், அது ஆவியில் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளது, அது எழுத்து வடிவில் உள்ள தேவன். பாருங்கள், அது தேவனுடைய தன்மைகளைப் பேசுவதாகும், அது காகிதத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1634 அநேக சமயங்களில், மனிதன், “பாருங்கள், இப்பொழுது, மனிதன் இந்த வேதாகமத்தை எழுதினான்” என்றான். இல்லை. தேவன் தாமே, வேதாகமத்தை எழுதினார் என்று, வேதம் கூறுகிறது. அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. 35 அது ஒருபோதும் தவறிப்போக முடியாது. இயேசு, “வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” என்றார். அது தேவனாயிருப்பதால், தவறிப்போக முடியாது, ஏனென்றால் அது அவருடைய பாகமாயிருக்கிறது. 36 அப்பொழுது நீங்கள் அவருடைய குமாரனாகவும், குமாரத்தியாகவும் இருப்பதால், நீங்கள் அதன் ஒரு பாகமாக இருக்கிறீர்கள், அது உங்களை அவருடைய ஒரு பாகமாக்குகிறது. ஆகையால் நாம் தேவனுடைய வார்த்தையின் பேரில் ஐக்கியங்கொள்ளும்படிக்கு வருகிறோம்.
1737 இப்பொழுது மறுரூபமடைதல் என்ற இந்த வார்த்தையை, நான் நேற்று, அகராதியில் பார்த்தேன். எப்போது, நான் இங்கே இருக்க வேண்டிய நேரத்தை கிட்டத்தட்ட மறந்துவிட்டேன், நான் ஒரு பாடப் பொருளைத் தேடிக்கொண்டிருந்தபோது, நான் இந்த வார்த்தையைக் கண்டேன், இல்லை, சரியாகக் கூறினால், இந்த வேதவாக்கியத்தைக் கண்டேன். அகராதியில் அது “மாற்றப்பட்ட ஏதோ ஒன்று” என்று கூறுகிறது. அது “மாற்றப்பட வேண்டும்.” மறுரூபமாக்கப்படுதல் , “அது இருந்ததைப் பார்க்கிலும் வித்தியாசமாக்கப்பட்டு, அது…அதனுடைய குணாதிசயமும், அதில் உள்ள ஒவ்வொரு காரியமும் மாற்றப்பட்டுள்ளது.” மறுரூபமாக்கப்படுவதற்கு.
1838 நான் இந்தக் காலையில், ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில் சிந்தித்துப் பார்க்கிறேன். இந்த உலகம் ரூபமற்றதாயிருந்தது, அது வெறுமையாயிருந்தது, பூமியின் மேல் அந்தகாரம் இருந்தது; ஒரு முழுமையான குழப்பத்தை தவிர வேறொன்றுமில்லை. இந்த உலகம் அந்த நிலையில் இருந்தபோது, தேவனுடைய ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடினபோது, முழு காட்சியும் மாற்றப்பட்டது; ஒரு முழுமையான குழப்பத்திலிருந்து, ஒரு ஏதேன் தோட்டத்திற்கு. அது ஒன்றுமில்லாத ஒன்றை எடுத்து, அதிலிருந்து அற்புதமான ஒன்றை உண்டாக்கக் கூடிய தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமையாகும். தேவனுடைய மறுரூபப்படுத்தும் வல்லமை!
1939 வேத வாக்கியங்களை வாசிப்பதன் மூலம், நாம் அதை புரிந்துகொள்கிறோம், தேவன் ஆறா—ஆறாயிரம் வருடங்களாக இந்த ஏதேனுக்கான ஆயத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார். இப்பொழுது, அவர் ஒருக்கால் அவ்வளவு நீண்ட காலம் எடுக்காமல் இருந்திருக்கலாம்; ஆனால் வெறுமனே ஊகித்து, “தேவனோடு ஒரு நாள், பூமியின் மேல் ஆயிரம் ஆண்டுகள்” என்று கூறப்பட்டுள்ள வேத வாக்கியங்களிலிருந்து எடுத்து, அதாவது, தேவன் காலத்தை கணக்கிட வேண்டுமென்றால். அவர் ஆறாயிரம் ஆண்டுகளாக பூமியை உண்டாக்கினபோது, அவர் பூமியின் மேல் எல்லா நல்ல விதைகளையும் விதைத்திருந்தார். அங்கே எல்லாமே பரிபூரணமாயிருந்தது. 40 நான் நினைக்கிறேன், அநேக சமயங்களில், விமர்சகர்கள் கூட ஆதியாகமப் புத்தகத்தை வாசிக்கத் துவங்கும்போது, அவர்கள் அதை குறை கூறத் துவங்குகின்றனர், ஏனென்றால் அது தொடர்ந்து தன்னையே திரும்பத் திரும்பக் கூறுவது போன்று அல்லது உங்களை அங்கும் இங்கும் தூக்கி எறிவது போன்று தென்படுகிறது. 41 ஆனால் மோசே தரிசனத்தைக் கண்டான் என்பதை, நாம் நம்முடைய பாடப் பொருளுக்குள் நுழைவதற்கு முன்பு, நாம் சற்று கவனிப்போமானால் நலமாயிருக்கும். தேவன் அவனிடத்தில் பேசினார். தேவன் மோசேயினிடத்தில் முகமுகமாய், உதட்டிலிருந்து செவிகேட்கப் பேசினார். இப்பொழுது, அவர் மோசேயினிடத்தில் பேசினது போல, அவர் அதைப் போன்று வேறு எந்த மனிதனிடமும் ஒருபோதும் பேசவேயில்லை. இப்பொழுது, மோசே ஒரு மகத்தான தீர்க்கதரிசி, எல்லா தீர்க்கதரிசிகளிலும் மகத்தான ஒருவன். அவன் கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாயிருந்தான். இப்பொழுது தேவனால் பேச முடியும், அவருக்கு ஒரு சத்தம் உள்ளது. அது கேட்கப்படுகிறது. தேவனால் பேச முடியும்.
2042 தேவனால் எழுத முடியும். தேவன் தம்முடைய சொந்த விரலினால் பத்து கற்பனைகளை எழுதினார். அவர் தம்முடைய விரலினால் ஒருமுறை பாபிலோனின் சுவர்களில் எழுதினார். அவர் குனிந்து ஒரு சமயம் மணலில், தம்முடைய விரலினால் எழுதினார். தேவனால் பேச முடியும். தேவனால் வாசிக்க முடியும். தேவனால் எழுத முடியும். 43 தேவன் எல்லா கிருபையின் ஊற்றாகவும், வல்லமையின் ஊற்றாகவும், எல்லா தெய்வீக ஞானத்தின் ஊற்றாகவும், தேவனில் இருக்கிறார். ஆகையால், அதை அறிந்திருக்கிறபடியால், அவர் மாத்திரமே அங்கே சிருஷ்டிகர் ஆவார். தேவனைத் தவிர வேறு சிருஷ்டிகர் இல்லை. சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது, அவன் சிருஷ்டிக்கப்பட்டதை தாறுமாறாக்குகிறான். ஆனால் தேவன் மாத்திரமே சிருஷ்டிகர். 44 ஆகையால், அவர் தம்முடைய வார்த்தையினால் சிருஷ்டித்தார். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பினார். எனவே அவர் பூமியின் மேல் விதைத்திருந்த எல்லா விதைகளையும், அவர் அந்த விதைகளை தம்முடைய சொந்த வார்த்தையினால் உண்டாக்கினார், ஏனென்றால் அந்த வித்தை உண்டாக்க வேறெதுவும் இல்லை. அவர் அவைகளை வைத்தார், அவைகள் தண்ணீருக்கு அடியில் இருந்தன. அவர், “ இது உண்டாகக்கடவது, அது உண்டாகக்கடவது” என்றார்.
2145 இப்பொழுது நாம் அதைக் கண்டறிகிறோம், அநேக சமயங்களில், அது கூறாத ஒன்றை வேதாகமம் திரும்ப திரும்ப கூறுவது அல்லது கூறுவது போன்று காணப்படுகிறது. உதாரணமாக, ஆதியாகமம் 1-ல், “தேவன் தம்முடைய சொந்த சாயலில் மனிதனை சிருஷ்டித்தார், தேவனுடைய சாயலில் அவனை சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை அவர் சிருஷ்டித்தார்.” அதன்பின்னர் அவர் தொடர்ந்து செல்கிறார், பூமியில் அநேக காரியங்கள் சம்பவித்தன. 46 அப்பொழுது நிலத்தைப் பண்படுத்த மனிதனே இல்லை என்பதை நாம் கண்டறிந்தோம். “தேவன் மனிதனை பூமியின் மண்ணிலிருந்து சிருஷ்டித்தார்.” அது ஒரு வித்தியாசமான மனிதனாயிருந்தது. “ஜீவ ஆவியை அவனுக்குள் ஊதினார். அவன் ஜீவனுள்ள ஆத்துமாவானான்.”
2247 முதல் மனிதன் ஆவியாகிய, தேவனுடைய சாயலில் இருந்தான். யோவான் 4, “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” என்று கூறுகிறது. ஆனால் தேவனோ ஆவியாயிருக்கிறார். அவர் சிருஷ்டித்த, முதல் மனிதன், ஆவி-மனிதனாயிருந்தான், அவன் தேவனுடைய சாயலிலும் அந்த ரூபத்திலும் இருந்தான். 48 அதன்பின்னர் அவர் இந்த மனிதனை மாம்சத்தில் வைத்தார், மனிதன் விழுந்துபோனான். எனவே அப்பொழுது தேவன் அந்த விழுந்துபோன மனிதனை மீட்கும்படியாக, இறங்கி வந்து மனிதனின் சாயலானார். என்னுடைய—என்னுடைய கருத்தின்படி, அதுவே உண்மையான சுவிசேஷ கதையாகும்.
2349 இப்பொழுது, தேவன், ஆறாயிரம் ஆண்டுகளில், இந்த அற்புதமான எல்லா விதைகளையும் நட்டிருந்தார், அல்லது அவர் தம்முடைய வார்த்தையை உரைத்திருந்தார். “அது இந்த விதமாக இருக்கும். இந்த மரம் இருக்கும். இது அவ்வாறு இருக்கும்.” எல்லாமே பரிபூரணமாயிருந்தது. அது நன்றாக இருந்தது. அந்த வித்துக்கள் ஒவ்வொன்றுக்கும் அவர் கட்டளையிட்டார். அவைகளுக்குள் உரைக்கப்பட்டிருந்த தேவனுடைய வார்த்தை எந்தவிதமான ஜீவியமாக இருக்க வேண்டும் என்று தாவரத்திற்குள்ளாக அவைகள் தங்களை மறுரூபப்படுத்திக் கொள்ளும். அது ஒரு கருவேல மரமாயிருந்தால், அது ஒரு கருவேல மரத்தை தோற்றுவிக்க வேண்டும். அது ஒரு பனையாயிருந்தால், அது ஒரு பனையை முளைப்பிப்பதாக இருந்தது. 50 ஏனென்றால், மகத்தான சிருஷ்டிகர் தம்முடைய வார்த்தையை அனுப்பியிருந்தார், உண்மையான வித்து உருவாகுவதற்கு முன்பே வார்த்தையான வித்து அங்கிருந்தது. வார்த்தையே வித்தை உண்டாக்கியது. பாருங்கள், “அவர் காணப்படாத காரியங்களிலிருந்து உலகத்தை உண்டாக்கினார்.” பாருங்கள், அவர்—அவர் தம்முடைய வார்த்தையினால் உலகத்தை உண்டாக்கினார். தேவன் ஒவ்வொரு காரியத்தையும் பேசி தோன்றச் செய்தார்.
2451 தேவனாக, சிருஷ்டிகராக, சகலத்தையும் பேசி தோன்றச் செய்தபடியால், அது ஒரு பரிபூரண உலகமாக இருந்திருக்க வேண்டும். அது ஒரு—ஒரு அழகான இடமாக இருந்தது. அது இங்கே பூமியின் மேல் ஒரு—ஒரு உண்மையான அசலான பரதீசாயிருந்தது. 52 இப்பொழுது, ஒவ்வொரு இடத்திற்கும் எங்காவது ஒரு தலைமை அலுவலகம் இருக்க வேண்டும். இந்த தொடர் கூட்டத்திற்கு ஒரு தலைமை அலுவலகம் உள்ளது, இந்த வர்த்தக குழுவிற்கு ஒரு தலைமை அலுவலகம் உள்ளது, ஒரு சபைக்கு ஒரு தலைமை அலுவலகம் உள்ளது. தேவனுக்கு ஒரு தலைமை அலுவலகம் உண்டு. எனவே இந்த மகத்தான இடத்தில், நாம் வாழும் தேசத்திற்கு, அதற்கு ஒரு தலைமை அலுவலகம் உள்ளது. எனவே இந்த மகத்தான ஏதேனுக்கு ஒரு தலைமை அலுவலகம் இருந்தது, அதனுடைய தலைமை அலுவலகம் ஏதேன் தோட்டத்தில், இல்லை கிழக்கே ஏதேன் தோட்டத்தில் இருந்தது. 53 தேவன் இங்கே பூமியிலுள்ள தம்முடைய மகத்தான சிருஷ்டி யாவற்றையும், தம்முடைய குமாரனையும், அவருடைய குமாரனின் மணவாட்டியையும், ஆதாமும் ஏவாளும் ஆளுகை செய்ய, அதன் மேல் வைத்துள்ளார்.
2554 தேவன் ஆதாமின் பிதாவாயிருந்தார். வேத வாக்கியங்களின்படி, “ஆதாம் ஒரு…தேவனுடைய குமாரனாயிருந்தான்.” அவன் தேவனுடைய குமாரனாயிருந்தான். 55 தேவன் அவனுடைய சரீரத்திலிருந்து, ஒரு துணையை உண்டாக்கினார்; ஒருக்கால் அவனுடைய இருதயத்தின் மேலிருந்த ஒரு விலா எலும்பைக் கொண்டு உண்டாக்கியிருக்கலாம், எனவே அவள் அவனோடு நெருக்கமாக இருக்க, அவனுக்கு ஒரு துணையை ஏற்படுத்தினார். அப்பொழுது அவன் இன்னும் மனிதனாய் இல்லாததுபோல, இவள் முழுமையாக அவனுடைய மனைவியாயிருக்கவில்லை; அவர் அதை சற்று முன்புதான் உரைத்திருந்தார். அங்கேதான் தொல்லை வந்தது, ஆதாம் வருவதற்கு முன்பே சாத்தான் அவளைக் கண்டுபிடித்தான். எனவே, அது அவர் உரைத்திருந்த அவருடைய வார்த்தையாயிருந்தது.
2656 நான் அதைக் கூறுகிறேன், நான் அதில் அதிக நேரம் செலவிட விரும்பவில்லை. ஆனால் உங்களில் சிலர் சற்று குழப்பமடையலாம், குறிப்பாக தெற்கில் உள்ள ஜனங்களில் சிலர், இன்றைக்கு தேவனிடத்திலிருந்து ஜனங்களுக்கு, நான் கொண்டுள்ள செய்தியின் பேரில், இது ஒரு சிறு குழப்பத்தைக் கண்டறிவது போல் தோன்றுகிறது அது சர்ப்பத்தின் வித்தைக் குறித்தேயாகும். கர்த்தருக்குச் சித்தமானால், இந்நாட்களில் ஒன்றில், நான் ஜெபர்ஸன்வில் வீட்டிற்குச் செல்லப் போகிறேன். நான் கிட்டத்தட்ட ஆறு மணி நேர செய்தியை அளிக்க விரும்புகிறேன், அதையெல்லாம் சரிப்படுத்த, பாருங்கள், எனவே நாம் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாக அது அப்படியே அந்த வடிவில் இருக்கும். அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் உள்ளது. நம்முடைய சகோதரி பிளாரன்ஸ் செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டது எவ்வளவு உண்மையோ, இது அவ்வளவு உண்மையாயிருக்கிறது. பாருங்கள், அது சத்தியமாயிருக்கிறது. இப்பொழுது, நாம்…ஒருவேளை அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.
2757 யாராவது முரண்பாடான ஒன்றை, என்னிடம் கூறினால், நானே, அதைத் தவறாகப் புரிந்து கொள்வேன். எவரும் கூறுவதை நான் குறை கூற விரும்பவில்லை. நாம் ஒருவரையொருவர் குறை கூறக் கூடாது. நான் அதைச் செய்ததற்காக குற்றமுள்ளவன் அல்ல; நான் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். நான் பாவத்தையும் அவிசுவாசத்தையும் குறைகூறியிருக்கிறேன்; ஆனால் தனிப்பட்ட நபரையல்ல, பாருங்கள், நான்—நான் அதை செய்யவில்லை. நாங்கள்—நாங்கள் சகோதர சகோதரிகளாக, முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், நேற்று காலை சகோதரி பிளாரன்ஸ் அடைந்த நிலைக்கு நாம் வந்து கொண்டிருக்கிறோம், பாருங்கள். அவள்…நாம்—நாம் யாவரும் அந்த வழியாக செல்ல வேண்டும். உங்களுடன் இணங்காத ஒரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ குறை கூற முயற்சிப்பது என்னுடைய நோக்கமல்ல. இல்லை, அதைச் செய்வது எனக்கு தூரமாக இருப்பதாக! நான் எப்போதாவது யாருடைய பெயரையும் குறிப்பிட்ட ஒரு ஒலிநாடாவை நீங்கள் கண்டறியமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். எது, அந்த நபர் தவறாயிருந்தார் என்பதை நான் அநேக சமயங்களில் உணர்ந்திருக்கிறேன், ஆனால் அது அவர்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ளதாயுள்ளது. ஆனால் என்ன தவறு, பாவத்தின் வழியில் மற்றும்… தவறான புரிந்துகொள்ளுதல் சில சமயங்களில் பாவம் கூட அல்ல, அது ஜனங்களின் தவறான புரிந்துகொள்ளுதலாய் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய புரிந்துகொள்ளுதலை வெளிப்படுத்த உரிமை உண்டு என்று நான்—நான் நினைக்கிறேன்.
2858 இப்பொழுது இந்த மகத்தான சிருஷ்டிகர் தம்முடைய சிருஷ்டிக்கப்பட்ட குமாரனை வைத்திருக்கிறார். இப்பொழுது, ஆதாம் அவருடைய முதல் சிருஷ்டிக்கப்பட்ட குமாரனாயிருந்தான். இயேசு அவருடைய ஒரே பேறான குமாரனாயிருந்தார், பாருங்கள், அவர் ஒரு ஸ்திரீயினாலே பிறப்பிக்கப்பட்டார். ஆனால் ஆதாம் சிருஷ்டிப்பில், தேவனுடைய கரத்திலிருந்து நேராக உண்டானவனாயிருந்ந்தான். 59 இப்பொழுது தலைமை அலுவலகம், அவருடைய—அவருடைய குமாரனும், அவருடைய குமாரனுடைய மணவாட்டியும் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பதால், அது மிகவும் பரிபூரணமாக காணப்பட்டது. அவருடைய சொந்த குமாரனும், மணவாட்டியும் அதற்கெல்லாம் தலைவனாக ஒரு—ஒரு மனிதன் இருந்தார். 60 ஒவ்வொரு விதையும், பேரீச்சமரங்களும், கருவேல மரங்களும், புற்களும், பறவைகளும், மிருகங்களும் பரிபூரணமாயிருந்தன. ஒவ்வொரு காரியமும் தேவனுடைய கட்டளையோடு பரிபூரண ஒழுங்கில் இருந்தது, “உங்களுடைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொரு விதையும், அதன் வகையை பிறப்பிக்கும்! கர்வாலியே, நீ ஒருபோதும் தாறுமாறாக்கப்பட்ட ஒரு தாழை மரமாகிவிடாதே.” பார்த்தீர்களா? “பனையே, நீ வேறு ஏதோ காரியத்திற்கு தாறுமாறாக்கப்படாதே. ஆனால் ஒவ்வொரு வித்தும் அந்தந்த இனத்தின்படியே!” அவர்—அவர் அதை காலங்களினூடாக கவனித்து வந்தார்.
2961 அவர் வார்த்தையை உரைத்திருந்தார். அவருடைய மகத்தான சிருஷ்டிப்பின் வல்லமை மேலே வந்த இந்த காரியங்களை உருவாக்கியது, மனிதனும், ஸ்திரீயும் கூட. அவர்கள் தலையாயிருந்தனர், ஏனென்றால் அவர்கள்…அவர்கள் மற்ற எல்லா இனத்தாரைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருந்தனர். மரங்களையும், மிருகங்களையும், தம்முடைய வார்த்தையை வைத்த அதேக் காரியத்தின் கீழ் அவர் அவர்களையும் ஒரு பொறுப்பின் கீழ் வைத்தார். அவர்கள் ஒருபோதும், எந்த வகையிலும், அந்த வார்த்தையை மீறக் கூடாது. அவர்கள் அங்கே தரித்திருக்க வேண்டும். “அதிலிருந்து எந்தக் காரியத்தையும் ஒருபோதும் எடுத்துப்போடாதீர்கள், அல்லது அதனோடு எதையும் கூட்டாதீர்கள்! நீங்கள் இந்த வார்த்தையினால் ஜீவிக்க வேண்டும்.” 62 அந்தவிதமாக அந்த சிருஷ்டிப்பு இருந்திருக்கும் வரை, சகோதரி ஷகாரியன் இந்தக் காலையில் சென்றிருக்க வேண்டியிருக்காது, அது அந்த விதமாக நீடித்திருக்கும் வரை, தேவனுடைய மகத்தான திட்டம்! அதற்குத்தான் நாம் திரும்பிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நாம் விசுவாசிக்கிறோம். நாம் அந்த இடத்திற்கு, அந்த இடத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கிறோம். 63 அங்கே அந்த ஏழாம் நாள் காலையில், தேவன் அவை எல்லாவற்றையும் நோக்கிப் பார்த்தபோது, அவர், “இது நல்லதுதான். நான்—நான் அதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆம், நான் அதை செய்ததற்காக நான்—நான்—நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது இவையனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நான் என் குமாரனின் மேலும், அவனுடைய மனைவியின் மேலும் நம்பிக்கை வைத்துள்ளேன், அதாவது—அவர்கள் (அவர்களை எல்லாவற்றிற்கும் தலைமையாயிருப்பார்கள்), அவைகள் யாவற்றையும் கவனித்து, அது சரியாயிருக்கிறதா என்றும், ஒவ்வொரு காரியமும் அந்தவிதமானவைகளைக் கொண்டு வரும் என்றும் காண்பார்கள். இப்பொழுது அதைச் செய்ய அவன் வல்லமையைப் பெற்றிருக்கிறான்” என்றேன். அப்பொழுது தேவன், “பாருங்கள், இவை யாவும் மிகவும் நல்லதாயிருந்தால், அது வேறெந்த காரியமாயும் இருக்க முடியாது, ஏனென்றால் அது என்னுடைய சொந்த வாஞ்சையாயுள்ளது. அது நான் விரும்புகிற விதமாகவே உள்ளது. நான் அதை அந்தவிதமாக பேசியிருக்கிறேன், நான் அதை விரும்பினவிதமாகவே என்னுடைய வார்த்தைகள் அதை அப்படியே கொண்டு வந்துள்ளன. அது இங்குள்ளது. எல்லாம் நன்றாக இருக்கிறது!” என்றார். எனவே வேதம், “தேவன் தம்முடைய எல்லா கிரியைகளையும் முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்” என்று கூறியுள்ளது.
3064 ஒவ்வொரு காரியமும் அந்தவிதமானவைகளைக் கொண்டு வர, கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பொழுது, “கொண்டு வர” என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் பூமியில் விதையை வைத்தபோது, அந்த விதை அதற்குள் ஜீவனின் வல்லமையோடு தோன்றி, அது ஒரு விதையிலிருந்து ஒரு செடியாக அல்லது அது என்னவாயிருந்ததோ அதை மறுரூபமாக்குகிறது. அவருடைய மறுரூபப்படுத்தும் வல்லமை! இப்பொழுது, தேவன் அங்கே விதையை வைத்தார், அது என்னவாக இருக்கும் என்று அவர் கூறினாரோ அது அவ்வாறே இருக்கும் என்ற சாத்தியக்கூறுகளுடன் இருந்தது. அது அதனுடைய சரியான முறையில் தரித்திருக்கும் வரை, அது தேவன் கூறினவிதமாகவே அது இருக்கும். அது அந்தவிதமாக இருக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவர் அதை அந்தவிதமாக உண்டாக்கி, ஒரு வழியை உண்டாக்கியிருந்தார். அதாவது, அவருடைய பாதையில், அவருடைய வார்த்தையின் வரிசையில் தரித்திருக்கிற எந்தக் காரியமும், அது கிரியை செய்யும் என்று அவருடைய வார்த்தை கூறினது போன்றே சரியாக அது பிறப்பிக்க வேண்டும். அது அங்கிருந்து நகர முடியாது. அது சரியாக வழித்தடத்தில் உள்ளது. எனவே, தம்முடைய சொந்த குமாரன் பேரில் உள்ள நம்பிக்கையில் உள்ள ஒவ்வொரு காரியத்தையும் கொண்டு, அது அந்தவிதமாக இருக்கும், அப்பொழுது தேவன், “இதெல்லாம் நன்றாக இருக்கிறது. எனவே நான் இளைப்பாறுவேன். அந்த வித்துக்கள் ஒவ்வொன்றும் நான் இருக்க வாஞ்சிக்கும் ஒரு இனமாக தன்னை மறுரூபப்படுத்திக்கொள்ள தன்னில் வல்லமையை உடையதாயிருக்கிறது. அந்தவிதமாகத்தான் அது இருக்க வேண்டும், ஏனென்றால் நான் ஒவ்வொரு விதைக்கும் மறுரூபப்படுத்தும் வல்லமையை கொடுத்திருக்கிறேன், அதனுடைய ஆற்றல்களில் இப்பொழுது நான் என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேனோ, அதேவிதமாகவே அது தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும்” என்றார். 65 தேவன் ஒருபோதும் மாறவேயில்லை. அவர் அன்று இருந்தது போலவே இன்றைக்கும் அதேவிதமாகவே இருக்கிறாரே! தேவன் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய தீர்மானமாயிருக்கிறார். அவர் அதைச் செய்வார். ஒன்றுமே அவரைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. அவர் அதைச் செய்வார்!
3166 இப்பொழுது எல்லாம் மிகவும் நன்றாகவும், ஒழுங்காகவும் அமைந்த பிறகு, இவையாவும் சரியாக இருக்கும் என்று தேவன் இப்பொழுது உறுதியாக உணர்ந்தார், அதன்பின்னர், அவர் அதைச் செய்தபோது, அதன்பின்னர் சத்துரு உள்ளே வந்தான். நான்…தேவன் மறுரூபமாகும்படிக்கு வல்லமையை அளித்தார். நான் இந்த நபரை மீண்டும் சிருஷ்டிக்கக் கூடாத, வல்லமையோடுள்ளவன் என்று அழைக்கப்போகிறேன், ஆனால் நான்… அவன் உருகுலைக்க வல்லமையை உடையவனாயிருந்தான், மறுரூபமாக்குவதற்கு அல்ல; ஆனால் உருக்குலைக்க வேண்டும். இப்பொழுது, உருகுலைக்கப்பட்ட எந்தக் காரியமும் அதனுடைய மூல நிலையில் இருந்து எடுக்கப்பட்டால், அதனோடு ஏதோக் காரியம் தவறாய் போய்விடுகிறது. 67 சில ஆண்டுகளுக்கு முன்னர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சோள வயல்களின் வழியாக அப்பொழுது நான் நினைத்தேன், அங்கே ஒரு மரக்கட்டை பறந்து, ஒரு தானியத்தின் தண்டின் மேல் விழுந்தது. அந்த தண்டு அது நிமிர்ந்து நிற்பது போன்றே இருக்க தன்னால் இயன்றவரை முயன்று கொண்டிருந்தது, ஆனால் ஏதோ ஒன்று சம்பவித்திருந்த காரணத்தால் அது உருகுலைக்கப்பட்டிருந்தது. அதன் மேல் அந்த தடி இருந்தது.
3268 அதன்பின்னர் நாம் வயல்வெளியில் ஒரு காட்டுப் படலம் இருப்பதைக் காண்கிறோம். இங்குள்ள அநேக புருஷர்கள், பெண்களாகிய உங்களில் சிலர்…நீங்கள் கென்டக்கியிலிருந்து வந்திருந்தால் உங்களுக்கு தெரியும். ஸ்திரீகளும் அங்கே ஒரு மனிதனைப் போன்றே மண்வெட்டியை உபயோகிக்கிறார்கள், ஒரு—ஒரு மண்வெட்டியைக் கொண்டு வயலுக்குச் சென்று, நாம் படரும் களைச்செடிக் கொடிகள் என்று அழைக்கிற அவைகளை வெளியே வெட்டியெறிகிறோம். ஏனென்றால், இந்த விதமாக, வரிசையிலுள்ள தானியங்கள் இருந்த இடத்தில், நீங்கள் அந்த படர்ந்து வரும் களைச் செடிகளை வெட்டவில்லையென்றால், அதன்பின்னர் அந்தக் களைச் செடிகள் படர்ந்து, அந்த சோளத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ளும், அது தன்னை படிப்படியாக சுற்றிக் கொண்டு, மிக எளிமையாக, மிகவும் தந்திரமாக, அது சுற்றப்பட்டதாயிருந்தது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். முடிவிலே அது பலமடைந்து, பலமடைந்து, தானியத்தை அது உருகுலைக்கும் வரை இழுக்கிறது. அதனுடைய சொந்த திராட்சைச் செடியைச் சுற்றி, அது இருந்ததிலிருந்து வேறு ஏதோ ஒன்றிற்கு அதை உருகுலைத்துக்கொண்டது. அதேசமயத்தில் அது தானியமாயிருந்தும், அது உருகுலைக்கப்பட்ட தானியமாயிருக்கிறது.
3369 நாம் யாவரும் இன்னமும் தேவனுடைய சாயலில் இருக்கிறோம். ஆனால் சிலர் தேவனுடைய புத்திரர்களைப் போன்றே மிகவும் உருகுலைக்கப்பட்டு, அவருடைய வார்த்தைக்கு முரணாக நடக்கிறவர்களும், அவர் நம்மை வைத்திருந்து, நாம் நடக்க வேண்டுமென்று அருளியிருந்த அந்த வழியில்—அந்த விதத்தில் நடக்கின்றனர். ஏதோ ஒரு காரியத்தை அமைத்து, உலகம் நம்மை வழியிலிருந்து விலக்கி, அதற்கு நம்மை நெருக்கமாக இழுக்கிறது, தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்கும்படி அவர் நம்மை நட்ட அந்த நேரான, குறுகிய விளிம்பிலிருந்து விலகிச் செல்ல வேண்டும். பாவம் தேவனுடைய குமாரர்களுக்கும் குமாரத்திகளுக்கும் இந்த பொல்லாத காரியத்தை செய்துள்ளது.
3470 உருக்குலைப்பவனே! “உருக்குலைப்பது,” இந்தவிதமாக இதைக் குறித்து பேசுவது விநோதமாக தென்படுகிறது என்று நான் அறிவேன். ஆனால் அவன் அப்படித்தான் இருந்தான்; அவன் உருக்குலைத்தான், அல்லது தாறுமாறாக்கினான். தாறுமாறாக்கப்படுதல் என்பது, “மாற்றப்படுதல், ஏதோ ஒரு காரியத்தை வித்தியாசமாக்குதல்” என்று பொருள்படுகிறது. உருகுலைப்பது என்பது அதே காரியம், அதாவது அது கொண்டுவரப்பட்டு, உருகுலைக்கப்பட்டு, “வேறொரு வழியில் உண்டாக்கப்பட்டிருக்கிறது.” அதே சமயத்தில் அது இன்னமும் அதே விதையாய் உள்ளது, ஆனால் அது உருகுலைக்கப்பட்டுள்ளது. 71 தேவன் மறுரூபமாக்க வேண்டியிருந்ததைப் போன்றே, இந்த உருகுலைப்புக்காரருக்கும் உருகுலைக்க, அதே அளவு காலம்தான் இருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம். இப்பொழுது அவன் தன்னுடைய வித்தை விதைத்தான், இல்லை, ஒருபோதும் அவனுடைய விதையை விதைக்கவில்லை, அவன்…ஏதேன் தோட்டத்தில். அந்த நேரம் முதற்கொண்டு, அவன் ஆறாயிரம் ஆண்டுகளாக தேவனுடைய வித்தை, தேவனுடைய வார்த்தையை உருகுலைத்து வந்துள்ளான்; அதைச் உருகுலைத்து, அதை வித்தியாசமானதாக ஆக்க; அவன்…ஏவாள் முதன்முறையாக அவனுக்கு செவிகொடுத்து, தனக்குத்தானே ஒரு சிறு சொற்றொடரைப் பெற்றுக் கொண்டாள்.
3572 முதலாவதாக சாத்தான் தெளிவாக வேதவாக்கியத்தை மேற்கோள் காட்டினான் என்பதை, நினைவில் கொள்ளுங்கள், “ஏதேன் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கக் கூடாது என்று, தேவன் கூறியிருக்கிறாரா?” என்று கேட்டான். பார்த்தீர்களா? “சகல விருட்சத்தின் கனியையும் புசிக்க வேண்டாமா?” 73 இப்பொழுது நினைவிருக்கட்டும், ஏவாள், “ஆம், சகல விருட்சத்தின் கனியையும் நாங்கள் புசிக்கலாம்; ஆனால் தோட்டத்தின் மத்தியில் இருக்கிற விருட்சத்தை நாங்கள் தொடக்கூடக் கூடாது” என்றாள். இப்பொழுது அவன், தன்னுடைய செய்தியில், வார்த்தையை சற்று திரித்து கூறுவதைக் கவனியுங்கள். கூறுவதில்…ஏவாள், “ஏனென்றால், நாங்கள் இதைச் செய்வோமானால், அந்நாளில் நாங்கள் ‘மரிப்போம்’ என்று தேவன் கூறினார்” என்றாள். 74 அவன், “ஓ, நிச்சயமாகவே நீ மரிக்கமாட்டாய்” என்றான். பாருங்கள், அவன் ஒரு—ஒரு மனிதனாயிருந்தான், அவன், “நீ—நீ—நீ இதை இப்பொழுது செய். மேலும், நீங்கள்—நீங்கள்—நீங்கள் ஒருவிதமான அறிவில்லாத ஜனங்கள். நீங்கள், உண்மையாகவே, நீங்கள் எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கவில்லை. ஆனால் நீங்கள் இதில் மாத்திரம் பங்குகொண்டால், அப்பொழுது உங்களுக்கு ஞானமும், அறிவும் உண்டாகும். நீங்கள் சரியானதையும் தீமையையும் அறிந்து, தேவர்களைப் போலிருப்பீர்கள், நீங்கள், நான் பெற்றுள்ள இந்த ஞானத்தில் நீங்கள் மாத்திரம் பங்குகொண்டால் நலமாயிருக்கும். அது எனக்குத் தெரியும், ஆனால் உனக்குத் தெரியாது” என்றான்.
3675 எது, ஞானத்தை உடையவராயிருப்பது சரிதான். ஆனால் அறிவுக்கூர்மை முரண்பாடாக இருக்குமானால், அந்த ஞானமானது தேவனிடத்திலிருந்து வந்த சரியான ஞானமாயில்லாமல், தெய்வீக ஞானமாகி, இயற்கையான ஞானமாகி, நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தை உடையவர்களாயிருந்தாலும், அல்லது இன்னும் என்ன கல்வியைப் பெற்றிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அது பிசாசினுடையதாயிருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் ஒரு சில நிமிடங்களில் நான் அதை உங்களுக்கு நிரூபிப்பேன். அது பிசாசினால் உண்டானது. 76 நாகரீகம் பிசாசினால் உண்டானது. நான் அதன் பேரில் பிரசங்கித்து முடித்தேன். பூமியிலுள்ள எல்லா கலாச்சாரமும், எல்லா விஞ்ஞான வல்லமைகளும், மற்றும் ஒவ்வொரு காரியமும் பிசாசினால் உண்டானவை. அது ஏதேன் தோட்டத்தில் அவன் பிரசங்கித்த, அறிவின் சுவிசேஷமாய் உள்ளது. அவன் வார்த்தைக்கும், சித்தத்திற்கும், தேவனுடைய திட்டத்திற்கும் முரணான அறிவை, தாறுமாறாக்கப்பட்ட அறிவை எடுத்துக்கொண்டான். இப்பொழுது தேவன் என்ன செய்தாரோ, அதையே ஒரு தாறுமாறாக்கப்பட்ட வழியில் அவன் ஆறாயிரம் ஆண்டுகளாக செய்ய வேண்டியவனாயிருந்தான், தன்னுடைய சொந்த ஏதேனை உள்ளே கொண்டுவர அதே அளவு காலத்தை எடுத்துக் கொண்டான். இப்பொழுது அவன் இங்கே பூமியின் மேல் ஏதேன் தோட்டத்தை உடையவனாயிருக்கிறான், அது அறிவுக்கூர்மையினாலும், அறிவினாலும் நிறைந்துள்ளது. அதுவே ஆதியில் அவனுடைய சுவிசேஷமாய், அறிவும், ஞானமும், விஞ்ஞானமுமாயிருந்தது. அப்படிப்பட்டவர்களுக்கு தேவன் ஒருபோதும் சேவையாற்றவில்லை. நீங்கள் ஒரு நிமிடம் கவனிக்க வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன். அவன் இதைச் செய்தான், ஏனென்றால் அவன் உலகப்பிரகாரமான ஞானமுள்ள ஒரு மனிதனாயிருந்தான்.
3777 இப்பொழுது, இதைக் கூறுவது கடினமாயுள்ளது. அது—அது மிகவும் கடினமாயுள்ளது, ஏனென்றால் நான் உணருகிற விதமாகவே உணருகிற ஜனங்களிடத்தில் பேசுவதும், நான் அநேக வருடங்களாக இந்தவிதமாகவே பேசுவதுமானதாயிருக்கிறது. ஆனால் அப்பாலுள்ள மலைக்குப் பின்னால் அந்த தூதர்கள் தோன்றி, அந்த ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டது முதற்கொண்டு, இது ஒரு புதிய புத்தகமாகிவிட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தில், தேவன் அதைச் செய்வார் என்று வாக்குத்தத்தம் பண்ணியிருந்தபடியே, அது வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற மறைக்கப்பட்ட காரியங்களாகும். நாம் இந்தக் காரியங்களைக் கண்டு புரிந்துகொள்ளும்படியாக, தேவன் பூமியிலிருந்து தெரிந்துகொண்ட சிலாக்கியம் பெற்ற ஜனங்களாயிருக்கிறோம்: அது ஏதோ கட்டுக்கதை அல்ல, ஒரு நபரின் மாமிசப்பிரகாரமான சிந்தை அதை உருவாக்க முயற்சிப்பது அல்ல. அது சரியென்று தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்பட்டு, நிரூபிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்படவில்லை, ஆனால் அது சரியென்று தேவனால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேவனே, நான் இதற்கு முன்பு ஒரு செய்தியில் கூறியுள்ளதுபோல, அவருடைய வார்த்தையை வியாக்கியானிக்க தேவனுக்கு எவருமே தேவையில்லை. அவரே அவருடைய சொந்த வியாக்கியானி. அது சம்பவிக்கும் என்று அவர் கூறுகிறார், அது சம்பவிக்கும். அதாவது அவர்—அவர் அதற்கு அர்த்தம் உரைத்து. அதை உறுதிப்படுத்துகிறார்.
3878 ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, பெந்தேகோஸ்தே ஜனங்களாகிய நாம், மற்ற சபைகள் நாம் “பைத்தியம்” என்று நம்மைக் கூறினபோது, நாம் “பரிசுத்த ஆவியானவர் கடந்துபோன ஒரு காரியம் என்று கூற முடியவில்லை.” ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தமானது விருப்பமுள்ளவனுக்கு இருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம், இப்பொழுது நாம் வித்தியாசமாக அறிந்து கொள்கிறோம். பாருங்கள், அது கொஞ்சம் கொஞ்சமாக, இந்தக் காரியம் திறக்கப்பட்டிருக்கிறது. 79 இப்பொழுது அந்த, அந்த எல்லா சபைக் காலங்களிலும் மறைந்திருந்த இரகசியங்கள், கடைசி காலத்தில் வெளிப்படுத்தப்படும். அவர் அதை இப்பொழுது நாம் அறிந்து கொள்ளச் செய்கிறார். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். நாம் இப்பொழுது இங்கே இருக்கிறோம்.
3980 இப்பொழுது, சாத்தான் நாகரீகத்தின் ஆக்கியோன். அவன் விஞ்ஞானத்தின் ஆசிரியர். அவன் கல்வியின் ஆசிரியர். நீங்களோ, “அது உண்மையா?” என்று கேட்கலாம். 81 சரி, இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையில் ஆதியாகமம் 4-ம் அதிகாரத்தை வாசிப்போம், நாம் திரும்பிச் சென்று ஒரு நிமிடம் பார்ப்போம். எனக்குத் தெரியும்…நான் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால், ஒருவேளை சகோதரன் கார்ல் என்னிடம் கூறுவார். ஆனால், ஆதியாகமம், 4-ம் அதிகாரம், 16-ம் வசனம், இங்கே துவக்கத்தில், தேவன் என்ன செய்தார், அந்த மனிதன் மற்றும் ஸ்திரீயின் மேலும் அவர்கள் செய்ய வேண்டிய யாவற்றின் மேலும் சாபத்தை வைக்கும்படிக்கு, அவர்கள் மேல் உள்ள சாபத்தை அல்ல, ஆனால் என்ன சம்பவிக்கும் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்து, ஆதாமின் நிமித்தமாக நிலத்தை சபித்தார். ஏவாளுக்கு ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகள் இருந்தன என்பதை நாம் இங்கே இப்பொழுது கண்டறிகிறோம். அவைகளில் ஒன்று சாத்தானுடையதாயிருந்தது, அவைகளில் ஒன்று தேவனுடையதாயிருந்தது. இப்பொழுது நீங்கள், “ஹூ-ஓ! இல்லை. இப்பொழுது, சகோதரன் பிரான்ஹாமே!” எனலாம். 82 ஒரு நிமிடம். காயீன் ஆதாமின் குமாரனாயிருந்தான் என்று வேத வாக்கியங்களில் எங்காவதுள்ளதை நீங்கள் கண்டறியுங்கள். “காயீன் பொல்லாங்கானவன்” என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆதாம் அல்ல.
4083 அவள் இங்கு எப்போது கர்ப்பவதியானாள் என்பதை இப்போது கவனியுங்கள். நாம் முதலில், 4-ம் அதிகாரத்திலிருந்து துவங்குவோம். ஆதாம் தன் மனைவியாகிய…அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, நான் பெற்றேன், என்றாள் …அவள் இப்பொழுது கூறினாள், நான் கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன் என்றாள். 84 உண்மையாகவே அது அப்படித்தான் இருக்க வேண்டும். அது விபச்சாரமாயிருந்தாலும் அல்லது வேறெந்த காரியமாயிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, அது தேவனிடத்திலிருந்து வர வேண்டியதாயிருந்தது, பாருங்கள், ஏனென்றால் அது அவருடைய வித்து, அது அவருடைய வித்தின் பிரமாணம், அது கெட்டுப்போன வித்தாயிருந்தாலும், தாறுமாறாக்கப்பட்ட வித்தாயிருந்தாலும் அல்லது அது என்னவாயிருந்தாலும் அதை பிறப்பிக்க வேண்டும். அது எப்படியும், பிறப்பிக்க வேண்டும். அது அவருடைய கட்டளை. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். 85 அவன் மறுபடியும் அவளை அறியவில்லை. ஆதாம் தன் மனைவியை அறிந்தான், அவள் காயீனைப் பெற்றெடுத்தாள், ஆபேலையும் கூட, இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அன்று காலையில் சாத்தான் அவளோடு இருந்தான், அன்று பிற்பகல் ஆதாம் இருந்தான்.
4186 இப்பொழுது டூசானில் உள்ள, செய்தித்தாளில் இங்கே பெரிய சலசலப்பை நீங்கள் காண்கிறீர்கள் என்று, நான் நினைக்கிறேன், அந்த ஸ்திரீக்கு ஒரே நேரத்தில் ஒரு கறுப்பு நிறமுள்ள குழந்தையும், ஒரு வெள்ளை நிற குழந்தையும் பிறந்தது. அன்று காலை அவள் தன்னுடைய கணவனோடும், அன்று பிற்பகல் அந்த மனிதனோடும் இருந்தாள். அந்த மனிதன் கவனித்துக் கொள்வான்…வெள்ளை மனிதன் தன்னுடைய சொந்த குழந்தையை கவனித்துக் கொள்வதாகக் கூறினான், ஆனால் கறுப்பு நிற மனிதன் தன்னுடைய சொந்த குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும். பார்த்தீர்களா? நான் அதை அறிவேன், நாய்களின் இனப்பெருக்கம் போன்றவற்றில், அது ஒரு சில மணி நேரத்திற்குள் உறவுகொண்டால், அது நிச்சயமாகவே அவ்விதம் நடக்கும். இது அதை நிரூபிக்கிறது.
4287 இப்பொழுது நாகரீகம் எங்கிருந்து வந்தது என்பதைக் காண்பிப்பதற்காக, இப்பொழுது நாம் இங்கே ஆதியாகமம் 4-ம் அதிகாரத்தில் மீண்டும் வாசித்து, எங்கே என்று பார்ப்போம். 16-ம் வசனம். அப்படியே காயீன் தேவனுடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்: அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்த பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய…இட்டான். 88 நாகரீகம் துவங்கியது. வேதபண்டிதர் ஸ்கோபீல்டு, இங்கே என்னுடைய ஸ்கோபீல்டு வேதாகமத்தில், அது, “முதல் நாகரீகம்” என்று கூறுகிறது. கவனியுங்கள், அதன்பின்னர் அவன் குமாரர்களைப் பெற்றான், அவர்கள் இசைக் கருவிகளையும் உண்டாக்கினார்கள். அடுத்தவன் குமாரர்களைப் பெற்றான், அவன் மற்ற காரியங்களையும், அதிசயங்களையும் செய்ய ஆரம்பித்து, பட்டணங்களைக் கட்டி, வெண்கலம் மற்றும் எல்லாவிதமான கருவிகளையும் உண்டாக்கினான். பாருங்கள், அவன் அதைத்தான் செய்தான், காயீனைச் சேர்ந்தவனான அவன், முதல் நாகரீகமாக மாறினான். அவன் காலங்கள் தோறும் அதேக் காரியத்தையே செய்து வந்துள்ளான்.
4389 இப்பொழுது நாம் 25-ம் வசனத்தைக் கொண்டு, அடுத்த வசனம் என்னவென்பதைக் கவனிப்போம். இப்பொழுது, ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று; காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன், எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டான். சேத்… சேத்துக்கு ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள் (சேத்தின் பட்சத்தில், காயீனியரின் பட்சத்தில் அல்ல). 90 பாருங்கள், நாம் எல்லோருமே அந்த மகத்தான அறிவாற்றலை உடையவர்களாயிருக்கிறோமே! இன்றைக்கு கம்யூனிசம் என்னவாயிருக்கிறது, அவர்களுடைய தெய்வம் என்ன? அது அறிவாற்றல், விஞ்ஞானம். எப்படியும், நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் எங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இன்றைக்கு இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள்.
4491 இப்பொழுது சாத்தான் தன்னுடைய, ஒருவிதமான ஏதேனை இப்பொழுது உடையவனாயிருக்கிறான். இந்த ஆறாயிரம் ஆண்டுகளில், அவன் உருவாக்கினான் (சிருஷ்டிக்கவில்லை), ஆனால், தேவனுடைய முழு பூமியையும், அவருடைய சிருஷ்டிகளையும், மிருகங்களையும், இனக்கலப்பு செய்து, கலப்பினமாக்கி; மரங்கள், செடிகள், மனிதர்; மார்க்கத்திற்கு வரைக்கும், வேதாகமத்தையும், சபையையும் கூட உருகுலைத்தான்; அவன் தனக்குத் தானே ஒரு முழுமையான ஏதேன் தோட்டத்தை, விஞ்ஞானத்தின் தோட்டத்தை பெற்றுக் கொள்ளும் வரையில், ஒவ்வொரு காரியமும் விஞ்ஞானத்தினால் இயங்குகிறது. நம்முடைய மோட்டார் வாகனங்கள், நாம் கொண்டுள்ள ஒவ்வொரு காரியமும், மனிதன் செய்திருக்கிறவைகளே, விஞ்ஞானத்தினால் நமக்கு அளிக்கப்பட்டவை. அவன் தன்னுடைய மகத்தான ஏதேனை இங்கே வைத்திருக்கிறான்; செய்தியானது சரியான நேரத்தில் உள்ளது என்பதை நிரூபிக்க, அது வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரத்தின் காலமேயல்லாமல் வேறொரு காலம் அல்ல என்பதை நிரூபிக்கிறதே! இன்றைக்கு கலப்பினப் பிறப்பைப் பாருங்கள், ஒரு மேலானதாக, இல்லை, அழகாக, ஒரு மேலானதாக அல்ல. இன்றைய சிறு பிள்ளைகளைப் பாருங்கள்.
4592 நான் நேற்றைய தினம் என்னுடைய மகளை ஒரு பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன், அவளுடைய பற்கள் நெளிந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார். டூசானில் இருந்த ஒரு சகோதரன், சகோதரன் நார்மன், அவருடைய சிறிய மகள் இருந்தாள், அவளுடைய பற்கள் துருவிக் கொண்டிருந்தன. அந்த பல் மருத்துவர் விரைவில், வரப்போகும் காலங்களில், அவர் நினைப்பதோ, பிறக்கும் ஜனங்களுக்கு, பற்கள் எந்த விதத்திலும் வளரும் என்று கூறினார். அது நாம் புசித்துக்கொண்டிருக்கிற உணவோ, கலப்பின உணவாயுள்ளது. 93 மேன்மையான சுவிசேஷகரான, பில்லி கிரஹாமைக் குறித்து, கடந்த மாதம், நீங்கள் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையில் வாசித்தீர்களா? நீங்கள் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? நான் அவருக்காக முன்பைக் காட்டிலும் அதிகமாக இப்பொழுது ஜெபிக்கிறேன். கழுத்துப்பட்டைகளைத் திருப்பியிருந்தவர்களிடத்தில் அவர் பேசினபோது, அன்றொரு இரவு, அந்த குருமார்களின் மேல் அதை வைத்தார். அவருக்கு ஏதோ காரியம் சம்பவித்துள்ளது. இந்நாட்களில் ஒன்றில், அவர் எங்கே இருக்கிறார் என்ற அவருடைய ஸ்தானத்தை அவர் புரிந்துகொள்கிறார் என்று நான் நம்புகிறேன், கவனியுங்கள், சோதோமிலிருந்து, அந்த தாறுமாறாக்கப்பட்ட பட்டணத்திலிருந்து இப்பொழுது அழைத்துக்கொண்டிருக்கிறார். இப்பொழுது இதை ரீடர்ஸ் டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையில் கவனியுங்கள், பில்லி தன்னுடைய கூட்டங்களை கூட நடத்த முடியாத அளவிற்கு பலவீனமடைந்திருந்தார். அவர் ஓட வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் அவரிடம் கூறினர். எனவே அவர் ஒவ்வொரு நாளும் ஒரு மைல் தூரம் ஓடுகிறார், அது உடற்பயிற்சி செய்ய, அல்லது ஏதோ ஒன்று என்று நான் நினைக்கிறேன்.
4694 மனிதன் அழுகிப் போய்விட்டான். முழு மானிட வர்க்கமும் கெட்டுப்போய்விட்டது. எல்லாமே ஜலப்பிரளய காலத்தில் இருந்ததைப் போன்றே உள்ளது. அது முற்றிலுமாக நிலைகுலைந்து, சுற்றி வளைத்து, தேவன் அவர்களை நட்டிருந்த நேர்வரிசையிலிருந்து வேறுபட்டதாய் உள்ளது. பாவம், விஞ்ஞானத்தின் மூலமாகவும், வஞ்சகத்தின் மூலமாகவும் முழு மானிட வர்க்கத்தையும் திரித்துள்ளது. 95 அந்த கட்டுரையின் கீழே, அதில் கூறப்பட்டுள்ளது, “இந்த நாட்களில், சிறு பெண்களும், பையன்களும் சரீர அமைப்பின்படி, இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுகுள்ளாகவே, தங்களுடைய நடுத்தர வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர்” என்பதை நீங்கள் படித்தீர்களா? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 96 அன்றொரு இரவு பகுத்தறிதலில், இருபத்திரண்டு வயது நிரம்பிய ஒரு பெண்ணை, மாதவிடாய் நின்ற நிலையிலிருந்த, அவளைக் கண்டேன். அதைத்தான் அவளுடைய மருத்துவர் அவளிடம் கூறியிருந்தார். 97 பாருங்கள், அது ஒரு விழுந்துபோன, சீரழிந்து, நரகத்திற்குச் செல்லும் அழிவின் இனமாயுள்ளது. அது நெறிமுறையாகத் தென்படவில்லை என்பதை நான் அறிவேன், ஆனால் அது வேதப் பிரகாரமானது, பாருங்கள், அது உண்மையே; நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த இனம், இந்த தலைமுறை ஜனங்கள்.
4798 இப்பொழுது கவனியுங்கள், இன்றைக்கு கலப்பினமான கால்நடைகள், கலப்பின தாவரங்கள்; விஞ்ஞானம் அதைச் செய்கிறது, அதே விஞ்ஞானம் அதைச் செய்கிறது, “அதுதான் முழு மானிட வர்க்கத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறுகிறது. நான் வாசிக்கிறபடியே நீங்களும் அதை வாசிக்கிறீர்கள். பாருங்கள், அவர்கள் ஏன் அதை நிறுத்தவில்லை? ஏனென்றால் அவர்களால் அதை நிறுத்த முடியாது. அது அந்தவிதமாகவே இருக்கும் என்று தேவனுடைய வார்த்தை கூறியுள்ளது. ஆனால் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்ப்பார்களானால், அவர்கள் யூதாஸ்காரியோத்தைப் போல, கருவிகளாக இருக்கிறார்கள், அது சம்பவிக்கும் என்று தேவன் கூறின காரியத்தை சரியாக நிலை நாட்டுதல். அது விஞ்ஞானத்தின் தங்களுடைய சொந்த அடிப்படையின் பேரில் சரியாக அதை செய்து கொண்டிருக்கிறது. 99 அவனுடைய விஞ்ஞான ஆராய்ச்சியினால், அவன் ஏவாளை வஞ்சித்த அதே மாதிரியில், ஏவாளை ஒரு மாதிரியாகக் கொண்ட, சபையையும் கூட அவன் வஞ்சித்துள்ளான். இப்பொழுது, இப்பொழுது ஆதாம் அங்கே மீண்டும் ஒரு மாதிரியாக இருக்கிறான், இல்லை ஏவாள், சரியாகக் கூறினால், சபைக்கு, அது என்ன செய்தது என்பதைக் கவனியுங்கள். அறிவுக்காக அலைந்து திரிவதன் மூலம், அவள் சரியானதற்கும் தவறானதற்கும் இடையேயுள்ள கோட்டை நழுவிச் செல்கிறாள், தேவனுடைய மூல வார்த்தையை, சாத்தானுடைய தாறுமாறாக்குதல் அல்லது விகாரத்திற்கு செவிகொடுப்பதன் மூலமே.
48100 இப்பொழுது சபைகள் இன்றைக்கு உருகுலைந்துள்ளன. இப்பொழுது நான் ஜனங்களைக் குறித்து, தனிப்பட்ட நபர்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை. நான் சபை உலகத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். ஒன்று ஒருவிதமாக திரிக்கப்பட்டிருக்கிறது, ஒன்று மற்றொன்றை திரித்துள்ளது, மேலும், விஞ்ஞானத்தினால் திரிக்கப்பட்டிருக்கிறது. அவன் செய்த அதே மாதிரியையே. அவன் ஏசாயா 14:12-ல் கூறப்பட்டுள்ள தன்னுடைய அச்சுறுத்தலை சாத்தான் நிறைவேற்றினான். 101 நாம் ஒரு நிமிடம் அதை வாசிப்போம். ஏசாயாவின் புத்தகத்தில், நாம் 14-ம் அதிகாரம், 12-ம் வசனத்திலிருந்து துவங்குவோம். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ தள்ளப்பட்டாய்! இது ஏசாயா அவனை ஒரு தரிசனத்தில் காண்கிறதாயுள்ளது, பாருங்கள், வரப்போகும் காலத்தில். தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனை கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்று…உன் இருதயத்தில் சொன்னாயே.
49102 சாத்தானின் நோக்கம், ஏதேன் முதற்கொண்டு, தன்னுடைய சுயத்தை ஒரு ஏதேனாக ஆக்கிக் கொள்ளுவதாயிருந்தது; அதனால் தேவனுடைய நட்சத்திரங்கள் அவனைத் தொழுதுகொள்ள, குமாரரும் அவனைத் தொழுதுகொள்ளும்படிக்கு, தன்னை மேலே உயர்த்திக் கொள்ளுவதே. அவன் அதை இப்பொழுது முற்றிலுமாக நிறைவேற்றிவிட்டான், அவன் இதைச் செய்து அதை சபைக்குள் கொண்டு வந்திருக்கிறான். நான் அதன், விவரங்களுக்கு செல்லமாட்டேன். ஒலிநாடாக்களைக் கேட்கும் உங்களில் எவருமே அதைக் குறித்து அறிவீர்கள். அந்த—அந்த நேரத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், கல்வித் திட்டத்தின் மூலம் சாத்தான் அதைச் செய்துள்ளான், சிறந்த பொருத்தம், இது சிறந்தது, அது சிறந்தது என்றே. எல்லா நேரத்திலும், அவர்கள் நேராக மரணத்திற்குள்ளாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை, அறியாமலிருக்கிறார்கள். குருடாக்கப்பட்டு, குருடரை வழிநடத்தி, குருடாக்கப்பட்ட தேசங்களின் தலைவர்கள், குருடாக்கப்பட்ட விஞ்ஞானத்தின் தலைவர்கள், குருடானவர்களை வழி நடத்திச் செல்லும், குருடான சபையின் தலைவர்கள். இயேசு, “அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் இருவரும் குழியில் விழுவார்கள்” என்றார்.
50103 தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுமளவிற்கு, இங்கே மிக நெருக்கமாக ஒன்றுசேர்ந்துள்ள இரண்டு ஏதேன்களின் மாதிரியைக் கவனியுங்கள். அது அந்தவிதமாகவே இருக்கும் என்று மத்தேயு 24:24 உரைத்துள்ளது. ஆனால் நாம் ஒரு சில விநாடிகள் நிறுத்தி, இந்த இரண்டு ஏதேன் காலங்களையும், விசேஷமாக ஒரு காரியத்தையும், எப்படியாய் தேவனுடைய வார்த்தை அந்த ஏதேனை உற்பத்தி செய்தது என்று வேதம் கூறுகிறது, தேவனுடைய வார்த்தை எப்படி மற்ற ஏதேன் வரப்போகிறது என்று நம்மை எச்சரிக்கிறது. 104 இப்பொழுது, நாம் பவுல் தீர்க்கதரிசிக்கு செவிகொடுப்போமானால், வேறொரு ஏதேன் இருக்க வேண்டும் என்பதையும் நாம் அறிவோம், இரண்டாம் தெசலோனிக்கேயர் 2-ம் அதிகாரத்தில். நீங்கள் விரும்பினால் நான் அதை வாசிக்க முடியும். தன்னை உயர்த்துகிறவனாயும்; அந்த பாவ மனிதன் வெளிப்பட்டாலொழிய,… அந்த நாள் வராது, கர்த்தரிடத்திலிருந்து, …அவன் தேவனுடைய ஆலயத்திலே உட்கார்ந்து, தேவனெனப்படுவதெதுவோ, அவை யெல்லாவற்றிற்கும் மேலாக தன்னை உயர்த்துகிறவனாயும், எனவே அவன் தேவனைப்போல தேவன் ஆராதிக்கப்படுதுபோல. 105 அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! இப்பொழுது ஏசாயா 14-ல், தீர்க்கதரிசி, “லூசிபர், அவனுடைய இருதயத்தில் சொன்னதைக்” கண்டான் என்று கூறினான், தேவனுடைய ஆவியின் ஏவுதலின் கீழ் ஒரு தரிசனத்தின் மூலமாக, “அவன் அதைச் செய்வதாகக் கூறுகிறான்.” பவுலுக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது ஏறக்குறைய அதற்கு முன்னர், ஏசாயாவில் உள்ளது. 106 இப்பொழுது இங்கே, எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் அவனைக் காண்கிறான், அவனுடைய ஸ்தானத்திற்கு வருகிறான். கவனியுங்கள், அது அவனுடைய ஏதேனை உயர்த்துகிறது; அவனுடைய விஞ்ஞானப்பூர்வமான ஏதேனை, அவனுடைய விஞ்ஞான உலகத்தோடு, ஒரு விஞ்ஞான மணவாட்டி-சபையோடு, எல்லாமே “அறிவு” என்ற வார்த்தையின் கீழ், பெரிய வேதபாட கருத்தரங்குகள், பெரிய பட்டங்கள், கல்வித் திட்டங்கள்.
51107 கவனியுங்கள், சகோதரனே, சகோதரியே, நாம் ஒவ்வொருவரும் பிளாரன்ஸ் நடந்து வந்த அந்த பாதையில் நடக்கப் போகிறோம். நீங்கள் இதைக் குறித்து சிந்திக்கும்படி இயேசுவின் நாமத்தில் நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்னைக் குறித்து சிந்திப்பதல்ல. நான் உங்களுடைய சகோதரன். அது—அதுவல்ல இது. நான் பேசிக்கொண்டிருக்கிற தேவனுடைய வேதாகமத்தின் வார்த்தையை கவனியுங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில், நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும், தேவனுடைய சொந்த வார்த்தையில் பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளதையும் நோக்கிப் பாருங்கள். 108 இந்த திட்டங்கள் அனைத்துமே, முற்றிலும் அந்திக்கிறிஸ்துவாகவே உள்ளன. இப்பொழுது, அவன் ஒரு ஏதேன் தோட்டத்தை உடையவனாயிருக்க வேண்டும், அவன் அதைச் செய்வதாகக் கூறினான். இதோ அவன் அதைச் செய்வான் என்று தேவனுடைய எளிய வார்த்தை கூறுகிறது, இதோ அவன் அதைச் செய்கிறதை நாம் நோக்கிப் பார்க்கிறோம். அவன் தன்னுடைய அறிவாற்றலுள்ள, விஞ்ஞானப்பூர்வமான, ஸ்தாபன மணவாட்டியோடு அதைச் செய்திருக்கிறான். இந்நாட்களில் ஒன்றில், அமைக்கப்படவிருக்கிற உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்கு, அவன் தலைவனாயிருக்கப்போகிறான். யாவரும் அவனோடு இருப்பார்கள்.
52109 ஜனங்களை சோதித்துப் பார்க்கிறோம், அவர்கள் மோசமான ஜனங்கள் என்ற காரணத்தினால் அல்ல; அவர்கள் அந்த நேர்வரிசையில், தானியத்தைப் போன்று நடப்பட்டிருந்தனர், ஆனால் சாத்தானோ விஞ்ஞானம், ஆராய்ச்சி, கல்வி, வைத்தியர் பட்டங்கள் என்றழைக்கப்பட்ட களையான கொடியை விதைத்தான். நீங்கள் எங்கிருந்தாவது ஏதோ ஒரு வேதபாட கருத்தரங்கில் ஒரு மருத்துவர் பட்டம் பெற்றாலொழிய, சில நேரங்களில் அவர்கள் உங்களை பிரசங்க பீடத்தில் கூட அனுமதிக்கமாட்டார்கள். எல்லாமே தவறாகும்! ஜனங்கள் அல்ல; அது தவறான திட்டமாகும். இப்பொழுது அது என்ன செய்துள்ளது? இது அனைத்தும் மீண்டும் தலைதூக்கி, முழு உலகத்தையும் கொண்டு வந்தது. (ஒரு கூட்ட கலப்பினத்தின் மூலமாக, மூல தேவனுடைய வித்தை தாறுமாறாக்குவதன் மூலமாக) மற்றொரு அந்தகாரமான குழப்பத்தை உண்டாக்குகிறது. 110 ஆனால் தேவன் நம்மை அவருடைய மனதில் கொண்டவராய், அவரால் அந்த நிலைமையில் இன்னமும் அசைவாட முடியும் என்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் அதைச் செய்வதாகவும், அவருடைய மணவாட்டியாக இருக்கும் ஒரு சிறு மந்தையை அழைப்பதாகவும் அவர் வாக்குப்பண்ணினார்.
53111 இப்பொழுது மீண்டும் இங்கே கவனியுங்கள், இந்த சபைகள், இந்த ஏதேன்கள் எவ்வளவு பரிபூரண மாதிரியாக இருக்கின்றன. 112 தேவன், அவருடைய வார்த்தையின் ஒரு வித்தினூடாக! வார்த்தையை உயிர்ப்பிக்கக்கூடிய ஒரே ஒரு காரியம் மாத்திரமே உண்டு, அது ஆவியாகும், ஏனென்றால் அது வார்த்தைக்கு ஜீவனை அளிக்கிறதாயுள்ளது. வார்த்தையில் உள்ள ஜீவன் ஆவியின் ஜீவனை சந்திக்கும் போது, அது வித்து என்னவாயிருக்கிறதோ அதை உற்பத்தி செய்கிறது. 113 இப்பொழுது என்ன சம்பவித்துள்ளது என்பதைக் கவனியுங்கள். ஏதேன் தோட்டத்தில் குற்றமற்ற தேவனுடைய திட்டம் இருந்தது, அது அந்த—அந்த யுகங்களில் ஒன்றாக இருந்தது. முதலாம் யுகம் குற்றமற்றதாயிருந்தது, ஜனங்கள் பாவம் அறியாதிருந்தனர். அவர்கள் பாவத்தைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாயிருந்தனர், ஆனால் அவர்கள் தங்களுடைய முகத்தின் மேல் ஒரு ஆவியின் திரையினால் தங்களுடைய நிர்வாணத்திற்கு மறைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மறைக்கப்பட்டிருந்தபடியால், தாங்கள் நிர்வாணிகளாயிருந்ததை அவர்கள் ஒருபோதும் அறியாதிருந்தனர். ஏனென்றால், அவர்களுடைய சொந்த சிந்தைகளில் தேவனுடைய திரை இருந்தது, அவர்கள் சரியானது மற்றும் தவறு என்ன என்பதை அறிந்திருக்கவில்லை. அவர்கள் இருவரும் அங்கே நிர்வாணிகளாய் நின்று, அவர்களுக்கு அறிவு இன்னும் வரவில்லையென்று காண்பித்தனர், பாருங்கள், அவர்கள் நிர்வாணமாயிருந்தனர். அந்த ஜோடி நிர்வாணமாயிருந்ததை அறியாதிருந்தனர்.
54114 இப்பொழுது நீங்கள் வெளிப்படுத்தின விசேஷம், 3-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள், அல்லது அதை எழுதிக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் இந்த கடைசி காலத்தையும், கடைசி நாட்களில் உள்ள லவோதிக்கேயா பெந்தேகோஸ்தே சபையின் காலத்தையும் முன்னுரைத்தபோது, அவர், “நீ நிர்வாணமாயும் குருடாயுமிருக்கிறதை அறியாதிருக்கிறாய்” என்றார். 115 தேவனுடைய வித்து குற்றமற்றதாயிருந்து, அவர்கள் நிர்வாணிகளாயிருந்தனர் என்பதை அறியாமலிருந்தனர், பரிசுத்த ஆவியின் ஒரு திரையின் கீழ், அவர்களை பாவத்திலிருந்து திரையிடுகிறது. 116 இப்பொழுது கடைசி சபையின் காலத்தில், அவர்கள் அதை அறியாமல், மீண்டும் நிர்வாணமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் இங்கே கண்டறிகிறோம். ஆனால் அது பரிசுத்த ஆவியின் திரை அல்ல. அது முன்னர் ஏவாளின் மேல் சாத்தான் நழுவிச் சென்று போட்ட திரை, ஒரு இச்சையின் திரை, இச்சையின் திரை. அவர்கள் நிர்வாணியாயிருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியாத அளவிற்கு அவர்கள் மிகவும் அசுத்தமாயிருக்கிறார்கள், நம்முடைய ஸ்திரீகள் குட்டைக் கால் சட்டை அணிந்து, கவர்ச்சியான உடை அணிந்து தெருவில் இருக்கிறார்கள்.
55117 யாரோ ஒருவர் அன்றொரு நாள் அவர்கள் உடுத்தப்போகும் இந்தப் புதிய ஆடையைக் குறித்து, ஒரு துண்டு செய்தித்தாளில் எனக்கு அனுப்பினார் என்று, நான் நினைக்கிறேன், இடுப்பிலிருந்து பதினான்கு அங்குலம் அல்லது ஏதோ ஒன்று. அது ஒரு இச்சையின் திரை என்பதை நம்முடைய—நம்முடைய ஸ்திரீகள் உணருகிறார்களா என்று நான் யோசிக்கிறேன்? 118 இப்பொழுது நீங்கள்—நீங்கள், “நான் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை, அல்லது நான்—நான்…இவை எல்லாவற்றையும் என் கணவரிடமோ, தேவனுக்கு முன்பாகவோ, என்னால் நிரூபிக்க முடியும” என்று கூறலாம். 119 ஆனால் அப்படியிருந்தும், நியாயத்தீர்ப்பில், நீங்கள் ஒரு “விபச்சாரி” என்று அழைக்கப்படப் போகிறீர்கள். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று” என்றார்.
56120 “குருடாயும், நிர்வாணமாயுமிருந்து, அதை அறியாதிருக்கிறாய்!” அங்குள்ள பரிதாபமான பெண்களையல்ல; அவர்களுக்கு எதிராக நான் ஒன்றும் கூறவில்லை. அது அந்த பொல்லாத காரியம்! சபையின் முறைமை அதை அங்கீகரிக்கவோ அல்லது அதற்கு எதிராக நிற்கவோ தவறிவிடுகிறதாகத் தெரிகிறது; கிறித்துவம் என்ற பெயரில், அவர்கள் தங்களுடைய தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொள்ளவும், ஒப்பனை செய்து கொள்ளவும், குட்டை கால் சட்டைகளை அணிந்து கொள்ளவும் செய்கிறார்கள். அது என்ன ஒரு பயங்கரமான காரியம்! பாருங்கள், அவர்கள் மீண்டும் சாத்தானின் ஏதேனில், நிர்வாணமாயிருந்து, அதை அறியாமலிருக்கிறார்கள். அவர்கள் அதை அறியாமலிருக்கிறார்கள். 121 ஒருகால், இங்குள்ள நீச்சல் குளத்தை, நான் காண்கிறேன் என்று நான் நினைக்கிறேன், இப்பொழுது அங்கே பெண்கள் இருக்கிறார்கள். அந்த ஸ்திரீ தான் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை மாத்திரம் உணர்ந்திருந்தாலும், அவள் அதை அறியாமலிருந்தால் நலமாயிருக்கும். அவள் நிர்வாணமாயிருக்கிறாள். அவளுடைய சரீரம் புனிதமானது. தேவன் அவளை உடுத்தின ஆடைகளை, தோலினால், இந்த தலைமுறைக்காக, அவள் களைகிறாள். அவள் அதை தொடர்ந்து துண்டித்துக் கொள்கிறாள். அவள் “நாகரீகம், உயர்கல்வி, சிறந்த நாகரீகம், உயர்ந்த நெறிமுறைகள்” என்ற வார்த்தையின் கீழ் நிர்வாணமாயிருக்கிறாள். இது உள்ளே பதிய வேண்டுமென்று நான் நிச்சயம் விரும்புகிறேன். இவை யாவும் பிசாசினுடையதாயுள்ளன, கர்த்தராகிய இயேசுவின் வருகையிலே அது அழிக்கப்படும். அதனுடைய ஒவ்வொரு துணுக்குமே, அது அழிக்கப்படும். ஒரு காரியமும் விடப்பட்டிருக்காது. 122 மேலும், ஓ, நண்பனே, தேசம் முழுவதிலும் உள்ளவரே, நீங்கள் இங்கே பீனிக்ஸில் நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அந்தக் காரியங்களைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் இங்கே அவைகளுக்கு கீழ்பட்டிருக்கிறீர்கள். இப்பொழுது, இயேசு, “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அவர்கள் வஞ்சிப்பார்கள்” என்று கூறினார்.
57123 முதலாம் ஆவி ஒரு…முதல் திரை பரிசுத்த திரையாக இருந்தது, பரிசுத்த ஆவி, அவள் அதிலிருந்து வெளியே பார்க்க வேண்டியதாயிருந்தது. ஆனால் சாத்தான் அவளிடத்தில் அறிவைக் குறித்து பேசத் துவங்கினபோது, அவள் உலகத்தை சற்று எட்டிப்பார்க்க வேண்டியதாயிருந்தது. 124 அவளுடைய குமாரத்தியாகிய சபையும் அதைத்தான் செய்திருக்கிறாள். நீங்கள் பார்க்க வேண்டும், நீங்கள் ஏதோ ஒரு திரைப்பட நட்சத்திரத்தைப் போல உடை உடுத்த வேண்டும், அல்லது வாலிபர் எல்விஸ் பிரெஸ்லியைப் போல அல்லது—அல்லது பாட் பூனைப் போல, அல்லது—அல்லது அந்த ஜனங்களில் சிலர், மார்க்கத்தின் பெயரால் நடிக்க வேண்டும். 125 பேட் பூன் கிறிஸ்துவின் சபையைச் சாரந்தவர். எல்விஸ் பிரெஸ்லி ஒரு பெந்தேகோஸ்தே. இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தபோது யூதாஸ்காரியோத்து செய்ததைப் பார்க்கிலும். இரண்டு பேய்த்தனமான கதாபாத்திரங்கள் உலகத்தை ஒரு மோசமான குழப்பத்தில் தள்ளிவிட்டன. அவர்கள் அதை அறியார்கள். அந்த பையன்களுக்கு அது தெரியாது. அந்த—அந்த பையன்களுக்கு, புருஷர்களுக்கு, எதிராக எனக்கு ஒன்றுமில்லை, அது அந்த ஆவியே அதை ஊக்குவிக்கிறது.
58126 சற்று அந்தப் பக்கமாகச் சென்று, அந்தப் படலம் அந்த சோளத்தின் பதரை ஒரு முறை, பற்றிப்பிடிக்கட்டும், என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள்; தானியம் அழிந்துவிடும் ஓ, ஆம், அது அவனைப் பிடித்துவிட்டுவிட்டது. அந்தவிதமாகவே அது அதைச் செய்யும். அது ஒவ்வொரு முறையும் அதைச் அப்படியே செய்யும். ஏவாள் உலகத்தை ஒரு முறை எட்டிப்பார்க்க வேண்டியதாயிருந்தது. 127 சகோதரனே, சகோதரியே, நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும். நீங்கள் விரும்பினால் முதலாம் யோவான் 2-ம் அதிகாரம் 15-ம் வசனத்தை, நாம் வாசிக்கலாம், வேதம் கூறுகிறது: …நாம் உலகத்திலும் அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், அதற்குக் காரணம் தேவனுடைய அன்பு நமக்குள்ளும் கூட இல்லை.
59128 இப்பொழுது, அங்குள்ள வார்த்தை பூமியல்ல; அது ஒரு கிரேக்க வார்த்தை, காஸ்மாஸ் ஆகும், அது “உலகத்தின் ஒழுங்கு” என்று பொருள்படுகிறது. நாம் பூமியின் நாகரீகங்களையும், உலகத்தையும் நேசிப்போமேயானால், நாம் இந்நாளின் போக்கை நேசிப்போமேயானால், “இது ஒரு அற்புதமான நேரம், ஓ, நமக்கு இந்த காரியங்கள் யாவும் உண்டு” என்று நாம் எண்ணினால், நீங்கள் அதை நினைத்தால், அதற்கு காரணம் உங்களுடைய சிந்தனை தவறாக உள்ளது. அது பிசாசினால் தாறுமாறாக்கப்பட்டிருக்கிறது. “நீங்கள் உலகத்தின் ஒழுங்கையும், இந்த உலகத்தின் காரியங்களையும் சிநேகித்தால், தேவனுடைய அன்பு உங்களுக்குள்ளும் கூட இல்லாததே அதற்குக் காரணம்.” அதை நினைவில் கொள்ளுங்கள். ஓ தேவனே! நாம் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள்!
60129 இங்கே ஒரு நிமிடம் நான் உங்களுக்கு ஒரு சிறு கதையை கூற விரும்புகிறேன். முதலாம் உலகப் போரில் இருந்த ஒரு போதகர் பேசுவதை நான் கேட்டேன். அவர்கள் எறிந்தனர்… 130 ஆதியிலிருந்த சாத்தானைப் போல, அவன் ஏதேன் தோட்டத்திற்குள் வந்தபோது, அவனால் அந்த விதைகளை தோண்டி எடுக்க முடியவில்லை. அவனால் அவைகளை அழிக்க முடியவில்லை. ஆனால் அவன் அவைகளுக்கு விஷத்தை தெளித்தான், அது அந்த விதையை உருகுலைத்துவிட்டது, அது சரியான விதமான விதையை பிறப்பிக்கவில்லை. அது மூல வித்தை உருகுலைத்தது. 131 அதுதான் இந்த மார்க்கத்தின் திட்டங்கள் யாவும். அவர்கள் இன்னமும் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்கிறார்கள், ஆனால் அது உருகுலைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் சரியானதைச் செய்ய விரும்பி, சபைக்குச் செல்கிறார்கள். ஒரு கன்னியாஸ்திரீ ஒரு இழிவான பெண்ணாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் ஒரு கன்னியாஸ்திரீ மடத்திற்குள் சேருவதில்லை. ஒரு போதகர் ஒரு—ஒரு—ஒரு மோசமான மனிதனாயிருக்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் வேதபள்ளிக்குச் செல்கிறதில்லை. நீங்கள் ஒரு போதும் சபையில் சேர்ந்து, கரங்களைக் குலுக்கி, உங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்து, அல்லது உங்களுடைய சபையில் நீங்கள் என்ன செய்தாலும், ஒரு மோசமான நபராக இருக்க விரும்புகிறதில்லை. நீங்கள் ஒரு நல்ல நபராக இருக்கவே அதைச் செய்கிறீர்கள். ஆனால் அது வஞ்சனையாயுள்ளது, அந்த உருகுலைத்தலே அதைச் செய்கிறது. சாத்தான் அதைத் தெளித்தான். பார்த்தீர்களா? தேவன் ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தை உடையவராயிருக்கவில்லை. தேவனுடைய வார்த்தைகளில் அப்படிப்பட்ட ஒரு காரியம் எங்குமே காணப்படவில்லை. 132 தேவன் நம்முடைய ஸ்தாபனமாயிருக்கிறார், நாம் அவருக்குள், ஒரு சரீரத்தில், தேவனில், பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறோம். அது உண்மை. நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. கவனியுங்கள்.
61133 ஆனால், பாருங்கள், அது மிகவும் கடினமானது என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் இன்னும் சிறிது நேரம் அவதியுறும்படி நான்—நான் விரும்புகிறேன். உலகத்தின் யுத்த காலத்தில்…என்னுடைய பொருளிலிருந்து விலகிச் சென்றதற்காக என்னை மன்னிக்கவும். 134 ஆனால் இந்தக் குறிப்பைக் கூற, ஏதேனில் சாத்தான் என்ன செய்தான் என்பதைக் குறித்த என்னுடைய ஆய்வை நான்—நான் உங்களுக்கு அளிக்க விரும்பினேன். தெளிக்கப்பட்ட பயங்கரமான விஷம். அந்த தெளிப்பு என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்னால் உங்களுக்கு கூற முடியும். அதைக் குறித்த இரண்டு வார்த்தைகளை நான் எடுத்துக் கொண்டேன். அது அவிசுவாசம், விசுவாசத்திற்கு முரணாயுள்ளது, தெளிக்கப்பட்ட அவிசுவாசம், சந்தேகம். விஞ்ஞானம் அதனுடைய இடத்தை நிரப்பியது. விதைக்குள்ளாகச் சென்ற அந்த குழியை சாத்தான் அறிவினாலும், விஞ்ஞானத்தினாலும், நாகரீகத்தினாலும் நிரப்பினான், அது தேவனுடைய முழு சிருஷ்டியையும், முழுமையாக உருகுலைத்துவிட்டது.
62135 நான் நிலையற்ற இடத்தில் உங்களை கொண்டு செல்வதாக நீங்கள் நினைக்கிறீரகள் என்பதை நான் அறிவேன், ஆனால் நானும் உங்களுடன் உடன்படுகிறேன். நம்மால் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய முயற்சிக்க நாம் யாவரும் இங்கே இருக்கிறோம். நாம் அந்த காரியங்களை வித்தியாசமாயிருக்கும்படி கூறுகிறதில்லை. நாம் நேர்மையாயிருக்க வேண்டும். 136 நாம் ஒவ்வொருவரும் பாதையின் முடிவிற்கு வருகையில், அங்கே ஒவ்வொரு வார்த்தைக்காகவும் கணக்கொப்புவிக்கப் போகிறோம். இப்பொழுதே, நம்முடைய சத்தங்கள்…நாம் பிறக்கும்போது, நம்முடைய முதல் சிறு அழுகை யாவும் ஒலிநாடாவில் பதிவாகிறது என்பதை நாம் அறிவோம். அது நியாயத்தீர்ப்பின் நாளிலே மீண்டும் இயக்கப்படப்போகிறது. நீங்கள் உடுத்தும் உடைகளும் கூட நியாயத்தீர்ப்பின் நாளிலே, உங்களுக்கு முன்பாக காண்பிக்கப்படும். விஞ்ஞானம் கூட, அதை தொலைக்காட்சியின் மூலம் கண்டறிந்துள்ளது. பாருங்கள், தொலைக்காட்சி ஒரு காட்சியை உருவாக்குகிறதில்லை, அது அதை மாத்திரமே ஒளிபரப்புகிறது. ஆடைகளின் நிறம், நீங்கள் அசையும் ஒவ்வொரு முறையும், உங்களுடைய சிந்தையில் உள்ள ஒவ்வொரு எண்ணமும் முற்றிலுமாக தேவனுடைய பதிவேட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெரிய காரியம் உங்களுக்கு முன்பாக வைக்கப்படும், நீங்கள் அணிந்திருந்த அசுத்தமான ஆடைகள் ஒவ்வொன்றும்; ஒவ்வொரு முறையும் நீங்கள் முடிதிருத்தும் கடைக்குச் சென்றபோது, தேவன் உங்களுக்கு அளித்த அந்த முடியை கத்தரிக்கிறீர்கள். அது காண்பிக்கப்படப்போகிறது. நீங்கள் அதற்காக பதிலளிப்பீர்கள். அங்கே உங்களால் அசையக் கூட முடியாது, நீங்கள் அதைச் செய்து கொண்டிருக்கும்போது, உங்களுடைய இருதயத்தின் எண்ணங்கள் கூட போட்டுக் காண்பிக்கப்படும், உங்களுக்கு முன்பாக இயக்கப்படும். நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்ளப் போகிறீர்கள்? “இவ்வளவு மகத்தான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால், நாம் எப்படி தப்பித்துக்கொள்வோம்?” பார்த்தீர்களா? நாம் தப்பித்துக்கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு அசைவும், இருதயத்தின் சிந்தனைகளும், நீங்கள் உடுத்தும் ஆடையின் நிறமும் கூட, வேறொரு பரிமாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, வண்ணத் தொலைக்காட்சி அதை நிரூபிக்கிறது, அதை வெளியே இழுத்து, அதைக் காண்பிக்கிறது, பாருங்கள், நாம் வாழுந்துகொண்டிருக்கிற மூன்று பரிமாணங்களின் ஒரு பரிமாணமாய் அது உள்ளது. புரிகிறதா?
63137 இப்பொழுது எப்படி விஷம் சபையை தாக்கியுள்ளது, அது பூமியை தாக்கியுள்ளது! விதைகளின் மேல் சாத்தானின் விஷம், அதில் துவாரங்களை உண்டாக்கி, அது உருகுலைக்கப்பட காரணமாயுள்ளது. அது மானிட வர்க்கம் இனக்கலப்பு செய்யப்படுகிற ஒரு இடமாக மாறுமளவிற்கு, விஞ்ஞானம், விஞ்ஞானம், ஜனங்களின் இருதயங்களில் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும். அவன் சபைகளின் இருதயங்களுக்குள் மேலும் மேலும், ஆழமாக பதிக்கிறான்…ஒவ்வொரு விதையும் அந்தந்த விதமான ஒன்றை பிறப்பிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். மானிட வர்க்கமும், தாவரமும், மற்ற யாவும் இனக்கலப்பு செய்யப்பட்டு, நம்மை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது; நம்முடைய சரீரங்கள் கலப்பினமாக்கப்பட்ட பூமியிலிருந்து நம்முடைய உணவை புசிப்பதில், அது நம்முடைய முழு சிந்தைகளும்… இப்பொழுது, நம்முடைய சரீரங்கள் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதிற்குட்பட்டவைகளாக இருந்தால், உயிரணுக்கள் சீரழிவதன் காரணமாக, கலப்பின உணவுகளினால், நம்முடைய மூளையின் உயிரணுக்கள் சீரழிந்து போகவில்லையா? அது உயிரணுக்கள் அல்லவா? அந்தக் காரணத்தினால்தான் ரிக்கி மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை, வீதியினூடாக ஓட்டுகிறான்; ரிக்கெட்டா, எல்விட்டாக்களும் மற்றும் இன்னும் அநேகரை, நாம் பெயரிட்டு அழைக்கும்போது, இங்கே ஜனங்களுக்கு முன்பாக அரை நிர்வாணமாக, ஒழுக்கம் அல்லது ஒழுக்க நெறிகள் பற்றிய கருத்துக்கள் இல்லாமல், மனநிலை சரியில்லாமல் போய்விட்டன.
64138 என்னுடைய சிறு கதை. இந்த போதகர் அவர் மருத்துவமனையில் இருந்ததாகக் கூறினார், அநேக பையன்கள் கூடாரத்தில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், சிலர்…அவன் வெளியிலிருந்து வந்திருந்தான் என்றும் கூறினான். அவர் அங்கு சென்றதாகக் கூறினார், ஒரு அதிகாரி அவரிடம் கூறினார், “போதகரே, நாங்கள் சவாரி செய்து, அங்கே வயல்வெளிகளை பார்க்க விரும்புகிறோம்” என்றனர். அந்நாட்களில் அவர்கள் செய்தது போல, அவர்கள் இந்த கடுகு மற்றும் குளோரின் வாயுவை வீசியிருந்தனர். 139 மேலும், “சகோதரன் பிரான்ஹாம், நான் அங்கு சென்றேன், ஒரு மரத்தின் பட்டை கூட இல்லை, அங்கே ஒரு துளிர் புல்லும் இல்லை. அது ஒரு ஈஸ்டர் காலையாயிருந்தது” என்றார். அவர், “அங்கே சில பழமையான உடைந்த தொட்டிகள் இருந்தன, அந்த அதிகாரி அவைகளைக் குறித்த பதிவேடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது, மகத்தான ஆர்கான் காடுகளுக்கு அருகில், அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்” என்றார். மேலும், “நான் அங்கு தனியாக நின்றுகொண்டிருந்தபோது,” என்று கூறி, “நான் மேலே நோக்கிப் பார்த்து, என்று கூறி, ‘ஓ, தேவனே, இந்தவிதமாகத்தான் இவை யாவும் வந்து கொண்டிருக்கின்றன’” என்றார். அது உண்மை, அது வந்து கொண்டிருக்கிறது. அது முழுவதும் எரிந்து போனது, எங்கும் ஜீவன் இல்லை, புற்கள் எரிந்துபோயின; மரங்கள், அந்த வாயுக்களால் மரங்கள் கொல்லப்பட்டன, எல்லாமே கொல்லப்பட்டன, முறுக்கப்பட்டு, கீழே தொங்கிக்கொண்டிருந்தன, அங்கு தோட்டாக்கள் அதைத் துளைத்திருந்தன.
65140 அது இன்றைக்கு உலகத்தைப் பற்றிய ஒரு காட்சியாயில்லையென்றால், அங்கே சாத்தான் அவனுடைய அவிசுவாசத்தையும், அவனுடைய கலப்பினத்தையும், அவனுடைய விஞ்ஞானத்தையும், அவனுடைய அறிவையும் தெளித்துக் கொண்டிருக்கிறான். ஆதியில் தேவன் ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்தில் வைத்தபோது, மரணமில்லாத அந்த அழகான பரதீசில், சுகவீனமில்லாமல், துக்கமில்லாமல், ஒவ்வொரு காரியமும் பரிபூரணமாக ஒழுங்கில், சாத்தானின் டிடிடி என்ற விஷத்தெளிப்பு என்ன செய்துள்ளது என்பதைப் பாருங்கள்! அவள் ஒரு குழப்பத்தில் உள்ளாள். அதில் ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை. 141 அவர், “நான் அழத் துவங்கினேன். நான் திரும்பி நடந்தேன், நான் ஒரு கன்மலையினால் கவரப்பட்டேன்” என்று கூறினார். மேலும், “நான் அங்கு சென்று கன்மலையை நோக்கிப் பார்த்து, அதை தள்ளினேன். கன்மலையின் கீழே ஒரு சிறிய வெள்ளை மலர் வளர்ந்து கொண்டிருந்தது, அது ஒரு கன்மலையினால் பாதுகாக்கப்பட்டிருந்தபடியால், அந்த ஜீவன் மாத்திரமே மீதியாக விடப்பட்டிருந்தது” என்றார். 142 தேவனே, என் கன்மலையே, இன்றைக்கு எங்களுக்கு புகலிடமாயிரும், ஓ தேவனே, இந்த விஷங்கள் விஞ்ஞானம் மற்றும் கல்வி என்ற பெயரால் எங்கும் பறந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கு புகலிடமாயிரும். ஓ, தேவனே, அந்த நாள் வரைக்கும் என்னை காத்துக் கொள்ளும் என்பதே என்னுடைய ஜெபமாயுள்ளது. இப்பொழுது நாம் ஒவ்வொருவரும், கிறிஸ்துவாகிய, அந்தக் கன்மலையின் கீழ் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன்.
66143 அன்றொரு நாள் நான் பிரசங்கித்தேன், உங்களில் அநேகர் அதைக் கேட்டிருக்கிறீர்கள். நான் காடுகளினூடாக சென்று, வேட்டையாடிக்கொண்டிருந்தேன், நான் திரும்பும்படி கவரப்பட்டேன். நான் நோக்கிப் பார்த்தபோது, அங்கே ஒரு வெற்று சிகரெட் பெட்டி கிடந்தது அல்லது நீங்கள் அதை என்ன என்று அழைக்கிறீர்கள். அது ஒரு நிறுவனம், அவர்களுடைய பெயரை நான் கூறக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் புகையிலை நிறுவனம்…அவர்கள், “ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி, புகைப்பிடிக்கும் மனிதனின் ருசி” என்ற ஒரு விளம்பரக் கவர்ச்சி வாசகத்தை வைத்துள்ளனர். 144 நான் காட்டுக்குள் இன்னும் சிறிது தூரம் நடந்து செல்லத் துவங்கினேன், ஏதோ ஒன்று என்னை கவர்ந்து, “அந்த சிகரெட் பெட்டிக்கு திரும்பிச் செல்” என்றது. 145 நான், “பரலோகப் பிதாவே, நான் இங்கே அந்த மரத்தண்டைக்குச் செல்லப் போகிறேன் ஒரு நாள் காலையில், அந்த அணில்கள் உம்மால் உரைக்கப்பட்டு சிருஷ்டிக்கப்பட்டிருந்தன. நீர் ஏன் என்னை திரும்ப அழைக்க வேண்டும்?” என்று நினைத்தேன். 146 மேலும் ஏதோ ஒன்று, “ஞாயிற்றுக்கிழமைக்காக உனக்கு ஒரு பிரசங்கம் வரப்போகிறது. அதன் மேல் பாடப்பொருள் எழுதப்பட்டுள்ளது” என்றது. நான், “ஒரு சிகரெட் பெட்டியில் உள்ளதா?” என்று நினைத்தேன். நான் திரும்பிச் சென்றேன். 147 நான், “சிந்திக்கிற மனிதனின் வடிகட்டி” என்று நான் நினைக்கத் துவங்கினேன், அது என்ன ஒரு வஞ்சகம்! ஒரு மனிதன் சிந்திக்கின்ற மனிதனாயிருந்தால், அவன் புகைப்பிடிக்கவேமாட்டான். ஆனால், நீங்கள் பாருங்கள், ஜனங்கள் அதை விழுங்கிவிடுகின்றனர்.
67148 அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் தொடர் கூட்டங்கள் ஒன்றிற்கு சென்றிருந்தபோது என்று நான் நினைக்கிறேன், மேற்குக் கடற்கரையில் நடந்த உலகக் கண்காட்சிக்கு நான் சென்றிருந்தேன். அவர்கள் யூல் பிரைன்னரின் புகைப்படத்தையும் இன்னும் அநேகரையும் அங்கே வைத்திருந்தனர். விஞ்ஞானிகளும், அவர்களில் அநேகரும், புகைபிடிப்பதனால் ஏற்படும் அபாயத்தைக் குறித்து, அதே அறையில் விளக்கிக்கொண்டிருந்தனர். எப்படியாய் அவர்கள் அந்த புகையை ஒரு பளிங்குக் கல்லின் மேல் ஊதி, ஒரு சிறு க்யூ-முனை கொண்ட கண்ணாடி குழலைக் கொண்டு அங்கேயிருந்த அந்த நிகோடினை எடுத்து, அதை ஒரு எலியின் முதுகில் போட்டு, அதனைக் கூண்டில் அடைத்து வைத்தபோது, ஏழு நாட்களில் அதனால் நடக்கக்கூட முடியாத அளவுக்கு புற்று நோயினால் நிறைந்திருந்தது. பார்த்தீர்களா? அவர் கூறினார்…அதை தண்ணீரினூடாக இழுத்து, “வடிகட்டி” என்றார். 149 “வடிகட்டியா? அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது” என்றார். “நீங்கள்…” என்றார். இப்பொழுது, இது விஞ்ஞானம் தாமே. அவர்கள், “உங்களுக்கு தார் இருந்தாலொழிய நீங்கள் புகையை உண்டாக்க முடியாது. தார் புகையை உண்டாக்குகிறது.”
68150 மேலும் ஒரே காரியம் என்னவெனில், அதிகமான சிகரெட்டுகளை விற்பதற்கான ஒரு வித்தை, அது…என்றால்…நீங்கள் என்னை இழிவாகக் கருதுகிறவன் அல்லது ஒரு மதவெறியன் என்று நினைக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மனிதனுக்குள் இருக்கும் அந்த பிசாசு, அவனைக் கொல்லும்படிக்கு, அது அவனைப் புகை பிடிக்கச் செய்கிறது. அவன்—அவனுக்கு ஒரு சிகரெட்டின் நிகோடின் தேவைப்படுகையில், அது அவனுடைய வாஞ்சையை அளிக்கும், இப்பொழுது இந்த நிறுவனம் இந்த ஏமாற்றும் வித்தையுடன் வந்து, “ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி” என்று கூறுகிறது. அவன் தாரை உண்டுபண்ண, ஒரு சிகரெட்டைப் புகைப்பதற்கு பதிலாக, நான்கு அல்லது ஐந்து சிகரெட்டுகளைப் புகைக்க வேண்டும் (அவனைத் திருப்திபடுத்த). தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு மரணத்தை விற்கும் அமெரிக்கர்கள்! எனக்கு அது புரியவில்லை.
69151 ஆனால் அதேசமயத்தில், அங்கே, “சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி சரியானதாய் இருக்கிறது ” என்று நான் எண்ணினேன். 152 இப்பொழுது, ஒரு மனிதன் புகைத்துக் கொண்டிருந்தால், நினைவிருக்கட்டும், அது புகைபிடிக்கும் மனிதனின் சுவையை உண்டாக்குகிறது. அப்படியானால், நீங்கள் அங்கே புகைக்கும் வரை, உங்களால் ஒரு வாஞ்-…ஒரு புகையின் வாஞ்சையை நிரப்ப முடியவில்லையென்றால், நீங்கள்…ருசியை உண்டாக்க வேண்டும், எனவே, நீங்கள் வழக்கமான ஒரு சிகரெட்டைப் புகைப்பதற்குப் பதிலாக, நான்கு அல்லது ஐந்து சிகரெட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்கி புகைக்கக் கூடும். பாருங்கள், அது ஒரு வித்தை, ஒரு விற்பனை வித்தை; ஜனங்களை, அமெரிக்கர்களை வஞ்சிக்கிறார்கள். நான் ஃபோர்ஜ் பள்ளத்தாக்கில், ஜார்ஜ் வாஷிங்டன்; தன்னுடைய மூன்றில் இரண்டு பங்கு போர்வீரர்களோடு, அவர்களுடைய காலில் காலணிகள் ஏதுமின்றி, அந்த குளிரான நாளில், நமக்கு இப்பொழுதுள்ள செழிப்பை சம்பாதித்ததையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்! அதன்பின்னர் அமெரிக்கர்கள் அமெரிக்கனுக்கு, அவனுடைய சகோதரனுக்கு, சகோதரிக்கு, மரணத்தை, ஒரு போலியான வித்தையின் கீழ், எல்லா பொல்லாப்புக்கும் வேராயிருக்கிற, அசுத்தமான ஆதாயத்திற்காக விற்பனை செய்கிறார்கள். பணத்திற்கான ஏக்கம், அன்பு. இந்த முழு காரியமும் அழிந்துபோகும் என்பதை அறியாமல், முழு காரியமும் பைத்தியமாகிவிட்டதே! ஆனால் நீங்கள் புகையைப் பெற்றுக்கொள்ளவில்லையென்றால், நீங்கள் அந்த ருசியைப் பெற்றுக்கொள்ள முடியாது.
70153 அப்பொழுது நான், “சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி உள்ளது” என்று எண்ணினேன். ஒரு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி! “ஒரு சிந்தையுள்ள மனிதனின் வடிகட்டி ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையை உற்பத்தி செய்கிறது” என்பதிலிருந்து என்னுடைய பாடப்பகுதியை நான் எடுத்தேன். 154 எனவே நம்முடைய ஸ்தாபனங்கள் அதைப் போன்ற ஏராளமான காரியங்களைச் செய்துள்ள, ஜனங்களை ஏற்றுக்கொள்ள, எவ்வகையிலும் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். ஏன்? அவர்கள் தங்களுடைய ஸ்தாபனங்களிலோ அல்லது ஸ்தாபன அமைப்புகளிலோ அதிகமாகப் பெறுகிறார்கள். நாம் அங்கு அதிகமாக உள்ளே வருகிறோம், ஏனென்றால் நாம் அவர்களை இந்த, அது, மற்றது , மற்றும் எந்த காரியத்தின் கீழும் உள்ளே வர அனுமதித்தோம். “அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை, எனவே அவர்கள் தங்களுடைய பெயரை புத்தகத்தில் பதிவு செய்துகொண்டு, அவர்கள் ஒரு கிறிஸ்தவர் என்று கூறுகின்றனர். அவ்வளவுதான். ஓ, ‘விசுவாசத்தினாலே நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்.’ நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.” பிசாசும் அதேக் காரியத்தைச் செய்கிறான். ஆம். 155 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும், அது தேவனுடைய வடிகட்டியினூடாக வருகிறதே! இப்பொழுது சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி உள்ளது. நான் அதை என் கரத்தில் பிடித்திருக்கிறேன். அது ஒரு ஸ்தாபன சுவையை பிறப்பிக்காது, ஆனால் அது நிச்சயமாக ஒரு பரிசுத்த மனிதனின் சுவையை திருப்திபடுத்தும் என்பதை, நீங்கள் அறிவீர்கள்.
71156 குட்டை முடியையுடைய ஒரு பெண்மணி இந்த வடிகட்டியினூடாக எப்படி வரமுடியும்? வேதம் “ஒரு புருஷனுடைய உடையை ஒரு ஸ்திரீ தரிப்பது தேவனுக்கு அருவருப்பாயிருக்கிறது” என்று கூறுகிறபோது, குட்டைக் கால்சட்டைகளை அல்லது தளர்கால் சட்டைகளை அணிந்த ஒரு பெண் அதனூடாக எப்படி வர முடியும்? தன்னைக் குறித்து எந்தக் காரியத்தையாவது பெரிதாக நினைக்கிற ஒரு மனிதனால் எப்படி இங்கிருந்து வெளியே வந்து ஸ்திரீகளைப் போல உடை உடுத்தி, அவனுடைய தலைமுடியை ஒரு பெண்மணியைப் போல வளரவிட்டு, அவனுடைய கண்களுக்கு கீழே இறக்கி, அந்த விதமாக சுருட்டிவிட்டுக் கொள்ளுபவனின் நிலை என்ன? அவன் தன்னுடைய மனைவியினுடைய உள்ளாடைகளை அணிந்துள்ளான். அவள் அவனுடைய வெளிப்புற ஆடைகளை அணிந்திருக்கிறாள். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியா? ஒரு சிந்திக்கும் மனிதன் அதைச் செய்யமாட்டான், அல்லது ஒரு சிந்திக்கும் ஸ்திரீ அதைச் செய்யமாட்டாள். தேவனுடைய வார்த்தை அதைக் கடந்து செல்ல அனுமதிக்காது. 157 அந்த வார்த்தையினூடாக எந்த ஒரு காரியமும் கடந்து செல்ல முடியாது. அதுதான் பரிசுத்த ஆவி, அது உங்களுக்குள் வார்த்தையைக் கொண்டு வருகிறது, அது ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையை உற்பத்தி செய்கிறது.
72158 இன்றைக்கு பாருங்கள், தெருவில் உள்ள ரிக்கெட்டா, தேவன் அவளுக்கு அளித்த அழகான, அழகான உடற்கூறியல், சாத்தான் அதை உபயோகிக்கிறான். அவள் மிகவும் ஒழுக்கக்கேடாக உடை உடுத்திக்கொள்வாள், அதாவது இன்றிலிருந்து ஒரு வாரத்தில் அவள் கல்லறையில் அழுகிக் கொண்டிருக்கக் கூடும் என்பதை அறியாமலேயே இருப்பாள். 159 அண்மையில் இங்கே தெருவில் வந்தேன். மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு அசெம்பளீஸ் ஆஃப் காட் சபையின் ஒரு தொடர் கூட்டத்தில், தென்மேற்கு வேதாகமப் பள்ளியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். ஒரு சிறு பெண்மணி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாள், ஒரு சிறிய…அந்த சிறிய ஆடை அணிந்து, குளியல் ஆடை அணிந்து, நீங்கள் அதை என்னவென்று அழைத்தாலும் சரி, அதன் ஓரம் வெளியே தொங்கிக்கொண்டிருக்க, ஒரு மாடு மேய்க்கும் பையனின் தொப்பியோடும், காலணிகளோடும் சென்றுகொண்டிருந்தாள். நான் சாலையில் சென்றுகொண்டிருந்தேன். நான், “பாவம் சிறு பெண், ஏதோ ஒரு தாய், தகப்பனாரின் பிள்ளை, தேவனுடைய குமாரத்தியாக இருக்க இங்கே வைக்கப்பட்டாள், பிசாசின் தூண்டிலின் கண்ணியாக ஆகிவிட்டாள்” என்று எண்ணினேன். “நான் திரும்பிப் போய், அந்தச் சிறுமியிடம் அதைச் சொல்லலாம் என்று நான் நினைக்கிறேன்” என்று நான் எண்ணினேன். அவள் அங்கே பதினேழு, பதினாறு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய என்னுடைய சாராளின் வயதுடையவளாய் காணப்பட்டாள். நான், “இல்லை, நான் செய்யாமல் இருப்பது நல்லது. நான் இங்கே சாலையில் சென்று அவளுக்காக ஜெபிப்பேன். யாராவது நான் நின்று அவளிடம் பேசுவதைக் கண்டால், நான் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது” என்று எண்ணினேன்.
73160 இப்பொழுது, தேவனுடைய புத்திரர்களே, கவனியுங்கள், உங்களிடத்தில் இதே இடத்தில், இந்த நாளின் யேசபேல்கள் உங்களுக்கு இசைந்து விளையாடுகின்றனர், ஆனால் சிந்திக்கும் மனிதன் முதலில் சிந்திப்பான். அவள் மிகவும் அழகாக இருக்கலாம், அது “என்னால் அவளைக் கவர முடியும்” என்பதாக இருக்கலாம், ஆனால் அது உன்னுடைய ஆத்துமாவை நஷ்டப்படுத்திவிடும், மகனே; பெண்களாகிய உங்களில் சிலர், இந்த ரிக்கிகளுக்கு! சிந்திக்கும் மனிதனின் வடிகட்டி ஒரு பரிசுத்த மனிதனின் சுவையை உற்பத்தி செய்கிறது. 161 விவாகமான புருஷர்களாகிய நீங்கள், தேவனுடைய புத்திரராகிய நீங்கள், அந்தவிதமான தெருவில் அந்த ஸ்திரீகளை நீங்கள் காணும்போது, ஆதியில் என்ன சம்பவித்தது என்பதை நீங்கள் உணரவில்லையா? தேவனுடைய புத்திரர்கள் மனுஷகுமாரத்திகளை பெண்கொள்ளுமளவிற்கு (தேவனுடைய குமாரத்திகள் அல்ல), ஜலப்பிரளய அழிவிற்கு முன்பிருந்த பெண்களை விஞ்ஞானம் அழகியவர்களாக ஆக்கியிருந்தபோது, தேவன் அதை ஒருபோதும் மறக்கவேயில்லை. அவர்கள் முழு காரியத்தையும் அழித்துப் போட்டனர்; விஞ்ஞானம், அழகானது. அது வழக்கமாக இருந்தது…கடைசி நாட்களில் பெண்களின் அழகு அதிகமாயுள்ளதை நீங்கள் கவனியுங்கள், அது முடிவின் அடையாளமாயிருக்கிறது; தேவன் அதை நிரூபித்திருக்கிறார். எனவே, சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியைப் பயன்படுத்தினால், நீங்கள் ஒரு பரிசுத்த மனிதனுடைய சுவையைப் பெற்றுக்கொள்வீர்கள். அது உங்களுடைய வீட்டையே இழக்கச் செய்யும். அது உங்களுடைய ஸ்தானத்தையே இழக்கச் செய்யும். அது நீங்கள் பெற்றுள்ள எல்லாவற்றையும் இழக்கச் செய்யும்; அதுமட்டுமின்றி, உங்களுடைய ஆத்துமா! அது உங்களுடைய வீட்டை உடைத்துவிடும். மற்றொரு மனிதன் உங்களுடைய பிள்ளைகளை வளர்க்கலாம் அல்லது வேறொரு ஸ்திரீ உங்களுடைய பிள்ளைகளை வளர்க்கலாம்.
74162 சிந்திக்கும் ஒரு மனிதனின் வடிகட்டியை எடுத்துக் கொண்டால், அது ஒரு பரிசுத்த ஸ்திரீயின் சுவையை உற்பத்தி செய்யும். நீங்கள் முடிதிருத்தும் கடைக்கு செல்லும்போது, அல்லது வேறு ஏதோ காரியத்திற்கு செல்லும்போது, அவர்கள் உங்களிடம், “உனக்கு தலைவலி ஏற்படப் போகிறது, உனக்குத் தெரியும்” என்று கூறுவார்கள். சிந்தித்துக் கொண்டிருக்கிற ஒரு ஸ்திரீயினுடைய வடிகட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், வேதம் என்ன கூறியுள்ளது என்பதை எடுத்துக் கொள்ளுங்கள், பாருங்கள், அதன்பின்னர் அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். பார்த்தீர்களா? நீங்கள் அதைச் செய்யாதீர்கள். 163 நான் உங்களுடைய சகோதரன், நான் உங்களை நேசிக்கிறேன். உங்களுக்கு எதிராக நான் ஒன்றும் கூறவில்லை. தேவன் அறிந்திருக்கிறார். அதுவே நான் செய்கிற காரியங்களைக் கூறும்படி என்னைத் தூண்டுகிறது, தேவனுக்கு உங்கள் பேரில் உள்ள அன்பின் காரணமாகவேயாகும். ஒரு மனிதன் அங்கு சென்று, அவர் அதை உங்களிடம் கூறவில்லையென்றால், உங்களுடைய போதகர் நீங்கள் ஒழுங்கீனமாக செயல்பட அனுமதிப்பாரானால், அவர் உங்களை நேசிக்கவில்லை. அவரால் உங்களை நேசிக்க முடியாது. ஸ்திரீகளுக்கான அந்த விதமான அன்பை நான் விரும்பமாட்டேன். நான் என்னுடைய சகோதரிக்காக ஒரு பரிசுத்த ருசியைக் கொண்டிருக்க விரும்புகிறேன். அவள் உண்மையாகவே என்னுடைய சகோதரியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவள் மிகவும் அழகாக இருக்கிறாள், அவள் எப்படி இருக்கிறாள், அந்த பாலியல் உணர்வுகளைத் தூண்டும் இராணிகள், என்று யாரோ கூறும்படி அல்ல, “அவள் என்னிடம் செல்கிறாள்…” ஹூ-ஹூ. இல்லை. அவள் ஒரு பண்புள்ள பெண்மணியாக இருக்க நான் விரும்புகிறேன்! 164 ஓ, கர்த்தாவே என்னைக் கன்மலையின் கீழ் காத்துக்கொள்ளும். ஆம். எபேசியர் 5:26-ல், உள்ள ஒரே ஒரு வழியை மாத்திரமே நீங்கள் அந்தக் கன்மலையினூடாகச் சென்று, அதாவது, “திருவசனத்தினால் தீட்டுக்கழிக்கும் ஜலத்தைக் கொண்டு கழுவப்படுதல்” என்பதாகும். அது உண்மை.
75165 இப்பொழுது, இந்த பிசாசு தன்னுடைய கல்வியினால் உங்களை தெளிக்கவிட வேண்டாம். இல்லை, இல்லை. அது உங்களுடைய செல்வாக்கைக் கொன்று போடும். பிசாசு அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டாம், “பாருங்கள், நான் என் தாயார், என்னுடைய தகப்பனார், என்னுடைய பாட்டி சார்ந்திருந்த சபையை சேர்ந்தவன்” என்றான். பிசாசு அதை உங்களுக்கு தெளிக்க அனுமதிக்க வேண்டாம். வேதம் ஏற்கனவே, ஏழு சபைக் காலங்களைக் குறித்து கூறியுள்ளது, இவை அனைத்தும் விதைக்குள் சென்றுவிட்டன! அது உண்மை. முழு காரியமும் சீர்கேடாய் உள்ளது. முழு காரியமும் ஒரு அழுகிப்போன புண். அவன் உங்களுக்கு தெளிக்க அனுமதிக்க வேண்டாம், “பாருங்கள், இது உயர்ந்த நெறிமுறைகள். நாங்கள் பண்டைய நாட்களில் இருந்ததைக் காட்டிலும் அதிக கல்வியறிவு பெற்றுள்ளோம்” என்கின்றனர். பிசாசு அதை உங்கள் மேல் சுமத்த அனுமதிக்காதீர்கள். அவனுடைய நாகரீகம், கல்வி மற்றும் விஞ்ஞானம் முழுவதையும் நான் உங்களுக்கு காண்பித்திருக்கிறேன். அவன் அதை சபைக்குள்ளாக வைத்திருக்கிறான், நீங்கள் அதற்கு செவிகொடுக்க வேண்டாம். பழைய அசிங்கமான தொலைக்காட்சிகள் நிகழ்சிகள் மற்றும் மற்ற காரியங்களிலிருந்து உங்களை விலக்கி வைத்துக் கொள்ளுங்கள்!
76166 நம்முடைய பாடப்பொருள், “அந்த வேஷத்தைத் தரித்துக்கொள்ளாமல், மறுரூபமாகுங்கள்” என்று கூறுகிறது. “ஞாயிற்றுக்கிழமை, நான் உறுதிபடுத்தப்பட்டேன்” என்று கூறுவதல்ல. இல்லை. நீங்கள் என்னவாக இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அந்தவிதமாக நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதிலிருந்து இப்பொழுது மறுரூபமாகி உள்ளே சென்று இப்பொழுதே மறுரூபமாகுங்கள். 167 இப்பொழுது, அது உங்களுக்குள் எந்த விதமான வித்து உள்ளது என்பதைப் பொறுத்தது. ஒரு அறிவாற்றல், கல்வி வித்து உங்களுக்குள் வைக்கப்பட்டிருந்தால், அது ஒரே ஒரு காரியத்தை மாத்திரமே செய்ய முடியும், ஒரு தேவனுடைய குமாரனாகவோ அல்லது குமாரத்தியாகவோ உங்களை உருகுலைக்க வேண்டும், அவ்வளவுதான். அது ஒன்றே ஒன்றுதான் செய்ய முடியும். இன்றைக்கு ஜனங்கள், நான் நோக்கிப் பார்க்கையில், தேவன் ஒருவர் உண்டு என்று கூட அவர்கள் நம்பாதது போன்று அவர்கள் நடந்து கொள்கின்றனர்.
77168 இவ்விதம் வெளிப்படுத்திக் கூறுவதற்கு மன்னிக்கவும். இதன் மூலம் எவருடைய உணர்வுகளும் புண்படுத்தப்பட்டிருந்தால், நான் அதை அந்த நோக்கத்துடன் கூறவில்லை. இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சியில் ஒரு மதசம்பந்தமான பாடலைப் பார்க்க, என்னுடைய சொந்த மகளினால் நான் அழைக்கப்பட்டிருந்தேன். அது ஞாயிறு காலை வேளையாய் உள்ளது. நான் ஓரல் ராபர்ட்ஸை அவருடைய நிகழ்ச்சி நிரலைக் கேட்க விரும்பினேன், நான் அதை எனக்குத் தெரியப்படுத்தும்படி அவர்களிடம் கூறினேன். மேலும், “நீங்கள் இதைக் கேளுங்கள், இது பாடும் ஒரு மகத்தான பாடலாயிருக்கிறது” என்றாள். அங்கே நின்று கொண்டிருந்த என் மகனும் கூட அதைக் குறித்து என்னிடத்தில் கூறினான், நான் அந்த தொலைக்காட்சியைத் திருப்பினேன்… 169 தன்னுடைய வீட்டில் தொலைக்காட்சியை வைத்திருக்கும் ஒரு பெண்மணியிடம் நாங்கள் வாடகைக்கு வாங்குகிறோம். நான் என்னுடைய வீட்டில் அந்த ஒன்றை வைத்திருக்க ஒருபோதும் எண்ணியதில்லை. இல்லை ஐயா. என்னுடைய வீட்டில் அந்தக் காரியம் எனக்கு வேண்டாம். நான் என்னுடைய துப்பாக்கியினால் அதை சுட்டுவிடுவேன். அந்த பொல்லாத காரியத்தோடு நான் எந்த தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. இல்லை, ஐயா! ஆனால் ஒரு…
78170 இங்குள்ள அரிசோனியர்களாகிய உங்களைக் குறித்து நான் உங்களுக்கு கூறட்டும். பள்ளிகளைக் குறித்த அந்த ஆய்வை நீங்கள் பார்த்தீர்கள், இல்லையா? அரிசோனா பள்ளிகளில் எண்பது சதவிகிதம் பிள்ளைகள் மனநலக் குறைபாட்டினால் அவதியுறுகின்றனர், அவர்களில் அறுபத்தேழு சதவிகிதத்தினர் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அதைக் குறித்து எப்படி? 171 நீங்கள் உங்களுடைய துப்பாக்கியை உபயோகிப்பது நல்லது! பார்த்தீர்களா? இப்பொழுது, பிசாசு அதை உங்களுக்கு தெளிக்க அனுமதிக்க வேண்டாம். இல்லை ஐயா. இப்பொழுது ஜனங்கள், நான் கூறினது போன்று, ஜனங்கள் நியாயத்தீர்ப்புக்கு வர வேண்டிய அவசியமில்லை என்பது போன்று நடந்து கொள்கின்றனர். 172 இந்த பையன்களும் பெண்களும், அவர்கள் சில இந்திய குடும்பங்களை உடையவர்களாயிருந்தனர், மேலும் நிறைய பொருட்கள் இருந்தன. திரு. பூல் என்ற பெயர் கொண்ட ஒரு நபர் அதன் தலைவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நான் எப்போதாவது ஒரு நவநாகரீக பரியாச சங்கீதப் பாடல்களைக் கண்டிருப்பேனேயானால், அது அவர்கள் அதைக் கையாண்ட விதமாயிருந்ததுதான்; ஒரு கூட்ட ரிக்கிகள் அங்கே நின்று கொண்டு, தங்களுடைய கரங்களை மேலும் கீழும் குலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
79173 இந்தக் காலையில் இங்குள்ள அந்த வாலிபனை, ஒரு உண்மையான மனிதனைப் போன்று கண்ணியமாக காணப்பட்டு, பாடினதை நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். நான்—நான் அதை விரும்புகிறேன். நீங்கள்—நீங்கள் சில சமயங்களில் வர்த்தக புருஷர்களாகிய நீங்கள் இங்கு நிற்கும் இந்த ஒரு கூட்டு ரிக்கிகளை, கூக்குரலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், தொடர்ந்து தங்களுடைய மூச்சைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் முகம் நீல நிறமடையும் வரைக்கும்; அது பாடுவது அல்ல, அது விஞ்ஞான ரீதியாக அதிக சத்தத்தை உண்டுபண்ணுகிறது. பாடுவது என்பது “இதயத்திலிருந்து வரும் இன்னிசை” ஆகும்.
80174 நான், “என்ன ஒரு பரிதாபம்! அது என்ன ஒரு அவமானமாய் உள்ளது! ஆகையால் எப்படி மார்க்கத்தின் பெயரால், தேவன் இல்லை என்பது போன்று அவர்கள் நடந்து கொள்கிறார்கள்!” அன்றொரு நாள் என்னுடைய மகளோடு சென்ற ஒரு பையனிடத்தில் ஒருவர், கிறிஸ்தவ பையன், ஆதாம் ஏவாளைக் குறித்து ஒரு புத்திசாலித்தனமான கருத்தைக் கூறி, “ஏவாள் தோட்டத்தினூடாக செல்கிறாள். அவர், ‘பிள்ளைகளே, நீங்கள் அந்த மரத்தை அங்கே காண்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘அங்குதான் உங்களுடைய தாயார் புசித்து நம்மை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டாள்’” என்றார். ஒரு தீவிரமான கிறிஸ்தவனாக கருதப்படுபவன், அது ஒரு வாக்குத்தத்தத்தையும், ஒரு தேவனுடைய வார்த்தையையும் எடுத்து, அதை ஒரு பன்றி பட்டியில் எறிந்துவிடுவது என்பதை உங்களால் யூகித்துப் பார்க்க முடிகிறதா! அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு வர வேண்டியதில்லை என்பது போன்று அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆனால் தேவன் ஒவ்வொரு இரகசியத்தையும் நியாயத்தீர்ப்புக்குள் கொண்டு வருவார். தேவன் இல்லை என்பது போன்று அவர்கள் நடந்து கொள்கின்றனர்.
81175 நான் அவர்களை முட்டாள் என்று அழைக்க விரும்பவில்லை, ஏனென்றால் வேதம் மதிகேடனை…சரியல்ல என்று கூறியுள்ளது. அது அல்ல என்று இயேசு கூறினார். “எந்த மனிதனையும் முட்டாளென்று அழைக்காதே.” ஆனால் சங்கீதம் 14:1-ல், “தேவன் இல்லையென்று மதிக்கெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்கிறான்.” பார்த்தீர்களா? அவர்கள்—அவர்கள் இல்லை…நான் அவர்களை முட்டாள்கள் என்று அழைக்க விரும்பவில்லை, ஆனால் அவர்கள் அவர்களைப் போலவே செயல்படுகிறார்கள். அவர்கள் அதைப் போலவே நடந்து கொள்கிறார்கள். 176 ஆகையால், “தேவன் இல்லை” என்பது போன்று, இன்றைக்கு நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். “நான் சபையைச் சேர்ந்தவன்!” அவை யாவும், முழுக் காரியமும், வேதாகமம், ஒரு பெரிய கேலிப் பொருளாய் உள்ளது. “அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை எங்களுடைய சபை அறிந்திருக்கிறது!” ஆம்… [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] …சரியாக, நேராக நரகத்திற்கே. அவர்களுடைய பாதையில், விஞ்ஞானம், கல்வி, வேத சாஸ்திர கருத்தரங்குகள் மற்ற காரியங்கள், அவைகள் வீதியின் வழியாக கடந்து செல்கின்றன. பரிசுத்த ஆவியானவருக்கு எந்த ஒரு காரியத்தின் பேரிலும் வெளிப்பாட்டை அளிக்க வாய்ப்பேயில்லை; வேதாகம கருத்தரங்கு அதை வெட்டிவிட்டது. 177 பரிசுத்த ஆவியானவரே நம்மை வழி நடத்த வேண்டும்; ஒரு வேதபாட கருத்தரங்கு அல்ல, பேராயர்களும், கண்காணிகளும் அல்ல. பரிசுத்த ஆவியானவரே நம்முடைய தலைவர்.
82178 காயீன் அதைப் போன்ற ஒரு நபராய் இருந்தான். அவன் மிகவும் பக்தியுள்ளவனாயிருந்தான். இப்பொழுது, நீங்கள் பெற்றிருக்க வேண்டியதெல்லாம் மார்க்கம் மாத்திரமேயென்றால், அப்பொழுது தேவன் காயீனை ஆக்கினைக்குட்படுத்தியதன் மூலம் அநீதியுள்ளவராயிருந்தார். ஏனென்றால் அவன் பக்தியுள்ளவனாயிருந்தான், அவன் ஆபேலைப் போலவே பக்தியுள்ளவனாகவும், உத்தமமுள்ளவனாகவும் இருந்தான். இப்பொழுது நினைவிருக்கட்டும், அவன் தேவனை நினைத்தான், அவன் தேவனை தொழுதுகொண்டான், அவனுக்கு ஒரு சபை இருந்தது, அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான், அவன் ஒரு பலி செலுத்தினான், அவன் ஜெபித்தான், அவன் ஆராதித்தான், ஆனால் அவன் புறக்கணிக்கப்பட்டான். எப்படியிருந்தாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை…ஏசாவும், கூட. பார்த்தீர்களா? 179 மதம், பாருங்கள், அது சாத்தானின் வேலை; முழு காரியத்தையும் கொல்ல அல்ல, ஆனால் அதை மாசுபடுத்துவதேயாகும். அவ்வளவுதான். அவன் முழு காரியத்தையும் கொல்லப்போவதில்லை. ஓ, கம்யூனிஸ்டுகள் அல்ல; இல்லை, இல்லை, அந்திக்கிறிஸ்து கம்யூனிஸம் அல்ல. வேதம், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அது வஞ்சிக்கும்” என்று கூறியுள்ளது. இரும்புத்திரையைக் கவனிக்காமல், இரத்தாம்பர நிறத் திரையைக் கவனியுங்கள். ஹூ-ஹூ.
83180 ஆனால், கவனியுங்கள், காயீன் தொழுதுகொள்ள வந்தான், ஆனால் அவன் அவனுக்குள் தவறான வித்தை, சர்ப்பத்தின் வித்தை உடையவனாயிருந்தான். அவன் ஸ்திரீயின் வித்தாயிருந்தபடியால், சர்ப்பத்தின் சீற்றம் அவன் மேல் வீசியிருந்தது. அவன் தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிந்திருந்தான், ஆனால் அவன் அதைச் செய்ய மறுத்துவிட்டான். அது உங்களுக்குத் தெரியுமா? சாத்தான் தேவனுடைய சித்தத்தை அறிந்திருக்கிறான், ஆனால் அதைச் செய்ய மறுக்கிறான். 181 கவனியுங்கள், தேவன் ஆபேலின் செய்தியை ரூபகாரப்படுத்துவதை அவன் கண்டிருந்தான். இப்பொழுது நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், ஒரு நிமிடம் உங்களுடைய சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை உபயோகியுங்கள். ஆபேலின் சரியான செய்தி, அது சத்தியம் என்று தேவன் ரூபகாரப்படுத்தினார்! இப்பொழுது நீங்கள் கிரகித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஹூ-ஹூ. ஆபேலின் செய்தி ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. காயீன் அதைக் கண்டான், தேவன் அந்த செய்தியை சரியாக ரூபகாரப்படுத்தியிருந்தார் என்பதை அறிந்திருந்தான். ஆனால் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அவனுடைய பெருமை அதிலிருந்து அவனைத் தடுத்தது. அது உண்மை, அவனுடைய பெருமை அதைச் செய்வதிலிருந்து அவனைத் தடுத்தது. தேவன் செய்தியை ரூபகாரப்படுத்துவதை அவன் கண்டான்.
84182 எனவே தேவனுடைய வார்த்தைக்கு தங்களைத் தாழ்த்துவது ஜனங்களுக்கு மிகவும் கடினமானதாக இப்பொழுது தோன்றுகிறது. அவர்கள்—அவர்கள்—அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. அவர்கள் நிச்சயமாகவே சபையின் கோட்பாட்டிற்கு தங்களை தாழ்த்துவார்கள், ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு அல்ல. 183 நீங்கள் இதைக் கண்டறிய வேண்டுமானால், நீங்கள் சென்று…நான் இங்கே வேத வாக்கியங்களை குறித்து வைத்துள்ளேன், அதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். ஆதியாகமம் 4:6 மற்றும் 7-ல், தேவன் காயீனிடம், “உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ ஏன் முழு கோபத்தோடு, சுற்றித் திரிகின்றாய்? உன்னை நிலைகுலையச் செய்த ஒரு செய்தியை நீ இப்பொழுதுதான் கேட்டாய்” என்றார். மேலும், “பார், நீ ஏன் அதைச் செய்கிறாய்? நான் உங்களுடைய சபைக்குள் வராதபடியினால், உன் முகநாடி வேறுபட்டதோ? அப்படியிருக்க நீ ஏன் அதை செய்தாய்?” என்று கேட்டார். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டியை நீங்கள் உபயோகிக்கிறீர்களா? பார்த்தீர்களா? 184 அல்லது, “ஏன் செய்யவில்லை…ஏன் நீ அந்தவிதமாக காணப்படுகிறாய்?” மேலும், “நீ நன்றாகச் செய்தால், அங்கே போய் உன்னுடைய சகோதரன் செய்து கொண்டிருக்கிறது போலச் செய், நான் உன்னை ஏற்றுக்கொண்டு உன்னை ஆசீர்வதிப்பேன். நான் அதையே உனக்குச் செய்வேன்” என்றார். ஆனால் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அவர், “இப்பொழுது, நீ அவ்வாறு செய்யவில்லையென்றால், அவிசுவாசத்தின் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்” என்றார்.
85185 இப்பொழுது அவர்கள், “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன” என்று கூறும்போது, அது மிகவும் பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்பட்டு, நிரூபிக்கப்பட்டதை அவர்கள் காண்கிறார்கள், நீங்கள் பாருங்கள், வெளிப்படுத்தின விசேஷம் 10-ம் அதிகாரம் மற்றும் மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இந்த எல்லாக் காரியங்களையும் தேவன் கடைசி நாட்களில் செய்வதாக வாக்களித்துள்ளார். அந்தக் காரியங்கள் யாவும் மிகவும் பரிபூரணமாக ரூபகாரப்படுத்தப்பட்டுள்ளன, சகோதரர்களே, காரியம் என்ன? என்ன கோளாறு, புரிகிறதா? 186 அவர்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், அவிசுவாசம், அது பாவம்…ஒரே ஒரு பாவம் மாத்திரமே உண்டு, அது அவிசுவாசமாயுள்ளது. அது உண்மை. நீங்கள் குடிக்கிறதாலும், புகைக்கிறதாலும், புகையிலையை மெல்லுகிறதாலும், குட்டைக் கால் சட்டைகளை அணிகிறதாலும், நீங்கள் என்ன செய்தாலும் அதைச் செய்வதற்காக நீங்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படவில்லை. இல்லை, அது உங்களைக் குற்றப்படுத்துகிறதில்லை. நீங்கள் விசுவாசிக்காததே அதற்குக் காரணம். நீங்கள் விசுவாசித்திருந்தால், நீங்கள் அதைச் செய்யமாட்டீர்கள். பார்த்தீர்களா? ஒரு விசுவாசி அதைச் செய்கிறதில்லை. அவர் சிந்திக்கும் ஒரு மனிதனுடைய வடிகட்டி, பாருங்கள், பாருங்கள், அல்லது ஒரு சிந்திக்கும் பெண்ணின் வடிகட்டி, இரண்டில் ஒன்றை எடுத்துக்கொள்கிறார். சரி. ஆனால், நீங்கள் பாருங்கள், பாவம் வாசலருகே உள்ளது.
86187 இப்பொழுது அது காயீனுக்கு என்ன செய்தது என்பதைக் கவனியுங்கள், அது இன்றைக்கும் அதையே செய்யப் போகிறது, அது காயீனை ஒரு மனப்பூர்வ பாவியாக போகச் செய்தது, அவன் மனப்பூர்வமாய் கீழ்ப்படியாமல் இருந்தான். ஒவ்வொரு நபரும் அதே விதமாக இருப்பார்கள். ஆபேலின் செய்தி உண்மையென்று தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டதைக் கண்ட பிறகு, அவன் வேண்டுமென்றே கீழ்ப்படியாமற் போய், அதைச் செய்ய மறுத்து, அப்பொழுதும் அதையே செய்தான், அதன்பின்னர் அவன் பிரிவினைக் கோட்டைக் கடந்தான். 188 நீங்கள் கடக்கக்கூடிய ஒரு கோடு உண்டு. நீங்கள் அதை அறிவீர்கள், நீங்கள் அறிந்திருக்கவில்லையா? இப்பொழுது, ஊழியக்காரர்களே, இங்கேயும் வெளியேயும் தொலைபேசியில் இந்த ஒலிபரப்பு தேசம் முழுவதிலும் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது, நீங்கள் அதை உணருகிறீர்களா? அது வேதவாக்கியமாயிருக்கிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் அதைச் செய்யாவிட்டால். தேவன் எப்பொழுதுமே… அவர்…ஓ, நீங்கள் தொடர்ந்து, ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அவ்வாறே ஒவ்வொரு இஸ்ரவேலரும் இருந்தனர், அவர்கள் வனாந்திரத்தில் வாழ்ந்து, பிள்ளைகளையும், பயிர்களையும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் பெற்றிருந்தனர், ஆனால் “அவர்கள் ஒவ்வொருவரும் தேவனிடத்திலிருந்து நித்தியமாக பிரிக்கப்பட்டிருந்தனர்.” இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். ஓ, ஆம், தேவன் உங்களை உடனே ஆசீர்வதிப்பார், ஆனால் நீங்கள் போய்விட்டீர்கள். நிச்சயமாக. இப்பொழுது வேதம் அதைத்தான் கூறுகிறது, அதைத்தான் அவர் கூறினார். கவனியுங்கள், நீங்கள் பிரிக்கும் கோட்டை கடக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? காயீன் அதைச் செய்தான்.
87189 நாம் இங்கே ஒரு நிமிடம் திருப்புவோம். நான் எபிரெயர் 10:26-ஐ எடுத்து வைத்துள்ளேன். என்னால் அதை விரைவாக கண்டறிய முடியுமா என்று நாம் பார்ப்போம். எபிரெயர் புத்தகம் 10-ம் அதிகாரம் மற்றும்…26-ம் வசனம் என்று, நான் நினைக்கிறேன். நான் அதை இங்கே எழுதி வைத்துள்ளேன். ஒரு நிமிடம், நீங்கள் பொறுத்துக் கொண்டால், நாம் ஒரு நிமிடம் அதை வாசிப்போம். சரி, நாம் இங்கே இருக்கிறோம். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல் நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளை பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். 190 அது தேவனுடைய பரிசுத்த வார்த்தை உரைக்கிறதாவதாகும். நாம் அதைக் கண்ட பிறகும், அதைக் கேட்ட பிறகும் நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசித்தால், அப்பொழுது நாம் எல்லைக்கு அப்பாற்பட்டவர்களாயிருப்போம். அதற்காக இனி ஒருபோதும் மன்னிப்பு இருக்காது, நீங்கள் எல்லையை கடந்துவிட்டீர்கள். “ஓ,” நீங்களோ, “தேவன் இன்னமும் என்னை ஆசீர்வதிக்கிறார்” என்று கூறலாம். ஓ, ஆம்.
88191 இஸ்ரவேலரை நினைவுகூருங்கள், எல்லைக்கோடு, தேவன் அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை அளித்தபோது, அந்த பரிசுத்த தேசத்தில், அந்த…தேசத்தில், அது பாலும் தேனும் ஓடுகிறதாய் இருந்தது, மோசே காலேபையும் யோசுவாவையும், வேவுகாரர்களையும் அனுப்பியபோது, தேசத்தை வேவுபார்த்து, நிரூபிக்கப்பட்ட அத்தாட்சியை கொண்டு வந்தனர், அவர்கள் பத்து பேரும், “நம்மால் அதைச் செய்ய முடியாது, நம்மால் முடியவில்லை, அங்கே உள்ள கடினமான காரியத்தைப் பாருங்கள், நாம் மதவெறியர்களாயிருப்போம், நாம் சண்டையிட இந்த சிறு காரியங்களை உடையவர்களாயிருக்கிறோம், அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள், நம்மால்—நம்மால் அதைச் செய்ய முடியாது, நம்மால் அதைச் செய்ய முடியாது” என்றனர். 192 யோசுவாவும் காலேபும், “நாம் அதை செய்யக் கூடியவர்களாயிருக்கிறோம், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார்” என்றனர். 193 மேலும், அவர்கள் திரும்பிச் சென்றனர் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். அது காதேஸ்பர்னியாவில் நடந்தது. அவர்கள் திரும்பி வனாந்திரத்தில் அலைந்து திரிபவர்களானார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மரித்து, நித்தியமாக இழக்கப்பட்டனர். இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார். 194 அந்த பிரிவினைக் கோட்டைக் கடக்க வேண்டாம், பாருங்கள். “நீங்கள் நன்மை செய்ய அறிந்திருந்து, அதைச் செய்யாவிட்டால், அது உங்களுக்குப் பாவமாயிருக்கும்.”
89195 இஸ்ரவேலர் அதையே செய்தனர். மோசே ரூபகாரப்படுத்தப்பட்டதை அவர்கள் கண்ட பிறகு, அதன்பின்னர் பிலேயாம் அவர்கள் மேல், அந்த விலையேறப்பெற்ற ரூபகாரப்படுத்தப்பட்ட வித்தின் மேல் தெளிக்க அனுமதித்தனர். போதகரே, நீங்கள் (ஒருபோதும்) இந்த வார்த்தைக்கு எதிராக ஒன்றையும் கூற வேண்டாம். பிலேயாமை பாருங்கள், அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் தேவனுடைய வித்து ரூபகாரப்படுத்தப்பட்டதைக் கண்டான். ஆனால் அவன் வாழ்ந்த தன்னுடைய சொந்த பெரிய ஸ்தாபனத்தின் கீழ், மோவாப் தேசத்தினூடாக அலைந்து திரிந்த ஒரு கூட்ட கூட்டத்தார் வருவதைக் கண்டு, அவன் அதன் மேல் தெளித்து, “சரி, ஒரு நிமிடம் பொறுங்கள். நாம் எல்லோரும் கிறிஸ்தவர்கள். நாம் யாவரும் விசுவாசிகளாயிருக்கிறோம். ஏன், எங்களுடைய பிதாக்களும் உங்கள் பிதாக்களும் ஒன்றே. நாம் லோத்தின் பிள்ளைகள் அல்லவா? லோத்து ஆபிரகாமின் மருமகன் அல்லவா? நாம் எல்லோருமே ஒரே மாதிரியானவர்கள் அல்லவா? நாம் ஒருவரையொருவர் விவாகம் செய்துகொள்வோம்” என்றான். 196 இஸ்ரவேலர், ஏதேன் தோட்டத்தில் ஏவாளைப் போல, சாத்தான் அவள் மேல் தெளிக்க, அவன் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியின் மூலமாகவும் கூட இஸ்ரவேலருக்கு தெளித்தான். உண்மையான தீர்க்கதரிசி அவர்களோடு ரூபகாரப்படுத்தப்பட்ட வார்த்தையோடு இருந்தான். ஆனால் ஒரு அறிவாற்றல் கொண்ட அறிவின் கருத்தினால், அவன் அவைகளை தெளித்தான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இப்பொழுது, அது ஒருபோதும் மன்னிக்கப்படவில்லை, அந்த பாவம் ஒருபோதும் மன்னிக்கப்படவில்லை.
90197 வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் பாதையில், கடமையின் பாதையில் விதைகள் அழுகின. சரியாக சபையில், கடமையின் பாதையில், தேவனைப் பின்பற்றியிருந்தும், அவர்கள் ஒவ்வொருவரும் அழிந்து, அழுகிப்போயினர், மேலும் சாத்தான் அவர்கள் மீது அந்த அறிவார்ந்ததை, கல்வி, அறிவுசார் கருத்தாக்கத்தை தெளித்து, “ஏன், நாம் எல்லோரும் ஒன்றே, நாம் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்” என்கிறான். நீங்கள் அப்படியில்லை! ஆனால் அவன் அந்த கள்ள போதகரை அங்கே அவர்கள் மேல் அவன் அதைக் குறித்து கொண்டிருந்த அந்த அறிவாற்றல் கொண்ட கருத்தினால் தெளிக்க விட்டுவிட்டான். 198 உலக ஆலோசனை சங்கம் இப்பொழுது செய்வது போலவே, பாருங்கள், அதே காரியம், “ஏன், நாம் யாவரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஸ்தாபனத்தில் இணைவோம்.” உங்களுடைய முழு ஸ்தாபன முறைமையும் பிசாசினால் உண்டானது. அது வேதாகமத்தில், மிருகத்தின் முத்திரையாயுள்ளது. கர்த்தருக்குச் சித்தமானால், வெகுவிரைவில், அதைக் குறித்த புத்தகத்தை வெளியிடுவேன்.
91199 கவனியுங்கள், நோவாவின் காலத்தில், மிதக்கும்படி, வார்த்தை பேழையாக கட்டப்பட்டதைக் கண்டனர். இப்பொழுது நான் இங்கே ஒரு சிறு குறிப்பைக் கூறட்டும், வார்த்தையானது பூமியிலிருந்து ஆகாயத்திற்கு மறுரூபமாக்கப்படுவதற்காக ஒன்று சேர்க்கப்படுகிறது. காரியத்தின் அமைப்பைக் கண்டு; அவர்களுடைய அறிவாற்றல் கொண்ட கருத்துகளால், தீர்க்கதரிசியாகிய நோவாவைப் பார்த்து நகைத்தனர், அவன் முடிவு காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தான். ஆனால் என்ன செய்தது…அந்த அமைப்பு தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டு, ஜெபத்தோடும் விசுவாசத்தோடும் உள்ளும் புறமுமாக கீல் பூசப்பட்டிருந்தது. மழை பெய்தபோது, மதங்களின் அறிவுப்பூர்வமான கருத்துக்கள் யாவும் மரித்துப்போயின பூமியின் மேல், தங்களுடைய சபைகளில் சரியாக…அழுகிப்போனது. எல்லாவற்றுக்கும் மேலாக பேழை மிதந்தது. விஞ்ஞான ரீதியாக தெளிக்கப்பட்ட விதை நியாயத்தீர்ப்பில் அழுகிப் போனது.
92200 எப்படியாயினும் நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் நம்முடைய சபையை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோமா அல்லது நாம் தேவனுடைய வார்த்தையை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோமா? நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் எதில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்? நாம் ஜனங்களை இதற்குள் திரும்பவும் கொண்டு செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறோமா? இந்த சபையாகிய ஏவாள், இந்த கடைசி நாட்களில் இந்த மகத்தான ஏவாள் இங்கு என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்? 201 சகோதரனே, நான் இப்பொழுதே முடித்துவிடப் போகிறேன், ஏனென்றால் இது—இது மிகவும் காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது. எனக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள், நான் என்னுடைய—என்னுடைய வேத வாக்கியங்களை இங்கே நிறுத்திக் கொள்கிறேன். [ஒரு சகோதரன், “நிச்சயமாக, தொடர்ந்து பேசுங்கள்” என்கிறார்.—ஆசி.] ஆம். சரி. எனக்குத் தெரியும். பாருங்கள், ஜனங்கள் அநேகமாக இங்கு வந்து இதைச் சுத்தப்படுத்த விரும்புகின்றனர். ஆனால் இதை முடித்துவிடுவது எனக்கு கடினமாயிருப்பது போன்றே எனக்குத் தோன்றுகிறது. நான் துரிதமாக முடித்துவிடுவேன். சரி.
93202 பாருங்கள், மகத்தான விஞ்ஞான, கல்வியறிவு, இன்றைக்கு கலப்பினமான ஏவாள், சபை என்று அழைக்கப்படுகிறாள், அவள் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்? அவள் தேவனுடைய வார்த்தையை உயர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கிறாளா, ஜனங்களை அவர்கள் செய்துகொண்டிருக்கிறவிதமாகவே செய்ய விடுகிறாளா? அவர்கள் ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை, அல்லது, தேவனுடைய வடிகட்டியை உபயோகித்துக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சபையானது, தன்னுடைய உருகுலைக்கப்பட்ட அறிவுத் திட்டத்தில், முழு இனமும் தேவனுடைய வார்த்தையை விஞ்ஞான ரீதியாக அறியாதிருக்க காரணமாயுள்ளது. இப்பொழுது நான் அந்த கருத்துகளை புரிந்துகொள்வேன், நான் அவைகளை நீண்ட நேரம் கூறி முடிக்கப் போவதில்லை. விஞ்ஞான அறிவில்லாதவர்கள்! தேவன், சரியாக இங்கே பூமியின் மேல், அவர் செய்து கொண்டிருக்கிற காரியங்களை, தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் மூலம், அவர்கள் அதை புறக்கணித்துவிட்டு விலகிச் செல்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் விஞ்ஞான ரீதியாக அறியாதவர்கள். விஞ்ஞான அறிவில்லாதவர்கள்!
94203 சகோதரன் வில்லியம்ஸ் இங்கே, ஒரு துண்டு காகிதத்தில் எழுதினதைக் குறித்து அப்பொழுது நான் சிரித்துக் கொண்டிருந்தேன், “நீங்கள் பிற்பகல் முழுவதும் அதில் தரித்திருக்க முடியும்,” ஏதோ ஒன்று. ஆனால் நான் அதைப் பாராட்டுகிறேன், அது உண்மையாகவே அருமையானது. பார்த்தீர்களா?
95204 ஆனால் ஜனங்களோ வேண்டுமென்றே பாவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இன்றைக்கு முழு சபை முறைமையையும் தேவனுக்கு விரோதமாக வேண்டுமென்றே செய்யும் பாவத்திற்குள் கொண்டு வந்துள்ளது. ஏன், சாதாரண நாகரீகம் அது சரியென்று உங்களுக்கு நிரூபிக்கும். சரி. ஒரு இச்சையான திரை தேவனுடைய வார்த்தைக்கு அவளுடைய கண்களை குருடாக்கினது. அவள் தன்னை மீண்டும் நிர்வாணமாக காண்கிறாள். உங்களுக்குத் தெரியும், தேவன் வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில், “உங்கள் கண்கள் திறக்கப்படும்படிக்கு என்னிடத்தில் வந்து, கண்களுக்கு கலிக்கம் வாங்கிக் கொள்” என்றார். பாருங்கள், கலிக்கம் என்பது அவருடைய வார்த்தை.
96205 உங்களுக்குத் தெரியும், அவர்கள், “சரி, இந்த மனிதன் தன்னுடைய பட்டங்களைப் பெற, நாற்பது வருடங்கள் படித்திருக்கிறான். அவர் ஒரு பி.எல்.டி., டி.டி, மற்றும் இந்த எல்லாவற்றிலும் இருக்கிறார்” என்கின்றனர். 206 அதைக் குறித்து இயேசு என்ன கூறினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர், “ஒரு மனிதன் தன்னைத்தான் வெறுக்கக்கடவன்” என்றார். பவுல் அதைச் செய்தான். நீங்களோ, “அது அதைப் பொருட்படுத்துகிறதில்லை” என்று கூறலாம். 207 சரி, அப்படியானால், பவுல் ஏன் அதை பின்பற்றினான்? அவன், “நான் உங்களிடத்தில் ஒருபோதும் மனுஷ ஞானத்தின் வசீகரிக்கும் வார்த்தைகளைக் கொண்டு வரவில்லை, ஏனென்றால் நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை அதன் மேல் கட்டுவீர்கள். ஆனால் நான் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், வெளிப்படுத்துதலோடும் உங்களண்டை வருகிறேன். உங்களுடைய வார்த்தை…உங்களுடைய விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் மேல் கட்டப்பட்டிருக்குமேயன்றி, ஒரு ஞானத்தின் வெளிப்படுத்துதலின் மேல் அல்ல” என்று கூறினான்.
97208 ஜனங்கள் தங்களுடைய பொதுவான நாகரீகத்தையும், அடக்கத்தையும் இழந்துவிட்டதாகவே தென்படுகிறது. அவர்கள் முன்பு போல இப்பொழுது இல்லை. முன்பெல்லாம், தீர்க்கதரிசி, “ கர்த்தர் உரைக்கிறதாவது ” என்று கூறும்போது, ஜனங்கள் நடுங்கினர். ஆம், அவர்கள் நிச்சயமாகவே நடுங்கினர். ஜனங்கள் பயந்தபடியினால், அவர்கள் ஆட்டங்கண்டனர். ஆனால் இப்பொழுது அவர்கள் அதைக் குறித்த தங்களுடைய எல்லா பயத்தையும் இழந்துவிட்டனர். அவர்கள் தேவனுக்கு பயப்படுகிறதில்லை. 209 சாலொமோன், “தேவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று கூறினான். அது தான் அதன் துவக்கம். 210 ஆனால் தீர்க்கதரிசியால் கர்த்தர் உரைக்கிறதாவது என்று பேச முடியும், ஜனங்கள், “முட்டாள்தனம்” என்கின்றனர். பாருங்கள், அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் இல்லை. அது, அவர்கள், “ஏன், நாங்கள் புத்திசாலிகள். நாம் அறிவாற்றல் கொண்டவர்கள், நாம் அந்தவிதமான காரியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை! நாங்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்!” என்கின்றனர். 211 “தேவதூதர் மிதிக்கப் பயப்படுகிற இடத்திலே மூடர் ஆணியடிக்கப்பட்ட காலணிகளை அணிந்து நடப்பார்கள்” என்ற ஒரு பண்டைய பழமொழியும் கூட உண்டு. நிச்சயமாக.
98212 இப்பொழுது, மறுரூபமாகுதல் என்றால் என்ன? (விரைவாக) நாம் எப்படி அதை பெற்றுக்கொள்கிறோம்? மறுரூபமானது என்ன செய்கிறது? தேவன் தம்முடைய வார்த்தையாகிய ஆவியினால் அதைச் செய்கிறார். அவர் மறுரூபமாக்குகிறார். அவர் தம்முடைய வித்தை நட்டு, அதன் மேல் தம்முடைய ஆவியை ஊற்றுகிறார், அது உற்பத்தியைப் பிறப்பிக்கிறது. அவருடைய பரிசுத்த ஆவியானவர் விதை வார்த்தையை அதனுடைய விதமான ரூபகாரப்படுத்தும்படி மறுரூபமாக்குகிறார். 213 நீங்கள் எந்தவிதமான ஒரு வித்தாயிருக்கிறீர்கள், அது உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. உங்களால் அதை மறைக்க முடியாது. நீங்கள் உட்புறத்தில் என்னவாயிருந்தாலும், அது வெளியேயும் காண்பிக்கப்படுகிறது. நீங்கள் அதிலிருந்து விலகியிருக்க முடியாது. அந்த மரத்தை அது என்னவாக இருக்கிறதோ அதைத் தவிர வேறொன்றையும் உங்களால் உருவாக்க முடியாது. பாருங்கள், அது—அது அந்தவிதமாகத்தான் இருக்கப்போகிறது. பரிசுத்த ஆவியானவர் அதனுடைய உட்புறத்தில் உள்ள விதைகளை மறுரூபமாக்குகிறார். அது எந்த விதமான ஒரு விதையாயிருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது அதை மறுரூபமாக்கும். அது பொல்லாததாயிருந்தால், அது தீமையையே பிறப்பிக்கும். அது ஒரு மாய்மாலக்காரனாயிருந்தால், அது ஒரு மாய்மாலக்காரனைப் பிறப்பிக்கும். அது ஒரு அசலான தேவனுடைய வார்த்தையாக இருக்குமானால், அது ஒரு சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியினூடாக, ஒரு அசலான தேவனுடைய குமாரனை அல்லது குமாரத்தியைப் பிறப்பிக்கும். வித்து தோன்றும்போது, அது அதன் மூலமாக வருகிறது, அது ஒரு தேவனுடைய குமாரனையும், குமாரத்தியையும் பிறப்பிக்கிறது.
99214 ஒரு நாள் உலகம் குழப்பமான இருளில் கிடந்தபோது, தேவன்… இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், ஏனென்றால் நாம்…இன்னும் சிறிது நேரம் மட்டுமே பேசப்போகிறோம். பாருங்கள். ஒரு நாள் உலகம் மீண்டும் எல்லாவிதமான மார்க்கங்களையும் கொண்டிருந்தபோது, கைகளை கழுவுதல், பானைகள், வித்தியாசமான அங்கிகள் மற்றும் பொன்னாடைகளை அணிந்து கொண்டிருந்தனர், அது முழு குழப்பத்தின் மத்தியில் கிடந்தது. தேவனுடைய அசலான இஸ்ரவேலர் தேவனுடைய பிரமாணங்களிலிருந்தும், நியமங்களிலிருந்தும் மிகவும் தாறுமாறாக்கப்பட்டிருந்தனர், இயேசு, “நீங்கள் உங்களுடைய பாரம்பரியங்களினாலும், உங்களுடைய பாரம்பரியங்களினாலும் ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தையை அவமாக்குகிறீர்கள்” என்றார். அவர்களை நோக்கிப் பாருங்கள், அவர்கள் அவர்களை பரிசுத்த ஆசாரியர்கள் என்று அழைக்கிறார்கள்; இயேசு, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், அவனுடைய கிரியைகளை நீங்களும் செய்கிறீர்கள்” என்றார். பாருங்கள், சரியாக அதைத்தான் அவர் கூறினார்.
100215 இப்பொழுது உலகம் அந்தவிதமான ஒரு குழப்பத்தில் இருந்தபோது, முன்குறிக்கப்பட்டிருந்த ஒரு வித்தின் மேல் தேவனுடைய ஆவி மீண்டும் அசைவாடினது. அவர் ஏசாயா 9:6-ல் உள்ள வாக்குத்தத்தத்தை மறுரூபப்படுத்தி, அவர், தேவன், அந்த குழப்பமான நேரத்திலிருந்து காப்பாற்ற மானிட சரீரத்தில் சிருஷ்டிக்கப்பட்டார். மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டபோது, இதோ தேவன் வருகிறார், தீர்க்கதரிசி அதை முன்கூட்டி காண்கிறதின் மூலம்… இப்பொழுது வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள், அதை முன்கண்ட தீர்க்கதரிசி, இந்த கடைசி நாட்களில் சாத்தானைக் கண்ட அதே தீர்க்கதரிசி, பாருங்கள், இந்தக் கல்வித் திட்டத்தைக் குறித்தும், அவன் கொண்டுள்ள காரியங்கள், மார்க்கத் திட்டம் போன்றவைகளைக் குறித்தும். அதே தீர்க்கதரிசி, ஏசாயா 9:6, “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; அவருடைய நாமம் ஆலோசனைக் கர்த்தர், சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்று அழைக்கப்படும். அவருடைய ஆளுகைக்கு முடிவே இராது.” அந்த வார்த்தை தேவனுடைய வார்த்தையாயுள்ளது. ஆவியானவர் அந்த வார்த்தையின் மேல் அசைவாடி, அது ஒரு கன்னிகையின் கர்ப்பத்தில் உருவானது. ஆமென். “ஒரு குமாரன் பிறக்கிறார்,” சிருஷ்டிக்கப்பட்டதல்ல, “பிறக்கிறார்.”
101216 சாத்தான் அதை தெளிக்க, முயற்சி செய்து மீண்டும் முயற்சித்தான். அவன் அவரை மேலே கொண்டு சென்று, “நீர் என்னவாயிருக்கிறீர் என்று கூறுகிறீர்களோ, அப்படி நீர் இருந்தால், அப்பொழுது எனக்காக இந்த சுகமளித்தலில் சிலவற்றைச் செய்யும். நீர் அதை எப்படி செய்ய முடியும் என்பதை எனக்குக் காண்பியும். இதை, அப்பம், இந்த கற்களை அப்பமாக மாற்றும். நீர் குதிப்பதை நாங்கள் காணட்டும், ஏனென்றால் நீர் அதைச் செய்வீர் என்று வேதம் கூறுகிறது” என்றான். 217 இன்றைக்கும் மதசம்பந்தமான பிசாசுகள் அதையே கூறுவதை நீங்கள் காண்கிறீர்களா? “தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒன்று இருக்குமானால்; இங்கே சகோதரன் இன்னார்-இன்னார் படுத்துக்கிடக்கிறார், நீங்கள் அவரை சுகப்படுத்துவதை நாங்கள் காணட்டும்.” 218 அதே பிசாசு இயேசுவின் சிலுவையண்டை நின்று, “நீர் தேவனுடைய குமாரனேயானால், சிலுவையிலிருந்து இறங்கிவா” என்றான். 219 அவர் தேவனுடைய குமாரன் என்று வார்த்தை கூறியுள்ளது. அவர் தேவனுடைய குமாரன் என்பதை ஆவியானவர் நிரூபித்தார். ஏசாயா 9:6 நிறைவேற்றப்பட்டது. அன்றொரு இரவு, ஒலிபரப்பில் உங்களில் அநேகர், ஏறக்குறைய, அறுபதுக்கும் மேற்பட்ட வேதவாக்கியங்களை நாங்கள் எப்படியாய்க் கொடுக்க கேட்டிருப்பீர்கள் என்று, நான் நம்புகிறேன், அது அவராயிருந்தது என்று வேதம் கூறியுள்ளது என்பதை நிரூபிப்பதைக் குறித்தேயாகும்.
102220 ஓ, சாத்தான் மீண்டும் முயற்சித்து, எல்லாவற்றையும் செய்தான். ஒரு இரவு ஒரு கப்பலின் பின்பக்கத்தில் படுத்துக் கொண்டு, அவர் நித்திரையடைந்ததைக் கண்டான். அவன், “நான் இப்பொழுதே அவரை அழித்துவிடுவேன்” என்றான். ஆனால் அவனால் முடியவில்லை. 221 அவர் தவறான காரியத்தைச் செய்யும்படி அவரை சோதிக்க முயன்றான், ஆனால் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. ஏன்? அவர் முன்குறிக்கப்படுதலின் விரட்டும் மருந்தினால் தெளிக்கப்பட்டிருந்தார். அவர்கள் வஞ்சிக்கப்பட முடியாது. இல்லை, இல்லை. அவர் இங்கே இருப்பார் என்று வார்த்தை கூறியுள்ளது. ஆமென். எந்த பிசாசும் அவரைத் தொல்லைப்படுத்தப் போவதில்லை, அவருடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முன்குறிக்கப்பட்டிருக்கிற வேறெந்த தேவனுடைய குமாரனும் இல்லை. அவர் ஒரு தடுப்பு மருந்தினால் தெளிக்கப்படுகிறார். சாத்தானின் விஷம், ஸ்தாபன வேதபண்டிதர்கள் அவரைத் தொடுவது கூட இல்லை. அவர் தொடர்ந்து அசைவாடுகிறார், ஒன்றுமே அவரைத் தொல்லைப்படுத்தப் போவதில்லை, பாருங்கள். அது அவர் மேல் எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை.
103222 “சரி, நான் உம்மை பூமி முழுவதற்கும் பேராயராக ஆக்குவேன். நான் அதை ஆளுகை செய்ய வேண்டும். நீ என்னை ஆராதிப்பாயானால், என் குழுவில் வந்து சேர்ந்து கொள்வீர்களேயானால், நான்—நான் உம்மை அதிபதியாக்குவேன். நான் கீழே இறங்கி, உம்மை மேலே ஏற்றட்டும்” என்றான். 223 அவர், “சாத்தானே, அப்பாலே போ. ‘வார்த்தையாகிய தேவனைத் தொழுதுகொண்டு, அவரை மாத்திரமே சேவிப்பீர்கள்’” என்று எழுதியிருக்கிறதே என்றார். அதன்பின்னர் ஒரு நாள்… இந்த மகத்தான நபரின் பேரில், நான் அங்கு சிறிது நேரம் தரித்திருக்க விரும்புகிறேன். 224 ஆனால் ஒரு நாள், ஆவியானவர் மீண்டும் அவர் மேல் அசைவாடினார்; ஏனென்றால் தேவனிடத்திலிருந்து, தீர்க்கதரிசியின் மூலமாய் வந்த, சில வார்த்தைகள் அவரைக் குறித்து எழுதப்பட்டிருந்தன, “அவர் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல, அடிக்கப்படுவதற்குக் கொண்டு செல்லப்பட்டார்.” ஆவியானவர் அவர் மேல் அசைவாடி, அவரை வழி நடத்தி, அவரை கல்வாரியின் சிலுவையண்டை அனுப்பினார். அங்கே அவர் மரித்தார். பூமியின் மேலிருந்த முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்து அனைத்திற்கும் வெளிச்சத்தையும் ஜீவனையும் கொண்டு வரும்படிக்கு அவருடைய மரணத்தில் அவரைக் குறித்து உரைக்கப்பட்ட யாவும், நிறைவேற்றப்பட்டன. அவர் அதைச் செய்வதற்கான வழியைக் கொண்டு வந்தார். இங்கே வித்து உள்ளது, ஆவியானவர் ஜீவனைக் கொண்டு வருகிறார்; தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக, இந்த இருண்ட குழப்பத்தில் உலகத்திலிருந்து தேவனுடைய குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் மாற்றப்படுகின்றனர்.
104225 “முன்குறித்தல்” என்ற அந்த வார்த்தையில் இடறாதீர்கள். நீங்கள் இடறுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் கவனியுங்கள், இது என்னுடைய வார்த்தையல்ல. அது தேவனுடைய வார்த்தைகளில் ஒன்றாகும். நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், எபேசியர் 1:5-ஐ வாசியுங்கள், “அவர் நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய் சுவிகார புத்திரராக முன்குறித்திருக்கிறார்” என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்தீர்களா? 226 ஒரு நிமிடத்தில், இன்னும் ஒரு நிமிடத்தில், உங்கள் சிந்தையிலிருந்து இதை போக்கிவிட நான் அதை அப்படியே கூறட்டும். பாருங்கள். ஆதியில், நீங்கள் உங்களுடைய தகப்பனுக்குள் ஒரு விதையான உயிரணுவாய் இருந்ததுபோலவே. நீங்கள் ஒவ்வொருவரும், அதை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் உங்களுடைய பெரிய பாட்டனாரின்-பெரிய-பாட்டனாரிலும் கூட இருந்தீர்கள், நீங்கள் அதை அறிவீர்களா? 227 எபிரெயர் நிருபத்தை வாசித்துப் பாருங்கள், அங்கே லேவி ஆபிரகாமின் அரையிலிருந்தபோது, அவன் தசமபாகம் செலுத்தினான் என்று நாம் கண்டறிகிறோம், அதற்கு நான்கு தலைமுறைகள் பின்னாக இருந்தன. ஆபிரகாம் மெல்கிசேதேக்கிற்கு தசமபாகத்தைச் செலுத்தினபோது, அது அவனுக்குக் கீழே உள்ள அவனுடைய கொள்ளுப் பேரனுக்குமாயிருந்தது, அப்பொழுது அவன் ஆபிரகாமின் அரையில் இருந்தான். அங்குதான் காரியம். பார்த்தீர்களா?
105228 நீர் உம்முடைய தகப்பனின் அரையில் இருந்தீர், ஆனால் நீங்கள் ஒரு மாம்ச சரீரத்திற்குள்ளாக மறுரூபப்படும் வரை உங்களுடைய தகப்பன் உங்களோடு எந்த ஐக்கியத்தையும் கொண்டிருக்க முடியாது. 229 என் மகன் எனக்குள் இருந்தான். எனக்கு—எனக்கு—எனக்கு ஒரு குமாரன் தேவையாயிருந்தது, ஆனால் அப்பொழுது அவன் எனக்குள் இருந்தான். பார்த்தீர்களா? அப்பொழுது அவன் எனக்குள் இருந்தான். ஆனால் விவாகத்தின் மூலமாக, அவன் என்னைப் போன்ற ஒரு மனிதனாக மறுரூபப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் அவன் என்னைப் போலானான். 230 நீங்கள் உங்களுடைய பெற்றோரைப் போல் ஆகிவிடுகிறீர்கள், பாருங்கள், ஏனென்றால் அது துவக்கத்தில், உங்களுக்குள் இருந்தது. இப்பொழுது நாம் தேவனுடைய குமாரர்களாயிருந்தால், அவருடைய தன்மைகள்…நீங்கள் உங்களுடைய தகப்பனின் தன்மையாயிருக்கிறீர்களேயன்றி, உங்களுடைய தாயின் தன்மையல்ல; உன்னுடைய தந்தை. விந்தணு தகப்பனுக்குள் இருக்கிறது. பார்த்தீர்களா? இப்பொழுது உங்களுடைய தாய் உங்களைப் பிறப்பிக்கும் ஒரு அடைகாக்கும் கருவியாயிருந்தது, உங்களுடைய தகப்பனின் வித்தை சுமந்து செல்கிறாள். பார்த்தீர்களா?
106231 மாம்சத்தில், பூமியானது கூட, தேவனுடைய வித்தை சுமக்கும் அடைகாக்கும் கருவியாகவும் உள்ளது. பாருங்கள், சரியாக. உலகமானது, உலகம் எவ்வளவு மகத்தானது என்று அல்ல; அதை உண்டாக்கின தேவன் எவ்வளவு மகத்தானவராயிருக்கிறார் என்பதேயாகும். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 232 இப்பொழுது நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனும், குமாரத்தியுமானால், அப்பொழுது நீங்கள் ஆதியிலே தேவனுக்குள் இருந்தீர்கள். நீங்கள் அவருடைய தன்மையாயிருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் அங்கிருக்கவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் ஒருபோதும் இருந்திருக்கமாட்டீர்கள் அல்லது ஒருபோதும் இருக்கமாட்டீர்கள். 233 ஏனென்றால், இங்குள்ள இந்த மனிதனின் மகனையோ அல்லது அங்குள்ள அந்த மனிதனின் மகனையோ என் அரையிலிருந்து என்னால் சுமக்க முடியாது, என் சொந்த மகன்களை மட்டுமே என்னால் சுமக்க முடியும், அவர்கள் என்னுடைய சாயலை தரித்திருப்பார்கள். அல்லேலூயா. நீங்கள் அதைக் புரிந்துகொள்ளுகிறீர்களா?
107234 ஆதியிலே குமாரரும் குமாரத்திகளும் தேவனுக்குள் இருந்தனர். இப்பொழுது பாருங்கள். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள் என்று, நீங்கள் கூறலாம். நாம் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம் என்று, நாம் விசுவாசிக்கிறோம். பாருங்கள், ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது தேவன். அது மாத்திரமே நித்தியமானதாயுள்ளது, தேவன் மாத்திரமேயாகும். அப்படியானால் நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், உங்களுக்குள் எப்பொழுதுமே அந்த ஜீவன் இருந்துகொண்டிருக்க, ஒரு உலகம் உண்டாவதற்கு முன்பே நீங்கள் தேவனுடைய அரையில் இருந்தீர்கள். வார்த்தை தாமே…இயேசுதாமே வார்த்தை என்று அழைக்கப்பட்டபோது, பரிசுத்த யோவான் 1-ல், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்கு மத்தியிலே வாசம்பண்ணினார்” என்று கூறியுள்ளது. அப்படியானால் நீங்கள் இயேசுவின் அரையில் இருந்தீர்கள், அவரோடு கல்வாரிக்குச் சென்றீர்கள். நீங்கள் அவரோடு மரித்தீர்கள், நீங்கள் அவரோடு உயிரோடெழுந்தீர்கள். இன்றைக்கு நாம் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருந்து, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்டு, அவருக்குள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அவரோடு மரித்து, அவரோடு உயிரோடெழுந்தோம். நிச்சயமாக.
108235 இப்பொழுது அப்படியானால், இப்பொழுது, இப்பொழுது நீங்கள் அவரோடு ஐக்கியங்கொள்ளலாம். அப்பொழுது உங்களால் ஐக்கியங்கொள்ள முடியாதிருந்தது, ஏனென்றால் நீங்கள் அவருக்குள் ஒரு வார்த்தையாய், ஒரு வித்தாயிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது அவர் உங்களை வெளிப்படுத்தியிருக்கிறார், இப்பொழுது நீங்கள் அவரோடு ஐக்கியங்கொள்ள அவர் விரும்புகிறார். அதன்பின்னர் அவர் இறங்கி வந்து, அவர் உங்களோடு பரிபூரண ஐக்கியங்கொள்ளும்படியாக மாம்சமானார். பரிபூரண ஐக்கியத்தைப் பார்த்தீர்களா? ஓ, என்னே, அவைகள் ஆழமான தேவனுடைய இரகசியங்கள்! எவ்வளவு அற்புதமானது! பாருங்கள், தேவனால் ஆவியில் ஐக்கியங்கொள்ள முடியவில்லை, எனவே தேவன் நம்மோடு மனிதனானார். 236 இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட, தேவனாகவே இருந்தார், ஏனென்றால் அவர் ஒரு குமாரனாயிருந்தார், ஏனென்றால் அவர் பிறப்பிக்கப்பட்டார், ஆனால் அது அவர் ஜீவிப்பதற்கான ஒரு கூடாரமாகவே இருந்தது. “ஒருவனும் தேவனை ஒருக்காலும் கண்டதில்லை, ஆனால் பிதாவின் ஒரே பேறானவர் அவரை வெளிப்படுத்தினார்.” நீங்கள் அவரைத் தொடும்படியாக இறங்கி வந்து, தேவன் தாமே ஒரு வீட்டை, ஜீவிப்பதற்கான ஒரு சரீரத்தைக் கட்டினார். I தீமோத்தேயு 3:16-ல், “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது; ஏனென்றால் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, தேவதூதர்களால் காணப்பட்டு, விசுவாசிக்கப்பட்டு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.” பார்த்தீர்களா? இப்பொழுது அவர்…
109237 நீங்கள் மாம்சமாயிருக்கிறீர்கள், அவர் மாம்சமானார், அப்படியானால் உங்களால் இப்பொழுது ஐக்கியங்கொள்ள முடியும், ஏனென்றால் அவர் தேவனுடைய அன்பின் தன்மையாயிருந்தார். தேவன் அன்பாயிருக்கிறார். அது சரியா? இயேசு தேவனுடைய அன்பின் தன்மையாயிருந்தார். அன்பின் தன்மை வெளிப்பட்டபோது, அது, தேவனாகவே இருந்தது; அவருக்குள் இருந்து கொண்டிருக்கிற எல்லா தன்மைகளும், “பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்று, அவரண்டை வருகின்றன. நிச்சயமாகவே, அவர்கள் முன்குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் அங்கு இருக்கமாட்டீர்கள். அவ்வளவுதான். நிச்சயமாக. 238 இப்பொழுது நாம் அவருடைய வார்த்தையின் ஐசுவரியங்களின் மூலமாக ஐக்கியங்கொள்ள முடியும், அதில் நீங்கள் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையின் பாகமாயிருக்கிறீர்கள்; ஏனென்றால் அவர் ஆதியிலே வார்த்தையாயிருந்தார், இப்பொழுது நீங்கள் வார்த்தையாயிருக்கிறீர்கள். பார்த்தீர்களா? நான் இன்றிரவு, அல்லது ஞாயிறு அல்லது இந்நாட்களில் ஒன்றில், வார்த்தை என்னவாயிருக்கிறது என்பதைக் குறித்து, பாருங்கள், நான் பிரசங்கிக்கப்போகிறேன். இப்பொழுது நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாயிருக்கிறீர்கள்.
110239 கவனியுங்கள். என்னால் செய்ய முடியாத காரியம் ஒன்று உண்டு. என் மூதாதையரின் பேரில் நான் பெருமை பாராட்ட முடியாது. முடியாது, நான் ஒரு மோசமான குழப்பத்தினூடாக வருகிறேன். என்னுடைய தந்தை ஒரு அயர்லாந்துக்காரர். என்னுடைய தாயார் ஒரு சிகப்பு இந்தியர், பாதி இந்தியர்; அவளுடைய தாயார் ஒரு இந்தியர், ஒரு ஓய்வூதியம் பெற்றுவந்தவர். இப்பொழுது, அவர்கள் எல்லோருமே, குடிகாரர்கள், அவர்கள் எல்லோருமே தங்களுடைய களத்திலிருந்தே சண்டையிட்டு, துப்பாக்கியால் சுடுபவர்கள் போன்றவர்களாய் மரித்தார்கள். அதைக் குறித்து நான் பெருமையடித்துக் கொள்ள முடியாது, ஏனென்றால் என்னுடைய மூதாதையர்களும், என்னுடைய வம்ச விருட்சமும் பயங்கரமானவை. 240 ஆனால், சகோதரனே, ஒரு காரியத்தின் பேரில் நான் பெருமையடித்துக் கொள்ள முடியும், என்னை மீட்டுள்ள என் கர்த்தராகிய இயேசுவின் பேரில் என்னால் பெருமை பாராட்ட முடியும். அவருடைய மறுரூபமாக்கும் வல்லமையினால் முன்குறித்தலின் மூலம் ஒரு விதையை நட்டார், நான் அதைக் கண்டேன். இப்பொழுது நான் யாருடைய மகன்? ஆம். என்னால் அவர் பேரில் பெருமையாகப் பேச முடியும். நான் என்னுடைய ஜீவியத்தின் முப்பத்தி மூன்று ஆண்டுகளையும், அவர் பேரில் பெருமையாக செலவழித்திருக்கிறேன். அவர் இன்னும் முப்பத்தி மூன்று ஆண்டுகள் என்னைக் காப்பாற்றுவாரேயானால், நான் அவரைக் குறித்து இன்னும் அதிகமாக தற்பெருமையாக பேச முயற்சிப்பேன். பார்த்தீர்களா? என் மூதாதையரின் பேரில் நான் பெருமையாகக் கூற முடியும், அல்லேலூயா, அவர் என்னை மீட்டு ஜீவனின் விதையை இங்கு நட்டார், இந்த வார்த்தையை நான் நோக்கிப் பார்க்கும்படிச் செய்து, அவருடைய ஆவியை அனுப்பி, “இதோ அது உள்ளது. இதைப் பேசு, அது சம்பவிக்கும். அதைச் செய்” என்றார். ஓ, என்னே, என்னால் அவர் பேரில் பெருமையாக பேச முடியும்! அவர் அதை எப்படி செய்தார்? திருவசனமாகிய தண்ணீரைக் கொண்டு கழுவுதல் மூலமாக, தீட்டுகழிக்கும் ஜலம். நாம் அதை விளக்கிக் கூறினால் நலமாயிருக்கும்.
111241 உண்மையான முன்குறிக்கப்பட்ட விசுவாசிகள் வார்த்தையோடு தரித்திருப்பார்கள், ஏனென்றால் அவர்கள் அந்த வார்த்தையின் பாகமாயிருக்கிறார்கள். 242 ஓ, அலைந்து திரியும் நட்சத்திரங்களே, நீங்கள் எவ்வளவு காலம் அலைந்து திரிவீர்கள்? மெத்தோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, வெளியாட்களாகிய நீங்கள், நீங்கள் யாராயிருந்தாலும், சபையிலிருந்து சபைக்கு, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும், தொலைக்காட்சியிலிருந்து தொலைக்காட்சிக்கும், உலகத்திலிருந்து உலகத்திற்கும், அலைந்து திரியும் நட்சத்திரங்களே, நீங்கள் ஏன் வரக்கூடாது? அவர் உங்களோடு ஐக்கியங்கொள்ள வாஞ்சிக்கிறார். அவர் உங்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். அவர் உங்களுடைய சிந்தையின் புதுப்பித்தலின் மூலம் உங்களை மறுரூபமாக்க விரும்புகிறார், சபைக்கோ அல்லது ஸ்தாபனத்திற்கோ அல்ல, ஆனால் அவருடைய வார்த்தைக்கு, அந்த வாஞ்சை உங்களுக்குள் இருக்குமானால், நீங்கள் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் திருப்தியடைவார்கள். (புரிகிறதா? ஹு-ஹூ.) 243 நீங்கள் இந்த உருகுலைந்த மார்க்கத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வரும்படிக்கு, அவர் தம்முடைய மறுரூபமாக்கும் வல்லமையை அனுப்பியிருக்கிறார். நாம் இந்த உருகுலைந்த குழப்பத்தில் இருக்கிறோம், நீங்கள் நடந்து கொண்டிருக்கிற இந்த உருகுலைந்த மதசம்பந்தமான அறியாமையிலிருந்து உங்களை வெளியே கொண்டு வர, தேவன் அவருடைய வார்த்தையை, ரூபகாரப்படுத்தப்பட்ட, நிரூபிக்கப்பட்ட, தம்முடைய மறுரூபமாக்குகிற வல்லமையை அனுப்பியிருக்கிறார், “நிர்வாணமாயும், குருடராயும், பரிதபிக்கப்படத்தக்கவராய் இருந்தும் அதை அறியாதவர்களாயிருக்கிறார்கள்.” நண்பர்களே, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.
112244 தேவன் தம்முடைய மறுரூபமாக்கும் வல்லமையை தம்முடைய வார்த்தையை நிறைவேற்ற அனுப்பி, சாராள் மற்றும் ஆபிரகாமின் முழு சரீரத்தையும் மாற்றினார் என்பதை, நீங்கள் அறிவீர்கள். ஒரு வயோதிக மனிதனையும், ஒரு வயோதிக ஸ்திரீயையும் மறுரூபமாக்கினார், ஏனென்றால் அவர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினார். 245 தேவன் செய்வதாக வாக்குப்பண்ணுகிறதை அவர் செய்வார். ஒன்றுமில்லை, எந்தக் காரியமும்…எந்தவொரு தாறுமாறாக்கப்பட்ட காரியத்தையும், தேவனால் அதனோடு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வார், அவர் தம்முடைய ஆவியை அனுப்புவார்! “கர்த்தராகிய நான் அதை நட்டேன். என் கைகளிலிருந்து அதை யாரும் பறித்துக்கொள்ளாதபடிக்கு நான் அதற்கு இரவும் பகலும் தண்ணீர் பாய்ச்சுவேன்” என்றார். வேதம் அதைக் கூறுகிறது.
113246 ஓ, அலைந்து திரிகிற நட்சத்திரங்களே, உங்களுடைய இருதயத்தில் வாஞ்சையோடுள்ள நீங்கள்! நீங்கள் அதைப் பெற்றிருக்க வேண்டும், இல்லையென்றால் நீங்கள் இந்தக் காலையில் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டீர்கள். ஏதோ ஒன்று உங்களை அங்கு கொண்டு வரவில்லையென்றால், நீங்கள் அந்த சபைகளிலும், அரங்கங்களிலும், நீங்கள் உள்ளேயும், தேசம் முழுவதிலும் உள்ள காரியங்களிலும் இருக்கமாட்டீர்கள். யாரோ ஒருவர் உங்களிடம் பேசினார். அதற்கு மேல் செல்ல வேண்டாம். வார்த்தையைக் கொண்டு தண்ணீர் கழுவுதல் உள்ளது, அது உங்களை பனியைப் போல வெண்மையாக்கும். ஓ, தேவனுடைய புத்திரர்களே, கவனியுங்கள்! அந்த உருகுலைத்தலில் தரித்திருக்க வேண்டாம். அதிலிருந்து வெளியே வாருங்கள். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அதற்கு முரணான எதையுமே அவன்… 247 நீங்களோ, “நான் எப்படி என்னுடைய ஜீவியத்திற்கு சம்பாதிக்க முடியும்? நான் எப்படி இதை செய்ய முடியும்?” அது தேவனுடைய வேலை. “நான் எப்படி இருக்க முடியும்? என்னுடைய கூட்டாளிகள் என்னை புறக்கணித்துவிடுவார்கள்” என்கிறீர்கள். 248 தேவன், “தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், புருஷனையும், வீடுகளையும், குடும்பங்களையும் விட்டுவிடுகிறவனுக்கு; நான் அவர்களுக்கு வீடுகளையும், குடும்பங்களையும் கொடுப்பேன், நான் அவர்களுக்கு தகப்பன்மார்களையும், தாய்மார்களையும், சகோதர சகோதரிகளையும் கொடுப்பேன், இம்மையிலும், மறுமையிலும் நித்திய ஜீவனை அடைவார்கள்” என்றார். நண்பனே, அது ஒரு வாக்குத்தத்தம். அது, ஓ, அது தண்ணீர் பாய்ச்சப்பட வேண்டும்! தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நிறைவேறுகிறது. தேவனுடைய ஒவ்வொரு வித்தும் ஒரு வாக்குத்தத்தமாயிருக்கிறது.
114249 மேலும், சகோதரியே, அந்த முடியை குட்டையாக வெட்டிக் கொள்வதை நிறுத்துங்கள், ஏனென்றால் அது தேவனுக்கு முன்பாக ஒரு மாறுபாடான காரியம். அந்த ஆடைகளை அணிவதை விட்டுவிடுங்கள், அது அவருக்கு ஒரு அருவருப்பாயிற்றே! 250 சகோதரர்களாகிய நீங்கள், மனிதர்களே நீங்கள், இந்த ஸ்தாபனங்களுக்கு உபகாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் மனைவிகள் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய அனுமதிக்கிறீர்கள். அது கிறிஸ்தவர்களுக்கு பொருத்தமற்றது. 251 வார்த்தைக்கு திரும்பி வாருங்கள்! அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள், அது வளரும். அது வளர வேண்டும். தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமை முதலாவதாக அதை வளரச் செய்தது, அவர் தம்முடைய பாதையில் இப்பொழுது அதை மீண்டும் வளரச் செய்கிறார். அவர் இருந்த இடத்திற்கு மீண்டும் செல்கிறார்.
115252 ஏனோக்கு தேவனுடைய மறுரூபப்படுத்தும் வல்லமையினால், மரணத்திலிருந்து, எடுத்துக்கொள்ளப்பட்டான். தேவன் எதற்காக அதைச் செய்தார்? வரப்போகும் எடுத்துக்கொள்ளப்படுதல் சபைக்கு ஒரு முன்னடையாளமாயிருக்கிறது. ஆம். எலியாவும் அவ்வாறே இருந்தான். 253 இயேசுவின் சரீரம் மரித்த பிறகு உயிர்ப்பிக்கப்பட்டது. கல்லறையில், இயேசுவின் சரீரம் தேவனுடைய வார்த்தையினால் உயிர்ப்பிக்கப்பட்டது. ஒரு மரித்த, குளிர்ந்த சொரூபத்திலிருந்து, உயிர்த்தெழுந்த, மகிமைப்படுத்தப்பட்ட தேவனுடைய குமாரனாக மறுரூபமாக்கப்பட்டார். ஏனென்றால் தீர்க்கதரிசி, சங்கீதம் 16:10, நீங்கள் அதை குறித்துக்கொள்ள விரும்பினால், 16:10, “அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன். என் பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்” என்றான். ஓ தேவனே! 254 அந்த வார்த்தை நிறைவேற வேண்டும், அது தேவனுடைய வார்த்தையாயிற்றே! நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல விரும்பினால், அதை உங்கள் இருதயத்தில் நடுங்கள். நீங்கள் உண்மையான கிறிஸ்தவர்களாயிருக்க விரும்பினால், இந்த வார்த்தையை வையுங்கள். அது எசேக்கியேல் என்று நான் நினைக்கிறேன், தேவன், “அந்த புஸ்தகச் சுருளை எடுத்து அதைப் புசி” என்றார், தீர்க்கதரிசியும் வார்த்தையும் ஒரே மாதிரியாக மாற வேண்டும். அங்கே உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் தன்னை வெளிப்படுத்த வேண்டும், ஏனென்றால் அது தேவனுடைய மூல வித்தாயுள்ளது. கல்வியறிவு பெற்ற ஒரு வேத பண்டிதர் அதை உங்களிடத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டாம். அவன் உங்களுக்கு மாம்சபிரகாரமான விஞ்ஞானத்தையும், அறிவையும், கல்வியையும் தெளிக்க அனுமதிக்க வேண்டாம். தேவனை விசுவாசியுங்கள்!
116255 ஆபிரகாம் தன்னுடைய நாளின் விஞ்ஞான ஆராய்ச்சியை எடுத்துக் கொள்ளவில்லை, “எனக்கு ஒரு குழந்தை பிறக்க மிகவும் வயதாகிவிட்டது, நான் அதிக தூரம் சென்றுவிட்டேன். நான் இதை, அதை அல்லது மற்றதைச் செய்திருக்கிறேன்” என்று கூறவில்லை. ஆனால் அவன் தேவனுடைய வார்த்தைக்கு முரணான எந்தக் காரியத்தையும், அது இல்லாதது போல அழைத்தான். அவன் அவிசுவாசத்தினாலே, தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து சந்தேகப்படாமல், ஆனால் பலமுள்ளவனாய், தேவனுக்கு துதி செலுத்துகிறவனாயிருந்தான். தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்ததை அவர் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான்.
117256 ஓ, இந்த பூமியின் படரும் கொடியினால் உருகுலைக்கப்பட்டு அலையும் குமாரர்களே! அலைந்து திரிகிற சகோதரிகளே, அதாவது இந்த உலகத்தின் ஸ்தானங்களும் நாகரீகங்களும் உங்களை கவர்ந்துள்ளன! மேலும், அருமையான சகோதரியே, நீங்கள் என்னை ஒரு பைத்தியக்காரக் கிழவன் என்று கருதலாம், ஆனால் இந்நாட்களில் ஒன்றில் அன்றொரு இரவு பிளாரன்ஸ் ஷகாரியன் சந்தித்ததை நீங்கள் சந்திக்கும்போது; நீங்கள் அறிந்துள்ளபடி, அவளும் கூட இந்த இடத்தில், இந்த அறையில் அமர்ந்திருந்தாள். நீங்கள் அதை சந்திக்கும்போது, நீங்கள் அதைக் கண்டறியலாம், அது நான் அல்ல, ஆனால் இந்த வார்த்தை சரியானது. அந்த முடிதிருத்தும் கடைகளிலிருந்தும், அந்த நாகரீகக் கடைகளிலிருந்தும் வெளியே இருங்கள். அந்தக் காரியங்களிலிருந்து விலகியிருங்கள். 257 “ இது எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் அவர்களுக்கு மகத்தான காரியங்களைப் போதிக்கக் கூடாது?” என்று கேட்கலாம். உங்களுடைய மொழியின் முதல் எழுத்துடன் துவங்குங்கள். அதன்பின்னர் நாம் இயற்கணிதத்திற்கு வருவோம். பார்த்தீர்களா? அப்படியே கற்றுக்கொள்ளத் துவங்குங்கள், “இது உங்களுடைய புத்தியுள்ள ஆராதனையாயுள்ளது.” அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரத்தை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன்; அதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
118258 நீங்கள் “உங்களுடைய புத்தியுள்ள ஆராதனையை” செய்யுங்கள். மற்ற காரியங்களை தேவன் பார்த்துக்கொள்வார். பாருங்கள், நீங்கள் சுயமாக யோசித்து யோசித்து செய்யக்கூடிய காரியங்களை பகுத்தறிந்து கொள்ள வேண்டும். அது…ஒரு ஸ்திரீ தன்னுடைய ஆடைகளைக் களைந்துகொண்டு, இங்கே வெளியே சென்று அந்தவிதமாக நடந்துகொள்வது, வேதம் அதைக் கடிந்துரைக்கிறபோது, அது புத்தியற்ற செயல் அல்லவா? அது தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலும் முரணாக இருக்கும்போது, இந்த வேதபாட கருத்தரங்குகள், மற்றும் அதைப் போன்ற காரியங்கள் யாவற்றையும் இங்கே இந்த எல்லா காரியத்திலும், இன்றைக்கு நாம் கொண்டுள்ள அப்படிப்பட்ட ஒரு கோட்பாட்டிற்குள்ளாக ஒரு மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது புத்தியற்ற செயல் அல்லவா? பார்த்தீர்களா?
119259 ஏசாயாவின் உதடுகள், அவன் அசுத்த உதடுகளையுடைய ஒரு சாதாரண மனிதனாயிருந்தான். அவன், “கர்த்தாவே, நான் அசுத்தமான உதடுகளை உடையவனாயிருக்கிறேன். நான் அசுத்தமான ஜனங்களுக்கு மத்தியில் இருக்கிறேன். நான் தேவனைக் கண்டிருக்கிறபடியால் எனக்கு ஐயோ” என்று கூறினான். அப்பொழுது ஒரு தூதன் இறங்கி வந்து, தேவனுடைய பலிபீடத்திலிருந்து அக்கினியை, பரிசுத்த அக்கினியை எடுத்து, அவனுடைய உதடுகளை மறுரூபமாக்கினான்; ஒரு அலைந்து திரிகிற மனிதனின் உதடுகளிலிருந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக ஒரு தீர்க்கதரிசியின் உதடுகளிலிருந்து. தேவனுடைய மறுரூபப்படுத்தும் வல்லமை! 260 நூற்று இருபது மீனவர்கள், மற்றும்—மற்றும் பண்டைய இரத்தாம்பரம் விற்பவர்கள், பெண்கள், மேலறையில் கூடியிருந்தவர்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு, அவர்களில் சிலர் தங்களுடைய சொந்த பெயர்களில் கையெழுத்திட போதிய கல்வியறிவு இல்லாதவர்களாயிருந்தனர். தேவன் அவர்களை மீன் பிடிப்பவர்களாயிருப்பதிலிருந்து மனுஷரைப் பிடிப்பவர்களாயும்; வீதிகளிலுள்ள புருஷர்களையும் ஸ்திரீகளையும், தேவனுடைய பரிசுத்தவான்களாக, அழிவில்லாதவர்களாக மறுரூபமாக்கினார். தேவனுடைய மறுரூபப்படுத்தும் வல்லமை!
120261 பவுல், ஒரு உள்ளூர் சபை அங்கத்தினன், பிரஸ்பிடேரியன், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்தே அல்லது ஏதோ ஒருவன்; அவன் அவர்கள் எவரைக் காட்டிலும் அதிகமாக அறிந்திருந்தான் என்று, அவன் தன்னுடைய மகத்தான எதிர்க்கும் ஆவியை அவனுக்குள் கொண்டு, வீதியில் சென்றான். அவன் கமாலியேலின் கீழ் இருந்து வந்தான். அவர் தேசத்தில் இருந்த சிறந்த போதகர்களில் ஒருவராயிருந்தார். தேவனுடைய வார்த்தையை விசுவாசித்துக் கொண்டிருந்த ஒரு கூட்ட ஜனங்களை கட்டிக்கொண்டு வர, தமஸ்குவிற்கு செல்லும் அவனுடைய பாதையில் இருந்தபோது என்ன சம்பவித்தது? அவனுடைய பாதையில், கீழே விழத்தள்ளப்பட்டான், அவன் ஒரு செய்தியைக் கேட்டான். அது அவனை ஒரு சபை அங்கத்தினரிடமிருந்து, ஒரு சபைக்குச் செல்பவரிலிருந்து; புதிய ஏற்பாட்டில் தேவனுடைய வார்த்தையை எழுதின ஒரு தேவனுடைய தீர்க்கதரிசிக்கு மறுரூபமாக்கியது. ஒரு சபை அங்கத்தினரிலிருந்து ஒரு பரிசுத்தவானாக! 262 ஓ, அலைந்து திரியும் நட்சத்திரமே, நாம் நிறுத்திக்கொள்வோம். அலைந்து திரிகிற குமாரன், இந்த உருகுலைந்த நிலையில், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைந்து திரிந்துகொண்டிருக்கிற வித்தே; இந்தக் காலையில், பிள்ளைகளே, திரும்புங்கள். மரித்தோருக்கும் ஜீவனுள்ளோருக்கும் இடையே நிற்க முயற்சிக்கும் ஒரு—ஒரு மனிதன் என்ற முறையில் தயவு கூர்ந்து எனக்கு செவிகொடுங்கள்.
121263 ஒலிபரப்பு வந்துகொண்டிருக்கும் தேசத்திற்கு வெளியே நீங்கள் இன்னமும் இணைக்கப்பட்டிருந்தால், அந்த இடத்திற்கு அலைந்து திரிந்து வந்துள்ள நீங்கள், தயவு செய்து இன்னும் ஒரு நிமிடம் உட்காருங்கள். இங்கே டூசானில் இது காலதாமதமாகிவிட்டது என்பதை நான் அறிவேன் இல்லை, நீங்கள் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், பீனிக்ஸில், இன்னும் பன்னிரெண்டு மணிக்கு இருபது நிமிடங்கள் உள்ளன. நான் காலை முழுவதும் இந்த ஜனங்களை இங்கே வைத்திருந்தேன். நான் உங்களை உங்களுடைய வேலைக்கும் மற்ற காரியங்களுக்கும் செல்லாதபடிக்கு செய்துவிட்டேன். ஆனால் பாருங்கள், அருமையான நண்பனே, நீ தேவனிடத்திலிருந்து என்றென்றைக்குமாய் விலகியிருக்கக்கூடும். தயவு செய்து இன்று காலை திரும்பி வாருங்கள். நீங்கள் வரமாட்டீர்களா? ஊற்றண்டையிலே இடம் உண்டு. நீண்ட காலத்திற்கு முன்னர் ஒரு முன்னணையில், அது உண்மையாகவே அவ்வண்ணமாயிருந்தது என்பதை நான் அறிவேன், மனிதர்களை அவர்களுடைய பாவத்திலிருந்து இரட்சிக்க ஒரு குழந்தை பிறந்தது. யோவான் என்றென்றைக்கும் ஆட்டுக்குட்டியானவரான, அவரை கரையில் கண்டான், ஓ, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட, கிறிஸ்து. ஓ, கலிலேயாவிலிருந்து, கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனை நான் நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் எனக்காக மிக அதிகமாக செய்திருக்கிறார். அவர் என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, பரிசுத்த ஆவியை உள்ளே வைத்திருக்கிறார்; ஓ, நான் நேசிக்கிறேன், நான் கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனை நேசிக்கிறேன். ஒரு நாள் ஆயக்காரன் அங்குள்ள ஆலயத்திற்கு ஜெபிக்கச் சென்றான், அவன், “ஓ, கர்த்தாவே, என்னிடத்தில் இரக்கமாயிரும்!” என்று கதறினான். அவனுக்கு ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப்பட்டு, ஒரு ஆழமான சமாதானம் உள்ளுக்குள் வைக்கப்பட்டது; அவன், “கலிலேயாவிலிருந்து வந்த இந்த மனிதனைப் பாருங்கள்” என்றான். (சரி.) முடவன் நடக்க வைக்கப்பட்டான், ஊமையன் பேச வைக்கப்பட்டான், அந்த வல்லமை சமுத்திரத்தின் மேல் அன்பினால் உரைக்கப்பட்டது; பார்வையற்றோர் பார்வையடைந்தனர், அது கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனின் இரக்கமாய் மாத்திரமே இருக்க முடியும் என்பதை நான் அறிவேன். 264 இன்றைய ஊழியத்தோடு அதை ஒப்பிடுங்கள். கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயின் பாவங்கள் யாவும் அவர் கூறினார், அக்காலத்தில் அவளுக்கு ஐந்து புருஷர்கள் இருந்தனர். அவள் பாவம் ஒவ்வொன்றும் மன்னிக்கப்பட்டு, ஒரு ஆழமான சமாதானம் அவளுக்குள் வைக்கப்பட்டது; அவள், “கலிலேயாவிலிருந்து வந்த இந்த மனிதனை வந்து பாருங்கள்” என்று கதறினாள்.
122265 ஸ்திரீயே, அவரால் அதையே செய்ய முடியும். அவர் இந்தக் காலையில் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். மனிதனே, அவர் உங்களுடைய இருதயத்தை அறிந்திருக்கிறார். ஓ, ஆயக்காரனே, நாம் ஜெபிப்போமாக! ஓ, கலிலேயாவிலிருந்து, கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனை நான் நேசிக்கிறேன், ஏனென்றால் அவர் எனக்காக மிக அதிகமாக செய்திருக்கிறார். அவர் என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, பரிசுத்த ஆவியை உள்ளே வைத்திருக்கிறார்; ஓ, நான் நேசிக்கிறேன், நான் கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதனை நேசிக்கிறேன். 266 இந்தக் காலையில், என்னோடு கூட, நீங்கள் அவரை நேசிக்கமாட்டீர்களா? ஓ, வழி தவறி, அலைந்து திரிகிற பாவியே, இங்கே அல்லது நீ எங்கிருந்தாலும், நீ இந்தக் காலையில் என் கர்த்தரை ஏற்றுக் கொள்வாயா? அவர் வார்த்தையாயிருக்கிறார், அந்த வார்த்தை உங்களிடத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் காலையில் நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? நீங்கள் உங்களுடைய கரங்களை உயர்த்தி அல்லது எழும்பி நின்று, அல்லது ஏதாவது, “நான் அவரை இப்பொழுதே ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். சகோதரனே, நான் விருப்பமுள்ளவனாயிருக்கிறேன். நான் இப்பொழுதே அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறி ஜெபியுங்கள். ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய எவரேனும், நீங்கள் எழும்பி நின்று, “எனக்கு…” ஜெபிக்கப்பட்டது, சரியாகக் கூறினால், “நான் ஒரு பாவி. எனக்கு வேண்டும்…” என்று கூறுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறுயாராவது? இப்பொழுது ஒவ்வொருவரும் அப்படியே ஒரு நிமிடம் ஜெபியுங்கள். ஓ, முந்தைய காலத்தில் அந்த முன்னணையில், (அது ஒரு குழப்பத்தில் இருந்தது, நீங்கள் அறிவீர்கள், உலகம் அவ்வாறு இருந்தது.) அது உண்மையாகவே அவ்வண்ணமாய் உள்ளது என்பதை நான் அறிவேன், ஒரு சிறு குழந்தை மனிதரை அவர்களுடைய பாவத்திலிருந்து இரட்சிக்கப் பிறந்தது. யோவான் அவரை கரையில் கண்டபோது, அவர் என்றென்றைக்கும் ஆட்டுக்குட்டியானவராயிருந்தார், (இன்றைக்கும் அதே ஒருவர்.) ஓ, அவர் கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்ட, கிறிஸ்து.
123267 நீங்கள் உட்கார்ந்திருக்கிற இந்த உலகப்பிரகாரமான நிலைமையிலிருந்து நீங்கள் வெளியேறும்படியாக இன்றைக்கு உங்களுடைய முழு இருதயத்தோடு நீங்கள் அவரை நேசிக்கமாட்டீர்களா? ஸ்திரீகளாகிய நீங்கள், புருஷர்களாகிய நீங்கள், ஓ, நீங்கள் எதற்காக இவ்வளவு நேரம் இங்கே அமர்ந்திருந்தீர்கள்? அது உங்களுக்குள்ளாக ஏதோ ஒரு காரியத்தைக் காண்பிக்கப் போகிறது, அங்கே ஏதோ ஒன்று பசியாயும், தாகமாயும் இருக்கிறது. நீங்கள் இந்த இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இங்கே இந்தவிதமாக இந்தக் கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டீர்கள்; ஏதோ ஒன்று உண்டு. இன்றைக்கு நீங்கள் அதற்கு செவிகொடுக்கமாட்டீர்களா? நாகரீகங்களும், விஞ்ஞானமும், உலகத்தின் எல்லாக் காரியங்களும், அன்பான சகோதரனே அல்லது அருமையான சகோதரியே, இப்பொழுதே உங்களுடைய சிந்தையிலிருந்து விலகிச் செல்லட்டும். சபைகள் இணைந்து கொண்டிருக்கின்றன, பெரிய தேசங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்தெழுந்து கொண்டிருக்கிறாள், தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள்; புறஜாதி நாட்கள் எண்ணப்பட்டு, திகில்கள் சூழ்ந்துள்ளன; “ஓ, சிதறடிக்கப்பட்டவர்களே, உங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்பி வாருங்கள்.” மீட்பின் நாள் சமீபித்துவிட்டது, மனுஷருடைய இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போகின்றன; ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்கள் தீவட்டிகளை சுத்திகரித்து, மேலே நோக்கிப் பாருங்கள்! உங்களுடைய மீட்பு சமீபமாயிருக்கிறது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தேவனுடைய சத்தியத்தை மறுதலித்துக் கொண்டிருக்கிறார்கள், அதாவது இயேசு கிறிஸ்துவே நம்முடைய தேவன்.
124268 இப்பொழுது, அது உண்மை. நீங்கள் அதை அறிவீர்கள், நாம் யாவரும், அந்த நாளிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் கூறினார்: சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமைக்கு செல்லும் பாதையையை நீங்கள் நிச்சயமாகவே கண்டடைவீர்கள். 269 அந்த நாளில் தான் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் சாயங்கால நேரத்தில், அந்தி வேளையில் வெளிச்சம் பிரகாசிக்கும், சாயங்கால நட்சத்திரம். அந்தி மற்றும் சாயங்கால நட்சத்திரம், அதன் பிறகு இருள் சூழ்ந்ததே! நான் கடைசியாக கப்பலில் ஏறும்போது, பிரியாவிடையின் சோகமே இல்லாதிருப்பதாக; ஏனென்றால் வெளிப்புறத்தில் உள்ள யாவும் நேரம் மற்றும் இடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன, வெள்ளம் என்னை தூரமாய் இழுத்துக்கொண்டு போகலாம், ஆனால் நான் கரையைக் கடந்துவிட்ட பிறகே, நான் என்னுடைய மாலுமியை முகமுகமாய் காண விரும்புகிறேன். வாழ்கை ஒரு வெற்றுக் கனவுதான் என, துயரமிகு பாக்களில் என்னிடம் கூறாதே! உறங்கும் ஆத்துமா மரித்ததாய், காரியங்கள் தென்படுபவை போல அவை இருப்பதில்லை. ஆம், உண்மையானது வாழ்க்கை! உள்ளார்ந்தது வாழ்க்கை! கல்லறை அதனுடைய குறிக்கோள் அல்ல; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய், என்றுரைக்கப்பட்டது ஆத்துமாவைக் குறித்ததல்ல. மகத்தான மனிதர்களுடைய ஜீவியங்கள் யாவும் நமக்கு நினைப்பூட்டுகின்றன நாம் நம்முடைய ஜீவியங்களை கம்பீரமானதாக்க முடியும், மேலும், பிரிவினைகள், நம்மை விட்டுச் செல்ல, கால மணல்களின் மேல் அடிச்சுவடுகள்; அடிச்சுவடுகள், அது ஒருகால் மற்றொன்று, வாழ்க்கையின் புனிதமான பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கைவிடப்பட்ட, கப்பற் சேதமடைந்த சகோதரன், அதைக் கண்டு, மீண்டும் திடன் கொள்வான். ஆகையால், நாம் எழும்பி நின்று, எந்த சண்டையையும் ஏற்றுக்கொள்ளாத இருதயத்தோடு, ஊமையாக, விரட்டப்பட்ட கால்நடைகளைப் போலிருக்க வேண்டாம்! யுத்தத்தில் ஒரு வீரனாயிரு!
125270 அன்புள்ள தேவனே, அவர்கள் உம்முடையவர்கள். பிதாவே, இரண்டு புருஷர் தாங்கள் எழும்பி நிற்பதை நான் கண்டிருக்கிறேன். தேவனே, நீர் இப்பொழுது அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் உம்முடைய குமாரர்களாக இருக்க விரும்புகிறார்கள். இந்நாளில் அவர்களுடைய இருதயங்களில் நடப்பட்டிருக்கிற அந்த வித்தின் பேரில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால், அவர்கள் தாங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையின் அறியாமையிலிருந்து விழித்தெழுந்து, இப்பொழுது அவர்கள் புத்துணர்ச்சியடையவும், புதுப்பிக்கவும் விரும்புகின்றனர். நித்திய தேவனே, எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரே, உம்முடைய வார்த்தையை உண்டாக்கினவரே, இந்த மனிதர்கள் இந்தக் காலையில் இதைச் செய்வார்கள் என்பதை நீர் அறிந்திருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, நீர் அந்த வார்த்தைக்கு இரவும் பகலும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றும், உம்முடைய கரங்களிலிருந்து சாத்தான் அதை ஒருபோதும் பிடுங்காதிருப்பானாக என்றும் நான் ஜெபிக்கிறேன். அவை யாவும் திரும்பக் கொண்டுவரப்படும்போது, அது தேவனுடைய பரதீசில், ஒரு மரமாயிருப்பதாக, ஏனென்றால் உம்முடைய வார்த்தை தவறிப்போக முடியாது, அது மீண்டும் இருக்கும். இந்த உலகத்திற்காக…
126271 வரப்போகும் உலகத்தில் இந்தவிதமான ஒரு நாகரீகம் இருக்காது. மோட்டார் வாகனங்கள் அல்லது விஞ்ஞானம் இதுவரை செய்திருக்கிற எந்தக் காரியமும் அங்கே இருக்காது. வரப்போகும் உலகத்தில் அப்படிப்பட்ட காரியங்கள் இருக்காது. ஆனால் அது தேவனுடைய சொந்த நாகரீகத்தின் மாதிரியாயிருக்கும், அவர் மகிமையான அரசாட்சியில் அமைப்பார். ஏனென்றால் இந்த நாகரீகத்தில் சுகவீனமும், மரணமும், துயரமும், கல்லறைகளும், குறைவுகளும் உள்ளன. ஆனால் வரப்போகும் அந்த ராஜ்யத்தில் மரணமோ, துக்கமோ, வியாதியோ, முதுமையோ கிடையாது. ஓ தேவனே, உம்முடைய நாகரீகத்தில், அங்கே அது புதியதாய் இருக்கும். 272 தேவனே, இப்பொழுது இந்த உலகத்தின் அற்பமான காரியங்களிலிருந்து, தேவனுடைய வார்த்தைக்கு திரும்பும்படிக்கு, உம்முடைய வல்லமையினால், எங்களுடைய சிந்தையின் புதுப்பித்தலினால், இன்றைக்கு எங்களை மறுரூபப்படுத்தும். நாங்கள் விசுவாசிக்கிற, எங்களுடைய இருதயத்தில் உள்ள வித்தின் மீது தேவனுடைய மறுரூபப்படுத்தும் வல்லமையினால், தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக அழைக்கப்படுகிற சிருஷ்டிகளாக நாங்கள் புதுப்பிக்கப்படுவோமாக. பிதாவே, ஜனங்களுக்காக, இயேசுவின் நாமத்தில், உம்மிடம் இதுவே என்னுடைய ஜெபமாகும். ஆமென்.
127273 இப்பொழுது ஒலிபரப்பிலுள்ள உங்களுக்கு, நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் கிறிஸ்துவை அங்கே உங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தக் காலையில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், அவைகள் உங்கள் இருதயத்திற்குள் விழுவதாக. அங்கே நீங்கள் இயேசுவைப் பெற்றுக் கொள்வீர்களாக. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள், அதன்பின்னர் நீங்கள் என்னவாக வாழ்கிறீர்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். இங்கே சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வார்த்தைக்கு முரணான ஏதோ ஒரு காரியத்தைச் செய்வதை நீங்கள் காண்கிறீர்கள், அதிலிருந்து துரிதமாக விலகிச் செல்லுங்கள். பார்த்தீர்களா? ஏனென்றால் மரணத்தை உங்களிடத்திலிருந்து விலக்கி வைக்கிற ஒரு வடிகட்டி உண்டு, அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. அவருடைய வார்த்தைகள் ஜீவனாயிருக்கின்றன, அவைகள் உங்களை மரணத்தினின்று காக்கும்.
128274 இப்பொழுது இங்கே அரங்கத்தில் உள்ள ஜனங்களாகிய உங்களை, நான் நீண்ட நேரமாக பிடித்து வைத்துவிட்டேன். உங்களுடைய வருகைக்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த வித்தை தேவன் ஒருபோதும் மரிக்கவிடாதபடிக்கு நான் ஜெபிக்கிறேன். இந்த காரியங்கள் வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதற்காக நான் இங்கு நிற்கிறேன் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் அதை அன்பின் காரணமாகக் கூறுகிறேன்; நான் அழிவுள்ளவனாயிருப்பதை அறிந்து, நான் இப்பொழுது இருக்கிறபடியால், நான் ஜனங்களுக்கு பிரசங்கிக்கக் கூடிய ஒரே தருணம் இதுவேயாகும். நான் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன். அவரே என்னுடைய இரட்சகர். நினைவிருக்கட்டும், அவரில்லாமல் இருந்திருந்தால், நான் அங்கே தெருவில் இருந்திருப்பேன். நான் அங்கே வெளியே இருந்திருப்பேன்; என்னுடைய பெற்றோர் யாவரும், என்னுடைய ஜனங்கள் யாவரும் பாவிகளாயிருந்தனர். ஆனால் தேவனோ, தம்முடைய மறுரூபமாக்கும் வல்லமையைக் கொண்டு, என்னிலிருந்து ஒரு வித்தியாசமான சிருஷ்டியை உண்டாக்கினார் என்பதை நான் அறிவேன். அது நல்லதாக இருக்கும்படியால், என்னால்—என்னால் அதை உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியும். அது தொல்லையின் நேரங்களில் காத்துக் கொள்ளும். மரணத்தினிடத்திலும், வாசலண்டையிலும் கூட, உங்களுக்குப் பயமில்லை. “கிறிஸ்துவுக்குள் இருக்கிற தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.” தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உங்களுக்கு நித்திய ஜீவனைத் தருவாராக.
129275 இங்குள்ள எத்தனை பேர் தேவனுடைய வித்தை, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிருக்கவில்லை? நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், நான் அந்த பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், என்னை நினைவு கூருங்கள்” என்றும் கூறுங்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய—உங்களுடைய இருதயத்தில் வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசியுங்கள். இப்பொழுது நீங்கள்…நீங்கள் உங்களை நோக்கிப் பார்க்க முடியும். சென்று கண்ணாடியை நோக்கிப் பாருங்கள், அப்பொழுது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை உங்களால் காண முடியும். பாருங்கள், உங்களால் அறிந்துகொள்ள முடியும். 276 நீங்களோ, “பாருங்கள், நான் என்னுடைய கரத்தை உயர்த்தவில்லை, ஏனென்றால் நான் அதை பெற்றிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன்” என்று கூறலாம். 277 கண்ணாடியில் உங்களை நோக்கிப் பாருங்கள், அப்பொழுது எந்தவிதமான ஒரு ஆவி உங்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள், பாருங்கள். வஞ்சிக்கப்பட்ட சிந்தனை! “ஒரு மனுஷனுக்குச் செம்மையாய் தோன்றுகிற ஒரு வழியுண்டு, ஆனால் அதின் முடிவோ மரண வழிகளாயிருக்கிறது.” அது உண்மையா? என்னுடைய இரட்சகர் மரித்த சிலுவையில், பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுவதற்காக நான் கதறினேன்; ஓ, என்னுடைய இருதயத்தில் அந்த இரத்தம் பூசப்பட்டது. மகிமை…
130278 இப்பொழுது ஒரு நிமிடம் உங்களுடைய கண்களை மூடி, அதை அப்படியே அவரிடத்தில் பாடுங்கள். நாம் நம்முடைய கரங்களை அப்படியே உயர்த்துவோம். அவருடைய நாமத்திற்கே மகிமை! (அவருடைய விலையேறப்பெற்ற நாமம்!) அவருடைய நாமத்திற்கே மகிமை! அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; மகிமை அவருடைய… 279 இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் கரத்தைக் குலுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் பாவத்தினின்று மிகவும் அதிசயமாக இரட்சிக்கப்பட்டிருக்கிறேன், இயேசு மிகவும் இனிமையாக உட்புறத்தில் நிலைத்திருக்கிறார், அவர் என்னை உள்ளே அழைத்துச் சென்ற சிலுவையில்; அவருடைய நாமத்திற்கே மகிமை! அவருடைய நாமத்திற்கே மகிமை! (விலையேறப்பெற்ற நாமம்!) அவருடைய நாமத்திற்கே மகிமை! ஓ, என்னுடைய இருதயத்தில் அந்த இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை!
131280 இரத்தம் ஜீவனின் உயிரணுவை தன்னுள் கொண்டுள்ளது என்பதை, நீங்கள் அறிவீர்கள். அவரை அறியாதவர்களுக்கு இது என்னவெனில்: ஓ, மிகவும் ஐஸ்வரியமும் இனிமையுமான இந்த ஊற்றண்டை வாருங்கள்; உன் எளிய ஆத்துமாவை இரட்சகருடைய பாதத்தில் வை; ஓ, இன்றைக்கு அதில் மூழ்கி, முழுமையடைந்திடு; அவருடைய நாமத்திற்கே மகிமை! ஓ, மகிமை… நாம் அதைப் பாடுகையில் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அவருடைய நாமத்திற்கே மகிமை! அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை!
132281 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] பவுல், “நான் ஆவியில் பாடுவேன். நான் ஆவியில் தொழுது கொள்வேன்” என்றான். நாம் நம்முடைய கரங்களை உயர்த்தியிருப்பதோடு, உண்மையாகவே மீண்டும் அதை மெதுவாகப் பாடுவோம். 282 அதைக் குறித்த பிரச்சினையை, நீங்கள் அறிவீர்கள், அதாவது பெந்தேகோஸ்தே ஜனங்களாகிய நாம், நம்முடைய சந்தோஷத்தை நாம் இழந்துவிட்டோம், நம்முடைய உணர்ச்சிகளை நாம் இழந்துவிட்டோம். அன்றொரு இரவு பில்லி கிரஹாம், “அந்த பிரசங்கிமார்கள், கழுத்துப்பட்டைகளை திருப்பிக் கொண்டு, தெற்கில் சென்று, தங்களுடைய கரங்களை தட்டி, தங்களுடைய கால்களை தரையில் மேலும் கீழுமாக அடித்து, மிதித்து, அவர்கள் ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து மகிழ்ச்சியாயிருந்தனர்” என்று கூறினது போல. பாருங்கள், ஆம், நான் மகிழ்ச்சியாயிருக்கிற ஏதோ ஒன்றைப் பெற்றுள்ளேன். பார்த்தீர்களா? பார்த்தீர்களா? ஆம். ஆம், நாம் நம்முடைய உணர்ச்சிகளை இழந்துவிட்டோம். 283 இப்பொழுது நாம் நம்முடைய கரங்களை அப்படியே உயர்த்துவோமாக. கண்ணீரைக் குறித்து கவலைப்படாதீர்கள், அது எந்தக் காரியத்தையும் சேதப்படுத்தாது, பாருங்கள். அது புண்படுத்தாது. “கண்ணீரோடு விதைக்கிறவன், சந்தேகத்திற்கிடமின்றி, விலையேறப்பெற்ற கதிர்களைக் திரும்ப கொண்டுவருவான்.” சரி. அவருடைய நாமத்திற்கே மகிமை! (விலையேறப்பெற்ற நாமம்!) அவருடைய நாமத்திற்கே மகிமை! அங்கே என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை! அவருக்கு மகிமை…(ஓ, தேவனே! தேவனுக்கு ஸ்தோத்திரம்!) அவருடைய நாமத்திற்கே மகிமை! கர்த்தாவே, இருதயத்தில் விதையை பதியச் செய்வீராக! …என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது; அவருடைய நாமத்திற்கே மகிமை!